ஸ்வாமி விவேகானந்தர் இமயமலையில் நடைப்பயணமாக வெகு தூரம் நடந்து கொண்டிருந்தார்.
வழியில் ஒரு வயதான மனிதர் ஸ்வாமிஜியைப் பார்த்தார்.
‘ஓ ஸ்வாமிஜி! நான் நடந்து நடந்து மிகவும் களைத்து விட்டேன்.
இந்த மலைப் பாதையில் பாதி தூரம் வந்து விட்டேன்.
இனி மீதி தூரத்தை எப்படி ஏறிக் கடப்பது?” என்று அவர் ஸ்வாமிஜியைக் கேட்டார்.
ஸ்வாமிஜி புன்சிரிப்புடன் அவரைப் பார்த்தார், பேசலானார்: “ஒன்றும் கவலைப்பட வேண்டாம். உங்கள் காலடிக்குக் கீழே பாருங்கள். நீங்கள் கடந்து வந்த பாதை தெரிகிறதா? இதை இவ்வளவு தூரம் கடந்தது யார்? நீங்களே தான்! இதே சாலை தான் உங்கள் முன் இருக்கிறது. இதுவரை எப்படி நீங்களே இதைக் கடந்து வந்து சாதித்தீர்களோ அதை இன்னும் உங்களால் செய்ய முடியுமே! நடந்து முன்னேறுங்கள். வெற்றி தான்!”
என்றார்.
ஸ்வாமிஜியின் பேச்சால் உத்வேகம் பெற்ற அவர் புத்துணர்ச்சி பெற்று அவரை வணங்கி விட்டு மலை மீது ஏறலானார்.
2
ஸ்வாமிஜி ஒரு முறை மேலை நாட்டில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவருடன் அதே பெட்டியில் அவருக்கு எதிரில் இருவர் உட்கார்ந்திருந்தனர். அவரது உடையைப் பார்த்த அந்த இருவரும் அவரைக் கிண்டல் செய்ய ஆரம்பித்தனர்.
ஒருவன் தனது நண்பனைப் பார்த்துச் சொன்னான்: “ இந்த ஆளைப் பார்! இவரை ‘ஃபூல்’ என்று நான் நினைக்கிறேன். நீ என்ன நினைக்கிறாய்?”
அதற்கு அவனது நண்பன் பதில் சொன்னான்; “இல்லை இல்லை, நீ சொல்வது தப்பு. இவர் ஒரு இடியட். அது தான் சரியாக இருக்கும்.”
இருவரும் மாறி மாறித் தான் சொல்வதே சரி என்று ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தனர்.
அவர்களுக்கு இப்படிப்பட்ட காவி உடை அணிந்த ஒருவருக்கு ஆங்கிலமே தெரியாது என்ற எண்ணம்.
நடுவில் டிக்கட் பரிசோதகர் வந்த போது ஸ்வாமிஜி, “எனக்கு குடிக்க தண்ணீர் வேண்டுமே? எங்கே கிடைக்கும்?” என்று தெளிவான உச்சரிப்பில் ஆங்கிலத்தில் கேட்டார்.
அவரும் தக்க பதிலைச் சொல்லி விட்டு அகன்றார்.
இவரது பேச்சைக் கேட்ட எதிரிலிருந்த இருவரும் அசந்து போனார்கள்.
பிரமிப்புடன். “என்ன உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா? நாங்கள் இவ்வளவு நேரம் உங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டே தானே இருந்தீர்கள்?” என்று கூறினர்.
ஸ்வாமிஜி புன்முறுவல் பூத்தார்.
பிறகு அவர்கள் வியப்புடன், “ நீங்கள் யார்?” என்று கேட்டனர்.
ஸ்வாமிஜி அவர்கள் இருவரையும் தன் பக்கத்தில் தன் தோளுக்கு அருகே இழுத்துக் கொண்டார். நடுவில் ஸ்வாமிஜி இருக்க ஆளுக்கு ஒரு பக்கமாக அவர்கள் இருந்தனர்.
“ஓ! நான் யார் என்றா கேட்கிறீர்கள்! நான் ஃபூலுக்கும் இடியட்டுக்கும் நடுவில் இருப்பவன்” என்றார்.
அவர்கள் வெட்கித் தலை குனிந்தனர்.
3
ஸ்வாமிஜி பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது ஒரு நாள் வகுப்பறையில் ஆசிரியர் வந்து பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
நரேந்திரன் (பின்னால் விவேகானந்தர் என்ற பெயரைப் பெற்ற ஸ்வாமிஜி) தன் நண்பர்களிடம் ஒரு கதையைச் சொல்லிக் கொண்டிருந்தார்.
அவர் கதை சொன்ன விதம் நண்பர்களை ஈர்த்தது. பாடத்தை யாரும் கவனிக்கவில்லை. கதையையே கேட்டுக் கொண்டிருந்தனர்.
ஆசிரியர் யாரோ முணுமுணுத்த குரலில் பேசிக் கொண்டிருந்ததைக் கவனித்தார்.
“யார் அங்கே பேசுவது?” என்று கேட்டார். பதிலே வரவில்லை.
முணுமுணுப்பு சப்தம் வந்த இடத்தை நோக்கிய அவர் அங்கிருந்தவர்களிடம், “இது வரை நான் என்ன நடத்திக் கொண்டிருந்தேன் சொல்லுங்கள்” என்றார்.
யாரும் ஒன்றும் பேசவில்லை.
நரேந்திரன் மட்டும் அவர் நடத்திய பாடத்தைச் சொன்னார்.
தான் நடத்திய பாடத்திலிருந்து ஆசிரியர் கேள்விகள் கேட்கவே அனைத்திற்கும் அவர் பதிலைச் சொன்னார்.
ஆசிரியர் வியந்து போனார்.
அவரைத் தவிர மற்றவர்கள் அனைவரையும் பெஞ்சின் மீது நிற்கச் சொன்னார். அனைவரும் ஏறி நின்றனர்.
விவேகானந்தர் தானும் ஏறி நின்றார்.
“நீ ஏற வேண்டாம். இறங்கு” என்றார் ஆசிரியர்.
“ஸார்! நான் தான் இவ்வளவு நேரம் பேசியது. அவர்கள் கேட்கத் தான் செய்தனர். நான் தான் பெஞ்சின் மீது நிற்க வேண்டும்” என்றார் நரேந்திரன்.
அனைவரும் வியந்தனர்.
ஒரே சமயத்தில் பல விஷயங்களைக் கவனிக்கும் அவதான சக்தியை அவர் அப்போதே கொண்டிருந்தார்.
அது அனைவரையும் வியக்க வைத்தது!
இப்படி நூற்றுக் கணக்கான சம்பவங்கள் ஸ்வாமிஜியின் வாழ்க்கையில் உண்டு.
Dance by Possessed women is also described in Sangam Tamil literature. If one is possessed by a nymph or a divine spirit, then the person jumps up and down and dance. Tamils describe it as Saami Aadal சாமி ஆடல் (Divine dance). Poets compare it to the running and jumping cows ; Puram.259 composed by Kodai Paadiya Bhutanaar, compares the cows gambolling, bouncing and jumping to a low caste woman possessed by Muruga.
‘முருகுமெய்ப்பட்ட புலைத்தி போல, தாவுபு தெறிக்கும்.
ஆன்! (புற. 259:5-6)
We see it also in Kurunthokai 52-2 . ‘சூர் நசைந்தனையைய: நடுங்கல்-கண்டே’ (குறுந்:52:2)
Any one possessed by Suur will shiver and shake. Not only humans but also animals are possessed by divine spirits. The peacocks had eaten the offerings given to Gods by mistake and they started dancing like a possessed woman according to a verse in Kurunthokai
Tamils believed that nymphs live in the breasts of women, Lyre or Yaaz, Drums etc.
In general nymphs are feminine; but in a few places Tamils use it for male spirits as well. In Sanskrit we see Apsaras and Yakshas- female and male. Yakshi woman is also there. Poru. Poet says the nymph is in Yaaz- Lyre
மணம் கமழ் மாதரை மண்ணியன்ன
அணங்கு மெய் ந் நின்ற அமைவரு காட்சி,
ஆறு அலை கள்வர் படை விட அருளின்.
மாறு தலை பெயர்க்கும் மருவு இன் மாலை’ (Poruபொருந.19-22)
Nachchinarkiniyar, the most famous commentator of Sangam Tamil literature gives more information in his commentary on Post Sangam Tamil epic Seevaka Chintamani. Such Gods or Nymphs are known as Maathangi (another name of Sarasvati).
In fact, Tamils worship all musical instruments and books as Divine. They place all such things in front of Goddess Sarasvati during Navaratri and worship them. They never touch the books or musical instruments with their feet. It is considered disrespect or contempt to God.
Xxx
Nymph on Breast
The strangest thing about Tamil Hindus is that they see nymphs on woman’s breast. Poems in Akam and Natrinai refer to it.
சுணங்கு சூழ் ஆகத்து அணங்கு என உருத்த
நல்வரல் இளமுலை. (அகம்.161:12-13 Akam)
,பொரிப் பூம் புன்கின் அழற்தகை ஒண்முறி,
சுணங்கு அணி வனமுலை அணங்கு கொளத் திமிரி. (Natri.நற்.9.5-6),
Xxxx
Swords given by Goddess Bhavani
We know from Hindu history that several great heroes of India such as Veera Shivaji, Kumara Kampanna received their Victorious Sword from Goddess Bhavani. Hindus consider even weapons as Gods. They do Ayudha Puja (Weapon Worship) on Sarasvati Puja day or Vijaya Dasami day. We see such ceremonies today in Mysore Dasara. Chamundeeswary is worshipped with all paraphernalia before the Great Dasara/ Vijaya Dasami procession.
Kali.verse refers to nymphs in weapons:–
அரவின் பொறியும் அணங்கும் புணர்ந்த
உரவு வில்மேல் அசைத்த கையை’ (Kali கலி.50:6-7)
Tamils showed the same respect to weapons and poets praise nymph residing weapons . A king’s drum was also given great respect. It was decorated like Gods and Goddesses. It was given a special raised seat. On the days of Expedition, they were taken first at an auspicious time. And not all the people can possess drums. Only the three great Tamil Kings Chera, Choza, Pandya can have it.
Here are some references to War Drums and the Puja done to it.
“மாசு அற விசித்த வார்புறு வள்பின்
மை படு மருங்குப் பொலிய. மஞ்ஞை
ஒலி நெடும் பீலி ஒண் பொறி மணித்தார்,
பொலங்குழை உழிஞையெகடு பொலியச் சூட்டி
குருதி வேட்கை உருகெழு முரசம்
மண்ணிவாரா அளவை . (Puramபுற 50. 1- 6 )
Greatest poet of modern Tamil Literature Bharatiyar’s poem on Shivaji begins with hail Bhavani, Hail Bhavani; it shows that weapons should be used against the bad people.
Following Pathitrupathu passage gives detailed description of Puja done to Drum in the Palace of a Chera King
பணைகெழு வேந்தரும் வேளிரும், ஒன்று மொழிந்து,
கடலவும் காட்டவும் அரண் வலியார் நடுங்க.
முரண் மிகு கடுங்குரல் விசு ம்பு அடைபு அதிர,
சடுஞ்சினம் கடாஅய். முழங்கும் மந்திரத்து
அருந்திறல் மரபின் கடவுட் பேணியர்,
உயர்ந் தோள் ஏந்திய அரும்பெறற் பிண்டம்.
கருங்கட் பேய்மகள் கைபுடையூ நடுங்க…
நெய்த்தோஈ தூ உ ய நிறைமகிழ் இரும்பலி,
எறும்பும் மூசா இறும்பூது மரபின்;
கருங்கட் காக்கையொடு பருத்து இருந்து ஆர.
ஓடாப் பூட்கை, ஒண் பொறிக் கழற் கால்.
பெருஞ் சமம் ததைந்த, செருப்புகல், மறவர்
உருமு நிலன் அதிர்ககும் குரலொடு, கொளைபுணர்ந்து,
பெருஞ்சோறு உகுத்தற்கு எறியும்
கடுஞ்சின வேந்தே !- நின் தழங்கு குரல் முரசே
–பதிற்றுப்பத்து 30-30 – 44
As soon as the sound from the Palace Drum is heard, the enemy kings were scared. The person who is doing Drum Worship utter the Mantras in harsh tone. He offered blood and wine to the god of the drum. Even the female ghosts and ants were afraid to come to eat such offering. Crows and falcons only ate them. The drum is played to celebrate the Big Feast offered to victorious soldiers.
Xxxx
There’s another interesting Anecdote in Purananuru verse 50 . One poet by name Mosi Keeranar reached the palace of the Chera/Kerala King Thagadur Erintha Peruncheral Irumporai. The poet was dead tired after a long walk. So he thought that he should take some rest before getting audience with the king. He saw a beautiful cot with silk cloth spread over it. That was the base for the drum. The officials took the drum outside for bathing/washing and cleaning it. Without realising it the poet lied on it and slept. It was reported to the king. He rushed out with his drawn sword to kill the enemy of the country who insulted his drum. When he realised that it was a tired poet, he calmed down started fanning him with royal fans so that the poet feels more comfortable. When the port suddenly woke up, he was shocked and surprised to see the king fanning him. Later he realised his mistake and praised the king with a poem. He says that he escaped the death sentence due to the love and affection of the king.
அம்பலவாணர் எழுதிய அறப்பளீசுர சதகத்தில் மேலும் இரண்டு பாடல்களை எடுத்துக்கொள்வோம்.
முதல் பாடலில் விலக்க வேண்டிய உணவு வகைகள் என்ன என்ன என்று சொல்கிறார்.
எந்த உணவுகளை விலக்க வேண்டும் என்று சொன்னவர் காரணத்தை விளம்பவில்லை. இவை பழைய நூலில் உள்ளவை என்று சொல்லி தப்பித்துக் கொள்கிறார். விளக்கில்லாத இடங்களில் சாப்பிடக்கூடாது, பழைய, கெட்ட உணவுகளை சாப்பிடக்கூடாது என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயமே. ஆனால் மஹாத்மா காந்திக்குப் பிடித்த ஆட்டுப்பாலை ஏன் வேண்டாம் என்று சொல்கிறார் ? என்று தெரியவில்லை. வெங்காயம், உள்ளிப்பூண்டு , முருங்கைக் காய், காளான் முதலியவற்றை ஆன்மீக நாட்டம் உடையோர் சேர்ப்பதில்லை ; வேறு சில காய்களையும் விலக்கியமைக்கு நமக்கு விளக்கம் தேவைப்படுகிறது
Xxx
இரண்டாம் பாடலில் ஒவ்வொரு பொருளுக்கும் உள்ள குற்றங்களை சொல்கிறார்
கங்கை நதிக்கு வெள்ளப்பெருக்கின்போது வரும் நுரை குற்றம்.
நிலவுக்கு அதிலுள்ள களங்கம் குற்றம் ;
தவ சீலர்களுக்கு கோபமே குற்றம் ; உடனே நமக்கு துர்வாசர் நினைப்பு வருகிறது. கோபத்தினால் வரக்கூடிய தீங்குகள் பற்றி முன்னரே சதகத்தில் கண்டோம். .குணமென்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது (குறள் 29)
பேரரசர்கள் ஆராயாமல் முடிவு செய்வது மன்னர்களின் தோஷம். உடனே நமக்கு கோவலனைக் கொன்ற பாண்டிய மன்னன் நினைவுக்கு வரும்
xxxx
விஷம்- விடம் , பாஷை- பாடை என்று ஆவது போல தோஷம் என்ற சொல் தோடம் ஆகியுள்ளது.
xxxxxx
கைவிலைக் குக்கொளும் பால் அசப் பால், வரும்
காராக் கறந்த வெண்பால்
காளான், முருங்கை, சுரை, கொம்மடி, பழச்சோறு
காந்திக் கரிந்த சோறு,
செவ்வையில் சிறுக்கீரை, பீர்க்கத்தி, வெள்ளுப்பு,
தென்னை வெல்லம் லாவகம்,
சீரிலா வெள்ளுள்ளி, ஈருள்ளி, இங்குவொடு
சிறப்பில்வெண் கத்த ரிக்காய்,
எவ்வம்இல் சிவன்கோயில் நிர்மாலி யம் கிரணம்,
இலகுசுட ரில்லா தவூண்,
இவையெலாம் சீலமுடை யோர்களுக் காகா
எனப்பழைய நூலுரை செயும்
ஐவகைப் புலன்வென்ற முனிவர்விண் ணவர்போற்றும்
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) ஐவகைப்புலன் வென்ற முனிவர் விண்ணவர் போற்றும்
அமலனே – ஐந்து புலன்களையும் வென்ற முனிவரும் வானவரும் வாழ்த்தும்
தூயவனே!, அருமை ……. தேவனே!, கைவிலைக்குக் கொளும் பால் –
விலைக்கு வாங்கும் பாலும், அசப்பால் – ஆட்டுப்பாலும், வரும் கார் ஆகறந்த வெண்பால் – வரும் காரா பசுவினிடம் கறந்த வெண்மையான பாலும்,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கடத்தப்பட்ட 32000 கேரளப் பெண்கள் – ஒரு சோகக் கதை!
ச.நாகராஜன்
எனது பெயர் ஷாலினி உன்னிகிருஷ்ணன். ஒரு நர்சாக ஆகி மனித குலத்திற்குச் சேவை செய்ய வேண்டும் என்று விரும்பினேன்.
இப்போது நான் பாதிமா பா. ஆப்கானிஸ்தானத்தில் ஒரு இஸ்லாமிய தீவிரவாதியாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறேன்.
நான் மட்டும் இப்படி இல்லை.
32000 பெண்கள் என்னப்போலவே மதம் மாற்றப்பட்டு, சிரியா, யேமன் பாலைவனங்களில் புதைக்கப்பட்டிருக்கின்றனர்.
ஒரு கோரமான விளையாட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – கேரளாவில் சாதாரணப் பெண்களை மதம் மாற்றி தீவிரவாதிகளாக ஆக்குவது வெளிப்படையாகவே நடைபெறுகிறது.
அவர்களைத் தடுத்து நிறுத்த யாருமே இல்லையா?
இது தான் எனது கதை!
இன்னும் 32000 பெண்களின் கதை!
இப்படிச் சொல்வது யார் தெரியுமா? எங்கு தெரியுமா?
ஒரு திரைப்பட முன்னோட்டத்தில்.
திரைப்படத்தின் பெயர் :- தி கேரளா ஸ்டோரி (The Kerala Story)
திரைப்படத்தில் ஷாலினியாகத் தோன்றும் அடா ஷர்மா இப்படி முன்னோட்டத்தில் கூறி அனைவரையும் திகைக்க வைக்கிறார்.
ஆதி சங்கரரின் ஜன்ம பூமியில் இப்படி ஒரு அவலம் என்பதை நினைத்தாலே மனம் திகைக்கிறது.
ஹிந்துப் பெண்மணிகளை வலுக்கட்டாயமாக இஸ்லாமிற்கு மாற்றி அவர்களைத் தீவிரவாதிகளாக ஆக்குவதை கம்யூனிஸ அரசு கண்டுகொள்வதே இல்லை என்பது கூடுதல் செய்தி.
விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரியின் The Kerala Story அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம்.
இந்தப் படத்தை இயக்கியவர் – விபுல் அம்ருத்லால் ஷா.
இந்திய திரைப்பட உலகில் குறிப்பிடத் தகுந்த தயாரிப்பாளர்களில் இவரும் ஒருவர்.
இந்தப் படத்தின் முன்னோட்டம் 2022 நவம்பர் 3ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது.
முன்னோட்டத்தின் நேரம் சுமார் ஒன்றரை நிமிடம்.
இதைப் பார்த்தவுடன் பொங்கியது காங்கிரஸ்.
இதைத் தடை செய்ய வேண்டும் என்றது.
கேரள போலீஸ் வழக்கு ஒன்றைப் பதிவு செய்திருக்கிறது.
32000 என்ற எண்ணிக்கை தவறு என்று கூறினர் சிலர்.
ஆனால் படத் தயாரிப்பைச் சேர்ந்தவர்களோ இது சரி தான், இதற்கான சரியான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன என்கின்றனர்.
இந்த எண் என்னுடையது அல்ல. டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் வந்த தகவல் இது. உமன் சாண்டி கேரள முதல் மந்திரியாக இருந்த போது அவரே அசெம்பிளியில் இதைக் கூறி இருக்கிறார். இதற்கான சரியான ஆவணங்கள் என்னிடம் உள்ளன.
இது தயாரிப்பு பக்கத்திலிருந்து வந்த செய்தி.
மூலம் ஆங்கிலத்தில் :-
This figure (32,000) is not mine. It was a piece of news in The Times of India… one thing I can tell you is that Oommen Chandy, the (then) chief minister of Kerala, had placed this number in the state assembly. So this is not my number, I have got all the documents with me,” he was quoted as saying by Alt News.
12 ஆண்டுகளில் 32000 பெண்கள் இப்படி மதம் மாற்றப்பட்டுள்ளனராம்!
படத்தைப் பார்த்து உண்மைகளைக் கண்டறிந்து மத்திய அரசு ஷாலினிகளின் உண்மை நிலவரங்களைக் கண்டறிய வேண்டும்.
இனியும் ஷாலினிகள் பாத்திமாக்களாக வலுக் கட்டாயமாக ஆக்கப்படக் கூடாது.
இதில் இருவித கருத்துக்களே இருக்க முடியாது!
2023 ஆம் வெளியீடு என்று எதிர்பார்க்கப்படும் கேரளா ஸ்டோரி வருமா?
பொறுத்திருந்து பார்ப்போம்!
***
Tags- Kerala story, film, கடத்தப்பட்ட, 32000, கேரளப் பெண்கள் , சோகக் கதை
எந்த நாளில் புத்தாடை அணியலாம் என்று அம்பலவாணர், முதல் பாட்டில் சொல்கிறார் ஞாயிறு, வியாழன், வெள்ளிக்கிழமைகளில் புத்தாடைகளை அணிக! என்கிறார்.
பின்னர் 3 பாடல்களில் சகுனங்கள் பற்றிப் பாடி, ஒரு பெரிய லிஸ்ட்-ஐ நமக்கு விட்டுச் சென்றுள்ளார் அறப்பளீசுர சதகம் எழுதிய அம்பல வாணக் கவிராயர் .
நாங்கள் பள்ளிக்கூடத்தில் படிக்கும் நாட்களில் யாரவது புதுச் சட்டை போட்டுக்கொண்டு வந்தால் கோடிக் கிள்ளு என்று சொல்லி அந்தப் பையனைக் கிள்ளுவோம். அவ்வாறு நானும் கோடி உடுத்திய நாட்களில் கிள்ளு வாங்கியிருக்கிறேன். இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை
xxxx
மூன்று பாடல்களில் அவர் சகுனம் பற்றிப் பாடியதிலிருந்து அதில் அவருக்குள்ள ஆழ்ந்த நம்பிக்கையை அறிய முடிகிறது.
சங்க இலக்கியத்தில், காட்டில் வேட்டை ஆடப் புறப்பட்ட காட்டுப் பன்றி கூட சகுனம் பார்த்ததாக உள்ளது
சகுன சாஸ்திரம் பற்றிய குறிப்புகள் தமிழில் ஒரே இடத்தில் குவிந்து கிடப்பதைப் போல சம்ஸ்க்ருதத்தில் கூட காணமுடியாது. ஸம்ஸ்க்ருதத்தில் அதற்காகவே உள்ள தனி நூலை விட்டுவிட்டால் பொதுவாக ராமாயணம், மஹாபாரதம், காளிதாசன் காவியங்கள் போன்ற நூல்களில் அங்குமிங்கும் குறிப்புகள் காணக்கிடக்கின்றன. ஆயினும் தமிழில் சங்க நூல்கள் என்ற 18 மேல்கணக்கு நூல்களிலும் காணப்படும் சகுனக் குறிப்புகளைப் போல ஒரே இடத்தில், வேறு எங்கும் காண முடியாது.
தொல்காப்பியம் துவங்கி சங்க நூல்கள் 18-லும் சுமார் 25 இடங்களுக்கு மேல் சகுனக் குறிப்புகள் இருக்கின்றன. சங்க நூல்களான பத்து ப்பாட்டுக்கும் எட்டுத் தொகைக்கும் பின்னர் எழுந்த சிலப்பதிகாரம் முதலிய காப்பியங்களில் மேலும் பல குறிப்புகள் உள்ளன. சிங்கார வேலு முதலியாரின் அபிதான சிந்தாமணியும் அறப்பளீசுர சதகம் போல நீண்ட சகுனப் பட்டியலைத் தருகிறது ; திருக்குறளில் தும்மல் சாஸ்திரம் வருகிறது. தமிழ்ப் பழமொழிகளில் நிறைய சகுன சாஸ்திரக் குறிப்புகள் காணக்கிடக்கின்றன. கம்பராமாயணத்தில் இன்னும் அதிகமாகக் கிடைக்கின்றன
நரி இடமாகப் போனால் என்ன, வலமாகப் போனால் என்ன,, மேலே விழுந்து பிடுங்காமல் போனால் போதும்
ஊருக்கெல்லாம் சோதிடம் சொல்லும் கெளலி (பல்லி ) கழனிப் பானையில் விழுந்ததாம் –இப்படி நிறைய உள்ளன.
தொல்காப்பியத்தில் தலைவனுக்கு பிறந்த நாள் அடிப்படையில் ஜாதகம் கணித்து வருங்காலம் உரைப்பது இளம்பூரணர் உரையால் நமக்குத் தெரியவருகிறது . அதில் பறவை சாஸ்திரம் ‘புள்’ என்று சொல்லப்பட்டுள்ளது ஆனந்த விகடன் அகராதி நிமித்தம், நிமித்திகன் என்ற சொற்களுக்கு சோதிட அடிப்படையில் பொருள் கூறுகிறது. சகுனம், நிமித்தம் என்பதெல்லாம் ஸம்ஸ்க்ருதச் சொற்கள். தமிழில் விரிச்சி, குறி சொல்லுதல் நல்ல நேரம், இடை அறிதல் , செவ்வியறிதல் என்ற சொற்களில் இதைக் காண்கிறோம். தும்மல், கண் துடிப்பு ஆகிய தனிச் சொற்களும் சகுனத்தைக் காட்டும்.
சம்ஸ்க்ருத ஸ்லோகங்களில் பயணம் செய்யக்கூடாத திசைகளை வாரசூலம் என்ற பாடல்களில் காணலாம் அப்படி பயணம் செய்ய நேர்ந்தால் என்ன பரிகாரம்/ தானம் கொடுக்க வேண்டும் என்றும் உள்ளது. திருமூலர் திருமந்திரத்திலும் வாரசூலை உள்ளது. இதோ தொல்காப்பியக் குறிப்பு
அச்சமும் உவகையும் எச்சமி ன்றி
நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்
காலம் கண்ணிய ஓம்படை உளப்பட
-தொல் . புற .30
அச்சமாவது தீமை வரும் என்று அஞ்சுதல் , உவகையாவது நன்மை வரும் என்று மகிழ்தல் ; நாளாவது நன்னாள், தீய நாள் ; காலம் கண்ணுதலாவது வருங்காலம் குறித்தல் என்று இளம்பூரணர் விளக்கம் அளித்துள்ளார்
நல்ல சகுனங்கள் என்ன?
62. சகுனம் – 1
முதல் பாடலில் எந்த எந்த பிராணிகள் வலமிருந்து இடமாகச் சென்றால் நல்லது என்று நீண்ட பிராணிகள் பட்டியல் தருகிறார். பலரும் பயப்படும் ஆந்தை, பூனை கூட குறுக்கே போகலாம். ஆனால் வலதா இடதா என்பது முக்கியம். அவை மேலே இடிக்கக்கூடாது , கைகால்களில் அகப்படக்கூடாது, தும்மல் இருமல் போடக்கூடாது அவை எல்லாம் நல்ல தல்ல என்கிறார் அமபலவாணர்.
XXX
63. சகுனம் – 2
சகுனம் பற்றிய இரண்டாவது பாடலிலும் எந்த பிராணிகள் வலமாக வந்தால் நல்லது என்று சொல்கிறார். இறுதியில் என்ன என்ன ஒலிகள் காதில் விழுந்தால் நல்லது என்றும் ஒரு பட்டியல் கொடுக்கிறார்.
xxxx
கெட்ட சகுனங்கள் என்ன ?
64. சகுனம் – 3
சகுனம் பற்றிய மூன்றாவது பாடலில் தலைவிரி கோலமாக வருவோர், ஒரு பிராமணன் வருதல் முதலியன கெட்ட சகுனம், இரட்டை பிராமணர், அழகிய சுமங்கலிகள் , வண்ணான் , பால்குடம் முதலியன நல்ல சகுனம் என்பார்.
வராஹமிஹிரர் எழுதிய பிருஹத் ஸம்ஹிதாவில் சகுனங்கள் பற்றிப் பாடியுள்ளார்
சகுனம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு பறவை என்று பொருள்; பறவைகள் பறப்பதை ஒட்டி எழுந்த சாஸ்திரம் சகுன சாஸ்திரம் ஆகும். பஞ்சாங்கத்தில் இன்றும் கூட பல்லி சாஸ்திரம், பஞ்ச பட்சி சாஸ்திரம் ஆகியன பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.
ரிக் வேத காலம் முதல் சகுன சாஸ்திரம் இருந்து வருகிறது
ஹைட்ரஜன் வாயு பற்றிய சுவையான விஷயங்களைத் தொடர்ந்து காண்போம்.
ஹைட்ரஜன் Hydrogen என்ற சொல் கிரேக்க மொழியில் பிறந்தது; ஹைட்ரோ Hydro என்றால் தண்ணீர் ஜெனி Gene என்றால் தோற்றுவிப்பது (ஜனனி= தாயார் என்பது சம்ஸ்க்ருதம்)
பிரபஞ்சத்தின் 88 சதவிகிதம் ஹைட்ரஜன் வாயுவால் நிரம்பி இருக்கிறது.
மாபெரும் பிரபஞ்ச வெடிப்பு (Big Bang) நிகழ்ந்த காலத்தே, மூன்று மூலகங்கள்/ தனிமங்கள் பிறந்தன ; அவை ஹைட்ரஜன் வாயு , ஹீலியம் வாயு மற்றும் லிதியம் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு. சூரியன் போன்ற ஒரு நட்சத்திரத்தில் ஒவ்வொரு வினாடியும் பல கோடி ஹைட்ரஜன் குண்டுகள் வெடித்த வண்ணமுள்ளன. இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து ஹீலியம் என்னும் வாயுவை உண்டாக்கும்போது இந்த பிரம்மாண்டமான சக்தி கிடைக்கிறது . பூமியிலும் விஞ்ஞானிகள் இவ்வாறு சோதனை முறையில் ஹைட்ரஜன் குண்டுகளை வெடித்தனர்.
அணுகுண்டு (Atomic bomb) என்பது யுரேனியம், ப்ளூட்டோனியம் போன்ற உலோகங்களின் அணுவைப் பிளப்பதாகும் ; ஹைட்ரஜன் குண்டு (Hydrogen Bomb) இதற்கு நேர் மாறானது; இரண்டு அணுக்களை இணைப்பதாகும் .
ஹைட்ரஜன் குண்டு , முன்னர் அமெரிக்கா உபயோகித்த சின்ன அணுகுண்டை விட 1000 மடங்கு சக்தி வாய்ந்தவை. இரண்டாவது உலக மஹாயுத்தத்தின்போது அமெரிக்கா 2 ஜப்பானிய நகரங்கள் மீது சின்ன அணு குண்டுகளை போட்டு ஒரு நொடியில் இரண்டு லட்சம் பேரைக் கொன்றது. அது வெளியிட்ட சக்தி 10,000 TNTடிஎன்டி க்கு சமமானது. ஒரு ஹைட்ரஜன் குண்டு ஒரு லட்சம் TNT டி.என்.டி வெடிமருந்துக்குச் சமமானது.
பெரிய ஹைட்ரஜன் குண்டுகள் மில்லியன் டன் TNT டி என் டி வெடிமருந்து வெடிப்பதற்குச் சமமானவை
சூரியன் என்பது நட்சத்திர வகைகளில் சிறிய நட்சத்திரம்தான். அதில் ஒவ்வொரு வினாடியும் 60 கோடி டன் ஹைட்ரஜன் ஹீலியமாக மாற்றப்படுகின்றது
இனி ஹைட்ரஜன் வாயு பற்றிக் காண்போம்
பூமியின் ஈர்ப்பு விசையையும் தாண்டித் தப்பித்துச் செல்லவல்லது இந்த வாயு. குரு (Jupiter) என்னும் வியாழன் கிரகம் அளவுக்கு ஈர்ப்பு விசை இருந்தால்தான் இதை பிடித்துவைக்க முடியும். கள்ளனுக்கும் குள்ளன் ஹைட்ரஜன்!
மருத்துவத்தில் ஹைட்ரஜன்
நம்முடைய உடலில் பெரும்பாலும் தண்ணீர்தான் உள்ளது. ஒரு நாளைக்கு மனிதனுக்கு இரண்டரை லிட்டர் தண்ணீர் தேவை. இதில் பாதி தண்ணீர் மூலமும், மீதிப்பாதி உணவு வகைகளிருந்தும் நமக்கு கிடைக்கிறது
உடலில் உள்ள தண்ணீரை 65 சதவிகிதம் என்றும் அதில் ஹைட்ரஜனின் அளவு 11 சதவிகிதம் என்றும் ஆராய்சசியாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.
உடலில் உள்ள ஒவ்வொரு அணுவிலும் இது உள்ளது; குறிப்பாக DNA டி என் ஏ என்னும் மரபணுவில் இருக்கிறது நம்முடைய உடலில் உள்ள ரத்தம் பொதுவாக அமிலத் தன்மை (acidic) வாய்ந்தது. உடலில் தண்ணீர் வற்றிப்போன நிலையில் (Dehydrated Condition) , தண்ணீரை உடனே கொடுத்தால் மாரடைப்பு வந்துவிடும். ஆகையால் சொட்டுச் சொட்டாக ஏற்றுவர். ஏனெனில் இதயம் திடீரென்று அதிகத் தண்ணீரை ஏற்காது.
இதை மருத்துவ ரீதியில் விளக்குகிறார்கள். அதாவது இருதயத்தின் தசைகளில் உள்ள சோடியம் பொட்டாசியம் ‘அயான்’களின் சமச் சீர் நிலையை (It upsets the balance of sodium , potassium ions in heart muscle) பாதிக்கிறது. இருதய நோயுள்ளவர்களின் இருதய திசுக்களில் சோடியம் – ஹைட்ரஜன் பரிமாற்றம் ( exchange of sodium, hydrogen ions in heart tissues )முக்கிய பங்கு வகிக்கிறது.
தண்ணீர் இல்லாமல் மனிதன் வாழமுடியாது; இதையே ஹைட்ரஜன் இல்லாமல் வாழ முடியாது என்று சொன்னாலும் தவறில்லை
xxxx
வரலாறு
1671-ல் இதை ராபர்ட் பாயில் (Robert Boyle) என்பவர் சோதனைச் சாலையில் உருவாக்கினார். ஆயினும் ஹைட்ரஜனைக் கண்டுபிடித்த பெருமை லண்டனில் வசித்த பைத்தியக்கார (eccentric), பணக்கார ஆராய்ச்சியாளர் ஹென்றி காவென்டிஷுக்கு (Henry Cavendish 1731-1810) தான் கிடைத்தது . அவர் லண்டனில் தனி சோதனைச் சாலை வைத்து பெரும்பாலான நேரத்தைச் செலவிட்டார். இதனால் இவரை ஒரு மாதிரியான ஆள் (eccentric) என்று சொல்லத் துவங்கினர். பிரெஞ்சு ஆராய்ச்யாளர் அந்தோணி லவாய்ச்சியர் (Antoine Lavoisier) தான், இதற்கு ஹைட்ரஜன் என்று பெயர் சூட்டினார்.
xxx
ஹைட்ரஜன் பலூன் (Hot Air Balloons) பயணம்
இந்த வாயு மிகவும் லேசானதால் இதை பெரிய பலூனில் ஏற்றி , அத்துடன் இணைத்த கூடை வடிவ பயணப்பெட்டியில் மனிதர்களை வான வெளிக்கு அழைத்துச் சென்றனர். குறிப்பாக சுற்றுலாத் தலங்களை மேலேயிருந்து காண இது பயன்பட்டது . பின்னர் ஹைட்ரஜன் விமானங்களையும் பறக்கவிட்டனர் ; இவைகளை ஷெப்பலின் (ZEPPELINS ) என்று அழைப்பர். பல ஐரோப்பிய நகரங்களுக்கு இடையில் இவை பயணப் போக்குவரத்துக்கு பயன்பட்டன. 1914ல் முதல் உலகப்போர் வெடித்தபோது 35, 000 பயணிகள் வரை இதை பயன்படுத்தினர். ஆயினும் 1937ம் ஆண்டில் ஏற்பட்ட விபத்து இதற்க்கு கெட்ட பெயரைச் சம்பாதித்துத் தந்தது. ஹைட்ரஜன் வாயு கசிந்ததால் தீ விபத்து ஏற்பட்டு 35 பேர் இறந்தனர் . முதல் உலக யுத்தத்தில் லண்டன் மீது குண்டு போடக்கூட, ஜெர்மனி ஹைட்ரஜன் (Zeppelins) பலூன்களைப் பயன்படுத்தியது
ஹைட்ரஜன் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய வாயு.
xxxx
பொருளாதார உபயோகம்
பெரும்பாலும் ரசாயன தொழிற்சாலைகளில் இந்த வாயு பயன்படுகிறது. அமெரிக்காவில் ஹைட்ரஜன் வாயுவை, நாடு முழுதும் கொண்டுசெல்ல தனி குழாய்ப்பாதையே இருக்கிறது. Ethanol எதனால், Methanol மெதனால் தயாரிக்கும் ஆலைகளில். அம்மோனியா உரம் தயாரிக்கும் ஆலைகளில், இது அதிகம் பயன்படுகிறது. திரவ நிலையில் இருக்கும் தாவர எண்ணெய்களை ‘மார்ஜரின்’ போல கட்டியாக மாற்றும் ஆலைகளிலும் இதற்கு வேலை உண்டு . உயர்ந்த வெப்பம் தேவைப்படும் வெல்டிங் Welding தொழிற்சாலைகளில் சிறிதளவு பயன்படுகிறது.
அமெரிக்கா , விண்வெளி ஆராய்ச்சிக்கும் இதைப்பயன்படுத்துகிறது திரவ நிலையிலுள்ள ஹைட்ரஜனைப் பயன்படுத்தி பிரம்மாண்டமான ரயில் மற்றும் சாலை வாகனங்களை இயக்குகிறது.
விண்வெளிக்குச் சென்று திரும்பிவரும் Space Shuttle ஸ்பேஸ் ஷட்டில் விண்கலத்துக்கு 5 லட்சம் லிட்டர் திரவ நிலை ஆக்சிஜனும் 15 லட்சம் லிட்டர் திரவ நிலை ஹைட்ரஜனும் தேவை . இவைகளைச் சேமித்துவைக்கவோ அதைவிட பெரிய டாங்குகள் (Tanks) தேவை.
xxx
ஹைட்ரஜன் பஸ்கள், கார்கள் (Hydrogen Buses and Cars)
இப்பொழுது ஐரோப்பிய நகரங்களில் ஹைட்ரஜன் பஸ்களையும் கார்களையும் அதிகம் பயன்படுத்துகின்றனர் பெட்ரோலைவிட விலையும் குறைவு;. காற்று மாசுபடுவதும் இல்லை..
‘அவன் தண்ணீரில் கூட கார் ஓட்டுவான்’ என்று கிண்டலாகச் சொன்ன மொழி இப்பொழுது உண்மையாகி விட்டது . தண்ணீரை ஹைட்ரஜன், ஆக்சிஜன் என்று பிரித்து அவற்றின் சக்தியில் வாகனங்கள் ஒட்டப்படுகின்றன.
ஹைட்ரஜன் பஸ்களும், கார்களும் லண்டனில் அதிகம் பயன்படுகின்றன. மின்சக்தி அல்லது ஹைட்ரஜன் சக்தி அல்லது இரண்டையும் கலந்த (Hybrid Vehicles) சக்தியை மட்டுமே பயன்படுத்த லண்டன் சபை திட்டமிட்டுள்ளது . எதிர்காலத்தில் புறச்சூழலை மாசுபடுத்தும் பஸ்கள் இருக்கக்கூடாது என்பது அவர்கள் அணுகுமுறை. இத்தகைய பஸ்கள் பூனை போல சப்தம் இன்றி இயங்குகின்றன. பின்னால் வாகனம் வ்ருவதை சப்தத்தால் அறிய முடியாது.!
xxx
ரசாயன குணங்கள் Chemical Properties
குறியீடு H (எச்)
அணு எண் -1
உருகு நிலை – மைனஸ் 259 டிகிரி C
கொதி நிலை – மைனஸ் 253 டிகிரி C
இந்த வாயு நிறமற்றது; மணமற்றது எளிதில் தீப்பிடித்து எரியக்கூடியது (Highly inflammable) .
ஆர்த்தோ Ortho ஹைட்ரஜன் , பாரா Para ஹைட்ரஜன் என்ற இரண்டு நிலையில் காற்றில் உள்ளது .
மூலக உலகிலேயே ஐசடோப்புகளுக்கு தனிப் பெயர் உடைய பெருமை இந்த வாயுவுக்கு மட்டுமே உண்டு.
ஒரு ஐசடோப்- டெட்டூரியம் (Deuterium ), மற்றொன்று- ட்ரைஷியம் (Tritium); மூன்றாவது ஐசடோப் -ஹைட்ரஜன் 1 (Hydrogen 1) என்று அழைக்கப்படும்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அருள்வாயே! – 10 (85 முதல் 94 முடிய)
ச.நாகராஜன்
அருணகிரிநாதர் ‘அருள்’ என்ற சொல்லைத் திருப்புகழில் ஆண்ட இடங்கள் ஏராளம்.
அவர் அருள்வாயே என்று கூறும் இடங்களின் நீண்ட தொகுப்பு இது:
படித்து மகிழ்வோம்; பாடிப் பரவுவோம்!
85) சிதம்பரம்
மோக வாரிதி தனிலே நாடொறு
மூழ்கு வேனுன தடியா ராகிய
மோன ஞானிக ளுடனே சேரவு மருள்வாயே
பாடல் எண் 484 – ‘தாது மாமலர்‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : காமக்கடலில் தினமும் மூழ்குகின்ற நான் உன்னுடைய அடியவர்களாகிய மௌன ஞானிகளுடன் சேர்ந்து பழகுவதற்கு அருள்வாயாக!
86) சிதம்பரம்
விலைமாதர்
காத லாயவ ரோடு பாழ்வினை
மூழ்கி யேழ்நர காழு மூடனை
காரி பாருமை யாசி வாபத மருள்வாயே
பாடல் எண் 486 – ‘நீல மாமுகில்‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : வேசிகளுடன் ஆசை பூண்டவனாய் பாழ்படுத்தும் வினையிலே மூழ்கி, ஏழு நரகங்களிலும் ஆழ்ந்து விடும் முழு முட்டாளாக இருப்பினும், என்னை கண் பார்த்து அருளும் ஐயா, சிவபதம் தந்து அருள்வாயாக!
87) சிதம்பரம்
அவரோடே
பதந்துய்த் துக்கொடு தீமைய மாநர
கடைந்திட் டுச்சவ மாகிவி டாதுன
பதம்பற் றிப்புக ழானது கூறிட அருள்வாயே
பாடல் எண் 489 – ‘இணங்கித் தட்பொடு‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : இத்தைகைய பொது மகளிரோடு இன்பத்தை அனுபவித்துக் கொண்டு, கொடுமை வாய்ந்த பெரிய நரகத்தை அடைந்து பிணமாகி விடாமல், உனது திருவடியைப் பற்றி உன் திருப்புகழைக் கூற எனக்கு அருள்வாயாக!
88) சிதம்பரம்
அருவரு வொழிய வடிவுள பொருளை
அலம்வர அடியேற் கருள்வாயே
பாடல் எண் 494 – ‘தறுகணன் மறலி‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : வெறுப்பேற்றும் செயல்கள் ஒழிந்து, பேரின்ப வடிவம் உள்ள சற்குணப் பொருளை அமைதியோடு அறியும்படி எந்தனுக்கு நீ
அருள்வாயாக!
89) சிதம்பரம்
ஆசைப்பத மேல்புத்திமெய் ஞானத்துட னேபத்திர
மாகக்கொள வேமுத்தியை யருள்வாயே
பாடல் எண் 507 – ‘நீலக் குழலார்‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : ஆசையுடன் உனது திருவடியின் மேல் புத்தியை வைத்து மெய்ஞ் ஞானத்துடன் நற்பலனைப் பெறவே முக்தியை அருள்வாயாக!
90) சிதம்பரம்
இக்க டத்தை நீக்கி அக்க டத்து ளாக்கி
இப்படிக்கு மோக்ஷ மருள்வாயே
பாடல் எண் 510 – ‘மச்ச மெச்சு‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : இத்தகைய உடம்பை ஒழித்து, அந்த சுத்த, அழியாத தேகத்தில் என்னைப் புகுத்தி, இவ்வாறு வீட்டு இன்பத்தைத் தந்து அருள்வாயாக!
91) சிதம்பரம்
சித்தெ லாமொரு மித்துன தாறினம்
வைத்து நாயென ருட்பெற வேபொருள்
செப்பி யாறுமு கப்பரி வோடுணர் வருள்வாயே
பாடல் எண் 514 – ‘முத்த மோகன‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : சித்தி எல்லாம் ஒன்று கூடி அமைந்துள்ள உன்னுடைய ஆறு எழுத்தை முறைப்படி வைத்து, அடியேன் உன் திருவருளைப் பெறுமாறு (அந்த ஆறெழுத்தின்) பொருளை விளக்கிச் சொல்லி, உனது திருமுகங்கள் ஆறும் கருணை கொண்டவனாய் ஞானத்தை அருள்வாயாக!
ஆறுமுகங்களுக்கான விளக்கங்கள் ஏராளம் உள்ளன.
ஏறு மயில் ஏறி எனும் பாடலைக் காணலாம்.
சக்திகள் ஆறு : ஆதி சக்தி, இச்சா சக்தி, க்ரியா சக்தி, ஞான சக்தி, பராசக்தி, குடிலா (ஓங்கார) சக்தி
பீஜங்கள் ஆறு : அகரம், உகரம், மகரம், நாதம், விந்து, கலை
அத்துவாக்கள் ஆறு : மந்திரம், பதம், வண்ணம், புவனம், கலை, தத்துவம்
இறைக்குணங்கள் ஆறு : ஸர்வக்ஞத சக்தி – பூரண அறிவுடன் இருக்கும்.
நித்ய திருப்தி சக்தி – எல்லா அனுக்ரகமும் புரியும்.
அநாதிபோத சக்தி – எல்லா உயிர்களுக்கும் ஞானத்தைத் தரும்.
ஸர்வ சுதந்திர சக்தி – ஆன்மாக்களுக்கு முக்தியைத் தரும்.
அலுப்த சக்தி – ஐந்தொழிலைப் புரியும்.
அநந்த சக்தி – எல்லா ஆற்றலையும் உண்டாக்கும்.
குணங்கள் ஆறு – ஐஸ்வர்யம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம்.
92) சோலை மேவிய குன்று
பந்தியாய் வானு ளோர்தொழ நின்றசீ ரேகு லாவிய
பண்புசேர் பாத தாமரை யருள்வாயே
பாடல் எண் 516 – ‘வஞ்சமே கோடி‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : வரிசையாக தேவர்கள் தொழ நின்ற பெருமை விளங்கும் பண்புகள் பொருந்திய திருவடித் தாமரைகளை எனக்கு அருள்வாயாக!
93) கயிலை மலை
இருவரு முருகிக் காய நிலையென மருவித் தேவ
ரிளையவ னெனவித் தார மருள்வாயே
பாடல் எண் 517 – ‘திருநிலம் ‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : நீயும் நானும் ஒன்றுபடக் கலந்து, (அத்தகைய கலப்பால்) இவ்வுடல் நிலைபட்டதெனப் பொருந்தி, தேவர்கள் இவன் இளையவன் என்னு என்னை வியந்து கூறும்படியான விசித்திரப் பெரும் பேற்றை அருள்வாயாக!
94) கயிலை மலை
ஞானஞ் சுரப்பமகி ழாநந்த சித்தியொடெ
நாளுங் களிக்கபத மருள்வாயே
பாடல் எண் 518 – ‘தேனுந்து முக்கனிகள் ‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : சிவ ஞானம் பெருகி வரவும், மகிழ்ச்சி ஊறும் சிவானந்த மோக்ஷத்தில், அடியேன் எந்த நாளும் மகிழ்ந்திருக்குமாறு நின் திருவடையைத் தந்தருள்வாயாக!
குறிப்பு & நன்றி : https://www.kaumaram.comதளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன் விளக்கத்தையும் இதில் காணலாம்.
இறைவனின் கருணையால் விளையாடுகிறேன், ஓடுகிறேன், படிக்கிறேன் , தினமும் (நல்லவற்றைக்) காண்கிறேன், கேட்கிறேன், முகர்கிறேன் . இரவில் சுகமாய் தூங்குகிறேன்.
Xxx
ஜரா மரண துக்கேஷு ராஜ்ய லாப சுகேஷு ச
ந பிபேமி ந ஹ்ருஷ்யாமி தேன ஜீவாமி அநாமயஹ
மூப்பு, மரணம், துயரம், அரசாங்க சலுகைகள், சுகங்கள் இவைகள் பற்றி பயப்படுவது இல்லை; (அதாவது வருமா வராதா என்று கவலைப்படுவதில்லை). விரும்பியது கிடைத்ததால் சந்தோஷப்படவும் மாட்டேன் .; ஆகையால்தான் நான் நோயற்றவனாக வாழ்கின்றேன்.
xxxx
பிசிராந்தையார் யார்?
சங்க காலப் புலவர். அவர் பாடிய நரை முடி இல்லாமைப் பாடல் மிகவும் பிரஸித்தம்:
“ஐயா, தொண்டுக் கிழமாகிவிட்டீரே; முடி மட்டும் கருக்கவில்லையே; ஏதேனும் கூந்தல் வளர் தைலம் தடவுகிறீரோ” என்று எல்லோரும் வியப்புடன் பார்க்கின்றனர். அவர் சொல்லுகிறார்:- “ஐயன்மீர் என் வீட்டிலும் ஓம் சாந்தி, நாட்டிலும் ஓம் சாந்தி, என் மனதிலும் ஓம் சாந்தி; இப்படி சாந்தி நிலவுகையில் முடி எப்படி நரைக்கும்?” என்று பாடுகிறார்:–
யாண்டு பலவாக நரையில வாகுதல்
யாங்கா கியரென வினவுதிராயின்
மாண்டவென் மனைவியொடு மக்களும் நிரம்பினர்;
யான்கண் டனையர் என் இளையரும்: வேந்தனும்
அல்லவை செய்யான், காக்கும்; அதன் தலை
ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே
——(புறநானூறு ,பாடல் எண். 191)
பொருள்:-
நுமக்குச் சென்ற ஆண்டுகளோ பலவாயின; இருந்தும் நரைமுடி காணவில்லை. இது எப்படி? என்று கேட்கிறீர்களா?
என் மனைவி நல்லவள்; என் பிள்ளைகள் கெட்டிக்காரர்கள்; என்னிடம் பணிபுரியும் ஏவலரோ நான் ‘எள் என்றால் எண்ணை யாக’ நிற்பர்; குறிப்பறிந்து ஒழுகும் தன்மையர். என் அரசன், எந்த தவற்றையும் செய்யான்; இதற்கெல்லாம் மேலாக என் ஊரிலுள்ள அறிஞர்கள் புலன்களை வென்று, உயர்ந்த குறிக்கோள் உடையவர்கள். (எனக்கு கவலையே இல்லை; கவலை இல்லாதோருக்கு நரை முடி வராதே!)
புறநானூற்றிலுள்ள பாடல் 191
Xxx
இந்துக்கள் பெரிய சைக்காலஜிஸ்ட்கள் Psychologists ; மன இயல் நிபுணர்கள் ; உள்ள இயல் அறிஞர்கள் ; கவலை இல்லாத மனிதனாக வாழ்க்கை நடத்தினால் தலை முடி கூட கருக்காது; 100 ஆண்டுகள் நோய் நொடி இல்லாமல் வாழலாம் . ஆனால் அப்படிக் கவலை இல்லாமல் வாழ மூன்று அம்சங்கள் தேவை :-
ஓம் சாந்தி – மனதில் அமைதி
ஓம் சாந்தி – குடும்பத்தில் அமைதி
ஓம் சாந்தி – நாட்டில் அமைதி
நான் அமைதியாக இருக்கிறேன். இதில் வியப்பில்லை ; என் மனைவி, மகன்கள், வீட்டு வேலைக்காரர்கள் அனைவரும் நான் எண்ணியத்தைச் செய்து முடிக்கின்றனர் . அது மட்டுமா ? நான் வசிக்கும் ஊரில் சத் சங்கம் இருக்கிறது. அங்கு எல்லோரும் ஆய்ந்து, அவிந்து, அடங்கிய, கொள்கைச் சான்றோர்.
ஆதாவது அவர்கள் எல்லோரும் படித்தவர்கள் ; கற்கக் கசடறக் கற்று அதன் பின்னர், அதற்குத் தக நின்றவர்கள். அதாவது படித்த அகம்பாவம் இன்றி , வித்யா விநய சம்பந்னே என்றவாறு அடக்கம் மிக்கவர்கள் ; அது மட்டுமல்ல; கட்சிமாறிகள் அல்ல. அவர்கள் கொள்கைச் சான்றோர்.; தான் ஏற்ற தருமத்தை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு நின்று ஒழுகும் கொள்கை உடையோர் . இது பழங்காலத் தமிழகத்தை அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறது .
Xxxx
கவலை இல்லாத மனிதன்.
கவலை இல்லாத மனிதன் , 1960 ஆம் ஆண்டுத் திரைப்படம்
இந்தத் திரைப்படத்தில் உள்ள பாடல் ஓரளவுக்கு கவலை இல்லாத மனிதன் கொள்கையைக் காட்டுகிறது
“கவலை இல்லாத மனிதன்.
கவலை இல்லாத மனிதன்.
உலகத்தை அறிந்தவன்
துணிந்தவன் அவனே
கவலையில்லாத மனிதன்
போவதைக் கண்டு கலங்காமல்
வருவதைக் கண்டு மயங்காமல்
மெய் தளராமல் கை நடுங்காமல்
உண்மையை, பொய்யை, உணர்ந்தவனே
உலகத்தை அறிந்தவன்
துணிந்தவன் அவனே
கவலையில்லாத மனிதன்
வாழ்க்கை என்பது நாடகமே
வந்து போனவர் ஆயிரமே
கொண்டு சென்றவர் யாரும் இல்லை
கொடுத்துப் போனதும் நினைவும் இல்லை
அந்த நாடகம் இன்னும் முடியவில்லை
மறுநாளைக்கு வருவதும் தெரியவில்லை
உலகத்தை அறிந்தவன்
துணிந்தவன் அவனே
கவலையில்லாத மனிதன்.
வாழ்வை அறிந்தவன் சம்சாரி
வாழப் பயந்தவன் சன்னியாசி
கண்ணீர் வடிப்பவன் மூடனடா
காலத்தை வென்றவன் வீரனடா
நல் இன்பத்தைத் தேடி உறவாடு
நீ எழுந்திடு மனிதா விளையாடு
Xxxxx
இதை பகவத் கீதையிலும்– 12 ஆவது அத்தியாயத்தில் (12-13 to 12-20) — கிருஷ்ண பரமாத்மா விளக்குகிறார் . கவலை இல்லாத மனிதன் இன்ப துன்பங்களுக்கு அப்பாற்பட்டவன் ; தமிழில் இதை இருமை அல்லது இரட்டை என்பர். சம்ஸ்க்ருதத்தில் த்வந்த்வம் என்பர்; இன்ப துன்பம் , சீத உஷ்ணம், இரவு பகல், ஏற்ற தாழ்வு, பெரியோர் சிறியோர் — இவைகளைப் பொருட்படுத்தாமல் சம பார்வை உடையவர்கள் ; கணியன் பூங்குன்றனின் யாதும் ஊரே பாடலிலும் இக்கருத்து வருகிறது.
—subham—
Tags-கவலை இல்லாத மனிதன், யாண்டு பலவாக நரையிலவாகுதல், பிசிராந்தையார்