கீமோதெராபியைக் கண்டுபிடித்தவர் – ஜேன் குக் ரைட்! (Post No.11,139)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,139

Date uploaded in London – –    26 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

கீமோதெராபியைக் கண்டுபிடித்தவர் – ஜேன் குக் ரைட்!

ச.நாகராஜன்

உலகமே பயப்படும் கொடிய வியாதியான கான்ஸர் எத்தனை பேரைக் கொன்றிருக்கிறது என்பதற்குக் கணக்கே இல்லை.

இந்த வியாதிக்கு ஒரு மருந்தே இல்லை போலும் என்று நினைத்திருந்த சமயத்தில் தான் தனது அரிய ஆராய்ச்சி மூலம் ஒரு நம்பிக்கையைத் தந்தார் ஜேன் ரைட் என்னும் ஆப்பிரிக்க அமெரிக்க பெண்மணி! (தோற்றம் : 20, நவம்பர் 1919 மறைவு 19, பிப்ரவரி 2013)     (

அமெரிக்காவில் மன்ஹாட்டனில் ஜேன் பரம்பரையான டாக்டர் குடும்பத்தில் பிறந்தார். அவரது தாத்தாக்களான சியா கெட்சம் ரைட் (Ceah Ketcham Wright)மற்றும் வில்லியம் ஃப்லெட்சர் (William Fletcher) ஆகியோர் டாக்டர்களே! ஜேனின் தந்தையான லூயி டாம்கின்ஸ் ரைட்  (Louis Tompkins Wright)ந்ஒரு தேர்ந்த சர்ஜன். கான்ஸரைப் பற்றித் தொடர்ந்து ஆராய்ந்து வந்தவர்.

இந்தப் பரம்பரையில் வந்தவர் தான் ஜேன்; என்றாலும் கூட அவருக்கு நல்ல ஓவியராக வேண்டும் என்ற ஆசை தான் இருந்தது. ஆனால் அவரது தந்தை தான் அவரை மெடிகல் படிக்கலாமே என்று யோசனை கூறினார்.

உடனே வைத்தியத் துறையில் இறங்கினார் அவர். முப்பது வயது ஆரம்பிக்கும் போது அவர் கான்ஸரைப் பற்றி ஆராய ஆரம்பித்தார். 1952இல் ஹார்லெம் மருத்துவமனையில் கான்ஸர் ரிஸர்ச் ஃபவுண்டேஷனின் டைரக்டராக ஆனார்.

கேன்ஸர் வியாதியினால் பீடிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள் அனைவருக்கும் பொருந்தும்படியான ஒரு மருந்து இல்லை என்பது தான் அவரது முடிவு.

கான்ஸரைப் பரப்பும் செல்களை எப்படித் தடுத்து நிறுத்துவது என்பது தான் அவரது ஆய்வின் ஒரே நோக்கம்.

1945ஆம் ஆண்டு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கான்ஸர் ஆய்வு மையத்தின் இயக்குநர் இந்த பிரச்சினையை அழகாக இப்படிச் சொன்னார்: “ இடது காதை பங்கப்படுத்தினாலும் வலது காதை அப்படியே பங்கமில்லாமல் வைக்க முடிவது எப்படி என்பதற்கான ஒரு ஏஜண்டை நாம் கண்டுபிடிக்க வேண்டும்!”

ஒரு இரசாயன ஆயுதத்தைக் கையில் எடுத்து கான்ஸரைத் தாக்க முடியுமா என்று பார்த்தால் அதுவும் சரியில்லை என்று தெரிய வந்தது.

கான்ஸர் கிருமிகள் எப்படிப் பரவுகின்றன என்பதே தெரியாத நிலை!

அப்போது கான்ஸர் வியாதிக்குச் சற்றும் சம்பந்தமில்லாத ஒரு விபத்து கான்ஸர் வியாதியைத் தீர்க்க வழியைக் காட்டியது!

1943ஆம் ஆண்டு கடுகு வாயுவை (mustard gas) ஏற்றிக் கொண்டு வந்த ஒரு கடற்படைக் கப்பல், விபத்து ஏற்பட கடலில் மூழ்கியது. கப்பல் கடலில் மூழ்கும் போது கடுகு வாயு வெளிப்படவே அதனால் பாதிக்கப்பட்டு ஏராளமான வீரர்கள் இறந்தனர்.

அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காகக் கொண்டு வரப்பட்டன.

அப்போது ஒரு விஷயம் வெளிப்பட்டது.

தொற்றுவியாதி பரவுவதைத் தடுக்கும் வெள்ளை அணுக்கள் அவர்கள் உடலில் சிதிலமாகி இருந்தன. இந்த செல்கள் தான் லூகேமியா நோயாளிகளிடம் கான்ஸரைப் பரப்பவும் காரணமாக அமைந்திருந்தன.

1946இல் முதன்முதலாக ஒரு கான்ஸர் நோயாளிக்கு ஊசி மூலம் நைட்ரஜன் மஸ்டர்ட் செலுத்தப்பட்டது. அதில் சற்று குணம் காணப்பட்டது.

அதிலிருந்து கான்ஸர் வியாதிக்கான சிகிச்சையைத் தொடர்ந்து செய்து வரலானார் ஜேன்.

மார்பகப் புற்று நோய்க்குத் தரப்படும் மருந்து கோலன் புற்று நோய்க்குச் சரிப்பட்டு வரவில்லை.

ஒவ்வொரு கேன்ஸர் நோயாளியையும் தீவிரமாக ஆராய வேண்டி இருந்தது.

ஆகவே சுமார் 22 வருடங்கள் ஒவ்வொரு நோயாளியையும் ஆராய்ந்து கொண்டே இருந்தார் ஜேன். ஒவ்வொரு நோயாளியின் கட்டியிலிருந்து ஒரு  மாதிரியை எடுத்து அதைத் தன் சோதனைச்சாலையில் ஆராய ஆரம்பித்தார் அவர். டிஷ்யூ கல்சரில் அவரது ஆய்வு முடிவுகள் பெரிய பயனை கான்ஸர் சிகிச்சையில் தந்தது.

உலகம் கீமோ தெராபி (Chemo  therapy) என்ற புதிய சிகிச்சை முறையைக் கடைப்பிடிக்க முடிந்தது.

அவர் கண்டுபிடித்த புதிய முறைகளைப் பற்றி அவரது இரு மகள்களுமே அறிந்திருக்கவில்லை.

அவர் இறந்த பின்னர் அவரது நோயாளிகளும் நண்பர்களும் அவரைப் புகழ்ந்து பேசிய போது தான் அவரைப் பற்றிய  முழு விவரங்களும் உலகினருக்குத் தெரிய ஆரம்பித்தது.

1987இல் அவர் பணி ஒய்வு பெற்ற பின்னர் வண்ண ஓவியங்களிலும் மர்ம நாவல்கள் படிப்பதிலும், கடல்பயணம் செய்வதிலும் மனதைச் செலுத்தி மகிழ்ந்தார்.

2013ஆம் ஆண்டு நியூ ஜெர்ஸியில் குட்டன்பர்க்கில் தனது 93ஆம் வயதில் மன நிறைவுடன் அவர் மறைந்தார்.

தன் வாழ்க்கையில் எதைச் சாதிக்க வேண்டும் என்று நினைத்தாரோ அதை அவர் சாதித்த பின்னரே மறைந்தார்.

***

.

புத்தக அறிமுகம் – 9

நோய் தீரஇன்பம் சேரவினை தேய தேவாரம்திருவாசகம்!

பொருளடக்கம்

என்னுரை

திருஞானசம்பந்தர்

1. ஒரே பாட்டில் சம்பந்தரின் அருட் செயல்கள்!

2. அடியார்கள் வானில் அரசாள ஆணையிட்ட அற்புதர் சம்பந்தர்!

3. நோய் தீரும், இன்பம் சேரும், வினை தேயும், சிவகதி சேரும், திண்ணம், திண்ணமே – சம்பந்தர் அருள் வாக்கு!

4. ஞானசம்பந்தர் அருளிய ஒரு நல்ல, நல்ல, நல்ல, நல்ல, நல்ல பதிகம்!

5. நம் பந்தம் போக்க வந்த சம்பந்தர் கவசம் அணிவோம்!

6. நமது கேள்விகளும் அப்பர் பதில்களும்!

7. பிறவியை வேண்டும் பேரருளாளர்!

8. அப்பரின் ஹஹ்ஹஹ்ஹா சிரிப்பு!

9. வெகுண்டெழுந்த அப்பர் விரட்டுவது எவற்றை?

10. அப்பரின் அருமையான லாபரட்டரி!

11. தேவாரத்தில் வரும் தேனினும் இனிய சொற்கள்!

12. யமனுக்கு அப்பரின் பாராட்டும்

13. வைச்ச பொருள்?! – 1

14. வைச்ச பொருள்?! – 2

15. வைச்ச பொருள்?! – 3

16. வைச்ச பொருள் – 4

17.வைச்ச பொருள்?! – 5

சுந்தரர்

18. முதலைப் பாடல்கள் – 1

19. முதலைப் பாடல்கள் – 2

மணிவாசகர்

20. இறைவன் ஏமாந்தான்! சதுரன் யார்? மணிவாசகரின் ஹஹ்ஹா!

சிவபிரகாசர்

21. ‘சிவ சிவ’ என்றால் தீய கோள்களின் குற்றம் போகும்; ஆயுள் பெருகும்!

உமாபதி சிவம்

22. சிவப் பிரசாதம், குருப்பிரசாதம்!

23. ஏறாத கொடியை ஏற்றுவித்த கொடிப்பாட்டு!

24. முள்ளிச் செடிக்கு மோக்ஷம் கொடுத்தது!

25. உமாபதி சிவம் இயற்றியுள்ள தமிழ் மட்டும் சம்ஸ்கிருத நூல்கள்!

முடிவுரை

*

புத்தகத்தில் என்னுரையாக நான் தந்திருப்பது இது:

என்னுரை

தமிழ் மொழி தெய்வ மொழி!

தெய்வத் தமிழின் பெருமையை உணர ஏராளமான பாடல்கள் உள்ளன.

பன்னிரு திருமுறை, நாலாயிர திவ்யபிரபந்தம் உள்ளிட்ட நூல்களை ஒரு முறை படித்தாலேயே போதும் தெய்வத் தமிழின் பெருமையை உணர்வதோடு இறைவனின் திருவருளையும் பெறலாம்.

உலகியல் சம்பந்தப்பட்ட அனைத்துப் பேறுகளை தர வல்லது பன்னிரு திருமுறைப் பாடல்கள்.

செல்வம் பெருகும். நோய் தீரும். வினை தேயும். சிவனருள் கிட்டும். அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெருகும்.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மணிவாசகர் ஆகியோர் பற்றிய கட்டுரைகளை ஞான ஆலயம், www.tamilandvedas.com உள்ளிட்ட பத்திரிகைகள், ப்ளாக்குகளில் எழுதி வந்தேன்.

அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.

கட்டுரைகள் வெளியாகி வந்த போது படித்துப் பாராட்டிய அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக.

இந்தக் கட்டுரைகளை வெளியிட்ட ஞான ஆலயம் ஆசிரியர் திருமதி மஞ்சளா ரமேஷ், லண்டன் திரு ச.சுவாமிநாதன் ஆகியோருக்கு எனது நன்றியை பதிவு செய்கிறேன்.

இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

தேவார, திருவாசகத்தை ஓதி அனைத்து நல் பேறுகளையும் பெற இருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

நன்றி.
பங்களூர்

ச.நாகராஜன்

11-4-2022


நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

Jain Story of Iron & Gold Mines; Gems from the Jain Literature- Part 2 (Post.11,138)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,138

Date uploaded in London – –    25 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

Mahavira s teachings are in Ardhamagadi language. It is a type of Prakrita, spoken dialect of Sanskrit. Any one who knows Sanskrit can easily understand it. His teachings are collected in the book

Mahaaviira Vacanaamrtam.

Following are the slokas

Ajjavasaananimitte aahaare veyanaaparaagaaye

Fase aanaapaanu sattaviham jinjaye Aaum

Xxx

As a cart driver , who knowingly leaves the even and smooth highway and getting on a rugged road, repents when the axle is broken, even so the fool, who transgresses religion or abandons it, embrace s unrighteousness, repents when he is a prey to death, like the cart driver repenting for the broken axle.

Jahaa saagadio Jaanam samam hichchaa mahaapaham

Visamam magga moyinno akke baggammi soyayee

Evam dhammam viukkamma ahammam padivajjiyaa

Baale machchumuham patte akke magge va soyayee

Akke =axle = Achchu in Tamil. Achchu is a Sanskrit word used in Tamil.

Jaanam = Gnanam

Magga = Maarga

Patha = Path = paathai in Tamil . Sanskrit word used by Tamils

Xxxx

Story

Do not , by disdaining this right path, lose much for the sake of little.

By not discarding this wrong path you will repent later on, like one merchant who carried the load of iron.

Maa eyam avamannanthaa appenam lumpahaa bahum

Eyascha u amokkaaye ayohaari vva juraha

This story is told in Raaya pasena ajjam by Kesikumaara Saamana to king Paesi.

Some merchants started on a journey. They first came upon a mine of iron. All of them took a load of iron with them and proceeded forward. In due course they came upon mines of copper, lead, silver and finally gold . All except one merchant, discarded their previous burden in exchange for one more precious. But one man would not discard the load of iron. Now, just as because of his obstinacy and pig headedness, he lost so much for so little, similarly people who cling to false faiths, will suffer a great loss.

Xxx

As a crane is produced from an egg, and an egg is produced from a crane, so the wise say that the desire is the origin of delusion, and delusion is the origin of desire.

This is a vicious circle. A man caught in this whirligig or eddies, must make a strenuous effort to get out of it; otherwise he is lost.

to be continued……………………………..

Tags- Jains, Mahavira, Story, Iron, Gold Mine, king Paesi.

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்-69 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் (Post No.11,137)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,137

Date uploaded in London – –    25 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்-69 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம்

ஸர்வத்ர 2-57  எல்லா இடத்திலும்

ஸர்வ த்ரகம் 12-3 எல்லாவிடத்தும்

ஸர்வ த்ரகஹ 9-6 எங்கும் உலவுவதும்

ஸர்வ த்ர ஸமதர்சனஹ 6-29  எங்கும் சமநோக்குடையவன்

ஸர்வ (dha) தா 6-31 எந்த நிலையில்

ஸர்வ துர்கானி 18-58 எல்லா தடைகளையும்

ஸர்வ துக்கானாம் 2-65 எல்லா துன்பங்களுக்கும்

ஸர்வ தேஹினாம் 14-8 எல்லா தேகிகளுக்கும்

ஸர்வ த்வராணி 8-12  எல்லா இந்த்ரிய வாயில்களையும் அடைத்து

ஸர்வ த்வாரேஷு 14-11  ஒவ்வொரு வாயில் வழியாகவும்

ஸர்வ தர்மான் 18-66 எல்லா தருமங்களையும்

ஸர்வ பாபேப்யஹ 18-66 எல்லா பாபங்களில் இருந்தும்

ஸர்வ பாபைஹி 10-3  எல்லா பாபங்களிலிருந்தும்

ஸர்வ (bha )பாவேன 15-19  அனைத்தையும் நான் எனப் பாவித்து

ஸர்வ பூத (bhuta) ஸ்திதம் 6-31 எல்லா உயிர்களிலும் உறையும்

ஸர்வ பூத ஹிதே 5-25  எவ்வுயிர்க்கும் நன்மையே நாடும்

ஸர்வ பூதாத்ம பூதாத்மா 5-7 எவ்வுயிரிலும் தன்னையே காண்பவனும்

ஸர்வ பூதானாம் 2-69  எல்லா பிராணிகளுக்கும்

ஸர்வ பூதானி 6-29 எல்லா பொருட்களும்

ஸர்வ பூதாசய ஸ்திதஹ  10-20 எல்லா பிராணிகளின் இதயத்திலும்

ஸர்வ பூதேஷு 3-18  எல்லாப் பொருளிலும்

ஸர்வ ப்ருத் 13-14  அனைத்தையும் தாங்கும் 

ஸர்வ யக்ஞா னாம் 9-24 எல்லா யக்ஞங்களிலும்

ஸர்வ யோனிஷு 14-4 எல்லா கருப் பைகளிலும்

ஸர்வ லோக மஹேஸ்வரம் 5-29  உலகுக்கெல்லாம் ஈசனாயும்

ஸர்வ வித் 15-19 எல்லாம் அறிந்தவர்

ஸர்வ வ்ருக்ஷாணாம் 10-26 எல்லா மரங்களிலும்

ஸர்வ வேதேஷு 7-8 எல்லா வேதங்களிலும்

ஸர்வச ஹ 1-18  ஒவ்வொரு/ எல்லா திசையிலும்

ஸர்வ ஸங்கல்ப ஸந்யாஸி 6-4  எல்லா சங்கல்பங்களையும் துறந்தவன்

ஸர்வ ஸ்ய 2-30 எல்லா

ஸர்வ ஹரஹ 10-34  அனைத்தையும் கவரும்

ஸர்வம்  2-17 அனைத்தும்

ஸர்வஹ 3-5 எல்லாரும்

ஸர்வாணி 2-30 எல்லா

ஸர்வாரம்ப பரித்யாகீ 12-16  எல்லா காமிய கருமங்களையும்  துறந்தவனும்

ஸர்வாரம்பாஹா 18-48 ஆரம்பிக்கும் கர்மம் அனைத்தும்

ஸர்வார்தான் 18-32  எல்லா விஷயங்களையும்

ஸர்வாஸ் சர்யமயம் 11-11 எல்லாவகை ஆச்சரியங்களும் நிறைந்த

ஸர்வாஹா 8-18 அனைத்தும்

ஸர்வே 1-6 எல்லோரும்

ஸர்வேந்த்ரிய குணா பாஸாம் 13-14 இந்திரியங்கள் அனைத்தும் செயல்படுவதால் துலங்குவதும்

ஸர்வேந்த்ரிய விவர்ஜிதம்  13-14  இந்திரியங்கள் அனைத்தும்  இல்லாததாயும்

ஸர்வேப்யஹ 4-36  எல்லா (எல்லோருள்ளும் )

ஸர்வேஷாம் 1-25 எல்லோருக்கும்

ஸர்வேஷு  1-11 எல்லா

ஸர்வை ஹி  15-15 எல்லா

ஸ விகாரம் 13-6 வேறுபாடுகளுடன்

ஸ விக்ஞானம் 7-2 அனுபவத்தோடு கூடிய

ஸவ்ய ஸாசின் 11-33  அர்ஜுனன் / இடது கையாலும் அம்பு எய்யும் ஆற்றல் படைத்தவன்

ஸ சரம் 1-47  அம்புடன் கூடிய

ஸஹ 1-22  கூட

ஸஹஜம் 18-48 உடன்பிறந்த

ஸஹ தேவஹ 1-16 சகாதேவன் ; பாண்டர்களில் கடைசி சகோதரன்

ஸஹ யக்ஞா ஹா 3-10  யக்ஞங்களுடன்

ஸஹஸா 1-13  உடனே

ஸஹஸ்ர க்ருதவஹ 11-39 ஆயிரம் முறை

ஸஹஸ்ர பாஹோ 11-46 ஆயிரம் கைகள் உடையோனே

ஸஹஸ்ர யுக பர்யந்தம் 8-17  ஆயிரம் யுகங்களில் முடியும்

ஸஹஸ்ரசஹ  11-5  ஆயிரக் கணக்கில்

ஸஹஸ்ரேஷு 7-3 ஆயிரம் பேரில்

ஸ ங்கரஸ்ய  3-29 குழப்பத்துக்கு

ஸ ங்கரஹ 1-42  ஜாதிக் கலப்பு

ஸ ங்கல்ப  ப்ரபவான் 6-24  பிறக்கும், தோன்றும்

ஸ ங்க் யே 1-47 போர்க் களத்தில், யுத்தத்தில்

ஸ ங்க்ரஹேன 8-11 சுருக்கமாக

ஸ ங்காதஹ 13-6 (பூதக்) கூட்டமாகிய

ஸஞ் சய  1-1   சஞ்சயன் – திருதராஷ்டிரனின் அமைச்சர்

ஸம் ஜனயன் 1-12  உண்டாக்கிக்கொண்டு

ஸம் ஜாயதே 2-62  தோன்றுகின்றது, உண்டாகிறது

70 ore words added from part 69 of Bhavaad Gita Tamil word index

TO BE CONTINUED……………………………………..

Tags – Tamil, Bhagavad Gita, Word Index, Part 69

ஞான குறள் மொழிகள்-104; ஜட்ஜ்: எதற்காக விவாகரத்து கேட்கிறாய்? (Post No.11,136)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 11,136

Date uploaded in London – 25 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

தெருக்குறள்—வெள்ளத்துப்பால்

—————————————————————————————

தமிழில் ஒன்றேமுக்கால் அடியில் டிவிட்டரை அந்த காலத்துலேயே தட்டிவிட்ட

வள்ளுவர் இன்று இருந்து சென்னையை உலுக்கிய மழைவெள்ளத்தை

அனுபவித்திருந்தால் எந்த மாதிரி குறள் எழுதியிருப்பார்…ஒரு கற்பனை

————————————————————————————————–

மேட்டினில் வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்

‘போட்’டினில் பின் செல்பவர்

———-

வெள்ளப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார்

வேளச்சேரியில் வீடு கட்டியோர்

———————

மேல்தளத்தில் வசிப்போரே பிழைத்தார்…இளைத்தார்

கீழ்போர்ஷனில் குடி இருப்பவர்.

————————-

நிலமெங்கு வாங்கினும் நன்கு கேட்டறிக.

ஜலம் உள்ளே வருமாவென !

—————————–

சம்சாரம் தந்திடுமே துன்பம் புயல்மழையால்

மின்சாரம் போயினும் அஃதே !

————————-

வெள்ளத்தால் வந்திடும் துயரம் – நல்ல

உள்ளத்தோர் உதவா விடின்

—————————-

நீர்மட்டம் ஏறி வீட்டினில் புகுந்திடின்

ஊர்வனவால் பெருந்தொல்லை காண்.

———————————

ஏரிப் படுகையில் வீட்டைக் கட்டினால்

நாறிடும் பிழைப்பு என்றறி.

———————————————-

தண்ணீராய் செலவழித்து கட்டிய வீடுதனில்

தண்ணீரே நுழைந்தது பார்,

———————————————-

ஆஸ்தியென ஆசையாய் கட்டின வீடெல்லாம்

நாஸ்தி ஆனதே சோகம்

————————————————————

இருளில் தவிப்பது துன்பமதனினும் துயரம்

பொருள்கள் பாழாகும் நிலை *

சிரிக்காம படிக்கனும்* 😀😀😀😀😀

*ஜட்ஜ்:* எதற்காக விவாகரத்து கேட்கிறாய்???

*விண்ணப்பதாரர்:* ஐயா என் மனைவி என்னை தினமும் பூண்டு உறிக்கச் சொல்கிறாள். வெங்காயம் வெட்டச் சொல்கிறாள் , பத்து பாத்திரம் தேய்க்கச் சொல்கிறாள். என்னால் முடியவில்லை .

அதனால் விவாகரத்து தாருங்கள். …

*ஜட்ஜ்:* இதெல்லாம் காரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது. உரிக்க வேண்டிய பூண்டை ஒரு பாட்டிலில் போட்டு மூடி நான்கு முறை குலுக்கினால் தோல் தன்னால் வரப்போகிறது. ,

அரிய வேண்டிய வெங்காயத்தை பத்து நிமிடம் பிரிடஜ்ல வைத்தால் ஈசியாகவும் வெட்டலாம் அரியும்போது கண்ணிலும் தண்ணீர் வராது. , பத்து பாத்திரத்தையெல்லாம் பத்து நிமிஷம் தண்ணீரில் ஊறவைத்து விம் பாரால தேய்ச்சா சரியாபோயிடுது. அப்படியும் போகலேன்னா பேக்கிங் பவுடர் ஒரு சிட்டிகை போட்டு ஒரு ஸ்பூன் வினிகர் விட்டா எப்படிபட்ட தீச்சல் கடாயா இருந்தாலும்பளிச்சுண்ணு ஆயிடும்,

அது மட்டுமில்ல துணிய சர்ப்ல ஊறவைக்கறதுக்கு முன்னாடி , நல்ல தண்ணியில ஒருதடவ நனைக்கணும்.

அதன் பின் சர்ப்ல ஊறவைச்சி மிஷின்ல போட்டா, துணி தும்ப பூ மாதிரி இருக்கும்.

நீ சொன்ன காரணங்களுக்கொல்லாம் டைவர்ஸ் தரமுடியாது. புரிஞ்சதா…?

*விண்ணப்பதாரர்:* ஐயா நல்லா புரிஞ்சதுங்க.

*ஜட்ஜ்:* என்ன புரிஞ்சது.?

*விண்ணப்பதாரர்:* _*எம் பொண்டாட்டி பூண்டு , வெங்காயம், பாத்திரத்தோட நிறுத்திகிட்டா, ஆன நீங்க துணியும் துவைக்கிறீங்க!!*_ 

Xxxx

Tags- ஞான குறள் மொழிகள் 104, ஜட்ஜ், விவாகரத்து,

பெண் விஞ்ஞானி எல்லன் ஸ்வாலோ ரிச்சர்ட்ஸ் (Post No.11,135)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,135

Date uploaded in London – –    25 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

பெண் விஞ்ஞானி எல்லன் ஸ்வாலோ ரிச்சர்ட்ஸ்

ச.நாகராஜன்

அறிவியல் துறையில் பெண்கள் அரும்பாடு பட்டுத் தான் முன்னேறினர்.

மஹாகவி பாரதியார் பெண் விடுதலை கேட்டு இந்தியாவில் முழக்கமிட்ட அதே வேளையில், அதே காலத்தில் அமெரிக்காவிலும் பெண்கள் படிக்கத் தடை தான் இருந்தது.

இந்தத் தடையை உடைக்க முனைந்தவர் எல்லன் ஸ்வாலோ ரிச்சர்ட்ஸ் (Ellen Swallow Richards – தோற்றம்3-12-1842 – மறைவு 30-3-1911).

அறிவியலை அனைத்துத் துறைகளுக்கும் கொண்டு செல்லலாம் என்றும் பெண்கள் இதில் இணைய வேண்டும் என்றும் வாழ்நாள் முழுவதும் அவர் பாடுபட்டார்.

அமெரிக்காவில் மசாசூசெட்ஸில் டன்ஸ்டேபிள் (Dunstable, Massachusetts) என்ற இடத்தில் பிறந்த எல்லனுக்கு கல்வியின் மீது அளவற்ற ஆர்வம் இருந்தது. எதையும் கற்க வேண்டும் என்ற துடிப்பால் அவர்

மசாசூசெட்ஸில்  எம் ஐ டியில் (MIT) சேர விண்ணப்பித்தார். மசாசூசெட்ஸ் பல்கலைக் கழகத்தில் 1870இல் முதன் முதலாக அனுமதிக்கப்பட்ட பெண்மணி என்ற பெருமையையும் பெற்றார்.

ஆனால் பெண்களை பல்கலைக் கழகத்தில் நுழைய விடத் தயக்கம் காட்டிய பல்கலைக் கழக நிர்வாகம், அவரது பல்கலைக் கழக கட்டணத்தை ஒரு இன்ஷூரன்ஸ் பாலிஸியாக எடுத்துக் கொண்டது.

யாராவது ஒருவர் ஒரு பெண் எப்படி இங்கு படிக்கலாம் என்று கேட்டால் அது முறையான் அட்மிஷன் இல்லை என்று தப்பித்துக் கொள்ளவே இந்த முறையை நிர்வாகம் கடைப்பிடித்தது.

தனது நகரத்தில் விநியோகிக்கப்படும் தண்ணீர் மிகவும் அசுத்தமாக இருப்பதைக் கண்டு வேதனைப் பட்டார் எல்லன்.

அறிவியல் மூலம் இந்த நிலையைப் போக்க முடியும் என்ற உத்வேகத்தால் தனக்கு என ஒரு சிறு சோதனைச் சாலையை அமைத்துக் கொண்டார்.

சுமார் 20000 நீர் மாதிரிகளை அவர் சோதனை செய்து பார்த்தார்.

நீரை எப்படி சுத்தம் செய்வது என்பதை ஆராய்ந்து கண்டு பிடித்தார்.

அவரது பெரு முயற்சியின் காரணமாக மக்கள் சுத்தமான நீரைப் பெற முடிந்தது.

அத்துடன் அவர் நிற்கவில்லை, பெண்களின் படிப்புரிமைக்காகப் பாடுபட ஆரம்பித்தார்.

தபால் மூலம் பெண்கள் கல்வி கற்கலாம் என்ற ஒரு புது வழிமுறையைத் தோற்றுவித்தார்.

அதிகம் வீட்டு வேலை பார்த்துக் கொண்டே படிப்பதால் ஆரோக்கியம் சீர் கெடுவதாக பெண்களிடம் ஒரு பிரச்சினை எழுந்தது. உடனே பெண்களின்  ஆரோக்கிய மேம்பாட்டிற்கான வழிமுறைகளை அவர் ஆராயலானார்.

அவரது பெருமுயற்சியின் காரணமாக ஏற்பட்ட விழிப்புணர்ச்சியைத் தொடர்ந்து முதன் முதலாக பெண்கள் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்படலாயினர்.

பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவு கொடுக்க வேண்டும் என்று முதலில் முழங்கியவர் அவர்.

ஆனால் 1890இல் அவர் ஆரம்பித்த இந்த முயற்சி 116 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒபாமாவின் மனைவி மிசெல் ஒபாமாவின் மூலம் வெற்றி அடைந்தது. அவர் ஆரோக்கியமான பள்ளிக்குழந்தை உணவை அறிமுகப்படுத்தினார்.

எல்லன் பல்வேறு துறைகளில் தன் முத்திரையைப் பதித்தார்.

ஹோம் எகனாமிக்ஸ் மூவ்மெண்ட் எனப்படும் ‘இல்ல பொருளாதார இயக்கத்தை’ நிறுவியவரும் அவரே. துப்புரவுத் துறையில் (Sanitary) மகத்தான சாதனையை அவர் படைத்தார்.

தனது கணவரின் துணையோடு வருடத்திற்கு ஆயிரம் டாலரை மசாசூசெட்ஸ் பல்கலைக் கழகத்திற்கு, பெண்கள் பரிசோதனைச்சாலைக்காக அவர் வழங்கி வந்தார்.

1911 மார்ச் 30ஆம் நாள் இதயவலியால் மூச்சு முட்டல் (angina) ஏற்பட்டு அவர் மறைந்தார்.

பெண் கல்வி, துப்புரவு, குழந்தைகளுக்கான சத்துணவுத் திட்டம் என இப்படிப் பல துறைகளிலும் முன்னோடியாக நின்ற அவரை உலகம் மறக்காது.

***

புத்தக அறிமுகம் – 8

தமிழ் என்னும் விந்தையில்

(வி) சித்திர கவி விளக்கம்

பாகம் – 2

பொருளடக்கம்

என்னுரை

1. வல்லின எழுத்துப் பாட்டு!

2. மெல்லின எழுத்துப் பாட்டு!

3. இடையின எழுத்துப் பாட்டு!

4. எழுத்து வருத்தனம்

5. ஓரெழுத்து வர்க்கப் பாட்டு

6. முதல் எழுத்து அலங்காரம் – 1

7. முதல் எழுத்து அலங்காரம் – 2

8. நடுவெழுத்தலங்காரம் – 1

9. நடுவெழுத்தலங்காரம் – 2

10. நடுவெழுத்தலங்காரம் – 3

11. கடை எழுத்து அலங்காரம்

12. நிரோட்டம் – 1

13. நிரோட்டம் – 2

14. வினா – உத்தரம்! – 1

15. வினா – உத்தரம்! – 2

16. பிரிந்தெதிர் செய்யுள்

17. பிறிதுபடு பாட்டு! – 1

18. பிறிதுபடு பாட்டு! – 2

19. கரந்துறைப் பாட்டு – 1

20. கரந்துறைப் பாட்டு – 2

21. ஒரு வெண்பாவில் மூன்று வெண்பாக்கள் – திரிபங்கி!

22. ஒரு பாடலில் ஏழு பாடல்கள் – சப்தபங்கி!

23. ஒரு பாடலில் ஒன்பது பாடல்கள் – நவ பங்கி!

24. தமிழில் உள்ள யமகப் பாடல்கள்!

25. திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி!

26. யமக அந்தாதி பட்டியல்!

27. தமிழில் அலங்காரம்!

புத்தகத்தில் என்னுரையாக நான் தந்திருப்பது இது:

என்னுரை

தமிழ் என்னும் விந்தையில் (வி)சித்திர கவி விளக்கம் என்ற தலைப்பில் 27 அத்தியாயங்கள் அடங்கிய எனது நூல் 2022 ஜனவரியில் வெளியிடப்பட்டது.

நூலுக்கு முனைவர் எம்.எஸ். ஸ்ரீலக்ஷ்மி, மேனாள் விரிவுரையாளர் (பணிநிறைவு), சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் அணிந்துரை தந்து என்னைக் கௌரவித்தார்.

அதில் சதுரங்க பந்தம், சருப்பதோ பத்திரம், கூட சதுர்த்தம், கோ மூத்திரி, மாலை மாற்று, சுழிகுளம், திரிபங்கி ஆகிய தமிழ் கவிதா விசித்திரங்கள் விளக்கப்பட்டிருந்தன.

அதைத் தொடர்ந்து இரண்டாம் பாகமாக இந்த நூல் மலர்கிறது.

இதில் வல்லின எழுத்துப் பாட்டு, மெல்லின எழுத்துப் பாட்டு, இடையின எழுத்துப் பாட்டு உள்ளிட்ட பல தமிழ் கவிதா விந்தைகள் விளக்கப்பட்டுள்ளன.

இந்தக் கட்டுரைகள் அனைத்தும் www.tamilandvedas.com இல் தொடர்ந்து வெளியிடப்பட்டன. இதை வெளியிட்ட லண்டன் திரு ச. சுவாமிநாதன் அவர்களுக்கும் எனது நன்றி.

இந்த நூலை டிஜிடல் வடிவமாக வெளியிட முன் வந்த PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ்அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதைப் படித்து என்னை ஊக்குவித்த அனைத்துத் தமிழ் அன்பர்களுக்கும் எனது நன்றி.

புத்தகமாக வெளியிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டவர்களின் விருப்பம் இதை வெளியிடுவதன் மூலம் நிறைவேறியுள்ளது.

தமிழ், அளக்கமுடியா ஒரு மாபெரும் கடல். அதில் உள்ள விந்தைகள் ஏராளம். அவற்றில் இன்னும் பலவற்றை அடுத்த பாகத்தில் காணலாம்.

நன்றி.
சான்பிரான்ஸிஸ்கோ
18-7-2022

ச.நாகராஜன்

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

tags- எல்லன் ஸ்வாலோ ரிச்சர்ட்ஸ்

Gems from Jain Literature- 1 (Post No.11,134)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,134

Date uploaded in London – –    24 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

Gems from Jain Literature- 1

Big numbers

Jains were great mathematicians. Mahavira, who was senior to Buddha lived in North India 2600 years ago. We may say that he lived before the famous Greek philosophers. The teachings of Jains are almost similar to the Hindus. Jains also believed in the Karma theory, re births and Moksha. They practised stricter Ahimsa/non violence towards all living beings. Like Hindus, men and women became ascetics. One sect of them did not wear clothes and they were called Digambaras meaning Sky clad. Another sect wore white clothes, and they were called Svetambharas. English word White came from Sanskrit word Swetha.

Jains were fascinated with numbers and they have their own classification of Time.

The following is taken from Jain scriptures

The smallest or indivisible unit of Time-  1 Samaya

Countless or innumerable Samayas –      1 Aavalikaa

Numerous Aavalikaas ——                      1 swaasa/ breath

Two Svaasas/ breaths ——.                      1 Praana

Seven Praanasankatam —-                     1 Stoka

Seven Stokas——-                                   1 Lava

77 Lavas ———-                                       1 Muhuurta

30 Muhuurtas—-                                       1 Day / 24 Hours

15 days—-                                                 1 Paksha

Two Pakshas —                                        one month

Two months —                                          one season

Three seasons —-                                    one Ayana

Two Ayanas——                                      one year or Samvatsara

100 years—-                                              one century

Ten centuries—                                         1000 years

84000 lakhyears —                                   one Puurvaanga

84 Lakh Puurvaanga s —                         one Puurva

Thus one Puurva consists of 7056 0000000000 years

The ancient seers have calculated figures even beyond these. But as figures are of no avail in calculating and arriving at those figures, they have resorted to comparisons. Thus, if you have a well, one Yojana/8 miles in length, one yojana in breadth/ circumference and one yojana in depth, and fill it with extremely thin human hair and press them down in such a manner that even if an army were to march over it, the hair would not go down; and if you were to empty that well out one piece of hair at an interval of 100 years, then the time required to empty the well constitutes one Palyopama.

Ten crores into ten crores of Palyopamas constitute one Sagaropama.

20 crores into20 crores of Sagaropamas make one Kala Chakra and countless Kala chakras make one Pudgalaparaavarta.

One may think these are not useful in practical life. But the modern day astronomers use the computers for biliions of calculations before launching a satellite. When they talk about the distance of stars and galaxies they use huge numbers. Laymen may think they are not useful.

Rig Veda divided a year into six seasons. Tamil literature also followed the Vedas. We see the same division in Jain literature. Number 84,000 plays same role in both the religions. The number of living creatures is 84 lakhs. The big calculations in time is also similar to Hindu calculations of Manvantara.

Lord Krishna in Bhagavad Gita also gives very big numbers (Sahsra Yuga Paryantham) ; the day of Brahma is 1000 Chatur Yugas and the night of Brahma is again 1000 Chatur Yugas. And he lives for 100 years. That is one Param. One Chatur Yuga is equal to 4,32,000 years. We cant even write one Brahma’s age in numbers. These calculations show that there are Extra Terrestrial Civilizations where the calculation of Time is different. If a May fly knows mathematics it will tell its babies some huge numbers when it talks about human lives. The May fly lives for only one day. So Hindus know that we are small pebbles on the shores of mighty oceans. When Krishna showed Arjuna Viswa Rupa Darsan, he described his brightness equal to 1000 suns (Divi Surya Sahasrasya); when a little Hindu girl begins his studies, she praises  Lord Ganesh as bright as ten million suns (Koti Surya Smaprabha); when other religions talked in terms of 40s, Hindus thought about billions.

Tamil poet Tiruvalluvar talks about 10 times ten millions or ten to the power of ten millions (Paththu Adukkiya Koti in Tamil)

Jains lived a peaceful life in North India, but in Tamil Nadu and Karnataka they involved in politics 1400 years ago. That resulted in big clashes between the Saivaites and the Jains in Tami Nadu. They made a big contribution to Tamil literature. They started writing and painting in Tamil Nadu caves. Hindus followed them. Jains who came to Tamil Nadu probably copied Emperor Asoka.

Source :-

The Teachings of Lord Mahavira (with my inputs)

Sri Mahavira Vacanamrtam

Pronunciation— Srii Mahaaviira vacanaamrtam

To be continued

tags- Mahavira, Mathematics, Jains, Gems, Literature

நவராத்திரி வெடிகள். ஞான மொழிகள்-103 (Post No.11,133)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 11,133

Date uploaded in London – 24 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞானமொழிகள்-103

நவராத்திரி வெடிகள்.

———————————————-

1)

”குருக்களே ! நவராத்திரி பூஜை செய்ய கூடாதுனு சொன்ன அறநிலைய அதிகாரியை எப்படி சம்மதிக்க வச்சீங்க ?”

குருக்கள் :

லட்சுமி பூஜை, சரஸ்வதி பூஜை-ன்னு சொன்னா செய்யக்கூடாது-னு சொல்வார். அதனால, ஒன்பது நாளும் , ”துர்கா பூஜை செய்யணும்-னு சொன்னேன்! . உடனே நவராத்திரி கொண்டாட ஒப்புக்கிட்டார்.”

***********

2)

என்ன இது ? உங்க வீட்டு கொலுவுல ரெண்டு செட்டியார் பொம்மை இருக்கு. ?

” ஒருத்தர் OPS .இன்னொருத்தர் EPS .

அப்படினா ?

OPS — ஒன்பதாம் படி செட்டியார்

EPS — ஏழாம் படி செட்டியார்.

——

3)

அந்த வீட்டு கொலுவுல எல்லா பொம்மையும் இரண்டு இரண்டா வச்சிருக்காங்களே. ஏன் ?

”அவங்க நிதியமைச்சருக்கு உறவாம்.”

———

4)

போன வருஷம் கொலுவுல மேல் படியில், முருகன் பொம்மையை வச்சிருந்தீங்க. இந்த வருஷம் அண்ணாமலை செட் மேலே வச்சிருக்கீங்களே.”’

”ஹி ஹி ! நான் BJP

———

5)

” என்ன இது ? Sundal வேகவே இல்லை ?”

இன்னைக்கு Sunday ! பூஜை செய்யக்கூடாது இல்லே. அதனால Sundal ப்ரசாதத்தை Sunda-ம, ‘ல்’ மட்டும் செஞ்சேன்.”

——-

6)

வழக்கமா அந்த மாமி கர்ண கொடூரமா பாடுவா ! இந்த தடவை ”மானஸ சஞ்சரரே” பாட்டை பிளந்து கட்டறாளே.

”மானஸ சஞ்சரரே பாடட்டுமா னு கேட்டா . மாஸ்க்-கோட சஞ்சரிங்கோ னு சொன்னேன். மாஸ்க்கை கழட்டாம பாடறதால, பாட்டு கேட்கும்படி இருக்கு.”

———-

7)

அந்த வீட்டு கொலுவை பார்க்க நூறு ரூபாய் டிக்கெட் போட்டிருக்காங்களாமே ? அப்படி என்ன ஸ்பெஷல் ?”

கொலுவுல ருத்ர தாண்டவம் செட் வச்சிருக்காங்களாம். ”

——–

8)

”உங்க கொலுவுல சைதன்ய மகாபிரபு பொம்மை ஒண்ணு இருக்குமே. இந்த வருஷம் காணோமே. ?

”என் பிள்ளை சமந்தா ரசிகன். சைதன்யா பொம்மை வைக்கக்கூடாது-னு சொல்லிட்டான்.

——-

9)

” கொரோனாவுக்கு பயந்துகிட்டு ஆன்லைன்ல நவராத்திரி கொலுவை காட்டறது தப்பில்லே. ஆனா Smule மூலமா பாடுங்க, Swiggy மூலமா சுண்டல் வாங்கிக்கங்க, டஞ்சோ மூலமா தாம்பூலம் அனுப்பறோம்னு சொல்றது எல்லாம் too much.

——-

10)

”வீட்டுக்காரரை ஏன் அந்த மாமி திட்டிகிட்டு இருக்காங்க. ?

மாமி மீரா பஜன் பொம்மை வாங்கிட்டு வர சொன்னாராம்.. இவரு மீரா மிதுன் பொம்மையை வாங்கிட்டு வந்துட்டாராம்.”

— subham —-

செப்பு மொழி இருபத்திமூன்று! (Post No.11,132)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,132

Date uploaded in London – –    24 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

செப்பு மொழி இருபத்திமூன்று!

ச.நாகராஜன்

  1.  சத்தியம் தனது காலணியை அணிந்து கொள்வதற்குள் பொய் உலகெங்கும் சுற்றி விடுகிறது – பிரெஞ்சு பழமொழி

A lie travels round the world while truth is putting her boots on – French

  •  எவன் நிறைய அறிந்திருக்கிறானோ அவன் குறைவாகவே பேசுகிறான் – ஸ்பானிய பழமொழி                              Who knows most speaks less – Spanish
  • ஒரு அறிவாளி ஒரு வார்த்தையைக் கேட்கிறான், இரண்டு வார்த்தைகளைப் புரிந்து கொள்கிறான். – யிட்டிஷ் பழமொழி

        A wiseman hears one word and understands two. Yiddish

  • கந்தல்துணிகள் தான் பேப்பரை உருவாக்குகின்றன,

பேப்பர் தான் பணத்தை உருவாக்குகிறது,

பணம் தான் வங்கிகளை உருவாக்குகிறது,

வங்கிகள் தான் கடனை உருவாக்குகிறது,

கடன் தான் பிச்சைக்காரர்களை உருவாக்குகிறது,

பிச்சைக்காரர்கள் தான் கந்தைத் துணிகளை உருவாக்குகின்றனர்!

Rags make paper,

Paper makes money,

Money makes banks,

Banks make loans,

             Loans make beggars

             Beggers make rags

  • பணம் சேர்ப்பது ஒரு கலை அல்ல, அதைப் பாதுகாப்பது தான் கலை!

The art is not making money, but in keeping it.

  • பழமையாக எதெல்லாம் இருக்கிறதோ அதையெல்லாம் நான் விரும்புகிறேன்,

பழைய நண்பர்கள், பழைய காலம்,                       பழைய பழக்க வழக்கங்கள்,                              பழைய புத்தகங்கள், பழைய ஒயின்….    ஆலிவர் கோல்ட்ஸ்மித்

     I love everything that is old                                                 

     Old friends, old times,                                                   

     old manners, Old books, old wines…..      – Oliver Goldsmith

  • மாமியார் உனக்கு கல்யாணம் ஆகும் போது கிடைக்கும் பரம்பரைச் சொத்து!  – ஆங்கிலப் பழமொழி

A mother-in-law is what you inherit when you marry – English

  • இன்று என்பது நேற்றைய தினத்தின் மாணாக்கன்.

Today is yesterday’s pupil.

  • புன்னகை இல்லாத மனிதன் ஒரு கடையைத் திறக்கக் கூடாது.

A man without a smiling face must not open a shop

  1. ஒரு கடையைத் திறப்பது சுலபமான விஷயம்; அதைத் திறந்தே வைத்து நடத்துவதோ ஒரு கலை!

To opend a shop is easy, to keep it open is an art.

  1. ஒரு கால் உடையவன் தடுக்கி விழுவதே இல்லை.                The one legged never stumble.
  1. நண்பர்களை அடைவது நரகத்தில் கூட நல்லது.                 It is good to have friends even in hell.
  1. எல்லா அந்நியர்களும் ஒருவருக்கொருவர் உறவினரே.          All strangers are relations to each other.

அயர்லாந்து பழமொழிகள் (14 முதல் 23 முடிய)

  1.    என்னுடைய ‘இன்று’ நேற்றை விட நல்லதாக இருக்கலாம், ஆனால் நாளையை விட நல்லதாக இருக்க முடியாது.         May today be better than yesterday, but, not as good as tomorrow. …
  1. நிதானமானன ஒருவன் இதயத்தில் எதை வைத்திருக்கிறானோ அதை குடிகாரன் உதடுகளில் வைத்திருக்கிறான்.               What a sober man has in his heart, the drunk has on his lips. …
  1. அதிர்ஷ்டம் ஒரு போதும் கொடுப்பதில்லை; அது கடனாகத் தான் தருகிறது.                                                  Luck never gives; it only lends. …
  1. கடந்த காலம் கணிக்கவே முடியாதது.                          The past is very unpredictable. …
  1. நீ எதைச் சொன்னாலும், அதைச் சொல்லாதே.                 Whatever you say, say nothing.
  1.  கூட வரும் ஒருவன் கடக்கும் தூரத்தைச் சிறிதாக்குகிறான்.     A companion shortens a road.
  • தூக்கம், மீண்டு வருவதன் முதல் அறிகுறி.                     Sleep is the first sign of recovery.
  • அன்பும் சிரிப்பும் உன் நாட்களை பிரகாசமுடையதாக ஆக்கட்டும்.   May love and laughter light your days, …
  • கடனை மறப்பது அதைத் திருப்பிக் கொடுத்ததாக ஆகி விடாது. Forgetting a debt doesn’t mean it’s paid.
  • நல்ல வார்த்தை ஒரு போதும் பல்லை உடைக்காது.        

                 A good word never broke a tooth.

xxxx

புத்தக அறிமுகம் – 7

தமிழ் என்னும் விந்தையில்

(வி) சித்திர கவி விளக்கம்

ச.நாகராஜன்

பொருளடக்கம்

அணிந்துரை

என்னுரை

அத்தியாயங்கள்

தமிழ் என்னும் விந்தை! – 1 – சதுரங்க பந்தம் -1

தமிழ் என்னும் விந்தை! – 2 – சதுரங்க பந்தம் – 2

தமிழ் என்னும் விந்தை! – 3 – சதுரங்க பந்தம் -3

தமிழ் என்னும் விந்தை! – 4 – சதுரங்க பந்தம் -4

தமிழ் என்னும் விந்தை! – 5 – சதுரங்க பந்தம் – 5

தமிழ் என்னும் விந்தை! – 6 – சதுரங்க பந்தம் – 6

தமிழ் என்னும் விந்தை! – 7 – சதுரங்க பந்தம் – 7

தமிழ் என்னும் விந்தை! – 8 – சதுரங்க பந்தம் – 8

தமிழ் என்னும் விந்தை! – 9 – சதுரங்க பந்தம் – 9

தமிழ் என்னும் விந்தை! – 10 – சதுரங்க பந்தம் – 10

தமிழ் என்னும் விந்தை! – 11 – சதுரங்க பந்தம் – 11

தமிழ் என்னும் விந்தை! -12 – சருப்பதோபத்திரம் – 1

தமிழ் என்னும் விந்தை! -13 – சருப்பதோபத்திரம் – 2

தமிழ் என்னும் விந்தை! -14 – சருப்பதோபத்திரம் – 3

தமிழ் என்னும் விந்தை! -15 – சருப்பதோபத்திரம் – 4

தமிழ் என்னும் விந்தை! -16 – கூட சதுர்த்தம் – 1

தமிழ் என்னும் விந்தை! -17 – கூட சதுர்த்தம் – 2

தமிழ் என்னும் விந்தை! -18 – கோமூத்திரி – 1

தமிழ் என்னும் விந்தை! -19 – கோமூத்திரி – 2

தமிழ் என்னும் விந்தை! -20 – மாலைமாற்று – 1

தமிழ் என்னும் விந்தை! -21 – மாலைமாற்று – 2

தமிழ் என்னும் விந்தை! -22 – சுழிகுளம் – 1

தமிழ் என்னும் விந்தை! -23 – சுழிகுளம் – 2

தமிழ் என்னும் விந்தை! -24 – திரிபங்கி – 1

தமிழ் என்னும் விந்தை! -25 – திரிபங்கி – 2

தமிழ் என்னும் விந்தை! -26 – பேசுவதெல்லாம் கவிதை!

தமிழ் என்னும் விந்தை! -27 –தமிழ் என்னும் விந்தைக் கடல்!

அணிந்துரை

முனைவர் எம் எஸ் ஸ்ரீலக்ஷ்மி,
மேனாள் விரிவுரையாளர்( பணிநிறைவு),
சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் ர்

தமிழ்மொழி காலந்தோறும் கற்றறிந்தார்க்கு அள்ளஅள்ளக் குறையாத அமுதசுரபியாகத் திகழ்ந்துவருகிறது. இன்று பன்மொழி கற்கவேண்டிய தேவையும் சூழலும் பெருகியுள்ளது. இந்நிலையில் 

‘நாமமது தமிழரெனக்’ கொண்டிருந்தும் – தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தும் மிகப்பலர் இம்மொழியின் பெருமை உணராது கற்க விருப்பம் இல்லாது உள்ளனர். இச்சூழலில் ஐயா சந்தானம் நாகராஜன் அவர்களின் ‘தமிழ் என்னும் விந்தையில்(வி)சித்திரகவி விளக்கம்’ என்னும் நூல் வெளிவருவது தமிழின் மாண்பை எடுத்துரைக்கும் முயற்சி மட்டுமன்று; அதனைக் கட்டிக்காக்கும் முயற்சியும் ஆகும்.

வாழ்க்கைக்காகப் பொறியியல் கற்ற நூலாசிரியர் வாழ்வுக்காக வளமார் தமிழைப் பழுதறக் கற்றவர்! நெஞ்சை நிறைக்கும் தஞ்சைமண்ணிலே தமிழ்ப்பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்தவர். தேசப்பற்று மிக்க குடும்பத்தின் வாரிசான இவரிடம் தேசநேசமும் மொழிநேசமும் இல்லாது போய்விடுமா? அந்த நேசத்தால் தமிழை விந்தைமொழி எனக் கொண்டாடி மகிழ்கிறார். தமிழை அவர் விந்தைமொழியாகக் கண்டதற்கும் காட்டியதற்கும் காரணங்கள் பல உண்டு. அவற்றுள் ஒன்று தமிழில் அமைந்துள்ள சித்திரகவி என்னும் கவிவகை. சித்திரகவி இவருக்கு விசித்திர கவியாகவே தோன்றுகிறது! இவர் சமஸ்கிருதம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு என இந்திய மொழிகள் பலவற்றுடன் ஆங்கிலமும் கற்றவர் என்ற கருத்தை உளங்கொண்டு சிந்திக்கையில் இவருக்குச் சித்திரகவி எவ்வாறு விசித்திரகவியானது என்பதை நம்மால் உணரமுடிகிறது. பன்னூற்பயிற்சிமிக்க இவர் ஒப்பீட்டுப்பார்வையுடன் சித்திரகவி விசித்திரகவியான விந்தையைத் தம்நூலில் எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறார்.

‘சித்திரகவி விளக்கம்’ என்னும் பரிதிமாற்கலைஞரின் நூலுக்கு எளியமுறையில் விளக்கம் தருகிறார் நூலாசிரியர் நாகராஜன். நாகராஜன் அவர்களின் நூலைப்பற்றிப் பேசுமுன் பரிதிமாற்கலைஞரின் நூல் எழுந்ததன் பின்னணியை அறிவது அவசியமாகும். அப்போதுதான் நாகராஜன் அவர்கள் எத்தகைய உழைப்பை மூலதனமாக்கி மெனக்கெட்டு இந்த நூலுக்காகப் பாடுபட்டிருக்கிறார் என்பதை நாம் உணரமுடியும்.

கி.பி.1897 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் இளங்கலைப் பட்டப்படிப்பிற்குரிய நூல்களில் தண்டியலங்காரத்தின் சொல்லணியியல் பாடமாக வைக்கப்பட்டது. சுத்தமான பாடத்தோடு கூடிய தண்டியலங்காரப்பிரதி கிடைத்தற்கு அரிதாயிருந்தது. மேலும் சித்திரகவிதைகள் இன்னின்னவாறு தீட்டப்படவேண்டும்; இன்னின்ன எழுத்துகள் இன்னின்னவாறு அமைக்கவேண்டும் என்பது புலப்படாததால் தம் மாணாக்கர்கள் இடர்ப்படக்கூடாது என்னும் நோக்கில் சித்திரகவிகளின் இயல்புகளை விளக்கிப் பரிதிமாற்கலைஞர் எழுதிய நூலே சித்திரகவி விளக்கம் என்பதை இந்நூலின் பதிப்புரை வழியே அறிகிறோம். பரிதிமாற்கலைஞரின் தனித்தமிழ்த்தொண்டினைப் பேசும் பெரும்பாலான இலக்கியவரலாறுகள் ‘சித்திரகவி விளக்கம்’ என்னும் நூலைக் குறிப்பிடவே இல்லை. தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம் என்னும் நூலை உருவாக்கிய பேராசிரியர் மது.ச. விமலானந்தம் “இவர் யாத்த தனிப்பாடல்கள் – தனிப்பாசுரத்தொகை; ஆங்கிலத்தில் போப் ஐயர் பெயர்த்துள்ளார். சித்திரக்கவிகள் சில புனைந்துள்ளார்” (ப-483) என்று மட்டுமே எழுதுகிறார். பரிதிமாற்கலைஞரின் சித்திரகவி விளக்கத்தில் அகச்சான்றாகப் பரிதிமாற்கலைஞரின் பெயர் இடம்பெற்றுள்ளது. இந்நூலின் உதாரணச் செய்யுள்களுக்கு உரையும் வரைந்து சேர்த்து அன்னாரின் மகன் வி.சூ.சுவாமிநாதன் அவர்கள் முயற்சியால் 1939இல் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. அரிய இந்த நூலுக்கு விளக்கம் எழுதி மேலும் எளிமைப்படுத்தி உள்ளார் திரு நாகராஜன் அவர்கள்.

சித்திரகவிதையை யாப்பிலக்கணத்தின் மணிமுடி’ என்று கூறுவது தவறாகாது. சித்திரகவிதையை எழுதுவதற்கும், அதைப்படித்துப் புரிந்துகொள்வதற்கும் ஆழ்ந்த யாப்பறிவு இன்றியமையாதது. சதுரங்க பந்தத்திற்கு 11 வகையான விளக்கங்களும்,சருப்பதோபத்திரம் என்னும் சித்திரகவிக்கு 4 வகை விளக்கங்களும், கூட சதுர்த்தம், கோமூத்திரி, மாலைமாற்று, சுழிகுளம், திரிபங்கி என்பனவற்றுக்கு முறையே இரண்டிரண்டு வகை விளக்கங்களும் தந்து விளக்கியுள்ளார். விளக்கத்துக்கு விளக்கம் எழுதுவது கடினமான வேலையா என்று சிலர் யோசிக்கலாம். ஆம்! உண்மையில் கடினமான வேலைதான். இதனைச்செய்வதற்கு அறிதலும் புரிதலும் அடிப்படை. இவற்றுக்கும் மேலாக இவரின் கணிதஅறிவும் சிந்தனைத்திறனும் பெரிதும் உதவியுள்ளன. குறுக்கெழுத்துப்போட்டி போன்று இவரே முயன்று பல புதிர்களை விடுவித்துள்ளார். சதுரங்க துரககதி பந்தம் என்னும் வகையை உதாரணமாக எடுத்துக்கொண்டு பரிதிமாற்கலைஞரின் சித்திரகவியில் கட்டங்களில் எழுத்துகள் இருக்க அவற்றுக்கு எண்கள் கொடுத்துக் குதிரைப்பாய்ச்சலை விளக்க முயல்கிறார்.

இவருடைய இந்த நூல் வழி பல புதிய தகவல்களை நாம் பெற முடிகிறது. 1911இல் வெளிவந்த ‘நகுலேச்சர விநோத விசித்திர கவிப்பூங்கொத்து’ என்னும் நூல் விளக்கக்குறிப்புரையுடனும் சித்திரக்கோட்டங்களுடனும் ‘நகுலேச ஸ்தோத்திரம்’ என்னும் பெயரில் வெளிவந்துள்ள செய்தியையும் இந்நூலின் ஆசிரியர் யாழ்ப்பாணத்து வலிகாமம் வடக்குப்பிரசித்த நோத்தரி மயிலிட்டி க.மயில்வாகனப்பிள்ளை என்பதையும், இந்நூல் மறுபதிப்பாக 2004இல் தேன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது எனவும் அறிகிறோம். இன்றளவும் பழமைக்கு உள்ள மதிப்பைப்புரிந்துகொள்கிறோம். பழமை தானே புதுமைக்கு வித்திடுகிறது?

சித்திரகவிகள் வெறும் புலமைச் சித்திரங்கள் மட்டுமல்ல; அவை மந்திர ஆற்றல் வாய்ந்தவை என்பதற்குப் பாம்பன் சுவாமிகளின் சித்திரகவிதைகளை எடுத்துக்காட்டுகிறார். மாம்பழக்கவிச்சிங்க நாவலர் போன்ற புலவர் பெருமக்கள் தமக்குள் மொழிவிளையாட்டுகளின் வாயிலாகப் புலமைவிளையாட்டுகளையும் நடத்தி உள்ளதை அறியும்போது இன்றைய கற்றல் கற்பித்தல் சூழலில் பயன்படும் புதிர்கள், குறுக்கெழுத்துப்போட்டி போன்றவற்றின் தொன்மையையும் அவை நமக்குப் புதிதல்ல என்பதையும் இந்நூல் கூறுகிறது. சமஸ்கிருதம், தெலுங்கு போன்ற மொழிகளில் உள்ள சித்திரகவிகளையும் ஆங்கிலத்தில் உள்ள குறுக்கெழுத்துப்போட்டியையும் உதாரணம் காட்டி விளக்குகிறார். சதுரங்கவிளையாட்டுக் குறித்து விற்பன்னர்களிடம் ஆலோசனை கேட்டுத் தம் புரிதலை விசாலப்படுத்திக்கொண்டு சதுரங்கபந்தத்தை விளக்க முனைகிறார்.

இந்த நூலில் தமக்கு விளங்காத பகுதிகளை நேர்மையாகச் சொல்வதன் மூலம் புதிய ஆய்வுமுயற்சிகளுக்கும் தேடல்களுக்கும் வழிகாட்டுகிறார் எனலாம். சித்திரகவிகளைப் பற்றிய இவருடைய தேடல் இன்னும் தொடர்கிறது. சிங்கப்பூரில் உள்ளவற்றையும் நூலாசிரியர் என்னிடம் கேட்டுள்ளார். இவருடைய ஆய்வுத்தாகம் வருங்காலத் தலைமுறைக்கு ஓர் எடுத்துக்காட்டகத் திகழும் பெற்றி வாய்ந்தது. நூலாசிரியருக்கு என் உளமார்ந்த பாராட்டுகள்.

அன்புடன்
முனைவர் எம் எஸ் சிங்கப்பூர் ஸ்ரீலக்ஷ்மி
சிங்கப்பூர்.

ஜனவரி 2022

*

புத்தகத்தில் என்னுரையில் ஒரு பகுதி இது:

என்னுரை

இப்பாடல்கள் www.tamilandvedas.com லும் வெளியிடப்பட்டன. இதை வெளியிட்ட திருமதி நிர்மலா ராஜு அவர்களுக்கும் லண்டன் திரு ச. சுவாமிநாதன் அவர்களுக்கும் எனது நன்றி.

இந்த நூலுக்கு அழகியதொரு அணிந்துரையை சிங்கப்பூரில் வசிக்கும் முனைவர் திருமதி எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி அளித்துள்ளார். அவர் தமிழின் பல் சுவையைக் கண்டவர். எழுத்தாளர். சிறந்த பேச்சாளர். சிங்கப்பூர் நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தின் தேசிய கல்விக்கழகம்,சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக் கழகம் உள்ளிட்ட ஆகப் பெரிய பெரும் கல்வி நிலையங்களில் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் கற்பித்துத் தமிழின் பெருமையை உலகறியச் செய்தவர். மலாய், ஆங்கிலம் உள்ளிட்ட பன்மொழி வல்லுநரான இவர் 33 அரும் நூல்களைப் படைத்துள்ளார். இவற்றில் சில பல்கலைக் கழகப் பாட நூல்களாகும். 150க்கும் மேற்பட்ட பிரமிக்க வைக்கும் ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர். கதாசிரியர்; ஒரு கவிஞரும் கூட. பல பயிலரங்குகளை நடத்தி வருபவர். இவர் 17 விருதுகளைப் பெற்றதில் வியப்பே இல்லை. தமிழுக்குத் தொடர்ந்து அரும்பணி ஆற்றிவரும் இவர் என்னை கௌரவித்து அணிந்துரை அளித்தமைக்கு என் உளமார்ந்த நன்றி.

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

***

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்-68 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் (Post No.11,131)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,131

Date uploaded in London – –    23 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்-68 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம்

ஸம தீத்ய 14-26  எளிதில் கடந்து சென்று

ஸமத்வம் 2-48  சம நிலைமை

ஸம தர்சினஹ  5-18 சமமாக்கக் கருதும் நோக்கு உள்ளவர்கள்

ஸம துக்க ஸுகம்  2-15  இன்ப துன்பங்களைச் சமமாய்க் கொண்டவன்

 ஸம துக்க ஸுகஹ 12-13 இன்ப, துன்பங்களை சமமாய்க் கருதுபவன்

ஸமா தி கச்சதி  3-4  அடைதல், அடைகிறது

 ஸம புத்திஹி  6-9  சம புத்தியுடையவன்

 ஸம புத்தயஹ 12-4  சம புத்தி உடையவர்களாய்

 ஸம லோஷ்டா  ஸம காஞ்சனஹ  6-8 கல்லையும் பொன்னையும் சமமாகக் கருதும்

 ஸம வஸ்திதம் 13-28  நிலைத்து நிற்பவன்

 ஸம வேதான்  1-25  கூடியுள்ள, அணிவகுத்துள்ள

 ஸம வேதாஹா 1-1  கூடியுள்ள, அணிவகுத்துள்ள

 ஸம ம் 5-19  சமம் ஆனது

ஸம ந்ததஹ  6-24  எப்புறத்தும்

 ஸமஹ  2-48   சமமாக

 ஸமா கதாஹா  1-23  வந்திருப்பவர்கள், கூடியுள்ளவர்கள்

 ஸமாசார 3-9  செவ்வனே செய்வாயாகுக

 ஸமாசரன் 3-26  அனுஷ்டித்து , பின்பற்றி

 ஸமதாதும் 12-9   நிறுத்துவதற்கு

 ஸமாதாய 17-11 நிறுத்தி

 ஸமாதிஸ் தஸ்ய 2-54  சமாதியில் நிற்பவன் உடைய

 ஸமாதெள  2-44  உள்ளத்தில்

ஸமாப் னோஷி  11-40  வியாபிக்கின்றாய், பரந்து  நிற்கிறாய்

 ஸமாரம்பாஹா 4-19  கருமங்களும்

 ஸமா ஸதஹ  13-18 சுருக்கமாக

 ஸமாஸேந 13-3  சுருக்கமாக

 ஸமா ஹர்தும் 11-32 ஒடுக்குவதற்கு, அழிப்பதற்கு

 ஸமா ஹிதஹ 6-7  நிலை பிறழாது நிற்கும்

 ஸமாஹா 6-41  ஆண்டுகள்

ஸமிதிஞ் ஜயஹ 1-8    யுத்தத்தில் எப்போதும் வெற்றிபெறும்

ஸமித்தஹ   4-37  மண்டி எரிகின்ற

ஸமீக்ஷ்ய  1-27  நன்றாகப் பார்த்துவிட்டு

ஸமுத்ரம்  2-70  பெருங்கடல்

ஸமுத்தர்தா 12-7 கரை ஏற்றிக் காப்பவனாக

ஸமுபஸ்திதம் 1-28 கூடியுள்ள

ஸமுபாச்ரிதஹ 18-52  நன்கு கைக்கொண்டு

ஸம் ருத்த வேகாஹா 11-29  மிகுந்த வேகத்துடன்

ஸ ம் ருத்தம் 11-33 செல்வம் நிறைந்த

ஸ ம்யக்  5-4  நன்றாக

ஸரஸா ம்  10-24  ஏரிகளில்

ஸ ர்கஹ   5-19   பிறவி

ஸ ர்காணா ம் 10-32  சிருஷ்டிகளின் , படைப்புகளின்

ஸ ர்கே 7-27  பிறக்கும்போதே

ஸ ர்பாணா ம் 18-13 பாம்புகளில்

ஸர்வ 11-40 எல்லா

ஸர்வ கர்மணாம் 18-13  எல்லா கருமங்களின்

ஸ ர்வ கர்ம பலத்யாகம் குரு 12-11  எல்லா கருமங்களின் பலனையும்

எனக்கு அர்ப்பணம் செய்

ஸர்வ கர்மாணி 3-26  எல்லா கருமங்களையும்

ஸர்வ காமேப்யஹ  6-18  எல்லா ஆசைகளில் இருந்தும்

ஸர்வ கில்பிஷைஹி 3-13  எல்லாப் பாவங்களில் இருந்தும்

ஸர்வ க்ஷேத்ரேஷு 13-2  எல்லா க்ஷேத்ரங்களிலும்

ஸர்வ கதம் 3-15  எங்கும் பரவிய

ஸர்வ கதஹ 2-24  எங்கும் உள்ளது

ஸர்வ குஹ்ய தமம் 18-64  ரகசியங்களில் சிறந்ததுமான

ஸர்வ ஞான விமூடான் 3-32  நல்லறிவு அனைத்தும் மழுங்கிய

ஸர்வ தஹ 2-46   எங்கும்

ஸர்வதஹ பாணி பாதம் 13-13  எங்கும் கை கால்கள் உடையது

ஸர்வதஹச்ருதி மத் 13-13  எங்கும் காதுகள் உடையது

ஸர்வதோக்ஷி சிரோ முகம் 13-13  எங்கும் கண்ணும் தலையும் வாயும்  உடையது

ஸர்வதோ தீப்திமந்தம் 11-17  எங்கும் பிரகாசிக்கும்

XXXXXX

60 MORE WORD ADDED FROM PART 68 OF GITA WORD INDEX

tags- Bhagavad Gita, Word Index 68

சில காயங்கள் மருந்தால் சரியாகும்; சில காயங்கள் மறந்தால் சரியாகும்- ஞானமொழிகள்- 102 (Post No.11,130)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 11,130

Date uploaded in London – 23 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞானமொழிகள்– 102

*வாழ்வில் தெரிந்துகொள்ள வேண்டியன*

சில காயங்கள் ” *மருந்தால்* ” சரியாகும்.

சில காயங்கள் ” *மறந்தால்* ” சரியாகும்.

xxx

” *ஆடம்பரம்* ” அழிவைத்தரும். ” *ஆரோக்கியம்* ” நல்வாழ்க்கை தரும்.

கார் இருந்தால் ” *ஆடம்பரமாக* ” வாழலாம்

.

மிதி வண்டி இருந்தால் ” *ஆரோக்கியமாக* ” வாழலாம்.

xxx

” *வறுமை* ” வந்தால் வாடக்கூடாது.

” *வசதி* ” வந்தால் ஆடக்கூடாது.

xxx

*வீரன்* சாவதே இல்லை.

” *கோழை* ” வாழ்வதே இல்லை.

xxx

தவறான பாதையில் ” *வேகமாக* ” செல்வதைவிட.

சரியான பாதையில் ” *மெதுவாக* ” செல்லுங்கள்.

xxx

மனிதனுக்கு ABCD ” *தெரியும்* ” ஆனா *”Q”* ல போகத் “தெரியாது”.

எறும்புகளுக்கு ABCD ” *தெரியாது* ” ஆனா *”Q”* ல போகத் “தெரியும்”.

xxxx

ஆயிரம் பேரைக்கூட ” *எதிர்த்து* ” நில்.

ஒருவரையும் ” *எதிர்பார்த்து* ” நிற்காதே.

xxx

தேவைக்காக கடன் ” *வாங்கு* “.

கிடைக்கிறதே என்பதற்காக ” *வாங்காதே* “.

xxx

உண்மை எப்போதும் ” *சுருக்கமாக* ” பேசப்படுகிறது.

பொய் எப்போதும் ” *விரிவாக* ” பேசப்படுகிறது.

xxx

” *கருப்பு* ” மனிதனின் இரத்தமும் சிவப்புதான்.

” *சிவப்பு* ” மனிதனின் நிழலும் கருப்புதான்.

*வண்ணங்களில்* ” இல்லை வாழ்க்கை.

மனித ” *எண்ணங்களில்* ” உள்ளது வாழ்க்கை

xxx

” *கடினமாய்* ” உழைத்தவர்கள் முன்னேறவில்லை.

” *கவனமாய்* ” உழைத்தவர்கள் முன்னேறியுள்ளனர்.

xx

வியர்வை துளிகள் ” *உப்பாக* ” இருக்கலாம். ஆனால்,

அவை வாழ்க்கையை ” *இனிப்பாக* ” மாற்றும்.

xxxx

*கடனாக* இருந்தாலும்சரி,

” *அன்பாக* ” இருந்தாலும் சரி, திருப்பி செலுத்தினால்தான் மதிப்பு.

xxx

” *செலவு* ” போக மீதியை சேமிக்காதே.

” *சேமிப்பு* ” போக மீதியை செலவுசெய்.

xxxx

உன்னை நீ செதுக்கி கொண்டே இரு ” *வெற்றி* ” பெற்றால் சிலை,

” *தோல்வி* ” அடைந்தால் சிற்பி.

xxxx

உறவினர்களில் யார் முக்கியம் என்பதை ” *உயிரற்ற* ” பணமே முடிவு செய்கிறது.

கடன் கொடுத்துப்பார் நீ எவ்வளவு ” *முட்டாள்* ” என்று தெரியும்.

கடன் கேட்டுப்பார் அடுத்தவன் எவ்வளவு

” *புத்திசாலி* ” என்பது புரியும்.

பணம் கொடுத்துப்பார் உறவுகள் உன்னை ” *போற்றும்* “.

கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுப்பார் மண்ணை வாரி

” *தூற்றும்* “.

xxxx

பேசிப்பேசியே நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதெல்லாம் ” *பொய்* “.

அவர்கள் பேச்சில் நாம் ஏமாந்து விடுகிறோம் என்பதே ” *உண்மை* “.

xxxx

மனைவி கேட்பதை எல்லாம் வாங்கி கொடுத்து சமாளிப்பவன் ” *புத்திசாலி* “.

வாங்கி கொடுக்கிறேன் என்று சொல்லியே சமாளிப்பவன் ” *திறமைசாலி* “.

xxx

கவலைகள் கற்பனையானவை.

” *மீதி* ” தற்காலிகமானவை.

குறைகளை ” *தன்னிடம்* ” தேடுபவன் தெளிவடைகிறான்.

குறைகளை ” *பிறரிடம்* ” தேடுபவன் களங்கப்படுகிறான்.

xxx

அறுந்து போன செருப்புக்கு வீட்டில் ஒரு இடம் ” *உண்டு* “.

இறந்து போன மனித உடலுக்கு வீட்டில் ஒரு இடமும் ” *இல்லை* “

xxx

விழுதல் என்பது ” *வேதனை* “.

விழுந்த இடத்தில் மீண்டும் எழுதல் என்பது ” *~சாதனை*~ “

xxx

*ஆனந்தமே ஆரோக்கியம்!*

( படித்ததில் பிடித்தது)

Xxx

நண்பர் ஒருவர் மனநல மருத்துவர்.

.

அவரிடம்

”ஏன் டாக்டர், ஒருத்தருக்கு பைத்தியம் குணமாயிடுச்சான்னு எப்படிக் கண்டு பிடிப்பீங்க?” என்று கேட்டேன்.

.

“சின்னச் சின்ன டெஸ்ட் இருக்கு அதுக்கு” என்றார்.

.

“for example?”

.

“ஒரு பக்கெட் நிறைய தண்ணி வச்சிட்டு பக்கத்துல ஒரு ஸ்பூன், ஒரு மக் ரெண்டும் வச்சிடுவோம். போய் அந்த பக்கெட் தண்ணியை காலி பண்ணுன்னு சொல்வோம்”

.

“ஓ.. புரியுது. குணமாகாத ஆளா இருந்தா ஸ்பூன்ல தண்ணியை எடுத்து எடுத்து வெளில ஊத்தி காலி பண்ணிகிட்டு இருப்பான், சரியா?”

.

“எக்ஸாட்லி. உங்க கிட்ட சொன்னா நீங்க என்ன பண்ணுவீங்க?”

.

“நான் மக்குல எடுத்து மள மளன்னு காலி பண்ணுவேன்”

.

“இது மாதிரி கேஸ்களை நாங்க செமின்னு சொல்வோம்”

.

“என்ன டாக்டர் இப்படிச் சொல்லிட்டீங்க! அப்ப குணமானவன் என்ன பண்ணுவான்?”

.

“பக்கெட்டை எடுத்துக் கவுத்துட்டுப் போய்கிட்டே இருப்பான்”😊

Xxxx

Tags- ஞானமொழிகள்– 102