ஓஷோவின் குட்டிக் கதைகள்! (Post No.11,129)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,129

Date uploaded in London – –    23 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஓஷோவின் குட்டிக் கதைகள்!

ச.நாகராஜன்

ஓஷோவின் குட்டிக் கதைகள் சிரிக்க வைக்கும்; சிந்திக்க வைக்கும்; சிறந்த பல உண்மைகளைச் சொல்லும்.

அவற்றில் நான்கு கதைகளைப் பார்ப்போம்.

1

ஒரு ஜென் மாஸ்டருக்கு இரண்டு சீடர்கள் இருந்தனர். இருவருமே புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள். இருவரும் மாஸ்டரிடம் புகை பிடிக்க அனுமதி வாங்க எண்ணம் கொண்டார்கள்.

“நாளை நிச்சயம்  மாஸ்டரிடம் அனுமதி வாங்கப் போகிறேன்” என்றான் முதலாம் சீடன்.

“நானும் தான்” என்றான் இரண்டாவது சீடன்.

மறு நாள் தோட்டத்தில் முதல் சீடனைப் பார்த்த இரண்டாமவன் மிக்க கோபம் கொண்டான்.

ஏனெனில் அவன் புகை பிடித்துக் கொண்டிருந்தான்.

“என்ன, அனுமதி வாங்கினாயா, புகை பிடிக்க, என்னை புகை பிடிக்கக் கூடாது என்றல்லவா சொன்னார்” என்றான் இரண்டாம் சீடன்.

“இல்லை, எனக்கு அனுமதி உண்டு” என்றான் அவன்.

“அது, எப்படி உனக்கு மட்டும் அனுமதி?”

இப்போது விழித்துக் கொண்ட முதல் சீடன், “ நீ என்னவென்று அவரிடம் கேட்டாய், சொல், பார்ப்போம்!”

“தியானத்தின் போது புகை பிடிக்கலாமா?” என்று கேட்டேன்.

“அது தான் நீ செய்த தவறு. நான் புகை பிடித்தாலும் தியானம் செய்யலாமா? என்று கேட்டேன். தாரளமாக என்றார். இதோ புகை பிடிக்கிறேன்!”

ஒரு விஷயத்தை எப்படி அணுக வேண்டும் என்று ஒரு முறை இருக்கிறது.

வாழ்க்கை என்பது ஒரு வெற்று கான்வாஸ். அதை நல்ல ஒரு கலை நோக்குடன் அணுகி ஓவியங்களை வரைய வேண்டும்!

2

ஒரு சூஃபி சாது மன்னன் ஒருவனின் அரண்மனைக்குச் சென்றார்.

அவரை யாராலும் தடுக்க  முடியவில்லை. நேராக மன்னன் இருக்குமிடம் வரைக்கும் அவர் சென்று விட்டார்.

“நீர் யார்?” என்று கேட்டான் மன்னன்.

“நான் ஒரு வழிப்போக்கன். இன்று ஒரு நாள் மட்டும் இந்த சத்திரத்தில் தங்க விருப்பம் கொண்டு வந்திருக்கிறேன்” என்றார் சாது.

கோபம் கொண்ட மன்னன், “இது சத்திரம் இல்லை. எனது அரண்மனை” என்றான்.

“சரி, இந்த அரண்மனை உன்னுடையது என்கிறாயே? உனது அப்பா எங்கே” என்று கேட்டார் சாது.

மன்னன் : “அவர் இறந்து விட்டார்!”

சாது : “அவருக்கு முன்னால் இங்கு யார் இருந்தார்?”

“எனது தாத்தா இருந்தார்!”

“அவருக்கும் முன்னால்…?”

“எனது தாத்தாவின் அப்பா!”

“ஓ! இப்படி ஒவ்வொருவர் சில காலம் இருந்து போன இந்த இடம் சத்திரம் இல்லாமல் வேறு என்னவாம்?”

மன்னன் வெட்கித் தலை குனிந்தான்.

3

நஸ்ருத்தீன் ஷாவிடம் ஒருவன் வந்து ஒரு வாத்தைக் கொடுத்தான்.

அதை நன்கு வேக வைத்து சூப் தயாரித்துத் தந்தார் ஷா.

அவன் போய் அடுத்த நாள் அவனது நண்பன் என்று வந்த ஒருவன் சூப் கேட்டான்.

அவனுக்கு சூப்பைத் தயாரித்துத் தந்தார் அவர்.

அடுத்த நாள் அந்த நண்பனுக்கு நண்பன் என்று சொல்லிக் கொண்டு வந்த ஒருவன் சூப் கேட்டான்.

அவனுக்கும் சூப் செய்து தந்தார் ஷா.

அதற்கு அடுத்த நாள் அந்த நண்பனுக்கு நண்பனுக்கு நண்பன் என்று சொல்லிக் கொண்டு வந்த ஒருவன் சூப் கேட்டான்.

இது தொடர்ந்தது.

ஒரு நாள் அவரிடம் வந்து நண்பனுக்கு நண்பன்….. என்ற தொடர்கதையைச் சொல்லி சூப் கேட்டான் ஒருவன்.

நஸ்ருத்தீன் பார்த்தார். நல்ல தண்ணீரை சுடச்சுட சூடாக்கி அவனிடம் தந்தார்.

“ஹூம்! இது சூப் இல்லையே வெறும் வெந்நீர் போல அல்லவா இருக்கிறது!” என்றான் அவன்.

“இது சூப்புக்கு சூப்புக்கு சூப்புக்கு சூப்புக்கு சூப்” என்று சொல்லி முடித்தார் ஷா.

வந்தவனைக் காணோம். ஓடி விட்டான்!

4

ரின் ஜாய் என்ற ஜென் மாஸ்டரின் சீடர் ஒரு நாள் ஒரு ஆலமரத்தடியின் கீழ் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.

பல மாஸ்டர்களின் சீடரும் அங்கு வந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தனர்.

ஒருவன் தனது மாஸ்டர் செய்த அற்புதங்களை விவரித்தான்.

அதற்கு இன்னொருவன் தனது மாஸ்டர் செய்த அற்புதங்களை விவரித்தான். ஒவ்வொருவரும் இப்படி அவரவர் மாஸ்டர் செய்த அற்புதங்களை விவரிக்கும் போது ரின் ஜாயின் சீடர் மட்டும் பேசாமல் இருந்தார்.

“என்ன, உனது மாஸ்டர் ஒரு அற்புதமும் செய்யவில்லையா?” என்று கேலியாக அனைவரும் அவரைக் கேட்டனர்.

“ எனது மாஸ்டர் ஒரு அற்புதமும் செய்யவில்லை. அது தான் அவர் செய்யும் அற்புதம்” என்றார் ரின் ஜாயின் சீடர்.

அனைவரும் அசந்து போய் அதில் இருக்கும் உண்மையை அறிந்து கொண்டனர்.

எல்லா அற்புதங்களையும் ஆற்ற வல்ல ஒருவராக இருப்பினும் கூட, அதைச் செய்து விளம்பரம் தேடாமல் இருப்பதே பெரிய அற்புதம் என்பதை ரின் ஜாயின் சீடர் விளக்கியதை அவர்களால் உணர முடிந்தது.

***

புத்தக அறிமுகம் – 6

அதிசய மஹாகவி பாரதியார்!

ச.நாகராஜன்

பொருளடக்கம்

அணிந்துரை

என்னுரை

முதல் பாகம் – பாரதியார் பா நலம்

1. பாரதி தரிசனம்

2. பாரதி 100!

3. பார் போற்றும் மகாகவி!

4. அரவிந்தரின் கண்களில் அரும்பிய நீர்!

இரண்டாம் பாகம் – பாரதியாரின் இசை, வானவியல் அறிவு

5. பாரதியாரும் வானசாத்திரமும்! – 1

6. பாரதியாரும் வானசாத்திரமும்! – 2

7. பாரதியாரும் வானசாத்திரமும்! – 3

8. பாரதியாரின் ராகங்கள்! – 1

9. பாரதியாரின் ராகங்கள்! – 2

10. பாரதியாரின் ராகங்கள்! – 3

11. திரைப்படங்களில் பாரதியார்! – 1

12. திரைப்படங்களில் பாரதியார்! – 2

13. மஹாகவிக்குச் செய்யும் மஹத்தான துரோகம்!

14. பாரதியார் கவசம் அணியுங்கள்!

மூன்றாம் பாகம் மத – நல்லிணக்கமும் மஹாகவியும்

15. பாரதியார் போற்றும் ஒரு மகமதிய ஸாது: கம்பளி ஸ்வாமி!

16. பாரதியார் கண்ட அகண்ட பாரதம்!

17. தமிழ் அபிமானி பற்றி பாரதியாரின் விளக்கம்!

18. தீபாவளி பண்டிகை பற்றி பாரதியார்!

19. முஸ்லீம்கள் யார்? ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமை பற்றி பாரதியார்!

20. பாரதியாரின் சத்ரபதி சிவாஜி கவிதை – 1

21. பாரதியாரின் சத்ரபதி சிவாஜி கவிதை! – 2

22.பாரதியார் பாடல்களில் ஆரிய என்ற சொல்!

நான்காம் பாகம் – கவிதாஞ்சலி

23. பாட்டிற்கோ பாரதியே தான்!

24. அமிழ்தினிய பா ரதியே! தினமுனைப் பணிவோம் பாரதியே!

25. முடிவுரை

*

இந்த நூலுக்கு கவிஞர் திருலோக சீதாராம் அவர்களின் புதல்வர் திரு சுப்ரமணியன் சீதாராம் அவர்கள் அணிந்துரை தந்து என்னை கௌரவித்துள்ளார். அந்த அணிந்துரை இதோ:

அணிந்துரை

‘சிவமென்னும் செம்பொருளே தமிழாய் வந்த

சிறப்பிதனைச் சிந்தையிலே சேர்ப்பார் தம்முள்
நவசித்தன் பாரதிநம் தலைவன் ஆக’

அமைந்த நற்பொருளைப் பயின்று, வாழ்நாளெல்லாம் பாரதியுகத்தின் பிரஜையாக வாழ்கின்ற சந்தானம் நாகராஜன் அவர்களின் அரிய நூல் ‘அதிசய மஹாகவி பாரதியார்’ என்னும் இந்த நூல்.

’கிருதயுகம் எழுக மாதோ’ என்று அறைகூவல் விடுத்து, பாரதி கனவுகண்ட இன்றைய யுகத்தில் வாழ்கின்ற நாம் அனைவருமே பாரதியுகத்தின் பிரஜைகள்தாம். வாராது வந்த மாமணியாய் சென்ற நூற்றாண்டில் நம் தமிழ்நாட்டில் தோன்றி, தமிழ்ச்சாதியையும் பாரத நாட்டையும் உய்விக்கவந்த மஹாகவியின் வழிவந்த நாம், அக்கவிக்கு பூசனை செய்ய கோடி கோடி மலர்களை தினம் தினம் அவன் பாதங்களில் அர்ப்பித்து வருகிறோம். ‘யதா சக்தி’ என்று அவரவர் சக்திக்கேற்ப அர்ப்பணம் செய்கிறோம். ‘நிதி மிகுந்தவர் பொற்குவை’ தருவதைப் போல சந்தானம் நாகராஜன் இந்த நூலை பாரதிக்கு அர்ப்பணம் செய்திருக்கிறார்.

“பாரதியின் பெருமை உலகமெங்கும் பரவ வேண்டும். அதற்கு நான் பயன்படவேண்டும். இது ஒன்றே என்னுடைய ஆசை” என்று சொன்னவர் பாரதியைப் பரப்புவதையே தன் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு வாழ்ந்த கவிஞர் திருலோக சீதாராம் அவர்கள். அவரைப் போன்றே எப்போதும் பாரதியின் சிந்தனைகளில் தன்னைக் கரைத்துக் கொண்டவராக இருப்பவர் நாகராஜன் அவர்கள். ‘பாரதி ரத்தம்’ பாய்ந்த யாரும் எப்போதும் அவனைக் குறித்து பேசியும் எழுதியும் வருபவராகி விடுவார். அந்தவகையில் பாரதியின் சிந்தனைகளில் தன்னைக் கரைத்துக் கொண்டவராக இருப்பவர் நாகராஜன் அவர்கள். ‘பாரதி ரத்தம்’ பாய்ந்த யாரும் எப்போதும் அவனைக் குறித்து பேசியும் எழுதியும் வருபவராகி விடுவார். அந்தவகையில் பாரதியைப் பற்றி பல நூல்களையும் எழுதி, உரைகளையும் நிகழ்த்தி வருபவர் தான் இந்நூலாசிரியர்.

ஆன்மீகம், தேசப்பற்று, மொழியறிவு, மொழிப்பற்று, புராண இதிகாசங்களின் ஈடுபாடு, வேத வேதாந்தங்களில் சூல்கொண்ட உண்மைகளின் உறவாடல் என்று பாரதி ஆழ்ந்து கற்று, கற்றதை கவிதையாய்ப் பொழியாத விஷயம் உண்டா? பாரதியைப் பற்றி எந்த கோணத்தில்தான் எழுதமுடியாது? ‘யாதுமாகி நிற்கின்ற’ அவனைப் பற்றி அதிகக் கோணங்களில் ஒரு நூல் எழுதவதும் அத்தனை எளிதில்லை என்பதையும் ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும். எவ்வளவோ எழுதலாம் என்கிற வசதியே எப்படி எழுதுவது என்கிற மலைப்பையும் கொடுக்குமல்லவா? அத்தகைய மலைப்பைத் தாண்டி அவனை சொற்களில் படம் பிடிக்கவல்ல ஒருவர் தான் சந்தானம் நாகராஜன் அவர்கள்.

இந்த நூலில் பாரதி என்னும் சித்திரம் எப்படியெல்லாம் வரையப்பட்டிருக்கிறது என்று பார்ப்பதே ஓர் அனுபவம். கேள்வி பதில் வடிவத்தில் பாரதியின் பாக்களே விடையாக வருமாறு வினாக்களை எழுப்பி இருக்கும் முறை புதுமை. உண்மையில் குழந்தைகளுக்கு பாரதியை அறிமுகம் செய்ய இந்தமுறை மிகப் பயனுள்ளதாக இருக்கும். 70களின் தொடக்கத்தில் ‘பாரதி பாடம்’ என்ற தலைப்பில் குழந்தைகளுக்கென்று சென்னை ஆல் இந்தியா ரேடியோவிற்காக ஜெயகாந்தன் அவர்கள் ஒரு நிகழ்ச்சியை தயாரித்திருந்தது நினவுக்கு வருகிறது.

இதுமட்டுமன்றி, ஒரு வர்ணஜாலம் போல் பாரதியைப் பல கோணங்களில் காட்டுகிறார் ஆசிரியர். பாஞ்சாலி சபதத்தில் உள்ள ‘இயற்கை வருணனை’ – பல சொற்பொழிவுகளில் பொதுவாக சொல்லப்படாமல் கடக்கப்படும் பகுதி -, பாரதியே தன் பாடல்களுக்கு அமைத்த ராகங்கள், மத ஒற்றுமை குறித்த ‘கம்பளி ஸ்வாமி’ தெளிவு (ஜெயகாந்தனும் குணங்குடி மஸ்தானும் நினவுக்கு வருகிறார்கள்), பாரதி ஒரு கர்வமும் கௌரவமும் மிகுந்த ஹிந்து தான் என்பதை பாரதியின் சொற்களைக் கொண்டே நிறுவுதல், ‘சிவாஜியின் வீர வசனம்’ பகுதியில் இஸ்லாமியர்கள் மனம் நோகும் வண்ணம் உள்ள வரிகளைப் பற்றிய விளக்கம், இஸ்லாமியர்கள் அந்த வரிகளின் சரியான காவியத் தேவை காரணங்களை புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோள், 

இந்தியாவில் உள்ள மற்ற மதத்தினர் அனைவரும் பழங்காலத்து இந்துக்களே என்ற வரலாற்றுத் தெளிவு, பாரதியின் ‘ஆரியன்’ என்ற சொல்லாட்சி, ‘ஆரிய’, ‘திராவிட’ என்ற சொற்களின் மூல வரலாறு, ‘ஸ்ரீ சிவாஜி உத்ஸவம்’, திரைப் பாடல்களில் பாரதியின் பாடல்கள் பற்றிய நீண்ட குறிப்பு என்று அனைத்தையும் திரிகடுகம், சிறுபஞ்சமூலம் கலந்ததைப் போல் கலந்து கொடுத்திருக்கிறார்.

பாரதியைப் பயிலும் முறையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைமை பற்றியும் எச்சரிக்கை செய்யாமல் இல்லை ஆசிரியர். பாரதியைப் பதிப்பிக்கும் வெளியீட்டளர்கள் தங்கள் மனம் போன போக்கில் மாற்றங்கள் செய்வதையும் ஆசிரியர் கண்டிக்கின்றார். இது மிகவும் தேவையான எச்சரிக்கை. பாரதியே தன் கைப்பட எழுதி ஐயமற நம் கைக்குக் கிடைத்திருக்கும் விஷயங்களில் கூட பதிப்பாளர்கள் மாற்றங்கள் செய்வது மன்னிக்க முடியாத குற்றமே ஆகும். அவர்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை. பாரதியின் படைப்பில் மாற்றம் செய்யும் குற்றம் மிகப்பல ஆண்டுகளாகவே நடந்து வருகிறது என்பதைக் காண்கிறோம். பாரதியார் தன் மனைவி செல்லம்மா மேலே எழுதிய ‘நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி’, ‘பீடத்திலேறிக்கொண்டாள்’, ‘எங்கள் கண்ணம்மா நகை புது ரோஜாப்பூ’ முதலிய பாடல்கள் பலவற்றிலும் ‘செல்லம்மா’ என்றே எழுதினார் என்றும், ஆனால் செல்லம்மாவின் சகோதரர் அப்பாதுரை அய்யர் தன் சகோதரியின் பெயரில் அந்தப் பாடல்கள் வெளியாவது நாகரிகக் குறைவென்று கருதி ‘கண்ணம்மா’ என்று மாற்றி விட்டதாகவும் பாரதியாரின் மகள்கள் தங்கம்மாள் பாரதியும் சகுந்தலா பாரதியும் குறிப்பிட்டுள்ளார்கள். காரணம் எதுவானாலும், ‘ஆழ்ந்த கவியுள்ளம் காண்கிலார்’ இந்தக் குற்றவாளிகள்.

இப்படி இந்த நூல் ஒரு ‘பாரதி சுற்றுலா’விற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. இன்னும் பல நூற்றாண்டுகள் நிற்காமல் சுழலும் இந்தச் சுற்றுலாவில் நம் அனைவரையும் கூட்டிச் செல்ல சந்தானம் நாகராஜன் அவர்கள் அழைக்கிறார். வாருங்கள், செல்லலாம்.

சுப்ரமணியன் சீதாராம்

மும்பை தாணே
18 ஏப்ரல், 2022

*

புத்தகத்தில் என்னுரையில் திரு சுப்ரமணியன் சீதாராம் பற்றிய ஒரு பகுதி இது:

என்னுரை

இதற்கு நல்லதொரு அணிந்துரை தந்திருப்பவர் பாரதியாரின் மானசீக புத்திரராக அமைந்து பாரதி பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட கவிஞர் திரு திருலோக சீதாராம் அவர்களின் புதல்வரான திரு சுப்ரமணியன் சீதாராம் அவர்கள்.

தந்தையாரான கவிஞர் தனது மகனை அவையத்து முந்தி இருக்கச் செய்து தன் கடமையை ஆற்றிய போது மகன் ‘இவன் தந்தை என் நோற்றான்’ என அனைவரும் வியக்கும் வண்ணம் தந்தையின் வழியிலே பாரதியைப் பரப்பும் பணியில் இன்றளவும் ஈடுபட்டு

தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார். இவர் சிறந்த பேச்சாளர். கட்டுரையாளர். பண்பாளர். எனது இனிய நண்பர்.

பாரதியார் பற்றிய நூலுக்கு பாரதி பக்தரான சுப்ரமணியன் சீதாராம் அவர்கள் அணிந்துரை அளித்திருப்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம். அவருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

***

தேனீ போல இரு;  மூங்கில் போல அழியாதே – மேலும் சில சமண சமய உவமைகள் (Post No.11,128)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,128

Date uploaded in London – –    22 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

தேனீ போல இரு;  மூங்கில் போல அழியாதே – மேலும் சில சமண சமய உவமைகள்

சமண மத தீர்த்தங்கரர்களில் கடைசியாக வந்தவர் 24-ஆவதாக வந்த மஹாவீரர் ஆவார் . அவர் புத்தருக்கும் முந்தையவர். அவருக்கு 250 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பார்ஸ்வநாதர், மற்றும் கிருஷ்ணர் காலத்தில் வாழ்ந்த நேமிநாதர் பற்றிய குறிப்புகள் நமக்குக் கிடைப்பதால் அந்த மதத்தின் பழமை நமக்கு விளங்குகிறது . தமிழ்நாட்டிலும் கர்நாடகத்திலும் மட்டும், வழிதவறிப்போன சில சமணர்கள் அரசியலில் ஈடுபட்டதால் மோதல் ஏற்பட்டது. இந்தியாவின் ஏனைய இடங்களில் அவர்கள் அமைதியான துறவற வாழ்க்கை வாழ்ந்ததால் நல்ல பெயர் மிஞ்சியது. எடுத்துக்காட்டாக தமிழ் காப்பியமான சிலப்பதிகாரத்தில் சமணர்களை வெகுவாகப் புகழ்கிறார் இளங்கோ அடிகள். நிற்க.

சென்ற ஒரு கட்டுரையில் சமணர்களின் புஸ்தகமான மஹாவீர வசனாம்ருதத்தில் இருந்து சில சுவையான உவமைகளைக் காட்டினேன். மஹாவீர வசனாம்ருதம் என்ற நூல் மகாவீரரின் போதனைகள் அடங்கிய தொகுப்பு ஆகும். அது பிராகிருத மொழிகளில் ஒன்றான அர்த்தமாகதி மொழியில் எழுதப்பட்டுள்ளது. சம்ஸ்க்ருதம் அறிந்தவர்கள் அதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

இதோ மேலும் சில உவமைகள் :–

நமது உடல் படகு அல்லது கப்பல்; அதன் மாலுமி அல்லது படகோட்டி  நமது ஆன்மா ; இகலோக வாழ்க்கை எனப்படும் சம்சாரம் ஒரு சாகரம்/கடல். பல மஹான்கள், முனிவர்கள் அதைக் கடந்து சென்றுள்ளனர்  இதோ மஹாவீரர் வாக்கியத்தில் —

ஸரீரமாஹு  நாவத்தி ஜீவோ வுச்சயி நாவி ஓ

ஸம்ஸாரோ அண்ணவோ வுத்தோ ஜம் தரந்தி மஹேஸிணோ 

இது கீதையில் உள்ள கருத்து; சம்சார சாகரம் என்பதை கிருஷ்ணர் பல இடங்களில் பயன்படுத்துகிறார். ஸம்ஸ்க்ருதத்தைக் கரைத்துக் குடித்த வள்ளுவன் ,அதை அப்படியே பத்தாவது குறளில் பிறவிப் பெருங்கடல் என்று பயன்படுத்துகிறார்

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார் -10

Xxx

தேனீக்கள் மரங்களில் உள்ள பூக்களில் இருந்து தேனை அருந்துகின்றன. அவைகளும் திருப்தி அடைகின்றன. ஆனால் பூக்களுக்கோ மரங்களுக்கோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அது போல அமைதியையும் , சமநிலையையும் நாடும், பற்றற்ற  சமணத் துறவிகளும் தூய உணவையும் பானங்களையும் தேனீக்கள் போல பெற வேண்டும்

ஜஹா துமஸ்ஸ புஷ்பேஸு பமரோ ஆவியஈ  ரஸம்

ண  ய புஷ்பம் கிலா மே இ  ஸோய பீணேஇ  அப்பயம்

ஏ மே ஏ ஸமணா முத்தா  ஜே லோஏ ஸந்தி  சாஹுணோ

விஹம் கமா  வ புஷ்பேஸு தா ண பத்தேஸணே  ரயா

Xxx

அகந்தை , கோபம், ஆடம்பரம் அல்லது உதாசீனம்/கவனக்குறைவு  காரணமாக ஒரு துறவி  அடக்கத்தை / பணிவைக் கற்காவிடில் அது ஆன்மீக வறட்சிக்குச் சமம் ஆகும் ; அவன் ஒரு மூங்கில் மரத்தின் பழம் போல தனக்குத்தானே தனக்கு அழிவைத் தேடிக்  கொள்வான் –

தம் பா ந கோஹா வ மயப்பமாயா குரு ஸ் சஹாஸே விணயம்  ந ஸிக்கே

 ஸோ சைவ ஊ  தஸ்ஸ  அபூயி பாவோ பலம் ச கீயஸ் ஸ  வஹாய ஹோ இ

மூங்கில் மர உவமை ஏன்?

மூங்கில் மரமானது 100 ஆண்டுகளில் ஒரு முறை பூத்து பழத்தை உண்டாக்கிவிட்டால் அது காய்ந்து  உதிர்ந்து விடுமாம். அதாவது அந்த மரம் தனக்குத் தானே அழிவைத் தேடிக் கொள்கிறது

xxx

சமணர்கள் கணித மேதைகள்.  இந்துக்கள் எப்படி  யுகங்களுக்கும் , பிரம்மாவின் ஆயுளுக்கும், மன்வந்தரத்துக்கும் பெரிய எண்களைத் தருகிறார்களோ அதே போல சமணர்களும் ஒரு கணக்கு உவமை தருகின்றனர். ஒரு யோஜனை என்பது எட்டு மைல் . ஒரு யோஜனை அகலமும், ஆழமும், உள்ள ஒரு குழி தோண்டி அதை மனிதரின் மயிர்களால் நிரப்புங்கள். நன்றாக அமுக்குங்கள். ஒரே இராணுவமே அதன் மீது நடந்தாலும் அது அமுங்காதபடி நெருக்கமாக நிரப்புங்கள் . பின்னர் ஒவ்வொரு முடியையும் 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுங்கள். அத்தனை முடியையும் எடுத்து முடிக்கும் காலம் ஒரு பல்யோபமா .அது போல 100 கோடி ஒரு சாகரோபமா அதுபோல 400 கோடி ஆண்டு ஒரு கால சக்ர . எண்ணற்ற காலசக்ர சேர்ந்தது ஒரு புத்கல  பராவர்த்த . ஒரு தலை முடியை சத கோடியாகப் பிரிக்கும் உவமைகளை தமிழில் திருமூலரும் பயன்படுத்துகிறார். திருவள்ளுவரோ பத்து  அடுக்கிய கோடி பற்றிப்படுகிறார் . அவர்கள் அனைவரும் சொல்லவருவது மிகப்பெரிய கற்பனைக்கெட்டாத கால அளவு

அல்லது எண்.!!!

Xxx

பரிபூரண நிலையை அடைந்தவர்களை சமணர்கள், ‘தீர்த்தங்கரர்’ அல்லது ‘அர்ஹத்’ என்பர். இதற்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள் சித்தர்கள். அவ்ர்களைத் தமிழ் சித்தர்களுடன் ஒப்பிடலாம்.

அவர்கள் குணங்களை வருணிக்கும் அர்த்தமாகதி மொழி ஸ்லோகம்-

அரூவிணோ ஜீவகணா  நாண தம்சண ஸ ண்ணி யா

அ உலம்  ஸுஹம்  ஸம்பத்தா உவமா ஐஸ்மா நத்தி உ

அவர்களுக்கு / சித்தர்களுக்கு உருவம் இல்லை.  உயிர் உள்ளவர்கள்; ஆனால் உடல் அற்றவர்கள் ; அறிவும் தொலைநோக்கும் உள்ளவர்கள்; எப்போதும் பேரானந்தத்தில் திளைப்பவர்கள் . அந்த ஆனந்தத்துக்கு உவமை ஏதும் இல்லை.

Xxx

அவர்களுடைய உலகம் நம் உலகிற்கு மேலே உள்ளது ; சனாதனம் ஆனது. அதற்கு ஏறிச்  செல்லுவது கடினம். இந்த உலக வாழ்க்கை என்னும் சூழலில் இருந்து தப்பித்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்தவர்கள் அங்கே செல்கிறார்கள்; அவர்களுக்குத் துன்பம் என்பதே கிடையாது. இதோ அதற்கான ஸ்லோகம் —

தம் டாணம்  ஸாஸயம்  வாஸம் லோகக்கம்ஸி

ஜம் ஸம்பத்தா ந சோயந்தி பவோஹம் தகரா முணீ

xxx

உயிர்வாழும் இனம் மொத்தம் 84 லட்சம் வகை,  ஆத்மா என்பது  அழிவற்றது,  தினை விதைத்தவன் தினை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான் — என்ற கருத்துக்கள்  சமண சமயத்திலும் உண்டு . ஒரு கைப்பிடி விதைகளைத் தூவினால் அது காலப்போக்கில் கோடி கோடியாகப் பெருகுவது போல  ஒரு வினையிலிருந்து பல கோடி வினைகள் பரிணமிக்கும் என்று உரைகாரர் செப்புவர்

xxx

நான்கு விஷயங்கள் கிடைப்பதற்கு அரிது. அவையாவன — மனித ஜன்மம் , சமய போதனை,  உண்மை மதத்தில் நம்பிக்கை, புலனடக்கம் .

இதோ மஹாவீரர் ஸ்லோகம்

சத்தாரி பரம் ஸங்காணி துல் லஹாணிஹ  ஐந்துணோ

மா ணுசத்தம் சுயி ஸத்தா ஸஞ்ஜமம்மி ய வீரியம்  

சம்சயாத்மா விநஸ்யதி – சந்தேகப் பேர்வழி அழிந்தே போவான் என்று கிருஷ்ணரும் பகவத் கீதையில்  பகிர்கிறார் . ஆயிரத்தில் ஒருவன்தான் இறையன்பை நாடுவான் என்றும் சொல்கிறார்.

ஆதி சங்கரரும்  மனித ஜன்மம் துர்லபம் என்றும், சத்சங்கமே மோட்சத்துக்கு வழிவகுக்கும் என்றும் நுவல்கிறார் ; அரிது அரிது மானிடராய்ப் பிறப்பது அரிது என்று அவ்வைப்பாட்டியும் சொல்கிறாள்.

அரியது கேட்கின் வரிவடி வேலோய்!
அரிதரிது மானிடர் ஆதல் அரிது
மானிடராயினும் கூன் குருடு செவிடு
பேடு நீக்கிப் பிறத்தல் அரிது
பேடு நீக்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான்செயல் அரிது
தானமும் தவமும் தான்செய்வராயின்
வானவர் நாடு வழிதிறந் திடுமே

என்று அவ்வைப் பாட்டியும் கூறுவர்.

இதோ ஆதிசங்கரர் ஸ்லோகம்

ஜந்தூனாம்  நர ஜன்ம துர்லபதஹ பும்ஸ்த்வம் ததோ விப்ரதா

தஸ்மாத்வைதிக தர்ம மார்க பரதா  வித்வத்மஸ்மாத்பரம்

எல்லாவற்றிலும் மனிதனாய் பிறப்பது கடினம்; அதிலும் ஆண்மகனாய்ப் பிறப்பது அரிது. அதிலும் அந்தணனாய்ப் பிறப்பது அரிது. அதிலும் வேதமார்கத்தைப்  பின்பற்றுபவராய்  (இந்துவாய்ப்)  பிறப்பது அரிதிலும் அரிது.

அடுத்த ஸ்லோகத்தில் 100 கோடி பிறப்புகளில் சேர்த்த புண்ணியத்தால்தான் முக்தி கிடைக்கும் என்கிறார்.

விவேக சூடாமணியின் மூன்றாவது ஸ்லோகத்தில் இன்னும் தெளிவாகச் சொல்கிறார் —

துர்லபம் த்ரய மேவைத தேவானுக்ரஹ ஹேதுகம்

மனுஷ்யத்வம் முமுக்ஷுத்வம் மஹா புருஷ ஸம்ஸ்ரயஹ

–விவேக சூடாமணி

மூன்று விஷயங்கள் அரிதிலும் அரிது ; அவை இறைவன் அருளால் கிட்டும்; மனித ஜன்மம் , மோட்சம் பெற ஏங்குதல் , குரு  அருள் ; அதாவது பூ ரணத்துவம் பெற்ற ஒரு மஹானின் கடாக்ஷம் /கவனிப்பு

ஆதி சங்கரரின் ஸம்ஸ்க்ருத ஸ்லோகத்தைப் படித்துவிட்டு அர்த்தமாகதி மொழியில் மஹாவீரர் சொன்னதைப் படித்தால் மிகவும் எளிதாகப் புரியும்.

Xxx

ஆச்சர்யத்துடன் பார்க்கிறான், கேட்கிறான்

இது கீதையிலுள்ள வாக்கியம் ; அபூர்வம், அரிது , அதிசயம் என்பது அதன் பொருள் . அதை மகாவீரரும் பயன்படுத்துகிறார் —

ஆஹச்ச ஸவணம்  லப்தும்  ஸ த்தா பரம துல்லஹா

ஸோச்சா ணேஆஉயம்  மக்கம் பஹவே பரி பஸ்ஸஈ

அபூர்வமாக  சமய சொற்பொழிவைக் கேட்கலாம்.  அதில் நம்பிக்கை ஏற்படுவது கடினம்; அப்படிக் கேட்டவர்களிலும் பலர் வழி தவறிப்போவதுண்டு

இதோ கீதை ஸ்லோகம் –

आश्चर्यवत्पश्यति कश्चिदेनमाश्चर्यवद्वदति तथैव चान्यः।

आश्चर्यवच्चैनमन्यः शृणोति श्रुत्वाऽप्येनं वेद न चैव कश्चित्॥२९॥

ஆஸ்²சர்யவத்பஸ்²யதி கஸ்²சிதே³நமாஸ்²சர்யவத்³வத³தி ததை²வ சாந்ய:|

ஆஸ்²சர்யவச்சைநமந்ய: ஸ்²ருணோதி ஸ்²ருத்வாப்யேநம் வேத³ ந சைவ கஸ்²சித் ||2-29||

கஸ்²சித் ஏநம் = யாரோ ஒருவன்

ஆஸ்²சர்யவத் பஸ்²யதி = வியப்பெனக் காண்கிறான்

ஆஸ்²சர்யவத் வத³தி = வியப்பென ஒருவன் சொல்கிறான்

ஆஸ்²சர்யவத் அந்ய ஸ்²ருணோதி = வியப்பென ஒருவன் கேட்கிறான்

கஸ்²சித் ஸ்²ருத்வா அபி ஏநம் ந ஏவ வேத³ = கேட்கினும் இதனை அறிந்தவன் எவனும் இலன்

இந்த ஆத்மாவை, “வியப்பென ஒருவன் காண்கிறான், வியப்பென ஒருவன் சொல்லுகிறான், வியப்பென ஒருவன் கேட்கிறான், கேட்கினும், இதனை அறிவான் எவனுமிலன்

(Gita slokam -From Sangatham.com)

Xxx subham xxxx

TAGS –சமண உவமைகள் , மூங்கில், தேனீ , துறவிகள், உடல் படகு, ஞானி , மனிதப் பிறப்பு, துர்லபம்

STORY OF TWO BEGGARS IN NEW YORK (Post No.11,127)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 11,127

Date uploaded in London – 22 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞானமொழிகள்-101

In New York, two beggars were sitting side by side, one carrying *OM* sign and the other with *CROSS* sign.

People passing that area were giving dirty look to the beggar carrying the *OM* sign but was giving dollar to the one carrying the *CROSS* sign.

This was going on, when a father of a church was passing by and noticed this. He then came to the beggar who was carrying the *OM* sign and told him: “You are in a country, where people follow Christianity. You being a Hindu will hardly get any alms. Just to make you feel jealous and frustrated people are giving dollars to your counterpart.”

After the Father left, the beggar carrying the OM sign said the following in Gujarati to his counterpart: “Jignesh Bhai?”

“Yes, Mansukh Bhai.”

“Now this Father is trying to teach us how to do business.”

TAMIL JOKES (Tamil Speakers only will enjoy the following funny comments)

Brilliantly Funny jokes involving Tamil lingo 🤪

1. My elder brother is an irritating fellow.

He is anna-ying.

3. Where do dentists in Chennai practice?

EEE-kaatu thaangal.

4. How did the Arctic bear slap the other one?

Polar polar nu.

5. Why is Michelle Obama considered so careless?

Ava epome Barack ah paathutu irupa.

6. Why do people take binoculars to a wedding?

They can see their doorathu sondham.

7. If Black Panther sits down he never gets up, because…?

Okkandha forever.

8. What do you call it when your elder sister gives you a place to stay?

Akkamodation.

9. Why did the king’s stuff turn into sand?

Because the amaichar said, “Aagantum Manna.”

10. Where did the Mallu girl go when she became angry?

Ava Cochinu poita.

11. What do you call it if the dogs are so attached to you?

Pawsam.

12. I married a pizza.

My children are kutti pizzasu.

13. Why did Batman shout, “Aeiouuu”?

Because avan vowel manidhan.

14. Which writer asked his son to donate his eyes?

Kanna thaa son.

15. What happened to those oranges left in the freezer?

Orange-i poochu.

16. Why was the spy staring at the sea?

Avan Wave paakaraan.

17. Most people who do CA love mutton. Why?

Because they are aadu-eaters.

18. A jealous engineer can never design a proper circuit. Why?

Avanuku Wire ah eriyum.

19. Why were the tourists staring at the hammer instead of sight-seeing?

Avanga suthi paaka vandhaanga.

20. My dad’s brother is a big joke.

You could call him Periya-pun.

21. What do you call a piece of cotton falling from a high altitude?

Punjee Jumping.

22. Your friend poked you.

You poked back.

You’ve poked each other 158 times in a row.

Pozhudhu-poke.

23. Did you know that Bruce Banner smelt good after getting exposed to the radiation?

Gamma gamma nu irundhaaru.

24. Why are the articles in English known as orphans?

They are an, a, the. (Anadhi)

25. A scientist shows his awards and achievements to his friend.

Scientist: These are all my awards in physics.

Friend: These are arranged so randomly!

Scientist: Yes. My field of interest is en-trophy.

Xxx Subham xxxx

Tags- ஞானமொழிகள்-101

செப்பு மொழி இருபத்தியிரண்டு (Post No.11,126)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,126

Date uploaded in London – –    22 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

செப்பு மொழி இருபத்தியிரண்டு!

ச.நாகராஜன்

  1. இயற்கை, காலம், பொறுமை – இந்த மூன்றும் தான் பெரிய வைத்தியர்கள்!

In, Nature, Time and Patience are the three great Physicians.

2) இயற்கையின் ஒரு ஸ்பரிஸம் உலகனைத்தையும் உறவாக்கி விடுகிறது.     –     ஷேக்ஸ்பியர்

One touch of nature makes the world kin – Shakespeare

3) நெருஞ்சியை விதைப்பவன் நெருஞ்சி முள்ளையே அறுவடை செய்வான்.

He that sows thistles shall reap prickles

4) போருக்குப் போக ஒரு மணி நேரம் முன் பிரார்த்தனை செய்;

கடலில் இறங்க இரண்டு மணி நேரம் முன்னர் பிரார்த்தனை செய்;

திருமணத்திற்கென்றால் மூன்று மணி நேரம் முன்னர் பிரார்த்தனை செய்  – இந்தியப் பழமொழி

Pray one hour before going to war;

Two hours before going to sea,

And three hours before getting married.  – Indian proverb

5) கடவுள் மனித குலத்தைத் தூய்மைப் படுத்த நினைத்தான்; வக்கீல்களை அனுப்பினான்.  – ரஷிய பழமொழி

God wanted to chastise mankind, so he sent lawyers.  – Russian

6) உடல் நலத்துடன் இருக்கும் போதே வியாதியைப் பற்றி தெரிந்து கொள்ள ஆரம்பி.   – தாமஸ் ஃபுல்லர்

Study sickness while you are well.   – Thomas Fuller

7) கெட்ட மனிதர்கள் இல்லையென்றால் நல்ல வக்கீல்களே இருக்க மாட்டார்கள் – சார்லஸ் டிக்கன்ஸ்

If there were no bad people there would  be no good lawyers.  – Charles Dickens

8) சுருங்கிய பர்ஸ், சுருக்கங்கள் கொண்ட முகத்தை உருவாக்குகிறது. – பிரெஞ்சு பழமொழி

Wrinkled purses make wrinkled faces.  – French

9) ரோஜாவை விரும்புபவன் முள்ளை மதிக்க வேண்டும் – பெர்சிய பழமொழி

He who wants a rose must respect the thorn.  – Persian

10) நான் மிஸ்டர் ‘ரைட்’டை முதலில் சந்திக்கும் போது அவரது பெயரின் ஆரம்பம் “ஆல்வேஸ்” (எப்போதும்) என்பது தெரியாது! – ரீடா ருட்னர்

When I first met Mr Right  I had no idea that his first name was Always.  – Rita Rudner

11) என் மனைவியிடம் நான் பேசி பல வருடங்களாகி விட்டன. அவளை ஒரு போதும் குறுக்கிட்டுப் பேச நான் விரும்பவில்லை. – ரோட்னி டேஞ்சர்ஃபீல்ட்

I haven’t spoken to my wife in years. I didn’ want to interrupt her. – Rodney Dangerfield

12) உங்களுக்குத் தெரியுமா, நீங்கள் வயதாகி விட்டால் சில அடையாளங்கள் இருக்கும். நான் ஒரு கல்லறைப் பக்கம் போன போது இரண்டு ஆட்கள் மண்வெட்டியுடன் என் பின்னால் ஓடி வந்தார்கள் – ரோட்னி டேஞ்சர்ஃபீல்ட்

You know when you’re getting old, there are certain signs. I walked past a cemetery and two guys ran after me with shovels.   – Rodney Dangerfield

13) நான் ஒரு நீதிபதியால் மணம் செய்து வைக்கப்பட்டேன். ஜூரிகளை நான் கேட்டிருக்க வேண்டும்.  – க்ரௌச்சோ மார்க்ஸ்

I was married by a Judge, I should have asked for a jury. – Groucho Marx

14) ஒரு மரத்தை நடுபவன் தன்னை நேசிப்பதோடு மற்றவர்களையும் நேசித்தவன் ஆகிறான். – ஆங்கிலப் பழமொழி

He that plants trees loves others besides himself.  – English

15) குழந்தைகள் ஏழைகளின் செல்வம் – ஆங்கிலப் பழமொழி

Children are poor men’s riches. – English

16) வரதட்சிணை எங்கு இருக்கிறதோ, அங்கு அபாயம் இருக்கிறது – அயர்லாந்து பழமொழி

Where there is dowry, there is danger.  – Irish

17) அனுபவமே ஒரே ஆசான்

Experience is the only teacher.

18) வியாதியை விட பெரும்பாலும் டாக்டரைப் பார்த்துத் தான் பயப்பட வேண்டும். – பிரெஞ்சு பழமொழி

The doctor is often more to be feared than the disease. – French

19) வைத்தியர்கள் அதிகம் பணம் செலவழிக்க வைக்கும் விருந்தாளிகள்.

Physicians are costly visitors.

20) ஒரு பூ மாலையாகாது. – பிரெஞ்சு பழமொழி

One flower will not make a garland.   – French

21) திருமணம் செய்து வைக்கப்பட நான் விரும்புகிறேன். வாழ்க்கை முழுவதும் எரிச்சலூட்ட ஒரு விசேஷ ஆசாமியை கண்டு பிடிப்பது ஒரு பெரிய விஷயம் தானே! – ரீடா ருட்னர்

I love being married. It’s so great to find that one special person you want to annoy for the rest of your life. – Rita Rudner.

22)  சமுத்திரத்தைப் புகழ்ந்து பேசு; ஆனால் நிலத்தை வைத்துக் கொள்.

Praise the sea but keep on land.

***

புத்தக அறிமுகம் – 5

சங்க இலக்கியத்தில் அந்தணரும் வேதமும்

ச.நாகராஜன்

பொருளடக்கம்

என்னுரை

1. திருக்குறளில் அந்தணரும் வேதமும்!

2. திருமுருகாற்றுப்படையில் அந்தணரும் வேதமும்!

3. நற்றிணை, அகநானூற்றில் அந்தணரும் வேதமும் !

4. புறநானூற்றில் அந்தணரும் வேதமும்! – 1

5. புறநானூற்றில் அந்தணரும் வேதமும் ! – 2

6. புறநானூற்றில் அந்தணரும் வேதமும்! – 3

7. புறநானூற்றில் அந்தணரும் வேதமும்! – 4

8. புறநானூற்றில் அந்தணரும் வேதமும்! – 5

9. பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படையில் அந்தணரும் வேதமும்!

10. பட்டினப்பாலை, மதுரைக் காஞ்சியில் அந்தணரும் வேதமும்!

11. குறுந்தொகை, கலித்தொகையில் அந்தணரும் வேதமும்!

12. ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்தில் அந்தணரும் வேதமும்!

13. அகநானூறு கூறும் பார்ப்பானின் கதை!

14. பார்ப்பானுக்கு அழகு எது? அகநானூறு தரும் பதில்!

15.பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 1

16. பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 2

17. பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 3

18.பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 4

19. பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 5

20. பரிபாடல் திரட்டில் அந்தணரும் வேதமும் !

21. பாரதத்தின் பழம்பெரும் ஒருமைப்பாடு: சங்க இலக்கியச் சான்றுகள்!

நூலில் எனது உரையாகத் தந்திருப்பது இது:

என்னுரை

தமிழை வளர்ப்போர் என்று தம்மைத் தாமே தம்பட்டம் அடித்துக் கொண்டு தன் வயிற்றையும் குடும்பத்தையும் வளர்ப்போர், அத்தோடு நில்லாமல் பல தவறான கருத்துக்களைத் தமிழ் சமுதாயத்தில் விதைத்து பிளவையும் வெறுப்பையும் தூண்டி விடுவதைக் கண்டு திடுக்கிடுகின்றோம்.

இதற்கென பல புத்தகங்களை சங்க இலக்கிய ஆய்வுரைகள் என்ற பெயரில் வெளியிட்டு அதில் தமது கருத்துக்களைப் புகுத்தி அதை அனைத்து நூலகங்களிலும் இடம் பெறச் செய்கின்றனர்.

இந்தக் கருத்துக்கள் பல்வேறு விதமாக இளம் சிறார்கள் மத்தியிலும் விதைக்கப்படுகின்றன.

பார்ப்பனர்கள் வந்தேறிகள் என்றும் வேதம் கவைக்குதவாத ஒன்று என்றும் இவர்களது ஆய்வு முடிவுகள் அவ்வப்பொழுது தெரிவித்துக் கொண்டே இருக்கும்.

சங்க இலக்கியங்களைத் தாமே பயின்றால் இவர்களது பொய்க் கூற்றுகள் வெளிச்சத்திற்கு வந்து விடும்.

பல ஆண்டுகளாக சங்க இலக்கியம் அந்தணரையும் வேதத்தையும் தரும் பல செய்திகளைத் தொகுத்துத் தர வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

ஒரு அன்பர் தனது விமரிசனத்தால் இந்தக் கருத்தை வலுப்படுத்தித் தூண்டி விட்டார்.

தொடர் உருவானது.

‘மெக்காலே மாடல்’ என்று சொல்லப்படும் ‘இந்தியாவை பிளவு படுத்தும் சதியைப்’ பற்றி இப்போது அனைவரும் அறிவர்.

மாக்ஸ்முல்லர் விதைத்த பிரிவினை வாதக் கொள்கை பற்றியும் இப்போது அனைவரும் அறிவர்.

மாக்ஸ்ம்ல்லர் மர்மம் என்ற எனது ஆய்வு நூலில் பல உண்மைகள் ஆதாரத்துடன் தரப்பட்டுள்ளன.

ஆரிய- திராவிட வாதம் என்பது அடிப்படையற்றது.

இதைப் பற்றி நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை அவர்கள் தமது ஆய்வுக் கட்டுரைகளில் தெளிவாகக் கூறுகிறார்.

அவரது கட்டுரைகளில் சில பகுதிகளைக் கீழே காணலாம் :

“தமிழ் இலக்கியம் கண்ட நாள் முதல் தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் இருந்து வந்திருக்கிறார்கள் என்பதை எவரும் மறக்க முடியாது. இந்தப் பார்ப்பனர்களை ஆரியர்கள் என்றும் வடக்கேயிருந்து வந்து புகுந்து கொண்டவர்கள் என்றும் வெறும் வம்பு பேசுகின்றோம்.”

“சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்கு உற்ற தோழியாக இருந்த தேவந்தி என்னும் பார்ப்பனப் பெண்ணும் அவளுடைய கணவன் சாத்தனும் வடக்கேயிருந்து வந்த ஆரியர்களா? உக்ரபாண்டியன் ஆட்சியில் கடைச் சங்கத்தில் பல பார்ப்பனப் புலவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களெல்லாம் ஆரியர்களா? எங்கிருந்தோ பாண்டிய நாட்டுக்கு வந்து பண்டிதர்களாகி சங்கப் புலவர்கள் ஆகிவிட்டவர்களா?”

இப்படி ஏராளமான வாதங்களை முன் வைத்து ஆரிய திராவிட வாதத்தைப் பொடி பொடி ஆக்குகிறார் நாமக்கல் கவிஞர்.

அடுத்து 2009ஆம் ஆண்டு ஹார்வர்டு மெடிகல் ஸ்கூல் ஆய்வாளர்களும் இந்திய இயல் பற்றிய ஆய்வாளர்களும் மேற்கொண்ட ஆய்வுகளும் ஆரிய – திராவிட வாதம் அடிப்படையற்றது என்பதை அறிவியல் அடிப்படையில் கண்டுபிடித்துக் கூறுகின்றனர்.

ஐந்து லட்சம் மரபு சார் அணுக்களை 25 குழுக்களிலிருந்து 132 தனி நபர்களிடம் ஆராய்ந்து அவர்கள் தம் முடிவை வெளியிட்டுள்ளனர்.

அவர்களது ஆய்வு பற்றிய செய்தியை 25-9-2009 டைம்ஸ் ஆஃப் இந்தியா விரிவாக வெளியிட்டுள்ளது.

(The study was conducted by CCMB in collaboration with Harvard Medical School, Harvard School of Public Health and the Broad Institute of Harvard and MIT).

ஆக ஆரியர், திராவிடர், பிராமணர், பிராமணர் அல்லாதார் போன்ற கருத்துக்கள் பிரிவினையை உண்டு பண்ணி தமிழ்ச் சமுதாயத்தை அழிக்க நினைப்பவரின் சதியே என்பது நிரூபணமாகிறது.

அந்தணர்களும் வேதமும் தமிழ்ச் சமுதாயத்தின் ஒரு முக்கிய அங்கம்.

அந்தணர் மிகவும் மதிக்கப்பட்டோர்; வேதம் ஓதுதல் சங்க காலத்திலிருந்தே நடை பெற்று வந்த ஒன்று.

பாரதம் ஒன்றே என்பதை நிரூபிக்கும் சான்றுகள் இவை.

சங்க இலக்கியங்களைத் தாமே பயின்றால் இன்று நமக்கு போலியாக ஊட்டப்படும் பல பொய்க்கருத்துக்கள் போகும்; தமிழ்ச் சமுதாயம் மேம்படும்.

இந்த நூலில் உள்ள கட்டுரைகள் சங்க இலக்கியங்களில் அந்தணர் போற்றப்படுவதையும் வேதம் மிகவும் மதிக்கப்படுவதையும் ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டும்.

அனைவரும் பொய்களைப் புறம் தள்ளி உண்மைகளைக் கண்டறிந்து அவற்றைப் பரப்புவோம்.

ஏக பாரதத்தை என்றும் நிலை நிறுத்துவோம்.

இந்தக் கட்டுரைகளை www.tamilandvedas.com இல் வெளியிட்டு வந்த லண்டன் திரு ச. சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றி.

இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

தொடராக வந்த போது என்னை ஊக்குவித்த பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கு எனது அன்பு கலந்த நன்றி.

நன்றி.

பங்களூர்
4-4-2022

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

***

இலக்கணம் ஒரு கடல் – 2 (Post No. 11,125)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,125

Date uploaded in London – –    20 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

இதன் முதல் பகுதி நேற்று வெளியானது

இலக்கணம் ஒரு கடல் – பகுதி 2

பாமஹர் மீண்டும் ஒரு கடல் உருவகத்தை நம் முன் வைக்கிறார்.

சாலாதுரீயரின் (பாணினியின்) இலக்கண விதிகளை யார் முழுவதும் சரியாக விளக்க முடியும் ?

ஆகையால் இதுபற்றி நான் மேலும் எதுவும் சொல்லப்போவதில்லை .

ஓருவர் இலக்கணக் கடலைக் கடந்து அடுத்த கரையை அடைவது அதிசயமே. அது கொந்தளிப்பு நிறைந்த கடல்.

இதோ அந்த ஸ்லோகம்

சாலாதுரீயமதமேதத் அநுக்ரமேன

கோ வக்ஷ்யதீதி விரதோஹம்  அதோ விசாராத்

சப்தார்ணவஸ்ய யதி கஸ் சித் உபைதி பாரம்

பீமாம்பச ஸ்ச ஜலதெரிதி விஸ்மயோ செள ஹு

சப்த  என்பதை பாமஹ இலக்கணத்துக்குப் பயன்படுத்துகிறார். சப்த சுத்தி என்னும் தலைப்பில் கடைசியாக வரும் ஸ்லோகம் இது . இலக்கணத்தைப் புகழ்வதோடு மஹா மேதாவியான பாணினியையும் புகழும் ஸ்லோகம் இது  உலகிலேயே மெச்சத்தக்க கருத்து பாணினியுடையது ஒன்றுதான் என்று வேறு ஒரு இடத்தில் செப்புகிறார்.

ச்ரத்தேயம் மதம் ஹீ பாணினீயம்

Xxx

க்ஷேமேந்திரர் , ஹேமசந்திரர் ஆகியோரும் இவ்வாறே இலக்கணத்துக்கு முதலிடம் தருகின்றனர்.

ஹேமசந்திரர் எழுதிய ‘விவேக’ என்னும் உரையில் சொல்கிறார் —

“என்னிடம் இரண்டு எருதுகள்/ மாடுகள்  இருக்கின்றன ; நாங்கள் தம்பதிகள்தான் எங்கள் வீட்டில் எப்போதும் செலவுக்குப் பஞ்சம் . ஆகையால் ஓ மனிதா ! வேலை செய்யத்  துவங்கு ; அபோதுதான் நிறைய நெல்லுக்குச் சொந்தக்காரர் ஆகலாம்

இந்தக் கவிதை உண்மையில் ஆறுவகை சமாசங்களை நினைவிற் கொள்ள உதவும் வேடிக்கைக் கவிதை ஆகும்  ; நாம் வானவில்லின் 7 நிறங்களை நினைவிற்கொள்ள விப்ஜியார் VIBGYOR என்ற ஆங்கிலச் சொல்லைப்ப பயன்படுத்துவது போல இது த்விகு , த்வந்த்வ , அவ்யயீ பாவ, தத் புருஷ, கர்மதாரய , பஹுவ் ரீஹீ  என்னும் ஆறு சமாசங்களை நினைவில் வைத்துக்கொள்ள பயன்படும் .

இதோ அந்தக் கவிதை :

சப்தானுசாசனம்  வ்யாகரணம் ததோ ஹி  சப்த சுத்திஹி

தன்னைபுண்யம்  யதா த்விகுரபி  சத்வந்த்வோ

ஹம் க்ருஹே ச மே  சததமவ்யயீபாவஹ

தத்புருஷ கர்மத்தாராய யே னாஹம் ஸ்யாம் பஹுவ் ரீஹி 

ஒரு மொழியைக் கற்பதை எப்படி சுவையாக மாற்றி எல்லோரையும் தன பால் இழுக்கவைக்க முடியும் என்பதை சம்ஸ்க்ருத ஆசாரியர்களிடமிருந்து அறியவேண்டும்.

சமாசம் என்றால் என்ன ?

பகவத் கீதையில் கூட கிருஷ்ண பரமாத்மா இலக்கணம் பற்றிப் பேசுகிறார். விபூதி யோகத்தில் எழுத்துக்களில் நான் அகாரம் ; ஸமாஸங்களில் நான் த்வந்த்வ ஸமாஸம் — (பகவத் கீதை 10-33)

இதற்கு விளக்க உரை எழுதிய ராமகிருஷ்ண மடத்தின் ‘அண்ணா’ அவர்கள் எழுதுகிறார் —

சொற்களின் புணர்ச்சி ஸம்ஸ்கிருதத்தில் நான்கு வகை

அவ்யயீ – உதாரணம் – அதிஹரி

தத் புருஷ – உதாரணம் – ஸீதாபதி

பஹு வ்ரீஹி  – உதாரணம் – பீதாம்பரஹ

த்வந்த்வ — உதாரணம் — ராம லக்ஷ்மணவ்

த்வந்த்வ ஸமாஸத்தில் புணரும் பதங்கள் இரண்டும் ஸமப்ரதானம் .

xxxxx

கவிஞராக விரும்பும் ஒருவர் என்ன என்ன பாடங்களை பயில வேண்டும் என்று வாமனரும் பகர்கிறார் :-

சப்த ஸ்ம்ருதி /இலக்கணம் , அபிதான/அகராதி, கோச /தொகை நூல், சந்தோவிசிதி / யாப்பு, கலா/ கலைகள், காமசாஸ்த்ர /இன்பநுகர்ச்சி நூல், தண்ட நீதி/அரசியல் . இந்தப் பட்டியல் வாமனரின் காவ்யாலங்கார சூத்ர விருத்தியில் வருகிறது. அவர் முதல் முதலில் இலக்கணத்தைக் குறிப்பிடுவது கருத்திற்கொள்ள வேண்டிய விஷயம்.

Xxx

ஆனந்த வர்த்தகர் எழுதிய த்வன்யாலோக உரை நூலிலும் இலக்கணம்  புகழப்படுகிறது. அவர் சொல்கிறார் –

ப்ரதமே ஹி வித்வாம்ஸோ வையாகரணஹ வ்யாகரண மூலத்வாத் ஸர்வ வித்யானாம்

இதன் பொருள்

கற்றறிந்த அறிஞர்களில் முதலிடம் வகிப்பவர்கள், இலக்கணத்தைப் படைத்தவர்கள்தான்; ஏனென்றால் எல்லா விஷயங்களும் இலக்கணத்துக்குக் கடமைப்பட்டுள்ளன .

இன்னும் ஒரு இடத்தில் ஆனந்த வர்த்தனரின் வியாக்கியானம் சொல்கிறது–

சப்த ப்ரஹ்மனை எவரும் மாசுபடுத்த முடியாது அறிஞர்கள் இதை நன்கு உணர்ந்துள்ளனர்

Xxx

செய்யுட்களை இயற்றுவதற்கு ஒருவருக்கு என்ன என்ன தெரிய வேண்டும் என்று காவ்யா மீமாம்ஸா என்னும் நூலில் ராஜசேகரரும் சொல்கிறார் –

நாம தாது பாராயணே

“பெயர் சொற்களையும் வினைச் சொற்களையும் மனப்பாடம் செய்க”

மதுசூதன் மிஸ்ரா போன்ற வியாக்கியானக்காரர்கள் சித்தாந்த கெளமுதி என்னும் எளிய இலக்கண நூல்களைக் கற்பிப்பதைக் குறிப்பிடுகின்றனர்

Xxx

 எனது அனுபவம் My Experience

இதை எழுதும்போது நாங்கள் (I and my younger brother)  சிறு வயதில் சம்ஸ்க்ருதம் படித்தது நினைவுக்கு வருகிறது. மாலை வேளையில் , விருப்பப்படும் குழந்தைகளுக்கு மட்டும் ஸம்ஸ்க்ருதம் கற்பிக்க மதுரையில் மேலச் சித்திரை வீதியில், ஒரு ஆடிட்டர் வீட்டின் வறாண்டாவில், ஏற்பாடாகியிருந்தது. நாங்கள் அங்கே போய் அமர்வோம். ராமகிருஷ்ண சாஸ்திரிகள் என்னும் சம்ஸ்க்ருத ஆசிரியர் வந்தவுடன் எழுந்து நிற்போம். அவர் உட்காருங்கள் என்று சைகை செய்தவுடன் அமர்வோம். ‘ராம சப்த’த்தில் துவங்கி வரிசையாக சப்தங்களை சொல்லுவோம். பிறகு ராமோதந்தம் என்னும் எளிய ராமாயண செய்யுட்களை அவர் சொல்லச்  சொல்லத்  திரும்பிச் சொல்லுவோம். இறுதியில் அமர கோசம் என்னும் உலகப்புகழ் பெற்ற நிகண்டுவை உருப்போட வைப்பார் . பின்னர் காளிதாசரின் ரகு வம்சத்தில் பத்து ஸ்லோகம் வரை பதம் பிரித்து அர்த்தம் சொல்லுவார். இவைகளை எல்லாம் நோட்டுப் புஸ்தகத்தில் எழுதுவோம். ஒரு பாட புஸ்தகத்தில் (Text Book) சின்னச் சின்ன கதைகள் இருக்கும் அதைப் படித்து அர்த்தம் சொல்லுவார்.

இதில் கற்ற அமரகோசம் நிகண்டுவையும் சப்தங்கள் என்னும் இலக்கணத்தையும் நீண்ட காலம் மறக்கவில்லை. கிட்டத்தட்ட தாது பாடாவலியைக்  கற்பிக்கும் போது அவ உடல் நிலை குன்றி வகுப்புகள்  தடைப்பட்டன. நான் சம்ஸ்க்ருதம், பிரெஞ்சு , ஜெர்மன் எல்லா வகுப்புகளிலும் பிற்காலத்தில் சேர்ந்தேன் . தமிழையும் ஆங்கிலத்தையும் பள்ளி , கல்லூரிகளில் பயின்றேன். எந்த மொழி பாடத்திலும் ஸம்ஸ்க்ருதம்போல இலக்கணத்தையும் அகராதியையும் உருப்போட வைக்கவில்லை. உலகில் ஸம்ஸ்க்ருதம் கற்பிக்கும் முறைதான் சிறந்தது என்பது இப்போது புரிகிறது. ஆங்கிலம் கற்பிக்கச் செல்லும் சிறுவனுக்கு முதல் நாள் வகுப்பில் ஷேக்ஸ்பியரை மனப்பாடம் செய்யச் சொல்லுவதில்லை. ஆனால் முதல் நாள் சம்ஸ்க்ருத வகுப்பிலேயே உலகப் புகழ் பெற்ற ரகு வம்ச காவியத்தை ஒரு குறிப்பிட்ட ராகத்தில் சிறுவர்களை மனப்பாடம் செய்ய வைக்கின்றனர். தமிழ் கற்பிக்கப்போகும் மாணவனுக்கு தொல்காப்பியம், நன்னூல் என்பதெல்லாம் அரிதே தெரியும். ஆனால் ஸம்ஸ்ருத வகுப்பிலோ சப்த மஞ்சரி என்பதுதான் முதல் புஸ்தகம் . இதனால்தான் அத்தனை ஸம்ஸ்க்ருதக் கவிஞர்களும் இலக்கணத்தை முதல் பாடமாகப் புகழ்கின்றனர் போலும். வேத பாட சாலைகளில் வியாகரணம் / இலக்கணம் ஆறு துணைப்பாடங்களில் ஒன்று என்பதை முன்னரே குறிப்பிட்டேன்.. இது எல்லாம் 60 அல்லது 65 ஆண்டுகளுக்கு முன்னர் என் பள்ளிப்பருவத்தில் நடந்த நிகழ்ச்சிகள் .

ஒவ்வொரு விஷயமும் சுமார் 10 நிமிடங்கள்தான். முழு நூலும் அல்ல . நாளடைவில் 200, 300 வரிகள் மனப்பாடம் ஆகிவிடும் . முதலில் அவர் சொல்ல, நாங்கள் திரும்பிச் சொல்லுவோம். பின்னர் மனப்பாடம் ஆன பகுதிவரை எல்லா மாணவர்களும் ராகத்தோடு சொல்லுவோம். புதிய 10, 20 வரிகளை அவர் மாதம் தோறும் துவங்குவார். எனக்கு நினைவு தெரிந்தவரை எல்லா முக்கிய சப்தங்களையும் , 200 அமர கோச வரிகளையும் சொல்லி வந்தேன். பின்னர் 20 ஆண்டுகளுக்கு முன்னர்,   லண்டனில் நேஷனல் லாட்டரியிலிருந்து (National Lottery Funding) 5000 பவுண்டு உதவி நிதி பெற்று சம்ஸ்க்ருத வகுப்புகளை நடத்தினேன். பத்துப் பேர்தான் வந்தனர்!!! அதற்குப்பின்னர் லணடன் ஹென்டனில் உள்ள சின்மயா மிஷனில் சம்ஸ்க்ருதம் கற்றேன் . எல்லாம் ஒரு கட்டத்தில் தடைப்பட்டது. கடலில் நீந்தப் போனேன்; ஆனால் கடற்கரையை மட்டும் பார்த்துவிட்டு வியந்து போய் நிற்கிறேன். அது மஹா சமுத்திரம் என்பது உண்மையே. அதைச் சொன்ன பாமஹர் வாழ்க !!

XXXX

–சுபம்—

Tags-  இலக்கணம், சமாசம் , ராஜ சேகரர், வாமனர், பாமஹர் , க்ஷேமேந்திரர் , பாணினி , ஹேம சந்திரர் , கவிதை , வியாகரணம்

HOW CAN YOU WIN GOD BY WORDS? (Post No.11,124)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 11,124

Date uploaded in London – 21 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞானமொழிகள்– 100

A signboard outside a restaurant read

“Eat as much as you can,

your grand children will pay the Bill”.

A man entered the restaurant and ate as he could, got a toothpick and was relaxing.

The waiter gave him the bill.

He laughed and pointed to the signboard, “don’t you see, only my grandchildren will pay” !

The waiter politely replied, ” Sir, This is not your bill, it’s your grandfather’s bill”……..

The man fainted….

Xxx

AND GOD SAID ……………………..

I asked God “to please keep all my Friends and Family happy all the time.”

☺ God said: OK, but only for 4 days! Now you select that 4 days!

😊 I said “OK”

🌞” summer day “

❄ “winter day “

☔ ” rainy day ” and

🌺 ” spring day “

😯 God got confused and said, no you can select only 3 days.

😊 I said “OK”

❌ ” yesterday “

✅ ” today “

❓ ” tomorrow “

__________________

😯 God got confused and said, NO, you can select only 2 days,

😊 I said “OK”

💖 ” current day AND

❓ ” the next day “

__________________

😯God again got confused and said, NO, NO you can select only☝ *one* day!!

😊 ” I said “OK”

🌞” EVERYDAY “

__________________

God started laughing and said 🆒🙏“OK, all your friends and family will be happy at all times”. 😊😆😛

XXX SUBHAM XXX

ஞானமொழிகள்- 100

மேதை ஆக ஏழு படிகள்! (Post No.11,123)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,123

Date uploaded in London – –    20 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

மேதை ஆக ஏழு படிகள்!

ச.நாகராஜன்

உலகின் மிகப் புகழ் பெற்ற கலைஞர் லியனார்டோ டா வின்சி இத்தாலி நாட்டில் வின்சி என்ற நகரில் பிறந்தவர். அவரைப் பற்றிக் கேள்விப்படாதவர் இருக்க முடியாது. (தோற்றம் 1452, ஏப்ரல் 15, மறைவு : 1519, மே, 2).

அவர் ஒரு பல்துறை நிபுணர். ஓவியர், சிற்பி. கட்டிடக் கலைஞர், உடல்கூறு இயல் நிபுணர், கணித மேதை, பல கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்த கண்டுபிடிப்பாளர், ஒரு விஞ்ஞானி, வானவியல் நிபுணர், தாவர இயல் நிபுணர். வரலாற்று ஆசிரியர், எழுத்தாளர், இசைக் கலைஞர் என்று இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

அவரது மோனா லிஸா, கடைசி விருந்து ஆகிய ஓவியங்கள் காலத்தை வென்றவை.

அவரது பெருமை காலம் செல்லச் செல்ல கூடிக் கொண்டே போகிறது.

அனைவரும் மேதையாக ஆக அவர் ஏழு படிகளைக் காட்டியுள்ளார்.

அந்தப் படிகளில் ஏறினால் மேதைத் தன்மை என்ற உச்சியை அடையலாம்.

அவற்றைச் சுருக்கமாகக் கீழே காணலாம்.

  • CURIOSITÀ (CURIOSITY) –  எதையும் அறிய வேண்டும் என்னும் ஆர்வம்
  • DIMONSTRATZIONE (INDEPENDENT THINKING) – சுதந்திரமாக எண்ணுதல்
  • SENSAZIONE (REFINE YOUR SENSES) – புலன்களைக் கூர்மையாக்கல்
  • SFUMATO (EMBRACE UNCERTAINTY) – நிலையற்ற தன்மையை ஏற்றுக் கொள்ளல்
  • ARTE/SCIENZA (ART & SCIENCE, WHOLE-BRAIN THINKING) – கலை, அறிவியல் மற்றும் முழு மூளை ஆற்றலைப் பயன்படுத்தல்
  • CORPORALITA (MIND-BODY CARE) –  உடல் மனம் ஆகியவற்றைப் பேணல்
  • CONNESSIONE (INTERCONNECTEDNESS) – ஒருங்கிணைந்த தன்மை

எதையும் அறிய வேண்டும் என்னும் ஆர்வம்

மனிதனாகப் பிறந்தவன் இறக்கும் வரை தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். இதற்கு எதைப் பற்றியும் அறிய வேண்டும் என்ற தணியாத ஆர்வம் இன்றியமையாதது. இந்த ஒரு குணத்தாலேயே உலகின் ஆகப் பெரும் மேதைகள் உலகோரால் புகழப் படும் அரிய சாதனைகளைச் செய்துள்ளனர். சில கேள்விகளைக் கேட்டு இந்த அரிய குணத்தை வளர்த்துக் கொள்ளலாம். ஏன் இப்படி இருக்கிறது? இது இல்லாமல் இன்னொரு விதம் இருக்க முடியுமா? அது எப்படி? என்பன போன்ற ஆர்வம் உந்தும் கேள்விகள் அவற்றிற்கான விடைகளைக் காண வழி வகுக்கும்.

சுதந்திரமாக எண்ணுதல்

கருத்துக்கள் பல மனதில் உதிக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாக சோதனை செய்து பார்த்து அனுபவித்து உண்மையைக் காண வேண்டும்.

இது இப்படி இருக்குமானால்…. பின்னர்…. என்று இப்படி ஒவ்வொன்றைப் பற்றியும் சிந்தித்துப் பழகலாம்.

 புலன்களைக் கூர்மையாக்கல்

ஐம்புலன்களையும் கூர்மையாக எப்போதும் வைத்திருந்தால் அது தானாகவே மேதைத் தன்மையை உருவாக்கும்.

கண்களால் பார்க்கும் காட்சியை வர்ணித்தல், காதுகளால் கேட்கும் கீதத்தில் லயித்தல், பூவின் நறுமணத்தில் மெய்மறத்தல், தோலின் தொடும் உணர்ச்சி மூலம் இன்பம் அடைதல், உணவை ரசித்து ருசித்து உண்ணல் என்று இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நிகழ் காலத்தில் வாழ்ந்து புலன்கள் தரும் உணர்வை உணர்வு பூர்வமாக அறிய ஆரம்பித்தால் மேதைத் தன்மை தானே மிளிரும்.

நிலையற்ற தன்மையை ஏற்றுக் கொள்ளல்

உலகில் நாம் பார்க்கும் பல விஷயங்களிலும் இருக்கும் நிலையற்ற தன்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு கொள்கை பற்றி இரு விதமான ஒன்றுக்கொன்று எதிரான நிலைகள், முரண்பாடுகள் இவற்றை சற்று உற்றுக் கவனித்தால் வாழ்க்கையின் நிலையை நன்கு புரிந்து கொள்ளலாம்.

கலை, அறிவியல் மற்றும் முழு மூளை ஆற்றலைப் பயன்படுத்தல்

மனித மூளை அதிசயமான ஒன்று. அதை முழுதுமாகப் பயன்படுத்த முயல வேண்டும். கலை, அறிவியல், தர்க்கம், மனக் கண்ணில் பார்த்தல், கற்பனை என இப்படி நூற்றுக் கணக்கான வழிகளில் நமது மூளை இயங்க முடியும். உள்ளுணர்வு ஒரு புறம் இருக்க, ஒவ்வொன்றைப் பற்றிய நுணுக்கமான விவரங்களை அறிய ஆர்வம் கொண்டிருந்தால், மூளை ஆற்றலை  முழுமையாகப் பயன்படுத்தினால், மேதைத் தன்மை தானே ஒளிரும்.

உடல் மனம் ஆகியவற்றைப் பேணல்

மனம், உடல் ஆகிய இரண்டையும் பேணுதல் ஆரோக்கியமான வாழ்வையும் ஆரோக்கியமான சிந்தனை ஆற்றலையும் நல்கும். யோகா போன்ற மனப்பயிற்சி மற்றும் உடல்பயிற்சி தரும் கலையை நன்கு கற்று நம்மை நாமே பேணிக் காத்துக் கொண்டால் வாழ்நாளில் பல சாதனைகளைச் சாதிக்க முடியும் அல்லவா?

ஒருங்கிணைந்த தன்மை

ஏராளமான விஷயங்களைப் படிக்கிறோம். பலருடன் பழகுகிறோம். பல இடங்களில் பல காட்சிகளைக் காண்கிறோம். இவற்றை எல்லாம் இணைக்கும் ஏதோ ஒன்று இருக்கிறதே. அந்த ஒருங்கிணைந்த தன்மையை அவ்வப்பொழுது சிந்தித்து அதிலிருந்து உண்மைகளைப் பெற வேண்டும்.  இந்த இணையும் தன்மையால் தானே பிரபஞ்சமே இயங்குகிறது!

இப்படி இந்த ஏழு படிகளை முன்னேறுவதற்காக வகுத்தார் லியனார்டோ டாவின்சி.

அதன் மூலம் அவர் முன்னேறினார்.

பெரும் மேதையாக ஆனார்.

அவர் சுட்டிக் காட்டும் படிகளில் ஒவ்வொன்றாக ஏறினால் அனைவரும் மேதையாக ஆகலாம்.

ஐயமில்லை!

***

tailed with post on 20th july 2022

புத்தக அறிமுகம் – 4

உலக வலத்தில் ஒன்பது நாடுகள்!

ச.நாகராஜன்

பொருளடக்கம்

என்னுரை

அத்தியாயங்கள்

1. பூலோக சொர்க்கம் ஸ்விட்ஸர்லாந்து!

2. சூரியன் முதலில் உதிக்கும் நாடு!

3. அனுபவித்து மகிழ அமெரிக்க நகரங்கள்!

4. லேக் டாஹோ, டைம் ஸ்குயர், க்ராண்ட் கான்யான் – அமெரிக்க டூர்!

5. அந்தமானைப் பாருங்கள் அழகு!

6. வெல்ல முடியாத நகரம் லண்டன்!

7. உலகின் தூய்மைத் தலை நகரம் சிங்கப்பூர்!

8. குழந்தைகள் விரும்பும் நாடு, பெல்ஜியம்!

9. பொன் கொண்டு இழைத்த மாட மாளிகை ஸ்ரீ லங்கா

10. உலகின் உயரமான நாடு – நேபாளம்!

11. அலோஹா, ஹவாய், அலோஹா!

முடிவுரை

நூலில் எனது உரையாகத் தந்திருப்பது இது:

என்னுரை

நீங்கள் எந்த நாடுகளுக்கு எல்லாம் போயிருக்கிறீர்கள், ஒரு பத்துப் பதினோரு வாரங்கள் எழுதுங்களேன், கொரானா பிடியிலிருந்து விடுபட்டு மக்கள் நல்ல இடங்களுக்குப் பயணம் மேற்கொள்ள ஆவலாய் இருக்கிறார்கள் என்று மாலைமலர் சி.இ.ஓ திரு ரவீந்திரன் அவர்கள் போனில் கூற, சிரமேற்கொண்டு அந்தப் பணியில் ஈடுபட்டேன்.

ஸ்விட்ஸர்லாந்து, ஜப்பான், அந்தமான் (இந்தியா), அமெரிக்கா, சிங்கப்பூர், பெல்ஜியம், ஶ்ரீலங்கா, லண்டன் (இங்கிலாந்து), நேபாளம் ஆகிய நாடுகளின் அழகிய இடங்களையும், காட்சிகளையும், வரலாறையும் சற்று விளக்க முடிந்தது.

இந்தக் கட்டுரைகள் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் 22-3-2022இல் ஆரம்பித்து 31-5-2022 முடிய மாலமலர் இதழில் வெளிவந்தன.

இந்த நல் வாய்ப்பை அளித்த திரு பாலசுப்ரமண்யன் ஆதித்தன் அவர்களுக்கும், திரு ரவீந்திரன் அவர்களுக்கும், வாசகர்கள் எதை 

எதிர்பார்க்கிறார்கள் என்பதைக் கூறி என்னை ஊக்குவித்த திரு வசந்த்ராஜ் உள்ளிட்ட மாலைமலர் ஆசிரியக் குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

கட்டுரைகளைப் படித்து உடனுக்குடன் இன்னும் தொடர ஊக்குவித்த அனைத்து வாசகப் பெருமக்களுக்கும் எனது நன்றி.

இந்தக் கட்டுரைகளை நூலாக வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

எங்கு பயணம் மேற்கொண்டாலும் உங்கள் பயணம் சிறப்பாக அமைய எமது உளங் கனிந்த வாழ்த்துக்கள்!

சான்பிரான்ஸிஸ்கோ.                                                                      ச.நாகராஜன்
1-6-2022

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

***

Tags– மேதை, ஏழு படிகள்!

இலக்கணம் ஒரு கடல்; அதில் முதலைகள் உண்டு (Post No.11,122)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,122

Date uploaded in London – –    20 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

இலக்கணம் பற்றி புலவர்கள் கருத்து

இலக்கியமின்றி யிலக்கணமின்றே

எள்ளின்றாயினெண் ணெயுமின்றே

எள்ளின் றெண்ணெயெடுப்பது போல

இலக்கிட்யத்தினின்றே பருமிலக்கணம்

 “ இலக்கியம் இல்லாமல் இலக்கணம் வராது ; எள் இல்லாமல் எண்ணெய் இல்லை என்பது போல.

எள்ளிலிருந்து எண்ணெய் எடுப்பது போல இலக்கியத்திலிருந்து இலக்கண ம் உண்டாகிறது” – பேரகத்தியம்

இலக்கியம்தான் முதலில் வந்தது. இலக்கணம் அதன் பின்னரே எழுந்தது. அப்படியானால் முதலில் எழுதியோர் இலக்கணமில்லாமல் எழுதினரா? ஆமாம் அப்படித்தான். பின்னர் இதைப் பார்த்து இதிலுள்ள பொதுவான அம்சங்களை வைத்து இலக்கணம் எழுதினர். அதற்குப் பின் வந்தவர்கள் அதைப் பார்த்து, அதில் எல்லோரும் பின்பற்றிய விதிகளை வைத்து இலக்கணம் கற்பித்தனர். அதை ஒட்டி எல்லோரும் பிற்காலத்தில் எழுதினர்.

இந்தக் கருத்து சம்ஸ்கிருதத்திலும் உளது. மேலும் இலக்கணம், இலக்கியம் என்பன லக்ஷணம், லக்ஷ்யம் என்னும் சம்ஸ்கிருதச் சொற்களில் இருந்து பிறந்தவை!

உலகிலேயே இலக்கணத்துக்கு அதிக பெருமை சேர்த்தவர் இந்துக்களே. இப்போதுள்ள இலக்கண நூல்களில் உலகிலேயே  பழைய புஸ்தகம்  பாணினி எழுதிய அஷ்டாத்யாயீ என்னும் நூலாகும். இது 2700 ஆண்டுக்கு முந்தியது. அவர்க்கு முன்னர் வாழ்ந்த 64 இலக்கண கர்த்தாக்கள் பெயர்களும் நமக்கு கிடைக்கின்றன

வேதபாட சாலைகளில் வேதம் பயில்வோருக்கு ஆறு துணைப்பாடங்களைக் கற்பிக்கின்றனர். அவற்றில் ஒன்று வியாகரணம் ; தமிழில் இலக்கணம் என்போம்.

வேத மாதாவின் வாய் (முகம்) இலக்கணம் (வியாகரணம்) .

இது பற்றிய விளக்கமான உரை, காஞ்சி பரமாசார்ய சுவாமிகளின்  தெய்வத்தின் குரலில் உள்ளது

2000 ஆண்டுகளுக்கு முன்னர் சம்ஸ்க்ருதத்தில் பரத முனிவர் ஸம்ஸ்க்ருதத்தில் பரத நாட்டிய சாஸ்திரத்தை எழுதினார். அவர் சொல்கிறார் :_

“எல்லா சாஸ்திரங்களிலும் சொற்கள் உள்ளன. அவற்றின் குறிக்கோள் ஒரு விஷயத்தைத் தெரிவிப்பதுதான் .ஆகையால் மனிதனின் பேச்சை  விட உயர்ந்தது எதுவுமில்லை. பேச்சுதான் எல்லாவற்றுக்கும் காரணமாக அமைகிறது” .

அவர் எழுதிய ஸ்லோகம்

வான்மயானீஹ  சாஸ்த்ராணி

வாணீஸ்தானி  ததைவ  ச

தஸ்மாத் வாசஹ  பரம் நாஸ்தி

வாக்கி ஸர்வஸ்ய காரணம்

நாட்யசாஸ்த்ர  15-3

அவருக்குப் பின்னர் வந்த தண்டி என்ற புலவர் பாடுகிறார் –

“எல்லா மக்களும் பேச்சு என்பதன் அருளால் தான் உலக நடப்புகளைச்  செய்கின்றனர் . அது உயர்ந்தோர் பலர் இயற்றிய இலக்கணத்தை ஒட்டி அமைகிறது “.

இதோ அவருடைய ஸ்லோகம் :–

இஹ சிஷ்டானுசி ஷ்டாநாம்

சிஷ்டாநாம் அபி ஸ ர்வதா

வாச்சாமேவ பிரசாதேன

லோகயாத்ரா ப்ரவர்த்ததே 

காவ்யாதர்ச , பாடல் 13

அவரே மேலும் அழுத்தம் திருத்தமாக , மிகவும் அழகாகச் சொல்கிறார் :

“சப்தம்/ஒலி Sound என்னும் ஒளி Light இந்த மக்கள் படைப்பை வெளிச்சம் போட்டுக் காட்டியிராவிடில் மூன்று உலகங்களும் இருள் என்னும் அந்தகாரத்தில் மூழ்கிப் போயிருக்கும்”.

இதம் அந்தம் தமஹ கிருஷ்ணம்

ஜாயேத புவனத்ரயம்

யதி ச ப்தாஹ்வண்யம்  ஜ்யோதிர்

ஆஸம்ஸாரா ன்ன தீப்யதே

காவ்யாதர்ச , பாடல் 14

உலகில் இந்துக்கள் போட்ட பாட திட்டம் (Syllabus) போல எங்குமே காணமுடியாது. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாத்ஸ்யாயன மகரிஷி எழுதிய காம சூத்திரத்தில் பெண்கள் கற்கவேண்டிய 64 சப்ஜெக்ட்டு Subjects களை ஆய கலைகள் 64 என்று ஸம்ஸ்க்ருதத்தில் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார். அவற்றைத் தமிழ்ப் புலவர்களும் அப்படியே ஏற்றனர். அந்த 64 கலைகளில் இலக்கணமும் ஒன்று. உலகில் வேறு எந்த நாகரீகமும் இப்படி பாடதிட்டம் வகுத்தது இல்லை.

பாமஹ என்னும் கவிஞர் எழுதிய காவ்யாலங்கார நூலில் செப்புகிறார் :

சப்தஸ் சந்தோ பிதானா ர்த்தா

இதிஹாசஸ் ரயஹ கதாஹ

லோகாயுக்தி கலாஸ்சேதி

மந்தவ்யாஹ  காவ்யாகைர்வாசி

காவ்யாலங்கார 1-9

“சப்த என்னும் சொல்லால் இலக்கணத்தைக் குறிப்பிடுகிறார் பாமஹர் .கவிதை என்னும் துறை வளர காரணமாய் விளங்குவது ஸப்த /இலக்கணம் ஆகும். கவிதை வளரத் தேவைப்படும் பல பாடங்களில் இலக்கணமே முதலிடம் வகிக்கிறது”  என்கிறார் .

கவிதை எழுத விரும்புவோர் உடனே இலக்கணம் கற்பது இன்றியமையாதது என்று காவ்யாலங்கார நூலின் ஆறாவது அத்தியாயத்தில் முதல் நான்கு பாடல்களில் பாமஹர் நுவல்கிறார்.

4 பாடல்களின் பொருள் இதோ :-

இலக்கணம் என்பது பெரிய கடல் ; அதை நீந்திக்கடக்காத வரை சொற்களை வைத்து நகைகள்/ அணிகள் செய்ய இயலாது. அந்தக் கடலில் உள்ள தண்ணீர் சூத்திரங்கள் ஆகும்; சொற்கள் என்பன நீர்ச் சுழல் போன்றவை  .மனப்பாடம் செய்து, தக்க வைக்கும், நினைவாற்றல் கடற்படுகை ஆகும். உணாதி கணங்களும் தாது பாடமும் முதலைகள்; கவனமும் புரிதலும் பெரிய கப்பல்கள். இப்பேற்பட்ட கடலின் கரை படிப்பாளிகளுக்கு மட்டுமே தெரியும். அடி மக்குகளோ இதைப் புறக்கணிப்பர் ; மற்ற  சாஸ்திரங்களை யானை போல அனுபவிப்பர். பாடல்களை இயற்ற விரும்புவோர் நேரடியாக இலக்கணத்தைக் கற்க வேண்டும் மற்றவர்களின் பலத்தைச் சார்ந்து நிற்கக் கூடாது.”

சூத்ராம் பஸாம் பதாவர்தம்

பாராயண ரசாதலாம்

தாதூணாதி கண க்ராஹம்

த்யான க்ரஹ ப்ருஹத் ப்லவாம்

தீரைர் ஆலோகித ப்ராந்தம்

அமெதோபிர் அஸூயிதாம்

சதோபபுக்தம்  ஸர்வாபிர்

அந்யவித்யாகரேனுபிஹ க

நா பாரயித்வா  துர்கதாம்

அ மும் வ்யாகரணார்ணவாம்

சப்த ரத்னம் ஸ்வயம் கம்யம்

அலங்கர்து மாயம் ஜன ஹ

தஸ்ய சா திகமே யத்னஹ

கார் யஹ காவ்யம்  விதித்ஸதா 

பர ப்ரத்ய யதோ யத்து

க்ரியதே தேன  கா ரதிஹி

–காவ்யாலங்கார 6-1/4

SOURCE BOOK- Paniniyan Influence on Sanskrit Poetics, Shrutidhara Chakravarty, Pratibha Prakashan, Delhi, 2008 (with my inputs)

தொடரும் …………………………………………………………


இலக்கியமின்றி இலக்கணமின்றே! இந்திய …

https://tamilandvedas.com › இலக்…

26 Jul 2016 — (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). agastya-in-london. Agastya in London V and A Museum.

—Subham —-

TAGS– இலக்கணம் ,புலவர்கள் கருத்து, கடல்,  முதலைகள்

ஞான சீன மொழிகள்-99 (Post No.11,121)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 11,121

Date uploaded in London – 20 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

சீனாவின் பெரும் தொழிலதிபரான செல்வந்தர் “ஜாக் மா” கூறுகிறார்:-

நீங்கள் குரங்கின் முன்னால் வாழைப்பழங்கள் மற்றும் நிறைய பணம் வைத்தால், குரங்கு வாழைப்பழத்தை தான் எடுக்கும், பணத்தை அல்ல.ஏனென்றால் அந்த பணத்தால் நிறைய வாழைப்பழங்கள் வாங்க முடியும் என்பது அந்த குரங்குக்கு தெரியாது.

அதேபோல், உண்மையில் இன்று இந்திய மக்கள் தங்கள் தனிப்பட்ட சுயநலன்களை நிறைவேற்றவும், தேசிய பாதுகாப்புக்கும் இடையே தேர்வு செய்யவும் கேட்டால், அவர்கள் தங்கள் தனிப்பட்ட சுயநலன்களை தான் தேர்வு செய்வார்கள். தேசம் பாதுகாப்பாக இல்லை என்றால் அவர்களின் தனிப்பட்ட நலன்களின் மூட்டையை எங்கே கொண்டு செல்வார்கள் என்பதை அவர்களால் புரிந்துக் கொள்ள முடியாது.

இந்த நாட்களில் இந்தியாவில் இதுபோல பல முரண்பாடான போக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன :-ஜாக்மா

————————————-

சீனா தொழிலதிபர் ஜாக்மா இந்தியாவை பற்றி சொன்னது நூறு சதவீதம் உண்மை.

#முதல்:-

இந்தியா ஒரு ஏழை நாடு எனவே புல்லட் ரயில் தேவையில்லை.

ஆனால்,

மில்லியன் கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து பல ஆண்டுகளாக உபசரித்துவரும் அளவுக்கு இந்தியா பணக்கார நாடு!

#இரண்டாவது:-

வக்ஃபு வாரியம் மற்றும் கிருஸ்தவ சபைகள் சார்பாக வாதிட நாட்டின் மிக விலையுயர்ந்த ஐம்பத்தாறு வழக்கறிஞர்கள். ஆனால், கோயில்கள் சார்பில் வாதிட வக்கீல் பராசரன் மற்றும் சுப்பிரமணிய சுவாமி என இருவர் மட்டுமே !!

#மூன்றாவது:-

நாட்டில் ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு உள்ளது.

ஆனால், பெருகிவரும் மக்கள் தொகைக்கு எதிரான போராட்டத்தை எப்போதாவது பார்த்தீர்களா ???

#நான்காவது :-*

நகைச்சுவை.

என்னவென்றால்,

2 குழந்தைகளை மட்டுமே கொண்டவர்கள் வரி செலுத்துகிறார்கள்.

ஆனால், மானாவாரியாக 7-8 குழந்தைகளைக் கொண்டவர்கள் மதத்தின் பெயரால் சிறுபான்மை என காட்டி மானியங்களை எடுத்துக்கொள்கிறார்கள் !!!!

மேற்கூறிய விஷயங்களை நீங்கள் விரும்பாமல் இருக்கலாம், ஆனால், இது நிச்சயமாக கருத்தில் கொள்ளத்தக்கது !!!

“இன்னும் ஒரு உண்மை”

இந்தியா பெரியது … ஹீரோக்களின் சுரங்கம். இன்னும் நம் மீது படையெடுத்து வந்த முகலாயர்களின்,பிரிட்டிஷாரின் அடிமை புத்திகள் ….. ஏன் ??

“ஏனெனில்..,

“ஒரு இந்து மன்னர் தன் தனிப்பட்ட எதிர்ப்பின் காரணமாக மற்றொரு இந்து அரசனிடமிருந்து விலகி முகலாயர்களை , பிரிட்டிஷாரை ஆதரிப்பதில் உறுதியாக இருந்தார்கள்”.

உதாரணமாக,14-ஆம் நூற்றாண்டில் சகோதரர்கள் சுந்தர பாண்டியனுக்கும் வீரபாண்டியனுக்கும் இடையே இருந்த பங்காளி சண்டையில் வீர பாண்டியனை வீழ்த்த அவரது சகோதரர் சுந்தர பாண்டியன் முகலாய சுல்தான் மாலிக்காபூரை ஆதரித்தார்.அதன் விளைவு பாண்டிய சாம்ராஜ்யமே அதோடு முடிவுக்கு வந்து முகலாயர்களால் மதுரை கைப்பற்றப்பட்டு பல ஆயிரம் கோயில்கள் இடிக்கப்பட்டு இந்துக்களின் இரத்த வெள்ளத்தில் தமிழர் பூமியே நரக பூமியானது.

இன்றும் அதே நிலைதான்.மோடி இந்துத்துவாவை ஆதரிக்கிறார்.

ஆனால் அந்நிய சித்தாந்தங்களால் குழப்பமடைந்த இந்துக்கள் சிலர் இந்துத்துவாவை எதிர்ப்பதில் உறுதியாக இருக்கிறார்கள் .. !!!!

Xxx subham xxx

Tags-  ஜாக்மா, சீனா, சீன மொழிகள்

ஜீனியஸாக ஆக ரைகாவ் எஃபெக்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! (Post No.11,120)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,120

Date uploaded in London – –    20 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஜீனியஸாக ஆக ரைகாவ் எஃபெக்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்!

ச.நாகராஜன்

தனக்கு ஆர்வமுள்ள துறையில் பிரகாசிக்க முடியவில்லையே என்ற கவலை பலருக்கு; ஜீனியஸாக ஆக முடியவில்லையே என்ற கவலை சிலருக்கு!

ஏதேனும் வழி இருக்கிறதா, எண்ணியதை அடைய?

இருக்கிறது என்கிறார் விஞ்ஞானி ரைகாவ்!

இவரது ஆய்வு ‘ரைகாவ் எஃபெக்ட்’ என்று அழைக்கப்படுகிறது.

டாக்டர் விளாடிமிர் ரைகாவ் என்பவர் ஒரு ரஷிய விஞ்ஞானி. மூளையியல் நிபுணர். (Dr Vladimir Raikov – Neuropshychologist)

ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளில் மூளை பற்றிய ஒரு ஆய்வை அவர் மேற்கொண்டார்.

தனது ஆய்விற்காக அவர் சில கல்லூரி மாணவர்களை அழைத்தார்.

அவர்களை ஆழ்ந்த ஹிப்நாடிஸ நிலையில் கொண்டு சென்று அவர்கள் உண்மையிலேயே மிகப் பெரிய ஜீனியஸ் என்று நம்புமாறு செய்தார்.

விளைவு அவர்கள் அப்படியே ஆனார்கள்.

இவர்களில் ஒரு பெண்மணி இருந்தார். அவர் வண்ண ஓவியங்கள் தீட்டுவதில் வல்லவர் என்பதை அவர் நம்பும்படி செய்யவே அவர் அற்புதமான ஓவியங்களைப் படைக்க ஆரம்பித்தார்.

ரைகாவ் கூறும் அடிப்படை வழிமுறைகள் இவை:

ஹிப்நாடிஸம் மூலமாக ஆழ்ந்த உறக்கத்திற்கு ஒருவரைக் கொண்டு சென்று தான் எதுவாக ஆக விரும்புகிறாரோ அதை நம்பச் செய்வது முதல் வழி. (Hypnosis and Deep trance)

இரண்டாவது பூரண ஓய்வான நிலை அடைதல். (Relaxation)

தான் நினைத்ததை அடைய பூரண ஓய்வான நிலையை ஒருவர் அடைய வேண்டும். அதற்கு சில சுவாசப் பயிற்சி  முறைகள் உண்டு. மிக அமைதியான சூழ்நிலையில் வெளி உலக தொந்தரவு இல்லாமல் ஒருவர் இருக்க வேண்டும்.

அடுத்து அகக்கண்ணில் காணல் (Visualization)

ஆழ்ந்த ஓய்வான நிலையில் தனது ஆதர்சமான ஒருவரை ஒருவர் அகக்கண்ணில் பார்க்க வேண்டும். அது மொஜார்ட்டாக இருக்கலாம் அல்லது அவரது துறையில் மிக வல்லவராக இருக்கலாம். அவரை ஆழ்மனதில் நினைக்க ஆரம்பிக்கவே அவரது நடை உடை பாவனைகள் திறமைகள் அனைத்தும் வர ஆரம்பிக்கும்.

அடுத்து யோசனை கூறல் (Suggestion)

தனக்குத் தானே யோசனை கூறல் அடுத்த வழி. யோசனைகள் மூலம் வலுவான எண்ணங்களை உருவாக்க முடியும். அது நிபுணராக ஆக வழி வகுக்கும்.

ஆக்கபூர்வமாக எண்ணல் (Positive Thinking)

அடுத்து பாஸிடிவ் திங்கிங்  எனப்படும் ஆக்கபூர்வமான அணுகுமுறையும் எண்ணும் மனப்பான்மையும் ஜீனியஸாக ஆவதற்கான முக்கியமான வழிமுறையாகும். திட்டமிட்டபடி தனது நிலையை உயர்த்த அது சம்பந்தமான ஆக்க பூர்வமான அணுகுமுறை பற்றி எண்ணி தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும்.

நம்பிக்கை. (Belief)

தான் நினைத்த நிலையை அடைந்து விட்டதாகவே உறுதியாக நம்புதல் முக்கியமான ஒன்று. இதையும் பயிற்சி செய்து விட்டால் நிஜமாகவே ஒரு ஜீனியஸ் ஆகி விடலாம்.

இறுதியாக மாடலிங்  (Modeling).

தான் எப்படி ஆக வேண்டுமென்று நினைக்கிறாரோ அப்படியே ஆனதாக நினைத்து நடை உடை பாவனைகளை மேற்கொள்ளல்.

இந்த வழிமுறைகளை இதைப் பற்றிச் சிறிதும் நம்பாதவர்களுக்கும் ரைகாவ் சொல்லிக் கொடுத்தார்; பயிற்றுவித்தார்.

விளைவு அபாரமாக இருந்தது!

அனைவரும் ரைகாவின் நடைமுறைகளைத் தெரிந்து கொண்டு அதை ரைகாவ் எஃபெக்ட் என அழைக்க ஆரம்பித்தனர்.

இப்போது உளவியலாளர்கள் இதில் சில மாற்றங்களைச் செய்து அனவைருக்கும் பயிற்றுவிக்கின்றனர்.

சுய முன்னேற்றத்தை ஊக்குவித்துக் கற்றுத் தரும் பயிற்சியாளர்கள் இந்த அடிப்படையில் தமது பயிற்சி வகுப்புகளை அமைத்துக் கொண்டிருக்கின்றனர்.

நாமும் ஜீனியஸ் ஆக ஒரு வழி : – ரைகாவ் எஃபெக்ட்!

ரைகாவ் எஃபெக்ட் மூலமாக எதை எதை அடையலாம் என்பதற்கு ஒரு பட்டியலே இருக்கிறது.

தன்னம்பிக்கையைக் கூட்டிக் கொள்ளலாம்.

உடல் எடையைக் குறைத்துக் கொள்ளலாம்.

நினைவாற்றலைக் கூட்டிக் கொள்ளலாம்.

படைப்பாற்றலை அதிகரிக்கலாம்.

புது திறமை ஒன்றை தெரிந்து கொண்டு, வளர்த்துக் கொள்ளலாம்.

ஆக்க பூர்வமான அணுகு முறையை எதிலும் மேற்கொள்ளலாம்.

எதிர்மறை எண்ணங்களை அறவே அகற்றலாம்.

அன்றாட வாழ்வில் நிம்மதி, மகிழ்ச்சி, திருப்தி நிலையை அடையலாம்.

ஆளுமைத் திறனைக் கூட்டலாம்.

கவலையை ஒழிக்கலாம்.

கவனத் திறனைக் கூட்டிக் கொள்ளலாம்.

சுய மரியாதையை அதிகரித்துக் கொள்ளலாம்.

ஒழுக்கம், கட்டுப்பாடு கொண்ட உயர் வாழ்வை அமைக்கலாம்.

நிதி நிலையில் மேம்படலாம்.

மொத்தத்தில் செயல் திறனை அதிகரித்து வெற்றியாளராகத் திகழலாம்.

***

tags-  ரைகாவ் எஃபெக்ட் ,

புத்தக அறிமுகம் – 3

நடந்தவை தான் நம்புங்கள்

(சிரிக்கவும், சிந்திக்கவும்)

ச.நாகராஜன்

பொருளடக்கம்

முன்னுரை

அத்தியாயங்கள்

  1. நடந்தவை தான் நம்புங்கள்! – 1                                1. கண்பார்வையற்றவரின் த்ரில்!                              2. ஒரு டி.வி.வேண்டுமே!                                       3. ஒரு ஆட்டிற்கு இவ்வளவு தீனியா?
  2. நடந்தவை தான் நம்புங்கள்!  – 2                              1. இரண்டு எதிர்மறை பதங்கள்                               2. வேலைக்கான அனுபவம்
  3. நடந்தவை தான் நம்புங்கள்! – 3                               1) 24 எழுத்தில் பதில்!                                          2) பார்வை இருந்தும் பார்க்காதவர்கள்                       3) பிகாஸோவின் ஓவியங்கள்
  4. நடந்தவை தான் நம்புங்கள்!  – 4                              1) கடவுளைக் காட்டு!                                           2) ஷூர்                                                          3) வக்கீலின் தவறும் டாக்டரின் தவறும்
  5. நடந்தவை தான் நம்புங்கள்!  – 5                               1) தோல்வி அடைந்த சர்வே!                                  2) அரசியல்வாதி யார்?                                         3) நரகம் பற்றிய விளக்கம்
  6. நடந்தவை தான் நம்புங்கள்! – 6                               1) அவ்விடத்து ஞானம்!                                        2) பயிற்சியின் மகிமை!                                        3) ஒரு கம்பி வயலினில் வாசிப்பு!
  7. நடந்தவை தான் நம்புங்கள்! – 7                               1) இரண்டு அருமையான மகன்கள்!                           2) அரைகுறை ஆங்கிலம் தெரிந்த போலிஷ்காரர்!
  8. நடந்தவை தான் நம்புங்கள்! – 8                               1) சந்தைக்குச் சென்ற சாக்ரடீஸ்                              2) உண்மையான காதலன்                                     3) அட, எருமையே!
  9. நடந்தவை தான் நம்புங்கள்! – 9                               1) அம்மாவை விட அதிகம் வயதான பெண்                 2) மிஷனரியை “வச்சு வாங்கிய” ஐயர்
  10. நடந்தவை தான் நம்புங்கள்! – 10                               1) தாடியின் நீளத்திற்குத் தக அறிவு!                              2) காலைப் பார்; பேரைச் சொல்லு!                              3) முகம் கழுவ ஒரு டாலர்: முடி வெட்டவும் அதே டாலர்!                                                     4) குதிரையும் கழுதையும்                                      5) கடவுள் கூட எட்டாத நிலை!
  11. நடந்தவை தான் நம்புங்கள்! – 11                               1) மாமியாரைக் கொன்று விட்டேன்!                           2) கிளியின் வயது என்ன?                                     3) கரைசலில் காசு கரையுமா?
  12. நடந்தவை தான் நம்புங்கள்! – 12                                1) கடவுளும் காமன்வெல்த்தும்                                2) பயிற்சி மாஹாத்மியம்!                                       3) வருத்தப்பட்டது உண்மை, ஆனால்…!                       4) யார் போக்கிரி?!
  13. நடந்தவை தான் நம்புங்கள்! -13                          மூன்று அம்மாக்கள்                                            1) ஜாக் வெல்ச்                                                  2) தாமஸ் ஆல்வா எடிஸன்                                   3) மணலில் விழுந்த பையன்
  14. நடந்தவை தான் நம்புங்கள்! – 14                        மூன்று விளையாட்டு வீரர்கள்                                 1) நீ பாதி; நான் பாதி, நண்பா!                                 2) 19 ஒலிம்பிக் மெடல் வென்ற ‘கவனக்குறைவு வியாதி’ கொண்ட வீரர்!                                                  3) ஸ்கோர் என்ன?
  15. நடந்தவை தான் நம்புங்கள்! – 15                                   1) தூக்க ஊக்கிகள்!                                             2) நகரக் காவலன்                                              3) நக்ஷத்திரங்களுக்கு நன்றி!                                  4) மூன்று நிபுணர்களின் ஆலோசனை
  16. நடந்தவை தான் நம்புங்கள்! – 16                              1) மனச்சாட்சியுடன் பயணம் செய்பவர்கள்                   2) அரை டிக்கட்டா, முழு டிக்கட்டா?                          3) டிக்கட் கலெக்டரின் பேச்சை சமாளித்த நண்பர்
  17. நடந்தவை தான் நம்புங்கள்! – 17                              1) உள்ளது உள்ளபடி பதில்! உடனுக்குடன் பதில்!!            2) பெண்களிடம் பிடிப்பது என்ன?                              3) இரண்டு மனைவிக்காரனுக்கு என்ன தண்டனை?         4) எப்படி வண்ணக் கலவையை உருவாக்குகிறீர்கள்?       5) மாமியாருக்கு மறு பெயர் என்ன?
  18. நடந்தவை தான் நம்புங்கள்!  – 18                 விதவிதமான புத்திசாலிகள்                                                1) வக்கீலின் தர்ம சங்கடம்                                    2) ஸ்வீடன் மன்னருக்கும் தெரியாத விஷயம்                3) மூன்று கடித உறைகள்!
  19. நடந்தவை தான் நம்புங்கள்! – 19                 விதவிதமான பதில்கள்                                        1) ரோஜா மலரே, சண்டைக்காரி                              2) வஞ்சப் புகழ்ச்சி                                               3) அது தான் இல்லையே!                                      4) அழகான பேச்சு                                              5) ஜீரண சக்தி உள்ள டியூக்!
  20. நடந்தவை தான் நம்புங்கள்! – 20                              1) மார்க் ட்வெயினின் குடை                                   2) தனித்து விடப்பட்ட தீவில் செஸ்டர்னுக்குப் பிடித்த புத்தகம்!                                                         3) ஹெச்.ஜி.வெல்ஸின் கடைசி வார்த்தைகள்!                4) அம்மாவும் அப்பாவும்                                       5) சர்ச்சிலின் வார்த்தைகள்
  21. நடந்தவை தான் நம்புங்கள்! – 21                              1) திருமண கவுன்ஸலிங்!                                       2) ட்வெயினின் மனைவியின் கோபம்!                        3) பயனுள்ள வாக்கியம்!                                       4) கடவுளுக்கான மார்க்!                                        5) க்வீன் எலிஸபத்திற்குத் தேவையில்லாத புத்தகம்
  22. நடந்தவை தான் நம்புங்கள்! – 22                              1) ஜான் ட்ரைடனின் மனைவி                                 2) பெர்ஃபெக்ட் ஜெண்டில்மென்!                                3) மனைவியுடன் வாதாடுவது!
  23. நடந்தவை தான் நம்புங்கள்! – 23                               1) கல்லறை ‘கால்’கள்!                                         2) வீதியில் கூட்ட்ஃம்! வெலவெலத்துப் போன அதிகாரிகள்!                                                      3) ஜோதிடருக்கே ஜோஸ்யம்!                                   4) ஒரு உண்மையான ஜோஸ்யக் குறிப்பு
  24. நடந்தவை தான் நம்புங்கள்! – 24                              1) விவேகானந்தரை மிரட்டிய இளம் பெண்கள்!               2) முட்டாள்களைப் பார்ப்பது முதல் முறையல்ல!           3) ‘நெட்’டைப் பயன்படுத்தத் தடை                             4)  கணிதப் பேராசிரியரின் வாக்கியம்!
  25. நடந்தவை தான் நம்புங்கள்! – 25                              1) கணவனும் மனைவியும் ஒருவரே!                         2) உலகத்தில் வாழ்ந்ததிலேயே மிக உயர்ந்தவர் யார்?       3) உனக்கு நஷ்டம்                                               4) கல்லறையும் நாடும்                                          5) ஒரு டெமாக்ரட்டும் ஒரு ரிபப்ளிகனும்!
  26. நடந்தவை தான் நம்புங்கள்! – 26                              1) கூடுதலாக வந்த நாணயங்கள்!                             2) ஒரு அணாவுக்கு இருவர் எடை பார்ப்பது எப்படி?         3) மொழிக் குழப்பம்
  27. நடந்தவை தான் நம்புங்கள்! – 27                              1) கொசுக்கள் பற்றிய புள்ளி விவரம் தேவையா?           2) மெஜாரிட்டியும் லாஜிக்கும்!                                   3) டீயே மதுரம்!                                                 4) டைம் அண்ட் ஸ்பேஸ்                                      5) பெர்னார்ட் ஷா ஒரு இசைப் பிரியரா?                      6) டிக்‌ஷனரியை ஜான்ஸன் தொகுத்தது எப்படி?

முடிவுரை

நூலில் நான் தந்திருக்கும் முன்னுரை இது:

முன்னுரை

மாபெரும் மேதைகளின் வாழ்விலிருந்து பல முக்கிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

சிலரது புத்திசாலித்தனம் அவர்களது பேச்சில் மின்னும்; சிலரது கிண்டலும், கேலியும், நையாண்டியும், நகைச்சுவையும் அவர்களது சொற்களில் ஒளிரும்.

மக்களிடையே பிரபலமானவர்களது செயல்களும் சுவையான சம்பவங்களும் பலராலும் தொகுக்கப்பட்டு வழி வழியாக அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

சில சமயங்களில் மேதைகளையும் அறிஞர்களையுமே சாமான்யர்கள் மடக்கி விடுவதுமுண்டு.

அன்றாடம் ஆங்காங்கே நடக்கும் சில சுவையான சம்பவங்களிலும் நகைச்சுவை நன்கு பரிமளிக்கும்!

இப்படிப்பட்ட ஆயிரக்கணக்கான சம்பவங்களைத் தொகுத்து வைத்துள்ளேன். நெட்டிலும், பல தமிழ், ஆங்கில இதழ்களிலும், புத்தகங்களிலுமிருந்து தொகுக்கப்பட்டவை இவை.

இவற்றைத் தமிழில் தர வேண்டுமென்ற நோக்கத்தில் ‘நடந்தவை தான் நம்புங்கள்’ தொடரை லண்டன் திரு எஸ். சுவாமிநாதன் அவர்களின் www.tamilandveads.comஇல் அவ்வப்பொழுது வெளியிட்டு வந்தேன்.

நூறுக்கும் குறைவான சம்பவங்களே இந்தத் தொடரில்  தரப்பட்டுள்ளது. இவை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும்.

தொடரை உற்சாகமாக அனைவரும் வரவேற்றனர்.

இதை வெளியிட்ட லண்டன் திரு சுவாமிநாதன் அவர்களுக்கும், படித்து ஊக்கமூட்டிய அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக.

இந்தத் தொடரை நூல் வடிவில் வெளியிட முன்வந்த  Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக!

.

நன்றி.

சான்பிரான்ஸிஸ்கோ                   ச.நாகராஜன்

11-7-2022

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

***