குழந்தை பெற , செல்வம் செழிக்க, கல்வி சிறக்க  இலவச புஸ்தகம் (Post No.10,336)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,336

Date uploaded in London – –   14 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

உலகில் நல்லோருக்கு குறைவில்லை .கவசம் செய்யும் அற்புதங்கள் பற்றி நான் இந்த ‘பிளாக்’கில் எழுதிய கட்டுரைகளைப் படித்த பின்னர் திரு. வேணுகோபால் கிருஷ்ணமூர்த்தி கவச புஸ்தத்தை அச்சிட்டு இலவசமாக வழங்க முன் வந்துள்ளார்.

எதையும் இலவசமாகப் பெறக்கூடாது என்பது என் அப்பாவிடம் நான் கற்றுக்கொண்ட விஷயம் .மதுரை எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவி வகித்ததாலும், மதுரை தினமணி பொறுப்பு ஆசிரியர் (V SANTANAM, NEWS EDITOR, Dinamani, Madurai) பதவி வகித்தாலும் வீட்டிற்கும், தினமணி அலுவலகத்துக்கும் வந்து புஸ்தகங்களை வழங்குவார்கள். தினமணி மதிப்புரை பகுதிக்கு இரண்டு புஸ்தகங்கள் கொடுக்கவேண்டும். அதைக் கொடுக்கச் சொல்வார் .பிறகு எனக்குக் கொடுக்கும் புஸ்தகத்துக்கு இதோ பணம் என்று கொடுப்பார். அவர்கள் பதறிப் போய் காலைத் தொட்டுக்கும்பிட்டு உங்கள்  கைகளில் எங்கள் புஸ்தகம் தவழ்வதே எங்கள் பாக்கியம் என்றெல்லாம் புகழ்வார்கள்; என் தந்தை வெ .சந்தானம் விடாப்பிடியாக கைகளில் பணத்தை திணித்துவிடுவார். அவர்கள் கண்களில் ஆனந்தக்  கண்ணீர் வருவதை சில நேரங்களில் நான் பார்த்ததுண்டு .

இப்போது வேணுகோபால் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட புஸ்தகத்துக்கு லாப விலை தரவேண்டியதில்லை ;தபால் செலவு முதலியவற்றையாவது அளிக்க வேண்டும் என்பது என் சொந்தக் கருத்து

காலச் சுவடு பதிப்பகம் வெளியிட்ட , திரு கைலாச நாத குருக்கள் எழுதிய ‘சைவத் திருக்கோயில் கிரியை  நெறி’ என்ற புஸ்தகத்தை லண்டன் வாழ் திரு பத்மநாத அய்யர் அனுப்பிவைத்தார். தபால் செல்வையும் சேர்த்து உடனே 15 பவுண்டுகள் அனுப்பினேன்.

ஐயரைத் தெரியாத இலங்கை புஸ்தக அன்பர்கள் யாரும் இருக்க முடியாது. அவர் வீட்டிற்குள் நுழைந்தால் புஸ்தகத்தை மிதிக்காமல் இருப்பதற்காக புஸ்தகக் கடல் மேல் நீச்சல் அடித்துதான் உள்ளே போக முடியும். வயது எண்பதைத் தாண்டிவிட்டதால் எல்லா புஸ்தகங்களையும்  இலங்கை நூலகங்களுக்கு அன்பளிப்பாக அனுப்பி வருவதாகச் சொன்னார். அதைக் கப்பலில் அனுப்ப ஒவ்வொரு ‘லாட்’டுக்கும் 50 பவுண்ட் செலவாகிறது என்றார் . உடனே இந்த நற்பணியில் என் பங்கும் இருக்கட்டும் என்பதற்காக 50 பவுண்டு நன்கொடை அனுப்பினேன். இவை எல்லாம் ஒரிரு மாததங்களுக்குள்  நடந்தது . ஆக புஸ்தத்துக்கு ஆதரவு தர வேண்டும் என்பதே நாம் சொல்லும் செய்தி.

இலவச புஸ்தகத்தை வெளியிட்டவர் நமக்காக தபால் செலவையும் செய்ய முன்வந்தாலும் நாமும் அவருக்கு உதவலாமே.

இதோ அற்புதம் நிகழ்த்தும் விநாயக கவசம் ,சிவ கவசம், சக்தி கவசம். சகல கலா வல்லி  மாலை , மக்கட் பேறு நல்கும் மக்கட் செல்வ  மாலை, இலக்குமி துதி , நல்கும் வேணுகோபால் கிருஷ்ண மூர்த்தியின் தொடர்பு டெலிபோன் எண் ;   புஸ்தகத்தைப் பெறும் வழிமுறைகளை அவரே செப்புவார்

Venugopal Krishnamoorthi <venugpl60@gmail.com>

 My mobile number for contact would be +91 94434 86117

With Best Regards,

K.Venugopal

PLEASE READ:–

கவச அற்புதங்கள் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › க…

24 Aug 2021 — kanaka dhara – shower of gold coins. Compiled BY LONDON SWAMINATHAN. Post No. 10,014. Date uploaded in London – 24 AUGUST 2021.



விநாயக கவச அற்புதங்கள் ; கவசம் எழுதியது யார் …

https://tamilandvedas.com › விந…

14 Aug 2021 — this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com. ஹெல்த்கேர் ராஜா, 13 …

–SUBHAM-

tags- இலவச புஸ்தகம், கவசம், மக்கட் செல்வ மாலை, கவச அற்புதம் , வேணுகோபால் கிருஷ்ணமூர்த்தி

உலக இந்து சமய செய்தி மடல் 14-11-2021 (Post No.10,335)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 10,335

Date uploaded in London – –   14 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இன்று ஞாயிற்றுக் கிழமை நவம்பர் 14 -ம் தேதி 2021

ஆம் ஆண்டு

 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,


நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND


 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.

XXXX

திருப்பதி பாலாஜி கோவிலில்  அமித் ஷா

பாரம்பரிய உடை அணிந்து வந்திருந்த அமித் ஷாவுக்கு, ஆலயத்தை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) உயர் அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திருப்பதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தெற்கு மண்டல கவுன்சிலின் 29வது கூட்டத்துக்கு முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சனிக்கிழமை  இரவு திருமலை திருப்பதி கோயிலில் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

அமித் ஷா திருப்பதி கோவிலுக்கு சென்ற போது ஆந்திர பிரதேச முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியும் சென்றார்.

விமான நிலையத்தில் தரையிறங்கியதும், ஷா உடனடியாக சாலை வழியாக அருகிலுள்ள திருமலை மலைகளுக்குச் சென்று ஆலயத்தில் ஸ்ரீ வெங்கடாசலபதியை தரிசித்தார்

XXXX

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை நடை திறப்பு

மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை,  நாளை திங்கட்கிழமை திறக்கப்படுகிறது. தொடர்ந்து புதிய மேல்சாந்திகள் பதவியேற்றுக் கொள்கிறார்கள்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் 1-ந் தேதி முதல் 60 தினங்கள், சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி பக்தர்கள் விரதம் தொடங்கி, இருமுடி கட்டி சபரிமலை வந்து அய்யப்பனை தரிசனம் செய்து வழிபாடு நடத்தி வருவார்கள். நடப்பு மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இதையடுத்து மறுநாள் அதிகாலை முதல் வழக்கமான பூஜைகள் தொடர்ந்து நடைபெறும்.

கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி கோவில் நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார்.

தொடர்ந்து 18-ம் படிக்கு கீழ் உள்ள நெருப்பு ஆழியில் கற்பூரம் வைத்து தீ மூட்டப்படும். அதனை தொடர்ந்து, புதிய மேல்சாந்திகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி சன்னிதானத்தில் நடைபெறும். முன்னதாக சபரிமலை அய்யப்பன் கோவில் மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பரமேஸ்வரன் நம்பூதிரி, மாளிகப்புரம் கோவில் மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சம்பு நம்பூதிரி ஆகியோர் இருமுடி கட்டி 18-ம் படிகளுக்கு கீழ் மேளதாளம் முழங்க அழைத்து வரப்படுவார்கள்.

டிசம்பர் 26-ந் தேதி மண்டல பூஜையும், அடுத்த ஆண்டு (2022) ஜனவரி 14-ந் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறும்.

திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் தலைவராக இருந்த வாசு மற்றும் உறுப்பினர் கெ.எஸ்.ரவி ஆகியோரின் பதவி காலம் முடிவடைந்தது. இதை தொடர்ந்து புதிய தலைவராக கே.அனந்த கோபன் மற்றும் புதிய உறுப்பினராக வக்கீல் மனோஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

xxxx

திருவண்ணாமலை தீப விழா; முன்னதாக குவியும் பக்தர்கள்

திருவண்ணாமலையில் வரும் 17ம் தேதி முதல் கிரிவலம் செல்லவும், சுவாமி தரிசனத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், முன்னதாகவே பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 10ம் தேதி, கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கொரோனா ஊரடங்கால், சுவாமி மாட வீதி உலா ரத்து செய்யப்பட்டு, கோவிலினுள் வலம் வரும் நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது.கடந்த 10 முதல் வரும் 17ம் தேதி வரை, ‘ஆன்லைன்’ பதிவு மூலம், வெளியூர் பக்தர்கள் 10 ஆயிரம் பேர், உள்ளூர் பக்தர்கள் 3,000 பேர் என மொத்தம், 13 ஆயிரம் பேர் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

நகரில் உள்ள 250க்கும் மேற்பட்ட லாட்ஜ்கள் மற்றும் காலி வீடுகள், கல்யாண மண்டபங்கள் ஆகியவற்றை தேடி புக் செய்து வருகின்றனர்.

மஹா தீபம், அதாவது கார்த்திகை தீபம், நவம்பர் 19ம் தேதி மாலையில் ஏற்றப்படுகிறது

XXX

சாத் பூஜை!: யமுனையில் பொங்கி வழியும் ரசாயன நுரையை பொருட்படுத்தாமல் புனித நீராடிய மக்கள்

டெல்லியில் யமுனை ஆற்றில் பொங்கி வரும்  ரசாயன நுரையை பொருட்படுத்தாமல் மக்கள் சாத் பூஜையை ஒட்டி நீராடி வருகின்றனர். வடமாநிலங்களில் கோலாகலமாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று சூரியனை வழிபடும் சாத் பூஜை. சூரியனுக்கு நன்றி கூறும் இவ்விழா 4 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டில் சாத் பூஜை தொடங்கியதை அடுத்து பல்வேறு மாநிலங்களில் நீர் நிலைகளில் மக்கள் புனித நீராடி வழிபாடு நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் கலிந்தி கஞ்ச் அருகே யமுனை ஆற்றில் ரசாயன நுரை பொங்கி வழிந்தது. இதனை பார்ப்பதற்கே அச்சம் ஏற்பட்ட நிலையில் ரசாயன நுரை பற்றி சற்றும் கவலைப்படாமல் மக்கள் யமுனை நதியில் புனித நீராடினர். சாத் பூஜையை பிகார், உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த மக்களே பெரும்பாலும் கொண்டாடுகின்றனர். கோவில் குளங்கள் மற்றும் நீர் நிலைகளில் பக்தர்கள் புனித நீராடி சூரியனை வழிபாட்டு வருகின்றனர்.

xxxx

குமரி மாவட்ட கோவில்களில் குருப்பெயர்ச்சி விழா

குருபகவான் ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான குரு பெயர்ச்சி விழா சனிக்கிழமை நடந்தது.  இப்போது   மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். இதையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் குருப்பெயர்ச்சி விழா நட ந்தது.

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் சுசீந்திரம் தாளகுளம் பிள்ளையார் கோவில், ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மற்றும் குமரி மாவட்டத்தில் குருபகவான் சன்னதிகள் உள்ள கோவில்களில் குருப்பெயர்ச்சி விழா மற்றும் சிறப்பு வழிபாடுகள் சனிக்கிழமை நட த்தப்பட்டது

XXXX

இந்தியாவில், பாரதத்தின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு பிறந்த தினமான  நவம்பர் 14ம் தேதி,  குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது . இந்தியாவில் வசிக்கும் குழந்தைகள்  அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்

XXXX

நவம்பர் 19-ம் தேதி கார்த்திகை பௌர்ணமி அன்று தீபத் திருநாளைக் கொண்டாடப்போகும் அனைத்து இந்துக்களுக்கும் இப்போதே கார்த்திகை வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறோம்.

பௌர்ணமி அன்று சந்திர கிரகணமும் வருகிறது. இது இந்தியாவில் தெரியாது. ஐரோப்பிய நகரங்களுக்கு உள்ளூர் பத்திரிக்கைகளில் வரும் செய்திகளைக் கவனிக்கவும்

XXXX

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் VAISHNAVI ANAND

நன்றி, வணக்கம்

tags- Tamilhindunews, 14112021,

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH 14TH NOVEMBER ,2021 (Post 10,334)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 10,334

Date uploaded in London – –   14 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Namaste , Namaskaram to Everyone

This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.

Compiled from popular newspapers of India

Read by NITHYA SOWMY

This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at

ONE pm London Time and 6-30 PM Indian Time Every SUNDAY.

Even if you miss our live broadcast on SUNDAYS

you can always visit us on FACEBOOK.COM– slash- Gnana Mayam 24 hours a day.

Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘Aakaasa Dhwani’

Read by NITHYA SOWMY

Xxx

Amit Shah offers prayers at Tirumala temple

AMIT Shah along with Andhra Pradesh Chief Minister Y.S. Jagan Mohan Reddy worshipped LORD BALAJI VENKATESWARA on Saturday at the temple and took blessings of the priests.

Tirumala Tirupati Devasthanam (TTD) chairman Subba Reddy and other officials felicitated the Union Home Minister and the Chief Minister and presented them mementos.

Earlier, Shah was welcomed by the Chief Minister at Renigunta Airport near Tirupati. They drove straight to the hill shrine.

Shah left for Venkatachalam in Nellore district on Sunday morning by a helicopter of the Indian Air Force. 

He  participated in the programs of Akshara Vidyalaya, Swarna Bharati Trust and Muppavarapu Foundation.

The Union Home Minister returned to Tirupati in the afternoon and attend Southern Zonal Council meeting.

XXXX

Delhi government installs bamboo structures, sprinkles water to remove froth from Holy River Yamuna

The four-day-long festival of Chhath Puja is mainly celebrated by ‘Purvanchalis’ from Bihar, eastern Uttar Pradesh and Jharkhand settled in Delhi.

A day after the Delhi government deployed 15 boats in the polluted River Yamuna to remove toxic froth at Kalindi Kunj banks, where people were gathering for Chhat puja despite restrictions, bamboo structures were installed and water sprayed from tankers on Wednesday to dissipate the foam.

As the administration faced flak for these ‘cover-up’ measures, officials admitted that the problem of frothing — a sign of the river’s hazardous water quality — will continue unless sewage treatment plants and common effluent treatment plants in Delhi are upgraded to meet the new standards and all unauthorised colonies are connected to the sewer network.

A Delhi Jal Board official said directions have been issued to sprinkle water to dissipate the froth as “no other short-term measure would work”.

An official of the Irrigation and Flood Control Department said bamboo nets have been installed on the stretch at Kalindi Kunj to capture the froth.

The pollution in the Yamuna in Delhi is once again in focus as Chhath festivities are underway.

Early on Wednesday, a number of devotees had gathered at the Yamuna Ghat in Kalindi Kunj, downstream of the Okhla Barrage, but were dispersed by the police.

The city government has set up 800 makeshift ghats across Delhi for devotees to perform Chhath rituals.

The four-day-long festival of Chhath Puja is mainly celebrated by ‘Purvanchalis’ from Bihar, eastern Uttar Pradesh and Jharkhand settled in Delhi.

During the festival, the devotees perform elaborate rituals by offering ‘Arghya’ to the Sun God and observing fast.

The Delhi Disaster Management Authority had earlier banned Chhath Puja celebrations on the banks of the Yamuna in view of the pandemic.

Vikas Rai, chairman of Chhath Puja Samiti, Kalindi Kunj, said the government wanted to “cover up its failure”.

According to experts, the primary reason behind the formation of foam in the Yamuna is high phosphate content in detergents used in dyeing industries, dhobi ghats and households in Delhi, Haryana and Uttar Pradesh.

When water falls from a height at a barrage, the turbulence agitates the phosphoric compounds in the river which leads to the formation of froth.

xxxx

NEWS FROM KARNATAKA

Karnataka to soon enact law on religious conversions

Sri Ram Sena IN KARNATAKA has warned that it would launch a statewide agitation if the ruling BJP government in Karnataka doesn’t enact a law to ban forceful conversions.

Sources in the BJP confirmed that the government is all set to make a law in this regard and the bill will be mooted in the coming winter session scheduled to be held in Suvarna Soudha at Belagavi next month.

Seers of various mutts have appealed to the state government for implementing the act. 

Sri Ram Sena Chief Pramod Muthalik who met Chief Minister Basavaraj Bommai on Friday, warned that if the state government fails to enact the law, all Hindu religious seers in Karnataka would launch the agitation. 

According to Muthalik, “religious conversions are taking place from the period of the British”.

Chief Minister Bommai responded positively to the demand, saying: “The Karnataka government is already studying the laws passed by some states in this regard. Karnataka would soon come out with its own act.”

He added that Constitution is clear against conversions by means of force and inducements. “I have spoken against this in the past too,” he maintained.

The issue of religious conversions was raised by Hosadurga BJP MLA Goolihatti Shekar during the Monsoon session. 

He had claimed that thousands have been converted in his constituency and missionaries’ have foisted rape and atrocity cases on those who questioned conversion activities.

Later, he had organised a ‘Ghar wapsi’ programme in his constituency to bring back Hindus from Christianity. 

XXXXX

NEWS FROM UTTAR PRADESH

15 Muslims return to Hindu Dharma 18 years after converting to Islam

15 individuals from the Muslim community hailing from four families, that had converted to Islam out of fear 18 years ago, have recently returned to the Sanatan Dharma through relevant rituals held at the Yashveerashram, an establishment known for the practice of yoga in Baghra in Uttar Pradesh’s Muzaffarnagar district.

All these four families are related to each other. Unlike their conversion to Islam, their return to Hindu Dharma, the original religion of these extended family members, has happened voluntarily. Yashveer Ji Maharaj, the director and founder of Yashveerashram Baghra, shares that these people had reached out to him for this ghar wapasi.

All the 15 members are residents of the Binoli area and arrived at the ashram where Maharaj ji had already made arrangements for performing a Shuddhi Havan for them which marked their return to Hindu Dharma. They also chanted the Gayatri Mantra and participated in the havan.

The Director of Yashveershram, Yashveerji Maharaj, has confirmed that new Aadhaar cards and ration cards will also be issued to all the individuals who have undergone the religious revert.

In the same way, 19 people from UP’s Kandhla region had been reconverted to Hindu Dharma and provided with new identities, ration cards and Aadhaar cards last year.

THIS IS A REPORT FROM HINDU POST NEWSPAPER

Xxxx

CHILDREN IN INDIA ARE CELEBRATING 14TH NOVEMBER AS CHILDREN’S DAY EVERY YEAR. WE WISH ALL THE CHILDREN A HAPPY CHILDREN’S DAY.

XXX

WE WISH ALL OF YOU A VERY HAPPY KARTIK PURNIMA DEEPA FESTIVAL WHICH FALLS ON 19TH NOVEMBER THIS YEAR.

ALREADY THOUSANDS OF DEVOTEES STARTED ARRIVING IN TIRUVANNAMALAI WHERE THE MOST FAMOUS LAMP FESTIVAL HAPPENS ON 19TH NOVEMBER.

HAPPY KARTIK PURNIMA. THOUGH THERE IS A CHANDRA GRAHANA/ LUNAR ECLIPSE , IT IS NOT VISIBLE IN INDIA. LUNAR ECLISES CAN HAPPEN ONLY ON POURNAMI DAYS .

FOR EUROPEAN DESTINATIONS  PLEASE SEE LOCAL NEWS PAPERS.

That is the end of WORLD HINDU NEWS ROUND UP FROM AAKAASA DHWANI.

READ BY NITHYA SOWMY

PLEASE WAIT FOR TAMIL NEWS.

 tags- News14112021

பிளாஸ்டிக் அபாயம் : புவியைக் காக்க புதிய வழிகள்! (Post No.10,333)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,333

Date uploaded in London – –   14 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ச.நாகராஜன் எழுதியுள்ள சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பற்றிய பத்து உரைகள் ஆல் இந்தியா ரேடியே சென்னை வானொலி A அலைவரிசையில் (720 Hz) 11-11-2021 முதல் ஒலிபரப்பாகி வருகிறது. நேரம் தினமும் காலை 6.55 (மாநிலச் செய்திகள் முடிந்த பின்னர்). இதை ஆன்லைன் வாயிலாகவும் கேட்டு மகிழலாம்.

இணையதளம் : https://onlineradiofm.in/tamil-nadu/chennai/all-india-air-chennai-pc

13-11-2021 காலை ஒலிபரப்பான மூன்றாவது உரை கீழே தரப்படுகிறது.

  பிளாஸ்டிக் அபாயம் : புவியைக் காக்க உத்வேகமூட்டும் புதிய வழிகள்!

ச.நாகராஜன்

பிளாஸ்டிக் அபாயத்தைப் பற்றிய விழிப்புணர்ச்சி நமது நாட்டில் நாளுக்கு நாள் அதிகமாகி வருவது மகிழ்ச்சியூட்டும் ஒரு செய்தியாகும். தொழில் துறையினர், ஆட்டோ ஓட்டுநர்கள், பள்ளி ஆசிரியைகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் முனைப்புடன் புதிய புதிய வழிகளைக் கடைப் பிடித்து அனைவருக்கும் எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றனர்.

மங்களூரு உள்ளிட்ட ஏராளமான நகர்களில் கழிவாக தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தி கைவினைக் கலைப் பொருள்களை இயற்கை ஆர்வலர்களும் கைவினைக் கலைஞர்களும் உருவாக்கிக் காட்சிப்படுத்துகின்றனர். இதைப் பார்க்கும் அனைவரும் பிளாஸ்டிக் அபாயத்தை நன்கு உணர்ந்து விழிப்புணர்ச்சி பெறுகின்றனர்.   

ஜாம்ஷெட்பூர், சென்னை, இந்தூர் ஆகிய நகரங்களில் மேம்பாட்டு மையங்கள், சாலை அமைக்கும் போது, பிளாஸ்டிக் கழிவுகளை அதற்கெனப் பயன்படுத்துகின்றன. இதைப் பார்த்து  லக்னௌ நகரிலும் இது போலவே சாலை அமைக்க பிளாஸ்டிக் கழிவுகள் பயன்படுத்தப்படுகின்றன. எளிதில் அழிக்க முடியாத பிளாஸ்டிக் கழிவுகள் அழிக்கப்படுவதோடு நல்ல சாலைகளும் உருவாகின்றன.           

                                                                                            சிக்கிமில் உள்ள ஒரு சிறு நகரம் லசுங் (Lachung). அந்த நகரைச் சேர்ந்த மக்கள் தாமாகவே ஒன்று கூடி பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை நகருக்குள் கொண்டு வரக் கூடாது என்ற தடையை ஏற்படுத்தியுள்ளனர். அந்த நகருக்கு உல்லாசப் பயணமாக வரும் பயணிகளிடம் ஆட்டோ மற்றும் டாக்ஸி டிரைவர்கள், இது பற்றிக் கூறி மினரல் குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில்கள் நகருக்குள் வருவதை அறவே தடுத்து விட்டனர்.

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பது பழமொழி. இதை மனதில் கொண்டு உலகில் உள்ள இயற்கை ஆர்வலர்கள் அனைவரும் ஒவ்வொரு புது வழியைக் கடைபிடித்துக் காண்பித்து வழிகாட்டிகளாகத் திகழ்கின்றனர்.

நியூஜிலாந்தில் ஒரு பெண்மணி பிளாஸ்டிக் கழிவு பாட்டில்களை வைத்து காலணிகளைச் செய்து மலிவு விலையில் விற்கிறார். 10 டன் எடையுள்ள 30000 பிளாஸ்டிக் பாட்டில்களை வைத்து ஒரு படகு அமைக்கப்பட்டு கடலில் செல்கிறது.

தொழில்துறை வடிவமைப்பில் விற்பன்னராக உள்ள ஒருவர்  நண்டு போன்ற கடலில் செல்லும் ரொபாட்டை வடிவமைத்திருக்கிறார். அது கடலின் உள்ளே சென்று அங்கு இருக்கும் பிளாஸ்டிக் கழிவுப் பொருள்களை சேகரித்து விடுகிறது. இதனால் பிளாஸ்டிக் கழிவுகளை ஜெல்லி மீன்கள் என நினைத்து சாப்பிட்டு உயிரிழக்கும் திமிங்கிலம் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் ஏராளம் பிழைக்கின்றன.

இப்படி எண்ணற்ற வழிகள் ஏராளம் உள்ளன என்பதை அறியும் போது மகிழ்ச்சி பெறும் அனைவரும், தனது வழியில் ஒரு புதிய வழியை அறிமுகப்படுத்திச் சுற்றுப்புறச் சூழலைக் காக்கலாமே!

***

tags- பிளாஸ்டிக் அபாயம், புவியைக் காக்க, புதிய வழிகள், 

PLEASE JOIN US TODAY SUNDAY 14-11-2021

14-11-2021 SUNDAY PROGRAMME

USUAL TIME- LONDON TIME ONE PM ; INDIAN TIME 6-30 PM

USUAL PLACE- FACEBOOK.COM/ GNANAMAYAM

IF U HAVE OUR ZOOM LINK, PLEASE USE OUR ZOOM LINK.

TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST from London

OPENING ANNOUNCEMENT & PRAYER – 5 MTS

Prayer – 

MRS BRAHANNAYAKI SATHYANARAYANAN ON   TIRU NINDRAVUR LAKSHMI TEMPLE 10 MTS

Thiruppugaz Amirtham – by MRS JAYANTHI SUNDAR  AND GROUP–  10 mts

xxx

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MRS NITHYA SOWMY

AND

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL BY MRS VAISHNAVI ANAND

–20 MINUTES

TALK BY S NAGARAJAN ON SWAMI  DAYANANDA SARASVATI- 10 MTS

Talk by Thirukkudal Mukuntharajan on Alvar Charithram- 15 MTS

XXXX

APPR. 70 MINUTES

TAGS- PUBLICITY14112021

FROG MYSTERY IN VEDAS; FROG IN CREMATORIUM AND CANAL CEREMONY -1(Post No.10,332)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,332

Date uploaded in London – –   13 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

THE MOST FAMOUS FROG SONG IN THE RIG VEDA (RV.7-103), THE OLDEST BOOK IN THE WORLD, IS KNOWN TO ALL SCHOLARS. (I have compared it with the Greek Frog writing of Aristophanes in this blog a few years ago). BUT TWO MYSTERIOUS REFERENCES TO FROG IN THE CREMATORIUM AND IN THE CANAL OPENING CEREMONY ARE STRANGE AND NOT EXPLAINED SATISFACTORILY. I AM COMPARING IT WITH THE FROG GODDESS HEQET OF EGYPT AS WELL.

HYMN 13 IN THE THIRD BOOK OF ATHARVAVEDA WHERE THE CANAL FROG CEREMONY IS REFERRED TO IS IMPORTANT FOR ANOTHER REASON; ETYMOLOGY OF WORDS ON WATER IS ALSO AVAILABLE HERE .

RV= Rig Veda; AV= Atharva(na) Veda

Please read the hymn first :-

STANZA 1: why are the rivers known as Nadi in Sanskrit

STANZA 2: why is the water known as Apa in Sanskrit

STANZA 3: : why are the rivers known as Var in Sanskrit

STANZA 4: why is water known as Udaka in Sanskrit

STANZA 5:  Water is Honey, Soma

STANZA 6: Water is Gold; Water is Amrit (Elixir of Life)

STANZA 7: Please follow the way in the canal dug out no

WATER ETYMOLOGY !

13. To the waters.

1. Since formerly , going forth together, ye resounded (nad) when the dragon was slain, thenceforth ye are streams (nadī́) by name: these are your names, O rivers.


2. When, sent forth by Varuna, ye thereupon  quickly skipped together, then Indra obtained (āp) you as ye went; therefore are ye waters (ā́p) afterward.


3. As ye were flowing perversely (apakāmám), since Indra verily hindered (var) you by his powers, you, ye divine ones, therefore the name water (vā́r) is assigned you.


4. The one god stood up to you, flowing at [your] will; “the great ones have breathed up (ud-an),” said he; therefore water (udaká) is [so] called.


5. The waters [are] excellent; the waters verily were ghee; these waters verily bear Agni-and-Soma; may the strong (tīvrá) satisfying savor (rása) of the honey-mixed  come to me along with breath, with splendor.


6. Then indeed I see, or also hear; unto me comes the noise, to me the voice of them; I think myself then to have partaken ambrosia (amṛ́ta) when, ye gold-colored ones, I have enjoyed  you.


7. This, O waters, [is] your heart, this your young (vatsá), ye righteous ones; come thus hither, ye mighty ones, where I now make you enter.

XXXX

MY COMMENTS

ANOTHER TRANSLATION

HYMN XIIIScroll Up, Book  3

A benediction on a newly cut water channel

1.As ye, when Ahi had been slain, flowed forth together with a roar,

So are ye called the Roaring Ones: this, O ye Rivers, is your name.

2.As driven forth by Varuna ye swiftly urged your rolling waves,

There Indra reached you as you flowed; hence ye are still the Water-floods.

3.Indra restrained you with his might. Goddesses, as ye glided on

Not in accordance with his will: hence have ye got the name of Streams.

4.One only God set foot on you flowing according to your will,

The mighty ones breathed upward fast: hence; Water is the name they bear.

5.Water is good, water indeed is fatness. Agni and Soma, truly,both bring water.

May the strong rain of those who scatter sweetness come helpful unto me with breath and vigour.

6.Then verily, I see, yea, also hear them: their sound approaches me, their voice comes hither.

Even then I think I am enjoying Amrit, what time I drink my fill of you, gold coloured!

7.Here,O ye Waters,is your heart. Here is your calf, ye holy ones.

Flow here, just here, O mighty Streams, whither I now am leading you.

Xxx

My Comments

Hindus are great linguistic scholars; they give humorous, funny and sometimes informative and thought provoking explanations to words. Yaska and Manu also did it. Satapata Brahmana also has such explanations. That shows they were highly educated. If we compare the literature of the same period in other parts of the world ,we don’t find such scholarly interpretations.

Manu gives etymology of words such as Jaya, Putra etc.

Kausika sutra,written later, gives explanations to most of the mantras in the AV. Here Kausika Sutra explains the practical part of the ceremony. The canal is already dug, and the water of the river is to be admitted. The new channel which the river is to fill is now dear to you  (words calf and heart are used in the seventh stanza/mantra) . It is as lovable as a calf to its mother cow. This cow and calf simile occurs all through the RV as well. Vaatsalyam is a word used by Hindus to mention affection; Vatsa is calf.

When the Vedic priests recite this mantra, GOLD is deposited  in the canal. Then a FROG tied with BLUE AND RED THREADS is released. That frog is covered with an aquatic plant called AVAKAA / SEVALA.

Avakaa is identified by ancient commentators as Vallisneria Octandra.

Stanza /mantra five is in Tamil Tirukkural No.11:-

“As the falling rain sustains the world

It must be deemed the Amrita “(nectar of life)-Kural 11

Bhagavad Gita also (3-14) praises rain.

The use of Vallisneria in this ceremony is also significant. It is used nowadays in all aquariums. It supports fish and other water creatures.

But no one could explain the godl and red-blue thread. Even if we think that the gold will go to the priest why this Vallisneria plant and why blue and thread are not explained. A lot of things are left out without explanation. it is because they lost the meaning in course of time, or this needs no explaining because everybody knows it!

We come across Var in Stanza 3. That is in Tamil as well. Aaaru for river in Tamil is pronounced as Varu in some places. Moreover Vaari/Maari for rain and water is also in Tamil.

Xxx

FROG IN CREMATORIUM!

This is a very strange thing. It is in RV (10-16), as a funeral hymn.

Mantra 14 (10-16-14)

“O full of coolness, thou cool plant, full of fresh moisture, freshening Herb.

Come hither with the FEMALE FROG; fill with delight this Agni here”.

Mantra 13

“Cool, Agni, and again refresh the spot which though hast scorched and burnt

Here let the water lily grow and tender grass and leafy herb”

Ralph T H Griffith explains :-

14.Fill with delight = euphemistically extinguish. After the fire has consumed the corpse, water is poured upon it to extinguish it. Then furthermore certain water plants are put there. In addition to this a FEMALE FROG, elsewhere a male, is put upon the place where the fire has burned. These , as representatives of life in the waters, are symbolically supposed both to prevent and extinguish fire ( M Bloomfield, 1890).

13. Plant names:-

Kiyaambu, Paakaduurvaa (Panicum Dactylum), Vyalkasa

xxx

My comments

I don’t know whether Bloomfield and Griffith are right in their interpretations. Only the priests who do such ceremonies could explain it. Most of them pass the information by word of mouth from generation to generation. ( I have already written about the leafy boat I saw in my mother’s ceremony in the crematorium and the priests explanation to it which coincided with ancient Egyptian literature.

Another interesting FROG hymn gives strange names to FROGS which no one could explain; and in another hymn six Snake names are found, of which two are in Sumer names. Early translators could not explain them, and they interpreted some as onomatopoeic words. But hey have more meaning in to it. We must do more research.

In the next part I will compare it with Egyptian Frog Goddess Heqet which is in fact a Hindu Goddess

xxxx

Vallisneria Plant

MY OLD ARTICLES ON FROGS

Frogs in Rig Veda

https://tamilandvedas.com › tag › frogs-in-rig-veda

15 Dec 2016 — Posts about Frogs in Rig Veda written by Tamil and Vedas. … In the poem Brahmins and frogs are interchangeable.


Frog in the mouth of a Snake: Tamil Saints’ Simile

https://tamilandvedas.com › 2014/03/09 › frog-in-the-…

9 Mar 2014 — Though Sangam age Tamil poets who lived before him used lot of similes in their 2300 poems, Appar as a single poet is far superior to them …


Those who struggle win | Tamil and Vedas

https://tamilandvedas.com › those-wh…

22 Jul 2014 — This gave a chance for the frog to leap out of the pot. It is clear from this story that struggle or … Tamil poet Tiruvalluvar says


Frog and snake | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › frog-and-snake

One who reads his similes will be reminded of the greatest poet of India, Kalidasa. Appar was given the name Thiru Navukku Arasu by Lord Shiva. It means the …


frog in the well | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › fro…

·

14 Mar 2014 — It is a popular story known to most of the Asians because Hindu, Buddhist, Jain and Sufi poets sang about it. But not many people knew that …

—subham—

to be continued……………..

TAGS-  Frog in Vedas, Crematorium, Canal ceremony, Frog, Goddess, Egypt

பிளாஸ்டிக் அபாயம் : புவியைக் காக்க உத்வேகமூட்டும் வழிகாட்டிகள் (Post.10,331)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,331

Date uploaded in London – –   13 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ச.நாகராஜன் எழுதியுள்ள சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பற்றிய பத்து உரைகள் ஆல் இந்தியா ரேடியே சென்னை வானொலி A அலைவரிசையில் (720 Hz) 11-11-2021 முதல் ஒலிபரப்பாகி வருகிறது. நேரம் தினமும் காலை 6.55 (மாநிலச் செய்திகள் முடிந்த பின்னர்). இதை ஆன்லைன் வாயிலாகவும் கேட்டு மகிழலாம்.

இணையதளம் : https://onlineradiofm.in/tamil-nadu/chennai/all-india-air-chennai-pc

12-11-2021 காலை ஒலிபரப்பான இரண்டா உரை கீழே தரப்படுகிறது.

 பிளாஸ்டிக் அபாயம் : புவியைக் காக்க உத்வேகமூட்டும் வழிகாட்டிகள்!   ச.நாகராஜன்

இந்த பிரபஞ்சத்தில் மனிதர்கள் வாழும் ஒரே இடமாக இருப்பது அற்புதமான பூமி மட்டுமே ஆகும். இதில் உள்ள கடல்கள் மூலம் நீரைப் பெறுகிறோம். காடுகள் மூலம் பல வாழ்வாதாரங்களை அபரிமிதமாகப் பெறுகிறோம். ஆனால் இவற்றிற்கெல்லாம் ஒரு பெரும் அபாயமாக இருப்பது பிளாஸ்டிக்கே!

இது பிரபஞ்சத்தில் விஞ்ஞானிகள் விளக்கும் ஒரு பெரிய கருந்துளை – ப்ளாக் ஹோல் – போல இன்று ஆகி, அனைத்தையும் விழுங்கும் நிலையில் இருக்கிறது. நீரில் நாம் எறியும் அனைத்தும் நமக்கே திரும்பி வருகிறது. ஆம், ஒவ்வொரு ஆண்டும் நாம் 8 ட்ரில்லியன் (Trillion) கிலோகிராம் பிளாஸ்டிக் பொருள்களை உலகெங்கும் உள்ள கடல்களில் தூக்கி எறிகிறோம். ஒரு ட்ரில்லியன் என்பது ஒன்றுக்கு பக்கத்தில் 12 பூஜ்யங்களைப் போட்டால் வரும் பெரிய எண்ணிக்கையாகும். இப்படிப் போடப்படும் பிளாஸ்டிக் மாசு மனித குலத்தை அழிக்கும் பெரும் அபாயமாக மாறி இருக்கிறது.

இந்த அபாயத்தை உணர்ந்து மனித குலம் அலறும் போது, இதைப் போக்க தம்மால் முடிந்த அளவு  சிறிய உணவு விடுதி வைத்திருக்கும் சாமானியரிலிருந்து பெரும் நிறுவனம் வரை பல அரிய செயல்களைச் செய்து வழிகாட்டுகின்றனர். அவற்றில் சிலவற்றைப் பார்த்து உத்வேகம் பெறுவோம்.   

அந்தமான் தீவிலிருக்கும் இயற்கை ஆர்வலர்கள் இந்த பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க எண்ணி அதை எண்ணத்தோடு நிறுத்தாமல் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை அறவே நிறுத்தி அதற்குப் பதிலாக மூங்கில் கூடைகளைப் பயன்படுத்துகின்றனர். சிறு மரக் கன்றுகளையும் நாற்று இளஞ்செடிகளையும் பிளாஸ்டிக் பைகளில் மண்ணைப் போட்டு அதில் வைப்பது வழக்கம். அதை நிறுத்தி அப்படிபட்ட மரக்கன்றுகளை மூங்கிலினால் ஆன கூடைகளில் போட ஆரம்பித்து புதிய வழியைக் காட்டியுள்ளனர்.                                       

சத்தீஸ்கரில் உள்ள முனிசிபல் கார்பரேஷன் தனது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கழிவு பிளாஸ்டிக் பொருள்களைக் கொண்டு வந்து தரும் ஏழைகளுக்கு இலவச உணவை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆகவே பெருமளவு கழிவு பிளாஸ்டிக் பொருள்கள் நீங்கி நகர் சுத்தமாகிறது. ஏழைகளும் உணவை இதற்கான உணவு விடுதியிலிருந்து இலவசமாகப் பெறுகின்றனர்.             

                                                       கௌஹாத்தியில் உள்ள ஒரு பள்ளி (அக்ஷர் என்ற பள்ளி) தனது மாணவர்களை பிளாஸ்டிக் கழிவு பிளாஸ்டிக் பொருள்களைக் கொண்டு வர ஊக்கப்படுத்துகிறது. அவர்கள் இப்படி கழிவு பிளாஸ்டிக் பொருள்களைத் தரும் போது அதுவே அவர்கள் கொடுக்க வேண்டிய பள்ளிக் கட்டணமாகக் கருதப்படுகிறது. பள்ளிக் கட்டணம் அவர்களுக்கு இந்த சேவையின் மூலம் கிடையாது. 

இது போல ஒவ்வொரு ஊரிலும் புது விதமான வழிகள் உருவாக்கப்படுகின்றன; பிளாஸ்டிக் கழிவுகள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்படுகின்றன. நாமும் சில புதிய வழிகளைக் காணலாமே!

–subham–

**

Tags-  பிளாஸ்டிக், அபாயம் ,

பகவத்கீதை சொற்கள் INDEX-20; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம் -20 (Post.10,330)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,330

Date uploaded in London – –   12 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பகவத் கீதை சொற்கள் இண்டெக்ஸ் 20

ஆவ்ருத்ய 3-40 மறைத்து

ஆவேசித சேதஸாம் 12-7 நிலைபெற்ற மனமுடைய அவர்களுக்கு

ஆவேச்ய 8-10  நிலை நிறுத்தி

ஆவ்ரியதே 3-38 மறைக்கப்படுகிறதோ

ஆசயாத் 15-8 உறைவிடத்தினின்று

ஆசபாசசதை: 16-12  நூற்றுக்கணக்கான ஆசைக் கயிறுகளால்

ஆசு  2-65  சீக்கிரத்தில்

ஆஸ்ச்சர்யவத்  2-29  ஆச்சர்யம் போல் ,

ஆச்சர்யாணி 11-6 ஆச்சர்யமாக

ஆச்ரயேத் 1-36  சேரும்

ஆச்ரிதம்  9-11 அடைந்த

ஆச்ரித: 12-11 சரண்புகுதலில் நாட்டம் உடையவனாய்

ஆச்ரிதா: 7-15 சார்ந்தவர்கள்

ஆச்ரித்ய  7-29 சரணடைந்து

ஆச்வாசயாமாச 11-50 இன்னுரை கூறித் தேற்றினான்

ஆசக்த மனா: 7-1 பற்றிய மனத்தின னாய்

ஆசனே  6-12 ஆசனத்தில்

ஆசனம் 6-11 ஆசனத்தை

ஆசம 2-12 இருப்பது

ஆஸாத்ய 9-20 அடைந்து

ஆஸீத  2-54  இருப்பான்

ஆஸீனம் 9-9  இருப்பவன்

ஆஸீன : 14-23 இருந்துகொண்டு

ஆஸுரம் 7-15 அசுர

ஆசுரா : 16-7 அசுரர்கள்

ஆசுரீ 16-5  அசுர

ஆசுரீஷு 16-19 அசுர

ஆசுரீம் 9-12 அசுரத்தன்மை

ஆஸ்திக்யம் 18-42 உடலை விட்டபின், வேறொரு வாழ்க்கை உண்டு

ஆஸ்தே 3-6   இருக்கிறானோ

ஆஸ்தாய 7-20 கைக்கொண்டு

ஆஸ்தித 5-4 நிலைபெற்றோன்

ஆஸ்திதா: 3-20 அடைந்தனர்

ஆஹ  1-20 சொன்னான்

ஆஹவே 1-31 யுத்தத்தில்

ஆஹார : 17-7 உணவு

ஆஹாரா :17-8  உணவுகள்

ஆஹு : 3-42 கூறுவர்

ஆஹோ  17-1  அல்லது

ஆ வர்க சொற்கள் முடிந்தன.

Xxxx

இ வர்க்க சொற்கள்

இக்ஷ்வாகவே 4-1 இக்ஷ்வாகுவுக்கு

இங்கதே  6-19 அசைவது

இச்ச 12-9 விரும்பு

இச்சதி 7-21 விரும்புகிறானோ

இச்சந்த: 8-11  விரும்பி

இச்சஸி  11-7 விரும்புகிறாய்

இச்சா 13-6 விருப்பம்

இச்சாத்வேஷ சமுத்தே ன 7-27 விருப்பு, வெறுப்பினின்று உதித்த

இச்சாமி 1-35 விரும்புகிறேன்

இஜ் யதே  17-11 செய்யப்படுகிறதோ

இந்த்ரிய க்ராமம் 6-24 இந்திரியக் கூட்டத்தை

இந்த்ரியஸ்ய 3-34  இந்திரியங்களுடைய, புலன்களுடைய

இந்த்ரியயாக்னி ஷு 4-26  பொறிகளாகிய அக்கினியில்

இந்த்ரியாணி  2-58  புலன்கள்

இந்த்ரியாராம:  3-16  விஷய சுகங்களை நாடுபவர்

இந்த்ரியார்தான் 3-6 இந்திரியங்கள் நாடும்பொருள்களுடைய

இந்த்ரியார்தேப்ய: 2-58 இந்திரிய விஷயங்களில் இருந்து

இந்த்ரியாத்தேஷு  5-9 இந்திரிய விஷயங்களில்

இந்த்ரியேப்ய: 3-42 இந்திரியங்களைக் காட்டிலும்

இந்த்ரியை: 2-64 இந்த்ரியங்களால்

இமம் 1-28 இந்த

இமான் 10-16 இந்த/ plural

இமாம் – 2-39  இதை

இமா:  3-24 இந்த

இமே 1 -33  அவர்களே

இயம் 7-4 இந்த

இஷுபி: 2-4  அம்புகளால்

இஷ்ட காமத்துக் 3-10  விரும்பியதை அளிக்கும் காம தேனுவாக

இஷ்டானிஷ்டோப பத்திஷு  13-9 இஷ்டமுள்ளதும் இஷ்டமில்லாததும் வாய்த்த போது

இஷ்டம்  18-12 இன்பமாக, விரும்பக் கூடியதாக

இஷ்ட: 18-64   விரும்பக் கூடியவனாக, சிநேகிதனாக

இஷ்டான் 3-12  விரும்பிய

இஷ்டா :17-9  பிரியமானவை

இஷ்ட்வா 9-20 பூஜித்து

—subham—-

74 words are added in index 20

tags — Gita Tamil Index 20

ஜேம்ஸ் பாண்ட் (007) -ஐ தோற்கடித்த ஹிந்து! (Post No.10329)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,329

Date uploaded in London – –   12 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரு இந்துக் கடவுள் உலகில் உள்ள  மிகப் பெரிய உளவு அமைப்புகளான சி.ஐ.ஏ . கே.ஜி.பி. எம் ஐ 5, எம் ஐ 6, மொசாத்.இந்தியாவின் ‘ரா (RAW=Research and Analysis Wing)  ‘ உளவாளிகளையும் ஜேம்ஸ்பாண்ட், மிஸ் மார்பிள் , ஷெர்லாக் ஹோம்ஸ் ஆகியோரையும் விடப் பெரியவர்; திறமையானவர் என்று அதர்வண வேத மந்திரம் சொல்கிறது. ஏன் ?எப்படி?

இதோ கணக்கு

ஒரு மனிதன் சராசரியாக ஒரு நிமிடத்துக்கு 10 முறை கண் சிமிட்டுகிறான் (மன்னிக்கவும்; அழகான பெண்களைப்  பார்த்து கண் சிமிட்டுவதையும், அவள்  அழகில் மயங்கி, சொக்கிப் போய் , கண்களை சிமிட்டாமல் பார்த்துக்  கொண்டே இருந்ததையும் அதர்வ வேதம் சேர்க்கவில்லை!)

சரி, அப்படியானால் ஒரு மணிக்கு ஒரு மனிதன் சராசரியாகக் கண் சிமிட்டுவது 60X 10 =600 முறை

ஒரு நாளில் அவன் 16 மணி நேரம் விழித்து இருப்பான் . அப்போது அவன் கண் சிமிட்டுவது

600x 16 மணி = 9600 முறை

உலகின் ஜனத்தொகை , இதை நான் எழுதிய போது………..

7.9 பில்லியன் , அதாவது 7,906,132,700

இதை நான் எழுதும்போது லட்சக் கணக்கில் கூடிக்கொண்டே இருக்கும்.

உலக ஜனத் தொகை கடிகாரம் என்பதை கூகுள் மூலம் பார்த்தீர்களானால் ஒவ்வொரு வினாடியும் எவ்வளவு கூடுகிறது என்பதைக் காணலாம்; வியக்கலாம் .

நம் கணக்கிற்கு 7,906,132,700 என்று வைத்துக் கொண்டால் கண் சிமிட்டுதலின் எண்ணிக்கை

9600 X 7,906,132,700 (ஒரு நாளில் மட்டும்!!!!!!!)

இதை வானத்திலிருந்து வருணன் கணக்கிட்டுக் கொண்டே இருக்கிறானாம்; இப்படிச் சொல்கிறது அதர்வண வேதம் . தள்ளிப்போன வெள்ளைக்காரப் பயல்கள் கூட, அதர்வண வேதத்துக்கு கி.மு.1000 என்று தேதி குறிக்கிறான் அதாவது இற்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னர்!

இந்த வருண பகவானை தொல்காப்பியம் தமிழர் கடவுள் என்று விஷ்ணு, இந்திரன், வேல் முருகன், துர்க்கை ஆகியோருடன் பட்டியலில் சேர்த்து இருக்கிறது .

பார்ப்பனர்கள் தினமும் மாலை நேரத்தில் சொல்லும் சந்தியாவந்தன மந்திரத்தில் இவனிடம் மன்னிப்புக் கேட்கிறார்கள் ; அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை இன்று நீ பார்த்ததை நான் அறிவேன் ; ப்ளீஸ், ப்ளீஸ், மன்னிச்சுக்கோ.- என்று

துருக்கி- சிரியா  எல்லையில் உள்ள பொகஸ்கொய் Bogazkoy  களிமண் படிவ க்யூனிஃபார்ம் எழுத்துக் கல்வெட்டிலும் இந்திரன் மித்திரனுடன் வருணன் பெயர் உள்ளது. அதன் தேதி கி.மு 1340. அதாவது 3360 ஆண்டுகளுக்கு முந்தியது. இதெல்லாம் தள்ளிப்போன உதவாக்கரை அரைவேக்காடுகள் சொன்ன தேதி. அதாவது இந்து மதத்தை நக்கல் செய்யும், இந்து மதத்தைப் பின்பற்றாத, தன மதம் ஒன்று மட்டுமே கடவுளிடம் அழைத்துச் செல்லும் என்ற குருட்டு நம்பிக்கை கொண்ட வெள்ளைத் தோல்கள் சொன்ன சேதி . நம்முடைய பஞ்சாங்கமும் தமிழ்க் கல்வெட்டும் வியாசர் என்பவர் வேதத்தை நான்காகப் பிரித்ததையும் அது கலியுகம் துவங்குவதற்கு 60, 70 ஆண்டுகளுக்கு முன்னர் வியாசர் செய்த வேலை என்றும் சொல்கிறது. அதாவது இற்றைக்கு சுமார் 5200 ஆண்டுகளுக்கு முன்னர்!

இப்போது அதர்வண வேத கவிதையைப் படியுங்கள்; அதற்குப் பின்னர் இன்னும் சில சுவையான செய்திகளைச் சொல்கிறேன்:–

அதர்வண வேதம் – காண்டம் 4, சூக்தம் 16 (சூக்தம் 118 வருணன் என்றும் சொல்லுவர் )

1.அவன் பெரிய அதிகாரி; பக்கத்தில் இருந்து பார்ப்பது போல உன்னிப்பாக நம்மையே பார்க்கிறான் ; எல்லோரும் ரஹசியம் பேசுவதாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்; அது எல்லாம் தேவர்களுக்கு நன்கு தெரியும்

2. ஒருவன் நிற்பது, உட்காருவது, வளைந்து வளைந்து கோணலாக ஓடுவது, மறைவாக ஒளிந்து கொண்டு யாருக்கும் தெரியாமல் எதையாவது செய்வது, இருவர் மட்டுமே தனி இடத்தில் அமர்ந்து கிசு கிசு பேசுவது அத்தனையும் வருணனுக்குத் தெரியும்.எப்படித் தெரியுமா? அவன் உங்கள் அருகில் மூன்றவது ஆளாக நைசாக உட்கார்ந்து பார்த்துக்கொண்டே இருக்கிறான்!!

3.இந்தப் பூமி அவனுக்கு சொந்தம்; அதற்கு மேல் நாம் பார்க்கும் வானமும் அவனுக்குச் சொந்தம் . பூமியில் உள்ள கடலும், கடல் போன்ற ஆகாயமும் அவனுடையதே.

நாலாவது மந்திரம்

4.((சப்போஸ்suppose ; நீ ஆகாயத்துக்கு அப்பால் ஸ்பேஸ் ஷட்டிலில் போகிறாய் என்று வைத்துக்கொள்வோம்)). அப்போதும் நீ அவன் எல்லைக்கு அப்பால் சென்றதாக நினைத்துவிடாதே . அவனுடைய ஒற்றர்கள் அங்கிருந்துதான் பூமிக்கே வருகிறார்கள் . அவர்களுக்கு 1000 கண்கள். பூமியை பார்த்துக கொண்டே இருக்கிறார்கள் (அதாவது அவர்கள் ஸிஸிடி வி  CCTV காமெராக்கள்; கூகுள் மேப் GOOGLE MAP )

ஐந்தாவது மந்திரம்

வருணன் பெரிய ராஜா ; பூமி, ஆகாயம், அதற்கு இடையிலுள்ள அந்தரம், வானத்துக்கும் அப்பால் உள்ள இடம் அத்தனையையும் பார்க்கிறார்.இந்த ஜனங்களின் இமைச் சிமிட்டுகளையும் அவன் எண்ணியுள்ளான். சூதாடுபவன் காய்களை உன்னிப்பாக எண்ணுவது போல அவன் எண்ணிக்கொண்டே இருக்கிறான்!!!!

ஆறாவது மந்திரம்

6.ஏ வருணா ! பொய் சொல்ற பயல்களை 3X 7= 21 பாஸக்  கயிற்றால் கட்டி, அடித்து விட்டு விளாசு; ஆனால் உண்மை பேசுவோரைத் தொடாதே

ஏழாவது மந்திரம் 7.

ஏ வருணா ! விடாதே; அவர்களை 100 பாசக்கயிற்றால் கட்டு ; மனிதர்களைக் கவனிக்கும் வருணா! பொய்  சொல்ற பயல்களை நல்லாக் கட்டு. ((நீ அடிக்கிற அடியிலே )) அவன் வயிறு தொங்கி மஹோதர நோயுள்ளவன் (போல) ஆகட்டும்

எட்டாவது மந்திரம்

8.நீயே அகலம்; நீயே நீளம்; நீயே மனிதன் , நீயே தெய்வமாக நிற்கிறாய்  நீ முன்னைப் பழமைக்கும் பழமையானவன். பின்னைப் புதுமைக்கும் புதுமையானவன்

ஒன்பதா வது மந்திரம்

9.இன்னாரே ! நான் அந்த எல்லாப் பாசங்களுடன் உன்னைக் கட்டுகிறேன்.இந்த இந்த குடும்பத்தைச் சேர்ந்தவனே ! இந்த இந்தத் தாயின் மகனே ! அவர்களின் அனைவரையும் உனக்கு நான் அனுகூலமாய் நான் ஆக்ஞாபிக்கிறேன்.

XXXX

ஒன்றுக்கும் உதவாத உதிய மரத்தின் VON ROTH கருத்து !

7 வெள்ளைத் தோல்கள் இந்தப் பாடலை ஐரோப்பிய மொழிகளில்  மொழிபெயர்த்தன .

Max Muller, Griffith, Ludwig, Grill, Von Roth, Muir, Kaegi

அதில் தள்ளிப்போன பயல் ஜெர்மனியைச் சேர்ந்த VON ROTH வான் ராத். அவன் 7 வால்யூம்களில் சம்ஸ்க்ருத அகராதியை (St Petersburg Dictionary) உருவாக்கியவன். அதில் தத்துப் பித்து என்று உளறிக்கொட்டி கிளறி மூடி இருக்கிறான். அதை கோல்ட்ஸ்டக்கர் THEODORE GOLDSTUCKER என்ற பேரறிஞர் விளாசு விளாசு என்று விளாசி இருக்கிறார் . அவரும் வில்ஸன் , மாக்ஸ்முல்லர், வான் ராத் காலத்தில் வாழ்ந்தவர்; ஆனால் பெரிய வித்தியாசம்; அவர் ஒரு யூதர். மற்ற 30+++++ மொழிபெயர்ப்பாளர்களும் கிறிஸ்தவர்கள். அவர்கள் பிரபஞ்சமே 6000 ஆண்டுகளுக்கு முன்னர்தான் வந்தது என்பதை நம்பியவர்கள் . பாணினியின் காலம் என்பது பற்றி கோல்ட்ஸ்டக்கர் எழுதிய நூலில் மாக்ஸ் முல்லரையும் விடவில்லை. முன்னுக்குப் பின் முரணாக எழுதியுளாயே முட்டாள் என்று மாக்ஸ்முல்லர் தவறுகளை சுட்டிக்காட்டி ஏசுகிறார்.

நிற்க.

சப்ஜெக்டு subject க்கு வருகிறேன்.

அப்பேற்ப்பட்ட தள்ளிப்போன , ஒன்றுக்கும் உதவாத உதிய மரமான , தள்ளிப்போன ஜெர்மானியன் வான் ராத் VON ROTH வியக்கிறான்  : வேதத்தில் கடவுளைப் பற்றிய கவிதையில் இதை வீட உன்னதமான கவிதையை நன் கண்டதே இல்லை. இறைவன் சர்வ வியாபி, எல்லாம் வல்லவன் , எங்கும் நிறைந்தவன் , எல்லாம் அறிந்தவன் என்பதை இந்த அளவுக்கு விளக்கும் கவிதையை நான் கண்டதே இல்லை; இதில் கடைசி மந்திரம் எதிரிகளுக்கு எதிரான சாபம் போல இருப்பது ஒன்று மட்டுமே குறை.

xxx

லண்டன் சுவாமிநாதன் வியாக்கியானம்

இது ஒரு அற்புதமான கவிதை; வருணனைப் பற்றிய வருணணைகள் அனைத்தும் ரிக் வேதத்தில் இதே தொனியில் அமைந்திருப்பது உண்மையே. ஆனால் இங்கே புலவர் வருணிக்கும் மூன்று விஷயங்கள் வேறு எங்கும் இல்லை

1.அவன் மனிதனின் கண் சிமிட்டல்களையும் எண்ணிக்கொண்டே இருக்கிறான். அதாவது  NASA நாஸா , PENTAGON பெண்டகன் முதலிய இடங்களில் உள்ள சூப்பர் கம்பியூட்டர்களை விட வருணன் பெரிய கம்ப்யூட்டர். அவன் சிசி டிவி CCTV காமெரா போல பார்த்துக் கொண்டிருப்பதோடு பாவ புண்ணியங்களை கணக்குப் போ ட்டுக் கொண்டே இருக்கிறான்.  இதனால் தினமும் மாலை வேளை மந்திரத்தில் பிராமணர்கள் வருண பகவானிடம் பாவ மன்னிப்பு கேட்கின்றனர் .

2.அவனுடைய தூதர்கள் உளவாளிகள் ; அவர்களுக்கு ஆயிரம் கண்கள் . இப்போது கூகிள் மேப் GOOGLE MAP மூலம் நாம் யார் வீட்டின் வாசலில் யார் நிற்கிறார் என்பதைக் காண முடியும். அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்குள் யார் நுழைகிறார், வெளியே வருகிறார் என்று காண முடியும். இதை வருணன் ஒற்றர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே செய்துள்ளனர். செய்து வருகின்றனர்.

3. வருணன் இன்விஸிபிள் மேன்  ; அதாவது நாம் இருவர் மட்டுமே ரஹசியம் பேசுகிறோம் என்று நினைக்கிறோம். புலவர் சொல்கிறார்;  டேய் மக்கு, மடையா; உன் பின்னால் வருணனும் உனக்குத் தெரியாமல் கேட்டுக் கொண்டு இருக்கிறாண்டா. என்று

இறைவனின் மஹிமையை இதைவிட எவனாவது வருணிக்க முடியுமா ?

பாரதியார் சொன்னார் சுவை புதிது, பொருள் புதிது, சோதிமிக்க நவ கவிதை; எந்நாளும் அழியாதா மா கவிதை என்று ; அந்த வரிகள் இந்தக் கவிதைக்கு நன்கு பொருந்தும்.

மாணிக்க வாசகர் இறைவனை வருணிக்கையில் முன்னைப் பழமைக்கும் பழமை, புதுமைக்கும் புதுமை என்றார் ; அற்புதமான வாசகம்; அதுவும் இந்த துதியில் தொனிக்கிறது

நோய்கள் வருவது ஒருவருடைய பூர்வ ஜென்ம பாவத்தால் என்பது இந்துக்களின் கருத்து. இதை ஏற்காத வான் ராத் அதை ஒரு குறையாக கருதுகிறார். ஏனெனில் பாவம் செய்தொரின் மகா உதர (மஹோதர = பெரு வயிறு) நோய் பற்றி வருகிறது.

பொய் சொல்வோரை கட்டி அடித்து நொறுக்கு; உண்மை சொல்வோரைக் காப்பாற்று என்பது அற்புதமான கருத்து. கந்த சட்டி கவசத்தில் வரம் வரிகளை நினைவு படுத்துகிறார் புலவர் (கட்டி உருட்டி கால் முறியக்கட்டு, குத்துக் குத்துக் கூர் வடிவேலால்)

மந்திரம் ஆறில் மூவேழ் 3x 7=21 என்ற எண் வருகிறது புற நானூற்றின் 166 ஆவது பாடலிலும் இது வருகிறது..

கடவுள் என்பவன் வானத்தில் ஒரு மாளிகையில் உட்காரவில்லை எங்கும் நிறைந்தவன் என்பதை வருணனே  நீ இறைவன் நீ மனிதன் என்ற மந்திரம் காட்டுகிறது.

எல்லாம் வல்ல,எங்கும் நிறைந்த, எல்லாம் (OMNI POTENT, OMNI PRESENT, OMNI SCIENT )அறிந்த வருணனை, மாலை வேளையில் துதிக்கும் பிராமணனைக் கண்டால் ஒரு கும்பிடு போடுங்கள் . ஏனெனில் அந்த வருணனின் மஹிமையை, தொல் காப்பியன் சொன்னதை, இன்றும் நமக்கு சொல்லி வருகிறார்கள்!

மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே.

– தொல்காப்பியம்-பொருளதிகாரம்-அகத்திணை இயல்-பாடல் எண்:5

–SUBHAM–

tags- வருணன் , உளவாளி, கண் சிமிட்டுதல், ஜேம்ஸ் பாண்ட் , அதர்வண வேதம்

ஒரு அவசர செய்தியை அனைவருக்கும் பரப்புவோம்!

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,328

Date uploaded in London – –   12 NOVEMBER  2021     

  Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ச.நாகராஜன் எழுதியுள்ள சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பற்றிய பத்து உரைகள் ஆல் இந்தியா ரேடியே சென்னை வானொலி A அலைவரிசையில் (720 Hz) இன்று முதல் (11-11-2021) முதல் ஒலிபரப்பாகிறது. நேரம் தினமும் காலை 6.55 (மாநிலச் செய்திகள் முடிந்த பின்னர்). இதை ஆன்லைன் வாயிலாகவும் கேட்டு மகிழலாம்.

இணையதளம் : https://onlineradiofm.in/tamil-nadu/chennai/all-india-air-chennai-pc

11-11-2021 காலை ஒலிபரப்பான முதல் உரை கீழே தரப்படுகிறது.

ஒரு அவசர செய்தியை அனைவருக்கும் பரப்புவோம்!

ச.நாகராஜன்

இன்றைய வேக யுகத்தில் ஒரு அவசர செய்தியை அனைவருக்கும் பரப்ப வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். ஆகவே அனைவரும் ஒரு நிமிடம் தங்கள் வேலையை நிறுத்தி விட்டு இந்த அவசர செய்தி என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் வாழும் பூமியின் குரல்வளை ஒவ்வொரு விநாடியும் நெரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது என்பது தான் அதிர்ச்சியூட்டும் அவசரச் செய்தி.

புவி வெப்பம் கூடிக் கொண்டே இருப்பதால் ஒவ்வொரு விநாடியும் உலகெங்கும் வாழும் மக்கள் பெரும் அபாயத்திற்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை விட வேறு எது தான் அவசரச் செய்தியாக இருக்க முடியும்!

நச்சுப் புகையான கார்பன் டை ஆக்ஸைடு உலகெங்கிலும் மிக அதிகமாக பரவிக் கொண்டே இருக்கிறது என்றும் இதனால் புவி வெப்பமாவது கூடிக் கொண்டே போகிறது என்றும் உலகின் அறிவார்ந்த விஞ்ஞானிகள் எச்சரித்துக் கொண்டே இருக்கின்றனர். 1850ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை எடுத்துக் கொண்டால் பூமியின் வெப்பநிலை 1.5 (ஒன்று புள்ளி ஐந்து) டிகிரி ஃபாரன்ஹீட் கூடி இருக்கிறது. இது இன்னும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதனால் கடற்கரை ஓரங்களில் உள்ள நகரங்கள் கடல் பொங்கி உள்ளே நுழைவதால் அழியும். வெப்பநிலை உயர்வால் மழை பொழிவது குறையும். பல நாடுகளிலும் வரலாறு கண்டிராத அளவில் பஞ்சங்கள் உருவாகும். வெப்ப அலைகள் மனிதர்களின் உடல்நிலையைப் பாதித்து ஆரோக்கிய சீர்கேடு பெருமளவில் ஏற்படும்; அநியாயமாக மனித உயிர்கள் அழியும்! கடல் அமிலத்தன்மை உடையதாக ஆகி விடும். கடல் வாழ் உயிரினங்கள் அழியும். இதன் ஆரம்ப அறிகுறிகள் இப்போதே தெரிய ஆரம்பித்து விட்டன. 

ஆகவே ஒவ்வொரு மனிதனும் விஞ்ஞானிகளால் அறிவிக்கப்பட்ட இந்த அவசரநிலை பிரகடனத்தை உள்ளார்ந்து மனதில் ஏற்று புவி வெப்பம் உயர்வதற்கு முக்கியமான காரணங்களுள் தலையாய ஒன்றாக இருக்கும் நச்சுப்புகையான கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றத்தைத் தடுக்க வேண்டும். அதற்கு முதல் படியாக வாகனங்களிலிருந்து வெளியேற்றும் நச்சுப்புகை வெளியேற்றத்தைத் ஒவ்வொருவரும் தடுக்க வேண்டும்.

நச்சுப் புகையைக் கக்கும் வாகனப் பயன்பாட்டை முடிந்த அளவில் குறைப்பது, மின்சாரத்தினால் இயங்கும் வண்டிகளை வாங்க ஆரம்பித்துப் பயன்படுத்துவது, சூரிய ஆற்றலை முடிந்த அளவில் அதிகப்படியாக உபயோகப்படுத்துவது, குறுகிய தூரங்களில் உள்ள கடைகள் உள்ளிட்டவற்றிற்கு நடந்தோ அல்லது சைக்கிளிலோ செல்வது, ஒரே பாதையில் செல்லும் பலரும் தங்களுக்குள் ஒரு புரிதலை ஏற்படுத்திக் கொண்டு ஒரே வாகனத்தில் பயணம் செய்வது, முடிந்தவரையில் தனி நபருக்கென காரில் செல்லாமல் பஸ்களைப் பயன்படுத்துவது, அல்லது உள்ளூர் மின் ரயில் போக்குவரத்தைப் பயன்படுத்துவது போன்ற பல வழிகளையும் தங்களுக்கு உகந்த முறையில் கடைப்பிடித்தால் பெருமளவு நச்சுப் புகை வெளியேறுவது குறையும் அல்லவா?

நச்சுப் புகை பற்றிய அவசர செய்தியைப் பரப்புவோம்; அதைப் பெருமளவு குறைக்கும் வழிகளைப் பின்பற்றுவோம். புவியைக் காப்போம்; அதன் மூலம் நம் சந்ததியினரைக் காப்போம்!

**

tags– புவி வெப்பம், அவசர செய்தி, நச்சுப் புகை