
Post No. 9974
Date uploaded in London – 14 AUGUST 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஹெல்த்கேர் ராஜா | 13 Aug 2021, 20:57 (8 hours ago) | ||
to me |
அன்புடையீர், நமஸ்காரம்.
தங்களது கட்டுரையில் படித்த வரிகள்:
‘நான் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தினமும் விநாயக கவசம் படித்து வருகிறேன். இதில் மரீசி முனிவர் ஒரு அருமையான லிஸ்ட் list கொடுக்கிறார்’.
விநாயக கவசம் காசிப முனிவர்
எழுதியது தானே அவரது தகப்பனார் தானே மரீசி முனிவர். சிறிது சந்தேகம் விளக்கம் வேண்டி நிற்கிறேன் சுவாமி.

MY REPLY
நல்ல கேள்வி
திருநெல்வேலி ஹெல்த் கேர் HEALTH CARE பத்திரிகை ராஜா அவர்களின் கேள்விக்கு லண்டன் சுவாமிநாதன் பதில்.
கவசங்கள் அனைத்தையும் தொகுத்து 20-11-1962ல் முன்னுரை எழுதிய சு.அ இராமசாமிப் புலவர், தனது வாழ்வில் நடந்த அற்புதங்களை 6 பக்கங்களில் எழுதியுள்ளார். அதைத் தனியாக பின்னொரு சமயம் எழுதுகிறேன்
முதலில் ஒரு அதிசய விஷயத்தைச் சொல்லிவிட்டு உங்கள் கேள்விக்குப் பதில் சொல்லுகிறேன்.
நான் வேலையிலிருந்து ஒய்வு பெற்று ஏழு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இப்பொழுது வயது 72-ஐத் தாண்டிவிட்டது. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த சம்பவம் நடந்திருக்கவேண்டும்.
நான் இரவு 9 மணி வாக்கில் பரடுக்கச் சென்றுவிட்டு காலை நாலு அல்லது நாலரை மணிக்கு எழுந்திருக்கும் பழக்கம் உடையவன் . நான் வசிக்கும் லண்டன் போன்ற மேலைநாட்டு நகரங்களில் படுக்கை அறைகள், மேல் மாடியிலிருக்கும். எனது படுக்கை அறையிலிருந்து காலை 4 மணிவாக்கில் கீழே காப்பி போட்டுக்குடிக்க இறங்கினேன். நமக்குத் தெரிந்த மாடிப்படிகள் தானே என்று, தினமும் மற்றவர்களைக் கஷ்டப்படுத்தாமல் இருப்பதாற்காக மின்சார விளக்குப் போடாமல் இறங்கினேன். ஒரு சின்னத்தப்பு செய்திருப்பேன். ‘தட தட’ என்று மாடிப்படியில் இருந்து உருண்டு விழுந்தேன். மாடியில் உறங்கிய எனது மனைவியும் மகனும் அலறிப்புடைத்துக்கொண்டு ஓடிவந்தனர். (லண்டனில் ஏதோ பூகம்பம் ஏற்பட்டுவிட்டது என்று எண்ணி!! பிரிட்டனிலும் அவ்வப்போது நில அதிர்வுகள் ஏற்படும். ஆனால் லண்டனில் எனக்குத் தெரிந்து 33 ஆண்டுகளில் ஏற்பட்டதில்லை ). நான் சிரித்துக்கொண்டே சமையல் அறைக்குள் புகுந்து காப்பி போடச் சென்றேன். விஷயத்தைக் கேட்டுவிட்டு அவர்களும் சிரித்துவிட்டு, சுகமாகத் தூங்கப்போய்விட்டார்கள். பந்து போல மாடியில் உருண்ட எனக்கு ஒரு சிறிது காயமும் இல்லை. அந்த அதிர்ச்சியும் இல்லை. காலையில் அவர்கள் தூங்கி எழுந்து வந்தவுடன் நான் சொன்னது: “நான் இவ்வளவு காலமும் படித்து வரும் விநாயக கவசம்தான் என்னைக் காப்பாற்றியிருக்கிறது” என்று.
இது போல சில சம்பவங்களை நூல் வெளியிட்ட ராமசாமிப்புலவரும் எழுதிவிட்டு இதை படிப்பவர்கள் ‘நகைக்கக்கூடும்’ என்றும் எழுதி இருக்கிறார்.
நகைப்பவர்கள் சிரிக்கட்டும்; கவசத்தைப் படிப்பவர்கள் சிறக்கட்டும்.
xxxxxxxx
இதோ உங்கள் கேள்விக்குப் பதில் :–
விநாயக கவசம் துவங்குவதற்கு முன்னர் அடைப்புக் குறிக்குள் உள்ள ஒரு பத்தியில் “முதலில் இக்கவசத்தை காசிப முனிவர் முற்கல முனிவருக்கு அருளிச் செய்தார். அவர் மாண்டவிய முனிவருக்கு அருளிச் செய்தார். அவர் மரீசி முனிவருக்கு அருளிச் செய்தார். அவர் பல முனிவர்கட்குத் திருவாய் மலர்ந்தருளினார் ………)
கவசம் முடிந்தவுடன் விநாயக கவசப் பலன் என்று மூன்று STANZAS பத்திகள் உள்ளன. பிற்கால கவச நூல்களில் இந்த 3 பாடல்களையும் வெளியிடவில்லை. அதில் கடைசி நான்கு வரிகள் கீழ்கண்டவாறு முடிகிறது .
“அன்புறுதி ஆசாரம் உடையார்க்கிக்
கவசத்தை அறைக அல்லார்க்கு
என்பெறினும் உரையற்க எனக்கிளந்து
மரீசீதன திருக்கை யுற்றான்” .
ஆக நீங்கள் சொல்லுவது சரியே. காஸ்யப முனிவர்தான் இதை இயற்றியிருக்க வேண்டும். அது பின்னர் மரீசி முனிவருக்குக் கிடைத்து, அவர் வாய் வழியாகக் கேட்டு, நாம் சொல்லிவருகிறோம்.
இது போன்ற புதிர்கள் பல நூல்களில் உள்ளன. ஆயினும் நாம் மூல புருஷனின் பெயரையே பயன்படுத்துகிறோம். புராணங்கள் அனைத்தையும் சுதர் அல்லது சுத முனிவர் நமக்குச் சொல்லியதாகப் படிக்கிறோம்.ஆயினும் அவற்றை வியாசரே எழுதியதாக பின்னர் சொல்கிறோம். மநு தர்ம சாஸ்திரத்தில் பிருகு முனிவர் சொல்கிறார் என்று 2600 ஸ்லோகங்கள் வந்த போதும் அதை இன்றுவரை மநு சொன்னதாகவே எழுதுகிறோம். ஆராய்ச்சியாளர்கள் மட்டும் இது ‘ஒரிஜினல் மநு நூல் அல்ல’; பிற்காலத்தில் அது பிருகு முனிவரால் அப்டேட் UPDATE செய்யப்பட்டது என்று சொல்லுகிறார்கள் . இந்திய அரசியல் சாசனம் அம்பேத்கார் தலைமையிலுள்ள குழுவால் 1950ல் உருவாக்கப்பட்டது. அதில் நூற்றுக்கும் மேலான திருத்தங்கள் செய்யப்பட்டபோதிலும் அதை 1950ம் ஆண்டு அரசியல் சாசனம் என்றே நாம் அழைக்கிறோம்.
இவைகளைப் பார்க்கையில் மரீசி முனிவர் சொன்னதாக விநாயக கவசம் முடிந்தாலும் கவசத்தில் வராத முன்னுரை காசிப முனிவர் சொன்னதாகக் கூறுவதால் நீங்கள் சொல்லுவது சரி. இதையும் அந்தக்கட்டுரையின் பிற்பகுதியில் சேர்த்துவிடுகிறேன். நன்றி.

–SUBHAM–
TAGS- விநாயக கவசம் ,எழுதியது யார், கவச, அற்புதங்கள் ,பலன்கள்
HARE RAMA HARE KRISHNA
/ August 14, 2021விநாயக கவசம் தரலாமே
Tamil and Vedas
/ August 14, 2021YES. I WILL PUBLISH IT WITH THE MIRACLES SEEN BY RAMASWAMI PULAVAR.