Compiled BY LONDON SWAMINATHAN
Post No. 10,335
Date uploaded in London – – 14 NOVEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இன்று ஞாயிற்றுக் கிழமை நவம்பர் 14 -ம் தேதி 2021
ஆம் ஆண்டு
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.
XXXX
திருப்பதி பாலாஜி கோவிலில் அமித் ஷா
பாரம்பரிய உடை அணிந்து வந்திருந்த அமித் ஷாவுக்கு, ஆலயத்தை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) உயர் அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருப்பதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தெற்கு மண்டல கவுன்சிலின் 29வது கூட்டத்துக்கு முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சனிக்கிழமை இரவு திருமலை திருப்பதி கோயிலில் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
அமித் ஷா திருப்பதி கோவிலுக்கு சென்ற போது ஆந்திர பிரதேச முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியும் சென்றார்.
விமான நிலையத்தில் தரையிறங்கியதும், ஷா உடனடியாக சாலை வழியாக அருகிலுள்ள திருமலை மலைகளுக்குச் சென்று ஆலயத்தில் ஸ்ரீ வெங்கடாசலபதியை தரிசித்தார்
XXXX
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை நடை திறப்பு
மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, நாளை திங்கட்கிழமை திறக்கப்படுகிறது. தொடர்ந்து புதிய மேல்சாந்திகள் பதவியேற்றுக் கொள்கிறார்கள்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் 1-ந் தேதி முதல் 60 தினங்கள், சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி பக்தர்கள் விரதம் தொடங்கி, இருமுடி கட்டி சபரிமலை வந்து அய்யப்பனை தரிசனம் செய்து வழிபாடு நடத்தி வருவார்கள். நடப்பு மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இதையடுத்து மறுநாள் அதிகாலை முதல் வழக்கமான பூஜைகள் தொடர்ந்து நடைபெறும்.
கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி கோவில் நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார்.
தொடர்ந்து 18-ம் படிக்கு கீழ் உள்ள நெருப்பு ஆழியில் கற்பூரம் வைத்து தீ மூட்டப்படும். அதனை தொடர்ந்து, புதிய மேல்சாந்திகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி சன்னிதானத்தில் நடைபெறும். முன்னதாக சபரிமலை அய்யப்பன் கோவில் மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பரமேஸ்வரன் நம்பூதிரி, மாளிகப்புரம் கோவில் மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சம்பு நம்பூதிரி ஆகியோர் இருமுடி கட்டி 18-ம் படிகளுக்கு கீழ் மேளதாளம் முழங்க அழைத்து வரப்படுவார்கள்.
டிசம்பர் 26-ந் தேதி மண்டல பூஜையும், அடுத்த ஆண்டு (2022) ஜனவரி 14-ந் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறும்.
திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் தலைவராக இருந்த வாசு மற்றும் உறுப்பினர் கெ.எஸ்.ரவி ஆகியோரின் பதவி காலம் முடிவடைந்தது. இதை தொடர்ந்து புதிய தலைவராக கே.அனந்த கோபன் மற்றும் புதிய உறுப்பினராக வக்கீல் மனோஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
xxxx
திருவண்ணாமலை தீப விழா; முன்னதாக குவியும் பக்தர்கள்
திருவண்ணாமலையில் வரும் 17ம் தேதி முதல் கிரிவலம் செல்லவும், சுவாமி தரிசனத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், முன்னதாகவே பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 10ம் தேதி, கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கொரோனா ஊரடங்கால், சுவாமி மாட வீதி உலா ரத்து செய்யப்பட்டு, கோவிலினுள் வலம் வரும் நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது.கடந்த 10 முதல் வரும் 17ம் தேதி வரை, ‘ஆன்லைன்’ பதிவு மூலம், வெளியூர் பக்தர்கள் 10 ஆயிரம் பேர், உள்ளூர் பக்தர்கள் 3,000 பேர் என மொத்தம், 13 ஆயிரம் பேர் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
நகரில் உள்ள 250க்கும் மேற்பட்ட லாட்ஜ்கள் மற்றும் காலி வீடுகள், கல்யாண மண்டபங்கள் ஆகியவற்றை தேடி புக் செய்து வருகின்றனர்.
மஹா தீபம், அதாவது கார்த்திகை தீபம், நவம்பர் 19ம் தேதி மாலையில் ஏற்றப்படுகிறது
XXX
சாத் பூஜை!: யமுனையில் பொங்கி வழியும் ரசாயன நுரையை பொருட்படுத்தாமல் புனித நீராடிய மக்கள்
டெல்லியில் யமுனை ஆற்றில் பொங்கி வரும் ரசாயன நுரையை பொருட்படுத்தாமல் மக்கள் சாத் பூஜையை ஒட்டி நீராடி வருகின்றனர். வடமாநிலங்களில் கோலாகலமாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று சூரியனை வழிபடும் சாத் பூஜை. சூரியனுக்கு நன்றி கூறும் இவ்விழா 4 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டில் சாத் பூஜை தொடங்கியதை அடுத்து பல்வேறு மாநிலங்களில் நீர் நிலைகளில் மக்கள் புனித நீராடி வழிபாடு நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் கலிந்தி கஞ்ச் அருகே யமுனை ஆற்றில் ரசாயன நுரை பொங்கி வழிந்தது. இதனை பார்ப்பதற்கே அச்சம் ஏற்பட்ட நிலையில் ரசாயன நுரை பற்றி சற்றும் கவலைப்படாமல் மக்கள் யமுனை நதியில் புனித நீராடினர். சாத் பூஜையை பிகார், உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த மக்களே பெரும்பாலும் கொண்டாடுகின்றனர். கோவில் குளங்கள் மற்றும் நீர் நிலைகளில் பக்தர்கள் புனித நீராடி சூரியனை வழிபாட்டு வருகின்றனர்.
xxxx
குமரி மாவட்ட கோவில்களில் குருப்பெயர்ச்சி விழா
குருபகவான் ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான குரு பெயர்ச்சி விழா சனிக்கிழமை நடந்தது. இப்போது மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். இதையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் குருப்பெயர்ச்சி விழா நட ந்தது.
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் சுசீந்திரம் தாளகுளம் பிள்ளையார் கோவில், ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மற்றும் குமரி மாவட்டத்தில் குருபகவான் சன்னதிகள் உள்ள கோவில்களில் குருப்பெயர்ச்சி விழா மற்றும் சிறப்பு வழிபாடுகள் சனிக்கிழமை நட த்தப்பட்டது
XXXX
இந்தியாவில், பாரதத்தின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு பிறந்த தினமான நவம்பர் 14ம் தேதி, குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது . இந்தியாவில் வசிக்கும் குழந்தைகள் அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்
XXXX
நவம்பர் 19-ம் தேதி கார்த்திகை பௌர்ணமி அன்று தீபத் திருநாளைக் கொண்டாடப்போகும் அனைத்து இந்துக்களுக்கும் இப்போதே கார்த்திகை வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறோம்.
பௌர்ணமி அன்று சந்திர கிரகணமும் வருகிறது. இது இந்தியாவில் தெரியாது. ஐரோப்பிய நகரங்களுக்கு உள்ளூர் பத்திரிக்கைகளில் வரும் செய்திகளைக் கவனிக்கவும்
XXXX
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் VAISHNAVI ANAND
நன்றி, வணக்கம்
tags- Tamilhindunews, 14112021,