ஒரு அவசர செய்தியை அனைவருக்கும் பரப்புவோம்!

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,328

Date uploaded in London – –   12 NOVEMBER  2021     

  Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ச.நாகராஜன் எழுதியுள்ள சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பற்றிய பத்து உரைகள் ஆல் இந்தியா ரேடியே சென்னை வானொலி A அலைவரிசையில் (720 Hz) இன்று முதல் (11-11-2021) முதல் ஒலிபரப்பாகிறது. நேரம் தினமும் காலை 6.55 (மாநிலச் செய்திகள் முடிந்த பின்னர்). இதை ஆன்லைன் வாயிலாகவும் கேட்டு மகிழலாம்.

இணையதளம் : https://onlineradiofm.in/tamil-nadu/chennai/all-india-air-chennai-pc

11-11-2021 காலை ஒலிபரப்பான முதல் உரை கீழே தரப்படுகிறது.

ஒரு அவசர செய்தியை அனைவருக்கும் பரப்புவோம்!

ச.நாகராஜன்

இன்றைய வேக யுகத்தில் ஒரு அவசர செய்தியை அனைவருக்கும் பரப்ப வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். ஆகவே அனைவரும் ஒரு நிமிடம் தங்கள் வேலையை நிறுத்தி விட்டு இந்த அவசர செய்தி என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் வாழும் பூமியின் குரல்வளை ஒவ்வொரு விநாடியும் நெரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது என்பது தான் அதிர்ச்சியூட்டும் அவசரச் செய்தி.

புவி வெப்பம் கூடிக் கொண்டே இருப்பதால் ஒவ்வொரு விநாடியும் உலகெங்கும் வாழும் மக்கள் பெரும் அபாயத்திற்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை விட வேறு எது தான் அவசரச் செய்தியாக இருக்க முடியும்!

நச்சுப் புகையான கார்பன் டை ஆக்ஸைடு உலகெங்கிலும் மிக அதிகமாக பரவிக் கொண்டே இருக்கிறது என்றும் இதனால் புவி வெப்பமாவது கூடிக் கொண்டே போகிறது என்றும் உலகின் அறிவார்ந்த விஞ்ஞானிகள் எச்சரித்துக் கொண்டே இருக்கின்றனர். 1850ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை எடுத்துக் கொண்டால் பூமியின் வெப்பநிலை 1.5 (ஒன்று புள்ளி ஐந்து) டிகிரி ஃபாரன்ஹீட் கூடி இருக்கிறது. இது இன்னும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதனால் கடற்கரை ஓரங்களில் உள்ள நகரங்கள் கடல் பொங்கி உள்ளே நுழைவதால் அழியும். வெப்பநிலை உயர்வால் மழை பொழிவது குறையும். பல நாடுகளிலும் வரலாறு கண்டிராத அளவில் பஞ்சங்கள் உருவாகும். வெப்ப அலைகள் மனிதர்களின் உடல்நிலையைப் பாதித்து ஆரோக்கிய சீர்கேடு பெருமளவில் ஏற்படும்; அநியாயமாக மனித உயிர்கள் அழியும்! கடல் அமிலத்தன்மை உடையதாக ஆகி விடும். கடல் வாழ் உயிரினங்கள் அழியும். இதன் ஆரம்ப அறிகுறிகள் இப்போதே தெரிய ஆரம்பித்து விட்டன. 

ஆகவே ஒவ்வொரு மனிதனும் விஞ்ஞானிகளால் அறிவிக்கப்பட்ட இந்த அவசரநிலை பிரகடனத்தை உள்ளார்ந்து மனதில் ஏற்று புவி வெப்பம் உயர்வதற்கு முக்கியமான காரணங்களுள் தலையாய ஒன்றாக இருக்கும் நச்சுப்புகையான கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றத்தைத் தடுக்க வேண்டும். அதற்கு முதல் படியாக வாகனங்களிலிருந்து வெளியேற்றும் நச்சுப்புகை வெளியேற்றத்தைத் ஒவ்வொருவரும் தடுக்க வேண்டும்.

நச்சுப் புகையைக் கக்கும் வாகனப் பயன்பாட்டை முடிந்த அளவில் குறைப்பது, மின்சாரத்தினால் இயங்கும் வண்டிகளை வாங்க ஆரம்பித்துப் பயன்படுத்துவது, சூரிய ஆற்றலை முடிந்த அளவில் அதிகப்படியாக உபயோகப்படுத்துவது, குறுகிய தூரங்களில் உள்ள கடைகள் உள்ளிட்டவற்றிற்கு நடந்தோ அல்லது சைக்கிளிலோ செல்வது, ஒரே பாதையில் செல்லும் பலரும் தங்களுக்குள் ஒரு புரிதலை ஏற்படுத்திக் கொண்டு ஒரே வாகனத்தில் பயணம் செய்வது, முடிந்தவரையில் தனி நபருக்கென காரில் செல்லாமல் பஸ்களைப் பயன்படுத்துவது, அல்லது உள்ளூர் மின் ரயில் போக்குவரத்தைப் பயன்படுத்துவது போன்ற பல வழிகளையும் தங்களுக்கு உகந்த முறையில் கடைப்பிடித்தால் பெருமளவு நச்சுப் புகை வெளியேறுவது குறையும் அல்லவா?

நச்சுப் புகை பற்றிய அவசர செய்தியைப் பரப்புவோம்; அதைப் பெருமளவு குறைக்கும் வழிகளைப் பின்பற்றுவோம். புவியைக் காப்போம்; அதன் மூலம் நம் சந்ததியினரைக் காப்போம்!

**

tags– புவி வெப்பம், அவசர செய்தி, நச்சுப் புகை

Hindu God is cleverer than C I A, K G B, MI 5, MI 6, Mossad , James Bond, R A W Spies! (Post No.10,327)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,327

Date uploaded in London – –   11 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

VEDIC GOD VARUNA is described as a spy in the Vedas. The implied meaning is ‘nothing can happen without his knowledge’. His description beats all the spies from RAW, Mossad, CIA, KGB, FBI, MI 5, MI 6, Scotland Yard and James Bond Films. After reading the Atharva Veda hymn on Varuna, even anti Hindu German Indologist Von Roth said this was The Best Description of a God in the Vedas. His omnipresence and Omnipotence are described beautifully and powerfully.

Super Computer

Varuna is said to count the batting of eyelids of every human being. That means he is the most advanced Super Computer; because he counts 75840 billion every day.

Following is my calculation:

Average 10 blinks per minute;  X 60 minutes= 600 per hour

600X16 hours (eight hour sleep deleted from 24 hours a day)=   9600 blinks per day per person X 7.9 billion =75840 billon blinks per day in the whole world

In numbers 75840 ,000, 000,000 PER DAY

IN SHORT

VARUNA IS THE CCTV OF THE WORLD

VARUNA IS THE SUPER SPY WITH 1000 EYES

VARUNA IS THE MOST ADVANCED SUPER COMPUTER WITH BILLIONS OF CALCULATIONS EVERY MINUTE

VARUNA IS EVERY WHERE ‘UP ABOVE THE WORLD SO HIGH’ AND BOTTOM OF THE MARIANA TRENCH IN PACIFIC OCEAN, DEEPEST POINT in ocean

VARUNA IS HUMAN AND DIVINE

VARUNA IS IN EVERY WATER DROP.

HE IS THE INVISIBLE THIRD MAN IN EVERY SECRET MEETINGS.

HE HAS THE NOOSE WHICH WILL BIND EVERYONE.

HE PUNISHES ALL THE EVIL DOERS.

HE IS IN CHARGE OF THE LAW DEPARTMENT OF THE UNIVERSE

HE IS THE CHIEF JUSTICE OF THE SUPREME COURSE OF THE UNIVERSE.

XXX

ALL BRAHMINS WORSHIP VARUNA EVERYDAY IN THE SANDHYA VANDANA MANTRA. THEY SALUTE HIM WITH SPEACIAL MANTRA EVERY EVENING. HE IS MENTIONED IN THE BOGAZKOY INSCRIPTION DATED 1340 BCE (in Turkey)

Xxx

Here is the hymn from Atharva Veda; though there are hymns on Varuna in Rig Veda , this is the best. Not only that, it shows how powerful Hindu Gods are.

xxx

HYMN XVI, CANTO 4, ATHARVA VEDA

On the omnipresence and omniscience of Varuna

1)The mighty Ruler of these worlds beholds as though from close

   at hand,

  The man who thinks he acts by stealth: all this the Gods

   perceive and know.

2)If a man stands or walks or moves in secret, goes to his lying-

   down or his uprising,

  What two men whisper as they sit together, King Varuna knows:

   he as the third is present.

3)This earth, too, is King Varuna’s possession, and the high

   heaven whose ends are far asunder.

  The loins of Varuna are both the oceans, and this small drop of

   water, too, contains him. p. a124

4)If one should flee afar beyond the heaven, King Varuna would

   still be round about him.

  Proceeding hither from the sky his envoys look, thousand-eyed,

   over the earth beneath them.

5)All this the royal Varuna beholdeth, all between heaven and

   earth and all beyond them.

  The twinklings of men’s eyelids hath he counted. As one who

   plays throws dice he settles all things.

6)Those fatal snares of thine which stand extended, threefold,

  O Varuna, seven by seven,

  May they all catch the man who tells a falsehood, and pass un-

   harmed the man whose words are truthful.

7)Varuna, snare him with a hundred nooses! Man’s watcher! let

   not him who lies escape thee.

  There let the villain sit with hanging belly and bandaged like a

   cask whose hoops are broken.

8)Varuna sends, and drives away, diseases: Varuna is both native

   and a stranger,

  Varuna is celestial and is human.

9)I bind and hold thee fast with all these nooses, thou son of such

   a man and such a mother.

  All these do I assign thee as thy portion.

XXX

My comments:-

Von Roth said

There is no hymn in the whole Vedic literature which express the divine omniscience in such forcible (forceful) terms as this .

Hindus believe diseases come to one who does sinful activities in previous births. So we find diseases in this mantra.

Griffith points out that there is one statement in the Bible (Psalms 139-2-3 which can be compared to one line here in Mantra 2.

Griffith gives references in RV1-25-13; 7-87-3; 7-89-2

Mantra 7 has reference to 7,7,7=21 which is in Tamil Sangam Purananuru 166.

Six  foreigners have translated this hymn:- Muir, Max Muller, Von Roth, Ludwig, Grill and Kaegi

This can be compared with Bharatiyar’s description of his poem

Varuna | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › varuna

28 May 2018 — Posts about Varuna written by Tamil and Vedas. … Sculptures of Vedic Gods Indra, Varuna, Yama and Kubera are found in many temples in …



Vedic God Varuna in Oldest Tamil Book | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2013/07/08 › vedic-god-va…

8 Jul 2013 — East European Slavs worshiped Varu as Perun Oldest Tamil book Tolkappaiam dated to 1st century BC mentions Varuna as one of the four Gods …

tags- Varuna, Spy, Blink, Eyelid, 1000 eyes, Secret presence, Von Roth, Best description of God,

உலக மஹா கீதம்; வேதத்தில் மேலும் ஒரு தேசீய கீதம்! (Post No.10,326)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,326

Date uploaded in London – –   11 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வியாசர் என்பவரை இந்துக்களின் எல்லா பிரிவினரும் ‘குரு’ என்று ஏற்கின்றனர் ; அது மட்டுமல்ல; வியாசரை விஷ்ணுவின் அ வதாரமாகவும் கொள்கின்றனர். அவரது நினைவாக வியாச பெளர்ணமி தினம் முதல், 4 மாதங்களுக்கு சாதூர் மாஸ்ய விரதமும் அனுஷ்டிக்கின்றனர்.;ஏன் தெரியுமா?

அவர் இறந்தவுடன் கலியுகம் துவங்கப் போவது பஞ்சாங்கக் கணக்குப்படி தெரிந்தது; உடனே அவசரம் அவசரமாக புராண இதிஹாச வேதங்களைத் தொகுத்தார். அவர் பெயரில் உள்ள விஷயங்களைக்  கணக்கிட்டால் பத்து கின்னஸ் புஸ்தகத்தில் எழுதலாம் ; தனக்குப் பின்னர் பிறக்கப்போகும் கலியுகத்தில் மக்களுக்கு வேதங்களைப் பின்பற்ற நேரமும் இருக்காது; நாட்டமும் இருக்காது என்று கருதி 1400 வரிகளில் இந்து மதத்தை  ‘ஜுஸ்’  பிழிந்து பகவத் கீதை என்னும் பெயரில் மஹாபாரதத்தில் சேர்த்தார். மகாபாரதத்தின் மொத்தவரிகள் இரண்டு லட்சம் வரிகள். அதில் ஒரு மில்லியன்- பத்து லட்சம் சொற்கள் உள்ளன !

அதே போல 18 புராணங்களையும் தொகுத்தார். இதை எல்லாம் விட ஒரு அற்புதமான வேலையை அவர் செய்தார். அதில்தான் அவர் உலக மஹா ஜீனியஸ் / மஹா மேதாவி என்பது தெரிகிறது. எழுதக்கூடாது; வாய் மொழி மூலமே பரப்ப வேண்டும்; அதிலும் ஒலி பிசக்கக்கூடாது ; அதிலும் மனம், மொழி, மெய் மூன்றிலும் உண்மை உடையவர்கள் மட்டுமே கற்கவேண்டும் என்று விதி மேல் விதிகளைக் கொண்ட வேதங்களை பலரும் பின்பற்றமுடியாமல், அதாவது நினைவிற் வைத்துக்கொள்ள முடியாமல், தவிப்பதைக் கண்டார். உடனே அத்தனையையும் திரட்டி 4 பிரிவுகளாகப் பிரித்தார். அதை விட முக்கியம் அதைப் பரப்ப 4 சீடர்களைத் தேர்ந்தெடுத்தார் ; ‘இதோ பாருங்கள்; இனி உங்கள் பொறுப்பு இதைப் பரப்புங்கள் என்றார்

. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பாடப்பட்ட சங்கத் தமிழ் நூல்களும் நான் மறை அந்தணர் பற்றீச் சொல்லி, ‘எழுதாக் கற்பு’ என்று வேதங்களைப் புகழ்கின்றன. அது மட்டுமல்ல. தமிழின் மிகப்பழைய நூலான தொல்காப்பியத்துக்கு சர்ட்டிபிகேட் certificate  கொடுத்து இது நல்ல புஸ்தகம்தான் என்று சொல்லியவரும் அப்படிப்பட்ட நான்மறை முற்றிய அதங்கோட்டு ஆச்சார்யார் ஆவார் .

xxxx

ரொம்ப நாளா எனக்கு ஒரு சந்தேகம் .

தமிழ் மன்னர்கள் உள்பட இந்தியா முழுதும் மன்னர்கள் வேதப் பிராமணர்களுக்கு ஏன் தங்கக் காசு கொடுத்தனர் (ஹிரண்ய தானம்), ஏன் நில புலனகளைக் கொடுத்தனர் (பிரமதேயம்) என்ற கேள்வி என் மனதில் வரும்; அது மட்டுமா? உலக மஹா தமிழ்க் கவிஞன் சுப்பிரமணிய பாரதி வேதம் என்று வாலாக என்று கொட்டு முரசே என்று ஏன் செப்பினான் என்றும் எண்ணுவேன்.

இதற்கெல்லாம் பதில் ரிக் வேதத்தின் கடைசி பாடலில் இருக்கிறது (10-11) அதுதான் 1028 ஆவது துதி. பத்தாயிரத்து 552 ஆவது மந்திரத்துக்கு மூன்று, நான்கு மந்திரத்துக்கு முந்திய 2, 3 மந்திரங்கள்.

அங்கே வேதத்தின் சாரத்தை செப்பிவிடுகிறார்.

xxxx

ஒற்றுமை! ஒற்றுமை! ஒற்றுமை!

சொல்லிலே, செயலிலே சிந்தனையில் ஒற்றுமை !

முதல் உலக யுத்தம் முடிந்த பின்னர் ஏற்பட்ட LEAGUE OF NATIONS லீக் ஆப் நேஷன்ஸ் என்ற சர்வ தேச சபையும் இதையே சொன்னது;  ஹிட்லரும் முசோலினியும் கேட்கவில்லை இரண்டாவது உலக மகா யுத்தம் வெடித்தது ;  அது  முடிந்த பின்னர் ஐ.நா. சபை தோன்றியது. அதன் சாசனத்திலும் அமைதி, ஒற்றுமை வலியுறுத்தப்பட்டது

நமது காலத்தில் ‘புதியதோர் உலகம் செய்வோம் ; கெ ட்ட போரிடும் உலகினை வேருடன் சாய்ப்போம்’ என்று பாரதி தாசன் பாடினார் ; காஞ் சி பரமாசார்ய சுவாமிகள் ஐ நா சபையில் பாடுவதற்காக எம் எஸ் சுப்புலெட்சுமிக்கு எழுதிக்கொடுத்தித்த ‘மைத்ரீம் பஜத  பாடலிலும் இதையே சொன்னார். ஆனால் உலக மகா மேதாவி வேத வியாசர் இதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ரிக் வேதத்தின் கடைசி பாடலில் முத்தாய்ப்பாக வைத்தார். அதாவது 4 வேதங்களின் 20,000 மந்திரங்களின் மொத்தக் கருத்தே இதுதான் என்பது அவரது துணிபு..

அதைப் பார்ப்பதற்கு முன்னர் இன்னொரு சுவையான செய்தியைச் சொல்கிறேன். “சரி, ஆறு மாதத்தில் ரிக் வேதத்தின் 10,552 மந்தி ரங்களையும் ஆங்கிலத்திலும் தமிழிலும் படித்து முடித்துவிட்டோம்; கடைசி வேதமான அதர்வண வேதத்தையும் படிப்போமே” என்று எடுத்தால், அதில் ரிக் வேதத்தை விட  அருமையான ஒற்றுமை மந்திரம் இருப்பதைக் கண்டு ஆச்சர்யத்தில் மூழ்கினேன்.

xxx

இதோ இரண்டு மந்திரங்களையும் நீங்களும் படியுங்கள்

ரிக் வேதம் 10-191

“எல்லோரும் ஒன்று சேருங்கள்

எல்லோரும் ஒன்றாகப்  பேசுங்கள்

முன் காலத்தில் தேவர்களும் ஒற்றுமையுடன் இருந்து

வேள்வியில் தங்களுக்குரிய பங்கினை ஏற்றார்கள் .

உங்களுடைய மந்திரங்கள் ஒன்றுபோல ஒலிக்கட்டும்

உங்களுடைய அசெம்பிளியில் ஒன்றுபட்ட குரல் கேட்கட்டும்

எல்லோரும் ஒன்று போல சிந்திக்கட்டும்

எல்லோரும் ஒன்றையே  நாடட்டும்

உங்களுடைய அசெம்பிளி தீர்மானமும் ஒன்றாக இருக்கட்டும்

உங்களுடைய இருதயம்/ உள்ளக்கிடக்கை ஒன்றுபோல ஆகட்டும்

உங்களுடைய எண்ணங்கள் எல்லாம் ஒன்றையே சிந்திக்கட்டும்” .

இதிலுள்ள ‘அசெம்பிளி’ என்ற ஆங்கிலச் சொல் 100 ஆண்டுகளுக்கு முன்னர் வேதத்தை மொழி பெயர்த்த கிரிப்பித் Ralph T H Griffith தின் சொல். இன்று நாடு முழுதும் பயன்படுத்தும் சபை/ அவை என்ற சொல் சம்ஸ்க்ருத மந்திரத்தில் உள்ளது

XXX

இதோ அதர்வண வேத ஒற்றுமை மந்திரம்

மூன்றாவது காண்டம் 30 ஆவது மந்திரம்

“நான் உங்களுக்கு ஒரே இருதயத்தை, ஒரே மனத்தைக் கொண்டு வருகிறேன்.

வெறுப்பிலிருந்து விடுதலை பெறுக; பிறந்த கன்றுக்குட்டியிடம் தாய்ப்பசுவுக்கு உள்ள பாசம் போல பாசம் பெருகட்டும்

‘தந்தை தாய் சொல் மிக்க மந்திரம் இல்லை’ என்பதை மகன் உணரட்டும் ; கணவனிடம் மனைவி அன்பு மழை பொழியட்டும்; தேன்மிகு இனிமையான சொற்களை பேசட்டும்

சகோதரன் மற்ற சகோதரனை வெறுக்கக் கூடாது; சகோதரி, மற்ற சகோதரியை வெறுக்கவேண்டாம் ; ஒற்றுமை நிலவுக; ஒரே நோக்கம் நிலவுக; மங்கள மொழியை உதிருங்கள்

கடவுளர்/ தேவர்கள் ஒருவரை ஒருவர் வெறுப்பதில்லை ; பிரிந்து செல்வதில்லை; அந்த குணத்தை உங்கள் வீட்டில் நிலை நாட்டுகிறோம் ; உங்கள் வீட்டிலுள்ள புருஷர்கள் அதையே பின்பற்றுவார்களாகுக 

ஒரே எண்ணத்துடன் , ஒரே முயற்சியுடன், இணைந்து வாருங்கள்; பிரிந்து செல்லாதீர்கள் ;ஒருவருக்கொருவர் இனிமையான மொழியைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நான் உங்களை ஒரே நோக்கம், ஒரே எண்ணம் உடையவனாக ஆக்குவேன் (மேலும் வலுப்படுத்துவேன்)

நீங்கள் ஒரே பானத்தை பருகுங்கள்; ஒரே உணவை சம கூறிட்டு உண்ணுங்கள்; நானும் உங்களை அன்பால் பிணைக்கிறேன் ; ஓர் சக்கரத்திலுள்ள ஆரங்கள் போல ஒன்று பட்டு அக்கினி தேவனை வழிபடுங்கள் .

 நான் உங்களை ஒன்றாகக் கட்டும் மந்திரத்தின் மூலம் பிணைக்கிறேன் ஒரே எண்ணத்துடன் ஒரே தலைவரின் கட்டளைக்குக் கீழ்ப்படியுமாறு செய்கிறேன்

தேவர்களைப் போல அமிர்தத்தை போற்றுங்கள்; காலைப் பொழுதும் மாலைப் பொழுதும் அன்பு அலை வீசட்டும் “.

–மூன்றாவது காண்டம் 30 ஆவது மந்திரம் (சூக்தம் 101)

xxx

என் கருத்து

இதற்கு நான் உரையோ விளக்கமோ சொல்லத் தேவை இல்லை; முதலில்  தனி மனிதனிடம் நேசமும் பாசமும் இருக்க வேண்டும்; பின்னர் குடும்பத்தில் அது இருக்க வேண்டும். பின்னர் அது புறச் சூழலில் எதிரொலிக்க வேண்டும். அதன் மூலம் எங்கும் அமைதி ஓ ற்றுமை ஓங்கி வளரும்

இந்த இரண்டு கீதங்களையும், துதிகளையும் எல்லோரும் படித்தா லோ அல்லது வேத பிராமணர்கள் ஒலிக்கும் பொழுது கேட்டாலோ சர்வ மங்களம் உண்டாகும் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமும் உண்டோ!

XXX

RIG VEDA 10-191 (Last Hymn in the RV)

संस॒मिद्यु॑वसे वृष॒न्नग्ने॒ विश्वा॑न्य॒र्य आ ।

इ॒ळस्प॒दे समि॑ध्यसे॒ स नो॒ वसू॒न्या भ॑र ॥ १०.१९१.०१

सं ग॑च्छध्वं॒ सं व॑दध्वं॒ सं वो॒ मनां॑सि जानताम्

दे॒वा भा॒गं यथा॒ पूर्वे॑ संजाना॒ना उ॒पास॑ते १०.१९१.०२

स॒मा॒नो मन्त्रः॒ समि॑तिः समा॒नी स॑मा॒नं मनः॑ स॒ह चि॒त्तमे॑षाम्

स॒मा॒नं मन्त्र॑म॒भि म॑न्त्रये वः समा॒नेन॑ वो ह॒विषा॑ जुहोमि १०.१९१.०३

स॒मा॒नी व॒ आकू॑तिः समा॒ना हृद॑यानि वः ।

स॒मा॒नम॑स्तु वो॒ मनो॒ यथा॑ वः॒ सुस॒हास॑ति ॥ १०.१९१.०४

–subham—

Tags- ரிக் வேதம், அதர்வ வேதம், ஒற்றுமை, தேசீய கீதம், உலக கீதம் , மந்திரம்

STORY OF TIRU VALLUVAR STATUE IN LONDON UNIVERSITY (Post No.10,325)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,325

Date uploaded in London – –   11 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

London University has its Asian and African wing called SOAS (School of Oriental and African Studies) where I taught Tamil for 20 years as Tamil Tutor. Ms Jayalalaitha Government in Tamil Nadu sent the Valluvar statue to London. High Commission of India contacted the University of London. They contacted  Dr Stuart Blackburn, an American Professor fluent in Tamil, and Head of South Asia Department at SOAS. I and Stuart sat together and wrote the leaflet and prepared the invitation for the event . Installation of the statue was held on 13th May 1996 according to my diary. Strangely no one else has any details about this event except me. That too because Stuart gave me the photo saying ‘Swami, Here is your picture’.

The attached article was published in April 2015 by my friend Jacob Ravibalan who launched World Tamil Organisation in London to bring all the Tamil organisations under one umbrella.

Please see the attached article:-

tags- Valluvar Statue, London, SOAS, London Swaminathan, Tamil Tutor, லண்டன், வள்ளுவர் சிலை , பல்கலைக்கழகம் 

சேக்கிழார்! – 3 (Post No.10,324)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,324

Date uploaded in London – –   11 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சேக்கிழார்! – 3

சம்பந்தரின் வரலாற்றை 1256 பாடல்களிலும் நாவுக்கரசர் வரலாற்றை 419 பாடல்களிலும் சித்தரித்த சேக்கிழார் பிரான் சுந்தரரின் வரலாற்றை ஐந்து இடங்களில் 879 பாடல்களில் சித்தரித்துள்ளார். திருமலைச் சருக்கம், தில்லை வாழ் அந்தணர் சருக்கம் எனத் தொடங்கி மன்னிய சீர் சருக்கம், வெள்ளானைச் சருக்கம் ஈறாக 13 சருக்கங்களை இந்த நூல் கொண்டுள்ளது.

சேக்கிழார் புராணம் என்ற அரிய நூலை உமாபதி சிவாசாரிய சுவாமிக இயற்றியுள்ளார். இதில் அரிய குறிப்புகள் உள்ளன.

தமிழில் சிறப்பான நூல்களாக ஆறு நூல்களைப் பட்டியலிடுகிறார் உமாபதி சிவாசாரியார் இப்படி:

வள்ளுவர் சீர் அன்பர் மொழி வாசகம் தொல்காப்பியமே

தெள்ளு பரிமேலழகன் செய்தவுரை – ஒள்ளிய சீர்த்

தொண்டர் புராணம் தொகு சித்தி ஓராறும்

தண்டமிழின் மேலாந் தரம்.

சேக்கிழார் தான் பெரிய புராணத்தை இயற்றிய காரணத்தையும் தானே கூறி விடுகிறார்!

அளவு இலாத பெருமையர் ஆகிய

அளவு இலா அடியார் புகழ் கூறுகேன்

அளவு கூட உரைப்ப அரிது ஆயினும்

அளவு இல் ஆசை துரப்ப அறைகுவேன் என்று சேக்கிழார் ஆசை மிகுதியுற்று அளவிலாப் புகழ் கொண்ட அடியார் பற்றித் தான் கூற வந்ததாக, காரணத்தைத் இப்படித் தெரிவிக்கிறார்.

இந்த நூலின் பெருமை சொல்லுக்கு அப்பாற்பட்டது. ஏராளமான சரித்திரக் குறிப்புகளையும், அடியார் பற்றிய உண்மையான வரலாற்றையும், கல்வெட்டுச் செய்திகளையும், இலக்கியச் செய்திகளையும், இயற்கை வர்ணனைகளையும், பல்வேறு அணிகளையும்,  உவமைகளையும், சொல் நயத்தையும், பொருள் நயத்தையும் கொண்டுள்ள நூல் இது. ஒன்று முதல் ஏழு வரை உள்ள எண்கள் கொண்ட பாடலை சண்டேஸ்வர நாயனார் புராணத்தில் காணலாம். மலர் சிலம்படி என்பதற்கு மலர் போன்ற சிலம்படி என உவமைத் தொகையாக மட்டும் பொருள் கொள்ளுதல் தவறு; மலர்ந்த மலர்கின்ற, மலரப் போகும் என வினைத்தொகையாகக் கொண்டு பொருளைப் பார்க்க வேண்டும் என உரையாளர்கள் கூறுகின்றனர். முதல் பாடலில் வரும் விளக்கத்திலேயே இப்படி அபூர்வமான விளக்கவுரையைக் கேட்க முடிகிறதெனில் 4286 பாடல்களின் சிறப்பை அனுபவித்துப் பார்த்தால் தானே தெரிந்து கொள்ள முடியும்!

மெய்யடியாரின் இயல்பை ஒரு பாடலில் அற்புதமாக விளக்கி விடுகிறார் சேக்கிழார் பிரான்:

கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்

ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்

கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினார்.

செல்லா ஓடும் செம்பொன்னும் மெய்யடியார்க்கு ஒன்று தான்!

இதற்கு எதிராக வஞ்சக அடியாரை அவர், ‘மனத்தினுள் கறுப்பு வைத்துப் புகுந்தனன் முத்தநாதன்’ என்று சிவவேடம் பூண்டு வந்த வஞ்சக முத்தநாதனைக் குறிப்பிடுகிறார்.

இப்படி நூற்றுக் கணக்கில் சொல்லிக் கொண்டே போகலாம்.

கருங்கடலைக் கைநீத்துக் கொளவெளிது முந்நீர்க்

   கடற்கரையி னொய்மணலை யெண்ணியள விடலாம்

பெருங்கடன்மேல் வருந்திரையை யொன்றிரண்டென் றெண்ணிப்

   பிரித்தெழுதிக் கடையிலக்கம் பிரித்து விடலாகுந்

தருங்கடலின் மீனையள விடலாகும் வானத்

    தாரகையை யளவிடலாஞ் சங்கரன்றா டமது

சிரங்கோடிருத் தொண்டர்புராணத்தை யளவிடநஞ்

   சேக்கிழார்க் கெளிதலது தேவர்க்கு மரிதே.

“கருங்கடலைக் கையால் நீந்திக் கடந்து விடல் எளிது. முந்நீர் என்று புகழப்படும் கடலின் கடற்கரையில் உள்ள நுண்ணிய  மணலை எண்ணி விடலாம். பெருங்கடலில் எழும் அலைகளை ஒன்று, இரண்டு என்று எண்ணி அதன் கூட்டுத்தொகையையும் சொல்லி விடலாம். கடலில் வாழும் மீன்கள் மொத்தம் எத்தனை என்பதை அளவிட்டுச் சொல்லி விடலாம். வானத்து நக்ஷத்திரங்களையும் அளவிட்டுச் சொல்லி விடலாம். சிவபிரான் திருவடிகளைத் தமது சிரசில் தரித்த திருத் தொண்டர்கள் புராணத்தை அளவிட்டுச் சொல்ல நமது சேக்கிழார் நாயனாருக்கு மட்டுமே எளிதன்றி தேவர்களுக்கும் அருமையானதாகும்” –

என்று இப்படி சேக்கிழாரின் பெருமையை இந்தப் பாடல் கூறுகிறது.

தில்லையில் அடியார் பெருமையைக் கூறியவாறே வாழ்ந்த சேக்கிழார் பிரான் தில்லைக் கூத்தனுடனேயே கலந்தார். அடியார் மனங்களிலும் நிறைந்தார். சேக்கிழாருக்கு, சேக்கிழார் பிறந்த ஊரான திருக்குன்றத்தூர் சிவன் கோவிலிலும், தேவகோட்டை நகரச் சிவன் கோவிலிலும் தனி சந்நிதிகள் உண்டு. சேக்கிழார் பிறந்த இல்லத்தை குன்றத்தூரில் காணலாம். சேக்கிழாரின் குருபூஜை ஆண்டு தோறும் வைகாசி மாதம் பூச நட்சத்திர தினத்தன்று நடைபெறுகிறது. திருவானைக்காப் புராணம் சேக்கிழாரைப் போற்றிப் புகழும் பாடலைக் கூறி சேக்கிழாரைப் பணிந்து என் உரையை முடிக்கிறேன் :

தொகையா நாவ லூராளி தொடுத்த திருத்தொண்டப் பெருமை

வகையால் விளங்க வுயர்நம்பி யாண்டார் வகுப்ப மற்றதனைத்

தகையா வன்பின் விரித்துலகோர் தம்மை யடிமைத் திரப்பாட்டின்

உகையா நின்ற சேக்கிழான் ஒளிர் பொற் கமலத் தாள் பணிவாம்!

நன்றி வணக்கம்!

***             

முற்றும்

tags — சேக்கிழார்! – 3

October 2021 London Swaminathan Articles, Index-107 (Post No.10,323)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,323

Date uploaded in London – –   10 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS? 

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or from swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 10,000 PLUS POSTS.

Xxx

Q & A Where are the names of Krishna in the Bhagavad  Gita? My reply; 10,160; Oct. 1, 2021

Q & A Tamil Inscriptions on Kaliyuga; 10226; 18/10

Rebirth and Reincarnation in Rig Veda; 10,163; 2/10

Mr One Thousand in Rig Veda and Tamil Literature10179, 5/10

Rare Pictures of Hindu Gods in Dacca Museum, Bangladesh-1;

10,170; 3/10

Rare Pictures of Hindu Gods in Dacca Museum, Bangladesh-2;

10,173; 4/10

Rare Pictures of Hindu Gods in Dacca Museum, Bangladesh-1;

10,165; 3/10

Amazing Vedic Eye Connection with Sun, Egypt, Greece, 10185; 7/10

Rare Pictures of Epic Heroes from Sister Nivedita and Ananda Coomaraswamy-1;10189;8/10

Tamil and English  Words 2700 Years Ago-66; 10192;9/10

Tamil and English  Words 2700 Years Ago-67; 101218;16/10

Tamil and English  Words 2700 Years Ago-68; 101246;23/10

Rare Pictures of Epic Heroes from Sister Nivedita and Ananda Coomaraswamy-2;10193;9/10

Unknown Angels and Demons in Rig Veda-1;10201; 12/10

Unknown Angels and Demons in Rig Veda-2;10201; 12/10

Rare Pictures of Indian and Sri Lankan Scholars from M D Conway Book;10,214,15/10

Rare Pictures of Indian and Sri Lankan Scholars from M D Conway Book;10,216,16/10 Q & A

Agriculture in the Rig Veda; Max muller  , Marxist gangs torn to pieces;

10231;19/10

Agriculture in the Rig Veda-2; Botany and Music Effect;20/10

Agriculture in the Rig Veda-3;Man with Two Wives Joke,10240.

Why do we think that Wolverhampton University is tarninshing its Image?10,270; 28/10

Beautiful Poem on Forest in the Oldest Book in the World;10264;27/10

Lead and Horse shoe in Atharva Veda;10259; 26/10

Wonder in Rig Veda- 27 Body Parts in one Hymn; RV.10-163;10273;29/10

More Quotations from Panchatantra; November 2021 Calendar; 10278;30/10

Xxxx

June 2021 London Swaminathan Article Index 103;10182;6/10

July 2021 London Swaminathan Article Index 104;10188;8/10

July 2021 London Swaminathan Article Index 104;10188;8/10

September  2021 London Swaminathan Article Index 10210;;14/10

xxx

London Calling (Tamils) 3-10-2021

London Calling (Tamils) 10-10-2021; 10203

London Calling (Tamils) 17-10-202110,227

London Calling (Tamils) 24-10-2021; 10,254

London Calling (Tamils) 31-10-2021

xxxx

London Calling (Hindus) 4-10-2021

London Calling (Hindus) 11-10-2021;10204

London Calling (Hindus) 18-10-2021;10228

London Calling (Hindus) 25-10-2021; 10255

xxxx

World Hindu News Roundup 3-10-2021; 10,168

World Hindu News Roundup 10-10-2021;

World Hindu News Roundup 17-10-2021; 10222

World Hindu News Roundup 24-10-2021; 10,249

World Hindu News Roundup 31-10-2021; 10,281

xxxx

TAMIL ARTICLES – OCTOBER 2021 INDEX 107

ஷெர்லக் ஹோம்ஸ் கதைகள் எழுதிய சர் ஆர்த்தர் கானன் டாய்ல, 10,160; அக்டோபர் 1, 2021

ரிக்வேதத்தில் புனர் ஜென்மம், மறுபிறப்பு, ,

கர்மவினை கருத்துக்கள் , 10,174;4/10

ரிக்வேதத்தில் புனர் ஜென்மம், மறுபிறப்பு, ,

கர்மவினை கருத்துக்கள்2; , 10,176;5/10

ரிக்வேதத்தில் புனர் ஜென்மம், மறுபிறப்பு, ,

கர்மவினை கருத்துக்கள் -3; 10,181;6/10

ரிக்வேதத்தில் மிஸ்டர் கண்ணாயிரம் ;10,184;7/10

வேதத்தில் விச்வே தேவர்கள் யார், எத்தனை பேர்?10,197;10/10

எகிப்து, கிரீஸ், ரிக் வேதத்தில் கண் பற்றிய

அதிசயச் செய்திகள் , 10,187;8/10

ரிக்வேதத்தில் எவருக்கும் புரியாத பேய்கள், தேவதைகள் -1;

10202; 12/10

ரிக்வேதத்தில் எவருக்கும் புரியாத பேய்கள், தேவதைகள் -2;

10206; 13/10

ரிக்வேதத்தில் எவருக்கும் புரியாத பேய்கள், தேவதைகள் -3;

10209; 14/10

ரிக்வேதத்தில் எவருக்கும் புரியாத பேய்கள், தேவதைகள் -4;

10212; 15/10

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் – ரிக்வேதம்,வள்ளுவர், பாரதி ஒற்றுமை-1 ; 10232; 19/10

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் – 2; ரிக்வேதத்தில்

தாவரவியல் செய்திகள், 10235; 20/10

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் – 3; 10,239;21/10

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் – 4; 10,243; 22/10

பேயை விரட்ட ஈயம் ; நோயை ஒழிக்க ஈயம் -அதர்வ வேதம் சிபாரிசு;10,261;26/10

காடுகள் பற்றி ரிக்வேத கவிதை ; கொஞ்சம்  என் சுயசரிதை; 10,268;28/10

காடுகள் வாழ்க; இந்துக்களின் அற்புத வாழ்க்கை, 10,272;29/10

6000 ஆண்டுக்கு முன் MBBS LESSON; ஆறே வரிகளில் மருத்துவ பாடம் 10,277; 30/10

மேலும் 30 வள்ளலார் பொன்மொழிகள் நவம்பர் 2021; 10,280;31 அக் டோபர் ,2021

XxxxXX

பகவத் கீதை சொற்கள் index -1; கீதை மூலம் சம்ஸ்க்ருதம்

கற்போம் ; 10,213; 15/10

பகவத் கீதை சொற்கள் index -2; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம் ; 10,217; 16/10

பகவத் கீதை சொற்கள் index -3;  கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம் ; 10,221; 17/10

பகவத் கீதை சொற்கள் index -4;  கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம் ; 10,225; 18/10

பகவத் கீதை சொற்கள் index -5;  கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம் ; 10,230; 19/10

பகவத் கீதை சொற்கள் index -6;  கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம் ; 10,234; 20/10

பகவத் கீதை சொற்கள் index -7;  கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம் ; 10,238; 21/10

பகவத் கீதை சொற்கள் index -8  கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம் ; 10,242; 22/10

பகவத் கீதை சொற்கள் index -9;  கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம் ;10,245;23/10

பகவத் கீதை சொற்கள் index -10;  கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம் ;10,248;24/10

பகவத் கீதை சொற்கள் index -11;  கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம் ;10,257;25/10

பகவத் கீதை சொற்கள் index -12;  கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம் ;10,262;26/10

பகவத் கீதை சொற்கள் index -13;  கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம் ;10,265;27/10

பகவத் கீதை சொற்கள் index -14;  கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம் ;;10,269;28/10

பகவத் கீதை சொற்கள் index -15;  கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம் ;10,274; 29/10

பகவத் கீதை சொற்கள் index -16;  கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம் ;10,283;31/10/2021

xxxxxxx

உலக இந்து சமய செய்தி மடல் 3-10-2021; 10,169;3/10

 உலக இந்து சமய செய்தி மடல் 10-10-2021; 10,196

உலக இந்து சமய செய்தி மடல் 17-10-2021; 10223

உலக இந்து சமய செய்தி மடல் 24-10-2021; 10,250

உலக இந்து சமய செய்தி மடல் 31-10-2021; 10,282

–SUBHAM—

tags- tags – october 2021 index

tags – october 2021 index

Why did London Swaminathan go to Jail? Who is London Swaminathan-4(Post No.10,322)

WHEN LONDON SWAMINATHAN DID A QUIZ PROGRAMME FOR SIS IN LONDON. I WAS THE CHAIRMAN OF SIS FOR SOME TIME.

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,322

Date uploaded in London – –   10 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

My father V Santanam, News Editor, Dinamani, Madurai went to prison to teach Hinduism; for him prison was part of his life; He was imprisoned with K Kamaraj, Congress Leader and former chief minister of Tamil Nadu. He was with him in Vellore Jail for six months.

A N Sivaraman, insisted my dad that he must apply for Tamra Pattayam / Copper Plate for martyrs , as a Thyagi. My father was very reluctant and lazy; ANS chastised him, ‘Throw away your simplicity and humbleness into dustbin and get it now’; my father did not know what to do next. At that time AICC conference was convened in Madurai; all leaders including Mrs  Indira Gandhi were expected to visit Madurai.

So Mr. Kamaraj came to Madurai well before that to inspect the Pandal in Tamukam Grounds. Our Dinamani reporter Thirumalai used to phone my father everyday in the morning about his assignments. Because a reporters’ primary duty is to tell the editor his whereabouts every minute; in case of something big happening my father would give him the priorities in order. Since my father knew that Kamaraj was visiting to inspect the arrangements , he also went there. He told him that he had no documents to say that he was in jail with him. Immediately Kamaraj asked his secretary to write or type (I don’t remember exactly) saying Thiru/Mr Santhanam was with me in jail for six months. It was done in a few minutes time and that little chit with his signature got my father the required Tamra pattayam, which helped even my mother to get the Thyagi pension after his demise. That was his love affair with the Jail.

WHEN I WAS FORTUNATE ENOUGH TO HONOUR SRI GOPALASUNDARAM , TAMIL SCHOLAR WHO TRANSLATED ARUNAGIRINATHAR’S THIRUPPUGAZ INTO ENGLISH

When he heard that Christian preachers were converting Hindu prisoners as Christians in Madurai jail, my father took it as a mission to visit prison to do some service to prisoners. Our house was frequented by Bhajan singers from Pudukkottai Gopalakrishna Bhagavathar to Bhajanai Swaminathan of TSR and Co (Kumbkonam) agent. Bhajanai Swaminathan was a very good singer. So both of them decided to visit prison to spread the divine music. This inspired me after 50 or 60 years!

When I heard that there was none or not many people to visit Hindu prisoners in England I took it as a mission. When I heard it from Dr Shastri of Bharatiya Vidhya Bhavan London, I promised him that I would do it. Then he told me ‘it is not service and I must become a paid employee part time or full time’. I squeezed this assignment with my teaching at SOAS, University of London, interpreting work at Newham University Hospital. Some days I started work at 8 am and finished work at 9 pm. Many a times I thought I am going to faint half way through my lecture at the university but I would survive ; when I see 12 students in front of me  ready to learn Tamil, I would lecture for two hours and when I came back home I would be almost dead. I must be stupid to accept so many assignments. I would honestly tell you I never did these jobs for money ; only out of love for the language and Hinduism.

Now let us go inside the jails.

First encounter with the Tamil Murderers and Drug Addicts.

I became a part time chaplain with HMS Prison Service.

Chaplaincy is not a Hindu concept; it is a Christian concept; priests would visit Christians in hospitals and prisoners and give them spiritual service; Christians have been doing it for centuries; Hindu priests never knew such a thing. They never visit them for anything other than Pujas.  And moreover, even if they are ready to visit Prisons or hospitals they would be seen as ‘untouchables’ in temples by their own colleagues. Now the situation is slowly changing; freelancing priests are ready to take over the job. But by this time Muslims have devoured the money. They chucked out Christian priests and took over all their well paid jobs. Because the prison is full of Muslims! Over 25 % are Muslim prisoners, disproportionate to their population in England!

I was visiting two Detention Centres next to Gatwick airport before visiting prisons. All the refugees or anyone without a valid reason or valid document were detained there. I go there with a tape recorder and Bhajan tapes in Sanskrit, Hindi and Tamil. I talk to them for first half hour and the last half hour I played recorded bhajans.

But prison service is completely different; I was given a walkie talkie and multiple keys. I have to secure those in my trouser belt. I can’t take anything inside. So all the house keys and mobile phones would be deposited at the reception. There is CCTV everywhere. I have to open five or six gates with alternate keys. And make sure they were locked behind me.

One prison had Sri Lankan murderers with long sentences for murdering their own fellow Tamils in London. London witnessed 9 Sri Lankan Tamil murders within a short time. Then a big police squad was set up to stop Sri Lankan Tamil violence and Sri Lankan credit card frauds. For the past ten years nothing big happened.

‘ONCE UPON A TIME ‘, LONG LONG AGO, I WAS TEACHING JOURNALISM IN MADURAI UNIVERSITY EVENING COLLEGE. THIS IS ONE OF THE FAREWELL FUNCTIONS.

When I met the lifelong prisoners they argued with me that I must bring them Idli and other Sri Lankan food provided by the family members. I explained to them all the rules saying I am not allowed to reveal my ID to anyone outside the prison. They kept on arguing in raised voice. That was my last visit to that prison.

In one of the high security prisons, I met one who was sentenced for smuggling and dealing in drugs. He kept on arguing what he had done was not a sin because Lord Shiva also did use opium. I tried to prove him he was wrong. But he gave me one week time/notice to check all the religious books and come back. I went there according to my time table. He was waiting for me. I told him there was nothing in the religious books about Siva and drugs, but he insisted he was right. Then I told him; right suppose I believe you, would you tell me your views on other leelas or miracles of lord shiva. He escaped by saying he had never read them!!!

To cut it short, many idiots are there in the world. You had to tackle them. And in another prison a Hindu prisoner was released after a long term punishment. Casually I met him in London. He told me he had lots of brand new watches and he would spare me some as a token of thanks. He was about to send some to his relatives in India as well.

When I asked him how much he had paid for them, “No, No, they are taken from  a charity shop!”. Someone who went out of business or closed his business for some reason and donated them to a charity where this man was working. This person has taken them home. I warned him that he is going to prison again. His face went pale and asked me “Why Why? Look even after a long prison term your mind set has NOT changed ; still you are stealing charity  property”. When he asked me the next step to do in this matter, I advised him to return all the charity goods to the shop.

Some people are like that; they never learn anything in life. I met a woman prisoner in a jail exclusively for women. That young Sri Lankan woman was sentenced for a minor passport photo fraud. I asked her what god she worship, which temple she go to etc.  she made it very clear that she is completely ignorant about it. A teenage girl had been brought up like that; partly due to Sri Lankan ethnic conflict. After mush persuasion and prompts about what her mother did about religion, she told me when she was young her mother taught her a hymn on elephant god. I gave her enough tips to bring it out. She told me that the short hymn with begin with Vak/ word for Sanskrit. Then I recited the most famous poem by poetess Avaaiyar on Lord Ganesh(Vaakkundaam nalla…..) her eyes brightened and she nodded her head “Yes Yes; that is it”.

LONDON SWAAMINATHAN AT MENTAL HEALTH DAY EVENT

The lesson is Children should be taught good things while they are young. Catch them Young should be our motto. They never forget that even if they go astray.

Whatever prayer I learnt at elementary school or from may parents at school age I remember still; they are evergreen in my memory; for other things I need a printed book.

Right ; I want to suspend my auto biography at this stage because I had lots to write about the Vedas and Tamil hymns. I shall continue when I have spare time. For the next few days, I will post all the pictures with small caption. Even if I lose them in future. I don’t need to worry.

Thanks for your patience!

KANAKA DURGAI AMMAN TEMPLE, LONDON
VELMURUGAN TEMPLE, CATFORD
 AT BHARATI DAY IN COMMONWEALTH INSTITUE LONDON WITH SITA MAMI (MRS SITA VENKATRAMAN SINGING NHARAI SONGS YERA 1990)

TAGS- LONDON SWAMINATHAN-4, BHARATI DAY, PONNADAI, SIS, PRISON CHAPLAIN, HINDU CHAPLAIN, JAIL BHAJANS

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO- 69 (Post No.10,321)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,321

Date uploaded in London – –   10 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020;

FOLLOWING SERIES STARTED ON 9TH DECEMBER 2020.

ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK.

XXX

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்ஆங்கில சொற்கள் – பகுதி -69

Tamil and English Words 2700 Years Ago- Part 69

xxxx

பாணினி சூத்திர எண்கள்:–

8-1-59

COMMENTATOR’S EXAMPLE-

VATAYATI- VEENAAM SA VAATAYATI= IN TAMIL VAASIKKIRAAN

T= S DURING PATANJALI TIME?

வீணா வாதயதி = வீணை  வாசிக்கிறான் .

த = ஷ , ச ஆகும் அற்புதம்!!!

ஆங்கிலத்திலும் தமிழிலும் இன்றும் இருக்கும் அற்புதத்தை 150 கட்டுரைகளில் விளக்கி விட்டேன்; உலக  மொழிகளுக்கு எல்லாம் மூல முதல்வன் சிவ பெருமானே என்றும் அவன் உடுக்கை ஒலியின் ஒரு புறத்தில் தமிழும் மறு புறத்தில் சம்ஸ்கிருதமும் பிறந்தன என்ற தமிழ்ப் பாடல் உண்மையே என்றும் எழுதிவிட்டேன் .

பாஷா = பாடை ; விஷம் = விடம்

Tion= Sion ; eg ; education and hundreds of words with TION = pronounced as SION

XXX

8-2-14 AND 8-2-10(commentary)

Panini says Rajanvan; in the early commentary we come across Vidyutvan

My guess is VAN= MAN (V=M; vizi=muzi; virugam=mirugam etc)

Athiyamaan in Purananuru is Sathyavan is my guess.

Asoka’s inscription says Satyaputro =ATHIYAMAN of Purananuru; Tamil Grammar Tolkappiyam bans ‘SA’ in the initial position.

Also in 8-2-23

அசோகர் கல்வெட்டு சத்யபுத்ரோ = அதியமான்

சம்ஸ்க்ருதத்தில் சத்யவான் = தமிழில் அத்தியமான்

வான் = மான்

சத்ய = அதிய

தமிழில் “ச” எழுத்தில் சொற்கள் துவங்க தொல்காப்பியம் தடை விதிக்கிறது.

Xxx

8-2-18

Very important Sutra R=L

We can see his R = L changes in all the languages in the world, more common in Indian languages.

Sukra= Sukla; Angula= Angura

சுக்ர=சுக்கில, அங்குல= அங்குரா

Xxx

8-2-33

Shnih – loving a girl

Sinehithi – girl friend

Sinehithan = boy friend

Even in old primary school text books

ஸ்நேஹம்; சிநேகிதன்; சிநேகிதி

Xxx

8-2-36

Bhrasj = Fry= Varu in Tamil

Raj = emit light; rule = ray, royal

Bhraj – shed light = blaze, bright

English words Fry ,Ray ,Royal ,Blaze ,Bright re all derived from the above roots.

ப = வ (பங்களாதேஷ்= வங்கதேசம் )

ப்ரை =வறு (வல்); FRY= VARU (F/B/P = V)

Xxxx

8-2-41, 8-2-42 covered already

Lehyam = lick;

Ratha = ther /mirror image; like leo= yali

Xxx

8-2-45

Lagna = puff; enlarge ; lagna becomes large??

Xxx

8-2-51

SUSH – DRY IT

In tamil dried ginger is Sukku.

In the Rig Veda demon Sushna is draught/ famine

சுஷ்ன= ரிக் வேத வறட்சி அரக்கன்; சுக்கு

Xxx

8-2-50

Nirvana …..

Buddha took this word NIRVANA and used it. But here I am looking at it from linguistic angle only.

NIR is a  negative prefix in English and many Tamilized Sanskrit words. Nirmoolam/rootout நிர்மூலம்

English dictionary gives hundreds of words with negative N

Xxx

8-2-54

Prastyo ………………. Freeze

B/P/F=V in Tamil

Prast=Freeze= Vurai (nthu po = freeze)

உறை/ந்து போ (Eg. Bengal = Vangam in Tamil)

Xxxx

8-2-55

Bulla = bloom

ப=வ=ம மாற்றத்தை உலகம் முழுதும் காணலாம்

ப= ம

ப்ளூம் = மலர்தல்

Eg. Badra=Madra; Panam=Money; Pari= Mare;Full/Fill= Muzu; Bandar= Mandi;Pannu=Manu(facture); Madram=Badram

Unless a person studies Tamil and Sanskrit that person is only 50% Indian, 50% Hindu, 50% Linguist. That is why Great Shankara, Ramanuja,Madhva, Kumarila are able to interpret Hinduism better than others.

Xxx

8-2-57

Pru – fill

Xxx

8-2-59

Bhittam = bits

Xxx

8-2-60

Runa = Loan; R=L

ருணம் = கடன் = லோன் ; ர=ல

உலக மொழிகள் எல்லாவற்றிலு ம் ர =ல =த/ட  மாற்றங்களைக் காணலாம்

Xxx

8-2-61

Na’sat’ta , ni’sat’ta – sat= sit/sat in English; also seat

Xxxx

8-2-61

Swehta = (S) white

Xxx

8-2-68

Ahan = pakal ; pahal

அஹ = பஹல் / பகல்

Also 8-2-7

VARTIKA USAGE- AHA= IN TAMIL PAHAL

To be continued…………………………….

tags-  tamil in Panini 69

சேக்கிழார்! – 2 (Post No.10,320)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,320

Date uploaded in London – –   10 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சேக்கிழார்! – 2

இப்படிப்பட்ட பெரும்  நூலை இயற்றுவதற்காக பல்வேறு தலங்களுக்கும் யாத்திரை சென்று அனைத்துத் தகவல்களையும் திரட்டினார் சேக்கிழார். நூலில் ஆழ்ந்த கவனம் செலுத்தி இயற்ற வேண்டும் என்பதற்காகத் தனது முதல் மந்திரிப் பதவியையும் துறந்தார். நேராகச் சிதம்பரம் சென்றார். அங்கு தியானத்தில் ஆழ்ந்தார் சேக்கிழார். எப்படி இப்புராணத்தை இயற்றுவது என்று அவர் சிந்தித்து இறைவனை வேண்டிக் கொண்ட போதில்,

“உலகெலாம்” என்ற ஒலி ஆகாயத்திலிருந்து அசரீரியாக ஒலித்தது.

உடனே பிறந்தது திருத்தொண்டர் புராணம்.

உலகெலாமுணர்ந் தோதற் கரியவன்
நிலவு வாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்

என்ற கடவுள் வாழ்த்துடன் தொடங்கிய பெரிய புராணம்  நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது.

முதல் பாடலிலேயே தான் சொல்ல வந்த நாயன்மார்கள் எண்ணிக்கையைச் சுட்டிக் காட்டி விடுகிறார் சேக்கிழார் பெருமான். ஆம் இந்தப் பாடலில் 63 எழுத்துக்கள் உள்ளன. அவர் பாட எடுத்துக் கொண்ட நாயன்மாரும் 63 பேர் தானே! உலகெலாம் என்பதில் உகாரமும் அலகில் என்பதில் அகாரமும் வணங்குவாம் என்பதில் மகாரமும் வருவது ஒரு தனிச் சிறப்பல்லவா! பிரணவ மந்திரத்தையே நூல் விண்டுரைக்கிறது என்று ஆகிறதல்லவா!! இப்படி இந்த முதல் பாடலுக்கே ஒரு பெரிய விரிவுரையைக் காணலாம்.

    இப்படிப்பட்ட அபூர்வமான புராணம் நன்கு வளர்ந்து வருகிறதா, எப்போது முடியும் என்றெல்லாம் அக்கறையுடன் அவ்வப்பொழுது தூதர் மூலமும்  ஒற்றர் மூலமும்  சோழ மன்னன் விசாரித்துத் தெரிந்து கொண்டு வந்தான். புராணம் முடிவுற்ற செய்தி அவனுக்கு முறையாகத் தெரிவிக்கப்பட்டது. இதனால் சோழன் பெரிதும் மகிழ்ந்தான்; பெருமையுற்றான்.

நேராக சிதம்பரம் வந்து சேர்ந்து நடராஜரையும் நூலாசிரியரையும் முறைப்படி வணங்கினான். அங்கு நடராஜரின் அருள் ஆணையின் படி ஆயிரங்கால் மண்டபத்தில் நூலைப் படித்து பொருளை விரித்துரைக்கச் செய்தான். பல இடங்களுக்கும் ஓலை அனுப்ப, சிற்றரசர்கள், மந்திரிகள், மடாதிபதிகள், தில்லை வாழ் அந்தணர் உள்ளிட்ட ஏராளமானோர் திரளாக வந்திருந்து நூலைக் கேட்டு இன்புற்றனர்.

சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திர நாளன்று திருத்தொண்டர் புராணம் ஆரம்பிக்கப்பட்டு சரியாக ஒரு வருடம் கழித்து அதே சித்திரை மாதம் திருவாதிரை நாளில்முடிக்கப்பட்டது. நூல் நிறைவு பெற்ற நாளன்று நூலையும் நூலாசிரியரையும் யானை மேல் ஏற்றி பின்னால் நின்று சாமரம் வீசியவாறே நகர் வலம் வந்தான் மன்னன். ஊர் மக்களும் சான்றோரும் அறிஞரும் பெரிதும் மகிழ்ந்தனர். தொண்டர் பெருமையை விளக்கிய சேக்கிழாருக்கு தொண்டர் சீர் பரவுவார் என்ற பெயரைச் சூட்டியதோடு இதுவரை நம்பி ஆண்டார் நம்பிகள் கோவை செய்த பதினொரு திருமுறையோடு இதைப் பன்னிரெண்டாம் திருமுறையாக ஆக்கி அதைச் செப்பேட்டில் பதிவு செய்தான் அநபாயன். அது மட்டுமின்றி சேக்கிழாரின் தம்பியான பாலறாவாயரை அழைத்து அவருக்குத் தொண்டைமான் என்ற பட்டத்தை அளித்து அவரைத் தனது மந்திரியாக நியமித்துக் கொண்டான்.

 அறுபத்துமூன்று நாயன்மார்களின் வரலாற்றை அழகுறச் சொல்லும் இதைப் பற்றிச் சோழ மண்டல சதகம் பெருமையுறத் தன் 79ஆம் பாடலில் கூறிச் சிறப்பிக்கிறது இப்படி:-

காக்கு நீதி இரவிகுலக்  கழற்கால் வளவன் கனிந்தேவ

சேக்கிழார் தம் திருவாயில் தெளிந்த முதல் நூல் செழுக்கதையின்

மேக்கு யாவும் திருவேட மெய்யே பொருளா வீடு பெற்றோர்

வாய்க்கு யாவும் புகழ்வேளாண் மரபோர் சோழ மண்டலமே 

                     (சோழ மண்டல சதகம் பாடல் 79)

சேக்கிழார் தொண்டைமண்டலத்தில் பிறந்தார் என்ற காரணத்தால் தொண்டை மண்டல சதகம் அவரைப் புகழ்ந்து 16ஆம் பாடலில் அவரைப் போற்றிப் புகழ்கிறது இப்படி:-

விண்ணிற் பிறக்கும் புகழ்க்குன்றநாடன் விளங்குதமிழ்ப்

பண்ணிற் பிறக்கும் பெரியபுராணம் பகர்ந்த பிரா

ளெண்ணிற் பிறக்கும் பததூளியென்றலை யெய்த வந்த

மண்ணிற் பிறக்கவும் வைக்குங் கொலோ தொண்டை மண்டலமே

                            (தொண்டைமண்டல சதகம் – பாடல் 16)

இப்படி சோழ மண்டல சதகம் மற்றும் தொண்டை மண்டல சதகம் ஆகிய இரு சதகங்களும் போற்றிப் புகழும் பெருமை கொண்டவர் சேக்கிழார்.

சேக்கிழாரின் இந்த நுண்ணறிவை மகாகவி கம்பனும் கூட தனது ஏர் எழுபது என்ற நூலில்

“மண்ணில் கடலில் மலையில் பெரிதென் என

எண்ணி எழுதிக் கொடுத்த ஏற்றக்கை” என்று கூறி சேக்கிழாரைப் பாராட்டுகிறான்.

மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் சேக்கிழார் பிள்ளைத் தமிழ் என்னும் அரிய நூலை சேக்கிழாரின் பெருமையைப் போற்றி இயற்றியுள்ளது குறிப்பிடத்தகுந்தது.

முதலாவதாக நாயன்மார்களின் சரிதத்தை உலகெலாம் என்று ஆரம்பித்து உலகெலாம் என்று முடித்து பெரியபுராணத்தை இயற்றி அருளிய சேக்கிழார் பெருமானுக்கு அதை இயற்ற வழி வகுத்துக் கொடுத்தவர் திருத்தொண்டத் தொகையை அருளிய சுந்தரரே. அதுமட்டுமல்ல, 4286 பாடல்களைக் கொண்ட அந்தப் புராணத்தின் காப்பியத் தலைவராக சுந்தரரையே சேக்கிழார் பிரான் சித்தரிக்கிறார். அவர் திருத்தொண்டத்தொகையில் சுந்தரர் கூறிய 60 நாயன்மார்களோடு அவரையும் அவரது தாயார் இசைஞானியார் தந்தையார் சடையனார் ஆகிய மூவரையும் சேர்த்து 63 நாயன்மார் கொண்ட சரித நூலாக அதைப் படைத்தார். ஆக மற்ற நாயன்மார்களுக்கு இல்லாத தனி நாயகச் சிறப்பு சுந்தரமூர்த்தி நாயனாருக்குக் கிடைத்துள்ளது.

  • தொடரும்
  •  

tags- சேக்கிழார்,  பிள்ளைத் தமிழ், பெரிய புராணம், உலகெலாம்

London Calling Gnanamayam 8-11-2021 (Post No.10,319)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,319

Date uploaded in London – –   9 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

8 -11– 2021 MONDAY PROGRAMME

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER -5  MTS

PRAYER –  Janani Iyer, Melbourne, Australia

SKANTHA SASHTI SPECIAL TALKS BY

DR LAKSHMI FROM SINGAPORE – 20 MINUTES

(Tamil Scholar, Writer, Speaker and Author of Several books and Research papers); previously also gave talks in Gnanamayam Channel)

AND

SRI RAMALINGA SWAMIKAL

சு. இராமலிங்க சுவாமிகள் (சீகம்பட்டியார்) சிறந்த சிவ பக்தர். தினமும் சோதிடம் சொல்லுதல்,சைவ சமயச் சொற்பொழிவுகளை நிகழ்த்துதல் ஆகியவற்றையே தவமாகக்கொண்டு வாழ்கின்றவர். சைவ சித்தாந்தம்,திருமுறைகள்,புராணங்கள்,தேவார இசை, சோதிடம் முதலான பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். “சீகம்பட்டியார்”, என்றும் “பெரிய சோதிடர்” என்றும்,“குளித்தலையார்” என்றும் அனைவராலும் அழைக்கப்படுகின்றார்

எழுதிய நூல்கள்

  • ஆனந்த தாண்டவம் (உரைநடை)
  • வாதவூர் வள்ளல்
  • ஸ்ரீசெல்வ விநாயகர் தோத்திரப் பமாலை
  • ஸ்ரீபதஞ்சலி வியாக்கிரபாத மகத்துவம்

இவரது சொற்பொழிவுகள் பல குறுந்தகடுகளாக வெளிவந்துள்ளன.

விருதுகள்

  • சைவ சித்தாந்த சரபம்-மதுரை ஆதீனம்(20.09.2002)
  • சித்தாந்த சைவச் செம்மணி – திருவாவடுதுறை ஆதீனம்(02.02.2009)
  • சைவத் தமிழறிஞர்
  • (Seegampattiyar was introduced by his son Dr Manikkavasagan)

TALK BY BENGALURU S NAGARAJAN ON SAINT SEKKIZAR

 -12 mts

DR N KANNAN’S TALK from Chennai—ON ALVARS 12 mts.

Song by Mrs Revathy Sankran, chennai

USUAL TIME- LONDON TIME ONE PM ; INDIAN TIME 6-30 PM

USUAL PLACE- FACEBOOK.COM/ GNANAMAYAM

IF U HAVE OUR ZOOM LINK, PLEASE USE OUR ZOOM LINK.

Xxsubhamxxx

Tags- broadcast8112021