Aahuti in Homa Kunda, London Highgate Murugan Temple
இந்துமத கலைச்சொல் அகராதி -Part 1 (Post.15,072)
Post No. 15,072
Date uploaded in London – 10 October 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
அபிஷேகம் – இறைவனுக்கோ பெரியோருக்கோ தண்ணீர் அல்லது பால் அல்லது சந்தனம் முதலிய வாசனைப் பொருட்களைக் கொண்டு குளிப்பாட்டுதல் ; கோவில்களில் தினமும் காலையிலும் மாலையிலும் சிலைகளுக்கும் விக்கிரகங்களுக்கும் இது நடைபெறும் . வயதில் மூத்தவர்கள் 80 அல்லது 100 வயதைக்கொண்டாடும் போது தங்கக் காசுகளைக் கொண்டு செய்யப்படும் அபிஷேகம் கனகாபிஷேகம்; கனகம் என்றால் தங்கம்.
ABHISHEKAM- Bathing a deity or a guru or idols in the temple; occasionally done to elders with gold coins and it is called Kanakaabishekam .

***
ஆசாரம் – பாரம்பரியமாக பின்பற்றப்படும் ஒழுங்கு முறை விதிகள் ; குறிப்பாக பழங்கால சம்பிரதாயங்களை விடாமல் பின்பற்றுதல்
AACHAARAM -orthodox codes and practises of a religious group or matters of custom and tradition that serve as a general discipline.
****
அபிவாதனம் – குரு அல்லது வீட்டிற்கு வரும் பெரியார்களை மந்திரம் வாயிலாக குலம், கோத்திரம் சொல்லி வணங்குதல் /வழி படுதல் . குனிந்து இரு கைகளையும் காதில் வைத்துக்கொண்டு எந்த ரிஷி, எந்த வேதத்தைப் பின்பற்றுபவர் என்று பிராமணர்கள் அறிவிப்பார்கள் ; சன்யாசிகளுக்கு இதைச் சொல்லக்கூடாது; அவர்களுக்கு குலம், கோத்திரம் பற்றி அக்கறை கிடையாது; அவருக்கு முன்னால் எல்லோரும் இறைவனின் குழந்தைகள்.
ABHIVAADANAM – Reverential salutation of a superior like an elder or a Guru. Brahmins do this by placing their hands on ears, bowing down reciting mantras which reveal their Gotra and the branch of Veda they follow. No one do this with mantra to an ascetic like Shankaracharya or Swamiji, because they are not interested in knowing any one’s clan or caste. All are equal before them.
***
அத்யயன – வேதத்தை முறையாகப் பயிலுதல்; ஒரு குருவிடமிருந்து வாய்மொழி மூலமாகக் கேட்டுத் திரும்பச் சொல்லி மனப்பாடம் செய்தல் ; எந்த வேதம் என்பதைத் தேர்ந்தெடுத்து அதைப் பயில்வர் ; இரண்டு வேதங்களை அறிந்தவர் த்வி வேதி ; மூன்று- திரிவேதி ; நான்கு வேதம்- சதுர்வேதி; தொல்காப்பியத்துக்கு சர்ட்டிபிகேட் கொடுத்த அதங்கோட்டு ஆசார்யர் சதுர்வேதி- நான்மறை முற்றிய- என்பது பனப்பாரானார் வாக்கு
ADHYAYANA – learning the Vedas orally from a Guru; chanting them regularly; one of the Six Duties of a Brahmin. Normally a boy goes to Guru’s residence or school and learn it. they memorise it. If one masters two Vedas he is called Dwivedi; three- Trivedi; Four- Chaturvedi. Oldest Tamil books Tolkaappiam was approved by a Chaturvedi of Thiruvithaankodu.
***
அத்வைதம் – ஆதி சங்கரர் பிரசாரம் செய்த தத்துவம். இறைவனும் மனிதனின் ஆத்மாவும் இரண்டல்ல; ஒன்றே என்னும் தத்துவம்; அஹம் பிரம்மாஸ்மி = நானே பிரம்மம்; தத் த்வம் அசி- நீ அதுவாக இருக்கிறாய் என்பன முக்கிய வாக்கியங்கள். இரண்டாக நினைப்பது மாயம்.
ADVAITA – Monism; Doctrine of Non-Duality preached by Adi Shankara; the doctrine that declares that there is but, One Reality; that the individual Self and the Brahman are one. The concept of Aham Brahmaasmi= I am Brahman or Tat Tvam Asi= You are That.
(Please note Brahman, Braahmin and Brahmaa are three different words)
***
ஆச்சார்யார் – ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு குருவாக விளங்குபவர் .உ.ம் சங்கராச்சார்யார்.
ACHARYA – Spiritual Guru, mentor (Shankaracharya – Saivite Guru; Vaishnava Acharya – Guru for Vaishnavites.
***
ஆகமம் –சைவ அல்லது வைணவ கோவில்களை நிர்மாணிக்கும் முறை , விக்கிரகங்களை பிரதிஷட்டை செய்யும் முறை ; அவைகளின் உருவம், சடங்குகள், விழாக்கள் , கும்பாபிஷேகம் , யாக யக்ஞங்களைச் செய்வது முதலியனவற்றை விளக்கும் புனித நூல்கள்.
AAGAMA- traditional doctrine; science of knowledge; the aagama saasrtraas deal with the rituals, iconography, the construction of temples, yantras, festivals and daily rituals to be followed in temples.
***
அஹம்காரம் – நான் என்னும் செருக்கு ; சம்ஸ்க்ருதத்தில் அஹம் என்றால் நான் ; தமிழில் அகந்தை; மம என்றால் என்னுடைய ; தமிழில் மமதை என்போம்; அதாவது மமகாரம். இது இரண்டும் அகன்றால் இறைவனடியைச் சேரலாம் என்பார் வள்ளுவர்; அதாவது கீதை முதலிய இந்து சமய நூல்கள் சொன்னதை அப்படியே மொழிபெயர்த்து இருக்கிறார்:-
யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்.- குறள் 346
His is the world beyond heaven
Who is free of the delusion of ‘I’ and ‘Mine’.
AHAMKAARAM- Ego sense; I feeling; Self conceit .
Mamakaaram _ feeling of Mine, my-ness.
Tamil poet Tiru Valluvar says ,
His is the world beyond heaven
Who is free of the delusion of ‘I’ and ‘Mine’- Kurl 346.
***
அக்ரஹாரம் – பிராமணர் தெரு அல்லது பேட்டை; மன்னர்கள் பிராமணர்களுக்கு கொடுத்த நிலம் பிரம்மதேயம் என்றும் கோவில்களுக்கு கொடுத்த நிலம், சொத்து தேவதானம் என்றும் அழைக்கப்படும். தமிழில் உள்ள பல்லாயிரம் கல்வெட்டுகள் இவை பற்றியே பேசுகின்றன
AGRAHAARAM- Brahmin’s street or area where Brahmins reside. Most of the Tamil inscriptions give us information of kings donating to Brahmins and it is called Brahmadeyam; Kings donated more to temples which is called Devadhaanam
***
ஐராவதம் – இந்திரனின் யானை
Airaavata- Elephant of Indra .
***
அபிசாரம் – எதிரிகளுக்கு தீமையை உண்டாக்கும் கிரியைகள் ; பேய் ஓட்டுதல் ; மந்திரம் மற்றும் சடங்குகள் மூலம் கெடுதி செய்தல்; அதர்வண வேதத்தில் அத்தகைய மந்திரங்கள் உண்டு
ABICAARA- Exorcism; Practice of black magic; Using spells with an evil intent. Atharvana Veda has such spells .
***
அபரக்ரியை – இறந்தவர்களுக்குச் செய்யும் கிரியைகள்.
APARA KRIYAI- Funeral Rites
***
அஞ்ஞானம் / அவித்யா – அறியாமை
AVIDHYAA/AJNAANA- Ignorance, nescience.
***
அக்ஷதை – மஞ்சள் தடவிய அரிசி (நல்ல காரியங்களுக்கு); வேறு காரியங்களுக்கு வெறும் அரிசி .
Aksataa – Rice mixed with turmeric powder for all auspicious deeds; just white rice for other rites; unbroken full rice, raw rice used for both
***
அங்கம் – உறுப்பு, பகுதி,
வேதாங்கம்- வேதத்திற்குத் துணைபோகும் ஆறு பாடங்கள்; இவைகளைப் படித்தால்தான் வேத இலக்கியங்களின் உண்மைப்பொருள் விளங்கும்
வேதாங்கம் – ஷடங்கம் என்றும் சொல்லுவார்கள் – சடங்கு என்ற சொல் இதிலிருந்து பிறந்ததே; ஷட் என்றால் எண் ஆறு ; அவையாவன – சிக்ஷை, வியாகரணம், சந்தஸ் , ஜோதிஷம், நிருக்தம், கல்பம்..
இவை இலக்கணம், வேத உச்சரிப்பு, சொற்பிறப்பு இயல், தர்க்கம், வான சாஸ்திரம் முதலிய பாடங்கள் ஆகும்.
ANGAS/VEDANGAS – Six subjects are taught to Vedic Students- they are Siksha, Nirukta, Kalpa, Jyothisha, Vyaakarana, Chandas. These are ancillary subjects taught in the Vedic schools called Guru kul/am. They will help one to understand Vedic literature. They are about grammar, logic, etymology, astronomy, phonetics and prosody.
***
அந்தக்கரணம் – மனம் புத்தி, ஆன்மா ; உணர்ச்சி பிறக்கும் இடங்கள், மனச் சாட்சி
ANTAH-KARANA – Internal organs or faculties; the mind, the intellect, consciousness and ego; according to another reckoning, the heart, soul, the seat of thought and feelings, the mind and conscience.
***
அப்சரஸ் – தேவலோக அழகிகள்; ரம்பா, ஊர்வசி, மேனகா, திலோத்தமா என்போர் முக்கியமானவர்கள் ; முனிவர்களின் கடும் தவத்தைக் கலைக்க, இறைவன் இவர்களை சோதனைக்கு அனுப்புவான்; காம வயப்பட்ட ரிஷிகள் தவம் கலைந்து நிலை தடுமாறுவர்; அதனால் புலன்களை வென்றவனே வீரன் என்பார் அவ்வையார்.
APSARAS- Celestial damsels; Rambhaa, Menakaa, Uurvasii, Tilottamaa are popular damsels. Celestials send them to the sages to distract the sages from their ascetic endeavours .
***
அர்க்யம் – ரிஷிகளுக்கும், இறைவனுக்கும், இறந்து போன முன்னோர்களுக்கும் செலுத்தப்படும் தண்ணீர் சடங்கு பிராமணர்கள் தினமும் மூன்று வேளைகளில் சந்தியாவந்தனம் செய்யும்போது தண்ணீரால் அர்க்யம் கொடுப்பார்கள்.
ARGYAM – Libation to the Seers/rishis, Gods and departed souls. Brahmins do this thrice a day in their daily Sandhyaavandanam.
****
அஷ்டாக்ஷரீ – வைணவர்களின் எடடெழுத்து மந்திரம் ; ஓம் நமோ நாராயணா என்ற எட்டு எழுத்து மந்திரத்தை பொதுமக்கள் எல்லோருக்கும் கோபுரத்தின் உச்சியிலிருந்து பகிரங்கமாக வெளியிட்டுப் புகழ்பெற்றவர் ராமானுஜர்.
ASHTAKSHARI- An Eight Syllable Mantra- Om Namo Naaraayanaa. Sri Ramanuja publicly announced it from the top of a temple tower for the benefit of all people.
****

அஸ்வமேதம்
அஸ்வமேதம் – ஒரு குதிரையை பல நாடுகளுக்கு அனுப்பி இறுதியில் குதிரையை பலியிடும் யாகம். அந்தக் குதிரையை எந்த நாட்டுப் படைகளாவது தடுத்து நிறுத்தினால் அதை அனுப்பிய மன்னன் போரிடுவான் ; இதைச் செய்த மன்னர்கள் ஸார்வ பெளமன் என்று அழைக்கப்படுவார்கள் அதாவது ஒரு குடைக்கீழ் உலகாண்ட மன்னர்கள்.
ASVAMEDHA- Horse sacrifice performed by an imperial ruler or a Saarva bhauma, literally Universal Ruler. A horse will be sent to travel through several adjoining countries with an army. Those who challenge it will have to fight the Imperial ruler.
***
அஸ்திரம்
அஸ்திரம் – மந்திர சக்தியால் ஏவப்படும் ஆயுதங்கள்; இதுவரை இதை மேல்நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கவில்லை; இவைகளில் பல வகை உண்டு ; இந்துக்களில் தேவர்களும் இராட்சதர்களும் இந்த மந்திர ஆயுதத்தைப் பிரயோகித்தனர்
ASTRA- A weapon energised by a Mantra; There are different types; both Devas and Rakshasas used such weapons.
***
ஆரத்தி
ஆரத்தி- பூஜையின் அல்லது வழிபாட்டின் முடிவில் தெய்வத்துக்கு தீபங்கள் அல்லது நெய் விளக்கு அல்லது சூடத்தை ஏற்றிக் காண்பித்து வழிபாட்டினை முடித்துவைக்கும் நிகழ்ச்சி. தென் இந்திய கோவில்களில் பலவகைத் தீபங்கள் காட்டப்படும் வடக்கில் ஒரே தீபத்தைக் காட்டி அதற்கான பாடலைப் பாடுவார்கள்; எல்லோரும் சேர்ந்து அந்தத் துதியை இசைப்பார்கள்; கோவில்களில், தீபாராதனை, மஹா தீபாராதனை என்றும் சொல்லுவார்கள்
Aarti or Aarati- It marks the conclusion of a ceremony, worship. The priests or the performers present lights or lamps to the deity. In Temples they show ghee lamps or lighted camphor. Usually accompanied with special hymn or song in which all joins.
***
ஆஹுதி- யாகம் அல்லது ஹோம அக்கினியில் இறைவனுக்கான பொருள்களைப் போடுதல்; முடிவில் முக்கியப்பொருட்களை அக்கினியில் சமர்ப்பிப்பது பூர்ண ஆஹுதி எனப்படும்.
Aahuti- Oblation made in the Sacrificial Fire. Final ceremony is called Poorna Aahuti.
***
ஆசீர்வாதம் – வயது குறைந்தோருக்கு பெற்றோர்களும் சாது, சன்யாசிகளும், பெரியோர்களும் வழங்கும் இதய பூர்வமான வாழ்த்துக்கள்; மனம், மொழி, மெய் மூன்றிலும் தூய்மையாவர்கள் இப்படி ஆசி வழங்கினால் அது அப்படியே பலிக்கும் . பொதுவாக பதினாறு பேறுகளை பெறும்படி வாழ்த்துவார்கள். திருமணமான பெண்கள் ஆனால் தீர்க்க சுமங்கலி பவஹ என்று வாழ்த்துவார்கள் ; பொதுவான வாழ்த்து தனம், தான்யம், பஹுபுத்ர லாபம், ஆயுள், ஆரோக்கியம் பெறுக என்பதாகும்
AASEERVAATHAM- Blessings; normally elders bless the youngsters; they bless them to get sixteen types of good things or in general good health, long life, wealth, plenty of food and happiness. If married women seek blessings, they wish them long married life. If a person has purity in thought, word and deed, the blessings will come true.
***
ஆஸ்ரமம்
ஆஸ்ரமம் – இதற்கு இரண்டு பொருள்கள் உண்டு ; முனிவர்கள் தங்கும் கானக விடுதிகளுக்கு ஆசிரமம் என்று பெயர் ; ஊருக்கு வெளியே இவைகள் இருக்கும்; தற்காலத்தில் நகர்ப்புறங்களில் உள்ள சில சாது சந்நியாசி மடங்களும் இந்தப் பெயரைச் சூட்டிக்கொண்டுள்ளன. புதுவை அரவிந்தஆஸ்ரமம் , திருவண்ணாமலை ரமண ஆஸ்ரமம் ரிஷிகேஷ் சிவானந்த ஆஸ்ரமம் .
மனிதனின் 4 வகையான வாழ்க்கைப் பிரிவுகளுக்கும் ஆச்ரமம் பொருந்தும். பிரம்மச்சர்யம், கிரஹஸ்தாச்ரமம், வானப்பிரஸ்தம், சன்யாசம் என்பன அவை.
AASHRAM -Ashram – HERMITAGE; Example- Aurobindo ashram, Pondicherry , Sivananda Ashram (Headquarters of The Divine Life Society), Rishikesh, Himalayas, India. Ramanaashram in Tiruvannamalai .
Another meaning- One of the Four Stages in life, these being Brahmacharyaasrama, Grhastaasrama, Vaanapprastha, and Sanyaasa.
Aasrma Dharma denotes the codes of conduct and duties for each of these stages in life; they are found in Smritis, Law Books of Hindus.
***
ஆதீனம், ஆதீனகர்த்தர்


ஆதீனம், ஆதீனகர்த்தர் : சைவ சமயத்தைப் பரப்புவதற்காக நிறுவப்பட்ட துறவிகளின் மடம்; அதன் தலைவர் ஆதீனகர்த்தர் ; பொதுவாக பிராமணர் அல்லாதோர் இவைகளின் தலைவராக இருக்கிறார்கள் ; புகப்பெற்ற ஆதீனங்கள்: தர்மபுரம், திருப்பனந்தாள், திருவாவடுதுறை, பேரூர், மதுரை ஆதீனம் முதலியன; இவைகள் பல நூற்றாண்டுகள் வரலாறு உடையவை.
AADINAM Aadheenam –
Religious establishment managed by ascetics for the propagation of Saivism.
Examples- Dharmpuram, Tiruvavduthurai, Tiruppanandal, Madurai, Perur Aadhiinams. They are several centuries old.
The head of an Aadhiinam is called Aadhinakarthar ; generally headed by a non-brahmin ascetic.
To be continued……………………….
Tags- இந்துமத கலைச்சொல் அகராதி -Part 1, அபிஷேகம், அஸ்திரம், ஆரத்தி, அஸ்வமேதம் ,ஆசீர்வாதம், Hindu Dictionary part one













