Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ரிக் வேதத்தில் என்ன அதிசயம் இருக்கிறது?- PART 1 (Post No.10043)
ரிக் வேதத்தை மேம்போக்காக வேகமாகப் படித்தாலும் நூற்றுக் கணக்கான அதிசய, அபூர்வ விஷயங்களைக் காண முடிகிறது. இதன் ஆழ்ந்த பொருளை அரவிந்த மகரிஷி போன்றோர் சொல்லுவதைப் படித்தால் இன்னும் அதிசயங்களைக் காணலாம். மந்திரங்களுக்கு அர்த்தம் பார்க்கக்கூடாது ; அதன் சப்தமே நன்மைகளைச் செய்யும் என்று சங்கராசார்யார் மடங்களின் தலைவர்கள் சொல்வதிலும் பொருள் உண்டு. இதனால்தான் பாரதி சொன்னான் – “நம்பினார் கெடுவதில்லை; இது நான்கு மறைத் தீர்ப்பு” என்று!
ஒரு பள்ளிக்கூட மாணவனிடம் ரிக் வேத புஸ்தகத்தைக் கையில் கொடுத்து இதில் உள்ள 1000+++ துதிகளில் ஏதாவது 100 துதிகளை படித்து என்ன கண்டாய் என்று எழுது பார்க்கலாம் என்று சொன்னாலும் கீழ்க்கண்ட அதிசய விஷயங்களைக் காணத் தவறமாட்டான் ; இதோ ஸ்கூல் பாய் SCHOOL BOY LIST தரும் பட்டியல்:-
1. அட அதிசயமே ! கடவுளரை எல்லாம் ரிஷிகள் “நீ என் நண்பன், என்னுடைய DEAREST FRIEND டியரெஸ்ட் ப்ரண்ட்” என்று அழைக்கிறார்களே !
2. OH MY GOD ஓ மை காட்! பக்கத்திலுள்ள ரிஷிகளை காம்ரேட்ஸ் , COMRADES தோழர்களே வாருங்கள் ; நாம் சேர்ந்து பாடுவோம் என்று அழைக்கிறார்களே!
3. இதுவரை நான் நடராஜர் ஒருவரைத்தான் உலகின் முதல் DANCER டான்சர் என்று எண்ணினேன். இங்கு குறைந்தது இரண்டு இடங்களில் இந்திரனை டான்ஸர் DANCER என்று அழைக்கிறார்களே ! ஊர்வசிக்கும் சிந்து சமவெளியில் காணப்படும் டான்சிங் DANCING WOMAN பெண்ணுக்கும் இந்திரன்தான் பரத நாட்டியம் கற்பித்தானோ! ரிக் வேதத்தை தமிழில் முழுதும் மொழி பெயர்த்த ஜம்புநாத அய்யர் அழகாக “கூத்தனே” என்று மொழிபெயர்த்து இருக்கிறாரே !
4. அட, பெரும்பாலான ரிஷிகள் தன்னுடைய பெயர்களையே துதிகளில் சொல்லி, நான் கூப்பிடுகிறேன் என்று சொல்கிறார்கள் . இதை பார்த்துதான் கர்நாடக , இந்துஸ்தானி பாடகர்கள் பாட்டிலேயே தங்கள் பெயர்களை முத்திரையாகச் சேர்த்தார்களோ ? ஜெயதேவர், புரந்தர தாசர் , மீராபாய், தியாகராஜர், போன்ற நூற்றுக் கணக்கான சாஹித்ய கர்த்தாக்கள் பாடலில் முத்திரை எப்படி வந்தது என்பது இப்போது புரிகிறது.
5. ‘திராவிட சிசு’ என்று சவுந்தர்ய லஹரியில் வருவது, திரு ஞான சம்பந்தரையல்ல , தன்னைத்தானே சங்கரர் அப்படி பாடிக்கொண்டார் என்று காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் சொல்லுவது பொருள்படைத்தது என்பதும் இப்போது தெரிகிறது
6. என்ன அற்புதம் ! ‘எனக்கு’ என்று பிரார்த்திக்காமல் எல்லா ரிஷிகளும் ‘எங்களுக்கு’, ‘நமக்கு’, ‘என் நண்பனுக்கு’ என்று கூட்டுப் பிரார்த்தனை செய்கிறார்கள்! ‘லோகா சமஸ்தா சுகினோ பவந்து’ என்பதும் ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்பதும் இதிலிருந்து வந்ததே !!
7. உறவு முறை எப்படி போற்றப்பட்டிருக்கிறது! தந்தையை அணைக்கும் மகன், தாயின் அரவணைப்பிலுள்ள குழந்தை, கன்றுக்குட்டியை நக்கிக் கொடுக்கும் தாய்ப்பசு என்ற உவமைகள் நூற்றுக் கணக்கில் வருவது வியப்பைத் தருகிறது.
8. அட, சங்கத் தமிழ் இலக்கியத்திலுள்ள ஆறு பருவ காலங்கள் ரிக் வேதத்திலிருந்து எடுத்ததுதான். ஏனெனில் உலகில் வேறு இடங்களில் 4 பருவ காலங்களே!
9. தாயாருக்குத்தான் எவ்வளவு மதிப்பு! பூமியையும் வானத்தையும் தாய் என்று ரிஷிகள் பாடுகின்றனர். நதிகளை சகோதரிகள் என்று பாடுகின்றனர் எந்த இடத்தில் பாடினாலும் முதலில் தாய், பின்னர் தந்தை பெயரைக் குறிப்பிடுகின்றனர். தாய்க்கு அவ்வளவு மதிப்பு!!!
10. ஓ மை காட்OH MY GOD ! பிரம்மாண்டமான சரஸ்வதி நதியை நிறைய ரிஷிகள் பாடுகின்றனர். இப்போது அது இல்லையே ? ஆக 4000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒடிய சரஸ்வதி நதியைப் பல ரிஷிகள் போற்றுவதிலிருந்து இவர்கள் அனைவரும் மிகப் பழங்கால முனிவர்கள் என்பது தெரிகிறது
11. பல ரிஷிகள் பாவ மன்னிப்புப் பாடல்களைப் பாடியுள்ளனர். நான் நினைத்தேன்; ஆழ்வார்கள், நாயன்மார்கள் பட்டினத்தார், கந்த சஷ்டிக் கவசம் பாடிய தேவராய சுவாமிகள்தான் “எத்தனை குறைகள் எத்தனை செயினும் பொறுப்பது உன் கடன்” என்று பாடினார்கள் என்று.
12.இது என்ன வேடிக்கை! எல்லா ரிஷிகளும் எங்களுக்கு வீரமிகு (HEROIC CHILDREN) புதல்வர்கள் , நல்ல வீடு, குதிரை, தங்கம், செல்வம்,, ஏராளமான பசு மாடுகள் வேண்டும் என்று பாடுகிறார்கள் !
13. அது சரி, இது என்ன ஆச்சர்யம் ! இரண்டு தங்க நிற குதிரை மீது வரும் இந்திரன் என்று பல நூறு பாடல்களில் வருகிறதே ; நாம் சிலைகளிலும் புராணங்களிலும் ஐராவதம் என்னும் யானை மீது வரும் இந்திரனைத் தானே அறிவோம். யாரவது எங்காவது குதிரை மீது வரும் இந்திரன் சிலை இருந்தால் தயவு செய்து எனக்கு எழுதுங்கள்.
14. அடக் கடவுளே ! ஆயிரக்கணக்கான இடங்களில் இந்திரன் உள்பட எல்லாக் கடவுளருக்கும் சோமரசம் கொடுக்கிறார்களே! இது என்ன கொடி ? பருந்து FALCON OR HAWK கொண்டு வருகிறதே ! இதை யாராவது விளக்குங்களேன் ?
15. அந்த சோமரசம் மனதை சுத்தப்படுத்தும், வியாதிகளைப் போக்கும் என்றும் ரிஷிகள் பாடுகின்றனர். வெள்ளைக்காரர்களோ வேதத்தையும் இந்து மதத்தையும் இந்தியாவைத் தகர்க்கவும் வந்தவர்கள்; அவர்கள் இது போதை மருந்து (NARCOTIC DRUG) என்று சொல்லுகிறார்களே!
16. எனக்கு ஒரு சந்தேகம்; போதை மருந்து சாப்பிடுபவன் எவனாவது அதி காலையில் சூரிய உதயத்துக்கு முன்னால் எழுந்து குளித்துவிட்டு, பாதியை தீயில் ஆஹுதி செய்துவிட்டு குடிப்பானா ?அதுவும் மூன்று வேளை இப்படி சோம யாகம் செய்கிறார்களே. குடிப்பவனும் போதை மருந்து சாப்பிடுவோனும் இப்படியா செய்வார்கள் ? செய்கிறார்கள் ? உலகிலேயே மிகப்பெரிய அதிசயம் 4 வேதத்தில் உள்ள 20,000 வேத மந்திரங்களை பல ஆயிரம் ஆண்டுகளாக நினைவில் வைத்துக் காப்பாற்றி இருக்கிறார்களே. போதை மருந்து சாப்பிடும் சமுதாயமாக இருந்தால் நினைவாற்றல் மறைவதோடு அந்த சமூகமே அழிந்து இருக்குமே.!
17. பல பாடல்களில் 100 ஆண்டுகள் வாழ வேண்டும் என்று பாடுகிறார்கள் . என்ன பெருந்தன்மை ! 100 க்குப் பிறகு எப்போதும் வேண்டாம் ; நூறுக்குக் குறைவாக எப்போதும் வேண்டாம் என்கின்றனர்! யார் அவர்களுக்கு 100 என்று எல்லை விதித்தார்கள்?
18. அது என்ன 99 அதிசயம்? பல முனிவர்களும் 99 நதிகள், 99 கோட்டைகள் , 3339 கடவுளர், 33 கடவுளர் என்று என்ன என்ன எண்களையோ பயன்படுத்துகின்றனர். இந்திரன் 300 எருமை சாப்பிட்டான் என்று வெள்ளைக்காரர்கள் மொழி பெயர்க்கின்றனர். ஓரிடத்தில் லட்சம்பேரைக் கொன்றான், 60,000 பேரை வென்றான் என்றெல்லாம் வருகிறதே !
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ருக்மிணீஷ விஜய மகிழ்ச்சித் ததும்பும், மேன்மையான ஓர் இலக்கியம். மேலே கூறிய மகா காவியத்துக்கு உரிய எல்லாவித லட்சணங்களையும் கொண்டது.
இது பக்திரசத்தையே முன்நிறுத்தியுள்ளது. பாரதம் 10-வது காண்டத்தில் முதலிலிருந்து விவரிக்கப்பட்டுள்ளச் சம்பவங்களையே காவியத்தின் கதைக் கருவாக எடுத்துக் கொண்டுள்ளார்.அந்த உயர்ந்த, கம்பீரமான கிருஷ்ணாவதாரம் எனும் பேசும் பொருளும், அவனது தீராத விளையாட்டுச் செயல்களுமே தனிச் சிறப்பைக் கொடுத்து விட்டது. இதில் சுயக் கட்டுப்பாடு, தன்னடக்கம்,(தீரோதாத்த), உயர்ந்தக் குண,நலம் வாய்ந்த ஶ்ரீகிருஷ்ணப் பரமாத்மாவே நாயகன், நாயகி தேவி ருக்மிணி.
முதல் சர்கத்தில்,தேவேந்திரனின் தூதுவராக கிருஷ்ணனைக் காண வரும் நாரதர், சிசுபாலனுடன் போருக்குத் தயாராகுமாறு கோரிக்கை வைக்கிறார். மகான் வாதி ராஜர் தீமை விலகி நன்மைப் பயக்கும் பாற்கடல் கடையும் சம்பவத்தை மிக அழகாக, ரசனையுடன் ரூபக அணியில் விவரித்து ஒரு படி முன்னேறி விடுகிறார். மாகா, ரைவதகா மலைத் தொடரிலுள்ள ரிஷிகள் பதஞ்சலி யோக சாஸ்திரத்தை
அனுஷ்டிக்கிறார்கள் என விவரிக்கிறார். ஶ்ரீவாதிராஜர் கிருஷ்ணன் நிகழ்த்தும் கோவர்தனகிரி லீலைகளையும், அதன் சுற்றுப்புறச் சூழல் பயன்பாட்டையும் சொல்கிறார். பருவகால சிலேடையுடன் கூடிய குரு மாத்வாச்சாரியார் பற்றிய வர்ணனை (5-36-39) நம்மை ஈர்க்கிறது. இன்னும் இதுமாதிரி பல உண்டு.
மிகச் சிறந்தச் செய்யுட்களும், தத்துவ ஞானமும் இணைபிரியாதவை. ஒரு வெற்றிகரமானப் புலவருக்கு இவையிரண்டும் இன்றியமையாதவை ஆகும். அதைச் செவ்வனே செய்து முடித்திருக்கிறார் ஶ்ரீவாதிராஜர்.
துவைதம்-அத்துவைதம் இடையேயுள்ள வித்தியாசத்தை விளக்கியுள்ளார். காளிங்க நர்த்தன விவரணையில் கிருஷ்ணனின் பாதங்களை கருடனின் உள்ளங்கைகளாகப் பாவித்துள்ளார்(4-63). “தேவர்களின் அதிகாரி பிரம்மா, அவர் தேவி லக்ஷ்மிக்குக் கட்டுப்பட்டவர், நான் ஶ்ரீதேவியின் தலைவன்… தேவர்களின் படிநிலையைக் குறிப் பிடுகிறார். மேலும் சர்கம்3-ல் அசுரன் த்ருனாவ்ரதா ஆகாயத்திலிருந்து விழுவதில் அடங்கியுள்ள வேதாந்தக் கருத்தையும் (காரண காரியத்துக்குக் கிடைக்கக் கூடிய சரியான பலன்-cause & effect) விளக்குகிறார். அனைத்துவித உருவக அணிகளையும் கையாண்டிருக்கிறார். கிருஷ்ணனும், கோபிகையரும் உரையாடுவது லதானுப்ராசா அணியில் அமைந்துள்ளது.(4-32,33) அதாவது, ஒரு சொல்லை ‘ஏற்புடையது அல்ல’ என்றுப் பொருள்படும்படி குறிப்பிட்டு அடுத்து அதே சொல்லை அனுமதிக் கலாம் ,ஏற்கத்தக்கது’ என்றுப் பொருள்பட பேசுவதாகும். கோபிகையரைக் குழப்புவது மட்டுமின்றி நம்மையும் சிந்திக்க வைத்துவிடுகிறார். தாயார் யசோதை கஷ்டப்பட்டு கிருஷ்ணனைத் தூங்கவைக்கையில், ‘ஏன் தூங்க வேண்டும்? என்று அடம் பிடிப்பது முறுவலிக்க வைத்தாலும், அதற்கு யசோதை தரும் விளக்கத்தில் பொதிந்திருக்கும் தத்வார்த்தம் சிந்திக்க வைக்கிறது! (3-12) ராசக்க்ரீடை (அத் 8, 9), ருக்மிணி தேவியின் கேசாதி-பாத வர்ணனை (அத். 18) பிரமிக்க வைக்கின்றன. சித்திரக் கவியில், தாமரை இதழ் பந்தம் (17-70), சக்கர பந்தம் (19-36) வியக்க வைக்கின்றன.
இரு கவிகளுமே ஒரே எழுத்தைக் கொண்டுப் பாடல் புனைவதில் வல்லவர்கள். ஆனால் அதிலுள்ள வித்தியாசத்தைப் பாருங்கள்….
மாகா பாடியதோ ‘த’ எழுத்து வரிசையின் 3-வது மெய்யெழுத்து d=द வைக் கொண்டுச் சாதாரணமாக இயற்றப்பட்டதாகும்.
दाददो दुद्ददुद्दादी दाददो दूददीददोः ।
தாததோ துத்துத்தாதி தாததோ தூததீததோ:
दुद्दादं दददे दुद्दे दादाददददोऽददः ॥18-114
துத்தாதம் தததே துதே தாதாததததோ தத:
இதன் பொருள்-
“கேட்பதைக் கொடுப்பவனும், தீய எண்ணம் கொண்டவர்களுக்குக் கசையடி தண்டனை அளிப்பவனும்,உள்ளத்தைத் தூய்மைப் படுத்துபவனும், துஷ்டர்களைச் சம்ஹாரம் செய்பவனுமான பகவான் கிருஷ்ணன் எதிரியின் மீது ரணவலி உண் டாக்கும் தன் அம்பைச் செலுத்தினான்”
இதற்குச் சவால்விடும் தொனியில் மகான் வாதிராஜர் ‘த’ எழுத்து வரிசையின் 5-வது மெய்யெழுத்தான n=न வைக் கொண்டு ஒரு பன்முகத்தன்மை வாய்ந்தப் பாடலை
இயற்றியுள்ளார். அதில் உயிர் எழுத்துக்களின் கூட்டு வார்த்தைகளும் (அ+அ, அ+இ, அ+ஐ, அ+உ),பூர்வரூப சந்தி (ते + अत्र = तेऽत्र), விசர்க சந்தி ( तप: + वन =तपोवन) என்ற வெவ்வேறு அணிகள் அமைக்கப்பட்டுப் பாடலுக்கு ஏற்றம் தந்துள்ளன.
नानाननाननुत् नूनम् न एन: अनन्ने अन्निनाम् नु नौ: ।
ஹே, ஒப்பற்றத் தலைவனே! ஒருவனுக்கு உணவளிப்பவனுக்குப் பாபம் சேராது. இந்திரியச் சுகங்களில் மூழ்கியிருப்போரை விட்டு அவ்வளவு எளிதில் ஆசை அகலாது. அது விடுபடுவது ஆத்மானந்தத்தை அனுபவித்தப் பிறகுதான். களியாட் டத்தில் உழல்பவனைப் படகு எனும் யோகி கரை சேர்த்து,பிரம்மானந்தத்தை அடைய வழி காட்டுவான்!” என்பதே இதன் உட்பொருளாகும்.
இங்கே அருணகிரிநாதர், வில்லிப்புத்தூராருடன் வாதிட்ட போது பாடியச் சவால் பாட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம் தானே! ஆஹா, எவ்வளவு அருமை!
திதத் தத்தத் தித்தத, திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத் தத்தத் தித்த திதிதித்த தேதுத்து த்திதத்தா
திதத் தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத் தத்தத் தித்தித்தி தீதீ திதி துதி தீ தொத்ததே!
அவரது உணர்ச்சியூட்டும் பாடல் வரிகள் நமக்குப் பாரதியாரையும், ஆங்கிலக் கவிஞன் பெர்சி ஷெல்லியையும் நினைவூட்டுகின்றன. இப்படிப்பட்ட ஓர் அமர காவியத்தை வெரும் 19 நாட்களில் தினம் ஒரு காண்டமாக இயற்றி, கெடுவுக்கு இரண்டு தினங்களுக்கு முன்பே வித்வத் சபையோரிடம் சமர்ப்பித்து விட்டார்.
அதைப் படித்தப் பண்டிதர்கள் ஆச்சரியமடைந்தனர். மகானின் இனிமையான எழுத்து நடை அவர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது. எளிதில் புரியக் கூடியப் பாடல் வரிகள், இன்னிசை இழையோடும் சொற்கள், அசர வைக்கும் உபமானங்கள், ஊக்குவிக்கும் உருவகம், யமகம், சிலேடை,சித்திரக் கவிதைகள் அனைத்தும் அவர்கள் மனதைப் பெரிதும் கவர்ந்து விட்டன. ‘மாகாவின் தலைப்பு எதிர்மறை எண்ணங்களையே
தரும்,ஆனால் என்னுடையது கிருஷ்ணனின் வெற்றியைக் குறிக்கும் ஒரு மங்கலச் சொல், அது நேர்மறை எண்ணங்களையேத் தரவல்லது. தெய்வத்தைச் சிறுமைப் படுத்தி ஒரு லடகனை (வில்லன்) உயர்த்திக் காட்டுவது ஏற்புடையது ஆகாது!’ என்ற மகானின் வாக்கிலுள்ள நிதர்சனத்தை ஆமோதித்தனர். மகா காவியத் தகுதியையும் ஒருமனதாக அளித்தனர்.
மகான் ஶ்ரீவாதிராஜருக்குக் கவிசமூகத்தின் திலகம் என்றப் பட்டத்தையும் கொடுத்துக் கௌரவித்தனர். அது மட்டுமின்றி, நன்கு அலங்கரிக்கப்பட்ட “கண்டாமாகா” யானை மீது ஶ்ரீருக்மிணீஷ விஜய காவியப் பிரதி
வைக்கப்பட்டு, புண்ணியபுரி முழுதும் வெகு கோலாகலத்துடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுக் கௌரவிக்கப் பட்டது.
மகாவிஷ்ணுக்குரிய சாதுர்மாஸ்ய விரதக்காலத்தில் அவரது கிருஷ்ணாவதாரத்தைப் போற்றி இயற்றப்பட்ட ஶ்ரீருக்மிணீஷ விஜய நூல் ஆறாவது மகாகாவியமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது என்ன பொருத்தம்!
இரு காவியங்களுக்கிடையே என்ன ஒற்றுமை, வேற்றுமை இருந்தாலும் முடிவில் வெற்றிவாகைச் சூடியது என்னவோ, சம்ஸ்க்ருதம் தான்!
ஜயது, ஜயது சம்ஸ்க்ருதம்!
நன்றி, வணக்கம். ஜெய்ஹிந்த்.
——————————————————————————————————-
tags- ஶ்ரீ , ருக்மிணீஷ விஜய நூல்-2, வாதிராஜர், B Kannan
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 30-8-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.
எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். (இந்த உரை இரு பகுதிகளாக வெளியிடப்படுகிறது.)
மத்வாசாரியர்! – 1
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம், நமஸ்காரம்.
அனைவருக்கும் ஜன்மாஷ்டமி நல் வாழ்த்துக்கள். உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணரையே இஷ்ட தெய்வமாகக் கொண்டு அவரை அங்கு ஸ்தாபித்து வழிபட்டு, அனைவரும் வழிபட வகை செய்த ஸ்ரீ மத்வாசாரியர் திருவடி போற்றுவோம்.
ஹிந்து தர்மத்தில் ஆசார்ய தேவோ பவ என்று ஸ்மிருதியில் கூறப்பட்டிருக்கிறது. அத்வைதத்தை ஸ்தாபிக்க ஆதி சங்கரர் அவதரித்தார். அதே போல த்வைதத்தை ஸ்தாபிக்க ஸ்ரீ மத்வாசாரியர் அவதரித்தார். பாரதத்தில் தென் கன்னட தேசத்தில் உடுப்பி தலத்திற்கு அருகில் உள்ள பாஜக க்ஷேத்ரத்தில் கி.பி.1199ஆம் ஆண்டு மத்வாசாரியர் அவதரித்தார். த்ரேதா யுகத்தில் ஆஞ்சநேயராகவும் துவாபர யுகத்தில் பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமராகவும் அவதரித்த இவர் கலியுகத்தில் மத்வராக அவதரித்துள்ளார். இந்த மூன்றுமே வாயு தேவனின் அவதாரங்களே!
இவர் ஸ்வஸ்தி ஸ்ரீ விளம்ம்பி வருடம் ஆடி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்த்தியன்று அந்தண குலத்தில் மத்யகேஹர் – வேதவதி ஆகிய தம்பதியருக்கு திருக்குமாரராக அவதரித்தார். இவருக்கு பெற்றோர் வாசுதேவன் என்று பெயர் சூட்டினர்.
இவர் தெய்வீகக் குழந்தை என்பதை நிர்ணயம் செய்யும் விதத்தில் இவரது குழந்தைப் பருவத்திலேயே சில திவ்ய லீலைகள் ஏற்பட்டன. இவர் சுமார் இரண்டு வயதுக் குழந்தையாக இருக்கும் போது இவரது தாயார் ஏதோ வேலையாக வெளியில் சென்றிருந்தார். அந்தச் சமயம் குழந்தை அழ ஆரம்பித்தது. இவரது தமக்கை அடுப்பில் ஒரு அண்டாவில் வேக வைத்துக் கொண்டிருந்த முப்பது படி கொள்ளிலிருந்து ஒரு சிறிது எடுத்து இவரது வாயில் ஊட்டி விட்டுச் சென்றாள். சிறிது நேரத்தில் அவள் திரும்பி வந்து பார்க்கும் போது குழந்தை 30 படி கொள்ளையும் தின்றிருந்தது. இது கண்டு அனைவரும் வியந்தனர்.
இன்னொரு சமயம் சிறுவராக இவர் இருந்த போது வீட்டுத் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவரது தந்தை ஒரு வியாபாரியிடம் எருதுக்காக வாங்கிய கடனைத் திருப்பிக் கேட்டு அந்த வியாபாரி அங்கு வந்தார். தான் கொடுத்த பணத்தை தனது தந்தையாரிடம் அவர் வலியுறுத்திக் கேட்பதைப் பார்த்த வாசுதேவன் தனது புளியங்கொட்டைகளில் சிலவற்றைத் அவரிடம் தந்து இன்று முதல் உங்களுக்குச் செல்வம் பெருகும் என்றார். அதே போலவே அந்த வியாபாரிக்குச் செல்வம் அன்றிலிருந்து கொழிக்க ஆரம்பித்தது. பின்னர் ஒரு நாள், வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க அவரது தந்தை சென்ற போது அந்த வியாபாரி தனது செல்வ நிலையைக் காண்பித்து பணத்தை வாங்க மறுத்து விட்டார். இப்படிப் பல லீலைகள் தொடர்ந்து நடந்தன.
மகனுக்கு உபநயன வயது வரவே தந்தையார் உபநயனத்தைச் செய்வித்து ஆசாரியர் ஒருவரிடம் அவரை ஒப்படைத்தார். ஒரு நாள் குருதேவர் சொல்லி வந்ததை இவர் கவனிக்காமல் இருந்ததைக் கவனித்த அவர், “நான் சொன்னதைச் சொல்” என்றார். வாசுதேவரோ குரு சொன்ன வேத வாக்கியங்களை அப்படியே திருப்பிச் சொன்னார்.
ஒரு சமயம் பெரிய பாம்பு ஒன்று அவரைக் கடித்து விட்டது. அந்தப் பாம்பின் தலையை தன் கால் கட்டை விரலாலேயே நசுக்கி விட்டு எதுவும் நடக்காதது போல அவர் இருந்தார்.
அவரது நண்பரான சக மாணவன் ஒருவனுக்குத் தீராத தலைவலி ஏற்பட அவன் துடித்தான். உடனே அவர் அவன் காதில் ஊதினார். உடனடியாகத் தலைவலி நின்று விட்டது. கல்வி கற்கும் நாட்களில் அவர் செய்த சாகஸங்கள் பல. ஓடுவது, குதிப்பது, மல்யுத்தம் செய்வது உள்ளிட்டவற்றில் அவர் அசாத்திய திறமையைக் காட்டியதால் அவரை பீமன் என அனைவரும் அழைக்கலாயினர்.
காலப்போக்கில் ஒரு நாள் அச்யுதப்பிரக்ஷர் என்னும் ஒரு துறவி அவர் இருந்த இடத்திற்கு வந்தார். அவரை தரிசித்த வாசுதேவர் தனது தந்தையாரிடம் இவரிடம் நான் முறைப்படி சந்யாச தீக்ஷை பெற விரும்புகிறேன் என்றார்.
இதனால் அதிர்ச்சியுற்ற மத்யகேஹர், “நாங்கள் இறந்தால் எங்கள் அந்திமக் கிரியைகளை யார் செய்வார், உன் முடிவை மாற்றிக் கொள்” என்றார்.
உடனே வாசுதேவர், “தந்தையே! இன்றையிலிருந்து 314நாட்கள் கழித்து உங்களுக்கு சிம்ம லக்னத்தில் ஒரு மகன் பிறப்பான். அவன் உங்களை நன்கு ரக்ஷிப்பான். அவன் பிறக்கும் வரை நான் துறவறம் ஏற்கவில்லை” என்றார்.
அதன்படியே 315ஆம் நாளில் மத்யகேஹரின் மனைவிக்கு சிம்ம லக்னத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
வேத அத்யயனம் முடிந்த பின்னர் தர்க்கம் வியாகாரணம் உள்ளிட்ட அனைத்து கலைகளிலும் தேர்ச்சி பெற்றார் வாசுதேவர். உலக வாழ்க்கையில் சற்றும் பற்றில்லாத நிலையில் உடுப்பி தலத்தில் ஸ்ரீ அனந்தேஸ்வரர் ஆலயத்திற்கு அருகில் உள்ள மடத்தில் ஸ்ரீ அச்யுதப்பிரக்ஷர் இருப்பதை அறிந்தார் அவர். அவரை அணுகி தனக்கு சந்யாச தீக்ஷை அளிக்குமாறு வேண்டினார். அவரும் இவரது ஆர்வத்தையும் தகுதியையும் பார்த்து அவருக்கு அதிக நிர்பந்தம் இல்லாத துறவற தீக்ஷையைக் கொடுத்து ‘பூர்ண ப்ரஜ்ஞர்’ என்னும் சந்யாச நாமத்தை அளித்தார். அன்று முதல் அவர் பூர்ண ப்ரஜ்ஞர் என அழைக்கப்படலானார்.
துறவறம் ஏற்ற 41ஆம் நாள் கங்கா ஸ்நானம் செய்வதாக அவர் சங்கல்பம் செய்தார். ஆனால் வெகு தொலைவில் உள்ள கங்கா நதிக்கு எப்படிச் செல்வது என்று யோசித்த அவர் ஸ்ரீ அனந்தேஸ்வரரைப் பிரார்த்தித்தார். உடனே கங்கா நதி உடுப்பியில் உள்ள குளத்தில் பிரவேசித்தது. அதில் ஸ்நானம் செய்து தன் சங்கல்பத்தை நிறைவேற்றினார் பூர்ண ப்ரஜ்ஞர். அன்று முதல் அந்தத் தடாகம் ‘மத்வஸரோவரம்’ என்று பெயர் பெற்று புண்ய தீர்த்தமானது.
அச்யுதப்பிரக்ஷர் அந்தக் காலத்தில் நடைமுறையில் இருந்த அத்வைத கோட்பாடுகளையே தம் சீடர்களுக்குப் போதித்து வந்தார். குருநாதர் கூறியவற்றை நன்கு கிரஹித்த பூர்ண ப்ரஜ்ஞர் அவ்வப்பொழுது தன் சூக்ஷ்ம புத்தியைக் காண்பிக்கவே வியந்து போன குருநாதர் அவர் மீது விசேஷ அன்பு பாராட்டியதோடு அவருக்கு பரமஹம்ஸ பத தீக்ஷையை அளித்தார். ஆனந்த தீர்த்தர் என்ற நாமத்தையும் சூட்டினார்.
Agni is Mitra when enkindled duly, Mitra s priest, Varuna, Jataveda; Mitra as active Minister, and House-Friend, ,Mitra of flowing rivers, and of mountains RV.3-5-4
xxx
SEPTEMBER 2 THURSDAY
As holy food, Agni to your invoker , give wealth in cattle, lasting rich in marvels. RV.3-5-11
Xxx
SEPTEMBER 3 FRIDAY
Bring with their Dames, the Gods, the Three and Thirty, ater your God like nature, and be joyful-3-6-9
Xxx
SEPTEMBER 4 SATURDAY
Agni, forgive us, for our weal, even sin committed-6-7-10
Lord of the Forest, raise yourself up n the loftiest spot on earth.
Xxx
SEPTEMBER 5 SUNDAY
Give splendour, fixed and measured well, to him who brings the sacrifice 3-8-3
Xxx
SEPTEMBER 6 MONDAY
Well- robed, enveloped he is come, the youthful, ; springing to life his glory waxes greater. Contemplative in mind and God-adoring, sages of high intelligence upraise him 3-8-4
xxx
SEPTEMBER 7 TUESDAY
Adityas, Rudras, Vasus,careful leaders, Earth, Heaven and Prithivi and Air’s mid regions. RV.3-
xxx
SEPTEMBER 8 WEDNESDAY
Accordant Deities, shall bless our worship and make or sacrifice’s flag lofty -3-8-8
xxx
SEPTEMBER 9 THURSDAY
Sing, Agni, for long life to us and noble sons 3-3-7
Xxx
SEPTEMBER 10 FRIDAY
These speak of truth, praising the truth eternal, thinking on order as the guards of order RV.3-4-7
Xxxx
SEPTEMBER 11 SATURDAY
May Bharati with all her sisters,Ila accordant with gods ,with mortals agni ,
Sarasvati with all her kindred rivers, come to this grass. Three goddesses and seat them 3-4-8
Xxxx
SEPTEMBER 12 SUNDAY
Like swans that fly in long lines, the (Yupa) pillars have come to us in arrayed in brilliant colour. They lifted on high by sages, eastward, to go forth as gods to the God’s dwelling places -3-8-9
xxxx
SEPTEMBER 13 MONDAY
Those Poles (Yupa) on the earth with rings that deck them seem to the like eyes like horns of horned creatures .3-8-10
Xxx
SEPTEMBER 14 TUESDAY
Him who had passed beyond his foes, beyond continual pursuits, Him the unerring ones, observant, found in floods, couched like a lion in his lair 3-9-4
Xxx
SEPTEMBER 15 WEDNESDAY
Offer to him who knows fair rites, who burns with purifying glow, swift envoy, active, ancient, and adorable; serve you the God attentively. RV.3-9-8
Xxx
SEPTEMBER 16 THURSDAY
Three times a hundred Gods and thrice a thousand, and three times ten and nine have worshipped Agni.3-9-9
Xxx
SEPTEMBER 17 FRIDAY
He verily , who honours you with fuel, Knower of all Life, , HE! Agni! Wins heroic might , he prospers well 3-10-3
Xxx
SEPTEMBER 18 SATURDAY
As such O Purifier!, shine on us heroic glorious might; be nearest friend to those who laud thee, for their weal. RV.3-10-8
xxxx
SEPTEMBER 19 SUNDAY
O Agni! In our deeds of might, my we obtain all precious things. The Gods are centred in you 3-11-9
xxx
SEPTEMBER 20 MONDAY
Indra and Agni, , singers skilled in melody hymn on, bringing lauds, ; I choose you for the sacred good 3-12-5
xxx
SEPTEMBER 21 TUESDAY
Infallible is Agni, he who goes before the tribes, a chariot swift and ever new 3-11-5
Xxx
SEPTEMBER 22 WEDNESDAY
He /Agni, is the sage who guides these men, Leader of sacred rites is he,
Who wins and bestows wealth 3-13-3
xxx
SEPTEMBER 23 THURSDAY
Approaching with raised hands and adoration, we have this day fulfilled for your longing 3-14-5
Xxx
SEPTEMBER 24 FRIDAY
Approaching with raised hands and adoration, we have this day fulfilled for your longing RV. 3-14-5
Xxx
SEPTEMBER 25 SATURDAY
As such, O Agni, deal us wealth and hero might, O Bounteous One! Most lofty, very glorious, rich in progeny, free from disease and full of power- 3-16 3
xxx
SEPTEMBER 26 SUNDAY
Help us to strength, Blessed Agni! Rice in progeny in abundant, in our sacrifice. Flood us with riches yet more plenteous, bringing weal, with high renown, most Glorious One! – 3-16 6
xxx
SEPTEMBER 27 MONDAY
May we rest ever in the loving kindness, in the auspicious grace of him the Holy RV.3-1-21
xxx
Grant us abundant food , you priestly Herald, vouchsafe to give us ample wealth RV.3-1-22
xxx
SEPTEMBER 28 TUESDAY
Wishing to do you service, , Agni, they are there ,desirous of your friendship; grant them store of wealth -3-2-6
xxx
SEPTEMBER 29 WEDNESDAY
Agni , the friend of men, ever seek for wealth 3-2-15
xxx
SEPTEMBER 30 THURSDAY
Don’t leave us to destitution, Agni, nor want of heroic sons, RV.- 3-16 -5
–SUBHAM–
Tags. –GANESH, RV 3rd Mandala, September 2021, Calendar, Rigveda
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
செப்டம்பர் 2021 காலண்டர்; ரிக் வேத பொன்மொழிகள்- 3 வது மண்டலம்(Post.10036)
பண்டிகை நாட்கள் – செப்.5 ஆசிரியர் தினம்; 8- சாம வேத உபாகர்மா ;10- கணேஷ் சதுர்த்தி; 11- பாரதி நூற்றா ண்டு நினைவு தினம் , ரிஷி பஞ்சமி; 21- மாலையை பட்சம் ஆரம்பம்;
செப்.6 – அமாவாசை ; செப்.20 பவுர்ணமி ;
ஏகாதஸி விரத நாட்கள் – 2,16;
சுபமுஹூர்த நாட்கள் – 1,3,8,9
xxx
செப்டம்பர் 1 புதன் கிழமை
தண்ணீரில் கருவாக இருப்பவன்/ அக்னீ ; தன் ஒளியால் பிரகாசிப்பவன்; மக்களின் நன்மைக்காக தண்ணீரை உண்டாக்கினான் RV 3-1-12
XXX
செப்டம்பர் 2 வியாழக் கிழமை
சாணையால் கத்தியைத் தீட்டிக் கூராக்குவது போல, மனிதர்கள் கவிதைகளால் அக்கினியை பிரகாசிக்கச் செய்கின்றனர் 3-2-9
XXX
செப்டம்பர் 3 வெள்ளிக் கிழமை
அக்னீ , பிறக்கும்போது வெள்ளை; பலமானபோது சிவப்பு; ஏழு மகத்தான நதிகள் அவனை வளர்த்தன 3-1-4
மனிதர்களின் நண்பன்; மனிதர்களின் நலனை நாடுபவன்; வடிவில் அழகன் ; உத்தமன்; பல வர்ணங்களில் ஒளிர்வோன், மாசு மருவற்றவன் ; தூயவன் ஆன அக்கினியிடம் வேண்டுகிறோம் 3-2-15
XXX
செப்டம்பர் 6 திங்கட் கிழமை
அமிர்தனான அக்கினி தேவர்களைப் போற்றுகிறான் ; அதனால் அவன் சனாதன தர்மத்துக்கு ஊறு விளைவிப்பதில்லை 3-2-15
XXX
செப்டம்பர் 7 செவ்வாய்க் கிழமை
அக்கினி சிங்கத்தைப் போல கர்ஜித்து வயிற்றில் வளர்கிறான் ; ஆவி கொடுப்போருக்கு செல்வத்தை வழங்குகிறான் RV 3-2-11
அக்கினியை வழிபடுவோர் சுகத்தையும் இன்பத்தையும் நாடுகிறார்கள் ; அவன் வேள்வியின் கொடி ;பாடுவோர் புனிதத் சடங்குகளை அவனிடம் சேமிக்கிறார்கள்; குவித்துவைக்கிறார்கள் RV.3-3-3
XXX
செப்டம்பர் 10 வெள்ளிக் கிழமை
நல்ல புதல்வர்களைப் பெறவும், நீண்ட ஆயுளுக்காகவும் அக்கினியைப் போற்றுங்கள்; வினைத் திட்பனான உன்னை தேவர்களும் மனிதர்களும் விரும்புகிறார்கள்; நீ எப்போதும் விழித்திருப்பவன் 3-3-7
XXX
செப்டம்பர் 11 சனிக் கிழமை
பாடல்களால் அக்கினி தேவனைப் போ ற்றுவோம் ; அவன் பேரின்பத்தை அளிப்பவன் மங்கலமான தேரில் ஏறி தன பலத்தால் எல்லா பிரஜைகளை பற்றினான் 3-3-9
XXX
செப்டம்பர் 12 ஞாயிற்றுக் கிழமை
2 முக்கிய பாடகர்களும், 7 வேள்விப் பாடகர்களும் அக்கினியே சத்யம் என்று செப்புகின்றனர். அவர்கள் உண்மையைப் போற்றுபவர்கள்; விரதங்களைப் பின்பற்றுவோர்; அக்கினியை ஒளிப்படுத்துவோர்
3-4-7
XXX
செப்டம்பர் 13 திங்கட் கிழமை
பாரதி, இளா , சரஸ்வதி ஆகிய மூன்று தேவியரும் இங்கே வந்து தர்ப்பைப்புல் ஆசனத்தில் அமருங்கள் RV. 3-4-8
அக்கினியை நதிகள் பலப்படுத்தி ஏந்திச் செல்லுகின்றன. அக்கினி ஒரு மனைவியுடன் இருக்கும் கணவனைப் போல வானம் – பூமியுடன் இருக்கிறான் 3-4-7
XXX
செப்டம்பர் 16 வியாழக் கிழமை
எங்களுக்கு நித்தியமாக வசிக்க நிலத்தை அளிக்கவும்; எங்கள் வம்சத்தில் புதல்வர்களும் பேரர்களும் தோன்றுவார்களாகுக ; உன் கருணை எங்கள் பால் இருக்கட்டும் 3-6-11
XXX
செப்டம்பர் 17 வெள்ளிக் கிழமை
சோம பானத்தைக் கொடுக்கும் செடிகள் தோல் போன்ற சவ்வினால் போர்த்தப்பட்டுள்ளது; அவன் அதைக் காக்கிறான்; கொழுப்புச் சத்து நிறைந்த பறவைகளின் இடத்தையும் காக்கிறான்.3-5-6
XXX
செப்டம்பர் 18 சனிக் கிழமை
அக்கினி தன் பெற்றோர்களான வானத்தையும் பூமியையும் அடிக்கடி புதுப்பிக்கிறான் 3-4-7
XXX
செப்டம்பர் 19 ஞாயிற்றுக் கிழமை
அக்னீ அழகன்; பூமியை, பறவைகளின் உயர்ந்த இடத்தைக் காக்கிறான் ; 7 தலை உள்ள மருத்துக்களைக் காப்பவன்; சூரியனின் வழியைக் காப்பவன் 3-5-5
யூப நெடுந் தூணே ! கிழக்கில் நில், வீரர்களைக் கொடு ; வறுமையையும் பஞ்சத்தையும் விரட்டு ; பெரும் அதிர்ஷ்ட்டதை எங்களுக்கு கொணர்க .3-8-2
XXX
செப்டம்பர் 24 வெள்ளிக் கிழமை
வனஸ்பதியே ! பூமியின் உயர்ந்த இடத்தில் நிமிர்ந்து நிற்கவும் ? வேள்வியை நடத்துபவனுக்கு உணவு அளிக்கவும் 3-8-3
XXX
செப்டம்பர் 25 சனிக் கிழமை
நல்லாடை அணிந்தவன்; மாலைகள் உடையவன் யாகத் தூண் (யூபம்) ; அவன் பிறந்தவுடன் புகழ் அடைகிறான்.; அவனை அறிஞர்களும், கவிகளும் தியானிப்பவர்களும் உயர்த்துகிறார்கள் 3-8-4
XXX
செப்டம்பர் 26 ஞாயிற்றுக் கிழமை
வனஸ்பதியே! கடவுளை வணங்குவோர் உனக்கு நெய் பூசி காப்பிடுகிறார்கள் ; நீ உயர்ந்து நின்றாலும், உன் தாயான பூமியில் சாய்ந்து படுத்திருந்தாலும் எங்களுக்குச் செல்வத்தைக் கொடு RV.3-8-1
XXX
செப்டம்பர் 27 திங்கட் கிழமை
3399 தேவர்கள் அக்கினியைப் போற்றினார்கள்; அவனுக்கு நெய்க் காப்பிட்டார்கள் அவனுக்கு அவனுக்குத் தர்ப்பையைப் பரத்தி அமர்த்தினார்கள் 3-9-9
xxx
செப்டம்பர் 28 செவ்வாய்க் கிழமை
அக்கினியே உன் பரவும் சுவாலையின் சக்தியால் எங்கள் பாவங்களை நீக்கவும் 3-6-10
XXX
செப்டம்பர் 29 புதன் கிழமை
வனஸ்பதியே ; நீ 100 கிளைகளோடு பெருக வேண்டும்; நாங்கள் ஆயிரம் கிளைகளோடு உயர்வோமாக.3-8-11
xxx
செப்டம்பர் 30 வியாழக் கிழமை
அழகான காப்புகளோடுள்ள அந்த யூபங்கள் , காண்பதற்கு பிராணிகளின் கொம்புகள் போலத் தோன்றுகின்றன. துதிகளைக் கேட்கின்றன; அவை போர்களிலே எங்களைக் காக்கட்டும் RV 3-8-10
xxx
BONUS GOLDEN SAYINGS
உன்னை (அக்கினியே) நண்பன் என்ற முறையில் எங்களுக்கு உதவ அழைக்கிறோம். தண்ணீரின் பேரனே !துன்பமற்றவனே; ஒளி மயமானவனே ! ஒப்பற்ற வெற்றியுடையவனே RV 3-9-1
xxx
அக்கினியே நீ மரங்களை விரும்பி, தாய் போன்ற தண்ணீரிடம் சென்றாய்; ஆனால் தாமதத்தைதை சகிக்காமல் எங்களிடமே ஒரு நொடியில் திரும்பி வந்துவிட்டாய் .3-9-2
Xxx
வேள்வித் தலைவர்கள், ஆதித்யர்கள், ருத்திரர்கள், வசுக்கள், வானமும் பூமியும் ஒன்றுபட்டு நிற்கும் எல்லா தேவர்களும் எங்கள் வேள்விகளைக் காப்பார்களாகுக; வேள்விக் கொடியை உயர்த்தட்டும் RV 3-8-8
— subham —
TAGS. செப்டம்பர் 2021, காலண்டர், ரிக் வேத பொன்மொழிகள், 3 வது மண்டலம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ருக்மிணீஷ விஜய– ஆறாம் மகா காவியம் B.Kannan,Delhi
அன்பார்ந்த ஞானமயம் / தமிழ் முழக்கம் தமிழ் நெஞ்சங்களுக்கு தில்லியிலிருந்து கண்ணன் வணக்கம்.
இன்றைக்கு நாம் கேட்கப் போவது பிரபல கவி மாகா, மற்றும் மகான் ஶ்ரீவாதிராஜர் பற்றியது தான்….
தென் கர்நாடக மாநிலம், கும்பாஸி ஜில்லா அருகே ஹூவினகரே என்னும் அழகிய கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வந்த ஸ்ரீ ராமாச்சார்யர் (தேவபட்டா) – ஸ்ரீமதி ஸரஸ்வதி(கௌரி) எனும் துளுவக்குலப் பிராமணத் தம்பதிகளுக்கு வெகு நாட்களாகப் புத்திரப் பாக்கியம் இல்லாமல் இருந்தது. உடுப்பி ஸோதே மடத்தின் 19-வது மடாதிபதியாக விளங்கிய ஶ்ரீவாகீஸ தீர்த்தரின் அருளால் அவர்களுக்கு இரண் டாவது மகனாக ஸ்ரீ வாதிராஜர், மாக மாத, சுத்த த்வாதஸி அன்று (1480 ) சுபநாளில் அவதரித்தார். இவருடைய பூர்வாஸ்ரமப் பெயர் ஸ்ரீ பூவராஹன். குரு வாகீஸதீர்த்த ருக்குக் கொடுத்த வாக்குப்படி,8 வயதானவுடன் அவரை மடத்தில் சேர்த்து விட்டனர். அங்கு,ஶ்ரீவாதிராஜ தீர்த்தர் என்றச் சன்னியாச நாமத்துடன் துறவியாக நியமிக்கப் பட்டு, ஶ்ரீவித்யநிதி தீர்த்தரின் பராமரிப்பில் வைக்கப்பட்டார். பின்னர் குருவின் நேரடி பார்வையில் கல்விகற்றுப் புலமைப் பெற்றார்.பெயருக்கு ஏற்ப வாதத்தில் எதிரிகளை வென்று அவர்களின் கர்வம், அகங்காரத்தை அடக்குபவராக விளங்கினார்.
வாதிராஜ தீர்த்தர் ஓரு துவைதத் தத்துவஞானியும், கவிஞரும் ஆன்மீகவாதியு மாவார். இவரது காலத்தில் ஒரு பன்மொழிப் புலமைக் கொண்டவரான இவர்,
மத்துவ இறையியல் மற்றும் தத்துவங்கள் குறித்துப் பல படைப்புகளை எழுதினார். கூடுதலாக, இவர் ஏராளமான கவிதைகளையும் இயற்றினார். சோதே மடத்தின் தலைவராக,(வடகன்னட) உடுப்பியில் உள்ள கோயில் வளாகத்தைப் புதுப்பித்து, பரியாய வழிபாட்டு முறையை நிறுவினார். மத்துவரின் படைப்புகளில் உத்வேகம் கொண்டு கன்னடத்திற்கு மொழிபெயர்த்ததன் மூலம் அக்கால கன்னட இலக்கியங் களை வளப்படுத்தியப் பெருமையும் இவருக்கு உண்டு]. மேலும், ஹரிதாச பக்தி இயக்கத்திற்கும் பங்களிப்பு செய்தார். இவரது படைப்புகள் அவற்றின் கவிதை செழிப்பு, கூர்மையான அறிவு மற்றும் நகைச்சுவை ஆகியவற்றால் வகைப்படுத்தப் படுகின்றன
ஒரு சிறந்த எழுத்தாளரான இவர், அறுபதுக்கும் மேற்பட்ட படைப்புகளுக்குப் பெருமைச் சேர்த்துள்ளார். குறுகிய பாடல்கள் மற்றும் காவியக் கவிதைகள் முதல் துவைதத் தத்துவங்களிலுள்ளச் சிக்கல்களைப் பற்றியச் சுருக்கமான அறிவார்ந்தப் படைப்புகள் வரை இவரது சாயல் வேறுபட்டது. அயவதானா என்ற பெயரில் பல கவிதைகளை எழுதினார். யுக்திமாலிகா எனற படைப்பு இவரது மகத்தானப் பணியா கப் பரவலாகக் கருதப்படுகிறது. இவர் பல காவியக் காப்பியங்களையும் இயற்றினார்.
அவற்றில் குறிப்பிடத்தக்கது !9 காண்டங்கள் அடங்கிய ருக்மிணீஷ விஜயநூலாகும். ஆஷாட சுக்ல தசமியிலிருந்து, கார்த்திகைச் சுக்ல பௌர்ணமி வரையிலான நான்கு மாதகாலம் சாதுர்மாஸ்யப் புண்ணியக் காலம் எனப்படும். இது மகாவிஷ்ணுவை வழிபடுவதற்கு மிகவும் உகந்ததாகும். துறவிகள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே இருந்தவாறு, வேறு எங்கும் விஜய யாத்திரை மேற்கொள்ளாமல், அன்றாடப் பூஜை, புனஸ்காரங்களை நடத்துவர். அப்படியொரு சந்தர்ப்பத்தில் மகான் ஶ்ரீவாதிராஜ தீர்த்தர் வாழ்வில் நடந்த ஓர் அற்புத நிகழ்வைத்தான் இப்போது பார்க்கப்போகிறோம். இது அவரது வாழ்க்கைச் சரிதத்தைக் கூறும் ஶ்ரீராமசந்திராச்சாரியார் இயற்றிய “ஶ்ரீவாதிராஜ குருவர சரிதாம்ருதா” என்ற நூலில் (அத்தி.3, சுலோகம் 4–10) விவரிக்கப்படுகிறது. இவர் சார்வரி ஆண்டு பங்குனி மாதம் (1600) பகுள த்ருதியை அன்று பக்தர்கள் வேதகோஷம் முழங்க, ஜீவத்துடன் பிருந்தாவனப் பிரவேசம் அடைந்தார்.
ஒருசமயம் மகான் புண்ணியபுரி என்றழைக்கப்படும் புனே நகரில் சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டித்துக் கொண்டிருந்தார். அச்சமயம் சம்ஸ்க்ருதப் பண்டிதர்களின் வித்வத் சபை கூடி, எந்த மகாகாவியத்தை மிகச் சிறந்தப் படைப்பாகக் கருதலாம் என்பதைத் தீர்மானிக்க விவாதத்தில் ஆழ்ந்திருந்தது.முடிவில் அனைவரது ஒப்புத லுக்கு இணங்க கவி மாகாவின் “சிசுபால வதம்” அதற்கு ஏற்றது எனத் தேர்ந் தெடுத்தது. .
இதில் மாத்வர்களுக்குச் சற்றும் இணக்கமில்லை. மாகா என்னத்தான் விஷ்ணுவைப் போற்றியிருந்தாலும், கிருஷ்ணரைத் தாழ்த்தி, வில்லன் சிசுபாலனை உயர்த்திப் புகழ்ந்திருந்ததை ஏற்க மனமில்லை. மகான் ஶ்ரீவாதிராஜருக்கும் இதே மனநிலை தான். அன்றைக்கு எட்டு நூற்றாண்டுகளுக்கு முன் மாகாவால் இயற்றப்பட்டக் காவியத்துக்குச் சவால் விடவேண்டும் என்றால், அதைவிட மேண்மையான ஒரு காப்பியத்தை இயற்ற வேண்டும் என எண்ணம் கொண்டார். உடுப்பி மடத்தில் அதே பின்புலனை வைத்துத் தான் எழுதியக் காவியத்தின் கையெழுத்துப் பிரதி மற்றும் மேல் விவரங்களை வைத்திருப்பதால், அவற்றைக் கொண்டு வந்துச் சமர்ப்பிக்க மூன்றுவாரக் கால அவகாசம் தேவை, அதையும் பரிசீலித்து விட்டு ஒரு முடிவுக்கு வரலாம் அதுவரைப் பொறுத்திருக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொண்டார்…அவர்களும் சம்மதித்தனர்.
கவி மாகாவைப் பற்றி அறிந்துகொள்ளுவது இப்போது அவசியமாகிறது.
மாகா பொ.ஆ.பின் 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். ஶ்ரீமலாநகர் எனும் தற்போது ராஜஸ்தானிலுள்ள பின்மல் ஊரில்,செல்வந்தர் தத்தகா சர்வாச்சார்யாருக்கு மகனாகப் பிறந்தார். தனது தந்தை. பாட்டனார் சுப்ரபதிகா போன்று இவரும் பின்னாளில் வடமொழியில் பாண்டித்யம் பெற்று, அந்நாட்டு அரசன் வரமலதாவின் அரசவைக் கவிஞராகத் திகழ்ந்தார். அவர் பல நூல்களை எழுதியதாகச் சொல்லப் பட்டாலும் அவையெல்லாம் வெளியுலகத்துக்கு வரவேயில்லை, ஒரேயொரு காவியத்தைத் தவிர. உலகெங்கும் பேசும்பொருளாக விளங்கும் சிசுபாலவதம் தான் அது! ஐந்துமகா காவியங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ( ரகுவம்சம், குமார சம்பவம், கிராட்டார்ஜுனீயம், சிசுபாலவதம், நைஷதீய சரிதம்)
இந்நூலைப் பற்றியப் பல சொலவடை அறிஞர்களிடையேப் புழக்கத்தில் உள்ளன. தருமி புலவர் தன்னை வம்புக்கிழுத்த நக்கீரரிடம் சொல்வது போல், “பாட்டெழுதி பேர் வாங்கும் புலவர்கள் (மாகா) இருக்கிறார்கள், அதில் குற்றம்,குறை கண்டுப் பிடித்து பேர் வாங்கும் புலவர்களும் (மல்லிநாதர்) இருக்கிறார்கள். ஆம், மல்லிநாத சூரியின் விமர்சனம், விளக்கவுரை அல்லது வியாக்கியானம் இல்லாமல் சிசுபால வதம் போன்ற காவியங்களைப் புரிந்துக் கொள்ள இயலாது! மல்லிநாதரே சொல்கிறார், “”माघे मेघे वयम् गत:”–மாக காவியம், மேகதூதம் நூல்களைப் படித்துப் புரிந்துக் கொள்வதிலேயே காலம் ஓடிவிடுகிறதே!” என்று வியக்கிறார்.
எப்போதுவரை கவி மாகா இலக்கியத் தொடுவானில் எழும்பவில்லையோ, அதுவரைதான் பாரவியின் கவியாற்றல் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் என்பது மற்றொரு பழமொழி!
உபமானத்துக்கு காளிதாஸன், பொறுள்செறிவுக்குப் பாரவி, வார்த்தை ஜாலங்களுக்கு தண்டின், இவையெல்லாவற்றையும் கொண்டவர் கவி மாகா என்பது பிறிதொன்று.
ஒரு மகா காவியத்துக்குரிய லட்சணங்களாக அந்த வித்வத் சபை எதிர்பார்த்தது: கதையின் கரு இந்திய இதிகாசத்திலிருந்தோ, வரலாற்று நிகழ்ச்சியை ஒட்டியோ இருக்க வேண்டும்
அர்த்த, காமம்,தர்மம், மோட்சம் ஆகியவற்றைச் சொல்வதாக இருக்க வேண்டும்
அதில், நகரம், கடல்,மலை, சூரிய-சந்திர உதய வர்ணனை, ஜலக்ரீடை, உல்லாச கேளிக்கை, காதலர் பிரிவு வேதனை, திருமண நிகழ்ச்சி, குழந்தை பிறப்பு, ராஜ சபை, படை அணிவகுப்பு,போர்க்களம், வெற்றி வாகைச் சூடுதல் ஆகியவை இடம் பெற வேண்டும். இவற்றை மாகா உபயோகித்திருந்தாலும், அவற்றைக் வெளிக்காட்டத் தனக்கென்று ஒரு தனி வழியைப் பின்பற்றிக் கொண்டார்.
“முதல் 9 சர்கங்களிலேயே சொல்லகராதில் உள்ள எல்லா எழுத்துக்களையும் உபயோகித்து விட்டதால் பின்னால் வரும் அத்தியாயங்களில் வேறு எந்தப் புதுச் சொற்களையும் சேர்க்க முடியாமல் போனதாம்!” என்ற சொலவடையும் ஒன்றுண்டு.
தனது வீரரஸக் காவியத்துக்கானக் கதைக் கருவை, மகாபாரதம் சபாபர்வத்தில் (அத்.33-45) கூறப்பட்டுள்ளச் சம்பவங்களையே நிலைக்களனாக எடுத்துக் கொண்டுள் ளார். பாகவதத்தில் இதுவே 10-வது ஸ்காந்தம்அத்.74-ல் வருகிறது. அக்காலக் கட்டத்தில் ஆண்களும், மகளிரும் உபயோகித்த ஆடை, ஆபரணங்களை விவரிக் கிறார்–பரிதானா, அம்சுகா, வஸனா, வஸ்த்ரா, அம்பரா,உத்தரீயம் என்றும், மளிர் அணியை, நீவீ, வஸனா, அம்சுகா, கௌஷேயா, அதிவாசா, நிதாம்பர வஸ்த்ரா, இடையில் அணியும் கபந்தா(ஓட்டியாணம்) என்று. ரைய்வதகா (கிர்நார்) மலையின் ஒரு பக்கம்நிலவு உதிப்பதையும், மறுபக்கம் சூரியன் மறைவதையும் பார்க்கும்போது, அது ஒரு பெரிய யானையின் முதுகின் இருபுறமும் தொங்கி ஆடி அசையும் இரண்டு மணிகள் போல் காட்சியளிக்கிறதாம்!(4-20) இந்த உருவகம் பிரபலமடைந்து, “கண்டாமாகா”–மணிமாகா– என்றப் புனைப் பெயரால் அவர் அறியப்படலானார். கவி தண்டின் காவ்யாதர்சாவில் விவரிக்கும் அனைத்துச் சொல்லணிகளையும் திறம்படக் கையாண்டு மற்றப் புலவர்களைத் திணற வைத்துள்ளார்.
அவருடைய எழுத்துக்களில்,ஜோதிடம்,அரசியல், வேத கோஷம், வான சாஸ்திரம், யானை,குதிரை சாஸ்திரம் பற்றியச் செய்திகள்,சங்கீதம், தத்துவம் ஆகிய விஷயங் களைக் காணலாம். அவர் ஒரு நடமாடும் கலைக்களஞ்சியம் என்றால் மிகையல்ல.
இப்படிப்பட்ட ஓர் அசகாயச் சூரரின் காவியத்தைத் தான் ஶ்ரீவாதிராஜர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எதிர்ப்புகளைச் சாமர்த்தியமாக எதிர்கொண்டு வெற்றிகரமாக
மீண்டு வருவதில் தான் ஒரு கவிஞனின் படைப்புத் திறன் மேன்மை அடங்கியிருக்கிறது. அதுமாதிரி சிசுபாலவதம் மகா காவியத்துக்குச் சவால் விட ஶ்ரீவாதிராஜர் போன்ற மகான் வரவேண்டியிருந்தது. உடுப்பியிலிருந்துப் பிரதியை எடுத்து வர வேண்டும் என்றுச் சொன்னதெல்லாம் ஒரு சாக்குப் போக்கே! அந்தக் கால இடை வெளியில் ஒரு சாதனை நிகழ்த்தத் தயாராகி விட்டார்.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கோவில் கொள்ளைத் துறையும் ஒரு ராஜாவின் கதையும்!
ச.நாகராஜன்
1
திருநெல்வேலியிலிருந்து வெளிவரும் மாத இதழான ஹெல்த்கேர் அனைவரும் ஆரோக்கியமாகவும் மன நிம்மதியுடனும் வாழ்வதற்கு வழிகாட்டும் கட்டுரைகளைக் கொண்டு வெளிவரும் தமிழ் இதழாகும். இதன் ஆசிரியர் ஆர்.சி.ராஜா சிவன் பால் சித்தம் வைத்து வாழ்ந்து வருவதோடு அனைவரின் நலனையும் மனதில் கொண்டிருப்பவர் என்பது இந்த இதழைப் படிப்பவர்களுக்கு நன்கு புரியும். அவர் 2021, ஆகஸ்ட், 28ஆம் தேதியன்று ஒரு கதையை அனுப்பி இருந்தார் எனக்கு. நல்ல கதை. சிந்தனையைத் தூண்டி விடும் கதை. உடனே அவருக்கு இதை ஒரு கட்டுரையாக எழுதுங்களேன், ஏனெனில் இது இன்றைய ஆலய நிலையைச் சுட்டிக் காட்டுகிறது என்றேன். நீங்களே எழுதுங்கள் என்று பதில் அனுப்பி விட்டார் அவர். இதோ எழுதுகிறேன் – இந்தக் கதையை அனுப்பிய அவருக்கும் அவருக்கு இதை அனுப்பிய அவரது நண்பருக்கும் நன்றி கூறி!
2
ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவர் தனது மந்திரியுடன் ஒரு நாள் மாலை நகர் வலம் சென்றார். ஆற்றங்கரை ஓரமாக அவர்கள் சென்ற போது ராஜா ஒரு வெள்ளரிக் கொடியைப் பார்த்தார். அதில் காய்கள் நன்கு காய்த்து அழகுறத் தொங்கின.
மந்திரியைப் பார்த்து ராஜா, “அதோ அந்தக் காய்களைப் பறித்து வாரும். உண்ணலாம்” என்றார்.
மந்திரி உடனே அதைப் பறிக்கப் போனார். அப்போது அங்கே ஒரு கண்பார்வையற்ற முதியவர் உட்கார்ந்திருந்தார்.
யாரோ ஒருவர் காயைப் பறிக்க முன் வருவதை உணர்ந்த அவர் கூறினார்:”ஐயா, காயைப் பறிக்காதீர்கள். அது வெள்ளரிக்காய் போலத் தோன்றும் குமட்டிக்காய். அதைத் தின்றால் வாந்தி தான் வரும்”.
கண்பார்வையற்ற ஒருவர் சொன்னதை நம்பாத ராஜா, “மந்திரி, எங்கே அதைப் பறித்துச் சாப்பிடும். உமக்கு வாந்தி வருகிறதா என்று பார்க்கலாம்” என்றார்.
அரச கட்டளை ஆயிற்றே! மந்திரி காய்களைப் பறித்துச் சாப்பிட்டார். உடனே ஒரே வாந்தியாக வந்தது. மந்திரி தொடர்ந்து வாந்தி எடுத்ததைப் பார்த்த ராஜா திகைத்துப் போனார்.
“அட, கபோதியே! நீ சொன்னது உண்மையாக அல்லவா இருக்கிறது. நான் அரசன். எனது மந்திரி வாந்தி எடுக்கிறாரே. இதை எப்படி நிறுத்துவது? வழி தெரியுமா உனக்கு?” என்றார் ராஜா.
“ராஜாவா! வணக்கம் ராஜா! ஒன்றும் கவலைப்பட வேண்டாம். அருகில் கை போலக் காட்சி அளிக்கும் ஒரு சிறிய செடியில் வளர்ந்துள்ள இலைகளைப் பறித்துக் கசக்கிச் சாப்பிடச் சொல்லுங்கள். வாந்தி உடனே நிற்கும் “ என்றார் அந்தக் குருடர்.
உடனே மந்திரி அப்படியே பச்சிலைகளைப் பறித்து வாயில் போட்டுக் கொண்டார். வாந்தியும் நின்றது.
ராஜாவுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. குருடரைப் பார்த்து, “அது சரி, உனக்குத் தான் கண் பார்வை இல்லையே, இதையெல்லாம் எப்படிச் சொல்கிறாய்?” என்று கேட்டார்.
குருடர் கூறினார்: “ அரசே! நாட்டில் எங்கும் பஞ்சமும் பட்டினியும் தலைவிரித்துத் தாண்டவம் ஆடுகிறது. அப்படி இருக்கும் போது வெள்ளரிப் பிஞ்சுகளை எவனாவது செடியில் விட்டு வைத்திருப்பானா? ஆகவே தான் அதை குமட்டிக்காய் என்று அறிந்தேன். அத்தோடு இறைவன் எப்போதுமே நோய் கொடுக்கும் காயை வைத்திருந்தால் அதற்குப் பக்கத்திலேயே அதைத் தீர்க்கும் மருந்தையும் வைத்திருப்பார் என்பதால் அந்த பச்சிலை பற்றிச் சொன்னேன்” என்றார்.
ராஜாவுக்கு ஒரே மகிழ்ச்சி. “அடடா! அற்புதம். என் பெயரைச் சொல்லிக் கிழக்கு வாயிலுக்குப் போ. அங்கே பட்டை சாதம் இலவசமாகத் தருவாங்க. வாங்கிச் சாப்பிடு” என்றார்.
நாட்கள் பல கழிந்தன.
அயல் தேசத்து வியாபாரி ஒருவர் அந்த அரசனிடம் வந்தார். “ராஜாவே, என்னிடம் வைரம் நிறைய இருக்கிறது. வாங்கிக் கொள்கிறீர்களா?” என்று கேட்டார்.
இந்த வைரங்கள் நிஜமானவையா அல்லது போலியானவையா என்று எப்படிக் கண்டு பிடிப்பது என்று ராஜாவுக்குக் குழப்பம் வந்து விட்டது. “மந்திரியைக் கூப்பிட்டு இது பற்றி உனக்குத் தெரியுமா” என்றார்.
மந்திரிக்கு வாந்தி எடுத்த அனுபவம் ஞாபகத்திற்கு வந்தது. வைரத்தைச் சாப்பிடச் சொன்னால் உயிர் அல்லவா போய்விடும்! அலறிப் போனார்.
“எனக்கு இது பற்றி ஒன்றும் தெரியாது. ஒரு வல்லுநரை அழைத்துத் தான் கேட்க வேண்டும்” என்றார் அவர்.
ராஜாவுக்கு அந்தக் குருடரின் ஞாபகம் வந்தது.
மந்திரியைப் பார்த்து, “அந்த குருடர் கொஞ்சம் விஷயம் அறிந்தவராக இருக்கிறார். அவரை அழைத்து வாருங்கள்’ என்றார்.
மந்திரியும் அப்பாடா பிழைத்தோம் என்று எண்ணி அந்தக் குருடரை அழைத்து வரச் செய்தார். குருடரும் வந்தார்.
அவரிடம் ராஜா, ” அப்பனே! இது நிஜமான வைரமா? போலியும் கலந்திருக்கிறதா என்று எப்படிக் கண்டு பிடிப்பது. சொல்லேன்” என்று கேட்டார்.
“அரசே, இது மிக சுலபம். கற்களை வெயிலில் வையுங்கள். கண்டு பிடித்து விடலாம்” என்றார் குருடர்.
ராஜா அசந்து போனார் – இது என்ன அற்புத உத்தியாக இருக்கிறதே என்று!
அப்படியே நல்ல வெயிலில் வியாபாரி கொண்டு வந்த வைரங்கள் வைக்கப்பட்டன. சிறிது நேரம் கழிந்தது. குருடர் அந்த வைரங்களைத் தடவிப்
பார்க்க ஆரம்பித்தார். சிலவற்றை ஒரு புறமாக வைத்து இவை நல்ல வைரங்கள் என்றார். இன்னும் சிலவற்றை வேறொரு பக்கம் வைத்து இவை போலி வைரங்கள் என்றார்.
ராஜா வியாபாரியைப் பார்த்து, “என்ன விஷயம்?” என்று அதட்ட, அந்த வியாபாரியும் குருடர் சொன்னது சரிதான் என்றும் அவர் தரம் பிரித்தது மிகவும் சரிதான் என்றும் உண்மையைக் கூறியதோடு அந்த வைரங்களை ராஜாவுக்கு இலவசப் பரிசாக அளித்து தண்டனையிலிருந்து தப்பித்தார்.
ராஜாவுக்கு ஆச்சரியம் தாளவில்லை.
“அப்பனே! எப்படி இப்படி எளிதாக கையால் தடவி கண்டு பிடித்தாய்? இரண்டு கண்களும் நன்றாக உள்ள எங்களுக்கு ஒன்றும் தெரியவில்லையே” என்று வியப்புடன் கேட்டார்.
“அரசே!இது மிகச் சுலபமான ஒன்று தான். வெயிலில் வைத்த போது கண்ணாடி என்றால் அது சுடும் இல்லையா? நல்ல வைரங்கள் சுடாது. அதை வைத்து கண்ணாடிக் கற்களை ஒதுக்கி வைத்தேன். அவ்வளவு தான்” என்றார் குருடர்.
ராஜா அவரது அறிவை மெச்சி ,”மேற்கு வாயிலுக்குச் செல்லுங்கள், உங்களுக்கு பட்டை சாதம் தயாராகக் காத்திருக்கும். பெற்றுக் கொள்ளுங்கள்” என்றார்.
குருடரும் நகர்ந்தார்.
மாதங்கள் சில கழிந்தன. தன் குமாரனுக்கு நல்ல பெண்ணாகப் பார்க்க ராஜா விரும்பினார். பல தேச இளவரசிகளில் சிறப்பான ஒரு இளவரசியை எப்படித் தீர்மானிப்பது. யாரையும் அவர் நம்பத் தயாரில்லை. குருடரின் புத்தி கூர்மை அவருக்கு நினைவுக்கு வரவே அவரை அழைத்து வர ஏற்பாடு செய்தார் ராஜா. குருடரும் வந்தார்.
ராஜா தனது பிரச்சினையைச் சொன்னார்.
“நிறைய இளவரசிகள் இருக்கிறார்கள். எப்படி தேர்ந்தெடுப்பது மருமகளை?” என்று ராஜா கேட்டார்.
குருடர் ராஜகுமாரிகள் இருக்கும் இடங்கள் உட்பட அனைத்து விவரங்களையும் கேட்டார்.
“ராஜா! இது ரொம்ப சுலபம். உங்களது அடுத்த நாட்டிற்கு அடுத்த நாட்டில் உள்ள இளவரசியை நிச்சயம் செய்து மணத்தை முடித்து விடுங்கள்.
ராஜாவுக்கு ஒரே சந்தோஷம். இப்படிப்பட்ட பிரம்மாண்டமான பிரச்சினைக்கு இப்படி ஒரு வரியில் ஒரு தீர்வா?
சந்தோஷத்தின் உச்சத்திற்கே சென்ற அவர் குருடரைப் பார்த்துக் கூறினார்’ “ஆஹா! அந்த இளவரசி அற்புதமான பெண் தான்! ஆனால் இவ்வளவு பேர் இருக்கும் போது அவளை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்? காரண காரியம் இல்லாமல் நீங்கள் தீர்மானிக்க மாட்டீர்களே. எப்படி தேர்வு செய்தீர்கள் என்று சொல்லுங்கள்” என்றார்.
“அரசே! அந்த ராஜாவை உங்க சம்பந்தி ஆக்கிக் கொண்டால் எல்லை பிரச்சினை வரவே வராது. இரண்டு பேருக்கும் நடுவில் இருப்பதால் நடு தேசத்து ராஜா அடங்கி இருப்பார். அத்துடன் நம் நாட்டில் நிலவும் பஞ்சம் ஒரேயடியாக ஒழிந்து விடும். நமது நாட்டில் மற்ற இரு தேசங்களின் நட்புறவால் வளம் கொழிக்கும். எல்லை பிரச்சினையும் என்றுமே இருக்காது” என்றார் குருடர்.
“அடடா! என்ன ஒரு அற்புதமான யோசனை. இதோ இப்போதே நம் வடக்கு வாயிலுக்குச் செல்லுங்கள் . அங்கு உங்களுக்கு பட்டை சாதம் தயாராக இருக்கும். அதை வாங்கிச் சாப்பிடுங்கள்’ என்று உபசரித்தார் ராஜா.
குருடரும் வடக்கு வாயிலை நோக்கிப் போனார்.
நாட்கள் சில கழிந்தன.
ராஜா ஒரு நாள் அந்தக் குருடரை தனது அந்தரங்க அறைக்கு வரச் சொன்னார். மற்ற அனைவரையும் உள்ளே வரக் கூடாது என்று உத்தரவிட்டார்.
குருடரைப் பார்த்து, “அப்பனே! நீண்ட காலமாக என் மனதை அரித்து வரும் விஷயத்தைப் பற்றி உன்னைக் கேட்க விரும்புகிறேன். இந்த தேசத்தில் பலரும் என்னை பிச்சைக்காரிக்குப் பிறந்தவன் என்கிறார்கள். இதைக் கேட்கவே சகிக்கவில்லை. இது உண்மையா? காரண காரியத்தோடு பதிலைச் சொல்லு” என்றார் ராஜா.
குருடர் சிறிது நேரம் மௌனமாக இருந்தார். ராஜா அவரைப் பார்த்து, “பயப்படவே வேண்டாம். உம்மை ஒன்றும் செய்ய மாட்டேன். இது சத்தியம். உண்மையைச் சொல்லலாம்” என்றார்.
குருடர் ராஜாவைப் பார்த்து, “ராஜாவே! இதில் சந்தேகமே வேண்டாம். நீங்கள் பிச்சைக்காரிக்குப் பிறந்தவர் தான்!” என்றார்.
ராஜாவுக்கு ஒரே வருத்தம். குருடரைப் பார்த்து, “அடடா! எவ்வளவு சோகமான செய்தி! இருந்தாலும் சரி, எப்படி இதைச் சொல்கிறாய், அந்தக் காரணத்தைச் சொல்” என்றார்.
குருடர் கூறினார்: “ ராஜாவே! முதலில் நீங்கள் என்னைப் பார்த்தீர்கள். குமட்டிக்காயைப் பற்றிச் சொல்லி உங்கள் மந்திரியைக் காப்பாற்றினேன். அதற்காக எனக்கு கிழக்கு வாயில் பட்டை சாதத்தைக் கொடுத்தீர்கள். உண்மையான ராஜாவாக இருந்தால் தனது வைர மோதிரம், மாலை உள்ளிட்டவற்றை கழட்டிக் கொடுத்திருப்பார். அடுத்ததாக கோடிக் கணக்கான பெறுமானமுள்ள வைரங்களை தரம் பிரித்ததோடு அந்த வியாபாரி அதை இனாமாக உங்களுக்குக் கிடைக்கச் செய்தேன். அதற்கு மேற்கு வாயில் பட்டை சாதத்தை வழங்கினீர்கள். உண்மையான ராஜாவாக இருந்திருந்தால் எனக்கு அரண்மனை பொக்கிஷத்தை வாரி வழங்கி இருப்பார். அடுத்து ஒரு ராஜ்யத்தையே உங்கள் வசமாக்கியதோடு நடுவில் இருந்த நாட்டையும் நிரந்தர நட்பு நாடாக்கி ஒரேயடியாக நம் நாட்டின் பஞ்சத்தையும் ஒழிக்க வழி வகை கூறினேன். அதற்கு எனக்கு நீங்கள் அளித்தது வடக்கு வாயில் பட்டை சாதம். உண்மை ராஜாவாக இருந்திருந்தால் எனக்கு மாடமாளிகை கூட கோபுரம் கொடுத்து என்னை உச்சி மேல் வைத்துக் கொண்டாடி இருப்பார். பல கிராமங்களை மானியமாக அளித்து என்னை மேலே உயர்த்தி இருப்பார் அல்லவா! நீங்களோ என்ன செய்தீர்கள் என்று எண்ணிப் பாருங்கள். உங்களுக்கு பட்டை சாதத்திற்கு மேலே போக உங்கள் புத்தி அனுமதிக்கவில்லை. வாயில் வாயிலாக கிழக்கு, மேற்கு, வடக்கு என்று அனுப்பிப் பட்டைச் சாதம் வழங்கினீர்கள். இதிலிருந்தே தெரியவில்லையா அலைந்து பிச்சை எடுக்கும் ஒரு பிச்சைக்காரிக்குத் தான் நீங்கள் பிறந்தீர்கள் என்பது” – இப்படி விளக்கமாகக் கூறி முடித்தார் அந்த முதியவரான குருடர்.
ராஜா வெட்கித் தலை குனிந்தார். குருடரின் மன்னிப்புக் கேட்டு விசும்பி விசும்பி அழுதார்.
இது தான் கதை!
இன்றைய தமிழகத்தின் நிலைமையும் இது தான்! மக்கள் கொடுத்த அரசுப் பொறுப்பைத் துஷ் பிரயோகம் செய்து தமது “புத்திக்கு எட்டியவரை” கோவில்களை எப்படி எல்லாம் அழிக்கலாம், அந்தச் சொத்துக்களை எப்படி எல்லாம் சுரண்டலாம் என்று பார்க்கும் கோவில் கொள்ளையையும் பண்பாட்டை அழிக்கும் செயலையும் நன்கு விளக்கும் கதை இது தான்!
அனைவருக்கும் பரப்ப வேண்டிய கதை இது!
3
ரீடர்ஸ் டைஜஸ்ட் மாத இதழில் சில ஆண்டுகளுக்கு முன்னர் படித்த ஜோக் ஒன்று நினைவுக்கு வருகிறது. அதை நவீனமாக்கித் தருகிறேன் இங்கு.
நவீன அறிவியல் உத்தியின் படி ஒரு புது வித கார் வடிவமைக்கப்பட்டது.
அதை டிஸைன் செய்த பேரறிஞரின் மானேஜர் பத்திரிகைகாரர்கள், அறிஞர்கள்,சாமானிய மக்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒரு டெமோவுக்கு அழைத்தார்.
மைதானம் ஒன்றில் காரை நிறுத்தி அதன் வடிவமைப்பை விளக்கினார் மானேஜர்.
“அற்புதமான இந்தக் காரில் பிளாஸ்டிக் இல்லை. மாசுப் பொருள்களை ஏற்படுத்தும் எரிபொருள் இல்லை. பேரறிஞர் கண்டுபிடித்த கண்டுபிடிப்பாக இதைக் கொள்ளலாம். இதோ இந்த பட்டனை அமுக்கினால் ரிமோட் கண்ட்ரோலினால் இது ஓடும்! பாருங்கள் இதோ, ஓடப் போகிறது” என்று கூறியபடியே அவர் ஒரு பட்டனை அமுக்கினார்.
கார் வெகு விரைவாகப் பறந்தது. அனைவரும ஆஹா ஆஹா என்று வியந்தனர்.
ஆனால் திடீரென்று மைதானத்தில் ஒரு இடத்தில் அந்தக் கார் ஒரு குட்டிக் கரணம் போட்டது. அனைவரும் ஓவென்று கூவினர். இன்னும் சில இடங்களிலும் அந்தக் கார் குட்டிக் கரணம் போட்டது.
ஜனங்கள் வியந்தனர். டெமோ முடிந்தவுடன்வடிவமைப்பு பற்றி கூறி டெமோ செய்தவரிடம் அனைவரும் கேட்ட ஒரே கேள்வி இது தான்: “ பேரறிஞரின் வடிவமைப்பு பற்றி நீங்கள் அளந்த கதை வியக்கும் படியாகத் தான் இருக்கிறது. ஆனால் ஏன் சில இடங்களில் இது குட்டிக் கரணம் போடுகிறது? இதில் பயணிப்பது ஆபத்தாக அல்லவா இருக்கும். உயிர் போய் விடுமே. இது குட்டிக் கரணம் போடுவதன் காரணம் என்ன?”
எல்லோரும் பதிலுக்காக நெருக்கவே அந்த டெமோ செய்தவர் உண்மையைச் சொல்ல வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானார்!
“அதுவா! வேறொன்றுமில்லை. இந்தக் கார் முற்றிலும் பன்றித் தோலினால் ஆனது. ஆகவே தான் மைதானத்தில் சகதியாக உள்ள இடங்களில் எல்லாம் அது குட்டிக் கரணம் போடுகிறது”
அடடா! என்ன அழகான ஜோக்! மலத்தைத் தின்று உயிர் வாழும் பன்றியின்
பிறவிக் குணத்தை நவீன தொழில்நுட்பம் கூடப் போக்க முடியாது!
உண்மை தான் இல்லையா!
சுரண்டுவது, அழிப்பது என்பதை பிறவிக் குணமாகக் கொண்டவர்களும் கூட சகதிகளில் குட்டிக் கரணம் போடுவது இயல்பே அல்லவா! கோவில்களை இறைவன் இருக்கும் இடம் புண்ய தீர்த்தமாக நினைப்பது பக்தர்கள். அதை சகதிகளாக நினைப்பவர்கள் என்ன செய்வார்கள்?
இந்த பன்றிக் காரில் யாராவது சவாரி செய்ய முடியுமா, சொல்லுங்கள்!
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 29-8-2021 அன்று ஒளிபரப்பான உரை!
பிருந்தாவனம் திருத்தலம்!
அனைவருக்கும் ஜன்மாஷ்டமி நல் வாழ்த்துக்கள்!
கண்ணன் திருவடி எண்ணுக மனமே, திண்ணம் அழியா வண்ணம் தருமே
தருமே நிதியும் பெருமை புகழும், கருமா மேனிப் பெருமான் இங்கே!
மகாகவி பாரதியார் வாழ்க!
ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது இந்து மக்கள் அனைவரும் போற்றிக் கொண்டாடும் திவ்ய க்ஷேத்திரங்களுள் ஒன்றாக அமைகின்ற பிருந்தாவனம் ஆகும். இந்தத் தலமானது உத்தரபிரதேசத்தில் உள்ள மதுராவிலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
விருந்தா என்றால் துளஸி என்று பொருள் விருந்தாவனம் என்றால் துளஸிச் செடிகள் அதிகமுள்ள வனம் என்று பொருள். பத்து அவதாரங்களில் எட்டாவது அவதாரமாக அமையும் கிருஷ்ணாவதாரத்தில் கிருஷ்ணரின் இளமைக் காலம் கழிந்த இடம் இதுவே. இங்கே தான் கோகுலம் கோவர்த்தனம் ஆகிய புராண பிரசித்தி பெற்ற இடங்கள் உள்ளன. கிருஷ்ண பக்தையான ராதாவின் திருத்தலம் என்பதோடு இங்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட கோவில்களும் ராதாதேவியுடன் தொடர்பு படுத்தப்படும் அழகிய இடங்களும் உள்ளன.
இங்கு ஓடும் அழகிய யமுனை ஆற்றில் அமைந்துள்ள ஏதேனும் ஒரு துறையில் ஸ்நானத்தைச் செய்து பக்தர்கள் இங்குள்ள கோவில்களைத் தரிசிக்கச் செல்வது மரபாக இருக்கிறது. மாலை நேரங்களிலோ வர்ணிக்க முடியாதபடி அகல் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு யமுனை ஆறும் அதைச் சுற்றியுள்ள இடங்களும் ஜெகஜோதியாக அன்றாடம் காட்சி தரும் அழகே
அழகு!
கேசி காட் துறை முக்கியமான துறையாகும். இங்கு தான் கிருஷ்ணர் கேசி என்ற அசுரனை மாய்த்தபின் வந்து ஸ்நானம் செய்தார். இங்கு தான் மதன்மோகன் ஆலயம் உள்ளது. இங்கு வழிபாட்டுடன் அழகிய இந்தத் தலத்தைக் காணும் வகையில் படகிலும் செல்ல முடியும்.
மிகப் பழம் பெரும் ஆலயமான ஸ்ரீராதா மதன் மோகன் ஆலயம் காலிதா கட் அருகே உள்ளது இந்த ஆலயம் சைதன்ய மஹாபிரபுவுடன் தொடர்பு கொண்ட ஆலயமாகும்.
விருந்தாவன் ரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோவிந்த தேவ் ஆலயம் 1590ஆம் ஆண்டில் அம்பரை ஆண்ட ராஜா மான் சிங்கினால் கட்டப்பட்ட ஒன்றாகும். கொடுங்கோலன் அவுரங்கசீப்பினால் இந்த ஆலயம் சேதப்படுத்தப்பட்டதால் இது மூன்றடுக்குடன் மட்டுமே இன்று காட்சி அளிக்கிறது. இதற்குப் பின்னால் உள்ள ஒரு சிறு கோவிலிலேயே இன்றைய பூஜைகளும் வழிபாடும் நடக்கின்றன. கர்பக்ருஹமானது வெள்ளியாலும் சலவைக் கற்களாலும் அமைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணர் பிறந்த ஜன்மாஷ்டமி அன்றும் ஹோலிப் பண்டிகையின் போதும் மக்கள் இங்கு திரளாகக் கூடுகின்றனர்.
விருந்தாவனத்தில் பெரிய ஆலயமாகத் திகழ்வது 54 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள பிரேம் மந்திர் ஆகும்.
2012இல் திறக்கப்பட்ட இந்த இரண்டு அடுக்கு சலவைக் கல்லினால் ஆன ஆலயத்தில் ராதா கிருஷ்ணரைச் சித்தரிக்கும் எண்பதிற்கும் மேற்பட்ட வண்ண ஓவியங்களை சுவரில் கண்டு மகிழலாம். முதல் தளத்தில் ராதையும் கிருஷ்ணரும் கோவில் கொண்டு அருள் பாலிக்க மேல் தளத்தில் ராமரும் சீதையும் குடி கொண்டு அருள் பாலிக்கின்றனர். அழகிய மலர்ச் செடிகளும் நீரூற்றுகளும் சுற்றி இருக்க ஒளி விளக்குகள் இரவு நேரங்களில் ஒளிர்ந்து கண் கொள்ளாக் காட்சியை அளிக்கிறது. ராஸ லீலையைச் சித்தரிக்கும் சிற்பங்கள் இந்தத் தோட்டங்களில் உள்ளன.
இங்குள்ள இன்னொரு ஆலயம் பங்கே பிஹாரி ஆலயமாகும். பங்கே என்றால் வளைந்திருப்பது என்று பொருள். ராஜஸ்தானிய அமைப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலயத்தில் கிருஷ்ணர் பால பருவத்தில் திரிபங்க கோலத்தில் அதாவது மூன்று இடங்களில் வளைந்து அமைந்துள்ள திருவுருவில் காட்சி அளிக்கிறார்.
சேவா குஞ்ஜ் அல்லது நிதி வன் என்று அழைக்கப்படும் அழகிய பெரிய தோட்டம் அனைவராலும் விரும்பிச் செல்லும் ஒரு இடம். ஏனெனில் இங்கு தான் ராஸ லீலை நடைபெற்றதாக புராண வரலாறு கூறுகிறது. இங்கு இன்றும், தினமும், ராதையும் கிருஷ்ணரும் வருகை புரிவதாக பக்தர்கள் திடமாக நம்புகின்றனர். இதற்கு மிக அருகில் அமைந்துள்ளது ஸ்ரீ ராதா தாமோதர் ஆலயம். 1542ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது இந்த ஆலயம். கிருஷ்ணரின் காலடித் தடங்கள் பதிக்கப்பட்ட கோவர்த்தன மலைப் பாறை ஒன்று இங்கு பக்தர்களைப் பெரிதும் ஈர்க்கிறது. இன்னொரு முக்கிய ஆலயம் ரங்காஜி ஆலயம் ஆகும். 1851ஆம் ஆண்டு இது நிறுவப்பட்டது. ரங்கநாதர் குடிகொண்டிருக்கும் இந்த ஆலயம் ஆறு நிலை கோபுரத்தையும் 50 அடி உயரமுள்ள த்வஜ ஸ்தம்பத்தையும் கொண்டுள்ளது. இங்கு ஆண்டு தோறும் கொண்டாடப்படும் ரத மேளாவிற்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து ரதத்தை இழுத்துச் செல்கின்றனர்.
மிகப் பெரும் ஆசார்யரான வல்லபாசாரியர் தனது 11ஆம் வயதிலே இங்கு வந்து இதன் அழகில் லயித்தார். 84 இடங்களில் அவர் கீதை பேருரைகளை ஆற்றினார். ஆனால் ஒவ்வொரு வருடமும் நான்கு மாதங்கள் பிருந்தாவனத்தில் தங்குவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். 300 கோடி ரூபாய் செலவில் 1975ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இஸ்கான் ஆலயமும் இங்கு முக்கிய ஆலயமாகத் திகழ்கிறது.
பக்தர்கள் பார்த்து அனுபவிக்கும் இன்னும் ஒரு இடம் கோவர்த்தனம் ஆகும் இது விருந்தாவனத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.. கிருஷ்ணர் எப்படி கோவர்த்தனமலையை தனது ஒரு விரலால் தூக்கினார் என்பதை இங்குள்ள மக்கள் ஆனந்தமாக இன்றும் விவரிக்கின்றனர். காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஸ்ரீ கிருஷ்ணரும் ராதாதேவியும்அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். மகாகவி பாரதியாரின் அருள் வேண்டுதல் இது:
வருவாய் வருவாய் வருவாய் கண்ணா, வருவாய் வருவாய் வருவாய்! உருவாய் அறிவில் ஒளிர்வாய் கண்ணா, உயிரின் அமுதாய்ப் பொழிவாய் கண்ணா! நன்றி வணக்கம்!