பூதம் உருவாக்கிய பயங்கர எழுத்தாளி மேரி ஷெல்லி (Post No.9992)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9992

Date uploaded in London – 18 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆண் மகனை எழுத்தாளர் என்றால் பெண் மகளை எழுத்தாளி என்று சொல்லலாம் அல்லவா ? அவ்வகையில் பயங்கரக் கதைகளை எழுதிய பிரிட்டிஷ் பெண்மணி, எழுத்தாளி மேரி ஷெல்லி MARY SHELLEY ஆவார். அவர் உருவாக்கிய பிராங்கென்ஸ்டைன் FRANKENSTEIN பூதம் உலகப் புகழ்பெற்றாதோடு  ஏராளமான டெலிவிஷன், திரைப்படக்  காட்சிகளுக்கும்  வழிவகுத்தது.

மேரி ஷெல்லியின்  காதலர், நமது பாரதியார் புகழும் ஆங்கிலக் கவிஞர் பெர்சி பி. ஷெல்லி PERCY BYSSHE SHELLEY ஆவார். பாரதியார் ஒரு காலத்தில் ‘ஷெல்லிதாசன்’ என்ற புனைப்பெயரோடு எழுதியதுண்டு.

ஒரு நாள் மேரி , அவருடைய காதலரும், எதிர்காலக் கணவருமான பெர்சி பி. ஷெல்லி, புகழ் பெற்ற கவிஞர் பைரன் LORD BYRON  ஆகியோர் காரசார உரையாடலில் ஈடுபட்டிருந்தனர். யார் அதி பயங்கரக் கதை எழுதுகிறார்கள் என்று பார்ப்போமா? என்று அவர்களுக்குள் ஒரு போட்டி ஏற்பட்டது. அதன் விளைவாக மேரி ஷெல்லி எழுதிய நாவல்தான் ‘பிராங்கென்ஸ்டைன்’ FRANKENSTEIN .

அவருடைய முழுப்பெயர் மேரி வுல்ஸ்டன்க்ராப்ட் காட்வின் MARY WOLLSTONECRAFT GODWIN . அவர் லண்டனில் கீர்த்தி வாய்ந்த குடும்பத்தில் பிறந்தார். மேரியின் தந்தை வில்லியம் காட்வின் WILLIAM GODWIN அரசியல் விமர்சகர், நாவல் ஆசிரியர். திருமணம் உள்பட பல்வேறு சமூக விஷயங்களில் புரட்சிக் கருத்துக்களை உடையவர் வில்லியம் காட்வின். அவருடைய தாயார் பெண் உரிமைப் போராளி. ஆனால் மேரி பிறந்த 11ஆவது நாளில் தாயாரின் உயிர் பிரிந்தது.

வீட்டிலேயே கல்வி கற்றார் மேரி . வீட்டிற்கு வரும் பெரும் இலக்கியப் புள்ளிகளை சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. அதில் ஒருவர் கவிஞர் பெர்சி ஷெல்லி. 16 வயதில் அவருடன் பிரான்சுக்கு ஓடிப்போனார். காதலின் வேகம்!

அவர்களுடைய முதல் குழந்தை இத்தாலியின் வெனிஸ் நகரில் இளம் வயதில் இறந்தது . இங்கிலாந்துக்குத் திரும்பிவந்தவுடன் இரண்டாவது குழந்தையான வில்லியம் பிறந்தான் .

‘பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்’ என்ற பழமொழிக்கேற்ப அவருடைய வாழ்வில்  துன்பம் தொடர்ந்து வந்தது. பெர்சி ஷெல்லியின் முதல் மனைவி தற்கொலை செய்துகொண்டதால்தான் அவர் மேரியை மணந்தார். பிறந்த இரண்டாவது குழந்தை வில்லியமும் இத்தாலிக்குத் திரும்பிச் சென்றபோது இறந்தான்.

மேரிக்கு 21 வயதானபோது அவர் எழுதிய பயங்கரக் கதைதான் பிராங்கென்ஸ்டைன்.

அந்தக் காலத்தில் இருள் சூழ்ந்த, பேய் பிடித்த மாளிகைகள் , கோட்டை கொத்தளங்களை வருணித்து அந்தப் பின்னணியில் கதை எழுதுவது மரபு. அதே பாணியில் மேரியும் ஒரு பூதத்தைப் படைத்தார். அதை எதிர்கால விஞ்ஞானப் புனைக்கதைகளின் முன்னோடி என்று விளம் புவோர் பலர். ஒரு விஞ்ஞானி உயிரினங்களை உண்டாக்கும் ஆராய்ச்சி செய்கிறான். அது தவறான வழியில் போய், பிராங்கென்ஸ்டைன் என்ற பயங்கர மனிதனை- பூதத்தை உருவாக்கிவிடுகிறது. அதுவே விஞ்ஞானியையும் கொன்றுவிடுகிறது.

இதுபோன்ற புதுமைக் கதையை மக்கள் வரவேற்றனர். மக்கள் இதை வைத்து பல நாடகங்கள், திரைப்படங்களைத் தயாரித்தனர் . அவர் வாழ்வில் மேலும் ஒரு துயரம்,  புகழ் பெற்ற கவிஞர் ஷெல்லி அவரது 29ஆவது வயதில் படகு விபத்தில் இறந்ததாகும் . இதனால்  1822ல் மேரி இங்கிலாந்துக்குத் திரும்பிவந்தார். 

26 வயதில் இரண்டாவது  நாவல் ஆன  வால்பெர்க்கா VALPERGA வை பதிப்பித்தார்.  அவர் கவிதைகளையும் மேலும் பல நாவல்களையும் எழுதினார். தனது பயணங்கள் பற்றிய கட்டுரைகளையும் எழுதினார். மனித குலம் அழிவது பற்றிய THE LAST MAN தி லாஸ்ட் மேன் என்ற நாவலையும் வெளியிட்டார். ஆயினும் முதல் நாவலுக்குக் கிடைத்த வெற்றி இவைகளுக்குக் கிடைக்கவில்லை . இறுதிக் காலத்தில் நோய்வாய்ப்பட்டு இறந்தார்.

பிறந்த தேதி – ஆகஸ்ட் 30, 1797

இறந்த தேதி – பிப்ரவரி 1, 1851

வாழ்ந்த ஆண்டுகள் – 53

வெளியிட்ட  நூல்கள் PUBLICATIONS

1817-HISTORY OF SIX WEEKS’ TOUR

1818 – FRANKENSTEIN

1828- VALPERGA

1826- THE LAST MAN

1830- THE FORTUNES OF PERKIN WARBECK

1835- LODORE

1837 – FALKNER

1844 –  RAMBLES IN GERMANY  AND ITALY

PUBLISED AFTER SHE DIED

1987 – THE JOURNALS OF MARY SHELEY ( 2VOLS)

–SUBHAM–

MARY’S MOTHER

TAGS- MARY SHELLEY, FRANKENSTEIN, மேரி ஷெல்லி, பிராங்கென்ஸ்டைன்,

மந்த்ராலய மஹான் ஸ்ரீ ராகவேந்திரர்! – 2 (Post No.9991)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9991

Date uploaded in London –  18 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அன்றிலிருந்து அவர், அற்புதமாக சீதாதேவி தானே பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்த மூலராமரின் பூஜையை உரிய முறையில் செய்து அனைவருக்கும் அக்ஷதை வழங்கி கடினமான ஸ்லோகங்களுக்கு விளக்கவுரையும் அளித்து வரலானார்.

நாடெங்கும் யாத்திரை மேற்கொண்டு ஏராளமான ஸ்தலங்களுக்கு அவர் விஜயம் செய்தார். செல்லும் வழியில் எல்லாம் ஏராளமான அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டே இருந்தார். உலகமே வியந்தது அவரது அருளாற்றலைக் கண்டு.

அத்வைனி என்ற இடத்தில் ஆடுமாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான் ஒரு சிறுவன் அவன் பெயர் வெங்கண்ணா. எழுத்தறிவு இல்லாத அவனுக்கு அருள் பாலித்த ராகவேந்திரர் அவனுக்கு அக்ஷதை பிரசாதம் வழங்கினார். அவன் ராகவேந்திரரின் நாமத்தை உச்சரித்து வரலானான்.

அந்தக் காலத்தில் அரசு புரிந்த சுல்தானின் பிரதிநிதியாக இருந்தவன் அஸதுல்லாகான் என்பவன். அவன் வெங்கண்ணாவிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்துப் படிக்கச் சொன்னான். திகைத்துப் போன வெங்கண்ணா ராகவேந்திரரை நினைத்து வேண்ட, அவர் அருளால் அதை வெகு எளிதாகப் படிக்க முடிந்தது. இதனால் மகிழ்ந்த அஸதுல்லாகான் வெங்கண்ணாவை அன்புடன் அரவணைத்து ஆதரிக்கலானான். காலகிரமத்தில் அவன் திவானாக நியமிக்கப்பட்டான்.

இப்படி ராகவேந்திரர் ஆற்றிய அற்புதங்கள் ஏராளம். தஞ்சாவூரில் பல காலம் வசித்து வந்த ராகவேந்திரர் கும்பகோணத்திற்கு மீண்டும் வந்தார். ஒருநாள் அங்கு வந்த சில பிராமணர்கள், ‘ராகவேந்திரர் நினைத்ததை எல்லாம் தருபவராமே, நாம் சில பண்டங்களை நினைத்துக் கொண்டால் அவர் தருவாரா என்று பார்க்கலாம்’ என்று நினைத்துக் கொண்டனர். காவிரிக் கரையில் இருந்த அவர்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு பட்சணத்தை நினைத்துக் கொண்டனர். அப்போது ராகவேந்திரரின் காஷாயத்தை துவைப்பதற்காக வந்த அவரது சீடன் ஒருவன், “வாருங்கள், சீக்கிரம் வாருங்கள், உங்களுக்கான அனைத்து பக்ஷணங்களும் தயார்” என்றான்.

இதனால் திகைத்துப் போன அவர்கள் நாங்கள் நினைத்தது உனக்கு எப்படித் தெரியும் என்று கேட்டனர். அப்போது அவன் கையிலிருந்த காஷாயம் கீழே நழுவி விழுந்தது. அவன் உடனே, “நான் என்ன சொன்னேன். ஒன்றுமே சொல்லவில்லையே” என்றான். ‘இல்லை நீ சொன்னதை நினைத்துப் பார்’ என்றனர் பிராமணர்கள். அப்போது நழுவி விழுந்த காஷாயத்தைக் கையில் எடுத்த அந்த சிஷ்யன் உடனே அவர்கள் நினைத்ததை எல்லாம் சொல்ல ஆரம்பித்தான். அவர்களுக்கு உடனே புரிந்து விட்டது – அந்த சிஷ்யன் கூறுவது எல்லாம் அந்த காஷாயத்தை அவன் தொட்டதால் ஏற்பட்ட மகிமையாலேயே என்று. அவர்கள் மடத்திற்குச் செல்ல அங்கு அவர்கள் நினைத்த உணவு வகைகள் அனைத்தும் கிடைத்தன. அங்கு வந்த ராகவேந்திரர், “ வேண்டியது கிடைத்ததா?” என்று பரிவுடன் விசாரித்தார்.

இப்படி அன்றாடம் நடக்கும் அற்புதங்கள் ஏராளமாக இருந்தன; அவரது அருள் புகழ் நாடெங்கும் பரவியது.  எழுபத்தாறு ஆண்டுகள் வாழ்ந்து அருள் பாலித்த ஸ்வாமிகள் பிருந்தாவன பிரவேசம் செய்ய உத்தேசித்து மாஞ்சாலி என்ற கிராமத்தை உகந்த இடமாகத் தேர்ந்தெடுத்தார். ஏனெனில் அந்த இடத்தில் தான் பிரகலாதன் யாகம் செய்த இடம் என்பதை அவர் அறிந்திருந்தார். 1671ஆம் ஆண்டு சிராவண கிருஷ்ண பக்ஷம் த்விதியை அன்று அவர் ஜீவ சமாதி அடைந்தார். அந்த கிராமம் மந்த்ராலயம் என இனி அழைக்கப்படும் என்றும் அவர் அருளினார். அப்போது ஆண்டு வந்த சுல்தான் மசூத்கான் அந்த கிராமத்தை ராகவேந்திரருக்கு அளித்தான். பிருந்தாவன பிரவேசத்திற்கு முன்னர் அவர் அற்புதமான ஒரு உரையைத் தனது பக்தர்களுக்காக ஆற்றினார்.

மந்த்ராலயத்தில் ராகவேந்திரரின் பிருந்தாவனத்திலிருந்து எடுக்கப்பட்ட மண் மூலம் நாடெங்கும் சுமார் 300 பிருந்தாவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கெல்லாம் அவரை வணங்குவோர் அடையும் பலன்களை வார்த்தைகளால் சொல்லி விளக்க முடியாது.

துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்துள்ள மந்த்ராலயத்தில் அவர் ஜீவனுடன் இன்றும் இருந்து அருள் பாலிப்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. தினமும் அதிகாலையில் அவர் துங்கபத்ரா நதிக்கு நீராடச் செல்லும் பாதக்குறடுகளின் சப்தம் எழுகிறது. அதே போல அவர் மூலராமருக்கு பூஜை செய்யும் போது எழும் மணி ஓசையும் தினம் கேட்கிறது.

ராயர் என்று பக்தர்களால் பயபக்தியுடன் அழைக்கப்படும் ராகவேந்திரர் மதராஸ் பிரஸ்டென்ஸி என்று அந்தக் காலத்தில் அழைக்கப்பட்ட சென்னை ராஜ்யத்தில் பிரிட்டிஷ் அரசின் நிர்வாகத் தலைவராக இருந்த சர் தாமஸ் மன்ரோவிற்கு தரிசனம் தந்த சம்பவம் சுவையான ஒன்று. (மன்ரோ பிறந்த தேதி : 27/5/1761 மறைந்த தேதி : 6/7/1827)

·                                                                          

·                                                                         தொடரும்

 tags- மந்த்ராலய மஹான், ஸ் ராகவேந்திரர்! – 2,  

Tamil and English Words 2700 Years Ago- Part 60 (Post No.9990)

RED SQUARE IN MOSCOW  AND CITY SQUARE IN DELHI 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9990

Date uploaded in London – 17 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020;

FOLLOWING SERIES STARTED ON NINTH DECEMBER 2020.

ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK.

XXX

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்ஆங்கில சொற்கள் – பகுதி -60

Tamil and English Words 2700 Years Ago- Part 60

பாணினி சூத்திர எண்கள்:–

6-1-166

PANINI deals with numbers and he gave examples thisru.

Even today musicians use Thisra gathi ( 3 beats)

சங்கீதத்தில் திஸ்ர கதி

Xxx

6-1-167

Panini deals with number four Chatur

We use Chathuram in Tamil where the four squares are equal.

In every city we have Chathukkam (for Square in big cities)

நாற்பக்கம் சமம் = சதுரம் ; நகரங்களில் சதுக்கம்

Xxx

6-1-172

Ashta for number eight.

Ashta becomes Ettu in Tamil and Eight in English

Ashta becomes Octo in Latin and Greek

Tamil and English derive it in the same way.

அஷ்ட = எட்டு; ஆங்கிலத்தில் எயிட்

அஷ்ட- லத்தின் , கிரேக்க மொழியில் அக்ட = அக் டோபர் = எட்டாம் மாதம் ; கிறிஸ்தவர்கள் காலண்டரை மாற்றியதால் அது இப்போது பத்தாம் மாதமாகிவிட்டது

Xxx

6-1-26

Sushka – dry

In Tamil dried ginger is Sukku

இஞ்சி காய்ந்தால் சுக்கு

Xxxx

6-1-209

Jushta – happy

Jushta becomes joy in English

ஜூ ஷ்ட – ஜாய் ; ஸந்துஷ்ட= ஸந்தோஷம்

Xx

INDIAN NAVY

6-1-213

Naava becomes Navy, Naval in English

நாவ = படகு; நேவி, நேவல்

வந்த் = வந்தனம் = வணங் = வணங்கு = வணக்கம்

வ்ரு = தேர்ந்தெடு – வரன் = வாரிசு

Xxx

6-1-214

Panini uses

Vanth – bow; it becomes Vanangu in tamil

Vru – select; it becomes Ward in English and Varan (bridegroom in Marriage)

வந்த் = வந்தனம் = வணங் = வணங்கு = வணக்கம்

வ்ரு = தேர்ந்தெடு – வரன் = வாரிசு

Xxx

6-1-215

Venu – bamboo

Venu Gaanam (flute made up of bamboo) is in Tamil and Sanskrit songs.

Venu might have become bamboo; but we need more evidence.

In Latin it is vermentum and in Greek it is bampou

So, there are missing links

வேணு = மூங்கில் = மூங்கிலினால் ஆன புல்லாங்குழல் வேணு கானம்

Xxx

6-1-216

Panini gives oft used words in this sutra:

Thyaaga, raaga, haasa, guha, svata

Thyaaka – sacrifice, one who becomes a martyr by sacrificing something; we have lot of

Thyagees in india .

Raaga – love; it is in film songs even in tamil

Haasa – haasyam/laughter

Guh – cave, that which is hidden; here it is used for a cheat/ secretive fellow

Swat – in tamil we use savataal for humbug; empty talk; tall talk

தியாக – துறவு; துறத்தல்; தியாகம் செய்தல்; சுதந்திரப் போராட்ட தியாகி .

ராக – காதல் (ப்ருந்தாவனமும் நந்த குமாரனும் – மிஸ்ஸியம்மா பாடல்- ராகத்தில் அநுராகம் மேவினால்

ஹாஸ – மந்த ஹாஸ /புன்னகை; சாருஹாசன்; கமல ஹாசன்; ஹாஸ்யம்/தமாஷ்/ சிரிப்பு

குஹ = மறைவான; ரகசிய பேர்வழி; நேர் வழியற்றவன்; மறைக்கக்கூடிய மோசடிக்காரன்

ஸ்வட் = பேச்சுக்காரன் ; சவடால் பேர்வழி

Xxx

6-1-219 to 6-1-221

Vathee examples are given by commentators.

Two amazing things are here—

1.From Vedic days all rivers are feminine and motherly

2.Most of the rivers and several female names end with suffix Vathee

We know the most famous river Sarasvathee.

Here commentators give examples : Rivers Udumbharaavathee, Saraavathee, Ajiravathee, Ahivathee, Muneevathee

From Vedic days until this day we see feminine names end with Vathi or Mathi and Masculine names end with Pathi. I have a strong feeling Indus Script has these endings/suffix

வதீ என்பது பெண்பால் சொல்; எல்லா நதிகளும் வேதகாலம் முதல் இன்று வரை வதீ என்ற சொல்லுடன் முடியும். நிறைய  பெண்களின் பெயர்களும் வதி என்றும் மதி என்றும் முடியும்; சரஸ்வதி, பார்வதி, இந்து மதி, சந்திரமதி , காந்திமதி .

சரஸ்வதீ நதி எல்லோரும் அறிந்த பெயர்கள்.

ஆண்களின் பெயர்கள் – பதி என்று முடியும் – கணபதி, லெட்சுமிபதி , பசுபதி ,பிருஹஸ்பதி, ஜனாதிபதி , ராஷ்ட்ரபதி , கிருஹபதி

சிந்து சமவெளியிலும் பதி, மதி, வதி – இருக்க வேண்டும் என்பது என் துணிபு .

இன்னும் ஒரு உண்மை:-  நதிகள் = பெண்கள் / தாய்மார்கள் ; அவர்களின் கணவன் கடல் ;

இந்தக் கருத்தும் வேத காலம் முதல் இன்று வரை தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில் உளது.

உரைகாரர்கள் கொடுக்கும் நதிகளின் பெயர்கள் அனைத்தும் வதீ என்றே முடிவடைகின்றன .

Xxx

6-2-3

Panini used varna for colours

It is used in most of the Indian languages.

In Tamil it become Varna or Vanna

வர்ணம் = வண்ணம் பாணினி காலம் முதல் 2700 ஆண்டுகளாக உபயோகத்தில் உளது

—to be continued

 TAGS –TAMIL IN PANINI-60

நாராயணனின் 4 கவிதைகள் (Post No.9989)

WRITTEN BY LONDON POET A NARAYANAN

Post No. 9989

Date uploaded in London – 17 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டன் கவிஞர் ஏ .நாராயணன், ஆகஸ்ட்  2021ல் எழுதிய 4 கவிதைகள் :

(ரசாயன பாடத்தில் டாக்டர் பட்டம் பெற்ற அத்திபள்ளி நாராயணன் சமீபகாலமாக கவிதை மழை பொழிந்து வருகிறார்.அவருடைய கவிதைகள் இந்த ‘பிளாக்’கில் முன்னரே வெளியாகியுள்ளன- SWAMINATHAN.)

xxx

தாமரையோ மறையோ

குவித்த கரமொத்த தாமரை மொட்டு

குட்டை நீரில் நெட்டாய் நிற்கத் தொட்

டதோ காலை இளங்கதிரோன்  விரிந்ததோ

இதழ்கள் முத்துப் பனித்துளிகள் ஒத்தணம்

கொடுக்க அடுக்கடுக்காய் இதழ்கள்

நடுவே மகரந்தமே மந்தகாசமாக

நறுமணம் வீசிய நல் வரவேற்பில்

தேனீக்களிதழ் இதழாய்த் தாவித்தாவிய

ரீங்காரமோ! தாமரையிலமர்ந்த பிரம்மன்

ஓதிய வேதம் பதிந்த இதழ்கள் துடிப்பு?

இதழ் பதிந்த வேதத்தை மொட்டு நிலை

யிலிரவெலா மோதிப் பயின்றுக் காலை

யிலே கதிரோன் தட்டி எழுப்ப விரித்த

இதழ்களில் மொய்த்த வண்டுகள் வேதம்

பயில வேதமே இனிய நாதமாய் ஒலித்த

வாணியின் வீணை இசையோ! இவ்வண்டு

களின் ரீங்காரமாயின் வேதமும் நாதமும்

கமலக்கண்ணனிடம் சங்கமமான சாம

வேதமாய் வேய் குழலொலித்த கானம்

தாமரை தன்னுள்ளடக்கிய மறையே

— நாராயணன்

xxxx

எது வழி?

உருவமும் அருவமும் அவரவர் அறி வழி

தருவதும் பெருவதும் அவரவர் தவ நெறி

நிற்பதும் நடப்பது மவன் விதித்த வழி

நிர்க்குணமும் சகுணமும் நிழலும்

நிசமும் போன்ற மொழி

சமத்துவமும் தத்துவமும்

சம நிலை மனமொழி

அரியும் அயனும் அவரவர் அறியும் வழி

— நாராயணன்

xxxx

மாலனோ மாயனோ

ஒன்றோ பலவோ

ஒன்றினின்று பலவோ

பலகூடி ஒன்றோ

படைப்பில் பலவும்

ஒன்றுமாய் நின்று

மாயையில் மக்களை

மேய்ப்பவன் மாலனே

–நாராயணன்

xxx

                           அறுபடும் அறம்

அவரவர் அறம் அவரவர் நிலைக்கேற்ப

அதனினு மினிதோ இருப்பதைப் பகிர்வது

வழிந்தோடும் ஏரி வாய்க்காலாய்ப் பாய்வது போலோ

வரம்புக்கு விஞ்சிய செல்வன் வாரிக் கொடுப்பது

வறுமையிலு மிருந்ததைப் பகிர்ந்தின்புறுவோனையோ 

வானவரும் வையகத்தோருமென்றும் வாழ்த்துவர்

நாராயணன் 

–subham—

tags-  நாராயணன், கவிதைகள், எது வழி , தாமரை, அறுபடும் அறம் ,மாலனோ ,மாயனோ 

துளசி ராமாயண மஹிமை – வெ . சந்தானம் (Post No.9988)

COMPILED  BY S NAGARAJAN

Post No. 9988

Date uploaded in London –  17 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இது எங்கள் தந்தை மதுரை  தினமணி பொறுப்பாசிரியர் வெ .சந்தானம்,  மதுரைக் கல்லூரி பேராசிரியர் தி. சேஷாத்ரி எழுதிய துளசி இராமாயண நூலுக்கு எழுதிய முன்னுரை. ஆகஸ்ட் 15ம் தேதி அவருடைய நினைவு தினம். அன்று வெளியான கட்டுரையின் தொடர்ச்சி இது

BOOK DATED 2 OCTOBER 1954

AUTHOR – T SESHADRI, HINDI LECTURER, MADURA COLLEGE, MADURAI, MADRAS STATE (TAMIL NADU).

SRIMATHY AND SRI V SANTANAM

TAGS – துளசி ,ராமாயண மஹிமை ,  வெ . சந்தானம் ,

சோம ரசம் பற்றி நாவல் எழுதிய ஆங்கில ஆசிரியர் ஆல்டஸ் ஹக்ஸ்லி (Post. 9987)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9987

Date uploaded in London – 17 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

முதல் உலக யுத்தம் முடிந்த காலத்தில் மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளராக உருவானவர் ஆல்டஸ் ஹக்ஸ்லி. ALDOUS HUXLEY  அவருடைய கட்டுரைகள் மிகவும் சிந்தனையைத் தூண்டுவன.

பிரேவ் நியூ ஒர்ல்ட் BRAVE NEW WORLD என்ற அவருடைய புதினம் மிகவும் வரவேற்பைப் பெற்றது.

ஹக்ஸ்லி மிகவும் பணக்கார குடும்பத்தில் பிறந்தார். அவருடைய குடும்பத்தை நாடே அறியும். ஏனெனில் ஹக்ஸ்லியின் தாத்தா தாமஸ் ஹக்ஸ்லி ஒரு உயிரியல் விஞ்ஞானி. டார்வினின் பரிணாமக் கொள்கை THEORY OF EVOLUTION உருவாக அவரும் உதவி செய்தார். ஆகையால் அவருக்கும் ஈடன் கல்லூரியிலும் ETON COLLEGE  ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும் கற்க வாய்ப்பு கிடைத்தது. ஆயினும் அவருக்கு 16 வயதில் ஏற்பட்ட ஒரு கண் நோய் அவரை ஏறத்தாழ குருடராக (nearly blind) ஆக்கிவிட்டது.

முதல் உலகப்  போரில் சண்டை போட வேண்டும் அல்லது விஞ்ஞானி ஆகவேண்டும் என்ற அவருடைய ஆசை பொய்யாய் பழங் கனவாய்ப் போயிற்று. அதிலும் ஒரு நன்மை விளைந்தது. அவர் கவிதை எழுதுவதிலும் கதை எழுதுவதிலும் கவனத்தைச் செலுத்தினார். 27 வயதிலேயே  அவருடைய முதல் நாவல் க்ரோம் யெல்லோ CHROME YELLOW வெளியானது ; சமுதாயத்தின் குறைபாடுகளை எடுத்துக் காட்டும்  நக்கலும் நகைச் சுவையும் மிகுந்த நாவல் அது. அடுத்து வந்த 4 நாவல்களில் ஒன்றுதான் பிரேவ் நியூ வோர்ல்ட் . இது அவருக்கு இலக்கிய உலகிலும் சமூகத்திலும் முக்கிய இடத்தைப் பெற்றுத் தந்தது.

எதிர்காலத்தில் உருவாகும் கட்டுப்பாடு மிக்க, தொழில்நுட்பத்தில் முன்னேறிய ஒரு சமுதாயத்தை வருணிக்கும் நாவல் அது. அதில் ரிக் வேத தாக்கத்தையும் காணலாம்.மக்களை எப்போதும் மகிழ்சசியில் திளைக்கச் செய்ய  ‘சோமா’ SOMA என்னும் ஒரு அபூர்வ  குளிகை உருவாக்கப்படுவது குறித்து அந்த நாவல் பேசுகிறது. ரிக் வேதத்தின் 10 மண்டலங்களிலும்  உள்ள பல்லாயிரம் மந்திரங்களில் அற்புதமான சோமரசம் பற்றி ரிஷிகள் பாடியுள்ளனர். (ஆனால் அந்தக் குளிகை இப்போது அழிந்து போயிற்று) ‘சோமா’ வுடன் ஹக்ஸ்லி  நிறுத்தவில்லை. எந்த வேலை பார்க்க என்ன மாதிரி குழந்தை வேண்டும் என்று திட்டமிட்டு குழந்தை பெறும்  அறிவியல் முன்னேற்றம் குறித்தும் எழுதியிருக்கிறார். ஆயினும் மக்கள் ஆன்மா ( SOULLESS, EMOTIONLESS) இல்லாதவர்களாக உணர்ச்சி இல்லாதவர்களாக ஆகிவிடுகிறார்கள் என்று சொல்லி மேலை நாட்டு நாகரீகத்தின் மீது கேள்விக்குறிகளைப் போடுகிறார் . அதாவது தொழில்நுட்பத்தை அதிகம் சார்ந்து நிற்கும் அதே நேரத்தில் மக்கள் அடிப்படை பண்புகளை இழப்பத்தைச் சித்தரிக்கும் நாவலே BRAVE NEW WORLD பிரேவ் நியூ வோர்ல்ட் / துணிச்சல் மிக்க புதிய உலகம்.

தீவு என்ற அவருடைய கடைசி  நாவலில் நிறைய இந்துமத குறிப்புகள் வருகின்றன . சிவ பெருமானுடைய ஆனந்த நடனம், மோக்ஷம், முருகன் மைலேந்திர என்ற தமிழ் கதாபாத்திரம், ராஜா, ராணி, மற்றும் நிறைய சம்ஸ்க்ருத சொற்கள் இடம்பெறுகின்றன . இது மத தாக்கத்தை இதில் அதிகம் காணலாம்.

பிரான்ஸ், இதாலி ஆகிய நாடுகளில் வசித்துவிட்டு ஹக்ஸ்லி, அமெரிக்காவுக்குச் சென்று ஹாலிவுட்டில் சினிமா கதை வசனம் எழுதினார். வாழ்நாளின் இறுதிவரை கலிபோர்னியாவில் இருந்து நாவல்கள், கவிதைகள், தத்துவம் பற்றிய கட்டுரைகள் , அரசியல் விஷயங்கள் ஆகியவற்றை  எழுதி வந்தார் . ரிக் வேத சோமா குளிகை பற்றிய அவருடைய சிந்தனை மனதை மாற்றக்கூடிய மருந்துகளை (MIND ALTERIG DRUGS) உருவாக்கும் விஷயம் பற்றியும் எழுதத்  தூண்டியது. இந்தத் துறையில் தன்னுடைய ஆராய்ச்சிகள் பற்றியும் இரண்டு புஸ்தகங்களை எழுதினார்.

பிறந்த தேதி – ஜூலை 26, 1894

இறந்த தேதி – நவம்பர் 22, 1963

வாழ்ந்த ஆண்டுகள் – 69

ஹக்ஸ்லி எழுதிய நூல்கள்:-

1921 – CHROME YELLOW

1923- ANTIC HAY

1928 – POINT COUNTER POINT

1932- BRAVE NEW WORLD

1936 – EYELESS IN GAZA

1939 – AFTER MANY A SUMMER

1944 – TIME MUST HAAVE A STOP

1948 – APE AND ESSENCE

1958 – BRAVE NEW WORLD REVISITED

1962- ISLAND.

–SUBHAM —

TAGS- சோம ரசம் , நாவல் ,ஆங்கில ,ஆசிரியர்,  ஆல்டஸ் ஹக்ஸ்லி, ALDOUS HUXLEY

மந்த்ராலய மஹான் ஸ்ரீ ராகவேந்திரர்! – 1 (Post No.9986)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9986

Date uploaded in London –  17 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 16-8-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.

எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். (இந்த உரை மூன்று பகுதிகளாக வெளியிடப்படுகிறது.)

மந்த்ராலய மஹான் ஸ்ரீ ராகவேந்திரர்! – 1

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம். மந்த்ராலயத்தில் இன்றும் ஜீவ சமாதியில் இருந்து கொண்டு அனைவருக்கும் அருள் பாலிக்கும் பெரும் மஹானான ஸ்ரீ ராகவேந்திரரைப் பற்றி இன்று காணப் போகிறோம். லக்ஷக்கணக்கான மக்களை இன்று வரை மந்த்ராலயத்திற்கு ஈர்த்து அருள் பாலித்து வரும் இவரது சரிதம் அற்புதமான ஒன்று.

கி.பி.1595ஆம் ஆண்டு பால்குண மாதம், சுக்லபக்ஷ, சப்தமி திதியில் தமிழகத்தில் சிதம்பரத்திலிருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புவனகிரியில் மத்வ சம்ப்ரதாய பிராமண குலத்தில் கௌதம கோத்திரத்தில் திம்மண்ண பட்டர் – கோபிகாம்பாள் தம்பதியருக்கு மூன்றாவது மகனாக அவதரித்தார்  ஸ்ரீ ராகவேந்திரர். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வேங்கடநாதன். உரிய வயதில் குருகுலத்தில் சேர்ந்து அனைத்துக் கலைகளிலும் அவர் தேர்ச்சி பெற்றார். குடும்பமோ வறுமை சூழ்நிலையில் இருந்தது. செய்வதறியாது திகைத்த பட்டர் கும்பகோணத்திற்கு குடும்பத்துடன் சென்றார். அங்கே வித்யாமடத்தின் பீடாதிபதியாக இருந்த ஸ்ரீ சுதீந்திரர் அந்தக் குடும்பத்தை அன்போடு வரவேற்றார். வேங்கடநாதனைப் பார்த்தவுடன் அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லாமல் போயிற்று. நமது மடத்தின் அடுத்த பீடாதிபதி வேங்கடநாதனே என்று அவர் மனதில் தீர்மானம் உருவாயிற்று. ஸ்ரீ மடத்தில் மூலராமருக்கு தினமும் சுதீந்திரர் செய்யும் பூஜையை லயிப்புடன் கவனித்து வந்தார் வேங்கடநாதன். உரிய வயதிலே சரஸ்வதி என்ற மங்கையை அவருக்கு மணம் முடித்து வைத்தனர் பெற்றோர். வறுமை நீங்காத நிலையில் தன் மனைவியுடன் ஸ்ரீ மடத்தில் அடைக்கலம் புகுந்தார் வேங்கடநாதன்.

வேங்கடநாதனின் பக்தியையும் இறைத்தன்மையையும், அவர் பாடங்களை கிரகித்து உள்வாங்கிக் கொண்ட பான்மையையும் அவரது மேதைத் தன்மையையும் கவனித்து வந்த சுதீந்திரர் அவரின் மீது தனிப்பட்ட அன்பு கொண்டார். இதனால் சுதீந்திரரரிடம் அவருடன் பயின்று வந்த மற்ற சிஷ்யர்கள் அவர் மீது பொறாமை கொண்டனர். ஒரு நாள் மத்வாசாரியரின் பிரம்ம சூத்ரத்தின் பாஷ்யத்தைப் பற்றி சுதீந்திரர் விளக்க ஆரம்பித்தார். இந்த பாஷ்யத்தின் விளக்க உரையாக ஸ்ரீ ஜயதீர்த்தர் என்பவர் நியாயசுதா என்ற நூலை இயற்றினார். ஸ்ரீ ஜயதீர்த்தரின் நியாயசுதாவின் பெருமையை விளக்க ஆரம்பித்த சுதீந்திரர் திடீரென்று தனது உரையை நிறுத்தினார். அவரால் மேலே தொடரமுடியவில்லை. ‘இன்றைய பாடத்தை இத்துடன் முடித்துக் கொள்ளலாம்’ என்று கூறி அருளினார் சுதீந்திரர். அன்றிரவு சுதீந்திரர் தன்னால் எளிய விதத்தில் விளக்கவுரையை ஆற்ற முடியவில்லையே என்று எண்ணி வருத்தத்தில் ஆழ்ந்திருந்தார். சிந்தனையில் ஆழ்ந்தவாறே வெளியில் சற்று சென்று வரலாம் என்று எண்ணிய அவர் சிஷ்யர்கள் உறங்கிக் கொண்டிருந்த இடத்திற்குச் சென்றார். அங்கு அனைவரும் உறங்கிக் கொண்டிருக்க வேங்கடநாதனை மட்டும் காணோம். அவர் தன் பார்வையை எல்லா திசைகளிலும் செலுத்த  அங்கு தூரத்தில் வேங்கடநாதன் படுத்து தூங்கிக் கொண்டிருந்ததையும் அவர் அருகில் ஓலைச்சுவடிகள் பல இருந்ததையும் அவர் கண்டார். மெதுவாக அந்த ஓலைச் சுவடிகளை எடுத்துப் பார்த்தவர்,. திகைத்துப் போனார். அன்று அவரால் விளக்க உரை செய்ய முடியாமல் இருந்த நியாய சுதா ஸ்லோகங்களுக்கான விளக்கத்தை மிக அருமையாக எளிமையாக எழுதி இருந்தார் வேங்கடநாதர். அந்த சுவடிகளை எடுத்துக் கொண்டு தன் இருப்பிடம் மீண்டார் சுதீந்திரர்.மறுநாள் காலையில்  வகுப்பு ஆரம்பமானது. அனைவரும் குழுமிய போது சுதீந்திரர் வேங்கடநாதன் எழுதிய ஓலைச் சுவடிகளைக் காண்பித்து தன்னால் விளக்க முடியாமல் இருந்த ஸ்லோகங்களுக்கு வேங்கடநாதன் எழுதிய உரையை விவரித்தார். அனைத்து சக மாணவர்களும் அதிசயித்துப் போயினர். இப்படிப்பட்ட பரிமள சுகந்தம்  வீசும் இந்த உரைக்கு ‘ஸுதா பரிமளம்’ என்ற பெயரைச் சூட்டுகிறேன். இதை இயற்றிய வேங்கடநாதனுக்கு ‘பரிமளாச்சாரியார்’ என்ற பட்டத்தையும் வழங்குகிறேன் என்றார். அனைவருக்கும் வேங்கடநாதனின் பெருமை புரிய வந்தது.

ஒரு முறை கும்பகோணத்தில் நடந்த ஒரு விருந்திற்கு வேங்கடநாதர் அழைக்கப்பட்டார். விருந்தை அளித்தவருக்கு அவரது பெருமை தெரியாது. அவரை சந்தனம் அரைத்துத் தருமாறு கூறினார். சந்தனம் அரைக்கப்பட்ட பின் அனைவருக்கும் அது தரப்பட்டது. ஆனால் அதை பூசிக் கொண்ட விருந்தினர்கள் குளிர்ச்சியை அனுபவிப்பதற்கு பதில் ‘ஆ, எரிகிறதே எரிகிறதே’ என்று உடல் எரிச்சலால் அலறினர். இதனால் ஆச்சரியப்பட்ட விருந்தை அளித்தவர், வேங்கடநாதரை அழைத்துக் காரணம் கேட்க தான் சந்தனத்தை அரைத்த போது அக்னி சூத்ரத்தை ஜபித்ததாகவும் அதன் பயனாகவே இப்படி ஏற்பட்டிருக்கிறது என்று கூறினார். உடனே வருண மந்திரத்தைக் கூறியவாறே சந்தனத்தை அரைத்து அதைத் தந்து அனைவரையும் பூசிக் கொள்ளச் சொன்னார். இப்போது அது மிக்க குளிர்ச்சியைத் தந்தது. விருந்தினர்கள் மகிழ்ந்தனர். அத்துடன் வேங்கடநாதரின் புகழ் எங்கும் பரவியது.

     வேங்கடநாதரை மடத்தின் பொறுப்பை ஏற்குமாறு சுதீந்திரர் கூறியருளினார். ஆனால் அவரோ குடும்பப் பற்றால் அதை ஏற்க மறுத்தார். இதனால் சுதீந்திரர் ஸ்ரீ யாதவேந்திரர் என்பவரை பூஜை செய்ய நியமித்து தனது இளவலாக நியமித்தார். காலம் சென்றது. ஒருநாள் சுதீந்திரருக்கு உடல் நலம் குன்றியது. ஸ்ரீ யாதவேந்திரரும் அருகில் இல்லை.

அடடா, காலம் காலமாகச் செய்து வரும் மூலராமரின் பூஜைக்குத் தடை வந்து விடுமோ என்று கவலைப்பட்டார் சுதீந்திரர். அன்று இரவில் அவர் கனவில் மூலராமர் தோன்றி, “உனக்குப் பின் அர்ச்சனை செய்ய தகுதியானவர் வேங்கடநாதனே” என்று கூறியருளினார். இதனால் மகிழ்ந்த சுதீந்திரர் மறுநாள் வேங்கடநாதனிடம் தன் கனவில் மூலநாதர் அருளிச் செய்த உரையைக் கூறி பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்.

     வேங்கடநாதர் சற்றுத் தயங்கினார். அன்றே சரஸ்வதி தேவி அவரது கனவில் தோன்றி அவர் யார் என்பதை விளக்கியருளினாள். பிரம்ம லோகத்தில் பாகவத சேவையில் ஈடுபட்டிருந்த சங்குகர்ணனே உலக நன்மையைக் கருதி ஒரு சாபத்தினால் கிருதயுகத்தில் பிரகலாதனாகப் பிறந்து பக்தியின் பெருமையை நிலை நாட்டினார். அடுத்து துவாபர யுகத்தில் பாஹலீக மன்னனாகப் பிறந்து விஷ்ணு பக்தனாக இருந்து பக்தியின் பெருமையை உலகறியச் செய்தார். அடுத்து கலியுகத்தில் ஸ்ரீ வியாசராஜராக அவதரித்து கிருஷ்ணதேவராயரின் அரச சபையை அலங்கரித்தார். இப்போது மக்களின் துயரம் நீங்க வேங்கடநாதனாகப் பக்தியின் பெருமையை அவர் நிலை நாட்டப் பிறந்துள்ளார்.

     தான் யார் என்பதை அறிந்த வேங்கடநாதர் தனது பொறுப்பை நிறைவேற்றுவதற்காக சுதீந்திரர் கூறியதற்கு உடனே ஒப்புக் கொண்டார். தன் மகனான லக்ஷ்மிநாராயணனுக்குச் செய்ய வேண்டிய உபநயனத்தை முடித்து விட்டு வருவதாக கூறி தனது கடமையை முடித்தார். மீண்டும் மடத்திற்கு வந்த அவருக்கு தஞ்சாவூரில் 1621ஆம் ஆண்டு பால்குன மாதம் சுக்கில பக்ஷம் துவிதியை திதி அன்று சுதீந்திரர் சந்யாசம் அளித்து ராகவேந்திர தீர்த்தர் என்ற திருநாமத்தையும் சூட்டினார்.

         *     தொடரும்

 tags – மந்த்ராலய மஹான்,  ஸ்ரீ,  ராகவேந்திரர், மந்த்ராலயம் 

LONDON CALLING GNANAMAYAM 16-8-2021 (Post.9985)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9985

Date uploaded in London – 16 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

16 -8– 2021 MONDAY PROGRAMME

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER -7  MTS

PRAYER –  MRS ANNAPURANI PANCHANATHAN

ABHANGAM BY MRS DAYA NARAYANAN, LONDON- 5 MTS

TALK BY BENGALURU S NAGARAJAN ON SAINT SRI RAGHAVENDRA 13 MTS

SUNDARAR THEVARAM BY LONDON DEVOTEES MISS SAMBHAVI UTHAYA KUMAR AND MISS MATHANGI UTHAYAKUMAR

SUNDARAR THEVARM BY CHENNAI DEVOTEES MISS M.SAHANA, MISS G.HARINI AND MISS B.SOWMITHRI

DR N KANNAN’S TALK from Chennai– ALWAR AMUTHAM -7

MANGALAM – 2 MTS

TOTAL TIME- APPR. 50 MINUTES

XXXX

INTRODUCTION TO GNANAMAYAM BROADCASTING

WE ARE IN OUR SECOND YEAR OF BROADCASTING.

WE LAUNCHED GNANAMAYAM BROADCASTS FROM LONDON IN AUGUST 2020 ON SUNDAYS AND MONDAYS .

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM LONDON TIME ; BST;

 6-30 PM INDIAN TIME.

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

XXXX

MONDAYS BROADCAST UNDER GNANAMAYAM AND GNANA SUDAR

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH DAYS.

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

NOW BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES (tamilandvedas.com) TO HIS CREDIT AND AUTHOR OF FOUR BOOKS.

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

TAGS – broadcast1682021

LONDON CALLING THAMIL MUZAKKAM 15-8-2021(Post No.9984)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9984

Date uploaded in London – 16 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

15-8-2021 SUNDAY PROGRAMME as broadcast

TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST from London

OPENING ANNOUNCEMENT & PRAYER – 7 MTS

Prayer – BENGALURU MRS BHUVANESWARY RAJESWARAN, MUSIC TEACHER SIVAPURAM GLOBAL ACADEMY.

MRS BRAHANNAYAKI SATHYANARAYANAN ON VAISHNAVI DEVI TEMPLE IN JAMMU KASHMIR8 MTS

Thiruppugaz Amirtham – by MRS JAYANTHI SUNDAR  AND GROUP–  10 mts

LANGLEY THIRUPPUGAZ GROUP: MASTER AKASH, MISS VIDULA, MRS HARINI NATARAJAN, MRS PADMA RAMESH

***

SONG BY MISS LAYASHREE KALYANASUNDARAM, LONDON

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MRS BRAHANNAYAKI SATHYANARAYANAN

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL BY RANI SRINIVASAN

–20 MINUTES

***

TALK BY  SRI THIRUKOODAL MUKUNTHA RAJAN ON ALVARKAL  SARITHTHIRAM -15 MTS

DURATION-  Appr. 60 minutes 

XXXX

INTRODUCTION TO GNANAMAYAM BROADCASTING

WE ARE IN OUR SECOND YEAR OF BROADCASTING.

WE LAUNCHED GNANAMAYAM BROADCASTS FROM LONDON IN AUGUST 2020 ON SUNDAYS AND MONDAYS .

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM LONDON TIME ; BST;

 6-30 PM INDIAN TIME.

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

XXXX

MONDAYS BROADCAST UNDER GNANAMAYAM AND GNANA SUDAR

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH DAYS.

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

NOW BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES (tamilandvedas.com) TO HIS CREDIT AND AUTHOR OF FOUR BOOKS.

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

tags- broadcast1582021

May 2020 London Swaminathan Articles, Index-90 (Post No.9983)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9983

Date uploaded in London – 16 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS? 

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or from swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 9900 PLUS POSTS.

May2020 Index 90

Don’t Guess Everything! You may be Wrong,7907;May 1,2020

Hindus invented Coins: It is in Rigveda and Panini-1;7914;2/5

Panini’s Amazing information on Coins,7919;3/5

Proof for Panini’s knowledge of Tamil Nadu 2700 years ago,

7923;4/5

Agastya’s Travel to Karaitivu in Sri Lanka from Kasi, 7927;5/5

Tamil information from Valmiki Ramayana,7931;6/5

Panini s Time: When did he live? 7934;7/5

Swami s crossword 852020;7941

Who will be born as a rat or a dog or an Ass? Manu s list,7942;8/5

King and the Saint,7947;9/5

Brahmin, who acted as a Ghostbuster 7952;0/5

Swami’s Crossword 1052020;7953

Hindu Music in Panini s Grammar Book,7959;11/5

Swami’s crossword 1252020;7964

Strange Hindu Haircut Punishments,7969;13/5

Tamil Dog is the first one in the world to get a Statue,7976;14/5

How did Churchill escape Death in the World War II, 7982;15/5

Swami’s crossword 1652020;7988

Secret of Vedas:Aurobindo,7993;17/5

Aurobindo s Quotations on the Vedas and the Upanishads,8000;18/5

Musical Saint Aanaya Nayanar,8005;19/5

Swami s crossword 2052020;8012

Panini knew Greek and Hebrew?,801920/5

Tamil- Sanskrit Relationship- Part 1 by PSS Shastri, 8017;21/5

Tamil- Sanskrit………..part 2;8023;22/5

Bishop Caldwell is wrong

Yavanas in 3500 BCE in India, Yavana Munda in Panini, 8027;23/5

Tamil Sanskrit………….3;23/5

Tamil Sanskrit………….4;8035;24/5

Tamil Sanskrit…………5;8041; 25/5

More blunders of Bishop Caldwell, 25/5

Rig Vedic Sanskrit words in Sangam Tamil literature ,part 6; 8047;26/5

Bomb shell thrown at two key Tamil words, Tamil Sanskrit words 6,8048;26/5

Rig Vedic Sanskrit words…8054;27/5

Tamil Sanskrit….7; post 8055;27/5

Tamil Sanskrit…….8;28/5

Rig Sanskrit Vedic words 3; 8063;28/5

Love is the magnet from which god cannot escape,8066;29/5

One soldier acted as severally others, and won the battle,30/5

Rig Vedic words,,,,,,,,,8079:31 May 2020

xxx

TAMIL ARTICLES PUBLISHED IN MAY 2020

நட்சத்திரங்களில் எது முதல் நட்சத்திரம்?7908,மே 1, 2020

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி- த .கு.போ.152020,7910

பாணினி புஸ்தகத்தில் நாணய மர்மம், 7913,2/5

நிஷ்கா தங்கள் காசுகள் முதல் அலெக்ஸாண்டர்

நாணயம் வரை ,7918, 3/5

பாணினிக்கு 2700 ஆண்டுக்கு முன்னரே தமிழ்நாடு

தெரியும், 7922, 4/5

காசி முதல் காரைத் தீவு வரை  அகஸ்தியர் பயணம் – மிகப்

பழைய நூல் தகவல், 7926, ,5/5

வால்மீகி ராமாயணத்தில் தமிழர்கள் ; 3000 ஆண்டு தமிழ்

வரலாறு, 7930, 6/5

எந்த நூல், என்ன காலம்? அறிஞர்கள் கருத்து ,7935, 7/5

த .கு.போ.752020,7937

ப்ரோமின் மூலகம் பற்றிய சுவையான செய்திகள், 7940, 8/5

த .கு.போ.952020, 7946

த .கு.போ.1152020, 7958

பாம்பு, பல்லி , பன்றி , நாய், கழுதையாக யார் பிறப்பர்?

மநு நூல் தரும் பட்டியல் 7945, 9/5, மநு 51

இரண்டு துரும்பு பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள்,7950,10/5

இரண்டு எறும்பு பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள்,7956,11/5

கரும்பு பற்றிய  இரண்டு பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள்,7962,12/5

ஆசை  பற்றிய  இரண்டு பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள்,7967,13/5

சங்க இலக்கியத்தில் சம்ஸ்க்ருத வாத்யங்கள் , 7970, 13/5

சிந்து சமவெளியில் சிரைத்த மீசை , 7974, 14/5

யானை  பற்றிய  இரண்டு பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள்,7975,14/5

பானை  பற்றிய  இரண்டு பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள்,7980,15/5

பொய்கை ஆழ்வாரின் அற்புதச் சொல்வீச்சு, 7979,15/5

த .கு.போ.1652020, 7987

தமிழில் ரிக்வேதக் கவிதைகள் -1, 7991,17/5

அரிசி பற்றிய  இரண்டு பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள்,7994,17/5

பானை  பற்றிய  இரண்டு பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள்,7980,15/5

அதர்வ வேத அகநானூறு அபூர்வ ஒற்றுமை , 7997, 18/5

பாம்பு பற்றிய 3 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள்,7999,18/5

தமிழில் ரிக்வேதக் கவிதைகள் -2,8003, 19/5

பாணினி- பதஞ்சலி சொல்லும் மின்னல் ரஹசியம்,

கொத்தமல்லி அதிசயம், 8008, 20/5

மீன்  பற்றிய 3 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள்,8011,20/5

தேன்  பற்றிய 3 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள்,8018,21/5

தொல்காப்பியம் பற்றி பலர் கருத்துக்கள், 8015,21/5

யவன முண்டா : பாணினி தகவல் ,8021, 22/5

கத்தரிக்காய்  பற்றிய 3 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள்,8024,22/5

பூசணிக்காய்   பற்றிய 3 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள்,8029,23/5

வாழைப்பழம்  :3 பழமொழிகள் கண்டுபிடியுங்கள்,8036,24/5

பலாப்பழம் : 3 பழமொழிகள் கண்டுபிடியுங்கள்,8042,25/5

மாம்பழம், மாங்காய்  : 3  பழமொழிகள் கண்டுபிடியுங்கள்,8049, 26/5

இரத்தம் உறிஞ்சும் அட்டை வைத்தியம் , 8033, 24/5

நாய்கள்  : 4 பழமொழிகள்  கண்டுபிடியுங்கள்,8056, 27/5

குறுந்தொகைப் பாடலில் ஒரு கதை, ஒரு புதிர், 8045, 26/5

குட்டிக்கதை கழுதைப் பிரம்மச்சாரி, 8052, 27/5

மயில்: 4 பழமொழிகள்  கண்டுபிடியுங்கள்,8061, 28/5

பனைமரம்   : 4 பழமொழிகள்  கண்டுபிடியுங்கள்,8068, 29/5

தென்னை மரம் பற்றிய  3 பழமொழிகள்  கண்டுபிடியுங்கள்,8073, 30/5

கிளியாகப் பிறந்த புத்தர் சொன்ன நீதி, 8059, 28/5

வளமான வாழ்வு பற்றி 30 பழமொழிகள் ,8071, 30/5

ஒரு கதை- பழமும் தின்று கொட்டையும் போட்டது யார் ?8077, 8077, மே 31, 2020

வேப்ப  மரம் பற்றிய  4 பழமொழிகள்  கண்டுபிடியுங்கள்,8080, 31/5/2020

—subham—

tags – Swaminathan, Index 90, May 2020, articles,