20-6-2021 SUNDAY PROGRAMME
TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST from London
OPENING ANNOUNCEMENT & PRAYER - 5 MTS
Prayer –
MRS BRHANNAYAKI SATHYANARAYANAN ON THIRU NAGESWARAM TEMPLE,8 MTS
Thiruppugaz Amirtham – by MRS JAYANTHI SUNDAR - 10 mts
WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MRS SUJATHA RENGANATHAN
WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL BY RANI SRINIVASAN
--25 MINUTES
SEMINAR FOR WRITERS in English
Conducted by Dr V S Mani of Amersham and Mrs Uma Prasad of Dubai
20 minutes
appr. 70 minutes
XXXX
INTRODUCTION TO GNANAMAYAM BROADCASTING
WE LAUNCHED A HINDU BROADCAST FROM LONDON IN AUGUST 2020 ON MONDAYS .
LATER WE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.
BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.
WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.
IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.
TIME OF BROADCAST- TWO PM LONDON TIME;
6-30 PM INDIAN TIME;
DAYS- MONDAYS AND SUNDAYS
SUNDAYS FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)
WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.
MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)
ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH SUNDAY AND MONDAY
XXX
WHO IS THE PRODUCER?
LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.
FORMER BBC BROADCASTER,
SENIOR SUB EDITOR, DINAMANI,
FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL
PLUS
FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;
MANAGER, LONDON TAMIL SANGAM,
HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;
HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &
CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)
NOW BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES (tamilandvedas.com) TO HIS CREDIT AND AUTHOR OF FOUR BOOKS.
***
SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM
IS ANOTHER PRODUCER
AND MRS SUJATHA RENGANATHAN IS OUR CO-PRODUCER.
WHERE IS IT?
ON ZOOM AND
FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME
SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL
IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION AND TAMIL CULTURE ON THESE DAYS
XXXX SUBHAM XXXX
TAGS- PUBLICITY 20-6-21
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
அலுமினியம் முதல் குளோரின் வரை இதுவரை 33 மூலகங்கள்/தனிமங்கள் (elements) பற்றி சுவையான கதைகளைக் கண்டோம். இன்று இரும்பின் (Iron) கதையைக் காண்போம்.
நம் அனைவருக்கும் உடம்பில் இரும்புச் சத்து அவசியம்; குறிப்பாக மேலை நாடுகளில் கர்ப்பிணிகளுக்கு இரும்புச் சத்து மாத்திரை இலவசமாகக் கொடுக்கின்றனர். முதலில் இரும்பு (Iron) பற்றி ஒரு சுவையான விஷயத்தைக் காண்போம்.
இந்த பூமியில் 70 சதவிகிதம் பகுதி கடல் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அந்தக் கடல் ஒரு ‘காலி டப்பா’ (empty) என்பது பலருக்கும் தெரிந்திராது. கடல் முழுதும் மீன்களும் திமிங்கிலங்களும் கடல் பாசியும் நிறைந்திருப்பதாக நாம் நினைக்கிறோம். ஆனால் 80 சதவிகித கடல் பகுதி உயிரினம் வாழாத இருண்ட பகுதியாகும். சூரிய ஒளி, சில மீட்டர் ஆழத்துக்கே பாயும். அதற்கப்பாலுள்ள இருண்ட பகுதி கிட்டத்தட்ட மீன்களோ கடல் தாவரங்களோ இல்லாத பகுதியே!
விஞ்ஞானிகளுக்கு திடீரென்று ஒரு யோஜனை பிறந்தது. இந்த 80 சதவீதப் பகுதியில் மீன்களை வளர்த்தால் உலகில் உணவுப் பிரச்சினையைத் தீர்க்கலாமே என்று.
முதலில், கடலின் மேல்பகுதி நீர் மட்டத்தை ஆராய்ந்தார்கள். அங்கு இரும்புச் சத்து குறைவான இடங்களில் மீன்கள் இல்லாததைக் கண்டு வியந்தார்கள். அந்த இடங்களில் பிளாக்ட்டான் (Planktons) என்னும் நுண்ணுயிர்கள் வசிக்கவில்லை. இதற்கு இரும்புச் சத்து இல்லாததே காரணம் என்று தெரிந்தது. நம் கண்ணுக்குத் தெரியாத பிளான்க்ட்டான்(Plaktons) களை சாப்பிட்டுத்தான் சின்ன மீன் முதல் பெரிய திமிங்கிலம் வரை வளருகின்றன. உடனே கலிபோர்னியாவில் (அமெரிக்கா ) உள்ள மாஸ் லாண்டிங் மரைன் சோதனைச்சாலையைச்(Moss Landing Marine Laboratories) சேர்ந்த ஜான் மார்ட்டின் ஒரு யோசனையை முன் வைத்தார். கடலிலும் உரம் தூவுவோம். என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்றார் .
பசிபிக் பெருங்கடலில் காலபாகஸ் (Galapagos Islands) என்ற புகழ் பெற்ற தீவு உள்ளது. அங்குதான் ராட்சஸ ஆமைகள் வசிக்கின்றன. அந்தத் தீவுக்கு மேற்கே 60 சதுர கிலோமீட்டர் பரப்பில் உரம் போட்டார்கள். அதாவது இரும்பு சல்பேட் கரைசலை (Ferrous sulfate) பரப்பினார்கள். இது 1980-ம் ஆண்டுகளில் நடந்தது. ஒரே வாரத்தில் அற்புதம் நிகழ்ந்தது. கடல் முழுதும் பிளாங்க்ட்டான் உயிர் இனங்களுடன் பச்சைப் பசேல் என்று காட்சி தந்தது. . அதன் மூலம் மீன்கள் பெருகிற்று. உயிர் வாழும் பிராணிகளுக்கு இரும்பு எவ்வளவு அவசியம் என்பதை இது காட்டியது. இரும்பு சல்பேட்- Fபெர்ரஸ் சல்பேட் – தயாரிப்பது மலிவான, சுலபமான பணி . துருப்பிடித்த இரும்பில் கந்தக அமிலத்தை ஊற்றினால் ‘பெர்ரஸ் சல்பேட்’ கிடைத்துவிடும்.
கட்டிடம் கட்ட அடிப்படை செங்கல்; கடல் உயிரினங்களின் அடிப்படை உணவு பிளாங்க்ட்டான்.
***
ஒவ்வொரு மனிதனுக்கும் நாள் ஒன்றுக்கு 7 மில்லிகிராம் இரும்புச் சத்து தேவை. பெண்களுக்கு 11 மில்லிகிராம் தேவை. நாம் சாப்பிடும் சாதாரண உணவில் இரும்புச் சத்து இருப்பதால் அதிகம் கவலைப்படத் தேவை இல்லை. கீழ்கண்ட உணவுகளில் இரும்புச் சத்து அதிகம் உளது:–
முட்டை, மாட்டு மாமிசம், பிராணிகளின் ஈரல் (லிவர்).
காய்கறி உணவு மட்டும் சாப்பிடுவோருக்கு ரொட்டி, கருவேப்பிலை, சுல்தானா பழம் , காலையில் சாப்பிடும் (Breakfast Cereals) தானிய உணவு, பேக்ட் பீன்ஸ்(Baked Beans) , பீநட் பட்டர் (Peanut Butter) , சோயா பீன்ஸ், பட்டாணி, பீட்ருட், பருப்பு வகைகள்
மேலை நாட்டுக்காரர்களின் உணவில் இரும்புச் சத்து அதிகமாக இருக்கிறது அவர்கள் மாமிசம் சாப்பிடாத நாள் எதுவுவும் இல்லை. உலகில் 50 கோடி மக்களுக்கு இரும்புச் சத்து உணவு கிடைப்பதில்லை .
ரத்த பரிசோதனையில் இரும்புச் சத்து குறைவாக இருப்பது தெரிந்தால் டாக்டர்களே இரும்பு மாத்திரை (Iron Tablets) எழுதிக் கொடுப்பார்கள். இதைச் சாப்பிடுகையில் மலத்தின் நிறம் கருப்பாக இருக்கும்; பயப்பட வேண்டியது இல்லை. ஆனால் இரும்பு மாத்திரைகள் மலச்சிக்கலை உண்டாக்குவதால் அதை ஈடு கட்ட நிறைய தண்ணீர் அருந்தல், பழங்கள் சாப்பிடுதல் தேவைப்படும்.
இரும்பின் கதையைத் தொடர்ந்து காண்போம்.
இரும்புச் சத்து குறைந்தால் ரத்த சோகை (anaemic condition) என்பர். அதிகம் உடலில் போனாலும் ஆபத்து. குறிப்பாக இரும்புத் தூசி பறக்கும் ஆலைகளில் பணிபுரிவோருக்கு வெல்டர்ஸ் லங் (Welders Lung) என்னும் நுரையீரல் நோய் வரும்.
நம் உடலில் உள்ள ரத்தத்துக்கு சிவப்பு நிறம் அளிக்கும் பொருள் ஹீமோக்ளோபின் (Haemoglobin) . அதற்கு இரும்புச் சத்து மிகவும் தேவை.
ஆங்கிலத்தில் இரும்பை ‘அயன்’ (IRON) என்போம். லத்தீன் மொழியில் பெர்ரம் (FERRUM) என்பர். இதைத்தான் ரசாயன பொருட்களின் பெயர்களில் பயன்படுத்துவர்.
கர்ப்பிணிகளின் வயிற்றில் வளரும் கருவுக்கு 700 மில்லிகிராம் இரும்புச் சத்து தேவைப்படுவதால் அவர்களுக்கு இரும்பு மாத்திரைகள் (Iron Tablets) கொடுப்பது வழக்கம்.அதிகமான இரும்புச் சத்து கல்லீரலில் சேமிக்கப்படுகிறது.
அண்மைக்கால ஆராய்ச்சியில் மூளையின் சில பகுதிகளில் அதிகம் இரும்புச் சத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மன வளர்ச்சி குறைந்தோர், மந்த புத்தி உடையோருக்கு இரும்பு இல்லாததும் ஒரு காரணம் என்பது அப்போது தெரிந்தது .
****
உடலுக்குள் நடக்கும் ஒரு போர்/ யுத்தம்
நமது உடலுக்குள் ட்ரான்ஸ்பெரின் (Transferrin) என்ற புரத்தச் சத்து ஒன்று இருக்கிறது. இது இரும்புச்சத்தைக் கட்டிப் பிணைப்பதோடு செல்களுக்கு இடையே பரிமாறவும் உதவிசெய்கிறது . இது இரும்பைப் பயன்படுத்துகிறது. உடலில் ஒரு பாக்டிரியா கிருமி நுழைந்து தாக்கத் தொடங்கினால் , உடனே இந்த ட்ரான்ஸ் பெரின் ரத்தத்தில் உள்ள இரும்பை எல்லாம் எடுத்து ‘ஒளித்துவைத்து’ விடுகிறது. அதாவது தனக்குள் வைத்துக் கொண்டுவிடும். அப்போது இரும்புச் சத்துக்கிடைக்காத பாக்டீரியா வளர முடியாது. சுருங்கச் சொல்ல வேண்டுமானால் ஒரு ஆன்டிபயாடிக் (Anti biotic) மாத்திரை போல செயல்பட்டு நோய்க்கிருமிகளை ஒழிக்கிறது
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
அயர்லாந்து நாட்டின் புகழ் பெற்ற எழுத்தாளர் ஜார்ஜ் பெர்னாட்ஷா . இவர் ஐம்பதுக்கும் மேலான நாடகங்களை இயற்றியுள்ளார். 1925ம் ஆண்டில் இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றவர். கேலி, கிண்டல், நக்கல், பகடி , நகைச்சுவைகள் நிரம்பியது இவரது படைப்புகள்.
ஷா ஒரு வெஜிட்டேரியன் – மரக்கறி உணவு மட்டுமே சாப்பிடுவார் .
ஷா , அயர்லாந்து நாட்டின் தலைநகரான டப்ளினில்(Dublin) பிறந்தார்.
இவருடைய தந்தை மஹா குடிகாரன் . இதனால் தாய் கோபித்துக்கொண்டு லண்டனுக்குப் போய்விட்டாள். அங்கே சங்கீதம் சொல்லிக்கொடுத்தார் ஷா கற்றதெல்லாம் சமயம் தொடர்பான கல்வி. இது இவரது படைப்புகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இருபது வயதானபோது லண்டனில் அம்மாவுடன் வசிக்கத் தொடங்கினார். அப்போது முதல் சங்கீத, இலக்கிய விமர்சனங்கள் எழுதத் தொடங்கினார்.
நார்வே நாட்டு நாடக ஆசிரியர் இப்சனின் (Ibsen) நாடகங்கள் இவரை மிகவும் கவர்ந்தன. அதன் தாக்கத்தை இவரது நாடகங்களிலும் காணலாம்.
36 வயதான போது முதல் நாடகத்தை எழுதினார். அதைத் தொடர்ந்து எழுதிய நாடகங்களிலும் மற்றவர்களால் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரைக் கதாபாத்திரமாகக் கொண்டார்.
இவர் ஒரு சோஷலிஸ வாதி. பேபியன் சொசைட்டி (Fabian Society) என்பதை நிறுவினார். இதன் மூலம் மனித குலத்தில் சமத்துவத்தை நிலைநாட்ட முடியும் என்று நம்பினார்.
ஷாவின் நாடகங்களில் மிகவும் புகழ் பெற்றவை பிக்மாலியன் , செயின்ட் ஜோன் .
பிக்மாலியன் நாடகத்தின் மூலம் பிரிட்டிஷ் சமூகத்திலுள்ள வர்க்கக் குறைபாடுகளை சுட்டிக்காட்டுகிறார். செயின்ட் ஜோன் மூலம் கிறிஸ்தவ மதக் குறைபாடுகளை எடுத்துக் காட்டினார். இவரது நாடகங்கள் திரைப்படங்களாக மிளிர்ந்தன . பிக்மாலியன் , My Fair Lady மை பேர் லேடி திரைப்படமாக வந்து இவருக்குப் புகழ் சேர்த்தது.
பெர்னார்ட் ஷாவின் முக்கியப்படைப்புகள்-
1891- THE QUINTESSENCE OF IBSENISM
1892- WIDOWER’S HOUSES
1894- ARMS AND THE MAN
1902- MRS WARREN’S PROFESSION
1903- MAN AND SUPERMAN
912 – PYGMALION
1913 – ANDROCLES AND THE LION
1919- HEARBREAK HOUSE
1921- BACK TO METHUSELAH
1923- ST. JOAN
ஷா எழுத்தாளர் மட்டுமல்ல. நல்ல பேச்சாளரும் கூட. சிந்தைனையைத் தூண்டும் வகையில் பேசுவார்.
10-8-1990-ல் நான் பி.பி.சி. தமிழோசையில் அளித்த பதிலில் (வினவுங்கள் விடைதருவோம் நிகழ்ச்சி) உள்ள சில விஷ்யங்களையும் கூறுகிறேன் :-
ஷா முதலில் வேலைக்குச் சேர்ந்த இடம் ஒரு நில விற்பனை அலுவலக ம் .
28 வயதில் சோஷலிஸ இயக்கத்தில் ஈடுபட்டு அவரைப் போலவே அந்த இயக்கத்தில் ஆர்வம் கொண்ட ஒரு (Charlotte Payne- Townsend) பெண்ணை மணந்தார் ஷா.
‘விடோவர்ஸ் ஹவுஸஸ்’ என்ற நாடகத்தில் நிலச் சுவான்தார்களைத் தாக்குகிறார். புதியதோர் உலகம் செய்வோம்; கெட்ட போரிடும் உலகினை வேருடன் சாய்ப்போம் என்பது அவரது கொள்கை. போர் செய்வது எவ்வளவு மடைமை என்பதை ‘ஆர்ம்ஸ் அண்ட் தி மேன்’ நாடகம் விளக்குகிறது.
முதல் உலகப் போருக்குப் பின்னர் ஷா எழுதிய நாடகங்கள்தான் இவரது படைப்புகளில் முன்னனியில் நிற்கின்றன. ஜோன் ஆப் ஆர்க்கின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் செயின்ட் ஜோன் , ஜூலியஸ் சீஸர் – அழகி கிளியோபாட்ராவின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஸீஸர் அண்ட் க்ளியோபாட்ரா ஆகியன சிறப்பானவை .
நீண்ட காலம் வாழும் மனிதர்களை பற்றிய ‘பேக் டு மெதூசலா’ என்ற நாடகமும் குறிப்பிட்டது தக்கது.
பிரிட்டனில் பதவிக்கு வந்த தொழிற்கட்சி இவருக்கு பிரபு பட்டம் கொடுக்க முன்வந்தது. ஆனால் அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார்
74 வயதில் இந்தியா , சீனா , ஆப்ரிக்க நாடுகள், அமெரிக்கா ஆகியவற்றுக்கு உலகப் பயணம் மேற்கொண்டார்.
93 வயதிலும் எழுதிக்கொண்டே இருந்தார். ஏராளமான செல்வம் சேர்த்தபோதும் தன்னை அசல் கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொண்டார்.மக்களைச் சிரிக்கவைத்த அதே நேரத்த்தில் சிந்திக்கவும் வைத்தார்.
மேலை நாடுகள் மீது என்றோ ஒரு நாள் ரஷியா படை எடுக்கும் என்று மேலை நாடுகள் அஞ்சின. ஆனால் ரஷியாவுக்குள்ள சொந்தப பிரச்சினைகளால் இதை அது எண்ணிக்கூட பார்க்காது என்று ஷா கூறினார். அது இன்று வரை சரியாகவே உளது.
நானும் தமிழ் திரைப்பட நடிகை ராதிகாவும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று லண்டனில் நடித்த பிக்மாலியன் (Pygmalion) பி பி. சி தமிழோசையில் ஒளிபரப்பாகியது
Written by London Swaminathan, 17 June 2021
ஷா பற்றிய முந்தைய கட்டுரைகளில் இந்த விஷயங்களைக் காண்க:—
26 Jul 2015 — Article No.2019. Written லண்டன் சுவாமிநாதன். Swami_48@yahoo.com. Date : 26 July 2014. Time uploaded in London :7-07. 1.இசாடொரா டங்கன் என்ற பெண்மணி, புகழ்பெற்ற …
26 Jul 2015 — Article No.2020. Written லண்டன் சுவாமிநாதன். Swami_48@yahoo.com. Date : 26 July 2014. Time uploaded in London :7-16. ஷா தொடர்பான முதல் ஐந்து சுவையான …
27 Apr 2021 — tamilandvedas.com, swamiindology.blogspot.com. FIRST PART OF THIS TALK WAS … (எனக்கும் பெர்னார்ட் ஷா நாடகங்களுக்கும் தொடர்பு உண்டு. லண்டனில் பி.பி.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
செப்பு மொழி பதினைந்து கட்டுரை எண் 5795 வெளியான தேதி : 17-12-2018
செப்பு மொழி பதினெட்டு கட்டுரை எண் 5860 வெளியான தேதி : 30-12-2018
செப்பு மொழி பதினான்கு!
ச.நாகராஜன்
அறிவாளியின் வாய் அவன் இதயத்தில் இருக்கிறது; ஒரு முட்டாளின் இதயமோ அவன் வாயில் இருக்கிறது.
The mouth of a wise man is in his heart, but
The heart of a fool is in his mouth
*
போர்வீரர்கள் சண்டை இடுகின்றனர். அரசர்கள் ஹீரோ ஆகின்றனர்.
– யூதப் பழமொழி
Soldiers fight and Kings are heroes.
– Jewsish Proverb
*
நேர் கோடு தான் அறநெறிகளிலும் சிறந்தது; ஜியோமிதியிலும் குறுகியது!
– ஐஸக் பாரோ
A straight line is the shortest in morals as well as in geometry.
– Isaac Barrow
*
வெற்றியாளன் ரோஜா மலரைப் பார்க்கிறான்; ஒரு தோல்வியாளனோ முள்ளைப் பார்க்கிறான். – க்ளாரின் போனஸ் அயர்ஸ்
An optimist sees the rose; a pessimist the thorn.
– Clarin Buenos Aires
*
மற்றவரின் இன்பங்களில் பங்கு கொள்ளும் போது அது இரட்டிப்பாகிறது; மற்றவர்களின் துயரங்களில் பங்கு கொள்ளும் போது அது பாதியாகிறது.
ஸ்வீடன் நாட்டுப் பழமொழி
Shared joy is double joy and shared sorrow is half sorrow.
– Swedish Proverb
*
காற்றும், அலையும் எப்போதுமே நன்கு படகைச் செலுத்தும் திறனுள்ள்அ மாலுமியின் பக்கமே சாதகமாக அமைகிறது. – எட்வர்ட் கிப்பன்
The winds and waves are always
On the side of the ablest navigator!
-Edward Gibbon
*
உலகில் பெரிய நன்கொடை என்னவெனில் விஷயங்களின் மதிப்பைச் சரியாக எடை போடும் சக்தியே தான்!
The greatest gift is the power to estimate correctly the value of things!
*
நீ உடன் வந்தால், உன்னுடன்.
நீ கூட வராவிடில், நீ இல்லாமல்,
நீ எதிர்த்தால், உன்னையும் மீறி!
If you come with you,
If you don’t, without you,
If you oppose, in spite of you!
*
மனிதர்கள் நால்வகைப் படுவர்.
எவன் ஒருவனுக்கு ஒன்றுமே தெரியாதோ, தனக்குத் தெரியாது என்பதும் அவனுக்குத் தெரியாதோ, அவன் ஒரு முட்டாள்; அவனை ஒதுக்கி விடு.
எவன் ஒருவனுக்கு ஒன்றுமே தெரியாதோ, தனக்குத் தெரியாது என்பது தெரியுமோ, அவன் எளிமையானவன், அவனுக்குச் சொல்லிக் கொடு.
எவன் ஒருவனுக்கு எல்லாம் தெரியுமோ, தனக்குத் தெரியும் என்பது தெரியாதோ, அவன் தூங்குகிறான். அவனை எழுப்பி விடு.
எவன் ஒருவனுக்கு எல்லாம் தெரியுமோ, தனக்குத் தெரியும் என்பது தெரியுமோ, அவனே அறிஞன், அவனைப் பின்பற்று!
அராபிய அறிஞர் கூற்று
Men are four.
He who knows not, and knows not he knows not, He is a fool – Shun him.
He who knows not and knows he knows not, He is simple – Teach him.
He who knows and knows not he knows, He is asleep – Wake him.
He who knows and knows he knows, He is wise – Follow him.
– Arabic Apothegm
*
தொந்தரவுகள் உன்னைத் தொந்தரவு செய்ய வரும் போது தொந்தரவைத் தடுத்து நிறுத்தும் தொந்தரவுக்கு உள்ளாகாதே. ஆனால், தொந்தரவுகள் உன்னைத் தொந்தரவு செய்ய வழியின்றி, தொந்தரவுகளை தொந்தரவுக்குள்ளாக தொந்தரவுகளை அனுமதித்து விடு, தொந்தரவுகளைக் கண்டு தொந்தரவுக்குள்ளாகாதே. தொந்தரவுகள் தொந்தரவுகளைத் தொந்தரவு செய்யட்டுமே!
ஸ்வாமி சின்மயாநந்தர் ஒரு கூட்டத்தில் கூறியது
When troubles come to trouble you, don’t trouble to stop the troubles, but allow the troubles to trouble the troubles, so that no trouble is free to trouble you. Trouble not at troubles; let the troubles trouble the troubles.
Quoted by Swami Chinamayananda
*
நான் வாழ்கிறேன், எவ்வளவு காலம் என்பது தெரியாமல்,
நான் இறக்கிறேன், எப்போது என்பது தெரியாமல்,
நான் போகிறேன், எங்கு என்பது தெரியாமல்,
(இருப்பினும் கூட) எவ்வளவு உற்சாகமாக இருக்கிறேன் என்பதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது.
பில்ப்ராச்சில் மார்டினஸின் கல்லறை வாசகம் (1498) ரீடர்ஸ் டைஜஸ்ட் ஏப்ரல் 1980 இதழில் வெளியாகியுள்ளது
I live, I don’t know how long,
I die, I don’t know when,
I go, I don’t know where,
I am amazed that I can be so cheerful!
Epitaph of Martinus of Biblrach, 1498 Quoted in Readers Digest April 1980 issue
*
கொடுத்த சத்தியத்தை முறித்தான் இறைவன் என்பது இல்லவே இல்லை!
God has never broken a promise ever spoken!
*
மாய உருத்திரிபு என்றால் என்ன?
எது பருப் பொருள்? – மனதைப் போட்டு அலட்டிக் கொள்ளாதே!
எது மனம் – அது பொருளே இல்லை!
A short cut to Metaphysics.
What is Matter? – Never mind.
What is Mind – No matter
*
எவர்கள் மனதைக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு பொருளே இல்லை!
எவர்கள் பொருளைச் சிந்திக்கிறார்களோ அவர்களுக்கு மனம் ஒரு பொருட்டல்ல!
Those Who Mind Don’t Matter, and Those Who Matter Don’t Mind
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
குடி போதையில் இறந்த கவிஞர் டிலன் தாமஸ்
டிலன் தாமஸ் DYLAN THOMAS ஆங்கில மொழியில் எழுதிய வெல்ஷ் (வேல்ஸ் பிரதேச) கவிஞர். குடி போதையினால் 39 வயதிலேயே இறந்தார் ஆயினு ம் அவர்தம் படைப்புகள் இன்றும் பட்டொளி வீசிப் பறக்கின்றன.
ஐக்கிய சாம்ராஜ்யம் United Kingdom எனப்படும் கிரேட் பிரிட்டனில் இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து , வடக்கு அயர்லாந்து என்ற நான்கு பகுதிகள் உண்டு. வேல்ஸ் என்பது தென் இந்தியாவின் மலையாள பிரதேசம் போன்றது . அங்கிருந்த மக்கள் Welsh வெல்ஷ் மொழி பேசுவார்கள். இப்போது அங்கும் ஆங்கிலமே ஆதிக்கம் செலுத்துகிறது.
வெல்ஷ் புலவர்களில் புகழ்பெற்றவர் என்பதோடு இருபதாம் நூற்றாண்டின் ஆங்கிலப் புலவர்களில் முன்னனியில் நின்றவர் என்ற பெருமையும் உடையவர் டிலன் தாமஸ்.
அவர் நாடகங்களையும், சிறு கதைகளையும் எழுதினார்.
பிறந்த தேதி – 27-10-1914
இறந்த தேதி – 9-11-1953
வாழ்ந்த ஆண்டுகள் – 39
டிலன் தாமஸ், ஸ்வான்ஸீ SWANSEA நகரில் பிறந்தார். இவரது எழுத்துக்களில் வெல்ஷ் பிரதேசத்தின் இயற்கை அழகு காணப்படும். மேலும் ஆங்கிலத்தில் வெல்ஷ் மொழியின் இனிமை எதிரொலிக்கும் இதற்குக் சான்று பகர்வது இவரது Under the Milkwood அண்டர் தி மில்க் வுட் என்ற ரேடியோ நாடகம் ஆகும் . ஒரு சிறிய கடலோர வேல்ஸ் நகரின் தாக்கம் இதில் மிளிரும். எலிசபெத் டெய்லர், ரிச்சர்ட் பர் ட்டன் நடித்த திரைப்படமாக இது 1971ல் வெளியானது .
ஸ்வான்ஸீ கிராமர் ஸ்கூலில் SWANSEA GRAMMAR SCHOOL இவரது தந்தை ஆங்கில மொழி கற்பித்தார். டிலனும் அங்கே படித்தார். பள்ளிக்கூட பத்தி ரிக்கையை நடத்தி அதில் கவிதை எழுதினாலும் படிப்பில் பட்டு மந்தம் .16 வயதில் பள்ளிப் படிப்புக்கு ‘குட்- பை’ சொல்லிவிட்டு ஒரு பத்திரிகையில் ரிப்போர்ட்டர் ஆனார். அதிலும் ஆள் தேறவில்லை. அந்த வேலைக்குப் பின்னர் முழு நேர கவிஞர் ஆனார். இருபது வயதிலேயே முதல் கவிதை நூல் வெளியானது. இந்த நேரத்தில் லண்டனுக்குக் குடிபெயர்ந்தார். இதனால் இவர் புகழ் பரவியது.
1937-ல் கைடலின் மக்நமாரா CAITILIN MACNAMARA
என்ற பெண்ணை மணந்து வேல்சுக்குத் திரும்பினர் . அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. குடி போதையாலும் வறுமையாலும் திருமண வாழ்வு கரடுமுரடாக ஆனது .நண்பர்களிடம் நிறைய கடன் வாங்கினார்; அதைத் திருப்பிக் கொடுத்ததாக சரித்திரமே இல்லை.
இரண்டாவது உலக மஹா யுத்தம் வெடித்தது. ராணுவ சேவையில் சேராமலிருக்க உடல் நலத்தைக் காரணம் காட்டித் தப்பித்தார். ஆயினும் நாடக வசனங்களை எழுதி, ஒலிபரப்பி புகழ் அடைந்தார். பி.பி.சி. வானொலியில் இவரது நாடகம் ஒலிபரப்பாகியது . அமெரிக்காவுக்கு முதல் முறை சென்றபோது மகத்தான வரவேற்பு கிடைத்தது. இவரது கவிதைகளைக் கேட்க பெரிய கூட்டம் திரண்டது. பெண்கள் இவரைச் சுற்றி வட்டமிட்டனர். நாலாவது முறை அமெரிக்கப் பயணம் மேற்கொண்டபோது அதிகக்குடியினால் இறந்தார்.
இவரை மஹா மேதை என்று பலர் புகழ்ந்தாலும் பெரிய மோசடிக்காரன் என்ற பெயரும் ஒட்டிக்கொண்டது. குடிபோதை விடுதிகளில் கோமாளி போல நடந்து கொண்டார். கிறுக்குத் தனமான செயல்களில் ஈடுபட்டு சர்க்கஸ் பஃ ப்பூன் போல நடந்தார். அந்தக் கால வெல்ஷ் ‘பாணர்’ (bards)களைப் போல தன்னையும் எதாவது ஒரு பிரபு ஆதரிக்க வேண்டும் எதிர்பார்த்தார் ; அது நடக்கவில்லை.ஜோக்குகள், கதைகளை சொல்லி காலம் கடத்தினார்.
கொஞ்ச காலத்துக்கு ‘ஜிப்ஸி’ நாடோடி போல ஊர் ஊ ராகத் திரிந்து வாழ்க்கை நடத்தினார்.
உலகப் போருக்குப் பின்னர் 1945 முதல் 1949க்குள் பி. பி. சி . ஒலி பரப்புக்கு 100 வசனங்களை எழுதினார். குடிபோதை காரணமாக அவருக்கு நிரந்தர வேலை கொடுக்க பி பி சி மறுத்தது.
நாலாவது முறை அமெரிக்காவுக்குச் சென்றபொழுது நிறைய விஸ்கி குடித்து நியூ யார்க் நகரில் கோமாவில் சிக்கி, பின்னர், இறந்தார் .
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அந்தணர் பற்றி கம்பர் எச்சரிக்கை
ராம பிரானுக்கு முடி சூட்ட தசரதன் ஏற்பாடு செய்கிறார். ஊர்ப் பெரியோர்கள் மற்றும் மந்திரிசபை, குல குரு ஆகிய மக்களை ஜன நாயக முறையில் கருத்துக் கேட்டு அப்படி முடிவு செய்கிறார். எல்லோரும் Yes, Yes ‘யெஸ் , யெஸ்‘ என்று தலையை அசைத்துவிட்டனர். அப்போது தசரத மா மன்னன் குல குரு வசிஷ்டருக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறான். ராம பிரானைச் சந்தித்துக் கொஞ்சம் அரசியல் விஷயங்களைக் கதைத்து விட்டு வாருங்கள். எது, எது தர்மம் என்று கற்பியுங்கள் , ‘ப்ளீஸ்‘ Please என்கிறான்.
ஒருவரை உயர்த்துவதற்கும் தாழ்த்துவதற்கும் விதி கூட அந்தணப் பெருமக்களின்
கட்டளைக்குக் காத்திருக்கும் என்றால் இப்பிறப்பிலும் மறு பிறப்பிலும் பூலோக
தேவர்களாக விளங்கும் பார்ப்பனர்களை போற்றுவது சிறப்புடையது ஆகும் .
இதனைவிட மேலான பொருள் வேறு எதுவும் இல்லை “.
(இங்கு அந்தணர் என்பதற்கு ஒழுக்கம் உடைய அறிஞர்கள் என்பது பொருள். ‘வெளுத்தது எல்லாம் பால் அல்ல’. ‘மின்னுவதெல்லாம் பொன் அல்ல’; பூணுல் போட்ட எல்லோரும் பார்ப்பனர் அல்ல. மனம், மொழி, மெய் என்ற மூன்றிலும் சுத்தம் உடைய- திரி கரண சுத்தி உடைய — பெரியோர் அந்தணர். அந்தக்காலத்தில் அப்படி இருந்தனர் நூற்றுக்கு 99 சதம் பிராமணர்கள்!)
இதில் அந்தணர் என்ற சொல்லே இல்லையே என்று சிலர் நினைக்கலாம்.
அதற்காக முன்னிரு பாடல்களையும் தருகிறேன் .
அந்தணாளர் முனியவும் , ஆங்கவர்
சிந்தையால் அருள் செய்யவும் , தேவரில்
நொந்துளாரையும் , நொய்து உயர்ந்தா ரையும் ,
மைந்த! எண்ண வரம்பும் உண்டு ஆங்கொலோ
பொருள்
டேய் சின்னப்பையா (ராமா ) கேள் !
ஐயர்கள் நினைத்த மாத்திரத்தில் சிலர் பதவி இழந்து அதல பாதாளத்தில் விழுந்தனர் ; ஐயர்கள் நினைத்த அளவில் சிலர் ‘பிரமோஷன்’ Promotion பெற்று பெரிய பதவியை அடைந்தார்கள் . இந்த விஷயத்தைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் தேவலோகத்திலேயே கணக்கற்றவர்கள் இருக்கிறார்கள்!
(இந்த இடத்தில் உரைகாரர்கள் மூன்று எடுத்துக்காட்டுகளை இயம்புகின்றனர்: தேவர்களை விட அந்தணர்கள் உயர்ந்தோர் ஆவர். அருளிக்கூறினும் வெகுண்டு கூறினும் அது அப்படியே நடந்து விடும். அவர்கள் ஆற்றல் மிக்க நிறைமொழி (மந்திரம்) மாந்தர்கள். இந்திர பதவியில் இருந்த நகுஷன் அகத்தியன் சாபத்தினால் பூமியில் மலைப் பாம்பாக விழுந்தான். துருவாசருக்கு ஒரு தேவ லோகப் பெண் ஒரு மாலை அளித்தாள் . அதை அந்தப் பக்கம் ஐராவத யானை மேல் பவனி வந்த இந்திரன் மீது துர்வாசர் எறிந்தார். அவன் அதை வாங்கி யானையின் தலை மீது வைத்தான். அது மலரிலுள்ள மது வாசனையால் அதைத் தூக்கி கீழே எறிந்தது ; கோபத்தின் சின்னமான துருவாசர் , இந்திரா! பிடி சாபம்! இந்த மாலை கீழே விழுந்தது போல நீயும் உன் பதவியிலிருந்து விழ க்கடவாய் ! என்றார் . இந்திரன் பதவியும் போச்சு. இன்னொரு எடுத்துக்காட்டு ; பிருகு- விஷ்ணு மோதல் ஆகும். பிருகு முனிவர் மும்மூர்த்திகளையும் சோதிக்க ஓவ் வொருவரையாக இன்டர்வியூ interview செய்யக் கிளம்பினார் . ஒவ்வொருவரும் அவரைக் கவனிக்காததால் ஒவ்வொரு சாபம் பெற்றனர். விஷ்ணு எப்போதும் அறிதுயிலில் இருப்பவர். தன்னைக் கவனிக்காமல் தூங்கிக் கொண்டு இருக்கிறார் என்று நினைத்து அவருக்கு சாபம் இட்டார். நீவிர் பூமியில் அவ்வப்போது மனிதனாக அவதாரம் எடுத்து யான் பெற்ற துன்பம் பெறுக என்று சபித்தார்)
அந்தணர் என்போர் துறவியரா அல்லது பார்ப்பனரா என்ற கேள்வி சிலருக்கு எழும். ‘நான் மறை அந்தணர்’ என்று சங்க இலக்கியமே பல இடங்களில் பேசுவதால் மறை ஓதும் அந்தணர் பார்ப்பனர் என்பதில் சந்தேகமில்லை. ‘நான்மறை அந்தணர்’ என்ற சிலப்பதிகார , மணிமேகலை வரிகளாலும், ‘நான்மறை முதல்வர்’ என்ற புறநானுற்றுச் சொற்களின் உரைகளாலும் வேதம் ஓதும் அந்தணர்களேதான் அவர்கள் என்பதில் ஐயம் வராது
இதோ கடைசி பாடல்
அனையர் ஆதலின் , ஐய! இவ்வெய்ய தீ
வினையின் நீங்கிய மேலவர் தாளிணை
புனையும் சென்னியை ஆய்ப்புகழ்ந்து ஏத்துதி ;
இனிய கூறி நின்று ஏயின செய்தியால்
அந்தணர்கள் சொன்னபடி நடந்தே தீரும் என்பதால் , கொடிய பாபத்தினின்று
நீங்கிய அந்த அந்தணர்களின் திருவடிகளைப்ப போற்றிப் புகழ் ந்து துதிப்பாயாக . மேலும் அவர்கள் ஏவிய பணிகளையும் மனமுவந்து செய்வாயாக.
ஆக அந்தணரைப் பணிவதோடு இல்லாமல் அவர்கள் சொன்னதையும் செய்க என்பது வசிட்டன் வாய் மூலம் கம்பன் தரும் கட்டளை.
இதை சிலப்பதிகாரத்தில் காணலாம். வெற்றிக் களிப்பில் மிதந்த செங்குட்டுவனைத் தட்டி எழுப்புகிறான் மாடல மறையோன் என்னும் பார்ப்பனன். “ஏய் ! போதும் உன் போர்கள். இனி போகும் வழிக்குப் புண்ணியம் சேர். யாக யக்ஞங்களைச் செய் ! என்று சொன்னவுடன் அப்படியே செய்கிறான் சேரன் செங்குட்டுவன். அது மட்டுமின்றி அந்தப் பார்ப்பனனுக்கு எடைக்கு எடை தங்கமும் பரிசாகத் தருகிறான் (காண்க- சிலப்பதிகாரம்)
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நடந்தவை தான் நம்புங்கள் – 17 வெளியான தேதி 6-6-21 கட்டுரை எண: 9693
நடந்தவை தான் நம்புங்கள் – 18
ச.நாகராஜன்
விதவிதமான புத்திசாலிகள்!
புத்திசாலித்தனம் எங்கும் எப்போதும் இருந்தால் தான் பிழைக்க முடியும் என்பது தான் இந்தக் காலத்திற்கான உண்மை! வித விதமான சந்தர்ப்பங்களில் வித விதமான புத்திசாலிகள் விதவிதமாக நடந்து கொண்டு தங்கள் சாதுரியத்தாலும் புத்திசாலித்தனத்தாலும் நிலைமையைச் சமாளித்துள்ளனர். சில புத்திசாலிகளைப் பார்ப்போமா?!!
வக்கீலின் தர்மசங்கடம்
மஹராஷ்டிர கவர்னராக இருந்த சி.சுப்ரமணியம் புகழ் பெற்ற ஒரு கிரிமினல் லாயரும் கூட! அவர் ஒரு கொலை கேஸில் தன் கட்சிக்காரருக்காக பிரமாதமாக வாதிட்டார்.
நீதிபதி தீர்ப்பைக் கூறினார்: “குற்றம் சாட்டப்பட்டவர் குற்றம் இழைக்கவில்லை. நிரபராதி, ஆகவே விடுதலை செய்கிறேன்”.
தீர்ப்பு இப்படி வழங்கப்பட்ட போதும் கூட குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளிக் கூண்டிலிருந்து இறங்கவில்லை. அங்கேயே நின்று கொண்டிருந்தார்.
நீதிபதி வக்கீலைப் பார்த்துக் கேட்டார்: “என்ன, உங்கள் கட்சிக்காரரைத் தான் நிரபராதி என்று சொல்லி விடுவித்து விட்டேனே. இன்னும் அவர் குற்றவாளிக் கூண்டிலிருந்து ஏன் நகர மாட்டேன் என்கிறார்?”
உடனே வக்கீல் கூறினார்: “ யுவர் ஹானர்! அவர் குற்றம் இழைக்கவில்லை என்று உங்களிடம் நான் நிரூபித்து விட்டேன். ஆனால் அவரிடம் நான் இன்னும் அதை நிரூபிக்கவில்லையே!”
நீதிமன்றத்தில் இருந்த அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.
நல்லவேளையாக தீர்ப்பு முன்னதாகவே வழங்கப்பட்டிருந்தது!
– The Hindu பத்திரிகையில் 14-1-1995 இதழில் Kolam Krishna Iyer எழுதியுள்ள சம்பவம்
–
– ****
ஸ்வீடன் மன்னருக்கும் தெரியாத விஷயம்!
ஸ்வீடன் மன்னராக புகழ் பெற்று இருந்தவர் இரண்டாம் ஆஸ்கார் (King Oscar II-
1827-1907). ஒரு நாள் அவர் பள்ளி ஒன்றுக்கு விஜயம் செய்தார். 12 வயது மாணவர்கள் பயிலும் ஒரு வகுப்பறைக்குள் நுழைந்த அவர், மாணவர்களைப் பார்த்து, “ஸ்வீடன் சரித்திரத்திலேயே மாபெரும் மன்னர் யார்?” என்று கேட்டார்.
ஒரு பையன் எழுந்து, “குஸ்டாவஸ் வாஸா” (Gustavas Vasa) என்றான்.
இன்னொரு பையன் எழுந்து, “குஸ்டாவஸ் அடோல்பஸ்” (Gustavas Adolphus) என்றான்.
வாத்தியாருக்கு தர்ம சங்கடமாக இருந்தது. அவர் ஒரு பையன் காதில் மெதுவாக முணு முணுத்தார். அந்தப் பையன் எழுந்து, “இரண்டாம் ஆஸ்கார்”, என்று கூறினான்.
உடனே மன்னர், “அப்படி என்ன அவர் பெரிதாய்ச் செய்து விட்டார்?” என்று கேட்டார்.
பையன், “எனக்கு.. எனக்குத் தெரியாது” என்றான்.
உடனே மன்னர், “அதனால் என்ன, பரவாயில்லை, எனக்கும் தான் தெரியாது” என்றார்.
****
மூன்று கடித உறைகள்!
நாட்டின் மிகப் பெரிய சூப்பர் மார்கெட் நிறுவனம் ஒன்றினால் அவர் பொது மேலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவர் வேலைக்குச் சேர்ந்த போது அங்கிருந்து பதவி விலகிச் சென்ற பொது மேலாளர் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார். “சார், உங்கள் அறிவுரை என்ன சார்?” என்று கேட்டார் புது மேலாளர்.
“இதோ, மூன்று கவர்களைத் (கடித உறைகள்) தருகிறேன். மிக மிக கஷ்டமான சூழ்நிலையில் மட்டும் இந்தக் கவரைத் திறந்து பாருங்கள். ஒரு தீர்வு கிடைக்கும்” என்று கூறி, 1, 2, 3 என்று எண்ணிட்ட மூன்று கவர்களைப் புது மேலாளருக்குக் கொடுத்தார் பழைய மேலாளர்.
சூப்பர் மார்கெட்டில் வேலை சூப்பராகப் போய்க் கொண்டிருந்தது. சில மாதங்கள் கழிந்த பின்னர் சிக்கல் ஆரம்பித்தது. விற்பனை படு மந்தம். மேலே உள்ளவர்கள் மேலாளரைக் குடைய ஆரம்பித்தனர் – என்ன நடக்கிறது என்று?!
மூன்று கவர்களில் முதல் கவரைப் பிரித்தார் மேலாளர், ஏதேனும் வழி பிறக்கும் என்று.
அதில் எழுதி இருந்தது இப்படி: “ எல்லாப் பழியையும் முந்தைய பொது மேலாளர் மேல் போடு”
அவ்வளவு தான், உற்சாகமாக மேலிடத்திற்கு எப்படி முந்தைய மேலாளர் கண்ட கண்ட சரக்கை எல்லாம் வாங்கிக் குவித்து வைத்திருக்கிறார், அதைத் தள்ளுவதற்கு தான் எவ்வளவு கஷ்டப்படவேண்டி இருக்கிறது என்று ஒரு பெரிய புராணத்தையே பாடினார் மேலாளர். மேலிடம் அவர் விளக்கத்தை ஏற்றுக் கொண்டது.
தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று, கடுமையாக உழைத்து விற்பனையை சரி செய்தார் மேலாளர்.
இன்னும் சில மாதங்கள் நன்றாக ஓடின. அடுத்தாற் போல மீண்டும் ஒரு சிக்கல். விற்பனை கீழே இறங்கத் தொடங்கியது. மேலிடத்திலிருந்து கேள்வி வந்து விட்டது – என்ன நடக்கிறது, அங்கே என்று.
வேறு வழி தெரியாத நிலையில் இரண்டாவது கவரைப் பிரித்துப் பார்த்தார் மேலாளர்.
REORGANIZE – அனைத்தையும் மறுபடி சீர்படுத்து – என்று இருந்தது. உடனே உற்சாகமாக மேலிடத்திற்கு விவரத்தைச் சொன்னார் மேலாளர்.
காலத்திற்கேற்றபடி புது உத்தி தேவையாக இருக்கிறது என்று! மேலிடமும் ஒப்புக் கொண்டது. விதவிதமாக சரக்குகளை வாங்கி வாடிக்கையாளர்களைக் கவர்ந்து விற்பனையை உயர்த்தினார் மேலாளர். இன்னும் சில மாதங்கள் சூப்பராக ஓடின.
அடுத்தாற் போல ஒரு பெரிய சரிவு. இந்த முறை மேலிடம் மிகக் கடுமையாக விளக்கத்தைக் கேட்டிருந்தது.
வேறு வழியில்லாமல் மூன்றாவது கவரைப் பிரித்துப் பார்த்தார் மேலாளர்.
அதில் இருந்தது இப்படி : – “உடனே மூன்று கவர்களைத் தயார் செய்!”
***
tags – நடந்தவை தான், நம்புங்கள் – 17 , மூன்று உறைகள்,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
There is an interesting story in Ramayana about two ants. Kamban, the great author , who rendered Valmiki Ramayana in Tamil, hints at it in the Ayodhya Kanda/ canto. Kamban puts the words Erumbin Kathaiyal / ‘the lady of two ants story’ in the mouth of lamenting King Dasaratha. He was the one who gave two boons to Kaikeyi, one of his three queens. Kaikeyi, using the boons sent Rama to forest and got the kingship for her own son Bharat.
In this context Dasaratha was complaining about Kaikeyi to his chief queen Kausalya. The words Erumbin Kathaiyal/ Llady of Ants brings out the background of Kaikeyi. Strangely Hindu epics dont give the birth names of Queens. They are always named after their countries or cities,
Gandhari from Kandahar/ Gandhara of Afghanistan
Kunti from the kingdom of Kunti
Kaikeyi from Kekaya kingdom in Afghanistan /Iran border
Kausalya is from Koshala
Mythili is from the city of Mithila and so on.
Kaikeyi is from the country of Kekaya, where her father Asvapati was ruling. It happened in the life of Asvapati . One day while he was in bed with his beloved queen, he laughed wildly. The queen got annoyed and became suspicious. She asked her husband Asvapati what made him laugh at the dead of night in the bed. She added further that he was mocking at her. Asvapati pacified her and told that he listened to the talk of two ants under his bed and burst into laughter about their conversation.
One in a billion gets the power of knowing the language of animals, Hindus believe. In Tamil Periya Purana, we know that Kazatrarivar and Aanayanar knew the language of the animals. So do the great Hindu emperor Vikramaditya.
When Asvapati explained it to his wife, the queen, she was not ready to believe him and so she insisted that he must disclose the joke that the ants exchanged. Asvapati told her that the seer who taught him the language told him that he should never disclose it to anyone. Violating the code would result in his death. Even after this, she insisted that he gives the secret conversation of two ants under the bed. He asked her for time so that he could consult the saint who gave him the power.
When he consulted him, he told Asvapati to banish the queen and that was what Asvapati did.
On the background of this old anecdote, Dasaratha condemned Kaikeyi with the words Ant Story Lady. What he meant was hereditary was more powerful than environment. Her genetics worked more than the acceptable law. According to law, the eldest , in this case Rama, should become king. Moreover she knew that Rama’s exile will shorten the life of Dasaratha , but she didn’t care like Asvapati’s wife, who was the mother of Kaikeyi.
Here we come across a scientific fact in genetics which is known to our forefathers. Another fact that animal languages are understood by humans. In fact Dirgatamas, the blind poet of the oldest book in the world the Rigveda,reveals that there are four levels of sound and humans understand only the fourth level. It is in R V 1-164. So, scientists in future may find one day what Hindus knew thousands of years before our time.
Xxx Subham xxxx
tags- Kaikeyi, ant lady, story, two ants, Ramayana
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கம்ப ராமாயணத்தின் அயோத்யா கண்டத்தில் ஒரு சுவையான கதை வருகிறது. கோடிப் பேரில் ஒருவருக்கு மட்டும் பிராணிகள் பேசுவதைக் கேட்கும் அபூர்வ சக்தி இருக்கும். இந்து மத நூல்களில் விக்ரமாதித்தன், கழற்றறிவார் , ஆனாய நாயனார் ஆகியோர் இவ்வாறு அபூர்வ சக்தி படைத்தவர்கள் வால்மீகி ராமாயணத்தில் கைகேயியின் தந்தை அசுவபதிக்கும் இந்த சக்தி இருந்ததாக செய்திகள் உள . கம்பரும் நமக்கு போகிற போக்கில் ஒரே வரியில் சுட்டிக்காட்டுகிறார்.
பிரபஞ்சத்தில் 4 விதமான ஒலிகள் உண்டு என்றும் அவற்றில் மனிதன் கேட்கும் ஒலி ஒன்று மட்டும்தான் என்றும் ஒரு அற்புதத் தகவலை உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தின் முதல் மண்டலத்தில் தீர்க்க தமஸ் (RV1-164) என்ற அந்தகக் கவிராயர் நமக்கு அளிக்கிறார். ஆக நாம் கேட்க முடியாத ஒலிகளில் ஒன்று பிராணிகளின் ஒலி – பாஷை என்பது சொல்லாமலேயே விளங்கும்.
இதோ கம்பன் சொல்லும் கதை
வன்மா யாக்கை கேசி வரத்தால் , என்றான் உயிரை
முன் மாய் விப்பத் துனிந்தாளேனும் கூனி மொழியால் ,
தன் மாமகனும் தானும் தரணி பெறுமாறு அன்றி
என்மாமகனைக் கான் ஏகு என்றாள் ; எறும்பின் கதையாள்
நகர் நீங்கு படலம், அயோத்யா காண்டம் , கம்ப ராமாயணம்
பொருள் –எறும்பின் சரித்திரத்தைக் கொண்டவளின் மகளாகிய கைகேயி வஞ்சனையால் ,
கூனியால் தூண்டப்பட்டுத் தன் வரத்தாலே என் உயிரை வாங்கத் துணிந்துள்ளாள். மேலும் தன்னுடைய பெருமை மிக்க மகனும் தானுமாக இவ்வுலகினைப் பெற்றுக்கொள்வதோடு மட்டுமல்லாமல் என்னுடைய உயர்ந்த மூத்த மகனையும் காட்டிற்குச் செல்க என்றாள் என்று கைகேயியின் கொடுமையை கோசாலையிடம் கூறி, தசரதன் வருந்தினான்.
இங்கே ‘எறும்பின் கதையாள்’ என்ற 2 சொற்களின் பின்னால் ஒரு கதை உளது
அது என்ன கதை?
கைகேயியின் தந்தை பெயர் அஸ்வபதி. அவன் கேகய நாட்டின் மன்னன்.அவனுக்கு ஈ , எறும்பு போன்ற உயிர் இனங்கள் பேசும் மொழி தெரியும். இதை அவனுக்கு ஒரு முனிவர் கற்றுக் கொடுத்தார். ஒரு முறை மனைவியுடன் படுக்கையில் படுத்திருந்த போது அஸ்வபதி. திடீரென வெடிச் சிரிப்பு சிரித்தான். மனைவிக்குக் கோபமும் சந்தேகமும் வந்தது. “ஓய் , என்ன என்னைக் கிண்டல் செய்கிறீர்களா? எதற்காக எம்மைப் பார்த்து இளித்தீர் ?” என்று வினவினாள். அஸ்வபதி சொன்னார்:- “அன்பே, ஆருயிரே, உன்னைப் பார்த்துச் சிரிக்கவில்லை. நம் படுக்கையின் கீழே போன இரண்டு எறும்புகள் பேசிக்கொண்டு இருந்ததைக் கேட்டுச் சிரித்தேன்” என்றார்.
ஐயா நீவீர் ‘டூப்’ (பொய்) அடிக்கிறீர். அப்படியானால் எறும்புகள் என்ன பேசின என்பதை எமக்கும் செப்பும். பின்னர் உம் மீதுள்ள ஐயப்பாடு அகலும் என்று புகன்றார் .
அஸ்வபதி சொன்னார்:- அம்மே; சினம் தணிக !ஐயம் அகல! எனக்கு உயிரின மொழி கற்பித்த முனிவர், அவற்றின் பாஷையை எவருக்கும் நீர் புகலக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். அப்படிச் சொன்னால், மரணம் சம்பவிக்கும்; நான் உயிர் வாழ முடியாது என்றான்.
அவளோ அட, நீர் செத்தால் செத்துத் தொலையும் ; எனக்கு எறும்பின் குறும்புப் பேச்சைப் பகரும் என்றாள். மறு நாள் முனிவர் அனுமதி பெற்று உரைக்கிறேன் என்றான். முனிவரோ அத்தகைய கொடியாள் நாட்டில் இருப்பது நல்லதல்ல அவளை நாடு கடத்து என்றார் .
முனிவரின் சொற்படி மனைவியை நாடு கடத்தி விட்டு அஸ்வபதியும் இனிதே அரசாண்டான். அந்தத் தாய்க்குப் பிறந்தவள்தானே கைகேயி! அவள் குணமும் அப்படியே; கணவன் செத்தாலும் ராமன் காட்டுக்குப் போகவே வேண்டும் என்று எண்ணுகிறாள்! என்னும் பொருள் தொனிக்க தசரதன் ஒரு சொல்லைப் போட்டான். அந்தச் சொல்தான் எறும்பின் கதையாள் .
ராமாயணத்தில்தான் எவ்வளவு உண்மைகள்! இதில் மரபணு இயல் என்னும் (Genetics) ஜெனெடிக்ஸ், பிராணிகளின் பாஷை (Language of Animals) முதலிய அரிய விஷயங்களும் வந்து விட்டன.
தாயைப் போல (பெண்) பிள்ளை!!
நூலைப் போல சேலை!!
–சுபம்–
tags- எறும்பின் கதையாள், ராமாயணத்தில், கதை, கைகேயி,எறும்பு