எனக்குப் பிடித்த கவிதைகள் -1 !!! (Post 8951)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8951

Date uploaded in London – – 20 NOVEMBER 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

                             Compiled by Kattukutty

தேவை ஒரு ராவணன்

காத்திருந்து, காத்திருந்து,

ஒரு முடிவுக்கு வந்து விட்டோம்,

வில்லை ஒடித்து எங்களை அடைய

ஒரு ராமனை எதிர் பார்க்கவில்லை,

எங்களை தூக்கிச் செல்ல

ஒரு ராவணனாவது வருவானா

எனக் காத்திருக்கிறோம்!!! – கவிஞர்,சாகா முகைதீன்

xxx

சுதந்திரம்

சுதந்திரம் என்பது இன்னும்

பூமாலையாய் தான் உள்ளது!!!

நாம் தான் குரங்குகளாய்

மாறிவிட்டோம்!!! – …………வன்மி

xxx

கைதியின் புலம்பல்

பெண்ணே என்னை

உன் மனச்சிறையில் தானே

வைக்கச் சொன்னேன்…..

ஆனால்……..நீ

உன் அண்ணனிடம் சொல்லி

என்னை மத்திய சிறையில்

அடைத்து விட்டாயே???? – நா. தேனருள், தேவனாங்குறிச்சி

Xxxx

பட்டம்

படித்துப் பட்டம் பெற்றேன்

ஒன்றே ஒன்று…..

அதன்பின்

படிக்காமல் பெற்ற

பட்டமோ ஏராளம்!!!

தண்டச் சோறு,

தடி மாடு,

தறு தலை……… – உமா பிரியன்,உடுமலை.

xxx

சினிமா

வெள்ளைத் திரையில்

ரத்த அபிஷேகம்,

பிணத்திற்கு அலங்காரம் செய்யும்

குருட்டுக் கதைகள்……..

முக்கலும், முனகலுமே,

சினிமா பாடல்கள்

ஆபாசத் தெறிப்பு இரட்டை

அர்த்தச்சிரிப்பு,

கால் தரையில் படாமல் சண்டையிடும்

கதாநாயகன்!!!,

அவிழ்த்துப் போடவே ஆடையுடுத்தும்

கதாநாயகி !!!

செத்துப்போகவே பிழைப்பு நடத்தும்

வில்லன் !!!

மழையில் நனையவே

கனவுக் காட்சிகள்,

கடைசியாகவே ஓடி வர

காவலர்கள்,

நிழல் சினிமா நிஜமாய்

வலம் வரட்டும்,

இருட்டு சினிமா இனியேனும்

சில மெழுகு வர்த்திகளை

ஏற்றி வைக்கட்டும்!!! – மு. முருகேஷ்,புதுக்கோட்டை

xxxx

நான் யார்???

அப்பா என்னை

உதவாக்கரை என்றார்!

ஆசிரியர் என்னை

மண்டு என்றார்!

அடுத்த வீட்டுக்காரன் என்னை

அயோக்கியன் என்றார்!

எதிரிகள் என்னை

திருடன் என்றனர்!

நண்பர்கள் என்னை

துரோகி என்றனர்!

நாடு என்னை

அரசியல்வாதி என்கிறது!!! – சிபிச்சக்ரவர்த்தி வாசு தேவ நல்லூர்

xxxx

கனவுகள்

களவு கொடுப்பதற்கென்றே கனிகளை

பிரசவிக்கின்றன செடிகள்!!!

களவு கொடுப்பதற்கென்றே மீன்களை

வளர்க்கின்றன குளங்கள்!!!

களவு கொடுப்பதற்கென்றே பட்டு

தயாரிக்கின்றன புழுக்கள்!!!

களவு கொடுப்பதற்கென்றே தேன்

சேகரிக்கின்றன தேனீக்கள்!!!

களவு கொடுப்பதற்கென்றே முத்துக்களை

பொத்தி வைத்திருக்கின்றன சிப்பிகள்!!!

உன்னிடம் களவு கொடுப்பதற்காகவே இதயத்தை

வளர்த்த என்னைப் போல!!! – வீ. விஷ்ணு குமார், கிருஷ்ண கிரி

xxxx

இந்தியர் எங்கே???

எங்கள் தேசீயக் கொடிக்கு

மூன்று நிறங்கள்

இந்துக்கள்,

முஸ்லீம்கள்,

கிறிஸ்தவர்கள். – க.ஜெய சங்கர்

xxxx

நிதர்சனம்

ஆலமரத்து ஜோதிடர்

அடித்துச் சொன்னார்

அதிர்ஷ்டம் உன வீட்டுக்

கதவை தட்டுமென்று……….

அகமகிழ்ந்த என் அறிவிற்கு

அப்போதுதான் உறைத்தது,

என் வீட்டிற்கு கதவே

இல்லை என்று !!! – பி.ராமச்சந்திரன், விருது நகர். 100

xxxx

திருமணம்

1) முழு சுதந்திரம் மூன்று முடிச்சில் அடங்கியது

பெ.கி. முருகானந்தம், பெருமலை.

2) அடிமையாய் வாழ்ந்த பெண்ணுக்கு சுதந்திரம்,

சுதந்திரமாய் வாழ்ந்த ஆணுக்கு அடிமை விலங்கு

மாசு. சவுந்திரராசன், தளவாய் புரம்.

3) நிச்சயிக்கப்பட்ட விபத்து – கோ.சந்தோஷ்குமார், நெய்யார்

4) ஆணின் சுதந்திரத்திற்கு முற்றுப் புள்ளி, பெண்ணுக்கு

பிள்ளையார் சுழி!!! – எஸ் பூங்கதிர், திருவெண்ணைநல்லூர்.

5)பெற்றோரால் நிச்சயிக்கப் பட்ட ஆயுள் தண்டனை!!!

இளைய கண்ணதாசன் விருது நகர்.

xxx

வாக்காளர்கள்

கண்களை விற்று சித்திரம்

வாங்கியவர்கள் இல்லை இவர்கள்,

கடனுக்கு சித்திரம் வாங்கி, கண்களை

ஜப்தி கொடுத்தவர்கள்………..பாலா மணி பாரதி, கீழாம்பூர்

xxxx

முட்டை

கோழி போட்டது, அவித்தேன்,

வாத்தியார் போட்டார், அழித்தேன்…….செ.மலர்விழி, அன்சாரி நகர்.

xxx

நவீன கால கண்ணகி

அதோ வருகிறாள் கண்ணகி, காற்சிலம்போடு,

மதுரையை எரிக்க அல்ல,

மார்வாடிக் கடையில் அடகு வைக்க !!! – என் புனிதா, திருச்சி-20

xxx

சேவல்

தினமும் “கொக்கரக்கோ”என்றேன்,

ஒரு நாள் “குக்கருக்குள்” வெந்தேன் !!! ஏ.ஜெமீல் சாகிபு, நாகூர்

xxx

இலையுதிர் காலம்

தாவரப் பெண்கள் ஆடை மாற்றும் நேரம்- ஏ.மாதேஸ்வரன், நெறிஞ்சி

tags– -பிடித்த , கவிதைகள் , 

                                                                    *****

நித்தம் நீலக்குடி அரனை நினை- அப்பரின் பாடல் (Post No.8950)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8950

Date uploaded in London – – 20 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

தேவார முழக்கம்!

நித்தம் நீலக்குடி அரனை நினை, சிவகதி பெற! அப்பரின் சொந்த அனுபவம்!!

ச.நாகராஜன்

   தேவார மூவர் முதலிகளில் அப்பரின் பாடல்கள் சொற் சுவையும் பொருட்சுவையும் நிறைந்தவை; அத்துடன் அவரது சொந்த அனுபவம் அந்தப் பாடல்களில் சில சமயம் பேசும். சமணர்களுடன் இருந்து நொந்து போனவர் அவர். ஆகவே அவரது அனுபவக் கூற்று இன்னும் சற்று நம்மைக் கவரும்.

   நீ சேர்த்து வைத்த செல்வமும், மனைவியும், மக்களும் நீ செத்த போது கூட வர மாட்டார்கள். பிரிவதே இயல்பாகும். நித்தம் நீலக்குடி அரனை நினை, சித்தம் ஆகின் சிவகதி பெறலாம் என்கிறார் அவர்.

பாடல் இது:

வைத்த மாடும் மனைவியும் மக்கள் நீர்

செத்த போது செறியார் பிரிவதே

நித்தம் நீலக்குடி அரனை நினை

சித்தம் ஆகில் சிவகதி சேர்திரே (ஐந்தாம் திருமுறை – 072 பாடல் எண் 1)

   சோழ நாடு காவிரி தென்கரைத் தலம் திருநீலக்குடி. தென்னலக் குடி என்று இந்த நாளில் வழஙகப் பெறும் இந்தத் தலம் தஞ்சை மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்துள்ள திருத்தலமாகும். இறைவனின் பெயர் நீலக்குடியீசர் இறைவியின் பெயர் அழகம்மை. ஸ்தல விருட்சம் : பஞ்சவில்வம் குளம்: பிரமதீர்த்தம்.

ஆடுதுறைக்குத் தெற்கே 3 கிலோமீட்டர் தூரத்தில் இது உள்ளது.

இந்த தலத்தில் அப்பர் பிரான் தனது சொந்த அனுபவம் ஒன்றைக் கூறுகிறார்.

கல்லினோடு என்னைப் பூட்டி அமண்கையர்

ஒல்லை நீர் புக நூக்க என் வாக்கினால்

நெல்லு நீள் வயல் நீலக்குடி அரன்

நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேன் அன்றே (பாடல் எண் 7)

“சமணர்கள் கல்லினோடு என்னைச் சேர்த்துக் கட்டி, விரைந்து கடல் நீரில் புகுமாறு நூக்கி விட என் வாக்கினால் அரனுடைய நல்ல நாமத்தைச் சொன்னேன். உய்ந்தேன்” என்கிறார் அவர். நெல்பயிர் நிறைந்த நீள் வயல் சூழ் நீலக்குடி ஐயன் அல்லவா என்னை உய்வித்தவன் என்று அவர் தன் சொந்த அனுபவத்தைச் சுட்டிக் காட்டும் அருமையான பாடல் இது.

அவனை உள்ளங்கை நெல்லிக் கனி போல காணலாம் என்பதையும் அவர் சுட்டிக் காட்டுகிறார் இந்தப் பதிகத்தில்!

செய்ய மேனியன் தேனொடு பால் தயிர்

நெய் அது ஆடிய நீலக்குடி அரன்

மையலால் மறவா மனத்தார்க்கு எலாம்

கையில் ஆமலகக் கனி ஒக்குமே

சிவந்த திருமேனியை உடையவன் சிவபிரான். தேன், பால், தயிர் ஆகியன கொண்டு திருமுழுக்காடு ஆடும் அரன் ஆவான். அவன் மீது மையல் மிகக் கொண்டு மறவாமல் அவனை நினைக்கும் மனத்தார்க்கு உள்ளங்கை நெல்லிக் கனி போல அவன் புலப்பட்டு அருள் புரிவான்.

கையில் ஆமலகக் கனி போல – உள்ளங்கை நெல்லிக் கனி போல என்ற நியாயத்தை இங்கு சுட்டிக் காட்டுகிறார் அப்பர் பிரான்.

அழகாக இருப்பவர்கள், இளையவர்கள் என்னும் ஆசையால் ஒழுகி இருந்து உயிரை உடலை விட்டு விடுமுன் நீலக்குடி அரன் தாளை அடைந்து கை தொழுது உய்மின் என்பது அவரது அன்புக் கட்டளை :-

அழகியோம் இளையோம் எனும் ஆசையால்

ஒழுகி ஆவி உடல் விடும் முன்னமே

நிழல் அது ஆர் பொழில் நீலக்குடி அரன்

கழல் கொள் சேவடி கை தொழுது உய்ம்மினே (பாடல் 8)

பொதுவான பாடல்கள் சுவை பயக்கும் என்றாலும், சொந்த அனுபவத்தைக் கூறும் பாடல்களில் அவரது அனுபவம் இழையோடுவதால் அதில் உள்ள உண்மையை கூடக் கொஞ்சம் அனுபவித்து உணரலாம், இல்லையா!

அந்த வகையில் நீலக் குடி பதிகம் நெஞ்சை விட்டு நீங்காத பதிகமாக அமைகிறது!

பத்துப் பாடல்களும் அழகிய பாடல்கள்; படித்து உய்வோமாக!

***

TAMIL WORDS IN ENGLISH – PART 28 (Post No.8949)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8949

Date uploaded in London – –19 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.

Date uploaded in London – –19 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழில் ஆயிரம் ஆங்கிலச் சொற்கள் – Part –28

R words

GENERAL RULES

IN MANY WORDS YOU HAVE TO DROP ‘RE’ AND LOOK AT THE WORDS.

IN THE MIRROR WORDS , YOU HAVE TO READ FROMRIGHT TO LEFT; AS YOU SEE IN A MIRROR

R.1.Red – Rakta in Sanskrit ரத்த நிறம்

R.2.Research- Aarya, , ஆராய்ச்சி (earch)

R.3.Re lative — kilai, uravu, கிளை

R.4.Ragi — varaku, வரகு , (K-lativ)

R.5.Rare Arithu, Aril/ Tolkappiam, Arista Skt,

அரிது, அரில் , அரிஷ்ட (R-are-tu)

R.6.Round, roll — Urul , urunda உருள் , உருண்ட

R.7.Rice , Oryz sativa,– aridi அரிசி  (அ -ரைஸி )

R.8.Rain– Mari, Tara, Vari, varsha  மாரி , தாரை , வர்ஷ (m- rai)

R.9.Rule, royal, regal. —  Raja, Arasan, ராஜன், அரசன் , அரையன்

R.10.River, Rio —  aaru, mirrored ஆறு  (ர் ஆ )

R.11.Rob — Pari,  பறி ( ப் ஆ ர் = பற்  இ )mirrored

R.12.Root —  wrd /old English வ் ர் ட் = வேர்  Ver

R.13.Row — Varisa iவரிசை ( ரி வ் )

R.14.Revenge — Vanji (ரி- வஞ்சி)

R.15.Road — Rastha Ratha vi thi, theru  (ரத்த வீதி ), ரஸ்தா , ரு தெ =ரத; mirror image

R.16.Re — maru மறு  (ரம் )

R.17.Re birth — Maru piraoppu மறு +பிறப்பு

R.18.Refute-   maruppu.மறுப்பு (ம ரெ ஃ ட் )

R.19.Rat — Eli எலி  ( ரெ த் /ல் )

R.20.Rugged —  Karadu கரடு , முரடு (கே +ர +க் ட்டு)

R.21.Rim —  Oram ஓ+ரம்

R.22.Ring –Reengaaram.ரீ ங் +காரம்

R.23.Remedies– arumarunthu அ+ரு மருந்து

R.24.Re vile–   vai, thittu, ilivu, வை , திட்டு, இழிவு செய்

R.25.Resign —  rajinaama ராஜினாமா

R.26.Rod– Adi அடி (தி ரா )

R.27.Range –Ranga ranga ரங்க ரங்க

R.28.Reminder– Minjiya, meetha eapeat மீதம், மிச்சம், மிஞ்சியது  (ரி+மஞ்சி)

R.29.Robert —Ravi, Raivata, ரவி, ரைவத

R.30.Rota,  Rotation — Ratha ரத (தே ர் = ர் த )தேர் சக்கரம் போல உருள்

R.31.Recipe –Ruchi, Rasi (ருசி , ரசி த்து சாப்பிடு ) =ரெ ஸி பி

R.32.Repeat— Tiruppu (t /repeat )திருப்பு  (ர் ரு ப் த் = த்ருப் )

R.33.Rupture— Karaichal  கரைச்சல் (க ர ப் ச ல் k+ruptul; R =L )

R.34.Reef —Paarai, mirrored பாறை  (ற் ப் = ப் ற் ஐ )

R.35.Regurgitate —-Kakku கக்கு  (ரி +கர்க்க )

R.36.Rhythm — Rtam ருதம் = ஒழுங்கு முறை

R.37.Rowdy — Raudra, rudra tandava ரெ ளத்ர , ருத்ர தாண்டவ

R.38.Rule–  rtam ருதம்

R.39.Reggae–   Raaga ராக

R.40.Rohitaksha — Senganaan  சோழ மன்னன்  செங்கணா ண் )

R.41.Rut — Matha,  rutu மதம்  , ருது = பருவத்+து க்கு வந்த யானை

R.42. Rude — Muradu மு+ரட் = முரடு

tags – Tamil words-28

–subham–

சனீஸ்வர பகவானுக்குக் கறுப்புத் துணி ஏன்? !!!- Part 2 (Post No. 8948 )

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 8948

Date uploaded in London – – 19 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

FOR VOICE REGARDING GO TO FACEBOOK.COM/GNANAMAYAM

16-11-2020 திங்கள்கிழமை அன்று லண்டனிலிருந்து இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பப்பட்ட உரை!

XXXX

கோவில்கள் – திரு நள்ளாறு, கொள்ளிக்காடு,திருநெல்வேலி

அருகில் உள்ள ஸ்தலங்களான,குன்னத்தூர் என்ற திரு வேங்கடநாதபுரம் , திருக்குளந்தை

என்ற பெருங்குளம், சென்னையில் உள்ள பொழிச்சலூர்,

மதுரை அருகில் உள்ள குச்சனூர்,

சென்னை மேற்கு மாம்பலத்திலுள்ள சனீஸ்வரன் கோவில்

கன்னி மாதம் என்ற புரட்டாசி மாதம் விஷ்ணுவிற்கு விசேஷமான

மாதம்.அதே மாதத்தில் முதல் சனிக்கிழமையன்று ரோகிணி

நடசத்திரத்தில் பிறந்தவரே சனீஸ்வரன்!!! ஆகையால், புரட்டாசி

மாத த்தில் விரதம் இருந்தவர்களையும், ரோகிணி நட்சத்திரத்தில்

பிறந்தவர்களையும் அவர் ஒன்றும் செய்ய மாட்டார்!!!

ஏழரை நாட்டு சனி

ஏழரை நாட்டு சனி, முதல் இரண்டரை வருடம், மங்கு சனி, இரண்டாவது இரண்டரை வருடம்

பொங்கு சனி, மூன்றாவது இரண்டரை வருடம் இறுதிச்சனி- நடுங்க வைத்துவிடும்

அனைவரையும்!!!

சிறுவயதிலிருந்தே கஷ்டப்பட்டு வளர்ந்ததினால், தண்டிப்பதில்

கடுமையான நீதிபதி!!!

தண்டிப்பதில் அவருக்கு நிகர் அவர் தான்,,அவர் சிவனாக இருந்தாலும்

சரி, சொந்த சகோதரன் யமனாக இருந்தாலும்சரி……விடமாட்டார்!!!

அவர் அள்ளிக் கொடுப்பதில் வள்ளல், பிடிக்காதவர்க்கு கொள்ளி

வைக்கும் சூரர்!!!

உதாரணமாக இவரைப் போலவே ஈஸ்வரப் பட்டம் பெற்றவன்

ராவணேஸ்வரன்!!! நவகிரகங்களையும் படிக்கட்டுகளாக்கி

அதன் மீது  ஏறி சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிந்த அவனை

நாரதர் பார்த்தார், ஒரு வழி செய்தார் அலனுக்கு…..

ராவணா,”முதுகில் மிதித்து சிம்மாசனம் ஏறி என்ன புகழ்???

உனக்கு இருக்கும் பெருமைக்கு அவர்கள் நெஞ்சில் மிதித்தல்லவா

நீ சிம்மாசனம் ஏற வேண்டும்”.???

அத்தனை நவகிரகத்தையும் திருப்பி நெஞ்சில் மிதித்து அவன் ஏறினான்.

சனீஸ்வரபகவானின் பார்வை பட்டு அவன் அழிந்தான், குடும்பமே

அழிந்தது, ஏன், நாடே அழிந்தது!!

அஸ்வ ரகசியத்தை தெரிந்தவன், சிறந்த ஆட்சியாளன்,அழகான

ராஜ குமாரன், சமையல் கலை வல்லுனன், நளன்!!!

காலை சரியாக கழுவ வில்லை என்ற ஒரே காரணத்திற்காக,

நாட்டை விட்டு ஓட்டி, மனைவியைப் பிரிந்து, தனது ஆடையை இழந்து ,

மனைவியின் புடவைத் தலைப்பில் அலைய விட்டு,

கடைசியில் தனது க்ஷேத்திரமான திருநள்ளாறுக்கு வந்து தன்னை வழிபட்ட பின்னரே

அவனுக்கு விடுதலை அளித்தார் சனீஸ்வர பகவான்!!!

கறுப்பு ஆடை

சனீஸ்வர பகவானுக்குப் பிடித்த கறுப்பு ஆடை அணிந்து, அல்லது கரு நீல ஆடை

அணிந்து 45 நாட்கள் விரதம் இருந்து, தரையில்

படுத்து, உயரமான மலையிலேற்றி ஐயப்ப பக்தர்களுக்கு திருப்திகரமாக தரிசனம்

செய்வித்து திருப்பி அனுப்புகிறார்

சனீஸ்வர பகவான் !!!

சிறை வாசம், தீராத நோய், கடும் கடன், அவமானம், ஆயுளுக்கு

அதிபதி இத்தனை அதிகாரமும் கொண்டவர் சனி!!!

நமது உடல் முழுவதும் பரவி இருக்கும் நரம்புக்கு அதிபதி சனி!!.,

சனியில் பலமில்லாததினால் வரும் வியாதியே காக்காய் வலிப்பு!!!

கர்ம வியாதி என்றும், தீராத நோய் என்று ஜோதிடர்களினால் வரணிக்கப் படுகிறது இது ……

சனியின் உலோகமான இரும்பைக் கொடுத்தவுடன் நிற்கிறது……

இவ்வளவு பெருமையும், கடூரமான, கண்டிப்பான, தலைவிதிப்படி

தண்டிப்பதில் தனக்கு நிகரற்ற அனைவரையும் நடுநடுங்க

வைக்கும் சனீஸ்வரரை பணியவைக்கும் தெய்வம் ஆஞ்சனேயர்!!!

சனிக்கிழமை சனிஸ்வரனை எள் விளக்கேற்றி வணங்கி வழிபட்டாலும் சரி ஆஞ்சனேயரை

வடைமாலை அணிவித்து வழிபட்டாலும் சரி , கருணை வைத்து அருள்புரிவார்!!!

அனைவரும் சனீஸ்வரனை வணங்கி அவனருள் பெறுமாறு வேண்டி

விடை பெறுகிறேன் சீனிவாசன்!!! நன்றி , வணக்கம்!!!

XXXX


ஶ்ரீ சனீஸ்வர காயத்ரி

ஓம் சனீஸ்வராய வித்மஹே சாயா புத்ராய தீமஹி

தன்னோ சனிஹ் ப்ரசோயதயாத்

XXXX


ச்லோகம்

நீலாஞ்சன சமாபாசம் ரவிபுத்ரம் யமாக்ரஜம் சாயா 

மார்த்தாண்ட சம்பூதம் தம் நமாமி சனைச்சரம்

TAGS- சனீஸ்வர- 2, கறுப்புத் துணி-2

                                                         —- SUBHAM —-

புதிய அலை உருவாகிறது! மீண்டும் வருக தாய் மதத்திற்கு! (Post.8947)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8947

Date uploaded in London – – 19 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

வரவேற்கத்தக்க ஒரு புதிய அலை உருவாகிறது! வாழ்க ஹிந்து மதம்!! மீண்டும் வருக தாய் மதத்திற்கு!!!

ச.நாகராஜன் 

வரவேற்கத் தக்க ஒரு புதிய அலை உருவாகிறது. இது பேராழி அலையாக  மாறி, கடந்த காலத்தில் கத்தி முனையில்  மதம் மாற்றப்பட்டோரை, தாய் மதத்திற்குத் திரும்பி வரவழைக்கட்டும்.

செய்தியைப் பார்ப்போம்.

கடந்த கால அரசுகள் செய்யத் தவறிய ஒரு துர்பாக்கியமான தவறு, இந்த தேசத்தில் இன்று வாழும் 99 சதவிகித மைனாரிடிகள் ஹிந்துக்களின் வமிசாவளியினரே என்பதை உணரத் தவறியது தான். அவர்களும் இதை நன்கு அறிவர்.  ஆனால் மத வெறியர்களுக்கும், தீவிர பயத்திற்கும் ஆட்பட்டு அவர்கள் தாய் மதம் திரும்ப அஞ்சுகின்றனர். ஆகவே கடந்த ஆயிரம் ஆண்டுகளில் இஸ்லாமிற்கும் கிறிஸ்தவத்திற்கும் மதம் மாற்றப்பட்டு, இன்று மீண்டும் தாய் மதம் திரும்ப விருப்பம் உள்ளவர்களுக்கு மத்திய அரசு ஒரு தகுந்த திட்டத்தைத் தருவதோடு அவர்களுக்கு பாதுகாப்பும் அளிக்க வேண்டும் என்று ஹிந்துப் பெருமக்கள் விரும்புகின்றனர். தர்ம குருக்கள், சங்கராசாரியர்கள், ராமானுஜாசாரியார்கள் உள்ளிட்டோரின் அங்கீகாரம் பெற்று இது நடைபெறுதல் வேண்டும் என்பது ஹிந்துக்களின் விருப்பமாகும்.

ராஜஸ்தானில் ஜெய்பூரிலிருந்து வரும் செய்தி ஒன்று  ராஜஸ்தான், பார்மர் மாவட்டம், மோடிசரா கிராமத்தில் வசிக்கும் 50 இஸ்லாமிய குடும்பங்கள் ஹிந்து தர்மத்திற்கு திரும்பியுள்ளனர் என்று தெரிவிக்கிறது.

ராமஜென்மபூமியில் நடந்த பூமி பூஜாவை ஒட்டி இந்த நிகழ்வு நிகழ்ந்துள்ளது.


“எங்களது முன்னோர்கள் ஹிந்துக்கள். எந்த வித வற்புறுத்தலும் இன்றி நாங்களே ஹிந்து தர்மத்தை ஏற்றுக் கொண்டுள்ளோம், ஏனெனில் இப்போது எங்களுக்கு வரலாறு பற்றிய அறிவு இருக்கிறது.” என்று இப்படி இந்தக் குடும்பங்கள் கூறுகின்றன.

தாய் மதத்திற்குத் திரும்பியுள்ள சுப்பன் ராம் என்பவர் கூறுவதாவது :-“ முகலாயர் ஆட்சி காலத்தில் எங்களது முன்னோர்கள் பயமுறுத்தப்பட்டு இஸ்லாமுக்கு மாற கட்டாயப்படுத்தப்பட்டார்கள். ஆனால் இப்போது இந்த வரலாற்று உண்மைகளை நன்கு கண்டறிந்த நாங்கள் எங்களது பழைய மதத்திற்குத் திரும்ப நிச்சயித்து விட்டோம். இஸ்லாமியர்கள் எங்களிடமிருந்து விலகியே இருக்கட்டும். எங்களது வாழ்க்கை முறை ஹிந்து தர்மத்துடன் இணைந்த ஒன்றாகும்.”

இதன் பின்னர் குடும்பத்தினர் அனைவரும் ஹிந்து தர்மத்திற்கு மீண்டும் வர தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தனர். உடனடியாக 50 குடும்பங்களைச் சேர்ந்த 250 பேர்கள் உரிய சடங்குகளைச் செய்து ஹிந்து தர்மத்தை ஏற்று தாய் மதம் திரும்பினர்.

(சனாதன் பிரபாத், 16-31 ஆகஸ்ட் 2020)

இந்த செய்தியைத் தரும் வாராந்திர சஞ்சிகையான ட்ரூத் தனது விமரிசனத்தில் கற்பனைக்கும் அப்பாற்பட்ட அளவு ஹிந்து கோவில்களின் சொத்தைச் சூறையாடிக் கொள்ளையடித்த ஒரு விஷமத்தனமான சதியைக் சுட்டிக் காட்டுகிறது.

இதோ ஆங்கிலத்தில் செய்தியின் மூலம் அதன் கீழ் ட்ரூத் பத்திரிகையின் ஆக்கபூர்வமான விமரிசனமும்:-

Ulat Puran: An Emerging New Trend

The most unfortunate omission on the part of the previous government is that it had failed to realise, that nearly 99% of minorities in this country are descendants of

Hindus and they also know this; but due to fanaticism and fear, they are afraid of

leaving their present religion and returning to Hinduism. Therefore, Hindus

feel that for Hindus who have been converted to Islam and Christianity in the past 1,000 years, and those who are willing to return to Hindu Dharma, the Central Government should make a plan and provide them protection, of course in due consultation and approval from authorised Dharma Gurus like Srimad Jagadguru Shankaracharyas,Ramanujacharyas etc.

 As per report from Jaipur (Rajasthan)– Fifty Muslim families residing in Motisara village of Barmer District of Rajasthan, have accepted Hindu Dharma, coinciding with the Bhoomipujan of Ram Mandir.

These families said, “Our ancestors were Hindu. We have accepted the Hindu Dharma voluntarily without any pressure because now we have the knowledge of

history.”

Subhanram, who accepted Hindu Dharma said, “In the Mughal period, our

ancestors were threatened and forced to accept Islam, but upon finding out

facts, we decided that we are Hindu and we have to go back to our true Dharma

again. Muslims keep away from us. Our practices are related to the Hindu Dharma.”

After this, the entire family expressed a desire to return to Hindu Dharma.

Subsequently, 250 members of 50 Muslim families accepted Hindu Dharma by

performing religious rituals. (Sanatan Prabhat, 16-31st August, 2020).

1. The typically anti-Hindu ‘Place of Worship (Special Provisions) Act of 1991’, it

seems, was conceived to restrain the suffering Hindus since 1000 years, from regaining back their major places of Divine abode.

A major conspiracy occured against the sacrifice of millions of warriors and millions of innocent Hindu men, women and children, who could not stop the loot of Hindu Devasthanams and temple property in unimaginable proportions. Hindus miserably lost their lives, dignity and honour along with all their land, home and property, in millions and millions during the prolonged period of Islamic invasions that unleashed tyranny, torture, conversion and destruction of invaluable

literature along with centres of cultural heritage, including temples, monasteries andlibraries.

 ஆதாரம், நன்றி : Truth Vol 88 No 15 dated 16-10-2020

tags —  புதிய அலை,  மீண்டும்,  தாய் மதம்

—-subham—-

TEMPLE PROPERTY SHOULD NOT BE USED FOR ANY OTHER PURPOSE- NAGASWAMY EMPHASIZES (Post. 8946)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8946

Date uploaded in London – –18 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Renowned archaeologist and historian Dr R Nagaswamy  emphasized that temple properties shouldnot be used for any other purpose other than the purpose mentioned in the inscriptions. He showed proof from Tamil inscriptions in the temples. Speaking in Gnanamayam channel, he read from several inscriptions and explained the word ‘Udaiyaar’.

The Tamil word ‘Udaiyar’ means holder, owner or belonging to. He took Tiruvotriyur Inscription and elaborated on it. When Manikka vasagar said Tennaattudaiya Sivane Potri he meant the whole of South Country belongs to Lord Siva.

Some inscriptions used the word Udaiyaar two times which meant belonging to temple and belonging to entire town. It goes in grades like taluk level/ vala naadu, mandalam/district level, naadu/whole region. He told the listeners that it is illegal to sell the lands to any other purpose other than that mentioned in the temple inscriptions.

xxxx

My Comments

Those who fight the cause of the temples should approach Dr R N and get relevant points from the inscriptions and Tamil literature. For instance, If my grandfather has written a will that his properties should go to so and so or such and such purpose, the court considers it a legal document. Likewise Tamil inscriptions clearly mentioned the purpose for which the lands and other properties were donated to the temples. It is called Deva Dhaanam. For over a 1000 year period they were considered holy edicts. Now we see lot of temple properties and lands were sold or allocated for secular use, that too at a throw away price. Hindus must create awareness and preserve their temples.

Dr R Nagaswamy speaks in Gnanamayam channel every week.

You can listen to his 15 minute speech at facebook.com/gnanamayam

Please visit facebook.com/gnanamayam and listen to his full speech.

xxx

Other Highlights of 16-11-20 Broadcast

Mrs Sawmya Gokulakrishnan of Colombo, Sri Lanka rendered the prayer song

World Hindu News Round up in English read by Mrs Sujatha Renganathan (see separate report posted yesterday)

World Hindu News Round up in Tamil read by Mrs Vaishnavi Anand (see separate report posted yesterday).

Thiruppugaz by Mrs Jayanthi Sundar, Keerthana, Sundaresan Ramesh and Srimathy Srilatha Sainath.

Dr R Nagaswamy’s Talk

Mr S Srinivasan of Chennai spoke on Saneeswaran and gave an encyclopaedic information on Navagraha Nayakan Sani (See full report given separately).

Mrs Brhannayaki Sathyanarayanan spoke on Mathura Temple (her article is posted separately).

Dr Kannan spoke on Tamil Vaishnavism.

Earlier Vaazka Thamil Mozi by Subrahmanya Bharati was broadcast; music set by Mrs Harini Raghu of London and sung by Needamangalam Mrs Jayashree Umashankar of Chennai.

 C U all every Sunday and Every Monday at the same time—1 pm London Time, 6-30 pm IST.

tags- temple property, Dr Nagaswamy, 161120 broadcast

—subham–

TAMIL WORDS IN ENGLISH- 27 (Post No.8945)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8945

Date uploaded in London – –18 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழில் ஆயிரம் ஆங்கிலச் சொற்கள் – Part –27

WORDS BEGINNING WITH ‘Q’

TAMIL WORDS IN ENGLISH- 27

“Q”- IN ENGLISH IS A VERY CURIOUS BEGINNING LETTER. LIKE LORD VISHNU IT TAKES DIFFERENT AVATARS. IN CHEMISTRY LANGUAGE AN ISOTOPE.

AS A THUMB RULE, BEGINN FROM THE SECOND LETTER AND YOU ARE CLOSER TO THE ORIGINAL.

Q.1.QUERY – KELVI கேள்வி

Q.2.QUARTER- KAAL, CHATURTHA, கால் பகுதி , சதுர்த்த , சதுக்கம் (சிலப்பதிகாரத்தில் காண்க) 1/4

Q.3.QUIT- KWIT/VIDUக் / விடு

Q.4.QUEST-ION- KEL IN TAMIL, PRASNA IN SKT. கேள் / பிரஸ்ன / என்ன பிரச்(ச)னை

Q.5.QUEEN – AYIRAANI/ INDRA’S WIFE-INDRANI; JANI IN SKT. அயிராணி/இந்திராணி / ஜானி

Q.6. QUARREL – KARAICHAL IN TAM. , KAARASAARA IN SKT கரைச்சல், காரசார

Q.7.QUINTUS – AINTHU, ANJU IN TAM., PANCHA IN SKT. க் /வைந்து = ஐந்து= அஞ்சு = பஞ்ச

XXX

Q.8.QURAN/KORAN- ‘SURA’ 114 WHICH IS DERIVED FROM ‘SUTRA. OR SWARA IN SKT. குரான்= 114 சுரா = சூத்ர ; சரணம் போடுதல் (புத்த மதம், ஐயப்ப பக்தர் போல் )

சரண = வேத

ANOTHER DERIVATION IS CHARANAM CHANTING LIKE LORD AYYAPPA BHAKTAS AND BUDDHA DEVOTEES; MUSLIMS ALSO LISTEN TO CHARANAM FIVE TIMES A DAY AND THEN GO TO MOSQUE OR DO IT T THE LOCAION WHEREVER THEY ARE.

IN SHORT- SURA, SUTRA, CHARANA IN SKT.

CHARANA IN SKT IS VEDA AND CHANTING IN ENG.

XXXX

Q.9.QUERN/CHURN- RUBBING STONE GRINDER- ARAI, KATAI (VERB) AMMI IN TAM. ARANI IN SKT; GRAAVAN IN SKT. அரை, கடை, அரணி , அம்மி

XXX

Q.10.QUIPU- MAKING KNOTS IN THREADS FOR CALCULATIONS. IT IS AN INCA AND ANDEAN ABACUS. THEY MAKE MUDICHU/KNOTS IN THREADS OR ROPES.

IN TAMIL WE CALL IT KAIIPPU=QUIPU IN ANDEAN LANGUAGES; READ MY RESEARCH ARTICLE ON QUIPU. காய்ப்பு/முடிச்சு – தென் அமெரிக்க இன்கா நாகரீக  மக்கள் நூல் அல்லது கயிற்றில் பயன்படுத்தும் முடிச்சுக் கணக்கு

XXX

Q.11.QUASH- KASAKKU, VASAKKU

SQUASH IS SQUEEZE AND CRUSH IN ENGLISH

ALL LEAD TO KASAKKU/CRUSH IN TAMIL. கசக்கு/பிழி; கிரஷ் /சர்பத்

CRUSH ALSO MEANS A DRINK LIKE SHERBET IN ASIAN LANGUAGES

Q.12. QUADRATIC- CHATURA/SQUARE; SATHUKKAM IN SILAPPADIKARAM, கால் பகுதி , சதுர்த்த , சதுக்கம் (சிலப்பதிகாரத்தில் காண்க)

Q.13.QUICK- JIV IN SKT. ஜீவ் ,

Q.14.QUI/ QUORUM – WHO IN ENG; KAH IN SKT. கஹ =ஹூ = யார்

WHO BECOMES YAAR IN TAMIL

Q.15. QUALITY – CHAATURYA/ CLEVER சாதுர்ய /புத்திசாலி

Q.16.QUAKEN/GERMAN- CROAK, QUACK SOUND; KUWAA, KUWAA IN TAM.

குவா குவா வாத்து

Q.17.QUOTE- KATH, KATI IN SKT; KATHAITHTHAL IN SRILANKAN TAMIL; KATHAYATI IS USED IN VALMIKI RAMAYANA MEANING ‘HE SAID’ கதை, கதைத்தல் /இலங்கை வழக்கு ; கதயதி =  வால்மீகி ராமாயண வினைச் சொல்

Q.18.QUAL/GERMAN-  AAGONY; KAAL KAAL ENDRU KATHTHU துன்பம்; கால் கால் காள் , என்று வலியில் கத்துகிறான்

Q.19.QUELL- SUBDUE, CONTROLL- KOL IN TAM. கொல்

Q.20. QUETSCHUNG/GERMAN – BRUISE; KAAYAM IN TAM. காயம்

Q.21.QUITTUNG/GERMAN – RECEIPT; SIITTU IN TAM., சிட்டு, சீட்டு , சிட்டை

 tags- tamil words-27, in english -27

–SUBHAM—

சனீஸ்வர பகவானுக்குக் கறுப்புத் துணி ஏன்? !!!- Part 1(Post No.8944)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8944

Date uploaded in London – – 18 NOVEMBER 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

FOR VOICE REGARDING GO TO FACEBOOK.COM/GNANAMAYAM

16-11-2020 திங்கள்கிழமை அன்று லண்டனிலிருந்து இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பப்பட்ட உரை!

       சனீஸ்வர பகவானுக்குக் கறுப்புத் துணி ஏன்? !!!

                      ச.சீனிவாசன்

அன்பர்கள் அனைவருக்கும், சீனிவாசன் அன்பான மாலை வணக்கம்.

ஒரு அன்பரால் கேட்கப்பட்டிருக்கும் கேள்வி-

சனீஸ்வர பகவானுக்கு கறுப்புத் துணி ஏன்???அவரை கண்டு பயப்படுவது ஏன்???

யாராவது நமக்கு பிடிக்காத ஆசாமி வந்தால் நாம் என்ன முணு முணுக்கிறோம்???

வந்துட்டான்யா சனீஸ்வரன், பிடிச்சா விட மாட்டான்யா……என்றே

சொல்கிறோம்.தயவு செய்து என்னை அப்படி நினைக்க வேண்டாம,

லண்டன் திரு சாமி நாதன் எனக்கு கொடுக்கப்பட்ட நேரம்

10 நிமிடத்திற்குள் முடித்து விடுவேன்.

இந்த சனி- கறுப்புத்துணி , விவகாரத்தை ஒரு கதை மூலமாக விளக்குகிறேன்………

பிரும்மாவின் புத்திரன் தட்சன். அவருடைய அருமை புத்திரி அதிதி.

அந்த அதிதியை காஸ்யபர் என்ற முனிவருக்கு மணமுடிக்கிறான் தட்சன்.

அந்த அதிதிக்கும் காஸ்யபருக்கும் பிறந்தவரே சூர்ய பகவான்!!!

அந்த சூர்ய பகவானுக்கு நான்கு மனைவிகள்….

முதல் மனைவி சஞ்சிகை

அவள் மூலமாக, பிறந்த குழந்தைகள்-யமன், யமி என்ற யமுனை, பத்திரை,

சாவர்ணிக மனு, அஸ்வினி தேவர்கள்,சுக்ரீவன்.

இரண்டாவது மனைவி சாயா தேவி என்ற நிழல்

அவள் மூலமாக பிறந்த குழந்தைகள் -கிருத வர்ஷா, நமது கதா நாயகன கிருத சர்மா

என்ற சனீஸ்வரன், தப்தி வைவஸ்வத மனு, காலன்

மூன்றாவது மனைவி – நீளா தேவி இவள் மூலமாக பிறந்த

குழந்தைதான் நமது தலை எழுத்தை படிக்கின்ற சித்திர குப்தன்!!!

நான்காவது மனைவி – குந்தி, இவளுக்கு பிறந்த குழந்தையே கர்ணன்

சூரியனுக்கும்,, சஞ்சிகைக்கும் முதல் மன்று குழந்தைகள் பிறந்வுடன்,

சூடு தாங்காத சஞ்சிகை, தன்னைப்போலவே, ஒரு நிழல் உருவத்தை

சிருஷ்டித்து, தயவு செய்து நீ சில நாட்கள் “ஆக்டிங்”மனைவியாய்

இரு. நான் தவம் செய்து திரும்பி வந்து “சார்ஜ் எடுத்துக்கொள்கிறேன்…….. என்றாள்.

நடிகை சாயா தேவியும் சூரியன் மூலமாக மூன்று குழந்தைகளைப்

பெற்றுக் கொளகிறாள்.என்ன காரணமாகவோ மூத்தாள் சஞ்சிகையின்

குழந்தைகளை கொடுமைப்படுத்தவே,

சூரியனுக்கு இந்த உண்மை தெரிந்து, சாயா தேவியை கண்டித்து சஞ்சிகையைத் தேடி

மீண்டும் சேர்த்துக் கொள்கிறான்.

சாயாவின் மகனுக்கு அதாவது கிருத வர்மாவிற்கு தீட்சண்யமான பார்வை,

அதாவது எதை பார்த்தாலும் அந்தப் பொருள் நாசம்!!!

இதனை உணர்ந்த சாயா தன்மகனை எங்கும் விடுவதில்லை…..

இதையும் மீறி விநாயகரின் பிறந்த நாளைக்கு கைலாயம் வந்து

வினாயகரைப் பார்த்த மாத்திரத்தில் அவர் தலை சிதற, சிவன் பைரவரைக் கொண்டு

வடக்கே தலை வைத்துப் படுத்திருக்கும் ஒரு யானையின் தலையை பொருத்தி விடுகிறார்.

அன்றிலிருந்து விநாயகர், கஜமுகனாகி விட்டார்!!!

கோபம் கொண்ட பார்வதி கைலையில் காலை வைத்த உன் கால் முடமாகட்டும் என

சபித்தாள்.இதற்கு மேலும் யமன் “மாற்றான் தாயின் மகனே” என்று தண்டத்தால் அடித்து

காலை மேலும் உடைக்கிறான் !!!

முடமாகிறான் கிருத வர்மா………

சூரியனின் மற்ற மகன்களும், மகள்களும், பிரசித்தமாக,

தான்மட்டும் இப்படி பயனில்லாமல் இருக்கிறோமே என்ற எண்ணம் கிருத வர்மாவை,

வாட்டி வதைத்தது……..

தாயின் ஆசீர்வாதத்துடன்

காசியில் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து சிவனை நோக்கி கடும் தவம் புரிகிறான் கிருத வர்மா!!!

கடும் தவத்தினால் மகிழ்ந்த சிவன் நேரில் தோன்றி அவன்கடும் தவத்தை மெச்சி, “கிருத வர்மா,

இன்றையிலிருத்து நீ தேவ பதவி பெற்று நவ கிரகங்களில் ஒருவராகி “ஈஸ்வரப்பட்டமும்”

பெற்று ஒவ்வொருவருடைய ஆயுளுக்கும் அதிபதியாக, “சனீஸ்வரன்”

என்ற பெயருடன் விளங்குவாய்”!!!! உன்னுடய பிறந்த நாளான சனிக்கிழமை ஸ்திர வாரமாகட்டும்”

என்று ஆசீர்வதித்தார்.

அன்று முதல் கிருத வர்மாவாக இருந்தவர், சனீஸ்வரனாகி உலகத்தை ஆட்டுவிக்கிறார்.

XXXX

இதோ அவரைப்பற்றிய விவரங்கள்:-

சனீஸ்வரன்

பெயர்கள் – மந்தன்,சாயாபுத்திரன்,சூர்யபுத்திரன்,காரி,அனிலன்,முதுமகன்,

முடவன், ஊனன், பாவணன்,சஞ்சலன்,செனரி,நீலன்,கரியவன்,

மனைவிகள் –

நீளா தேவி

இவளுக்கு பிறந்த குழந்தையே “குளிகன் “

எந்த நல்ல காரியங்களும், குளிகன்”நேரத்தில் செய்ய

வேண்டும் .அந்த காரியங்களைத் திரும்பத் திரும்ப செய்ய நேரிடும்

ஜேஷ்டா தேவி-

இவள் மகன் “தரித்திரன்” இவர் யாரென்று உங்களுக்கு புரிந்திருக்கும்

மந்தா தேவி-

பூமியிலிருந்து சனி இருக்கும் அதிக பட்ச தூரம்- 88,லட்சத்து 66 ஆயிரம்மைல்கள்

குறைந்த பட்ச தூரம் – 74 லட்சத்து 66ஆயிரம்மைல்கள்

சூரியனை ஒருமுறை சுற்றி வர – 30 வருடங்கள்!!!!

நிறம் – கறுப்பு.ஆகையினால்தான் கறுப்பாக இருக்கும் எந்தப்

பொருளையும் அவருக்குப் பிடிக்கிறது.

வாகனம் – காகம் – கறுப்பு

தானியம் – எள் – கறுப்பு

உலோகம் – கறுப்பாயுள்ள இரும்பு

வஸ்திரம் – கரு நீலப் பட்டு அல்லது கறுப்புத் துணி

புஷ்பம் – கருங் குவளை

இஷ்ட காலம் – சாயும்காலம், பிரதோஷ வேளை

குணம் – தாமசம்

உத்யோகம் – அடிமை

அதிதேவதை – யமன்

பிரத்யதி தேவதை- பிரஜாபதி

ஜாதி – சண்டாளர்/ கலப்பு இனம்

திசை – மேற்கு

பூதம் – காற்று

தன்மை – ஆண் அலி

மொழி – நீச பாஷை

உடல் அதிபதி -நரம்புக்கு

அவஸ்தை – விருத்தர் அல்லது வயதானவர்

சுவை – துவர்ப்பு

சமித்து – வன்னி

ரத்தினம் – நீலம்

சுபாபவம் – குரூரம்

குணம் – பாவி

நாடி – வாத நாடி

ஆசனம் – வில்

தேசம் – சௌராஷ்டிரம்

கண்டம்- ஆப்ரிக்கா

கோத்திரம் – காஸ்யபம்

ருது- வஸந்த ருது

காரகன்- ஆயுள் காரகன்

உச்சம் – துலா ராசியில்

நீசம் – மேஷ ராசியில்

சொந்த வீடுகள் – மகரம், கும்பம்

பார்வை – 3, 7, 10.

நண்பர்கள் – புதன், சுக்கிரன்

எதிரிகள் – சூரியன், சந்திரன், செவ்வாய்

சமமானவர் – குரு

ஆதிக்கம் உள்ள நட்சத்திரங்கள்- பூசம், அனுஷம், உத்ரட்டாதி

தைலம் – நல்லெண்ணெய்

ப்ரீதி செய்ய தானம் – காராம் பசு, நல்லெண்ணெய், இரும்பு

ப்ரியமான பலகாரம்- வெல்லம் கலந்த எள் உருண்டை, எள்ளும்,உளுந்தும் கலந்த சாதம்

To be continued…………………………

tags – சனீஸ்வரன், பகவான், கறுப்புத் துணி

மஹரிஷி சண்டகௌசிகர் : ஜராசந்தனின் வரலாறு!̀ (Post. 8943)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8943

Date uploaded in London – – 18 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

மஹரிஷி சண்டகௌசிகர் : ஜராசந்தனின் பிறப்பு வரலாறு!̀

ச.நாகராஜன்

மகத தேசத்தை பிருகத்ருதன் என்ற அரசன் ஆண்டு வந்தான்.

கீர்த்தியும் செல்வமும் பெற்றவனாக இருந்த அவன் காசி ராஜனுடைய இரு குமாரிகளை மணம் செய்தான். ராஜ்ய பரிபாலனத்தை நன்றாகச் செய்து வந்த அவன் தனக்கு வாரிசாக வர ஒரு புத்திரனுக்காக ஏங்கி இருந்தான். ஆனால் அவனுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கவில்லை. ஆகவே மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தான்.

உரியவர்களைக் கலந்தாலோசித்து புத்திரகாமேஷ்டி யாகம் உள்ளிட்ட யாகங்களைச் செய்தான். ஆனால் பலன் ஏற்படவில்லை. துயரம் அதிகமாயிற்று.

ஒரு சமயம் கௌதம ரிஷியின் வம்சத்தில் உதித்த கக்ஷிவத் என்ற ரிஷியின் புத்திரராகிய  மஹரிஷி சண்டகௌசிக ரிஷி தான் செய்து வந்த உக்கிரமான தவத்தைச் சற்று நிறுத்தி விட்டு உலகில் சஞ்சாரம் செய்து வந்தார். ஒரு மரத்தின் நிழலில் வந்து அவர் உட்கார்ந்தார்.

அரசன் இதைக் கேள்விப்பட்டுத் தன் இரு மனைவி சகிதம் அவரை வந்தடைந்து அவர் கால்களில் வீழ்ந்தான்.

அவருக்கு அநேக ஆடை அணிகளைக் கொடுத்து அவரை பூஜித்தான்.

இதனால் சந்தோஷமடைந்த மஹரிஷி, “ஓ! அரசனே! உன் பால் எனக்கு மிகுந்த சந்தோஷம் உண்டாகிறது. உனக்கு வேண்டும் வரங்களைக் கேள்” என்றார்.

அரசன் கண்களில் நீர் ததும்பிற்று. “மஹரிஷியே! என் ராஜ்யத்தைத் துறந்து காட்டுக்குச் செல்லக் கூட சித்தமாக இருக்கிறேன். எனக்கு புத்திரன் இல்லாததால் பாக்கியம் அற்றவனாக இருக்கிறேன். ஆகவே வரத்தினாலும் எனக்கு பிரயோஜனமில்லை; என் ராஜ்யத்தினாலும் எனக்கு பிரயோஜனம் இல்லை” என்றான்.

இதைக் கேட்ட ரிஷி தன் இந்திரியங்களை அடக்கி அந்த மாமரத்தின் அடியில் யோக தியானத்தில் புகுந்தார். அப்போது அவர் மடியில் இனிய மாங்கனி ஒன்று விழுந்தது. முனிவர் அதை எடுத்து மந்திரங்கள் சொல்லி அதை அரசன் கையில் கொடுத்தார்.

“அரசே! நீ ராஜ்யத்திற்குத் திரும்பிப் போகலாம். உனது மனோபீஷ்டம் நிறைவேறும். நீ காட்டுக்குச் செல்ல வேண்டியதில்லை” என்றார்.

இதனால் சந்தோஷம் அடைந்த மன்னன் நேராக தனது ராஜ்யத்திற்குச் சென்றான்.

அந்த மாம்பழத்தைத் தனது இரு ராணிமார்களுக்கும் கொடுத்தான்.

காலப்போக்கில் அவர்கள் கர்ப்பம் தரித்தனர். இரு ராணிகளும் ஒரு தேகத்தின் இரண்டு கண்டங்களைப் பெற்றனர். ஒரு கண், ஒரு கை, ஒரு கால், அரை வயிறு, அரை முகம், அரை பிருஷ்டம் என ஒரே மாதிரியான இரண்டு கண்டங்களைக் கண்டு அவர்கள் நடுநடுங்கினர். இருவரும் ஆலோசித்து அந்த கண்டங்களை இரு தாதிமார்களிடம் கொடுத்து அவற்றை நன்கு மூடச் செய்து நகர்புறத்தில் கொண்டு  நாற்சந்தியில் எறியச் செய்தனர்.

அந்த இரு துண்டங்களையும் ஜரை என்ற ராக்ஷஸி எடுத்து இரண்டையும் ஒன்று சேர்த்தாள்.

அது உயிர் பெற்ற குழந்தையாயிற்று.

அதை அவள் அரசனிடம் சென்று கொடுத்தாள். அரசன் ஜரையால் ஒன்று சேர்க்கப்பட்டு உயிர் பெற்ற குழந்தை ஆதலால் அந்தக் குழந்தைக்கு ஜராசந்தன் என்று பெயர் சூட்டினான்.

இந்த ஜராசந்தன் தான் காலப் போக்கில் மிக்க வலிமை பெற்ற மன்னனாக ஆனான். பல அரசர்களை ஜெயித்தான்.

கிருஷ்ண பகவானுடன் பல முறை யுத்தங்கள் செய்து இறுதியில் பாண்டவர்களுள் ஒருவனான பீமனால் யுத்தத்தில் கொல்லப்பட்டான்.

இந்த வரலாறை மஹாபாரதம் சபா பர்வத்தில் பதினேழாவது அத்தியாயத்தில் விரிவாகப் படிக்கலாம்.

tags– மஹரிஷி, சண்டகௌசிகர்,  ஜராசந்தன் 

***

16-11-2020 உலக இந்து சமய செய்தி மடல் (Post No.8942-b)

COMPILED BY LONDON SWAMINATHAN  (News Editor, Gnanamayam)

Post No. 8942-b

Date uploaded in London – –17 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நவம்பர் 16-ம்  தேதி  —   திங்கட் கிழமை

உலக இந்து   சமய செய்தி மடல்

தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI     ANAND 

அனைவர்க்கும் ஞான மயக்  குழுவினரின்   ஸ்கந்த சஷ்டி   வாழ்த்துக்கள்

நவம்பர் 20-ம் தேதி ஸ்கந்த சஷ்டி   தினம் கொண்டாடப்படுகிறது. 

 எங்கள் நிகழ்ச்சிகளை திங்கட்கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கும் விடைகளும் அளிக்கப்படுகிறது.

உங்கள் பேட்டை, நகரத்தில் நடைபெறும் விழாக்கள், உற்சவங்கள் பற்றி எங்களுக்கு செய்தி அனுப்புங்கள்.

எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும்

XXXX

முதலில் நீங்கள் ஆங்கிலத்தில் கேட்ட செய்திகளை சுருக்கமாகச் செப்பிவிட்டு தமிழ் நாட்டுச் செய்திகளை விரிவாக வழங்குகிறேன்.

ராணுவ வீரர்களுடன் கொண்டாடும் போது தான் எனக்கு தீபாவளி நிறைவடைகிறது: பிரதமர் மோடி உரை

தீபாவளி பண்டிகையையொட்டி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர்கள், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் உள்ளிட்டோர் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் உள்ள லோங்கேவாலாவில் இந்திய ராணுவத்தினருடன் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி உரையாற்றினார்

மக்களுடைய அன்பை உங்களுக்காக நான் கொண்டுவந்துள்ளேன். நாட்டு மக்களின் ஆதரவும் ஆசிர்வாதமும் உங்களுக்கு எப்போதும் உண்டு என கூறினார். ராணுவ வீரர்களுடன் கொண்டாடும் போது தான் எனக்கு தீபாவளி நிறைவடைகிறது என கூறினார். பனிமலையோ, பாலைவனமோ ராணுவத்தினர் எங்கிருக்கிறார்களோ அங்கு தான் எனக்கு தீபாவளி என பேசினார்

பிரதமர் மோடி டிவிட்டரில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், ‘அச்சமின்றி நம் நாட்டைப் பாதுகாத்து வரும் ராணுவ வீரர்களுக்காக தீபாவளியன்று தீபமேற்றுவோம். அவர்களின் தைரியத்தினைப் பாராட்டவும், நன்றி சொல்லவும் வார்த்தைகள் இல்லை. எல்லைகளில் போராடிக் கொண்டிருக்கும் வீரர்களின் குடும்பத்தினருக்கும் நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டு உள்ளோம்,’ என கூறியுள்ளார்.

XXXXX

RAJNIKANT DEEPAVALI

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரஜினிக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன்புகாலையிலேயே ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்.

பண்டிகை நாளான இன்று சந்திக்க வந்த ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைக்க ரஜினி விரும்பவில்லை. அதனால் அவர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். மாஸ்க் MASK அணிந்தபடி, கேட்டிற்கு பின்னால் நின்று ரசிகர்களை பார்த்து கையசைத்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார் ரஜினி. பின்னர் அனைவரையும் நோக்கி கைகளை கூப்பி வணக்கம் தெரிவித்தார். அப்போது ரசிகர்கள் ஆரவாரம் செய்து அவரை வாழ்த்தி கோஷமிட்டனர்.

XXX

அமெரிக்காவில் வசிக்கும் 40 லட்சத்துக்கும் அதிகமான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹிந்துக்கள், சீக்கியர்கள் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். தீபாவளி பண்டிகையின் கலாசாரம் மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் அமெரிக்க பார்லிமென்டின் பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி. ராஜா கிருஷ்ணமூர்த்தி இந்த தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளார்.


தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு நியூயார்க்கில் உள்ள 102 மாடிகள் அடங்கிய EMPIRE STATE  ‘எம்பயர் ஸ்டேட்’ கட்டடம் ஆரஞ்ச் நிற மின் விளக்குகளால் ஜொலித்தது.

XXXX

பிரிட்டிஷ் பிரதமர் பாரிஸ் ஜான்சன், இளவரசர் சார்ல்ஸ் ஆகியோரும் தனித்தனியே தீபாவளி வாழ்த்துச் செய்திகளை வழங்கினார்கள்.

XXXX

இங்கிலாந்தின் சுலவ் SLOUGH தமிழ் சங்கமமும் , ஜப்பானின் டோக்யோ TOKYO தமிழ் சங்கமும் முதல் முறையாக இணையத்தில் உலக தமிழ் சங்கங்களுடன் இணைந்து கோலாகலத் தீபாவளிக் கொண்டாட்டம். நடத்தின .

48 மணி நேரம் இடைவிடாது நேரடி ஒளிபரப்பு நடந்தது

உலகத் தமிழ் சங்கங்கள் முன்னெடுப்பில் இந்த மெகா தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நலிவடைந்த குடும்பம் தீபாவளி கொண்டாட நிதியுதவி வழங்கப்படுவதாக அவை அறிவித்துள்ளன

லண்டனில் உள்ள SOUTH INDIAN SOCIETY சவுத் இந்தியன் சொசைட்டி, HINDU FORUM OF BRITAIN ஹிந்து போரம் ஆப் பிரிட்டன்  ஆகியனவும் இணையவளி தீபாவளி கொண்டாடின

XXXXXX

தீபாவளி விழாவுக்கு முத்தாய்ப்பு வைத்த நிகழ்ச்சி உத்தர பிரதேச மாநில அயோத்தி மாநகரில் ராம ஜென்ம பூமியில் நடந்தது . சுமார் ஆறு லட்சம் தீபங்களை வெள்ளிக்கிழமை இரவில் ஏற்றினர். மாநில  முதலமைச்சர் ஆதித்ய நாத்  யோகிஜியின் முயற்சியில் இது நடந்தது. சென்ற ஆண்டே 4 லட்சம் தீபம் ஏற்றி  கின்னஸ் சாதனை நூலில் அயோத்தி இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது

இது ஒரு புறமிருக்க தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில்  சுவாமி விவேகானந்தரின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தது இந்துக்களுக்கு தீபாவளிப்  பரிசாக வந்தது.

XXXXX

SKANDA SHASTI

ஆண்டுதோறும் தமிழ் நாட்டிலுள்ள எல்லா முருகன் கோவில்களிலும் ஸ்கந்த சஷ்டி உற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் . அந்த விழாவும் விரதமும் நேற்று 15ம் தேதி துவங்கியது . நவம்பர் 20 ம் தேதி ஸ்கந்த சஷ்டி. அன்று சூர ஸம்ஹா ரத்துடன்  விழா நிறைவு பெறும்.

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும்.

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-


சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி 20-ந் தேதி அன்று சூரசம்ஹார நிகழ்ச்சியும், 21-ந் தேதி அன்று திருக்கல்யாண நிகழ்ச்சியும் மிக முக்கிய நிகழ்வுகள் ஆகும். சூரசம்ஹார நிகழ்ச்சி ஆண்டுதோறும் திருச்செந்தூர் கோவில் அருகில் உள்ள கடற்கரையில் நடைபெறும். இந்த ஆண்டு சூரசம்ஹார நிகழ்ச்சி கோவில் பிரகாரத்தில் நடைபெறும். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

தொலைக்காட்சி மற்றும் உள்ளூர் தொலைக்காட்சி, யூடியுப் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய கோவில் நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்படும். மேலும் சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண நாட்களை தவிர மற்ற நாட்களில் தினசரி காலை 5 மணி முதல் இரவு 6 மணி வரை 10 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும்.

திருப்பரங்குன்றம் கோயிலில் கந்தசஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. முக்கிய விழாவான சூரசம்ஹாரம் நவ.20ல் நடைபெறுகிறது.  முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில்

19ம் தேதி நடைபெறும் வேல் வாங்குதல், 20ம் தேதி நடைபெறும் சூரசம்ஹாரம் ஆகிய நிகழ்வுகள் உள் விழாவாக கோயிலுக்குள் நடத்தப்படும். இதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

XXXXX

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விழாக்கள் ரத்து செய்யப்பட அ றிவிப்பு  சிவ பக்தர்களுக்கு பெரிய ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

திருவண்ணாமலை தீப திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை. தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. கார்த்திகை தீபத் திருநாளன்று பக்தர்கள் மலை ஏறவும்,  கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை தீபத்தன்று கோவிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பு கூறுகிறது.

XXXXXXX

கேரளத்திலுள்ள புகழ் பெற்ற  சபரிமலை ஐயப்பன் கோயில் பற்றிய செய்தி இதோ…………………

ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய 3 மாதங்கள், சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுவது வழக்கம். அதன்படி,  நேற்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு காரணமாக பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

பம்பை ஆற்றில் நீராட பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். தினமும் 1000 பக்தர்களுக்கும், சனி மற்றும் ஞாயிறு நாட்களில் 2,000 பக்தர்களுக்கும், மண்டல, மகர விளக்கு நாட்களில் 5,000 பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்பதிவு செய்த பக்தர்கள் சபரிமலைக்கு வருவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்னதாக எடுத்த “கொரோனா இல்லை“ என்ற சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

இந்த சான்றிதழை நிலக்கல்லில் உள்ள முகாமில் சமர்ப்பித்தபின்பு தான் சபரிமலைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

XXXXX

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம்

அனைவர்க்கும் ஞான மயக்  குழுவினரின்   ஸ்கந்த சஷ்டி வாழ்த்துக்கள்

 tags–உலக , இந்து சமய,  செய்தி மடல் 161120, 

–subham–