Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தமிழில் ஆயிரம் ஆங்கிலச் சொற்கள் – Part 6
Now let us look at D words.
D.1. DIVINE- DEVAN- ALSO DEVI – DEO IN LATIN; தேவன், தேவி, தேவ , தெய்வ, காண்க- குறள் , புறநாநூறு DIVINE IN EGLISH; DEVAN AND DEVI ARE USED IN 2000 YEAR OLD SANGAM LITERATURE
D.2. DRAGON- ARAKKAN; த/அரக்கன்
D. 3.DOLERE / LATIN– THALARVU; THALARCHI/ தளர்வு, தளர்ச்சி
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து 19-10-2020 அன்று இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு ஞானமயம்/GNANA MAYAM நிகழ்ச்சி ஒளிபரப்பட்டது. அதில் கேள்வி – பதில் நிகழ்ச்சியில் இடம் பெற்ற கேள்வியும் பதிலும் கீழே தரப்பட்டுள்ளது.
FACEBOOK.COM/GNANAMAYAM
19-10-2020 அன்று ஒளிபரப்பப்பட்ட facebook.com/gnanamayam நிகழ்ச்சியின் உரை இதோ:
ரகஸியம் பரம ரகஸியம்!
Kattukutty
சித்த மருத்துவம் பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளிலும் மங்காமல் வாழ்ந்திருப்பது மருந்துகளினாலும் அதனுடைய ரகஸிய மருந்துக் கலவைகளினாலுமே ஆகும்
புதிய கண்டுபிடிப்புகள், புதிய ஆய்வுகள், வளர்ச்சிகள் இருந்தாலும்
நவீன முறையில் செய்யப்படும் மருந்துகள் தாற்காலிக நிவாரணத்தையே கொடுக்கின்றன. சித்த மருந்துகளோ நோயின் அடித்தளத்தையே தாக்கி மக்களை நலமடையச் செய்கின்றன.
இதற்கெல்லாம் காரணம் மருந்துகளை தேர்ந்தெடுத்த விதமும் தயாரிக்கும் முறைகளும் தான். இவைகள் ஒருகாலத்தில ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன……. ஏன்???
புதையல் ரகசியம்
இக்காலத்திலும் சரி, முன் காலத்திலும் சரி மனிதர்களுக்குத் தேவை
காசு, பணம், துட்டு மணி, மணி, காசு,,பணம், துட்டு, மணி மணி…….
இக்காலம் போல அக்காலத்தில், பேங்க், சேப்டி லாக்கர் கிடையாது.
பணம், நகைகளைப் பாதுகாக்க ஒரு குடத்தில், பானையில் வைத்து
பூமியில் புதைத்து வைத்தனர். மேலும் ஒரு அரசன் தோற்று ஓடும் போதும் ஜமீந்தார்கள், குறு நில மன்னர்கள், பாளையக்காரர்கள்,
பண்ணையார்கள், தனக்கு மிகுதியான பணத்தைப் புதைத்து வைத்திருப்பார்கள்.
இது இருக்குமிடம் ரகசியமாக சங்கேத குறியுடன் அதாவது ஒரு பரிபாஷையுடன் இருக்கும்.
சிலர் மந்திரவாதிகளைக் கொண்டு பூதங்களைப் பாதுகாவலாக வைப்பார்கள்.அதற்கும் ஒரு சீக்ரட் கோடு வேர்டு உண்டு
இப்பொழுது புதையலை கண் கூடாகப் பார்க்கும் ஒரு சித்தர் பாடலை உங்களுக்கு தரப் போகிறேன். புதையல் கிடைத்தால் எனக்கும், திரு.சாமிநாதன், மற்றும் திரு கல்யாண்ஜி குழுவினருக்கும் பங்கு தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
இந்தப்பாடல் time and vedas ல் இடம் பெறும். கண்டிப்பாக உங்கள் நெருங்கிய நண்பர்களுக்கும் கூறவும்.
ஆம ப்பா வெண்ணையிலே தேனை தேய்த்து
ஆதளையின் பாலைக் கூட்டிஅடைவாய்தேய்த்து
ஓம ப்பாதிலர்தமிட தன்னைக் காணார்
ஓங்கி நின்ற உரு மாற்றம் ஒருவர் காணார்
போம ப்பா வெண்டிசையும் கால் வேகங்கொண்டு
பூமிதனை மறைந்தனைத்தையும் பொலிவாய்காண்பர்
வேம ப்பா அண்டரண்டம் வழலைப்பட்டால்
வேதாந்த பஞ்சார்தனெனச் சொன்னாரே!!!
தெய்வீக ரகசியம்
முன் காலத்தில் தென்னாட்டு அரசர்களில் சேர மன்னர்களும்
முக்கியமானவர்களில் ஒருவர். தங்கள் ஆட்சியையே கடவுளிடம்
ஒப்படைத்து தங்கள் தேசத்தையே “கடவுளின் தேசம்” என்று
அழைத்தனர்.தங்கள் சொத்துக்கள் அனைத்தையும் ஸ்ரீ பத்மநாப
ஸ்வாமியிடம் ஒப்படைத்தனர். இவை ரகசியமாக பாதுகாக்கப்பட்டு
வந்தது. இந்த ரகசியத்தை ஒருவர் பொறுக்காமல் அரச குடும்பத்திற்கு எதிராக கேஸ் போட்டு ரகசியத்தை உடைக்கச் செய்தார்.
அரசாங்க அதிகாரிகள் புடை சூழ கதவுகள் உடைக்கப்பட்டன.
உலகமே வியக்கும் வண்ணம் கோடி கோடி ரூபாய்கள் பெறுமான தங்க, வெள்ளி நகைகள், தங்க காசுகள் கண்டு பிடிக்கப்பட்டு 30 நாட்கள் ஆயிற்று கணக்கெடுக்க.
கணக்கின் முடிவில் உலகத்திலேயே மிக பணக்கார சாமியாக
விட்டார் பத்ம நாப சாமி ( வேடிகன் சிடி தவிர !!!)
முதலிடத்திலிருந்த திருப்பதி சாமி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
இது சம்பந்தமாக ஒரு ஜோக் ஒன்றும் நிலவியது.
திருப்பதி சாமி சொன்னாராம் பத்மநாபசாமியிடம், “நான் நின்று கொண்டே பல வருஷம் சம்பாதித்தை நீங்க படுத்தகிட்டே ஒரே நாளிலே சம்பாதிசிட்டீங்களே”!!!!
அரசாங்க ரகசியம்
மேலும் சிலவிஷயங்களை இரகசியமாக வைக்க வேண்டியதன் காரணங்கள், குடும்ப, அரசாங்க ரகசியமாகவோ இருக்கும். அரச பரம்பரை துண்டிக்கப் படக்கூடாது என்பதற்காகவும் பரம்பரை சொத்து மற்றவர் கையில் சிக்கி சீரழிந்து விடக் கூடாது என்பதற்காகவும் பரி பாஷைகள் உள்ளன.
நீங்கள் எந்த சினிமா எடுத்துக் கொண்டாலும், அரசன் அரச வாரிசை
கொல்லச் சொல்லுவான். பெரும்பாலும் அது எம் என் நம்பியாராகவோ, பி எஸ் வீரப்பாகவோ, ஆர் எஸ்.மனோகராகவோ எஸ் ஏ அசோகனாகவோ இருக்கும்
அரசனின் அந்தரங்க ஆள், பரிதாப்பட்டு தன் மனைவியிடம் கொடுத்து குழந்தையை வளர்க்கச் சொல்லுவான்.
குழந்தையின் முதுகில் உள்ள மச்சம், கழுத்தில் உள்ள தாயத்து, பிரசவம் பார்த்த தாதி இவைகள் மூலமாக கண்ணாம்பாள் கண்டு பிடித்து குடும்பத்தை ஒன்று சேர்த்து அரசை நிலை நிறுத்துவார்.
ஒரு அரிய கண்டுபிடிப்பு “ரச மணி”. பாத ரசத்தை மூலிகைகள் மூலமாகக் கட்டி, மறைந்து போக, பறக்க, எடை குறைவாக, எடை அதிகமாக ….. இன்னம் பல சித்திகள் அடைந்தனர். இது எல்லா வியாதியும் போக்கும் மிக மருத்துவ குணம் வாய்ந்தது, இதை வைத்திருந்தவர்கள் மிக சக்தி வாயந்தவர்களாக கருதப் பட்டார்கள்.
உதாரணம் காலஞ்சென்ற மதுரை திரு T M சவுந்திர ராஜனை ஒரு சித்தர் சந்தித்து அவரிடம், ஒரு ரச மணி கொடுத்து “நீ பாட்டுலகில் மிகப் புகழ் பெறுவாய் “ என்றார். T M S தன் வாய்ப்பட கூறினார் ஒரு பேட்டியில் இப்படி !!!.45 வருடமாகப் MGR குரலிலும், சிவாஜி குரலிலும் பல வகையாக பாடியதோடு மட்டுமல்லாமல் முருகன் பாடல்களைப் பாடி மெய்யுருக வைத்து புகழ்பெற்றார் ரச மணி மூலமாய்!!!
இதை கட்டும் வித்தை ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது இன்று வரையிலும்!!!
சாகா வரம் பெறும் ரகசியம்
இதற்கெல்லாம் மேலாக அரசர்களும், அரசிகளும், மேலும் பணம் படைத்தவர்களும்,நூறாண்டும் அதற்கு மேல் சாகாமலும் வாழ ஆசைப்பட்டனர்!!!
உடலை திடகாத்திரமாக வைக்க உபயோகப்பட்டது சித்த வைத்திய
மூலிகைகள். இதன் இரகசியத்தை அறிய பல நூறு மைல்கள் சென்று
மலை மீது ஏறி பச்சிலைகளை பறித்து சித்தி பெற்றனர் சித்தர்கள்.
அனைத்து சித்தர்களும் முன்னூறு, நானூறு, ஐந்நூறு ஆண்டுகள் வாழ்ந்தனர். இன்னும கண்ணுக்கு புவப்படாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
சர்வ சக்தி ரகசியம்
இதற்கெல்லாம் மேலாக மந்திர சித்தி பெற்று உலகத்திலேயே மிக சக்தி வாய்ந்த மனிதனாக அதாவது உலகத்தையே தன் கால் கீழ்கொண்டுவர முயற்சித்தவர்கள் தான் அதிகம்!!!
எல்லா மொழி சினிமாக்களிலும் ஒருதிடகாத்திரமான மந்திரவாதி வருவார்
SV ரங்கா ராவ் மாதிரி…..
கண்ணாடி கண்ணாடி காட்டு என் முன்னாடி
என்னை விட சக்தி வாய்ந்தவன் உண்டா இவ்வுலகில்???
கண்ணாடியில் N T ராமா ராவோ, T R மகாலிங்கமோஜெமினி கணேசனோ தெரிவார்கள்…….பிறகு என்ன மந்திரவாதி அவனைக் கொல்ல முயலுவான். கதாநாயகன் ஒரு முனிவர் அல்லது சித்தர் வழி காட்ட மந்திரவாதியை வென்று அரசாட்சியைப் பிடிப்பார் – NTR அல்லது TRM அல்லது JEMINIயோ.
இப்பவும் இந்தப் போட்டி நடந்து கொண்டுதான் இருக்கிறது
அரசியலில் நடக்கிறது. சமுதாயத்திலும் நடக்கிறது.
அரசியலைப பற்றி பேச விரும்ப வில்லை. ஆனால் ஒரு புள்ளி விவரம்,
இந்தியாவிலேயே மிகப் பெரிய பத்து பணக்காரர்களில் 6 பேர்கள் சாமியார்கள்!!!!
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
லண்டனிலிருந்து 19-10-2020 அன்று இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு ஞானமயம்/GNANA MAYAM நிகழ்ச்சி ஒளிபரப்பட்டது. அதில் கேள்வி – பதில் நிகழ்ச்சியில் இடம் பெற்ற கேள்வியும் பதிலும் கீழே தரப்பட்டுள்ளது.
FACEBOOK.COM/GNANAMAYAM
பாரதியார் பாடல்களில் ஆரிய என்ற சொல், தேவாரம், சங்க இலக்கியம் போல நல்ல பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளதா? – 1
ச.நாகராஜன்
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். இன்று நமக்கு முன் வந்துள்ள கேள்வி – பாரதியார் பாடல்களில் ஆரிய என்ற சொல், தேவாரம், சங்க இலக்கியம் போல நல்ல பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளதா?
இதற்கான பதில், ஆம், பாரதியார் பாடல்களில் ஆரிய என்ற சொல் அற்புதமாக நல்ல பொருளிலேயே பயன்படுத்தப்படுகிறது.
இதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
நல்ல பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழும் போதே ஆரிய என்ற சொல்லைத் தவறான பொருளில் பயன்படுத்துவோரும் உள்ளனர் என்பது மறைமுகமாகத் தெரிகிறது.
ஆம், உண்மை தான். இதற்கான மூலத்தை மாக்ஸ்முல்லர் என்ற ஜெர்மானியரிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும். 1823ஆம் ஆண்டு பிறந்த மாக்ஸ்முல்லருக்கு மிகுந்த வறிய நிலை இருந்தது. அவரது 22ஆம் வயதில் அவரது தாயாருக்கு 1845ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதியிட்ட கடிதம் ஒன்றில் அவர் எழுதினார் – ஒரு கப் சாக்லட்டிற்கு இரண்டு ஃப்ராங்க் கொடுக்க வேண்டியிருக்கிறது, இனி ஒரு போதும் இதைச் சாப்பிடக்கூடாது என்று நினைத்தேன். இரண்டு ஃபிராங்கிற்கு வக்கில்லாத நிலை.
அந்தக் கால கட்டத்தில் இந்தியாவை மொத்தமாக கபளீகரம் செய்ய நினைத்த மெக்காலேயை இரண்டாம் முறையாக 1855இல் அவர் சந்தித்தார். இந்தியரை மதமாற்றும் மெக்காலேயின்எண்ணத்தை அவர் புரிந்து கொண்டார். பிழைக்கும் வழியும் அவருக்குப் புரிந்து விட்டது. அந்த எண்ணத்திற்கு இணங்க சரியானபடி தாளம் போட்டார். வேதம் ஒரு குப்பை என்பது நிரூபணமாகி விடும் என்று தன் தாயாருக்கு எழுதினார். மற்றவருக்கு கிடைக்காத பெரிய தொகையான ஒரு தாளுக்கு 4 பவுண்ட் என்று அவருக்கு நிர்ணயிக்கப்பட்டது. அங்கு தான் வந்தது வினை.
ஆரியர் என்பது ஒரு தனி இனம், அது இந்தியாவில் புகுந்தது என்ற விஷ வித்தை அவர் ஊன்றினார். பின்னால் 1859இல் மெக்காலே இறந்தவுடன் அவர் பயம் போனது. வேதத்தைப் புகழ ஆரம்பித்தார். இந்தியாவின் அட்மைரர் ஆக மாற ஆரம்பித்தார். ஆனால் அவர் செய்ய வேண்டிய டாமேஜ் அனைத்தையும் செய்து விட்டார். அவர் வைத்த வித்து நச்சு மரமாக மாறி ஆரியன் என்பதற்கு ஏராளமான அர்த்தங்கள் தரப்பட்டன; அதையொட்டி இந்தியாவைப் பிளப்பதற்கான சதி ஆரிய வாதத்தால் அரங்கேற்றப்பட்டது. 1896இல் விவேகானந்தர் அவரை அவர் இல்லத்தில் சந்தித்த போது அவருக்கு வயது 73. அதன் பின்னர் நான்கு ஆண்டுகள் மட்டுமே அவர் உயிர் வாழ்ந்தார். அப்போது அவர் இந்தியாவை வெகுவாகப் புகழ்ந்தார்.
ஆரியம், திராவிடம் என்ற தவறான கொள்கைகள் பிறந்தது இதன் அடிப்படையில் தான்.
மெக்காலேயின் இந்தியப் பண்பாட்டை ஒழித்துக் கட்டும் இந்தத் திட்டம் முழுதுமாக அவன் எண்ணப்படி நிறைவேறவில்லை என்றாலும் அந்த விஷமரத்தின் கனிகளைச் சாப்பிட்டவர்கள் அந்த ஆரிய வாதத்தால் ஆதாயம் தேட முயன்று ஓரளவு வெற்றியும் பெற்றனர்.
இந்தப் பின்னணியில் ஆரிய என்பதற்கான அர்த்தத்தை நம் இலக்கியங்களில் பார்ப்போம்.
சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டு எட்டுத் தொகை மற்றும் பதினெண்கீழ்க்கணக்கு ஆகிய நூல்களிலும் தொல்காப்பியத்திலும் ஆரிய என்ற சொல் இல்லை.
சிலப்பதிகாரத்தில் ஆரிய என்ற சொல்லை 15 இடங்களில் காண முடிகிறது.ஆரியமன்னர்ஈர்_ஐஞ்ஞூற்றுவர்க்கு – வஞ்சி 25/162
அடும்தேர்தானைஆரியஅரசர் – வஞ்சி 26/211
ஆரியஅரசர்அமர்க்களத்துஅறிய – வஞ்சி 26/217
ஆரியமன்னர்அழகுறஅமைத்த – வஞ்சி 27/22
இப்படி வருகின்ற இடங்களில் ஆரிய மன்னர் என்று குறிப்பிடப்படுவது வட நாட்டில் ஆண்டுவந்த மன்னரைக் குறிக்கும் சொல்லாக வருகிறது.
மணிமேகலையில் ஒரே ஒரு இடத்திலும் சீவக சிந்தாமணியில் ஒரே ஒரு இடத்திலும் வரும் ஆரிய என்ற சொல்லும் நல்ல பொருளிலேயே வருகிறது.
அடுத்து கம்பராமாயணத்தை எடுத்துக் கொள்வோம். இதில் 240566 சொற்கள் உள்ளன. இவற்றில் 8 இடங்களில் ஆரிய என்ற சொல் வருகிறது.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
வணக்கம்.
ஞானமயம் வழங்கும் பங்களூர் செய்தி மடல்.
வழங்குவது பிரஹன்நாயகி சத்ய நாராயணன்.
தலைப்புச் செய்திகள்
பங்களூரில் ஹலசூரில் அமைந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் சரஸ்வதி பூஜை சிறப்பு நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்கள்
பன்னிரெண்டரை அடி உயரமுள்ள விவேகானந்தர் சிலை பங்களூரு ரெயில் நிலையத்தில் அமைக்கப்பட இருக்கிறது.
புகழ்பெற்ற புண்ய ஸ்தலமான குக்கி சுப்ரமண்ய தலம் பற்றிய ஒரு சிறு அறிமுகம்
இனி, விரிவான செய்திகள் :-
பங்களூரில் ஹலசூரில் அமைந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் சரஸ்வதி பூஜையை ஒட்டி அக்டோபர் 22 மற்றும் 23ஆம் தேதிகளில் காலை 5 மணிக்கு வேத பாராயணமும் காலை ஏழரை மணிக்கு பூஜை மற்றும் தேவி மாஹாத்மிய பாராயணமும் மாலை 6 மணிக்கு ஸ்ரீ ராமகிருஷ்ண ஆரத்தியும் நடைபெறும். அக்டோபர் 24ஆம் தேதியன்று காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர் நிகழ்ச்சிகள் உண்டு. அக்டோபர் 25ஆம் தேதி ஆயுத பூஜையை ஒட்டியும், அக்டோபர் 26ஆம் தேதி விஜயதசமி அன்றும் இதே போல சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அடுத்து பங்களூரில் ஹலசூரில் அமைந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்,
விவேகானந்தர் சிலை நிறுவுதல் பற்றிய ஒரு சிறப்புச் செய்தியை அறிவிக்கிறது. பன்னிரெண்டரை அடி உயரமுள்ள வெங்கலத்தினால் ஆன ஸ்வாமி விவேகானந்தரின் சிலை ஒன்று KSR பங்களூர் சிடி ரெயில்வே ஸ்டேஷன் மூன்றாவது வாயிலில் நிறுவப்பட இருக்கிறது. பக்தர்கள் இந்த நல்ல பணிக்குத் தாராளமாக நிதி உதவ வேண்டுமென்று வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. நிதி செலுத்த வேண்டிய வங்கி மற்றும் விவரங்களை மடத்திலிருந்து பெறலாம். மடத்தின் மின்னஞ்சல் முகவரி halasuru@rkmm.org
அடுத்து புகழ்பெற்ற புண்ய ஸ்தலமான குக்கி சுப்ரமண்ய தலம் பற்றி ஒரு சிறு அறிமுகத்தை வழங்குகிறோம்.
குக்கி சுப்ரமணியசுவாமி கோயில் கர்நாடக மாநிலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அடர்ந்த காட்டில் குமாரமலையில் குக்கி சுப்ரமண்யா என்ற அழகிய கிராமத்தில் அமைந்துள்ள ஒரு புனித கோவிலாகும்.
பங்களூரிலிருந்து சுமார் 320 கிலோமீட்டர் தொலைவிலும் மங்களூரிலிருந்து சுமார் 103 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ள இந்த ஸ்தலம் இயற்கை வனப்புடன் கூடிய அடர்ந்த காட்டில் அமைந்துள்ளது. இருபுறமும் நெடிதுயர்ந்த மரங்கள் உள்ள சாலையின் வழியே சென்று இதை அடையலாம்.
குமார பர்வதம் மேற்குத் தொடர்ச்சி மலையில் 4000 அடி உயரமுள்ள மலையாகும். மலையின் உச்சியை அடைய சாலை வழியே 18 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டும். இந்த மலையே ஆதி சேஷன் வடிவத்தில் அமைந்திருப்பது வியப்பூட்டும் ஒரு அதிசயமாகும்! இங்கு சேஷ பர்வதம், சித்த பர்வதம், குமார பர்வதம் ஆகிய மூன்று மலைகள் உள்ளன. குமார பர்வதத்தில் குமாரஸ்வாமியின் இரு பாதச் சுவடுகள் கல்லிலே அமைந்துள்ளன. பக்தர்கள் இதை பயபக்தியுடன் வணங்கி வழிபடுகின்றனர்.
இந்தப் பாதச் சுவடுகளிலிருந்து இரு வேறு திசைகளில் நீர் பெருகுவதைக் காணலாம். ‘உபய குமார தாரா’ என்று அழைக்கப்படும் இரு நதிகள் சுமார் 8 மைல் தூரம் தனித்தனியே பாய்ந்து பின்னர் ஒன்று சேர்வது ஒரு அற்புதமான காட்சியாகும்.
குக்கி சுப்ரமணிய ஸ்வாமி ஆலயத்தில், கோயிலின் முன் மண்டபத்திற்கும் கர்ப்ப கிரஹத்திற்கும் நடுவே வெள்ளித்தூண் ஒன்று உள்ளது. இதை வலம் வந்து வெள்ளித் தூணில் அமைந்துள்ள கருடனை வழிபடுதல் மரபு, இதனால் சர்ப்பங்கள் கக்கும் விஷம் ஒன்றும் செய்யாது என்பது தொன்றுதொட்டு இருந்து வரும் நம்பிக்கை. இங்குள்ள முருகன் ஸ்வயம்பு மூர்த்தி. மூர்த்தியின் தலை மீது ஐந்து தலை நாகர் உள்ளது.
நாகங்களின் தலைவியான வாசுகிக்கு முருகன் அருள் பாலித்த தலம் இது.
ஆகவே சர்ப்பஹத்தி தோஷம், கால சர்ப்ப தோஷம் உள்ளிட்ட நாக தோஷம் உள்ளவர்கள் அதைப் போக்க இங்கு வந்து வழிபடுதல் தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கமாக உள்ளது.
மிகச் சிறப்பான புராண வரலாறைக் கொண்டது இந்த ஸ்தலம்.
குக்ஷி என்றால் குகை என்று பொருள். அது மருவி இப்போது குக்கி ஆகியிருக்கிறது.
ஸ்கந்த புராணம் இதை குமரனின் நேத்ராக்னி ஸ்தலமாகச் சொல்கிறது. தாருகாசுரன், சூரபத்மன் உள்ளிட்ட பல அசுரர்களை வதம் செய்த பின்னர் விநாயகருடன் சுப்ரமணியர் இங்கு வந்து தங்கினார். அப்போது இந்திரன் உள்ளிட்ட அனைத்து தேவர்களும் அவர்களை வரவேற்றனர். தனது மகளான தேவசேனையை இந்திரன் மகிழ்ச்சியுடன் சுப்ரமணியருக்கு மணம் செய்து கொடுக்க விரும்பவே, அதை ஏற்று சுப்ரமணியர் தேவசேனையை இந்த குமாரமலையில் மணந்தார். பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் தேவர்களும் இங்கு வருகை புரிந்து ஆனந்தமடைந்தனர். இங்கு குக்கி லிங்கம், பைரவர், உமா மஹேஸ்வரர், நரசிம்மர் உள்ளிட்ட தெய்வ விக்ரஹங்களும் வழிபாட்டுக்கென அமைந்துள்ளன..
காலம் காலமாக மக்கள் பக்தியுடன் வணங்கி வரும் குக்கி ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி அனைவருக்கும் சர்வ மங்களத்தை தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அக்டோபர் 19-ம் தேதி — திங்கட் கிழமை
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND
எங்கள் நிகழ்ச்சிகளை திங்கட்கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கும் விடைகளும் அளிக்கப்படுகிறது.
உங்கள் பேட்டை, நகரத்தில் நடைபெறும் விழாக்கள், உற்சவங்கள் பற்றி எங்களுக்கு செய்தி அனுப்புங்கள்.
எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும்
XXXX
நாட்டு மக்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நவராத்ரி வாழ்த்துக்களைத் தெரிவித்து இருக்கிறார். சென்ற 17ம் தேதிய ன்று ஒன்பது நாள் நவராத்ரி உற்சவம் துவங்கி விட்டது.
முதல் நாளன்று மலை மகள் – சைல புத்ரி என்று தேவியை வண ங் குகிறார்கள். அந்த அன்னை அனைவர்க்கும் ஆரோக்கியத்தை அருளட்டும் –அத்தோடு வறுமை மிஞ்சி வாடுவோரின் வாழ்வில் வளம் பெருக உதவட்டும் என்றும் வேண்டிக்கொண்டு இருக்கிறார்.
XXX
இதற்கிடையில் நவம்பர் 3ம் தேதி நடைபெறப்போகும் அமெரிக்க அதிபர் தேர்தலில் DONALD TRUMP அவர்களை எதிர்த்துப் போட்டியிடும் BIDEN பைடனும் தமிழ் வம்சாவளி பெண்மணியான KAMALA HARRIS கமலா ஹாரிஸும் அமெரிக்கா வாழ் இந்துக்களுக்கு நவராத்ரி நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்கள்
இதோ தமிழ்நாட்டுச் செய்திகள்…………..
தமிழ் நாட்டில் எல்லா கோவில்களிலும் நாராத்ரி உற்சவம் கோலாகலமாகத் துவங்கிவிட்டது. ஆயினும் பக்தர்கள் எல்லோரும் முன்போல தரிசிக்க முடிவதில்லை. மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் உள்பட பல கோவில்களும் வெப் சைட், வாட்ஸ் அப் , இன்டெர்நெட் மூலம் நிகழ்சசிகளைக் காட்டிவருகின்றன.
மாயூரத்தில் துலா காவேரி ஸ்னானமும் துவங்கி விட்டது. மயூர நாத சுவாமி அம்பிகை சமேதராக ஆற்றங்கரைக்கு எழுந்தருளும் பவனியும் நடந்து வருகிறது.
XXX
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு பகுதியில் புகழ் பெற்ற வைஷ்ணவ தேவி ஆலயம் இருக்கிறது. இது ஒரு குகைக் கோவில். இங்கு நவராத்ரி திருநாளை ஒட்டி கூட்டம் பெருகி வருகிறது. உலக அமைதிக்காக வேத கோஷ முழக்கத்துடன் மகா சண்டி யக்ஞமும் துவக்கப்பட்டுள்ளது..
வைஷ்ணவ தேவி கோவிலைச் சுற்றி மலர் அலங்கரம் செய்யப்பட்டுள்ளது. அன்னையை தரிசிக்க வசதியாக தினமும் டெலிவிஷன் ஒளிபரப்பும் நடைபெறுகிறது
xxxxx
உத்தரப் பிரதேச மாநிலச் செய்திகள்…………..
அயோத்தி : ‘அயோத்தியில் அக். 17ல் துவங்கவுள்ள ராம்லீலா வைபவம் சமூக வலைதளங்களில் 14 மொழிகளில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டுள்ளது. உ.பி., மாநிலம் அயோத்தியில் ஆண்டு தோறும் நடக்கும் ராம்லீலா வைபவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். இந்த ஆண்டுக்கான ராம்லீலா நிகழ்ச்சி அக். 17ல் துவங்கி 25ம் தேதி வரை நடக்கிறது . கொரோனா பரவல் காரணமாக இதில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை. முக்கிய பிரமுகர்கள் கோவில் நிர்வாகிகள் விழாக் குழுவினர் மட்டும் பங்கேற்பர். இந்த ஆண்டு உற்சவம் நடத்தும் பொறுப்பு டில்லியில் உள்ள ராம்லீலா அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
xxxxxx
சமஸ்கிருதம் படிக்கும் மாண வர்களுக்கு இலவச சாப்பாடும் பிற வசதிகளும் வழங்கப்படும் என்று உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். சம்ஸ்கிருதக் கல்வியை வளர்க்க மாநிலம் எல்லா நடவாடிக்கைகளையும் எடுக்கும் என்றும் தேவையானால் அரசு சார்பற்ற நிறுவனங்களின் உதவியை நாடும் என்றும் அறிவித்துள்ளார். சம்ஸ்கிருத சிக்ஷர sikshaa பரிஷத் வெப்சைட்டை website துவக்கி வைத்து அவர் பேசினார். குருகுல வழக்கப்படி சம்ஸ்க்ருதம் கற்பிக்கப்படும் போதே அவர்களுக்கு கணிதம், கம்ப்யுட்டர், அறிவியல் ஆகியவையும் கற்பிக்கப்படும் என்றார்
XXXX
பல மாநிலங்களிலும் இந்து மத சாது சன்யாசிகள் படுகொலை செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டி சாது சன்யாசிகளுக்கு தக்க பாதுகாப்பு வழங்கா விடில் நாடு முழுவதும் கிளர்ச்சி நடத்தப்படும் என்று சன்யாசிகள், துறவிகள், முனிவர்களின் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்து சன்யாசிகளின் தலைமை அமைப்புக்கு அகில பாரத சாந்த் சமிதி என்று பெயர். இந்த அமைப்பின் கூட்டம் இந்துக்களின் புனிதத் தலமான காசியில் நடந்தது . பொதுக் காரீயதரிசி ஜிதேந்திரா நந்த சரஸ்வதி இதை அறிவித்தார். பின்னர் பேசிய பாபா பாலக் தாஸ் எல்லா இந்து அமைப்புகளும் கிளர்ச்சிக்கு ஆதரவு நல்கும் என்று அறிவித்தார்.
ஏப்ரல் 16ம் தேதி மகாராஷ்டிர மாநிலத்தில் இரண்டு சன்யாசிகளை போலீசார் முன்னிலையில் ஒரு கும்பல் அடித்துக் கொன்றது. இது போன்று பல தாக்குதல்களை நக்சல்பாரி இயக்கத்தினர் நடத்துவதாகக் கூறி பல சம்பவங்களையும் கூட்டம் பட்டியலிட்டது . ராஜஸ்தானிலும் உத்தர பிரதேசத்திலும் கோவில் அர்ச்சகர்கள், புரோகிதர்கள் இருவர் கொல்லப்பட்டனர்.ஒரு சன்யாசி மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் காணாமற் போனதற்கு போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூட்டம் சுட்டிக்காட்டியது.
Xxxxxx
இனி கேரள மாநில செய்திகள்
நவராத்திரி விழாவுக்கு தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் சுவாமி சிலைகளுக்கு, எல்லைப்பகுதியான களியக்காவிளையில் இருமாநில போலீசாரும் துப்பாக்கி ஏந்திய அணிவகுப்புடன் மரியாதை செலுத்தினர். குமரியிலிருந்து நவராத்திரி விழாவிற்கு திருவனந்தபுரம் செல்லும் சுவாமி சிலைகள் பாரம்பரிய முறைப்படி பல்லக்கில் சுமந்து செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதனையொட்டி இன்று காலை சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை சிலை பல்லக்கில் சுமந்து நவராத்திரி விழாவிற்காக திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றது. புதன் இரவு பத்மநாபபுரம் அரண்மையில் இருந்து பல்லக்குகளில் பவனியாக புறப்பட்ட சுவாமி சிலைகளை களியக்காவிளை பகுதியில் துப்பாக்கி ஏந்திய அணிவகுப்பு மரியாதையுடன், தமிழக போலீசார் கேரளா போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ஆண்டு தோறும் இந்த பவனி நடைபெறுகிறது. நவராத்ரி காலத்தில் நிறுவனத்தை புறத்தில் மூன்று இடங்களில் சுவாமி விக்ரகங்கள் வழிபாட்டிற்கு வைக்கப்படும்.
Xxxxx
சபரிமலையில் ஐயப்பன் கோவில் ஆறுமாதங்களுக்குப் பிறகு முதல் தடவையாக பதர்களுக்குத் திறந்து விடப்பட்டது. இது மாதம் தோறும் நடை திறப்பதன் ஒரு பகுதி. ஆயினும் 6 மாதங்களாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட வில்லை. இப்பொழுது கடும் வைரஸ் பரிசோதனைகளுக்குப் பின்னர் 60 வயதுக்கும் குறைந்த பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். 6 மாதங்களுக்குப் பக்தர்கள் மீது விதித்த தடையால் கோவிலுக்கு 150 கோடி ரூபாய் வருவாய் இழப்பு நேரிட்டது
xxxx
இனி ஆந்திர மாநிலச் செய்திகள்
விஜயவாடாவில் இந்திர கேலாத்ரி மலையிலுள்ள கனக துர்கா கோவிலில்
நவராத்ரியின் முதல் நாளன்றே 12, 000 பக்தர்கள் வரிசையில் நின்று துர்கா தேவியை வணங்கினார்கள். முதல் நாளன்று ஸ்வர்ண அலங்காரத்தில் தேவி தரிசனம் தந்தது பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது
xxx
இதற்கிடையில் அருகாமையிலுள்ள தெலுங்கானா மாநிலத்தில் இந்து சமய பெண்கள் பதுகம்மா என்னும் மலர்த் திருவிழாவைக் கொண்டாடி தேவியை மலர் வடிவத்தில் வணங்கி வருகிறார்கள். நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் இந்துக் குடும்பங்களை சேர்ந்த ஆண் மக்கள் பகல் நேரத்தில் பூக்களை சேகரித்து வருவர். பின்னர் குடும்பத்தினர் அனைவரும் பல்வேறு வண்ண மலர்களால் ஆன பதுக்கம்மா வடிவத்தைச் செய்து அதன் மீது மஞ்சள் குங்குமம் வைத்து வணங்குவர். பெரும்பாலும் வறட்சியில் வாடும் தெலுங்கனா மாநிலத்தில் இவ்வாண்டு அணைகள் நிரம்பி எங்கும் பசுமைக் காட் சி தென்படுவதால் மக்கள் இரு மடங்கு உற்சாகத்துடன் விழாவைத் துவக்கியுள்ளனர்.
xxxx
பாலாஜி கோவில் பணத்தை மத்திய மாநில அரசுகளின் செக்யுரிட்டி security பத்திரங்களில் முதலீடு செய்ய திருப்பதி- திருமலை தேவஸ்தானம் முடிவு செய்திருப்பதை பாரதீய ஜனதா கட்சி கண்டித்துள்ளது . கோவில் உண்டியல் பணத்தை முதலீ டு செய்து வட்டி பெறுவது முறையற்றது என்றும் அதற்குப் பதிலாக தர்ம கைங்கர்யங்களிலும், பக்த்ர்களுக்காகவும் அந்தப் பணத்தைப் பயன்ப டுத்தவேண்டும் என்றும் பாரதியஜனதா கட் சி கோரியிருக்கிறது
Xxx
அடுத்ததாக பெங்களூரிலிருந்து திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் , கர்நாடகச் செய்தி மடலை வழங்குகிறார்.
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Namaste , Namskaram to Everyone
This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.
Read by SUJATHA RENGANATHAN .
This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at 2 pm London Time and 6-30 Pm Indian Time Every Monday.
Even if you miss our live broadcast on Mondays, you can always visit us on FACE BOOK.COM – slash- Gnana Mayam 24 hours a day.
Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘AaKaasa DwaniI’ — Read by SUJATHA RENGANATHAN .
xxxxx
Prime Minister Narendra Modi on Saturday wished people on the first day of the nine-day festival of Navratri, hoping for a safe, healthy and prosperous planet as the country and the world battles the coronavirus disease (Covid-19), which has affected and killed millions across the globe.
“Many congratulations on the auspicious festival of Navratri. May jagat janani Ma Jagadamba bring happiness, peace and prosperity to all of you. Jai Mata Di!” PM Modi tweeted.
The Prime Minister also invoked Goddess Shailaputri, meaning the daughter of the mountains and one of the nine manifestations of Durga, who is worshipped the first day of Navratri.
“Pranams to Maa Shailputri on Day 1 of Navratri. With her blessings, may our planet be safe, healthy and prosperous. May her blessings give us strength to bring a positive change in the lives of the poor and downtrodden,” he added.
xxxx
There is some good news from Uttar Pradesh,
Uttar Pradesh chief minister Yogi Adityanath on Thursday directed officials to improve facilities in Sanskrit schools. He said students in Sanskrit schools should be provided with free meals and other facilities.
Launching the website of Madhyamik Sanskrit Shiksha Parishad, the chief minister said to promote Sanskrit, it is pertinent to link the subject with modern relevance. He said, “Alongside the traditional way of teaching the subject, students should be taught about Mathematics, sciences and computers.”
He said his government is determined to promote Sanskrit language in the state if necessary, with help of NGOs.
Xxx
Here is another important news from Varanasi in Uttar Pradesh……………………………..
Enraged over the killings of priests and seers reported from several states in the recent past, Akhil Bharatiya Sant Samiti, an umbrella body of Hindu seers, has said it will launch a nationwide stir if the government does not provide security to seers.
The demand for security for the seer community was made at a meeting of seers from across the country was held and presided over by the samiti’s general secretary Swami Jeetendrananda Saraswati in Varanasi on Monday.
Speaking on the occasion, Patalpuri Matt’s mahant Baba Balakdas Maharaj alleged that Naxals were behind the attacks on seers.
On April 16 this year, two sadhus and their driver were travelling from Mumbai to attend a funeral in Gujarat’s Surat when their vehicle was stopped and they were attacked and killed by a mob in a village in Palghar town of Maharashtra in the presence of police.
On October 7, a priest was allegedly set afire in Rajasthan’s Karauli district, and four days later, on October 11, a priest was attacked in Gonda district of Uttar Pradesh.
Three years ago, prominent seer Mahant Mohandas, the pontiff of Shri Panchayati Akhara Bada Udasin went missing while on his way to Mumbai from Haridwar on a personal visit. He was last seen at Meerut railway station and his mysterious disappearance led to major resentment among the saint community.
Now, even after three years, the police have not been able to trace or get a clue about Mohandas’ whereabouts.
Xxxx
Now some news coming from Kerala……
The Sabarimala Ayyappa temple in Kerala has resumed darshan for pilgrims as the temple opened for monthly pooja on Friday evening. Pilgrims who reached the base camp are allowed to go up the hill after conducting Covid-19 tests; only those testing negative are allowed into the temple. This is the first time pilgrims are allowed after six month break due to virus scare IT LOST A REVENUE OF RS.150 CRORES IN THE LAST SIX MONTHS BECASE OF BAN ON PILGRIMS.
COVID protocol announced by the Kerala Government includes
COVID negative certificate is mandatory for darshan
Children and elders will not be allowed to visit temple
Ghee Abhishekam, bathing at Pampa river will not be allowed
ANOTHER INTERESTING NEWS FROM THIRUVANANTHAPURAM , CAPITAL CITY OF Kerala is the visit of Tamil Nadu Gods from the neighbouring state.
The Navarathri idols from Padmanabhapuram Palace that were taken out in a procession from Thuckalay in Kanyakumari district were brought to Padmanabhaswamy temple in Thiru Anantha Puram on Friday. The Navarathri pooja began on Saturday the 17th of October.
The idols are brought to the temple every year during the Navarathri pooja. The idols were brought in a procession as usual in the traditional way.
The idol procession was given traditional salute by the police of Tamil Nadu and Kerala The idols are placed in three places for nine nights, and devotees offer prayers starting Saturday .
xxx
And here is news from Andhra Pradesh
The nine-day Dasara festival at Sri Durga Temple atop Indrakeeladri in Vijayawada, kicked off on Saturday. The presiding deity Sri Kanaka Durga Devi’ was decorated in the ‘Swarna Kavacha Alankaaram .
Though pilgrims from various parts of the state reached the temple early morning, they were allowed for darshan around 10 am.
According to temple officials, around 12,000 devotees thronged the temple on the very first day and took blessings of the goddess.
Xxxx
In the meantime,
Bathukamma, Telangana’s major cultural festival, has doubled the joy of residents.
With Telengana’s hinterland becoming verdant stretches of bumper Kharif crops, and its lakes and reservoirs teeming with water, the festival of colours is turning out to be very different from the ones that Telangana has known before.
The nine-day Bathukamma festival is the quintessence of Telangana culture .
During these nine days, the menfolk of the house in rural areas would go out every morning into the agriculture fields or forests to pluck flowers. The entire family would then sit together and help each other arrange these flowers into a Bathukamma.
Comprising seven concentric layers, the Bathukamma is stacked in the shape of a temple’s ‘Gopura’. Gauramma, a symbolic idol of Goddess Gowri made of turmeric, is placed on top of the flowers.
This little floral mountain is worshipped as Goddess Bathukamma. Flowers of various hues and species are used in the arrangement.
Xxxx
Maathaa Vaishnava Devi Cave temple is one of the holiest places for Hindus in North India.
The nine-day long Navratri festival at Goddess Vaishnava Devi shrine began with Chandi Maha Yagya and chanting of Vedic hymns along with other rituals last week
The ‘Maha Yagya’, being performed at the holy cave shrine nestled in Trikuta hills in Jammu division for peace, prosperity and health of humanity, will conclude with Purna Ahuti on Mahanavami or the ninth day of the Navratri festival.
The Chandi Maha Yagya is telecast from 12.30 p.m. to 1.30 pm daily during Navratri festival.
xxxxxx
And last but not the least is some good news from London
Every ten years a big International Stamp Exhibition is held in London. This year it has to be held virtually because of the COVID virus scare. N. Ragupathy, an avid stamp collector from Nagappattinam in Tamil Nadu , has displayed his stamps in the London Exhibition. He has been collecting stamps on Hindu Gods and Hindu festivals from different countries. He displayed his stamps in Four Large Frames in the London Stamp Exhibition. Mr Ragupathu has won several awards for his Hindu Stamp Collection.
xxxx
THAT IS THE END OF ‘AaKaaSA Dwani’ HINDU NEWS BULLETIN BROADCAST FROM LONDON –
PLEASE MEET US AT FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME AND 6-30 PM INDIAN TIME MONDAY TO DAY FOR WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH FOLLOWED BY TAMIL PROGRAMMES.
பதார்த்த குண சிந்தாமணி நூலில் நவரத்தின வகை என்ற தலைப்பில் ஒவ்வொரு ரத்தினமும் எந்தெந்த வியாதிகளைக் குணமாக்கும் என்பது விவரமாகத் தரப்பட்டுள்ளது.
மாணிக்கத்தின் குணம்
சுரரோகஞ் சந்நிகளின் தோட மதிதாக
முரமான மேக மொழியுந்- திரமாக
வூணிக்கோ ணேத்திரநோ யோடுமர வீன்றவொளி
மாணிக்கத்தால் வசிய மாம்
பொருள் : (சர்ப்பம் கக்கிய) மாணிக்கத்தினால் சரீரத்தில் ஏற்படும் அனைத்து விதமான ஜுரங்கள், சந்நிபாத தோஷங்கள், திரிதோஷதாக ரோகம், வாத பிரமேகம், கண் நோய்கள் ஆகிய இவைகள் ஒழியும். அத்துடன் வசீக்ரம் உண்டாகும்.
(பழைய உரை ‘சர்ப்பம் கக்கிய மாணிக்கம்’ என்று கூறினாலும் அப்படி ஒரு மாணிக்கம் கிடைக்குமா என்பது சர்ச்சைக்குரியதாக இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.)
வைரத்தின் குணம் – இதுவே வஜ்ஜிரம் எனப்படும்
ஆறு விதமாம் வயிரம் அவ்வவற்றுண் மாரசங்கள்
வீறிநிலைத் திருக்கும் மேன்மையினாற் – கூறுமவைக்
கெப்பிணியும் நீக்கும் இணையில வனப்பும் உண்டாஞ்
செப்பிணையின் மாமுலையாய் செப்பு
பொருள் : செப்பைப் போன்ற மார்பகத்தை உடையவளே, தேவ, பிரம, சத்திரிய, வைசிய, சூத்திர, சங்கர என்னும் ஆறு வகை வைரங்கள் உண்டு. அவற்றினுள் மகா ரசங்கள் தங்கி இருப்பதனால் அவைகளுக்கு கண்களில் வரும் நோய் உள்ளிட்ட பற்பல ரோகங்களை விலக்கும் சக்தி உண்டு. அழகும் உண்டாகும்.
வைடூரியத்தின் குணம்
சீத வாதத்தொடு சிலேஷ்மம் புளியேப்பங்
காதுசூலைப் பிணிக ளத்தகுமை – மோதுபித்த
மென்று உரைக்கும் நோய்கள் அறும் எப்போதுந் தோடமிலை
நன்று வைடூரியத்தி னால்
பொருள் : வைடூரியத்தினால் சிலேஷ்ம வாத தோஷம், கபம், புளியேப்பம், வருத்துகின்ற கீல் பிடிப்பு வாதகுன்மம், பைத்தியம், அபத்திய முதலிய சப்த தோஷங்கள் நிவர்த்தியாகும்.
கோமேதகத்தின் குணம்
வாதபித்த கோபத்தை மாற்றுமல கட்டறுக்கு
மோது மந்தாக்கினியை ஓட்டுங் காண் – மீதி
லழறரு விகார மகற்று மொளி செய்யுங்
கழறுகின்ற கோமேத கம்
பொருள் : கோமேதகமானது வாதபித்தமிஸ்ரம், மலச்சிக்கல் மற்றும் ஜுரத்தால் ஏற்படும் துர்க்குணம் ஆகியவற்றை அகற்றும். மினுமினுப்பையும் தரும்.
புஷ்பராகத்தின் குணம்
வீரிய விர்த்தியது மேன்மேலு முண்டாகுங்
கூரிய நற்புத்தியுண்டாங் கூறுங்காற் – பாரிற்
பிணிவருக்க மேகும் பெரும் புட்பராக
மணியாற் புகழுமுண்டாம் வாழ்த்து
பொருள் : புஷ்பராகத்தினால் விந்து விருத்தியாகும். நல்ல நுண்ணறிவு ஏற்படும். புகழ் ஓங்கும். மேக முதலிய நோய்க் கூட்டமும் நீங்கும்.
பவளத்தின் குணம்
சுரதோட மையமுத் தோட சுரங்காச
மருசி கீடத்தாலா மாதம் – பெரும்விந்து
நட்ட மதிதாக நாவறட்சி போமொளியுங்
கிட்டும் பவளத்தாற் கேள்
பொருள் : பவளத்தினால் ஜுர தோஷம் நீங்கும். கபம் சந்நிபாத ஜூரம் விலகும். இருமல் போகும். அருசி, கீட விஷம், விந்து நஷ்டம் ஏற்படுவது ஆகியவை போகும்.நா வறட்சி போகும். அத்துடன் சரீர காந்தி ஏற்படும்.
முத்தின் குணம்
அத்திசுரஞ் சோபை யருசிதுர்ப் பலங்கண்ணோய்
பித்துவிடஞ் சீதளநோய் பேசுகபஞ்-சத்தத்
தயிரிய நட்டத்தோடு தாதுநட்ட மும்போ
முயிறுநண் முத்திருந்தா லோது
பொருள் : (ஜீவரத்தினம் என்னும்) முத்தினால் அஸ்தி ஜுரம் , வீக்கம், அருசி, தேக மெலிவு, விழி நோய், அக்கினி கீட விஷம், சுட்க சிலேஷ்மம், குரல் வளையில் ஏற்படும் கோழை, அதைரியம், வீரிய நாசம் ஆகிய அனைத்தும் போய் விடும்.
மரகதத்தின் குணம்
தாது தரும் பூதபை சாசந் தமையோட்டு
மீதுவரு புண்ணை விலக்குங்காண் – டீதுபுரி
மச்சை யகற்றும் மதுமேகம் போக்கும்
பச்சை யதுமதுரம் பார்
பொருள் : இனிப்புள்ள மரகதம் விந்துவை தரும். 18 விதமான பூத பைசாசங்க்ளை ஓட்டி விடும். பல விஷங்களை அகற்றும் சக்தி கொண்டது. மதுமேக வியாதியையும் போக்கும்.
நீலத்தின் குணம்
குதிவலி மேகபித்தங் கூறரிய பாண்டு
மதிமயக்க மெல்லா மருளு- மதிநுதலே
புத்தியொடு மென்மேலும் போகசுக முண்டாகுஞ்
சுத்தநறு நீலத்தாற் சொல்
மதி நுதலைக் கொண்டவளே! நீலத்தினால் குதி கால் நோவு தீரும். மேகநீர்,
அதி பித்தம், பாண்டு போகும். மனச்சோர்வு நீங்கும். நல்லறிவு ஏற்படும். சுக்கிலம் மிகுதியாகும். போக சுகம் உண்டாகும்.
*
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ரத்தினமும் ஒரு கிரகத்துடன் தொடர்பு படுத்தப்படுகிறது. நற்பலனை அதிகரிக்கவும் தோஷங்கள் நீங்கவும் இந்த ரத்தினக் கற்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. அதே போல நியூமராலஜி எனப்படும் எண்கணித சாஸ்திரத்தின் படியும் ஒவ்வொரு எண்ணுடனும் ஒரு கிரகம் தொடர்பு படுத்தப்படுகிறது. விவரப் பட்டியல் இதோ :-
ரத்தினம் உரிய கிரகம் உரிய எண் உரிய ராசி
மாணிக்கம் சூரியன் 1 சிம்மம்
முத்து சந்திரன் 2 கடகம்
பவளம் செவ்வாய் 9 மேஷம், விருச்சிகம்
மரகதம் புதன் 5 மிதுனம், கன்னி
புஷ்பராகம் வியாழன் 3 தனுர், மீனம்
வைரம் சுக்கிரன் 6 ரிஷபம், துலாம்
இந்திரநீலம் சனி 8 மகரம், கும்பம்
கோமேதகம் ராகு 4 கன்னி
வைடூரியம் கேது 7 விருச்சிகம்
முன்னோர்கள் காலம் காலமாகச் சோதித்து இப்படி, பரிந்துரைக்கும் நவரத்தின வகைகளை தோஷம் இல்லாமல் பார்த்து வாங்கி அணிவது தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கமாக இருந்து வருகிறது. வெடிப்பு, கொப்புளம், கீறல், ஒளி மங்கி இருத்தல், கரடு முரடாக இருப்பது, இயற்கையில் கிடைக்காமல் சிந்தடிக்காகச் செய்து ரத்தினங்களின் பெயரை அவற்றிற்குச் சூட்டல் ஆகியவை இல்லாமல் நல்ல அசல் ரத்தினக் கல்லே உரிய நல்ல பலனைத் தரும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.