ஹிந்தி படப் பாடல்கள் – 35, பொற்கால சிற்பி! (Post No.7966)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No.7966

Date uploaded in London – – – 13 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் – 35 – பொற்காலத்தின் ஓர் அரிய சிற்பி!

R. Nanjappa

பொற்காலத்தின் ஒர் அரிய சிற்பி!

நமது பொற்கால இசைஞர்கள் அனைவருமே திறமைசாலிகள்-ஒவ்வொருவரும் ஒருவகையில் சிறந்திருந்தவர்கள். பரஸ்பரம் மதிப்பு வைத்திருந்தார்கள். பாம்பறியும் பாம்பின் கால்-அல்லவா?

இவர்களில் மதன் மோஹன் [ 1924-1975] குறிப்பிடத் தக்கவர். இவர் சிறு பையனாக இருக்கும் போதே [பள்ளிப் பருவத்திற்கு முன்பே- எழுதப் படிக்கத் தெரிந்து கொள்வதற்கு முன்பே] இவரிடம்  ஒரு அசாதாரண ஆற்றல் இருக்குமாம். ஒரு பாட்டைச் சொன்னால் , உடனே அது இருக்கும் கிராமஃபோன் ரிகார்டை எடுத்துத் தருவாராம்!

அவர் தந்தை ஃபில்மிஸ்தான் ஸ்டுடியோவில் பார்ட்னராக இருந்தார். தன் பையன் திரையிசைத்துறைக்கு வருவதை விரும்பவில்லை. மதன் மோஹனும் பட்டாளத்தில் சேர்ந்தார், இசை ஆர்வம் மிகுந்து திரை இசைக்கே வந்துவிட்டார். இவரை ஊக்குவிக்க இவர் தந்தை எதுவும் செய்யவில்லை.

இவர் தனக்கென ஒரு வழியை வகுத்துக் கொண்டார். இவர் இசை

‘கன’மானது- இந்திய பாரம்பரிய இசையில் தோய்ந்திருக்கும். சட்டென்று பதியாது- கேட்கக்கேட்க இதன் சுவை மிகும்- பயில்தொறும் பண்பு புலனாகும். கவிதையின் அழகில், பொருளில் லயிப்பவர்-;கஃஜல் வகை பாடல்களுக்கு உணர்ச்சிபொங்க இசையமைப்பவர். சக இசைஞர்களால் நன்கு மதிக்கப்பட்டவர்.

ஓ.பி. நய்யார் கை ஓங்கிவரும் காலத்தில் எல்லா தயாரிப்பாளர்களும் அவர் பாணி இசையையே எல்லா இசைஞரிடத்திலும் எதிர்பார்த்தனர்..”பாய் பாய்” என்ற படத்தில் இவரையும் அப்படிச் செய்யச்சொன்னார்கள். தானும் சளைத்தவரல்ல என இவரும் ஒரு பாட்டை அதே பாணியில் அமைத்தார்.இதோ அந்தப் பாட்டு:

தில் முஜே பதாதே

दिल मुझे बता दे, तू किस पे गया है
वो कौन है जो आकर, ख्वाबों पे छा गया


मस्ती भरा तराना, क्यों रात गा रही है
आँखों में नींद आकर, क्यों दूर जा रही है
दिल में कोई सितमगर, अरमां जगा गया है
वो कौन है जो आकर

बेताब हो रहा है, ये दिल मचलमचल के
शायद ये रात बीते, करवट बदलबदल के
दिल ज़रा सम्भल जा, शायद वो गया है
वो कौन है जो आकर

भीगी हुई हवाएँ, मौसम भी है गुलाबी
क्या चाँद, क्या सितारे, हर तीर है शराबी
धीरे से एक नग़मा, कोई सुना गया है
वो कौन है जो आकर…  

தில் முஜே பதா தே  தூ கிஸ்பே ஆகயா ஹை

கௌன் ஹை ஜோ ஆகர் காபோ(ன்) பே சாகயா ஹை.

மனமே! உண்மையைச் சொல்! நீ யார் வசம் ஆகிவிட்டாய்!

வந்து உன் கனவில்  நிறைந்தவர் யார்? அதைச் சொல்.

.

மஸ்தீ பரா தரானா, க்யோ(ன்) ராத் கா ரஹீ ஹை

ஆங்கோ(ன்) மே நீந்த் ஆகர் க்யோ(ன்) தூர் ஜா ரஹீ ஹை

தில் மே கோயீ ஸிதம்கர் அர்மான் ஜகா கயா ஹை

வோ கௌன் ஹை ஜோ ஆகர்…..

இரவு ஏன் இத்தகைய போதை தரும் பாடல்களைப் பாடுகிறது?

கண்களில் வந்த தூக்கம் ஏன் இப்படி ஓடிப்போகிறது?

யாரோ போக்கிரி மனதில் ஆசையை எழுப்பிவிட்டார்!

அது யார்

பேதாப் ஹோ ரஹா ஹை, யே தில் மசல் மசல் கர்

ஷாயத் யே ராத் பீதே, கர்வட் பதல் பதல் கே

யே தில் ஜரா ஸம்பல் ஜா,ஷாயத் ஆகயா ஹை

வோ கௌன் ஹை ஜோ ஆகர்

துள்ளி எழும் மனது பொறுமை இழந்து வருகிறது

புரண்டு புரண்டு படுத்துத்தான் இரவு கழியும்போல் இருக்கிறது

மனதே, சற்று நிதானிஅவர் வந்துவிட்டார் போலும்

அது யார்….

..

பீகீ ஹுயீ ஹவாயே(ன்) மௌஸம் பீ ஹை குலாபி

க்யா சாந்த் க்யா சிதாரே, ஹர் தீர் ஹை ஷராபி

தீரேஸே ஏக் நக்மா,கோயீ ஸுனா கயா ஹை

கௌன் ஹை ஜோ ஆகர்..

குளிந்த காற்று வீசுகிறதுபொழுதும் களித்திருக்கிறது!

என்ன நிலவு, என்ன தாரகைகள்ஒவ்வொரு கிரணமும் போதை தருகிறது

மெல்ல மெல்ல யாரோ பாட்டிசைக்கிறார்கள்

அது யார் உன் கனவில் வந்து நிறைந்ததுசொல்!

Song: Aye dil mujhe batade  Film: Bhai Bhai 1956 Lyrics: Rajinder Krishan

Music ; Madan Mohan  Singer: Geeta Dutt

இது தமிழில் வந்த “ரத்த பாசம்” என்ற படத்தின் ஹிந்தி வடிவம். தமிழில் டி.கே. சண்முகம்-பகவதி சகோதரர்கள் நடித்ததுபோல் ஹிந்தியில் அஷோக் குமார்-கிஷோர் குமார் சகோதரர்கள் நடித்தனர். இந்தப் படத்தில் இருந்த 11 பாடல்களில் 7 பாட்டுகள் லதா மங்கேஷ்கர் பாடியவை!  [மதன் மோஹன் இசையில் லதா மங்கேஷ்கருக்கு சிறந்த இடம் இருக்கும்.] ஆனால் கீதா தத் பாடிய இந்தப் பாட்டு அனைத்தையும் விழுங்கிவிட்டது, மிகப் பிரபலமானது. இந்தப் பாட்டில் லதா, ஆஷா இருவரையும் மிஞ்சி விட்டார் கீதா! பாவம், அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ஆனால் இது நாயகி மேல் படமாக்கப்படவில்லை! நாயகியின் இடத்தைப் பறிக்க முயற்சி செய்யும் ஒரு பாத்திரம் பாடுவதாக வரும், Impish பாடல் எனலாம். ஆயினும் நிதானமிழக்காத சொற்கள், பாட்டின் கவிதைத் தரத்தை தக்கவைக்கின்றன. மெட்டு உண்மையிலேயே சொக்கவைக்கிறது!

ஆனால் மதன் மோகனின் இதயம் ‘கனமான’ பாடல்களில் சஞ்சரிக்கும், கஃஜலில் மூழ்கித் திளைக்கும். இதோ அப்படி ஒரு பாடல்.

மை பாகல்

main pagal mera manava pagal pagal meri preet re pagale-pan ki peed vo jaane bichhade jinka meet re mai pagal mera manavaa paagal

நான் ஒரு பைத்தியம் என் மனதின் போக்கும் பைத்தியமே!

என் காதலும் பைத்தியமே

இந்தப் பைத்தியத்தின் நிலை யாருக்குப் புரியும்?

தன் மனவமைதியை (காதலில்) யார் இழந்தார்களோ

அவர்களுக்கே புரியும்!

kahe ye duniya mai deewaana din me dekhoon sapne deewani duniya kya jaane deewani duniya kya jaane ye sapane hai apne ye sapane hai apne ghaayal man ki hansi udaaye ye duniya ki reet re, main paagal  

இவன் பைத்தியம், பகலில் கனவு காண்கிறான்

என இந்த உலகம் பேசுகிறது!

இந்தப்  பைத்தியக்கார உலகிற்கு என் கனவு எப்படிப் புரியும்?

காயம் பட்ட மனதைக் கண்டு கிண்டல் செய்வதுதானே

இந்த உலகத்தின் போக்கு!

நான் பைத்தியம்

chhupi hui meri kaya me raakh kisi paravaane ki ye meraa dukhiyaa jeevan hai rooh kisi diwane ki man ke toote taar bajaakar gaaun apne geet re


இந்த என் உடலில் ஒரு அன்புப் பைத்தியத்தின்

சாம்பல் மறைந்திருக்கிறது!

இந்த என் துக்கம் மிக்க வாழ்க்கையும்

ஒரு அன்புப் பைத்தியத்தின் ஆவியே!

மனதெனும் வீணையின் துண்டிக்கப்பட்ட நரம்புகளை மீட்டி

என் பாட்டைப் பாடுகிறேன்

நான் பைத்தியமே…..

Song: Main pagal mera manwa pagal Film: Aashiana 1952 Lyrics: Rajinder Krishan

Music: Madan Mohan Singer: Talat Mahmood


பொதுவாக, கஃஜல் உருதுவில் இருக்கும். இது எளிய ஹிந்தியில் இருக்கிறது. ராஜேந்த்ர க்ரிஷன் எளிய சொற்களை வைத்து அரிய கவிதை படைத்துவிட்டார்.

தலத் மஹ்மூத் இதைப் பாடிய அழகை என்னவென்று புகழ்வது! இந்த சொற்களை இவ்வளவு உணர்ச்சிபூர்வமாகப் பாடுவது வேறு எவராலும் இயலாதது!

இதற்கு கேதார் ராகத்தில் இசையமைத்திருக்கிறார் மதன் மோஹன்! ராக பாவம், பாட்டின் பாவம், பாடுபவரின் பாவம் மிக்க குரல்- மூன்றும் சேர்ந்து நம்மை வேறு உலகத்திற்கே இட்டுச்செல்கின்றன.

ஆனால் படத்தில் இதை ராஜ் கபூரின் மீது எடுத்து வீணடித்திருக்கிறார்கள். இத்தகைய அழுத்தமான பாடல்களை அவர் screen persona தாங்காது ! அதனால் தான் நாம் பாடல்களை தனியாகக்கேட்டு ரசிக்க முயலவேண்டும். சில பாடல்கள் சிலருக்குப் பொருந்துவதில்லை.

இதே படத்தில் “மேரா கரார் லேஜா” என்ற இன்னொரு அருமையான கஃஜலும் இருக்கிறது!

உண்மையில் மதன் மோஹன்தான் இந்த திரை உலகிற்குப் பொருந்தாத பைத்தியம்.! தன் தரத்தை விட்டுக் கொடுக்காதவர். வரும் புதிய அலைகளுக்குப் பணியாதவர், பல படங்களில் நல்ல இசை இருந்தும் இவருக்கு உரிய அங்கீகாரமோ, கவுரவமோ கிடைக்கவில்லை. 1970ல் பெற்ற தேசீய விருது ஒன்றுதான் இவருக்குக் கிடைத்த பரிசு.

நல்ல இசையிருந்தும், பல படங்கள் வெற்றி பெறவில்லை. இந்த பாய் பாய் படம் இவரைத் தூக்கிவிட்டது. 1964ல் வந்த “வோ கௌன் தீ” என்ற படமும் (இதில் “நைனா பர்ஸே” பாடல் மிகப் பிரசித்தி) 1966ல் வந்த ‘மேரா சாயா” படமும் ( இதில் ‘தூ ஜஹா(ன்) ஜஹா(ன்) சலேகா என்ற பாடல் பெரிய ஹிட்) அரிய இசையுடன் வெற்றியும் கண்டன. 1972ல் வந்த “பாவர்ச்சி” படமும் நல்ல இசையுடன் பெரிய ஹிட் ஆனது. இருந்தும் தனக்குரிய கவுரவம் கிடைக்கவில்லை என்ற குறை இருந்தது, பாட்டிலுக்கு அடிமையாகி 51 வயதிலேயே உயிர் நீத்தார். நூற்றுக்கணக்கான மெட்டுகள் எழுதிவைத்திருக்கிறார் என்று சொல்கிறார்கள். 2004ல் வந்த “வீர் ஃஜாரா” படத்தில் இவர் மெட்டுக்களைப் பயன்படுத்தினர்.

25 ஆண்டுகளே திரை இசைத்துறையில் இருந்த இவர் மறைந்து 45 ஆண்டுகளுக்குப் பிறகும் இவரை நினைக்கிறோம்! அதுவே இசையின் மகத்துவம்! அதுவே நாம் ஒரு அரிய கலைஞனுக்குத் தரும் “சல்யூட்” !

tags — ஹிந்தி படப் பாடல்கள் – 35

கதைகளின் தாயகம் பாரதம்-Part 1(Post No.7965)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7965

Date uploaded in London – – – 13 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

மூன்று கட்டுரைகள் உள்ள இந்தத் தொடரில் இது முதலாவது கட்டுரை!

கதைகளின் தாயகம் பாரதம்! ப்ருஹத் கதா, ப்ருஹத் கதா மஞ்சரி, கதா சரித் சாகரம்…… (1)

ச.நாகராஜன்

அற்புதமான கதைகள் அனைத்திற்கும் தாயகம் பாரதம். கற்பனாசக்தி மூலம் எப்படிப்பட்ட கதைகளை ஒரு சிறந்த கதாசிரியர் உருவாக்க முடியுமோ அப்படிப்பட்ட கதைகளை பாரத தேசம் உருவாக்கி உலகினர் முன் வைத்திருக்கிறது.

ராமாயணம், மஹாபாரதம், புராணங்கள் ஆகியவற்றில் உள்ள கதைகளைத் தவிர ப்ருஹத் கதா, ப்ருஹத் கதா மஞ்சரி, கதா சரித் சாகரா என இப்படி ஏராளமான நூல்கள் பாரதத்தில் படைக்கப்பட்டுள்ளன.

இவற்றை பெர்சிய மொழியில் பல அறிஞர்கள் மொழி பெயர்க்க, பின்னர் அவை ஆங்கிலம் உள்ளிட்ட பல மேலை நாட்டு மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

திகில், மர்மம், புதிர், கேள்வி-பதில் கதைகள், மறுஜென்மம் உள்ளிட்ட அதீத உளவியல் பற்றிய கதைகள், அற நீதிக் கதைகள், விஞ்ஞானக் கதைகள் என முடிவில்லா தீம்களை – கருக்களைக் கொண்ட கதைகள் இவை.

கதைக்குள் கதை என்னும் உத்தி உட்பட ஏராளமான உத்திகளை இந்த நூல்களே முதலில் உலகினருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளன.

ப்ருஹத் கதா

மிக பிரம்மாண்டமான நூல் ப்ருஹத் கதா. இதை எழுதியவ குணாத்யர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த நூல் இன்று கிடைக்கவில்லை. ஒரு லக்ஷம் ஸ்லோகங்கள் கொண்டது ப்ருஹத் கதா. மஹாபாரதமும் ஒரு லக்ஷம் ஸ்லோகங்கள் கொண்டது என்பதை ஒப்பிடும் போது ப்ருஹத் கதா எப்படிப்பட்ட கதைகளைக் கொண்டிருக்கக்கூடும் என்பதை நன்கு ஊகிக்கலாம்.

இது எழுந்த விதமே ஒரு சுவையான கதை.

புஷ்பதந்தர் என்பவர் சிவ பக்தர். ஒரு முறை அவர் பரமசிவனும் பார்வதியும் கைலாசத்தில் பேசிக் கொண்டிருந்ததை ஒட்டுக் கேட்டார். இதனால் கோபமுற்ற சிவபிரான் அவரை பூவுலகில் பிறக்க சபித்ததோடு சாபம் நிவர்த்திக்கவும் வழி சொன்னார்.

பூவுலகில் பிறந்த புஷ்பதந்தர் பூவுலகில் வரருசி என்ற பெயரில் பிறந்தார்; வளர்ந்தார்.

கணபூதி என்ற சிவபக்தரின் அறிமுகம் அவருக்குக் கிடைத்தது. கணபூதி அவரிடம் ஒரு கதை சொல்ல உடனே வரருசிக்குத் தன் பூர்வ ஜென்ம ஞாபகம் வந்தது.

வரருசி உபகோசை என்ற மங்கையைக் கண்டு மோகித்து மணம் செய்து கொண்டார். பின்னர்  அவர் பத்ரிகா என்ற முனிவரைக் காணச் சென்றார். அவரைக் கண்ட பின்னர் வரருசி அக்னி வளர்த்து அதில் தன் உடலை ஆகுதியாக்கி வானுலகம் சென்றார்.

கணபூதிக்கு ப்ருஹத் கதாவை எழுதிய குணாத்யர் தன் கதையைச் சொன்னார்.

அந்தக் கதையின் சுருக்கம் இது:

சம்ஸ்கிருதம், மற்றும் அந்தக் காலத்தில் வழங்கி வந்த இதர மொழிகளில் காவியம் படைக்க மாட்டேன் என்று சூளுரை கொண்ட குணாத்யர் பைசாச மொழியில் தன் காவியத்தை – உலகின் சகல கதைகளும் அடங்கிய ப்ரஹத் கதையைச் செய்தார்.

அதை எழுதியதும் தன் இரத்தத்திலேயே எழுதினார். இப்படி இரத்தத்தினால் பைசாச மொழியில் எழுதப்பட்ட காவியத்தை யாராலும் திருட முடியாது என்பது அவர் நம்பிக்கை.

அவர் வாழ்ந்த நாட்டை ஆண்டு வந்த மன்னன் பெயர் சாதவாஹனன். அவன், ‘பைசாச மொழி ஒரு  காட்டுமிராண்டி மொழி. அதிலும் அந்த மொழியில் தன் ரத்தத்தினால் எழுதிய ஒரு நூலை என்னால் ஏற்கவே முடியாது’ என்று கூறி விட்டான்.

இதைக் கேள்விப்பட்ட குணாத்யர்  மனமுடைந்து போனார்.

அருமையாக கஷ்டப்பட்டு எழுதிய நூலை மன்னன் ஏற்கவில்லையே என வருந்திய அவர் தான் எழுதிய நூல் சுவடிகளை ஒவ்வொன்றாக தான் வளர்த்த அக்னியில் போட ஆரம்பித்தார்.

இந்தச் சமயத்தில் சாதவாஹன மன்னனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே அவன் குணாத்யரைத் தேடி வந்தான்.

அப்போது தான் அவன் குணாத்யர் தான் எழுதிய நூலை அக்னிக்கு ஆகுதியாக்கும் காட்சியைக் கண்டு திடுக்கிட்டான்.

ஓடிச் சென்று அவரைத் தடுத்து தன் செயலுக்கு மன்னிப்பு கேட்டான்.

எரிக்காமல் பாக்கி இருந்த ஒரு பகுதி தான் ப்ருஹத் கதா! (ஒரு லக்ஷம் ஸ்லோகங்கள்!)

குணாத்யர் சுவர்க்கம் ஏக, சாதவாஹனன் ப்ருஹத் கதாவை நாடு முழுவதும் பரப்புகிறான்.

இது தான் ப்ருஹத் கதா எழுந்த கதை!

குணாத்யர்  வேத வியாஸரின் மறு அவதாரமாகக் கருதப்பட்டிருக்கிறார். நேபாள மாஹாத்யமோ அவரை வால்மீகியுடன் ஒப்பிடுகிறது.

குணாத்யர் சாதவாஹன மன்னனின் அரசவையில் அமைச்சராக இருந்தார் என்பது தெரிய வருகிறது.

இவர் வாழ்ந்த காலத்தைப் பல்வேறு அறிஞர்கள் வெவ்வேறு விதமாகக் கூறியுள்ளனர்.

கி.பி. 60 முதல் கி.பி. 600 வரை இந்த அறிஞர்களால் இவரது காலம் சொல்லப்படுவதால் இந்தக் காலத்திற்குள் இவர் வாழ்ந்தார் என்று கொள்ளலாம்!

ப்ராக்ருத மொழியிலோ சம்ஸ்கிருத மொழியிலோ தான் எழுதப் போவதில்லை என்று இவர் சபதம் செய்திருந்ததாலேயே பைசாச மொழியில் இவர் தனது நூலை எழுதினார் என ஒரு கருத்து நிலவுகிறது.

 உஜ்ஜயினியில் மன்னன் மதனன் அரசவையில் இவர் இருந்ததாக இன்னொரு செய்தி கூறுகிறது. சர்வவர்மன் உஜ்ஜயினியை ஜெயிக்கவே இவர் புலஸ்தியரின் அறிவுரைப்படி பைசாச மொழியில் எழுதினார் என்றும் ஒரு செய்தி உண்டு.

குணாத்யர் காஷ்மீரில் வாழ்ந்ததாகப் பெரும்பாலானோர் கருதுகின்றனர்.

ஆனால் க்ஷேமேந்திரரோ அவர் தக்காணத்தில் கோதாவரி நதி தீரத்தின் அருகில் வாழ்ந்ததாகக் கூறுகிறார்.

ப்ருஹத் கதாவினால் உத்வேகம் பெற்ற இரு மாபெரும் கவிஞர் ப்ருஹத் கதாவை அப்படியே சுவை குன்றாமல் சம்ஸ்கிருத மொழியில் இயற்றினர்.

ப்ருஹத் கதாவின் அடிப்படையில் சோமதேவர் கதா சரித் சாகரத்தை இயற்றினார்.

க்ஷேமேந்திரர் ப்ருஹத் கதா மஞ்சரியை இயற்றினார்.

தமிழில் கொங்கு வேளிரின் பெருங்கதையும் இதன் அடிப்படையில் பிறந்ததே.

இந்த நூலை அரும்பாடு பட்டுக் கண்டுபிடித்து வெளிக் கொணர்ந்தவர் மஹாமஹோபாத்யாயா உ.வே.சாமிநாதையர் அவர்கள்.

அடுத்து ப்ருஹத் கதாவின் அடிப்படையில் எழுந்த இன்னும் இரு நூல்களும் உண்டு. நேபாளத்தில் கிடைக்கும் ப்ருஹத் கதா ஸ்லோக சங்க்ரஹம் நூலை இயற்றியவர் புதஸ்வாமின். ஜைன மதத்தின் அடிப்படையில் வாசுதேவஹிந்தி இயற்றிய நூலும் ஒன்று உண்டு.

அடுத்த கட்டுரையில் இன்னும் சில செய்திகளைப் பார்ப்போம்!

tags- கதைகளின் தாயகம் -1, பாரதம், குணாத்யர் ,ப்ருஹத் கதா

–subham–

SWAMI CROSSWORD 1252020 (Post No.7964)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7964

Date uploaded in London – 12 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ACROSS

1.– 10 letters- wife of Sri Ramakrishna Paramahamsa.

6.– 7– Commander of Vijaya Nagara Forces who came with his wife to Madurai; defeated all Muslim invaders along his route.

8. –8– Vahana of Lord Shiva

11. – 7–Village chief, pre eminent

12. – 2- Brahma, Prajapati; genera meaning Who in Sanskrit

13. – 5–English word ‘Name’ came from this Sanskrit word

14.– 3–water in Vedas

15. –6–  bolt or lock; short sound pot of clay

16. – 8– Lion head; body of man ; Vishnu’s Avatar

DOWN

1. – one of the three brothers of Rama. But bot Bharata or Lakshmana.

2.– 9—Save me or protect me in Sanskrit; it comes very often in Bhajan songs.

3.—9– Nala’s wife-

4. – 4—long sound. God’s huge and expanded form

5.–6–Sugarcane; there is a dynasty with this name

7.– 5- boat; English word navy, naval came from this Sanskrit word

9. Bijakshara mantra with H in the beginning.

10. a caste name now; originally meant one who leads; a leader; also army rank equivalent to corporal.

–subham–

GLORY OF NARADA — SADGURU SRI TYAGARAJA-3 (Post No.7963)

             GLORY OF  NARADA — SADGURU SRI TYAGARAJA-3 (Post No. WRITTEN BY R. NANJAPPA                          

Post No.7963   Date uploaded in London – – – 12 May 2020    Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.    

 SADGURU SRI TYAGARAJA-3                                       
R. Nanjappa

          The Glory of Narada



Since we are talking about ‘sadguru’, it is necessary to have a clear idea about what we mean by ‘guru’. In popular usage this term is applied to many – right from a school teacher to one who teaches a vidya like music, or imparts a mantra, gives diksha in a tradition, etc. A religious guru is one who ‘initiates’ a person in a particular path or parampara. Different traditions trace their origin from different sources. Smartas speak of :
 Sadashiva samarambham Sankarachrya madhyamam  Asmad acharya paryantam vande guru paramparam. They also speak of Dakshinamurti as AdiGuru. Smartas recite this Slokam  also:


VasudevasutamdevamKamsachanuramardanam
DevakiparamanandamKrishnamvandeJagadgurum.
Dakshinamurti  teaches in silence- gurostu maunam vyakyanam. Krishna is the speaking guru-who taught us the Gita. Arjuna calls Krishna ” Gurur Gariyan”- the great guru in the Gita. In our religious lore there are many interesting debates about guru- whether he should be in a human form, whether there should be a living guru, etc. In the Upanishad, we have an instance where a student claims that he was taught ‘by others than men’. In the Bhagavatam we have the story of Dattatreya who had 24 gurus, including python and vulture.


In spiritual life, the role of the guru is not simply to instruct  or impart a vidya or technique. It is not just to inform, but to transform. This does not come about by any amount of instruction but by the transmission of an energy which sparks off the divine element in the disciple and launches him on the sadhana or genuine spiritual quest. This can be done only if the guru himself has that energy. The guru should know the Truth by experience to be able to make the disciple understand. That is why in the Gita Bhagavan says:

Tadviddhipranipatenapariprasnena sevaya
Upadekshyantitejnanamjnanina:tatvadasina:  4.34

Know that, by prostrating yourself, by questions and by service; the wise , those who have realised the Truth will teach you.


So here Bhagavan lays down the qualification for the true guru: he must have realised the Truth, ie Brahman. Mere theoretical knowledge, or expertise in mantra/tantra does not make one a spiritual guru. (Shirdi Sai Baba has explained this sloka in a unique manner. Please see Sai Sat Charita by Hemadpant.)   Most Hindus are born in some tradition  and they have a paramparic guru in religious matters. We see this subject mentioned in The Gospel of Sri Ramakrishna often. But this tradition has largely disappeared in modern conditions. But even such paramparic Gurus do not qualify as spiritual gurs in all cases.  

Anna Subrahmanya Iyer says in his translation of Sundara Kandam that those who have no guru may take Hanuman as the guru. He is “Jnaninam agraganyam”- the first among Jnanis, besides being the greatest bhakta! It is agreed by all authorities that Guru is indispensable for spiritual life.He alone is the true guru who has realised the Truth. This is beautifully explained by Samartha Ramadas in his ” Dasa Bodham”. The gist of it is: “The external world ie  the things apprehended by the senses and mind become the object of mental perception. But Atma is the real knower, is the object of true knowledge and finally It alone remains As It Is. This is the state of one who has realised the Truth. Only this much can be indicated in words. This is something which can only be experienced, and not explained in words. The experienced guru imparts this understanding to the fit disciple. It is the  guru’s experience which is reflected in the disciple’s heart.This cannot be gained in any other manner.”

              From: Swaminatha Atreyan: Sri Samartha Ramadas Chartam                                                                                    (Tamil)  p.329-330.                                                 

Tyagaraja  belongs to Telugu Smarta tradition. His father was a learned and devout man, given to panchayatana puja. He had taken formal upadesa in Rama Taraka Mantra  and acquired expertise in expounding Ramayana. Tyagaraja grew up in this atmosphere and had imbibed a lot of religious lore through shruti ( as happened in the case of Sri Ramakrishna), besides breathing the very spiritual atmosphere that prevailed. He was also taught by his father both Sanskrit and Telugu. Later, he joined Raja Veda Pathasala for formal religious studies. He also learned music formally  from a well-known teacher and was initiated in Rama Shadakshari Mantra by an intinerant Sadhu. He acquired some rare music manuscripts kept by his maternal grandfather, one of them being authored by Narada. He could not understand it , but fortunately met the Sadhu again, who initiated him in Narada mantra. As a result of the intense japa, he had a vision of Narada and got further guidance and enlightenment from him. It is necessary to know these details to understand how essential it is to have a proper guru even for worldly knowledge, and how the extraordinary achievements of Tyagaraja are due to the blessings of a Divine guru like Narada. Tyagaraja himself sings:  NARADAGURUSAMI  (Durbar)



NaradaGurusamiikanaina nannu
Aadarimpavemiea karavemi.

Saregusangitayoga naigama
Paarangatudainaparama pavana

Itihasapuranagama charitamu
levarivalla kalige
Patinidanamiyyabuddhi Satyabhamaku
etula kalige

Dyutijitacharadabhraninuvina muni
yatulakevaru salige
KsitiniTyaarajavinuta nammiti
chintadirchiPrahladunibrochina….Narada gurusami..

OSriNaradaguruswami(whoimparts wisdom)
Canyounotblessmeatleast now?
Whyistheresuchscarcityofyour blessings?

OSacredMurti!WhohasmasteredSangita, Yogasastra, Veda-Vedanga etc





1. Who else other than you could have shed light on Itihasa, Purana, Veda, the Holy histories, and spread theirglory ?
2. Who else could have granted Satyabhama such fitness of mind as to give up her own husband in dana?
3. O  one with an effulgent body shining like the clear  clouds in the  sharad ritu!


Who other than you is the refuge for Munis and yatis? 4. In this world I rely entirely on you. O Narada Guruswami! You saved Prahlada and destroyed his worries! Here, Tyagaraja qualifies Narada on three counts: he is the master of Sangitahe is the master of Yogahe is the master of Nigama ie Veda-Vedanta We do not come across any other figure in our tradition combining all these three! So, we can hold Narada as the initiator of a new spiritual tradition!   When we study the sahitya of Sri Tyagaraja, we realise with wonder that his work is full of all that he has stated here: it draws fully on Itihasa-Purana, is soaked in the spirit of Veda-Vedanta and advocates Yoga ( at least Bhakti-Jnana and Nada yoga!) He has topped his list with the mention of Prahlada. And he himself wrote a full musical drama on the subject: Prahlada Bhakti Vijayam! Prahlada was fortunate to listen to the spiritual instruction of Narada even before he was born, though he was born in an asura family. And in our tradition, he is mentioned first at the head of all bhaktas: Prahlada Narada Parashara Pundalika Vyasambarisha Sukha Saunaka Bhishma dalpyan Rukmangadarjuna Vasishtha Vibhishanadin Punyaniman parama Bhagavatan smarami.   Tyagaraja Swami is fully aware of the importance of the subject. So, he sings again a kriti on Narada  in this Vijayam.  

Narada muni vedalina suguna- adisayamu vinare   Saareku Srihari pada saramula dhyaninchuchu Narayana namamulanu bharayana monarinchuchu   Bheda bheda rahitamagu Vedanta rasa bharituda Ahladamu meeraga  Prahladunaku subhamu delupanu….Narada muni…   Oh! listen to the wonder of how Narada Muni came visiting! Listen to the wonder of how he comes, thinking incessantly of Srihari, and singing always the praises of Narayana! Narada, who is always immersed  in the Vedanta rasa, which transcends all differences and non-differences ( ie is Jnana), who is full of joy, comes to tell auspicious words to Prahlada!   Tyagaraja  has added a ‘phalasruti’ to this part. He states there:   Sri Ramabrahma tanaya Tyagarajena nirmitam Prahlada bhakti vijaya prabhandam bhukti muktidam Ye gayanti sada bhktyaye srunvanti cha sraddhaya Ye patanti sada preetya teshaam sarvaga nasanam.   This prabhanda, Prahlada Bhakti Vijayam, written by Tyagaraja son of Ramabrahmam, can confer both happiness in this world, and Liberation hereafter.

Those who sing this with devotion,listen to it with sraddha, and read it eagerly- all their sins will be destroyed.   Sri Tyagaraja thus reveals his devotion to Narada, who is his guru. He portrays Narada as both a Jnani and Bhakta- his thinking of Hari and singing of Narayana indicates his status as a bhakta-bhagavata; his mastering the Vedanta rasa indicates the heights of jnana he has attained. Can there be a better guru? And can there be doubt that Tyagaraja who himself combines Jnana, bhakti and Yoga is a Sadguru? Is he not Narada reincarnated? Let us fall at his feet.                                                      ***  


கரும்பு பற்றிய இரண்டு பழமொழிகளைக் கண்டு பிடியுங்கள் (Post No.7962)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7962

Date uploaded in London – 12 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

கரும்பு பற்றிய இரண்டு பழமொழிகளைக் கண்டு பிடியுங்கள்

விடை கீழே கொடுக்கப்பட்டுள்ளது


விடைகள்

கரும்பு தின்னக் கூலியா ?

கரும்பும் எள்ளும் கசக்கினால்தான் பலன்


TAGS – கரும்பு ,பழமொழி, கண்டு பிடியுங்கள், 

ஹிந்தி படப் பாடல்கள் – 34 – அதிக எண்ணிக்கை? எச்சரிக்கை! (Post No.7961)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No.7961

Date uploaded in London – – – 12 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் – 34 – அதிக எண்ணிக்கை? எச்சரிக்கை!

R. Nanjappa

அதிக எண்ணிக்கை? எச்சரிக்கை!

முன்பெல்லாம் நீருக்காக ஆற்றுக்கோ, குளம் குட்டைக்கோ போகவேண்டும். வீட்டில் கிணறு இருந்தால்  இறைத்துக் கொள்ளலாம். அது நம் வசத்தில் இருந்தது. இன்று குழாயில் நீர் வருகிறது. வரும்போது பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ஆனால் எத்தகைய நீர் வருகிறது? அப்படியே அருந்துவதற்கில்லை. வடிகட்ட வேண்டும்.

அதுபோல் இன்று இசை டி.வி, இன்டர்னெட் வாயிலாக வீடுதேடி வருகிறது 24X7. ஆனால் அதன் தரம்? இங்கு எந்த “ஃபில்டர்” போடுவது? சில உரைகல் தேவை. நல்ல திரை இசைக்கு ஒரு அளவுகோலாக  இருப்பது அதன் பொற்காலத்திய இசை.- 50களில் வந்த இசை.

திரை இசையின் தரம் குறைந்ததற்கு ஒரு முக்கிய காரணம் எண்ணிக்கை!  வருடத்தில் நூற்றுக் கணக்கில் படங்கள் வருகின்றன, ஒவ்வொன்றிலும் சுமார் 7-8 பாடல்கள்! அதே சில இசைஞர்கள்! அவர்களும் என்ன செய்வார்கள்?

பொற்காலத்திற்கு முன் வந்த இசைஞர்களை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு நௌஷத்-50 வருஷங்களில் சுமார் 65 படங்களுக்கு இசையமைத்தார். எஸ்.டி பர்மன் அதே ஆண்டுகளில் 95 படங்கள். அனில் பிஸ்வாஸுக்கு அதே  சமயத்தில் 90 படங்கள். ஸி.ராம்சந்த்ராவுக்கு 30 ஆண்டுகளில் 104 படங்கள். ஷங்கர்-ஜெய்கிஷனுக்கு 22 ஆண்டுகளில்  (ஜெய்கிஷன் இருந்தவரை) சுமார் 130 படங்கள். வசந்த் தேசாய்க்கு 46, ஜெய்தேவுக்கு 40, ஸலில் சவுத்ரிக்கு 75 படங்கள். ரோஷன், ஹேமந்த் குமார் போன்றவர்களுக்கு சுமார் 50 தான். இவர்கள் இசையமைத்த பாடல்களை இன்னமும் விரும்பிக் கேட்கிறார்கள்.

பிறகு வந்தவர்களைப் பாருங்கள்.ஆர்.டி.பர்மனுக்கு 25 வருஷங்களில் 300 படங்கள்; கல்யாண்ஜி-ஆனந்த்ஜீக்கு சுமார் 300 படங்கள்; லக்ஷ்மீகாந்த்-பியாரேலாலுக்கு 635 படங்கள்! தரம் எங்கிருந்து வரும்? இவர்கள் இசையமைத்த பாடல்களில் எத்தனை நினைவில் இருப்பவை? விரல்விட்டு எண்ணலாம்.

மலைக்கள்ளன் படத்தை ஹிந்தியில் “ஆஃஜாத்” என்ற பெயரில் எடுத்தார் தயாரிப்பாளர் ஸ்ரீராமுலு நாயுடு. இசைக்கு நௌஷத்தை அணுகினார். மூன்றுமாதத்தில் இசை தயாராக வேண்டுமென்றார். “வந்த வழியைப்  பாரும், நான் ஃபேக்டரி இல்லை” என்று சொல்லிவிட்டார் நௌஷத்!.  அப்போதைக்காக இசையமைப்பதில்லை என்பது அவர் கொள்கை. ஒரு படம் எவ்வளவு சிறந்ததாக இருந்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க முடியாது. சில  நடிகர்-நடிகையர் முகத்தையே  திரும்பத் திரும்ப  எத்தனை முறை பார்த்துச் சகிக்க முடியும்? எத்தகைய படமும் அதிக நாள் நினைவிலிருக்காது, நல்ல இசை நிலைத்து இருப்பது! 

பாடகர்களின் நிலையும் அதுதான்- அதிகம் பாடப்பாட தரம் தாழ்ந்து போகிறது!. ரஃபி சுமார் 7000 பாடல்கள் பாடியிருக்கிறார்; கிஷோர் பாடியவை 2700; மன்னாடே 4000 (வங்காளிப் பாடல்களும் சேர்ந்து) முகேஷ் 1300, தலத் மஹ்மூத் 800; ஹேமந்த் குமார் இன்னமும் குறைவு. தலத் பாடிய பாடல்களில்  80% சிறந்தவை; முகேஷ் பாடல்களில் 25% சிறந்தவை எனலாம். ஹேமந்த் குமார் பாடியவற்றில் 90% சிறந்தவை எனலாம். ஆனால் ரஃபி, விஷயத்தில் 5%, கிஷோர், மன்னா டே விஷயத்தில்? 10% தேறினால் அதுவே அதிகம்! இதற்கு பாடகர்களைக் குற்றம் சொல்லவேண்டாம். அவர்களை அப்படிப் பாட வைக்கிறார்கள்! உண்மையில் கிஷோர் குமாருக்கு இந்த நிலை பிடிக்கவில்லை-80களில் இசையின் தரம் சரிந்து வருவது கண்டு, பாடுவதை நிறுத்திவிட்டு சொந்த ஊருக்கே திரும்பிப் போக நினைத்தார்-  பாவம், உலகை விட்டே கிளம்பி விட்டார்.

சில பாடல்களே பாடியிருந்தாலும் சிலர் பாடிய பாடல்கள் 60 ஆண்டுகள் கழித்தும் நினைவில் நிற்கின்றன. அத்தகைய இரு பாடல்களைப் பார்ப்போம்.

சுப் ஹை தர்தி

चुप है धरती, चुप हैं चाँद सितारे 

मेरे दिल की धड़कन तुझको पुकारे
खोये खोये से ये मस्त नज़ारे ठहरे ठहरे से यह रंग के धारे

 ढूंड रहे हैं तुझको साथ हमारे
चुप है धरती
आअ हा
कोने कोने मस्ती फैल रही है, बाहें बनकर हस्ती फैल रही है,

 तुझ बिन दूबे दिल को कौन उभारे,
चुप है धरती

निखरा निखरा है चाँद का जौवन, बिखरा बिखरा है 

नूर का दामन,

 आजा मेरी तन्हायी के सहारे
चुप है धरती

சுப் ஹை தர்தி, சுப் ஹை சாந்த் ஸிதாரே

மேரே தில் கீ தட்கன் துஜ் கோ புகாரே

பூமி முழுவதும் அமைதியில் ஆழ்ந்து கிடக்கிறது

வானிலும் நிலவும் தாரகைகளும் அமைதியில் மூழ்கிவிட்டன.

இந்த அமைதியில் என் மனம் உனக்காக ஏங்கி நிற்கிறது!

கோயே கோயே ஸே யே மஸ்த் நஃஜாரே,

டஹரே டஹரே ஸே யஹ் ரங்க் கே தாரே

டூண்ட் ரஹே ஹை(ன்) துஜ் கோ ஸாத் ஹமாரே

சுப் ஹை தர்தீ

சுற்றுப்புறம் எங்கும் ஆனந்தக் களிப்பில் அமிழ்ந்து கிடக்கிறது

அதன் வண்ண வெள்ளம் அங்கங்கே தங்கி நிற்கிறது

நீ உடன் இருக்கவேண்டுமென மனம் தேடுகிறது

கோனே கோனே மஸ்தீ ஃபைல் ரஹீ ஹை

பாஹே(ன்) பன்கர் ஹஸ்தீ ஃபைல் ரஹீ ஹை

துஜ் பின் டூபே தில் கோ கௌன் உபாரே

சுப் ஹை தர்தீ சுப் ஹை .

.மகிழ்ச்சி அலை ஒவ்வொரு இடத்திற்கும் பரவுகிறது

மகிழ்ச்சி தன் கரங்களை விரித்து அணைக்க விழைகிறது

உன்னைத் தவிற வேறு யார் என் மனதை ஊக்குவிக்க முடியும்?

நிக்ரா நிக்ரா ஹை சாந்த் கா ஜௌபன்

பிக்ரா பிக்ரா ஹை நூர் கா தாமன்

ஆஜா மேரீ தன்ஹாயீ கே ஸஹாரே

சுப் ஹை தர்தீ, சுப் ஹை சாந்த் ஸிதாரே

இளமை தவழும் சந்திரன் புதிய பொலிவுடன் விளங்குகிறது

அதன் கிரணங்கள் எங்கும் பரவியிருக்கின்றன

என் தனிமைக்குத் துணையாக இங்கே வா!

பூமி முழுவதும் அமைதியில் ஆழ்ந்து கிடக்கிறது

Song: Chup hai dharti  Film: House No.44 1955 Lyricist: Sahir Ludhianvi

Music S.D.Burman  Singer: Hemant Kumar

சந்திரனைப் பற்றிச் சொல்லும் காதல் பாட்டுக்களை எண்ணுவது கஷ்டம்! அவற்றில் இப்பாட்டு ஒரு தனியிடத்தைப் பிடித்திருக்கிறது! (‘ஜால்” படப் பாட்டு போல- அதுவும் இதே பாடகர்-கவி-இசைஞர் கூட்டு)

மிக அருமையான கவிதை- ஹிந்தியும் உருதும் பயின்று வருகின்றன. “நிக்ரா நிக்ரா ஸ ஹை சாந்த் கா ஜௌபன், பிக்ரா பிக்ரா ஸ ஹை நூர் கா தாமன்” இந்தக் கவிதைக்கே சிகரமாக வரும் வரிகள்!

ஹேமந்த் குமாரின் குரலில் இப்பாட்டிற்குத் தனிமெருகேறுகிறது!

இப்படத்தில் ஹேமந்த் குமார், தேவ் ஆனந்திற்காக மூன்று பாடல்கள் பாடியிருக்கிறார்- மூன்றும் டாப் ஹிட் ஆனவை. ஒரு ஹீரோவுக்கு ஒரு குரல் என்ற விதிக்கு எஸ்.டி பர்மன் என்றும் கட்டுப்பட்டவரல்ல. ஒரே படத்தில் ஹேமந்த் குமார், ரஃபி, மன்னாடே, கிஷோர் குமார் என எவரையும் பாடவைப்பார். சில பாடல்களே பாடியிருந்தாலும் ஹேமந்த் குமார் பாடல்கள் நினைவில் நிற்பவை. 

மன்ஃஜில் வஹீ ஹை ப்யார் கீ

मंज़िल वही है प्यार की, राही बदल गए
सपनों की महफ़िल में हमतुम नए
मंज़िल वही है प्यार की, राही बदल गए

दुनिया की नज़रों से दूर, जाते हैं हमतुम जहाँ
उस देश की चाँदनी गाएगी ये दास्ताँ
मौसम था वो बहार का, दिल थे मचल गए
सपनों की महफ़िल में हमतुम नए
मंज़िल वही है प्यार की, राही बदल गए

छुप ना सके मेरे राज़, नग़्मों में ढलने लगे
रोका था फिर भी ये दिल पहलू बदलने लगे
ये दिन ही कुछ अजीब थे, जो आजकल गए
सपनों की महफ़िल में हमतुम नए
मंज़िल वही है प्यार की, राही बदल गए

மன்ஃஜில் வஹீ ஹை ப்யார் கீ ராஹீ பதல் கயே

ஸப்னோ(ன்) கீ மஹஃபில் மே, ஹம்தும் நயே

காதலின் இலக்கு அதுவாகவே இருக்கிறது,

ஆனால் அந்தப் பாதையில் பயணிகள் மாறிவிட்டனர்!

இந்தக் கனவுக் களிப்பில் நாம் இருவரும் புதியவர்கள்

துனியா கே நஃஜ்ரோ(ன்) ஸே தூர், ஜாதே ஹை ஹம்தும் ஜஹா(ன்)

உஸ் தேஷ் கீ சாந்த்னீ காயேகீ யே தாஸ்தா(ன்)

மௌஸம் தா வோ பஹார் கா, தில் தே மசல் கயே

ஸப்னோ(ன்) கீ மஹஃபில் மே ஹம்தும் நயே

மன்ஃஜில் வஹீ ஹை ப்யார் கீ

.

நாம் உலகின் பார்வையிலிருந்து வெகுதூரம் போகிறோம்

அங்கு வீசும் நிலவொளி இந்தக் கதையைப் பாடும்

அது வஸந்த காலம், மனம் மகிழ்ச்சியில் துள்ளியது

கனவின் இந்தக் களிப்பில், நாம் இருவரும் புதியவர்கள்!….

சுப் ஸகே மேரே ராஃஜ்நக்மோ மே டல்னே லகே

ரோகா தா ஃபிர் பீ யே தில் பஹ்லூ பதல்னே லகே

யே தின் பீ குச் அஜீப் தே ஜோ ஆஜ்கல் கயே

ஸப்னோ(ன்) கீ மஹ்ஃபில் மே ஹம் தும் நயே

என் ரகசியத்தை மறைத்துவைக்க முடியவில்லை– 

பாட்டில் வெளிவந்து விட்டது!

மனதை அடக்கினாலும், மாற்றம் முகத்தில் தெரிகிறதே

இந்த சமீப நாட்கள் வித்தியாஸமானவை தான்!

Song: Manzil wohi hai pyar ka  Film: Kathputli 1957 Lyrics: Shailendra

Music: Shankar Jaikishan  Singer: Subir Sen

இந்தப் பாடலை அசப்பில் கேட்பவர்கள் பாடியது ஹேமந்த் குமார் என நினைப்பார்கள்! சுபீர் சென் குரல் ஹேமந்த் குமார் குரல் போலவே இருக்கும்- மிகவும் கவனித்துக் கேட்டால்தான் வித்தியாசம் தெரியும்!

ஹேமந்த் குமார் குரலில் இருக்கும் ஆழம், கம்பீரம் இதில் இல்லை. ஆனால் இந்தப் பாட்டு இவருக்குப் பொருந்தியிருக்கிறது. இவரை குரு தத் பம்பாய்க்கு வரவழைத்தார் என்பர். இது இவர் பாடிய முதல் பாட்டு- இதற்குப் பிறகு பிரபலமானார். வங்காளத்திலும் பாடினார். ஆனாலும் இவர் ஹேமந்த் குமாரின் சமகாலத்தவரானதால் அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 

இந்தப் பாடல் ஒரு Stunning composition. படத்தில் ஒரு முக்கிய இடத்தில் வருகிறது-சில விஷயங்களை சொல்லாமல் சொல்கிறது, அருமையான கவிதை வழக்கம் போல் பழகு ஹிந்தியில் எழுதிவிட்டார் ஷைலேந்த்ரா!

இந்தப் படத்தில் ஷங்கர்-ஜெய்கிஷனின் இசை அபாரம்! இவர்களே சுபீர் சென்னுக்குப் பல படங்களில் பாட வாய்ப்பளித்தனர். இவர் ஆஸ் கா பஞ்சீ படத்தில் பாடிய “தில் மேரா ஏக் ஆஸ் கா பஞ்சீ” என்ற பாட்டும் பிரபலம்.

நான் தமிழில் படித்த முதல் ஹிந்தி பட விமர்சனம் இதைப் பற்றியது தான்! 1957ல் தினமணி கதிரில்  [அப்போது ஞாயிற்றுக்கிழமை இதழுடன் வரும்] இதை  விமர்சனம் செய்திருந்தார்கள். முக்கியமாக இசையைக் குறிப்பிட்டு  எழுதியிருந்தார்கள். பாடல்களை ரேடியோ சிலோனில் கேட்போம்.

நான் சினிமா விமர்சனம் செய்வதில்லை, அதிகம் சினிமாவும் பார்ப்பதில்லை- பாட்டு கேட்பதோடு சரி! ஆனால் இந்த விமர்சனம் பள்ளி நாட்களில் படித்ததால் இது மனதிலிருந்தது-1966ல் படம் பார்க்கக் கிடைத்தது. இது  அமியா சக்ரவர்த்தி எடுத்த படம் [அவரது பிற படங்கள் தாக், பதீதா ஸீமா மூன்றிலும் ஷங்கர் ஜெய்கிஷன் இசையே- நல்ல குறிப்பிடத் தகுந்த பாடல்கள் இருக்கும்] அவரே இயக்கினார், இடையில் காலமானார். வேறொருவர் முடிக்கவேண்டியதாயிற்று. இந்தக் குழப்பத்தில் படம் சரியாக அமையவில்லை. [இந்தக் குழப்பத்திற்கு இந்தப் பாட்டும் ஒரு காரணம்!] ஆனால் சிறந்த இசை. இதில் வைஜயந்திமாலாவின் அருமையான நடனங்கள், கமலா லக்ஷ்மண் டான்ஸும் கூட! 

சுபீர் சென் கதை பாடகர்களாக விரும்புபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை. ஒருவர் குரலில் தனித்தன்மை-ஏதாவது விசேஷ அம்சம் இருக்கவேண்டும்! வேறொருவர் குரல் போல இருந்தால் எடுபடுவதில்லை. ஹிந்தி இசையில் பாடகிகளில் சுமண் கல்யாண்பூருக்கும் இதே கதிதான் நேர்ந்தது! அவர் குரல் அசப்பில் லதா குரல் மாதிரியே இருக்கும்-அதனாலேயே அவருக்கு வாய்ப்புகள் வரவில்லை! இது ஒரு துயர நிலை. வேண்டுமென்றே வேறொருவரைப்போலப் பாடுவது ஒன்று, இயல்பாகவே குரல் அப்படி அமைந்திருப்பது ஒன்று! இரண்டும் திரையிசையில் எடுபடுவதில்லை!

ஹேமந்த் குமார், சுபீர் சென் போன்றவர்கள் அதிகம் பாடவில்லை, ஆனால் அவர்கள் பாடிய பாட்டுக்கள் விரும்பிக் கேட்கப்படுகின்றன. எண்கள் முக்கியமில்லை- தரமே நிலைக்கும்.

It is not growing like a tree

In bulk, doth make man better be;

Or standing long an oak, three hundred year,

To fall a log at last, dry, bald, and sere:.

In small proportions we just beauties see

And in short measures life may perfect be.

                                                       -Ben Jonson, 1640

tag –ஹிந்தி படப் பாடல்கள் – 34

xxx subham xxx

இடைஞானியார் வரலாறு! (Post No.7960)

WRITTEN BY S NAGARAJAN                                    

Post No.7960

Date uploaded in London – – – 12 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

இடைஞானியார் வரலாறு!

ச.நாகராஜன்

கொங்கு மண்டலத்தில் ஆம்பிரா நதி தீரமான தென்கரை நாட்டுக் கொற்றவனூரில் இடையர் தலைவர் ஒருவர் வசித்து வந்தார். அவரது சிறு வயது மகன் ஒரு நாள் ஆடுகளை மேய்க்க  ஊதியூர் மலைப் பகுதியில் ஏறிச் சென்றான்.

தந்தையோ, ‘அந்த மலையில் கொடிய விலங்குகள் உள்ளன; ஆகவே அங்கு செல்லாதே’ என்று எச்சரித்து அறிவுறுத்தினார்.

மாலை நேரமானது. ஆடுகள் சென்ற வழியில் சிறுவன் பின் தொடர்ந்து சென்றான். இருள் சூழ்ந்து விடவே வழி தெரியாது அவன் காட்டிலேயே தங்கினான்.

பொழுது விடிந்தது.

அங்கிருந்த கல் ஒன்றின் மீது தான் எடுத்த விதைகளை வைத்து இன்னொரு கல்லால் தட்டினான் அவன். அடிக்கல்லிலிருந்து ரத்தம் பெருகிற்று.

அடிக்கல்லாக இருந்தது ஒரு சிவலிங்கம். என்ன செய்வதென்று தெரியாமல் கண் இரண்டும் இருண்டு போக சிவலிங்கத்தைப் பிடித்தவாறே திகைத்து நின்றான் அவன்.

முதல் நாள் சென்ற பிள்ளை வரவில்லையே என்று பயந்த இடையர் தலைவர் மலைப் பகுதியில் வந்து தேடலானார்.

சிறுவனைக் கண்டு அவன் இருந்த நிலையைக் கண்டு வருந்தினார்.

நம்மை ஆட்கொள்ளும் ஆண்டவன் செயல் என்று எண்ணிய அவர் அந்தச் சிவலிங்கம் மீது வெயில் மழை படாது பந்தல் அமைத்தார். அதைக் கோயிலாக்கி பால், தயிர் ஆகியவற்றைக் கொண்டு வந்து குடம் குடமாக அபிஷேகம் செய்தார்.

பூக்களைக் கொண்டு சிவலிங்கத்தை அலங்கரித்தார்.

நைவேத்யம் செய்து அதை அர்ப்பணித்து தந்தையும் பிள்ளையும் தவறாமல் வணங்கலாயினர்.

நாட்கள் சென்றன.தந்தை சிவபதம் அடைந்தார்.

சிறுவனோ விபூதி, ருத்ராக்ஷம் அணிந்து பஞ்சாக்ஷரம் ஓதி இறைவனைத் தொழுது பணிவிடை செய்து வரலானான்.

சிவபிரான் அவன் மீது அருள் கூர்ந்தார்; அவனுக்கு சிவ ஞானம் புகட்டி அவனைக் கணநாதனாக்கினார்.

அவர் இடைஞானியானார்!

இன்று வரை இடைஞானியாரின் சந்ததியார் அக்கோவிலில் நவராத்திரி காலத்தில் அம்பு போடுதல் போன்ற மரியாதையை அடைந்து வருகின்றனர்.

கொற்றவனூர் சிவாலயத்தில் இந்த இடைஞானியாரின் விக்கிரகம் இருக்கிறது; அதற்கு பூஜையும் செய்யப்பட்டு வருகிறது.

இந்த இடைஞானியாரின் வரலாற்றை கொங்கு மண்டல சதகம் தனது 38 வது பாடலில் எடுத்துரைக்கிறது இப்படி :-

ஒருவிதை யைத்தட்டு மாயர் மதலை யுவமையிலா

அரியஞா னங்கொளச் சென்னியிற் செந்நீ ரருவியெனச்

சொரியநின் றன்னான் றனையாண்ட முக்குட் சுயம்புவென்று

மருவி வளர்தென் கரைநாடு சூழ்கொங்கு மண்டலமே

பாடலின் பொருள் :-

ஒரு விதையை வைத்துச் சிறு கல்லால் தட்டிய இடைச் சிறுவன், மெய்ஞானத்தைப் பெறுமாறு அடிக்கல்லாக நின்ற தமது திருமுடியிலிருந்து இரத்தம் வடியக் காட்டி, அருள் புரிந்த அப்பிரமேயர் வீற்றிருக்கும் தென்கரை நாடு அமைந்திருப்பது கொங்கு மண்டலத்திலேயாம்!

tags — இடைஞானியார், கொங்கு மண்டலம் ,சிவலிங்கம்.

Hindu Music in Panini’s Grammar Book(Post No.7959)

RESEARCH ARTICLE WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7959

Date uploaded in London – 11 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

Ashtadhyayi written by Panini is at least two thousand seven hundred years old according to Goldstucker and two great Sanskrit scholars Bhandarkars. Though Panini did not write a book on the arts of India, we get lot of information from his work on subjects ranging from A to Z, I.e. astronomy to zoology. And music is one of the subjects dealt with by him.

Approximately five hundred years after him, we see a lot of musicians and musical instruments in the famous Bharhut sculptures in Madhya Pradesh, 300 BCE). The Jataka tales of the same period or slightly earlier also confirm the music talents of ancient India. Surprisingly Panini’s Sanskrit words are found even in 2000 year old Sangam Tamil literature.

Vina (VEENA)  was the most popular instrument in ancient India. No wonder we see it in the hands of Goddess Sarasvati and Veena Dakshinamurthy. Tamil Sangam poets never used the word Veena. But we see Naradar Veena in the Tamil epic Silapaadikaram. Before that we see Yaaz (Yaal) in Tamil literature.

The word ‘thurya’ used by Panini is found in Tamil Sangam work Madurai Kanchi.

Panini called music Silpa, ie.that is an art . Jataka stories called it Sippa in Pali, colloquial form of Sanskrit.

In ancient India dance and music went hand in hand.

Music comprised Nritya – dance, Gita-song, Vaadita- instrumental music and sometimes Natya- Stage acting. Khantivadi Jataka tale also put the four together as art.

Kautilya who came after Panini, says Gita, Vaadya, Nrtita and Natya

together.

Following musical words are found in Ashtadhyayi of Panini:–

Giti 3-3-95

Geya 3-4-68

Gathaka , vocalist-3-1-146

Gayana 3-1-147

Nartaka, dancer -3-1-145

Nritya, dancer-1-3-89;7-2-57

Natya, stage acting-4-3-129

Natasutra, treatise on dramatical art -4-3-110

Turya,orchestra- music band-2-4-2; Though it is a group of people it is used in singular.

Set of players on Mridangam and Panava was referred to as Maardangkika-Paanavikam

Patanjali s Mahabhasya and later Kasika give us more information

Parivaadaka-player on a stringed instrument.

Panini refers to Veena in several sutras 3-3-65

Jataka tales mentioned an orchestral band as Vinaavaadini turiyaani

*****

SAMMADA

PANINI explained Sammada and Pramada as festivity. We see it in Bharhut sculptures inscribed as

Saadakam sammadam turam devaanam

Meaning

Instrumental and vocal music performed in the place of gods.

The scene shows several groups namely singers, four female dancers and an orchestral band- turya – comprising of female lyre players, a hand clapper, a cymbalist and a taborer.

It looks like one flute player is also joined them in some places because we see it reference to five players on musical instruments in Nidana Katha, Jataka tales 1-32

Panchangika tuuriya.

Sammada,therefore is a festive celebration in which dance and music played an essential part

SAMANA in Rig Veda has lot of interpretations. From Olympics to Indra Viza to Great Fun Fair (see page 429 of Vedic Index  Second Part by Keith)

****

REFERENCES TO INSTRUMENTS

Upavinayati meant one who sings with the lyre;

Apavinam meant singing without lyre-6-2-187.

Musical notes produced from a lyre – nikvana 3-3-65

Madduka, a small tabor 4-4-56

Jharihara – cymbalists

The tala with the help of palm is also referered to Paanigha and Taalagha 3-2-55; .

Players on drums or earthen jar4-3-4

Jataka tales mentioned it as Khumba thunika and the commentary explained it as

Ghatadaddara Vaadaka.

Later Kasika also explains Daardurika as Potter

***

3000 Year Continuity!

Even today in Tamil, we use Veena, Mridangham, Ghatam, Mattalam etc.

Thuriya is in Madurai Kanchi which describes the condition of Pandya country of great king Nedun chelian .

TAMIL REFERENCES

Thuuriyam – Madurai Kanchi line 460

Change of Spelling

The spelling changes will help us to find out the chronology of the works

Vaadita changes to Vaadhya

Vaadhya changes to Vaacchiam in Tamil ; in later works such as devotional poems

I have already given the list of musical instruments found in Malaadukadam of Sangam period and Karaikkal Ammaiyar, the earliest Bhakti poetry of Madame of Karaikkal, appr. Fifth century CE

14th century commentator Nacchinarkiniyar used the spelling VACHCHINYANGAL throughout his commentaries.

‘Pan’ means song or Raga/melody in Tamil. Paanan is a singer. So Panavam cane be linked. Greek god PAN is also linked to this word.

Vedic Index of Keith and Macdonell gives a long list of Musical instruments in the Vedic literature: –

Aaghaati /cymbal

Aadambara /drum

Karkari / lute

Kaandaviinaa / lute

Gargara

Godhaa

Talava

Tuunava / flute

Dundubhi / drum

Naadi / reed flute

Pinga

Bakura, Baakura, Bekura

Bhumidundhubi / earth drum

Lambara / drum

Vanaspati / drum

Vaana / harp

Vaani/ lyre

Vaanici

Vaadana / plectrum

Vaadita / music

Viinaa / lute

Over 20 instruments are listed in a book of hymns!!

I have written about  music al instruments including Bhumi Dundhubi in the Vedas elsewhere.

Ravana had Veena in his flag. He was a great Veena player and well versed in Sama Veda.

****

Earlier Articles :–

Veena in Vedas | Tamil and Vedas

tamilandvedas.com › tag › veena-in-vedas

  1.  

12 Sep 2018 – Veena or Vina is seen in the hands of Sarasvati and Veena Dakshinamurthy (Shiva). Ravana and Agastya were very good Veena players. I have already given the story of a competition beween the two. Narada, the inter …



Bhumi Dundhubi: Drums in Rig Veda and Sangam Tamil Poems

tamilandvedas.com › 2014/11/02 › bhumi-dundhubi-dr…

  1.  
  2.  

2 Nov 2014 – Tamil and Vedas. A blog exploring themes in Tamil and vedic literature. Bhumi Dundhubi: Drums in Rig Veda and …

Ravana – Pandya Peace Treaty! Kalidasa solves a Tamil …

tamilandvedas.com › 2014/06/24 › ravana-pandya-pea…

  1.  

24 Jun 2014 – Tamil and Vedas. A blog exploring themes in Tamil and vedic literature. Ravana – Pandya Peace Treaty! Kalidasa solves …

tags — Panini, Music, Turiya, Vina, Veena, Vadita Madurai kanchi

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி1152020 (Post No.7958)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7958

Date uploaded in London – 11 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

குறுக்கே

1. –7 எழுத்துக்கள் – பிருஹஸ் பதியின் மகன்; சுக்ராசார்யாரின் மகள்

3. – 2—பழ ம்

3. –6– மதுரை கண்ணங் குத்தனாரின் 40 செய்யுள் தொகுப்பு

6. — 2–சிரம்

8. –5–  வேதத்தில் மிகவும் போற்றப் படும் தாவர ஜூஸ்

7. — 2–வலமிருந்து இடம் செல்க- கடல் நீரில் மிகுதியாகத் தோன்றும்

11. –4 –கடல் கொண்ட தமிழகத்தில் இருந்த ஒரு நூல்; ஊர்ப்பெயர் ; அத்துடன் யாத்திரை சேர்த்தால் நூற் பெயர்

12. –6–பன்னிரெண்டு ஆண்டுக்கொருமுறை .மகா மஹம் விழா நடைபெறும் ஊர்

XXXX

கீழே

1. 7 எழுத்துக்கள் – சங்க காலத்தில் எங்கும் புலிக்கொடி பறக்கக் செய்த்தோன்

2.  – தேவன் என்பதன் பெண் பால்

4. –  சொல்

5. – ஒ ட்டை

7. -கோவில்

9. – பிராகிருதம் என்பதன் தமிழ் வடிவம்

10. காது

–subham—

ஹிந்தி படப் பாடல்கள் – 33 – மெட்டுக்கள்-தாவுதல் சகஜம்!(Post No.7957)

WRITTEN BY R. NANJAPPA                                           

Post No.7957

Date uploaded in London – – – 11 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் – 33 – மெட்டுக்கள்-தாவுதல் சகஜம்!

R. Nanjappa

மெட்டுக்கள்-தாவுதல் சகஜம்!   இந்தியத் திரை இசைக்கு ராகங்களே அடிப்படையாக இருக்கின்றன. ஹிந்தித் திரையிசையில் சலில் சவுத்ரி ஒருவர்தான் மேற்கத்திய இசையில் வல்லுனராக இருந்தார்.- Notation, chords என்று எல்லா முறைகளும் அவருக்கு அத்துபடி.ஆனாலும் இறுதியில் அவர் அமைக்கும் சங்கீத்திற்கு ஒரு ராக அடிப்படை இருக்கும். 1961ல் வந்த சாயா என்ற படத்தில்  ‘இத்ன ந முஜ் ஸே” என்ற பாட்டு ஒரு மோஃஜார்ட் ஸிம்ஃபனியைத் தழுவியது; ஆனால் இறுதியில் அது பைரவி ராகக் கட்டுக்குள் வந்துவிட்டது! அவர் இசையமைத்து கிஷோர் குமார் பாடி பிரபலமான “சோடா ஸா கர் ஹோகா” பாட்டு அவர் வீட்டு நேபாலி கூர்க்கா படிய ஒரு நாட்டுப்புறப்பாடல் மெட்டில் அமைந்தது! மெட்டுக்கள் ராகத்திலிருந்து கடன் வாங்கப் படுகின்றன எனில், ஒரு மெட்டிலிருந்து இன்னொரு மெட்டு உருவாக்குவது  அவ்வளவு கடினமல்ல. . இதை நம்மவர்கள் தவறாகவும் கருதுவதில்லை! பல பாடல்களில் வேறு பாடல்களின் சாயல் இருக்கும். It is given to too few to be truly creative or utterly original. பல ஹிந்திப் பாட்டின் மெட்டுக்கள் தமிழுக்கு வந்திருக்கின்றன. சில அப்படங்கள் தமிழில் வந்தபோது உருவானவை, சில அப்படியே ‘அலாக்காகத்” தூக்கி வரப்பட்டவை, வேறு படங்களில் இடம்பெற்றவை. இப்படிச் சில பாடல்களைப் பார்க்கலாம்.  

டண்டி பவன் சலே ठंडी पवन चले, सांझ ढले
कू कू कोयल बोले, जिया डोले जिया डोले, पवन चले
प्यारे-प्यारे बाल संवारे शाम आई ले के नज़ारे – (2)
नीले नीले पीले पीले -2, देखो गगन मे भी फूल खिले
पवन चले
चंदा तारे खड़े यह सारेआओ खेले हमे पुकारे – (2)
कह दो चुन्नू , कह दोमुन्नू मुनु – (2)
रत होने को है हम चले, पवन चले
ठंडी पवन चले, सांझ ढले
कू कू कोयल बोले, जिया डोले जिया डोले, पवन चले 
  டண்டி பவன் சலே,

சாஞ்ச் டலே கூகூ கோயல் போலே, ஜியா டோலே ஜியா டோலே, பவன் சலே   குளிர்ந்த காற்று வீசத் தொடங்கி விட்டது, மாலை நேரம் பரவத்தொடங்கி விட்டது, குயில்கள் கூகூ வெனப் பாடத்தொடங்கிவிட்டன,  மனதும் ஆடத் தொடங்கி விட்டது! குளிர் காற்று தொடங்கி விட்டது!   ப்யாரே ப்யாரே, பால் ஸ(ன்)வாரே, ஷாம் ஆயீ லேகே நஃஜாரே நீலே நீலே, பீலே பீலே,  தேகோ ககன் மே பீ ஃபூல் கிலே  பவன் சலே அன்பே! மாலை நேரம் நல்ல காட்சிகளுடன் வந்துவிட்டது! நீ உன் கூந்தலை சரிசெய்துகொள்! அதோ நீல, மஞ்சள் வண்ணப் பூக்கள் வானத்திலும் மலர்ந்துவிட்டன! குளிர் காற்று வீசுகிறது!   சந்தா தாரே கடே யஹ் ஸாரே, ஆவோ கேலே ஹமே புகாரே கஹ் தோ சுன்னு, கஹ்தோ முன்னு, ராத் ஹோனே கோ ஹை ஹம் சலே பவன் சலே… நிலவும் தாரகைகளும்  எல்லாம் வந்துவிட்டன வா வா என நம்மை விளையாட அழைக்கின்றன குழந்தைகளே-சுன்னு முன்னு_ இரவு வந்துவிடும் நாம் போகலாம் என்று சொல்லுங்கள்! குளிர்ந்த காற்று வீசத்தொடங்கி விட்டது!  



Song: Thandi pavan chale Film: Footpath 1953 Lyrics: Majrooh Sultanpuri Music: Khayyam Singers: Talat Mahmood, Premlata, Ashima Banerji  

இது குழந்தைகளுக்காகப் பாடியது போலும். [இது படத்தில் இடம் பெறவில்லை, அதனால் சந்தர்ப்பம் புரியவில்லை.] மிக இனிய பாடல். தலத் குரலில் அப்படி ஒரு குழைவு! இந்த மெட்டை ‘இல்லற ஜோதி’ என்ற தமிழ்ப்படத்தில் வரும் ‘அனார்கலி’ நாடகத்தில் பயன்படுத்திக் கொண்டனர். ‘களங்கமில்லாக் காதலிலே’ என்ற பாட்டு. ஆனால் ஹிந்திப் பாட்டில் இருந்த இனிமை இல்லை. பின்னணி வாத்ய கோஷ்டியும்  வேறு விதம்.- நாடகத்தில் வருவது என்பதால் அப்படிச் செய்தனரோ என்னவோ! இசை ஜி.ராமனாதன். ஏன் இப்படிச் செய்தார் எனத்தெரியவில்லை. ஹிந்தி அனார்கலியில் வரும் “யே ஃஜிந்தகீ உஸீகீ ஹை” என்ற மிகப்பிரபலமான பாட்டின் மெட்டை ‘காவேரி” படத்தில் ‘என் சிந்தை நோயும் தீருமா” என்ற பாட்டிற்குப் போட்டார். அதுவும் சுமார் தான். ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்கின் 1956 படமான The Man Who Knew Too Much ல் வரும் “When I was just a little girl” என்ற பாட்டின் மெட்டை ஆரவல்லி படத்தில் பயன்படுத்தினார், அங்கும் சுமார் தான். ஓரு பெரிய ஆள் ஏன் இப்படிச் செய்யவேண்டும்?  

ஜூமே ஜூமே தில் மேரா   झूमे झूमे दिल मेरा, झूमे झूमे दिल मेरा चंदा की चाँदनी में झूमे झूमे दिल मेरा

अँगड़ाई आने लगी, मस्ती भी गाने लगी आँखों में प्यार लिये रात भी जाने लगी चंदा की चाँदनी में … मैं नाचूँ प्यार नाचे, मेरा सिंगार नाचे तारों ने साज़ छेड़ा दिल की पुकार नाचे चंदा की चाँदनी में … जीने का ढंग आया, ले कर उमंग आया किरनों के दीप जले, गीतों को संग लाया चंदा की चाँदनी में …  

ஜூமே ஜூமே தில் மேரா ஜூமே ஜூமே தில் மேரா சந்தாகீ சாந்த்னீ மே ஜூமே ஜூமே தில் மேரா அங்க்டாயீ ஆனே லகீ, மஸ்தீபீ கானே லகீ ஆங்கோமே ப்யார் லியே ராத் பீ ஜானே லகீ சந்தா கீ சாந்த்னீ மே மை நாசூ(ன்) ப்யார் நாசே, மேரா ஸிங்கார் நாசே தாரோ நே ஸாஃஜ் சேடா தில் கீ புகார் நாசே சந்தா கீ சாந்த்னீ மே . ஜீனே கா டங்க் ஆயா, லேகர் உமங்க் ஆயா கிரனோ(ன்) கே தீப் ஜலே, கீதோ(ன்) கோ சங்க் லாயா சந்தா கீ சாந்த்னீ மே.. என் மனம் துள்ளூகிறது, என் மனம் துள்ளுகிறது நிலவின் ஒளியில் என் மனம் துள்ளுகிறது வெட்கம் வருகிறது, மகிழ்ச்சியில் பாட்டும் வருகிறது கண்ணில் காதலைத் தாங்கி இரவும் நகரத்தொடங்கி விட்டது நிலவின் ஒளியில்….. நான் ஆடுகிறேன், என் அன்பு ஆடுகிறது, என் அழகும் ஆடுகிறது, தாரகைகள் வாத்திய மிசைக்க மனதின் குரலும் ஆடுகிறது! நிலவின் ஒளியில் வாழும் வகை தெரிந்துவிட்டது, நம்பிக்கையும் வலுத்துவிட்டது நிலவொளி என்னும் விளக்கு எரிகிறது, இசையை உடன் கூட்டி வந்தது நிலவின் ஒளியில். ..

. Song: Chanda ki chandni mein Film: Poonam 1952 Lyrics: Hasrat Jaipuri Music: Shankar Jaikkishan  Singer: Lata  


இது ஹஸ்ரத் ஜெய்புரியின் ஆரம்பகாலப் பாடல்களில் ஒன்று.காதல் வசப்பட்ட பெண் பாடுவதாக இருக்கிறது. ஓரளவு ‘ஓவர்” என்றே சொல்லலாம்.. இந்த மெட்டை தமிழில் “ரத்தக்கண்ணீர்” படத்தில் “ஆட்டத்தைப் பார்த்திடாமல் ஆளை  ஆளைப் பார்க்கிறாய்” என்ற டி.வி. ரத்தினம் பாடும் பாட்டிற்குப் பயன்படுத்திக் கொண்டார்கள். தமிழ் படத்தில் இந்தப் பாட்டு வரும் இடம் தெரிந்தவர்கள், இந்த மெட்டை அதிகம் விரும்பமாட்டார்கள். அதனால் ஒரிஜினல் ஹிந்திப் பாட்டையும் கேட்கத் தோன்றாது!   This is  how an original tune is degraded when transported across genres! A matter of sensitivity or sensibility! Those who adopt (or even adapt) a tune should not trivialise it. பழைய பக்திப் பாடல்களை சினிமா மெட்டுகளில் பாடும்போது இதை நாம் உணர்கிறோம்!

  ஸௌபார் ஜனம் லேங்கே   वफ़ा के दीप जलाए हुए निगाहों में
भटक रही हो भला क्यों उदास राहों में
तुम्हें ख्याल है तुम मुझसे दूर हो लेकिन
मैं सामने हूँ, चली आओ मेरी धुन में
   

வஃபா கே தீப் ஜலாயே ஹுயே நிகாஹோ(ன்) மே படக் ரஹீ ஹோ பலா க்யோ(ன்) உதாஸ் ராஹோ(ன்) மே தும்ஹே கயால் ஹை  தும் முஜ் ஸே தூர் ஹோ லேகின் மை ஸாம்னே ஹூ(ன்)சலீ ஆவோ மேரி துன் மே   கண்களில் விசுவாசம் என்னும் விளக்கை ஏற்றிக்கொண்டு ஏன் இந்த துக்கப் பாதையில் வீணில் அலைகிறாய்? நீ என்னை விட்டு தூரத்தில் இருப்பதாக நினைக்கிறாய்

நான் எதிரிலிலேயே இருக்கிறேன், என் பாட்டைக் கேட்டு வந்துவிடு!

सौ बार जनम लेंगे, सौ बार फ़ना होंगे
ऐ जाने वफ़ा फिर भी हम तुम ना जुदा होंगे


ஸௌ பார் ஜனம் லேங்கே, ஸௌ பார் ஃபனா ஹோங்கே ஐ ஜானே வஃபா ஃபிர் பீ ஹம் தும் நா ஜுதா ஹோங்கே   நூறுமுறை பிறப்பெடுப்பேன், நூறு முறை இறந்து படுவேன் ஆனாலும் அன்பே, நாம் இருவரும் பிரியமாட்டோம்.

किस्मत हमें मिलने से रोकेगी भला कब तक
इन प्यार की राहों में भटकेगी वफ़ा कब तक
कदमों के निशाँ खुद ही मंजिल का पता होंगे
सौ बार जनम लेंगे…
 


கிஸ்மத் ஹமே மில்னே ஸே ரோகேகீ பலா கப் தக் இன் ப்யர் கீ ராஹோ(ன்) மே படகேகீ வஃபா கப் தக் கத்மோ(ன்) கே நிஷான் குத் ஹீ  மன்ஃஜில் கா பதா ஹோகா ஸௌ பார் ஜனம் லேங்கே..   நாம் மீண்டும் சந்திப்பதை இந்த விதி எத்தனை நாள் தான் தடுக்கும்? அன்பின் விசுவாசம் எத்தனை நாள் தான் இப்படித் தடுமாறும்?.. கால் தடமே லட்சியத்தின் முகவரியாக இருக்கும்! நூறு முறை பிறந்தாலும்…..  
ये कैसी उदासी है, जो हुस्न पे छाई है
हम दूर नहीं तुमसे, कहने को जुदाई है
अरमान भरे दो दिल, फिर एक जगह होंगे
सौ बार जनम लेंगे… 
   

யே கைஸீ உதாஸீ ஹை, ஜோ ஹுஸ்ன் பே சாயி ஹை ஹம் தூர் நஹீ தும் ஸே, கஹனேகோ ஜுதாயீ ஹை அர்மான்பரே  தோ தில், ஃபிர் ஏக் ஜகஹ் ஹோங்கே

ஸௌ பார் ஜனம் லேங்கே     இந்த அழகிய முகத்தில் ஏன் இந்த சோகக் களை? பிரிந்திருக்கிறோ என்பது வெறும் சொல்லளவே1 நான் உன்னை விட்டு அதிக தொலைவில் இல்லை! நம்பிக்கை நிறைந்த இரு உள்ளங்கள் மீண்டும் ஓரிடத்தில் கூடும்! நூறு முறை பிறந்தாலும்……


  Song: Sau bar janam lenge film: Ustado(n) ke ustad  1963 lyrics: Asad Bhopali Music Ravi  Singer: Mohammad Rafi  




இந்தப் படத்தை தமிழில் “வல்லவனுக்கு வல்லவன்” என்ற பெயரில் எடுத்தார்கள். அதில் இந்தப் பாடலை கவிஞர் கண்ணதாசன் அவருக்கே உரிய பாணியில் எழுதினார். பாடல் மொழிபெயர்ப்பு இல்லை. ‘நூறு முறை பிறந்தாலும் இறந்தாலும்” என்ற கருத்தை தொகையறாவில் சொன்னார்.” ஓராயிரம் பார்வையிலே உந்தன் பார்வையை நானறிவேன்” என்பதைப் பல்லவியாக வைத்தார். ஹிந்தியில் ‘நூறு முறை பிறந்தாலும்” என்பதே பல்லவி-முக்கிய கருத்து. மேலும் ஹிந்தியில் ஒரு முக்கிய வரி: “கத்மோ(ன்) கா நிஷான் குத் ஹீ மன்ஃஜில் கா பதா ஹோகா” இந்த இடத்தில் நம் கவிஞர் ” உன் காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன்” என்று எழுதியிருக்கிறார். Creative freedom enjoyed by great artistes.  ஹிந்தியில் கவி அஸத் போபாலியின் கவிதைக்கு அரிய இசை ரவியினுடையது. இவர், எழுதிய கவிதைக்கு இசையமைப்பதில் வல்லவர். உணர்ச்சி பூர்வமாக இனிய குரலில் பாடியிருப்பவர் ரஃபி. இது ரவி, ரஃபி அஸத் போபாலி ஆகிய மூவருக்குமே ஒரு மைல் கல்லாக அமைந்த பாடல்.  தமிழில் இசை வேதா என்று போட்டிருக்கிறார்கள். அது தவறு. ஹிந்தி மெட்டில் எந்த மாற்றமும் இல்லை! இப்படி எத்தனையோ மெட்டுக்கள் குடிபெயர்ந்திருக்கின்றன!


tag–ஹிந்தி படப் பாடல்கள் – 33
                              ****