தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி152020 (Post No.7910)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7910

Date uploaded in London – 1 May  2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

குறுக்கே

1. –5 எழுத்துக்கள்- காளிதாசனின் ரகுவம்சத்தில் இந்தப் பெண்ணின் சுயம்வரம் அழகாக வருணிக்கப்பட்டுள்ளது.

4. -6 — நரகத்தின் அதிபதி

6. – 5–நாக்கில் வரும்புண்

7. – 6–இது ஒரு ராகம் ; உறவினர்களும் வரளி மஞ்சளு ம் சேர்ந்த ராகம்

9. — 5–இதன் மூலம் எடைக்கு எடை சுவாமிக்கு காணிக்கை செலுத்தலாம்

கீழே

1. — 8 எழுத்துக்கள் – பூதஞ்சேந்தனார் தரும் 40 இனிய பாடல்கள்

2. –6–  பித்தளையில் செம்பு- டன் சேர்க்கப்படும் உலோகம்

3. – 4–வைஷ்ணவர்கள் நெற்றியில் இருக்கும்

8. –2– ருசியான இதிஹாஸப் பெயர்.

5./ — 4– சந்நியாசி போல சவுண்டுள்ள ராகம் /கீழிருந்து மேல் செல்க

5.— 4– பருப்புடன் இது சேர்ந்தால்  சுவையான ரசம் கிடைக்கும்

—– subham —–

DON’T GUESS EVERYTHING! YOU MAY BE WRONG! (Post No.7909)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7909

Date uploaded in London – 1 May  2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

I am translating one folk tale from 1911 Tamil story book.

A  merchant lived in a town in South India. He had a good friend who is stone deaf. Suddenly the merchant fell sick. His friend wanted to visit him .

Deaf man thought , ‘Oh my god I am stone deaf. So I must draw a plan for my conversation now’ .

Since the merchant is very sick, he is going to murmur when I inquire about his health. But I must shout; then only he can hear me.

He framed three questions in his mind;

I will go and sit very near him

1.First I would ask him,

How is your health? Hoe are you feeling now?

He would definitely say,

No, I am not feeling alright. But better than before.

Then I would say,

Oh, I am very glad to hear that.

2.Then I would ask him ‘what is your diet like ?’

Every sick person takes only gruel made up of broken rice. He would certainly say ,

Just a little bit of rice gruel.

Then I will say, please follow it; you would be cured quickly.

3.Finally , I will ask him who is your doctor now. He would give some name.

I must say,

By god’s grace you are with the right person. He will take care of you.

Then I would return home quickly and  happily.

xxx

The deaf man went to his friend’s house as planned. He welcomed him with a smile and offered him a chair. The deaf friend went towards him and sat at the edge of his bed.

1.First question

How is your health? How are you feeling now?

Sick man replied in a very low voice,

Why do you ask me? The temperature has gone up. I am shivering with fever.

Deaf man imagined his answer and said,

‘Oh I am very happy to hear that. By god’s grace it must continue like this’.

Sick friend was taken aback.

2.Second question

Then the deaf man fired his second question-

what is your diet like ?’

Sick man said in anger,

What diet? It is just dust I am having.

It is a phrase in Tamil to say nothing but rubbish.

Immediately the deaf person imagined his reply to be what he expected and said,

‘Please follow it; you would be cured quickly.’

Now the sick man became angrier. He wanted to punch on the face of his friend.

3.Third question

The deaf man rose from the edge of the bed as a sign of leaving in the next minute or so and asked his final question,

Who is your doctor now?

The sick man was dead angry now and so said sarcastically,

Who the doctor is ! who else it can be other than Yama (god of death in Hindu mythology)?

Deaf man carefully remembered  what to say then and said,

‘By god’s grace you are with the right person. He will take care of you’.

The sick man rose from his bed red faced ; but deaf person thought probably he is having some temperature now; I must leave immediately and went out before he got a kick from his friend.

Moral of the story

When you go to an interview for a job or radio or TV channel, if you don’t hear anything properly, please ask the person to repeat. Nothing wrong in it. If it happens more than two or three times, then tell the person to speak loud and clear.

Don’t guess anything; don’t imagine anything.

–subham–

27 நட்சத்திரங்களில் எது முதல் நட்சத்திரம் ?- Part 3 (Post No.7908)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7908

Date uploaded in London – 1 May  2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

Pleiades பிளையடெஸ் = கார்த்திகை,

Aldebarana ஆல்டிபேரன் = ரோகிணி (அகநாநூறு 86, 136ல் சகடம்)

Betelgeuse பீ டல் ஜியுஸ் = திருவாதிரை

Orion belt மூன்று நட்சத்திரம் = மிருகசீர்ஷம் (மான் தலை)

***

கிருத்திகா (Pleiades)

பாணினி கிருத்திகாவில் துவங்குகிறார் சதபதம் (SATAPATA  BRAHMANA,1000 BCE) இதை பூஇஷ்டா , பஹுளா  என்று அழைக்கும். இதையோ அதையோ பயன்படுத்தலாம் என்பது பாணினி  கருத்து. 

கிருத்திகா வரும் இடங்கள் – பா ( பாணினி) 6-4-158, 4-2-23, 4-3-34.

சதபத பிராஹ்மணம் – 2-1-2-3

கார்த்திகை நட்சத்திரம் பற்றிய சுவையான விஷயம் :–

முருகப் பெருமானை ஆறு கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததை நாம் அறிவோம். பைனாகுலர் வைத்துப் பார்த்தால் 7 நட்சத்திரம் தெரியும். தைத்ரிய ப்ராஹ்மணம்   7 என்று இயம்பும்; அவற்றின் பெயர்களும் உள ; அவையாவன — அம்பா, துலா, நிதத்னி , அப்ரயந்தி , மேகயந்தி , வர்ஷயந்தி, சுபுனிகா.

பிற்கால சம்ஸ்க்ருத இலக்கியங்கள் 6 நட்சத்திரம் என்று உரைக்கும். ஆகையால் “சான்  மாதுரகாஹா” — ஆறு தாய்மார்கள் என்று சொல்லும். இதனால் முருகனுக்கு ஷண்முகம் என்று பெயர்.

எனது கருத்து

இதைக் குறிக்க ஆறுமுகங்களை  சித்திரமாக  வரைந்தனர். ஆனால் உண்மையில் முருகனுக்கு ஒரு முகம்தான் . இதே போல தசரதனுக்கு பத்து ரத்தம் போட்டு சித்திரம் வரைந்திருக்கலாம். நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் பத்து திசைகளிலும் தன்  சக்தியைக் காட்டிய ராவணனுக்கு பத்து தலைகளை வரைந்து விட்டோம். அவனுக்கும் உண்மையில் ஒரு தலைதான். இவை எல்லாம் புராணங்கள் செய்த கூத்து . இன்று சூப்பர் மேன் , ஸ்பைடர் மேன் , பேண்டம் டார்ஜான் ஆகியோரை சித்தரிப்பது போல பவுராணிகர்கள்  சுவைமிகு கதைகளைச் சொல்லிவிட்டார்கள்.

நாம் அரசியல் கொடிகளை இப்போது வைத்திருப்பது போல , தேர்தல் சின்னங்களை வைத்திருப்பது போல, அந்தக் காலத்தில் , ஒவ்வொரு இனத்தாரும் பாம்பு, குரங்கு, கரடி, கழுகு  முதலிய சின்னங்களை அணிந்தார்கள் ; இவர்களையே நாம் ராமாயணத்தில் நாகர் , வானரர்கள், ஜாம்பவான் , ஜடாயு என்கிறோம் .

***

மிருகசீர்ஷம்

பாணினி  நேரடியாக மிருகசீர்ஷ  நட்சத்திரம்  பெயரைச் சொல்லவில்லை. அது பௌர்ணமி சந்திரனுட ன் சேர்ந்து இருக்கும் நாள் ‘ஆக்ரஹாயினி’ . அதை மூன்று முறை குறிப்பிடுகிறார் – 4-2-22; 4-3-50; 4-4-110;

கடனைத் திருப்பித்தரும் ஒப்பந்த பத்திரத்திலும் இந்தப் பெயர் வருகிறது 4-3-50

***

ஆருத்ரா :–இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் பெயர் ‘ஆர்த்ரக’ .

சங்க இலக்கியப் புலவர் பெயர்களில் புறநானுற்றுப் புலவர் பெயர்—‘கள்ளில் ஆத்திரையனார்’.

***

புனர்வசு நட்சத்திரம்

இந்த நட்சத்திரம் இருக்கும் மண்டலத்தில் 2 நட்சத்திரங்கள் இருப்பது ‘பா’- க்குத் தெரியும். திஷ்ய நட்சத்திரம் சேர்ந்தால் மூன்று ஆகிவிடும். ஓரிடத்தில் ஒருமையில் இன்னொரு இடத்தில் இருமையிலும் சொல்கிறார். மைத்ராயணி, காடக  சம்ஹிதைகளும் இவ்வாறு ஒருமை, இருமையை பயன்படுத்துகின்றன.

***

திஷ்ய நட்சத்திரம்

1-2-63; 4-3-34; 4-4-149

இதனுடன் ‘புஷ்ய, சித்ய நக்ஷத்ரே’ என்றும் 3-1-166 சொல்கிறார்.

இதன் கீழ் பிறந்தவன் திஷ்ய எனப்படுவான்; ஜாதகக் கதைகளில் அடிக்கடி வரும் பெயர்கள் திஸ்ஸ , புஸ்ஸ; அர்த்த சாஸ்திரம் திஷ்யவுக்குப் பதில் புஷ்யவை பயன்படுத்துகிறது .பதஞ்சசலியும்  இதையே விரும்புவதால் ‘புஷ்ய’ என்பது பிற்கால வழக்கு என்று சொல்லலாம் 

***

பல்குணி – இரண்டு நட்சத்திரங்கள் ஆகையால் பா . இவைகளை ‘பல்குன்யவ்’ என்று பன்மையில் அழைக்கிறார் 1-2-60

***

ஹஸ்தம் – பா.  சூத்திரம் 4-3-34

***

சித்திரை நட்சத்திர  பவுர்ணமி சைத்ரி எனப்படும் 4-2-23

***

சுவாதி நட்சத்திரம் 4-3-34

***

விசாகா – இரட்டை நட்சத்திரங்கள்  விசாகா , விசாகே

***

அனுராதா நட்சத்திரம் – அனுஷம் – 4-3-34

***

மூல – 4-3- 28

***

ஆஷாட – ரெண்டு நட்சத்திரங்கள் ந. 4-3-34

***

அபிஜித் நட்சத்திரம் – 4-3-36

+++

ஸ்ராவண நட்சத்திரம் – ஓணம் – காடக சம்ஹிதை இதை ‘அஸ்வத்த’ என்று சொன்னது பாணிணிக்குத் தெரியும் 4-2-5; 4-3-48. ஆனால் பா. ஸ்ராவண என்றார் 4-2-23. அரச மரத்தின் பழங்கள் கீழே விழும் பருவம் என்பதால் இதை இப்படி ‘அஸ்வத்த / அரச மரம்’ என்று பெயரிட்டதாக காசிகா உரை பகரும்.

என் கருத்து

வேதத்திலும் சித்த மருத்துவ நூல்களிலும் நிறைய சொற்கள் இரு பொருள் பட வரும். விஷயம் அறியாத அரை வேக்காடுகள் உளறித்தள்ளும் ; ஆகையால் உரைகளைப் படிக்கவேண்டும். சங்க இலக்கியத்தில் ‘மாண்ட’, ‘செத்த’, ‘இறந்’த என்ற சொற்கள் மரணம் என்ற பொருளில்  வராது . கடந்த , சிறந்த என்ற பொருளில் வரும். காலப்போக்கில் நாம் பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்து அர்த்தம் மாறிக்கொண்டே வரும்.

***

ச்ரவிஷ்டா / தனிஷ்டா /அவிட்டம் – 4-3-34.

எது முதல் நட்சத்திரம்? என்ற நேற்றைய கட்டுரையில் அவிட்டம் பற்றிச் சொல்லிவிட்டேன்.

***

சதபிஷக் நட்சத்திரம் – சதயம் – 4-3-36

***

ப்ரோஷ்டபத – 5-4-120; 1-2-60; 4-2-35 — பூரட்டாதி , உத்திராட்டாதி  ; தைத்ரிய சம்ஹிதையிலும் இது உள்ளது . இதற்கான அதிதேவதையை மக்கள் பக்தியுடன் வணங்குவதை பா  சுட்டிக்காட்டுகிறார்.

நட்சத்திரங்களுக்கு அதி தேவதைகள் உண்டு; அவைகளை வணங்கும் வழக்கம் உண்டு என்பதை 2700 ஆண்டுகளுக்கு முன்னரே பா . எழுதிவிட்டார்.

***

ரேவதி நட்சத்திரம் 4-1-146

***

அஸ்வயுஜ் – 4-3-36 அஸ்வினி நட்சத்திரம் ; நாம் இப்போது முதல் நட்சத்திரமாக வைத்து இருக்கிறோம் .

பயிர்களை விதைக்க ஆஸ்வாயுஜி  என்று அழைக்கப்படும் பவுர்ணமி நாள் நல்ல நாள் என்று பா பகர்கிறார் 4-3-45

***

35 பக்கங்களில் இலக்கண புஸ்தகத்தை எழுதிய பாணினி  இவ்வளவு விஷயங்களையும் நமக்கு சொல்கிறார்

காத்யாயனர் எழுதிய ‘வார்த்திகா’ , பதஞ்சலி  எழுதிய ‘மஹா பாஷ்யம்’ என்னும் பேருரை, அதற்குப்பின்னர் பாணினீயத்தை  விளக்க வந்த ‘காசிகா’ உரை ஆகியன கடல் போல விஷயங்களை அள்ளிக் கொடுக்கின்றன. ‘காசிகா’ என்பது வாமன – ஜயாதித்ய என்ற இருவர் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய உரையாகும்

***

Ursa Major= Great Bear =  Sapta Rishi Mandala 

சப்த ரிஷி வழிபாடு

தமிழர்கள் விண்ணில் வடக்கு வானத்தில்  ஒளிவீசும் 7 நட்சத்திரங்களை – ஏழு ரிஷிகளாக வழிபடுவதை சங்க இலக்கிய புலவர் இளநாகனார் நற்றிணைப் பாடல் 231-ல் பாடுகிறார்.

“மை அற விளங்கிய மணி நிற விசும்பில்

கை தொழும் மரபின் எழு மீன் போல”

என்று எளிய தமிழில் சொல்லிவிட்டார் . இது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியது . இன்றும் பிராமணர்கள்  ஒரு நாளைக்கு மூன்று முறை ஸப்த ரிஷிக்களின் பெயர் சொல்லி ‘’சந்தியா வந்தனம் செய்கின்றனர் . கல்யாணத்தன்று அருந்ததி நட்சத்திரம் பார்க்கும் வழக்கமும் தமிழர் இடையே உளது . அந்த நட்சத்திரம் கற்பின் சின்னம் .

tags – எது முதல் நட்சத்திரம் ?- Part 3

—-Subham —-

ஹிந்தி படப் பாடல்கள் -23- இரு பாட்டுக்கள் – ஒரே சாயல் (1) (Post No.7907)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No.7907

Date uploaded in London – – – 1 May  2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் -23- இரு பாட்டுக்கள் – ஒரே சாயல் (1)

R. Nanjappa

இரு பாட்டுகள் – ஒரே சாயல்

1966. “மம்தா” என்ற படம் வெளிவந்தது. அதில் ஒரு பாட்டு- “ரஹே நா ரஹே ஹம்”- செம ஹிட் ஆனது. இசைஞர் ரோஷன். பாடல் எழுதியவர் கவி மஜ்ரூஹ் ஸுல்தான்புரி. ஒவ்வொரு ரசிகனின் வாயும் இப்பாட்டை

முணுமுணுத்தது!

இசைஞர் எஸ்.டி. பர்மனும் இப்பாட்டை ரசித்தார். ரோஷனுக்கு ஃபோன் செய்து பாராட்டினார். ரோஷனுக்கு வெட்கமாயிற்று.

” அண்ணா (தாதா), இது என்ன? இது உங்கள் பாட்டின் தழுவல் தான்! நான் என்ன சொந்தமாகச் செய்துவிட்டேன்?

“ஓ அப்படியா?”

“ஆமாம். உங்கள் “தண்டீ ஹவாயே(ன்) என்ற ‘ நௌஜவான்’ படத்துப் பாட்டிலிருந்து தான் இதை ‘காப்பி’ அடித்தேன்
‘” அப்பனே,  இருப்பது எல்லாம் ஏழு ஸ்வரம் தானே! அதையே தானே நாம் எல்லோரும் இப்படி அப்படி திருப்பிப் போட்டு நம் கடையை விரிக்கிறோம்? பின் எது என்னுடையது, எது உன்னுடையது? நீ இந்தப்  பாட்டை நன்றாகவே செய்திருக்கிறாய். அதற்கே இந்தப் பாராட்டு!”

இது கற்பனையல்ல. பர்மன் பாராட்டியதும் ரோஷன் சொன்னதும் உண்மையிலேயே நடந்தவை. அப்போது  பம்பாயில் இசை ரசிகர்களுக்கு நன்கு தெரிந்த விஷயம். அப்போதெல்லாம் இசைஞர்கள் இப்படி ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்வார்கள். பர்மனும் ரோஷனும் நண்பர்களே. இசைஞர்களிடையே போட்டி இருந்தது, 

பகைமை இல்லை!

இருந்தாலும் பர்மனிடம் இருந்த பெருந்தன்மையும், ரோஷனிடமிருந்த பணிவும்  பண்புள்ள பெரியவர்களிடம் மட்டுமே நாம் காணக் கூடியது. பெருக்கத்து வேண்டும் பணிவு என்பார்கள்..

[இப்போது ‘இப்படி அப்படி’ திருப்பிப் போடுவதற்கு கம்ப்யூடர்கள் பெரிதும் துணைசெய்கின்றன!]

.

இந்த இரண்டு பாடல்களையும் பார்க்கலாமா?

Thandi Hawayen Lehrake Aaye
Ha Ha Ha, Ha Ha Ha Ha Ha la La La La La, Hm Hm Hm Hm Hm
kaise Bulaaye  

ठंडी हवाएँ, लहरा के आयें
रुत है जवां
तुमको यहाँ, कैसे बुलाएँ
ठंडी हवाएँ…  

தண்டீ ஹவாயே(ன்) லஹராகே  ஆயே(ன்)

ருத் ஹை ஜவா(ன்தும் கோ யஹா(ன்

கைஸே புலாயே(ன்)

தண்டீ ஹவாயே(ன்)..

.

குளிர் தென்றல்அலைஅலையாக வீசுகிறது!.

என்னைச் சூழ்ந்து எல்லாமே இளமையில் பொலிகிறது!

உன்னை இங்கு எப்படி அழைப்பது!

அலையாக வீசும் குளிர் தென்றல்..!..

.

चाँद और तारे, हँसते नज़ारे
मिल के सभी, दिल में सखी, जादू जगाये
ठंडी हवाएँ…  

சாந்த் ஔர் தாரே, (ன்)ஸ்தே நஃஜாரே

மில் கே ஸபீ, தில் மே ஸகீ ஜாதூ ஜகாயே

தண்டீ ஹவாயே(ன்)….

 நிலவும் தாரகைகளும்மகிழ்ச்சியில் பொங்கும் காட்சிகள்

  ஸகியே! இவை அனைத்தும் சேர்ந்து மனதில் ஜாலம் செய்கின்றன!.

அலை அலையாக வரும் குளிர் தென்றல் !.…..

कहा भी जाए, रहा भी जाए
तुमसे अगर, मिले भी नज़र, हम झेंप जाए
ठंडी हवाएँ…  

கஹா பீ ஜாயே, ரஹா பீ  ஜாயே

தும் ஸே அகர், மில் தே நஃஜர்ஹம் ஜோப் ஜாயே

தண்டீ ஹவாயே(ன்)

மனதில் இருப்பதைச் சொல்லவும் வரவில்லை

சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை!

உன்னை நேரில் பார்த்தாலும் என்னால் எதுவும் பேச முடியாது!

அலை அலையாக வீசும் குளிர் தென்றல்!

दिल के फ़साने, दिल भी जाने
तुमको सजन, दिल की लगन, कैसे बताएँ
ठंडी हवाएँ…  

தில் கே ஃபஸானே, தில் ஹீ ஜானே

தும் கோ ஸஜன்,தில் கீ லகன், கைஸே பதாயே(ன்)

தண்டீ ஹவாயே(ன்)….

மனதின் ரகசியம் மனதிற்கே தெரியாதே!

பின் மனதில் இருப்பதை அன்பரே, உமக்கு எப்படிச் சொல்வது?

அலை அலையாக வரும் குளிர் தென்றல்..

Song: Thandi hawayen  Film: Naujavan 1951 Lyrics : Sahir Ludhianvi

Music: S.D.Burman  Singer:Lata

இந்தப் பாட்டு  நாடு முழுவதும் ஒர் அலையைத் தோற்றுவித்தது! அப்படி என்ன இருக்கிறது இப்பாட்டில்?

திருப்பிக் கேட்கலாம்என்ன இல்லை?

அருமையான மெட்டுஇசையின் இன்ப அலை!

பின்னணியில் வாத்திய ஜாலம்!

அன்றைய லதாவின் மதுரக் குரல்!

இனிய, எளிய சாஹித்யம்!

இந்த சங்கீதம் +சாஹித்யம்  நகமும் சதையும் போல இணைந்துதான் ஒரு மயக்கத்தை ஏற்படுத்தின!இந்தப் பாட்டுதான் கவி ஸாஹிரைத் தூக்கிவிட்டது!

இந்தக் காதல் கவிதைகளைப் பாருங்கள்பெரிதாக ஒன்றும் இல்லை! எல்லாம் சின்னச் சின்ன விஷயங்கள்இவற்றை வைத்தே கவிதை வலை பின்னுகிறார்கள்! Sweet Nothings என்பார்கள் ஆங்கிலத்தில்

இந்த மெட்டு, பல இசைஞர்களிடையே நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது! பலர் இதையொட்டியே மெட்டமைத்தனர். அவற்றுள் சில::

தேரா தில் கஹா(ன்) ஹைசாந்தினி சௌக் 1954  ரோஷன்

யஹீ ஹை தமன்னாஆப்கீ பர்சாயியா(ன்) 1964  மதன் மோஹன்

ஸாகர்  கினாரேஸாகர்  1985  ஆர்.டி.பர்மன்

தமிழில்கொஞ்சும் புறாவே“!

ஆனால் இதன் அதிக சாயல் விழுந்த பாட்டு, ‘மம்தாபடப் பாட்டு-1966.


रहें न रहें हम  महका करेंगे
बन के कली  बन के सबा
बाग-ए-वफा में
रहें न रहें हम…

ரஹே ரஹே ஹம், மஹகா கரேங்கே

பன் கே கலீ, பன் கே ஸபா

பாக்வஃபா மே

ரஹே ரஹே ஹம்….

நான் இங்கு இருக்கிறேனோ, இல்லையோ,

நம் நம்பிக்கை என்னும் சோலையில் ஒரு மலர் போலும், தென்றல் போலும்

இந்த  நறுமணம்..இருந்து கொண்டிருக்கும்!

मौसम कोई हो, इस चमन में, रंग बन के रहेंगे हम खिरामा
चाहत की खुशबू, यूँ ही जुल्फों से उड़ेगी, खिज़ा हो या बहारें
यूँ ही झूमते और खिलते रहेंगे
बन के कली

மௌஸம் கோயீ ஹோ இஸ் சமன் மே

ரங்க் பன் கே ரஹேங்கே ஹம் கிராமா

சாஹத் கீ குஷ்பூ, யூ(ன்) ஹீ ஜுல்ஃபோ(ன்) ஸே உடேகீ,

கிஜா ஹோ யா பஹாரே

யூ(ன்) ஹீ ஜூம்தே ஔர் கில்தே ரஹேங்கே !

பன் கே கலீ…..

இந்தச் சோலையில் எந்தப் பருவமானாலும்

நான் அதை வண்ணமாகப் பூசி நிற்பேன்! , 

இலையுதிர் காலமோ, வஸந்தமோஎதுவாயினும்

நம் காதல் என்னும் நறுமணம் என் கூந்தலிலிருந்து பரவி வரும்!

நான் ஒரு மலர் போலும் தென்றல் போலும் 

இந்தச் சோலையில் அசைந்து ஆடி நிற்பேன்!


खोये हम ऐसे, क्या है मिलना, क्या बिछडना नहीं है याद हमको
कूचे में दिल के, जब से आये, सिर्फ दिल की ज़मीं है याद हमको
इसी सरज़मीं पे हम तो रहेंगे
बन के कली

கோயே ஹம் ஐஸே

க்யா ஹை மில்னா, க்யா பிசட்னா நஹீ ஹை யாத்  ஹம்கோ

கூசே மே தில் கே, ஜப் ஸே ஆயே

ஸிர்ஃப் தில் கீ ஜமீன் ஹை யாத் ஹம்கோ

இஸீ ஸர்ஜமீன் பே ஹம் தோ ரஹேங்கே

பன் கே கலீ…..


நான் அன்பில் என்னை மறந்து விட்டேன்!

உடன் இருத்தல்பிரிவு எதையும் நான் அறியவில்லை!

நீ என் மனதில் வந்தபின், அன்பு என்னும் இந்தப் பூமியை மட்டுமே அறிவேன்!

அந்த உலகிலேயே நான் இருப்பேன்!

ஒரு மலர் போலும் தென்றல் போலும் திகழ்வேன்!

जब हम ना होंगे, जब हमारी खाक पे तुम रुकोगे, चलतेचलते
अश्कों से भीगी, चांदनी में, इक सदा सी सुनोगे, चलतेचलते
वहीं पे कहीं हम तुमसे मिलेंगे
बन के कली…  

ஜப் ஹம் நா ஹோங்கே, ஜப் ஹமாரீ காக் பே தும் ருகோகே, சல்தேசல்தே

அஷ்கோ ஸே பீகீ, சாந்த்னீ மே இக் ஸதா ஸீ ஸுனோகே, சல்தேசல்தே

வஹீ(ன்) பே கஹீ(ன்) ஹம் தும்ஸே மிலேங்கே

பன் கே கலீ….

நான் இங்கு இல்லாத போது

மழை பெய்து ஓய்ந்து , என் கண்ணிரால் நனைக்கப்பட்ட இந்த

என் சாம்பலின் அருகில் நீ நடந்துபோகும் போது  சிறிது நிற்க நேர்ந்தால்,

என் குரல் உன் காதில் ஒலிக்கும்!

அங்கு எப்படியோ நாம் இருவரும் சந்தித்துக்கொள்வோம்!

இச் சோலையில் மலர் போலவும் தென்றல் போலவும் இருப்போம்!

Song: Rahe na rahe hum  Film: Mamta 1966 Lyricist: Majrooh Sultanpuri

Music: Roshan  Singers: Lata, Suman Kalyanpur, Rafi

This is an extraordinary song by any standards. The poetry is simply sublime. It combines two worlds-two realities.

There is the physical world- with its meeting and separation. But there is also that state of unity which is transcendental- beyond the physical dimension, with its limitations of time and space. Life is transient, but it is also eternal- not in the sense of extended, infinite time, but in the sense of Timelessness! Majrooh Sultanpuri traverses the two realms seamlessly! And weaves them together in his imagery! Oh, what an excellent poem! It fills the mind with high thoughts, but also wrenches the heart! We all have to go one day, but the thought that we will be remembered comforts us! This the poet conveys without getting into a sad, sentimental mode! This is extraordinary!

இது சங்ககால அகத்துறைப் பாடல்களை (அகநானூறு, கலித்தொகை) நினைவு படுத்துகிறது. தலைவன்தலைவி பிரிவு அங்கே பேசப்படுகிறது. எதன் நிமித்தம் இத்தகைய பிரிவு என்பதும், அதனால் தோன்றும் மன நிலைகளும் விரிவாகவே பேசப்படுகின்றன. ஆனால் அத்தகைய பிரிவுகள் அனைத்தும் தாற்காலிகமானவையே. இங்கு மஜ்ரூஹ் நம் எவராலும் தவிர்க்க, தடுக்க இயலாத அந்த இறுதிப் பிரிவையும் பற்றிப் பேசுகிறார்மிக  நாசூக்காகச் சொல்கிறார். ஆனால் எந்தப் பிரிவானாலும் வேண்டியவர்களை அன்புடன் நினைக்கிறோம்!. இத்தகைய அன்பில் , மனதில் நிறைந்து நிலவும் நினைவில்பிரிவு என ஒன்று உண்டாஇல்லை என்கிறார் கவி!

இதன் இசை அபாரமானது. இதுதண்டீ  ஹவாயேன்பாட்டை அப்படியே தழுவவில்லை. இந்த மெட்டு எளிதானதல்ல

இதை முதலில்  லதா பாடுகிறார். பின்னர் சில மாற்றங்களுடன், சுமன் கல்யாண்பூர், ரஃபி  ஆகியோரின் குரலிலும் கேட்கலாம்.

ஐம்பது வருஷங்களுக்கு மேலாகியும் ஒரு பாட்டு மக்கள் மனதில் நிற்கிறதென்றால், அது மனதைத் தொடுவதாக இருக்கவேண்டும்! இது இசைகருத்து இரண்டும்  இணைவதால் தான் சாத்தியமாகிறது.

ஒரே ராகத்தின் அடிப்படை தான்ஆனால் பாடல் காட்டும் உணர்ச்சிகள் எப்படி வேறுபடுகின்றன!

Note 1. தண்டீ ஹவாயேன் பாட்டு யமன் ராகத்தின் அடிப்படையில் அமைந்தது என்று கருதுகின்றனர்

 ஆனால் இதன் பூர்வீகம் மேற்கு இண்டீஸ் பேண்ட் இசை என்பாரும் உண்டு!

மேற்கத்திய மெட்டை எடுத்தாள்வது அக்காலத்தில் சகஜமே

2. சில சமயம் ஒரே சாயலில் இரு பாடல்கள்  அமைவதும் உண்டு

****

வாழும் வழி காட்டும் சுபாஷிதம்! (Post No.7906)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7906

Date uploaded in London – – – 1 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

வாழும் வழி காட்டும் சுபாஷிதம்!

ச.நாகராஜன்

நல்ல வாழ்க்கையை வாழ்வதற்காக, நமக்கு வழி காட்டும் சுபாஷிதங்கள் ஏராளம் உள்ளன. அவற்றில் சில இதோ:

அஜராமரவத் ப்ராஞோ வித்யாமர்த ச சிந்தயேத் |

க்ரூஹித் இவ கேஷேஷு ம்ருத்யுனா தர்மமாசரேத் ||

அறிவாளியான ஒருவன் அறிவு பெறுவதிலும் பணம் சம்பாதிப்பதிலும், தான் அழிவற்று இறக்காமல் இருப்பது போல நினைத்து, அவற்றைச் சேகரிக்க வேண்டும். ஆனால் தர்மம் செய்வதிலோ தனது தலை முடியை எமன் பிடித்திருப்பதாக நினைத்து (உடனடியாக) தர்மம் செய்ய வேண்டும்.

A wise man should fix his thoughts upon knowledge and wealth as (if he were) undecaying  and undying. He should practice duty as if (he were) seized by the hairs of his head by Death (as if he had not an instant to lose) (Translation by :  F.Johnson)

*

அணும்யச்ச மஹத்ம்யச்ச சாஸ்த்ரேப்ய; குஷலோ நர: |

சர்வத: சாரமாத்யாத் புஷ்பேப்ய இவ ஷட்பத: ||

சிறிதானாலும் சரி பெரிதானாலும் சரி சாஸ்த்ர நூல்களிலிருந்து கற்றறிந்தோர், புஷ்பங்களிலிருந்து வண்டு எடுப்பது போல, சிறந்தவற்றை எடுத்துக் கொள்கின்றனர்.

The learned man takes everywhere the best from small and large books, like a bee from flowers.

*

அஞோ ந விதரத்யயதி புனர்தாரித்ர்ய ஷங்க்யா |

ப்ராக்ஞோபி விதரத்யனி புனர்தாரித்ர்ய ஷங்க்யா ||

(இந்த ஜென்மத்தில்) ஏழையாகி விடுவோமோ என்று பயந்து மூடனானவன் தர்ம வழியில் தன் செல்வத்தைத் வழங்குவதில்லை; ஆனால் ஒரு புத்திசாலியோ அடுத்த ஜென்மத்தில் தான் ஏழையாகி விடுவோமோ என்று நினைத்து தாராளமாக வழங்குகிறான்.

An ignorant man does not give his wealth as gift fearing that he may get impoverished in the process (in this birth). But a wise man gives liberally lest *he becomes poor (in the next birth). (Translation by :  A.A.R)

*

அஜவச்சர்வணம் குர்யாத் கஜவத் ஸ்நாநமாசரேத் |

ராஜவத் ப்ரவிஷேத்க்ராமம் சோரவத்கமனம் சரேத் ||

ஒருவன் ஆடு போல (எது கிடைத்தாலும் அதை) உண்ண வேண்டும்.

யானை போல (மெதுவாக) குளிக்க வேண்டும்.

எங்கும் ராஜா போல பிரவேசிக்க வேண்டும்.

கிராமத்தில் திருடன் போல (மெதுவாக ஓசையின்றிச்) செல்ல வேண்டும்.

One should eat (anything) like a goat; bathe (slowly) like an elephant; enter a  place (boldly) like a king and move village (noiselessly) like a thief. (Translation by :  A.A.R)

*

அதிவ்யயோநவேக்ஷா ச ததார்ஜனமதர்மத: |

மோக்ஷணம் தூர சம்ஸ்தானம் கோஷ்வ்யஸனமுச்யதே ||

(வரவுக்கு மீறி) அதிகமாகச் செலவழித்தல், பண விஷயங்களில் அலக்ஷியம், தவறான வழிகளில் பொருள் சம்பாதித்தல், செல்வத்தைத் துறந்து தூர விலகி நிற்றல் ஆகியவை செல்வ சம்பந்தமான தவறான அணுகுமுறைகளாகும்.

Excessive spending (living beyond one’s means), carelessness about money matters, acquiring wealth by wrongful means, as well as forsaking and distancing oneself from wealth (or problems relating thereto) are wrong attitudes towards wealth. (Translation by Mankar Jai)

*

அர்த்தா: பவந்தி கச்சந்தி லப்யதே ச புன: புன: |

புன: கதாபி நாயாதி கதம் து நவயௌவனம் ||

சம்பாதிக்கப்பட்ட செல்வம் கையில் இருந்து பின் இழக்கப்பட்டாலும் கூட மீண்டும் மீண்டும் திரும்பப் பெற முடியும்; ஆனால் கழிந்து போன நவ யௌவனம் – வாலிபத் தன்மையோ ஒரு போதும் திரும்ப பெற முடியாது.

Wealth, (earned and) presently in your possession and then lost, can be regained again and again; but virility of youth and manhood once lost (or wasted) never comes back. (Translation by Mankar Jai)

*

கதே ஷோகோ ந கர்தவ்யோ பவிஷ்யம் நைவ சிந்தயேத் |

வர்தமானேன காலேன, வர்தயந்தி  விசக்ஷண: ||

கடந்த கால சோக நிகழ்வுகளைப் பற்றியோ எதிர்காலம் பற்றியோ சிந்திக்காதீர்கள். கையில் இருக்கும் நிகழ்காலம் பற்றி கவனம் செலுத்துபவரே சிறந்த அறிவாளிகள். Do not grieve over past losses (or misfortunes), nor (sit with folded hands) worry about the future. Wise men (are those who) pay attention to (the tasks in hand in) the present

tags  —  வாழும் வழி , சுபாஷிதம், 

SWAMI CROSS WORD 3042020 (Post No.7905)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7905

Date uploaded in London – 30 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

Across

1.— 8 letters – Future is the meaning; it is attached to a Purana which predicts about future happenings

6.—7– This seer took the Hindu culture to S E Asian countries

7. – 6- Vishnu’s shortest incarnation

9. —8– Narasimha temple in the Hills in Kurnool district

10. -5—Indian currency notes are printed here.

XXX

Down

1.—8 letters—- God with six qualities

2. —6– famous Sanskrit thesaurus

3.—5– on the first day of Chitra/ Mesham month Malayali Hindus celebrate it

4.—8– Krishna’s colour

5.—5– eye ; used as suffix with Goddesses of Madurai, Kanchi, Kasi etc

8. – 3- Sanskrit preposition or adverb meaning towards, over

11. – 6- feminine name; easy in Sanskrit ( go from bottom to top)



-subham—

WHY DID VALMIKI NAME ‘MONKEY CANTO’ AS ‘BEAUTY CANTO’? (Post No.7904)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No.7904

Date uploaded in London – 30 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

Valmiki’s Ramayana, consisting of 24,000 verses, is one of the most famous epics in the world’s literature. Apart from its literary grandeur, it is also looked upon by the Hindus as a holy text.

Of the six sections or cantos or Kandas of the Ramayana , Sundara Kanda is the fifth section. It has 2885 verses. It deals with the heroic exploits of Hanuman in one day and night, during which he crossed over to Lanka, discovered Sita, inflicted crushing defeat on Rakshasa forces, set fire to Lanka and returned to the southern shore of India to convey the news of Sita’s discovery to Rama. Rama was in Kishkindha at that time.

This section deals with Hanuman, the chief of the Vanaras, the monkeys. Other five cantos are named after the places where the events took place or the occasions to which the subject matter refers. Following the pattern of these earlier kandas or cantos this section should have been called Hanumat Kanda. But why the word ‘Sundara’ which means ‘Beautiful’ is applied to this Kanda?

xxx

Swami Tapasyananda writes in the introduction to his book Sundarakanda and gives eight points:—

1.The direct meaning that comes to one’s mind is that it refers to the literary excellence of the Kanda.it marks the acme of Valmiki s literary and poetical excellence and so it is Sundara or beautiful.

2.It is suggested that it is Sundara because it relieved Sita of her sorrow .

3.Sundara can mean a messenger, and this Kanda includes the message sent by Rama to Sita.

4.Sundara is also a name for an intermediary who establishes a mutual contact between a hero and a heroine as Hanuman did in the case of Rama and Sita.

5.Sundara is the name of a monkey and this chapter is so called because it deals with the achievements of the monkey Hanuman.

6.The recovery of something lost is sometimes described as Sundara, and in this section the topic dealt with is the discovery of Sita who had been lost.

7.It can also be indicative of the great spiritual importance attached to this chapter. The study of this is considered as equivalent to the study of the whole of Ramayana as far as spiritual merit is concerned. Ramayana is Vedas and Sundara Kanda is Upanishads.

8.Here is an allegorical meaning. An ordinary reader sees a great literary work in it. Other readers find spiritual meaning in it. Philosopher devotees have found a hidden allegorical meaning in the whole narrative. It is represented as the quest of the awakened spiritual aspirant to cross over the ocean of Samsara and seek the divine spirit within through an analogy of the various layers of human personality .

Hanuman is the awakened soul. Jambavan is the enlightened spiritual teacher. The vast ocean between India and Sri Lanka is the ocean of Samsara which the aspirant wants to cross. Surasa, Simhika, Mainaka Parvatam and Lanka Lakshmi are the obstacles. Finding Sita is finding divinity in himself.

A word must be said here about the literary merit of this great text. Valmiki’s poetry is characterised throughout by sublimity, felicity and naturalness of expression and epic grandeur.

Sundara Kanda brings out two great characters Hanuman and Sita. Hanuman stands for the ideal masculine strength. Sita stands for the feminine expression of courage. Hanuman is vividly described as one who never considers anything impossible. He is the very embodiment of strength and self -confidence. No danger or difficulty can thwart him from his purpose. Fear is a sentiment that doesn’t come anywhere near Hanuman.

The other character, typifying female heroism , is Sita . In India, Sita is always held as the ideal of woman hood. Generally, woman is considered the weaker sex, timid and dependent on men. But in Sita we get a character that is unparalleled in faithfulness, in courage and in undaunted heroism. They are as great as those of Hanuman, but the main difference is that these qualities are displayed in a passive way.

According to the belief of pious Hindus Sundara Kanda is not merely a narrative of events or allegory, but also a mine of power on which a devotee can draw for spiritual support in difficult worldly situations. Its recital with faith is considered a panacea for all ailments and difficulties of man.

Anyone who reads the introduction of Swami Tapasyananda will definitely read the full Sundara Kanda with faith and devotion and get all the benefits.

I have only summarised his introduction.

Source

Sundara Kandam

Swami Tapasyananda

Sri Ramakrishna Math

Mylapore, Madras

600 004

—subham–

Tags — Sundara Kanda, Beuty canto, Swami Tapasyananda, Hanuman,

அஸ்வினி முதல் நட்சத்திரம் இல்லை! (Post No.7903)

TRISANKU SWARGA/ SOUTHERN CROSS AND SAPTA RISHI MANDALA /URSA MAJOR

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7903

Date uploaded in London – 30 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

27 நட்சத்திரங்களில் எது முதல் நட்சத்திரம்?- Part 2  (Post 7903)

ஒரு வட்டத்தில் முதல் எது? கடைசி எது?

நான் ஒரு இடத்தில் ஒரு புள்ளி வைத்து இதுதான் முதல் என்பேன். என் எதிராளி வேறு ஒரு இடத்தில் புள்ளி வைத்து இதுதான் முதல் என்பான். ஆக, சந்திரன் சுற்றும் வட்டப்பாதையிலுள்ள 27+1 (அபிஜித்) நட்சத்திரங்களில்  எது முதல், எது கடைசி என்று யோஜிக்கலாம். ஆனால் இது அப்படித் தீர்மானிக்கப்படக்  கூடியதல்ல . இதில் வேறு சில சூட்சுமங்கள் இருக்கின்றன.

நட்சத்திரம் என்றால் ‘ஒளி இல்லாதது’ என்று பொருள் சொல்லி அதற்கு ஒரு கதையும் சொல்கிறது சதபத பிராஹ்மணம். யாஸ்கர் எழுதிய நிருக்தம்  இதையும் சொல்லி, ‘ நக்ஷ’ என்றால் ‘அருகில் வர’ என்று பொருள் சொல்லும். சதபதம் சொல்லும் பொருளையே சரி என்பார்  ( பாணினி 6-3-75) பாணினி.

வேத கால நட்சத்திரப் பட்டியல் கிருத்திகா / கார்த்திகையுடன் துவங்கும். யாக்ஞ வால்க்ய (1-267)  ஸ்ம்ருதி காலம் வரை இது நீடித்ததாக (Hopkins) ஹாப்கின்ஸ் கூறுகிறார் .

SAPTA RISHI MANDALA = GREAT BEAR = URSA MAJOR 

அஸ்வினி என்பது கி.பி.490-ல் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றது  . இது மார்ச் 21 ஏற்படும் வெர்னல் எக்வினாக்ஸ் (vernal equinox) எனப்படும் காலம் ஆகும். கிருத்திகாதான் முதல் நட்சத்திரம் என்பதை பதஞ்சலியும் உறுதி செய்கிறார்( 2-2-34). அதாவது 2200 ஆண்டுகளுக்கு முன்வரை இதே நிலை.

பாணினி 4-3-34 சூத்திரத்தில் ‘ச்ரவிஷ்டாவில் துவங்கி பல்குணி, அனுராதா , சுவாதி, திஷ்ய, புனர்வசு, ஹஸ்த, விசாகா -ஆஷாட, பஹுல’  என்பார்.

வேதாங்க ஜோதிடத்தில் ச்ரவிஷ்டா என்னும் அவிட்ட நட்சத்திரம்தான் முதலில் வருகிறது. இது பற்றி கார்க மஹரிஷி  விளக்கம் தருகிறார் . சடங்குளைச் செய்கையில் கிருத்திகா (பஹுல)  முதலில் வரும்; சாதாரண  விஷயங்களில் அவிட்டம் (ச்ரவிஷ்டா / தனிஷ்டா) முதலில் வரும்.

கர்மசு கிருத்திகாஹா  பிரதமம்  ;

ச்ரவிஷ்டா து சங்கியாயாஹா .

இதை ஆராய்ந்த ஹாப்கின்ஸ் மஹாபாரதத்திலும்  இரண்டு விதமான முறைகள் இருப்பதைக் கண்டார்.

1.வன பர்வத்தில் தனிஷ்டா/ ச்ரவிஷ்டா / அவிட்டம் முதலில் வைக்கப்பட்டுள்ளது 230-10 வன பர்வம்.

2. ஸ்ரவணா தீனி  ரிக்சாணி – என்று அஸ்வமேத பர்வத்தில் வருகிறது ; (ஸ்ரவணம் — ஓணம் )

இதை அறியாமல் ப்ளீட் (Fleet)  செய்த வேறு ஒரு ஆராய்ச்சியில் ஆதி பர்வத்தில் வரும் 71-34 ஒரு குறிப்பை அளிக்கிறார்:–

பிரதிஸ்ரவண பூர்வானி நக்ஷத்ராணி  சகார யஹ .

இதிலிருந்து தெரிவது என்ன ?

சிரவணம் என்னும் ஓணம் இரண்டு குறிப்புகளில் முதலில் வைக்கப்பட்டுள்ளது.

ORION/ RUDRA CONSTELLATION BETELGEUSE IS ARUDRA- THIRU ATHIRAI . RUDRA’S BELT= THREE STARS= MRGA SIRSHAM = DEAR HEAD

அதாவது காலம் உருண்டோடிவிட்டது. தனிஷ்டா/அவிட்டம் முதலில் இருந்த குளிர்கால சங்க்ராந்தி (Winter Solstice)  காலத்திலிருந்து மேற்கு நோக்கிச் சென்று இப்போது  ஓணத்துக்கு வந்துவிட்டது . பாணினி வேதாங்க ஜோதிடத்தைப் பின்பற்றி ஓரிடத்தில் அதை முன் வைக்கிறார்.

அவர் வேதாங்க ஜோதிடத்தை ஆதரிப்பவர் என்பது, எந்த நட்சத்திரத்தில் பவுர்ணமி வருகிறதோ அதை  அந்த மாதமாக குறிப்பிடுவதில் இருந்து தெரிகிறது

சித்திரா நட்சத்திரத்தில் பவுர்ணமி ஏற்பட்டால் அந்த மாதத்துக்கு சைத்ர /சித்திரை என்று பெயர் 6-2-21

தனிஷ்டா காலம் எது ?

குளிர்கால சங்கராந்தி (WINTER SOLSTICE) அவிட்டத்திலிருந்து ஒணத்துக்கு மாறியது எப்போது ?

DHANUR RASI

விச்வாமித்ர மகரிஷி புதிய நட்சத்திர மண்டலத்தைப் படைத்தார் என்று மகாபாரதமும் புராணங்களும் புகழும்;  அவர்தான் காலத்துக்கு ஏற்ற காலண்டரை உருவாக்கி புரட்சி செய்தார். ஆங்கில காலண்டரில் ஜூலியன் (Julian Calendar) செய்த மாற்றங்களுடன் உள்ளதையே இன்று நாம் பின்பற்றுகிறோம். அதுபோல விசுவாமித்திரர் தனிஷ்டா எனப்படும் அவ்விடத்தில் இருந்து ஸ்ரவணம்  எனப்படும் ஓணத்துக்கு மாற்றினார் . வேத காலத்தில்  முதலில் இருந்ததோ கிருத்திகா. இவை எல்லாம் அவற்றின் காலத்தைக் கணக்கிட நமக்கு உதவுகின்றன.

பேராசிரியர் ஜோகேஷ் /யோகேஷ் சந்திர ரே 1934-ல்  இதைக் கணக்கிட்டுக் கொடுத்தார் .

ச்ரவிஷ்டா என்னும் அவிட்டத்தின் வானியல் பெயர் – Beta Delphini பீட்டா டெல்பிணி.

இது கி.மு.1372-ல் சூரியன், சந்திரன் ஆகியவற்றுடன் குளிர்கால சங்கிராந்தியில் (WINTER SOLSTICE) சேர்ந்து இருந்தது. ஆகவே இது 3372 ஆண்டுகளுக்கு முந்தையது.

வானியல் கணக்கில் ஒரு டிகிரி கடந்து செல்ல 70 ஆண்டுகள் பிடிக்கும். இவ்வாறு சுமார் 933 ஆண்டுகள் சென்ற பின்னர் , அதாவது கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் சிரவணம் முதலிடம் பிடித்தது.

ஆகையால் ச்ரவிஷ்டா நட்சத்திரம் பற்றிப் பேசுவோர் கி.மு. ஐந்தாம் நூற் றாண்டுக்கு முந்தையோர். (கிருத்திகாவை முதலில் வைக்கும் வழக்கம் வேத காலத்தியது )

ஆக இவைகளைக் கால வரிசைப் படுத்தினால்

1.வேத காலத்தில் கிருத்திகா/ கார்த்திகை முதல் நட்சத்திரம்

2.பின்னர் அவிட்டம்/தனிஷ்டா முதல் நட்சத்திரம்

3. அதற்குப் பின்னர் ஓணம் எனப்படும் ஸ்ரவணம் முதல் நட்சத்திரம்

4.தற்கால அஸ்வினி CE 490-ல் வழக்கத்துக்கு வந்தது .

குளிர்கால சங்க்ராந்தி (WINTER SOLSTICE)  மாறியவுடனே முதல் நட்சத்திரமும் மாறிவிட்டது என்றும் சொல்வதற்கில்லை. அதை அக்கால வானியல்- ஜோதிட வல்லுநர்கள் விவாதித்து பஞ்சாங்கத்தில் மாற்றிய பின்னர் கூட நிகழ்ந்திருக்கலாம்.

மஹா பாரதத்தில் பலவிதமான குறிப்புகள் இருப்பது அவை அவ்வப்போது சேர்க்கப்பட்டவை. இந்துக்கள் எல்லாவற்றை யும்  ‘அப்டேட்’ UPDATE செய்து கொண்டே வருவார்கள்.

கட்டுரைத் தொடரின் மூன்றாவது (இறுதி) பகுதியில் 27 நட்சத்திரங்கள் பற்றி பாணினி என்ன சொல்கிறார் என்பதைக் காண்போம்.

XXXX subham xxxxx

ஹிந்தி படப் பாடல்கள் – 22 – தரம் தாழ்ந்து விட்டதோ? (Post No.7902)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No.7902

Date uploaded in London – – 30 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் – 22 – தரம் தாழ்ந்து விட்டதோ?

R. Nanjappa

தர நிர்ணயம்

இன்று பல விஷயங்களில் தரம் தாழ்ந்து விட்டதை  அனுபவத்தில் காண்கிறோம்.. உணவுப் பொருள்கள் முன்பு போல் இல்லை. கல்வி முன்பு போல் இல்லை. 50% மேல் பட்டதாரிகள்பொறி இயல் உட்படஎந்த வேலைக்கும் தகுதியற்றவர்கள் என்கின்றனர், சில பொருட்களின் தரம் அரசால் கட்டுப்படுத்தப் படுகிறது. ISI, ISO 9000 போன்ற அமைப்புகள் இருக்கின்றன. சினிமாவுக்கும்  தணிக்கைக் குழு என்று இருக்கிறது. ஆனால் நாளடைவில் அதன் தரமும் தாழ்ந்தே வந்திருக்கிறது. முன்பெல்லாம் படத்தில் தணிக்கை செய்யப்பட்ட பகுதிகளின் விவரம் கெஜட்டில் வரும். . இன்று தெரியவில்லை.

ஆனால் இலக்கியத்திற்கு எது தரம்? யார் நிர்ணயிப்பது? இதற்குத் தான் இலக்கணங்கள் இருக்கின்றன. தொல்காப்பியம் களவு எது, கற்பு எது என இலக்கணம் வகுக்கிறது.” கற்பெனப் படுவது கரணமொடு புணர்தல்என்பது தொல்காப்பியம்

கற்பெனப் படுவது கரணமொடு புணரக் கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக் 

கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள்வதுவே.”   

இதன்படி, பதிவுத் திருமணம் கற்பு மணத்தில் சேராது. இன்று சொன்னால் நடக்குமா

அதை விடுங்கள். சினிமாவில் வரும் வசனங்கள், உச்சரிப்பு, இவற்றை யார் சரிபார்ப்பது? தமிழறிஞர் கி.வா.. ஒரு சமயம் படத் தணிக்கைக் குழுவில் இருந்தார். வசனத்தில் இருந்த இலக்கணப் பிழைகள், உச்சரிப்பில் இருந்த தவறுகள் ஆகியவற்றை அவரால் சகித்துக்கொள்ள இயலவில்லை. குழுவிலிருந்து விலகினார்.

கர்னாடக இசைத்துறையில் சில இளம் பாடகர்கள் சீனியர் வித்வான்களிடம் கற்க மத்திய அரசு உதவி வழங்கி வந்தது. இதற்கு பாடகர்களைத் தேர்வு செய்ய ஒரு வித்வான்கள் கமிட்டி இயங்கும். ஒரு சமயம் அதில் மிருதங்கப் புலி பாலக்காடு மணி ஐயர் இருந்தார். பாடகர்களின் தேர்வு நடந்தது. திருப்திகரமாக இல்லை. எவரும் உரிய தகுதி நிலைக்கு வரவில்லை என்று மணி ஐயர் சொல்லிவிட்டார். ‘இந்த வருடம் எவரையும் தேர்ந்தெடுக்கவில்லையெனில் அடுத்த வருடமும் இந்த உதவித்தொகை வராது., அதனால் இருப்பவரில் யாரையாவது சிபாரிசு செய்வோம்என்று மற்றவர்கள் வாதிட்டனர். மணி ஐயர் ஒப்பவில்லை. இந்த விஷயம் அரசு மானியம் பற்றியது அல்லசங்கீதத்தின் தரம் பற்றியது, இதில் வேறு கண்ணோட்டம் செல்லாது என மணி ஐயர் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.  (அவர் இல்லாமல் கமிட்டி யாரையோ சிபாரிசு செய்தது.)

இதனால் தெரிவது என்ன? கலை, இலக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் தகுதி, தரம் நிர்ணயம் செய்வது கற்றறிந்த பெரியோர்களே என்பதே. இதையேஉலகம் என்பது உயர்ந்தோர் மாட்டேஎன நிகண்டு சொல்லும்!.

தர நிணயம் என்றால் அதன் அடிப்படை என்ன? It is a moral judgementit involves values. ஆனால் இயந்திர கதியில் ஒடும் இன்றைய உலகில் எந்தத் துறையிலும்  இந்தத் தார்மீக அளவுகோல் செல்லாது

ஃப்ரான்ஸ் தேசத்து தத்துவ அறிஞர்  ஜாக்கஸ் எல்லுல் கூறுவார்:. 

A principal characteristic of technique….is its refusal to tolerate moral judgments. It is absolutely independent of them and eliminates them from its domain. Technique never observes the distinction between moral and immoral use. It tends on the contrary, to create a completely independent technical morality.”

[From: Jacques Ellul: The Technological Society, 1954]

ஒரு படத்தில் நிர்வாணக் காட்சி வருகிறது என்று கொள்வோம். டைரக்டர் சொல்வார்: ‘இதுகதையின் முக்கிய அம்சம், அதனால் இதைத் தவிர்க்கக் கூடாது!’

நீர் ஏன் அந்தக் கதையைத் தேர்ந்தெடுத்தீர்? உமக்குப் பிடித்திருப்பதால் தானே! அது கதைக்கு அவசியமா, உமக்கு அவசியமா?

Here, moral judgement is sought to be silenced by ‘technical’ considerations relating to film industry! How can standards prevail?

ஆனால் அவை சிலரால் பின்பற்றப் படுகின்றன.ஹாலிவுட்டிலிருந்து ஒரு உதாரணம் சொல்கிறேன். பெரிய ஸ்டார் ஜான் வேய்ன்  (John Wayne) நடித்த கடைசி படம் THE SHOOTIST 1976. இந்தக் கதைப்படி, ஜான் வேய்ன் பாத்திரம் ஒருவனை முதுகில் சுடவேண்டும், வேய்ன் மறுத்துவிட்டார். [முதுகில் சுடுவது என்பது பெரிய தார்மீக இழிவு.]

மிஸ்டர், நான் 150 படத்திற்குமேல்  நடித்துவிட்டேன், இதுவரை முதுகில் சுட்டதில்லை, இப்பவும் சுடமாட்டேன்என்று சொல்லிவிட்டார்அவருக்காக கதையை மாற்றினார்கள்

இன்னொரு சம்பவம். ROAD TO PERDITION என்று ஒரு படம் 2002. டாம் ஹேங்க்ஸ் (Tom Hanks) நடித்தது. இதில் நிறைய வன்முறைக்காட்சிகள் வரும், ஹாங்க்ஸ் ஒப்பவில்லை.’எனக்கும் குழந்தைகள் இருக்கிறார்கள், வன்முறைக் காட்சிகள் பிடிக்காதுஎன்று சொல்லிவிட்டார். பெரும்பாலானவற்றை நீக்கினார்கள். ‘உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டேஎன்பதை ஹாலிவுட்டில் செய்து காட்டினார்கள்நம்மவர்கள்?

இசையிலும் அப்படித்தான் ஒரு பெரியவர் நிமிர்ந்து நின்றால் போதும், நிலைமை திருந்திவிடும்!

னி, இரு அழகிய பாடல்களைப் பார்க்கலாம்.

ஜானே வஃபா, ஜானேவஃபா

o o o

o o o o o o o o wafaa ki laaj reh jaayegi aajaa tere aane se mohabbat ki nazar neechi naa ho jaaye zamaane se aa jaan-e-wafaa aa aa jaan-e-wafaa aa

நீ வருவதால் அன்பின் கவுரவம் காப்பாற்றப்படும்

உலகத்தின் முன் காதலின் தலை தாழாது

அன்பே, விரைந்து வா

அன்பே விரைந்து வா!

kehte hain kise pyaar zamaane ko dikhaa de duniyaa ki nazar ishq ke qadmon pe jhukaa de qadmon pe jhukaa de aa jaan-e-wafaa aa aa jaan-e-wafaa aa 

காதல் என்றால் என்ன என்று உலகிற்குக் காட்டுவோம்!

உலகின் பார்வையை காதலின் முன் மண்டியிடச் செய்வோம்!

அன்பே விரைந்து வா!

aajaa ye meraa naaz uthaanaa hi padegaa aajaa ye meraa naaz uthaanaa hi padegaa jab pyaar kiyaa hai to nibhaanaa hi padegaa jab pyaar kiyaa hai to nibhaanaa hi padegaa aa dil ke liye jaan ki baazi bhi lagaa de aa dil ke liye jaan ki baazi bhi lagaa de ae ae ae duniyaa ki nazar ishq ke qadmon pe jhukaa de qadmon pe jhukaa de aa jaan-e-wafaa aa aa jaan-e-wafaa aa 

வா, வந்து என் கௌரவத்தைக் காப்பாற்று

உன் காதல் உண்மை என்றால் சத்தியத்தைக் காப்பாற்று

காதலுக்காக உயிரை வேண்டுமானாலும் பணயம் வை

உலகின் பார்வை காதலுக்குமுன் தலை கவிழட்டும்

அன்பே, விரைந்து வா!

aa pyaar ke toofaan mein lehraa ke chalaa aa aa pyaar ke tufaan mein lehraa ke chalaa aa har qaid ko har rasm ko thukraa ke chalaa aa har qaid ko har rasm ko thukraa ke chalaa aa aashiq hai to har cheez mohabbat pe lutaa de aashiq hai to har cheez mohabbat pe lutaa de duniyaa ki nazar ishq ke qadmo pe jhukaa de qadmo pe jhukaa de aa jaan-e-wafaa aa 

aa jaan-e-waffa aa


வா, காதல் என்னும் புயலில் அலைபோலச் செல்வோம்

ஒவ்வொரு தளையையும் தகர்த்தெறிவோம்

உண்மையான அன்பன் என்றால் காதலுக்காக எல்லாவற்றையும் இழந்துவிடு

உலகின் பார்வை காதலுக்குமுன் தலைதாழ வைப்போம்

அன்பே விரைந்து வா

deewaanaa mohabbat kaa kahin dar ke rukaa hai darbaar mein shaahon ke kahin ishq jhukaa hai khud ishq ke darbaar mein shaahon ko jhukaa de aa jaan-e-wafaa aa shaahon ko jhukaa de shaahon ko jhukaa de 

aa jaan-e-wafaa aa… 

அன்பின் பைத்தியம் எங்காவது பயந்து நிற்கிறதோ?

தர்பாரின் மூலையில் எங்கோ காதல் தலை குனிந்து நிற்கிறதோ

வா, தர்பாரையே காதலுக்குமுன் பணியச் செய்வோம்

அன்பே, விரைந்து வா!

Song: Aa jaanewafa Film: Anarkali 1953 Lyricist: Jan Nisar Akhtar

Music: Basant Prakash Singer: Geeta Dutt.

எத்தனை அருமையான பாட்டு! மிக இனிய மெட்டு, குறைந்த ஆனால் சிறந்த ஆர்கெட்ரேஷன், பாட்டை அணைத்துப் போகிறது!

பாட்டு கீதா தத் குரலிலேயே ஒடுகிறது! ஆலாபனையைக் கேளுங்கள், தொடர்ந்து எடுப்பைக் கேளுங்கள், எத்தனை விதமாக ஜானே வஃபா“- எத்தனை பாவத்தில் இதைப் பாடுகிறார்! மனதைச் சுண்டி இழுக்கும் பாடல், மறக்க முடியாத பாடல்! காதலுக்கு இலக்கணம் வகுக்கும் பாடல்

கீதா தத் குரல் ஒரு தனித்தன்மை வாய்ந்தது. பஜனை, கிளப் பாட்டு, டூயட் என்று எல்லா வகைப் பாடலிலும் தேர்ந்தவர். லதாவின் நிழலில் வாய்ப்பு அதிகமில்லை. கணவர் குருதத்தும் இவர் பாடுவதைத்  தடை செய்திருந்தார்இவர் ஃபோட்டோவைப் பாருங்கள்கண்களில் சோகம் இழையோடும். [.எம்.ராஜா கண்ணிலும் ஒரு சோகம் இருக்கும்}

ஜான் நிஸார் அக்தர் பெரிய உருது கவியாக இருந்தவர். இந்தப் பாடல் சிறந்த கவிதை.

இந்தப் பாடலின் பின் ஒரு வரலாறு. இசைஞர் பஸந்த் பிரகாஷ், கேம் சந்த பிரகாஷின் சகோதரர். கீதா தத் குரலிலேயே எல்லா நாயகி பாடல்களும் இருக்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் இவர் ஒப்பந்தமானார். இந்த ஒரு பாட்டு ரிகார்டிங் முடிந்தவுடன் நோய்வாய்ப்பட்டார்இவருக்கு பதிலாக சி.ராம்சந்த்ரா வந்தார். அவர் லதா குரலிலேயே எல்லாப் பாடல்களையும் பதிவுசெய்தார். தயாரிப்பாளர்கள் எப்படியோ இந்த ஒரு பாட்டைப் படத்தில் தக்கவைத்தனர்.

மொஹப்பத் கீ ராஹோ(ன்) மே

Mohabbat ki raaho(n) mein chalna sambhal ke

Yaha(n) jo bhi aayaa gaya haath mal ke

மொஹப்பத் கீ ராஹோ(ன்) மே சல்னா ஸம்பல் கே

யஹா(ன்) ஜோ பி ஆயா கயா ஹாத் மல் கே

காதலின் பாதையில் கவனமாகப் போகவும்

இங்கே வந்தவர்கள் அனைவரும் கையில் இருந்ததை எல்லாம் இழந்தார்கள்

Na payee kisi ne muhabbat ki manzil

Kadam dadmagaye zara duur chal ke

பாயீ கிஸீ நே மொஹப்பத் கீ மன்ஃஜில்

கதம் டக்மகாயே  ஃஜரா தூர் சல் கே

காதல் என்னும் இலக்கை அடைந்தவர்கள் யாருமில்லை

சிறிது தூரம் போவதற்குள் நடை தடுமாறுகிறது!

Hamein doodhthee hai, baharo(n) ki duniya

kaha(n) aagaye ham chaman se nikal ke

ஹமே(ன்) டூண்ட் தீ ஹை பஹார்(ன்) கீ துனியா

கஹா(ன்) ஆகயே ஹம் சமன்  ஸே நிகல் கே

வஸந்த காலம் என்னைத் தேடுகிறது

நான் வானத்திலிருந்து எங்கு வந்து விட்டேன்!

kahin toot jaye na hasrat bhara dil

na yu(n) teer feku(n) nishana badal ke

கஹீ(ன்) டூட் ஜாயே நா ஹஸ்ரத் பரா தில்

யூ(ன்) தீர் ஃபே(ன்) கோ நிஷானா பதல் கே

ஆசையும் எதிர்பார்ப்பும்  நிறைந்த இந்த மனது முறியாமல் இருக்கவேண்டும்!

வேறு இலக்கை நோக்கி அம்பு எய்யாமல் இருக்கவேண்டும்!

Song: Mohabbat ki raaho(n) mein  Film: Uran Khatola  1955

Lyricist: Shakeel Badayuni

Music: Naushad  Singer: Mohammad Rafi

என்ன அழகான பாடல்! ரஃபியின் அசல் குரல். இனிய மெட்டு, சிறிய, அழகிய கவிதை!

இது ஜெய்ஜய்வன்தி (Jaijaivanthi)  ராகத்தில் அமைந்துள்ளது. இதே ராகத்தில் அமைந்த , மன்னா டே பாடும்சலே ஜா ரஹே(ன்) ஹைஎன்ற கினாரே கினாரே படப் பாடலுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும். ஒரே ராகம், இரண்டு மெட்டுக்கள்

[ஜெய்ஜெய்வன்தி ராகத்தைத்விஜாவன்திஎன்ற பெயரில் கர்னாடக இசைக்குக் கொண்டுவந்தார், ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர்.]

இந்த உரன் கடோலா படம் தமிழில்வான ரதம்என்ற பெயரில் வந்தது! பாடல்களை கம்பதாசன் தமிழில் எழுதினார். சரியான பதிவு கிடைக்கவில்லை. தமிழில் இந்தப் பாட்டை டி..மோதி  நன்றாகப் பாடி இருக்கிறார். “இடர் சூழும் காதலின் பாதை செல்லாதேஎன்று இந்தப் பாடல் வரும்! யூடியூபில் கேட்கலாம்.

 The course of true love never runs smooth என்பது ஆங்கிலப் பழமொழி! இதன் விளக்கமோ இந்தப் பாட்டு!

[இந்தப் பாடல்களின் சரியான ஹிந்தி வடிவம் கிடைக்கவில்லை.]

tags — ஹிந்தி படப் பாடல்கள் – 22 , தரம் ,

***

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் படைப்பாற்றல் திறன் வளர்ந்தது எப்படி? (Post No.7901)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7901

Date uploaded in London – – 30 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் படைப்பாற்றல் திறன் வளர்ந்தது எப்படி?

ச.நாகராஜன்

1993இல் வெளிவந்து உலகைக் கலக்கிய ஜுராஸிக் பார்க்கை எடுத்த ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் வளர்ந்த விதம் சுவாரசியமானது.

இளம் வயதிலேயே அவர் திரைப்படம் எடுப்பதில் ஆர்வம் உள்ளவராக இருந்தார்.

அதற்கான படைப்பாற்றல் திறன் அவருக்கு இயல்பாகவே இருந்தது. ஆனால் அதைத் தூண்டி விட்டு அவரை உற்சாகப்படுத்தி அவரை பரிணமிக்க வைத்த பெருமை அவரது தாயான லீயையே (Leah) சேரும்.

இளம் வயதில் ஸ்பீல்பெர்க் பாய் ஸ்கவுட்டில் (Boy Scout) சேர்ந்திருந்தார். ஒரு குட்டித் திரைப்படத்தைத் தயாரித்து அந்தத் தயாரிப்பிற்கான மெரிட் பாட்ஜைப் (Merit Badge) பெற வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்தது. அப்போது அவருக்கு வயது 12 தான்!

சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்த தாயாரிடம் சென்று தன் ஆசையைச் சொன்னார்.

“வெளியே போய் விளையாடு. வேண்டாத வேலையில் எல்லாம் ஈடுபடாதே” என்று மற்ற தாய்மார்களைப் போலச் சொல்லி ஸ்டீல்பெர்க்கை அவர் தாயார் விரட்டி விடவில்லை.

அவரை உற்சாகப்படுத்தினார்.

அதற்கு உதவிகள் செய்தார்; ஏன் தானே நடிக்கவும் செய்தார்!

ஸ்பீல்பெர்க் திரைப்படத்தை எடுக்க அவரது தந்தை ஒரு சூப்பர் -8 மூவி கேமராவை வாங்கித் தந்தார்.

ஸ்பீல்பெர்க் எடுக்க விரும்பிய படம் ஒரு திகில் படம்.

அதில் ஒரு காட்சியில் சமையலறை காபினெட்டிலிருந்து ரத்தம் குபுகுபுவெனப் பொங்கி வர வேண்டும்.

அம்மாவிடம் காட்சி பற்றிச் சொன்னார் அவர்.

உடனே அவர் கடைவீதிக்குச் சென்று 30 செர்ரி கேன்களை வாங்கி வந்தார். அதை சமையலறை காபினெட்டில் ஊற்றி ரத்தம் குபுகுபுவெனப் பொங்கி வரும் ஷாட்டை எடுக்கச் செய்தார்.

படம் வெற்றியானது. அவருக்கு மெரிட் பேட்ஜும் கிடைத்தது.

அவரது தாய்  வீட்டையே ஸ்டூடியோவாக மாற்ற அவருக்கு அனுமதி தந்தார். அவ்வப்பொழுது காட்சிக்குத் தக மேஜை நாற்காலிகள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் இடம் மாற்றி வைக்கப்படும். பின்னணி அமைப்புகள் அமைக்கப்படும்.

இதற்கெல்லாம் அவரது தாயார் தான் உதவுவார்.

பாத்திரங்களின் காஸ்ட்யூமையும் அவர் தயார் செய்து தருவார்.

ஒரு முறை பாலைவனத்தில் ஒரு காட்சி எடுக்கப்பட வேண்டியிருந்தது. தனது காரை எடுத்தார். ஸ்பீல்பெர்க்கைக் கூட்டிக் கொண்டு பாலைவனப் பகுதிக்கே சென்றார்.

இப்படி அனைத்து விதத்திலும் அவரை ஊக்கப்படுத்திய அவரது தாயார் 97 வயது வரை வாழ்ந்து 2017இல் மறைந்தார்.

 இளம் வயதில் குழந்தைகளின் ஆசையையும் படைப்பாற்றல் திறனையும் பெரும்பாலான தாய்மார்களும் தந்தைமார்களும் புரிந்து கொள்வதில்லை; புரிந்து கொண்டாலும் அந்த ஆசைக்கு உரம் போட்டு வளர்ப்பதில்லை. குழந்தைகளை ஊக்குவிப்பதில்லை.

ஆனால் சில பெற்றோர்கள் மட்டுமே குழந்தைகளின் ஆசையை நன்கு புரிந்து கொண்டு ஊக்கப்படுத்துவர்.

ஸ்பீல்பெர்க்கின் தாயார் அப்படிப்பட்ட அரிதான தாயார்.

படைப்பாற்றல் திறனை இளம் வயதில் ஒரு குழந்தைக்கு வளரப் பெரிதும் உறுதுணையாக இருக்க வேண்டியது அந்தக் குழந்தையின் குடும்பமே!

****