Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
MAY 2020 GOOD THOUGHTS CALENDAR
31 Quotations on Patience are given in this month’s calendar:-
Festival Holidays — May 1 May Day, 4 Agni Nakshatra period begins, 7 Chitra Purnima, 17 Dattatreya Jayanthi, 28 Agni Nakshatra period ends.
Ekadasi Fasting Days— 3,18; Full moon day- 7;
New Moon day 22.
Subha Muhurtams/ Auspicious Days- May 4,6,13,18,24,27
**
May 1 Friday
Patience, Purity and Perseverance will prevail –Swami Vivekananda
**
May 2 Saturday
Forbearance is the best ornament for both men and women-Valmiki Ramayana 1-33-7
**
May 3 Sunday
The earth support the men who dig at it . Similarly bear with those who scorn you; that is the best virtue- Tirukkural 151
**
May 4 Monday
Forbearance is the highest abode of Brahmins-
Katha Sarit Sagara
**
May 5 Tuesday
Forbearance is the crest jewel of the mighty
–Jatakamala
**
May 6 Wednesday
Forgive wrongs done to you; better still forget them
–Tirukkural 152
**
May 7 Thursday
What cannot be achieved by forbearance?
Chanakya sataka 13-22
**
May 8 Friday
Forbearance is the bedrock of all penance–Harshacharita
**
May 9 Saturday
Great people deem that as tolereance which is free from complaint-Bharata Manjari
**
May 10 Sunday
Patience is not present in all the valiant
-Valmiki Ramayana — 7-58-5
May 11 Monday
Forbearance glistens in the truthful, the gallant and the mighty–Ramayana Manjari
**
May 12 Tuesday
The greatest want is , not looking after a guest; the greatest courage is suffering fools patiently-
Tirukkural 153
**
May 13 Wednesday
When inferiors speak improper words, it is good to bear them patiently. The earth will not regard impatient behaviour as praiseworthy but only as baseness- Naladiyar 81
May 14 Thursday
Patience is an embellishment of the mighty
Chanakya Sataka–13-22
**
May 15 Friday
No weapon equivalent to patience–Kiratarjunia
2-43
**
May 16 Saturday
Over come by forbearance those that harm you by this overbearing conduct–Tirukkural 158
**
May 17 Sunday
If you have infinite patience and perseverance , success is bound to come –Swami Vivekananda
**
May 18 Monday
Man must be forbearing –Satopadesaprabandha
**
May 19 Tuesday
Patience is the ornament of wisdom
–Subhasita ratnakanda manjusha
**
May 20 Wednesday
The wise regard not those that retaliate but they esteem those that forbear–Tirukkural 155
**
May 21 Thursday
Is not intimate friendship with the great contracted with a hope that they would bear and forgive the grievous faults done by their friends? – Naladiyar 87
**
May 22 Friday
One who desires to maintain ones goodness should cultivate forbearance–Tirukkural 154
**
May 23 Saturday
When two persons unite as friends one should as far as possible patiently bear the misconduct of the other if there’s any—Naladiyar 85
**
May 24 Sunday
Those who perform penance by fasting are certainly great but even they are not equal to those that forbear the harsh words spoken by others–
Tirukkural 160
**
May 25 Monday
Those will never experience the evil s of life who knowing what ought to be known, become placid and submissive—Naladiyar 84
Those that forbear the harsh words of the unrighteous one live as holy as a hermit who has renounced the world –Tirukkural 159
**
May 28 Thursday
Patience is the best means of success – –Swami Vivekananda
**
May 29 Friday
The gratification which one derives by retaliation is momentary ; but the glory of forbearance lasts for all time–Tirukkural 156
**
May 30 Saturday
Even when wrong is done by others one should feel compunction for the consequences they should suffer, and refrain from doing any harm in return–Tirukkural 157
**
May 31 Sunday
It is the patient upbuilding of character , the intense struggle to realise the truth, which alone will tell in the future of humanity –Swami Vivekananda.
tags – quotations, patience, forbearance, May 2020 calendar
WRITTEN BY R. NANJAPPA Post No.7888 Date uploaded in London – – 27 April 2020Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஹிந்தி படப் பாடல்கள்-19 – திரை இசைக்கு அநீதி? R.Nanjppa
திரை இசைக்கு அநீதி?ரேடியோ ஒலிபரப்பு வந்த பிறகு இசையை மக்களிடையே கொண்டு செல்ல வானொலி சிறந்தசாதனமாக அமைந்தது.50களில் நமது சினிமா இசை தரத்தில், வீச்சில் உயர்ந்திருந்தது பொதுவாக 80% மேல் மரபுவழி இசையின் அடிப்படையில் அமைத்த பாடல்கள், நல்ல கருத்துள்ள கவிதைப் பாடல்கள் எனப் பலவகையிலும் திரை இசை சிறந்திருந்தது. குரல்வளம் மிக்க பாடக -பாடகிகள். வாத்தியஇசை விற்பன்னர்கள், ஜீனியஸ் இசைஞர்கள் – என திரை இசைத்துறை திறமை மிக்கவர்களால் நிறைந்திருந்தது. ஹிந்துஸ்தானி இசையில் தேர்ந்திருந்த பல உஸ்தாதுகளும் பண்டிட்களும் திரை இசைக்கு இசைந்து வந்தனர். பீம்ஸேன் ஜோஷி பஸந்த் பஹார் படத்தில் பாடியிருக்கிறார், பிஸ்மில்லாகான் ஷெனாய் வாசித்திருக்கிறார். அப்துல் ஹலீம் ஜாஃபர் கான் ஸிதார் வாசித்திருக்கிறார்.அலி அக்பர் கான் ஸரோட் வாசித்திருக்கிறார் அமீர்கான் சில படங்களில் சாஸ்திரீய இசைவழங்கியிருக்கிறார்..
[இந்த அலி அக்பர் கான் விஷயம் அன்று இருந்த தரத்தைக் காட்டும். இவரை ஒரு படத்திற்கு ஸரோட் வாசிக்க ஷங்கர்-ஜெய்கிஷன் அழைத்தனர். உங்களுக்கு ஸரோட் இசை பற்றி என்னதெரியும் என்று கேட்டார் கான் ஸாஹிப். ஷங்கர் சரோட் வாசித்துக் காட்டினார்! அவருக்கு விஷயம்தெரியும் என்ற நம்பிக்கை வந்த பிறகுதான் கான் வாசிக்க ஒப்புக்கொண்டார்!ஷங்கர் பல வாத்யங்களில் தேர்ந்தவர்]இருந்தாலும் நமது அரசு திரை இசைக்கு அநீதி செய்தது எனத்தோன்றுகிறது.அப்போது ( 1952-62) தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சராக இருந்தவர் பி.வி கேஸ்கர். இவர்பாரம்பரிய இசையில் பிடிப்புள்ளவர். அதற்கு ஒவ்வாதது என்று கருதிய அம்சங்களை அகில இந்தியரேடியோவில் அனுமதிக்க வில்லை, ஹார்மோனியம் கூட தடுக்கப்பட்டது, சினிமா இசை தரம்தாழ்ந்தது, அது மக்களின் ரசனையைத் தாழ்த்தும், நமது பாரம்பரிய இசைக்கும் பண்பாட்டுக்கும்ஊறு விளைவிக்கும் என உறுதியாக நம்பினார். அதனால் ஆல் இந்தியா ரேடியோ திரை இசையை ஒலிபரப்புவதைத் தடை செய்தார்! (கிரிக்கெட் காமென்டரியும் தடை செய்யப்பட்டது!)என்ன கொடுமை , பாருங்கள்! அன்று 80% சினிமா இசை நமது பாரம்பரிய இசையின்அஸ்திவாரத்தில் எழுந்தது தான்- இது ஏனோ கேஸ்கருக்குப் புரியாமல் போனது !இந்த சமயத்தில் ரேடியோ சிலோன் எழுந்தது! நமது சினிமா பாடல்களை அவர்கள் ஒலி பரப்பத்தொடங்கினார்கள், மக்களிடையே அபரிமித ஆதரவும் பெற்றார்கள். இந்திய சினிமா பாடல்களை ரேடியோ சிலோனில் கேட்க வேண்டும்! -என்ன அவல நிலை!
இதை உணர்ந்துகொண்ட அரசு 1957ல் “விவித் பாரதியை”த் தொடங்கினர். ஆனால் ரேடியோசிலோன் இடத்தைப் பிடிக்க முடியவில்லை. அகில இந்தியாவையும் கவர்ந்த “பினாகா கீத் மாலா”போன்ற சூபர் ஹிட் நிகழ்ச்சி ஒன்றைக்கூடத் தரமுடியவில்லை. பிற அரசுத்துறைகளைப் போலவேசுரத்தில்லாமல், மக்கள் தொடர்பு இல்லாமல் அதிகார நோக்கிலேயே இயங்கியது விவித் பாரதி.ரேடியோ சிலோனில் கோபால் ஷர்மா, தரம் தில்லன், மஹாஜன் போன்றவர்கள் குரலில் ஒரு கவர்ச்சி இருக்கும், சினேகத் தன்மை இருக்கும். நமக்கு மிக வேண்டியவர்கள் பேசுவது போலவேஇருக்கும்.
There would be a personal touch., a sense of intimacy. அதிகாரத் திமிரில் ஊறிய ஆல் இந்தியா ரேடியோவில் இதை எதிர்பார்க்கலாமா? இன்று இன்டர்நெட், யூடியூப் இருப்பதால் எவர் தயவும் இல்லாமல் நம் பொற்காலத்து இசையைக்கேட்கலாம், [ஆனால் யூடியூப் நம்பத் தகுந்ததல்ல- இன்று இருப்பது நாளை காணாமல் போகலாம்!]அன்று நடந்த அநியாயத்திற்குப் பிராயச்சித்தம் போல், இன்று வரும் சினிமா இசை தங்குதடையில்லாமல் ரேடியோவில் வருகிறது! ஆனால் அந்தத் தரம் இன்று இல்லையே!இன்றய டெக்னாலஜி அந்தப் பழைய இசை-ஜீவனுள்ள இசை- உருவாக உதவாது. பல நவீனகருவிகள் அசல் வாத்யங்களுக்கு இடமில்லாமல் செய்துவிட்டன. [ ஆனால் இது நம் தவறுதான்!]கலைஞர்களுக்கும் குழி பறித்து விட்டன. ஒரு கருவியை வைத்து பல வாத்ய இசைகளை எழுப்பலாம்.ஒரு மிலோன் குப்தா, கூடீ சீர்வை. ஸன்னி கேஸ்டலினோ. சிக் சாக்லேட்- போன்றோருக்குஅவசியமில்லாமல் செய்துவிட்டது
ஆனால் இசையைக் கேட்கவும் பதிவு செய்யவும் புதிய டெக்னாலஜி உதவும். டெக்னாலஜிக்கு ஜேபோடலாமா?Medium is the message என்று Marshall McLuhan மீடியாத்துறைக்குச் சொன்னது பொற்காலசினிமா இசைக்கு முற்றும் பொருந்தும். இசை நம் பண்பாட்டின் ஒரு அங்கம். இது தரம் தாழ நாம்காரணமாக இருக்கக்கூடாது.
Golden days may not return, but golden appreciation need not decline or dwindle! This isthe message of the golden music of the Golden era!நல்ல திரை இசை மக்களுக்கு பாரம்பரிய இசையை அனுபவிக்க, ரசிக்க பயிற்சிதரும் ஒருசாதனமாகப் பயன் படும். நல்ல பாடல்கள் நம் இலக்கிய மரபுடன், பண்பாட்டு அம்சங்களுடன் உள்ளதொடர்பை வலுப்படுத்தும். அந்தக் காலத்து நாடகப் பாடல்மூலம் எஸ். ஜி.கிட்டப்பா பாமர மக்களிடம்நல்ல இசையைக் கொண்டு சேர்க்கவில்லையா!
‘கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகைகிடைத்த’ என்ற வள்ளலார் பாட்டை அவர் தானே பிரபலப் படுத்தினார்! ஏன். ஜி.என்.பி, முசிரி,எம். எஸ், தண்டபாணி தேசிகர். கே.பி.சுந்தராம்பாள் போன்றோர் சினிமாவிலும் பாடி நடித்தார்களே!“பண்பாடு”- இது Culture என்ற சொல்லின் தமிழாக்கம்- செய்தவர்- டி.கே.சி அவர்கள்! சினிமாஇதை எப்படி வளர்க்க முடியும்? இசை, சாஹித்யம் – இவை இரண்டும் முக்கிய வழிகள்.ஒரு உதாரணம் பார்க்கலாம். 1954லில் வந்த ‘மிஸ்ஸியம்மா’ தமிழ்ப்படம் அனேகமாகஅனைவருக்கும் தெரிந்திருக்கும். இனிய பாடல்கள் நிறைந்தது. எல்லாப் பாடல்களும் கர்னாடகராகங்களில் அமைந்தவை. மக்களிடையே நல்ல வரவேற்பும் பெற்றன. இதில் வந்த “பிருந்தா வனமும்நந்த குமாரனும்” என்ற பாட்டு மிகப் பிரபலமானது. இதன் ஸாஹித்யம் நினைவிருக்கலாம்:
பிருந்தா வனமும் நந்த குமாரனும் யாவருக்கும் பொதுச் செல்வ மன்றோ ஏனோ ராதா இந்தப் பொறாமை யார்தான் அழகால் மயங்கா தவரோ
இந்தப் பாடலை எழுதியவர் தஞ்சை ராமையதாஸ்.இந்தப் படம் “மிஸ்மேரி ” என்ற பெயரில் ஹிந்தியில் வந்தது. அதில் ராஜேந்த்ர க்ருஷண் எழுதியபாடலைப் பாருங்கள்:ப்ருந்தாவன் கா க்ருஷ்ண கன்ஹையா
वृन्दावन का कृष्ण कन्हैया सबकी आँखों का तारामन ही मन क्यों जले राधिका मोहन तो है सबका प्याराப்ருந்தாவன் கா க்ருஷ்ண கன்ஹையா ஸப் கீ ஆ(ன்)கோ கா தாராமன் ஹீ மன் க்யோ(ன்) ஜலே ராதிகா மோஹன் தோ ஹை ஸப் கா ப்யாராப்ருந்தாவனத்தின் க்ருஷ்ண கன்னையா நம் அனைவரின் கண்ணின் மணியன்றோ!பின் ராதே, ஏன் உன் மனத்தில் பொறாமைத் தீ வந்தது?கண்ணன் அனைவரின் உள்ளம் கவர்ந்தவன் இல்லையா?
जमुना तट पर नन्द का लाला जब जब रास रचाए रेतन मन डोले कान्हा ऎसी मुरली मधुर बजाये रेसुध-बुध खोये खड़ी गोपियाँ जाने कैसा जादू डालावृन्दावन का …
ஜமுனா தட் பர் நந்த்கா லாலா ஜப் ஜப் ராஸ் ரசாயே ரேதன் மன் டோலே கான் ஹா ஐஸே முர்லீ மதுர் பஜாயே ரேஸுத்-புத் கோயே ஸடீ கோபியா(ன்) ஜானே கைஸா ஜாதூ டாலாயமுனையின் கரையிலே இந்த நந்தனின் செல்வம் எப்பொழுதெல்லாம் ராஸ க்ரீடை தொடங்கினானோ –எப்பொழுதெல்லாம் கண்ணன் தன் மதுரக் குழலிசை இசைக்கத் தொடங்கினானோ –இந்தக் கோபியர் தம் உடல்-மன நினைப்பையே இழந்துவிட்டனரே !இது எந்த விதமான மாயமோ தெரியவில்லையே!
रंग सलोना ऐसा जैसे छायी हो घटा सावन कीऐ री मैं तो हुई दीवानी मन मोहन मन भावन कीतेरे कारण देख सांवरे छोड़ दिया मैंने जग सारा
ரங்க் சலோனா ஐஸா ஜைஸே சாயீ ஹோ கடா ஸாவன் கீஏ ரீ மைதோ ஹுயீ தீவானா மன் மோஹன் மன் பாவன் கீதேரே காரண் தேக் ஸா(ன்)வ்ரே சோட் தியா மைனே ஜக் ஸாராகார்காலத்தின் மேகங்கள் விரிந்து பரந்து வண்ணமயமாக்கி விட்டதுஏனடி, மன மோஹன க்ருஷ்ணன் மனதில் புகுந்ததும் நான் பித்துப் பிடித்தவளாகி விட்டேன்அன்பனே! உன் காரணமாக நான் இந்த உலகத்தை எல்லாம் விட்டுவிட்டேன், பார்!!
Song: Brindavan ka krishna kanhaiya Film: Miss Mary 1957 Lyricist: Rajinder KrishanMusic: Hemant Kumar Singers: Rafi & LataHemant Kumar was assigned music direction, and he wanted to compose on his own.But the producers prevailed upon him to retain this tune as it had become a super hit inthe whole South. Hemant Kumar had to reluctantly agree, but he retained his originaltouch by composing it in the Raag Pahadi, and introducing subtle variations inorchestration. Onemay listen to both versions, and easily decide which sounds sweeter!
இரண்டு பாடல்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள். ஒரே கருப்பொருள்தான்-அதை வெளியிடுவதில் தான்எத்தனை வித்தியாசம்! ‘யாவருக்கும் பொது செல்வம்’ என்பது சாதாரணமான சொல்லாக்கம்.‘ஆ(ன்)கோ கா தாரா” என்பது இலக்கிய மொழி வழக்கு! எது கவிதை? ஊகித்துக் கொள்ளுங்கள்!‘லீலை” என்று ஒரு சொல்லில் தமிழில் குறுக்கியதை விரித்து ஹிந்தியில் எழுதிவிட்டார் கவிஞர்ராஜேந்த்ர க்ருஷன். கோபியர்களின் பக்திப் பரவசத்தையும் விவரித்துவிட்டார்! பாகவதத்தை ஒட்டியேகவிதை இயற்றிவிட்டார்! கோபியரின் நிலையைச் சொன்னது இதை பக்திப் பாடல் வரிசையில் முதல் இடத்தில்சேர்த்துவிட்டது!ஆம், நமது பக்தி இலக்கியத்தில் எழுத்தறிவில்லாத கோப-கோபியரைப்போன்ற பக்தியிற் சிறந்தவர்கள்இல்லவே இல்லை! பக்தி இலக்கணத்திற்குச் சூத்திரம் வகுத்த நாரதர், பக்திக்கு உதாரணமாகச்சொல்வது கோபியரை மட்டுமே!
यथा व्रजगोपिकानाम् । २१ – १.२१யதா வ்ரஜோ கோபிகானாம் [சூத்ரம் 21]விரஜ பூமியில் எவ்விதம் கோபியர்களுக்குப் பக்தி இருந்ததோ அப்படிச் செய்யவேண்டும்.(பகவானுக்காக உடல், பொருள், ஆவி அனைத்தையும் துறப்பது)ஹிந்திக் கவிஞர் எப்படி நமது பக்தி இலக்கிய மரபை சினிமாப் பாட்டில் கொண்டுவந்து விட்டார்,பாருங்கள்!
[ தமிழ் பக்தி மரபில், “கண்ணப்பன் ஒப்பதோர் அன்பு” என்பார் மாணிக்கவாசக ஸ்வாமிகள். ]இப்பாடல் ஒரு பஜனைப் பாடலாக இன்றுவரை வட இந்தியாவில் பாடப்படுகிறது- துளியும் சினிமா சாயலே இல்லை! தமிழில் முடியாதா?தமிழில் இப்படி எழுத முடியாதா? ஏன் முடியாது? ‘மீரா” 1945 படப் பாடல்களை நாம்கேட்டதில்லையா? அதற்குப் பிறகும் “ஜாதகம்” 1953 என்ற படத்தில் இரு பாடல்கள் வந்தன,-மதி குலவும் யாழிசையே, கண்ணன் குழலிசை ஆவாயோ, கண்ணன் குழலிசை போலே உள்ளம் கொள்ளை கொள்வாயோ-மாடுகள் மேய்த்திடும் பையன்- இந்தப் பாடலை முழுதும் பார்ப்போம்:
மாடுகள் மேய்த்திடும் பையன்- பசுமாடுகள் மேய்த்திடும் பையன் தன்னை மதிப்பவர்க்கே மெய்யன் இவன் வானவர்க்கும் புவி மானிடர்க்கும் சுக வரமளிக்கும் ஐயன் மலையைக் குடையாய் ஏந்திடுவான்- விஷமடுவில் தனியாய் நீந்திடுவான் மாதர்கள் அலற சேலைகள் திருடி மறைந்தே செல்வான் பொல்லாதவன் இவன் வானவர்க்கும் புவி மானிடர்க்கும் சுக வரமளிக்கும் ஐயன் மண்ணைத் தின்று தன் வாயில் உலகம்வளர்வதெல்லாம் காட்டி-
மாயையினாலே யாரையும் வென்றுமயக்கிடுவான் மலை யாதவன்வலிய மீன் பெரிய ஆமை வராக வடிவமெல்லாம் எடுப்பான்மானிடர் காணா ஜால மிகுந்தமாயா வினோத னே இவன் இவன் வானவர்க்கும் புவி மானிடர்க்கும்
சுக வரமளிக்கும் ஐயன்பால் தயிர் வெண்ணைப் பானையில் மூழ்கிபைய நடந்தே ஆடுவான்-அதைப்பார்த்திடில் தனது பந்தைத் தேடிப்பார்த்தேன் என்றே ஓடுவான் இவன் வானவர்க்கும் புவி மானிடர்க்கும் சுக வரமளிக்கும் ஐயன்இதை எழுதியவர் டி.கே, சுந்தர வாத்யார். விவரம் ஒன்றும் தெரியவில்லை. கோவர்த்தனம் இசையில்இதைத் தன் தேன் குரலில் பாடியவர் எம்.எஸ்.ராஜேஸ்வரி!இப்போது இத்தகைய பாடல் வருமா? தரமும் பண்பாடும் ரசனையும் எப்படித் தாழ்ந்து போய்விட்டனபாருங்கள்!இன்னொரு டூயட் பார்ப்போம்
chanda tale o chanda tale o chanda tale muskuraye jawaniya hotho pe aa gayi dil ki kahaniya hotho pe aa gayi dil ki kahaniya chanda tale o chanda tale muskuraye jawaniya
dil ka fasana kaha bhi na jaye kahe bina hamse raha bhi na jaye bha gayi teri nadaniya ho nadaniya chanda tale muskuraye jawaniya hotho pe aa gayi dil ki kahaniya chanda tale o chanda tale muskuraye jawaniya
தில் கா ஃபஸானா கஹா பீ ந ஜாயேமனதின் கதையைச் சொல்ல இயலவில்லையே!அதைச் சொல்லாமலும் இருக்க முடியவில்லையே!ஓ உன்னுடைய இந்த ‘அறியாத்தனம்’ பிடித்துப் போய் விட்டதே!நிலவொளியிலே…..
pahli wafaye pahli bahar hai koi bata de kaisa ye pyar hai taro ke jaise kaaba le aao kaaba le aao chanda tale muskraye jawaniya hotho pe aa gayi dil ki kahaniya chanda tale o chanda tale muskuraye jawaniya
பஹலீ வஃபாயே பஹலீ பஹார் ஹைமுதலில் தோன்றும் நம்பிக்கையே முதல் வஸந்தமாகும்!இக் காதலின் இயல்பு என்ன, எவராவது விளக்குவார்களா?தாரகைகளைப் போல, நற் செய்தி தாங்கி வா!நிலவொளியிலே…….Song: Chanda tale Film: Chandi Rani 1953 Lyricist: Vishvamitra AdilMusic: C.R.Subbaraman +M.S.Visvanathan Singers: Talat Mahmood & P.Bhanumathi
இது பானுமதி தயாரித்து , நடித்து இயக்கிய படம். (வாழ்க பெண்கள் விடுதலை!)தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மும்மொழிகளில் வந்தது.தெலுங்கிலும் தமிழிலும் இப்பாட்டை கண்டசாலாவும் பானுமதியும் பாடினார்கள். தமிழ்ப்பாடல்எழுதியது கே.டி.சந்தானம். தமிழைவிட தெலுங்கில் இனிமையாக இருக்கிறது என்பது என் கருத்து.பாடகர்களுக்கு தாய்மொழியானதால் அப்படி இருக்கலாம். ஹிந்தியிலும் பானுமதியே பாடியிருக்கிறார்.உச்சரிப்பில் வித்தியாசம் தெரிகிறது.இந்தப் பாட்டின் மெட்டு யார் அமைத்தது? இந்தப் படத்திற்கு இசைஞரான சி ஆர். சுப்பராமன்இடையில் காலமானார். அவர் உதவியாளராக இருந்த எம்.எஸ்.விஸ்வனாதன் அப்பணியைச் செய்துமுடித்தார். இந்த மெட்டு தான் அமைத்தாக அவர் சொல்லியிருக்கிறார். மற்றும் இந்த மெட்டுக்குப்பாட்டெழுத விஸ்வாமித்ர ஆதில் தடுமாறியதாகவும், தானே முதல் வரியை ” சந்தா தலேமுஸ்குராயே ஜவானியா” என்று எடுத்துக் கொடுத்ததாகவும் யூட்யூபில் சொல்லி யிருக்கிறார். இதைநம்புவது கடினம். இந்த மெட்டு அப்படி ஒன்றும் கடினமானதல்ல. நான் 60 வருஷங்களாக ஹிந்திப்பாட்டைக் கேட்டும், கற்றும் வருபவன் .
ஹிந்தி பாடலாசிரியர்கள் அப்படி சோடைபோனவர்கள் அல்ல.டைரக்டர், பெரிய நடிகர்கள், இசைஞர் ஆகியோர் விருப்பத்தின்படி பலமுறை எழுதுவார்கள்.சில சமயம் பாடகர்களுக்கே சில வார்த்தைகள் கடினமாகிவிடும், அதை மாற்றுவார்கள். லதாமங்கேஷ்கர் தமிழில் பாடமுயன்றபோது (டப்பிங்கில்) தடுமாறினார். அவருக்காக கம்பதாசன் பலமுறைசொற்களை மாற்றி எழுத நேர்ந்தது என்பார்கள்!
மேலும், இந்த முதல்வரியின் சொற்கள் சாதாரண வழக்கிலிருக்கும் சொற்கள் அல்ல! தரமானஇலக்கிய வழக்கு! ஹிந்தி பேசாத, தாய்மொழியாக இல்லாத ஒருவருக்கு இத்தகைய சொற்கள்அமைவது அதிசயமே![ இது என் சொந்தக் கருத்து. எம்.எஸ்.வி அபிமானிகள் தயவு செய்து கோபிக்க வேண்டாம்!]இந்தப் பாடலில், “taro ke jaise kaaba le aao” என்ற வரியின் பொருள் விளங்கவில்லை! இங்கு
வரும் “காபா” என்ற சொல்லுக்கு அகராதியிலும் பொருள் தரவில்லை!விஸ்வாமித்ர ஆதில் பல வெற்றிப் படங்களுக்கு கதையும் உரையாடலும் எழுதியவர், உதவிடைரக்டராக இருந்தவர்.சில சமயம் பாடலாசிரியர்கள் தடுமாறுவது உண்டு; இது இயலாமையினால் வருவது அல்ல. 1965ல்தேவ் ஆனந்த் Guide படமெடுத்தார். ஹஸ்ரத் ஜய்புரி பாட்டெழுத வேண்டும்.. ஒரு சீனிற்குப் பலமுறை எழுதியும் டைரக்டர் விஜய் ஆனந்திற்கு திருப்தியாகவில்லை.
[இதில் வரும் கதா நாயகன்‘கேரக்டர்’ சரியில்லை.] ஏதோ சொல்லிக்கொண்டே இருந்தார். ஹஸ்ரத்திற்குக் கோபம் வந்துவிட்டது.“ஒரு மோசமான பாத்திரத்திற்கு இன்னும் நன்றாக என்ன எழுதுவது” என்று சொல்லி காகிதத்தைவிட்டெறிந்து விட்டுப் போய்விட்டார். [அவர் சொன்ன அசல் வார்த்தை “ஒரு படவா”விற்கு என்பது]பின்னர் ஷைலேந்த்ராவை எழுதச்சொன்னார்கள். அவர் ஹஸ்ரத்தின் நண்பர். அதனால் ஹஸ்ரத்எழுதியிருந்த முதல் வரி ” தின் டல் ஜாயே” என்ற சொற்களை வைத்தே பாட்டெழுதினார். இங்குவெளிப்படுவது எழுத்தாளரின் மனோதர்மமே தவிர, இயலாமை அல்ல!
சில சமயம் சிலர் அசப்பில் சொல்லும் சொற்கள் பாட்டின் முதல் வரியாக அமைவதுண்டு. ஒருசமயம் இசைஞர்கள் ஷங்கர், ஜெய்கிஷன், கவி ஹஸ்ரத், ஷைலேந்த்ரா ஆகியோர் காரில்வந்துகொண்டிருந்தனர். ஜெய்கிஷன் வழியில் யாரையோ திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டேவந்தார். கூட இருந்த யாரோ , “அரே க்யா முட் முட் கே தேக் ரஹே ஹோ” ( என்ன திரும்பிப்பார்த்துக் கொண்டே இருக்கிறாய் ) என்று கிண்டலடித்தார். பின்னர் ஷைலேந்த்ரா இந்த வார்த்தையைவைத்தே “முட் முட் கே நா தேக் முட் முட் கே” என்று பாட்டெழுதினார்.
ஸ்ரீ 420 படத்தில் இதுபெரிய ஹிட் ஆனது!கவி பரத் வ்யாஸ் “தோ ஆங்கே பாரஹ் ஹாத்” படத்திற்குப் பாட்டெழுதவேண்டும் படப்பிடிப்புதொடங்கியும் பாட்டு வரவில்லை ஒரு நாள் தயாரிப்பாளர்-டைரக்டர் சாந்தாராம் வ்யாஸிடம்,‘அரே மாலிக், நீ எந்தக் காலத்தில் பாட்டு எழுதி முடிக்கப் போகிறாய்” என்று கிண்டலாகக் கேட்டார்.கவிக்கு ரோசம் வந்தது! “யே மாலிக் தேரே பந்தே ஹம்” என்ற பிரார்த்தனைப் பாடலை எழுதிமுடித்தார்! மாலிக் என்று சாந்தாராம் சொன்னது, ஓ தலைவா, எஜமானரே என்று நாம் கிண்டலாகச்சொல்வது, கவி எழுதியதோ, அசல் மாலிக் கடவுளைப் பற்றி!. இதில் “மாலிக் ” என்ற சொல்லைப்போட்டதால் இது முஸ்லிம்களுக்கும் பிடித்துப் போய்விட்டது-
பாகிஸ்தானிலும் பாடினார்கள்.அதாவது, சில சொற்கள் பாட்டுக்குத் தூண்டுகோலாக அமையலாம். ஆனால் ஒரு முழு இலக்கியவரியே அம்மொழி பேசாத ஒருவருக்கு வந்தது என்பது ஆச்சரியமே!எப்படியானால் என்ன, ஒரு நல்ல பாட்டு நமக்குக் கிடைத்தது! **** tags — ஹிந்தி படப் பாடல்கள்-19 , திரை இசை, அநீதி,
தர்மபுத்திரருக்கு ஒரு முறை தர்ம சம்பந்தமான சில சந்தேகங்கள் எழுந்தன. தனது சந்தேகங்களைத் தீர்க்க வல்லவரான நாரதைரை அவர் தரிசித்தார்.
நாரதரிடம் தனது சந்தேகங்களைக் கேட்க அவர் ஒவ்வொன்றாக விளக்குகிறார்.
பாகவதத்தில் ஏழாவது ஸ்கந்தத்தில் பதினொன்றாம் அத்தியாயத்தில் பல்வேறு தர்மங்கள் நாரதரால் விளக்கப்படுகின்றன.
தர்ம ரகசியத்தை எனக்கு விளக்கி அருள்வீராக என்று யுதிஷ்டிரர் கேட்க நாரதர் விளக்கும் ஒரு பகுதியாக மனித வாழ்வில் ஒவ்வொரு மனிதனும் சாதாரணமாய் அனுஷ்டிக்க வேண்டிய முப்பது கடமைகள் விளக்கப்படுகிறது.
அந்த முப்பது கடமைகளாவன:-
1) அனைத்துப் பிராணிகளுக்கும் இதம் செய்வதாகிய ஸத்யம்
27) அர்க்யம் , பாத்யம் முதலியன கொடுத்து அவனை ஆராதித்தல்
28) அவனை வணங்குதல்
29) அவனுக்கு எல்லாவிதத்திலும் அநுகூலனாய் இருத்தல்
30) அவனிடத்தில் ஆத்ம சமர்ப்பணம் செய்தல்
இந்த முப்பதும் மனிதர்கள் அனைவரும் சாதாரணமாக அனுஷ்டிக்க வேண்டிய மேலான தர்மம் என்று நாரதர் யுதிஷ்டிரருக்கு விளக்கி அருளுகிறார்.
*
Truthfulness, compassion, austerity and cleanliness [with the vidhi]; tolerance, discrimination, composure and continence, nonviolence, celibacy, generosityand study of the scriptures, sincerity, contentment and to serve the holy souls [in yama and niyama]; gradually cutting with that what is unnecessary and to be of gravity in avoidance of empty talk, self-search, to share food and drink with all beings and to consider everyone first of all a part of God, oh Pândava; to listen and to sing as also to remember Him who is the shelter of all the great souls, to attend, to worship and to propitiate, to be a servant, to be a friend and to be of surrender [in bhâgavata dharma]; to possess all the thirty characteristics as described constitutes the supreme of dharma that pleases Him, the Soul of All, oh King [compare B.G. 12: 13-20].
*
இன்னொரு ஆங்கில மொழிபெயர்ப்பு : செய்தவர் :
An Unknown Servant
Thirty Items of Man’s Duty
Truth,
Compassion,
Austerities,
Purity,
Endurance,
Discrimination between right and wrong,
Control over the mind and senses,
Non-violence,
Practice of Brahamacharya,
Renunciation of prohibitory acts and of part of one’s earning for charity,
Study of the Vedas and practices of Japa and Kirtana of the Divine Name,
Contentment,
Service of saints who regard all as equal,
Gradual withdrawal from worldly enjoyments,
Reflection on the failure of man’s egoistic efforts,
Introspection,
Meditation on the Self,
Equitable distribution among creatures of food-grains and other necessary things,
Looking upon all beings and especially men as the Self or as the Deity,
Hearing,
Loud chanting and constant remembrance of the Name and virtues of Bhagavan Sri Krishna,
The Supreme refuge of saints,
Offering of Service,
Adoration and salutations to Him,
Cultivation of the servant or friendly sentiment towards Him,
And surrender of the Self to Him,
All these are the highest Dharma of men.
Observance if these thirty items of Dharma propitiates God, the soul of the Universe.
*
நாத்திகம் பற்றி பாகவதம்!
கடவுளை நினைக்காமல் அவனிடமிருந்து தள்ளி இருக்கும் மனிதனுக்கு என்ன நடக்கும் ?
இப்படி விதேஹ மன்னனான ஜனகன் கேட்க அவன் முன்னே கூடி இருந்த ஸாதுக்களில் ஒருவர் இப்படி பதில் அளிக்கிறார் :- (அதாவது ஒரு நாத்திகனுக்கு என்ன நடக்கும் என்பதே ஜனக மன்னனின் கேள்வி!)
தர்ம சூட்சுமத்தை அறியாத மூடர்கள் வணக்கமின்றித் தங்களைத் தாங்களே புத்திசாலிகளாக நினைத்துக் கொண்டு ‘நமக்கு என்ன நேருமோ’ என்ற சந்தேகமே இல்லாமல், ‘நமக்கு ஒரு கெடுதியும் இல்லை’ என்ற பெரிய நம்பிக்கை உடையவர்களாகி பிராணிகளுக்குத் தீங்கை இழைக்கின்றனர்.
அந்தப் பிராணிகள் மேலுலகம் சென்ற பின்னர் தங்களுக்குத் தீங்கை இழைத்த துரோகிகள் அங்கு வரும் போது அவர்களுக்குத் தீங்கைச் செய்கின்றன. மேலும் அந்த மூடர்கள் பிறருடைய தேகங்களில் வெறுப்பு கொண்டு அபிசாரம் முதலிய கொடிய செயல்களைச் செய்கின்றனர். அந்த வெறுப்பானது தங்களுக்கும் பிறர்க்கும் அந்தராத்மாவாய் இருக்கும் துக்கங்களைப் போக்கும் பரம புருஷனிடத்திலேயே போய்ச் சேரும் என்பதால் அவர்கள் அவனையே வெறுத்தவர்கள் ஆகிறார்கள்.
மேலும் அவர்கள் பிள்ளை பெண்டிர் போன்ற இணைப்பைக் கொண்டதும் பிணம் போன்றதுமாகிய தேகத்தில் சிநேகம் கொண்டு அதில் வேரூன்றப் பெற்று நரகத்தில் விழுகிறார்கள்.
வாசுதேவனை நினைப்பவர்கள் நல்ல கதியை அடைய அப்படி இறைவன் நினைப்பு இல்லாதவர்கள் தீய கதியையே அடைகின்றனர்.
இந்த விடையால் ஜனகன் தெளிவு பெறுகிறான்.
****
இப்படி ஏராளமான கேள்விகளை ஒன்றன் பின் ஒன்றாக ஜனகன் பெரும் மகான்களின் முன் வைக்க அவனுக்கு உரிய விடைகள் கிடைக்கின்றன.
பாகவதம் தரும் ஏராளமான அற்புத விளக்கங்களை பதினொன்றாம் ஸ்கந்தம் நான்காம் அத்தியாயத்தில் காணலாம்.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
அகஸ்திய மகரிஷி பற்றி அறியாத இந்தியர் எவருமிலர். புராணங்களில் கூறப்படும் மாபெரும் பொறியியல் வல்லுனர்களின் – எஞ்சினியர்களில்- பகீரதனுக்கு அடுத்தபடியாக இந்தியா முழுதும் தெரிந்த எஞ்சினியர் அகத்தியர்தான். அதுமட்டுமல்ல, வியாசர், வால்மீகி ஆகிய இரண்டு முனிவர்களுக்கு அடுத்த படியாக தென் கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்திலும் பிரபலமான ரிஷியும் அகஸ்தியர் ஒருவரே. இந்துக்கள் வணங்கும் ஏழு ரிஷிக்களின் பெயர்களும் துருவன் என்ற சிறுவனின் பெயரும், அருந்ததி என்ற கற்புக்கரசி பெயரும் வடக்கு வானில் ஒளிரும் நட்சத்திரங்களுக்கு சூட்டப்பட்டதை நாம் அறிவோம். இதற்கு அடுத்தபடியாக தெற்கு வானில் நட்சத்திரமாக ஜொலிப்பதும் அகஸ்தியர் (Canopus) ஒருவரே. தென் வானத்தில் தென்படும் சத்தர்ன் கிராஸ் (Southern Cross) எனப்படும் திரிசங்கு நட்சத்திரம் தென்பட்டாலும் அது சொர்க்கத்திலிருந்து கீழே தள்ளப்பட்ட திரிசங்கு ராஜாவின் பெயர் சூட்டப்பட்ட நக்ஷத்திரமேயன்றி முனிவரல்ல.
இவ்வாறு விந்தியமலை வழியாக தென்னாட்டுக்கு சாலை அமைத்த, காவிரி நதியை கேரளத்துக்குச் செல்லவிடாமல் தமிழ்நாட்டுக்குத் திருப்பிவிட்ட, அகஸ்தியர் பகீரதன் போல சிவில் எஞ்சினியர் (not only a Civil Engineer but also a Marine Engineer) மட்டுமல்ல. அவர் ஒரு மரைன் — அதாவது — கப்பல் போக்குவரத்து — எஞ்சினியரும் கூட !—“தமிழ் மொழிக்கு இலக்கணம் எழுது” – “வடக்கில் ஜனத்தொகை பெருகிப் போயிற்று- ஆகையால் 18 குடி மக்களை தெற்கே அழைத்துச சென்று குடியேற்று” – என்று சிவபெருமான் இட்ட கட்டளையை சிரமேற்கொண்டு வந்த அகத்தியன் , அந்தப் பணிகளை முடித்த பின்னர் சும்மா இருக்க முடியவில்லை.
பாண்டியமன்னரின் கடற்படையை எடுத்துக்கொண்டு, முட த்திருமாறன் என்ற மன்னரை அழைத்துக் கொண்டு, 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வியட்நாமில் இந்து மத ஆடசியைத் துவக்கிவைத்தார். துலுக்கர்கள் வந்து அவர்களை மதம் மாற்றும் கி.பி 1600 வரை அது நீடித்தது. இப்போது பெயர் அளவுக்கு தாய்லாந்தில் மட்டும் இருக்கிறது. வியட்நாமில் கண்டு பிடிக்கப்பட்ட ஸ்ரீமாறன் கல்வெட்டுதான் (முடத் திருமாறன்) கல்வெட்டுதான் தென்கிழக்கு ஆசியாவிலேயே பழைய கல்வெட்டு. இப்போது அகஸ்தியர் சிலை இல்லாத தென் கிழக்கு ஆசிய நாடு கிடையாது. இவை எல்லாம் நான் 11 ஆண்டுகளாக இந்த பிளாக்குகளில் எழுதிய பழைய விஷயம். இப்போது புதிய விஷயத்துக்கு வருகிறேன் .
அய்யாசாமி கல்யாண ராமன் என்ற தமிழ் அறிஞர் ‘ஆர்யதரங்கிணி’ என்ற பெயரில், இரண்டு தொகுதிகளில், ஆங்கிலத்தில், இந்திய கலாசாரம் பற்றி அரிய , பெரிய நூல் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அகஸ்தியர் பற்றி அதற்கு முன்னர் தமிழ் அறிஞர்களுக்குத் தெரியாத தென்கிழக்காசிய அகஸ்திய முனி கல்வெட்டுகளை எடுத்துக் காட்டியுள்ளார்.
அவர் போகிற போக்கில், ‘தொல்காப்பிய முனிவரின் சிலை த்ருண பிந்து என்ற பெயரில் அகஸ்தியர் சிலையுடன் ஜாவாவில் இருக்கிறது’— என்று எழுதி இருந்தார். நீண்ட நாளகத் தேடிய அந்த முனிவரின் சிலையின் படம் கிடைத்துவிட்டது. இத்துடன் உள்ள படங்களைக் காண்க.
ஹரிஹரன் (சங்கர நாராயணன் சிலை)
பிலிப் ராவ்சன் எழுதிய ‘தென் கிழக்காசிய நாடுகளின் கலைகள்’ என்ற ஆங்கிலப் புஸ்தகத்தில் ஒரு பக்கம் சம உயரமுள்ள அகஸ்தியர் , விஷ்ணு சிலைகளின் படங்களை வெளியிட்டு அவை மத்திய ஜாவாவில் சண்டி பனோன் என்ற இடத்தில் கிடைத்தவை என்று எழுதியுள்ளார். ஜாவா தீவு இந்தோனேஷியாவின் ஒரு பகுதி . உலகப் புகழ் பெற்ற போரோபுதூர் தூபி உள்ள இடம். எட்டாம் நூற்றாண்டு முதல் பல கட்டிடங்கள் அங்கே உள்ளன. சிங்கசாரி என்னும் இடத்தில் கிடைத்த அகஸ்தியர் சிலை, த்ருண பிந்து சிலைகள் பற்றி எழுதுகையில் அகஸ்தியர் ஒரு தெய்வ ரிஷி என்றும் சிவபெருமானின் அவதாரமாகக் கருதப்படுகிறார் என்றும் சொல்கிறார். த்ருண பிந்து (Trunabindhu) என்பவர் கொழுத்த முனிவர் அவர் சிவ பெருமானின் புகழ் மிகு பக்தர் என்று மட்டும் சொல்கிறார் .
த்ருண பிந்து தொல்காப்பியரா?
த்ருண பிந்து சிலை
த்ருண பிந்து என்ற பெயர் மைசூர் ராமர் கோவில் மற்றும் ராமாயண சம்பந்தப்பட்ட கோவில்களில் ஒரு முனிவராக காட்டப்படுகிறார். ஆனால் தமிழ் இலக்கியத்தில் தொல்காப்பியரின் பெயர் த்ருண தூமாக்கினி முனிவர் என்றே உள்ளது. ஆகவே த்ருண பிந்துதான், த்ருண தூம அக்கினியா என்று ஆராய வேண்டும்..
தொல்காப்பியர் எனப்படும் த்ருண தூமாக்கினி முனிவர் எழுதிய தொல்காப்பியம்தான் தமிழில் கிடைத்த மிகப்பழைய நூல் என்று பெரும்பாலோர் செப்புவர். இவருடைய காலம் பற்றிய வேறுபட்ட கருத்துக்களை ‘தொல்காப்பியர் காலம்’ என்ற தொடர் கட்டுரைகளில் கொடுத்துவிட்டேன்.
இவர் பற்றி உலகப் புகழ் உரைகாரர் , ‘உச்சிமேற் புலவர் கொள் , நச்சினார்க்கினியர்’ ஒரு கதை சொல்கிறார்.
தொல்காப்பியரின் இயற்பெயர் த்ருண தூமாக்கினி முனிவர் என்றும் அவர் அகத்தியர் சீடர் என்றும் சொல்லிவிட்டு தொல்காப்பிய பாயிர உரையில் ஒரு சுவையான கதையைச் சேர்த்து இருக்கிறார். அது என்ன கதை?
“ஏ , சீ டா , தொல்காப்பியா ; இங்கே வா! என் மனைவி லோபாமுத்ரா விதர்ப்ப (மத்திய பிரதேச மாநிலம்) நாட்டு அரசி ; அவளைப் போய் அழைத்துவா. ஒரு முக்கியமான விஷயம் ; குருவின் மனைவி மீது கை பட்டுவிடக்கூடாது ; ஆகையால் நாலு கழி / கோல் நீள த்துக்குத் தள்ளியே நடந்துவா” என்று கட்டளை இட்டார்.
அப்படியே ஆகட்டும் குருவே என்று சொல்லிவிட்டு, த்ருண தூமாக்கினி என்ற பெயர் கொண்ட தொல்காப்பியர் 99 சதவிகிதம் பணியை செவ்வனே செய்து முடித்தார். மதுரைக்கு வருகையில் வைகை நதி வெள்ளப் பெருக்கு எடுத்து ஓடியது. ‘தொல்’.லுக்கு பெரிய தொல்லை ! உடனே பேரழகி, விதர்ப்ப நாட்டு அரசி லோபாமுத்ராவை நோக்கி, “தாயே ஓர் கழியின் ஒரு புறம் நீங்கள் பிடித்துக் கொள்ளுங்கள். மறுபுறத்தை நான் பிடித்துக் கொள்கிறேன் ; உங்களை வெள்ளம் அடித்துச் செல்லாமல் காப்பது என் கடமை” என்று சொல்லி வெற்றிகரமாக அழைத்தும் வந்தார்.
அகஸ்திய முனிவரிடம் அவர்தம் மனைவியை ஒப்படைக்கையில் வைகை வெள்ளத்தை வெற்றிகரமாக கடந்து வந்த சாதனை பற்றி விதந்து ஓதினார் . “அடப்பாவி ; நாலு கழி இடைவெளி இருக்க வேண்டும் என்று சொன்னேனே ; ஒரு கம்பு நீளம் தான் இருந்தது என்று சொன்னாயே ; நீ சொர்க்கத்துக்கு போக மாட்டாய்; தொலைந்து போ” என்று சபித்தார். த்ருண துமாக்னிக்கும் கோபம் வந்தது .
“என்ன குருவே , எல்லை மீறிப் போகிறீர் ! செய்யாத தப்புக்கு சாபமிடுவது முறையோ ? இது தகுமோ? இந்தா , பிடி சாபம் ! நீ வீரும் சொர்க்கத்தைக் காண மாட்டீர்” — என்று சாபம் இட்டார்.
தேவ லோக அழகிகள் – அப்சரஸ்
இது ‘நச்சி.’ சொல்லும் கதை. 600 ஆண்டுப் பழமையான கதை. தொல்காப்பியர் பிராமணர் என்பது உண்மையே. அவர் உலகப் புகழ் பெற்ற ‘காவ்ய கோத்திர’த்தில் வந்ததால் ‘காப்பிய’ என்ற அடைமொழி பெற்றார் என்பர் ஆன்றோர். ‘காப்பியாற்றுக் காப்பியனார்’ என்ற வேறு ஒரு சங்கப் புலவரும் இதே கோத்திரத்தைச் சேர்ந்தவர்.
‘நச்சி.’ சொல்லும் கதைக்கு வேறு எங்கும் ஆதாரமில்லை. மேலும் அவர் சொல்லும் ரிக் வேத அகஸ்தியர் – லோபா முத்திரை காலத்தில், தொல்காப்பியர் இருந்திருக்க முடியாது. ‘தொல்’. காலத்தை கி.மு முதல் நூற்றாண்டு முதல் கி.பி ஐந்தாம் நூற்றாண்டு வரையே அறிஞர் பெருமக்கள் வைப்பர். இது தவிர தொல் பற்றிய சம்ஸ்கிருத பெயர் சரியா? அதுவும் த்ருண பிந்துவும் , தூமாக்னியும் ஒருவரா என்றும் ஆராய வேண்டும்.
இவ்விஷயத்தில் மேலும் ஆராய்ச்சி செய்ய, நாம் த்ருண பிந்து பற்றிய கல்வெட்டுகளைப் படிக்கவேண்டும். பின்னர் மைசூர் முதலான கோவில் சரிதங்களில் அடிபடும் முனிவர் இவர்தானா எனக் காண வேண்டும். அதற்குப் பின்னர் அகத்தியர் சிலையுடன் ஒட்டி உறவாடும் இவர் தொல்காப்பியர் தானா என்று பார்க்க வேண்டும். அப்படி ஆதாரம் கிடைக்குமேயானால் நச்சி. ‘கப்ஸா’ அடிக்கவில்லை உண்மைதான் விளம்பினார் என்ற முடிவுக்கு வரலாம்.
குபேரன் சிற்பம் (பிலிப் ராவ் சன் புஸ்தகத்திலிருந்து)
வாழ்க தமிழ்! வளர்க தொல்காப்பியன் புகழ்!!
tags – இந்தோனேஷியா, தொல்காப்பியர் சிலை, த்ருண பிந்து சிலை, ஜாவா
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
TOLKPPAIAR, author of the oldest grammar book in Tamil called TOLKPPAIAM was a disciple of AGASTYA , one of the greatest of the Hindu seers.
A .Kalyanaraman says in his book ‘Aryatarangini’ ,
“In Tamil literature Agastya is given the pride of place and credited with the most ancient work in the language, named after him as ‘Agastyam’ which work has, however, been lost. The earliest extant Tamil work written by Tolkaappiyanaar, author of Tolkaappiam , is a follower of Agastya. He uses sutra style of grammatical compositions, perfected by Panini . The original name of Tolkappianar is Trinabindhu and he appears frequently in Javanese inscriptions as a disciple of Agastya.”
xxx
STATUE OF HARIHARA (SHIVA AND VISHNU, S E ASIA)
I was looking for the statue of Trinabindhu with Agastya and found both in a book. Please see the pictures –
Philipp Rawson says in his book ‘The Art of South East Asia’ :-
“The classical Indianized art of Java is possibly the greatest art produced by any of the peoples of South East Asia surpassing even that of the Khmers.
Chandi Mendut dates from about 800 AD (CE) and is thus generally speaking contemporary with Borobudur.
Picture line-
Chandi Mendut bas relief-
KUBERA, LORD OF WEALTH
Kuvera on the north wall of ante chamber. Kuvera is the God of Wealth, the merchant’s deity , and has sacks of gold under his feet and wish granting trees beside him.
Agastya and Vishnu (TOP PICTURE)
From another ruined Shiva temple not far from Borobudur itself, has come a group of extremely fine life size iconic sculptures, virtually full round. The Vishnu statue, 175 cm, is from Chandi Banon in Central Java . The divine teacher Agastya , 174 cm, from Chandi Banon, both ninth century AD (CE).
The divine teacher, sometimes called Agastya , represents god Shiva taking the form of a bearded Brahmin sage .
Statue of Trna Bindhu
TRUNABINDHU/TOLKAPPIAR
There are a number of other fine images from Singasari, but they do not all belong to the same period. Durga slaying the buffalo demon, Ganesa seated on a throne of skulls, Shiva in his terrible form garlanded with skulls, corpulent sage Agastya with more of the high relief lotus flowers by his side are some of them.
The seer Trnavindu, probably mid fourteenth century, height 153 cm. the well fed brahmin sage who was one of the most renowned devotes of Shiva.
XXXX
And the most famous Tamil commentator Nacchinarkiniyar of 14th century gives an interesting story about Tolkappianar.
APSARAS WOMEN IN SOUTH EAST ASIA
In his commentary on the prefatory ode to Tolkappiam , called Paayiram that Agattiyanar/ Agastya asked his disciple Trnadhumagni/Tolkappian to escort the master’s wife , Lopaamudraa, from Vidharba to Podiya hill. He at the same time warned his disciple not to approach his wife nearer than the length of four rods. When Lopaamudraa and Trnaduumaagni had to cross the Vaigai, the river was in flood, and fearing that she would be washed away by the river, he extended his walking stick to her and asked her to cling to it. He thus disobeyed his master’s solemn injunctions , for in crossing the river, he was but one rod’s length from her.
The irate master when he heard of this exclaimed,
‘May you two not reach Svarga’.
The pupil in turn said, as you have cursed us for no fault of ours,
‘May you not reach svarga’.
Xxx
Tamil fanatics could not digest the fact that their oldest author was a Brahmin with a Sanskrit name. Others pointed out that he was from the famous and ancient Kavya Gotra and so he was called Tolkaappian (Tol= ancient, Kaappiya= Kaavya). Even Lord Krishna in Bhagavad Gita called himself as Uchanas Kavi among the poets. (the word Kavi/poem, Kavyam/classical book etc are derived from the most ancient Rig Vedic poet Uchanas Kavi). And there are few Kavya Gotra poets in Sangam Tamil literature.
For Sanskritists the names Trna Dhumagni and Trna Bindhu were rare and unheard names. One Truna Bindhu is associated with the stories of a Rama temple in Mysore
But to my surprise both Agastya and Trna Bindhu are pictured in the book. We know that Agastya statues are found in different parts of Asia and they are same throughout South East Asia, India and Nepal. And his disciple also looks similar. So it must be true that Agastya has a disciple by name Trna Bindhu. The question that remains is “ Are Trnabindhu and Trna Dhumagni same?”
If it is proved same, then Nacchinarkiniyar has some truth in the story. Even if we find out that it cannot be same Agastya and Lopamudra of Rig Veda, still the connection between Agastya and Trna Bindhu is confirmed by Javanese (Indonesian Island) inscriptions and statues.
The earliest literary mention of Agastya and the Pandya comes from Kalidasa of First /Second century BCE. So Agastya’s connection with the south is also confirmed. And his arrival from the Himalayas to the southern Pothiya Malai (Podiya Hill) is also indirectly referred to in Purananuru verse 2 by Mr Nagarajan (Muranjiyur Mudinagarayar).
Here is the Kalidasa’s Raghuvamsam reference:-
“This king whose long pendant of pearls is dangling from his shoulders, and whose body is shining forth with the tinge of red sandalwood as that paste is smeared on his body, and who appears like a lordly mountain letting streams of rapids on its mountainsides, and with its peaks flooded with the morning sunlight, is the prince of pANDya kingdom… [6-60]
“Sage who stopped the upward growth of the great vindhya mountain, who quaffed off and spouted out entire ocean, that sage agastya will be the catechiser of this king when this pANDyan king’s body is still wet after the concluding sacred bath of ashvamedha ritual enquiring, ‘…have you performed the ceremony of ablution after Vedic-ritual ashvamedha properly….’ [6-61]
“No less than the haughty king of lanka, namely rAvaNa, had to make truce with these pANDyan kings as he feared the devastation of his stronghold called janasthAna at the hand of pANDya kings, because the pANDyan-s wielded a deadly missile called brahma-shiro-astra, obtained through the grace of god shiva… so, rAvaNa firstly made pact with them and then went to conquer indra’s heaven, because conquering heaven is nothing before conquering pANDyan empire… [6-62]
From Sanskrit documents.org
MAHABHARATA BATTLE SCENE, S E ASIA
These slokas throw amazing light on the Pandyas of the South:
1.Pandya’s connection with Agastya
2.Pandyan king Palyaga Salai Mudukudumi Peruvaluthi’s Asvamedha Yajna. (His coin with his name and Asva/horse is discovered)
3.Pandya Kingdom’s world-famous pearls (mentioned also by Valmiki and Kautilya and Roman sources)
4.Sandalwood Trees
5.Ravana’s Peace Agreement with the Pandyas (probably this is why Rama skipped Pandyas and sought the help of Vanarasena, i.e. the semi civilized tribes wearing monkey totems)
Sources:–
The Art of South East Asia, Philip Rawson, 1967
Arya Tarangini in two volumes, A Kalyanaraman, Asia Publishing House, London, 1970
History of the Tamils, P T Srinivasa Iyengar, Asian Educational Services, Delhi reprint 1989.
diya jisne dil, diya jisne dil lut gaya wo bechara, lut gaya wo bechara diya jisne chhora dil, diya jisne wo beta dil lut gaya wo bechara, lut gaya wo bechara jiya kon jise nichi najaro ne mara lut gaya wo bechara, lut gaya wo bechara diya jisne dil, diya jisne dil lut gaya wo bechara, lut gaya wo bechara
தியாஜிஸ்நேதில்லுட்கயாஓபிசாரா, லுட்கயாஓபிசாரா
nahi bhulti, wo ada kya ada thi nahi bhulti, wo ada kya ada thi lipatna tumhara, jhijkana tumhara lipatna tumhara, jhijkana tumhara lut gaya wo bechara, lut gaya wo bechara kiya kya jise, nichi najaron ne mara kiya kya jise, nichi najaron ne mara lut gaya wo bechara, lut gaya wo bechara
நஹீபூல்தீ, ஓஅதாக்யாஅதாதீ
mera ashiya phunk, dala gulo ne mera ashiya phunk, dala gulo ne baharo akar mera ghar ujada baharo akar mera ghar ujada lut gaya wo bechara, lut gaya o bechara jiya kon jise nichi najaro ne mara jiya kon jise nichi najaro ne mara lut gaya wo bechara, lut gaya o bechara maje lut le char din chandani hai maje lut le char din chandani hai jawani ko dekho budhapa pukara jawani ko dekho budhapa pukara lut gaya wo bechara, beta lut gaya wo Bechara
மேராஆஷியா(ன்) பூ(ன்)க்டாலாகுலோநே
Song: Diya jisne dil Film: Bhanwra 1944 Lyrics: Kidar Sharma
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஒரு டம்ளர் பால்!
ச.நாகராஜன்
ஒரு ஏழைச் சிறுவன். வீடு வீடாக தேவைப்பட்ட பொருள்களைப் பலருக்கும் விற்று சிறிது காசு சம்பாதிப்பான். கிடைக்கும் காசை வைத்து பள்ளிக்கூட கட்டணத்தைக் கட்டுவான்; தனது புத்தகங்களையும் வாங்கிப் படிப்பான்.
ஒரு நாள் அவன் கையில் ஒரே ஒரு பைசா (டைம் Dime) தான் இருந்தது. ஒரே பசி.
தான் செல்லவிருக்கும் அடுத்த வீட்டில் அந்த ஒரு டைமைக் கொடுத்து ஏதேனும் வாங்கி உண்ணலாம் என்று அவன் முடிவு செய்தான்.
ஆனால் அடுத்த வீட்டின் கதவைத் தட்டிய போது வெளியே வந்த அழகிய இளம் பெண்ணைப் பார்த்து அவன் தயங்கினான். தான் கேட்க நினைத்ததைக் கேட்க அவனால் முடியவில்லை. ஆனால் பசியோ பசி!
ஒரு டம்ளர் தண்ணீர் தருமாறு கேட்டான் அவன்.
அந்த இளம் பெண் அவன் முகம் வாடியிருப்பதைப் பார்த்து அவன் அளவற்ற பசியால் துடிக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டாள். ஆகவே தண்ணீருக்குப் பதிலாக ஒரு பெரிய டம்ளரில் பாலைக் கொண்டு வந்து கொடுத்தாள்.
மெதுவாக அதைக் குடித்த அந்தச் சிறுவன், “நான் இந்தப் பாலுக்காக எவ்வளவு கொடுக்க வேண்டும்?” என்று அந்தப் பெண்ணிடம் கேட்டான்.
“எனக்கு ஒன்றும் தர வேண்டாம். அன்பிற்கு விலை பேசக் கூடாது என்று என் அம்மா எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறாள்” என்றாள் அவள்.
“அப்படியானால் என் இதயத்தின் ஆழத்திலிருந்து உங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றான் அந்தச் சிறுவன்.
அந்தச் சிறுவனின் பெயர் ஹோவர்ட் கெல்லி (Howard Kelly).
அந்த வீட்டை விட்டு வெளியேறும் போது ஒரு புத்துணர்ச்சியைப் பெற்றான் அவன். கடவுள் மேல் அவனுக்கு இருந்த நம்பிக்கை கூடியது; நல்ல உணர்ச்சிகள் கூடியது!
ஒரு தக்க தருணத்தில் இப்படி ஒரு அன்பைக் காட்டிய பெண்மணி அவனுக்கு வாழ்க்கையில் ஒரு புதிய பாடத்தைக் கற்றுக் கொடுத்தாள்.
வருடங்கள் ஓடின.
அவன் ஒரு பெரிய டாக்டராக ஆனான்; பெயரும் புகழும் பெற்றான்.
ஒரு நாள் எந்த இளம் பெண் அவனுக்குப் பாலை வழங்கினாளோ அவளுக்கு கடுமையான நோய் ஒன்று வந்தது.
அவள் வசித்து வந்த ஊரில் உள்ள டாக்டர்கள் திகைத்தனர்; அதைக் குணப்படுத்த அவர்களால் முடியவில்லை.
அவர்கள் நகருக்குச் சென்று ஹோவர்ட் கெல்லியைப் பார்க்குமாறு ஆலோசனை கூறினர்.
அந்தப் பெண்ணும் ஸ்பெஷலிஸ்டான ஹோவர்ட் கெல்லியைப் பார்க்கச் சென்றாள்.
அந்தப் பெண் எந்த ஊரிலிருந்து வந்திருக்கிறாள் என்பதைக் கேட்டவுடன் கெல்லியின் கண்கள் பளபளத்தன. நேராக நோயாளி இருந்த இடத்திற்கு விரைந்து சென்றார்.
ஆம், அதே பெண் தான்! அவர் நன்றாக அடையாளம் கண்டு கொண்டார்.
உடனடியாக சிகிச்சையைத் தொடங்கினார். எப்பாடு பட்டேனும் அவளைக் காப்பாற்றுவது என்று உறுதி பூண்டார்.
பெரும்பாடு பட்டு கடைசி கடைசியாக அவர் வென்றார். அந்தப் பெண் பூரண குணமடைந்தாள்.
கெல்லி அக்கவுண்ட்ஸ் பிரிவின் அதிகாரிக்கு அந்தப் பெண்மணிக்கு ஆன செலவுக்கான பில்லைத் தனக்கு அனுப்பச் சொன்னார். அக்கவுண்ட்ஸ் பிரிவும் அவரது அங்கீகாரத்திற்காக அந்த பில்லை அவரிடம் அனுப்பியது.
அந்தப் பில்லைப் பார்த்தார் அவர்! பெருந்தொகை தான்!!
அந்த பில்லின் கீழே கோடியில் சில வார்த்தைகளை அவர் எழுதி விட்டு, அந்த பில்லை அந்தப் பெண்ணிடம் அனுப்பச் சொன்னார்.
அந்தப் பெண்மணி நடுநடுங்கிக் கொண்டிருந்தாள், பில்லை நினைத்து – இந்த ஜென்மத்தில் அந்த பில் தொகையைத் தன்னால் கட்ட முடியுமா என்பதே அவள் பயம்!
அந்த பில்லை வாங்கிப் பார்த்தாள்! அடேயப்பா!
ஆனால் பில்லின் அடியில் ஓரத்தில் எழுதப்பட்ட வார்த்தைகள் அவள் கவனத்தை ஈர்க்கவே அவள் அதைப் படித்தாள் :
“Paid in full with one glass of milk”
Signed Howard Kelly
ஒரு டம்ளர் பாலால் பில் முழுவதும் கட்டப்பட்டது.
ஹோவர்ட் கெல்லி.
அந்தப் பெண்மணியின் கண்களில் நீர் துளித்தது.
அவள் ஹோவர்ட் கெல்லி யார் என்பதை இப்போது தெரிந்து கொண்டாள்.
அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?!
***
உண்மையாக நடந்த இந்த சம்பவத்தை இணையதளத்தில் அவ்வப்பொழுது பல அன்பர்களும் பகிர்ந்து கொள்வதைப் பார்க்கலாம்.
tags – ஒரு டம்ளர் பால், ஹோவர்ட் கெல்லி,Howard Kelly
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ரிக் வேதத்தில் ஆப்கானிஸ்தான் முதல் பீஹார் வரை
ரிக் வேதம் உலகின் பழமையான கவிதைப் புஸ்தகம். இதில் பத்து மண்டலங்கள் உள்ளன. இதிலுள்ள ஹரியூபிய என்னும் இடம் சிந்து-சரஸ்வதி நதி தீர ஹரப்பா நகரம் என்ற கருத்தும் உண்டு. இது பற்றி ஆறு ஆண்டுகளுக்கு முன்னரே எழுதியுள்ளேன். காண்க-
1 Nov 2014 – கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன் ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1382; தேதி நவம்பர் 1, 2014. உலகின் மிகப்பழைய நூல் …
ரிக் வேதம் காட்டும் பல்லாயிரக்கணக்கான சதுரமைல் பர ப்பைக் காண்கையில் அந்தப் புலவர்கள் பல நூற்றாண்டுக் காலத்தில் வாழ் ந்தவர்கள் என்று தெரிகிறது. இதைவிட மிகச் சிறிய பரப்பைக் கொண்ட தமிழகம் பற்றிப் பாடிய 450 சங்கப்புலவர்களுக்கு நாம் 400 ஆண்டுக்காலம் ஒதுக்கியுள்ளோம். ரிக் வேதத்திலும் 450 புலவர் பாடல்கள் உள்ளன. இவ்வளவுக்கும் இவர்கள் பாடியது கடவுள் துதிகள் ! பூகோளம்- வரலாறு அல்ல.
ரிக் வேதத்தின் சில பகுதிகள் ஈரான் நாட்டவர் பாடியது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆயினும் எல்லோரும் ஒப்புக்கொள்ளாக் கூடிய , இன்றும் அடையாளம் தெரியக்கூடிய பிரதேசங்களை மட்டும் காண்போம்.
ஆப்கானிஸ்தான் (AFGHANISTAN) :-
இப்பொழுது அடிக்கடி பெயரில் அடிபடும் நகரம் காண்டஹார். முஸ்லீம் பயங்கரவாதிகளால் அடிக்கடி தாக்கப்படும் நகரம் இது. இதன் பெயர் காந்தாரம் என்பதாகும். அங்கிருந்து வந்தவர்தான் திருதராஷ்டிரனின் மனைவி காந்தாரி. அரசர்களுக்கு பல மனைவியர் இருப்பதால் அந்தந்த நாட்டிலிருந்து வந்தவர்களை அந்தப் பெயர்கொண்டு அழைப்பர் .
கோசால நாட்டிலிருந்த வந்த பெண்ணை கோசலை, கௌசல்யா என்பர். கேகய தேசத்திலிருந்து வந்த ராணியை கைகேயி என்பர். மிதிலா நகரில் இருந்து வந்த பெண்ணை மைதிலி என்று அழைப்பர். இதே போல தமிழ் மன்னர்களும் பலரை மணந்ததால் சோழ மாதேவி , பாண்டிமாதேவி என்று நாட்டின் பெயரால் அழைத்தனர்.
இந்த காந்தார நாட்டைப்பற்றி ஒரே இடத்தில் ஒரே துதி வருகிறது – 1-126-6
கந்தர்வர் பற்றிக் குறிப்பிடும் துதிகளை, மறைமுகமாக காந்தாரம் பற்றிக் குறிப்பிடுவதாக எண்ணுவோரும் இருக்கின்றனர்.
கந்தர்வர் பற்றிய இருபது குறிப்புகளில் பெரும்பாலானவை 1, 8, 9, 10 ஆவது மண்டலங்களில் வருவதால் அவை பிற் காலத்தியவை . மற்ற மண்டலங்களுக்குப் பின்னர் வைத்த புதிய மண்டலங்கள் இவை.
XXX
பஞ்சாப் (PUNJAB) :–
அடுத்தபடியாக இருப்பது பஞ்சாப் .
இப்பொழுது இதன் கிழக்குப் பகுதி இந்தியாவிலும் மேற்குப் பகுதி பாகிஸ்தானிலும் உளது. இப்போது நம் இதை ‘ஐந்து நதி – பஞ்ச ஆப’ — என்று அழைக்கிறோம். . வேத காலத்தில் இதை ‘ஏழு நதி – சப்த சிந்து’ – (SAPTASINDHU) பிரதேசம் என்று அழைத்தனர். மேற்கே ஓடிய சிந்துவையும் கிழக்கே ஓடிய சரஸ்வதி நதியையும் சேர்த்து இப்படி கூப்பிட்டனர் . பாரசிகர் மதநூலான செண்ட் அவெஸ்தாவிலும் ‘சப்த சிந்து’ என்றே வருகிறது.
ஆயினும் வேதத்தில் ‘பல’ , ‘அநேக’ என்ற பொருளிலும் எண் 7 பயன்படுத்தப்பட்டுள்ளது . சப்த சிந்து என்ற சொல் வரும் இடங்கள் –
1-32-12; 1-35-8;
2-12-3; 2-12-12;
4-28-1;
8-54-4; 8-69-12; 8-96-1;
9-66-6;
10-43-3; 10-67-12
இந்த மண்டலங்களை மத்திய கால , இறுதிக்கால மண்டலங்கள் என்பர் ஆய்வாளர்கள்.
xxx
ஹரியானா (HARYANA):-
இதை மஹாபாரத காலத்தில் குருக்ஷேத்ரப் பகுதி என்று அழைத்தனர். மனு ஸ்மிருதி முதலியன பிரம்மாவர்த் த என்று குறிப்பிடும். ஆனால் இவ்விரு சொற்களும் ரிக் வேதத்தில் இல்லை. ‘வர ஆ ப்ருதிவ்யா’- உலகில் சிறந்த இடம் – ‘நாபா பிருதிவ்யா’ – பூமியின் நாபி போன்ற பகுதி — என்றும் வேதம் போற்றும் .
ரிக் வேதத்தில் 3-23-4ல் ‘இலாயாஸ்பத’ , ‘மானுஷ’ என்ற இரண்டு இடங்கள் வருகின்றன. இவற்றை கிரிப்பித் Griffith தவறாக மொழி பெயர்த்துள்ளார் என்றும் இவைகளைப் பற்றிய தெளிவான விளக்கங்கங்கள் மஹாபாரதத்தில் வருகின்றன என்றும் ‘ரிக்வேதத்தில் வரலாறு’ என்ற நூலில் ஸ்ரீகாந்த் தலகரி காட்டுகிறார் .
THE RIG VEDA- A HISTORICAL ANALYSIS, Shrikant G. Talageri, Aditya Prakashan, New Delhi ,2000
வன பர்வத்தில் தீர்த்தயாத்ரை பகுதியில் 178 ஸ்லோகங்களில் குரு க்ஷேத்ரப் பிரதேசத்திலுள்ள புண்ய ஸ்தலங்களின் பட்டியல் கிடைக்கிறது.
“உலகப்புகழ் பெற்ற மானுஷாவில் (MANUSHA) குளிப்போரின் பாவங்கள் போய்விடும்
மானுஷாவிலிருந்து கூப்பிடு தூரத்தில் கிழக்கு திக்கில் ஆபகா (APAGA) நதி வரும். சித்தர்கள் வந்து செல்லும் இவ்விடத்தில் ஒரு பிராமணனுக்கு அன்னம் இட்டாலும் அது கோடி பிராமண அன்ன தான புண்யத்தை அளிக்கும்.”
(இதில் வரும் கூப்பிடு தூரம் என்னும் சொல் இன்றும் தமிழ் நாட்டின் கிராமத்தார் வழங்கும் சொல்!)
“இதற்குப் பின்னர் ஒருவர் இலாஸ்பத (ILYASPADA OR ILAYASPADA) செல்லவேண்டும் . உலகப் புகழ் பெற்ற சாரக என்னும் இடத்தில் அத்துறை உள்ளது. முன்னோர்களை வழிபட்டு அங்கே குளிப்போருக்கு துரதிருஷ்டம் என்பதே வராது.
மானுஷ என்றால் மனிதன் என்ற பொருளும் உண்டு. கிரிப்பித் அந்தப் பொருளை மனதில் வைத்து தவறாக மொழி பெயர்த்தார். ஆனால் எம். எல். பார்கவா என்பவர் இப்போதும் இவை ஹரியானாவில் உள்ள புனித ஸ்தலங்கள் என்பதைக் காட்டுகிறார்.
கைதால் (Kaithal) என்னும் இடத்திலிருந்து மூன்றரை மைல் தூரத்தில் மானஸ் இருக்கிறது கத்லி (Gadhli) என்னும் பெயரில் ஆபக (Apaga) தீர்த்தம் இருக்கிறது . கைதால் என்னும் இடத்திலிருந்து 2 மைல் தொலைவில் சாரக (Saraka) என்னும் இடம் ஷெர்கத் (Shergad) என்று மருவி வழங்குகிறது அதுதான் இளாஸ் பத.
இளா , பாரதி , சரஸ்வதி என்னும் மூன் று தேவியர்களும் ரிக் வேத ஆப்ரி ஸுக் தங்களில் எல்லா மண்டல ரிஷிகளாலும் வணங்கப்படுகின்றனர்.
ரிக் வேதத்தில் ஹரியானா புண்ய ஸ்தலங்கள் இடம்பெறும் துதிகள்—
வர ஆ ப்ருதிவ்யா –
3-23-4; 3-53-11;
நாபா ப்ருதிவ்யா –
1-143-4; 2-3-7; 3-5-9, 3-29-4;
9-72-7, 9-79-4, 9-82-3; 9-86-8;
10-1-6.
இலஸ் பத – இலயாஸ்பத –
1-128-1; 2-10-1; 3-23-4; 3-29-4; 6-1-2;
10-1-6; 10-70-1; 10-91-1; 10-191-1
மானுஷ –
1-128-7; 3-23-4
எல்லா மண்டலங்களிலும் பரவலாக ஹரியானா விஷயங்கள் வருவதைக் கவனிக்கவும். மேலும் மூன்றாவது மண்டலம் இன்னும் ஒரு அரிய விஷயத்தையும் சொல்கிறது . மிகப் பழைய மண்டலம் என்று கருதப்படும் ஆறாவது மண்டலத்தில் வரும் மன்னன் திவோ தாசன். அவனுடைய மூதாதையர் தேவவாதன் இலாஸ் பதத்தில் அக்கினியை பிரதிஷ்டை செய்த விஷயத்தை சொல்கிறது. இந்த வழக்கம் பாரசீக மதத்தில் பெரு வழக்காக காணப்படுகிறது.
xxx
உத்தர பிரதேசம் (UTTAR PRADESH):-
தற்கால உ.பி. மாநிலம் அக்காலத்தில் ஆர்யவர்த்தம் எனப்பட்டது. ஆனால் ரிக் வேதத்தில் அச்ச்சொல் இல்லை. பிரதர்தன என்ற காசி ராஜனின் பெயரை மூதாதையர் என்று கூறும் ரிக்வேத சூக்தங்கள் 9-96, 10-179-2 ஆகியவற்றின் அநுக்ரமணி (VEDIC INDEX) ஆகும்.
காசிராஜனின் ‘பிரதர்தன’ என்பது விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் விஷ்ணுவின் பெயர். கி.மு 1400ல் துருக்கி- சிரியா நாடுகளை ஆண்ட இந்து மன்னன் (Mitanni Civilization) பெயரும் அதுவே. கங்கைநதியின் பெயரும் காசி நகரின் பெயரும் தமிழ் இலக்கியத்திலும் உண்டு . பூமியில் மிகப்பழமையான நகரம் புண்ய காசி.
ரிக் வேத சூக்தம் மற்றும் அநுக்ரமணி காண்க- 9-96; 10-179-2;
xxx
பீஹார் (BIHAR):-
உலகப் புகழ் பெற்ற சாம்ராஜ்யம் மகத சாம்ராஜ்யம். புத்தருக்கும், மஹாவீரருக்கும் முன்னரே தத்துவ ஞா னிகளை ஈன்றெடுத்த மாநிலம். ‘கீகட’ என்ற பெயரில் வேதத்தில் மகதம்/ பீஹார் இடம்பெறுகிறது .
3-53-14
பிரமகந்த என்று வேதம் குறிப்பிடும் மன்னன் பெயரில் இருந்து ‘ப்ர- மகதம்’ உண்டாயிற்று என்பது ஆராய்ச்சியாளரின் துணிபு .
xxx
ஆரியர் குடியேற்றம் பற்றிக் கொக்கரிக்கும் அரைவேக்காடுகளின் சவப்பெட்டியில் ஆணி அடிக்கும் பகுதி, இந்த பூகோள விஷயங்களாகும். கங்கையை முதலில் வைத்து, மேற்கு நோக்கி நதிகளின் பெயரை அடுக்கும் ஒரு சூக்தம் (Westward) வெள்ளைக் காரர்களின் மண்டையைப் பிளக்கிறது அடுத்தாற்போல ஹரியானாவிலும் உத்தர பிரதேசத்திலும் புனிதத் தலங்களை காட்டிவிட்டு
பஞ்சாப் பகுதியில் எதையும் காட்டாதது அவர்களுக்கு ஆப்பு அடிக்கிறது; வேத கால மக்கள் வடமேற்கு வழியாக நுழைந்து கொஞ்சம் கொஞ்சமாக கிழக்கே வரவில்லை ; கங்கையிலிருந்து புறப்பட்டு உலகம் முழுதும் நாகரீகத்தைப் (Westward Expansion) பரப்பினர் என்பதை 6, 3, 7 ம் மண்டலங்களில் வரும் இலாயாஸ்பத (Ilayaspada) — காசி (Kasi Raja) ராஜன் – ‘கீகட’ (Kikata) பாடல்கள் பறை சாற்றுகின்றன . கி.மு 1400ம் ஆண்டிலேயே துருக்கியில் ஆடசி அமைத்தவர் காசி மக்கள். அதற்கு முன்னர் கி.மு 1800-ல் பாபிலோனிய -சுமேரிய பகுதியை ஆண்ட காசைட்டுகளும் (Kassites Civilization) காசி மக்களே!!
வெள்ளைக்கார மாக்ஸ்முல்லர்களுக்கும் கள்ளப்பயல் கால்டுவெல்களுக்கும் செமை அடி கொடுக்கிறது ரிக்வேத பூகோளம்.