தமிழில் கோழி பற்றிய 28 பழமொழிகளை மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே தொகுத்து அளித்தேன் (கீழே இணைப்பைக் காண்க) . அதில் ஒரு பழமொழி – ‘ஆடி கழிஞ்ச அஞ்சாம் நாள் கோழி அடிச்சு கும்பிட்டானாம்’ — என்பதாகும். தாமதமாகச் செய்வதைக் கிண்டல் செய்யும் பழமொழி இது. சம்ஸ்கிருதத்தில் அத்தகையோரை ‘தீர்க்க சூத்ரி’ என்று அழைப்பர் ; அதாவது நீண்ட கயிறு; தமிழில் ‘கை நீளம்’ என்றால் ஆள் ஒரு திருடன் என்று அர்த்தம்; சம்ஸ்க்ருதத்தில் ‘கயிறு நீளம்’ என்றால் ஆள் படு சோம்பேறி என்று அர்த்தம். நாம் அவர்களைத் ‘திரு நாளைப் போவார்’ என்றும் கிண்டல், கேலி, பகடி, நக்கல் செய்வோம். இப்படி ஒரு ‘லேட்’ (late) டாகக் கோழி அடிச்சுக் கும்பிட்ட சம்பவம் ரோமாபுரியில் நடந்தது.
கோழி அடிச்சு சாமி கும்பிடும் வழக்கம் கிரேக்க நாட்டிலும் இத்தாலி நாட்டிலும் (ரோம் சாம்ராஜ்யம்) உண்டு.
கிரீட்டோ – சாக்ரடீஸ் (Crito- Socrates)
புகழ்பெற்ற கிரேக்க தத்துவ வித்தகர் சாக்ரட்டீஸ், மரணதண்டனை விதிக்கப்பட்டு , அதன் காரணமாக, விஷம் குடித்து இறந்தார். அவர் கடைசியில் தனது ஆப்த நண்பனுக்கு- உயிர்த் தோழனிடம் என்ன சொன்னார்?
“ஏ , கிரீட்டோ ! மறக்காமல் அ ஸ்க்ளிப்பியஸ் (Asclepius) தேவனுக்கு சேவலை பலி கொடுத்துவிடு . நான் சொல்வதை அலட்சியம் செய்யக்கூடாதென்றார். அவரும் நான் ‘அப்படியே செய்கிறேன்’ என்று சொன்னவுடன் சாக்ரட்டீஸின் ஆவி பிரிந்தது. அஸ்க்ளிபியஸ் என்பது கிரேக்க நாட்டு மருத்துவ தேவன் ஆகும்.
(Aesculapius /Asclepius is the god of medicine)
Xxx
கோழி ஜோதிடம்
ரோமாபுரியில் கோழியால், போரில் தோற்றுப்போன வரலாறு ஒன்றுண்டு.
சிசிலி தீவில் த்ரப்பனா (Drepana in Sicily) என்னுமிடத்தில் கார்த்தஜீனிய தளபதி அதிர்பாலனின் கடற்படை நின்று கொண்டிருந்தது. அதை திடீரென்று தாக்குவதற்கு ரோமாபுரி தளபதி பப்லியஸ் க்ளாடியஸ் (Publius Claudius) திட்டம் போட்டான். நாம் சகுனம் பார்ப்பது போல (சகுனம் என்ற சம்ஸ்கிருத சொல்லுக்கு பறவை என்று அர்த்தம் . அதைவைத்து ஆரூடம் பார்ப்பதே சகுன சாஸ்திரம்) ரோமானியர்களும் சகுனம் பார்ப்பார்கள். கோழிக் குஞ்சுகளுக்கு இரை போட்டான் . அவை சாப்பிட மறுத்தன. அதாவது அபசகுனம். கோபம் வந்தது ‘இரை சாப்பிடாவிட்டால் அவை தண்ணீர் குடிக்கட்டும்’ என்று சொல்லி கடலில் தூக்கி எறிந்தான். கப்பற்படையுடன் சிசிலி தீவை நோக்கிப் புறப்பட்டான். இதற்குள் எதிரி அதிரபாலனின் ( Adherbal of Carthage) கப்பற்படை அவனை சூழ்ந்துகொண்டது. பெரும்பாலான கப்பல்களை அவன் இழக்க நேரிட்டது. பருவ நிலை மோசமானதும் இதற்கு ஒரு காரணம்.
தோற்றுப்போன பப்ளியஸ் ரோமாபுரிக்குள் அவமானத்துடன் நுழைந்தான். அவனை ரோம் அரசு நாடுகடத்தியது. தோற்றுப் போனதற்காக அல்ல; கோழி ஜோதிடத்தை (sacrilege) அவமதித்ததற்காக ! ரோமானியர்களுக்கு சகுன சாஸ்திரத்தின் மீது அவ்வளவு நம்பிக்கை!
நாம் நம்புகிறோமோ இல்லையோ , இன்றும்கூட நமது பஞ்சாங்கங்களில் பஞ்ச பட்சி சாஸ்திரம் உள்ளது. 1400 ஆண்டுகளுக்கு முன்னர் வராஹமிஹிரரும் ஆருடம் பற்றி எழுதியுள்ளார். காளிதாசன் எழுதிய உலகப் புகழ்பெற்ற சம்ஸ்கிருத காவியத்தின் பெயரே பறவைப் பெண்- காட்டில் கிடந்த பெண்ணை சகுந்தங்கள் வளர்த்ததால் அவள் பெயர் – சகுந்தலா – பறவைப் பெண். அவளை கதாநாயகியாக வைத்து காளிதாசன் எழுதிய நாடகமே சாகுந்தலம்.
கோழி பற்றிய பழமொழிகள் | Tamil and Vedas
tamilandvedas.com › tag › கோழ…
24 Sep 2017 – 27.பெட்டைக் கோழி தட்டிக் கூவுமா? 28.ஆடி கழிஞ்ச அஞ்சாம் நாள் கோழி அடிச்சுக் கும்பிட்டானாம். ஒவ்வொரு பழமொழியையும் …
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22ஆம் தேதி பூமி தினம் உலக மக்களால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருவதை அனைவரும் அறிவோம்.
1970ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி அமெரிக்காவில் முதல் பூமி தினம் கொண்டாடப்பட்டது; ஆயிரக்கணக்கான பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் இரண்டு கோடிப் பேர் இதில் பங்கு கொண்டனர். இன்றோ 2020இல் 50வது ஆண்டு விழா கொண்டாடப்படும் நிலையில் 192 நாடுகளில் பல கோடி மக்கள் பங்கு கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சியாக இது மாறி விட்டது.
அமெரிக்காவில் விஸ்கான்ஸின் செனேட்டரான கேலார்ட் நெல்ஸன் (Gaylord Nelson) அரும்பாடுபட்டு ‘எர்த் டே’-ஐ – பூமி தினத்தை 1970இல் உருவாக்கினார்.
1990 ஆம் ஆண்டு வாக்கில் இது உலகளாவிய இயக்கமாக மாறியது. 2009ஆம் ஆண்டு ஐ.நா.சபை இதை அதிகாரபூர்வமான பூமி காக்கும் தினமாக அறிவித்ததோடு பெயரை அகில உலக அன்னை பூமி தினம் – (International Mother Earth Day) என்று மாற்றியது.
பூமி தினத்திற்கெனத் தனியாக ஒரு கொடி உண்டு. இதற்கு ஈகாலஜி ஃப்ளாக் (Ecology Flag) என்று பெயர். ரான் காப் (Ron Cobb) என்ற ஒரு கார்டூனிஸ்ட் தான் முதன் முதலில் இதை உருவாக்கினார். இதில் இடம் பெற்றுள்ள இரு ஆங்கில எழுத்துக்களான ‘E’ மற்றும் ‘O’ ஆகியவை Environment மற்றும் Organism ஆகிய வார்த்தைகளின் முதல் எழுத்திலிருந்து எடுக்கப்பட்டு கிரேக்க எழுத்துப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பதின்மூன்று பட்டைகள் பச்சை மற்றும் வெண்மை நிறங்களில் மாறி மாறி இடம் பெறுகின்றன.
பூமி தினத்திற்காகத் தனிப் பாடல் ஒன்றும் உண்டு.
2009ஆம் ஆண்டு வால்ட் டிஸ்னி ஸ்டுடியோ, ‘எர்த்’ என்ற ஒரு விளக்கப்படத்தை அருமையாகத் தயாரித்து அதில் நான்கு விலங்கினக் குடும்பங்கள் குடிபெயர்ந்து செல்லும் பாதையை விளக்கியது.
2011ஆம் ஆண்டு பூமி தினத்தன்று 280 லட்சம் மரங்கள் ஆப்கானிஸ்தானில் நடப்பட்டு அரிய சாதனை படைக்கப்பட்டது.
2012ஆம் ஆண்டு சீனாவில் ஒரு லட்சம் பேர் கார்பன் டை ஆக்ஸைடு நச்சுப் புகை வெளியேறுவதைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி சைக்கிள்களை ஓட்டி விழிப்புணர்வு ஊட்டினர்.
பூமி தினத்தன்று ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதக் கொண்டாட்டம் உண்டு. குழந்தைகள் குப்பைகளை அகற்றுகின்றனர். மாணவ, மாணவியர் மரங்களை நடுகின்றனர். இயற்கை ஆர்வலர்கள் பவளப்பாறைகளச் சுத்தம் செய்கின்றனர்; மக்கள் ஆங்காங்கே இது பற்றிய திரைப்படங்களைக் காண்பிக்க ஏற்பாடு செய்கின்றனர். சாமான்யனிலிருந்து நாட்டுத் தலைவர்கள் வரை பூமி நமது சந்ததியினருக்கு எதிர்காலத்தில் சரியானபடி ஒப்படைக்கப்பட வேண்டும் என்பது குறித்த கொள்கையையும் அதற்கான வழிமுறைகளையும் யோசித்துப் பல திட்டங்களை அமுல் படுத்துகின்றனர்.
பிரபஞ்சத்தில் மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு ஏதுவாக, மிகவும் அரிதாக, தனித்தன்மை கொண்ட கிரகமாகத் திகழும் பூமியை உலக மக்கள் அனைவரும் நேசித்துக் கொண்டாடும் தினம் இது!
நெதர்லாந்திலிருந்து முதலில் விண்வெளிக்கு யூரோப்பியன் ஸ்பேஸ் ஏஜன்ஸி மூலம் 1985ஆம் ஆண்டு விண்வெளிக்குச் சென்ற இயற்பியல் வல்லுநரான உப்போ ஜோஹன்னஸ் ஓகெல்ஸ் ( Woppo Johannes Ochkels) விண்வெளியிலிருந்து பூமிப் பந்தைப் பார்த்த போது அவருக்கு உயரிய ஆன்மீக சிந்தனைகள் தோன்றின. 2014ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் தேதி புற்று நோயினால் மரணமடைந்த அவர் மருத்துவ மனையில் படுத்தபடியே தான் இறப்பதற்கு முதல் நாளன்று பூமி வாழ் மக்களுக்கு ஒரு தொலைக்காட்சி பேட்டி தந்தார்.
அதில் உருக்கமாக உணர்ச்சி ததும்ப, ‘தனக்கு வந்தது போல பூமிக்கும் கான்ஸர் வந்து விடக்கூடாது; இதை எப்படியேனும் எல்லோரும் இணைந்து காக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தார்.
“இந்த பூமி மிக்க மதிப்பு வாய்ந்தது. இது ஒன்றே தான் நமக்கான வசிப்பிடம். இரண்டாவது பூமி இல்லை. இதை எப்படியேனும் காக்க வேண்டும்” என்றார் அவர்.
இப்போது பூமிக்கு இருக்கும் ஆபத்துக்கள் பல!
இன்று வாகனங்களிலிருந்து வெளியேற்றப்படும் நச்சு வாயுவான கார்பன் மானாக்ஸைடு பூமியின் வெப்பம் கூடி பூமி வெப்பமயமாதலுக்கான முக்கிய காரணமாக அமைகிறது.
இந்த வாயுவே தலைவலி, கிறுகிறுப்பு, தடுமாற்றம், நினவாற்றல் இழப்பு, வாந்தி எடுத்தல், சுவாசிப்பதில் சிரமம் மார்பு வலி, கோமாவில் இருத்தல் போன்ற அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. குழந்தைகள், முதியோர், கர்ப்பிணிகளுக்கு ஆபத்தை கூடுதலாக விளைவிக்கும் இதைக் கட்டுப்படுத்தினால் பூமியும் பிழைக்கும்; பூமி வாழ் மக்களும் பிழைப்பர்.
அடுத்து இயற்கையின் ஒரு அற்புதமான அமைப்பான பயோ டைவர்ஸிடி (Bio diversity) எனப்படும் உயிரினவகை வேறுபாடு அல்லது பல்லுயிர்ப் பெருக்கம் இன்று அழிந்து பட்டு வருகிறது. பறவைகள், விலங்கினங்கள் மற்றும் மீன் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
பூமியின் ஆரோக்கியமும் சமச்சீர்த்தன்மையும் இந்த பல்வேறு உயிரினங்களைச் சார்ந்தே இருக்கிறது என்பது ஒரு முக்கியச் செய்தி!
பூமியில் 30 விழுக்காட்டுப் பரப்பளவே காடுகள் உள்ளன. ஆனால் இந்தக் காடுகளிலேயே
பூமியில் உயிர் வாழும் பல்வேறு உயிரினங்களில் 80 விழுக்காடு வாழ்கின்றன. ஆக தன்னுடன் சேர்ந்து வாழும் உயிரின வகைகளை அழிக்காமலும் அவை வசிக்கும் காடுகளை அழிக்காமலும் இருக்க வேண்டிய பெரும் பொறுப்பு மனித குலத்தைச் சார்ந்திருக்கிறது.
மனம் போன போக்கில் மரங்களை வெட்டி வீழ்த்திச் சுற்றுப்புறச் சூழலுக்குப் பெருங்கேட்டை பலரும் செய்து வரும் இந்தக் காலத்தில் பூமி தினத்தில் பூமியைக் காக்க சூளுரை கொண்ட பலர் மனித குலத்திற்கே வழிகாட்டியாகத் திகழ்கின்றனர்.
எடுத்துக்காட்டாக தனிநபர் ஒருவர் தனியாகவே பெரும்காட்டை உருவாக்கியதைச் சுட்டிக் காட்டலாம்.
கௌஹாத்தியிலிருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜோர்ஹாட்டை அடுத்துள்ள பிரம்மபுத்ரா நதியின் படுகை அருகே உள்ள பெரும் மணற்பரப்பில் ஜாதவ் பேரிக் (Jadav Payerig) என்பவர் ஒரு காட்டையே அமைத்துள்ளார். 550 ஹெக்டேர் நிலப்பரப்பில் இவர் அமைத்துள்ள காடு தனி மனிதன் அமைத்துள்ள காடுகளில் மிகப் பெரிய ஒன்றாகும்.
1979ஆம் ஆண்டு பிரம்மபுத்ரா நதியில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக ஏராளமான பாம்புகள் மணற்பரப்பில் ஒதுங்க அருகில் மரம் ஏதும் இல்லாததால் மடிந்தன. இதைப் பார்த்து மனம் நெகிழ்ந்த பதினாறே வயதான சிறுவன் ஜாதவ் அந்த உயிரினங்களைக் காக்க காடு ஒன்று அமைப்பது என்று உறுதி பூண்டான். இடைவிடாத உழைப்பினால் காட்டையும் உருவாக்கி பாம்புகள், பறவையினங்கள், யானைகள் ஏன் புலிகள் கூட விரும்பி வசிக்கும் காட்டை உருவாக்கினான். ஜாதவின் செல்லப்பெயர் மொலாய். அற்புதமான காட்டை மொலாய் உருவாக்கிக் காட்டிய அதிசயத்தைக் கண்டு மனம் மகிழ்ந்த மக்கள் இந்தக் காட்டிற்கு மொலாய்க் காடு என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.
பூமியைக் காக்கும் ஒரு அங்கமாகவும் மனித குல முழுவதும் ஏற்பட்டுள்ள விழிப்புணர்ச்சியின் அடையாளமாகவும் பொலிவியா நாட்டின் அன்னை பூமிச் சட்டம் திகழ்கிறது.
மனிதனுக்கு அரசியல் சட்டங்கள் தரும் உரிமை போல அன்னை பூமிக்கும் பதினோரு உரிமைகளை பூமிச் சட்டம் வழங்குகிறது!
வாழ்வதற்கான உரிமை, மனிதன் ஏற்படுத்தும் சுற்றுப்புறச்சூழல் மாசுகளைத் தடுத்து ஆதார வளங்களைக் காத்துக் கொள்ளும் உரிமை, சுத்த நீரைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை, தூய காற்றை நிலை நிறுத்திக் கொள்ளும் உரிமை, இயற்கையின் சமச்சீரைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை, சுற்றுப்புறச்சூழல் மாசுகளைத் தடுப்பதற்கான உரிமை, மரபணு மாற்றங்களை இயற்கையின் செல்லுலர் அமைப்புகளில் ஏற்படாமல் பாதுகாக்கும் உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் அன்னை பூமிக்கு உண்டு!
இந்தச் சட்டம் உலக மக்களுக்கு உணர்த்தும் பேருண்மை என்னவெனில் “அன்னை பூமி ஒரு உயிருள்ள ஜீவன்” என்பது தான்!
பூமியின் இத்தனை அருமை பெருமைகளையும், உண்மைகளையும் உணர்ந்து பூமியைக் காக்க எப்பாடும் படுவேன் என்று ஒவ்வொருவரும் உறுதி பூண்டு சூளுரை எடுக்க வேண்டிய ஒரு தினம் பூமி தினம்! ஏப்ரல் 22ஐ மறவாதீர்!
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
I am of one form. No one knows Me. I am always pure Consciousness.
–Kailvalypanishad 21
KNOW THYSELF, YOURSELF— SOCRATES
A Prince approached a Guru in the Himalayas and said to him,
Swami, you must be in contact with God?
Yes.
Now, I want to reach God . Can you help me?
Sure, that is my business.
How do I go about it? asked the Prince.
Well, how do your subjects go about seeing you?
Oh, I am accessible to anybody, all they have to do is let my secretary know .
Oh, that is easy then, said the Swami. God follow s the same principle. Just give me your card and I will pass it on. No problem.
So the Prince gave him his card . The swami looked at it and said, isn’t this your name?.
Yes.
God wants to know who is coming. He doesn’t want to know your name. The name belongs to you. It is your possession, but God wants to know who the possessor is .
Then the Prince wrote on the card that he was the Prince of the country and then the swami said
Son, isn’t this your position?
Yes.
He doesn’t want to know the position. This is your possession. Who are you?
This went on with the Prince scribbling all over the card, until, finally he wrote,
Human being, to which the Mahatma said ,
Yes. I know you are not a bird or a fox. You are a human being. That is your species. You belong to it. But who are you?
The Prince took the card back and went away because he understood he didn’t know who he was. He thought and thought until he understood. And then he never went back. He had met the person he wanted to meet.
Swami Vivekananda said,
He is an atheist who does not believe in himself
Xxx
HEAVEN AND HELL
There are three pathways to hell which destroy a human being; lust, anger and greed. Therefore give up these things.
–Bhagavad Gita 16-21
There is a Ramakrishna Swami who always tells the novices.
I am not afraid of heaven or hell.
You know I have beautiful handwriting. If I go to heaven, god will say, come here and do my correspondence. If I go to hell, the day the god of hell discovers my handwriting he will put me to the same job. So it doesn’t make any difference where I go.
We make our heaven or hell depending upon how we use our opportunities.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
யவனர்கள் பற்றிய எல்லா குறிப்புகளையும் தொகுத்து வழங்கும்– ‘ இந்திய இலக்கியத்தில் யோனர்களும் யவனர்களும்’ — என்ற ஆங்கில நூல் (பின்னிஷ் ஓரியண்டல் சொசைட்டி) நாட்டிய சாஸ்திரத்தில் யவனர்கள் பற்றி என்ன சொல்லி இருக்கிறது என்பதைத் தருகிறது. அவர்கள் பேசிய மொழி, அவர்கள் முக வர்ணம் பற்றி சுவையான விஷ்யங்களைத் தருகின்றன.
Yonas and Yavanas in Indian Literature, Klaus Karttunen, Finnish Oriental Society,, Helsinki
முதலில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பரத முனி எழுதிய சம்ஸ்க்ருத நூலான நாட்டிய சாஸ்திரம் என்ன சொல்கிறது என்பதை ப் பார்ப்போம்:-
பரத நாட்ய சாஸ்த்ர 13-59
இதில் தென்னக மக்களுடன் யவனர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கோசலாஸ் தோஸலாஸ் சைவ கலிங்கா யவனாஹா காசாஹா
த்ராவிடாந்த்ரமஹாராஷ்டிர வைஸ்னா வை வானவா சஜாஹா
இதில் கலிங்க , யவன, திராவிட , ஆந்திர, மகாராஷ்டிரா என்ற வரிசை வருவது பலரையும் வியப்புக்குள்ளாக்குகிறது
எனது கருத்து :-
தமிழ் நாட்டில் பல இடங்களில் யவனர் சேரிகள் (காலனிகள்) இருந்ததாக பழந்தமிழ் நூல்கள் செப்புகின்றன . அவர்களில் பலர் நாடகக் கலையைப் பயின்றிருக்கலாம் .
மேலும் முன்னொரு கட்டுரையில் நான் நான்கு வகையான, யவன,யோனர்களை தமிழ் , சம்ஸ்க்ருத இலக்கியங்கள் பாடியிருப்பதைக் காட்டி இருக்கிறேன் . சங்கத் தமிழ் நூல்கள் காட்டும் யவனர்கள் இத்தாலியிலிருந்து வந்த ரோமானியர். பிற்கால தமிழ் நூல் காட்டும் ‘யவன தச்சர்கள்’ வடமேற்கு இந்தியாவின் ஒரிஜினல், ஆதி யவனர்கள் . அதற்குப் பின்னர் சம்ஸ்க்ருத இலக்கியம் பேசும் யவனர்கள் அலெக்ஸ்சாண்டருடன் வந்த கிரேக்க நாட்டவர். துலுக்கர் படையெடுப்புக்குப் பின்னர் ‘யவனர்கள் , யோனர்கள்’ என்போர் அராபியர்கள் அல்லது துலுக்கர்கள் (துருக்கர்கள்). ஆகவே இவர்களில் பெரும்பாலும் தென்னக காலனிகளில் வசித்த இத்தாலியர்களே / ரோமானியர்களே .
(இரண்டாம் நூற்றாண்டு கிரேக்க குறு நாடகத்தில் கன்னட அல்லது துளு மொழி சொற்கள் உள்ளன என்பர். ஆயினும் இம்மொழிகள் உருவானது இதற்குச் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னரே.)
பரத முனிவர் இன்னுமொரு இடத்தில் எந்தெந்த வகுப்பினருக்கு முகத்தில் என்ன சாயம் பூசி நடிக்கவோ, நடனமாடவோ வைக்கவேண்டும் என்று இயம்புகிறார்:–
(இதிலுள்ள பிராஹ்மண தேசத்தை பாணினி (5-2-81)யும், பதஞ்சலியும் குறிப்பிடுகின்றனர். அது இப்போதும் பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் பிராஹ்மணாபாத் என்ற நகரமாக இருக்கிறது .இதுபற்றி பிராமண நாடு, சூத்திர நாடு என்ற எனது கட்டுரையில் விவரித்துள்ளேன். அலெக்ஸ்சாண்டருடன் வந்த வரலாற்று ஆசிரியர்கள் இதை கிரேக்க மொழியில் ‘பிராஹ்மனோய்’ Brachmanoi என்று எழுதிவைத்துள்ளனர்.)
இதே வரிசையில் மலைகள், நதிகள் ஆகியவற்றையும் காவ்ய மீமாம்சம் குறிப்பிடுகிறது:–
இதற்குப் பின்னர் 1400ம் ஆண்டு வாக்கில் சிம்மபூபால என்கிற மன்னன், ‘ரஸார்ணவ சுதாகர’ என்ற நாடக நூலில் யவன கதா பாத்திரங்கள் என்ன மொழியைப் பேசவேண்டும் என்று சம்ஸ்க்ருதத்தில் எழுதி இருக்கிறார் —
கீழ்த்தர, மத்தியதர வர்க்க நடிகர்கள்/கதா பாத்திரங்கள் – ஸுரஸேனி ;
A boulder move: The Krishna’s Butter Ball or Vaanirai Kal, as it is known to locals, has been sitting on a 45-degree slope in Mahabalipuram for over 1,300 years.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
FOLLOWING IS A PICTURE WRITE UP THAT WAS PUBLISHED BY DAILY MAIL NEWS PAER IN 2016. I AM REPRODUCING IT TO SHOW HOW MUCH THE FOREIGNERS APPRECIATE SUCH THINGS WHILE WE TAKE THEM FOR GRANTED. BEAUTIFUL PICTURES ARE ATTACHED
Teetering: Unsurprisingly the abnormal rock is popular with tourists and locals, who pose for daredevil photographs under its base.
Rock and NOT roll: The mystery of the 250-ton boulder that has defied gravity for over 1,300 years (but hasn’t stopped daredevil tourists posing under it)
The Krishna’s Butter Ball or Vaanirai Kal, as it is known to locals, sits on a 45-degree slope in south India
In 1908 Governor of Madras Arthur Lawley is said to have used seven elephants to move it without having any luck
Some believe that it was put in place by the gods, others by aliens – and geologists argue it’s a natural formation
PUBLISHED: 09:04, 8 April 2016 | UPDATED: 09:24, 8 April 2016
Only those with nerves of steel dare stand under this teetering 250-ton rock in India that perches precariously on a hill.
The Krishna’s Butter Ball or Vaanirai Kal (Stone of the Sky God), as it is known to locals, has been sitting on a 45-degree slope in Mahabalipuram for over 1,300 years.
The 20ft rock appears to defy gravity, looking like it’s going to roll at any moment – and all attempts to move it have been in vain.
A boulder move: The Krishna’s Butter Ball or Vaanirai Kal, as it is known to locals, has been sitting on a 45-degree slope in Mahabalipuram for over 1,300 years.
Teetering: Unsurprisingly the abnormal rock is popular with tourists and locals, who pose for daredevil photographs under its base
Under a rock: The 20ft feature appears to defy gravity – and all attempts to shift it from its position so far have been in vain
Hindu folklore says that deity Lord Krishna would often steal handfuls of butter from his mother’s jar, and this natural boulder is attributed to the mass of butter that he pinched
While many have said that it was placed in its position by the Gods who wanted to prove their power, or by extra terrestrial beings thousands of years ago, scientists say that the rock is simply a natural formation.
Under a rock: The 20ft feature appears to defy gravity – and all attempts to shift it from its position so far have been in vain
Source – Daily Mail on line
tags — Mahabalipuram, butter ball, Krishna, wonder rock, stone ball
உலகப்புகழ்பெற்றசிற்பிமைக்கேல்ஏஞ்சலோஒருநாள்ரோம்நகரின்வீதியில்நடந்துசென்றுகொண்டிருந்தார். ஒருவீடுஇடிக்கப்பட்டுக் கிடந்தது. அதனிடையேஒருபெரியபளிங்குக்கல்லும்கிடந்தது. அதைச்சற்றுக்கவனித்தஏஞ்சலோ, அதில்ஒருஅழகியசிற்பம்வடித்தார். கண்டவர்கள்வியந்தனர். ஆஹா, உடைந்துகிடந்தகல்லில்இததனைஅழகியசிற்பமாஎனவியந்தார்ஒருவர். ‘அன்பரே! சிற்பம்அதில்புதைந்துகிடந்தது. அந்தக்கல்லிலிருந்துவேண்டாதபகுதிகளைஅகற்றியதுமட்டும்தான்என்வேலை‘ என்றார்ஏஞ்சலோ. சிற்பம்சிற்பியின்மனதில்தான்உதிக்கிறது! Art lives in and through the artiist!
இதே பர்மனுக்கு தலத் முகம்மது குரல் அவ்வளவாகப் பிடிக்காது! ‘சுஜாதா’ படத்தில் ஒரு பாட்டை தலத் பாடவேண்டும் என டைரக்டர் பிமல் ராய் சொல்லிவிட்டார். பாட்டு பதிவாவதற்குமுன் ரிகார்டு அறையில் பர்மன் தலத்திடம்” நீ தயவு செய்து என் பாட்டைக் கெடுத்துவிடாதே –
There is a universal quality in poetry, which itself is universal language!
This tune is based on an American song ‘Chico Chico from Puerto Rico”, by Edmundo Ross.. This was a smash hit. It was C.Ramchandra who introduced Western beat in our cine music. The two ladies sing in contrasting styles! Amirbai was a popular singer before Lata, but lost market after Lata’s coming. Here she sings for the male group, while Lata sings for the heroine! Rajinder Krishan’s lyric is superb.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் அலைவரிசை ‘A’யில் காலைமலர் நிகழ்ச்சியில் தினமும் காலை 6.55க்கு 1-3-2020 முதல் 10-3-2020 முடிய ஒலிபரப்பப்பட்ட பத்து சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வு உரைகளில்
பத்தாவது (கடைசி) உரை
(10-3-2020 அன்று ஒலிபரப்பானது)
எலக்ட்ரிக் வாகனங்களின் அறிமுகம்!
தட்பவெப்ப நிலை மாற்றத்திலிருந்து உலகைக் காக்க வாகனங்களிலிருந்து வெளியேற்றப்படும் நச்சு வாயுக்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதற்கு ஒரு சிறந்த வழியாக இப்போது உலகெங்கும் படிம எரிபொருள் தேவைப்படாத எலக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
1888ஆம் ஆண்டு பிரான்ஸை சேர்ந்த ஒருவரால் எலக்ட்ரிக் கார் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. மணிக்கு 63.16 கிலோமீட்டர் இது ஓடியது. அடுத்த ஆண்டே லா ஜமைஸ் காண்டெண்ட் (La Jamais Contente) என்ற எலக்ட்ரிக் கார் மணிக்கு 105.88 கிலோமீட்டர் ஓடி முதல் சாதனையை முறியடித்தது. ஆனால் எலக்ட்ரிக் கார்களில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரிகளை நூறு கிலோமீட்டருக்கு ஒரு முறை சார்ஜ் செய்ய வேண்டியிருந்ததால் இதைப் பயன்படுத்த யாரும் முன்வரவில்லை. ஆனால் இன்றோ பல்வித முன்னேற்றங்களுடன் சத்தமே இல்லாத, வெகு தூரம் ஓடும் எலக்ட்ரிக் கார்கள் சந்தைக்கு வந்துள்ளன.
இதில் முன்னோடியாக இருப்பது உலகின் தலை சிறந்த நிறுவனமான டெஸ்லா. டெஸ்லாவைத் தொடர்ந்து ஏராளமான நிறுவனங்கள் மின்சக்தி வாகனங்களைத் தயாரிக்க ஆரம்பித்து விட்டன. அடுத்த ஐந்து வருடங்களில் 34 புது மாடல்கள் அறிமுகப்படுத்தப்படும் என்பது ஒரு சுவையான செய்தி. இப்போது இருக்கும் கார்கள், பஸ்கள் என்னென்ன வசதிகள் கொண்டிருக்கின்றனவோ அதை விட கூடுதல் வசதிகளுடன் இவை தயாரிக்கப்படும்.
பல லட்சம் எலக்ட்ரிக் கார்கள் உலகெங்கும் இன்று ஓடுகின்றன. ஜெர்மனியில் மட்டும் பத்து லட்சம் கார்கள் இயக்கப்படுகின்ற்ன.
நார்வே 2025லும் இந்தியா 2030லும் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் 2040லும் பெருமளவில் எலக்ட்ரிக் வாகனங்களை சாலைகளில் இயங்கச் செய்யும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இவை அனைத்தும் சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தும் நாசகரமான வாயுவான கார்பன் டை ஆக்ஸைடை வெளிப்படுத்தாது; ஆகவே சூழல் மேம்படும். அத்துடன் மக்களின் ஆரோக்கியமும் மேம்படும்.
அடுத்து, சூரிய சக்தியால் இயங்கும் வாகனங்களும் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இவை பயன்பாட்டுக்கு வரும் போது முற்றிலுமாக வளி மண்டலம் நச்சு வாயுக்களிலிருந்து காக்கப்படும். இந்த மாற்றத்தை வரவேற்று பெட்ரோல், டீஸல் வாகனங்களைத் தவிர்ப்போமாக!