ஹிந்தி படப் பாடல்கள் – 7 – உணவுக் கனவு! (Post No.7830)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No.7830

Date uploaded in London – – 15 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் – 7 – உணவுக் கனவு!

R.Nanjappa

உணவுக் கனவு!

வீட்டுப் பிரச்சினையை எவ்வளவு எளிதாகத் தீர்த்துவிட்டார் கவிஞர்! நிஜ உலகில் வீடு இல்லையென்றால்  என்ன? கனவுலகில் பெறலாமே!

சரி, வீடு வந்தாயிற்று, உணவு?

இதையும் தருகிறார் கவிஞர் ஷைலேந்த்ராஆம், கனவில்!

ஒர் இளைஞன்ஏழை, வேலை கிடைக்கவில்லை, சாப்பாட்டுக்கு வழியில்லை. என்ன செய்வது?

கற்பனைக் குதிரையில் ஏறுகிறான். சேரிக் குழந்தைகளைக் கூட்டிக்கொள்கிறான், பாடுகிறான்!

Suraj zara aa paas aa, 

Aaj sapno(n) ki roti pakayenge hum

Ae aasmaan tu bada meherbaan, 

Aaj tujh ko bhi dawat khilayenge hum.

Chulha hai thanda pada, aur pet me aag hai

Garma garam rotiya(n) kitna hasi(n) kwaab hai!

Aaloo tamatar ke saath, imli ki chutney bane,

Roti karari si ke, ghee uspe asli lagey!

Baite kahin chaaon mein Aa aaj picnic sahi

Aise hi din ki sada, humko tamanna rahi

அப்பா சூர்யனே! சற்று அருகில் வா!

இன்று கனவில் ரொட்டி சுடுவோம்!

வானமேநீ கருணை நிறைந்தவனில்லையா!

இன்று உனக்கும் விருந்து தருகிறோம்!

அடுப்பில் நெருப்பில்லை  குளிந்திருக்கிறது (அதனால் என்ன)

வயிற்றில் தான் அக்னி  எரிகிறதே!

சுடச் சுட ரொட்டி தயார் என்ன அழகான கனவு!

உருளைக்கிழங்கும் தக்காளியும் கலந்துசப்ஜி“!

அதனுடன்  புளியம்பிஞ்சு சட்னியும் தயார்!

அடுப்பிலிருந்து  சுடச்சுட ரொட்டி– 

அதன்மேல் அசல் நெய் தடவுவோம்!

அடே அப்பா, என்ன மணம்!

இப்படி எங்கோ நிழலில் அமர்ந்து

பிக்னிக் போக வேண்டும்!

அப்படிப்பட்ட நாட்களும் வருமா

அதுவே எங்கள் ஆசையாக இருக்கிறது!

Song: Suraj zara  Film: Ujala 1959 Lyricist: Shailendra

Music: Shankar Jaikishan  Singer: Manna Dey

கனவு என்றால் கூட ,கற்பனையே என்றாலும் எத்தனை யதார்த்தம் பாருங்கள்! 

ஏதோகல்யாண சமையல் சாதம்‘  என்று  பாடவில்லை. நாம் சாதாரணமாக உண்பதையே கேட்கிறார்!

“Seeking the food he eats” என்று ஷேக்ஸ்பியர் பாடவில்லையா!

சமையல் என்னும் சடங்கு!

சாதாரண ரொட்டி என்றாலும் அதை யாரோ சமைத்துத் தானே ஆகவேண்டும்

அம்மா தானே உணவு சமைப்பவள்!

தினமும் அடுப்படியில் புகையுடனும் நெருப்புடனும்  ரொட்டி சுடக் கஷ்டப்படுகிறாள்.

ஒரு சிறு பையன், இதைக் கவனிக்கிறான். அவனுக்கு சட்டென்று ஒரு ஐடியா

அம்மாவிடம் ஓடுகிறான்சொல்கிறான்:

मुन्ना बड़ा प्यारा, अम्मी का दुलारा

कोई कहे चाँद, कोई आँख का तारा

इक दिन वो माँ से बोला क्यूँ फूँकती है चूल्हा

क्यूँ ना रोटियों का पेड़ हम लगालें

आम तोड़ें रोटी तोड़ें रोटीआम खालें

काहे करे रोज़रोज़ तू ये झमेला

अम्मी को आई हंसी, हँसके वो कहने लगी

लाल मेहनत के बिना रोटी किस घर में पकी

जियो मेरे लाल, जियो मेरे लाल

जियो जियो जियो जियो जियो मेरे लाल

முன்னா படா ப்யாரா, அம்மி கா துலாரா

கோயி கஹே சாந்த் , கோயீ ஆங்க் கா தாரா

இக் தின் வோ மாஸே போலாக்யூ(ன்) ஃபூங்க்தீ ஹை சூல்ஹா

க்யூ ரோடியோ(ன்) கா பேட் ஹம் லகாலே(ன்)

ஆம் தோடே ரோடீ தோடே ரோடீஆம் காலே(ன்)

காஹே கரே ரோஜ் ரோஜ் தூ யே ஜமேலா!

அம்மீ கோ ஆயி (ன்)ஸீ, ஹன்ஸ்கே யே கஹனே லகீ

லால் மேஹனத் கே பினா ரோடீ கிஸ் கர் மே பகீ

ஜியோ மேரே  லால், ஜியோ மேரே லால்– 

துஜ்  கோ லகே மெரீ உம்ரு ஜியோ மெரே லால்

அம்மாவின் செல்லக் குழந்தை! அம்மாவுக்கு மிகவும் பிரியம்!

சிலர் சந்திரன் என்பர், சிலர் கண்ணின் மணி என்பர்!

ஒரு நாள் அம்மாவிடம் சொன்னான்:

அம்மா, நீ ஏன் இப்படி தினம் தினம் அடுப்பை ஊதிக்கொண்டிருக்கிறாய்.?

நாம் ரொட்டி மரத்தை வைத்துவிட்டால் என்ன!

கொஞ்சம் மாம்பழம், கொஞ்சம் ரொட்டி

இப்படிக் கலந்து சாப்பிடலாமே!

நீ ஏன் இப்படி  தினமும் அடுப்பைக் கட்டிக்கொண்டு அவதிப் படுகிறாய்?”

இதைக்கேட்டு அம்மாவுக்கு சிரிப்புத்தான் வந்தது!

சிரித்துக்கொண்டே அவள் சொன்னாள்:

என் செல்லமேஉழைக்காமல் யார் வீட்டிலப்பா சோறு வரும்?

நீ  நீண்ட ஆயுளுடன் வாழ்வாயாக

என் ஆயுளும் சேர்ந்து உனக்காகட்டும்!

Song: Munna bada pyara  Film: Musafir 1957 Lyricist: Shailendra

Music: Salil Chaudhury Singer: Kishore Kumar.

இது டைரக்டர் ரிஷிகேஷ் முகர்ஜியின் முதல் படம். லட்சியக் கலைஞர். Decent and sensitiveசாதாரண மக்களைப் பற்றியே கதை. ஆபாசம் இருக்காதுகுடும்பத்துடன் பார்க்கலாம். ]

என் ஆயுளும் சேர்ந்து உனக்காகட்டும்துஜ் கோ லகே மெரீ உம்ருஇது வட இந்தியாவில் பெரியவர்கள் குழந்தைக்குச் சொல்லும் ஆசி வசனம்

என்ன கற்பனைகருத்து பாருங்கள்!

தாய் படும் கஷ்டத்தைச் சகிக்காத சிறு பையன்!

இதெல்லாம் நாம் சிறுவயதில் பார்த்தது தானேவிறகு அடுப்பு, கரிக் கும்மட்டி, ஊதி ஊதி யாக வேண்டும், புகையுடன் இருந்தே பழகவேண்டும்அன்று மின்சார அடுப்பா, கேஸ் அடுப்பா?

ஆனாலும் அவனுக்கு உழைப்பின் உயர்வைச் சொல்லித் தரும் தாய்!

ஷைலேந்த்ரா  சோஷலிசக் கவிஞர் என்றாலும்நீ சும்மயிரு, உனக்குச் சோறு போடவேண்டியது அரசின் கடமைஎன்று உபதேசம் செய்யவில்லை!

இன்று பாருங்கள்நமது அரசியல் கட்சிகளெல்லாம் எல்லோரையும்  எதற்கும் சர்க்காரையே நம்பி வாழும் பிச்சைக்காரர்களாக்கி விட்டன! மழையோ, புயலோஅரிசி, பருப்பெல்லாம் வீட்டிற்குப் பையில் வந்து சேர வேண்டும்!

கனவு தீர்த்த பிரச்சினைகள் !

எல்லாம் சரிதான்கனவு  பிரச்சினையைத் தீர்த்துவிடுமா

தீர்த்திருக்கிறது என்று சாஸ்திரத்தில் படிக்கிறோம். மனதால் கோயில் கட்டிய பூசலாரையும் அங்கு வந்த சிவபெருமானையும் பற்றி பெரிய புராணத்தில் படிக்கிறோம்!

ஐயா, இதெல்லாம் கட்டுக்கதை என்கிறீர்களா?

இன்று விஞ்ஞானமும் இதையே சொல்கிறதுஆம் கனவு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும்!

கனவில் தீர்வுகண்ட பத்து விஷயங்கள் பார்க்கலாமா?

1. மேரி ஷெல்லி   Mary Shelley என்ற கவிஞருக்கு ஃப்ராங்கின்ஸ்டீன்  Frankensteinஎன்ற கதை கனவில் வந்தது!

2. ராபர்ட் லூயி ஸ்டீவென்ஸன்  Robert Louis Stevenson என்ற நாவலசிரியருக்கு டாகடர் ஜெகில் மிஸ்டர் ஹைடு  Dr.Jekyll & Mr.Hyde என்ற கதை கனவில் வந்தது!

3. பால் மக்கார்ட்னீ   Paul McCartney என்ற பீடில்ஸ்  Beatles பாடகருக்குயெஸ்டர்டே”  Yesterday என்ற  ஹிட் பாட்டு கனவில் வந்தது.

இவர்கள் எல்லாம் கற்பனை உலகில் சஞ்சரிப்பவர் தானே, இதில் என்ன அதிசயம் என்பீர்களா?

கனவில் பிரச்சினைக்கு விடை கண்ட விஞ்ஞானிகளின் வரிசை இதோ-

4. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்Albert Einstein  ஓளியின் வேகத்தை Speed of Light கனவிலேயே கன்டறிந்தார்

 Imagination is everything.
It is the preview of life’s coming attractions.
Imagination is more important than knowledge.
Never give up on what you really want to do.
The person with big dreams is more powerful than one with all the facts.
It is the preview of life’s coming attractions.
Imagination is more important than knowledge.
Never give up on what you really want to do.
The person with big dreams is more powerful than one with all the facts.

–Albert Einstein

5. நீல்ஸ் போர்Niels  Bohr அணுவின் இயல்பை கனவிலேயே கண்டார்

6. எலியாஸ் ஹோவ் : Elias Howe தையல் மிஷினில் ஊசியின் கண் எங்கு இருக்கவேண்டும் என்பதை கனவில்  கண்டார்!

7. நமது கணித மேதை ராமானுஜம்: பல சூத்திரப் புதிர்களுக்கு விடை கனவிலேயே கண்டார்.

Srinivasa Ramanujam:

“While asleep I had an unusual experience. There was  red screen formed by flowing blood as it were.I was observing it. Suddenly a hand began to write on the screen. I became all attention. That hand wrote a number of results in elliptic integrals. They stuck to my mind. As soon as I woke up, I committed them to writing.”

8ஓட்டொ  லோவிOtto  Loewi நரம்புகளின் இயக்கத்தை  Nerve Impulse கனவில் கண்டறிந்தார்

9.ஆகஸ்ட் கெகூலேAugust Kekule பென்ஃஜீன் மாலிக்யூலின் அமைப்பை  structure of Benzene molecule கனவில் கண்டறிந்தார்.

10. ஃப்ரெடெரிக் பான்டிங்க்Frederic Banting இன்சுலினை Insulin கனவில்தான் கண்டுபிடித்தார்.

இப்படி இன்னும் எவ்வளவோ  சொல்லலாம்

அதனால் தான் நமது வேதாந்தத்தில் கனவைத் துச்சமாக நினைத்து ஒதுக்குவதில்லை. விழிப்பு நிலை, தூக்கம்அது கடந்த நிலை போன்று கனவு நிலைக்கும் அங்கீகாரம் தந்திருக்கிறார்கள்.

ஆனால் பகற் கனவு அல்ல! இவர்கள் அனைவருமே கடின உழைப்பாளிகள்.

கனவு காணவேணும்ஆனால் அது நமக்கு எஜமானனாகி விடக்கூடாது!

கனவுவெற்று மனக்கோட்டையல்ல!

“If you can dream – and not make dreams your master;
If you can think – and not make thoughts your aim;
If you can meet with Triumph and Disaster
And treat those two impostors just the same;”

Yours is the Earth and everything that’s in it,   

 And—which is more—you’ll be a Man, my son!

என்று எழுதினார் ருட்யார்ட் கிப்லிங்க். Rudyard Kipling

 Take time to Work – It is the price of success. 

 Take time to Dream – It hitches the soul to the stars.

 கனவு வெற்றுக் கனவாக இருக்கக்கூடாது. இதை ஷேக்ஸ்பியர் அழகாகச் சொல்கிறார்:

O, who can hold a fire in his hand

by thinking of the frosty Caucasus?

Or cloy the hungry edge of appetite

by bare imagination of a feast?

Or wallow naked in December snow

by thinking of fantastic summer heat?

O,no, the apprehension of the good

gives but the greater feeling to the worse.

[Shakespeare: Richard II]

உழைப்பும் வேண்டும். அத்துடன் கற்பனை வளமும் லட்சிய நோக்கும்  Imagination வேண்டும்!

****

சாஸ்திர ஞானம் இல்லாத வாழ்வும் ஒரு வாழ்வா? (Post No.7829)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7829

Date uploaded in London – – 15 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

சாஸ்திர ஞானம் இல்லாத வாழ்வும் ஒரு வாழ்வா? அது சரி, தலையெழுத்து….?

ச.நாகராஜன்

‘கிம்’ என்று தொடங்கும் சுபாஷிதங்கள் சம்ஸ்கிருதத்தில் ஏராளம் உள்ளன. இந்த வார்த்தையில் தொடங்கி, சாஸ்திரங்களைப் படித்து அறிவை அடையாதவன் வாழ்வும் ஒரு வாழ்வா என்று கேட்கும் சுபாஷிதங்கள் நிறைய உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

ஆனால் என்ன படித்து என்ன பிரயோஜனம், தலையில் எழுதிய எழுத்து சரியாக அல்லவா இருக்க வேண்டும் என்று ஒருவர் கூறுகிறார், அதுவும் சரிதான்.

படிக்காதவன் மதிக்கப்படுகிறான். சாஸ்திரம் அறிந்தவன் மதிக்கப்படுவதில்லை. ஏன்? தலையெழுத்து தானே?!

சுபாஷிதங்களைப் பார்ப்போம்.

கிம் குலேன ந சேத் ப்ராஞோ வித்யாஹீனாத் பசுர்வர: |

ப்ரஸஸ்யதே வித்யா லோகே ஸ்வயம் ப்ராஞோ நர: க்வசித் ||

நல்ல குலத்தில் பிறந்து கல்வியறிவு (வித்யா) இல்லாவிடில் என்ன பிரயோஜனம்? அறிவில்லாதவனை விட ஒரு விலங்கே உயர்ந்தது. அறிவு இந்த உலகத்தில் புகழப்படுகிறது. (அறிவில்லாமல்) ஸ்வயமாகவே நுண்ணறிவு கொண்ட ஒரு மனிதனை எங்கு காண முடியும்?

Of what avail is noble birth if there is no knowledge? An animal is better than an ignorant man. Knowledge is praised in this world. Where can one find a man who is intelligent on his own (but bereft of knowledge).  (Translation bu S. Bhaskaran Nair)

*

கிம் குலேன விசாலேன கிம் ரூபேன பவிஷ்யதி |

நானாசாஸ்த்ர குணான்வித: குரூபேண ஹி ஷோபதே ||

நல்ல குலத்தில் பிறந்து என்ன? நல்ல அழகு இருந்தால் தான் என்ன? எல்லா சாஸ்திரங்களிளும் தேர்ச்சி பெற்றவன் அழகற்றவானாக இருந்தாலும் கூட பிரகாசிக்கிறான்.

Of what avail is noble birth? Of what avail is handsomeness? A wise (man) well versed in the different sastra-s shines, indeed, even if he is plain in appearance.

(Translation by S. Bhaskaran Nair)

*

கிம் குலேன விசாலேன குணவான் பூஜ்யதே நர: |

தனுவம்சவிசுத்தோபி  நிர்குண: கிம் கரிஷ்யதி ||

இந்த சுபாஷிதத்தில் வரும் குண என்ற வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு.

குண என்றால் நல்ல குணங்கள் என்று ஒரு பொருள்;  குண என்ற சொல் வில்லின் நாணையும் குறிக்கும்.

நல்ல குலத்தில் பிறந்து என்ன? நல்ல குணங்களை உடையவனே பூஜிக்கப்படுகிறான். நல்ல மூங்கிலில் வில் செய்யப்பட்டாலும் கூட, நாண் பூட்டப்படாவிட்டால் என்ன பயன்?

Of what avail is noble birth? Only the man with good qualities (guna-s) is honoured. What can a bow, though made out of high quality bamboo do, if it is not fitted with the bow-string (guna).    (Translation by K.V. Sarma)

*

கிம் குலேன விசாலேன வித்யாஹீனஸ்ய தேஹின: |

அகுலோனோபி சாஸ்த்ரஞோ தைவதைரைபி பூஜ்யதே ||

வித்யா ஹீனனாக இருக்கும் ஒருவன் நல்ல குலத்தில் பிறந்து என்ன பிரயோஜனம்? நல்ல குலத்தில் பிறக்காவிட்டாலும் கூட வித்யா வல்லவனாக இருந்தால் அவனை தேவதைகளும் பூஜிக்கும்.

Of what avail is high birth to a man who is destitute of  knowledge? One well read in the sastra-s though not of noble birth, is revered even by the gods.

*

சாஸ்திர ஞானம் உள்ளவனை – வித்யா எனப்படும் கல்வியறிவில் தேர்ந்தவனை – உலகம் எப்படிப் பாராட்டும் என்று மேலே உள்ள சுபாஷிதங்கள் விளக்குகின்றன. ஆனால் இப்படி நல்ல சாஸ்திர ஞானமுள்ள பண்டிதர்கள் பிரகாசிக்காமல் இருப்பதையும் அன்றாட வாழ்வில் பார்க்கத்தானே செய்கிறோம். அவர்கள் தலையெழுத்தும் சரியாக இருக்க வேண்டும் இல்லையா? இதை வலியுறுத்துகிறது இந்த சுபாஷிதம்:

கிம் சாஸ்த்ரைர்பஹுதாப்யஸ்தை: கிம் சாதுர்யேன கிம் தியா |

கிம் சௌர்யேணாநிவார்யேண லலாடே சேன்ன லிக்யதே ||

பல்வேறு சாஸ்திரங்களை தொடர்ந்து படித்து என்ன பயன்? நல்ல சாதுர்யம், அறிவு எல்லாம் இருந்தும் என்ன பயன்? ஒப்பற்ற வீரம் இருந்தும் என்ன பயன்? நெற்றியில் (தலையெழுத்தில்) வெற்றி எழுதப்படாவிடில் இவை அனைத்தும் இருந்தும் என்ன பயன் – ஒரு பயனுமில்லை!

What for is one’s constant study of the various discipline of knowledge and what use are one’s dexterity, intelligence and unimpeded valor, if success is not inscribed on one’s forehead (by destiny).    (Translation by S. Bhaskaran Nair)

tags — சுபாஷிதங்கள் ,சாஸ்திர ஞானம், வாழ்வு, ‘கிம்’,

***

More Folk Tales- Riches are Destructible, Learning is Indestructible (Post No.7828)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7828

Date uploaded in London – 14 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

Two young men named Sumugan and Sugunan, who lived in the town of Janarthanapuram in the Malayala country, set out for another country with the intention of getting property and return. Each taking hundred gold coins went to Benares in the north.

One of them, Sumugan, started business investing his hundred gold coins and made big profits. In course of time he obtained great wealth. Sugunan, in the meantime, spent all his money in learning all the subjects. Having studied all the sciences, he became very learned. But he was poor. Both of them decided to return to home town after two years. Sumugan loaded all his wealth on the back of camels and horses and asked Sugunan to accompany him.

As they were going along through a forest , robbers attacked them and took away all the money . Afterwards both of them became poor and reached their home town. Sumugan decided to start some business from the scratch.

Sugunan was waiting for an opportunity to use his studies. At the time, the  local king was looking for some learned man  for his assembly. Sugunan went and displayed his learning and got a post. Sumugan thinking about his lost property’s become sorrow full.

Moral of the story is….

Riches can be destroyed but learning can’t be destroyed.

Xxxx


Four and Three make a Difference

As four persons were traveling together toward a town , they found on the way a pot full of gold coins under a tree. One of them said because he saw it first he must be given more than others. Another said because he took it with his own hands they owe him more money. Each one was claiming more than what he deserved. Having quarrelled with each other and debating for a long time they could not find a solution. They saw a shop where there was a merchant. They decided to seek his advice. But they were all hungry. So they decided to deposit the pot of gold with the merchant and have shower and lunch first. They put all the coins in one leather bag and sealed it.

They went to the merchant and said,

Look , this is a sealed bag . Keep it please. We will be back soon. But you should give it only when four of us ask for it .

They went to the nearby tank, took bath, cooked food and ate it. They wanted to chew betel and nuts . They decided to buy it from the same merchant. So they sent one among them with the instruction to take away one coin and buy betelnuts and betel.

He went to the shop and demanded the bag. The merchant refused to give it saying all the four must ask for it . Immediately he shouted to his other three friends to give him permission. Those idiots asked the merchant,

“oh, merchant, give him the bag please”.

Because four of them asked together he gave him the bag full of gold coins. After receiving it, he went his own way. The other three got worried and came to the merchant and  asked for the bag.

He told them that he already gave it to one of them after they said yes. But they disputed it and took the merchant to town magistrate.

He asked them to put forth their arguments.

We deposited with the merchant a bag saying he should give it back only when FOUR of us asked for it.

Next the merchant said these THREE came back and asked for the bag.

Magistrate said the merchant did the right thing and dismissed the case.

Numbers are important in a case.

Xxx subham xxxx

அணுகுண்டுக்கு சக்தி தரும்; மரகதத்துக்கு ஒளியூட்டும் பெரில்லியம் (Post No.7827)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7827

Date uploaded in London – 14 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

இதுவரை  அமெரிஷியம், ஆர்செனிக்,பேரியம் ,பிஸ்மத், காட்மியம், குரோமியம், கோபால்ட், க்யூரியம் , ப்ளோரின், அயொடின், லித்தியம், மக்னீஷியம், பொட்டாசியம், ரேடியம், செலீனியம் , தாலியம் , தோரியம், யுரேனியம் , துத்தநாகம், பாதரசம், மாலிப்டினம், நிக்கல் ஆகிய மூலகங்கள் பற்றிய சுவைமிகு செய்திகளை எடுத்துரைத்தேன். 

இன்று பெரில்லியம் (BERYLLIUM)  என்னும் மூலகம்  பற்றிய சுவையான விஷயங்களைக் காண்போம்

பிரபஞ்சம்  தோன்றியது எப்படி?

1500 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் மாபெரும் வெடிப்பு (Big Bang) ஏற்பட்டது அதிலிருந்து உருவானதுதான் பல நூறு கோடி நட்சத்திர மண்டலங்கள். அதில் ஒன்றான சூரிய மண்டலம், அதற்குள் அடங்கிய பூமி முதலான நவக்  கிரஹங்கள்— என்பது விஞ்ஞான புஸ்தகத்தில் உள்ள தகவல்.

‘பிக் பேங்’ (BIG BANG) எனப்படும் மாபெரும் வெடிப்பு ஏற்றப்பட்டபோது  தோன்றிய மூலகங்கள் ஹைட்ரஜன், ஹீலியம், லித்தியம் மூன்றுதான். அதற்கு அடுத்தபடியாகத் தோன்றிய  மூலகங்களில் அதிகம் காணப்படுவது  பெரில்லியம் . அதாவது நமது இன்றைய கதையின் கதாநாயகன்!

இதனால் பெரில்லியம்  ஒரு விண்வெளி மூலகமாகக் (COSMIC ELEMENT) கருதப்படுகிறது. சூப்பர்நோவா நட்சத்திரங்கள் வெடிக்கும்போது பெரில்லியம்  தோன்றியதாக முதலில் கருதினர். ஆனால் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் அதிகம் பெரில்லியமிருந்தவுடன் வேறு வழிகளிலும் இது வருமோ என்று விஞ்ஞானிகள் வியப்புற்றனர்.

இதில் சுவையான விஷயம் என்ன தெரியுமா?

பெரில்லியத்தைப் பிரபலப் பாடுத்தியது ஐசக் அஸிமோவ் ( ISSAC ASIMOV IN ‘SUCKER BAIT’, PART OF  ‘THE MARTIAN WAY’ , 1950 ) எழுதிய நாவல் ஆகும். ஆகும். அவர் விஞ்ஞான  புனைக்கதை மன்னன். அவர் எழுதிய ஒரு கதையில் மனிதர்கள் விண்வெளிப் பயணம் செய்து ஒரு வளமான கிரஹத்தைக் கண்டுபிடிக்கின்றனர் ; சுகமாக வாழ்கின்றனர். ஆனால் மனிதர்கள் மர்ம நோய் கண்டு, திடீர் திடீரென இறந்து போகிறார்கள். கடைசியில் ஆராய்ந்து பார்த்ததில் அங்குள்ள காற்று மண்டலத்தில்  பெரில்லியம்  அதிகம் என்பதும் அதை சுவாசித்தால் நோய் வரும் என்றும் கண்டுபிடிக்கின்றனர். இதை அவர் 1950-ம் ஆண்டு எழுதினார். 1992-ல் உண்மையையிலேயே பெரில்லியம்  அதிகமுள்ள ஆறு நட்சத்திரங்கள் கண்டு பிடிக்கப்பட்டன.

அப்படியானால் பெரில்லியம் விஷ உலோகமா?

ஆமாம். இதன் புகையையோ தூசியையோ  சுவாசித்தால் நுரையீரல் நோய்களும், மூச்சுத்திணறலும்  வரும்.  இந்த நோய்க்கு ‘பெரில்லியோஸ்’ என்று பெயர். மரணமோ, நிரந்தர சுவாசப் பிரச்ச னையையோ உண்டாக்கலாம்.

நாம் வாழும் உலகத்தில், சிலர் வேறு பிரபல மனிதர் போலவும், தலைவர் போலவும் நடித்து (Impersonation)  — ஆள் மாறாட்டம்  செய்து – மக்களை ஏமாற்றுவதை பத்திரிகைகளில் படிக்கிறோம். மூலக அட்டவணையில் மக்னீஷியம் என்னும் உலோகமும் பெரில்லியமும் பங்காளிகள். இது மக்னீஷியம் போலவே நடிப்பதால் நமது உடல் இதை அதுதான் என்று நம்பி எடுத்துக் கொண்டு திணறுகிறதாம். இரசாயன உலகில்தான் எவ்வளவு விந்தைகளள்  பாருங்கள்!  அது மட்டுமல்ல. பெரில்லியம்  மூலம் ஏற்படும் விஷம் , ரத்தம் மூலம் எலும்புகளுக்குச் சென்று அங்கு குடித்தனமும் செய்யத் துவங்குவதால் நமக்கு நிரந்தரப்  பிரச்ச னை ஏற்படுகிறது.

அதற்காக பெரில்லியம் மீது கோபம் கொள்ளாதீர்கள். ஒரு நல்ல விஷயமும் இருக்கிறது

மரகதமும் பச்சசைக் கல்லும் பெரில்லியமே!

ஒரே அளவு வைரம், மரகதம் ஆகிய இரண்டையும் கையில் எடுத்தால் மரகதத்துக்குதான் விலை அதிகம். நவரத்தினங்களில் பச்சை வண்ணத்தில் ஜொலிக்கும் மரகதத்திலும் அதைவிட விலை குறைந்த பெரில் என்னும் பச்சசைக் கல்லிலும் பெரில்லியம் இருப்பதே அந்த வண்ணத்தை அளிக்கிறது. இது பற்றி இரண்டு சுவையான விஷயங்களைச் சொல்கிறேன்.

இதைச் சுவைத்துப் பார்த்தால் இனிப்பாக இருக்குமாம். ஆகையால் முதலில் இதற்கு ‘கிளவ்ஸீனியம் ’  glaucinium  என்று பெயர் வைத்தனர். கிரேக்க மொழியில் கிளைகிஸ் glykys என்றால் இனிப்பு. விஞ் ஞான விஷயங்களுக்கு கிரேக்க மொழியில் பெயர் சூட்டுவது வழக்கம். ஏனெனில், உலகமே கிரேக்க நாடு மூலம்தான்  நாகரீகம்  அடைந்ததாக அரை வேக்காடுகள் நிறைந்த ஐரோப்பா, நம்பியது  பின்னர் பச்சை வண்ணத்தைப் பார்த்து பெரில் beryl  என்று நாமகரணம் செய்தனர்.

இரண்டவது விஷயம் என்னவென்றால் ஆதிகால எகிப்தியர்கள், யூதர்கள் ரோமானியர்கள் ஆகியோர் இந்த ரத்தினத்தைப் பயன்படுத்தினர். பிளினி (Pliny) என்ற ரோமானிய எழுத்தர் பெரில் , மரகதம் ஆகியன ஒரே வகைதான் என்று அறிந்து செங்கடல் அருகில் பெரில் கிடைப்பதாகவும், மரகதம் இந்தியாவிலிருந்து கிடைப்பதாகவும்  எழுதி வைத்து இருக்கிறார்.

ஐரோப்பாவில் CELTS கெல்ட் /செல்ட் இன  மக்களும் இதைப் பயன்படுத்தினர் ரத்தினக்  கல்லில் உள்ள ஆக்சிஜன் ஐசடோப்பை ஆராய்ந்தால் அது எங்கிருந்து வந்தது என்பது தெரிந்துவிடும். இப்படி ஆராய்ந்ததில் ஐரோப்பாவுக்கு வந்த பச்சைக் கற்கள் ஆஸ்திரியா மற்றும் பாகிஸ்தானிலிருந்து வந்தது தெரிகிறது. பிளினி (Pliny)  இந்திய மரகதம் பற்றிச் சொன்னது உண்மையே. ஏனெனில் 1947க்கு முன்னர்  பாகிஸ்தான் என்ற நாடே கிடையாது. அது எல்லாம் இந்தியாவின் ஒரு பகுதியே.

கொலம்பியா

ஹைதராபாத் நிஜாம் பொக்கிஷத்த்தில் இருந்த மரகத நகைகளை ஆராய்ந்ததில் அவை கொலம்பியா (COLOMBIA IN SOUTH AMERICA)  நாட்டில் இருந்து வந்தது தெரிகிறது. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில்  மரகதக் கற்கள் கிடைப்பதால், மொகலாயர் ஆடசிக் காலத்தில் இவை ஸ்பானியக் கப்பல்களில் பிலிப்பைன்ஸ் தீவுகளுக்கு வந்து, அவர்கள் நமக்கு விற்று இருக்கலாம் என்று ஊகிக்கப் படுகிறது .

 அணுகுண்டுப் போர் , பொருளாதார பயன்பாடுகள்

நியூட்ரான் என்ற அணுத்துகளை நமக்கு முதலில் காட்டிக்கொடுத்தது பெரில் லியம்தான் . 1932ல் ஜேம்ஸ் சாட் விக் என்பவர் பெரில் லியம் சாம்பிள் மீது ரேடியத்திருந்து ஆல்பா alpha rays கதிர்களை   பாய்சசினார். அதிலிருந்து வந்ததே நியூட்ரான்.  இதுவரை அறிந்திராத அந்த sub atomic particles சப் அட்டாமிக் பார்ட்டிக்கிளுக்கு  நியூட்ரான் neutron என்று பெயர் வைத்தனர்.

பெரில்லியத்துக்கு ஒரு அபூர்வ குணம் உண்டு நியூட்ரான்களை NEUTRON இது ஏற்காது . இதனால் இதை அணு ஆயுதங்களிலும் அணுசக்தித்  தொழில்களிலும் பயன்படுத்துகின்றனர் அணுகுண்டுகளில் யுரேனியத்திலிருந்து  நியூட்ரான் அலைகளை வீசி சக்தியை உண்டாக்குவர் அதைச் சுற்றி பெரில்லியம் கவசம் இருக்கும். அது அணு ஆயுதத்தின் சக்தியை ஓரிடத்தில் குவியச் செய்ய உதவும்.

பெரில்லியம் கிடைக்கும் இடங்கள்

பிரேசில், அமெரிக்கா , அர்ஜெண்டினா , மடகாஸ்கர், ரஷ்யா, இந்தியா

அமெரிக்காவில்  மைனே Maine என்னுமிடத்தில் ஐந்து மீட்டர் நீளம் – 20 டன் எடை கொண்ட பெரிலியம் படிகம் கிடைத்தது.

பெரில் , பெட்ராண்டைட் (BERTRANDITE )  என்ற இரண்டு தாதுக்களாக பெரில்லியம் கிடைக்கிறது

தாமிரத்தையும் நிக்கலையும் பெரிலியம் கலந்து உபயோகிக்கையில் மின் சாரம் கடத்தும் சக்தி அதிகரிக்கிறது. இதன் காரணமாக மின்சார கருவிகளில் இதன் உபயோகம் அதிகம்.

எக்ஸ் ரே கதிர்களை பெரில்லியம்  உறிஞ்ச்சுவதால் எக்ஸ்ரே குழாய்களைச் சுற்றி இதை வைக்கின்றனர்.

பெரில்லியத்தை விமானம் கட்டும் தொழிலில் பயன்படுத்தும் யோசனையும், ராக்கெட்டின் வெடி மருந்தாக  உபயோகிக்கும் திட்டமும் கைவிடப்பட்டன.

பெரில்  (BERYL)  , க்ரைஸோ பெரில் (CHRYSO BERYL)  ஆகிய இரண்டுமே அலுமினியம்  சிலிகேட் (ALUMINIUM SILICATE) என்னும் இரசாயன உப்பு ஆகும். இவை ரத்தினைக் கல்லின் தரம் உடைத்தாயின் மரகதம் EMERALD  என்றும் அலெக்ஸாண்ட்ராய்ட் ALEXANDRITE / CAT’S EYE என்றும் அழைக்கப்படும் . இதில் இரண்டு சதவிகித குரோமியம் இருந்தால் இப்படி பச்சை வண்ணம் கிடைக்கும். குறைவான குரோமியம் இருந்தால்  ஆக்வா மரின் (AQUA MARINE)  எனும் நீலக்  கல்லாகும் .

இரசாயன குணங்கள்

அடையாளக் குறியீடு SYMBOL  – Be  

அணு எண் ATOMIC NUMBER 4

உ ருகு நிலை MELTING POINT  1278  டிகிரி ஸி DEGREE C

கொதி நிலை BOILING OINT – 2970 டிகிரி ஸி

பெரில்லியம் ஒரு வெள்ளி போன்ற நிறம் உடைய உலோகம் SILVERY, LUSTROUS, SOFT METAL OF ALKALINE GROUP .  கார குணம் உடைய உலோகங்களின் அணியில் இது இடம்பெறும். நாம் தோண்டி எடுக்கும் பெரில்லியத்துக்கு ஒரு ஐசடோப் ISOTOPE உண்டு. ஆனால் கதிரியக்கம் இராது

பூமியின் காற்று மண்டலத்தின் மேல் அடுக்கில் பெரில்லியம் பெ – 10 என்ற ஐசடோப் காணப்படுகிறது. இதில் கதிரியக்கம் இருக்கிறது. அதன் அரை வாழ்வு (HALF LIFE)  15 லட்சம் ஆண்டுகள். இதை காஸ்மிக் கிரணங்கள்  (COSMIC RAYS)  உண்டாக்குகின்றன

நியூட்ரான் பற்றி நமக்குச் சொல்லிக் கொடுத்த பெரில்லியத்துக்கு ஒரு ஸலாம் ; மரகத்தைத்த நமக்களித்த பெரில்லியத்துக்கு ஒரு ஸல்யூட் .

tags – பெரில்லியம், மரகதம்,  பச்சைக் கல், பெரில், அணுகுண்டு, நியூட்ரான்

–SUBHAM–

ஹிந்தி படப் பாடல்கள் – 6 – உணவும் வீடும்! (Post no.7826)

Roti

WRITTEN BY R. NANJAPPA                        

Post No.7826

Date uploaded in London – – 14 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் – 6 – உணவும் வீடும்!

R.Nanjappa

உணவும் வீடும்!

ஒரு சராசரி மனிதனுக்கு என்ன தேவை? 

chapati

உணவு, உடை, இருப்பிடம். இவற்றை அத்தியாவசியத் தேவைகள் என்போம். Basic or essential needs. ஆனால் நம் பொருளாதார “அறிஞர்கள்இத்துடன் திருப்தி அடைவதில்லை. அவர்கள் தேவை–  Need பற்றிப் பேசுவதில்லை. “விருப்பம்”  Want பற்றியே பேசுகிறார்கள்விருப்பம் திருப்திப் படுத்த முடியாதது, அவை திரும்பத் திரும்ப வரும், அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்று பாடம் எடுப்பார்கள்ஒரு மனிதனோ, சமுதாயமோ எளிதில் திருப்தியடைந்தால் அதை Primitive என்பார்கள். பொருளாதார வளர்ச்சி என்பது இன்றைய நிலையில் விருப்பங்களின் கட்டற்ற தன்மையே!

மனிதனுக்கு எத்தனை நிலம் தேவை” (How Much Land Does a Man Need)  என்று லியோ டால்ஸ்டாய் 1886ல் ஒரு கதை எழுதினார். இதில் கடைசியில் ஒரு மனிதனுக்கு இறுதியில் தேவைப்படுவது 6 அடி மண் தான்அவன் சமாதிக்கு என்று காட்டினார். ஆனால் இதுகூட சிலருக்குக் கிடைப்பதில்லை!

பஹதூர் ஷா ஃஜஃபர் இந்திய முகலாயர்களின் கடைசி அரசர். 1857 முதல் இந்திய சுதந்திரப்போருக்கு ஆதரவாக இருந்தார் என்று சொல்லி இவரை நாடுகடத்தி பர்மாவில் ரங்கூனில் சிறைவைத்தனர்

ஆங்கிலேயர்.  இந்தியாவுடன் எந்தத் தொடர்பும் கொள்ள விடவில்லை. இந்த பஹதூர் ஷா “ஃஜஃபர்” ஒரு கவிஞர். சிறையின் சுவரில் கரித்துண்டு கொண்டு ஒரு கவிதை எழுதினார்.

Bahadur Shah

कितना है बदनसीबज़फ़रदफ़्न के लिए 
दो गज़ ज़मीन भी मिली कूयार [3] में   

கித்னாஹை பத்னஸீப்ஜஃபர்தஃப்ன் கே லியே

தோ கஜ் ஃஜமீன் பீ மிலீ குயேயார் மே

 இந்த ஃஜஃபர் தான் எவ்வளவு  துரதிருஷ்டம் பிடித்தவன்

அவனை அடக்கம் செய்ய அவனுக்கு இஷ்டமான நாட்டில்

இரண்டு கஜ இடம் கூடக் கிடைக்கவில்லையே! 

இவரை ரங்கூனிலேயே 1862ல் புதைத்துவிட்டனர். இவருடைய சமாதி இருந்த இடம் கூடத் தெரியாமலிருந்தது. 1891ல் தான் இது கண்டுபிடிக்கப்பட்டது. ஆக, அரசனாக இருந்தாலும் என்ன நடக்கும் எது கிடைக்கும் எனச் சொல்லமுடியாது!

அன்ன விசாரம்அதுவே விசாரம்!

ஓரு சாண் வயிறே இல்லாட்டா

உலகத்தில் ஏது கலாட்டா

என்று ஒரு பழைய தமிழ்படப் பாட்டு உண்டு.

வேண்டிய உணவு, உடை, இருப்பிடம் தேடுவதிலேயே சராசரி மனிதனின் காலத்தின் பெரும்பகுதி செலவாகிறதுஎன்ன உணவு வேண்டும்? இதுவே பலருக்கும் தெரிவதில்லை!

Under The Greenwood Tree

Who doth ambition shun

And loves to live i’ the sun,

Seeking the food he eats,

And pleased with what he gets,

Come hither, come hither, come hither:

            Here shall he see

            No enemy

But winter and rough weather.

[Shakespeare; As You Like It.]

இது ஷேக்ஸ்பியர்  கவிதை. 

William Shakespeare

பேராசையை விட்டு, இயற்கையோடியைந்த வாழ்வு வாழ்ந்து, தனக்கு இயல்பான உணவைத் தேடி, கிடைப்பதில் திருப்திப்பட்டு இருப்பவனுக்கு எங்கும் இயற்கை உத்பாதங்களைத் தவிற பிற எதிரிகளே இருக்கமாட்டார்கள்  (இன்னல்களே இருக்காது) என்கிறார். ஆனாலும் இது எல்லோருக்கும் சாத்தியமாக அமைவதில்லையே!

படியளக்கும் பரமன்

दाने दाने पे लिखा है खाने वाले का नाम
लेने वाले करोड़ देने वाला एक राम  

தானே தானே பே லிக்காஹை கானே வாலே கா நாம்

லேனே வாலே கரோட் தேனே வாலா ஏக் ராம்

தானியத்தின் ஒவ்வொரு மணியிலும் அதைச் சாப்பிடுபவனின் பெயர் எழுதப் பட்டிருக்கிறது.

சாப்பிடுபவர்கள் கோடிக்கணக்கில் என்றாலும் படி அளப்பவன் ஆண்டவன் ஒருவன் தானே!

कोई कितना अमीर हो या कितना गरीब
खाये उतना ही जीतना है उस का नसीब
आगे मालिक के चलता नहीं कोई दाम  

கோயீ கித்னா அமீர் ஹோ யா கித்னா கரீப்

காயே உத்னா ஹீ ஜித்னா ஹை உஸ் கா நஸீப்

ஆகே மாலிக் கே சல்தா நஹீ கோயீ தாம்

ஒருவன் எவ்வளவுதான் பணக்காரனாக இருக்கட்டுமே, ஏழையாகத்தான் இருக்கட்டுமே– 

அவன் தலையில் எந்த அளவு எழுதியிருக்கிறதோ அத்தனைதான் சாப்பிடமுடியம்!

அந்த ஆண்டவனை எந்த லஞ்சம் கொடுத்தும் வசப்படுத்த முடியாது!

तेरी किसमत की लिखी हुई है किताब
तेरे एक एक दिन का है उस में हिसाब  

तेरे बस में ना सुबह है ना तेरी शाम  

தேரீ கிஸ்மத் கீ லிக்கீ ஹுயீ ஹை கிதாப்

தேரே ஏக் ஏக் தின் கா ஹை ச் மே ஹிஸாப்

தேரே பஸ் மே நா சுபஹ் ஹை நா தேரீ ஷாம்

உன்னுடைய தலைவிதியானது எழுதப்பட்ட புத்தகம் இருக்கிறதே

அதிலே உன்னுடைய ஒவ்வொரு நாளின் கணக்கும் இருக்கிறது!

உன்னுடைய காலையோ மாலையோ உன் வசத்தில் இல்லை!

कभी गर्मी की मौज कभी बारिश का रंग
ऐसे चक्कर को देख सारी दुनिया है दांग
चाँद सूरज ज़मीन सब उसके गुलाम  

கபீ கர்மீ கீ மௌஜ் கபீ பாரிஷ்  கா ரங்க்

ஐஸே சக்கர் கோ தேக் சாரி துனியா ஹை தாங்க்

சாந்த் ஸூரஜ்  ஃஜமீன்  ஸப் உஸ்கே குலாம்

மகிழ்ச்சி  நிறைந்த வெப்பமான நாட்கள் , மழைக்காலத்தின் வண்ணங்கள்

இப்படி வரும் காலச் சக்கரத்தைக் கண்டு  பூரா உலகமும் கலங்கி இருக்கிறது!

சந்திரன், சூர்யன், இந்த பூமிஅனைத்தும் அந்த ஆண்டவனுக்கு அடிமைப் பட்டது தானே!

தானே தானே பே லிக்கா ஹை கானே வாலே கா நாம்

கானே வாலே கரோட் தேனே வாலா ஏக் ராம்

Song: Daane daane pe likha hai Film: Baarish 1957 Lyricist: Rajinder Krishan

Music: C. Ramchandra Singer: C.Ramchandra. 

எத்தனை சீரிய கருத்துக்கள்! உடனே நமக்கு ஒரு திருக்குறள் நினைவுக்கு வரும்:

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி

தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது!

உணவு கிடைப்பது, அதை புசித்து அனுபவிப்பதுஇது தெய்வ அருளால் நிகழ்வது. அதனால்தான் நமது வேதத்தில் ஸ்ரீ ருத்ரத்தில் பகவானை 300 நாமங்களால் துதித்தபின். “வாஜஸ்ச மேஎன்று உணவைப் பிரார்த்திக்கிறோம். ஏசு நாதர் சொல்லிக்கொடுத்த பிரார்த்தனையிலும்  “இன்று தேவையான உணவைத் தாரும்என்று பிரார்த்திக்கச் சொன்னார். [ Give us this day our daily bread” – The Lord’s Prayer.]

 உணவு அருந்தும் போதும் தெய்வ நினைவு வேண்டும்.

அருணகிரி நாதர் சொல்கிறார்:

பொரு பிடியும் களிறும் விளையாடும் புனச்சிறுமான்
 
தரு பிடி காவல் சண்முகவா எனச் சாற்றி நித்தம்
 
இருபிடி சோறு கொண்டு இட்டு உண்டு இருவினையோம் இறந்தால்
 
ஒருபிடி சாம்பரும் காணாது மாய உடம்பு இதுவே.  

ஒருபிடி வாயில் இடுவதற்கு முன்பும் அந்தப் படியளப்பவனை நினைக்கவேண்டும்.

வீட்டைக் கட்டித் / தேடிப் பார்

உணவின்  நிலை இவ்வாறாக , இருக்க இடம் பற்றி என்ன செய்வது?

இது இன்னும் பெரிய பாடாக இருக்கிறது. ஒவ்வொரு ஜீவராசிக்கும் ஆண்டவன் ஒரு வழி செய்திருக்கிறான். மனிதன் மட்டும் கெட்டுக் கிடக்கிறான்

காணி நிலம் வேண்டும் என்று பாரதியார் பராசக்தியை வேண்டினார்அது லட்சியக் கனவு. பாவம், பாரதியாருக்கே அது அமையவில்லை!

இங்கே வசதி படைத்தவர்கள் எல்லா இடங்களையும் வளைத்துப் போட்டு விட்டார்கள். நாம் எங்கிருந்தால் என்ன? வானமே கூரை, பூமியே பாய் என்றிருந்தால் நமக்கு யாதும் ஊர் தானே! உலகமே நமது தானே! பாடுகிறார் கவிஞர் ஸாஹிர் லுதியான்வி:

चीन अरब हमारा हिन्दोस्ताँ हमारा
रहने को घर नहीं है सारा जहाँ हमारा

சீன் அரப் ஹமாரா ஹிந்துஸ்தான் ஹமாரா

ரஹனே கோ கர் நஹீ ஹை  ஸாரா ஜஹா(ன்) ஹமாரா

சீனாவும் அரேபியாவும் நமதாக இருக்கலாம், ஹிந்துஸ்தானமும் நமதாக இருக்கலாம்

நமக்கோ இருக்க வீடில்லைஇந்த உலகம் முழுவதுமே நமதுதான்!

खोली भी छिन गयी है बैंचें भी छिन गयी हैं
सड़कों पे घूमता है  अब कारवां हमारा

கோலீ பி சின் கயீ ஹைபெஞ்சே பீ சின் கயீ ஹை

சட்கோ மே கூம்தா ஹை அப் கார்வா() ஹமாரா

எங்கள் சேரிப்பகுதியிலிருந்து தள்ளப்பட்டோம்இங்கிருந்த பெஞ்சைக்கூட எடுத்துக்கொண்டு விட்டார்கள்

இப்போது எங்கள் கூட்டம் வீதியில் திரிகிறது!


जेबें हैं अपनी खाली क्यों देता वर्ना गाली
वो संतरी हमारा वो पासबां हमारा 

ஜேபே ஹை அப்னீ காலி க்யோ தேதா வர்னா காலீ

வோ ஸந்தரீ ஹமாரா வோ பாஸ்பா ஹமாரா

எங்கள் பாக்கெட்டெல்லாம் காலிஇல்லையெனில் இங்கிருக்கும்  எங்கள் சொந்த காவல்காரன் எங்களை ஏன் வெளியே தள்ளூவான்?


जितनी भी बिल्डिंगें थीं सेठों ने बाँट ली हैं
फुटपाथ बम्बई के हैं आशियाँ हमारा

ஜித்னீ பீ பில்டிங்கே தீ ஸேட்டோனே பா(ன்)ட் லீ ஹை

ஃபுட்பாத் பம்பயீ கா  ஹை ஆஷியா(ன்) ஹமாரா
இங்கிருந்த பில்டிங்க் அனைத்தையும் வசதி உள்ளவர்கள்  வாங்கி வளைத்துப்

போட்டுக்கொண்டார்கள்.

இப்போது பம்பாயின் நடைபாதைகளே எங்களுக்கு இருப்பிடமாகிவிட்டது!


सोने को हम क़लन्दर आते हैं बोरी बन्दर
हर एक कुली यहाँ का है राज़दाँ हमारा

ஸோனே கோ ஹம் கலந்தர் ஆதே ஹை போரி பந்தர்

ஹர ஏக் குலீ யஹா(ன்) கா ஹை ராஃஜ்தா ஹமாரா

ஊர்சுற்றும் பரதேசிகள் போல் நாங்கள் தூங்குவதற்கு போரிபந்தர் (ஸ்டேஷனுக்கு) வருகிறோம்.

இங்கிருக்கும் ஒவ்வொரு கூலியும் எமக்கு அத்யந்தம்.

तालीम है अधूरी मिलती नहीं मजूरी
मालूम क्या किसी कोदर्दे निहाँ हमारा

தாலீம் ஹை அதூரி மில்தா நஹீ மஜூரி

மாலூம் க்யா கிஸீ கா தர்தே நிஹா(ன்) ஹமாரா

படிப்பு பாதியில் நின்றுவிட்டது; வேலை கிடைப்பதில்லை

எங்கள் மனதில் ஆழ்ந்து இருக்கும் துயரை யார் புரிந்துகொள்வார்கள்?

पतला है हाल अपना  लेकिन लहू है गाढ़ा
फौलाद से बना है हर नौजवां हमारा

பத்லா ஹை ஹால் அப்னா லேகின் லஹீ ஹை காடா

ஃபௌலாத் ஸே பனா ஹை ஹர் நௌஜவா(ன்) ஹமாரா

எங்கள் உடல் நலிந்துதான் இருக்கிறது; ஆனால் எங்கள்  ரத்தம்  கெட்டியானது!

இங்கிருக்கும் ஒவ்வொரு இளைஞன் உடலும் பட்டறையில்  உருவாக்கப்பட்டது!

मिल जुल के इस वतन को ऐसा सजायेंगे हम
हैरत से मुंह तकेगा सारा जहां हमारा

மில்ஜுல் கே ஹம் இஸ் வதன் கோ ஐஸா சஜாயேங்கே ஹம்

ஹைரத் ஸே முஹ் தகேகா ஸாரா ஜஹா() ஹமாரா

நாங்கள் அனைவரும் இணைந்து இந்த தேசத்தை உன்னதமாக்குவோம்

இதை இந்த உலகமே ஆச்சரியத்துடன் பார்க்கும்!

Song: Cheen O arab hamara Film: Phir Shubah  Hogi  1958 Lyricist: Sahir Ludhianvi

MUsic: Khayyam  Singer: Mukesh Stunning song. Induces reflection

இந்தப் படத்தை நேருவின் சோஷலிச அரசு தடை செய்ய நினைத்தது.]

இது 1958ல் எழுதப்பட்ட பாடல். இப்போது நிலை  நல்லவிதமாக மாறியிருக்கிறதா?

அப்போது பம்பாயில் மட்டும் இருந்த நிலை இன்று ஒவ்வொரு ஊரிலும்வீட்டு நிலங்கள் எல்லாம் பில்டர்கள் கைவசம் வந்துவிட்டது! அரசினரும் இதற்கு உடந்தை! விலை ஆகாயத்தைத் தொடுகிறது!

அன்று படிப்பைப் பாதியில் விட்டவர்களுக்கு வேலை கிடைகவில்லை; இன்று படித்து முடித்தவர்களூக்கும் வேலையில்லை. மேலும் பட்டதாரிகள் கூட எந்த வேலைக்கும் தகுதியானவர்களாக  இல்லை. படிப்பு வேலைக்கான தகுதியைத் தருவதில்லை

According to surveys, more than 50% of the graduates, including engineering graduates, are considered “unemployable”.

சுதந்திரம் வந்து 60 ஆண்டுகள் ஆகியும் அனைவருக்கும் வீட்டுவசதி கூட செய்துகொடுக்க இயலாத அரசுகள் அரசுகளா?

கீதையில் பகவான் சொல்கிறார்:

அநிகேத: ஸ்திரமதி: பக்திமான் மே ப்ரியோ நர:  12.19

வீடில்லாமல். ஸ்திர புத்தியுடன் உள்ள பக்தன் எனக்குப் பிரியமானவன்!

நம் அரசு நம்மையெல்லாம் வீடில்லாமல் செய்து பகவானுக்கு பிரியமானவர்களாக்குகிறது போலும்!

அல்லது யாதும் ஊரே என எண்ணவைக்கிறதோ!

மேற்கத்தியமுறை பொருளாதாரம் பரவிய இடங்களிலெல்லாம்அது முதலாளித்துவ மானாலும், கம்யூனிசசோஷலிச மானாலும்இப்படி மக்கள் அவதிக்குள்ளாயினர். நிலங்கள் எப்படி மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்டன் என்பதை கோல்ட்ஸ்மித் எழுதுகிறார்:

The man of wealth and pride

Takes up a space that many poor supplied;

Space for his lake, his park’s extended bounds,

Space for his horses, equipage, and hounds:

The robe that wraps his limbs in silken sloth,

Has robbed the neighbouring fields of half their growth;

His seat, where solitary sports are seen,

Indignant spurns the cottage from the green:

Around the world each needful product flies,

For all the luxuries the world supplies.

While thus the land adorned for pleasure, all

In barren splendour feebly waits the fall.

[Oliver Goldsmith: The Deserted Village, 1770]

 200 ஆண்டுகளுக்குமுன் இங்கிலாந்தில் நடந்த கோரம் இன்று சுதந்திர இந்தியாவில் நடக்கிறது! Those who fail to learn from history are condemned to repeat it என்றார்  George Santayana. இதுதான் நடக்கிறது!

 கற்பனையில் வீடு!

நிஜ உலகில் வீடு கிடைக்காதவர்கள் என்ன செய்யவேண்டும்? கல்கி எழுதிய மாதிரி கற்பனை ஓடத்தில் ஏற வேண்டியதுதான்! இதையும் செய்கிறார் கவிஞர் ஷைலேந்த்ரா!

छोटा सा घर होगा बादलों की छाँव में आशा दीवानी मन में बंसुरी बजाये हम ही हम चमकेंगे तारो के उस गाँव में आँखों की रोशनी हर दम ये समझाये

சோடா ஸா கர் ஹோகா பாதலோ(ன்) கீ சாவ்(ன்) மே

ஆஷா தீவானீ மன் மே பன்ஸுரீ பஜாய்

ஹம் ஹீ ஹம் சம்கேங்கே தாரோ கே உஸ் காவ்(ன்) மே

ஆங்கோ கீ ரோஷ்னீ ஹர்தம் யே ஸம் ஜாய்

மேகங்களின் நிழலிலே நமக்கென்று ஒரு சிறிய வீடு இருக்கும்!

நம்பிக்கை அப்படித்தான் இந்த பித்து மனதில் பன்ஸூரி வாசிக்கிறது!

அந்த நட்சத்திர கிராமத்தில் நாமும் மின்னுவோம்

கண்ணின் ஒளி இதை நமக்கு உணர்த்துகிறது!

[ அந்த வீட்டில் என்ன நடக்கிறது? இதைச் சொல்கிறார் கவிஞர்]

चाँदी की कुर्सी पे बैठे मेरी छोटी बहना सोने के सिंहासन पे बैठे मेरी प्यारी माँ मेरा क्या मैं पड़ा रहूँगा अम्मी जी के पाँव में मेरा क्या मैं पड़ा रहूँगा अम्मी जी के पाँव में

சாந்தீ கீ குர்ஸீ பே பைடே மேரீ சோடீ பஹனா

ஸோனே கே ஸிம் ஹாஸன் பே பைடேமேரீ ப்யாரீ மா

மேரா க்யா மை படா ரஹூங்கா அம்மீ ஜீ கே பாவ் மே

என் தங்கைஅவள் வெள்ளி நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறாள்

என் அருமை அம்மாவோ தங்கச் சிம்ஹாஸனத்தில் அமர்ந்திருக்கிறார்

எனக்கென்னநான் அம்மாவின் காலடியில் விழுந்து கிடப்பேன்!

मेरी छोटी बहना नाज़ों की पाली शहज़ादी जितनी भी जळी हो मैं कर दूँगा इसकी शादी अच्छा है ये बला हमारी जाये दूजे गाँव में अच्छा है ये बला हमारी जाये दूजे गाँव में

மேரீ சோடீ பஹனா நாஜோ கீ பாலீ ஷஹ்ஜாதீ

ஜித்னீ பீ ஜல்தீ ஹோ மை கர் தூங்கி உஸ்கீ ஷாதீ

அச்சா ஹை யே பலா ஹமாரீ ஜாயே தூஜே காவ்(ன்) மே

என் தங்கைஅவள் ராஜகுமாரிபோல் அருமையாக வ்ளர்ந்தாள்

எவ்வளவு விரைவில் முடியுமோ அவளுக்கு மணம் முடித்து வைப்பேன்

நம் வீட்டு செல்லப்பெண் வேறொரு கிராமத்திற்குப் போவது நல்லது (புண்ணியம்)தானே

[ தங்கை மணமாகிப் போனதும் வீடு வெறிச்சோடிப்போகிறது. பையனுக்கு மணமாகி வீட்டிற்கு மருமகள் வரவேண்டுமே? கவிஞர் அடுத்து இதைச் சொல்கிறார்]

(different tune -) कहेगी माँ दुल्हन ला बेटा घर सूना सूना है मन में झूम कहूँगा मैं माँ इतनी जळी क्या है? गली गली में तेरे राज्दुलारे की चर्चा है आखिर कोई तो आयेगा इन नैनों की गाँव में आखिर कोई तो आयेगा इन नैनों की गाँव में

கஹேகீ மா துல் ஹன்லா பேடா கர் ஸூனா ஸூனா ஹை

மன் மே ஜூம் கஹூங்கா மை மா இத்னீ ஜல்தீ க்யா ஹை?

ஆகிர் கோயீ தோ ஆயேகா இன் நைனோ(ன்) கீ காவ்(ன்) மே

அம்மா சொல்லுவாள்: என் செல்லமே, வீடு வெறிச்சென்று இருக்கிறதே!

( விரைவில் மணம் செய்துகொள்)

மனதில் மகிழ்ச்சி பொங்க நான் சொல்வேன்: அம்மா, ஏன் இவ்வளவு அவசரம்?

ஆனால் கடைசியில் கண்ணின் மணியாக யாரோ வந்துதானே ஆகவேண்டும்!

என்ன கற்பனை பாருங்கள்! வீடு என்பது இன்றைய பில்டர்கள் காட்டுவதுபோல் நான்கு சுவர்களும் , ஃபர்னிசரும் பள பளக்கும் பாத்ரூம் ஃபிட்டிங்குகளும் அல்ல! எவ்வளவு இயற்கையான ஒரு நடுத்தரக் குடும்பத்தையும் அதன் ஆசை-லட்சியங்களையும் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். எல்லாம் உணர்ச்சி பொங்கும் எளிய சொற்கள்,

Song: Chhota sa ghar hoga Film: Naukri 1954 Lyricist: Shailendra

Music : Salil Chaudhury Singer: Happy version: Kishore KUmar { Sad version: Hemant Kumar] Sensitive movie, nice music.

இதன் பின்னணியில் ஒரு வரலாறு. கிஷோர் குமார் முறைப்படி சங்கீதம் பயிlலவில்லை.. அதனால் அவருக்கு சான்ஸ் தர ஸலில் சவுத்ரிக்கும் டைரக்டர் பிமல் ராய்க்கும் விருப்பமில்லை. இந்தப் படத்தில் கிஷோர்குமாரே நடித்தார் .ஆனாலும் அவரைப் பாடவைக்க ஸலில் சவுத்ரி இசையவில்லை. கிஷோர் யார்யாரிடமோ கெஞ்சிக் கூத்தாடி, கடைசியில் டைரக்டர் பிமல் ராயும் சலில் சவுத்ரியும் கிஷோரைப் பாடவைக்க அரை மனதுடன் இசைந்தனர்.இந்தப் பாட்டு கிடைத்தது. பெரிய ஹிட் ஆயிற்று. இது கிஷோரின் Iconic பாடல்களில் ஒன்றாக ஆனது. இந்தப் படத்தில் வேறு ஹிட் பாடல்களும் கிஷோர் பாடியிருக்கிறார். இந்தப் பாடலின் சோக வடிவத்தை ஹேமன்த் குமார் பாடினார். இரண்டையும் யூட்யூபில் கேட்டு மகிழலாம்..

[ஆனால் கடைசிவரை பழம்பெரும் இசையமைப்பாளர் நௌஷத் கிஷோர்குமாரைப் பாடவைக்கவில்லை. ஒரே ஒரு பாட்டு ரிகார்ட் செய்து அதையும் பயன்படுத்தவில்லை. கிஷோர் குமார் பிரபலமான போது நௌஷதிற்கு மார்க்கெட்டே இல்லை!]

tags – ஹிந்தி  பாடல்கள் – 6 ,  உணவு, வீடு, R Nanjappa, Naukri, Baarish, பஹதூர்ஷாஃஜஃபர்

*********

சனத்குமாரர், சாக்ரடீஸ், பகவான் ரமணர்! (Post No.7825)

SOCRATES

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7825

Date uploaded in London – – 14 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

சனத்குமாரர், சாக்ரடீஸ், பகவான் ரமணர்!

ச.நாகராஜன்

ஒரு சமயம் நாரதர், மஹரிஷி சனத்குமாரரை தரிசித்து, தனக்கு உபதேசித்து அருளுமாறு வேண்டினார்.

சனத்குமாரர் நாரதரைப் பார்த்துக் கேட்டார் ; உனக்கு என்ன தெரியும். அதைச் சொல். உனக்குத் தெரியாததை நான் சொல்கிறேன்.

நாரதர் : “ஐயனே! எனக்கு ரிக் வேதம் தெரியும்.

யஜுர் வேதம் தெரியும்.

சாம வேதம் தெரியும்.

அதர்வண வேதம் தெரியும்.

ஐந்தாவது வேதமான இதிஹாஸ, புராணம் தெரியும்.

இலக்கணம், சடங்குகள், கணிதம், ஜோதிடம், புவியியல், தர்க்கம், பொருளாதாரம், இயற்பியல், அதீத உளவியல், விலங்கியல், அரசியல், வானியல், இயந்திரவியல், நுண்கலைகள் ஆகிய அனைத்தும் தெரியும்.

ஆனால் இவை எல்லாம் சாதாரண அறிவு தான். எனக்கு ஆத்மாவைப் பற்றித் தெரியாது. எவன் ஒருவன் தன்னை அறிகிறானோ அவனே துக்கத்தைக் கடந்து செல்கிறான் என மகான்கள் கூறியதை நான் கேட்டிருக்கிறேன். நான் துக்கத்தால் பீடிக்கப்பட்டிருக்கிறேன். தயவு செய்து அதையும் கடந்து செல்ல எனக்கு உதவுங்கள்.”

DAKSHINAMURTHY AND SANATKUMARAR

சனத்குமாரர் : நாரதா! நீ அறிந்ததெல்லாம் நாம மாத்திரமே. அதையும் தாண்டி இருப்பது வாக்கு. அதையும் தாண்டி இருப்பது மனம். அதையும் தாண்டி இருப்பது பிரக்ஞை. அதையும் தாண்டி இருப்பது தியானம். அதையும் தாண்டி இருப்பது சக்தி. அதையும் தாண்டி இருப்பது புரிந்து கொள்ளல். அதையும் தாண்டி இருப்பது அன்னம். அதையும் தாண்டி இருப்பது நீர். அதையும் தாண்டி இருப்பது ஆகாசம். அதையும் தாண்டி இருப்பது ஒளி. அதையும் தாண்டி இருப்பது ஆத்மா. அதையும் தாண்டி இருப்பது எல்லையற்ற தன்மை. அதைத் தான் நீ அறிய வேண்டும் என்றார்.

பின் எல்லையற்ற ஒன்றை, பிரம்மத்தைப் பற்றி அவர் விளக்கலானார்.

மீக நீண்ட ஒரு சம்வாதம் – அர்த்தமுள்ள உரையாடல் இதையெல்லாம் விளக்கியது.

சாந்தோக்ய உபநிடதம் ஏழாம் பாகத்தில் இதைக் காணலாம்.

உன்னை நீ அறிந்து கொள் என்பது தான் உபதேச சாரம்!

*

யூதிடெமஸ் (Euthydemus) சாக்ரடீஸை (Socrates) சந்தித்தார்.

சாக்ரடீஸ் : சொல், டெல்பிக்கு என்றாவது நீ சென்றிருக்கிறாயா?

யூதிடெமஸ் : நிச்சயமாக! இரண்டு முறை சென்றிருக்கிறேன்.

சாக்ரடீஸ் : அங்கு ஆலயத்தின் ஏதோ ஒரு இடத்தில், “உன்னை நீ அறிவாய் என்று எழுதி இருப்பதைப் பார்த்திருக்கிறாயா?

யூதிடெமஸ் : “ ஆம், பார்த்திருக்கிறேன்.

சாக்ரடீஸ் : அதற்கு ஒரு மதிப்பையும் நீ கொடுக்கவில்லையா அல்லது அதற்கு ஒரு மதிப்பைக் கொடுத்து நீ யார், எங்கு இருக்கிறாய் என்று அறிந்து கொண்டாயா?

யூதிடெமஸ் : உண்மையைச் சொல்வது என்றால் நான் முயற்சியே எடுக்கவில்லை. அது மட்டும் எனக்கு நிச்சயமாகத் தெரியும். எனக்கு நான் யார் என்பது தெரியவில்லை என்றால் உலகில் எதைத் தான் நான் அறிந்திருக்கப் போகிறேன்.

உன்னை நீ அறிவாய் என்பது தான் சாக்ரடீஸின் முதல் கட்டளை!

*

ரமண மஹரிஷி தன்னை நாடி வந்த அனைவருக்கும் உபதேசித்த அரும் மந்திரம் நான் யார் என்பதை உணர் என்பதே.

‘நானார்? என்ற ஞான விசாரத்தைச் சொல்லும் நூலை அவர் தனது 21ஆம் வயதிலேயே எழுதி அருளினார்.

அதன் ஆரம்பம் இது தான்:

சகல ஜீவர்களும் துக்கம் என்பது இன்றி எப்போதும் சுகமாய் இருக்க விரும்புவதாலும், யாவருக்கும் தன்னிடத்திலேயே பரம பிரியம் இருப்பதாலும், பிரியத்திற்கு சுகமே காரணமானதாலும், மனமற்ற நித்திரையில் தினம் அனுபவிக்கும் தன் சுபாவமான அச் சுகத்தை அடையத் தன்னைத் தான் அறிதல் வேண்டும். அதற்கு நானார்? என்னும் ஞான விசாரமே முக்கிய சாதனம்.

இப்படி ஆரம்பிக்கும் சிறு நூல் அழகுற பல விளக்கங்களையும் அளிக்கிறது.

ஒரு உதாரணம் :-

“குப்பையைக் கூட்டித் தள்ள வேண்டிய ஒருவன் அதை ஆராய்வதால் எப்படிப் பயன் இல்லையோ அப்படியே தன்னை அறிய வேண்டிய ஒருவன் தன்னை மறைத்துக் கொண்டிருக்கும் தத்துவங்கள் அனைத்தையும் சேர்த்துத் தள்ளி விடாமல் அவை இத்தனை என்று கணக்கிடுவதாலும், அவற்றின் குணங்களை ஆராய்வதாலும் பயனில்லை. பிரபஞ்சத்தை ஒரு சொப்பனத்தைப் போல எண்ணிக் கொள்ள வேண்டும்.

நூலின் இறுதியில் பகவான் அருள்கிறார்:

“ தானெழுந்தால் சகலமும் எழும்; தானடங்கினால் சகலமும் அடங்கும். எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்து நடக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நன்மையுண்டு. மனத்தை அடக்கிக் கொண்டிருந்தால் எங்கேயிருந்தாலும் இருக்கலாம்.

*

மஹரிஷி சனத்குமாரரிரிலிருந்து சாக்ரடீஸ் வரை, பகவான் ரமண மஹரிஷி ஈறாக அனைவரும் சொல்லும் ஒரே வழி நான் யார் என்பதை அறி என்பதே!

***

tags – சனத்குமாரர், சாக்ரடீஸ், ரமணர், 

SWAMI CROSSWORD 1342020 (Post No.7824)

SWAMI CROSSWORD 1342020 (Post No.7824)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7824

Date uploaded in London – 13 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ACROSS

1.  –(9) – Divine cow in Hindu scriptures

6. — (4) – Hindu  Colour  Festival

7. – (4) Banyan tree

8. – -(5) Visvamitra taught Rama and  Lakshmana two Mantras and one of them begins with letter ‘A’

11. — (4) means cultured in Sanskrit. Max muller wrongly used this word for a race

13.– (5) – Controlling others with Mantras, Talismans,Hypnotism, Mesmerism etc

14. –  (7) name of fifth month in Hindu calendar; also the name of a star in 27 stars

15. – (8) – means sun ; Vaivasvata Manu received his wisdom / teaching from Sun

XXXX

DOWN

1. – (5) classical, ornate, court poetry; also Gotra name, son of Kavi

2.– (6)- fish, one of the ten incarnations of Lord Vishnu

3.– (7) – courageous, bold in Sanskrit

4– (6) – author of the most famous Tamil epic Silappaadikaram

5. (7) – going upward

9. – (5) – food, meals; also famous king who has written more than Leonardo da Vinci on all subjects

10.– (7)- look, eye in Sanskrit

12.– (4)- horse in Sanskrit

–subham–

Real Estate and Fire insurance Anecdotes (Post No.7823)

Compiled BY LONDON SWAMINATHAN

Post No.7823

Date uploaded in London – 13 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

When an insurance adjuster returned from investigating a blaze his boss asked what had caused the fire,

Friction, the investigator replied tersely.

Something rubbing together, eh?

Yeah, the adjuster added, the fire was caused by rubbing a $ 3000 insurance policy against a $ 2000 house.

Xxx

A hearing was being held to determine whether or not it was, as some seemed to think, an incendiary fire . The adjuster was questioning some of the villagers attempting to find out if the fire had been started for the purpose of collecting insurance.

One of those under questioning was an old man, deaf as a post. Unable to hear the questions being fired at him, he turned to his wife, a puzzled look on his face.

At the top of her voice she shouted,

What the man wants to know is was the Jobson’s fire kotched er was it sot?

X

Pacific Ocean

Real Estate Anecdotes

Groucho Marx, after much evasion, finally succumbed to the blandishments of a realtor who wanted to show him a palatial ocean front estate which was for sale. The salesman drove the comedian up the mile long beautifully landscaped approach escorted him through the house, stables, the gardens, the kennels, babbling of the wonders of the dream palace by the sea. Groucho patiently plodded after him, nodding gravely, apparently much impressed. Finally, he was ushered out on the flagged terrace and the salesman waved proudly toward the broad expanse of the Pacific.

Now, what do you think?, he challenged.

I don’t care for it, replied Groucho thoughtfully and he waved in turn at the view.

Take away the ocean and what have you got?

Xxx

An artist who wanted a home among the Taconic Hills of Vermont was talking the matter over with a farmer who allowed that he had a house for sale.

I must have a good view, insisted the artist.

Is there a good view?

Well, drawled the farmer,

From the front porch, yuh kin see Ed Snow’s barn, but beyond that there ain’t nuthin’ but a bunch of mountains.

tags – real estate, fire insurance, anecdotes

Xxxx subham xxx

பிராணிகளும் தவம் செய்து சொர்க்கத்துக்குப் போகின்றன-மனு (Post No.7822)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7822

Date uploaded in London – 13 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

மநு நீதி நூல் – பகுதி 50

பிராணிகளும் தவம் செய்து சொர்க்கத்துக்குப் போகின்றன-மனு (Post No.7822)

மநு நீதி நூலின் 11ஆவது அத்தியாயத்தின் கடைசி பகுதியைக் காண்போம். இது போக, இன்னும் ஒரே ஒரு அத்தியாயம் பாக்கி இருக்கிறது. அந்த 12 ஆவது அத்தியாயத்தைப் பின்னர் காண்போம். இதோ 11 ஆவது அத்தியாயத்தின் முக்கிய விஷயங்கள் – in bullet points –புல்லட் பாயிண்டுகளில் —

  1. பிராணிகளும் தவம் செய்து (11-241) அல்லது நியம நிஷ்டைகளைக் கடைபிடித்து சொர்க்கத்துக்குப் போகின்றன என்ற செய்தியை மநு இங்கே தெரிவிக்கிறார். இந்தியாவில், அதிலும் குறிப்பாகத் தமிழ் நாட்டில், பல கோவில்கள் பறவைகள், மிருகங்களுடன் தொடர்புடையவை. அங்கே அவற்றுக்கான சிலைகளும் வாகனங்களும் உள்ளன.
  2. 2.பிராமணர்களும் மற்றவர்களும் பாவங்களைக் கழுவ, ஐந்து வழிகள் உள ; அவையாவன
  3. 1.முதல் வழி / பிரயச்சித்தம்— பகிரங்கமாக அவற்றைச் சபையில் ஒப்புக்கொள்ள வேண்டும். மீண்டும் அவற்றைச் செய்யக்கூடாது ; கிறிஸ்தவர்களும் பாவ மன்னிப்பு விஷயத்தை நம்மிடம் கற்றுக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் ஒரு மறைவான கூண்டுக்குள் ஒளிந்து (Confession Box) கொண்டு பாதிரியார் காதில் மட்டும் கிசுகிசுப்பர். அவர் பணத்தை வாங்கிக் கொண்டு  போய்விட்டு வா என்பார் . ஆனால் இந்துக்கள் அதை ஓபன் (open) ஆக ஒப்புக்கொண்டு வாழ்நாள் முழுதும் அவமானத்தில் ஒதுங்கி வாழ்வர்
  4. 2.காயத்ரி மூலமும் (11-195, 11-226) , ரிக்வேத மந்திரங்கள் மூலமும் (11-250 to 11-260) பிராயச்சித்தம் செய்வது. இதற்கான  நீண்ட மந்திர பட்டியல் உள்ளது. கீழே ஆங்கிலத்தில் கொடுத்துள்ளேன் . பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) , ஓம் உச்சரித்தல், ஹோமங்கள் ஆகியனவும் சடங்குகளில் அடக்கம் — இது தவிர வேறு சில சடங்குகளையும் கொடுத்துள்ளார். அவை இப்போது பின்பற்றப்படுவதில்லை . பல பிராமணர்களுக்கு உரைகாரர்கள் எழுதியதை படித்தல்தான் அவை என்ன என்பதே தெரியும்; புரியும்
  5. 3. உண்ணாவிரதம் — இதுதான் எல்லோரும் எளிதில் பின்பற்றக்கூடியது. இதிலும் கூட எத்தனை நாள் எத்தனை கவளம் உண்ணலாம் என்றெல்லாம் மநு  பகிர்கிறார். ஒரே நாளில் ஆறுமுறை குளிக்க வேண்டும் என்று கூட சொல்கிறார் .
  • 4.தக்ஷிணை – வேறு வழியே தெரியாதவர்கள் தான தருமங்கள், தக்ஷிணை  கொடுத்து பாவங்களில் இருந்து தப்பிக்கலாம். பணக்காரர்கள் இதை எளிதில் செய்ய முடியும். ஆகையால் இதை கடைசியில் வைக்கிறார் மநு.
  • 5.செய்த பாவச் செயலுக்காக வருந்துதல்; இப்படி வருந்துவோர், கட்டாயம் இரண்டாவது முறை பாவம் செய்ய மாட்டார்கள் என்பது கருத்து
  • பசுவின் மூத்திரம், சாணம், பால் , நெய் ,தயிர் ஆகிய  ஐந்தும் அடங்கிய பஞ்ச கவ்யத்தை இந்துக்கள் மிகச் சிறிய அளவில்  புனித சடங்குகளுக்கு முன்னர் சாப்பிட்டு சுத்தம் அடைவர். இதையும் மநு குறிப்பிடுகிறார்.
  • 11-266 ஸ்லோகத்துடன் பதினோராவது அத்யாயம் நிறைவடைகிறது .

ரிக் வேத மந்திர பட்டியல்:–

RV.1-97, 7-80, 10-85, 8-95-7, 10-88, 10-126, 10-119, 10-90, 1-24-14, 7-89-5, 9-58, 6-74-1, 4-2-4, 1-106-7, 6-51-8, 10-190. Sloka 11-263 refers to Upansihads.

Tags — மநு நீதி நூல் – பகுதி 50, பிராணிகள், பிராயச்சித்தம் , ஐந்து வழிகள் , பாவ மன்னிப்பு ,

SUBHAM

ஹிந்தி படப் பாடல்கள் – 5 – காலம் என்னும் புதிர்! -2 (Post No.7821)

WRITTEN BY R.NANJAPPA                         

Post No.7821

Date uploaded in London – – 13 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

சென்ற கட்டுரையின் தொடர்ச்சி..

ஹிந்தி படப் பாடல்கள் – 5 – காலம் என்னும் புதிர்! -2

R.Nanjappa

காலம் என்னும் புதிர்!

ஆங்கிலத்தில்  Arrow of Time  என்று சொல்வார்கள். வில்லிலிருந்து ஒருமுறை தொடுக்கப்பட்ட அம்பு திரும்பி வராது. அது போல் தான் காலமும். சென்றது திரும்பாது! இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என காலம் அம்புபோல் பாய்ந்து ஒரே திசையில் போகிறது!

 தத்துவ அளவில் இதை ஹிந்து மதம் ஏற்றுக்கொள்வதில்லை. ஏனெனில் உலகப் படைப்பும் யுகங்களும் திரும்பத் திரும்ப வருகின்றன. நம் கொள்கை காலச் சுழற்சிக் கொள்கைCyclical Time.

கிறிஸ்துவ மதம் தோன்றிப் பரவுவதற்குமுன்  உலகில் இருந்த எல்லா  பண்டைய நாகரிகங்களும் இந்த காலச்சுழற்சிக் கொள்கையையே பின்பற்றின.இதையே இன்று விஞ்ஞான உலகமும் ஒப்புக்கொண்டு விட்டது. நம் யுகக் காலக்கணக்கை  CARL SAGAN போன்ற Astro physicists வியந்து போற்றுகிறார்கள். இது Big Bang கருத்துடன் மிகவும் ஒத்துப்போகிறது என்கிறார்கள்.

ஆனாலும் தனி மனித வாழ்வில் எந்தக் காலச் சுழற்சியுமில்லை! போனது போனதுதான்மீண்டும் பிறவிதான். அதனால் தான்  நம் பெரியவர்கள் காலத்தைப் பொன்னைவிடப் பெரிதாகப் போற்றினார்கள்.

இதில் முக்கிய அம்சம் இந்த க்ஷணம் தான்! க்ஷணத்தைச் சரியாகச் செலவிடுவதுதான் நாம் காலத்தை வெல்லும் உபாயம். அதாவது நிகழ்காலத்திற்கு முக்கியத்துவம் தரவேண்டும்!  கடந்ததை நினைத்து விசனப்படாதே, எதிர்காலத்தையே பார்த்திருக்காதே, இப்போது காலத்தில் கவனம் வை என்றார் புத்தர். பகவான் ரமணரும் இதையே சொன்னார். கடந்த காலம் என்பது நினைவுப் பின்னல்தான், எதிர்காலம் என்பது  இன்னும் வரவில்லை- அது ஒரு எதிர்பார்ப்புத்தான். அது வரும்போது அது நமக்கு நிகழ்காலமாகத்தான் இருக்கும். நாம் எதிர்காலத்தில் வாழ்வதில்லை- அதை நினைத்து  நிகழ்காலத்தில்தான்  வாழ்கிறோம்!அதனால் நிகழ்காலம்தான் நமக்கிருப்பது என்பார். 

We would experience the future only as the present when it comes, so the present is the only reality!

இந்தக் கருத்தையும் கவி ஸாஹிர் லுதியான்வி ஒரு பாடலில் அழகாகச் சொல்லிவிட்டார்.

आगे भी जाने ना तू, पीछे भी जाने ना तू
जो भी है बस यही एक पल है 

ஆகே பீ ஜானே தூ, பீசே பீ ஜானே தூ

ஜோ பீ ஹை பஸ் வஹி ஏக் பல் ஹை

இனி என்ன  நடக்கும் என்பது உனக்குத் தெரியாது

கடந்துபோனதைப் பற்றியும் உனக்குத் தெரியாது!

இந்த க்ஷணம்இது மட்டும்தான் உனக்கிருப்பது!

अनजाने सायों का राहों में डेरा है
अनदेखी बाहों ने हम सब को घेरा है
ये पल उजाला है, बाकी अंधेरा है
ये पल गवाँना ना, ये पल ही तेरा है

जीने वाले सोच ले, यही वक्त है कर ले पूरी आरजू

அஞ்சானே ஸாயோ(ன்) கா  ராஹோ(ன்) மே டேராஹை

அன்தேகீ பாஹோ(ன்நே ஹம் ஸப் கோ கேராஹை

பல் உஜாலா ஹை, பாகீ அந்தேரா ஹை

பல் கவானா நா, பல் ஹீ தேராஹை

ஜீனே வாலே ஸோச் லோ, யஹீ வக்த் ஹை கர்லோ பூரி ஆர்ஜூ

நமது பாதையில் நமக்குத் தெரியாத நிழல்கள் டேரா போட்டிருக்கின்றன

நாம் காணாத கரங்கள்  நம்மைச் சுற்றி வளைத்துக்கொண்டிருக்கின்றன

இந்த க்ஷணம் மட்டும்தான் வெளிச்சமாக இருக்கிறது, மற்றதெல்லாம் ஒரே இருள் மயம்

இந்த க்ஷணத்தைக் கோட்டைவிடாதே, உனக்கிருப்பதெல்லாம் இது ஒன்றுதான்!

உலக வாசிகளே! நன்கு சிந்தியுங்கள்

இதுதான் தகுந்த சமயம்உங்கள் ஆசைகளைப் பூர்த்திசெய்துகொள்ளுங்கள்!

इस पल के जलवों ने, महफ़िल सवारी है
इस पल की गर्मी ने धड़कन उभारी है
इस पल से होने से, दुनियाँ हमारी है
ये पल जो देखो तो, सदियों पे भारी है

जीने वाले सोच ले, यही वक्त है कर ले पूरी आरजू

இஸ் பல் கீ ஜல்வோ நே, மஹஃபில் ஸவாரீஹை

இஸ் பல் கீ கர்மீ நே தட்கன் உபாரீஹை

இஸ் பல் கே ஹோனே ஸே, துனியா ஹமாரீ ஹை

யே பல் ஜோ தேகோ தோ ஸதியோ(ன்) பே பாரீ ஹை

ஜீனே வாலே ஸோச் லோ……….

இந்த க்ஷணத்தின் பெருமையினால் இந்த சபை களைகட்டியிருக்கிறது

இந்த க்ஷணம் தரும் சூட்டினால்  மனது  உற்சாகமாக இருக்கிறது!

இந்த க்ஷணம் இருப்பதால் தானே இந்த உலகம் நமதாகிறது!

இந்த க்ஷணத்தை நன்கு கவனித்துப்பார்

இதுவே யுகங்களைக் காட்டிலும்  கனமானது!

உலக மக்களேசிந்தியுங்கள்!

इस पल के साए मे अपना ठिकाना है
इस पल के आगे ही हर शे फ़साना है
कल किसने देखा है कल किसने जाना है
इस पल से पायेगा जो तुझको पाना है
जीने वाले सोच ले यही वक़्त है कर ले पूरी आरज़ू
आगे भी  

இஸ் பல் கே ஸாயே மே அப்னா டிகானா ஹை

இஸ் பல் கே ஆகே ஹீ ஹர் ஸோ ஃபஸானா ஹை

கல் கிஸ்னே தேகா ஹை, கல் கிஸ்னே ஜானா ஹை

இஸ் பல் ஸே பாயேகா ஜோ துஜ்கோ பானா ஹை

ஜீனே வாலே ஸோச் லோ, யஹீ வக்த் ஹை கர்லோ பூரி ஆர்ஜூ

ஆகே பீ…..

இந்த க்ஷணத்தின் நிழலில்தான் நமது இருப்பிடம் இருக்கிறது!

இந்த க்ஷணத்திற்கு அப்பாற்பட்டது எதுவும் ஒரு கற்பனைதான்!

நாளை யார் கண்டார்கள், நாளை யாருக்குத் தெரியும்?

உலகில் நீ எதை அடைய வேண்டுமோ– 

அதை இந்த க்ஷணத்தில் தான்  அடையவேண்டும்!

உலக மக்களேசிந்தியுங்கள்உங்கள் ஆசைகளைப் பூர்த்திசெய்துகொள்ள

இதுவே தருணம்.

இனி என்ன வரும் என்பது உனக்குத் தெரியாது….

மேம்போக்காகப் பார்த்தால்  இது ஏதோ சாருவாகர்களின் கொள்கை போலத்தோன்றும் கிரேக்க தத்துவத்தில் இதை Epicureanism என்பார்கள்உலகம் நமது இன்ப அனுபவத்திற்காகவே இருக்கிறது, இருப்பதை அனுபவி; எதிர்காலம் , மேலுலகம். என்றெல்லாம் அலட்டிக்கொள்ளாதே என்பது இதன் அடிப்படை. ஆனால் இந்தப் பாடல் அந்தக் கருத்தைச் சொல்லவில்லை. காலம் என்றால் நிகழ் காலம்அதிலும் இந்த க்ஷணம் முக்கியமானது. இதைப் புரிந்த்கொண்டால்தான் நல்லபடியாக வாழ முடியும். சமய ஆன்மீக சாதனையானாலும் உலகியல் தொடர்பான முயற்சியானாலும் ஒவ்வொரு க்ஷணமும் மதிப்புமிக்கது, அதை வீணே கழித்தலாகாது என்பதுவே இப்பாடலின் ஆழ்ந்த பொருள்.

Time is the essence of life. This moment is the essence of time. Once gone, it is gone for ever, goes beyond our control!

Song: Aage bhi Jaanena tu. Film: Waqt 1966 Lyricist: Sahir Ludhianvi

Music: Ravi. singer: Asha Bhonsle

This song is in the Raga Pahadi. Sublime  fusion of melody, meaning and voice.

காலத்தைப் பற்றி எல்லா மொழி இலக்கியங்களிலும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அறிஞர்கள் என்றுமே அதைக் கருத்தில் கொண்டனர். பல மொழிப் புலவர்களும் பாடியிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் நம் ஷேக்ஸ்பியர் சொன்னதை விடலாமா?

Tomorrow and Tomorrow and Tomorrow

Tomorrow, and tomorrow, and tomorrow,

Creeps in this petty pace from day to day

To the last syllable of recorded time,

And all our yesterdays have lighted fools

The way to dusty death. Out, out, brief candle!

Life’s but a walking shadow, a poor player

That struts and frets his hour upon the stage

And then is heard no more. It is a tale

Told by an idiot, full of sound and fury,

Signifying nothing.  [ Macbeth]

 நாளை, நாளை நாளை- —

சிறுகச் சிறுக ஒவ்வொரு  நாளாக இப்படி மெல்ல ஊர்ந்துபோய்

ஊழிக்காலத்தின்  முடிவையே எட்டிவிடுகிறது!

சென்ற நம் எல்லா ‘நேற்றைய தினங்களும்’  முட்டாள்களை மரணத்திற்கு அருகில் இட்டுச் சென்றிருக்கின்றன.

வாழ்க்கை-அது என்ன?

சிறிது காலமே எரியும் விளக்குப் போன்றது!

ஊர்ந்து போகும் ஒரு நிழல்!

திறமையில்லாத நடிகன் சிறிது நேரம் மேடையில் தடுமாறுகிறான்-பின்  போய்விடுகிறான். அவனைப்பற்றி பின் யார் கேட்கிறார்கள்? அது போன்றது!

அது ஒரு மடையன் சொன்ன கதை போன்றது- 

அர்த்தமில்லாத  வெறும் சப்த வேகம் மட்டுமே!

[ காலம் எல்லோரையும் மரணத்தை நோக்கித்தானே இட்டுச் செல்கிறது? ஆனால் அதன் இயல்பை அறிந்து, அதற்கேற்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்ளாதவன் முட்டாள்.]

காலம் நமக்கு வேண்டியவர்களை என்ன பாடு படுத்துகிறது! குழந்தைகளாக நமக்குமுன் துள்ளித் திரிந்து விளையாடியவர்கள்- வயதாக ஆக. களை இழந்து, வலுவிழந்து. முகத்தில் சுருக்கம் விழ- அட ராமா, எத்தனை விதமாற்றங்கள்! இதை எப்படி எதிர்கொள்வது? இதையும் ஷேக்ஸ்பியர் சொல்கிறார்!

SONNET 19

Devouring Time, blunt thou the lion’s paws,

And make the earth devour her own sweet brood;

Pluck the keen teeth from the fierce tiger’s jaws,

And burn the long-lived phoenix in her blood;

Make glad and sorry seasons as thou fleet’st,

And do whate’er thou wilt, swift-footed time,

To the wide world and all her fading sweets;

But I forbid thee one most heinous crime:

O carve not with thy hours my love’s fair brow,

Nor draw no lines there with thine ántique pen.

Him in thy course untainted do allow

For beauty’s pattern to succeeding men.

Yet do thy worst, old Time; despite thy wrong,

My love shall in my verse ever live young.

எல்லாவற்றையும் விழுங்கும் காலமே!

நீ சிங்கத்தையும் வலுவிழக்கச் செய்கிறாய்!

உலகம் தன் குழந்தைகளையே கபளீகரம் செய்யச் செய்கிறாய்!

புலியின் வாயிலிருந்து அதன் கூரிய பற்களைப் பிடுங்குகிறாய்

நீண்ட ஆயுள் படைத்த ஃபினிக்ஸ் பறவையையும் அதன் ரத்தத்தை வைத்தே எரித்து விடுகிறாய்!

உன் போக்கில்  சுகத்தையும் துக்கத்தையும்  விளைத்துப் போகிறாய்!

விரைந்து செல்லும் காலமே! இந்தப் பரந்த உலகிற்கும் அதிலிருக்கும்

மறைந்து போகும் இயல்புடைய களியாட்டங்களுக்கும் 

நீ எதுவேண்டுமானாலும் செய்துகொள்

ஆனால் ஒரு குரூரச் செயலை மட்டும் செய்யாதே!

எனக்கு வேண்டியவரின் வயதைக் கூட்டி, அவர் நெற்றியில் சுருக்கம் விழச்செய்து

அதில் உன் புராதன எழுதுகோலால் எதையும் எழுதி விடாதே!

உன்னால் பாதிக்கப்படாமல் காலத்தைக் கடந்து  வருங்கால மக்களுக்கு அழகின் மாடலாக அவன் திகழட்டும்!  

காலம் காலமாக வரும் காலமே–  நீ உன்னால் முடிந்ததைச் செய்துகொள்!

நீ செய்வதெல்லாவற்றையும் தாண்டி என் அன்பன் அமரத்துவம் பெற்றுவிடுவான்

ஆம், என் கவிதையில் அவன் என்றும் இளைஞனாகவே இருப்பான்!

எத்தகைய சிந்தனை பாருங்கள்! காலம் எல்லாவற்றையும் சுருட்டிவிடுகிறது. ஆனால் காலத்தையும் மீறி நிற்பது கவிதைஉயர்ந்த இலக்கியம் என்றும் அழிவதில்லை! அத்தகைய இலக்கியம்போற்றும் பெரியோர்களும் அமரத்துவம் பெற்றுவிடுகிறார்கள்

காலத்தின் புதிரை எப்படியெல்லாம் அவிழ்க்கிறார்கள் நம் கவிஞர்கள்!

காலத்தைப் பற்றிய சினிமா பாடல்கள் எங்கெல்லாம் நம்மை இட்டுச் செல்கின்றன!

tags – ஹிந்தி படப் பாடல்கள் – 5 , ஸாஹிர்லுதியான்வி , R Nanjappa, , ஷேக்ஸ்பியர் , காலம் ,  புதிர், 

****