
Post No.7783
Date uploaded in London – 4 April 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஒரு ஊரில் பணக்கார வணிகர் ஒருவர் இருந்தார். அவருக்கு ஒரு மகள் . அவளை அந்த ஊர் ஆசிரியர் ஒருவரிடம் அனுப்பி கல்வி கற்க வைத்தார்.வருடங்கள் உருண்டோடின. ஒரு நாள் அந்தப் பெண் பருவம் எய்திய செய்தி வந்தது. உடனே அந்த வணிகர் மகளை அழைத்து, “பெண்ணே நீ இனி தினமும் அவர் வீட்டுக்குச் சென்று கல்வி கற்க இயலாது . ஆகையால் ஒரு நல்ல நாளில் அவருக்கு குருதட்சிணை , வெற்றிலை, பாக்கு, பழங்கள் கொடுத்து நமஸ்காரம் செய்து விட்டு வா” என்றார் .
அந்தப் பெண்ணும் ஸ்நானம் முதலியவற்றை முடித்துக் கொண்டு , ஆசிரியர் வீட்டுக்குச் சென்று நமஸ்காரம் செய்துவிட்டு ஆசிர் வதிக்கும்படி கேட்டாள் . tamilandvedas.com, swamiindology.blogspot.com
காமப்பசியில் தகித்த அந்த ஆசிரியர் சொன்னார் — பெண்ணே, உன் அப்பன் எனக்கு நிறைய பணம் கொடுத்துவிட்டார். எனக்கு பணம் ,காசு வேண்டாம். நான் ஆவலுடன் காத்திருந்த நாள் வந்து விட்டது. இத்தனை நாளாக உன்னைக் கட்டித் தழுவக் காத்திருந்தேன் என்று சொல்லி அவள் மீது படு வேகத்தில் பாய்ந்தார்.
அவளோ உயர் குலத்தில் உதித்த நங்கை. கடுமையான கோபம் கொந்தளிக்க அவரை ஒரே தள்ளாகத் தள்ளி உதறிவிட்டு , “அட கிராதகா! நீ படித்த படிப்புக்கும் நினைத்த நினைப்புக்கும் கொஞ்சமும் சம்பந்தமே இல்லையே ; நீ நாசமாய்ப் போ” என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு விரைநதாள் . tamilandvedas.com, swamiindology.blogspot.com
அவருடைய அப்பா அப்போது பிஸினஸ் விஷயத்தில் பிஸியாக இருந்ததால் இது பற்றிப் பேசவில்லை. அம்மாவிடம் மட்டும் அழுது புலம்பினாள்.

இதற்குள் கள்ள ஆசிரியருக்கு மின்னல் வேகத்தில் புத்தி வேலை செய்தது. தோளில் அங்க வஸ்திரம், அதற்கடியில் ஜிப்பா, கையில் ஒரு ஜோதிட புஸ்தகத்துடன் வணிகர் வீட்டுக்கு விரைந்தார். அவர் வழக்கமாக கொடுக்கும் மரியாதை எல்லாவற்ரையும் கொடுத்து ராஜ உபசாரம் செய்தவுடன் மகள் இன்னும் அப்பாவிடம் தன்னுடைய வண்டவாளத்தை (வண்டல் வளம்) தண்டவாளத்தில் ஓடவிட வில்லை என்பதை அறிந்து ஆனந்தம் கொண்டார்.
ஒரு அவசர விஷயம் பேச வந்தேன் என்றவுடன், அவரும் கணக்குப் புஸ்தகம் எல்லாவற்றையும் மூடி விட்டுக் காது கொடுத்தார் .
ஆசிரியர் தொடர்ந்தார்– சொல்லுவதற்கே கஷ்டமாக இருக்கிறது; உங்கள் மகள் பருவம் எய்திய பொது கிரகச் சேர்க்கை சரியில்லை. இதனால் உங்கள் குடும்பத்துக்கும் அவளுக்கும் பேராபத்து ஏற்படும் என்று சொல்லி 12 ராசிகள், ஓன்பது கிரகங்கள், 27 நட்சத்திரங்களை வம்புக்கு இழுத்து அளவளாவினார். ஆசிரியர் மீது இதுகால பர்யந்தம் நன் மதிப்பு இருந்ததால் அவர் சொன்னதை வேத வாக்காக வணிகர் ஏற்றார். tamilandvedas.com, swamiindology.blogspot.com
“ஆசிரியரே, எல்லாவற்றுக்கும் பரிகாரம் இருக்கிறதே. இதற்கும் பரிகாரம் இருக்குமே?” என்றார் வணிகர்.

“ஆமாம் உண்டு ; அதைச் சொல்லத்தான் ஓடோடி வந்தேன் என்றார் . உங்கள் மகள் ஒரு க்ஷணம் கூட உங்களுடன் இருக்கக்கூடாது. அவளை ஒரு பெட்டியில் வைத்து, ஆற்றில் மிதக்க விடுங்கள்; அவள் ஜாதகம் கெட்டி; அவள் பிழைத்துக் கொள்வாள். நீங்களும் சுகமாக வாழ்வீர்கள்” என்று சொன்ன மாத்திரத்தில் அவரும் ஏற்பாடுகளைத் துவங்கினார்.
ஆசிரியர், இதுவரை தான் போட்ட திட்டங்கள் வெற்றி அடைந்த களிப்பில் வீடு ஏகினார்.
இரவில் தூங்கும் நேரத்தில், அந்தப் பெண்ணும் பெட்டியில் வைக்கப்பட்டு ஆற்றில் மிதக்க விடப்பட்டாள் .
அந்தக் காலத்தில் அரசர்கள் காட்டுக்கு வே ட்டை ஆட வருவது வழக்கம். ஒரு மன்னன் ஒரு புலியை வேட்டையாடி, காயமடைந்திருந்த அந்தப் புலியைக் கயிற்றைக் கட்டி இழுத்துவந்து ஆற்றில் தண்ணீர் குடிக்க இறங்கினார் ; தண்ணீரில் மிதந்து வரும் பெட்டியைப் பார்த்து , ஆவலுடன் திறந்தார். அழகிய பருவக் குமரியைக் கண்டு ஆனந்தம் கொண்டார் . தங்கப் பல்லக்கில் அவளை வைத்து அரண்மனைக்குக் கொண்டு சென்றார் .
அப்படிப் போவதற்கு முன்னர் தான் பிடித்து வந்த காயமடைந்த புலியைக் கட்டவிழ்த்து பெட்டிக்குள் வைத்து பத்திரமாக ஆற்றில் மிதக்கவிட்டார். இவ்வளவு திட்டத்துக்கும் மூல காரணமான ஆசிரியர் ஒரு பாலத்தின் அருகில் பெட்டியைப் பிடித்திழுக்க சில வேலைக்காரர்களுடன் காத்திருந்தார். பெட்டியும் வந்தது. வந்திருந்த வேலைக் காரர்களின் தலையில் ஏற்றி வீட்டுக்கு கொண்டு சென்றார். எல்லோரையும் கூலி கொடுத்து அனுப்பிவிட்டு சந்தன ஜவ்வாது பூ ச்சுடன் வந்தார். பெட்டியைப் படுக்கை அறைக்குள் கொண்டு சென்றார். பெட்டிக்கு அருகில் போய் காதல் மொழிகள் கிளர்ந்தார். இப்போது உன் மனம் மாறியிருக்குமே என்று சொல்லிக் கொண்டே பெட்டியைத் திறந்தார். புலியோ, அடி பட்ட நாகம் போல சீறிப் பாய்ந்து ஆசிரியரைக் குதறிக்கொன்றது. tamilandvedas.com, swamiindology.blogspot.com

பேராசை பெரு நஷ்டம்!
தினை விதைத்தவன் தினை அறுப்பான்;
வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
Tags – தினை, விதைத்தவன், வினை, பெண், புலி, ஆசிரியர்
—subham—

















































