மேடையில் அழகி , ‘கிழவி’ ஆக மாறிய விந்தை (Post No.7680)

Written by LONDON SWAMINATHAN

Post No.7680

Date uploaded in London – 11 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

2600 ஆண்டுகளுக்கு முன்னர் மகத சாம்ராஜ்யத்தை ஆண்ட மாமன்னனின் பெயர் பிம்பிசாரன். அவனுடைய மனைவியின் பெயர் மஹாராணி க்ஷேமா . அவள் அழகின் இலக்கணம். தங்கத்தில் வார்த்தெடுத்த பொற்சிலை. உலகம் வியக்கும் அழகி. சதா சர்வ காலமும் தன்  அழகை தானே கண்டு வியப்பாள் . ‘மேக்  அப்’ (Make up) சாதனங்களுடன்தான் நடப்பாள் ; தூங்குவாள் . அத்தகைய குணத்தை எப்படி மாற்றுவது என்று பிம்பிசாரன் தவித்தான்.

புத்தர் பிரானின் வழி நடந்தவன் பிம்பிசாரன். மகத  சாம்ராஜ்யத்தின் தலை நகரான ராஜக்ருஹத்தில் இருந்த ‘வேலு வனம்’ என்ற மிகப்பெரிய தோட்டத்தை புத்த சங்கத்துக்கு தானமாக அளித்தவன் . அந்த மாபெரும் அரசாங்க தோட்டத்தில் புத்தர் வந்து தங்கி அருளுரை ஆற்றிக்கொண்டிருந்தார் .

பிம்பிசாரனுக்கு ஒரு ஆசை .

அன்பே! ஆருயிரே! தேனே, மானே, கற்கண்டே ! நாம் இருவரும் இன்று புத்தர் பிரானைச் சந்தித்து நமஸ்கரித்து வருவோம் என்றான். அவள் மாட்டேன் என்று தலையை அசைத்தாள். அதற்கென்ன, உனக்கு எப்போது சவுகரியமோ அப்போது தோழிகளுடன் சென்று அவர் பாத கமலங்களைப் பூஜித்து வா என்றான் கெஞ்சலாக , கொஞ்சலாக !

மாட்டவே மாட்டேன் ! புத்தனும் வேண்டாம், பித்தனும் வேண்டாம் என்றாள் மஹாராணி க்ஷேமா.

அவள் மனதில் நிழல் ஆடிய விஷயம் பிம்பிசாரனுக்குப் புரிந்தது. ஸதா ஸர்வ காலமும் ‘மேக் அப்’ (Toiletries)  சாதனங்களுடன் உலா வரும் தன்னை புத்தர் உதாசீனப்படுத்திவிடுவாரோ  என்று அவள் அஞ்சுவது அவனுக்குத் தெரிந்தது.

PLAN – B

ஆகையால் பிளான் ஏ – க்குப் பதிலாக பிளான் -பி (Plan B) யை  அமல் படுத்தினான் .

தோழிமார்களைக் கூப்பிட்டு வேலு வனத்தின் புகழ் பாடுங்கள் ;அதன் இயற்கை அழகை விதந்து ஓதுங்கள். அவளை எப்படியாவது வேலு வனம் போகத் தூண்டி விடுங்கள் என்றான். அத்தனை தோழி மார்களும் வேலுவனத்தின் புகழை கோரஸ் (Chorus)  பாடினார்கள் . மன்னனின் பிளான் -பி ( Plan B) பலித்தது.

“அத்தான் ! நான் வேலு வனம் போக ஆவன செய்யுங்கள்” என்றாள் மாமன்னனிடம் .

அதற்கென்ன , கண்ணே!  இதோ 4 வெள்ளைக் குதிரைகள் பூட்டிய  தங்க ரதம் நிற்கிறது. உனக்குத் துணையாக ரத ,கஜ ,துரக, பதாதி நாற்படைகளும் வரும் ; அமைச்சர் பெருமக்களும் உடன் வந்து உபசரிப்பர் என்றார் .

மந்திரிமார்களுக்கு ரஹஸ்ய உத்தரவும் பிறப்பித்தார் . இன்று மாலை சூரியன் அஸ்தமிப்பதற்குள்  இவளை புத்தர் சந்நிதிக்கு அழைத்துச் சென்று விடுங்கள் ; பின்னர் அரண்மனைக்கு வாருங்கள் என்று.

தங்க ரதத்தில் தங்கச் சிலை பவனி வந்தாள் ; நாள் முழுதும் வேலு வனக் குயில்களுடன் பாடினாள் ; மயில்களுடன் ஆடினாள் ; கிளி, மான் ஆகியவற்றைக் கொஞ்சி விளையாடினாள்.

மாலை சூரியன் மலை வாயில் விழத் துவங்கினான் ; அவளும் அரண்மனைக்குப் போக ஆயத்தமானாள் ; தோழிமார்கள் ,” தலைவி போகும்போது புத்தர் பிரானை வேடிக்கை பார்த்துக் கொண்டே போவோமே” என்றனர். அவளோ வேண்டாம் ரொம்ப (Very tired)  ‘டயர்டாக’ இருக்கு. டைரக்ட்டாக (direct) வண்டியை அரணமனைக்கு விட்டு என்றாள் .

புத்தர் உருவாக்கிய பேரழகி !

மாமன்னரின் கட்டளையை மனதிற்கொண்ட மந்திரிமார்கள் நேரடியாக தங்க ரத்தத்தை வேலு வனத்துக்கு விட்டு புத்தர் பார்வையில் நிறுத்தினர். அரண்மனை வந்துவிட்டது என்று எண்ணி ரதத்தில் இருந்து இறங்கிய உலக மஹா அழகி ஒரு அரிய காட்சியைக் கண்டாள். புத்தர் பிரானுக்கு ஒரு உலகப் பேரழகி விசிறி வீசிக்  கொண்டிருந்தாள் ; ரம்பா , மேனகா, ஊர்வசி , திலோத்தமா , ரதி ஆகியோரின் ஓவியங்களைக் கண்டிருந்த அவளுக்கு ஒரே (Big confusion) ‘கன்பியூஷன்’ ; ஓவியம் எல்லாம் சேர்ந்து ஒட்டுமொத்தமாக உயிர்பெற்று வந்து விட்டனவோ என்று நினைத்தாள் ; தன்னுடைய  பொன் வண்ண உடலையும் நோட்டமிட்டாள் . புத்தர் பிரான் அருகில் நிற்கும் பேரழகியின் பக்கத்தில் நிற்கக்கூட  தனக்கு அருகதை இல்லை என்பதை உணர்ந்தாள் ; இப்படி எண்ண ஓட்டம் மனதில் ஆற்றுவெள்ளம் (stream of thoughts)  போல பிரவாஹித்த தருணத்தில் மேடையில் மேலும் ஒரு அற்புதம் நடந்தது ; அந்த உலக மஹா அழகி வயதாகி ‘மாமி’ (aunty) போல ஆனாள் ; கண்ணைக் கசக்கிக் கொண்டு மீண்டும் பார்த்தாள்; அழகி ‘கிழவி’ ஆய் , ‘டமால்’ என்று கீழே விழுந்தாள் ; புத்தரின் உபன்யாசத்தை செவிமடுக்க வந்த கூட்டமோ இதைக் கொஞ்சமும் கவனியாது அவரது உபன்யாச ஆனந்தத்தில் நீச்சல் அடித்துக் கொண்டிருந்தது . புத்தர் பிரான் தம்மபதத்தின் 347ஆவது ஸ்லோகத்தை திருவாய் மலர்ந்தருளி விளக்கிக் கொண்டிருந்தார்

“சிலந்தி வலை பின்னி அதற்குள்ளேயே அகப்பட்டுக்கொண்டு வளைய வருவது போல ஆசைவலை  பின்னி அகப்பட்டுக் கொள்கிறான் மனிதன்; எவன் ஒருவன் அந்த வலையைக் கிழித்துக்கொண்டு வருகிறானோ அவனே ஜனன- மரணச் சூழலிருந்து விடுபட்டு உயர்நிலையை அடைகிறான்” என்று உபதேசித்தார் ; மஹாராணியும் புத்தரின் பாத கமலங்களில் விழுந்து வணங்கிவிட்டு அரண்மனைக்கு விரைந்து ஏகினாள் .

மன்னனும் எதிர்கொண்டழைத்து அன்பே! வேலு வனம் எப்படி இருந்தது ? “என்று வினவினார் ; அவளோ விடையிறுத்தாள் – புத்தரையும் கண்டேன் என்றாள் . “அட, அப்படியா ? நீ அதிர்ஷ்டசாலிதான்” என்றான் .

“உம்மைவிட நான் அதிர்ஷ்ட சாலி

கண்டேன் அவர் திருப்பாதம்!

கண்டறியாதன கண்டேன்!!”.

நீவிர் இதுவரை அறியாததையும் அறிந்தேன்;  எனக்கு இந்த அரண்மனை வாழ்வு வெறுத்துவிட்டது ; நன் புத்த பிக்ஷுணியாக விரும்புகிறேன் என்றாள் ; மன்னரும் நல்ல நாள் பார்த்து அவளைத் தங்கப் பல்லக்கில் வைத்து புத்த சங்கத்துக்கு அனுப்பினான்.

மஹாராணி க்ஷேமா வாழ்ந்த பிஹார் மண் அற்புத சக்தி வாய்ந்தது ; புத்தர் பிரான் உலாவும் முன்னரே ஜனக மாமன்னனையும் ஸீதா தேவியையும் கண்ட  பிரதேசம் அது. மைத்ரேயியும் கார்க்கி வாசக்கனவியும் அவர்களுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சர்வதேச தத்துவ மகாநாட்டில் பங்கேற்று யாக்ஞ வாக்ய ரிஷியைக் கேள்வி கேட்ட நாடு அது. அப்பேற்பட்ட புனிதப் பெண்மணிகளுக்கு நிகராக க்ஷேமாவும் உயர்ந்ததால் வியப்பதற்கு ஒன்றுமிலை ; பிற் காலத்தில் புத்தமத சன்யாசினிகளின் புகழ் பாடிய தேரி கதாவில் க்ஷேமாவின் உபதேசமும் இடம் பெற்றுள்ளது. அவள் ச்ரவஸ்த்தி நகரில் முகாமிட்டிருந்த காலையில் குரு ஒருவரைக் காண தாகம் கொண்டு அலைந்த மன்னன் பிரசேனஜித் அவளிடம் வாதம் செய்து ஞானம் பெற்ற கதைகளும் உள .

புத்தம் சரணம் கச்சாமி

தம்மம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி

(தம்மம் என்பது ‘தர்ம’ என்ற சொல்லின் கொச்சை வடிவம். புத்த மதத்தினரின் வேதப் புஸ்தகம் தம்மபதம் எனப்படும் ; இதில் புத்தரின் உபதேசங்கள் உள )

–subham–

Nurse Sends Message to The World ஜெர்மானிய நர்ஸின் அலறல் கடிதம்! (Post No.7679)

 Written by S NAGARAJAN

Post No.7679

Date uploaded in London – 11 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ச.நாகராஜன்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சரியானதைச் செய்யவில்லை என்று ஒருவேளை நீங்கள் நினைக்கிறீர்கள் என்றால், இதை   அவசியம் படியுங்கள்!

நேற்று, ஆஸ்பத்திரியில் இங்குள்ள நிலைமை எப்படி இருக்கிறதென்றும் மூனிச் ஆஸ்பத்திரிகள் எப்படி நீடித்து இயங்கமுடியாது என்பது பற்றியும் ஒரு கூட்டம் நடந்தது. குடிபெயர்ந்தோரின் (Migrants) அவசர கால மருத்துவ கேஸ்களின் எண்ணிக்கையை சிகிச்சை நிலையங்கள் கையாள முடியாது, ஆகவே எல்லா கேஸ்களையும் அவர்கள் பிரதான ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்ப ஆரம்பித்து விட்டனர்.

முஸ்லீம்களில் பலரும் பெண் பணியாளர்களிடமிருந்து சிகிச்சை எடுக்க மறுக்கின்றனர். பெண் பணியாளர்களாகிய நாங்கள் அந்த குடிபெயர்ந்தோரிடம் போக மறுக்கிறோம். பணியாளர்கள் – குடிபெயர்ந்தோர் இடையே உள்ள உறவு மோசம் என்பதிலிருந்து மிக மோசம் என்ற நிலைக்குப் போய்க் கொண்டிருக்கிறது. சென்ற வாரத்திலிருந்து ஆஸ்பத்திரிகளுக்குச் செல்லும் குடிபெயர்ந்தோர் K-9 போலீஸ் பிரிவுகளுடன்  செல்ல வேண்டியதாயிருக்கிறது.

குடிபெயர்ந்தோர் பலரும் எய்ட்ஸ், மேகப்புண், டி.பி. மற்றும் இதர விந்தையான நோய்களைக்கொண்டிருக்கின்றனர்; அவற்றிற்கு எப்படி சிகிச்சை அளிப்பது என்று எங்களுக்குத் தெரியவில்லை.

மருந்துக் கடைக்கு மருந்து வாங்க ஒரு பிரஸ்கிரிப்ஷன் அவர்களுக்குக் கிடைத்தது என்றால் அவர்கள் அதற்குக் காசு கொடுக்க வேண்டும் என்பதை அறியும் போது அவர்கள் மிகுந்த கோபம் கொள்கிறார்கள், அதுவும் அந்த மருந்து குழந்தைக்கு என்னும் போது இன்னும் அதிக கோபம் கொள்கின்றனர்.

குழந்தைகளை மருந்துக் கடை வாசலில் அப்படியே விட்டு விட்டு, “நீயே குழந்தையைக் குணப்படுத்து என்று மருந்துக் கடைக்காரரிடம் சொல்லி விட்டுப் போய் விடுகின்றனர். ஆகவே  சிகிச்சை நிலையங்கள், ஆஸ்பத்திரிகளை மட்டும் காவல் காக்காமல் போலீஸ்காரர்கள் இப்போது மருந்துக் கடைகளையும் காவல் காத்து வருகின்றனர்.

குடியிருப்போரை டிவி கேமராக்களை முன் நிறுத்தியும் வரவேற்பு போர்டுகளை ரயில் நிலையங்களில் வைத்தும் வரவேற்றவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்று வெளிப்படையாகவே நாங்கள் கேட்கிறோம். ஆம், இப்போது எல்லை மூடப்பட்டு விட்டது, ஆனால் பத்து லட்சம் பேர் ஏற்கனவே இங்கே வந்து விட்டனர். நிச்சயம் அவர்களை நாம் வெளியில் அனுப்ப முடியாது.

இதுவரை ஜெர்மனியில் வேலையில்லாதோரின் தொகை 22 லட்சமாக இருந்தது. இப்போது குறைந்தபட்சம் அது 35 லட்சமாக ஆகியிருக்கும். இவர்களில் பெரும்பாலானோர் எப்போதுமே வேலை இல்லாமல் இருப்பவர்கள். அவர்களில் மிகச் சிலரே கல்வி அறிவு கொண்டவர்கள். இன்னும் மோசம் என்னவென்றால் அவர்களில் பெண்கள் பொதுவாக வேலை செய்வதே இல்லை. எனது கணிப்பின் படி அவர்களில் பத்துப் பேரில் ஒருத்தி கர்ப்பிணி. ஆயிரக்கணக்கானோர் சிறுவர்களையும் ஆறு வயதுக்குக் கீழுள்ள சின்னச் சின்னக் குழந்தைகளையும் கூட்டி வந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலான குழந்தைகள் நோஞ்சான்கள். ஊட்டச் சத்து தேவையுள்ளவர்கள்.

இந்த நிலை இன்னும் நீடித்தால், ஜெர்மனி தனது எல்லையை மீண்டும் திறந்து விட்டால், நான் செகோஸ்லேவியாவில் உள்ள எனது வீட்டிற்குச் சென்று விடுவேன். என்னை ஒருவராலும் இங்கு இந்த நிலையில் நீடிக்கச் செய்ய முடியாது, எனது நாட்டில் கிடைக்கும் சம்பளத்தை விட இங்கு இரண்டு மடங்கு சம்பளம் கிடைத்தாலும் கூட!

நான் ஜெர்மனிக்குத் தான் வேலை பார்க்க வந்தேன். ஆப்பிரிக்காவிற்கோ அல்லது மத்திய கிழக்கிற்கோ அல்ல!

எங்களது பிரிவின் தலைமை புரபஸர் கூட இது தன்னை எவ்வளவு வருத்தமுறச் செய்திருக்கிறது என்று கூறினார்.

முக்கிய விஷயம் ஒன்று என்னவெனில், சுத்தம் செய்யும் பெண்மணி, ஒவ்வொரு நாளும் பல வருடங்கள் சுத்தம் செய்து கொண்டே இருப்பவர், 800 யூராக்களைத் தான் பெறுகிறார். அவர் ஹாலில் கைகளை நீட்டிக் கொண்டிருக்கும் இளைஞர்களைப் பார்க்கிறார், இலவசமாக எதுவும் கிடைக்கவில்லை என்றால் அவர்கள் கிடைத்ததைத் தூக்கி எறிவர்.

  எனக்கு இது தேவையே இல்லை. நான் வீட்டிற்குத் திரும்பிச் சென்றேன் என்றால் ஒரு காலத்தில் செக்கோஸ்லேவேகியாவிலும் இதே நிலை ஏற்படுமோ என்று பயப்படுகிறேன். ஜெர்மானியர்கள் தங்கள் அமைப்புகளைக் கொண்டு இதைக் கட்டுப்படுத்தவில்லையெனில் எனது நாட்டில் நிச்சயம் குழப்பம் தான் என உறுதியாகச் சொல்கிறேன்.

இந்த மாதிரியான ஆசாமிகளைப் பார்த்திராத நீங்கள், இவர்கள் எப்படிப்பட்ட மோசமான நடத்தை உள்ளவர்கள் என்பதை அறிய மாட்டீர்கள், மதம் என்று வந்து விட்டால், முஸ்லீம்கள் எங்கள் பணியாளர்களை விட எப்படி மேலே இருக்கிறார்கள் தெரியுமா?

 இப்போதைக்கு, இவர்கள் கொண்டு வரும் வியாதிகளுக்கு எங்கள் ஆஸ்பத்திரி பணியாளர்கள் ஆளாகவில்லை, ஆனால் நூற்றுக் கண்க்கில் ஒவ்வொரு நாளும் இப்படி நோயாளிகள் வந்து கொண்டே இருந்தால் இன்னும் சில நாட்கள் தான், அவர்கள் கதை ஓடும்!

ரைன் நகருக்கு அருகே உள்ள ஆஸ்பத்திரியில் எட்டு மாதக் குழந்தை ஒன்று சாவை எட்டிப் பார்த்த நிலையில் இருந்த போது, குடியிருப்போர் பணியாளர்களை கத்தி கொண்டு தாக்கினார்கள். மூன்று  மாதங்கள் அவர்கள் ஐரோப்பா முழுவதும் இழுத்துச் செல்லப்பட்டனர். குழந்தை ஜெர்மனியில் உள்ள குழந்தைகளுக்கான சிறந்த மருத்துவ மனையில் சிறப்பான மருத்துவ சேவை தந்தும் கூட இரண்டு நாள் கழித்து இறந்தது. (இவர்களால் தாக்கப்பட்ட) குழந்தை மருத்துவர் சர்ஜரிக்கு ஆளானார். இரண்டு நர்ஸ்கள் ஐசியூவிலிருந்து ஒருவாறாகத் தேறி வருகின்றார்கள். யாருமே தண்டிக்கப்படவில்லை. உள்ளூர் செய்தித்தாள்கள் இது பற்றி எழுதக் கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. ஆகவே நாங்கள் உங்களுக்கு ஈ-மெயில் மூலமாகத் தான் இதைச் சொல்ல்  முடிகிறது.

ஒரு ஜெர்மானியன் ஒரு டாக்டரையும் நர்ஸ்களையும் கத்தி கொண்டு தாக்கி இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? அல்லது மேகப்புண் வியாதி உடைய ஒருவர் தனது சிறுநீரை நர்ஸ்களின் முகத்தில் பாய்ச்சி தொற்று நோய் வந்து விடும் என்று பயமுறுத்தினால் என்ன ஆகி இருக்கும்?

குறைந்தபட்சம் அவன் நேரடியாக சிறைக்குப் போயிருப்பான், பின்னர் நீதிமன்றம் சென்றிருப்பான். ஆனால் இந்த ஆசாமிகளிடம் இது வரை இப்படி ஒன்றுமே நடக்கவில்லையே!

நான் கேட்கிறேன் – இவர்களை வரவேற்று போர்டு வைத்து ரயில் நிலையங்களில் வரவேற்றவர்கள் இப்போது எங்கே போனார்கள்?

ஜாலியாக வீட்டில் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு ஒரு சிரமுமின்றி பாதுகாப்பான வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள்.

நானாக இருந்தால், முதலில், அந்த வரவேற்பாளர்களை அனைவரையும் ரவுண்டு கட்டி இழுத்து வந்து இந்த ஆஸ்பத்திரிகளில் எமர்ஜென்ஸி வார்டில் வேலைக்காரர்களாக ஆக்கி விடுவேன். பின்னர் குடியிருப்போர் வசிக்கும் கட்டிடங்கள் ஒன்றிற்கு அனுப்பி விடுவேன், அவர்கள் தங்களைத் தாங்களே -ஆயுதம் தரித்த போலீஸ்காரர்களோ அல்லது போலீஸ் நாய்கள் இன்றியோ – சமாளித்துக் கொள்ளட்டும். வருத்தமூட்டும் விஷயம் என்னவெனில், இந்த போலீஸ் பவேரியாவின் ஒவ்வொரு ஆஸ்பத்திரியிலும் இப்போது இருக்கின்றனர்.

இந்த நிலை உங்கள் நாட்டிற்கு வந்து கொண்டிருக்கிறதா? உங்களை நோக்கி வரும் இந்த அபாயகரமான நிலையை நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்களா? தயவு செய்து இதை அனைவருடனும் ஷேர் செய்யுங்கள்.உங்களிடம் இருக்கும் அனைத்து வசதிகளையும் பயன்படுத்தி இதை அனவருக்கும் கொண்டு செல்லுங்கள்!

நன்றி : TRUTH இதழ் Vol. 87 No. 42 21st February 2020 

****

இதன் ஆங்கில மூலம் இதோ:-

Nurse In Germany Sends Message To The World 

(An open letter– Eye opener one?) 

Just in case you don’t think President Trump is doing the right thing, read this !

Yesterday, at the hospital, we had a meeting about how the situation here and the other Munich hospitals are unsustainable. Clinics cannot handle the number of migrant medical emergencies, so they are starting to send everything to the main hospitals. Many Muslims are refusing treatment by female staff, and we women are now refusing to go among those migrants. Relations between the staff and migrants are going from bad to worse. Since last weekend, migrants going to the hospitals must be accompanied by police with K-9 units. Many migrants have AIDS, syphilis, open TB and many exotic diseases that we in Europe do not know how to treat. 

If they receive a prescription to the pharmacy; they learn they have to pay cash, this leads to unbelievable outbursts, especially when it is about drugs for the children. They abandon the children to the pharmacy staff with the words: So, cure them yourselves. So the police are not only guarding the clinics and hospitals, but also the large pharmacies. 

We ask openly where are all those who welcomed the migrants in front of TV cameras with signs at train stations? Yes, for now, the border has been closed, but a million of them are already here and we will definitely not be able to get rid of them.

Until now, the number of unemployed in Germany was 2.2 million. Now it will be at least 3.5 million. Most of these people are completely unemployable. Only a minimum of them have any education. What is more, their women usually do not work at all. I estimate that one in ten is pregnant. Hundreds of thousands of them have brought along infants and little kids under six, many emaciated and very needy. If this continues and Germany re-opens its borders, I am going home to the Czech republic. Nobody can keep me here in this situation, not even for double the salary back home. I came to Germany to work, not to Africa or the Middle East! Even the professor who heads our department told us how sad it makes him to see, but worth the read…especially the cleaning woman, who has cleaned every day for years for 800 euros and then meets crowds of young men in the hallways who just wait with their hands outstretched, waiting for free, and when they don’t get it, they throw a fit. I really don’t need this, but I am afraid that if I return home, at some point it will be the same in the Czech Republic. If the Germans, with their systems, cannot handle this, then guaranteed, back home

will be total chaos…

You– who have not come in contact with these people have absolutely no idea what kind of badly behaved desperadoes these people are, and how Muslims act superior to our staff, regarding their religious accommodation. 

For now, the local hospital staff have not come down with the diseases these people brought here, but with so many hundreds of patients every day of this is just a question of time. 

In a hospital near the Rhine, migrants attacked the staff with knives after they had handed over an 8 month old on the brink of death, who they dragged across half of Europe for three months. The child died two days later, despite having received top care at one of the best pediatric clinics in Germany. The pediatric 

physician had to undergo surgery and the two nurses are recovering in the ICU. Nobody has been punished. The local press is forbidden to  write about it, so we can only inform you through e-mail.

What would have happened to a German if he had stabbed the doctor and nurses with a knife? Or if he had flung his own syphilis infected urine into a nurses face and so threatened her with infection?

At a minimum, he would have gone straight to jail and later to court. With these people so far, nothing has happened. And so I ask: Where are all those greeters and receivers from the train stations?

Sitting pretty at home, enjoying their uncomplicated, safe lives. I would round up all those greeters and bring them here first to our hospitals emergency ward as attendants! Then in to one of the buildings housing the migrants, so they can really look after them there themselves, without armed police and police dogs, who, sadly today, are in every hospital here in Bavaria.

Is this situation coming to your country? If you understand the dangerous situation that is heading your way, please share and spread this by all and any means that you have available. 

           TRUTH Vol. 87 No. 42 21st February 2020 

அருமையான ஒரு கடிதத்தை  மனம் திறந்து வெளிப்படையாக ஒரு ஜெர்மானிய நர்ஸ் வெளி உலகுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவரது அலறல் நம் கண்களைத் திறக்க வேண்டும். நமக்கு விழிப்புணர்வு ஊட்ட வேண்டும்!

நமது நாட்டில் வங்க எல்லை, பஞ்சாப் எல்லை, வட கிழக்கு எல்லை ஆகிய பகுதிகளில் என்ன நடக்கிறது? சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். பிரதமர் மோடி அவர்கள் செய்தது சரி தானே! வந்தேறிகளாக உள்ளே புகுந்து ரவுடித் தனம் செய்து  நாட்டைப் பிளந்து துண்டு துண்டாகக் கூறு போட நினைப்பவர்களை உள்ளே அனுமதிக்கலாமா? மோடியைப் பாராட்டுவோம்; அவருக்கு உறுதுணையாக இருந்து நாட்டைப் பாதுகாப்போம்.

TAGS — Nurse, Message, Germany, Letter,ஜெர்மனி, நர்ஸின்அலறல் கடிதம்

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 1032020 (Post No.7678)

தமிழ் குறுக்கெழுத்துப்  போட்டி 1032020 (Post No.7677)

Written by London Swaminathan

Post No.7678

Date uploaded in London – 10 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

குறுக்கே

1. — (4 எழுத்து) – சுருதி சேர்க்க உதவும்

5. – (3) இஸ்லாமிய சட்ட அறிஞர்

6. – அந்தமான்-தீவின் பழங்குடி மக்கள்; மனிதர்களைக் கண்டால் , கொல்லக்கூடிய விஷ அம்புகளை எய்வார்கள்

7. – (6)- மிகச் சிறிய ஊர்

8. –  (4) மரத்துக்கு மரம் தாவும்

10. –  (3) கடலில் கிடைக்கும்; பூஜையில் இருக்கும்

11. – (4) கிழக்கு திக்கின் மறு பெயர்

கீழே

1. – முச் சந்தியில் இதை அடித்து ஊர் அறிவிப்புகளை வெளியிடுவார்கள்

2. – (7) – உடலில் தேய்த்துக் குளிக்கும் வாசனைப்பொடிகளில் இதுவும் ஒன்று. பூமிக்கடியில் கிடைப்பது

3. –  (5)ஒரு மன்னர் வரும்போது இந்த இரண்டு சொற்களுடன் அறிவிப்பு

4. – (4) அப்பர், சம்பந்தர், சுந்தரர்பாடிய பாட்டால் தொகுப்பு

10 –  (3) கடலில் கிடைக்கும்; பூஜையில் இருக்கும்

9. – (2) சங்கீதம்

–subham–

MIRACLE BY BUDDHA, CREATED A BEAUTY TO TEACH ANOTHER BEAUTY! (Post. 7677)

Written by London Swaminathan

Post No.7677

Date uploaded in London – 10 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

The Emperor of mighty Maghada, modern Bihar and the surrounding states, was Bimbisara . His consort was Queen Kshema. Both of them were contemporaries of the Buddha. They lived 2600 years ago and left a mark in the history of India.

Queen Kshema was a great beauty. She looked like a golden statue. She was a proud peacock. Always boasting about her beautiful look. She was born in the royal family of Madraas. when she got married to Bimbisara she lived with him in the capital city of Rajagriha . Bimbisara was a disciple of Gautama Buddha. So he donated the royal garden Velu Vana to Buddhist Sanga/ Association. Buddha came to the royal garden. Bimbisara wanted his Queen to go and pay respects to Buddha. But she said ‘No’. The reason was that she was scared to see Buddha who would easily find her fascination with beauty and beauty products.

Bimbisara knew the Great Master would not mind such a thing. So he devised a novel plan to send her to Velu vana. He asked her close associates to sing the glory and beauty of royal garden so as to persuade her to visit it. As expected her curiosity was roused. The plan had its desired effect. She wanted to see the royal garden. Bimbisara arraigned her a golden chariot. The ministers and her associates were secretly instructed to take her to Buddha and make her pay respects.

She went to the garden with a big retinue and enjoyed every bit of nature there. It was nearing sunset. Ministers hinted to her that she may just see Buddha on her way back to the palace. She said ‘No’.

Now the ministers were afraid to face the king without her seeing the Buddha. So they forcefully drove the chariot near Buddha. There was the most beautiful woman fanning Buddha . Queen looked at her golden skin and looked at the lady near the great Buddha. She was astonished and then felt ashamed of her beauty and thought that she can’t even go near her. While she was thinking like this, the most beautiful woman on the stage slowly became a middle aged woman. A short while after that she became an old lady and fell down with a great noise. No body moved. Every body was so involved and immersed in the discourse of the Master. He was reciting the Dhammapada sloka 347.

“Those who are given to attachment fall into the stream of repeated existences, life and death cycle, like the spider caught in the net created by itself. One who has no attachment gets rid of his/ her sufferings and goes out by tearing asunder the net”

—-Dhammapada 347

On listening to this utterance, the Queen decided to follow Buddha. On her return to the palace she decided to take ordination at once. King Bimbisara asked her if she had seen the Master. In reply she said that what the king had seen of the Master was negligible; it was the real Teacher she had visualised. She wondered how come Bimbisara was running a government without renunciation until that day. She then asked for his permission to become a bikshuni/ a monk. The king gave his permission with his whole heart and sent her to the nunnery in a golden palanquin.

Bihar was the land of Janaka and Sita, of Maitreyi and Gargi. Thousands of years before Queen Kshema, they excelled in Hindu philosophy. No wonder that Kshema became a monk overnight.

Kshema became a Their (saint) and in the stanzas attributed to her in the Theri gatha, Kshema relates that a young man of excellent appearance wanted to entice her worldly enjoyment, but she spurned his proposal saying that what were pleasures to him pierced her like a sharp dart.

On one occasion, when she was staying in the hermitage near the city of Sharavasti, King Presenajit was looking for a Guru. He was apprised of the presence of Bikshuni Kshema. He came to her and had intellectual and philosophical discussions with her. The king was greatly impressed by her vast knowledge.

Dhamma patha was the Veda of Buddhists. It contains Buddha’s teachings. Dhamma is Dharma in Sanskrit.

tags – Queen Kshema, King Bimbisara, Buddha, Miracle,

–subham–

சங்கீத வித்வானுக்கும் தம்பூரா (சுருதிகாரன்) தேவை (Post No.7676)

Written by London Swaminathan

Post No.7676

Date uploaded in London – 10 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

எல்லோரும் தனிமையில் வாழ முடியாது எப்பேற்பட்ட  தலைவனாக இருந்தாலும் ஒருவரில் உதவியால்தான் அவன் சோபிக்க முடியும். பெரிய அரசனாக இருந்தாலும் அவனுக்கு சரியான ஆலோசனை வழங்கும் அமைசர் தேவை என்பது நமக்குத் தெரிந்ததே. அறப்பளிஸ்வர சதகத்தில்  அம்பலவாண கவிராயர் கொடுக்கும் பட்டியலைக் காண்போமா ?

ஒருவன் எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும் அவனைவிட புத்தியுடையோரின் கருத்துக்களைச் செவிமடுக்க வேண்டும் . ஒரு மன்னன் மஹா சூரனாக இருந்தாலும் அவனுக்கும் ஆயுதம்தாங்கிய தளகர்த்தர்களின் துணை வேண்டும். தான் பெரிய படிப்பு படித்திருந்தாலும், மெத்தப் படித்தவர்களின் சகவாசம் தேவை. அவர்களைப் போற்ற வேண்டும்

நன்றாகப் பாடக்கூடிய இசை மேதை ஆனாலும் பக்கத்தில் சுருதி சேர்த்து, சுருதி கூட்ட  ஒரு சுருதிகாரன் தேவைப்படுவான்.

பூமியை ஒருகுடையின் கீழ் ஆளும் மன்னரானாலும் அவனுக்கு ஆலோசனை வழங்க ஒரு அமைச்சன் தேவை.நல்ல ஒளிவீசும் விளக்கானாலும் அந்த தீபத்தைத் தூண்டிவிட ஒரு தூண்டுகோல் தேவைப்படுகிறது.

அனல் வீசும் நெற்றிக் கண்ணுடைய படிக நிற வண்ணனே ! இறைவனே; அறப்பளிஸ்வரனே ! அருள்வாயாக.

tags – சுருதிகாரன், சங்கீத வித்வான், அமைச்சர்

–subham —

தமிழில் எத்தனை சதகங்கள்? (Post.7675)

Written by London Swaminathan

Post No.7675

Date uploaded in London – 10 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

சதகம் என்றால் 100 பாடல்கள்.

தமிழில் மிகவும் பழைய சதகம் திருவாசகத்திலுள்ள திருச்  சதகம். மாணிக்கவாசகரால் பாடப்பட்டது அவர் சம்பந்தர், அப்பருக்கு முன் வாழ்ந்தார் என்ற ஒரு கருத்தும். ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்ற ஒரு கருத்தும் உளது.

சதகம் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்தது.

பெரும்பாலும் நீதியையும், ந்தந்த பிரதேசத்தின் மகிமையையும் சொல்வதாக இவை அமைந்துள்ளன.

சதகம் பற்றிய இரண்டு நூல்கள் பிரிட்டிஷ் லைப்ரரியில் உள்ளன.ஒரு நூலில் பதம் பிரித்து அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதோ சதகப்  பட்டியல் (இணைப்பைக்  காண்க)

Tags –  சதகங்கள், சதகம்,  பட்டியல்

Xxx Subham xxx

Dead Cat thrown at Lord Macaulay (Post No.7674)

CAMPAIGNING ANECDOTES (Post No.7674)

Written  by  London Swaminathan

Post No.7674

Date uploaded in London – 10 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

My opponent came into Surrey Naked

To the reviling of a local Conservative, a local Liberal candidate for a parliamentary vacancy in Surrey (England, UK) replied,

“The gentleman is taunting me for not having been born in this district as he was. Let me tell the gentleman that my only excuse is that I’m a Lancashire man from choice, while he is one by necessity. If there is any difference between us, it is that I came into this country with my pants on while the gentleman came into it with his off.”

Xxx

I am ‘TO LET’ (Unfurnished)

When Mr Thomas Sheridan , son of the celebrated Richard Brinsley Sheridan, was a candidate for the representation of a Cornish (U.K)  borough, he told his father, that if he had succeeded, he should place a label on his forehead with the words ‘to let’, and side with the party that made the best offer.

Right, Tom, said the father, but don’t forget to add the word ‘unfurnished’.

Xxx

Lord Macaulay and Dead Cat

On one occasion Lord Macaulay had an unpleasant experience at Edinburgh (Scotland, UK). He was re-contesting a seat in that constituency and was standing side by side with his opponent on the balcony one evening, when he was suddenly struck by a dead cat. The member of the audience who threw the animal at once apologised and said that he had intended it for his opponent.

“Well, said Macaulay, I wish you had meant it for me and struck him” .

Xxxx

Liar, Liar !

The political speaker found himself repeatedly interrupted by a speaker who shouted ‘Liar!’ again and again during his discourse. His patience exhausted, the speaker at last said,

“If the gentleman will be good enough tell us his name as well as his calling, we shall be pleased to hear from him”.

Xxx

“Wall, I cant vote now”

Sam Houston, when running for Governor of Texas, overlooked no prospective voters. He went around to most of the farm houses and personally harangued the inmates, getting their promises to vote for him.

At one such farm house he had gotten the farmer’s promise of a vote, and seeing the lanky son of the house pass by, sized him up as another prospective supporter.

“Son, he said to the boy, you look old enough to vote; how old are you?”

“Wall (well), I was 21 last April, but I didn’t bow my head when dad ast the blessing, so he sot me back two years…… so now I can’t vote”.

Tags- Liar, Lord Macaulay, dead cat, Sheridan, Election Campaign, naked, anecdote

Xxx subham xxxx

பிள்ளையாருக்கு யாரும் பெண் கொடுக்காதது ஏன்? (Post No.7673)

 

 

 

பிள்ளையாருக்கு யாரும் பெண்
கொடுக்காதது ஏன்?
(Post No.7673)

 

Written  by  S Nagarajan

Post No.7673

Date uploaded in London – 10 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a
non- commercial blog. Thanks for your great pictures.

 

ச.நாகராஜன்

 

விநாயகருக்கு யாரும் ஏன் பெண்
கொடுக்க முன்வரவில்லை?

கேள்வி நியாயமானது தான்; ஆனால்
விடை தான் தெரியவில்லை.

அனைத்தும் அறிந்த தமிழ்ப் புலவர்களிடம்
சென்றால் ஒரு வேளை விடை கிடைக்கலாமோ?

அந்தகக்கவி வீரராகவ முதலியார்
தனது பாடல் ஒன்றில் விடையைச் சொல்லி விடுகிறார்.

பாடல் இதோ:

 

வீரஞ் சொரிகின்ற பிள்ளா யுனக்குப்பெண்
வேண்டுமென்றால்

ஆருங் கொடாருங் களப்பன் கபாலி
யம்மான்றிருடன்

ஊருஞ் செங்காடு நின்முகம் யானை
யுனக்கிளையோன்

பேருங் கடம்பனுன் றாய்நீலி நிற்கும்
பெருவயிறே

 

பாடலின் பொருள் :-

வீரம் சொரிகின்ற பிள்ளாய்
–  வீரத்தன்மையைப் பொழிகின்ற பிள்ளையாரே

உனக்குப் பெண் வேண்டும் என்றால்
– நீ திருமணம் செய்து கொள்ளத் தகுதியான ஒரு பெண் வேண்டும் என்றால்

ஆரும் கொடார் – ஒருவர் கூட முன்
வந்து தர மாட்டார்கள்.

காரணம் என்னவெனில்

உங்களப்பன் கபாலி – உங்களது
அப்பனாகிய சிவபிரான் கபாலி அதாவது கபாலத்தை ஏந்தியவன்

அம்மான் திருடன் – அம்மானாகிற
கிருஷ்ணன் (வெண்ணெய் திருடும்) திருடன்

ஊரும் செங்காடு – சொந்த ஊரோ
செங்காடு

நின்றன் முகம் யானை – உனது முகமோ
யானை முகம்

உனக்கு இளையோன் பேரும் கடம்பன்
– உனக்கு தம்பியாக இருக்கும் முருகன் பெயரும் கடம்பன் (கடப்ப மாலையை அணிந்தவன்)

உன் தாய் நீலி – உனது தாயோ நீலி

நிற்கும் பெருவயிறு – உனக்கும்
பெருவயிறு (மகோதரமோ)

ஆக இப்படி இருக்க உனக்கு யார்
தான் பெண் கொடுப்பார்கள்?

 

விநாயகர் மீது நிந்தாஸ்துதியாக
இப்படிப் பாடியிருக்கிறார் பெரும் புலவர் அந்தகக் கவி வீரராகவ முதலியார்.

இவரது பாடல்கள் அருமையானவை.

 

சிதம்பரம் என்ற வள்ளலை நோக்கி
அவருக்கு ஒரு தாய் நமஸ்காரம் செய்து வேண்டுவதை புலவர் சொல்லும் பாங்கு இது:

துறை : நற்றாயிரங்கல்

 

பங்கஜமேன் மேவியசௌ பாக்யசுப
மானளித்த

அங்கஜவேள் வெங்காணையா லாவிநொந்த
– எங்களிட

மாரஞ்சி தம்பரவு மாதினையாள்
கோடி நமஸ்

காரஞ் சிதம்பரயோ கா

 

பாடலின் பொருள் :-

 

சிதம்பர யோகா – சிதம்பரம் என்ற
பெயரைக் கொண்ட  வள்ளலே

பங்கஜம் மேல் மேவிய – தாமரை
மலர் மேல் வீற்றிருக்கும்

சௌபாக்ய சுபமான் அளித்த – சௌபாக்கியங்களையும்
சுபங்களையும் தருகின்ற திருமகள் பெற்ற

அங்கஜவேள்  – மன்மதனது

வெங்கணையால் – கொடிய அம்புகளால்

ஆவி நொந்த – மனம் வருந்திய

எங்களிடம் – எங்களிடத்திலுள்ள

மாரஞ்சிதம் – மிகவும் மனோரஞ்சிதத்திற்கு
ஏதுவாய்

பரவும் – புகழப்படுகின்ற

மாதினை – பெண்ணை

ஆள் – ஆண்டருள வேண்டும்

கோடி நமஸ்காரம் – உனக்கு கோடி
நமஸ்காரம்.

சிதம்பர பூபதியின் மீது ஒரு
தாய் தன் மகளை ஏற்றருள வேண்டும் என்று இரங்கிப் பாடுவதாக அமைந்துள்ள பாடல் இது.

 

சொல் விளையாடலிலும் வல்லவர்
அந்தகக் கவி வீரராகவ முதலியார்.

 

ஒரு பாடல் இது:

 

பணியாரந் தோசையி லங்கொங்கை தோய்ந்திடப்
பார்ப்பர் பல்லி

பணியாரந் தோசையில் லாச்செந்துவாய்ப்பிறப்
பார்களென்னோ

பணியாரந் தோசைமுன் னோனுக் கிட்டேத்திப்
பழனிச்செவ்வேட்

பணியாரந் தோசைவ ராகாரன் னோர்க்கென்ன
பாவமிதே

 

என்ன, பணியாரம், தோசை என்று
நான்கு வரிகளிலும் வருகிறதே என்று வியப்போருக்கு பாடலின் பொருள் மிகுந்த திருப்தியைத்
தரும்.

பாடலின் பொருள் :

பணி ஆர் – ஆபரணம் நிறைந்த

தோ – இரண்டாகிய

சையிலம் – மலை போன்ற

கொங்கை – மார்பகங்களை

தோய்ந்திடப் பார்ப்பர் – பொருந்தப்
பார்ப்பர்

பல்லி – பல்லி

பணி – பாம்பு

ஆர் அந்து – நிறைந்த அந்து
(இவைகள் போன்ற)

ஓசை இலா செந்து ஆய் பிறப்பார்கள்
– சத்தமற்ற ஜெந்துக்களாகப் பிறப்பார்கள்

என்னே – இதற்குக் காரணம் யாதோ?

பணியாரம் தோசை – பணியாரம் தோசை
ஆகியவற்றை

முன்னோனுக்கு இட்டு ஏத்தி –
முத்தவரான பிள்ளையாருக்கு படைத்துத் துதித்து

பழநி செவ்வேள் – பழனியில் எழுந்தருளியிருக்கும்
முருகப் பெருமானை

பணியார் – வணங்காதவர்கள்

சைவர் ஆகார் – சைவர்கள் ஆக மாட்டார்கள்

அந்தோ – அட பரிதாபமே

அன்னோருக்கு – அவர்களுக்கு

இது என்ன பாவம் – இது என்ன தீவினைப்
பயனோ?

 

சுவைத்து ரசிக்க இவர் பாடிய
பாடல்கள் இன்னும் ஏராளம் உள்ளன!

Ganesh from Vietnam/Champa

Tags – பிள்ளையார், விநாயகர், அந்தக க்கவி , வீரராகவ முதலியார் , பெண்

***

SWAMI CROSSWORD 932020 (Post No.7672)

Written  by  London Swaminathan

Post No.7672

Date uploaded in London – 9 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ACROSS

1. (10)- Mother India in Sanskrit

7. (4) -battlefield

8. (7)- kingless; lawless

11. (4)- extract

12. (6)- death

13. (7)- truth

14. (4)- sour;acid

DOWN

1. (6)- Sarasvati; name of the script used from Asokan Times

2. (4) – Vishnu’s popular name

3. (7)- a famous woman in mythology; meaning no jealousy

4. (6)- silver

5. (6)- uncultured, uncivilized

6. (5)- eye; part of feminine names

9. (6)- protection

10. (6)- patience in Sanskrit

12a. (4) sentiment; there are 9 types

–subham–

நாட்டிய தாரகையின் 5 நிபந்தனைகள்; மாந்தோப்பு அழகியுடன் புத்தர் சந்திப்பு (Post.7671)

Written  by  London Swaminathan

Post No.7671

Date uploaded in London – 9 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

நாட்டிய தாரகையின் 5 நிபந்தனைகள்; மாந்தோப்பு அழகியுடன் புத்தர் சந்திப்பு (Post.7671)

2600 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா எப்படி இருந்தது என்பதை சம்ஸ்கிருத நூல்களும், பாலி மொழி நூல்களும்  காட்டுகின்றன.  இதில் மிகவும் சுவையான விஷயம் மாந்தோப்பு அழகி பற்றிய நான்கு  செய்திகளாகும்.

1.அவளுக்கு ஆம்ர பாலி (பாலி  மொழியில் அம்பா பாலி )   ‘மாந் தோப்புக்காரி’ என்று பெயர் வந்தது ஏன்?

2.புத்தர் பிரான் ஏன் அவள் வீட்டுக்குப் போய் சாப்பிட்டார்?

3.அவளுடன் ஒரு நாள் படுக்க, அவள் போட்ட ஐந்து நிபந்தனைகள் என்ன?

4.மகத சாம்ராஜ்ய சக்ரவர்த்தி பிம்பி சாரன் அவளுடன் படுக்க செய்த தந்திரம் என்ன?

2600 ஆண்டுகளுக்கு முன்னர் புத்தர் பிரான் அடிக்கடி சென்ற இடம் பீஹார் மாநிலம் ஆகும். அந்த மாநிலத்தில் வைசாலி என்னும் புகழ்மிகு நகரம் சீ ரும் சிறப்புடனும் திகழ்ந்தது. அதில் சாக்கிய குல பிரபு ‘மஹாநாமா’ வாழ்ந்து வந்தார். அவருக்கு குழந்தைகள் கிடையாது. ஒரு நாள் அவர் மாந்தோப்பில் உலவச் சென்றபொழுது ஒரு பெண் குழந்தை கேட்பாரற்றுக் கிடந்தது. அதை எடுத்து மனைவியிடம் கொடுக்கவே அவளுக்குப் பேரானந்தம் கிட்டியது. செல்வச் சீமாட்டி போல அவளை வளர்த்தார்கள். அவள் பருவத்துக்கு வந்தபோது பேரழகியாகத் தோன்றினாள் . மாந்தோப்பில் கிடைத்த பெண் ஆதலால் அவள் பெயரும் அம்பா பாலி என்றே நிலைபெற்றுவிட்டது (சம்ஸ்கிருத மொழியில் ஆம்ர என்றால் மாமரம். அது பேச்சு வழக்கு மொழிகளான பாலி /பிராக்ருதத்தில் ‘அம்பா’ ஆகிவிடும்).

பெண்ணுக்குக் கல்யாணம் கட்ட வேண்டிய தருணம் வந்தவுடன் பெற்றோருக்கு கவலையும் வந்தது. ஏனெனில் லிச்சாவி குல வழக்கப்படி அந்த ஜாதியில்தான் மணம் முடிக்க வேண்டும். ஆகையால் லிச்சாவி சபை கூட்டப்பட்டது . எல்லோரும் மண்டபத்தில் கண்களை அகலவிரித்து காத்திருந்தனர். பேரழகி அம்பா பாலி  உள்ளே புகுந்தாள் . அனைவரும் ஆச்ச ரியத்தில் மூழ்கினர். இதயம் ‘படக் படக்’ என்று துடித்தது. இவள் எனக்குத்தான் என்று எல்லோரும் ஏகமனதாக தீர்மானம் போட்டுக்கொண்டனர். அறைக்குள் யுத்தம் வெடிக்கும் அளவுக்கு போட்டா போட்டி; காட்டா குஸ்தி. சபைத் தலைவர்கள் ஒரு சமாதானத் தீர்மானம் போட்டனர் . இவளை ‘பொது மகளாக்கி’ எல்லோரும் அனுபவிப்போம் என்று தீர்மானம் போட்டனர். தந்தை தாய் மனம் துடித்தது; ஒப்புக்கொள்ள மறுத்தனர்.

வீட்டில் நுழைய ஐந்து நிபந்தனைகள்

ஆனால் பெரும் சண்டை நிகழ்வதைத் தடுப்பதற்காக அந்த புத்திசாலிப் பெண் ஒரு அறிவிப்பைப் பிரகடனம் செய்தாள் . உங்கள் தீர்மானத்தை நான்  ஏற்கிறேன் . நான் போடும்  நிபந்தனைகளை நீங்கள் ஏற்கவேண்டும் என்று சொல்லிப் புல்லட் பாயிண்டு (Bullet Points )களில் பட்டியல் போட்டாள் –

1. ஒவ்வொரு நாளும் ஒரு ஆண்மகன் மட்டுமே என் வீட்டுக்குள் நுழையலாம்

2. அவர் ஒரு இரவு என்னுடன் படுக்க 500 ‘கார்ஷா பணம்’ தரவேண்டும்; (இந்தப் பழங்கால நாணய முறை இன்று வரை தமிழில் கூட ‘காசு’ ‘பணம்’ என்று வழங்கப்படுகிறது )

3.என் வீட்டுக்குள் வந்து போவோரை யாரும் கண்காணிக்கக் கூடாது

(நல்ல வேளையாக அக்காலத்தில் சி சி டி வி C C T V cameras, காமெராக்களும் கிடையாது; கூகுள் வாட்ச் Google Watch-ம் கிடையாது)

4.எனக்கு நகரத்தில் முக்கிய இடத்தில் பெரிய வீடு கொடுக்க வேண்டும்.

5.எந்தக் காரணத்துக்காகவாவது அரசாங்க அதிகாரிகள் என் வீட்டை சோதனை போடவேண்டுமானால் எனக்கு ஏழு நாள் நோட்டிஸ் (Seven Day Notice)  கொடுத்து அதற்குப்பின்னரே என் வீட்டுக்குள் அதிகாரிகள் வரவேண்டும் .

இந்த ஐந்து நிபந்தனைகளையும் சபை ஏற்றுக்கொண்டது.

அம்பாலிக்கு பெரிய வீடு கிடைத்தவுடன் சிறந்த ஓவியனைக் கூப்பிட்டு வீட்டுச் சுவர்களில் மன்னர்கள், பிரபுக்கள், பெரிய வியாபாரிகள் ஆகியோரின் ஓவியங்களை  வரைய ச் சொன்னாள் . அதில் மகத சாம்ராஜ்யத்தின் மாமன்னன் பிம்பிசாரனின் படமும் இருந்தது. அதைப் பார்த்தவுடன் அவளுக்கு காதல் மலர்ந்தது. இந்தச் செய்தி மன்னன் காதிலும் விழுந்தது . அவனும் அம்பாபாலியின் புகழ் பரவுவதை அறிந்து அவள் வீட்டுக்குப் புறப்படத் தயாரானான். ஆனால் அதில் ஒரு சிக்கல் . மகதப் பேரரசுக்கும்  லிச்சாவிகளுக்கும் இடையே உரசல் நிலவியது. அமைச் சர்கள் வைசாலி நகருக்குள் நுழைவது ஆபத்து என்று எச்சரித்தனர் . பிம்பி சாரன் மாவீரன் ; ராணுவ தளபதி கோபன் என்பவனைப் பாதுகாப்புக்கு அழைத்துக்கொண்டு மாறு  வேடத்தில் வைசாலி நகருக்குள் போய் அம்பாபாலியுடன் ஆறு இரவுகள் தங்கினான்.

இதற்குள்  நகர அதிகாரிகளுக்கு பராபரியாகத் தகவல் கிடைக்கவே எதிரி நாட்டு மன்னனைப் பிடிக்க வீடு வீடாக சோதனை போடத் துவங்கினர். அம்பா வீட்டுக்கும் வந்தபோது அவள் 7  நாள் நோட்டிஸ் நிபந்தனையைச் சுட்டிக்காட்டியவுடன் அவர்கள் போய்விட்டனர். மன்னன் பிம்பிசாரனும் மாறுவேடத்தில் தப்பித்துச் சென்றான்.

பிம்பிசாரன் விடைபெற்றுச் செல்லும் முன்பாக அம்பாபாலிக்கு ராஜமுத்திரை பதித்த மோதிரத்தை அவளுக்கு அன்பளிப்பாகக் கொடுத்து எப்போதும் தன் அரண்மனைக்கு வரலாம் என்றான். அவளும் ஒன்பது மாதத்தில் ஒரு பிள்ளையைப் பெற்றாள் .அவன் பள்ளிப்பருவம் எய்தியபோது எல்லோரும் அவனை ‘யாருக்குப் பிறந்தவனோ’ என்று ஏசினர் . உடனே அவனை அம்பா , அரண்மனைக்கு அனுப்பிவைத்தாள். அங்கே அவன் விமல கொண்டன்னா என்ற பெயருடன் வளர்ந்து பிற்காலத்தில் புத்த பிட்சுவாக மாறினான். காலம் உருண்டோடியது .

புத்தர் வருகை

வைசாலி நகருக்கு அருகில் உள்ள கொடிகாம என்னும் ஊரில் புத்தர் தங்கியிருப்பதை அறிந்து அம்பாவும் அவருக்கு அஞ்சலி செலுத்தச் சென்றாள் அவருடைய சொற்பழிவைச் செவிமடுத்தாள் ;அதே நேரத்தில் லிச் சாவி குலத் தலைவர்களும் அங்கே வந்தனர். புத்தர் பிரானை சிஷ்யர்கள் புடைசூழ தம் இல்லத்துக்கு விருந்துண்ண அவள் அழைத்தாள் ;லிச் சாவி குலத் தலைவர்களும் புத்தரை அழைத்தனர். அனால் புத்தர் பிரான் அம்பாவின் அழைப்பை ஏற்று அவள் வீட்டுக்குச் சென்று விருந்துண்டார். இது லிச்சாவி குலத் தலைவர்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்தது . புத்தர் பிரான் சாப்பிட்டு முடித்தவுடன் தனது பெரிய மாந்தோப்புகளையும் வீடுகளையும் புத்த சங்கத்துக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார் .

நாளடைவில் தனது உடலைத் தானே பார்த்து வருத்தமுற்றாள் . உலகையே ஈர்த்த அழகான தோல், இப்போது சுருங்கிப்போய் அவளுக்கே பார்க்க அருவருப்பாக இருந்தது. அந்த நேரத்தில் புத்த பிட்சுவாக மாறிய தனது மகன் விமல கொண்டன்னா உபன்யாசம் செய்வதை அறிந்து காது குளிர கேட்டாள் ; வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்தாள்; நித்யானந்தம், பேரானந்தம் பெரும் வழி புத்தரின் வழி என்று அறிந்து புத்த பிக்ஷுணி ஆனார். அதில் அர்க்கத் என்ற பெரிய நிலையை அடைந்து பெரும்பேறு பெற்றாள் ; மகத சாம்ராஜ்யத்தின் மாமன்னனான பிம்பி சாரனும் புத்த மதத்துக்குப் பேராதரவு நல்கினான்.

TAGS- அம்பபாலி ,பிம்பி சாரன், புத்தர், நாட்டிய தாரகை

–சுபம்—