தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி20419 (Post No.6285)

Written by London swaminathan


swami_48@yahoo.com


Date: 20 April 2019


British Summer Time uploaded in London – 7-11 am

Post No. 6285

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறுக்கே

1.அஸ்ஸாம் மாநிலத்தில் பெருக்கெடுத்தோடும் பெரிய நதி

5.வகை, மாதிரி

6.காஷ்மீர் மாநிலத்துக்கும், காஸ்பியன் கடலுக்கும் பெயர் கொடுத்த முனிவர்; அவருடைய 21 மனைவிகள் மூலம் உயிரினங்கள் தோன்றின

8.கெட்ட

9.முருகனின் ஸம்ஸ்க்ருதப்  பெயர்

10.கால்வாய்; சாக்கடை

12.திருவண்ணாமலை  முனிவர்

13.தேர்

14.வங்கியில் பணம் கொடுப்பவர்; காஷியர்

கீழே

1.தஞ்சைப் பெருவுடையார்

2.யாருக்கும் தெரியாமல் அனுப்பும் மடல்

3.குறைகூறுவதற்கும் இதே சொல்; காவிரிப் பூம்பட்டிணத்துக்கும் அஃதே

4.சுவாமி விவேகாநநதரின் குரு; கல்கத்தா காளி உபாசகர்

7.கல்யாணத்துக்கு முன் நல்ல நேரம் பார்த்து மண்டபத்துக்கு இதை ஊன்றுவர்

11.இந்த இஸம் (ஈயம்) கேலிக்கூத்தாகப் போய்விட்டது தற்கால இந்தியாவில்!

15.ஒற்றன்

–subham–

ஒன்றே குலம்; ஒருவனே தேவன்! (Post No.6284)

Written by London swaminathan


swami_48@yahoo.com


Date: 20 April 2019


British Summer Time uploaded in London – 6-57 am

Post No. 6284

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

Swami’s Cross word 19419 (Post No.6282)

Written by London swaminathan


swami_48@yahoo.com


Date: 19 April 2019


British Summer Time uploaded in London – 16-09

Post No. 6282

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ACROSS

1. Girl’s name; protection, care, defence

5. Pranava mantra

6. – sin

9. – great man, saint

10. – invincible

DOWN

1. – form, name of girls

2. – a part

3. – parrot, son of Vyasa

4. – indestructible; Siva’s name; a town name in Tamil Nadu

7. – pounded rice; flat rice

8. – caste sur name; battle

–SUBHAM–

Number ONE in Literature (Post No.6283)

Written by London swaminathan


swami_48@yahoo.com


Date: 19 April 2019


British Summer Time uploaded in London – 16-13

Post No. 6283

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

–subham—

இறந்த யானை எழுந்த கதை! (Post No.6281)

Written by S Nagarajan


swami_48@yahoo.com


Date: 19 April 2019


British Summer Time uploaded in London – 15-11

Post No. 6281

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

கொங்கு மண்டல சதகம்

இறந்த யானை எழுந்த கதை!

ச.நாகராஜன்

63 நாயன்மார்களில் எட்டாவது நாயன்மாராக இடம் பெற்று போற்றப்படுபவர் எறிபத்த நாயனார்.

இவர் கரூரைச் சேர்ந்தவர்.

இவரைப் போற்றி கொங்கு மண்டல சதகத்தில் 27வது பாடலாக இடம் பெறும் பாடல் இது :

நதிசூடும் வேணிக் கருவூர்ப் பசுபதி நம்பருக்குப்

புதுமாலை கட்டுஞ்ச் சிவகாமி யாண்டவன் போந்தெருவின்

மிதமீறிப் பூவினைச் சிந்துகை யான்விறன் மீறவெட்டி

மதயானை யைக்கொன் றெழுப்பிய துங்கொங்கு மண்டலமே

பாடலின் பொருள் : கரூர்ப் பசுபதி ஈஸ்வரருக்காக மாலை கட்டும் திருத்தொண்டினை மேற்கொண்டிருந்தவர் சிவகாமி ஆண்டவர். அவர் பூக்கூடையைப் பிடுங்கி எறிந்த யானையைக் கொன்று பின்னர் எழுப்பியதும் கொங்கு மண்டலமே.

அருமையான திருவிளையாடல் ஒன்றைக் கூறும் பாடல் இது.

எறிபத்தர் என்பவர் கரூரில் வாழ்ந்து வந்த சிவனடியார். அடியார்களுக்கு ஆபத்து வந்தால் அதற்குக் காரணமாக இருந்தவர்களை வெட்டுகின்ற கொள்கையைக் கடைப்பிடித்து வந்தவர் அவர். ஒரு நாள் சிவகாமி ஆண்டவர் என்பவர் பூக்களை எடுத்துக் கொண்டு தெருவழியே வந்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த நாட்டை  ஆளும் புகழ்ச் சோழனாரது பட்டத்து யானை மதம் கொண்டு அபூக்கூடையைப் பிடுங்கித் தூர எறிந்தது. இதனைக் கண்ட எறிபத்தர் அந்த யானையையும் கூட வந்த பாகர்களையும் கொன்றார்.

இவரது அன்பின் திறத்தைக் கண்ட புகழ்ச் சோழனார் சிவனடியார்க்குத் தீங்கு செய்த யானையை வளர்த்தது தான் தானே என மனம் நொந்து தன்னையும் அல்லவோ அவர் கொல்ல வேண்டும் என்று எண்ணினார். எறிபத்தரிடம் தன் வாளைக் கொடுத்துத் தன்னைக் கொல்லுமாறு வேண்டினார். ‘ஆஹா! சிறந்த பக்தியுள்ள சோழனாரைக் கொல்லும் தீங்கை அல்லவோ இழைக்க வேண்டி இருக்கிறது’ என்று பதைபதைத்த எறிபத்தர் தன் கழுத்தை அவ்வாளால் அறுக்க முயன்றார். இதைக் கண்ட புகழ்ச் சோழனார் மனம் நடுங்கி எறிபத்தரின் கையையும் வாளையும் பிடித்துக் கொண்டார்.

அப்போது ஆகாயத்திலிருந்து அசரீரி – ஆகாயவாணி – ஒன்று எழுந்தது.

அதன் படி இறந்த யானையும் பாகர்களும் உயிர்பெற்று எழுந்தனர்.

சிவபெருமானின் இந்த அருள் விளையாட்டைக் கண்டு மக்கள் பக்திப் பரவசம் எய்தினர்.

அப்படிப்பட்ட எறிபத்த நாயனார் வாழ்ந்து யானை உயிர்ப்பிக்கப்பட்டது கொங்கு மண்டலத்திலேயே என்று புகழ்கிறது கொங்கு மண்டல சதகம்.

இவ்வரலாறைக் கூறும் திருத்தொண்டர் புராண சாரத்தில் வரும் பாடல் இது:

திருமருவு கருவூரா ரிலையார் சாத்துஞ் சிவகாமி யார்மலரைச் சிந்த யானை,

யரனெறியோ ரெறிபத்தர் பாகரோடு மறவெறிய வென்னுயிரு மகற்றீரென்று,

புரவலனார் கொடுத்தபடை யன்பால் வாங்கிப் புரிந்தரிவான் புகவெழுந்த புனித வாக்காற்,

கரியினுடன் விழுந்தாரு மெழுந்தார்தாமுங் கணநாத ரதுகாவல் கைக் கொண்டாரே

                  – திருத்தொண்டர் புராண சாரம்

  • ***

–subham–

கைக்கு கங்கணம் அழகா? காதுக்கு குண்டலம் அழகா? (Post No.6280)

Written by London swaminathan


swami_48@yahoo.com


Date: 19 April 2019


British Summer Time uploaded in London – 7-54 am

Post No. 6280

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

–SUBHAM–

நந்தனார் சரித்திரம் உருவான கதை! (Post No.6279)

Compiled  by London swaminathan


swami_48@yahoo.com


Date: 19 April 2019


British Summer Time uploaded in London – 7-17 am

Post No. 6279

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

கோபால கிருஷ்ண பாரதியார் ஒரு யோகி, கவிஞர், சங்கீத மேதை.

அவர் நரிமணம் என்னுமிடத்தில்  1811ம் ஆண்டில் பிறந்து புகழ் கொடி நாட்டியவர்.

அவர் பற்றிய சுவையான இணைப்பைப் படிப்பதற்கு முன் சில் வார்த்தைகள்:–

அவர் வாழ்நாள் முழுதும் பிரம்மச்சாரி.

தந்தை பெயர் ராமசாமி பாராதியார்

தாத்தா பெயர் கோதண்டராம ஐயர்

குருவின் பெயர்கோவிந்த சுவாமி ஐயர், மாயூரம்

சீடர்களில் முக்கியமானவர்- மாயவரம் முனிசீப் வேத நாயகம் பிள்ளை

இறந்த ஆண்டு- 1896

நந்தனார் சரித்திரம் நூலாக வர உதவியவர் – பிரெஞ்சு அதிகாரி- சீசய்யா.

கோபால கிருஷ்ண பாரதியார் , தனது படைப்பில் பல புதுமைகளையும் சேர்த்தார்.

பெரியபுராணம், நம்பியாண்டாரின் திருத் தொண்டத்தொகையில் மிகச் சுருக்கமாக நந்தன் சரித்திரம் உளது. அதில் அந்தணர்ர்- நந்தன் வாக்குவாதம், இரவில் சிவ பெருமானே விவசாய வேலைகளைச் செய்து அந்தண நில உரிமையாளரை வியக்கச் செய்தது முதலிய சில அம்சங்களை கோபால கிருஷ்ண பாரதியார் சேர்த்தார். பிற்காலத்தில் அவரது கீர்த்தனைகள் தண்டபாணி தேசிகர் முதலிய சங்கீத மேதைகளால் பாடப்பட்டதாலும் திரைப்படப் பாடல்களாக வந்ததாலும் மிகவும் பிரபலமாகின.

நந்தனார் சரித்திரக் கீர்த்தனைப் பட்டியலைக் காண்க

How did Gopalakrishna Bharatiyar compose Nandanar Charitram? (Post No.6278)

Written by London swaminathan


swami_48@yahoo.com


Date: 18 April 2019


British Summer Time uploaded in London – 20-31

Post No. 6278

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

பெண்ணே! கேலிச் சித்திரம் வேண்டவே வேண்டாம்! பிரபல ஓவியர் புத்திமதி! (6277)

Written by London swaminathan


swami_48@yahoo.com


Date: 18 April 2019


British Summer Time uploaded in London – 8-28 am

Post No. 6277

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

F 16 விமானத்தை எதிர்கொண்ட இந்திய விமானப் படை! (Post No.6276)

Written by S Nagarajan


swami_48@yahoo.com


Date: 18 April 2019


British Summer Time uploaded in London – 7-33 am

Post No. 6276

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

.﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽

டைரக்டர் திரு கே.பாக்யராஜ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வாரம் தோறும் வெளிவந்து கொண்டிருக்கும் பாக்யா இதழ் 31ஆம் ஆண்டில் பெரிய  அளவில் மாறி புதுப் பொலிவுடன் வெளியாகி இருக்கிறது. வார இதழாக இருந்த பாக்யா 1-4-2019 முதல் மாதம் இருமுறை வெளிவரும் இதழாக மாறியுள்ளது.

2019, ஏப்ரல் 1-15 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள ஒன்பதாம் ஆண்டு ஐந்தாம் கட்டுரை – அத்தியாயம் 421

அதி நவீன F 16 விமானத்தை எதிர்கொண்ட இந்திய விமானப் படை!

ச.நாகராஜன்

உலகெங்கும் இப்போது பரவி வரும் ஒரு ஜோக் இது.

பாகிஸ்தானுக்கு F 16 ரக விமானங்களை அமெரிக்கா சப்ளை செய்தவுடன் அதன் அதி நவீன தொழில்நுட்பத்தைக் கண்டு பிரமித்த பாகிஸ்தான் பைலட்டுகள் அதை இயக்குவதற்கான பயிற்சி பெற அமெரிக்க பயிற்சியாளரை அழைத்தனர். அவர் வந்து விரிவாக அனைத்து தொழில்நுட்ப உத்திகளையும் விளக்க அதை பாகிஸ்தான் பைலட்டுகள் ஆச்சரியத்துடன் கேட்டனர்.இறுதியாக பயிற்சி முடியும் சமயம் ஒரு பாகிஸ்தான் பைலட், “சார், எல்லாவற்றையும் சொல்லி விட்டீர்கள். ஆனால் அதை எப்படி தரை இறக்குவது என்று சொல்லவில்லையே” என்று கேட்டார்.

அதற்கு அமெரிக்க பயிற்சியாளர், “அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்; அதை இந்திய விமானிகள் பார்த்துக் கொள்வார்கள்” என்று பதில் சொன்னார்.

சமீபத்திய பாகிஸ்தானின் எல்லை மீறலிலும், தீவிரவாதிகளின் தாக்குதலிலும் இந்திய விமானப்படையின் சாகஸம் உலகையே வியக்க வைத்து விட்டது.

அதி நவீன F 16  விமானங்கள் நமது விமானப்படையை அச்சுறுத்த முடியவில்லை.

பழைய கால போரில் பாட்டன் டாங்கிகள் நம்மிடம் வாங்கிய அடியை அமெரிக்காவே பார்த்து அயர்ந்து போனதில்லையா!

இப்போது F16 காலம்.

F16 பற்றிக் கொஞ்சம் அறிந்து கொள்ள வேண்டியது நமது கடமை!

அமெரிக்கக் கண்டுபிடிப்பான F16 Fighting Falcon அதி நவீன போர் விமானம்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட F16  விமானங்கள் அமெரிக்காவில் உள்ளன. பாகிஸ்தானில் இப்போது 85 F16 ரக விமானங்கள் உள்ளதாக நம்பப்படுகிறது.

வானில் நேருக்கு நேர் சண்டை, தரையில் உள்ளவற்றின் மீது தாக்குதல், மின்னணுப் போர் என இப்படிப் பல வகையிலும் F16 தனது சாகஸ வேலைகளைக் காட்ட வல்லது.

இதன் போரிடும் வட்ட எல்லை மற்ற எல்லா ஃபைட்டர் விமானங்களின் அளவை மீறியது. எல்லா தட்பவெப்ப நிலைகளிலும் இது பறக்கும்; போரிடும். தாழ்ந்து பறக்கும் விமானங்களைக் கூட இது இனம் கண்டு காட்டி விடும்.

500 மைல்களுக்கு மேலும் பறக்க வல்ல இது ஆயுதங்களை குறி பார்த்து வீசி இலக்கு தவறாமல் தாக்கும்; எதிரி விமானங்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும்.


       இதன் தயாரிப்பில் இதற்கு முன்னர் இருந்த F15 மற்றும் F111 ரக விமானங்களில் இருந்த அற்புதமான அம்சங்கள் மட்டும் எடுத்துக் கொள்ளப்பட்டன. பராமரிப்பு செலவைக் குறைத்து, எடையையும் குறைத்து வடிவமைக்கப்பட்டது இது. எரிபொருள் நிரப்பிய நிலையில் இது ஒன்பது G அளவு தாக்குப் பிடிக்கும் அதாவது புவி ஈர்ப்பு விசையின் ஒன்பது மடங்கு அளவு தாக்குப் பிடிக்கும். இப்போதிருக்கும் இதர விமானங்கள் இந்த நிலையை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.

பைலட் அமரும் காக்பிட் தெளிவான பார்வையை பைலட்டுக்கு அளிக்கும்.  சீட்டின் பின் இருக்கையின் டிகிரி 13 இலிருந்து 30 டிகிரி என்ற பெரிய மாறுதலை அடைந்துள்ளதால் பைலட்டுக்கு அதிக வசதியைத் தரும்.

1981 நவம்பரில் முதன் முதலாகப் பறக்க ஆரம்பித்த F16 விமானம்,  இரவு நேரத் தாக்குதலுக்கும் உகந்த ஒன்று.

2001, செப்டம்பரிலிருந்து பயங்கரவாதத்தை எதிர்க்கும் செயல்களில் F16 வெற்றிகரமாக இயக்கப்படுவது குறிப்பிடத் தகுந்த ஒன்று.

இப்படிப்பட்ட விமானங்களை எதிர்கொண்டு தான் நாம் நமது வான் ரீதியிலான பாதுகாப்பை உறுதி செய்து கொண்டிருக்கிறோம்.

2019, பிப்ரவரி இறுதி வாரத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு F 16  ரக விமானத்தை நாம் சுட்டு வீழ்த்தியதாக நமது பாதுகாப்புத் துறை தெரிவித்தது. அந்தச் செய்தியின் முழுத் தாக்கத்தையும் உணர இவ்வளவு விவரங்களையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். நமது வீரர்களின் திறமையை உணர்ந்து அவர்களைப் போற்ற வேண்டும்.

இந்த நிலையில்,  நமது விமானப்படையை வலுப்படுத்த அதி நவீன ரக விமானங்களை வாங்க வேண்டும் என நமது விமானப்படை தலைமை கூறி வருகிறது.

அதை இந்திய மக்களும் ஆமோதிக்க இப்போது வலுவான நிலையில் நமது விமானப்படை உருமாற்றம் பெற்று வருகிறது! நம்மை பங்கப்படுத்த முயலும் தீவிரவாதத்தை அடியோடு ஒழிக்கத் தயாராக ஆகி வருகிறது.

வாழிய பாரதம்! வெல்க பாரதம்! 

அறிவியல் அறிஞர் வாழ்வில் ..

டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருந்த காலம் அது. அக்னி II என்ற Intermediate Range Ballistic Missile  எனப்படும் இடைநிலை வீச்சு எறி ஏவுகணை தயாராகி விட்டது. ஆறு மாதங்கள் ஆகி விட்டன. அதை விண்ணில் ஏவ வேண்டியது தான் பாக்கி. ஆனால் அதை கலாம் தள்ளிப் போட்டதற்கான காரணம் இயற்கை மீது அவர் வைத்திருந்த நேசம் தான். ஒரிஸ்ஸா கடற்கரையோரம் இருந்த வீலர் தீவில் (Wheeler Island) தான் அது ஏவப்பட்டு பரிசோதிக்கப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. அங்குள்ள மணல் திட்டில் தான் மிக மிக அருகி வந்த இனமான ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் (Olive Ridley Turtles) தங்கள் இனப் பெருக்கத்தைச் செய்து முட்டை இட்டு வந்தன. நம்ப முடியாத தொலைவிலிருந்து – அதாவது ஆஸ்திரேலியாவிலிருந்து அவை இவ்வளவு தூரம் வந்து ஒரு குறிப்பிட்ட இடமான இந்தத் தீவைத் தேர்ந்தெடுத்து வருடம் தோறும் நவம்பர் முதல் மார்ச் வரை இனப்பெருக்கம் செய்து முட்டையிடுவது வழக்கம். ஒரிஸ்ஸாவில் இருந்த இயற்கை ஆர்வலர்கள் இந்த கடல் ஆமைகளுக்கு ஒருவித இடையூறும் வரக்கூடாதே என்று கவலைப்பட்டு கலாமை அணுகினர். மிக முக்கியமான பாதுகாப்புப் பணியில் இதை மிக சுலபமாக தலைமை ஆலோசகரான கலாம் நிராகரித்து விட்டு திட்டமிட்டபடி சோதனையை நடத்த முடியும். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. உடனடியாக ஒரு உத்தரவைப் பிறப்பித்தார்.

     அந்த உத்தரவின் படி அந்தத் தீவில் இருந்த சோதனைக்கூட நிலையத்தில் பணியாற்றிய அனைத்து விஞ்ஞானிகளும் சுமார் ஐந்து மாத காலம் மிக மெதுவாக எரியும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தான் தங்கள் வேலைகளைச் செய்து வந்தனர். ஆமைகளைப் பாதிக்கக்கூடாது என்று மின்சக்தி விளக்குகளையோ அல்லது அதிக வெளிச்சத்தையோ அவர்கள் ஐந்து மாதம் பயன்படுத்தவே இல்லை.

     கடல் ஆமைகளின் இனப்பெருக்க சீஸன் – காலம் – முடிந்தவுடன், ‘மதிப்பிற்குரிய அந்த ஆஸ்திரேலிய விருந்தாளிகள்’ அனைவரும் புறப்பட்டுப் போனதை உறுதி செய்த பின்னர் அக்னி II ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டது; பெரிய வெற்றியை அடைந்தது.

இந்தியாவில் காலம் காலமாக இருந்து வரும் பாரம்பரியத்தை கலாம் எப்படி அணுவளவும் பிசகாமல் பாதுகாத்தார் என்பதை அனைவரும் அறிந்து அவரை வெகுவாகப் போற்றினர்.

யாருக்கும் நாம் தீங்கு செய்ய மாட்டோம்; வம்புக்கு வந்தவரை சும்மா விட மாட்டோம் என்பது தான் நமது பாதுகாப்புத் துறையினரின் இலட்சியம்! அதை உரமிட்டு வளர்த்தவர் அப்துல்கலாம்!