Written by London swaminathan
Date: 14 APRIL 2017
Time uploaded in London:- 14-19
Post No. 3818
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வேத கால மற்றும் பழைய நாகரீகங்களைச் சேர்ந்தோர் எப்படி ஆரூடம் சொன்னார்கள் ஜோதிடம் பார்த்தார்கள் என்று (Please see below for the link) எழுதினேன். இன்று ஹிட்டைட்ஸ் (Hittites) மக்கள் ஜோதிட நம்பிக்கைகளைப் பார்ப்போம்.
ஹிட்டைட்ஸ் என்போர் சம்ஸ்கிருதம் தொடர்புள்ள இந்திய- ஐரோப்பிய மொழி ஒன் றைப் பேசினர். கி.மு.1600 முதல் கி.மு. 1200 வரை 400 ஆண்டுகளுக்கு சிரியா-துருக்கி பகுதிகளை ஆண்டனர்,
பிராணிகளை அறுத்து அதன் உடலுறுப்புகளைப் பார்த்து ஜோதிடம் சொல்லும் முறை பாபிலோனியாவில் இருந்தது. இது இதாலியில் ரோம் நகரைச் சுற்றியிருந்த எட்ருஸ்கன் (Etruscan) நாகரீகத்திலும் காணப்பட்டது அதிசயமானதே.
பாபிலோனிய முறையிலிருந்து சிறிது மாறுபட்ட முறையை இவர்கள் பின்பற்றினர். அதாவது நாம் என்ன கேள்வி கேட்கிறோமோ அதற்குப் பதிலை உடல் உறுப்பிலிருந்து பெறுவர். அதாவது வியாக்கியானம் செய்வர். பாபிலோனிய முறை சிக்கலானது ஆனால் ஹிட்டைட்ஸ் கேள்விகள் எளிமையானவை.
பாபிலோனியர்களோ, ஹிட்டைட்ஸ்களோ, காசுகொடுத்து ஜோதிடம் கேட்கும் வணிகம் நடத்தவில்லை; அதாவது சோதிடம் ஒரு தொழிலாக இல்லை. பறவைகள் (சகுனம்), பாம்பு ஜோதிடம் ஆகியன இருந்தன. கிரகங்கள், கிரகணங்கள், நட்சத்திரங்களைக் கொண்டும் சோதிடம் சொன்னார்கள்.
பிராணிகளை வெட்டி அதன் கல்லீரல் (liver), குடல் (Intestine) ஆகியவற்றில் அசாதரணமாக ஏதேனும் காணப்பட்டால் அதைக் கொண்டு ஆருடம் சொன்னார்கள். எண்ணையைக் கொட்டி அது எடுக்கும் வடிவத்தை வைத்தும் எதீர்காலத்தைக் கணித்தனர்.
பாம்பு, தேனீக்கள், பறவைகளின் போக்கு, கனவுகள், இரவு நேரத்தில் வாயிலிருந்து எச்சில் வடிதல் முதலியவற்றுக்கும் விளக்கம் கூறும் களிமண் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன..
ஏராளமான கல்லீரல் (liver) வடிவ உருவங்களைத் தொல்பொருட்துறை றையினர் கண்டு எடுத்துள்ளனர். போகஸ்கோய் (Bogazkoy) என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இத்தகைய வடிவங்கள் எட்ருஸ்கன் (Etruscan) நாகரீகத்தைவிட 1200 ஆண்டுகள் பழமையானவை. அதாவ இற்றைக்கு 1800 ஆண்டுகளுக்கு முந்தையவை.
பாபிலோனிய சொற்கள், ஹிட்டைட்ஸ் ஜோதிடத்தில் காணப்பட்டாலும் அவர்கள் சொன்னதை இவர்கள் அப்படியே ஏற்கவில்லை. ஹிட்டைட்ஸ் மக்கள் மிகவும் சந்தேகப் பேர்வழிகள். ஆ கையால் ஒரே கேள்விக்குப் பல்வேறு சோதிட, ஆரூட முறைகளைப் பின்பற்றி விடைகண்டனர்.
சோதிடராகச் செயல்பட்டவர் ஒரு ஆட்டின்மீது கைவைத்து, “வாடிக்கையாளை பிரியப்பாட்டால் இதன் குடல்கள், உடல் உறுப்புகளைச் சோதிக்கட்டும்” என்பார். உடனே வாடிக்கையாளர் அந்த ஆட்டைப் பலி கொடுத்து அதன் உள் உறுப்புகளைப் பார்ப்பார்.
மக்களிடம் உடலூனம் பற்றி பல மூட நம்பிக்கைகள் இருந்ததால் அதையே மிருகங்களின் உடலுறுப்புகளுக்கும் பயன்படுத்தினர்.
ஒரு பெண்ணுக்கு கண் பார்வையற்ற குழந்தை பிறந்தால் அந்த வீட்டுக்கு துரதிர்ஷ்டம்; ஒரு குழந்தை பிறந்தவுடன் வாயைத் திறந்து பேசினால் நாட்டைப் புயல் தாக்கும்; சிங்கம் போலத் தலையுடன் குழந்தை பிறந்தால் எதிரி மன்னர் தாக்குவார் – என்றெல்லாம் நம்பினர்.
இதைத் தவிர கிரகணங்களால் வரும் தீமைகள் குறித்தும் எழுதிவைத்தனர்:
16 ஆம் தேதி கிரகணம் பிடித்தால், மன்னர், நாட்டைக் குட்டிச் சுவர் ஆக்கிவிடுவார். அல்லது வேற்று நாட்டு மன்னர் ஆட்சியைக் கைப்பற்றுவார். 20 ஆம் தேதி கிரகஹணம் வந்தால், நாடு கடத்தப்பட்ட இளவரசன் திரும்பி வந்து தந்தையை விரட்டி ஆட்சியைக் கைப்பற்றுவான். இவ்வாறு ஒவ்வொரு நாளுக்கும் ஒரு ஆருடம்! ஆக இந்த ஜோதிட (மூட) நம்பிக்கைகள் 3000 ஆண்டுகளுக்கும் முன்னரே மத்தியக் கிழக்கில் இருந்தன!!!
From my old article posted on 19th April 2015:——-
பாபிலோனிய, சுமேரிய நம்பிக்கைகள்
இதாலி நாட்டில் இருந்த எட்ருஸ்கன் நாகரீகம் இந்துக்கள் போலவே பறவைகள் சகுனத்தில் நம்பிக்கை வைத்தனர். தமிழர்கள் புள் (பறவை) என்பர்; அவர்கள் புலோன் என்பர்.
எட்ருஸ்கன், சுமேரியர், பாபிலோனிய முதலியோர் ஆடு,மாடு முதலியவற்றின் உடல் உறுப்புகளை எடுத்து அதன் நிலையைக் கண்டு சோதிடம் சொன்னார்கள். 3000ஆண்டுக்கு முந்தைய ஆடுகளின் கல்லீரல் வரைபடம், களிமண் மாதிரிகள் கிடைத்திருக்கின்றன. இந்துக்கள் வாஸ்து சாஸ்திர கட்டம் போடுவது போல அந்த கல்லீரல் உறுப்பின் மீது இவர்கள் கட்டம் போட்டு ஆரூடம் சொன்னார்கள். நுரையீரல், மற்றும் குடல் சுற்றி இருக்கும் நிலை ஆகியவற்றைக் கொண்டும் சோதிடம் சொன்னார்கள்.
மஹாபாரதத்தில் போர் துவங்கும் முன் வானத்தில் தோன்றிய அறிகுறிகள் பற்றியும், புறநானூற்றில், சேர மன்னன் இறப்பதற்கு முன் தோன்றிய வால் நட்சத்திரம் பற்றியும் சொல்லப் பட்டிருக்கின்றன. இது போலவே மத்திய கிழக்கிலும் (சுமேரிய/பாபிலோனிய) நம்பிக்கைகள் இருந்தன. இந்துக்களைப் போலவே அரசனின் உடல் நலம்/ஆயுள்,படை எடுப்பில் வெற்றியா தோல்வியா, கோவில் கட்டுவது எப்போது, அதிர்ஷ்டம் அடிக்குமா? அடிக்காதா? என்பது போன்ற பல விஷயங்களை அவர்கள் சொன்னார்கள்.
Read also my articles:
சகுனமும் ஆரூடமும்: வேத கால நம்பிக்கைகள்; posted on 19 April 2015
Can Birds Predict Your Future? (Posted on 22 July 2012)
Beware of Wagtail Birds: Prediction by Varahamihira (19 February 2015)
How to find water in the Desert? Varahamihira on Water Divination (Posted on 16 February 2015)
Tamil Astrology: Rope Trick for Predictions (Posed on 27 February 2013)
Two Tamil Articles posted on 12 April 2012 on Greek Delphi Oracles and Tamils
–Subham–