உலக மஹா கீதம்; வேதத்தில் மேலும் ஒரு தேசீய கீதம்! (Post No.10,326)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,326

Date uploaded in London – –   11 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வியாசர் என்பவரை இந்துக்களின் எல்லா பிரிவினரும் ‘குரு’ என்று ஏற்கின்றனர் ; அது மட்டுமல்ல; வியாசரை விஷ்ணுவின் அ வதாரமாகவும் கொள்கின்றனர். அவரது நினைவாக வியாச பெளர்ணமி தினம் முதல், 4 மாதங்களுக்கு சாதூர் மாஸ்ய விரதமும் அனுஷ்டிக்கின்றனர்.;ஏன் தெரியுமா?

அவர் இறந்தவுடன் கலியுகம் துவங்கப் போவது பஞ்சாங்கக் கணக்குப்படி தெரிந்தது; உடனே அவசரம் அவசரமாக புராண இதிஹாச வேதங்களைத் தொகுத்தார். அவர் பெயரில் உள்ள விஷயங்களைக்  கணக்கிட்டால் பத்து கின்னஸ் புஸ்தகத்தில் எழுதலாம் ; தனக்குப் பின்னர் பிறக்கப்போகும் கலியுகத்தில் மக்களுக்கு வேதங்களைப் பின்பற்ற நேரமும் இருக்காது; நாட்டமும் இருக்காது என்று கருதி 1400 வரிகளில் இந்து மதத்தை  ‘ஜுஸ்’  பிழிந்து பகவத் கீதை என்னும் பெயரில் மஹாபாரதத்தில் சேர்த்தார். மகாபாரதத்தின் மொத்தவரிகள் இரண்டு லட்சம் வரிகள். அதில் ஒரு மில்லியன்- பத்து லட்சம் சொற்கள் உள்ளன !

அதே போல 18 புராணங்களையும் தொகுத்தார். இதை எல்லாம் விட ஒரு அற்புதமான வேலையை அவர் செய்தார். அதில்தான் அவர் உலக மஹா ஜீனியஸ் / மஹா மேதாவி என்பது தெரிகிறது. எழுதக்கூடாது; வாய் மொழி மூலமே பரப்ப வேண்டும்; அதிலும் ஒலி பிசக்கக்கூடாது ; அதிலும் மனம், மொழி, மெய் மூன்றிலும் உண்மை உடையவர்கள் மட்டுமே கற்கவேண்டும் என்று விதி மேல் விதிகளைக் கொண்ட வேதங்களை பலரும் பின்பற்றமுடியாமல், அதாவது நினைவிற் வைத்துக்கொள்ள முடியாமல், தவிப்பதைக் கண்டார். உடனே அத்தனையையும் திரட்டி 4 பிரிவுகளாகப் பிரித்தார். அதை விட முக்கியம் அதைப் பரப்ப 4 சீடர்களைத் தேர்ந்தெடுத்தார் ; ‘இதோ பாருங்கள்; இனி உங்கள் பொறுப்பு இதைப் பரப்புங்கள் என்றார்

. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பாடப்பட்ட சங்கத் தமிழ் நூல்களும் நான் மறை அந்தணர் பற்றீச் சொல்லி, ‘எழுதாக் கற்பு’ என்று வேதங்களைப் புகழ்கின்றன. அது மட்டுமல்ல. தமிழின் மிகப்பழைய நூலான தொல்காப்பியத்துக்கு சர்ட்டிபிகேட் certificate  கொடுத்து இது நல்ல புஸ்தகம்தான் என்று சொல்லியவரும் அப்படிப்பட்ட நான்மறை முற்றிய அதங்கோட்டு ஆச்சார்யார் ஆவார் .

xxxx

ரொம்ப நாளா எனக்கு ஒரு சந்தேகம் .

தமிழ் மன்னர்கள் உள்பட இந்தியா முழுதும் மன்னர்கள் வேதப் பிராமணர்களுக்கு ஏன் தங்கக் காசு கொடுத்தனர் (ஹிரண்ய தானம்), ஏன் நில புலனகளைக் கொடுத்தனர் (பிரமதேயம்) என்ற கேள்வி என் மனதில் வரும்; அது மட்டுமா? உலக மஹா தமிழ்க் கவிஞன் சுப்பிரமணிய பாரதி வேதம் என்று வாலாக என்று கொட்டு முரசே என்று ஏன் செப்பினான் என்றும் எண்ணுவேன்.

இதற்கெல்லாம் பதில் ரிக் வேதத்தின் கடைசி பாடலில் இருக்கிறது (10-11) அதுதான் 1028 ஆவது துதி. பத்தாயிரத்து 552 ஆவது மந்திரத்துக்கு மூன்று, நான்கு மந்திரத்துக்கு முந்திய 2, 3 மந்திரங்கள்.

அங்கே வேதத்தின் சாரத்தை செப்பிவிடுகிறார்.

xxxx

ஒற்றுமை! ஒற்றுமை! ஒற்றுமை!

சொல்லிலே, செயலிலே சிந்தனையில் ஒற்றுமை !

முதல் உலக யுத்தம் முடிந்த பின்னர் ஏற்பட்ட LEAGUE OF NATIONS லீக் ஆப் நேஷன்ஸ் என்ற சர்வ தேச சபையும் இதையே சொன்னது;  ஹிட்லரும் முசோலினியும் கேட்கவில்லை இரண்டாவது உலக மகா யுத்தம் வெடித்தது ;  அது  முடிந்த பின்னர் ஐ.நா. சபை தோன்றியது. அதன் சாசனத்திலும் அமைதி, ஒற்றுமை வலியுறுத்தப்பட்டது

நமது காலத்தில் ‘புதியதோர் உலகம் செய்வோம் ; கெ ட்ட போரிடும் உலகினை வேருடன் சாய்ப்போம்’ என்று பாரதி தாசன் பாடினார் ; காஞ் சி பரமாசார்ய சுவாமிகள் ஐ நா சபையில் பாடுவதற்காக எம் எஸ் சுப்புலெட்சுமிக்கு எழுதிக்கொடுத்தித்த ‘மைத்ரீம் பஜத  பாடலிலும் இதையே சொன்னார். ஆனால் உலக மகா மேதாவி வேத வியாசர் இதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ரிக் வேதத்தின் கடைசி பாடலில் முத்தாய்ப்பாக வைத்தார். அதாவது 4 வேதங்களின் 20,000 மந்திரங்களின் மொத்தக் கருத்தே இதுதான் என்பது அவரது துணிபு..

அதைப் பார்ப்பதற்கு முன்னர் இன்னொரு சுவையான செய்தியைச் சொல்கிறேன். “சரி, ஆறு மாதத்தில் ரிக் வேதத்தின் 10,552 மந்தி ரங்களையும் ஆங்கிலத்திலும் தமிழிலும் படித்து முடித்துவிட்டோம்; கடைசி வேதமான அதர்வண வேதத்தையும் படிப்போமே” என்று எடுத்தால், அதில் ரிக் வேதத்தை விட  அருமையான ஒற்றுமை மந்திரம் இருப்பதைக் கண்டு ஆச்சர்யத்தில் மூழ்கினேன்.

xxx

இதோ இரண்டு மந்திரங்களையும் நீங்களும் படியுங்கள்

ரிக் வேதம் 10-191

“எல்லோரும் ஒன்று சேருங்கள்

எல்லோரும் ஒன்றாகப்  பேசுங்கள்

முன் காலத்தில் தேவர்களும் ஒற்றுமையுடன் இருந்து

வேள்வியில் தங்களுக்குரிய பங்கினை ஏற்றார்கள் .

உங்களுடைய மந்திரங்கள் ஒன்றுபோல ஒலிக்கட்டும்

உங்களுடைய அசெம்பிளியில் ஒன்றுபட்ட குரல் கேட்கட்டும்

எல்லோரும் ஒன்று போல சிந்திக்கட்டும்

எல்லோரும் ஒன்றையே  நாடட்டும்

உங்களுடைய அசெம்பிளி தீர்மானமும் ஒன்றாக இருக்கட்டும்

உங்களுடைய இருதயம்/ உள்ளக்கிடக்கை ஒன்றுபோல ஆகட்டும்

உங்களுடைய எண்ணங்கள் எல்லாம் ஒன்றையே சிந்திக்கட்டும்” .

இதிலுள்ள ‘அசெம்பிளி’ என்ற ஆங்கிலச் சொல் 100 ஆண்டுகளுக்கு முன்னர் வேதத்தை மொழி பெயர்த்த கிரிப்பித் Ralph T H Griffith தின் சொல். இன்று நாடு முழுதும் பயன்படுத்தும் சபை/ அவை என்ற சொல் சம்ஸ்க்ருத மந்திரத்தில் உள்ளது

XXX

இதோ அதர்வண வேத ஒற்றுமை மந்திரம்

மூன்றாவது காண்டம் 30 ஆவது மந்திரம்

“நான் உங்களுக்கு ஒரே இருதயத்தை, ஒரே மனத்தைக் கொண்டு வருகிறேன்.

வெறுப்பிலிருந்து விடுதலை பெறுக; பிறந்த கன்றுக்குட்டியிடம் தாய்ப்பசுவுக்கு உள்ள பாசம் போல பாசம் பெருகட்டும்

‘தந்தை தாய் சொல் மிக்க மந்திரம் இல்லை’ என்பதை மகன் உணரட்டும் ; கணவனிடம் மனைவி அன்பு மழை பொழியட்டும்; தேன்மிகு இனிமையான சொற்களை பேசட்டும்

சகோதரன் மற்ற சகோதரனை வெறுக்கக் கூடாது; சகோதரி, மற்ற சகோதரியை வெறுக்கவேண்டாம் ; ஒற்றுமை நிலவுக; ஒரே நோக்கம் நிலவுக; மங்கள மொழியை உதிருங்கள்

கடவுளர்/ தேவர்கள் ஒருவரை ஒருவர் வெறுப்பதில்லை ; பிரிந்து செல்வதில்லை; அந்த குணத்தை உங்கள் வீட்டில் நிலை நாட்டுகிறோம் ; உங்கள் வீட்டிலுள்ள புருஷர்கள் அதையே பின்பற்றுவார்களாகுக 

ஒரே எண்ணத்துடன் , ஒரே முயற்சியுடன், இணைந்து வாருங்கள்; பிரிந்து செல்லாதீர்கள் ;ஒருவருக்கொருவர் இனிமையான மொழியைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நான் உங்களை ஒரே நோக்கம், ஒரே எண்ணம் உடையவனாக ஆக்குவேன் (மேலும் வலுப்படுத்துவேன்)

நீங்கள் ஒரே பானத்தை பருகுங்கள்; ஒரே உணவை சம கூறிட்டு உண்ணுங்கள்; நானும் உங்களை அன்பால் பிணைக்கிறேன் ; ஓர் சக்கரத்திலுள்ள ஆரங்கள் போல ஒன்று பட்டு அக்கினி தேவனை வழிபடுங்கள் .

 நான் உங்களை ஒன்றாகக் கட்டும் மந்திரத்தின் மூலம் பிணைக்கிறேன் ஒரே எண்ணத்துடன் ஒரே தலைவரின் கட்டளைக்குக் கீழ்ப்படியுமாறு செய்கிறேன்

தேவர்களைப் போல அமிர்தத்தை போற்றுங்கள்; காலைப் பொழுதும் மாலைப் பொழுதும் அன்பு அலை வீசட்டும் “.

–மூன்றாவது காண்டம் 30 ஆவது மந்திரம் (சூக்தம் 101)

xxx

என் கருத்து

இதற்கு நான் உரையோ விளக்கமோ சொல்லத் தேவை இல்லை; முதலில்  தனி மனிதனிடம் நேசமும் பாசமும் இருக்க வேண்டும்; பின்னர் குடும்பத்தில் அது இருக்க வேண்டும். பின்னர் அது புறச் சூழலில் எதிரொலிக்க வேண்டும். அதன் மூலம் எங்கும் அமைதி ஓ ற்றுமை ஓங்கி வளரும்

இந்த இரண்டு கீதங்களையும், துதிகளையும் எல்லோரும் படித்தா லோ அல்லது வேத பிராமணர்கள் ஒலிக்கும் பொழுது கேட்டாலோ சர்வ மங்களம் உண்டாகும் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமும் உண்டோ!

XXX

RIG VEDA 10-191 (Last Hymn in the RV)

संस॒मिद्यु॑वसे वृष॒न्नग्ने॒ विश्वा॑न्य॒र्य आ ।

इ॒ळस्प॒दे समि॑ध्यसे॒ स नो॒ वसू॒न्या भ॑र ॥ १०.१९१.०१

सं ग॑च्छध्वं॒ सं व॑दध्वं॒ सं वो॒ मनां॑सि जानताम्

दे॒वा भा॒गं यथा॒ पूर्वे॑ संजाना॒ना उ॒पास॑ते १०.१९१.०२

स॒मा॒नो मन्त्रः॒ समि॑तिः समा॒नी स॑मा॒नं मनः॑ स॒ह चि॒त्तमे॑षाम्

स॒मा॒नं मन्त्र॑म॒भि म॑न्त्रये वः समा॒नेन॑ वो ह॒विषा॑ जुहोमि १०.१९१.०३

स॒मा॒नी व॒ आकू॑तिः समा॒ना हृद॑यानि वः ।

स॒मा॒नम॑स्तु वो॒ मनो॒ यथा॑ वः॒ सुस॒हास॑ति ॥ १०.१९१.०४

–subham—

Tags- ரிக் வேதம், அதர்வ வேதம், ஒற்றுமை, தேசீய கீதம், உலக கீதம் , மந்திரம்

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை- 4; விவசாய சொற்கள் பட்டியல் (Post.10243)

AZAD HIND STAMPS ISSUED BY NETAJI SUBHAS CHANDRA BOSE 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,243

Date uploaded in London – 22 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சென்ற மூன்று கட்டுரைகளில்  ரிக் வேதம் 10-101 விவசாயக் கவிதை பற்றிய விமர்சனங்களைக் கண்டோம் . இங்கு ரிக் வேதம் 4-57 கவிதையைக் காண்போம். இதுபற்றி விமர்சிக்கும் பகவான் சிங் என்ற அறிஞர் அவர் எழுதிய ‘வேத கால ஹரப்பா’ THE VEDIC HARAPPANS BY BHAGAWAN SINGH என்ற புஸ்தகத்தில் அந்தக் காலத்தில் விவசாயத் தொழிலாளர்களும் நிலச் சுவான்தார்களும் இருந்ததை இந்தக் கவிதை காட்டுவதாகச் சொல்கிறார்.

இந்த நாலாவது மண்டலம், ரிக் வேதத்தின் பழைய பகுதியாகும். இதைப் பாடுபவர் ரிஷி வாமதேவ கெளதமன்

முதல் மந்திரமே நிலத் தலைவன், அதாவது நிலக் கிழார் பற்றிப் பேசுகிறது.

“எங்கள் நண்பன் நிலத்தலைவன். அவன் தயாள குணத்தால் எங்களுக்கு மகிழ்ச்சி தருகிறான். அவன் மூலம் எங்களுக்குப் பசுக்களும் குதிரைகளும் கிடைக்கின்றன”.

க்ஷேத்திரபதி என்னும் நிலத்  தலைவன் இங்கே புகழப்படுகிறான். அவரை நில தேவதையாகவும் கொள்ளலாம் .”பால் தரும் பசு போலவும் தேன் போலவும் அவன் இனியவற்றைத் தருவானாக”.

“நிலத்தில் விளையும் செடி கொடிகளும், வானமும் பூமியும் இனியவை ஆகுக” என்று மந்திரம் கூறுகிறது .

நாலாவது மந்திரம் மிகத்தெளிவாக உள்ளது

“காளைகள் சுகமாக இழுக்கட்டும்;

மனிதர்கள் உற்சாகமாக உழைக்கட்டும் ;

கலப்பைகள் நன்கு உழட்டும்;

கயிறுகள் நன்கு பிணையட்டும்

சாட்டைகள்  நன்கு சொடுக்கட்டும்”

ஐந்தாவது மந்திரம் முதல், சுனா , சீரா, சீதா முதலிய தேவதைகள் போற்றப்படுகின்ற ன.

கடைசியில் வரும் எட்டாவது மந்திரமும் “கலப்பை நன்கு உழட்டும்” என்கிறது.

ஆக எட்டு மந்திரங்களும் விவசாயம் பற்றி இருப்பதால் இதையும் அக்கால விவசாயப் பாட்டாகவே  சொல்லலாம்.

வேத காலத்தில் கலப்பை முதலியன, உயிருள்ள பொருட்கள் போல உருவகப்படுத்தப் பட்டு துதிக்கப்படுகின்றன. ராமாயணத்தில் வயல் வரப்பில் சீதை கிடைத்ததால் அவள் பெயரே வயல் வரப்பு= சீதை  ஆகிவிட்டது இதற்குப் பின்னரும் வேத கால இந்துக்களை எவரும் நாடோடி என்று கூற நா எழாது.

இனி பகவான் சிங் கொடுக்கும் ரிக் வேத விவசாய சொற்களைக் காண்போம். இவை பத்து மண்டலங்களிலும் பரவலாகக் காணப்படுவதால், வேத காலத்தில்  துவக்கம் முதல் கடைசி வரை விவசாயிகள் கொடிகட்டிப் பறந்தனர் என்பது தெரிகிறது

ரிக் வேதம் முழுதும் ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்ற வாசகமும், ‘அரசன், சபை’ போன்றவையும் விவசாயமும் பேசப்படுவதால் நால் வருணத்தாரும்  அவரவர் தொழிலைச் செய்து இனிதே வாழ்ந்தனர் என்று ஊகித்ததறியலாம்.

Xxxx

விவசாய சொற்கள் பட்டியல்

ரிக் வேத விவசாய சொற்கள் மண்டலம்- துதி எண் – மந்திர எண்களோடு:–

அப்சவா 7-46; 10-65-3  பாசனம் செய், நீர் பாய்ச்சு

அபிதர்த  6-17-1 தோண்டி தண்ணீர் எடு

அப்ரி – 1-179-6 மண்வெட்டி

அப்ரி காட – அதர்வண வேத 4-7.5-6

அஸ்த்ரா – 4-57-4 அங்குசம் ; குச்சி

அஸ்வின்ஸ் 1-117-21 முதலில் விவசாயம் செய்தவர்கள்

இந்த்ர 1-112-15 ; 8-9-10 நில தேவன்; சாகுபடிக்கு நிலத்தை தயார் செய்தவன்

ஊர்தர 2-14-11 அரசாங்க தானியக் களஞ்சியம்

( சுமேரியாவில் ஊர் UR IN SUMER என்பதுடன் தொடர்புடைய சொல்)

ரிஷப 1-94-10; 6-46-4 காளை

கரீச – அதர்வண வேதம் 3-14-3 உரம், சாணம்

கினாச 4-57-8 குடியானவன்

கினார 10-106-10 சாகுபடி செய்வோன்

க்ருஷ்டபச்ய – யஜுர் வேதம் 28-14 சாகுபடி தாவரங்கள், பயிர்

க்ஷேத்ர 10-33-6; 3-31-15; 5-62-7 நிலம்

(பிற்காலத்தில்  உடல், புனிதத் தலம் ஆகியவற்றுடன் தொடர்பு)

க்ஷேத்ரம் இவ மமுஸ்  1-110-5 நிலம் என அளக்கப்பட்ட

க்ஷேத்ரசாடா  7-19-3 ஒதுக்கப்பட்ட நிலத்தை கவனிப்போர்

க்ஷேத்ரசாத 3-8-7; 8-31-14 நிலத்தை அளந்து எல்லை குறிப்போர்

க்ஷேத்ர சா 4-38-1 நிலத்தை கொள்முதல்/ ஆர்ஜிதம்  செய்வோர்;

க்ஷேத்ர பதி – நிலத் தலைவன்; நிலத்திற்கான கடவுள்;

கணித்ர 4-57-4 தோண்டும் குச்சி; கடப்பாரை

கள 10-48-7 களம் , நெல் அடிக்கும் இடம் ;தமிழ் சொல்

திதவ்  10-72-2 சல்லடை, முறம்

தில்வில – 5-62-7 , 7-78-5- வளமான ; நன்செய் ; நஞ்சை

தெ ஜன 1-110-5 அளக்கும் குச்சி; மூங்கில் கம்பு

தாத்ர 8-78-10 அரிவாள் த்வி பஞ்ச அன்னஸ் 1-122-13 பத்து வகை தானியங்கள்

தான்ய 5-53-13; 6-13-4  அரிசி, பயிர், ;தானியம் இன்றும் புழக்கத்தில் உள்ள சொல் 

தான்யக்ருத் 10-94-13 சாகுப்படியாளர் ; தானியம் புடைப்போர்

நஹனா – 10-67-3 மூக்கணாங் கயிறு

பய ஸ்வதி  2-3-6; 6-70-2 நன்கு நீர் பாய்ச்சப்பட்ட

பர்ஸ 10-48-7பயிர்க் குவியல்; தானியக் குவியல்

பூசா – 4-57-6  தூவுதல் , விதைத்தல் ,பரப்புதல்;

பிருது 8-9-10  விவசாய முன்னோடி

பீஜ 5-53-13 , 10-85-37 ; 10-94-13 விதை

மருத்ஸ் – 4-57-8 குடியானவர்; குத்தகைதாரர்

பத்ர க்ஷேத் ர  5-62-7 நன்கு உழப்பட்ட நிலம்

மஹி க்ஷேத்ர- 3-31-15  அகலமான / பரந்த நிலம்

மாஷ – 9-86-1 பாட்டின் ரிஷி; 9-86-31 மூன்று பயறு வகைகள்

யவ 1-23-15; 2-5-6; 5-85-3 பார்லி ; பல வகை பயிர்

யோனி  10-101-3 வரப்பு எல்லைக் குறி

லாங்கல 4-57-4  உழுகலன் ; கலப்பை; ஏர்

வத் ரி வ்ரஷ – 2-25-3 காயடிக்கப்பட்ட மாட்டு

வத்ரி அஸ்வ  6-61-1; 10-69-1 காயடிக்கப்பட்ட குதிரை –

சரஸ்வதியை , அக்கினியை பூஜிப்பவன் என்ற பொருளும் தரப்பட்டுள்ளது; ஆக ஒரு மனிதரின் பெயராகவும் இருக்கலாம்

வந்துர 1-34-9; ;3-14-3; 3-41-1 அணி, குழு

வரத்ர 4-57-4; 10-60-8 தோல் வார், கச்சை

வாஹ 4-57- 40  அல்லது 8 முகத்தில் பூட்டப்பட்ட பிராணிகள்

வ் ர்க 1-117-21; 8-22-6 கலப்பை; ஏர்

வ்ரஷ ப 4-41-5 , 6-46-4 காளை

சகன் ; அதர்வ வேதம் 3-14-4 சாணம், உரம், எரு

சுனா  4-57- 5; 8 கலப்பை தேவதை

சனத் க்ஷேத்ரம் 1-100-18 பிரிவினை செய்த நிலம்

சீதா , –4-57-6; 7 வரப்பு , பள்ளம் ; அதன் தேவதை

சிரா 10-101-3; 4 – ஏர்,

ஸ்திவி  10-68-3வ தானியத்தைப் பிரிக்கும் சாதனம், முறம்

இது தவிர நீர்நிலைகள், கால்வாய்கள், கிணறுகள் பற்றிய நீண்ட பட்டியல் உள்ளது.

கால்வாய்; கூப / கூவ என்பதெல்லாம் தமிழ் செய்யுட்களிலும் உண்டு

–முற்றும் – சுபம்–

TAGS – உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை- 4, விவசாய சொற்கள் பட்டியல் , ரிக் வேதம்

எகிப்து, கிரீஸ், ரிக் வேதத்தில் கண் பற்றிய  அதிசயச் செய்திகள் (Post 10,187)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,187

Date uploaded in London – 8 OCTOBER  2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக் வேதம் உலகத்திலேயே பழைய புஸ்தகம் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமேயில்லை. தள்ளிப்போன, உதவாக்கரை வெள்ளைக்கார  சுள்ளான்களும் இப்போது கி .மு.2000-ஐ ஒட்டி என்று பேசத்  துவங்கி விட்டனர். அப்பேற்பட்ட ரிக்வேதத்தில் கண் பற்றிய அதிசயமான விஷயங்களை எகிப்தியர்களும், கிரேக்கர்களும் ‘கள்ளக் காப்பி’ copy  அடித்துப் பாடியுள்ளனர்.

நம்ம ஊரு வள்ளுவர் ‘எண்ணும் எழுத்தும் கண்’ என்றார் . ஆனால் ரிக் வேத முனிவர்களோ கண் என்பது சூரியன் என்கின்றனர். இதை உருவக ரீதியில் பார்த்தால் சரி என்போம். அதாவது கண்ணும் எல்லாவற்றையும் பார்க்கிறது. சூரியனும் எல்லாவற்றையும் பார்க்கிறான். கண்ணை மூடினால் இருள்; சூரியன் அஸ்தமித்தால்  இருள். கண்ணில் எதையும் காண ஒளி அவசியம்; அதை இயற்கையாகவே உமிழ்ப்பவன் சூரியன்;

இரண்டும்  கிட்டத்தட்ட ஒரே வடிவம் உடையவை . கண் இமைகளைப் பார்க்கையில் அது சூரிய கிரணங்கள்/ கதிர்கள் போலத்  தோன்றுகின்றன என்றெல்லாம் சிலர் தத்துவ விளக்கம் சொல்லக்கூடும். ஆனால் இந்துக்கள் அதைவிட முன்னேறிச் சென்று அதிசயமாக சில விஷயங்களை இயம்புகின்றனர் .

Xxx

RV 10-90

எல்லா கோவில்களிலும், சம்பிரதாயங்களைப் பின்பற்றும் பிராமணர் வீடுகளிலும் தினமும் ஒலிக்கும் புகழ்பெற்ற புருஷ சூக்த மந்திரம் ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் உள்ளது (10-90).

இதில் ‘கண் என்பது சூரியனிடமிருந்து பிறந்தது’ என்றும் ‘மனம் என்பது சந்திரனுடன் தொடர்பு உடையது’ என்றும் ஒரு மந்திரம் வருகிறது.

சந்திரமா மனஸோ ஜாதக; சக்ஷ்ஓர் ஸூர்யோ அஜாயத”

பிரபஞ்சம் முழுதும் வியாபித்துள்ள புருஷனிடமிருந்து (கடவுளிடமிருந்து) – “கண்களிலிருந்து சூரியன் வந்தது. அவனுடைய மனதிலிருந்து சந்திரன் பிறந்தது” என்பது இந்த வரியி ன் பொருள்  .

இன்னொரு மந்திரத்தில் யமனுடைய மகன்  ரிஷி  தமனன் பாடுகிறார்:-

10-16-3

(இறந்த) உன்னுடைய கண் சூரியனுக்குச் செல்க ; மூச்சுக் காற்று, காற்றுடன் கலக்கட்டும்; நீ எவ்வளவு புண்ணியம் செய்தனையோ அதற்குத்தக பூமிக்கோ சொர்க்கத்துக்கோ செல்க;உன் கரும பலனுக்கு ஏற்ப தாவரமாகவோ நீர்வாழ் பிராணியாகவோ போ .

இதை மாணிக்க வாசகரும் திருவாசகத்தில் சிவபுராணத்தில் சொல்லிவிட்டார்.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் – 30

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்

மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்

—சிவபுராணம் – திருவாசகம்

xxx

இந்துக்கள் சொன்ன 3 அதிசயங்கள்

மனது , கண் பற்றி விஞ்ஞானிகளுக்கும் இதுவரை தெரியாத மூன்று விஷயங்களை முதலில் காண்போம்.

1. சந்திரனையும் தாவரங்களையும் தொடர்புபடுத்தி இந்து மத நூல்கள் அனைத்தும் பேசுகின்றன. ஆனால் விஞ்ஞானிகள் இதுபற்றி ஒன்றுமே சொல்லவில்லை. சூரிய ஒளி மூலம் நடக்கும் போட்டோசிந்தசிஸ் photosynthesis என்னும் ஒளிச் சேர்க்கை மூலம் மட்டுமே தாவரங்கள் உணவு தயாரிக்கின்றன என்று மட்டும் சொல்கிறார்கள். ஆனால்  ஒரு காலத்தில் நாம் சொன்ன உண்மையை அறிவியலும் ஒப்புக்கொள்ளும்.

.2.இரண்டாவது விஷயம் மனதுக்கும் சந்திரனுக்கும் உள்ள தொடர்பை ரிக்வேத மந்திரம் (10-90) வெளிப்படையாகவே பேசுகிறது. இதையும் விஞ்ஞானிகள் ஏற்பதில்லை. ஆயினும் கடல் பொங்கக் கூடிய அமாவாசை, பெளர்ணமி தினங்களில் பைத்தியங்களின் மனமும் கொந்தளிப்பதை மருத்துவ மனை ரிகார்டுகள்/ பதிவேடுகள் hospital records  காட்டுகின்றன. பூமியில் 70 சதம் நீரால் மூடப்பட்டுள்ளது. மனித உடலிலும் 70 சதம் நீர் உள்ளது. ஆகையால் இப்படி ரத்தத்திலும் பாதிப்பு இருக்கலாமே என்பது நம்புவோர் வாதம்; ஆனால் அப்படியெல்லாம் நாங்கள் ஒன்றும் அந்த நாட்களில் மன நோயாளிகளுக்குக் கூடுதல் மருந்து கொடுக்கவில்லையே என்பது சைக்கியாட்ரிஸ்ட் PSYCHIATRISTS மருத்துவர்களின் பிடிவாதம் !

3.கண்ணுக்கும் சூரியனுக்கும் உள்ள தொடர்பினை மேலே இரண்டு ரிக் வேத மந்திரங்களில் கண்டோம். இதையும் விஞ்ஞானிகள் ஏற்பதில்லை ; ஆனால் இக்கருத்து எகிப்து, கிரீஸ் வரை சென்றுவிட்டது.அவர்களும் இதைப்  பாடி வைத்துள்ளனர்  . இன்றும்கூட லட்சக் கணக்கானோர் அதிகாலையில் , குறிப்பாக R S S ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர், சூரிய நமஸ்காரம் செய்கின்றனர். ஜோதிடத்திலும் சூரியனே ஆரோக்கியகாரகன். கண்ணுக்கும் பகலவனுக்கும் உள்ள தொடர்பினை  ஏற்காத விஞ்ஞானிகள், சூரிய ஒளியிடமிருந்து vitamin D வைட்டமின் டி கிடைக்கிறது என்று ஒப்புக்கொள்ளத் துவங்கியுள்ளனர். அத்தோடு மேலை நாடுகளில் சூரிய ஒளி குறைவானதால் இப்போது வைட்டமின் டி சாப்பிடுங்கள் என்று ஆலோசனை வழங்கத் துவங்கிவிட்டனர். வருங்காலத்தில் இந்துக்கள் சொன்னதை அவர்கள் 100 சதம் ஏற்பார்கள் என்பதில் ஐயப்பாட்டுக்கு இடமில்லை.

xxx

கிரீஸ்

கிரீஸ் எனப்படும் கிரேக்க Greece நாட்டில், எல்லா கலைகளும் நமக்கு பின்னர் தோன்றின. ஆனால் வெள்ளைக்கார சுள்ளான்களுக்கு இந்திய இலக்கியம் தெரியாது. ஆகையால் உலகத்திலுள்ள எல்லாவற்றுக்கும் கிரேக்க நாடுதான் ஆதாரம் என்று உளறிவிட்டார்கள். சாக்ரடீசும், அவர் சிஷ்யர் , பிளாட்டோவும், அவர் சிஷ்யர் அரிஸ்டாட்டிலும், அவர் சிஷ்யர் அலெக்ஸ்சாண்டரும் இந்து மத தத்துவங்களையே சொன்னார்கள் என்று கிரேக்கர்களே எழுதிவைத்துள்ளனர். இவர்களுக்கு எல்லாம் மூத்த பிதகோரஸ் Pythagoras Theorem தியரம் முதலியன இந்தியாவில் இருந்து சென்றதே. அவரும் ஒரு வெஜிட்டேரியன் என்றெல்லாம் இப்போது தெரிகிறது; சாக்ரடீஸ் விஷம் குடித்து சாவதற்கு முன்னர், கிரீட்டோ என்ற சிஷ்யனை அழைத்து ‘காளி ஆத்தாவுக்கு கோழி அடிச்சு கும்பிட மறந்துடாதே’ என்று சொல்லிட்டு செத்துப்போனார். அந்த அளவுக்கு இந்து மதத்தில் நம்பிக்கை.

ஒரு கிரேக்க புலவர் Theia தேவியை நோக்கி பாடுகிறார்

There is a Greek prayer referring to the goddess Theia in terms of sun:-

“Thou beam of the sun

Far seeing mother of the eyes”.

தேவி என்பதை அவர்கள் தெய்யா , தேவி , தெய்வி என்று அழைப்பர்

அம்மா நீயே சூரியனின் ஒளி

தொலை நோக்கு பார்வை உன்னுடையது.

பிராமணர்கள்  தினமும் சொல்லும் காயத்ரீ மந்திரத்தில் இது உள்ளது. அதை விட அவர்கள் மூன்று நேரங்களிலும் சூரியனைப் பார்த்து சொல்லும் மந்திரங்கள் ஏராளம். என்ன அதிசயம்!! உலகில் உள்ள பழங்க்கால கடவுளர் எல்லாம் மியூசியக் கடவுளாகவும் படிம அச்சுக் கடவுளாகவும் Museum Gods and Fossil Gods  போய்விட்டார்கள் ; பிராமணர்களும் காயத்ரீ சொல்லும் இந்துக்களும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கங்கை-சிந்து-சரஸ்வதி நதிக்கரையில் கற்ற மந்திரங்களை இன்றும் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்! அதுவும் எழுத்தில் இல்லாமல் வாய் மொழியாகவே பரப்பி வருகிறார்கள்.

பின்வரும் மந்திரத்தை பார்ப்பனர்கள் தினமும் மதியவேளையில் சொல்லுவார்கள். அதுவும் சூரியனை இரண்டு கைகளின் விரல்களையும் கோர்த்து அதில் ஒரு இடைவெளி விட்டு அதன் வழியாக சூரியனைப் பார்த்துச் சொல்லுவார்கள். கடுமையான சூரிய ஒளி கண்களைப் பாதிக்கும் என்ற உண்மை, ஐயர்களுக்குத் தெரியும். அதனால் அவர்களாக கண்டுபிடித்த Hand Telescope கை டெலஸ்க்கோப் மூலம் பார்த்து இந்த மந்திரத்தைச் சொல்லுவார்கள்

பஸ்யேம சரதஸ் சதம்

ஜீவேம சரதஸ் சதம்

நந்தாம சரதஸ் சதம்

மோதாம சரதஸ் சதம்

பவாம சரதஸ் சதம்

ஸ்ருணவாம சரதஸ் சதம்

ப்ரப்ரவாம சரதஸ் சதம்

அஜீதாஸ்யாம சரதஸ் சதம்

பொருள்

சூரிய தேவனை நூறாண்டுக் காலம் காண்போமாக

(அவ்வாறே) நூறாண்டுக் காலம் வாழ்வோமாக

நூறாண்டுக் காலம் உற்றார் உறவினருன் கூடிக்குலவுவோமாக

நூறாண்டுக் காலம் மகிழ்வோமாக

நூறாண்டுக் காலம் புகழுடன் விளங்குவோமாக

நூறாண்டுக் காலம் இனியதைக் கேட்போமாக

நூறாண்டுக் காலம் இனியதைப் பேசுவோமாக

நூறாண்டுக் காலம் தீமைகளால் வெல்லப்படாமல் வாழ்வோமாக.

(இதை எல்லோருமே தினமும் சொல்லலாம் என்பது என் சொந்தக் கருத்து) .

இதிலும் முதல் மந்திரமே 100 ஆண்டுக் காலம் சூரியனைப் ‘பார்க்க’ வேண்டும் என்ற கருத்து வந்து விடுகிறது.

2400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கிரேக்க அறிஞர் சோபோக்ளீஸ் Sophocles எழுதிய நாடக ம் ‘ஈடிபஸ் கலோனஸ் ; Oedipus Colonus; அதில் அவரும் இதையே சொல்கிறார் ‘ உலகம் முழுதையும் பார்த்துக் கொண்டிருக்கும் சூரியதேவன் என்னைப் போலவே நீண்ட ஆயுளைக் கொடுக்கட்டும் ‘

இதே போல அரிஸ்டோபனிஸ் Aristophanes என்ற அறிஞர் ‘உருண்டோடும் சூரிய தேவன் சக்கரம்’ பற்றி பேசுகிறார். சூரியனை ஒரு சக்கரமுடைய 7 குதிரை பூட்டிய ரதத்தில் செல்வதாகவே வேதங்களும் சங்கத் தமிழ் நூல்களும் பாடுகின்றன.

xxx

ரிக் வேதம் 10-37-1 மந்திரத்தைக் காண்போம்

சூரியனை நோக்கிச் சொல்லும் துதி இது .

மித்திரனுக்கும் வருணனுக்கும் கண்களாகத்  திகழும் தேவனுக்கு வணக்கத்தைத் தெரிவியுங்கள் .அவன் தொலை நோக்குடையோன். வானத்தில் கொடி (போலப் பட்டொளி வீசிப் பறக்கிறான்). அவன் தேவர்களிடையே  பிறந்தவன். மகத்தான அந்த கடவுளுக்கு இந்த வேள்வியைப் படைப்போமாகுக. வானத்தின் மகனான சூரியனின் புகழ் பாடுவோம்”

இவ்வாறு துவங்கி இன்னும் 11 மந்திரங்களில் சூரியனைப் பாடிப் பரவுகின்றார் ரிஷி அபித பவன்

அதில் எட்டாவது மந்திரம் (10-37-8) – கடலின் மீது எழும் உன்னை நாங்கள் தினமும் கண்டு வாழ்த்த நீடுழிக் காலம் வாழ்வோமாகுக. நீதான் எல்லோருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறாய்

.xxxxx

எகிப்தில்

எகிப்தில் உட் ஜட் கண் Udjat Eye என்று அழைக்கும் தாயத்து உள்ளது. இதை அதிர்ஷடம் அளிக்கும் தாயத்தாகக் கருதி பழங்கால எகிப்தியர்கள் அணிந்தனர்.

ஹோரஸ் Horus என்பது சம்ஸ்க்ருத கருடன் என்பதன் மரூஉ இந்தக் கருடனுக்கும் சேத Seth என்னும் தேவதைக்கும் நடந்த சண்டை கருடர்- நா கர் சண்டையின் வேறு படைப்பாகும். இந்தக் கருடனின் கண்களை உட்ஜட் கண் என்று அழைப்பர். இதற்கு மூன்று குணங்கள் உண்டு ;

1.பாதுகாப்பு 2.குணப்படுத்தும் ஆற்றல் 3. பொதுவான ஆரோக்கியம்.

அதாவது நாம் கருட மந்திரம், கருடன் தாயத்து, கருடன் கிழங்கு ஆகியவற்றுக்கு என்ன என்ன எல்லாம் சொல்கிறோமோ அவை அனைத்தையும் உட்ஜட்  கண் தாயத்தில்  காணலாம். இவை அனைத்தும் வேத காலத்துக்குப் பின்னர் வளர்ந்த கதைகள். இந்துக்களைப் போலவே எகிப்திலும் நூற்றுக் கணக்கில் தெய்வங்கள் இருக்கின்றன. காலப்போக்கில் அவைகளைப்ப பற்றிய கதைகள் நம்முடைய 18 புராணங்கள் போல் வளர்ந்தன. நம்முடைய இலக்கிய அளவைப் பார்க்கையில் எகிப்தின் பழைய இலக்கியம் மிகக்குறைவு. அதில் மகா குழப்பம். காரணம் என்னவெனில் பல தெய்வங்களுக்குப் பல பகுதிகளில் பல கதைகள் உண்டு.

எகிப்தில் இந்த வளர்ச்சிக்கு  மாக்ஸ் முல்லர் கும்பலும் திகிடுதத்த மார்க்சீய கும்பல்களும்  இனவாதப் பூச்சு பூசவில்லை. ஆரிய-திராவிடம் பற்றி எதுவும் பேசவில்லை. இந்தியாவில் ஏதேனும் இரண்டு முரணான விஷயங்களைப் பார்த்தால் உடனே அதற்கு ஆரிய -திராவிட பிரிவினை முத்திரைகளைக் குத்தி விடுகின்றனர் . சிந்து சமவெளி முத்திரைகளைத் தோண்டி எடுத்த மார்ஷல், மகே , மார் டிமர் வீலர் போன்றோர் ஆரம்பத்தில் இருந்தே இந்த அயோக்கியத் தனத்தில் இறங்கியதால் இன்றுவரை சிந்துவெளி முத்திரைகளைப் படிக்க முடியவில்லை  உட் ஜட் கண்பற்றிய கதைகளிலும் இது போல குழப்பம் உள்ளது. காலப்போக்கில் எந்த ஒரு விஷயத்துக்கும் பத்து, பதினைந்து விளக்கங்கள் சொல்ல முடியும். திருக்குறளுக்கே நாம் பத்து உரைகள் கண்டோம். ஏன் ? கருத்து சுதந்திரம். ஆயினும் உரை எழுதியோர் பாரதீய மரபுகளை மீறாமல் எழுதினார்கள்,; நேற்று வந்த வெள்ளை-சிவப்பு விஷமிகள் விஷம் கக்கி வைத்துள்ளனர். அவற்றை அகற்றுவது நம் கடமை..

சுவாமி விவேகானந்தர் சொன்னது போல, இந்து மஹா சமுத்திரத்தின் அடியிலுள்ள அத்தனை சக்தியையும் இவர்கள் மீது வீசி எறிந்தாலும் அது சரியான, உரிய தணடனை ஆகாது. பாரதியார் சொன்னது போல ‘ஆயிரம் ஆண்டு அன்பிலா அந்நியர் ஆட்சி’யில் எழுதப்பட்ட விஷமத்தை , விஷத்தை அகற்ற வேண்டும்

–சுபம்–

tags-

உட்ஜட் கண், எகிப்து, கிரேக்கம், ரிக் வேதம், கண், மந்திரம் , பஸ்யேம

இந்து விரோத கும்பல் மீது யமுனை நதி கொடுத்த செமை அடி ! – PART 1 (Post No.10,150)

RIVER GANGA MEETING YAMUNA, BOTH ARE IN DIFFERENT COLOURS.

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,150

Date uploaded in London – 28 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மாக்ஸ் முல்லர் (Max Muller) தலைமையிலான சுமார் 30 வெள்ளைத் தோல் கும்பலும் வெளிதேச விசுவாசம் கொண்ட  இந்து மத விரோத Marxist  , மார்க்சீய கும்பலும் பரப்பிவந்த அப்பட்டமான பொய்க்கு ரிக் வேத யமுனை நதி குறிப்புகள் செமை அடி ,மிதியடி கொடுத்துவிட்டன .

உலக மகா கவிஞன் சுப்ரமண்ய பாரதி, காஞ்சி பரமாசார்ய சுவாமிகள், சுவாமி விவேகானந்தர், மஹாத்மா காந்தி, பி.ஆர் அம்பேத்கார் முதலிய நூற்றுக் கணக்கான அறிஞர்கள் , பெரியோர்கள் தூக்கி எறிந்த ஆரிய-திராவிட வாதத்தை இன்றும் திரும்பத்திரும்பச் சொல்லுவோருக்கு அடி மேல் அடி கொடுக்கிறது ரிக் வேதத்தில் உள்ள நதி சூக்தம் முதலிய குறிப்புகள்.

இதோ விவரம்:

200 ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளைக்காரனின் குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்தது. இந்தியாவைப் பிடித்ததை எப்படி நிய்யப்படுத்துவது என்று யோசித்து யோசித்துப் பார்த்தான் , போட்டான் ஒரு வெடி குண்டை. 700 ஆண்டு முஸ்லீம் ஆக்ரமிப்புக்கும் 300 ஆண்டு வெள்ளைக்காரன்

ஆக்ரமிப்புக்கும் ஒரு பொய்யைச்   சொல்லி நியாயம்  கற்பித்தான்.

“இங்கே பாருங்கடா ! 700 ஆண்டுக்கு உங்களை முஸ்லீம் ஆண்டான். அதுக்கு முன்னாடி கைபர் கணவாய் வழியாக ஆரியன்னு ஒத்தன் வந்தான். அவன் இந்த நாட்டு சொந்த குடி மக்களை எல்லாம் விரட்டிட்டு உங்களை ஆண்டான். அது போலத்தான் நாங்களும். அவங்க ஆண்டபோது சும்மா இருந்தீங்க. பேசாம வாயைப் பொத்திக்கினு கிடங்க ; இல்ல, இந்தப் பாரு; துப்பாக்கி, பீரங்கி.”

இதை மாக்ஸ்முல்லர் கும்பல், மார்க்சீய கும்பல், தமிழ் நாட்டில் திராவிடக் கழகம், ஜஸ்டீஸ் பார்ட்டி JUSTICE PARTY முதலியன திரும்பத் திரும்ப சொன்னார்கள். 1921 வாக்கில் சிந்து சமவெளி நாகரீக தடயங்கள் கிடைத்தவுடன் அதை திராவிட நாகரீகம் என்ற பொய் சொல்லி,

“பாத்தீங்களா, நாங்க அன்றே சொன்னோம் ; இன்னிக்கு ப்ரூப் PROOF பும் கிடைச்சிருச்சு” .

இது அப்பட்டமான அபத்தக் கதை என்பதை கடந்த 50 ஆண்டுக்கால  அணுசக்தி BARC ஆராய்ச்சியும், நாஸா NASA என்னும் அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பும் நிரூபித்துவிட்டன  (சரஸ்வதி நதியின் 4000 ஆண்டு பழமை, சிந்து வெளியில் திராவிட எலும்புக் கூடுகள் கிடைக்காமை , குதிரை எலும்பு சர்ச்சைகள் பற்றி தனியே எழுதிவிட்டதால் இங்கு விளக்க வில்லை; சிந்து வெளி பற்றிய எனது 25, 30 கட்டுரைகளைப் படிக்கவும் )

இந்தக் கட்டுரையில் யமுனை நதி தரும் சான்றுகளை மட்டும் காண்போம் .

RV 10-75-5

முதலாவது பத்தாம் மண்டலத்தில் 75ஆவது துதியில் உள்ள ஜந்தாவது மந்திரத்தைக் கேளுங்கள்:

“கங்கையே! யமுனையே! சரஸ்வதியே ! சுதுத்ரியே! பருஸ்னியே!  அசின்னையோடு  , மருதவிருதையே , விதஸ்தையே , என்னுடைய இந்த துதியை ஏற்றுக்கொள்ளுங்கள் ; சுசோமையோடு ஆர்ஜீகியே ; நான் சொல்லுவதைக் காது கொடுத்துக் கேளுங்களேன் (PLEASE ,PLEASE ப்ளீஸ் ,ப்ளீஸ் )

முதலில் இது பற்றி என் கருத்துக்கள் :

கிழக்கிலுள்ள நதி முதல் மேற்காகச் சொல் கிறார்கள் ; அதாவது வேத கால இந்துக்கள் நாகரீகம் உலகிலேயே மிகப் பழைய நகரமான காசியில் இருந்தது. பின்னர் சரயு நதியின் மீதுள்ள அயோத்தி, யமுனை நதி மீதுள்ள மதுராவுக்குப் போனது. பின்னர் ஈரான் நாடுவரை இந்த்துக்களாட்சி ஏற்பட்டது. இதை வெள்ளைக்காரன் ‘உல்ட்டா’ ஆக்கினான். அதாவது தலை  கீழ் வரிசையில் சொன்னான். அது அது தப்பு  என்பதை வேறு இரண்டு யமுனைக் குறிப்புகள் காட்டுகின்றன. ரிக் வேத்தின் பத்து மண்டலங்களில் கங்கை பற்றிய குறிப்புகள் பழைய மண்டலங்களிலும் சிந்து என்பது பிந்திய மண்டலங்களிலும் வருவதை ஸ்ரீகாந்த் தலகெரி Srikant G Talageri போன்ற அறிஞர்கள் அண்மைக்காலத்தில் காட்டியுள்ளனர்.

இது பற்றி வேத கால ஹரப்பா மக்கள் (சிந்து வெளி நாகரீகம்) THE VEDIC HARAPPANS BY BHAGWAN SINGH என்ற புஸ்தகம் எழுதிய பகவான் சிங் என்பவர் 1957-ம் ஆண்டில் முகர்ஜி எழுதியதையும் சுட்டிக்காட்டிவிட்டு ஒரு அருமையான கேள்வி எழுப்புகிறார் . கங்கை முதல் ஆப்கானிஸ்தான் வரை  ஓடும் நதிகளை எல்லாம் தனது சொந்த தாய் என்று வருணித்ததுவிட்து ‘நான் கதறுவதைக் கேளுங்கள்’ என்று இந்த நதிகள் சூக்தம் கூறுகிறது. வேத கால இந்துக்கள் நாடோடிகளாக இருந்தால் இப்படி பல ஆயிரம் மைல் இடைவெளிகளில் ஓடும் நதிகளை தன சொந்த தாய் என்று வருணிப்பானா? அப்படிப்பட்ட நாடோடிகளைக் காட்ட முடியுமா ? என்று .

இங்குதான் மாக்ஸ்முல்லர், மார்க்சீய கும்பல்களின் முகத்திரை கிழிக்கப்படுகிறது. இந்த இரண்டு கும்பல்களும் வேதகால இந்துக்களுக்கு ‘ஆரிய’ என்ற பெயரைச் சூட்டி அதற்கு இனவாத கலர்/ சாயத்தைப் பூசி அவர்களை “நாடோடிகள் ” NOMADS’ என்று வருணிக்கின்றன. ஆக முதல் பொய்யை , முழுப்பொய்யை உடைத்தோம் . இனி முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடி யாது!!

யமுனை நதி பற்றி அகநாநூறு , சிலப்பதிகாரத்தில் கிருஷ்ண பரமாத்மாவுடன் தொடர்பு படுத்தும் பாடல்கள் உள. கங்கை, இமயம் பற்றி பல பாடல்கள் உள . ஆக 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்களும் இதைப் பாடிப்பரவினர் ; போற்றித் துதித்தனர் .

அடுத்த இரண்டு குறிப்புகள் வரலாற்றுக் குறிப்புகள் . உலகில் நடந்த மிக முக்கியப் போர்களில் ஒன்று ‘பத்து ராஜ யுத்தம்’ (DASA RAJNA YUDDHA) ; இந்த ‘பத்து அரசர் போர்’ பற்றியும் அதில் விசுவாமித்திரரை குல குருவாகக் கொண்ட மன்னன் சுதாஸ் வெற்றி பெற்றது பற்றியும் ரிக் வேதம் நெடுகிலும் பாடல்கள் உள்ளன. ஆகையால் இது மிகப்பழைய போர், மிகப்பெரிய போர் என்பதில் ஐயமில்லை.

இன்றும் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் ரிக் வேதம் பயிலுவோர் இதைப்பாடி வருகின்றனர். அதில் மன்னன் சுதாஸ்,  யமுனை நதிக்கரையில் வெற்றி பெற்றான் என்றும் வருகிறது. இந்த இடத்தை மொழி பெயர்த்த வெள்ளையர்கள் முழி பிதுங்கிப் போனார்கள் ; சில வெள்ளைத் தோல்கள் , எங்களுக்குப் புரியவில்லையே என்று வியப்புக் குறிபோட்டன. ஹாப்கின்ஸ் என்ற பயல், ‘இது வேறு யமுனை நதி??’ என்று கேள்விக்குறி போட்டான்.

இவை என்ன காட்டுகின்றன ?

TO BE CONTINUED…………………………..

TAGS-  இந்து விரோத கும்பல் , யமுனை நதி , செமை அடி, ரிக் வேதம், RV.10-75

‘நாங்கள் ரிஷிகள் ஆகவேண்டும்’ – ரிக் வேதத்தில் கோரிக்கை (Post No.10,109)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,109

Date uploaded in London – 19 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சோமரசம் பற்றிய அபூர்வ தகவல்கள் -4

இந்த நாலாவது பகுதி கடைசி பகுதியாகும். ரிக் வேதத்திலுள்ள 9-97 துதியில் 58 மந்திரங்கள் / பாடல்கள் உள்ளன . கடைசி 14 மந்திரங்களின் சுருக்கம் பின்வருமாறு :–

சோமன் அனைத்தையும் காண்பவன்; தேரில் இருப்பவன்; சத்தியமான பலமுள்ளவன்.

வேகமாகச் செல்பவன் .அறிஞன்

தேன் ; இனியவன் சத்தியமான துதியின் இலக்கு

மனோ வேகம் (Faster than Light)

மனத்தைப் போல வேகம் உடைய  அஸ்வினி தேவர்களிடமும் வாயு தேவன் இடத்திலும், மித்ரா வருணர்களிடத்திலும் வஜ்ராயுதம் ஏந்திய இந்திரனிடத்திலும் சோமம் பாயட்டும் .

சோமனே! எங்களுக்கு அழகிய ஆடைகள், நன்றாகக் கறக்கும் பசுக்கள், போதும் போதும் என்று சொல்லும் அளவுக்குத் தங்கம், தேர்களுக்குத் தகுந்த குதிரைகளை அளிப்பாயாகுக

நாங்கள் ரிஷிகள் ஆகவேண்டும்

சோம ரசமே!  நீ சுத்தமாகும்போது, வானத்திலுள்ள செல்வத்தையும் பூமியிலுள்ள செல்வத்தையும் அளிக்க வேண்டுகிறோம். செல்வம் சம்பாதிக்கும் ஆற்றலைக் டு; ஜமதக்கினி போல ரிஷித் தன்மையையும் எங்களுக்கு அளிக்க வேண்டுகிறோம்.

சிவப்பாகவும் வேகமாகவும் அறிவு நிறைந்தவனும் ஆன இந்திரன் எங்களுக்கு புதல்வர்களைத் தர வேண்டும் .

60,000 செல்வம்

புகழுடையோய் , நன்றாகப் புகழ்மிக்க இடத்திலே பெருகு . பகைவர்களைத் தோற்கடித்து 60,000 செல்வங்களைப் பெறுவதற்கு நீ பழ ம் காய்த்துக் குலுங்கும் மரத்தை உலுக்கினாய்..

அம்பு மழையும் பகைவர்களின் தோல்வியும் எங்களுக்கு சுகம் தருகின்றன குதிரைப் போரிலும் மல்யுத்தத்திலும் பகைவர்களை வெல்வோம் .

நீ பகைவர்களைப் படுக்கச் செய்தாய் .

பகைவர்களையும் போற்றாதோரையும் விலக்கு.

நீ பகன் ; மூன்று வழிகளில் சல்லடை வழி யாகச் செல்கிறாய்.தானங்களை வாரி வழங்குபவன்; நீ செல்வனை முந்தும் செல்வன்

உலகை அறிந்தவன்; பூமியின் அரசன்.

தேவர்கள் , பணத்துக்காகப் பாடும் புலவர்களைப் போல உன் புகழ் பாடுகின்றனர்

சோமனே , சுத்தமாகும் உன்னோடு சேர்ந்து போரிலே மிகுந்த செல்வத்தை அடைவோமாகுக ; மித்திரனும் வருணனும் அதிதியும் சிந்துவும், பூமியும் வானமும்  எங்களுக்குச் செல்வ மழை  கொட்டட்டும்

58 மந்திரங்களின் சுருக்கம் முடிந்தது .

xxxx

என்னுடைய கருத்துக்கள்

ரிக் வேதத்தில் வரும் எல்லா துதிகளிலும் இந்திரன், மித்திரன், வருணன், அக்கினி, சோமன் முதலிய பெயர்களை நீக்கிவிட்டு ‘கடவுள்’ என்ற ஒரு சொல்லை போட்டால் அர்த்தம் நன்கு விளங்கும்.

இந்தத் துதியில் அவர்கள் ‘சோமனே!’ என்றும் சொல்லும் இடத்தில் எல்லாம் ‘கடவுளே!’ என்று போட்டால் பொருள் விளங்கும்; வீடு வாசல், மனைவி மக்கள், நில புலன்கள், வண்டி வாகனங்கள் , பசுமாடுகள் , குதிரைகள் ,போரில் வெற்றி, பொன்னும் மணியும் தருக என்று வேண்டுகின்றனர்.

இவற்றைப் படிப்போர் சோம ரசம் என்பது போதை தரும் மருந்து அல்ல என்பதை தெள்ளிதின் உணர்வார்கள்.

‘அறிவு கொடு’ என்று வேண்டுவது மட்டுமல்லாமல் ‘ரிஷிகள் போல ஆக வேண்டும்’ என்றும் வேண்டுகின்றனர். அதிகாலை 4 மணிக்கு எழுந்து தீயை வளர்த்து அதற்கு முன்னால்  அமர்ந்து கொண்டு எங்களுக்கு ‘ஒளியைத் தந்து அறிவைப் பெருக்கு’  என்று வேண்டுவோர் குடிகாரர்களும் அல்ல ; போதை மருந்து சாப்பிடுவோரும் அல்ல.

சோமம் என்னும் மூலிகை அபூர்வ ஆற்றலையும் சக்தியையும், இன்பத்தையும், உற்சாகத்தையும் கொடுத்தது என்பதை நாம் அறிகிறோம்.

கஞ்சா , அபினி, மதுபானம் போல போதை தரும் ஒரு வஸ்துவாக இருந்திருப்பின் 5000, 6000 வருடங்களாக ‘எழுதாமல் நினைவு மூலம்  மட்டும்  பாதுகாத்த’ இந்தப் பாடல்கள் நமக்கு வந்து சேர்ந்தே இராது.

எல்லாவற்றுக்கும் மேலாக இன்று இந்த வேத மந்திரங்களை ஓதுவோரின் ஒழுக்கம் நமக்கு பெரிய, அரிய சாட்சியாக விளங்குகின்றது. சோமம் என்னும் குளிகை பற்றி மேல் நாட்டோர் எழுதியதெல்லாம் பொய்யுரை என்பதற்கு ஒரே ஒரு துதிப்பாடலைத்தான் காட்டினேன். இதில் 58 பாடல்களே/மந்திரங்களே  உள்ளன.

 ரிக் வேதத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேலான துதிகளில் 10,000 மந்திரங்களுக்கும் மேலாக இருக்கின்றன. இவைகளில் சோமம் பற்றிய குறிப்புகள் ஆயிரத்துக்கும் மேலாக இருக்கின்றன. இந்திரன் பற்றிய துதிகளில் சோமம் பற்றி கட்டாயம் இருக்கும். இவைகளை ஒட்டுமொத்தமாகத் தொகுத்தால் சோமம் பற்றிய தெளிவான காட்சி கிடைக்கும். இது கிளர்ச்சியையும் மகிழ்ச்சியையும், இன்பத்தையும், உற்சாகத்தையும் உண்டாக்கியது போலவே அறிவையும் ஆற்றலையும் பலத்தையும் செல்வ வளத்தையும்  கொடுத்ததை ரிக் வேதம் தெளிவாகக் காட்டுகிறது

RV.9-97 துதியைப் பாடியவர்கள் — மைத்ரா வருணி வசிஷ்டன்,  வாசிஷ்ட இந்திர பிரதிமதி, வாசிஷ்ட வ்ருஷகணன் , மன்யு, உபமன்யு, வியாக்ரபாதன், சக்தி, கர்ண சுருதி, மிருடீகன் , வசுக்கிரன், பராசர சாக்தியன் , ருத்ச ஆங்கிரசன் ஆகியோர் ஆவர். இதில் ராமாயண கால முனிவர்கள் பெயர்கள் வருவதால் இது ரிக் வேத காலத்தின் கடைசி பகுதியாகும் என்பது பலரின் கருத்து.

–subham–

tags- சோமரசம்-4 அபூர்வ தகவல்கள்-4,  ரிஷிகள் ,  ரிக் வேதம்

‘மயிரும் பயிரும்’- ஒரு பெண் புலவர் பாடிய பாட்டு ! (Post No.10054)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,054

Date uploaded in London – 4 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

உலகிலேயே பழைய நூல் ரிக்வேதம். 6000 ஆண்டுகளுக்கு முந்தைய புஸ்தகம் என்கிறார்கள் ஜெர்மன் அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும், சுதந்திரப் போராட்ட வீரர் பலகங்காதர திலகரும். பிரிட்டிஷ் கைக்கூலியாக கிழக்கு இந்திய கம்பெனியின் மொழிபெயர்ப்பாளராக அமர்த்தப்பட்ட பிரிட்டன் வாழ், ஜெர்மன் ஆள் மாக்ஸ்முல்லர் முதலில் கி.மு 1200 என்று உளறிவிட்டு , பேராசிரியர் வில்சன் முதலியோர் கொடுத்த அடி தாங்காமல் ரிக் வேதம் கி.மு 1500 அல்லது அதற்கு முன் உண்டானது; எவரும் இதன் காலத்தைக் கணக்கிடவே முடியாது என்று கதறினார். இப்போது அமெரிக்காவில் இந்துக்களை  எதிர்த்துப் பேசிவரும் விட்சல் இது கி.மு 1700 என்கிறார். இந்துக்களோவெனில் இதை நாலாக வேத வியாசர் பிரித்தது கி.மு. 3150ல் என்கின்றனர். அணுசக்தி ஆராய்ச்சி நிலையம் (BARC) மற்றும் அமெரிக்க விண் வெளி நாசா (NASA) நடத்திய அராய்ச்சிகளோ இதில் குறிப்பிடும் சரஸ்வதி நதி கி.மு 2000க்கு முன் ஓடியதாக சொல்கின்றனர். இவ்வாறு பல்லாயிரம் ஆண்டுப் பழமையான ரிக் வேதத்தில் 20-க்கும் மேலான பெண் புலவர்கள் இருக்கின்றனர். அதுவும் உலக சாதனை. இவ்வளவு பெண் புலவர்களின் பட்டியல் அக்காலத்தில் வேறு எங்கும் இல்லை.

ரிக் வேதத்தில் எட்டாவது மண்டலத்தில் 91-ஆவது துதியாக வருகிறது (RV.8-91)அபாலா என்னும் பெண்மணி பாடிய கவிதை. அவர் இந்திரனை நோக்கி வேண்டுகிறார்.

இதில் பல அதிசய விஷயங்கள் உள்ளன. சோம லதா என்னும் அதிசயக் கொடி மலையில் விளைகிறது, அதை பருந்து கொண்டு தருகிறது என்றெல்லாம் பல புலவர்கள் பாடுகின்றனர் . ஆனால் அபாலா அதை  தான் போகும் வழியில் தண்ணீர் (நீரோடை) அருகில் காண்கிறாள்.அதைச் சாப்பிட்டு குணமும் அடைகிறாள். அவள் தனக்கும் தன்  தந்தைக்கும் இளமை திரும்ப வேண்டுகிறாள் . எப்படி தனக்கும் தத்தையின் வழுக்கைத் தலையிலும் முடி வளருகிறதோ அதே போல பயிரும் செழித்து வளர வேண்டும் என்கிறாள். மூன்று முறை அவளை இந்திரன் தேரின் சக்கரத் துளைகள் வழியாக இழுத்த பின்னர் அவளிடம் இருந்த தோல் வியாதி குணமாகி முடி வளர்ந்தது.

ஆண்டாளும் அபாலாவும்

இங்கு அபாலா  நமக்கு ஆண்டாளை நினைவுபடுத்துகிறார். அபாலாவுக்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த ஆண்டாளும் தேச பக்தி உணர்ச்சி பொங்க , “தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து

ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகள” என்று வேண்டுகிறார்

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து

ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப்

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி

வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!—திருப்பாவை

XXXX

இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் தந்தை மீது அவள் கொண்டுள்ள பாசம் மற்றும் விவசாயத்தில் முனைப்பு. ஆக, வெள்ளைக்காரன் சொன்ன நாடோடி விஷயம் பொய்யாகப் போனது ! வேத கால இந்துக்களை விவசாயம் செய்யாத நாடோடி என்று வெள்ளைக்காரர்கள் ‘கப்ஸா’ விட்டனர். அவர்களது முகத்திரையைக் கிழித்து விட்டது அபாலாவின் ரிக்வேதக் கவிதை

அவளுக்கு தோல் வியாதி இருந்ததால் கணவன் அவளை வெறுத்தான் என்பதும் கவிதையில் வருகிறது. ஆகையால் வியாதியுள்ள பெண்களின் அவல நிலையும் நமக்குத் புரிகிறது .

மூன்று முறை தேரின் துளை வழியாக இழுத்தனர் என்பது ஒரு சடங்காக இருக்கலாம்.  தேரின் 3 துளை பற்றி ரிக் வேத முதல் மண்டலத்திலும் வருகிறது (1-164)

XXXX

இதோ பாடலின் சுருக்கம் (RV.8-91)

8-91-1.நீரோடைக்குச் சென்ற ஒரு இளம்பெண்  சோம லதை  என்னும் செடியைக் கண்டாள். அதை எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றாள் . இந்திரனே உனக்கு இதன் ரசத்தைப் பிழிந்து தருவேன் என்றாள்.

2.நீ வீரன், ஒளியுடன் பிரகாசிப்பவன்; வீடு வீடாகச் செல்பவன். என் பற்களால் கடித்துப் பிழியப்பட்ட  இந்த சோம ரசத்தை யவ /பார்லி பொரியுடனும், கரம்பைக் கஞ்சியுடனும், புரொடச ரொட்டிகளுடனும் சாப்பிடு .

XXXX

இங்கே ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும்; இராம பிரானுக்கு சபரி என்னும் வேடுவ குலக் கிழவி இலந்தைப் பழத்தைக் பல்லால் கடித்து ருசி பார்த்துவிட்டு நல்ல கனிகளை மட்டும் கொடுத்தாள்; அது போல இங்கு ஒரு இளம் பெண் தன் பல்லால் கடித்து பிழியப்பட்ட சோம ரசத்தைக் கொடுக்கிறாள் . அது மட்டுமல்ல. அத்தோடு அவள்  கொடுக்கும் எல்லா உணவு வகைகளும் ‘வெஜிட்டேரியன்’ VEGETARIAN DISHES பண்டங்கள் என்பதையும் கவனிக்க வேண்டும் .XXXX

3. நாங்கள் உன்னை தெரிந்து கொள்ள ஆசைப்பட்டோம். ஆனால் நீயே இங்கு வந்து இருப்பதை அறியவில்லை ; சோம ரசமே முதலில் மெதுவாகவும் பின்னர் வேகமாகவும் பாய்ந்து போ.

4.இந்திரன் எங்களுக்கு அடிக்கடி பலத்தையும் செல்வத்தையும் தருக; கணவனால்  வெறுக்கப்பட்ட பெண்கள் இந்திரன் உதவியை நாடுவோமாகுக.

5. இந்திரனே, மூன்று இடங்களை செழிப்பாக் குவாயாக. என் தந்தையின் வழுக்கைத் தலையையும், பாழாய்ப் போன நிலத்தையும், என் அங்கத்தையும் செழிப்பாக்குக ,

6. இந்திரனே, மூன்று இடங்களை செழிப்பாக் குவாயாக.. என் தந்தையின் வழுக்கைத் தலையையும், பாழாய்ப் போன நிலத்தையும், என் இடுப்புக்கு கீழேயுள்ள வியாதியுள்ள இடத்தையும் செழிப்பாக்குக ,

8-91-7.சதக்ரதுவே; நீ அபலையின் உடலை சகடத்தின் துளையிலே மூன்று முறை செலுத்தி சுகப்படுத்தினாய். அவளுக்கு சூரியனைப் போல ஒளிவீசும் தோலையும் தந்தாய்.

XXXX

இது ஒரு அருமையான, நிறைய தகவல் உள்ள கவிதை. சோமம் என்பது வெள்ளை க்காரன் சொல்லும் போதை பொருள் அல்ல. நோய் தீர்க்கும் ,மருந்து; ஆயுளை நீட்டிக்கும் அபூர்வ மூலிகை ; தோல் வியாதிகளைக் குணப்படுத்தும் .

என்பதையும் இக்கவிதை உறுதிப்படுத்துகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அக்காலத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் கவிபாடினர். 3000, 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த கிரேக்க, பாபிலோனிய, சுமேரிய , சீன, பாரசீக ,எகிப்திய நாகரீகங்களில் பெண் கவிஞர்கள் அரிதிலும் அரிது!

இந்தக் கவிதைகளை நமக்குத் தொகுத்தளித்த வியாசருக்கு வணக்கங்கள்; அதைப் பாதுகாத்து வாமொழியாகவே பரப்பி வரும் பிராமணர்களுக்கும் நமஸ்காரம்.

-SUBHAM-

tags- மயிர், பயிர், அபாலா , ஆண்டாள், வழுக்கைத் தலை, ரிக் வேதம், கவிதை , சபரி

சங்கப் புலவர் மாமூலனார் ரிக் வேதத்தை ‘காப்பி’ அடித்தாரா? (Post 10,029)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,029

Date uploaded in London – 28 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மாமூலனார் என்ற சங்கப் புலவர் காலத்தினால் மிகவும் முந்தியவர் என்று கருதுவோரும் உண்டு. காரணம் என்னவெனில் இவர் தமிழ் நாட்டின் மீது மௌரியர் படையெடுத்து வந்ததைக் குறிப்பிடுகிறார். ஆயினும் இந்தக் கட்டுரையில் நாம் காணப்போவது வேறு விஷயம் ஆகும். அகநானூற்றுப் பாடலில் இவர் ஒரு அபூர்வ விஷயத்தை உவமையாகக் கையாள்கிறார் . இதை எகிப்திலும் ரிக் வேதத்திலும் காண முடிகிறது. இவர் பழங்காலப் புலவர் என்பதற்கு இதுவும் சான்றாக அமையலாம்.

அகநானூறு பாடல் 101

1. களிற்றியானை நிரை

பாடல்: 101 (அம்மவாழி)

அம்ம வாழி, தோழி! ‘இம்மை

நன்றுசெய் மருங்கில் தீதுஇல்’ என்னும்

தொன்றுபடு பழமொழி இன்றுபொய்த் தன்றுகொல்?-

தகர்மருப்பு ஏய்ப்பச் சுற்றுபு சுரிந்த

சுவல்மாய் பித்தைச் செங்கண் மழவர் 5

வாய்ப்பகை கடியும் மண்ணொடு கடுந்திறல்

தீப்படு சிறுகோல் வில்லொடு பற்றி,

நுரைதெரி மத்தம் கொளீஇ, நிரைப் புறத்து,

அடிபுதை தொடுதோல் பறைய ஏகிக்,

கடிபுலம் கவர்ந்த கன்றுடைக் கொள்ளையர், 10

இனம்தலை பெயர்க்கும் நனந்தலைப் பெருங்காட்டு,

அகல் இரு விசும்பிற்கு ஓடம் போலப்,

பகலிடை நின்ற பல்கதிர் ஞாயிற்று

உருப்பு அவிர்பு ஊரிய சுழன்றுவரு கோடைப்

புன்கான் முருங்கை ஊழ்கழி பன்மலர், 15

தண்கார் ஆலியின், தாவன உதிரும்,

பனிபடு பன்மலை இறந்தோர்க்கு,

முனிதகு பண்புயாம் செய்தன்றோ இலமே! 18

xxxxx

அகல் இரு விசும்பிற்கு ஓடம் போல 

பகலிடை நின்ற பல்கதிர் ஞாயிற்று

என்பதன் பொருளை மட்டும் எடுத்துக் கொள்வோம்

4 முதல் 11 வரிகளில் மழவர்கள், இருமல் வராமல் இருப்பதற்காக,  வாயில் புற்று மண்ணை அடக்கிக்கொண்டு , தீ அம்புகளுடன் சென்று பசுமாடுகளைக் கவர்ந்து கொண்டுவந்து பங்கிட்டுக் கொள்ளுவர் என்ற பொருள் வருகிறது

இதையும் ரிக் வேதத்தில் பல இடங்களில் காணலாம்; மறைத்து வைக்கப்பட்ட ஆநிரைகளை மீட்க இந்திரன் உதவியதாகப் பல பாடல்களில் காண்கிறோம்

11 முதல் 15 வரிகளில்

அகன்ற வானமாகிய கடலில் இயங்கும் தோணி போல் பகற்போதில் நின்ற பல கதிர்களையுடைய  கதிரவனுடைய வெப்பம் விளங்கிப் பரவச்  சுழன்று வரும் மேல் காற்றால் முருங்கை மலர்ப் பூக்கள் உதிரும். அது கார் கால ஆலங்கட்டி மழை போல இருக்கும் . இந்த சூழ்நிலையில் பல மலைகளையும் தாண்டிச் சென்ற தலைவருக்கு நான் வெறுக்கத்தக்க செயல் எதையும் செய்யவில்லையே!

சூரியனை வானத்தில் செல்லும் படகு என்று வருணிப்பதை ரிக் வேதத்திலும் எகிப்திலும் மட்டுமே காணலாம். தமிழ், சம்ஸ்க்ருத இலக்கியங்களில் ‘ஓராழித் தேருடையோன் , 7 குதிரைகள் பூட்டிய ஒரு சக்கர தேர் உடையவன்’ என்றே பெரும்பாலும் வருணிப்பர். இவ்வாறு ஆகாயத்தில் செல்லும் படகு என்பது, மாமூலனார் வேதம் கற்ற பார்ப்பான் என்பதைக் காட்டுகிறது.

xxxx

எகிப்தில்

எகிப்தில் சூரிய தேவனை ‘ரா’ (Ra, Re) என்ற பெயரில் வணங்குகின்றனர். இந்துக்களைப் போலவே மூன்று வடிவில் வணங்குகின்றனர். ரிக் வேதம் முழுதும் அக்கினியையும், சூரியனையும் மூன்று எண்ணுடன் தொடர்பு படுத்துகின்றனர். 1.மின்னல், 2.அக்கினி, 3.சூரியன் என்பது ஒரு விளக்கம் . எகிப்தில் காலையில் குழந்தை அல்லது கேப்ரி என்றும் பகலில் ரா ஹரக்தி என்றும் மாலையில் ரா ஆதம் என்றும் சூரிய தேவனை வழிபடுகின்றனர். பிராமணர்களும் இதே போல மூன்று வேளைகளில் சூரியனை தினமும் இன்றும் வழிபடுகின்றனர்.

‘ரா’ என்ற பெயரே சம்ஸ்க்ருத வேர்ச் சொல் – ‘ஒளி’- என்பதிலிருந்து வந்ததே .

இரவு  நேரத்தில் அது ஒரு படகில் பயணம் செய்து இறந்தோர் வாழும் உலகத்தைக் கடப்பதாகவும் அப்போது  தீய ஆவிகளிடமிருந்து சூரியனை நல்ல ஆவிகளும் சேத் (Seth)  என்னும் தெய்வமும் காப்பதாகவும் எகிப்திய புராணம் கூறும் .

xxxx

ரிக் வேதத்தில்

ரிக் வேதத்தில் பல கடவுளரைப் புகழும் போது வானத்தைக் கடலாகவும் அந்த தேவதையை படகு அல்லது கப்பலாலாவும் வருணிக்கின்றனர். வேதம் படித்த ,மாமூலனார் இந்த ‘ஐடியா’வை ரிக் வேதத்தில் இருந்து எடுத்து சூர்ய தேவனுக்குச் சூட்டினார் போலும் .

இதோ ரிக்வேதப் பாடல்:-

RV.1-46-7

துதிகளான கடலின் மீது எங்களைக் கடத்திச் செல்ல கப்பலைப் போல வாருங்கள் .

இது அஸ்வினி தேவர்களை நோக்கி ரிஷி பிரஸ் கண்வ காண்வன் பாடியது

திருவள்ளுவர் கடலை நீந்திக் கடப்பது பற்றிப் பாடுகிறார்.(பிறவிப்  பெருங்கடல்………..). வேதம் முழுதும் கப்பல் அல்லது படகில் கடப்பது பற்றியே வருகிறது. அதிலும் வானத்தை- ஆகாயத்தை — கடலாக வருணிப்பது வேதத்தில் பல இடங்களில் வருகிறது.

xxx

My old articles –

Tagged with எகிப்திய அதிசயங்கள் -14 – Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › எ…

  1.  

4 Mar 2017 — எகிப்திய அதிசயங்கள் -14 (Post No.3689) … மற்றொன்று சூரியனின் படகு என்றும் …


Tagged with வட திசை -2 – Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › வ…

  1.  

2 Oct 2020 — சூரியன் மறையும் இருண்ட திசை; … சூரியனை வானத்தில் ஓடும் படகு/ ஓடம் என்ற …

–subham—

tags-  மாமூலனார், அகநானூறு பாடல் 101,சூரியன், படகு, வானம், ரிக் வேதம் 

ஆற்றலின் மகனே !கட்டிளங் காளையே! அக்கினி தேவனே ! (Post No.10,021)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,021

Date uploaded in London – 25 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக் வேதம் முழுதும், பாரதியார் பாட்டு போல, எல்லாம் ஆக்க பூர்வமான சொற்களே இருக்கும். அது மட்டுமல்ல; நல்ல கற்பனை வளம் மிக்க சொற்களையும் உவமைகளையும்  காணலாம். அக்கினி தேவனை அழைப்பதற்காக ஒவ்வொரு வீட்டிலும் காலை, நண்பகல், மாலை என்று மூன்று வேளைகளிலும் ஹோமத் தீ மூட்டுவர். அப்போது சொல்லும் மந்திரங்களை ரிக் வேதத்தின் எட்டாவது மண்டலத்திலுள்ள இரண்டு துதிகளில் உள்ள ஆக்கபூர்வ அடை மொழிகளை, சொற்களை,  மட்டும் தருகிறேன் . இன்னொரு துதியில் அக்கினியை ‘ஒளி ஆடை அணிந்தவனே’ என்று புலவர் விளிக்கிறார் இங்கே நெய் முடியுடைவனே என்று பகர்கிறார்.

இதோ ரிக் வேதம் RV.8-60

அக்கினி தேவனை ரிஷி பர்க்க பிரகாதன் பாடுகிறார்.

ஆற்றலின் மகனே

நெய் கேசம் உடையவனே

பழையவனே

புலவனே (கவி)

சுத்தம் செய்பவனே

இன்பம் தருவோனே

வாரி வழங்குவோனே

பிரகாசிப்போனே

அதி இளைஞனே

நித்தியனே

சத்தியனே

மனைகளை அளிப்பவனே

பாலகனே

எங்கும் பரவியவனே

மஹானே

நண்பர்களை மேம்படுத்துவோனே

ஆற்றலின் தலைவனே

நலத்தை அளிப்பவனே

பலத்தின் தலைவனே

பலத்தின் மகனே

கொம்புகளைத் தீட்டும் காளையே

இரண்டு தாய் உடையவனே

(வேத காலத்தில் இரண்டு மரக்கட்டைகளை  வைத்து தீ உண்டாக்கினர்)

சூடான சுவாலையால் மேகத்தைக் கிழிப்பவனே

(மேகத்தின் இடையே ஒளிரும் கீற்று மின்னல்)

தடைப்படாத அக்கினியே

தேவனான அக்கினியே

ஜனங்களைக் காப்போனே

ஒளிச் செல்வனே

XXX

துதி RV.8-61 (ரிக்  வேதம்)

இது இந்திரனை நோக்கி ரிஷி பர்க பிரகாதன் பாடுவது-

இந்திரனே

புருவசுவே

மகவானே

விப்ரனே

அழகிய மோவாய் உள்ளவனே

பலத்தின் தலைவனே

சூரனே

வள்ளலே

பொன்னார் மேனியனே

தாங்க ஊற்றே

சதக்ரதுவே (சதாவதானி)

தடை படாதவனே

நண்பனே

செல்வபதியே

பகைவர்களைப் புடைப்பவனே

புரந்தரனே

இவ்வாறு பாசிட்டிவ் சொல்லாக்கத்தையே பாடினால் நமது மனதும் எதையும் செய்யும் சக்தி பெறு ம். எதையும் தாங்கும் சக்தியையும் பெறும்.

வேத மந்திரங்களை இசைக்க முடியாதோர் அதை கேட்கவாவது செய்யலாம்.

—SUBHAM—

TAGS– ரிக் வேதம், ஆக்கபூர்வ, சொல்லாக்கம் , ஆற்றல், அடைமொழி

விநாயக கவசமும் ரிக் வேதமும் (Post No.10,013)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,013

Date uploaded in London – 24 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

உலகிலேயே திசைகளை தினமும் வணங்குபவர்கள் இந்துக்கள்தான். முஸ்லீம்கள் மெக்காவில் காபா இருக்கும் திசையை மட்டும் நோக்கி வணங்குவர். முஸ்லீம் நாடுகளின் விமான சர்வீஸில் பறந்தால் ஆசனத்துக்கு முன்னாலுள்ள COMPUTER கம்ப்யூட்டர் திரைகளில் மெக்கா இருக்கும் திசையை காட்டிக்கொண்டே வரும்.; அதை நோக்கித்தான் முஸ்லீம்கள் தொழ வேண்டும். ஆனால் இந்துக்களுக்கு அந்த கஷ்டமே இல்லை . எல்லா திசைகளிலும் கடவுள் இருக்கிறான் என்று வணங்குவார்கள் . குறிப்பாக பிராமணர்கள் தினமும் மூன்று வேளைகளில் செய்யும் சந்தியா வந்தனத்தில் கிழக்கு தெற்கு, மேற்கு, வடக்கு என்று (வலம் வரும் திசை ) சம்ஸ்க்ருதத்தில் மந்திரம் சொல்லி வணங்குவர். இதை இந்துக்கள் சொல்லும் கவசங்களிலும் காணலாம். எல்லா திசைக்கும் உரிய கடவுளின் பெயரைச் சொல்லி அந்த திசையிலும் இறைவனின் பாதுகாப்பு இருக்கட்டும் என்று இறைவனை இறைஞ்சுவர்.

முன்னர் ஒரு கட்டுரையில் கந்த சஷ்டிக் கவசத்துக்கும் ரிக் வேதத்துக்கும் உள்ள ஒற்றுமையைக் கண்டோம். இன்று விநாயக கவசத்தையும் ரிக் வேதத்தையும் ஒப்பிடுவோம்.

XXX

ரிக் வேதம் RV.8-61

ரிக் வேதம் RV.8-61 துதியை ஞானக் கண்ணால் கண்டு நமக்கு அளித்த ரிஷியின் பெயர் -பர்க்கப் பிரகாதன்

XXX

8-61-15

அனைத்தையும் அறியும் இந்திரனே! விருத்திராசுரனைக் கொன்றவனே !

எங்கள் முதல், கடைசி, நடு புதல்வர்களைக் காப்பாயாக. அவன் முன் புறத்திலும் பின்புறத்திலும் காப்பானாகுக .

XXX

8-61-16

மேற்கிலிருந்தும், தெற்கிலிருந்தும், வடக்கிலிருந்தும் , கிழக்கிலிருந்தும் , ஒவ்வொரு திசையிலிருந்தும் காப்பானாகுக .வானிலிருந்து வரும் ஆபத்திலிருந்து காக்கவும்; எங்களை ஆயுதங்களில் இருந்து காப்பாற்றவும் (இங்கு ஆயுதம் என்பது அதேவி= மூதேவி)

XXX

8-61-17

இந்திரனே! நல்லோரின் தலைவனே ! தினமும் காக்க; இனி வரும் நாளை , அதற்குப் பின்  வரும் நாளிலும் காக்க ;இரவும் பகலும் எல்லாத் திசைகளிலும் காக்கவும்

XXX

இதற்கு முந்தைய மந்திரங்களில் பகைவரை வெல்வோமாக; உணவைத் தருக (மந்திர எண் 4); எங்கள் விருப்பங்களை பூர்த்தி செய்க(5); நான் விரும்பும் எதையும் தருக (6); வள்ளலே ! பசுக்களையும் குதிரைகளையும் தருக (7); பாவம் அகல, கருமித் தனம் அகல, ஒளியின்மை /இருள் அகல நீ உதவியதாக எண்ணுகிறோம் (11); பயமின்மையை அருளுக(13) என்றும் வேண்டுகிறார்.

இதோ விநாயக கவசம்:–

1.விநாயக கவசமும் அதன் பலனும்:–

வளர் சிகையைப் பராபரமாய் வயங்கு விநாயகர் காக்க!

வாய்ந்தசென்னி அளவுபடா அதிக சவுந்தர தேகம்

மதோற்கடர்தாம் அமர்ந்து காக்க! விளரற

நெற்றியை என்றும் விளங்கிய காசிபர் காக்க!

புருவந் தம்மைத் தளர்வில் மகோதரர் காக்க!

தடவிழிகள் பாலசந்திரனார் காக்க!

2.கவின்வளர் அதரம் கசமுகர் காக்க!

தால்  அங்கணக்கீரிடர் காக்க!

நவில்சிபுகம் கிரிசை சுதர் காக்க!

நனி வாக்கை விநாயகர்தாம் காக்க!
அவிர்நகை துன்முகர் காக்க!
அள் எழிற் செஞ்செவி பாசபாணி காக்க!

தவிர்தலுறாது இளங்கொடிபோல் வளர்மணி
நாசியைக் சித்திதார்த்தர் காக்க!

3.காமருபூமுகந்தன்னைக் குணேசர் நனி காக்க!
களம் கணேசர் காக்க!

வாமமுறும் இருதோளும் வயங்கு கந்தபூர்வசர்
தாம் மகிழ்ந்து காக்க! ஏமமுறு மணிமுலை
விக்கின விநாசர் காக்க! இதயந் தன்னைத்
தோமகலுங் கணநாதர் காக்க!

அகட்டினைத் துலங்கு ஏரம்பர் காக்க!


4.பக்கம் இரண்டையும் தராதரர் காக்க!
பிருட்டத்தைப் பாவம் நீக்கும் விக்கினகரன் காக்க!

விளங்கிலிங்கம் வியாளபூடணர்தாம் காக்க!

தக்க குய்யந்தன்னை வக்கிரதுண்டர் காக்க!
சகனத்தை அல்லல் உக்க கணபன் காக்க!
ஊருவை மங்களமூர்த்தி உவந்து காக்க!

5.தாழ்முழந்தாள் மகாபுத்தி காக்க!

இருபதம் ஏகதந்தர் காக்க! வாழ்கரம்
க்ஷிப்பிரப் பிரசாதனர் காக்க! முன்கையை
வணங்குவார் நோய் ஆழ்தரச்செய் ஆசாபூரகர் காக்க!

கேழ்கிளறும் நகங்கள் விநாயகர் காக்க!

கிழக்கினிற் புத்தீசர் காக்க!

6.அக்கினியிற் சித்தீசர் காக்க!
உமாபுத்திரர் தென்னாசை காக்க!
மிக்க நிருதியிற் கணேசுரர் காக்க!

விக்கினவர்த்தனர் மேற்கென்னுந் திக்கதனிற் காக்க!
வாயுவிற் கசகன்னர் காக்க!
திகழ்  உதீசி தக்க நிதிபன் ாக்க!
வடகிழக்கில் ஈசநந்தனரே காக்க!

7.ஏகதந்தர்பகல் முழுதுங் காக்க! இரவினும் சந்தி
இரண்டன் மாட்டும் ஒகையின் விக்கினகிருது காக்க!
இராக்கதர் பூதம் உறு வேதாளம் மோகினி பேய்
இவையாதி உயிர்த்திறத்தால் வருந்துயரும்
முடிவிலாத வேகமுறு பிணிபலவும் விலக்குபு
பாசாங்குசர்தாம் விரைந்து காக்க!

8.மதி,ஞானம், தவம், தானம், மானம், ஒளி, புகழ்,

குலம், வண்சரீரம், முற்றும் பதிவான தனம்,

தானியம், கிரகம், மனைவி, மைந்தர், பயில்

நட்பாதிக் கதியாவும் கலந்து சர்வாயுதர் காக்க!

காமர் பவுத்திரர் முன்னான விதியாரும்

சுற்றமெலாம் மயூரேசர் எஞ்ஞான்றும் விரும்பிக் காக்க!

9.வென்றி,சீவிதம் கபிலர் காக்க!

கரியாதியெலாம் விகடர் காக்க!

என்றிவ்வாறிது தனை முக்காலுமும் ஓதிடின்,

நும்பால் இடையூறென்றும் ஒன்றுறா, முனிவரர்காள்,

அறிமின்கள், யாரொருவர் ஓதினாலும் மன்ற ஆங்கவர்

தேகம் பிணியற வச்சிர தேகமாகி மின்னும்!

XXX

விநாயக கவசப் பலன்

10.யாத்திரையில் தோத்திரம் செய்தால் சகல

விக்கினமும் இரியல் போக

மூத்த பயன் கைகூடும் சமரின் மொழிந்

திடில் விசயம் முற்றும் நாளும்

ஏத்தியிரு முறை இருபத் தொருநாள் வந்

தித்டின் மாரணம் ஈண்டேதம்

பனமாதி நிலை பேறெய்தும்.

11.நித்தலு மூவேழுமுறை செபித்திடில்கா

ராக்கிருகநீங்கு மன்னர்

பொத்துமுளநிட்டூரம் போம் அரையன்

தனைக் காணும்போது முக்கால்

பத்தியின் ஓதிடின் அவன் தான் வசப்படுவன்

இதைத் தாளிப் பனைமெல்லேட்டில்

வைத்தெழுதிப் படிப்பினும் கேட்பினும் பூசை

வயக்கினும் வல் இடரும் தீரும்.

12.அன்பு, உறுதி, ஆசாரம் உடையார்க்கு இக்

கவசத்தை அறைக! அல்லார்க்கு

என்பெறினும் உரையற்க! எனக்கிளந்து

மரீசி தனது இருக்கை உற்றான்.

சுபம்–

கந்த சஷ்டிக் கவசத்தில் ரிக் வேத வரிகள் – Tamil and …

https://tamilandvedas.com › கந்த-…

  1.  

13 Aug 2021 — WRITTEN BY LONDON SWAMINATHAN. Post No. 9972. Date uploaded in London – 13 AUGUST 2021. Contact – swami_48@yahoo.com.


கந்த சஷ்டிக் கவசத்தில் ரிக் வேத வரிகள் – Swami’s …

https://swamiindology.blogspot.com › post-no9972

13 Aug 2021 — WRITTEN BY LONDON SWAMINATHAN. Post No. 9972. Date uploaded in London – 13 AUGUST 2021. Contact – swami_48@yahoo.com.

Tagged with விநாயக கவசம் – Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › வ…

17 Sept 2015 — DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE. Written by London swaminathan.

—SUBHAM–

TAGS- விநாயக கவசம், ரிக் வேதம்,

திருவாசகத்தில் ரிக் வேதம்! (Post No.9829)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9829

Date uploaded in London –8 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சைவ சமயப் பெரியோர் நால்வரில் உள்ளத்தை உருக்கும் திருவாசகத்தை நமக்கு அருளியவர் மாணிக்க வாசகர் . திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பதை எல்லோரும் அறிவர் . இறைவனின் அருள், கல்லைப்பிசைந்து கனியாக்கும் என்பது அவரது வாக்கு.; பால் நினைந்தூட்டும் தாய் என்று இறைவனைப் போற்றுகிறார் . அவர் மதுரைக்கருகில் திருவாதவூரில் அமாத்தியப் பிராமணர் குலத்தில் உதித்தவர் என்பதால்  வேதத்ததில் வல்லவர் ஆக இருப்பதில்  வியப்பில்லை.

அவர் பரியை நரியாக்கிய திரு விளையாடலில் தொடர்புடையவர். அதை அப்பரும் குறிப்பிடுவதால் அவருக்கு சற்று முன்னர் வாழ்ந்தவராக இருத்தல் வேண்டும். அதாவது 1400 ஆண்டுகளுக்கு முந்தையவர். இந்துக்களின் புனித நூலான ரிக் வேதம் உலகிலேயே பழமையான நூல் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமுமில்லை கிமு 6000 முதல் 1500 வரை பலரும் பல தேதிகள் குறிக்கின்றனர்.

ரிக்வேத ரிஷிகளின் பாடல்களிலும் மாணிக்க வாசகரின் பாடல்களிலும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன.. இரு நூல்களும் “அழுதால்  உன்னைப் பெறலாமே ” என்று இறைவனிடம் அழுகின்றன..

மாணிக்க வாசகர் நான்கு வேதங்களும் ஓலம் இடுகின்றன என்கிறார்

வேதங்கள் ஐயா என்று அலறுகின்றன என்றும் பாடுகிறார்.. இதோ சில ஒப்புமைகளைக் காண்போம்.

xxxx

RV 1-25-19

Varuna , hear this call of mine; be gracious unto us this day.

Longing for help I cried to thee.

ரிஷி சுனஸ்சேபன்  பாடுகிறார் –

வருணனே என்னுடைய இந்த அழைப்பைக் கேட்கவும். .எங்களிடம் கருணை காட்டுவாயாக. உன் உதவியை வேண்டி கதறுகிறேன்

நாத நாத என்றழு தரற்றிப்

பாத மெய்தினர் பாத மெய்தவும்-  கீர்த்தித் திரு அகவல் 2-136

வேதங்கள்

ஐயா! எனவோங்கி ஆழ்ந்த கன்ற நுண்ணியனே !

-சிவபுராணம் , வரி 34/35, திருவாசகம்

Xxx

1-34-12

Bring in your triple car, O Asvins, bring us present prosperity with noble offspring.

I cry to you who hear me for protection; you be our helpers where men win the booty.

“அஸ்வினி தேவர்களே! உங்களுடைய முச்சக்கர தேரிலே எங்களுக்கு செல்வத்தையும் வீரம் மிக்க புதல்வர்களையும் கொண்டுவாருங்கள்; என் துதியை செவிமடுக்கும் நீவீர் எங்களைக் காப்பாற்றுங்கள்; போரில் நாங்கள் வெற்றி பெற எங்களுக்கு உதவுங்கள் என்று கதறுகின்றேன்.”

தப்பாமே, தாம் பிடித்தது சலியா,

தழல் அது கண்ட மெழுகு அது போல,

தொழுது, உளம் உருகி, அழுது, உடல் கம்பித்து,

ஆடியும், அலறியும், பாடியும், பரவியும்,

போற்றித்  திரு அகவல்  4-59…..61

Xxx

1-38-2

Now whither to ? what goal of yours you go in heaven and not on earth?

Where else you find cows bellowing (mooing)?

மருத் தேவர்களே! இப்பொழுது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் ? சொர்க்கத்திலிருந்து வாருங்கள்; பூமியை  விட்டுச் செல்லாதீர்; பசுக்களைப் போல கதறும் வழிபடுவோர் வேறு எங்கே இருக்கிறார்கள்?

வணங்கும் நின்னை, மண்ணும், விண்ணும்; வேதம் நான்கும் ஓலம் இட்டு

உணங்கும், நின்னை எய்தல் உற்று, மற்று ஓர் உண்மை இன்மையின்;

வணங்கி, யாம், விடேங்கள் என்ன, வந்து நின்று அருளுதற்கு,

இணங்கு கொங்கை மங்கை பங்க! என் கொலோ நினைப்பதே? 5-85

Xxx

திருச்  சதகத்தில் மேலும் சில பாடல்களில் ‘கதறுதல், அழுதல் , உருகுதலைக்’ காண்கிறோம் . எவ்வளவுதான் பாவம் செய்தாலும் அழுதால் அவனுடைய அன்பினை, சிவ பெருமானுடைய அன்பினைப் பெறலாம் என்று மாணிக்க வாசகர் உறுதிபடக்  கூறுகிறார்.

ஆக, ரிக்வேதத்திலும் திரு வாசகத்தில் நாம் காணும் ஒற் றமை , மனம் உருகி பிரார்த்தித்தால் இறைவன் ஓடி  வந்து உதவுவான் என்பதே.

ராம க்ருஷ்ண பரம ஹம்சர் இதை ஒரு உவமை மூலம் விளக்குவதை இணைப்பில் காண்க

அழுகேன், நின்பால் அன்பு ஆம் மனம் ஆய்; அழல் சேர்ந்த

மெழுகே அன்னார், மின் ஆர், பொன் ஆர், கழல் கண்டு

தொழுதே, உன்னைத் தொடர்ந்தாரோடும் தொடராதே,

பழுதே பிறந்தேன்; என் கொண்டு உன்னைப் பணிகேனே?

 5-348

In other words they pine, weep, yearn and long for God.

பாடல் எண் : 90 

யானேபொய் என்நெஞ்சும் பொய் என்அன்பும்     பொய்

ஆனால் வினையேன் அழுதால் உன்னைப்   பெறலாமே

தேனே அமுதே கரும்பின் தெளிவே    தித்திக்கும்

மானே அருளாய் அடியேன் உனைவந்    துறுமாறே

5 -357 to 360

xxx

அழுதால் உன்னைப் பெறலாமே | Tamil and …

https://tamilandvedas.com › tag › அ…

  1.  

28 Dec 2016 — அழுதால் உன்னைப் பெறலாமே – மாணிக்க வாசகர் (​Post No.3491). Written by London swaminathan. Date: 28 December 2016. Time uploaded in London:- 11-05 am. Post No.3491. Pictures are …


அழுதால் உன்னை | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › அ…

  1.  

24 Feb 2017 — “அழுதால் உன்னைப் பெறலாமே” என்று மாணிக்கவாசகர், திருவாசகத்தில் சொன்னார். ராமகிருஷ்ண பரமஹம்சரும் பிற்காலத்தில் …

–SUBHAM–

மாணிக்க வாசகர், திருவாசகம், ரிக் வேதம்