ரிக் வேதத்தில் ஹரப்பா நகரம்?

harappa2

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1382; தேதி நவம்பர் 1, 2014.

உலகின் மிகப்பழைய நூல் ரிக்வேதம். வியாசர் என்பவர் இதைத் தொகுத்தார். 5200 ஆண்டுகளுக்கு முன் வேதங்கள் அளவுகடந்து பெருகிவிட்டன. யார் எதைப் படிப்பது? எப்படி மனனம் செய்வது? கடல் போலப் பரந்துவிட்டதே? என்று கவலைப்பட்ட வியாசர் வேதத் துதிப்பாடல்களை நான்காகப் பிரித்து நாலு சிஷ்யர்களைக் கூப்பீட்டு நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பகுதிகளை மட்டும் பரப்புங்கள் என்றார். ரிக், யஜூர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களில் மிகப் பழையது ரிக் வேதம் என்று உலகமே ஒப்புக் கொண்டுவிட்டது. அதில் பத்து மண்டலங்கள் உள்ளன. ஒன்று, பத்து ஆகிய மண்டலம் தவிர ஏனையவை ஒவ்வொரு ரிஷியின் குடும்பத்தினர் பாடிய பாடல்களாகும்.

ஆறாவது மண்டலம் பாரத்வாஜ ரிஷியின் மண்டலம் ஆகும். இதில் 27-ஆவது துதியில் ஹரியூபிய என்னும் ஒரு சொல் வருகிறது. வழக்கம் போல வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் இங்கேயும் உளறிக்கொட்டி கிளறி மூடியிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் எழுதியதாலும், அப்போது பிரிட்டிஷ்காரகள் நம் நாட்டை ஆண்டதாலும் நம் ஊர் மக்குகள், அசடுகள் அவர்கள் சொன்னதை எல்லாம் வேதத்துக்கு மேலான வேதம் என்று நம்பிவிட்டன!!
நல்ல வேளை! இந்துக்கள் செய்த பாக்கியம்! அத்தனை வெள்ளைத் தோல் “அறிஞர்”களும் ஆளுக்கு ஒன்றைத் தத்துப் பித்து என்று எழுதிவிட்டனர். எல்லோரும் ஒரே கருத்தை எழுதி இருந்தால் இவ்வளவு நேரம் இந்துமதத்தையே “த்வம்சம்” செது அழித்திருப்பர். ஆளாளுக்கு ஒவ்வொரு வகையில் உளறியதால் நம் மதம் பிழைத்தது. அவர்கள் சொன்ன ஒரு கருத்து ஹரியூபிய என்பது ஹரப்பா என்பதாகும்.

கிழக்கு பஞ்சாபில் ராவி நதிக்கரையில் ஹரப்பா நகரம் இருக்கிறது. இப்போது இது பாகிஸ்தான் எல்லைக்குள் இருக்கிறது. இதுவும் மொஹஞ்சதாரோ என்னும் நகரமும் சிந்து சமவெளி நாகரீகத்தின் மிகப்பெரிய இரண்டு நகரங்கள் ஆகும். உலகம் வியக்கும் செங்கற் கட்டிடங்களையும் அருமையான திட்டமிடப்பட்ட நகர அமைப்பையும் உடையன இவ்விரு ஊர்களும்.

Rigvedic_geography

நகரமா? நதியா?

ரிக்வேத சூக்தத்தில் வரும் ஹரியூபிய என்ற சொல்லை நதி என்றும் ஊர்ப்பெயர் என்றும் சொல்லுவர் சிலர். இன்னொருவர் “ஐரோப்பா” என்பதே ஹரியூப்பியவில் இருந்து என்றும் சொல்லி இருக்கிறார். உளறுவதற்கு வெள்ளைக்காரகள் மட்டும்தான் உரிமை வாங்கி இருக்கிறார்களா? நாங்கள் உளறக்கூடாதா? என்று இப்போது “பிளாக்:குகள் எழுதுவோரிடயே ஒரு போட்டி!! தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரன்; பிளாக் எழுதுபவன் எல்லாம் அறிஞன் என்று ஆகிவிட்டது. நிற்க.

லுட்விக் என்பவர் இதை யாவ்யாவதி நதியின் மேல் உள்ள நகரம் என்று சொல்வதாக வேதங்களுக்கு இண்டெக்ஸ் தயாரித்த கீத், மக் டொனல் எழுதி வைத்துள்ளனர்.
ஹில்பிராண்ட் என்பவர் குரும் நதியின் உபநதி இது என்று கூறுகிறார்.
வேதத்துக்கு பாஷ்யம் எழுதிய சாயனர் இதை நதி என்பார்.

இந்தத் துதியை மொழி பெயர்த்த கிரிப்பித் என்பவர், அபயவர்த்தின் சாயமான என்ற மன்னன் விரிச்சிவன் என்பவர்களைத் தோற்கடித்த இடம் என்கிறார். ‘’ஹரியூப’’ என்றால் பொன் மயமான யூப தூண்கள் என்று பொருள். ஆகவே ஹரி யூப என்பது வேத கால நகரம் என்ற பொருள் தொனிக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சங்க காலத்திலேயே யூப நெடுந்தூண் என்று சம்ஸ்கிருதச் சொல் பயன் படுத்தப்படுகிறது. அந்த அளவுக்கு தமிழ் மன்னர்கள் யாக யக்ஞங்களை செய்து புகழடைந்தனர்.
harppa mohanjo

போர்னியோ தீவில் (இந்தோநேசியா) மனிதர்கள் காலடி படாத காடு என்று நினைத்த அடர்ந்த காட்டுக்குள் மூலவர்மன் என்பவனின் யூப நெடுந்தூன் கல்வெட்டுடன் கிடைத்ததை காஞ்சிப் பெரியவர் 1932 சென்னைச் சொற்பொழிவுகளில் குறிப்பீட்டுள்ளார். ஆகவே யூபம் என்பது சிந்து சமவெளி நாகரீக ஹரியூப்பியவில் மட்டும் இன்றி 2000 ஆண்டுகளாக ஆசியா முழுதும் பரவிவிட்டது தெரிகிறது.

யூப ஸ்தம்பம் என்பது வேதத்தில் ஆகுதியாக்கப்படும் யாகப் பசு கட்டப்படும் இடம் அல்லது வேதச் சடங்கின் வெற்றியின் நினைவாக எழுப்பபடும் தூண் ஆகும். சங்க இலக்கியத்தில் குறைந்தது நான்கு இடங்களில் ரிக்வேதத்தில் பயன்படுத்தப்பட்ட அதே யூப என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியும், கரிகால் பெருவளத்தானும், பெருநற்கிள்ளியும் யாகங்கள் செய்து புகழ் அடைந்ததை சங்க இலக்கியப் பாடல்கள் விதந்து ஓதும். யூப என்ற சம்ஸ்கிருத சொல் வழங்கும் நான்கு பாடல்கள்:—
புறநானூறு- 15, 224
மதுரைக்காஞ்சி – வரி 27
பதிற்றுப்பத்து – 67–10
Samudra-4787v-280.50

Samudra Gupta’s gold coin with Yupa post near the Horse.

ஆக, ஹரியூப்பிய என்பது ஹரப்பாதான் என்று நம்புவோர் பொன் மயமான ஹரி+யூப நெடுந்தூண் நடப்பட்ட நகரம்தான் அது என்பதை ஒப்புக் கொண்டதாக அர்த்தம். அங்கே நடந்த யுத்தமும் ஒரு மன்னன் மற்றொரு மன்னனைத் தாக்கும் சாதாரணப் போராக இருந்திருக்கலாம். இனப் போர், ஆரிய -திராவிடப் போர் என்று பொருள் கொள்ளத் தேவை இல்லை. உலகிலேயே நீண்ட காலம் போரிட்ட — தங்களுக்குள்ளேயே போரிட்ட —- சேர, சோழ பாண்டியர்களுக்கு உள்ளேயே போரிட்ட — 1500 ஆண்டுகளுக்கு இடைவிடாமல் போரிட்ட – இனம் தமிழ் இனம் ஒன்றுதான். அவர்கள் பேசிய மொழி தமிழ்— அவர்கள் வழிபட்ட தெய்வங்கள் இந்துக் கடவுளர்- அவர்கள் பின்பற்றிய பண்பாடு பாரதப் பண்பாடு – அப்படி இருந்தும் முஸ்லீம்களும், வெள்ளைக்காரர்களும் வரும் வரை போரிட்டது தமிழ் இனம் — ஆகவே ரிக் வேத கால போர்களை இனப் பூசல்கள் என்று வருணிப்பது மடமை!!

ujjain333
Ujjain coin with Yupa post

என்னுடைய முந்தைய சிந்துவெளிக் கட்டுரைகள்:

சிந்து சமவெளியில் பேய் முத்திரை
சிந்து சமவெளியில் ஒரு புலிப் பெண் Aug.23, 2012
‘எள்’ மர்மம்: ரிக் வேதம் முதல் சிந்து சமவெளி வரை! Post No 755 dated 23/12/13
பதி – வதி – மதி: சிந்து சமவெளியில் உண்டா? 20-10-2014
தேள்— ஒரு மர்ம தெய்வம்!
சிந்து சமவெளி & எகிப்தில் நரபலி1 November 2012
சிந்து சமவெளியில் செக்ஸ் வழிபாடு (26/7/13)
கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி – எகிப்து அதிசய ஒற்றுமை
(15/10/12)‘திராவிடர் கொலை வழக்கு: இந்திரன் விடுதலை’ Post-763 dated 28th Dec. 2013.
சிந்து சமவெளியில் அரசமரம்
சிந்து சமவெளி நாகரீகம் பெயரை மாற்றுக! march 29, 2014
1500 ஆண்டு பிராமண ஆட்சியின் வீழ்ச்சி 24-3-14
சிந்து சமவெளி – பிராமணர் தொடர்பு (Post No 1033, Date 10-5-14)

harappa
Harappa buildings
Contact swami_48@yahoo.com