கல்லீரல் மூலம் ஜோதிடம், ஆரூடம்!(Post No.3818)

Written by London swaminathan

 

Date: 14 APRIL 2017

 

Time uploaded in London:- 14-19

 

Post No. 3818

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com 

 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வேத கால மற்றும் பழைய நாகரீகங்களைச் சேர்ந்தோர் எப்படி ஆரூடம் சொன்னார்கள் ஜோதிடம் பார்த்தார்கள் என்று (Please see below for the link) எழுதினேன். இன்று ஹிட்டைட்ஸ் (Hittites) மக்கள் ஜோதிட நம்பிக்கைகளைப் பார்ப்போம்.

 

ஹிட்டைட்ஸ் என்போர் சம்ஸ்கிருதம் தொடர்புள்ள இந்திய- ஐரோப்பிய மொழி ஒன் றைப் பேசினர். கி.மு.1600 முதல் கி.மு. 1200 வரை 400 ஆண்டுகளுக்கு சிரியா-துருக்கி பகுதிகளை ஆண்டனர்,

 

பிராணிகளை அறுத்து அதன் உடலுறுப்புகளைப் பார்த்து ஜோதிடம் சொல்லும் முறை பாபிலோனியாவில் இருந்தது. இது இதாலியில் ரோம் நகரைச் சுற்றியிருந்த எட்ருஸ்கன் (Etruscan) நாகரீகத்திலும் காணப்பட்டது அதிசயமானதே.

 

பாபிலோனிய முறையிலிருந்து சிறிது மாறுபட்ட முறையை இவர்கள் பின்பற்றினர். அதாவது நாம் என்ன கேள்வி கேட்கிறோமோ அதற்குப் பதிலை உடல் உறுப்பிலிருந்து பெறுவர். அதாவது வியாக்கியானம் செய்வர். பாபிலோனிய முறை சிக்கலானது ஆனால் ஹிட்டைட்ஸ் கேள்விகள் எளிமையானவை.

 

பாபிலோனியர்களோ, ஹிட்டைட்ஸ்களோ, காசுகொடுத்து ஜோதிடம் கேட்கும் வணிகம் நடத்தவில்லை; அதாவது சோதிடம் ஒரு தொழிலாக இல்லை. பறவைகள் (சகுனம்), பாம்பு ஜோதிடம் ஆகியன இருந்தன. கிரகங்கள், கிரகணங்கள், நட்சத்திரங்களைக் கொண்டும் சோதிடம் சொன்னார்கள்.

 

பிராணிகளை வெட்டி அதன் கல்லீரல் (liver), குடல் (Intestine) ஆகியவற்றில் அசாதரணமாக ஏதேனும் காணப்பட்டால் அதைக் கொண்டு ஆருடம் சொன்னார்கள். எண்ணையைக் கொட்டி அது எடுக்கும் வடிவத்தை வைத்தும் எதீர்காலத்தைக் கணித்தனர்.

 

பாம்பு, தேனீக்கள், பறவைகளின் போக்கு, கனவுகள், இரவு நேரத்தில் வாயிலிருந்து எச்சில் வடிதல் முதலியவற்றுக்கும் விளக்கம் கூறும் களிமண் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன..

 

ஏராளமான கல்லீரல் (liver) வடிவ உருவங்களைத் தொல்பொருட்துறை றையினர் கண்டு எடுத்துள்ளனர். போகஸ்கோய் (Bogazkoy) என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இத்தகைய வடிவங்கள் எட்ருஸ்கன் (Etruscan)  நாகரீகத்தைவிட 1200 ஆண்டுகள் பழமையானவை. அதாவ இற்றைக்கு 1800 ஆண்டுகளுக்கு முந்தையவை.

 

பாபிலோனிய சொற்கள், ஹிட்டைட்ஸ் ஜோதிடத்தில் காணப்பட்டாலும் அவர்கள் சொன்னதை இவர்கள் அப்படியே ஏற்கவில்லை. ஹிட்டைட்ஸ் மக்கள் மிகவும் சந்தேகப் பேர்வழிகள். ஆ கையால் ஒரே கேள்விக்குப் பல்வேறு சோதிட, ஆரூட முறைகளைப் பின்பற்றி விடைகண்டனர்.

 

சோதிடராகச் செயல்பட்டவர் ஒரு ஆட்டின்மீது கைவைத்து, “வாடிக்கையாளை பிரியப்பாட்டால் இதன் குடல்கள், உடல் உறுப்புகளைச் சோதிக்கட்டும்” என்பார். உடனே வாடிக்கையாளர் அந்த ஆட்டைப் பலி கொடுத்து அதன் உள் உறுப்புகளைப் பார்ப்பார்.

 

மக்களிடம் உடலூனம் பற்றி பல மூட நம்பிக்கைகள் இருந்ததால் அதையே மிருகங்களின் உடலுறுப்புகளுக்கும் பயன்படுத்தினர்.

 

ஒரு பெண்ணுக்கு கண் பார்வையற்ற குழந்தை பிறந்தால் அந்த வீட்டுக்கு துரதிர்ஷ்டம்; ஒரு குழந்தை பிறந்தவுடன் வாயைத் திறந்து  பேசினால் நாட்டைப் புயல் தாக்கும்;  சிங்கம் போலத் தலையுடன் குழந்தை பிறந்தால் எதிரி மன்னர் தாக்குவார்  – என்றெல்லாம் நம்பினர்.

 

இதைத் தவிர கிரகணங்களால் வரும் தீமைகள் குறித்தும் எழுதிவைத்தனர்:

16 ஆம் தேதி கிரகணம் பிடித்தால், மன்னர், நாட்டைக் குட்டிச் சுவர் ஆக்கிவிடுவார். அல்லது வேற்று நாட்டு மன்னர் ஆட்சியைக் கைப்பற்றுவார். 20 ஆம் தேதி கிரகஹணம் வந்தால், நாடு கடத்தப்பட்ட இளவரசன் திரும்பி வந்து தந்தையை விரட்டி ஆட்சியைக் கைப்பற்றுவான். இவ்வாறு ஒவ்வொரு நாளுக்கும் ஒரு ஆருடம்! ஆக இந்த ஜோதிட (மூட) நம்பிக்கைகள் 3000 ஆண்டுகளுக்கும் முன்னரே மத்தியக் கிழக்கில் இருந்தன!!!

 

From my old article posted on 19th April 2015:——-

 

பாபிலோனிய, சுமேரிய நம்பிக்கைகள்

 

இதாலி நாட்டில் இருந்த எட்ருஸ்கன் நாகரீகம் இந்துக்கள் போலவே பறவைகள் சகுனத்தில் நம்பிக்கை வைத்தனர். தமிழர்கள் புள் (பறவை) என்பர்; அவர்கள் புலோன் என்பர்.

 

எட்ருஸ்கன், சுமேரியர், பாபிலோனிய முதலியோர் ஆடு,மாடு முதலியவற்றின் உடல் உறுப்புகளை எடுத்து அதன் நிலையைக் கண்டு சோதிடம் சொன்னார்கள். 3000ஆண்டுக்கு முந்தைய ஆடுகளின் கல்லீரல் வரைபடம், களிமண் மாதிரிகள் கிடைத்திருக்கின்றன. இந்துக்கள் வாஸ்து சாஸ்திர கட்டம் போடுவது போல அந்த கல்லீரல் உறுப்பின் மீது இவர்கள் கட்டம் போட்டு ஆரூடம் சொன்னார்கள். நுரையீரல், மற்றும் குடல் சுற்றி இருக்கும் நிலை ஆகியவற்றைக் கொண்டும் சோதிடம் சொன்னார்கள்.

 

மஹாபாரதத்தில் போர் துவங்கும் முன் வானத்தில் தோன்றிய அறிகுறிகள் பற்றியும், புறநானூற்றில், சேர மன்னன் இறப்பதற்கு முன் தோன்றிய வால் நட்சத்திரம் பற்றியும் சொல்லப் பட்டிருக்கின்றன. இது போலவே மத்திய கிழக்கிலும் (சுமேரிய/பாபிலோனிய) நம்பிக்கைகள் இருந்தன. இந்துக்களைப் போலவே அரசனின் உடல் நலம்/ஆயுள்,படை எடுப்பில் வெற்றியா தோல்வியா, கோவில் கட்டுவது எப்போது, அதிர்ஷ்டம் அடிக்குமா? அடிக்காதா? என்பது போன்ற பல விஷயங்களை அவர்கள் சொன்னார்கள்.

 

Read also my articles:

 

சகுனமும் ஆரூடமும்: வேத கால நம்பிக்கைகள்; posted on 19 April 2015

 

Can Birds Predict Your Future? (Posted on 22 July 2012)

 

Beware of Wagtail Birds: Prediction by Varahamihira (19 February 2015)

 

How to find water in the Desert? Varahamihira on Water Divination (Posted on 16 February 2015)

 

Tamil Astrology: Rope Trick for Predictions (Posed on 27 February 2013)

 

Two Tamil Articles posted on 12 April 2012 on Greek Delphi Oracles and Tamils

 

 

–Subham–

பேயை விரட்ட எலியே போதும்! ஹிட்டைட்ஸ் கண்டுபிடிப்பு! (Post No.3785)

62cc8-img_2184

Written by London swaminathan

 

Date: 3 APRIL 2017

 

Time uploaded in London:- 20-56

 

Post No. 3785

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

19b62-img_2187

பேயை விரட்ட ஒவ்வொரு பண்பாட்டிலும் பலவகை மாய மருந்துகள், மந்திர, தந்திரங்கள் உள்ளன.

ஆனால் 3500 ஆண்டுகளுக்கு முன்பு, துருக்கி, சிரியா முதலிய நாடுகளின் பகுதிகளை உள்ளடக்கிய பிரதேசத்தை ஆட்சி செய்த ஹிட்டைட்ஸ் HITTITES மக்கள் எலியைக் கொண்டே பேய்களையும் செய்வினகளையும் விரட்டும் மந்திரங்களைப் பிரயோகித்தனர். இது பற்றிய விவரத்தைச் சொல்லுவதற்கு முன்னதாக ஹிட்டைட்ஸ் என்பவர்கள் யார் என்று காண்போம்.

இவர்கள் சம்ஸ்கிருத்துடன் தொடர்புள்ள ஒரு இந்திய-ஐரோப்பிய மொழியைப் பேசினர். ஆகையால் ஒரு காலத்தில், இந்தியாவிலிருந்து துருக்கி-சிரியாவுக்குக் குடியேறி இருக்கலாம். இவர்களுடைய ஆட்சி 450 ஆண்டுகளுக்குச் சிறப்பாக நடந்தது.

 

உலகில் முதல் முதலில் சர்வதேச (INTERNATIONAL TREATY) உடன்படிக்கையை, எழுத்து மூலம் செய்தவர்கள் தாங்களே என்று இவர்கள் பெருமை பேசுவர். ஹிட்டைட்ஸ் ஆண்ட பகுதியின் தலை நகர் ஹட்டுசா (Hattusa) . இதன் தற்போதைய பெயர் (Bogazkoy) பொகாஸ்கோய். இது துருக்கியில் உள்ளது. இங்கு 1920-களில் நூற்றுக் கணக்கான களிமண் பலகைக் கல்வெட்டுகள் கிடைத்தன. அதில் இந்த உடன்படிக்கை பொறிக்கப்பட்டுள்ளது.

 

(பொகாஸ்கோயில்தான் கி.மு.1380 ஆம் ஆண்டு சம்ஸ்க்ருதச் சொற்களுடைய கியுனிபார்ம் லிபி கல்வெட்டும் கிடைத்தது. இதில் ரிக் வேத தெய்வங்கள், வேத மந்திரத்திலுள்ள அதே வரிசைக் கிரமத்தில் உள்ளதால், அப்போதே ரிக்வேதம் துருக்கி வரை சென்றதற்கான சான்றுகள் கிடைத்தன. இதன் பிறகு குதிரைப் பயிற்சிப் புத்தகம் சம்ஸ்கிருத எண்களுடன் கிடைத்தது).

 

ஹிட்டைட்ஸ் சர்வதேச உடன்படிக்கை சத்சீலி என்ற மன்னனுக்கும் எகிப்திய மன்னன் இரண்டாம் ராமசெஸ்ஸுக்கும் இடையே கையெழுத்தானது. ஒருவர் படைவீரர்களை ஒருவர் துன்புறுத்தக் கூடாது; மனைவி மக்களைப் பழிவாங்கக் கூடாது;  அவரவர் போர்க்கைதிகளை மரியாதையுடன் பரிமாறிக்கொள்வோம் என்று அந்த உடன்படிக்கை கூறுகிறது. தற்காலத்தில் உள்ள எல்லா  உடன்படிக்கை களுக்கும் இது மூல உடன்படிக்கையாகச் செயல்படுகிறது.

 

( நான் முன்னர் எழுதிய கட்டுரையில் நச்சினார்க்கினியர் சொல்லும் ஒரு அதிசய விஷயத்தை குறிப்பிட்டிருந்தேன். பாண்டிய மன்னனுக்கும் ராவணனுக்கும் இடையேயுள்ள சமதான உடன்படிக்கை பற்றி நச்சி. அதில் கூறியிருக்கிறார். மஹாபாரத, ராமாயண இதிஹாச நூல்களிலும் உடன்படிக்கை பற்றி வருகிறது ராமனுக்கும்- சுக்ரீவனுக்கும்  இடையே அக்னி சாட்சியாக ஏற்பட்ட உடன்படிக்கையில் உனது நண்பன் எனது நண்பன்; உனது எதிரி எனது எதிரி என்று ராமன் சொல்கிறான். இப்போதுள்ள நாட்டோ (NATO) ராணுவ ஒப்பந்தங்களுக்கெல்லாம் மூல உடனபாடு நம்முடையது. ஆனால் பெரிய வித்தியாசம்; இன்று கல்வெட்டு வடிவில் நமக்குச் சான்றுகள் இல்லை; ஹிட்டைட்ஸ்களிடம் இருக்கிறது!)

இன்னொரு சுவையான விஷயமும் களிமண் கல்வெட்டில் உளது; ஒரு மன்னன் தன் மகன் பற்றிப் புகார் செய்யும் கல்வெட்டு அது. அவன் நடத்தை சரியில்லாதவன் என்று சொல்லி, மகனுக்குப் பட்டம் கட்டாமல் வேறு ஒருவனுக்கு அரசன் பட்டம் கட்டிவிட்டு அவனுக்கு மக்களிடம் இரக்கத்துடன், கருணையுடன் நடந்துகொள் என்று உத்தரவிடும் கல்வெட்டு அது.

(இதுவும் இந்துக்களிடம் இருந்து சென்ற கோட்பாடே. வேனன் என்ற புராண கால அரசனை மக்களே தூக்கி எறிந்தனர். விஜயபாஹு என்ற கலிங்க மன்னனை, அவனது தந்தையே நாடு கடத்வே அவன் இலங் கையில் புதிய வம்சத்தை நிறுவினான். மனுநீதிச் சோழனோ தவறிழைத்த மகனையே தேர் சக்கரத்தில் நசுக்கினான்.)

 

அரசனைத் தேர்ந்தெடுக்கும் சபையைக் கலந்தாலோசியுக்கள் என்று இன்னும் ஒரு கல்வெட்டு சொல்லும்; இதுவும் இந்தியாவில் சென்ற கருத்தே; வேதகாலத்தில் சபா, சமிதி இருந்ததை வேதமே சொல்கிறது அதற்கடுத்த காலத்தில் எண்பேராயம், ஐம்பெருங்குழு  இருந்ததை சங்கத் தமிழ் இலக்கியமும் சம்ஸ்கிருத இலக்கியமும் செப்புகின்றன

 

உலகிலுள்ள எல்லா கலாசாரங்களைப் போல ஹிட்டைட்ஸ் மக்களிடமும், பேய், பிசாசு, செய்வினை, தீட்டு, அபசாரம், கடவுளின் கோபம், இறந்தோரின் கோபம், நோயைக் கொடுக்கும் தீய சக்திகள் என்றெல்லாம் பல நம்பிக்கைகள் இருந்தன. அதை நீக்குவதற்கு ஆண்களில் குறி சொல்லுவோரும், மூத்த பெண் சோதிடரும்/ குறி சொல்வோரும் இருந்தனர். செய்வினை, தீவினை, முன்வினைகளை ஏதாவது ஒரு பொம்மை, உருவம், அல்லது பிராணிகளின் மீது ஏற்றி அதை விரட்டிவிடுவது அல்லது புதைப்பது வழக்கமாக இருந்தது. இந்தச் சடங்கு , பாதிக்கப்பட்ட ஆளின் வீட்டில் நடக்கும்.

இந்த மந்திர தந்திரங்களில் கைகள் மூலம் பலவிதமான சைகைகள், சமிக்ஞைகளையும் பயன்படுத்துவர்

8d7e5-img_2191

எலியை விரட்டு!

பதிக்கப்பட்ட ஒருவரின் வலது காலிலும் கையிலும் கயிற்றைக் கொண்டு ஒரு  தகரத்தைக் கட்டிவிடுவர். பின்னர் மந்திரங்கள் சொல்லிவிட்டு, அந்தத் தகரத்தை ஒரு எலியின் மீது கட்டிவிட்டு கீழ்கண்ட மந்திரத்தை பேய் விரட்டும் மந்திரவாதி சொல்லுவார்:

“நான் இந்த ஆளிடம் இருந்த தீய சக்தியை எடுத்து எலியின் மீது சுற்றிவிட்டேன்; இந்த எலியானது காடு, மலை, கிராமம், பள்ளத்தாக்கு என்று ஓடட்டும். ஏ! ஜார்னிஜா, ஏ தார்படஸ்ஸா எடுத்துக்கொள்” — என்று இவ்வாறு இரண்டு துஷ்ட தேவதைகளின் பெயர்களைச் சொல்லி எலியை விரட்டிவிடுவர்.

பேயும் அதனுடன் போய்விடும் என்று நம்புவோமாக!.

 

–சுபம்–

துருக்கியை ஆண்ட ஹிட்டைட்ஸ்கள் இந்துக்களா?

lion gate

அரண்மனையின் சிங்க வாசல்

Written by London swaminathan

Research article No.1924

Date :11th June 2015

Time uploaded in London: 11-07

ஹிட்டைட்ஸ்கள் பற்றி நான் ஆங்கிலத்தில் எழுதிய நீண்ட ஆராய்ச்சிக் கட்டுரையின் சுருக்கத்தை மட்டும் தமிழில் தருகிறேன். முழு விவரம் வேண்டுவோர் நேற்று வெளியான எனது ஆங்கில கட்டுரையைப் படிக்கவும்.

1.ஹிட்டைட்ஸ் எங்கிருந்து வந்தனர் என்பது ஆராய்ச்சியளர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் கி.மு.1800 முதல் கி.மு1200 வரை இருந்துவிட்டு திடீரென்று காணாமற் போய்விட்டனர்.

2.அவர்கள் துருக்கியையும், வடக்கு சிரியாவையும் ஆண்டது பைபிள் குறிப்புகள், எகிப்திய கல்வெட்டுகள், 10,000 களிமண் பலகை கியூனிபார்ம் எழுத்துக் கல்வெட்டுகள் மூலம் தெரியவந்தது.

3.துருக்கியிலுள்ள பொகஸ்கோய் என்னும் இடத்திற்கு பழங் காலத்தில் ஹட்டுசா என்று பெயர். அங்குதான் இவர்கள் அரண்மனை, நூலகம், கல்வெட்டுகள், கோவில்கள் கண்டுபிடிக்கப் பட்டன. இதே நகரில்தான் மிடன்னிய வம்சம் பற்றிய தகவல்களும் கிடைத்தன. கி.மு.1400 ஆம் ஆண்டிலேயே வேத கால தெய்வங்கள், தசரதன், பிரதர்தனன் முதலிய மன்னர்கள் பெயர்கள் எல்லாம் அங்கே கிடைத்ததால் வேதமும் சம்ஸ்கிருதமும் கி.மு.1400 ஆம் ஆண்டிலேயே துருக்கியிலும் சிரியாவிலும் முழங்கிய அசைக்க முடியாத சான்றுகள் கிடைத்தன.

4.ஆனால் ஹிட்டைட்ஸ் பற்றி இவ்வளவுத் தெளிவாக எதுவும் கிடைக்கவில்லை. ஆயினும் அவர்கள் பேச்சிய மொழி இந்தோ-ஐரோப்பிய குடும்பத்தைச் சேர்ந்தது — அதாவது சம்ஸ்கிருத மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்பது எல்லோருக்கும் தெரியும்.

5.தென் கிழக்காசிய நாடுகள் முழுவதும் ராமாயணத்திலுள்ள பெயர்களை எல்லாம் அவர்கள் எப்படி உருத் தெரியாமல் மாற்றினரோ அப்படி இவர்களும் பெயரை மாற்றியிருக்கலாம். இனி இந்துக்களுடன் இவர்களைத் தொடர்புபடுத்தும் அம்சங்களை மட்டும் பார்க்கலாம்

yazilikaya

சம்ஸ்கிருத மொழிக் குடும்பம்

6.இவர்கள் சம்ஸ்கிருத மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழியை பேசினர்.

7.ஒரு ஹிட்டைட் மன்னரும் எகிப்திய மன்னரும் செய்த உடன்படிக்கையில் ஆயிரம் தெய்வங்கள் சாட்சியாக செய்தனர். இந்த ஆயிரம் என்பதை இந்து மத நூல்களில் மட்டுமே காணமுடியும். தசாம்ஸ முறையைக் கண்டுபிடித்ததும் நம்மவர்கள்தான். சஹஸ்ர நாமம், சஹஸ்ர கண்கள், கைகள் என்றெல்லாம் வேதங்கள் துதிபாடும். இந்திரனை ஆயிரத்துடன் தொடர்பு படுத்தும் பெயர்கள் சிலவும் உண்டு

8.இறந்தவர்களை எரிக்கும் வழக்கம் இவர்களிடம் இருந்தது. இறந்தவுடன் மன்னன் கடவுள் ஆகிவிடுகிறான் என்பதும் அவர்கள் கொள்கை. இது எல்லாம் இந்து மத நம்பிக்கைகள். ஆய் அண்டிரன் என்ற மன்னன் இறந்தவுடன் சொர்க்கத்தில் அவனுக்கு இந்திரன் வரவேற்பு கொடுக்க நிற்பது பற்றி புற நானூறு பாடுகிறது. இது போன்று நிறைய உதாரணங்களைக் காட்டமுடியும்.

9.இந்த மன்னர்கள் மற்றவர்களுடன் சமாதான உடன்படிக்கை செய்தது, பெண் கொடுத்து மற்ற நாட்டுடன் உறவைப் பல்ப்படுத்தியது ஆகியனவும் இந்து மத வழக்கங்களே. ராவணன் — பாண்டிய மன்னன் உடன்படிக்கை, மிடன்னிய தசரதன் – எகிப்திய மன்னன் உடன்படிக்கை ஆகியன பற்றி ஏற்கனவே கட்டுரைகள் எழுதிவிட்டேன். காந்தாரத்தில் இருந்து வந்த காந்தாரி, கேகயத்தில் இருந்து வந்த கைகேயி, விதேக நாட்டில் இருந்து வந்த வைதேகி ஆகியோரை நம் இதிஹாசங்களில் காண்கிறோம்.

 hariti

65 கடவுள் உருவங்கள்

10.இவர்களுடைய 65 கடவுள் உருவங்கள் எழிஜிகாய என்னும் இடத்தில் சுவற்றில் வரையப்பட்டுள்ளன. அவர்கள் ஒவ்வொருவரும் இந்து தெய்வங்களைப் போல வாகனங்கள் மீது பவனி வருகின்றனர். சிலப்பதிகாரமும் , தேவரமும் துர்க்கையை மான் வாகன தேவி (கலையதூர்தி) என்று வருணிக்கின்றன. தமிழ் நாட்டிலோ இந்தியாவின் இதர பகுதிகளிலோ அததகைய கலயதுர்தியை இப்போது காணமுடிவதில்லை. ஆனால் துருக்கியில் காணலாம்.

11.ஹிட்டைட்ஸ்களும் வேத காலம் போல இடி மின்னல் கடவுளையும் (இந்திரன்) , சூரியனையும் வணங்கினர்.

12.ஹிட்டைட்ஸ் அரண்மனையின் முன்னால் இரண்டு பெரிய சிங்கங்கள் நிற்பதைக் காணலாம். வேதத்தில் சிங்கம், சிம்மாசனம் இருப்பது பற்றி ஏற்கனவே எழுதிவிட்டேன்.

13.இதே போல இருதலைக் கழுகு அவர்கள் சின்னமாகக் காட்டப் பட்டுள்ளது. இது விஜய நகர அரசர் காலம் வரை நம் சின்னமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையையும் முன்னரே எழுதிவிட்டேன். இவை எல்லாம் இந்து மத தாக்கத்தைக் காட்டுகின்றன.

14.ஒரு கல்வெட்டில் கடவுளருக்கு வெள்ளியில் விக்ரகம் செய்தது பற்றியும், காளைகள் ரதத்தை இழுத்துச் செல்வது பற்றியும், காளையே கடவுள் என்றும் படிக்கிறோம். இவை எல்லாம் இந்து மத தாக்கமே. இந்திரனை காளை என்று வேதங்கள் புகழ்கின்றன.

15.ஹரிதி என்ற குழந்தைகளைக் காக்கும் தெய்வம் புத்த மதக் கடவுள் என்றும் நேபாளம், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் ஹரிதி வழிபடப்படுவதாகவும் கலைக் களஞ்சியங்கள் கூறும். இந்தக் கடவுள் இந்து மதக் கடவுளே. ஏனெனில் புத்தர் கடவுள் வழிபாடு பற்றி எதுவுமே சொல்லவில்லை. இந்த ஹரிதி போன்ற தேவி சிலை துருக்கியில் கிடைத்து இருக்கிறது.

vahanas

16.அதர்வண வேத மந்திரங்களைப் போல பல வழிபாட்டுத் துதிகள் உள்ளன. பில்லி சூனியம் போக்கல், பேய்களை உண்டாக்கி பாதுகாப்பு பெறல், குடும்பச் சண்டையைத் தீர்த்துவைத்தல், மலடித் தன்மையை நீக்கல் போன்ற பல வழிபாடுகள் ஹிட்டைட்ஸ் இடமும் உண்டு. தந்தை செய்த பாவம் மகனுக்கு வருமென்று எண்ணி ஒருவர் உருக்கமாக வழிபடும் துதியும் உளது.

17.இவர்களுடைய பெயர்கள் சம்ஸ்கிருத மொழியின் திரிபே என்று ஆரியதரங்கிணி நூலில் விரிவான ஆரய்ச்சிக்கட்டுரை எழுதியுள்ளார் கல்யாணராமன் என்ற அறிஞர்.

18.வாய்மொழிக் கோசர், அதியமான் போல இவர்கள் பெயர்களிலும் சத்திய என்பது நிறைய வரும். ராம்செஸ் (ராம சேஷன்) என்ற எகிப்திய மன்னனுடன் சமாதான உடன்பாடு செய்தவன் பெயர் ஹட்டுசீலி. இது சத்தியசீல என்பதன் திரிபு. அவர்களது தலைநகர் ஹட்டுசா. இது சத்தியவாச என்பதன் திரிபு. இப்படி நிறைய பெயர்கள் கல்யாணராமன் கொடுத்த பட்டியலில் உள்ளது. (சத்திய வான் என்பதன் திரிபு அதியமான்; இவர்களை சத்யபுத்ரர்கள் என்று அசோகர் கல்வெட்டு கூறும்)

19.ஹிட்டைட்ஸ்களுடைய மோதிரங்கள், முத்திரைகள் ஆகியனவும் இந்து மத தாக்கத்தைக் காட்டும். ராமன் பட்டமேற்பு விழாவுக்கு தசரதன் அனுப்பிய அழைப்பிதழில் கழுகு முத்திரை வைத்து அனுப்பியதாக கம்பன் பாடியதையும் அதே கழுகு முத்திரை சிந்து சமவெளியில் கிடைத்திருப்பதையும் தனியொரு கட்டுரையில் தந்துள்ளேன். இது போல பலவகை முத்திரைகள் துருக்கியில் கிடைத்திருக்கின்றன. சாகுந்தலம், முத்ராராக்ஷசம் போன்ற வடமொழி நாடகங்களில் மோதிர-முத்திரைகள் கதையின் அடித்தளமாக விளங்குகின்றன.

20.கல்யாணராமன் தரும் பட்டியல்:

ஹிட்டைட் – ஹட்டி-க்ஷத்ரிய- கேட்டா (பைபிள்)

ஹட்டுசா= சத்வாச

அனிட்டா = அநீத

ஹட்டுசீலி= சத்வ சீல

முரஸீலீஸ்= முர சீல

துதாலியா= துக்தாலயா

அர்ணவாண்டா= அருணபந்த.

ஹட்டுசீலிஸ் மனைவி புதுகீபா= பத்மசிவா

double headed

புதுஹீபா, ஹூரியன் வம்சத்தைச் சேர்ந்தவள். இது சூரியன் என்பதன் திரிபாகும். ப=வ, ஹ=ச, ஜ=ய, ர=ல ஆக மாறுவது பற்றி எனது முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் ஏராளமான சான்றுகள் கொடுத்துள்ளேன்.