ராதே உனக்கு கோபம் ஆகாதடி! அதர்வண வேதம் முதல் பாரதி வரை!!(Post No.10,405)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,405

Date uploaded in London – –   3 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கோபத்துக்கு எதிராக வேதம் சொல்லும் கருத்து, பாரதி மற்றும் பாபநாசம் சிவன் பாடல்கள் வரை எப்படியெல்லாம் பரவியது என்பதைக் காண்போம்.

“ராதே உனக்கு கோபம் ஆகாதடி” என்ற பாபநாசம் சிவன் அவர்களின் பாடல் எம்.கே தியாகராஜ பாகவதர் (MKT) மூலமாக அறிமுகமாகியது. பின்னர் பலரும் அதை மாற்றி, மாற்றி, பல பிற்காலத் திரைப் படங்களில் பயன்படுத்தினர். காலத்தால் அழியாத இந்தக் கவிதை, ‘கோபம் கூடாது’ என்பதை மனதில் நன்கு படிய வைக்கிறது.

வள்ளுவனோ சினம்/வெகுளாமை  என்ற தலைப்பில் பத்து குறள்களைத் தந்தான். ‘சேர்ந்தாரைக் கொல்லி’ என்று சினத்தை சம்ஸ்க்ருத மொழியில் இருந்து (குறள் 305- ஆஸ்ரயாஸஹ ) மொழிபெயர்த்தும் தருகிறார். ஒருவனுக்கு கோபம் இல்லாவிடில் அற்புதங்களைச் செய்யலாம் என்கிறான் வள்ளுவன் ; ‘உள்ளியதெல்லாம் உடனெய்தும்’ (குறள் 309)  என்பான். இதை இந்து சாது, சன்யாசிகளின் வாழ்வில் நாம் காண்கிறோம்.

பாரதியும் ‘கோபத்தைக் கொன்றுவிடு’ என்று பாடுகிறான். ஆனால் ‘ரெளத்திரம் பழகு’, என்றும் ‘சீறுவோர்ச் சீறு’ என்றும் ஆத்திச் சூடியில் எச்சரிக்கிறான். யாரேனும் தரும விரோதக் செயல்களைச் செய்தால் கோபம் கொள்ளுவதில் தவறில்லை என்பான்.

“அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால்

அப்போது சாவுமங்கே அழிந்து போகும்”

என்பது பாரதியின் அருள்வாக்கு

……

“சினங்கொள்வார் தம்மைத்தாமே தீயார் சுட்டுச்

 செத்திடுவாரொப்பார் ; சினங்கொள்வார் தாம்

மனங்கொண்டு தம் கழுத்தைத் தாமே வெய்ய

வாள்கொண்டு கிழித்திடுவார் “

சினம் என்பது ‘சேர்ந்தாரைக் கொல்லி’ என்ற வள்ளுவன் கருத்தை பாரதி சொன்னதோடு, கோபம் என்பது வலியப் போய் தற்கொலை செய்து கொள்வதற்குச் சமம் என்றும் செப்புகிறான்.

அதே பாடலில் பாரதி,

கோபத்தால் நாடியிலே அதிர்ச்சியுண்டாம்;

               கொடுங்கோபம் பேரதிர்ச்சி; சிறிய கோபம்

               ஆபத்தாம் அதிர்ச்சியிலே சிறியதாகும்;

               அச்சத்தால் நாடியெலாம் அவிந்து போகும்;

               தாபத்தால் நாடியெலாம் சிதைந்து போகும்;

               கவலையினால் நாடியெலாம் தழலாய் வேகும்;

               கோபத்தை வென்றிடலே பிறவற்றைத்தான்

               கொல்வதற்கு வழியென நான் குறித்திட்டேனே

. என்பான்.

கோபம் பற்றி திருக்குறள் உள்ளிட்ட பதினென் கீழ்க்கணக்கு நூல்களில் நிறைய பாடல்கள் இருக்கின்றன. இந்த வெகுளாமை என்னும் lesson பாடம் அவைகளுக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அதர்வண வேதத்தில் இருந்து வந்தது என்பது பலருக்கும் தெரியாது ; வேதத்தில் இல்லாத விஷயம் வெளியில் இல்லை!

XXXX

அதர்வண வேதப் பாடல்

காண்டம் 6; துதி 42 (சூக்தம் 215)

1.வில்லிலிருந்து விடுபட்ட அம்பினைப் போல உன்னுடைய இதயத்திலிருந்து கோபத்தை விரட்டுகிறேன்; நாம் இருவரும் ஒருமித்த மனதுடன் நண்பர்களாக உலா வருவோம்.

2.நாம் நண்பர்களாக நடந்து செல்லுவோம் ; நான் உனது கோபத்தை நீக்குகிறேன் ; நான்  உன்னு டைய கோபத்தைக் குழி தோண்டிப் புதைக்கிறேன்

3. நான் உனது கோபத்தை என் கால்களுக்கு அடியில் போட்டு நசுக்குகிறேன் நீ அடங்கி நட ; இனியும் எதிர்த்துப் பேசாதே

இதற்குப் பழைய விளக்கம்:

இரண்டு நண்பர்கள் இடையே இருந்த கோப தாபத்தை நீக்கும் பாடல் என்பதாகும்; இதைப் படித்துவிட்டு பாபநாசம் சிவனின் ‘ராதே உனக்குக் கோபம் ஆகாதடி’ என்ற பாடலைப் படித்தால், பொருள் இன்னும் நன்றாக விளங்கும்.

xxx

எனது வியாக்கியானம்

இதில் ‘உன்னுடைய’ என்பது எதிரில் உள்ள நண்பனிடம்  சொல்லுவது அன்று ; நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் AUTO SUGGESTION ஆட்டோ சஜ்ஜஷன் கட்டளை இது.

நீ ஒரு முக்கியமான ஆளை சந்திக்கப் போகிறாய். அவன் உன்னைக் கோபப்படுத்தி மடக்குவதற்காக உன்னை ஏசுவான்; ஏமாந்துவிடாதே ; ஜாக்கிரதை; கோபப்பட்டு ஏதேனும் கத்திவிடாதே ; அத்தனையையும் ரிக்கார்ட் செய்து உனக்கு எதிராகப் பிரசாரம் செய்வான்- என்பது ஒரு விளக்கம்

இதோ பார்; நீ ஆன்மீக தாகம் கொண்டுள்ளாய்; விசுவாமித்திரன் கோபத்திலும், காமத்திலும், அஹங் காரத்திலும் தபோ பலத்தை வீணாக்கி, ஒவ்வொரு முறையும், வசிட்டரிடம் தோற்றான். ஆகையால் ஏமாறாமல் கோபத்தை ஒழித்துவிட்டால் நீ முன்னேறுவாய்.. இதுதான் சரியான பொருள்.

இப்போது பாரதி பாடலைப் படியுங்கள்; அதர்வண வேதம் மனதுக்கு இடும் ஆட்டோசஜ்ஜெ ஷன் கட்டளைதான் அந்த துதி

இதையே வள்ளுவனும் சொல்கிறான் .

.தன்னைத் தான் காக்கின் சினம் காக்க காவாக்கால் தன்னையே கொல்லும்  சினம்’ – குறள் 305

சினம் பற்றிய பத்து குறள்களையும் துறவறவியலில் வள்ளுவன் செப்பியது குறிப்பிடத் தக்கது. அதாவது வெகுளாமை வந்த பின்னரே வசிட்டர் வாயால் விசுவாமித்திரனுக்கு பிரம்மரிஷி பட்டம் கிடைத்தது. முதல் மோதலே வசிட்டனின் காமதேனுவைப் பறித்தவுடன் அதை வசிட்டன் தடுக்க, கோபக்கனல் பொங்க படைகளை ஏவினான் விசுவாமித்திரன் என்பதையும் நினைவிற் கொள்ளவேண்டும்

கி.மு. 3150 வாக்கில், அதாவது இற்றைக்கு 5150 ஆண்டுகளுக்கு முன்னர் வேதத்தை நான்காகப் பிரித்து 4 சீடர்களிடம் கொடுத்து இதை எழுதக் கூடாது வாய் மொழியாகப் பரப்புங்கள் என்றார் வியாசர்.

அந்தக் கட்டளையை சிரமேற்கொண்டு இன்றுவரை நமக்கு அதர்வண வேத மந்திரத்தை அளித்த பார்ப்பானுக்கு பல கோடி நமஸ்காரங்கள் உரித்தாகுக

பார்ப்பான் வாழ்க ; வேதம் வாழ்க ; சம்ஸ்க்ருத மறையை தமிழ் மறையாக நமக்கு அளித்த வள்ளுவன் வாழ்க

வெகுளாமை என்னும் அதிகாரத்தின் கீழ் உள்ள பத்துக் குறட்களையும் பத்து  முறை படியுங்கள்

xxxxx

பாபநாசம் சிவன் பாடல்

ராதே உனக்கு……………………………….

FROM WWW.LAKSHMANSRUTHI.COM (THANKS TO LAKSHMAN SRUTHI)

படம். சிந்தாமணி

வருடம். 1937

பாடல். பாபநாசம் சிவன்

பல்லவி.

ராதே உனக்கு கோபம் ஆகாதடி………..

ரா……….தே உனக்கு கோபம் ஆகாதடி………..

ரா…………தே உனக்கு கோபம் ஆகாதடி……….

மாதரசே, பிழையே……….து செய்தேன் சுகுண

ராதே உனக்கு கோபம் ஆகாதடி………

மா……….தரசே………, பிழையே……..து செய்தேன் சுகுண…….

ராதே உனக்கு கோ……….பம் ஆகாதடி…………

மா………..தரசே………..பிழையே…………..து செய்தேன் சுகுண

ரா………தே உனக்கு கோபம் ஆ………..காதடி…………

எனைக் கணம் பிரிய மனம் வந்ததோ………….

4

எனைக் கணம் பிரி…………ய மன…………..ம் வந்ததோ……….

நீ எங்கு சென்றாலும் நான் உன்னை விடுவேனோ

ஓடா………தே ராதே உனக்கு கோபம் ஆகாதடி…………

நீ…………எங்கு………..சென்றா……….லும் நான் உன்னை……..விடுவேனோ

ஓ….டாதே ராதே உனக்கு கோபம், ஆ…………..கா………….த……..டி……….

ரா………தே உனக்கு கோபம், ஆகா………..தடி…………..ஈ……………….ஈ…………..

8

கண்ணை இழந்தவன் நீயோ நானோ……………..

கண்ணை இழந்………..தவன் நீயோ………..நா………..னோ………..

கண்ணை இழந்தவன் நீ………யோ நா…………னோ……………

கண்………ணை இழந்தவன் நீயோ………….நானோ………….

கண்ணா…………..நீ வேறு நான் வேறோ…………எவன் சொன்ன…………வன்

கண்ணை யிழ………ந்தவன் நீ…………யோ நா…………னோ…………..

கண்ணை யிழ……….ந்தவன் நீயோ நானோ…………………

விண்ணும் மண்ணும் நிறைமுகில் வண்ணணே………….

4

விண்ணும் மண்ணும் நிறைமுகில் வண்ணணே…………….

விருப்பு வெறுப்பில் பரஞ்ஜோதி பொருளே இன்று………….

கண்ணை இழந்…………தவன் நீயோ நானோ……………

விருப்பு வெறுப்பில் பரஞ்ஜோ…………..தி பொருளே இன்று

கண்………..ணை இழ………..ந்தவன், நீயோ நானோ………ஓ……….ஓ……….

—SUBHAM—

tags -கோபம், பாரதி, பாபநாசம் சிவன், அதர்வண வேதம், சினம், ராதே உனக்கு

அதர்வண வேதத்தில் அதிசய மந்திரம்- பிராணிகள் கற்பிக்கும் பாடம் -2 (Post.10,398)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,398

Date uploaded in London – –   1 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

முதல் பகுதியில் ஒரு புலவர் நான்கே வரிகளில் 22 பிராணிகள், பொருட்களை பட்டியலிட்டு, அதிதி தேவியே எனக்கு  பலம் தருக என்று வேண்டியதைக் கண்டோம் . அவர் குறிப்பிட்ட 22 பிராணிகள், பொருட்களின் சிறப்பு என்ன என்பதை நான் என் வியாக்கியா னத்தில் விளக்க முன்வந்தேன். இதோ மற்ற பொருட்களையும் , பிராணிகளையு ம்  புலவர் குறிப்பிட்ட தன் காரணம்  என்ன என்பதைக் காண்போம்.

அதர்வண வேதம், ஆறாவது காண்டம் , துதி 38 (சூக்தம் எண் 211);  பாடல் தலைப்பு –‘பலம்’

பட்டியல்  இதோ:

4.நெருப்பு

தீ (FIRE) என்பதை புகழ்ந்து வேதங்களில் ஆயிரக்கணக்கில் மந்திரங்கள் உள்ளன . பிராமணர்கள் வீட்டில் ஒரு காலத்தில் மூன்று யாக குண்டங்கள் இருந்தன என்று சங்கத் தமிழ் நூல்கள் சொல்லும் ; ‘முத்தீ அந்தணர்’ என்று சங்க நூல்கள் பிராமணர்களை புகழ்ந்து பாடும் . அதில் கார்ஹபத்யம் என்னும் அக்கினி அணையவே அணையாது. அதிலிருந்துதான் அவர்கள் யாக யக்ஞங்களுக்கு அக்கினி எடுப்பார்கள். ஒருவரின் இறுதிச் சடங்கின் போது அந்த அக்கினியால் சிதைக்கு தீ மூட்டுவர். அதற்கு முன்னர்  அவருடைய மகன், பேரக்குழந்தைகளுக்கு திருமணம் ஆகி இருந்தால் அதிலிருந்து அவர்களும் ஒரு சட்டிப்பானையில் ஒரு அக்கினி மூட்டி இருப்பர். இது அணையவே அணையாது. அதாவது பல நூறு தலைமுறைகளுக்கு வாழையடி வாழையாக அக்கினி தொடரும். மின்சார விளக்கும், தீப்பெட்டிகளும் இல்லாத காலத்தில் அடுப்பெரிக்கவும் இந்த அக்கினியே உதவியது. அது மட்டுமல்ல. பிராமணச்   சிறுவர்கள் தினமும் காலையில் அக்கினி மூட்டி ஸமிதாதானம் செய்கையில் எனக்கு ‘ஓஜஸ், தேஜஸ், வர்ச்சஸ் , மேதை போன்ற புத்தி’ தா என்று சொல்லி உடலில் பல இடங்களில் ஹோம சாம்பலை இட்டுக்கொண்டனர் . சுருக்கமாகச் சொல்லின் அக்கினி போல வாழ்வில் ஒளி நிரம்ப வேண்டினர்.

5.பிராமணன்

நெருப்புக்கு அடுத்தாற்போல் பிராமணனை வைத்திருப்பது சிறப்புடைத்து. ஏனெனில் பிராமணன், க்கும் சக்தி, அழிக்கும் சக்தி, இரண்டும் படைத்தவன் ; அகலாது அணுகாது தீக்காய்வார் போல அவர்களிடம் இருக்க வேண்டும். இதையே ஒரு தமிழ்ப் புலவர் ‘பழகினும் பார்ப்பாரை தீப்போல் ஒழுகு’ என்பார். எவரேனும் ஏதேனும் குற்றம் செய்தால் சபித்து விடுவார்கள்; அது பலித்துவிடும் ; நான் சொல்லுவது புத்தர் தம்ம பதத்தில் 26 ஆவது அதிகாரத்தில் சொல்லும் உண்மைப் பார்ப்பனரை ! பிராமணன் கொலை செய்தாலும் அரசனையே வீழ்த்தினாலும் அவனுக்கு தண்டனையை கிடையாது என்கிறார் புத்தர் தம்மபதத்தில்; இதையே மநுவும் செப்புவான். இது எல்லாம் ‘நடமாடும் தேவர்’= ‘பூசுரர்’ என்று ஸ்ம்ருதிகள் சொல்லும் உண்மைப் பார்ப்பனர் பற்றியது. சாணாக்கியன் போன்ற பலம் கொண்ட பார்ப்பனர் பற்றியது ; பிராமண விரோத நந்த வம்சத்தை வேரொடு பிடுங்கி எறியும் வரை குடுமியை முடிய மாட்டேன் என்று சாணக்கிய சபதம் செய்த பார்ப்பனனைப் போல பலம் தா! என்கிறார் புலவர்

(எச்சரிக்கை :– மது பான விடுதி , மாதர் கேளிக்கை விடுதி, மதுரை முனியாண்டி விலாஸ் பிரியாணிக் கடைக்குச் செல்லும் சென்னை பார்ப்பனர்களை ஒப்பிட்டு நொந்து போய் விடவேண்டாம்!)

6.சூரியன்

சூரியனைப் பற்றி அதிகம் எழுதத் தேவையே இல்லை ; அந்தக் காலத்தில் எல்லோரும் காலையில் 12 முறை கீழே விழுந்து வணங்கி சூர்ய நமஸ்காரம் செய்ததால் கண் ஒளி கிடைத்தது. உடல் ஆரோக்கியமாக இருந்தது. மூன்று வருணத்தினர் பூணுல் அணிந்து, நாள் தோறும் 3 முறை சூரியனை வணங்கி காயத்ரீ மந்திரம் சொல்லி வணங் கினர் ; இதனால் எல்லோரும் மேதாவியாக இருந்தனர் . சூரியன் இருந்தால்தான் மழை பெய்யும்; தாவரங்கள் வளரும்; உணவு கிடைக்கும் ; கிருமிகள் அழியும் என்று வேத மந்திரங்களே விஞ்ஞான உண்மையையும் பேசுகின்றன .

7.யானை

யானையின் மகத்தான பலம் , நினைவு ஆற்றல் ஆகியன உலகப் பிரஸித்தம் . அது மட்டுமல்ல. “யானையால் யானையாத்தற்று” = ‘யானையைக் கொண்டு வேறொரு யானையைப் பிடி’ என்று 2300 ஆண்டுகளுக்கு முன்னர் சாணக்கியன் சொன்னதை வள்ளுவரும் குறளில் சொல்லுவதை காணலாம் .தமிழர்களின் ‘சின்ன மீனை போட்டு பெரிய மீனைப் பிடி’ என்பதற்கு சமம் இது; கணபதியின் உருவத்தை யானையில் காண்பது இந்துக்களின் சிறப்பு

8.சிறுத்தை (Cheetah)

புலிக்கு உள்ள வீரம் சிறுத்தைக்கும் உண்டு. ஆயினும், புலியை விட சிறுத்தை ஒரு படி மேல்; இப்பொழுது ‘என்சைக்ளோபீடியா’, ‘கின்னஸ் புஸ்தக’த்தைத் திறந்து பார்த்தால் உலகிலேயே அதி வேகம் உடைய பிராணி சிறுத்தை என்பதை (Fastest Animal on Earth – Cheetah) அறிவோம். இதைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடித்தனர் இந்துக்கள். ஆகவே சிறுத்தை (Panther, leopard, Cheetah)  போல எனக்கு பலம் தா என்று அதிதி தேவியை வேண்டுகிறார் புலவர்/கவி/ ரிஷி/முனிவர்.

சிறுத்தைக்கு சீட்டா cheetah என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் . இதுவே சம்ஸ்க்ருத, அல்லது தமிழ் சொல்லின் அடிப்படையில் பிறந்தது போலும் ; சித்ரக அல்லது சீறுவது என்ற இரண்டு வேர்ச் சொல்லுக்கும் பொருத்தமாக இருக்கிறது.

9.தங்கம்

தங்கம் என்ற உலோகம் இல்லாத பழைய கலாசாரம் உலகில் இல்லை. மனிதன் முதல் முதலில் கண்டுபிடித்த உலோகங்களில் ஒன்று இது ;  தங்க பஸ்பம் சாப்பிட்டு 100 ஆண்டு வாழும் முறையையும் மனிதன் கண்டான். பெண்களும்  அதை அணிந்து மகிழ்ந்தனர்; மற்றவர்களை மகிழ்வித்தனர். சுடச் சுடரும் ஒளிரும் பொன் போல என்பதிலிருந்து இதன் சிறப்பு விளங்கும். ஞானிகளைப் பொறுத்தவரையில் காமினி ,காஞ்சனம் (பெண்ணும், பொன்னும் ) எதிரிகள் என்பதை ராமகிருஷ்ண பரமஹம்சர் பல கதைகள் மூலம் விளக்குவார்; முனிவர்கள் ‘ஓடும் பொன்னும் ஒக்கவே நோக்குவர்’ என்று கீதையிலும் (6-8; 14-24)தாயுமானவர், சேக்கிழார் பாடல்களிலும் (பெரிய புராணம்) காண்கிறோம். ஆகவே தங்கமும் நமக்கு ஒரு பாடம் கற்பிக்கிறது. அது வீட்டில் இருந்தால் பலம் (asset)  என்பதை அறிந்தே அதை பெண்களின் உடலிலும் பூட்டினர்.

10.தண்ணீர்

உலகில் தண்ணீரைப் போற்றும் மந்திரங்கள் சம்ஸ்க்ருதத்திலும் தமிழிலும் மட்டுமே உண்டு. தண்ணீரைப்  பற்றியும் அதன் அற்புத குணங்கள் பற்றியும் நூற்றுக்கணக்கான மந்திரங்கள் வேதங்களில் உள்ளன. தண்ணீரை ‘அமிர்தம்’ என்று வேதம் தொடர்ந்து புகழ்கிறது. அதை அப்படியே திருவள்ளுவரும் ‘அமிழ்தம்’ என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லினால் பாடுகிறார். இந்துக்கள் பனி மூடிய இடங்களிலிருந்து இந்தியாவுக்குள் புகுந்தனர் என்று சொல்லும் ஆட்களுக்கு ‘செமையடி, மிதியடி, தடாலடி’ கொடுக்கும் பாடல்கள் இவை. பிறப்பு முதல் இறப்பு வரை தண்ணீரைப் பயன்படுத்தும் ஒரே இனம் இந்துக்கள். நீரின்றி அமையாது உலகு என்ற வேதக் கொள்கையை அப்படியே வள்ளுவனும் சொன்னான். இன்றும் பிராமணர்கள், தினமும் மூன்று முறை தண்ணீரை வைத்து சந்தியாவந்தனம் செய்கின்றனர். வேதத்தில் உள்ள ஹோமியோபதி ஹைட்ரோதெரபி (Homeopathy and Hydrotherapy) பற்றி இதே ‘பிளாக்’கில் கட்டுரைகள் உள .

11. பசு

மனித இனத்துக்கு இந்துக்கள் கண்டுபிடித்துக் கொடுத்த மாபெரும் கண்டுபிடிப்புகள்:–

பசுமாடு, குதிரை, இரும்பு,  டெசிமல் சிஸ்டம் /தசாம்ச எண்கள் , யோகம், ஆயுர்வேதம்

இவை அனைத்துக்கும் சான்று உலகிலேயே பழைய புஸ்தகமான ரிக் வேதத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் உளது. எகிப்திய, பாபிலோனிய,சீன, மாயா நாகரீகங்களில் அவை இல்லை. இருந்தாலும் போற்றும் அளவுக்கும் இல்லை; அவை போற்றப்படுவதும் இல்லை. கோ மாதாவும் பசும் பாலும் இந்துக்கள் உலகிற்கு அளித்த மாபெரும் கொடை

 12.ஆண்மகன்

ஆண்மை என்றால் என்ன, பெண்மை என்றால் என்ன என்பதை விளக்கத் தேவையே இல்லை. ரிக் வேதம் முழுதும் எனக்கு ‘வீர மகன்’ பிறக்க வேண்டும் என்று பாடுகின்றனர். இன்றும் உலகில் மிகப்பெரிய தொழில் ராணுவம் ஏன் ? வீர மகன்கள் இருந்தால்தான் நல்லோர் வாழ முடியும். போர் புரிய மறுத்த அர்ஜுனனை உன் ஆண்மையை இழந்து பேடியாக மாறிவிட்டாயா? என்கிறார் கிருஷ்ணன். ஆக, புலவர் 22 டாபிக் topics குகளில் ஆண் மகன் (புருஷன் = பெர்சன் person is derived from purusha என்ற சொல்லின் மூலம்) என்பதையும் சேர்த்தத்தில் வியப்பில்லை

13.ரதத்தின் அச்சு

‘உருள் பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து’ என்று வள்ளுவன் சொன்ன வாக்கு இந்த வேத மந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டதே; ‘அச்சு’ என்பது ஸம்ஸ்க்ருத்ச் சொல். அதிலிருந்து பிறந்ததே ஆக்சிஸ் Axis என்னும் English  சொல். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரியது என்ற வாமன அவதாரக் கதையை விளக்குவதே ‘அச்சு’ உவமை. ‘தோற்றத்தைக் கண்டு ஏமாறாதே’; சிலர் அமைதியாக இருந்து பெரும்பணி ஆற்றுவார்கள் என்பதே இதன் பொருள். பெரிய தேருக்கு –திருவாரூர்த் தேருக்கு அச்சு கழன்றால் என்ன ஆகும்? ஆக. அச்சு போல என்னை ஆக்கு என்கிறார் புலவர். அச்சு போன்ற பலம்!

,14.எருது

சிந்து சமவெளியில் அதிகம் காணப்படும் முத்திரை எருது (BULL) . வேதம் முழுவதும் இந்திரனை எருது, காளை என்றே புலவர்கள் பாடுகின்றனர். காட்டு மிருகங்களில் சிங்கம் எப்படியோ ப்படி நாட்டு மிருகங்களில் எருது. இதனால்தான் கிருஷ்ணர் காளை அடக்கியதை சங்கத் தமிழ் நூலான கலித்தொகை பாடுகிறது ; மஞ்சு விரட்டு ,ஜல்லிக்கட்டு என்பதைக் கண்டுபிடித்தது இந்துக்கள்; இது பாகவத புராணத்தில் உளது; யாதவ குல மக்கள் இன்று வரை நமக்கு காத்து அளிக்கின்றனர். ‘காளை போல பலம் தா’ என்று புலவர் பாடுவதற்கு இதற்கு மேலும் விளக்கம் தேவையா?

15.வாயு

வாயு வேகம், மனோ வேகம் என்பன  வேதம் முழுதும் வரும் உவமைகள். தமிழனும் இதே உவமையைக் கையாளுகிறான் புயற்காற்றைக் கண்டவர் களுக்கு இதன் பொருள் நன்கு புரியும் ; ஆக , காற்று போல பலம் தா என்பது ஒரு பொருள்; சுவாசிக்கும் மூச்சுக் காற்று போல (ஆக்சிஜன் ) நான் இருக்க வேண்டும் என்பது இன்னொரு பொருள்; ஏனெனில் பிராணாயாமம் என்னும் ஆயுளை அதிகரிக்கும் டெக்னீக்கைக் கண்டுபிடித்து நாம்தான்;  தினமும் அதை பிராமணர்களும் மூன்று வேளைகளில்  விதித்தது இந்து மதம்; அந்தக் காலத்தில் 3 வருணத்தாரும் செய்தது ‘சந்தியா வந்தனம்- பிராணாயாமம்’; இந்தக் காலத்தில் பிராமணர்களும் மறந்து வருவது கலியுகத்தின் தாக்கம். ‘மருத் தேவர்கள்’ பற்றிய பாடல்களில் மாருதியின் (காற்று தேவன்) புகழைக் காணலாம் .

16.மழை – .

மழையின் சிறப்பு, பலம், முக்கியத்துவத்தை வேதம், ‘பர்ஜன்யன்’, ‘மருத்’ பாடல்களில் வலியுறுத்துகிறது . வள்ளுவன், ‘வான் சிறப்பு’ என்ற பத்து குறள்களில் விளக்குகிறான். கபிலர் என்ற பிராமண புலவரோ அங்கதச் செய்யுளில்  .மழையை புகழ்கிறார் ; எல்லோரும் பாரி, பாரி என்று என் இப்படி பாரியையே பாடுகிறார்கள் ? உலகில் மாரியும் (மழை ) உளதே! என்பார்; ஆக, முனிவர் வேண்டுவது மழை போல சிறப்பு!

To be continued……………………………..

tags – அதர்வண வேதம், பிராணிகள் , பகுதி 2, பாடம்

அதர்வண வேதத்தில் அதிசய மந்திரம்- பிராணிகள் கற்பிக்கும் பாடம்-1 (10,396)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,396

Date uploaded in London – –   30 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

உலகத்தில் ஈசாப் (Aesop)என்னும் கிரேக்கநாட்டு அடிமை எகிப்தில் இருந்தபோது இந்துக்கள் சொன்ன கதைகளை பிராணிகள், பட்சிகள் பற்றிய சிறுவர் கதைப் புஸ்தகமாக (Animal Fables) வெளியிட்டதை நாம் அறிவோம். அதற்கு முன்னரே மஹாபாரதத்தில் புறாக்கள், ஒரு அகதிக்காக, தீயில் விழுந்து தியாகம் செய்த கதை மஹாபாரதத்தில் உள்ளது . தர்ம புத்திரன் செய்த யாகத்தில் பாதிப் பொன்னிறத் தோலுடைய கீரிப்பிள்ளை (Mongoose) வந்து எல்லோரையும் அசத்தியதையும் நாம் அறிவோம். இலங்காபுரி ‘கிரிமினல்’ ராவணனை ஒழிக்க ஒரு அணிலும் மண் போட்டு அணை கட்டியதை ஆழ்வார் பாடல் மூலம் நாம் அறிவோம்.  அந்த .ராமாயணத்தில் பல பறவைகள், கரடி, குரங்குகள் அணை கட்ட உதவியதையும் நாம் அறிவோம். சிபிச் சக்ரவர்த்தியின் புகழை உலகிற்கு நிலை நாட்ட இந்திரனும் அக்கினியும் கழுகு , புறா வடிவில் வந்த கதையை நாம் சங்க இலக்கிய புறநானுற்றிலும், பிற்கால சிலப்பதிகாரத்திலும் பயிலுகிறோம். மனு நீதிச் சோழனிடம் நீதி கேட்ட பசுவின் கதையையும் அறிவோம். ஊருக்கு ஊர் யானையும் பசுவும் பாம்புகளும் சம்பந்தப்பட்ட கோவில்கள் இருப்பதையும் எல்லோரும் அறிவர். ஆனால் இதற்கெல்லாம் மூலம் வேதத்தில் இருப்பது பலருக்கும் தெரியாது.

பாகவத புராணத்தில் தத்தாத்ரேய மகரிஷி பறவை, பாம்பு முதல் பரத்தை ( Prostitute)  வரையுள்ள ஒவ்வொருவரிடமும் தான் கற்ற பாடத்தைப் பற்றி ஏராளமான கட்டுரைகள் வந்துவிட்டன . நான் இதுவரை சொன்ன எல்லா விஷயங்களும் இந்த ‘பிளாக்’கிலேயே பத்து ஆண்டுகளாக வந்துள்ளன. இதுவரை யாரும் சொல்லாத ஒரு விஷயத்தை இன்று காண்போம்.

முதலில் இதில் குறிப்பிட்ட 22 பிராணிகள், பொருட்கள் பட்டியலைப் பாருங்கள்; பின்னர் இதை ஒரு பள்ளிக்கூட மாணவனிடம் கொடுத்து ஒவ்வொரு விஷயம் பற்றியும் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் ஒரு கட்டுரை எழுதுக  என்று சொல்லுங்கள். அதே நேரத்தில் டாக்டர் பட்டம் பெறுவதற்கு பதிவு செய்துகொண்ட ஒரு இளைஞனிடம் ஒரு ஆராய்சசிப் புஸ்தகம் எழுதுக என்று சொல்லி 22 பேரிடம் கொடுங்கள். ஆனால் எல்லாம் இந்துமதம் சம்பந்தப்பட்ட சங்கத் தமிழ் இலக்கியத்திலிருந்து மட்டுமே, வேத இதிஹாச புராணங்களில் இருந்து மட்டுமே கதைக்க வேண்டும் என்று சொல்லுங்கள் . அதிசயப்படும் அளவுக்கு விஷயங்களைப் படிப்பீர்கள் .

பட்டியல்  இதோ:

சிங்கம் , புலி, பாம்பு, நெருப்பு,

பிராமணன், சூரியன், யானை, சிறுத்தை ,

தங்கம், தண்ணீர், பசு, ஆண்மகன்,

ரதத்தின் அச்சு, எருது, வாயு ,மழை

வருணன்  , அரச குமாரன், முரசு ,அம்பு,

குதிரை, மன்னன் சூளுரை 

இதில் சிலர் ரதம், அச்சு ஆகியவற்றை தனித்தனியேயும் பிரிப்பர். ஆயினும் 20க்கு மேலான விஷயங்களை சொல்லி அந்த பலம் அல்லது குணம், அல்லது புகழ் எனக்கு வரவேண்டும் என்று ஒரு ரிஷி பாடுகிறார்.

இதோ துதியும் அதிலுள்ள 4 மந்திரங்களும்

XXX

அதர்வண வேதம் ஆறாவது காண்டம்  துதி 38 (சூக்தம் எண் 211);  பாடல் தலைப்பு -பலம்

1.சிங்கம், புலி ,நெருப்பு, பாம்பு, பிராமணன், சூரியனில் எந்த பலமுண்டோ அந்த பலத்தோடு இந்திரனை பிறப்பித்த சுபகையான தேவி எங்களுக்கு வருக .

2.யானை, சிறுத்தை, பொன், புனல், பசு ,புருஷர்களில், எந்த பலமுண்டோ அந்த பலத்தோடு இந்திரனை பிறப்பித்த சுபகையான தேவி எங்களுக்கு வருக .

3.இரதம் , அச்சு, எருதின் பலம், வாயு, மழை  வருணனது  உக்கிரத்தில் எந்த பலமுண்டோ அந்த பலத்தோடு இந்திரனை பிறப்பித்த சுபகையான தேவி எங்களுக்கு வருக .

4.இராஜன்யன் துந்துபி சரம் அஸ்வ பலம் புருஷ கர்ஜனையில் எந்த பலமுண்டோ அந்த பலத்தோடு இந்திரனை பிறப்பித்த சுபகையான தேவி எங்களுக்கு வருக .

கருத்து- பலம், சக்தி ஆகியவற்றைப் பெற;

சுபகை யான தேவி – அதீதி

Xxx

எனது கருத்துக்கள்

முதலில் நாலு மந்திரங்களிலும் ‘பல்லவி’ (refrain) இருப்பதைக் காணுங்கள். ஆகையால் இது எல்லோரும் கூடி, கோஷ்டியாக (chorus)  பாடிய பாடல் என்று தெரிகிறது. அதாவது எழுத்து வடிவில் இலக்கியங்கள் வருவதற்கு முன்னர் இருந்த வாய் மொழி (oral literature)  இலக்கியம். அதர்வண வேதத்தை ‘தள்ளிப்போன, கோணல் பார்வை, காமாலைக் கண் உடைய’ வெள்ளைக்காரர்களும் கூட கி,மு 1000 என்று முத்திரை குத்தியுள்ளர். நாமோ கி.மு 3150ல் வியாசர் பிரித்த நாலு வேதத்தில் ஒன்று என்று நம்புகிறோம். எப்படியாகிலும் இப்படி 22 பொருட்கள் மூலம் பாடம் கற்பிப்பது உலகில், மனித வரலாற்றில் இதுவே முதல் தடவை .

இன்றும் கூட பஜனைப் பாடல்களிலும், கர்நாடக சங்கீதக் கச்சேரிகளிழும் ‘பல்லவி’ வருவதை பார்க்கிறோம்; வெள்ளைக்ககாரர்களுக்கு நோட்டு புஸ்தகம் இல்லாமல் பாட முடியாது. நம்மவரோ குரு -சிஷ்ய பாவத்தில் கற்றுக்கொண்டதை அப்படியே மனப்பாடமாக மேடையில் பாடுவதை இன்றும் காணலாம். அதாவது இது வாய் மொழி  இலக்கியம்

மேலும் சாதாரணமாக “எனக்கு  பலத்தைக் கொடு , புகழைக் கொடு , சக்தியைக் கொடு” என்று கேட்கும் பாடல்களும் வேதத்தில் நிறையவே உள்ளன. இந்தப் புலவர் மட்டும் சிங்கம், புலி, யானை, சிறுத்தை, தங்கம் தண்ணீர், குதிரை பசு தேர் என்றெல்லாம் பாடுகிறார் !!

மிக முக்கியமான விஷயம் வெள்ளைக்காரர்கள் (male chauvinists) ஆண் ஆதிக்க வெறி பிடித்தவர்கள். அவர்களுடைய மதங்களில் பெண்களுக்கு இடமே இல்லை. ஆனால் நாமோ பெரிய மனிதர்களைப் பெற்றெடுத்த தாயைத்தான் முதலில் வணங்குவோம். எல்லா கடவுளையும் பெ  றெடுத்த அதிதி தேவியை வணங்கும் பாடல் இது. உலகின் மிகப்பழைய நூலான ரிக் வேதம் முழுதும் ‘கடவுளரின் தாய்’ என்று அதிதி பாடப்படுகிறாள் .

இன்னும் ஒரு விந்தை, பழங்கால எகிப்திய, கிரேக்க, பாபிலோனிய மதங்களில் இருந்த அன்னைத் தெய்வங்களை இப்பொழுது மியூசியங்களில் மட்டுமே காணலாம். ஆனால் ‘அதிதி’ பெயரை எங்கள் லண்டனில் உள்ள பெண்களிடமும் காணலாம். அதாவது இந்து மதம் பெண்களை வணங்கும்  மதம்; வாழும் மதம்!. அதிதியை மியூசியத்துக்கு அனுப்பாத மதம்!

இப்பொழுது ‘சப்ஜெக்’டுக்கு வருகிறேன் ; ஒவ்வொரு தலைப்புக்கும் ஒரு சில எடுத்துக் காட்டுகளைத் தொட்டுக் காட்டுவேன் வள்ளுவர் காப்பி அடித்த தேர் ‘அச்சு’ உவமையும் பின்னே வருகிறது !

xxxx

சிங்கம் Lion

1.சிங்கம் – ஸ்வயமேவ ம்ருகேந்திரதா – என்பது ஸம்ஸ்க்ருதப் பழமொழி. ‘மிருகங்களின் இந்திரன் (ராஜா) நீயேதான்’ என்பது இதன் பொருள். காட்டுக்கு ராஜா சிங்கம் என்பது இந்துக்களின் கண்டுபிடிப்பு. சிம்மாசனம்= அரியணை என்பது நமது சொற்றொடர் . கேஸ் +அரி கேசரி= ‘மயிர் மிருகம்’ என்பதை ரோமானியர் சீசர் என்று பயன்படுத்தினர் (கே =சே சர் ). நான் ரோம் நகரிலுள்ள வத்திக்கான் மியூசியத்தில் கல்லாலான மிகப்பெரிய சிம்மாசனத்தைக் கண்டேன். ‘அரிமா நோக்கு’ என்பதும் ஸம்ஸ்க்ருதப் பழ மொழி . அப்படித் திரும்பி ஒரு கம்பீரமான LOOK ‘லுக்’ விடுமாம் !அது போல எனக்கு பலம் தா என்று புலவர் வேண்டுகிறார்.

xxx

புலி Tiger

புலியைப் பற்றி இந்துக்கள் பாடியது போல வேறு எவரும் பாடவில்லை . வெங்கடேஸ்வர சுப்ரபாதத்தின் முதல் ஸ்லோகம் வால்மீகி ராமாயணத்திலிருந்து எடுக்கப்பட்டது. அதில் “புலி போன்ற வீரம் உடைய சின்னப் பையா! ராமா! எழுந்திருடா! என்று விசுவாமித்திரர் பாடுகிறார்- உத்திஷ்ட ! ‘நர’ ‘சார்தூல’ = ஆண்களில் புலி போன்றவனே! எழுந்திரடா மகனே! என்பது பொருள். புறநானூற்றிலும் புலி , வலப்பக்கம் விழுந்த உணவை மட்டுமே சாப்பிடும் என்று புலவர்கள் பாடுகின்றனர் ( இது உண்மையா என்று இயற்கை சம்பந்தப்பட்ட டாக்குமெண்டரிகளைப் பார்த்து ஆராய்ச்சி செய்துவருகிறேன் ); புலியின் வீரத்தை உணர்ந்த இந்துக்கள் குழந்தைகளுக்கு ‘புலிப்பல் தாலி’ அணிவித்தனர். கடவுளருக்கு புலியை வாகனமாகக் கொடுத்தனர் . சிந்து வெளி முத்திரைகளில் புலி தேவதை டான்ஸ் (dancing tigress in Indus valley Seals )ஆடுவதையும் பார்க்கிறோம்.

xxx

பாம்பு Snake

பாம்பு பற்றி பத்து புஸ்தகம் எழுதும் அளவுக்கு இந்துமதத்தில், தல புராணங்களில் கதைகள் உள்ளன. நல்லதற்கும் பாம்பு; கெட்டதற்கும் பாம்பு உவமை வரும்; குண்டலினி சக்தியை எழுப்புவதைக் கூட பாம்பை சுருண்ட நிலையில் இருந்து எழுப்புவது என்ற உவமை மூலம் விளக்குவார்கள். அந்த பாம்பினை எழுப்பிவிட்டாலோ பத்து ‘பாபா’ அளவுக்கு அற்புதங்கள் செய்து காட்டலாம்.

ராமகிருஷ்ண பரமஹம்சர் கதையில் கூட பாம்பினை நல்ல உதாரணத்துக்குப் பயன்படுத்துவார். காளீயன் போல ஒரு பாம்பு அட்டஹாசம் செய்துவந்தது  . ஒரு முனிவர் அதை ‘அடங்கி ந’ட என்று அதட்டினார். அதுவும் அப்படியே வாழ்ந்தது. அடுத்த முறை அதே முனிவர் அந்தப் பாம்பினைக் கண்டபோது அது குற்றுயிரும் கொலையுசிருமாக கிடந்தது. ஏ பாம்பே ! என்ன ஆயிற்று  உனக்கு? என்று வினவினார் முனிவர். “அட போங்க முனிவரே; எல்லாம் உம்மால் வந்ததுதான் ; நீங்கதான் ‘அ டங்கி இரு’ என்று சொன்னீங்க; இந்தப் பாவிப்பயங்க போற வரும்போதெல்லாம் என் மீது கற்களை வீசி அடிக்கிறாங்க”.

முனிவர் சொன்னார்- நான் உன்னை கடிக்காமல் அடங்கி இரு என்றுதான் சொன்னேன். உனது குணமான சீற்றத்தைக் காட்டி உன்னைப் பாதுகாத்துக்கொள்ளாதது உன் தவறு என்றார் முனிவர். ஆக பாம்பு போல எதிரிகளைப் பயமுறுத்தும் குணத்தை எனக்குத் தா என்கிறார் இந்த மந்திரத்தில் . அதுமட்டுமல்ல ‘பாம்பு என்றால் படையும் நடுங்கும்’ என்பது பழமொழி. ‘நல்லார் அவையில் புகுந்த பாம்பினைக் கூட நல்லோர் கொல்ல மாட்டார்கள்’ என்ற சங்க இலக்கியப்  பாடல் , ரிக் வேதத்தின் கடைசி மண்டலத்திலுள்ள ‘பாம்பு ராணி’ பற்றி எல்லாம் இந்த பிளாக்கில் ஏராளமான கட்டுரைகள் உள ; படித்து  மகிழ்க

To be continued…..

Tags-  அதர்வண வேதம்,         பிராணிகள், கற்பிக்கும் பாடம், 

வேதத்தில் தவளை அதிசயம் – பகுதி 2 (Post No.10,343)

EGYPTIAN FROG GODDESS HEQET OR HEKET= HINDU SHAKTI 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,343

Date uploaded in London – –   16 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

“மர்மத் தவளைகள் ; ரிக், அதர்வ வேதம் தரும் அதிசயத் தகவல்கள்” (Post.10,337) -என்ற தலைப்பில் வெளியான கட்டுரையின் இரண்டாவது பகுதி இது.

ரிக் வேதத்திலும் அதர்வ வேதத்திலும் இதுவரை நான் 5 அதிசயங்களைக் கண்டுள்ளேன். அதர்வண வேதம் முழுதும் மாய , மந்திர, இந்திர ஜால (Magic) வித்தைச் செய்திகளாக உள்ளன. யஜுர் வேதத்திலும் மேலும் அதிசயச் செய்திகள் உள்ளன. ஆகவே தவளைகள் பற்றி மேலும் அதிசயச் செய்திகள் கிடை க்கலாம் .

இதுவரை நாம் கண்ட அதிசயங்கள் 4; அவையாவன

1. ரிக் வேதத்தில் வசிஷ்டர் பாடிய நகைச் சுவை மிகுந்த தவளைப் பாட்டு (RV 7-103). இதை அப்படியே கிரேக்க நாடக ஆசிரியர் அரிஸ்டோபனீஸ் காப்பி அடித்து கிரேக்க மொழியில் ஒரு நாடகம் செய்தார். இது உலக அறிஞர்கள் அனைவருக்கும் தெரிந்த செய்தி ; கம்பனும் இதே பாணியில் தவளை பற்றிப்   பாடினான்  (எனது முந்தைய கட்டுரைகளில் காண்க).

இரண்டாவது அதிசயம்- ரிக் வேதத்தில் பத்தாவது மண்டலத்தில் தகனக் கிரியைப் பாடல்கள் உள்ளன. அதில் ஒரு பாடலில் சடலத்தை எரித்த பின்னர் அங்கே பெண் தவளை ஒன்றை வைக்க வேண்டும் என்பதாகும் .

மூன்றாவது அதிசயம் – அதர்வண வேதத்தில்  இருக்கிறது; சிவப்பு -நீல நிற நூலைக் கட்டி தங்கத்துடனும் ‘அவகா’ என்ற நீர்த் தாவரத்துடனும் கால் வாய் திறப்பு விழாவில் ஒரு தவளையை விட  வேண்டும்  என்று சொல்லி இருப்பதைக் கண்டோம்..

நாலாவது அதிசயம் — அதர்வண வேதத்தில் கண்வக்கா , கைமுக்கா , தஹூரி என்றெல்லாம் தவளைக்குப் பெயர் சூட்டும் மந்திரம் உள்ளது. இதை வெள்ளைக்காரர்கள் , ஒலி நயம் காரணமாக ரிஷிகள் பாடி மகிழ்ந்தனர் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டனர். ஆனால் நான் அது தவறு என்பதை அலிகி , விளிகி பாம்பு விஷயங்களைக் காட்டி விளக்கினேன்.

XXXX

GREEK GODDESS HECATE= HINDU SHAKTI 

இப்போது புதிய அதிசயத்துக்கு வருவோம்.

ஐந்தாவது அதிசயம்

மொழி இயல் (Linguistic researchers) பற்றி ஆராய்வோருக்கு சில விஷயங்கள் கண்களில் ‘சட்’டென்று பட்டு விடும்

ரிக் வேதத்தில் ‘ஸபா’ என்ற சொல் உள்ளது. அதை ‘அவை’ என்று மாற்றி தமிழர்கள் இன்றும் பயன்படுத்துகின்றனர். லோக் ஸபா, ராஜ்ய ஸபா என்பன தெயாத இந்தியர்கள் இருக்க முடியாது. அங்கே ‘ப’ என்பது தமிழில் ‘வ’ என்று மாறுகிறது. இன்றும் நாம் ‘பெங்கால்’ என்பதை ‘வங்கம்’ என்கிறோம் . இந்த மாற்றங்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே நடந்து இருக்கிறது!

இதே போல நாம் ‘ச’ என்று சொன்னால் கிரேக்க பாரசீக மொழிகளில் ‘ச’ கிடையாது; அதை அவர்கள் ‘ஹ’ என்பர். இதனால்தான் சிந்து நதிக்கரையில்’ அதற்கு அப்பாலும் வசித்த நம் எல்லோரையும் அவர்கள் ‘ஹி’ந்துக்கள் என்று எழுதிவிட்டனர் .

இந்துக்கள் ‘சக்தி’ என்றால் அவர்கள் ‘ஹக்தி’ என்பார்கள் . இதே பெயரில் எகிப்திலும் , கிரேக்க நாட்டிலும் சில தெய்வங்கள் உள்ளன. அவற்றில் கிரேக்க நாட்டு ‘ஹெகதி’க்கு நாம் ‘சக்தி’ பற்றி சொல்லிய வருணனைகள் பொருந்துகின்றன.

எகிப்து நாட்டில் ‘ஹெகதி’ Heqet, Heket என்ற தேவதைக்கு தவளை உருவம் கற்பித்துள்ளனர். அவளை குழந்தை பிறப்பதில் உதவவும் தேவதையாகவும் மகப்பேறு மருத்துவச்சி என்றும் பழைய எகிப்திய நூல்கள் வருணிக்கின்றன.

இப்போது நாம் பழைய விஷயங்களை ஒப்பிடுவோம் . சுடுகாட்டில் ஏன் இந்துக்கள், பெண் தவளையை வைத்தனர்? கால்வாயில் ஏன் இந்துக்கள் நீர்  தாவரத்துடன் தவளையை விட்டு திறப்பு விழா நடத்தினர்?

இதற்கு விடை: மறு பிறப்பு, மறு மலர்ச்சி,  (Rebirth, Reincarnation, Resurgence) புத்தெழுச்சி ஆகும் அதாவது தவளை முட்டையாக தோன்றி மீன் போல உருமாறி (தலைப் பிரட்டை Tadpole) நான்கு கால் தவளையாக உருமாறுகிறது. இது மறு பிறப்பைக் குறிக்கும். அது மட்டுமல்ல தவளைக்குள்ள அபூர்வ குணம் நீரிலும் வசிக்கும், நிலத்திலும் வசிக்கும். (Amphibian) கல்லுக்குள் தேரையாகவும் வசிக்கும் .அத்தோடு இந்துக்கள் நீர்த் தாவரத்தையும் கால்வாயில் விட்டனர். அந்த ‘அவகா’ தாவரத்தை இன்று லண்டன் முதலிய இடங்களில் அக்வேரியம் aquarium எனப்படும் மீன் காட்சி சாலைகளில் தண்ணீர் தொட்டிக்குள் காணலாம். இதன் அபூர்வ குணம் தண்ணீருக்குள் வளர்ந்து அதை சுத்தப்படுத்தும் . இதை அறிந்த வேத கால ரிஷிகள் இதையும் சேர்த்து கால்வாயில் விடச் சொன்னார்கள்.

தவளையின் இனப்பெருக்கத்தையும் (fertility) , அதன் உரு மாற்ற (Metamorphosis) குணத்தையும் கண்ட எகிப்தியர் இந்துக் கடவுளுக்கான ‘சக்தி’க்கு தவளை உருவத்தைக் கொடுத்து அதை ‘ஹெகதி’ (சக்தி என்றனர்)

இப்போதும் மேற்கு வங்கம் பீஹார் போன்ற இடங்களில் இந்துக்கள் ‘ஷஷ்டி’ Shasthi என்ற தேவதையாக வணங்கி வருகின்றனர். காலப்போக்கில் சஷ்டியில் (ஆறு என்பதன் சம்ஸ்கிருதம்) முருகன் வழிபாடு இருப்பதாலும், முருகனை 6 கிருத்திகைப் பெண்கள் வள ர்த்தத்தாலும் அதை ஸ்கந்தனுடனும் தொடர்பு படுத்தினர்.

தவளை உருமாற்றம் செய்வது போலவே இந்து தெய்வங்கள் உருமாற்றம் அடைவதையும் காணலாம் (Metamorphosis of Hindu Gods) . ஒரே பார்வதி தேவியை – ஒரே சக்தி அன்னையை- மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு பெயரில் அழைப்பதைக் காணலாம் – 51 சக்தி பீடங்களின் தேவி பெயர்களின் பட்டியலைப் பார்த்தால் இது உங்களுக்குத் புரியும். அத்தோடு local லோக்கல் கதைகளை இணைத்து தலபுராணமும் சொல்லுவார்கள். “கடவுள் ஒருவரே; அவரை பல குணங்களில் ,  பல ரூபங்களில் வணங்கலாம்”– என்பது இந்துக்கள் உலகிற்குக் கற்பித்த  பாடம்.

இந்துக் கடவுளை வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்றோர், அதற்கு மொழி மாற்றம் காரணமாக புதிய உச்சகரிப்பை – புதிய  நாமத்தை — புதிய கதைகளை உருவாக்கி லோக்கல்/ உள்ளூர்  மக்களை கவர்கின்றனர் .

இதுதான் சக்தி – ஷஷ்டி ஆகி கிரேக்க நாட்டில் ஹெகதி ஆகிக் – எகிப்தில் தவளை ரூபா ஹெக்தி ஆக உரு மாறிய கதை.

அதர்வண வேத மந்திரம் ஒவ்வொன்றும் அற்புத விஷயங்களைச் சொல்கிறது. நம்முடைய முதல் கடமை வேதம் படித்தவர்களைப் பார்த்தால் அவர்கள் காலில் விழுந்து, தயவு செய்து இதை ஒலி மாறாமல் சொல்லி வாருங்கள்; நாங்கள் பிற் காலத்தில் அர்த்தம் சொல்கிறோம் என்று சொல்ல வேண்டும்!!

இன்று காலை நான் படித்த அதர்வண வேத ஐந்தாவது காண்டத்தின் முன்னுரையிலேயே, இதிலுள்ள 30 பாடல்களுக்கும் சாயனர் உரை  எழுதவில்லை என்று எழுதி இருக்கிறார்கள். 700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சாயனருக்கே அர்த்தம் புரியவில்லையா? ஆராய்ச்சிகளைத் தொடர்வோம் .

–subham–

TAGS- எகிப்து, தவளை, தேவதை, கிரேக்க, ஹெகதி , சக்தி , அதர்வண வேதம், அதிசயங்கள்

ஜேம்ஸ் பாண்ட் (007) -ஐ தோற்கடித்த ஹிந்து! (Post No.10329)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,329

Date uploaded in London – –   12 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரு இந்துக் கடவுள் உலகில் உள்ள  மிகப் பெரிய உளவு அமைப்புகளான சி.ஐ.ஏ . கே.ஜி.பி. எம் ஐ 5, எம் ஐ 6, மொசாத்.இந்தியாவின் ‘ரா (RAW=Research and Analysis Wing)  ‘ உளவாளிகளையும் ஜேம்ஸ்பாண்ட், மிஸ் மார்பிள் , ஷெர்லாக் ஹோம்ஸ் ஆகியோரையும் விடப் பெரியவர்; திறமையானவர் என்று அதர்வண வேத மந்திரம் சொல்கிறது. ஏன் ?எப்படி?

இதோ கணக்கு

ஒரு மனிதன் சராசரியாக ஒரு நிமிடத்துக்கு 10 முறை கண் சிமிட்டுகிறான் (மன்னிக்கவும்; அழகான பெண்களைப்  பார்த்து கண் சிமிட்டுவதையும், அவள்  அழகில் மயங்கி, சொக்கிப் போய் , கண்களை சிமிட்டாமல் பார்த்துக்  கொண்டே இருந்ததையும் அதர்வ வேதம் சேர்க்கவில்லை!)

சரி, அப்படியானால் ஒரு மணிக்கு ஒரு மனிதன் சராசரியாகக் கண் சிமிட்டுவது 60X 10 =600 முறை

ஒரு நாளில் அவன் 16 மணி நேரம் விழித்து இருப்பான் . அப்போது அவன் கண் சிமிட்டுவது

600x 16 மணி = 9600 முறை

உலகின் ஜனத்தொகை , இதை நான் எழுதிய போது………..

7.9 பில்லியன் , அதாவது 7,906,132,700

இதை நான் எழுதும்போது லட்சக் கணக்கில் கூடிக்கொண்டே இருக்கும்.

உலக ஜனத் தொகை கடிகாரம் என்பதை கூகுள் மூலம் பார்த்தீர்களானால் ஒவ்வொரு வினாடியும் எவ்வளவு கூடுகிறது என்பதைக் காணலாம்; வியக்கலாம் .

நம் கணக்கிற்கு 7,906,132,700 என்று வைத்துக் கொண்டால் கண் சிமிட்டுதலின் எண்ணிக்கை

9600 X 7,906,132,700 (ஒரு நாளில் மட்டும்!!!!!!!)

இதை வானத்திலிருந்து வருணன் கணக்கிட்டுக் கொண்டே இருக்கிறானாம்; இப்படிச் சொல்கிறது அதர்வண வேதம் . தள்ளிப்போன வெள்ளைக்காரப் பயல்கள் கூட, அதர்வண வேதத்துக்கு கி.மு.1000 என்று தேதி குறிக்கிறான் அதாவது இற்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னர்!

இந்த வருண பகவானை தொல்காப்பியம் தமிழர் கடவுள் என்று விஷ்ணு, இந்திரன், வேல் முருகன், துர்க்கை ஆகியோருடன் பட்டியலில் சேர்த்து இருக்கிறது .

பார்ப்பனர்கள் தினமும் மாலை நேரத்தில் சொல்லும் சந்தியாவந்தன மந்திரத்தில் இவனிடம் மன்னிப்புக் கேட்கிறார்கள் ; அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை இன்று நீ பார்த்ததை நான் அறிவேன் ; ப்ளீஸ், ப்ளீஸ், மன்னிச்சுக்கோ.- என்று

துருக்கி- சிரியா  எல்லையில் உள்ள பொகஸ்கொய் Bogazkoy  களிமண் படிவ க்யூனிஃபார்ம் எழுத்துக் கல்வெட்டிலும் இந்திரன் மித்திரனுடன் வருணன் பெயர் உள்ளது. அதன் தேதி கி.மு 1340. அதாவது 3360 ஆண்டுகளுக்கு முந்தியது. இதெல்லாம் தள்ளிப்போன உதவாக்கரை அரைவேக்காடுகள் சொன்ன தேதி. அதாவது இந்து மதத்தை நக்கல் செய்யும், இந்து மதத்தைப் பின்பற்றாத, தன மதம் ஒன்று மட்டுமே கடவுளிடம் அழைத்துச் செல்லும் என்ற குருட்டு நம்பிக்கை கொண்ட வெள்ளைத் தோல்கள் சொன்ன சேதி . நம்முடைய பஞ்சாங்கமும் தமிழ்க் கல்வெட்டும் வியாசர் என்பவர் வேதத்தை நான்காகப் பிரித்ததையும் அது கலியுகம் துவங்குவதற்கு 60, 70 ஆண்டுகளுக்கு முன்னர் வியாசர் செய்த வேலை என்றும் சொல்கிறது. அதாவது இற்றைக்கு சுமார் 5200 ஆண்டுகளுக்கு முன்னர்!

இப்போது அதர்வண வேத கவிதையைப் படியுங்கள்; அதற்குப் பின்னர் இன்னும் சில சுவையான செய்திகளைச் சொல்கிறேன்:–

அதர்வண வேதம் – காண்டம் 4, சூக்தம் 16 (சூக்தம் 118 வருணன் என்றும் சொல்லுவர் )

1.அவன் பெரிய அதிகாரி; பக்கத்தில் இருந்து பார்ப்பது போல உன்னிப்பாக நம்மையே பார்க்கிறான் ; எல்லோரும் ரஹசியம் பேசுவதாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்; அது எல்லாம் தேவர்களுக்கு நன்கு தெரியும்

2. ஒருவன் நிற்பது, உட்காருவது, வளைந்து வளைந்து கோணலாக ஓடுவது, மறைவாக ஒளிந்து கொண்டு யாருக்கும் தெரியாமல் எதையாவது செய்வது, இருவர் மட்டுமே தனி இடத்தில் அமர்ந்து கிசு கிசு பேசுவது அத்தனையும் வருணனுக்குத் தெரியும்.எப்படித் தெரியுமா? அவன் உங்கள் அருகில் மூன்றவது ஆளாக நைசாக உட்கார்ந்து பார்த்துக்கொண்டே இருக்கிறான்!!

3.இந்தப் பூமி அவனுக்கு சொந்தம்; அதற்கு மேல் நாம் பார்க்கும் வானமும் அவனுக்குச் சொந்தம் . பூமியில் உள்ள கடலும், கடல் போன்ற ஆகாயமும் அவனுடையதே.

நாலாவது மந்திரம்

4.((சப்போஸ்suppose ; நீ ஆகாயத்துக்கு அப்பால் ஸ்பேஸ் ஷட்டிலில் போகிறாய் என்று வைத்துக்கொள்வோம்)). அப்போதும் நீ அவன் எல்லைக்கு அப்பால் சென்றதாக நினைத்துவிடாதே . அவனுடைய ஒற்றர்கள் அங்கிருந்துதான் பூமிக்கே வருகிறார்கள் . அவர்களுக்கு 1000 கண்கள். பூமியை பார்த்துக கொண்டே இருக்கிறார்கள் (அதாவது அவர்கள் ஸிஸிடி வி  CCTV காமெராக்கள்; கூகுள் மேப் GOOGLE MAP )

ஐந்தாவது மந்திரம்

வருணன் பெரிய ராஜா ; பூமி, ஆகாயம், அதற்கு இடையிலுள்ள அந்தரம், வானத்துக்கும் அப்பால் உள்ள இடம் அத்தனையையும் பார்க்கிறார்.இந்த ஜனங்களின் இமைச் சிமிட்டுகளையும் அவன் எண்ணியுள்ளான். சூதாடுபவன் காய்களை உன்னிப்பாக எண்ணுவது போல அவன் எண்ணிக்கொண்டே இருக்கிறான்!!!!

ஆறாவது மந்திரம்

6.ஏ வருணா ! பொய் சொல்ற பயல்களை 3X 7= 21 பாஸக்  கயிற்றால் கட்டி, அடித்து விட்டு விளாசு; ஆனால் உண்மை பேசுவோரைத் தொடாதே

ஏழாவது மந்திரம் 7.

ஏ வருணா ! விடாதே; அவர்களை 100 பாசக்கயிற்றால் கட்டு ; மனிதர்களைக் கவனிக்கும் வருணா! பொய்  சொல்ற பயல்களை நல்லாக் கட்டு. ((நீ அடிக்கிற அடியிலே )) அவன் வயிறு தொங்கி மஹோதர நோயுள்ளவன் (போல) ஆகட்டும்

எட்டாவது மந்திரம்

8.நீயே அகலம்; நீயே நீளம்; நீயே மனிதன் , நீயே தெய்வமாக நிற்கிறாய்  நீ முன்னைப் பழமைக்கும் பழமையானவன். பின்னைப் புதுமைக்கும் புதுமையானவன்

ஒன்பதா வது மந்திரம்

9.இன்னாரே ! நான் அந்த எல்லாப் பாசங்களுடன் உன்னைக் கட்டுகிறேன்.இந்த இந்த குடும்பத்தைச் சேர்ந்தவனே ! இந்த இந்தத் தாயின் மகனே ! அவர்களின் அனைவரையும் உனக்கு நான் அனுகூலமாய் நான் ஆக்ஞாபிக்கிறேன்.

XXXX

ஒன்றுக்கும் உதவாத உதிய மரத்தின் VON ROTH கருத்து !

7 வெள்ளைத் தோல்கள் இந்தப் பாடலை ஐரோப்பிய மொழிகளில்  மொழிபெயர்த்தன .

Max Muller, Griffith, Ludwig, Grill, Von Roth, Muir, Kaegi

அதில் தள்ளிப்போன பயல் ஜெர்மனியைச் சேர்ந்த VON ROTH வான் ராத். அவன் 7 வால்யூம்களில் சம்ஸ்க்ருத அகராதியை (St Petersburg Dictionary) உருவாக்கியவன். அதில் தத்துப் பித்து என்று உளறிக்கொட்டி கிளறி மூடி இருக்கிறான். அதை கோல்ட்ஸ்டக்கர் THEODORE GOLDSTUCKER என்ற பேரறிஞர் விளாசு விளாசு என்று விளாசி இருக்கிறார் . அவரும் வில்ஸன் , மாக்ஸ்முல்லர், வான் ராத் காலத்தில் வாழ்ந்தவர்; ஆனால் பெரிய வித்தியாசம்; அவர் ஒரு யூதர். மற்ற 30+++++ மொழிபெயர்ப்பாளர்களும் கிறிஸ்தவர்கள். அவர்கள் பிரபஞ்சமே 6000 ஆண்டுகளுக்கு முன்னர்தான் வந்தது என்பதை நம்பியவர்கள் . பாணினியின் காலம் என்பது பற்றி கோல்ட்ஸ்டக்கர் எழுதிய நூலில் மாக்ஸ் முல்லரையும் விடவில்லை. முன்னுக்குப் பின் முரணாக எழுதியுளாயே முட்டாள் என்று மாக்ஸ்முல்லர் தவறுகளை சுட்டிக்காட்டி ஏசுகிறார்.

நிற்க.

சப்ஜெக்டு subject க்கு வருகிறேன்.

அப்பேற்ப்பட்ட தள்ளிப்போன , ஒன்றுக்கும் உதவாத உதிய மரமான , தள்ளிப்போன ஜெர்மானியன் வான் ராத் VON ROTH வியக்கிறான்  : வேதத்தில் கடவுளைப் பற்றிய கவிதையில் இதை வீட உன்னதமான கவிதையை நன் கண்டதே இல்லை. இறைவன் சர்வ வியாபி, எல்லாம் வல்லவன் , எங்கும் நிறைந்தவன் , எல்லாம் அறிந்தவன் என்பதை இந்த அளவுக்கு விளக்கும் கவிதையை நான் கண்டதே இல்லை; இதில் கடைசி மந்திரம் எதிரிகளுக்கு எதிரான சாபம் போல இருப்பது ஒன்று மட்டுமே குறை.

xxx

லண்டன் சுவாமிநாதன் வியாக்கியானம்

இது ஒரு அற்புதமான கவிதை; வருணனைப் பற்றிய வருணணைகள் அனைத்தும் ரிக் வேதத்தில் இதே தொனியில் அமைந்திருப்பது உண்மையே. ஆனால் இங்கே புலவர் வருணிக்கும் மூன்று விஷயங்கள் வேறு எங்கும் இல்லை

1.அவன் மனிதனின் கண் சிமிட்டல்களையும் எண்ணிக்கொண்டே இருக்கிறான். அதாவது  NASA நாஸா , PENTAGON பெண்டகன் முதலிய இடங்களில் உள்ள சூப்பர் கம்பியூட்டர்களை விட வருணன் பெரிய கம்ப்யூட்டர். அவன் சிசி டிவி CCTV காமெரா போல பார்த்துக் கொண்டிருப்பதோடு பாவ புண்ணியங்களை கணக்குப் போ ட்டுக் கொண்டே இருக்கிறான்.  இதனால் தினமும் மாலை வேளை மந்திரத்தில் பிராமணர்கள் வருண பகவானிடம் பாவ மன்னிப்பு கேட்கின்றனர் .

2.அவனுடைய தூதர்கள் உளவாளிகள் ; அவர்களுக்கு ஆயிரம் கண்கள் . இப்போது கூகிள் மேப் GOOGLE MAP மூலம் நாம் யார் வீட்டின் வாசலில் யார் நிற்கிறார் என்பதைக் காண முடியும். அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்குள் யார் நுழைகிறார், வெளியே வருகிறார் என்று காண முடியும். இதை வருணன் ஒற்றர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே செய்துள்ளனர். செய்து வருகின்றனர்.

3. வருணன் இன்விஸிபிள் மேன்  ; அதாவது நாம் இருவர் மட்டுமே ரஹசியம் பேசுகிறோம் என்று நினைக்கிறோம். புலவர் சொல்கிறார்;  டேய் மக்கு, மடையா; உன் பின்னால் வருணனும் உனக்குத் தெரியாமல் கேட்டுக் கொண்டு இருக்கிறாண்டா. என்று

இறைவனின் மஹிமையை இதைவிட எவனாவது வருணிக்க முடியுமா ?

பாரதியார் சொன்னார் சுவை புதிது, பொருள் புதிது, சோதிமிக்க நவ கவிதை; எந்நாளும் அழியாதா மா கவிதை என்று ; அந்த வரிகள் இந்தக் கவிதைக்கு நன்கு பொருந்தும்.

மாணிக்க வாசகர் இறைவனை வருணிக்கையில் முன்னைப் பழமைக்கும் பழமை, புதுமைக்கும் புதுமை என்றார் ; அற்புதமான வாசகம்; அதுவும் இந்த துதியில் தொனிக்கிறது

நோய்கள் வருவது ஒருவருடைய பூர்வ ஜென்ம பாவத்தால் என்பது இந்துக்களின் கருத்து. இதை ஏற்காத வான் ராத் அதை ஒரு குறையாக கருதுகிறார். ஏனெனில் பாவம் செய்தொரின் மகா உதர (மஹோதர = பெரு வயிறு) நோய் பற்றி வருகிறது.

பொய் சொல்வோரை கட்டி அடித்து நொறுக்கு; உண்மை சொல்வோரைக் காப்பாற்று என்பது அற்புதமான கருத்து. கந்த சட்டி கவசத்தில் வரம் வரிகளை நினைவு படுத்துகிறார் புலவர் (கட்டி உருட்டி கால் முறியக்கட்டு, குத்துக் குத்துக் கூர் வடிவேலால்)

மந்திரம் ஆறில் மூவேழ் 3x 7=21 என்ற எண் வருகிறது புற நானூற்றின் 166 ஆவது பாடலிலும் இது வருகிறது..

கடவுள் என்பவன் வானத்தில் ஒரு மாளிகையில் உட்காரவில்லை எங்கும் நிறைந்தவன் என்பதை வருணனே  நீ இறைவன் நீ மனிதன் என்ற மந்திரம் காட்டுகிறது.

எல்லாம் வல்ல,எங்கும் நிறைந்த, எல்லாம் (OMNI POTENT, OMNI PRESENT, OMNI SCIENT )அறிந்த வருணனை, மாலை வேளையில் துதிக்கும் பிராமணனைக் கண்டால் ஒரு கும்பிடு போடுங்கள் . ஏனெனில் அந்த வருணனின் மஹிமையை, தொல் காப்பியன் சொன்னதை, இன்றும் நமக்கு சொல்லி வருகிறார்கள்!

மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே.

– தொல்காப்பியம்-பொருளதிகாரம்-அகத்திணை இயல்-பாடல் எண்:5

–SUBHAM–

tags- வருணன் , உளவாளி, கண் சிமிட்டுதல், ஜேம்ஸ் பாண்ட் , அதர்வண வேதம்

பேயை விரட்ட, நோயை விரட்ட, விஷத்தை இறக்க அபூர்வ மந்திரங்கள்- பகுதி 1 (Post No.3974)

பேயை விரட்ட,  நோயை விரட்ட, விஷத்தை இறக்க அபூர்வ மந்திரங்கள்- பகுதி 1 (Post No.3974)

 

Written by London Swaminathan

 

Date: 5 June 2017

 

Time uploaded in London- 16-18

 

Post No. 3974

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

இந்துக்களுக்கு நான்கு வேதங்கள் உண்டு: ருக், யஜூர், சாமம், அதர்வணம்.

 

இதில் வெள்ளைக்காரகள் கணக்குப்படி ரிக் வேதம் பழமையானது: சிலர் 6000 ஆண்டு பழமை என்பர்; இன்னும் சிலர் 3200 ஆண்டுகள் பழமை என்பர். அதர்வண வேதம் பிற்காலத்தியது என்பர். ஆனால் இந்துக்கள் இதை ஏற்பத்தில்லை அவர்கள் கணக்குப்படி எல்லா வேதங்களும் கி.மு.3102 ஐ ஒட்டி வியாசரால் நான்காகப் பகுக்கப்பட்டவையே ; அதாவது இற்றைக்கு 5100 ஆண்டுகளுக்கும் முன்னரே 4 வேதங்களும் இருந்தன.

உண்மையில் இந்துக்களுக்கு இரண்டே வேதங்கள்தான்; அதாவது ரிக் வேத மந்திரங்களே பெரும்பாலும் யஜூர், சாம வேதங்களில்உள்ளன. அதர்வண வேதத்திலோ   பெரும்பாலும் புதிய மந்திரங்கள்.

 

சங்க காலம் முதல் தமிழர்கள் சொல்லுவது நான்மறை; அதாவது 4 வேதங்கள். ஆனால் மனு முதலானோர் சில இடங்களில் த்ரயீ வேத = மூன்று வேதம் என்பதால் வெள்ளையர்களுக்கு சிறு குழப்பம்; அவர்களுக்கு தமிழும் தெரியாது. ஆகையால் அதர்வண வேதத்தை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பர்; உண்மையில் அதர்வண வேதம் என்பது அன்றாடம் பயன்படும் மருத்துவம், தாயத்து, பேய் ஓட்டல், விஷங்களை இற              க்கல், தாய் மொழி, தாய் நாடு, “பூமி என்னும் அன்னை”, எதிரிகளை ஒழிப்பது எப்படி என்பது பற்றிப் பேசுவதால் அதைச் சமயச்  சடங்குகள்     பற்றிப்    பேசும் மூன்று வேதங்களுடன் சேர்க்காமல் பேசினர்.

 

 

பிராமணர்களின் ஆயுதம் அதர்வண வேதம் என்று மனு சொல்லுவார். கோபத பிராமணமோ எனில் நான்கு வேத புரோகிதர்களும் யாக யக்ஞங்களில் கலந்து கொள்வதைக் குறிப்பிடுகிறது. ஆகையால் வெளிநாட்டினர் சொல்வதை நம்ப வேண்டியதில்லை.

 

அதர்வண வேதத்தில் 6000 மந்திரங்கள் 760 துதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பிடப்படும் சில அபூர்வ தாவரங்கள் எவை என்று தெரியவில்லை. அவைகளைத்தான் தாயத்துகளாக அணிந்து வந்தனர்.

 

அதர்வண வேதத்தை 20 காண்டங்களாகப் பிரித்துள்ளனர். ஒவ்வொரு காண்டத்திலும் எது சம்பந்தமான மந்திரங்கள் உள்ளன என்று சுருக்கமாகக் காண்போம்; இந்தப் பட்டியலைப் பார்த்தாலேயே அவர்கள் சிறந்த நாகரீகமும் உயர்ந்த சிந்தனையும் உடையவரகள் என்பது உள்ளங்கை நெல்லிக் கனி என விளங்கும்.

முதல் காண்டம்:

முதல் காண்டத்தின் முதல் மந்திரமே வாசஸ்பதி என்னும் வாக் (பேச்சு) தேவனையும் வசோஸ்பதி என்னும் செல்வ தேவனையும் வணங்கும் மந்திரம் ஆகும்.

கல்விக்கான மந்திரங்கள்

வெற்றிக்கான மந்திரங்கள்

எதிரிகளை அழிப்பதற்கான மந்திரங்கள்

நோயை அகற்றுவதற்கான மந்திரங்கள்

தண்ணீர் தேவதை பற்றிய மந்திரங்கள்

வரங்களைப் பெறும் மந்திரங்கள்

தர்மம் தொடர்பான மந்திரங்கள்

இதில் உள்ளன. ஒவ்வொன்றிலும் 4 மந்திரங்களைக் கொண்ட

35 துதிகள் முதல் காண்டத்தில் காணப்படுகின்றன.

 

2 ஆம் காண்டம்:

இதில் ஒவ்வொன்றிலும் 5 மந்திரங்களைக் கொண்ட 36 துதிகள் காணப்படுகின்றன.

நோயைக் குணப்படுத்தும் மந்திரங்கள்

ஜங்கிடா மணி என்னும் தாயத்து மந்திரங்கள்

அக்னி, இந்திரன், பரப் பிரம்மம் பற்றிய துதிகள்

இந்தக் காண்டத்தில் இருக்கின்றன.

ஜங்கிடா மணி என்னும் தாயத்துக்கான தாவரம், மரம் என்ன என்பது யாருக்கும் தெரியாது!

 

3 ஆம் காண்டம்:

 

 

ரிக் வேதத்தில் இடம்பெற்ற வசிஷ்ட மஹரிஷியின் முக்கிய மந்திரம், கொஞ்சம் மாறுதல்களுடன் இதில் உள்ளது. இது செல்வத்தை வேண்டும் மந்திரமாகும்.

எதிரிகளத் தோற்கடிப்பதற்காக்ன மந்திரம்

தேச ஒற்றுமைக்கான மந்திரம்

பட்டாபிஷேக மந்திரம்

பர்ண மணி என்னும் அபூர்வ தாயத்து மந்திரம் — இந்தக் காண்டத்தில் இருக்கின்றன.

பர்ண மணி என்னும் தாயத்துக்கான தாவரம், மரம் என்ன என்பது யாருக்கும் தெரியாது!

 

இதில் ஒவ்வொன்றிலும் 6 மந்திரங்களைக் கொண்ட 31 துதிகள் காணப்படுகின்றன.

 

4 ஆம் காண்டம்:

இதில் ஒவ்வொன்றிலும் 7 மந்திரங்களைக் கொண்ட 40 துதிகள் காணப்படுகின்றன.

 

ரிக் வேதத்தில் உள்ள யார்? என்னும் மந்திரம் இதில் இடம்பெறுகிறது. யார் என்றால் சம்ஸ்கிருதத்தில் க:– இது பிரம்மாவுக்கும் பெயர்! அதாவது ஓரெழுத்துச் சொல். இதை வைத்து யாரை வணங்குவது என்று மந்திரம் முழுதும் திரும்பத் திரும்ப வரும்.

 

இதில் அதிசய ஒற்றுமை என்ன வென்றால் தமிழ் “க” பிராமி லிபியிலிருந்து வந்தது. அந்த “க” பிராமியில் சிலுவை வடிவில் இருக்கும். அது எகிப்தில் கடவுளைக் குறிக்கும் சித்திர எழுத்து. ஆனால் வெறும் சிலுவையாக இல்லாமல் இரு புறமும் கைகளை உயரத் தூக்கிய மனிதன் போல மேல் நோக்கிய கோடுகளுடன் இருக்கும்.

 

விஷத்தை அகற்றும் மந்திரம்

எதிரிகளை நாடு கடத்தும் மந்திரம்

பலத்தை அதிகரிக்கும் மந்திரம்

தூக்கமின்மையை அகற்றும் மந்திரம்

சங்கு கிழிஞ்சல்களைக் கொண்டு தாயத்து செய்யும் மந்திரம்

மரங்கள், மழையை நோக்கி உச்சரிக்கும் மந்திரங்கள்

மூலிகைகள் பசுக்களை நோக்கி உச்சரிக்கும் மந்திரங்கள்

 

பாவங்களைப் போக்கும் மந்திரங்கள்

புழுக்களை அகற்றும் மந்திரங்கள்

சக்தியை அதிகரிக்கும் மந்திரங்கள்

5 ஆம் காண்டம்:

இதில் ஒவ்வொன்றிலும் 12 மந்திரங்களைக் கொண்ட 31 துதிகள் காணப்படுகின்றன.

குஸ்ட, சிலாச்சி, லக்ஷா மணி என்னும் தாயத்து மந்திரங்கள்

இவை என்ன தாவரம் என்பது பற்றி தகவல் கிடைக்கவில்லை.

வெற்றிக்கான மந்திரங்கள்

பிரம்மன் பற்றிய மந்திரங்கள்

எதிரிகளை ஒழிக்கும் மந்திரங்கள்

பிராமணர்கள், பசுக்களைப் போற்றும் மந்திரங்கள்

எதிரிகளை ஒழிக்கும் மந்திரங்கள்

ஆன்மீக பலத்தை உயர்த்தும் மந்திரங்கள்

ஆயுளை அதிகரிக்கும் மந்திரங்கள்

டாமாரங்களை அடித்து எதிரிகளை பயமுறுத்தும் மந்திரங்கள்

ஒரு அபூர்வ பசுவை வைத்திருப்பது பற்றி அதர்வணுக்கும் வருணனுக்கும் இடையே நடக்கும் சுவையான சம்பாஷணை,

பிராமணனின் மனைவி கடத்தல் பற்றிய செய்தி

பிராமணர்களை ஒடுக்கும் கொடுமை

ஆகியனவும் உள்ளன.

போர் முரசுக்குச் சொல்வது போன்ற இரண்டு மந்திரங்கள்.

 

6- ஆம் காண்டம்:

இதில் ஒவ்வொன்றிலும் 3 மந்திரங்களைக் கொண்ட 142 துதிகள் காணப்படுகின்றன.

அமைதிக்கான மந்திரங்கள்

வளையல்கள் பற்றிய மந்திரங்கள்

‘ரேவதி’ தாயத்து பற்றிய மந்திரங்கள்

சவிதா, இந்திரன் போற்றும் மந்திரங்கள்

எதிரிகளை ஒழிக்கும் மந்திரங்கள்

பாம்பு விஷத்தை இறக்கும் மந்திரங்கள்

 

 

7 ஆம் காண்டம்:

இதில் 118 துதிகள் காணப்படுகின்றன.

நீண்ட ஆயுளைத்தரும் மந்திரங்கள்

தாய் நாடு பற்றிய மந்திரங்கள்

தாய் மொழி பற்றிய மந்திரங்கள்

ஜனநாயக சட்டசபை பற்றிய மந்திரங்கள்

ஆத்மா பற்றிய மந்திரங்கள்

சரஸ்வதி மந்திரங்கள்

கணவன்– மனைவி நல்லுறவு பற்றிய மந்திரங்கள்

8 ஆம் காண்டம்:

இதில் ஒவ்வொன்றிலும் 26 மந்திரங்களைக் கொண்ட 10 துதிகள் காணப்படுகின்றன.

பேயை ஓட்டும் மந்திரங்கள்

ராக்ஷசர்களை விரட்டும் மந்திரங்கள்

விராஜ்- விராட் என்னும் தேவதை பற்றிய மந்திரங்கள்

இறந்துகொண்டிருக்கும் மனிதனை எழுப்பும் குளிகை பற்றிய மந்திரங்கள்

 

9 ஆம் காண்டம்:

ஒன்பதாம் காண்டத்தில் பத்து துதிகள் இடம்பெறுகின்றன.

இதில் விருந்தினரைப் போற்றும் நீண்ட மந்திரம் உளது.

அஸ்வினி தேவர்களின் இனிமையான உதவி பற்றிய மந்திரமும் உளது.

ரிக் வேதத்தில் முதல் மண்டலத்திலுள்ள தீர்கதமஸ் என்ற முனிவரின் மிகவும் புகழ்பெற்ற மந்திரம் இங்கே இடம்பெறுகிறது இதில்தான் “கடவுள் ஒருவரே; அறிஞர்கள் அவரை வெவ்வேறு பெயரிட்டு அழைக்கின்றனர்” என்ற புகழ் பெற்ற வாசகம் வருகிறது.

இது தவிர கிருஹப் ப்ரவேச மந்திரம்

நோய்களைத் தடுக்கும் மந்திரம்

பசுக்கள், காளைகளைப் பற்றிய மந்திரங்கள்

ஆகியனவும் சேர்க்கப்பட்டுள்ளன.

10- ஆம் காண்டம்:

இதில் ஒவ்வொன்றிலும் 25 மந்திரங்களைக் கொண்ட 10 துதிகள் காணப்படுகின்றன.

கேன (யாரால், எதனால்) என்ற கேள்வி மந்திரமும்

பிரபஞ்சத்தைத் தாங்கும் ஸ்கம்ப (தூண்) என்ற மந்திரமும்

பரப் பிரம்மம், பசுக்களைப் போற்றும்

விஷத்தை அகற்றும் ராக்ஷசர்களை விரட்டும் மந்திரங்கள்    ஆகியனவும் சேர்க்கப்பட்டுள்ளன.

அடுத்த கட்டுரையில் மேலும் பத்து காண்டங்களின் சுருக்கத்தைக் காண்போம்.

 

–சுபம்–

 

 

 

பாம்பு மந்திரம்: அதர்வண வேதமும், கம்பனும் காளிதாசனும் (Post No.3264)

snake-nandhu-fb

Research Article by London Swaminathan

 

Date: 18 October 2016

 

Time uploaded in London: 14-59

 

Post No.3264

 

Pictures are taken from various sources; thanks. (Picture is used only for representational purpose; no connection with the current article.)

 

Contact swami_48@yahoo.com

 

snakes-banded-egyptian-cobra

பாம்புகள் மணி மந்திர ஔஷதத்துக்குக் கட்டுப்படும் என்ற நம்பிக்கை வேத காலத்திலிருந்து இருந்து வருகிறது (மணி= இரத்தினக் கற்கள், மந்திரம்= மந்திர உச்சாடனம், ஔஷதம்= மூலிகை, மருந்துகள்).

 

இதைப் புலவர்களும் அடிக்கடி உவமையாகப் பயன் படுத்துவர். கம்பனும் காளிதாசனும் பயன்படுத்தியதால் மக்களிடையே இந்த நம்பிக்கை வேரூன்றி இருக்கிறது.

குயவர் ஜாதியினர், கோயமுத்தூர் பகுதியில் பாம்பு கடித்த ஒருவனைக் காப்பாற்றிய செய்தியை ஆர்தர் மைல்ஸ் என்பவர் குறிப்பிடுகிறார். அந்த ஜாதியைச் சேர்ந்த ஒருவர் ஒரு பழுப்பு நிற பொடியைப் பாம்பு கடித்த இடத்தில் தூவி, விஷத்தை உடம்பிலிருந்து இறக்குவது போல பலவித சைகைகளைச் செய்த சிறிது நேரத்தில் அந்தப் பையன் பாம்பு கடிக்காத மாதிரி நடந்து சென்றான். அதற்கு முன் அவன் கைகள் எல்லாம் மரத்துப் போயிருந்தன் என்கிறார்.

 

 

துர் ஜனங்கள் (Bad people) பற்றி நீதி வெண்பா என்ற நூலில் வரும் பாடல்:

 

துர்ச்சனரும் பாம்புந்  துலையொக்கினும் பாம்பு

துர்ச்சனரையொக்குமோ தோகையே — துர்ச்சனர்தாம்

எந்தவிதத்தாலும் இணங்காரே பாம்புமணி

மந்திரத்தாலே வசம்

 

பொருள்:- மயில் போன்ற பெண்ணே! கீழ் மக்களும் பாம்பும் தீங்கு செய்வதில் தராசுத்தட்டில் சமமாக இருப்பினும், பாம்பானது கீழ் மக்களுக்குச் சமமாகுமோ! ஆகாது ஏனெனில் கீழ் மக்களை என்ன சொன்னாலும் திருத்த முடிவதில்லை. ஆனால் பாம்போ இரத்தினக் கல், மந்திர உச்சாடனங்களுக்கும் கட்டுப்படும்.

snakes-blessed

Christian Priest blesses Snakes

கந்த சஷ்டிக் கவசம் போன்ற கவசங்களைப் படிப்போருக்குத் தெரியும் அதை பக்தியுடன் சொல்லுவோரை விஷமும் ஒன்றும் செய்யாது. இதைக் கவச வரிகளிலேயே காணலாம்.

தேளும் பாம்பும் செய்யான் பூரான்

கடிவிட விஷங்கள் கடித்துயர் அங்கம்

ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க……. (கந்த சஷ்டி கவசம்)

 

அதர்வவேதம் அருளும் ஆனந்த வாழ்வு என்னும் நூலில் கவிமாமணி தமிழ்மாறன் பின்வரும் செய்தியை எழுதியுள்ளார்:

 

“கம்பநாடர் நாகபாசப்பாடலைப் பாடி (கம்ப ராமாயணம்) , பாம்புக்கடி விஷத்தை இறக்கி, தில்லை மூவாயிரர் மகனை உயிர்ப்பித்தார். வைத்தீஸ்வரன் கோயில் ஸ்டேஷன் மாஸ்டர் ஒருவர் பாம்புக்கடி விஷத்தை ஜபம் செய்தே போக்கி வந்துள்ளார்.”

 

கம்பர், வேளாளர்கள் பெருமையைப் பாடும் ஏர்ழுபது நூல் அரங்கேற்றத்துக்கு வந்திருந்த  புதுவைச் சேதிராயன் என்பவன் காலில் பாம்பு கடித்தது. உடனே கம்பர் ஒரு பாட்டுப் பாடவே ஒரு பாம்பு வந்து கடிபட்ட இடத்திலிருந்த விஷத்தை உறிஞ்சியது. அவரும் உயிர்தப்பினார்.

 

தேவாரம் பாடிய மூவரும் இப்படி விஷம் தீர்க்கும் பாடல்களைப் பாடி,  அற்புதங்களைச் செய்ததை நாம் அறிவோம்.

 

 

garuda-snake

அப்பூதி அடிகளாரின் மகனை அரவம் தீண்டியபோது அப்பர் பெருமான் பதிகம் பாடி உயிர்ப்பித்தார்.

 

திருமருகலில் வணிகர் குல மகனைப் பாம்பு தீண்டவே ஞான சம்பந்தர் பதிகம் பாடி உயிர்கொடுத்தார்

 

இப்படி புனித நூல்கள் முழுதும் உயிர்பெற்ற அதிர்ஷ்டசாலிகளின் கதைகளைப் படித்தறியலாம்.

 

பண்டரீபுரத்தில் வாழ்ந்த சுமதி-கமலாகர் என்ற பக்தர்களின் மகனான பத்மாகரை பாம்பு தீண்டி இறந்தபோது, நாமதேவர் துதி பாடி அவனை எழுப்பித்தார்.

 

 

விஷத்தை நீக்கும் இரத்தினக் கற்கள்

மனு தம சாத்திரமும் விஷம் பாதிக்காமல் இருக்க அதற்கான ரத்தினக் கற்களை அணிய வேண்டும் என்கிறது (மனு 7-218)

 

காளிதாசன் சொல்லுகிறான்:- ரகுவம்சம் 2-32

 

திலீபன் மேய்த்த தெய்வீகப் பசுவை சிங்கம் தாக்கியது. உடனே கோபமடைந்த திலீபன் தனது அம்பை எடுக்க கையை பின்னே கொண்டு சென்றான். ஆனால் அக்கை செயலிழந்து மரத்துப் போனது. எப்படி மரத்துப் போனது என்றால் மந்திரத்தாலும் மூலிகை மருந்துகளாலும் கட்டப்பட்டுச் செயலற்றுப் போகும் பாம்பு போல அவனுடைய கைகள் செயலிழந்தன என்கிறான் காளிதாசன் (ரகு வம்சம் 2-32)

 

கம்பன் பாட்டு

ஆரண்ய காண்டம், அயோமுகிப் படலம்

 

நல் மதியார் புகல் மந்திர நாமச்

சொல் மதியா அரவின் கடுகிற்பாள்

தன் மதனோடு தன் வெம்மை தணிந்தாள்

மன்மதன் ஆம் இவன் என்னும் மனத்தாள்

 

பொருள்:-

அந்த அரக்கி அயோமுகி, நல்லறிவு உள்ளவர்கள் சொல்லும் மந்திரங்களுக்கும் தெய்வீகச் சொற்களுக்கும் அடங்காத பாம்பைப் போல, இலக்குமணனைத் தொடந்து வந்தாள். அவன் அழகில் மயங்கி அவன் மன்மதனே என்று எண்ணினாள். அவனை அடைய வேண்டும் என்ற ஆசையால் தனது செருக்கையும் கொடுமையையும் குறைத்துக்கொண்டாள்.

 

(அதாவது பாம்பு கூட மந்திரம் , கவசம் போன்ற பாடல்களுக்கு அடங்கி விடும். ஆனால் அயோமுகியின் காம வெறியில் அவள் அடங்கவில்லை)

3-snakes

சுபாஷித ரத்ன பாண்டாகாரம் என்னும் சம்ஸ்கிருத தனிப்பாடல் தொகுப்பிலும் இவ்விஷயம் உள்ளது:-

 

க்வசித் சர்போபி மித்ரத்வமாயாத் நைவ கல: க்வசித்

 

 

அதர்வண வேத ரகசியங்கள்

 

அதர்வண வேதத்தின் ஆறாவது காண்டத்தில் பாம்பு விஷத்தை இறக்கும் மந்திரம் உள்ளது:-

 

“சூரியனுக்கு பிரபஞ்சத்தின் ரஹசியங்கள் தெரியும். அது போல எனக்கு பாம்புகள் தோன்றிய கதைகள் தெரியும். சூரியன் இருளை விலக்குவது போல  நான் உனது உடலில் இருந்து விஷத்தை அகற்றுகிறேன்

 

முனிவர்களுக்கும் கடவுளருக்கும் பிராமணர்களுக்கும் பாம்பு விஷத்தை நீக்கும் உபாயம் தெரியும். அது எங்களுக்குக் கடந்த காலத்திலிருந்து வந்தது. இனி எதிர்காலத்திலும் இதை உபயோகிப்போம். அந்த அறிவைக் கொண்டு உனது உடலிலுள்ள விஷத்தை நீக்குகிறேன்.

 

இதோ மலைகளில் இருந்தும் ஆறுகளில் இருந்தும் கொண்டுவந்த நீரை உன் மீது தெளிக்கிறேன். பாருஷ்ணி, சிப்லா நதிகளின் நீரை உன் மீது தெளிக்கிறேன்.  . உனது முகத்தில் சாந்தம் தவழட்டும். உனது இருதயத்தில் அமைதி நிலவட்டும்.

 

(பாருஷ்ணி நதியின் தற்போதைய பெயர் ரவி, சிபலா நதி எது என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஒருவேளை ஷைவல என்னும் நீர்த் தாவரம் வளர்ந்த நதியாக இருக்கலாம்)

 

 

எனது முந்தைய (Snake Vs Mongoose Fight) கட்டுரை:

அருகம் புல் ரகசியங்கள், ஜூலை 12, 2013

 

–subahm–

 

 

பேய்களை விரட்ட வெண் கடுகு!!

Mustard-Seed

வெண் கடுகு (ஐயவி)ம், சாதாரணக் கடுகும்

Research Article No.1745; Date:- 24  March, 2015

Written by London swaminathan

Uploaded at London time  காலை 9-25

(வெண்கடுகு =  ஐயவி = பஜ = சினாபிஸ் ஆல்பா அல்லது பிராஸ்ஸிகா ஆல்பா = ஒயிட் மஸ்டர்ட்)

“ஆ சேது ஹிமாசல பர்யந்தம்” – என்று சம்ஸ்கிருத மொழியில் ஒரு மரபுச் சொற்றொடர் உண்டு. இமயம் முதல் குமரி வரை – என்பது இதன் பொருளாம். சேது என்று குமரி முனைக்கும் ஒரு பெயர் முன்பொரு காலத்தில் இருந்தது. இதை அங்குள்ள பிராமணர்கள் தங்களுடைய பூஜை புனஸ்கார சங்கல்ப மந்திரங்களில் சொல்லி வருகின்றனர். இமயம் முதல் குமரி வரை ஒரே கலாசாரம் நிலவியதை நாம் பல கட்டுரைகளில் கண்டோம். இப்பொழுது எனது ஆராய்ச்சியில் மேலும் ஒரு சான்று கிடைத்துளது. அது என்ன புதிய சான்று?

பேய்களை விரட்ட அதர்வண வேதத்தில் சொல்லப்பட்ட அதே வெண் கடுகுப் (ஐயவி) பொடியைத் தான் சங்க காலத் தமிழர்களும் பயன்படுத்தினர் என்பதை 3000 ஆண்டுக்கும் மேலான பழமை உடைய அதர்வண வேத மந்திரங்களும் 2000 ஆண்டுப் பழமையுடைய சங்கத் தமிழ் இலக்கியங்களும் செப்புகின்றன.

white mustard

வேதத்தில் காணப்படும் கற்புக்கரசி அருந்ததி, புனித இமய மலை, புனித கங்கை நதி, மான்கள் விளையாடும் இமய மலையில் வாழும் முனிவர்கள், ராஜசூய யக்ஞம், பருந்து வடிவ ஹோம குண்டம், ஏழு அடி நடந்து சென்று விருந்தினர்களை வழி அனுப்புதல், ஆறு வகைப் பருவங்கள், நால் வகைப் படைகள், அறம்-பொருள்-இன்பம் (தர்மார்த்த காம), எண்வகைத் திருமணங்கள், நான் மறைகள், கொடிகள், வெண் கொற்றக் குடை, இந்திரன் -வருணன் – சிவன் – விஷ்ணு- வாஹனங்கள், சகுனம், சோதிடம், வெள்ளி கிரகம்-மழை தொடர்பு- ஆகிய நூற்றுக்கணக்கான விஷயங்கள் அப்படியே புறநானூற்றிலும் தொல்காப்பியத்திலும் இருப்பதை ஆதாரங்களுடன் கண்டோம்.

ஆரிய-திராவிடப் பிரிவினை வாதம் பேசியவர்களுக்கு இவை எல்லாம் அடி மேல் அடி கொடுத்து, அந்த வாதங்களைப் ‘புல்டோசர்’ கொண்டு, பொடிப் பொடியாக்கிவிட்டது. இனியும் இப்படி ஆரிய திராவிட இன பேதம் பேசுவோரின் சவப் பெட்டியில் மேலும் ஒரு ஆணி அறைய இதோ புறநானூற்றுச் சான்று:—

white-yellow-mustard-

கடுகுச் செடி

பேய்களை விரட்ட எட்டு அம்ச திட்டம்:-

1.வேப்ப மர இலைகளை வீட்டில் சொருக வேண்டும்

2.வெண் (ஐயவி) கடுகைப் புகைக்க வேண்டும்

3.வெண் கடுகை (ஐயவி) நெய்யுடன் கலந்து அப்ப வேண்டும்

4.யாழ் இசைக்க வேண்டும்

5.ஆம்பல் குழல் ஊதவேண்டும்

6.மணி அடிக்கவேண்டும்

7.காஞ்சி பாட வேண்டும்

8.அகில் புகை போட வேண்டும்

இதோ பாடல்கள்:—

புண் படு குருதி அம்பு ஒடுக்கவும்

நீயே, ஐயவி புகைப்பவும் தாங்காது, ஒய்யென

உறுமுறை மரபின் புறம் நின்று உய்க்கும் (புற.98)

 

தீ கனி இரவமொடு வேம்பு மனைச் சொரீஇ

வாங்கு மருப்பு யாழொடு பல் இயம் கரங்க

கை பயப் பெயர்த்து மை இழுது இழுகி

ஐயவி சிதறி, ஆம்பல் ஊதி,

இசை மணி எறிந்து, காஞ்சி பாடி

நெடு நகர் வரைப்பில் கடி நறை புகை இ (புற.281)

 

வேம்பு சினை ஒடிப்பவும், காஞ்சி பாடவும்

நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும் (புற.296)

 

பொருள்:

 

போரில் காயம்பட்டுக் கிடக்கும் வீரர்களிடம் எமன் வராமல் இருக்கவும், பேய்கள் அண்டாமல் இருக்கவும், குழந்தை பிறந்த வீட்டில் குழந்தைக ளையும் பிள்ளை பெற்ற தாய்மார்களையும் பேய் கள் தாக்காமல் காக்கவும் வெண் கடுகு புகைப்பர் அல்லது நெய்யுடன் கலந்து அப்புவர்.

இதோ குழந்தை பெற்ற தாய்மார்கள் பற்றிய நற்றிணைப் பாடல்கள்:

புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச,

ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈரணிப்

பசு நெய் கூர்த்த மென்மை யாக்கைச்

சீர் கெழு மடந்தை ஈர் இமை பொருந்த (நற்.40)

 

நெய்யொடு இமைக்கும் ஐயவித் திரள் காழ்

விளங்கு நகர் விளங்கக் கிடந்தோட்குறுகி

புதல்வன் ஈன்றெனப் பெயர் பெயர்த்து… (நற்.370)

 

பொருள்: நறுமணம் மிக்க மென்மையான படுக்கையில் செவிலித் தாயுடன் புதல்வன் உறங்க, சிறப்புமிக்க தலைவி வெண் சிறு கடுகு அணிந்த நெய்யாட்டு நிறைவேறிய அணிமைக் காலத்தில் நெய் விளங்கும் மெல்லிய உடம்போடு இரு இமைகளும் பொருந்தத் தூங்கினாள்……………..

நெய்யுடனே ஒளிவீசும் வெண் சிறுகடுகு முதலானவற்றைப் பூசி விளங்கிய நம் இல்லம் சிறப்புறுமாறு ஓய்ந்து படுத்திருந்தாள்…………….

திருமுருகாற்றுப் படை (228), மதுரைக் காஞ்சி ( வரி 287), நெடுநல்வடை (வரி 86) – ஆகிய சங்க நூல்களிலும் ஐயவி (வெண் கடுகு) பற்றிய குறிப்புகள் உண்டு. உரைகாரர்கள் எழுதிய உரைகளில் பேயை விரட்ட ஐயவி புகைக்கப்படுவது பற்றி விளக்கியுள்ளனர்.

Neem-flower

வேப்ப மரம்

அதர்வண வேத மந்திரங்கள்

அதர்வண வேதத்தில் கருச் சிதைவு நிகழாமல் இருக்கவும், கர்ப்பிணிப் பெண்களைப் பாதுகாக்க வும், கண்வ (2-25-3) எனப்படும் தீய சக்திகளை

விரட்டவும் வெண் கடுகு, ப்ரிஸ்னிபரணி மூலிகை கூறப்பட்டுள்ளது:–

கர்ப்பிணிகள் வெண் கடுகு தாயத்து உடலில் அணிய வேண்டும். தீய சக்திகள் உண்டாக்கும் கருச் சிதைவை இது அகற்றும் (அ.வே. 8-6-9)

தீய சக்திகள் இடுப்பு வலியை உண்டாக்கும் அல்லது கருவை விழுங்கிவிடும்.(8-6-23) குழந்தையை கருவிலோ பிறந்த பின்னரோ இறக்கச் செய்யும் தீய சக்திகள் (8-6-18);மலடித் தன்மை, குழந்தை இழப்பு ஆகியவற்றை வெண் கடுகு தடுக்கும் (8-6-26)

மேலும் ஆராய வேண்டும்!
கிட்டத்தட்ட 3000 ஆண்டுகளுக்கு மேலாக வடவிமயம் முதல் தென்குமரி ஈறாக —16 லட்சம் சதுர மைல் பரப்பில் —- கர்ப்பிணிப் பெண்களும் காயமடைந்தோரும் வெண் கடுகைப் பயன்படுத்தியதால் இதன் மருத்துவ குணங்களை விஞ்ஞான முறையில் ஆராய்வது பலன்  தரும். இதில் பாக்டீரியா தடுப்பு, வைரஸ் தடுப்பு சக்திகள் இருக்கும் என்றே நான் நம்புகிறேன்.

வாழ்க அதர்வண வேதம்! வளர்க சங்க இலக்கியம்!!

அதர்வ வேத மூலிகை மர்மம்! ஜங்கிடா மூலிகை!

atharva-veda-8

கட்டுரையை எழுதியவர் :– London swaminathan

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1530; தேதி 30 டிசம்பர், 2014.

நான்கு வேதங்களில் மிகவும் மர்மம் நிறைந்தது அதர்வ வேதம். ஏனெனில் ஆதிகால மருத்துவ, விஞ்ஞான உண்மைகள், மாய மந்திர பில்லி சூனியங்கள் நிறைந்தது இந்த வேதம். துரதிருஷ்டவசமாக இதில் குறிப்பிடப்படும் மூலிகைகள், தாயத்துக்கள் ஆகியன வழக்கத்தில் இருந்து போய்விட்டதால் என்ன என்றே தெரியவில்லை. ரிக்வேதத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் வரும் சோமக் கொடி பற்றியே நமக்கு தெரியவில்லை. 3000 ஆண்டுகளுக்கு முந்தைய ஜில்காமேஷ் (சுமேரிய/ பாபிலோனிய) காவியத்தைப் படித்துப் புரிந்து கொண்டுவிடலாம். அதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வேதங்களை அறிவது கடினம். நீண்ட ஆராய்ச்சியின் மூலம் கண்டு பிடிக்க முடியும்.

ரிக்வேதத்தில் 107 மூலிகை பற்றி வரும் பாடல் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன். ஆனால் அதில் 107 மூலிகைகள் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. நம் வசமுள்ள சரக, சுஸ்ருத சம்ஹிதைகளையும், தமிழ் சித்த மருத்துவ நூல்களையும் வேதங்களையும் வைத்துக்கொண்டு கற்றறிந்த அறிஞர்களுடன் சேர்ந்து ஆராய வேண்டும்.

சோம பானத்தைப் போதையூட்டும் மருந்து என்று வெளிநாட்டுக்காரர்கள் பிதற்றியுள்ளனர். ஆனால் பாண்டியர் தமிழ் கல்வெட்டோ அதை மனோசுத்த மருந்து என்கிறது. நம்மவர்கள் கீதை, குறள், ராமாயணம், மஹாபாரதம் எதையுமே படிக்காமல், சங்க இலக்கிய 30,000 வரிகளைப் படிக்காமல் ஆராய்ச்சிக் கட்டுரை என்ற பெயரில் பல அபத்தங்களை எழுதி வருவது வருந்ததக்கது. முதலில் எல்லாவற்றையும் படிக்க வேண்டும். வெளி நாட்டுக்காரர் சொல்வதைவிட்டுவிட்டு, நம்மவர் அது பற்றி என்ன சொன்னார்கள் என்று முதலில் அறிய வேண்டும்; நம்ப வேண்டும். அப்படிச் செய்தால் புரியாத புதிர்கள் விடுபடும். மர்மங்கள் துலங்கும்!

atharva__veda__samhita_

இதோ ஜங்கிடா மர்மங்கள்:-

ஜங்கிடா என்பது ஒரு மூலிகை என்றும் பல வியாதிகளுக்குக் கைகண்ட மருந்து என்றும் கீத், மக்டொனல் இருவரும் எழுதிய வேதப் பொருளகராதி (வேதிக் இண்டெக்ஸ்) கூறுகிறது. அவர்களே இது என்ன தாவரம் என்று தெரியவில்லை என்று ஒப்புகொண்டுவிட்டு கௌசிக சூத்திரத்தில் வரும் குறிப்பில் இதை காலண்ட் என்பவர் “டெர்மினாலியா அர்ஜுனா” — என்ற தாவரம் என்று சொல்வதாகவும் குறித்துள்ளனர். டெர்மினாலியா அர்ஜுனா என்பது மருத மரம் ஆக்கும்.

மூன்று மருத மரங்களும் மூன்று மாணிக்கங்களும் என்ற எனது கட்டுரையில், ஸ்ரீசைலம் (மல்லிகார்ஜுனம்), திருவிடை மருதூர் (மத்யார்ஜுனம்), திருப்புடைமருதூர் (புடார்ஜுனம்) ஆகிய தலங்களில் உள்ள மருத மரங்கள் பற்றி ஏற்கனவே எழுதிவிட்டேன்.

ஆனால் தேவி சந்த் என்பவர் எழுதிய அதர்வண வேத புத்தகத்தில் ஒரு இடத்தில் ஜங்கிடா என்பது கடவுளைக் குறிக்கும் என்று எழுதிவிட்டு பிற இடங்களில் மூலிகை என்று மொழி பெயர்க்கிறார். சாயணர் என்ற  பெரிய மகான் தான் 700 வருடங்களுக்கு முன் துணிந்து வேதங்களுக்குப் பொருள் எழுதினார். அவர் இந்த ஜங்கிடா என்பது காசி மாநகரத்தில் உள்ள ஒரு மரம் என்கிறார்.

Terminalia_arjuna-1

மருத மரம் (விக்கிபீடியா படம்)

இது இருதய நோய்கள், நரம்புத் தளர்ச்சி போன்ற பல நோய்களைக் குணப்படுத்தும் என்று தெரிகிறது. மருத மரம் குறித்து வெளியான பல மருத்துவ நிபுணர்களின் கட்டுரைகள் இது இருதய மற்றும் ரத்த நாளம் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தும் என்று எழுதியுள்ளனர். ஆயினும் அவர்களுடைய ஆய்வுகள் முடிவானவை அல்ல. எதிரும் புதிருமாக முடிவுகள் வந்தால் மருத்துவ உலகம் அதை ஏற்காது. வேறு சிலர் ஜங்கிடா என்பதை வேறு சில மூலிகைகளுடன் தொடர்புபடுத்திக் கட்டுரை எழுதியுள்ளனர்.

வேதங்களில் குறிப்பிடப்படும் நூற்றுக்கணக்கான மூலிகைகள், நோய்களின் பெயர்கள் எல்லாம் ஊகத்தின் பெயரிலேயே எழுதப்பட்டுள்ளதால் யார் சொல்வதையும் உண்மை என்றோ தவறு என்றோ சொல்ல முடியவில்லை.

இதில் வேடிக்கை என்னவென்றால் எதையுமே கேள்விக்குறியாக தொக்கி நிற்கும் வகையில் எழுதிவிட்டு சோம பானம் என்பது மட்டும் என்ன என்று “கண்டுபிடித்துவிட்டதாக” சில வெளி நாட்டினரும் அதைக் கிளிப்பிள்ளை போலத் திருப்பிச் சொல்லும் நம்மூர் பகுத்தறிவுகளும் நகைப்புக்குரியவர்கள் என்பது வேதங்களைப் படித்தோர் அறிவர். இனம் இனத்தோடு சேரும். மது, மாது, மாமிசம், போதைப் பொருளில் மூழ்கிக் கிடக்கும் வெளிநாட்டினருக்கு நம் கலாசாரம் எப்படிப் புரியும்? மாக்ஸ்முல்லர் போன்ற பலர் இந்தியாவுக்கு வரமலேயே நம் வேதங்கள் பற்றி எழுதினர்!! நியுயார்க்கிற்குப் போகாமலேயே மேலூர் கொட்டாம்பட்டி முனிசாமி “உலகிலேயே உயரமான கட்டிடங்கள்” என்று புத்தகம் வெளியிட்டால் அதை தமாஷ் இலக்கிய வகையில் சேர்க்கலாம் அல்லவா!!

terminalia arjuna

மருத மரம்

மேலும் இந்தியா வந்த வெளிநாட்டினருக்கும் உதவியோர் அரைகுறை ஆங்கிலம், அரைகுறை வேத சம்ஸ்கிருதம் அறிந்தவர்களே. ஆகையால் அவர்கள் மொழிபெயர்ப்பும் அரைகுறையே. ரமணர், ராம கிருஷ்ணர், காஞ்சி மஹா சுவாமிகள், சிருங்கேரிப் பெரியவர் போன்ற உத்தமோத்தமர்கள் என்ன சொல்கிறார்களோ அதை நம்பினால் போதும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் வேதங்களை உள்ளது உள்ளபடி காப்பது நமது கடமை. மனித இனத்தின் முதல் புத்தகம் அது. சுமேரிய எகிப்திய இலக்கியங்களை எல்லாம் படித்தோர்கூட வேதங்களை ஊகிக்கத்தான் முடிகிறது, பொருள் சொல்ல முடியவில்லை. ஆயினும் வேதங்களால் பலன் இல்லாமல் இல்லை.

டெலிவிஷனும். மொபைல் போனும் எப்படிச் செயல்படுகிறது என்பது நமக்குத் தெரியாது ஆயினும் அவைகளைப் பயன்படுத்திப் பயன் அடைகிறோம். இது போல வேதங்களையும் நம்பிக்கையுடன் ஓதினால் பலன் உண்டு.

Flowers_with_Sykes's_warbler_I_IMG_1880

மருத மரம்

காஞ்சி மஹா ஸ்வாமிகள் சொல்கிறார்: கண் தெரியாதவன் ஒருவன் கையில் விளக்கைக் கொண்டு சென்றான். எல்லோரும் கேட்டார்கள், உனக்கோ கண் தெரியாது, எதற்கப்பா விளக்கு? என்று. அவன் சொன்னான், “உண்மைதான் எனக்குக் கண் தெரியாது. இருட்டில் நீங்கள் என்மீது விழுந்து விடக் கூடாதல்லவா? அதற்காகத்தான். இது போலவே நாமும் அர்த்தம் தெரியாதபோதும் வேதம் என்னும் ஒளி விளக்கை ஏந்திச் செல்வோம். அதன் பொருள் தெரிந்த மகான்கள் யுகந்தோறும் அவதரித்து நம்மை வழிகாட்டிச் செல்வர்” (பெரியவர் சொன்ன சொற்கள் எனக்கு அப்படியே ஞாபகம் இல்லை. நினைவில் இருப்பதை வைத்து எழுதியுள்ளேன்)

நம்பினார் கெடுவதில்லை, இது நான்கு மறை தீர்ப்பு என்பது பாரதியின் மந்திர முழக்கம். அதையே நாமும் முழங்குவோம்.

contact swami_48@yahoo.com

அதர்வண வேதத்தில் ஒரு அற்புதப் பாடல்!

bharatmata on lion

This article is posted already in English:The Oldest and the longest Patriotic song!

உலகின் மிக பழமையான நூல் வேதங்கள். நான்கு வேதங்களில்முதல் வேதமான ருக் வேதத்தில் துதிப் பாடல்களும், யஜூர் வேதத்தில் யாகம் தொடர்பான செய்முறைகளும், சாம வேதத்தில் இசைப் பாடல்களும், அதர்வண வேதத்தில் பயனுள்ள துதிப் பாடல்களும் இருக்கின்றன. இவைகளில் மிகவும் அற்புதமான பாடல் ‘பூமி சூக்தம்’ என்னும் தேசபக்திப் பாடலாகும். இந்தியாவின் இரண்டாவது தேசிய கீதம் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா எழுதிய ‘வந்தேமதரம்’ என்னும் பாடல் ஆகும். முஸ்லீம்கள் ‘வந்தேமாதரம்’ சொல்ல மறுத்ததால் ஆங்கிலேயரைப் புகழ்ந்து எழுதிய ‘ஜன கண மண’ தேசிய கீதம் ஆகியது. ஆயினும் ‘வந்தேமாதரம்’ பாடலில் உள்ள அழகு வேறு எதிலும் வராது. இதை பாரதி தனது தெள்ளு தமிழில் இரண்டு வகையாக மொழிபெயர்த்தார். பங்கிம் சந்திரருக்கும் பாரதிக்கும் ஊற்றுணர்ச்சி நல்கிய பாடல் அதர்வ வேதத்தில் உள்ள ‘பூமி சூக்தம்’ என்பதை இம்மூன்றையும் கற்றவர் எளிதில் உணர்வர்.

“இனிய நீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை” என்றும் பின்னர் “நளிர்மணி நீரும் நயம்படு கனிகளும்” என்றும் இரண்டு பாடல்களில் பாரதி ‘வந்தேமாதர’த்தை மொழி பெயர்த்தார்.

அதர்வ வேததின் 12ஆவது காண்டத்தில் உள்ள ‘பூமி சூக்தம்’ பூமியைக் குறிக்கும் இடங்களில் “ப்ருத்வீ” என்ற சம்ஸ்கிருத சொல்லைப் பயன்படுத்துகிறது. இது பூமியைக் குறிக்கும் சொல் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் சங்கத் தமிழ் பாடல்களில் உலகம் என்று சொல்லும் போதெல்லாம் அது அவர்கள் அறிந்த நிலப்பரப்பைக் குறிக்க வந்ததேயன்றி இன்று நாம் அறிந்த உலகப் பகுதி முழுவதையும் குறிக்க வந்தது இல்லை என்பதை நாம் அறிவோம். அதே போல பூமி என்று முனிவர்கள் ஆடிப் பாடி ஆனந்தக் கூத்து ஆடியதெல்லாம் பாரத பூமியைக் குறித்தே என்பதில் ஐயமில்லை.

முதலில் பூமி சூக்தத்தை மொழிபெயர்த்தோர் பூமி (எர்த்) என்றே ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தனர். ஆனால் நவீன கால மொழிபெயர்ப்பில் அதை தாய் நாடு(மதர்லாண்ட்) என்றே மொழி பெயத்துள்ளனர். நானும் அதுவே சரியென்று நினைக்கிறேன். இந்த அற்புதமான துதியில் 63 பாடல்கள் இருக்கின்றன. உலகிலேயே நீண்ட தேசப்பக்திப் பாடல் இதுதான் என்பது என் கருத்து.

பூமியை தாயே என்று அழைப்பதோடு அதிலுள்ள எல்லா இயற்கை வளங்களையும் முனிவர் பாடுகிறார். சத்தியத்தினாலும் ஒழுக்கத்தினாலும் இந்த உலகம் நிலை பெற்றுள்ளது என்றும் பாடுகிறார். மிக உயர்ந்த கருத்துக்களை இதில் காணமுடிகிறது இந்திரனா, விருத்திரனா என்ற பிரச்சினையில் உலகம் இந்திரனையே தேர்ந்தெடுத்தது என்று சொல்லி நன்மைக்கும் தீமைக்கும் நடந்த போராட்டம் பற்றியும் பாடல் பேசுகிறது. வேத கால மக்கள் மாடு மேய்க்கும் நாடோடிகள் அல்ல , உயர்ந்த சிந்தனை படைத்த நவ நாகரீக மக்கள் என்பதை இக்கவிதை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

akhand_bharat 2

வேத காலத்தை யாராலும் உறுதியாகக் கணிக்க முடியவில்லை. இதை கி.மு.1200க்குக் கீழாக மட்டும் கொண்டு வரமுடியாது என்று மாக்ஸ்முல்லர் காட்டினார். திலகர், ஜாகோபி போன்ற அறிஞர்கள் கி.மு 6000 பழமையானது என்றும் எழுதினர். அதர்வண வேதம் கடைசி கால கட்டத்தில் எழுதப்பட்டதால் கி.மு1000 என்று கொள்வாரும் உண்டு.

இற்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னால் கிரேக்கர்கள் எழுதக்கூடத் துவங்கவில்லை. தமிழர்களோ இதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர்தான் முதல் நூலான தொல்காப்பியத்தை எழுதினர். மோசஸ் அப்போதுதான் பத்து கட்டளகளை மட்டும் பேசியிருந்தார். அத்தகைய தொல் பழங்காலத்தில் அதர்வ வேத முனிவர்கள் நாகரீகத்தின் உச்ச கட்டத்துக்குப் போய் பூமியைப் பற்றிப் பாடியதைப் பார்க்கையில் வியப்பே மேலிடுகிறது. மனித குலத்துக்கு நன்மை வேண்டியதோடு நில்லாமல் பிராணிகளுக்கும் நலம் வேண்டிப் பாடினர் என்றால் அவர்களுடைய அறிவு முதிர்ச்சியைப் புரிந்துகொள்ளலாம்.

இந்தப் பாடலைப் படிக்கையில் இந்தியாவின் தேசீய கீதத்தை மாற்றி அதர்வ வேதப் பாடலின் சுருக்கத்தை வைக்கவேண்டும் என்ற எண்ணமே எல்லோருக்கும் மேலிடும்.

இதோ சில கீற்றுகளை மட்டும் படியுங்கள். முழுப் பாடலையும் மொழி பெயர்த்தால் அது மிக மிக நீண்ட கட்டுரையாக மாறிவிடும்:

சத்யம் (உண்மை), தானம், தவம், ஒழுங்கு, யாகம் ஆகியனதான் இந்த பூமியைத் தாங்கி நிற்கிறது.

குணப்படுத்தும் மூலிகைகள் நிறைந்தது இந்த நாடு (பூமி). மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்தது இது. ஆறுகளும், கடலும், தானியப் பயிர்களும் காணப்படும் இந்த நாடு நம்மை வளப்படுத்தட்டும்.

பிராணிகள் பெருகிய இந்த புவி, நமக்கு கால்நடைகளையும் பயிர்களையும் வழங்கட்டும். முன்னோர்கள் உழைத்த இந்த பூமி, அசுரர்களை தேவர்கள் வென்ற இந்த பூமி, பறவைகளும் குதிரை முதலான பிராணிகளும் வாழும் இந்த பூமி நமக்கு ஒளி ஊட்டட்டும்.

B_Id_366060_Air_force_show

இந்த பூமியில் புனித தீ உறைகிறது. நீருக்கடியில் அமிழ்ந்திருந்த இந்தப் புவியை முனிவர்கள் தம் ஆற்றலால் கொணர்ந்தனர். சத்தியத்தினால் கவரப்பட்டுள்ள இந்த பூமி நமக்கு ஒளியையும், பலத்தையும் அளிக்கட்டும்.

கண்களை இமைக்காத தேவர்கள் இதைக் காக்கின்றனர். அவர்கள் நமக்கு இனிமையை பொழியட்டும்.

நீர்வளம் சுரக்கும் இந்தப் புவி, பால் வளம் சுரக்கட்டும்.

அஸ்வினி தேவர்கள் அளந்த பூமி, விஷ்ணு (மூவடியால்) அளந்த பூமி,இந்திரன் தனது எதிரிகளை மாய்த்த பூமி– ஒரு தாய் தனது குழந்தைக்குப் பாலைச் சுரப்பது போல எங்களுக்கு பால் வளம் சுரக்கட்டும்.

(பூமியைத் தாய் என்றும், ‘பால் நினைந்தூட்டும் கருணைக் கடல் என்றும் முதல் முதலில் எழுதியோர் வேதகால முனிவர்கள் தான். பின்னர் இதை உலகம் முழுதும் சொல்லத் துவங்கியது. தாய்நாடு—motherland— போன்ற சொற்கள் ஆங்கிலத்தில் உருவாயின. Gaia கையா போன்ற சொற்கள் கிரேக்க மொழியில் தோன்றின).

ஓ, பூமியே, உனது மலைகளும், காடுகளும், பனி மூடிய சிகரங்களும் என்றும் இனிமை தரட்டும். கருப்பு, பழுப்பு, சிவப்பு போன்ற பல வண்ணக் கலவையான இந்த நாடு (பூமி) என்னை யாராலும் வெல்ல முடியாதவனாக ஆக்கட்டும்.என்னைத் தீய எண்ணத்துடன் தீண்ட முடியாதவன் ஆக்கட்டும். எங்களுக்குத் தீங்கு செய்ய எண்ணுவோரை, வெறுப்போரைத் தோற்கடி.

எல்லா பிராணிகளும் எங்களுக்கு நலம் பயக்கட்டும். தேனினும் இனிய சொற்களை எங்களுக்கு வழங்குவாயாக. தாவரங்களுக்கும் தாயானவளே. எங்கள் பாதங்கள் படும்போதெல்லாம் கருணை காட்டு.

நீ மிகப் பரந்தவள், பெரியவள்,வேகம் மிக்கவள்; இந்திரனால் பாதுகாக்கப்பட்டவள்; எங்களைத் தங்கம் போல ஜொலிக்கச் செய்; எங்களை யாரும் வெறுக்கவேண்டாம்.

13YT_TRICOLOUR_2_1549185g

தீயைப் போல அறிவு ஒளிரட்டும்; கூர்மையாகட்டும்.

யாகங்கள் நிறைந்த இந்த நிலம், எங்களுக்கு நீண்ட ஆயுளைத் தரட்டும்.

இந்தமண்ணின் வாசனை தாவரங்களிலும், தண்ணீரிலும் உளது. அப்சரஸ், கந்தர்வர்கள் ஆகியோரும் இதைப் பகிந்துகொள்வர். அந்த வாசனையால் என்னையும் சுகப்படுத்து.

உன்னை எங்கு தோண்டினாலும் அவை உடனே வளரட்டும் உன் இதயத்தை நாங்கள் சேதப்படுத்தமாட்டோம்.

(அந்தக் காலத்திலேயே புறச் சூழல் பாதுகாப்பு எண்ணம்– environmental awareness–தோன்றிய நாடு இது)

பூமித் தாயே! ஆறு பருவங்களும் உன்னை அலங்கரிக்கட்டும். எங்கள் மீது வற்றாது வளத்தைப் பொழிக.

புனித ரிஷிகள் வளர்த்த, வாழ்த்திய நாடு (பூமி) இது; சப்தரிஷிக்களும் யாகம் செய்த நாடு இது. நாங்கள் வேண்டும் செல்வங்கள் எல்லாவற்றையும் அருளுக.

ஆண்கள் ஆடிப் பாடிக் கூச்சல் போடும் இந்தப் பூமியில் போர் முரசம் ஒலிக்கையில் எதிரிகள் இல்லாத இடமாக ஆகட்டும்.

நகரங்களும், வளம் கொழிக்கும் வயல்களும், உழைக்கும் மனிதர்களும் உலவும் பூமி இது; எல்லா வளங்களும் உந்தன் வயிற்றில் உளது. எல்லா பக்கங்களிலும் எங்கள் மீது கருணையைப் பொழிக.

நான் வெற்றி உடையவன்; உயர்ந்தவன்.எனக்கு எங்கும் வெற்றி, எதிலும் வெற்றி. எல்லா பக்கங்களிலும் வெற்றி. நான் பேசுவதெல்லாம் இனிமை. நான் பார்ப்பதெல்லாம் எனக்கு அனுகூலமாகின்றன. என்னை வெறுப்பவர்களை நான் வெல்வேன்.

இனிமை, கருணை, சாந்தி, பால், தேன் நிறைந்த பூமித் தாயே! ஆசிகளையும் பாலையும் பொழிவாயாக.

****

பாரதி பாடல்களில் எங்கெங்கெலாம் பாரத பூமி புகழப் படுகிறதோ அங்கெங்கெலாம் அதர்வ வேத செல்வாக்கைக் காணமுடிகிறது. சுருங்கச் சொன்னால் பாரதியே இந்த பூமி சூக்ததைத் தான் பல பாடல்களாக மொழி பெயர்த்தாரோ என்று நான் வியக்கிறேன். எடுத்த காரியம் யாவினும் வெற்றி என்ற அவரது வரிகள் அதர்வ வேதத்தில் உள்ளது!

poets of india scan 3

வேதங்களைப் படிப்போருக்கு ஆக்கபூர்வமான சிந்தனை வளரும். ஆயிரம் ‘டேல் கார்னிஜி, அந்தோனி ராபின்ஸ்’ புத்தகங்கள் படித்த பலன்கள் கிடைக்கும். மனச் சோர்வு என்பதே வாழ்வில் வராது. மன நோய்கள் அகலும். ராமன் 14 ஆண்டுகள் வனவாசம் செய்தபோதும், பாண்டவர்கள் 13 ஆண்டுகள் வனவாசம் செய்தபோதும் ஊற்றுணர்ச்சி கொடுத்து வெற்றியைத் தேடித் தந்தது வேதங்களே; தமயந்திக்கும் சாவித்திரிக்கும் சீதைக்கும் திரவுபதிக்கும் தைரியத்தையும் வெற்றியையும் தேடித் தந்தது வேதங்களே. அவைகளைப் பாதுகாத்துப் பயன்பெறுவது நமது கடமை.

****

இந்த பிளாக்—கில் 600–க்கும் மேலான எனது கட்டுரைகள் உள்ளன. வேத காலம், சிந்து சமவெளி, இந்துமதம் பற்றியும் தமிழர்களின் சிறப்புகள் குறித்தும் கட்டுரைகளை எழுதியுள்ளேன். எனது சகோதரர் நாகராஜன் எழுதிய பல கட்டுரைகளும் இருக்கின்றன.படித்து மகிழ்க. நல்லோர் பலரையும் அறிமுகப் படுத்துக.

Contact swami_48@yahoo.com