சிவனின் உடல் எப்படி இருக்கிறது? (Post No.9105)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9105

Date uploaded in London – –5 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சிவனின் உடல் எப்படி இருக்கிறது?

ச.நாகராஜன்

கீத்ருக்ஷா கிரிஷதனுர்ஜயே ச தாதுர

   விஷ்ணௌ கா விபுதஜராதமஸ்த்ருதீயா |

மத்யார்னே சதி  கதமாஸ்மகோஸ்தி தேஷ:

  சோமாஜ்யம் சகலகலா ஜஸாதசாஹா: ||

சிவனின் உடல் எப்படி இருக்கிறது? (சோமா : பார்வதியுடன் இணைந்து)

வெற்றி அடைதல் என்ற வினைச்சொல்லுக்கு மூலம் எது (ஜி ; வெல்வதற்கு)

விஷ்ணுவின் மேல் அமர்ந்திருப்பவர் யார்? (அம் : லக்ஷ்மி)

புத்திசாலியான மூத்தோருக்கு துணை எது? (சகலகலா : அனைத்து கலைகளும்)

ஜலத்தின் மத்தியில் உனது தேசம் எப்படி இருக்கும்? (ஜலதசாஹா)

How is the body of Lord Siva? (Soma: United with Parvati)

What is the verbal root of  ‘to conquer’? (ji : to conquer)

Who is seated on Lord Vishnu? (am : Lakshmi)

What is the third to the old age of wise and darkness? (sakalakala : all arts)

In the midst of waters how can your country be? (jalatasaha)

                                                             (Translation by A.A.R)

இது ஒரு புதிர் சுபாஷித ஸ்லோகம். இந்த்ரவ்ரஜா சந்தத்தில் அமைந்துள்ளது இது.

*

கிம்ஸ்விச் சித்ரம் பவேத் தோஷ: கிம்ஸ்வித் ஹி வினிபாதநம் |

குதோ மம ஸ்த்ரவேத் தோஷ இதி நித்யம் விசிந்தயேத் ||

என்னிடம் உள்ள பலஹீனமான விஷயம் ஒரு குறையாக மாறுமா?

அது தொடர்ந்த விளைவுகளை ஏற்படுத்தும் குறையாக ஆகி விடுமா?

எப்படி எனது குறைகள் நீங்கும்?

இப்படியாக ஒருவன் தினமும் சிந்திக்க வேண்டும்.

Can a weak point in me turn out to be a defect?

May it lead to a defect of serious consequences? (to my downfall)

How may my defects disappear?

Thus should one ponder carefully, every day.

                                                            (Translation by A.A.R)

*

க்ருத்யாக்ருத்யவிபாகஸ்ய ஜாதார: ஸ்வயமுத்தமா: |

உபதேஷே புனர்மத்யா நோபதேஷே நராதமா: ||

உத்தமமான மனிதர்கள் தீயதிலிருந்து நல்லனவற்றைத் தாமே பிரித்து அறிய வல்லவர்கள்.

மத்யமான மனிதர்கள் ஒருவர் அவருக்கு அறிவுறுத்தும் போது அதை அறிவர்;

ஆனால் அதமமான மனிதர்களோ அப்படி ஒரு அறிவுறுத்தினாலும் கூட அதை அறிந்து கொள்ள மாட்டார்கள்!

The highest men can discern by themselves the right from wrong;

The middle men after they had been advised;

The worst ones even not after they had been advised.

*

VIRINCHIPURAM  SIVA LINGA – PICTURE BY LALGUDI VEDA 

–SUBHAM–

TAGS – சிவன் , உடல், 

ஆரோக்கியமான மனம்! ஆரோக்கியமான உடல்!!–1(Post No.8289)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8289

Date uploaded in London – – –5 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹெல்த்கேர் மே 2020 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

புத்தக அறிமுகம்

ஆரோக்கியமான மனம்! ஆரோக்கியமான உடல்!! – 1

(Healthy Mind, Healthy Body)

வேதாந்த கேசரி பத்திரிகை வெளியீடு, ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் சென்னை – 4

ச.நாகராஜன்

ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்திலிருந்து மாதந்தோறும் வெளியாகும் பிரபலமான ஆங்கில ஆன்மீகப் பத்திரிகை வேதாந்த கேசரியில் வெளியாகியுள்ள கட்டுரைகளின் தொகுதி இது. 231 பக்கங்கள் கொண்ட இந்த நூலில் மொத்தம் 19 கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் தேர்ந்த நிபுணர்களாலும் ஸ்வாமிஜிக்களாலும் எழுதப்பட்டுள்ளதால் ஆரோக்கியமான உடல் மற்றும் ஆரோக்கியமான மனம் பெறுவதற்கான அறிவுரைகளைப் பெற முடிகிறது.

ஹோலிஸ்டிக் ஹெல்த்

Holistic Health என்ற கட்டுரை ஸ்வாமி கௌதமானந்தா அவர்களால் எழுதப்பட்டுள்ளது.

அன்னை சாரதா தேவி ஜயராம்வாடியில் உள்ள சிம்ஹவாஹினி கோவிலில் உள்ள களிமண் மூலம் பல வியாதிகளைக் குணப்படுத்துவதில் நம்பிக்கை கொண்டிருந்தார். ஏன் பாம்பு கடித்த விஷம் கூட பூமியின் மண்ணால் போக்கப்பட்டிருக்கும் பல கேஸ்களை நாம் காண்கிறோம். யோகா தெராபி என்பது  ஆஸ்த்மா, அதிக இரத்த அழுத்தம், வயிற்றுப் புண், போன்ற வியாதிகளை மூலிகைகள் மூலமும் பிராணாயாமம் போன்ற யோக முறைகளின் மூலமும் தீர்க்கப்படும் ஒரு சிகிச்சை முறையாகும்.

மியூசிக் தெராபி என்பது இசையின் மூலம் சிகிச்சை பெறும் ஒரு முறையாகும்.

பெங்களூரில் உள்ள NIMHANS-ஐச் சேர்ந்த டாக்டர் பி.என். மஞ்சுளா (Dr B.N.Manjula) மற்றும் பல மூளை இயல் நிபுணர்கள் இசையானது பல மூளை சம்பந்தப்பட்ட வியாதிகளைக் குணப்படுத்துகிறது என்பதை உறுதிப்படுத்துகின்றனர்.

ஸ்வாமி விவேகானந்தா ஆன்மீக அருளுரைகள், வியாதிகளைக் குணப்படுத்தும் என நம்பினார்.  “நன்கு உறுதியாக மறுக்கமுடியும் எனில் விஷமுள்ள பாம்பின் விஷம் கூட உங்களை ஒன்றும் செய்ய முடியாது” என அவர் கூறினார்.

பாபுராம், யோகேன் என்ற பக்தர்கள் வியாதியால் அவஸ்தைப் பட்ட போது ஸ்வாமிஜி, ” ‘நான் ஆத்மா; வியாதியால் நான் எப்படி பாதிக்கப்பட முடியும்’ என்று தொடர்ந்து ஒரு மணி நேரம் தியானித்தால் வியாதி மறைந்தே போகும் என்று பாபுராம் மற்றும் யோகேனிடம் கூறுங்கள்” என்றார்.

ஆகவே வியாதி என்பதைப் போக்க என்னென்ன வழிமுறைகள் உண்டோ அவை அனைத்தையும் கையாள முடிவதைப் பார்க்கிறோம். வாழ்க்கையின் அடிப்படை மதிப்புகள் பற்றிய அறிவும் சேரும் போது சிகிச்சை பூரண சிகிச்சையாக மிளிரும்.

ஹெல்த் அண்ட் ஸ்பிரிட்சுவல் லைஃப்

Health and Spritual Life என்ற கட்டுரை ஸ்வாமி பஜனானந்தா அவர்களால் எழுதப்பட்டுள்ளது.

அன்னம் என்பது பிரம்மம்.

தைத்திரீய உபநிஷத் நான்கு விரதங்களை அனைத்து மக்களுக்கும் உபதேசிக்கிறது.

  1. உணவை வீணாக்காதே (உணவைத் தவறான முறையில் சமைப்பது அல்லது அதை வீணாக்குவது)
  2. உணவை மறுக்காதே
  3. உணவின்றி வீட்டிற்கு வரும் அதிதியைத் திருப்பி அனுப்பாதே
  4. உணவு அதிகமாக சமைக்கப்பட வேண்டும். (அதாவது உணவு உற்பத்தி கூட வேண்டும்)

உணவிற்கு அடுத்தபடி உறக்கமும் உடல் பயிற்சியும் தேவை.

மனச்சோர்வுக்கும் இதர வியாதிகளுக்கும் நடைப்பயிற்சி உள்ளிட்ட உடல் பயிற்சிகள் தீர்வாக அமைகின்றன.

இத்துடன் பயோரிதம் எனப்படும் உடல் லயத்தையும் மனதில் கொள்ள வேண்டும்.

பயோ ரிதம், ல்யூனார் ரிதம், ஆன்யுவல் ரிதம் (Bio Rhythm, Lunar Rhythm, Annual Rhythm) என லயம் மூவகைப் படுகிறது.

சில மனிதர்கள் 24 மணி அல்லது 25 மணி அல்லது 36 மணி அல்லது 48 மணி நேர சுழற்சியைக் (Cycle) கொண்டிருக்கின்றனர். இது பயோரிதம் ஆகும்.

சிலர் சந்திரனின் அடிப்படையில் 28 நாள் சுழற்சிக்கு உட்படுகின்றனர். சிலரோ சூரிய சுழற்சிக்குத் தக ஒவ்வொரு பருவகாலத்திற்குத் தக்கபடி மாற்றங்களை அடைகின்றனர். ஆகவே நீங்கள் எந்த அடிப்படையில் இயங்குகிறீர்கள் என்பது முக்கியமானது.

இவற்றுடன் மனத் தடைகளைப் போக்க இறை பிரார்த்தனை இன்றியமையாதது.

ஆகவே இவை அனைத்தையும் மனதில் கொண்டு வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

ட்ரஸ்டிங் இன்னர் விஸ்டம்

அடுத்து Trusting Inner Wisdom என்ற கட்டுரையை அந்தோணி ஏ.அல்லினா (Anthony A. Allina)  எழுதியுள்ளார்.

ஆத்ம ஈடுபாட்டுடன் இல்லாத வேலை அர்த்தமற்றது என்று கூறும் அல்லினா 1978இல் தனது புதிய க்ளினிக்கைத் தொடங்கிய போது ஆடோஜெனிக் ட்ரெயினிங் (Autogenic Training) என்ற புதிய தியான முறையைக் கற்றார். பல வியாதியஸ்தர்களுக்கு அவர் இந்த தியான முறையைக் கற்பித்த போது அதிசயிக்கத் தக்க விதத்தில் அவர்கள் மன அமைதியை அடைந்தனர்.

மருந்து என்பது மேலை நாட்டு மருந்தை மட்டும் கொடுப்பதல்ல; உடலின் உள்ளிருக்கும் மனதிற்கும் அமைதியைத் தருவதே என்பதை உணர்ந்தேன் என்கிறார் அல்லினா.

இப்படி உடல் மற்றும் மன ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட 16 கட்டுரைகள் உள்ளன.

அவற்றை அடுத்துப் பார்ப்போம்.

tags– ஆரோக்கியமான, மனம், உடல்

தொடரும்

கண்களுக்கு சூரியன், மனதுக்கு சந்திரன், நாக்குக்கு வருணன் கடவுள் (Post No. 2905)

body parts

Compiled by London swaminathan

 

Date: 18  June 2016

 

Post No. 2905

 

Time uploaded in London :– 13-26

 

( Pictures are taken by London swaminathan)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

 

 

எந்த உடல் உறுப்புக்கு யார் தேவதை என்று சம்ஸ்கிருதத்தில் ஒரு சொல் வழக்கு உள்ளது.

 

காது – திசை

தோள் (த்வக்) – காற்று

கண் – சூரியன்

நாக்கு –வருணன்

க்ராணம்(முகர்தல்/மூக்கு) – அஸ்வினி

வாக்கு – அக்னி (வன்னி)

கை (ஹஸ்த) – இந்திரன்

கால்( பாத)  – உபேந்திரன்

பாயு: (குதம்) – மித்ரன்

ஜனன உறுப்பு – பிரஜாபதி

மனது – சந்திரன்

 

இந்திரிய அதிஷ்டான தேவதைகள்:-

ஸ்ரோத்ரஸ்ய திக், த்வசோ வாத:, நேத்ரஸ்ய அர்க:, ரசனாயா வருண:, க்ராணஸ்ய அச்வினௌ, வாகிந்த்ரியஸ்ய வன்னி:

 

elephant

Xxx

 

உறவினர்கள் (ஆத்ம பந்துக்கள்) யார், யார்?

 

ஆத்மமாது: ஸ்வசு: புத்ரா ஆத்மபிது: ஸ்வசு: சுதா:

ஆத்ம மாதுல புத்ராஸ் ச விக்ஞேயா ஹி ஆத்மபாந்தவா:

–சப்தகல்பத்ருமம்

சொந்த தாயார், தந்தை, மாமன், அத்தை, சித்தி (சின்னம்மா), பெரியம்மா, அம்மான் பிள்ளைகள் ஆகியோர் நெருங்கிய உறவினர்கள் ஆவர்.

 

பகவத் கீதையிலும் உறவினர்கள் பட்டியல் இருக்கிறது:-

 

ஆசார்யா: பிதர: புத்ராஸ் ததைவ ச பிதாமஹா:

மாதுலா: ச்வசுரா: பௌத்ரா: ஸ்யாலா: (1-34)

(ஆசார்யா: – ஆசிரியர்கள்), பிதர: – தகப்பன்மார்கள், புத்ரா: – பிள்ளைகள், பிதாமஹா: – பாட்டன்மார்கள், பௌத்ரா: – பேரன்மார்கள், மாதுலா: – அம்மான்மார்கள், ஸ்வசுரா: – மாமனார்கள், ஸ்யாலா: – மைத்துனர்கள், ஸம்பந்தின: – சமபந்திமார்கள்

 

(இவ்வளவு உறவினர்களையும் கொல்ல விரும்பவில்லை; அதனால் போர் வேண்டாம் என்கிறான் அர்ஜுனன்)

என் குடும்பம்

Xxx

ஆத்ம யாஜீ யார்?

சர்வ பூதேசு ச ஆத்மானம் சர்வபூதானி ச ஆத்மனி

சமம் பஸ்யன் ஆத்ம யாஜி ஸ்வராஜ்யம் அதிகச்சதி (மனு 12-91)

 

எல்லா உயிர்களிடத்திலும் தன்னையும், தன்னிடத்தில் எல்லா உயிர்களையும் சமமாகப் பார்ப்பவனே தன்னை அறிந்தவன். அவன் முக்தி பெறுகிறான்

ஆத்மயாஜி= தன்னையே தியாகம் செய்பவன், வேள்வி செய்பவன்

 

கீதையிலும்

இதே போன்ற ஸ்லோகங்கள் பகவத் கீதையிலும் இருப்பது ஒப்பிடற்பாலது:-

சர்வபூதஸ்தமாத்மானம் சர்வபூதானி ச ஆத்மனி

ஈக்ஷதே யோக யுக்தாத்மா சர்வத்ர சமத்ர்சன:

ப.கீதை 6-29

பொருள்:–

யோகத்தில் ஈடுபட்டவன், எங்கும் சம நோக்குடன், எல்லா உயிர்களிடத்திலும் ஆத்மாவையும், ஆத்மாவில் எல்லா உயிர்களும் உறைவதாகவும் காண்கிறான்

இதே கருத்து அடுத்த இரண்டு ஸ்லோகன்களிலும் வலியுறுத்தப்படுகிறது.

–சுபம்–