கலைஞரின் கை எப்போதும் சுத்தமானது-மநு சர்ட்டிபிகேட் (Post 5682)

 

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 20 November 2018

GMT Time uploaded in London –11-12 AM
Post No. 5682

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

மநு நீதி நூல் – பகுதி 33

மநு தர்ம சாஸ்திரத்தின் ஐந்தாவது அத்தியாயத்தில் 110 ஸ்லோகம் வரை கண்டோம். இன்று இறுதி வரை பார்த்து ஐந்தாவது அத்தியாயத்தை முடிப்போம்.

1.இந்தப் பகுதி ரத்தின, தங்கம், வெள்ளி முதலிய பண்டங்களையும், பாண்டங்களையும் சுத்தம் செய்வது எப்படி என்று துவங்குகிறது. மநு, மனிதர்களின் சுத்தம் பற்றி மட்டுமன்றி ஏனையவற்றையும் விவாதிப்பது அக்கால நமபிக்கைகளைக் காட்டுகிறது.

கலைஞரின் கையும், பெண்ணின் வாயும் எப்போதும் சுத்தமானது-மநு சர்ட்டிபிகேட்

முதலில் புல்லட் பாயிண்டுகளில் (bullet points)

முக்கிய விஷயங்களை அலசுவேன்.

2.மநுவை எதிர்த்து துஷ்பிரசாரம் செய்யும் அயோக்கியர்கள் அடிக்கடி காட்டும் முக்கிய ஸ்லோகம் இந்தப் பகுதியில் வருகிறது. இந்துப் பெண்களுக்குச் சுதந்திரம் கொடுக்கக் கூடாது என்று

மநு செப்பியதாக வெளிநாட்டு விஷமிகளும், திராவிட, மார்கஸீய அரை வேக்காடுகளும் அடிக்கடி மேற்கோள் காட்டுவது ஸ்லோகம் 148. இதை மற்ற ஸ்லோகங்களுடன் கோர்வையாகப் படிக்கையில் மநு, ஒரு பெண்ணின் பாதுகாப்புக்காகச் சொன்னானே தவிர, சுதந்திரம் இருக்கக்கூடாது என்று செப்பவில்லை என்பது வெள்ளிடை மலையென விளங்கும். அது மட்டுமல்ல. வேறு இடங்களில் பெண்களுக்கு ஆதரவாக மநு சொன்ன விஷயங்களை வேண்டுமென்றே மறைப்பர். எந்தக் குடும்பத்தில் ஒரு பெண் அழக்கூடிய நிலைக்குத் தள்ளப் படுகிறாளோ அநதக் குடும்பம் வேரோடு சாயும்- அடியோடு அழியும் என்று மநு சொன்னதைக் காட்ட மாட்டர்கள் அயோக்கியர்கள். அது மட்டுமல்ல; பெண்களுக்குப் புத்தாடைகளையும், நகை நட்டுகளையும் வாங்கித் தந்து அவர்களை மகிழ்ச்சிக் கடலில் முழுக வைக்கும் இடத்தில்தான் தெய்வங்கள் வசிக்கும் என்று மநு சொன்னதையும் திருடர்கள் மறைப்பர். இதே அத்தியாயத்தில் கூட பெண்ணின் வாய் எப்போதும் சுத்தமானது என்று சொல்லுவதையும் கொடுக்காமல் ஸ்லோகம் 148-ஐ மட்டும் கொடுப்பவர்களை அயோக்கியர்கள் என்று எளிதில் இனம் காணலாம்.

இதைவிட முக்கியமானது இது சங்கத் தமிழ் பாடல்களிலும் உளது. பெண் என்பவள் பிறந்த இடத்துக்குச் சொந்தமானவள் அல்ல; அவள் ஓடிப்போனதைப் பற்றி ஏன் வருந்துகிறாய்? என்று ஒர் புலவர் பாடுகையிலும் இந்த விஷயம் வருகிறது.

 

3.அடுத்தபடியாக ‘தஸ்யூ’ என்னும் சொல்

வரும் ஸ்லோகம் 131. இதற்குத் திருடன், கொள்ளைக்காரன், புறம்போக்கு என்று பொருள். அந்த அர்த்தத்தில் உலகப் புகழ் காளிதாஸன் போன்றோர் பயன்படுத்துவதை அனவரும் அறிவர். ஆனால் ஆரம்பத்தில் வேதங்களை மொழிபெயர்த்த அயோக்கிய வெள்ளைக்காரர்கள், இதை ‘பழங்குடி மக்கள்’- ‘ஆரியர்களை எதிர்த்தவர்கள்’- என்று திருட்டுத்தனமாக மொழி பெயர்த்தனர். சங்க இலக்கியத்தில் சில ஜாதிகளைக் கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள் என்றும், கல்லாதவர்கள் என்றும் புலவர்கள் பாடியுள்ளனர். அதற்காக அந்த இனத்தையே நாம் பழிப்பத்தில்லை. இது போல எந்த சமூகத்திலும், ஜாதியிலும்  கொள்ளைக்காரர்கள் இருப்பர். ராபர்ட் கிளைவ் போன்ற வெள்ளைக்காரன் ஒரு தஸ்யூதான்.

பெண்ணின் வாய், கலைஞரின் கை

4.ஒரு பெண்ணை முத்தம் கொடுத்தால் அது எச்சில் ஆகாதா, ஒரு பறவை கொத்தி கீழே விழும் பழம் எச்சில் இல்லையா, குயவன், நெசவாளி, தச்சன் போன்றோர் செய்து கொடுப்பதை எல்லாம் பூஜையில், யாகத்தில் பயன்படுத்துகிறோமே இவை எல்லாம் கீழ் ஜாதியினர் தொட்டதுதானே என்று 5000 ஆண்டுகளுக்கு முன் வாதம் செய்த முட்டாள்களுக்கு மநு– மாபெரும் ஜீனியஸ் great genius– மாபெரும் உளவியல் நிபுணந் psychologist – அழகாகப் பதில் சொல்லிவிட்டான். இவை எல்லாம் எச்சில், தீட்டு, அசுத்தம் இல்லை – இல்லவே இல்லை. இந்த ஸ்லோகத்தை நான் கீழே தந்துள்ள திருலோக ஸீதாரமன் சரியாக மொழி பெயர்க்கவில்லை. காரணம் அவர் திருவைந்திரபுரம் இராமாநுஜாச்சாரியாரைக் கொண்டு மொழிபெயர்க்கப்பட்ட நூலை

எளிமையாக்கித் தந்தவரே; ஒரிஜினல் மொழி பெயர்ப்பாளர் அல்ல. மநு நூல் மீது உரை எழுதியோர், சரியான வியாக்கியானம் செய்து இது கைவினைஞர்கள், கலைஞர்களைக் குறிக்கும் என்று விளக்கியுள்ளனர்.

5.உடலில் ஏற்படும் 12 வகை அசுத்தங்கள் என்ன? (ஸ்லோகம் 134, 135)

6.ஐந்து வகை சுத்தி கரிப்பு முறைகள் என்ன?( ஸ்லோகம் 124) என்பன கவனிக்கத்தக்கவை

7.பிராமணன் சொன்னால் போதும் அதை சுத்தம் என்று எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லும் ( ஸ்லோகம் 127) பகுதியும் குறிப்பிடத்தக்கது. அந்தக் காலத்தில் பிராஹ்மணர்கள் ஸத்திய சீலர்களாக இருந்ததால் அவ்வளவு மதிப்பு. வெளிநாட்டு யாத்ரீகர்களும் பிராஹ்மனர்களை உயர்த்திப் பேசியிருப்பது இதற்கு அத்தாட்சி பத்திரம் கொடுக்கும். அது மட்டுமல்ல. சங்க இலக்கியத்தில் அதிகமான செய்யுட்களை யாத்த கபிலரை மட்டும் பல புலவர்கள் ‘புலன் அழுக்கற்ற அந்தணாளன்’ — என்று புகழ்வதையும் கருத்திற்கொள்கையில் இதன் பொருள் பிரகாஸமாகும்.

என் சொந்த அநுபவம்–என் அம்மா, வீட்டு வாசலில் வரும் காய்கறிக்காரி, கீரைக்காரி, மாவடு விற்பனை செய்யும் பெண்மணியிடம் பொருட்களை வாங்குகையில், ‘இதோ பாரம்மா, இத்தனை  ,,,,,,, (நம்பரைச் சொல்லி) பொருட்களைத்தான் வீட்டுக்குள் கொண்டு செல்கிறேன், நன்றாகப் பார்த்துக்கொள்’ என்பார். அதற்கு அந்த

பெண்மணி, ‘அம்மா, நீங்கள் எல்லாம் சாமி மார் (பிராஹ்மணர்கள்), பொய் சொல்ல மாட்டீர்கள்; என்னிடம் காட்ட வேண்டாம்’ என்பாள். அநத அளவுக்கு உண்மை விளம்பிகளாகப் பிராஹ்மணர்கள் இருந்தவரை அவர்களை இலக்கியங்களும் பூசுரர்கள் (பூவுலகத்தில் வாழும் தேவர்கள்) என்று பாராட்டின.

8.தெய்வம் தொழாள்;

கணவனே கண்கண்ட தெய்வம்

கணவனே முதல் தெய்வம்- கணவனுக்குப் பணிவிடை செய்தால், கடவுளைக் கும்பிட வேண்டிய அவஸியம் பெண்களுக்கு இல்லை என்று எல்லா இந்திய மொழி இலக்கியங்களும் விளம்பும். ஆனால் மநுவும், திருவள்ளுவரும் அடித்துக் கூறுவது போல வேறு எவரும் மொழிந்ததாக நாம் அறியோம். கணவனை மட்டும் வணங்கி தெய்வத்தை வழிபடாமல் இருக்கும் பெண்ணுக்கு அபூர்வ சித்திகள் உண்டாகும்; மழை பெய் என்றால் பெய்யும்;மழையை நில் என்றால் நிற்கும் ;முலையை விட்டு எரிந்து அக்கினி தேவனை அழைத்தால் அவன் மதுரை நகரையே (பார்ப்பனர்,பெண்கள், குழந்தைகள், நோயாளிகள், வயோதிகரை விடுத்து) எரிப்பான் என்பது வள்ளுவனும், இளங்கோவும் காட்டும் இந்துப் பண்புகள்; இதையே மநுவும் உரைப்பான் (sloka ஸ்லோகம் 155).

9.சதி என்னும் உடன்கட்டை ஏறுதலுக்கு எதிர்ப்பு- ஸ்லோகம் Slokas 156-158 ‘சதி’ இல்லை

ஸ்லோகம் 156 முதல் 158 வரையுள்ள ஸ்லோகங்கள், கணவன் இறந்தவுடன், மனைவி வாழும் முறை பற்றிச் செப்பும்; அது மட்டுமல்ல. மநு வேறு எங்குமே ‘சதி’ என்னும் உடன் கட்டை ஏறும் வழக்கம் பற்றி மொழியவில்லை. இது இரண்டு விஷயங்களைக் காட்டும்:-

1.ஒரிஜினல் மநு வாழ்ந்தது ரிக்வேதம் இருந்த 5000, 6000 ஆண்டுகளுக்கு  முந்தைய காலம். ஏனெனில் உலகின் பழைய நூலான ரிக் வேதமும் சதி பற்றி கதைப்பதில்லை. மேலும் ஸரஸ்வதி நதி பற்றியும் ‘ரிக்’கும், மநுவும் கதைப்பர். இவை எல்லாம் ஒரிஜினல் மநு தர்ம சாஸ்திரத்தின் சுவடுகள். ஆக மநுவைப் போல மகளிரைப் பாராட்டிய, போற்றிய பெருமகன் எவருமிலர் என்பதை ஐந்தாம் அத்தியாயம் வலியுறுத்துகிறது.

Tags–கலைஞரின் கை, சதி, சுத்தமானதுபெண்ணின் வாய்,

—-subham–

 

பேரழகி சித்தூர் ராணி பத்மினியின் தியாகம்! (Post No. 2683)

alauddin 3a

Compiled  by london swaminathan

Date: 1 April, 2016

 

Post No. 2683

 

Time uploaded in London :–  11-23 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

புறநானூற்றில் கணவன் சிதையில் தீக்குளித்த பூதப் பாண்டியன் தேவியைக் கண்டோம். சோழ மன்னன் கிள்ளிவளவன் மனைவியர் தீப்பாய்ந்து இறந்ததைக் கோவூர்க் கிழார் பாடக் கண்டோம். சிலப்பதிகாரத்தில், மாதரி என்னும் இடைக்குலப் பெண் தீயில்  பாய்ந்ததையும் எழுதிவிட்டேன். ஆயினும் சித்தூர் ராணி பத்மினி, நூற்றுக் கணக்கான பெண்களுடன் தீப்பாய்ந்ததைப் படிக்கையில் உடம்பில் புல்லரிக்கும்.

 

அலாவுதீன் கில்ஜி எனும் அயோக்கியனின் காமப்பசிக்கு இரையாவதைவிட, தீயில் குளிப்பது “மூசு வண்டறைப் பொய்கையும் போன்றதே” என்று தீயில் குளித்தாள் பேரழகி பத்மினி; அவள் நூறு கிளியோபாட்ராவின் அழகுக்குச் சமமானவள்! இதோ அந்தக் கதை:–

ஏறத்தாழ 700 வருடங்களுக்கு முன், அலாவுதீன் கில்ஜி, டில்லியிலிருந்து அரசோச்சிய காலத்தில் ரஜபுதனத்திலுள்ள சித்தூரை பீமசிங்கன் என்பவன் ஆண்டுவந்தான். அவளுடைய மனைவியின் பெயர் பத்மினி. தாமரை போன்ற அழகிய முகம் வாய்ந்தவள். தைரியசாலி, நல்ல புத்தி சாதுர்யமிக்கவள். அவளுடைய அழகு பற்றிய செய்தி வட இந்தியா முழுதும் பரவியிருந்தது.

 

அலாவுதீன் கில்ஜிக்கு, எல்லா முஸ்லீம் மன்னர்களுக்கும் இருந்தது போல பல மனைவியர் இருந்தனர். அவன், சித்தூர் ராணி பத்மினியையும் அபகரிக்க விரும்பினான். ஆகவே பெரும்படையுடன் புறப்பட்டு ராஜஸ்தானுக்கு வந்து சித்தூரை முற்றுகையிட்டான். சித்தூரை வெல்ல முடியாதென்று தெரிந்தது. ‘கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற கதையாக, “நான் சித்தூரை வெல்ல வரவில்லை என்றும், பத்மினியின் அழகை ஒரே ஒரு முறை பார்த்துச் செல்லவே வந்ததாகவும்” பீம சிங்கனுக்குச் செய்தி அனுப்பினான்.

 

பீம்சிங்கன், அவன் வார்த்தையை நம்பி, ஓரிரு வீரர் துணையுடன் கோட்டைக்குள் வரலாமென்றும், ரஜபுத்ரப் பத்தினிப் பெண்கள் வேறு ஆடவரைப் பார்க்கக் கூடாதாகையால் நிலைக் கண்ணாடியில் மட்டும் அவள் உருவத்தைப் பார்க்கலாம் என்றும் நிபந்தனை போட்டான். உடனே அலாவுதீனும் இரண்டொரு வீரருடன் வந்து கண்ணாடியில், பேரழகி பத்மினியைப் பார்த்தான். ஏதேனும் சதி செய்து அவளைக் கவரவேண்டும் என்று எண்ணி, மனதில் சதித்திட்டம் தீட்டினான்.

 

“நான் உன்னை நம்பி, உன் கோட்டைக்குள், தனியே வந்தேனே. நீயும் என்னை நம்பி என் கூட வந்து வழியனுப்பக்கூடாதா?” என்று பீம சிங்கனிடம் அலாவுதீன் சொன்னான். ரஜபுத்ர இந்துக்கள், சத்ய சந்தர்கள்; உண்மை விளம்பிகள்; டில்லித் துலுக்கர்கள் போல உடல் முழுதும் விஷ ரத்தம் ஓடுபவரல்ல. ஆகவே அலாவுதீனை நம்பி அவன் கூட குதிரையில் செல்லுகையில், அலாவுதீன் உத்தரவிட்டவுடன் ஆப்கானியப் படைகள், பீமசிங்கனைச் சூழ்ந்து கொண்டன. அவனைக் கைது செய்து டில்லிக்குக் கொண்டு சென்றான் அலாவுதீன்.

 

“உன் மனைவியை என்னிடம் ஒப்புவித்தால் நான், உன்னை விடுவித்து, மீண்டும் சித்தூரின் மன்னனாக்குவேன்” என்று அலாவுதீன் சொன்னான். ஆனால் பீம சிங்கன் இணங்கவில்லை. இந்தச் செய்தி சித்தூர் வரை சென்றது.

 

பீமசிங்கனின் மனிவியான பத்மினி மஹா புத்திசாலி; வைரத்தை வைரத்தால் அறுக்க வேண்டும், முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்; வஞ்சனையை வஞ்சனையால்தான் வெல்ல வேண்டும் என்று கருதி, அலாவுதீன் கில்ஜிக்குச் செய்தி அனுப்பினாள். என் கணவனை நீ விடுவிப்பாயானால், நான் உன்னிடம் வரத்தயார். ஆயினும் ரஜபுதனப் பெண்கள், எல்லோரும் காணும்படி வெளியே உலவ மாட்டார்கள். ஆகவே என் பரிவாரம் புடை சூழ மூடிய பல்லக்குகளில் வருவோம்” என்றாள். அலாவுதீனும் ஆவலுடன் காத்திருந்தான்.

 

சித்தூர் கோட்டையிலிருந்து 70 மூடு பல்லக்குகள் புறப்பட்டன. ஒன்றில் கூட பெண்கள் கிடையாது. அத்தனையிலும், தேர்ச்சிபெற்ற 70 வீரர்கள் மறைந்திருந்தனர். ஆறு பல்லக்குத் தூக்கிகள், ஒவ்வொரு பல்லக்கையும் சுமந்தனர். அவர்கள் அனைவரும் வீரர்கள். பல்லக்குகளில் ஆயுதங்களை மறைத்து வைத்தனர். பாந்தால் என்பவன் அவர்களை டில்லியை நோக்கி அழைத்துச் சென்றான். அவன், “பத்மினி, கடைசியாக ஒரு முறை கணவனைப் பார்த்துவிட்டு உன்னிடம் வருவாள்” என்று அலாவுதீனிடம் சொன்னவுடன் “பத்மினியின் பல்லக்கை” கூடாரத்துக்குள் அனுப்பினான். அதிலிருந்த வீரன் வெளியே குதித்து பீமசிங்கனை குதிரையின் மேல் வைத்து தப்பிக்கச் செய்தான். உடனே பெரும் சண்டை நிகழ்ந்தது. இரு தரப்பும் வீரர்களை இழந்தன.

 

ஓரிரு ஆண்டுகள் உருண்டோடின. அலாவுதீனின் வெறி அடங்கவில்லை. எப்படியும் பத்மினியை அடைந்தே தீருவதென்று முடிவு செய்து, மீண்டும் படையெடுத்து சித்தூரை முற்றுகையிட்டான். இப்பொழுது பீமசிங்கன் பலவீனமான நிலையில் இருந்தான்; ஏனெனில் முந்தைய போர்களில் முக்கியப் படைத் தலைவர்களை இழந்துவிட்டான். ஒரு கட்டத்தில் தோல்வி நிச்சயம் என்று தெரிந்தது. தன் மகனை அருகாமையிலுள்ள ரஜபுதன ராஜ்யத்துக்கு அனுப்பி பாதுகாப்பாக இருக்கும்படி சொல்லிவிட்டு வீரதீரப் போரில் ஈடுபட்டு உயிர்துறந்தான் பீம சிங்கன்.

 

ரஜபுதனப் பெண்கள் வீராங்கனைகள்; அரண்மனையின் அந்தப் புரத்தில் மாபெரும் தீ வளர்த்தனர். அதில் நூற்றுக் கணக்கானோர், பேரழகி பத்மினியுடன் குதித்து சாம்பலாயினர். வெற்றிக் களிப்புடன் கோட்டைக்குள் நுழைந்த அலாவுதீனுக்கு, வீரர்களின் பிணங்களும், வீரத்தாய்மார்களின் சாம்பலுமே கிடைத்தது!

பாரத நாடு உள்ள வரை, பத்மினியின் புகழும் நீடிக்கும்! ரஜபுதனக் கோட்டை கொத்தளங்களும், பாலைவன மணல் துகள்களும் இன்றும் கூட பத்மினியின் புகழைப் பாடிக்கொண்டிருக்கின்றன!!

-சுபம்-

எனது முந்தைய கட்டுரை:

1.சங்கத் தமிழ் நூல்களில் “சதி” (உடன்கட்டை ஏறுதல்)

கட்டுரை எண்:–1108; தேதி 15 ஜூன் 2014.

 

-subham–

சங்கத் தமிழ் நூல்களில் “சதி”

Balinese_rite_of_Suttee_in_Houtman_1597_

Suttee in Bali in 1597 (Wikipedia picture)

சங்கத் தமிழ் நூல்களில் “சதி” (உடன்கட்டை ஏறுதல்)

கட்டுரையாளர்:– லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:–1108; தேதி 15 ஜூன் 2014.

சதி என்று அழைக்கப்படும் வழக்கம் பழங்கால இந்தியாவில் இமயம் முதல் குமரி வரை இருந்தது. கணவன் இறந்தவுடன், அவனுடன் சிதைத் தீயில் ஏறி உயிர் விடுவது ‘’சதி’’ என்றும் ‘’உடன்கட்டை ஏறுதல்’’ என்றும் அழைக்கப்படும். இதை ஆரிய வழக்கம் என்று பிதற்றியோருக்கு புற நானூறும் பிற்கால இலக்கியமும் பதில் கூறுகிறது.

சதி என்பது ராமாயண, மஹாபாரத காலங்களில் கூட கட்டாயம் இல்லை. விரும்பினால் உடன்கட்டை ஏறலாம். அதீத அன்பினால் நடைபெறும் ‘தற்கொலை’ இது. தசரதன் இறந்தபோது அவன் அன்பு மனைவியர் உடன்கட்டை ஏறவில்லை. பாண்டு இறந்தபோது முதல் மனைவியான குந்தி தேவியும் உடன்கட்டை ஏறவில்லை. இரண்டாவது மனைவியான மாத்ரீ மட்டுமே உடன்கட்டை ஏறினாள். ஆக இது அந்தக் காலத்திலும் கூடப் பெருவாரியாக நடக்கவில்லை.

sati2

வெளிநாடுகளிலும் கூட அன்பின் காரணமாகவோ, பயம் காரணமாகவோ கணவன் மனைவி இருவரும் ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொள்வதையும், அல்லது ஒருவர் இறந்தவுடன் அடுத்தவர் தற்கொலை செய்து கொள்வதையும், பத்திரிக்கைகளில் படிக்கிறோம். அப்படிப் படிக்கையில் அவர்களின் அன்பைக் கண்டு வியந்து பாராட்டுகிறோம். இது போலவே முன்காலத்திலும் சதி மூலம் இறக்கும் பெண்களை பத்தினித் தெய்வமாக வணங்கி கோவில் எழுப்பி வழிப்பட்டனர். தமிழ் நாட்டில் நடுகல் வைத்து வீரர்களை வணங்கியது போல, வட இந்தியாவிலும் கர்நாடகத்திலும் கை சின்னத்துடன் கோவில்கள் வைத்து பத்தினிகளை வழிப்பட்டனர்.

சதி என்பது ஆரிய வழக்கம் என்று பிதற்றிய பி எச். டி.வாலாkகளும் வெள்ளைத்தோல் வெளிநாட்டு ‘’அறிஞர்களும்’’ உள் நோக்கத்தோடு இந்தியா பற்றி அவதூறுகளைக் கிளப்பினர். பெண்களை தீயில் தூக்கி எறிவது போல படங்கள் போட்டு கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப முயன்றனர். ஆரிய வழக்கம் என்று முத்திரை குத்தப்பட்ட நூற்றுக கணக்கான வழக்கங்கள் இமயம் முதல் குமரி வரை இருப்பதோடு உலகில் ஆரியர்கள் வாழ்ந்ததாக ‘’அறிஞர்கள்’’ கூறும் வேறு எவ்விடத்திலும் இல்லை!! ஆரியர்களும் வெளிநாட்டுக்காரர்களும் சைபிரீயவிலோ மத்திய ஆசியாவிலோ ஒரே இடத்தில் வசித்திருந்தால் நூற்றுக் கணக்கான ’’ஆரிய’’ பழக்க வழக்கங்கள் அங்கே இல்லதது ஏனோ??

சங்கத் தமிழ் நூல்களில் உள்ள வழக்கங்கள் வடக்கிலும் 2000 ஆண்டுகளுக்கு மேல் இருந்தன. ஆரிய- திராவிட வேறுபாடு அல்லது அத்தகைய இனச் சொல்லாட்சி எங்கனும் இல்லை. சங்க காலத்தில் வாழ்ந்த 461 கவிஞர்கள் எழுதிய 2389 பாடல்களில் உள்ள 27,000 வரிகளைக் கரைத்துக் குடித்தோருக்கு ஆரிய திராவிட இனவெறிக்கொள்கை நகைப்பைத் தரும். அது ஒரு பொய்மை வாதம் என்பது வெள்ளிடை மலை என விளங்கும். உள்ளங்கை நெல்லிக்கனி போல தெள்ளத் தெளிவாக தெரியும். இதற்குப் பின்னும் விளங்கவில்லை என்றால் அவர்கள் எல்லோரும் “விளங்காதவர்களே”!

ஆரிய- திராவிட இனவெறிக் கொள்கையை வைத்து ‘’திராவிடங்கள்’’ கோடிக் கணக்கில் பணம் குவித்ததையும், ஹிட்லர், முசோலினி போன்றோர் கோடிக் கணக்கில் மக்களைக் கொன்று குவித்ததையும் உலகம் அறியும்.

sati 3

சங்க இலக்கியத்தில் குரங்கு கூட ‘’சதி’’ செய்ததை அறிகிறோம். இதோ புற நானூறு முதல் நற்றிணை வரை சில ‘’சதி’’ பற்றிய பாடல்கள்:–

புறநானூறு பாடல் 246:–
பல் சான்றீரே! பல் சான்றீரே!
‘செல்க’ எனச் செல்லாது, ‘ஒழிக’ என விலக்கும்,
பொல்லாச் சூழ்ச்சிப் பல் சான்றீரே!
அணில்வரிக் கொடுங்காய் வாள் போழ்ந்திட்ட
காழ் போல் நல் விளர் நறு நெய் தீண்டாது
அடை இடைக் கிடந்த கை பிழி பிண்டம்,
வெள் எள் சாந்தொடு, புளிப்பெய்து அட்ட
வேளை வெந்தை, வல்சி ஆக,
பரற்பெய் பள்ளிப்பாயின்று வதியும்
உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ;
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்கு அரிதாகுக தில்ல; எமக்கு எம்
பெருந்தோட் கணவன் மாய்ந்தென, அரும்பு அற
வள் இதழ் அவிழ்த்த தாமரை
நள் இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே!
–பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு தீப்பாய்வாள் சொல்லியது

பொருள்: ‘’கணவனுடன் நீயும் போ என்று சொல்லாமல் பொல்லாத செயல் புரியும் பெரியோர்களே! கணவன் இல்லாத பெண்கள் வெள்ளரிக்காய் விதை போல, நெய் இல்லாத சோறு, எள்ளுத் துவையல், புளி கூட்டி சமைத்த வேள இலை ஆகியவற்றை உண்ண வேண்டும். பாய் இல்லாமல் வெறும் கல் தரையில் படுக்க வேண்டும். அது போன்ற பெண் என்று என்னை நினைத்து விட்டீர்களா? நான் அப்படிப்பட்டவள் அல்ல. உங்களுக்கு வேண்டுமானால் மரணப் படுக்கை கஷ்டமாக இருக்கலாம். என் கணவன் இறந்துவிட்டான். அந்த சிதைத் தீயே எனக்கு தாமரைக்குளம் போல குளிர்ச்சிதரும். இதைப் புரிந்துகொள்ளுங்கள்.’’

ஒரு மஹாராணி பாடிய பாடல் இது. கணவனின் சிதைத் தீ, தாமரைக் குளம் போல குளிர்ச்சி பொருந்தியது என்று பாடுகிறாள். அப்பர் பெருமானை மஹேந்திர பல்லவன் சுண்ணாம்புக் காளவாயில் போட்ட போது அவர் ‘’மாசில் வீணையும்’’ பாடல் பாடியது நினைவுக்கு வருகிறது!

sati3

புறநானூறு பாடல் 373:– கிள்ளிவளவன் மீது கோவூர் கிழார் :–

மடக் கண் மயில் இயல் மறலியாங்கு,
நெடுஞ்சுவர் நல் இல் புலம்ப, கடை கழிந்து,
மெந்தோள் மகளிர் மன்றம் பேணார்
புண்ணுவ……………………………………………..
…………………………………………….. அணியப் புரவி வாழ்க என,
சொல் நிழல் இன்மையின் நல் நிழல் சேர –(வரிகள் 10-15)

பொருள்:– ‘’நல் இல் புலம்ப, கடை கழிந்து, மென் தோள் மகளிர் மன்றம் பேணார்’’— என்ற வரிக்கு உரைகார்கள் சொல்லும் பொருள்:தம் கணவர் திரும்பி வாராமையால் மகளிர் மன்றத்தில் எரியை மூட்டி தீயில் பாய்ந்து உயிர்விடுதலை உடனே செய்து……………………………… (காண்க- புறநானூறு உரை, வர்த்தமானன் பதிப்பகம்)

அலாவுதீன் கில்ஜி என்ற வெறியன் உலக மஹா அழகி சித்தூர் ராணி பத்மினியை எப்படியும் அடைய வேண்டும் என்று வந்தபோது, அந்த மஹா உத்தமி ஆயிரம் பெண்களுடன் தீப்பாய்ந்து உயிர்த் தியாகம் செய்தாள். வரலாற்றில் அழியாத இடம் பெற்றாள். அந்த நிகழ்ச்சியை நினைவு படுத்துகிறது கோவூர் கிழாரின் பாடல்.

குறுந்தொகை 69 (கடுந்தோட் கரவீரனார்)
கருங்கட் தாக் கலை பெரும் பிறிது உற்றென
கைம்மை உய்யாக் காமர் மந்தி,
கல்லா வன் பறழ் கிளைமுதல் சேர்த்தி,
ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர் செகுக்கும்
சாரல் நாட நடு நாள்
வாரல் வாழியோ வருந்துதும் யாமே — குறுந்தொகை 69 (கடுந்தோட் கரவீரனார்)

பொருள்: ஆண் குரங்கு இறந்தது.– விதவையாக இருக்க விரும்பாத பெண் குரங்கு,— ஒன்றும் பயிலாத தன் குட்டியை நெருங்கிய உறவினரிடம் ஒப்படைத்துவிட்டு ஓங்கி உயர்ந்த மலையில் இருந்து விழுந்து இறக்கும் நாட்டை உடையவனே!

குரங்கு கூட அன்பின் மிகுதியால் மலையில் இருந்து பாய்ந்து உயிர் நீத்தது. இது பற்றி எழுதிய மு. வரதராசனார் இதை ‘சதி’ என்றே எழுதியமை குறிப்பிடத்தக்கது. (காண்க:– Reference: The Treatment of Nature in Sangam Literature by M.Varadarajan)

பஞ்ச தந்திரக் கதையில் புறாக் கூட தீப்பாய்ந்த கதை வருகிறது. கணவன் புறாவை வேடன் பிடித்துச் சாப்பிட்டவுடன் மனைவி புறாவும் அவனுக்கு உணவாக தீயில் பாய்ந்தது சதி என்னும் வழக்கத்தினால் வந்ததன்றோ!!

ரிக் வேதம் பத்தாவது மண்டலத்தில் உள்ள சில பாடல்கள் ‘’சதி’’ என்னும் வழக்கத்தைக் குறிப்பிடுவதகச் சொல்வர் வெளி நாட்டோரும் பி. எச். டி. வாலாக்களும்— அதே பத்தாவது மண்டலத்தை நீங்கள் வேறு எதற்காவது மேற்கோள் காட்டினால் அது பிற்காலச் சேர்க்கை என்பர். வெளி நட்டோரும் அவர்களுக்கு அடிவருடும், ஒத்து ஊதும் நம்மவர்களும் அரை வேக்காடுகள் மட்டும் மல்ல, பாம்பு போல இரட்டை நாக்கினர் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டுமா? உங்களுக்கே புரியாதா?

எல்லை மீறிய அன்பு, பாசம் தொடர்பான கதைகளையும் நாவல்களையும் படித்தோருக்கு உடன்கட்டை ஏறும் பழக்கம் வியப்பைத் தருமேயன்றி அருவருப்பைத் தராது. எனினும் ஆதிகால வழக்கத்தைப் பலரும் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட காலையில் ராஜாராம் மோஹன்ராய் போன்ற பெரியோர்கள் முன்னின்று பிரம்ம சமாஜம் மூலம் அதற்குத் தடை போட்டதும் சரியே!