மனு நீதி நூல்- உலகின் முதல் சட்டப் புத்தகம்- Part 1 (Post No.4408)

Written by London Swaminathan 

 

Date: 18 NOVEMBER 2017

 

Time uploaded in London- 15-22

 

 

Post No. 4408

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

மனு பற்றிய குறிப்புகள் ரிக் வேதத்திலேயே வருவதாலும்,மனு சரஸ்வதி நதி தீரம் பற்றிப் பேசுவதாலும், சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம் பற்றி எதுவும் பேசாததாலும் அவர் ஹமுராபி (Hamurabi, 1810 BCE) போன் றோருக்கு முந்தியவர் என்பதில் ஐயமில்லை. ஆனால் காலப்போக்கில் அதில் புதுச் சரக்கு சேர்ந்தது என்பதில் ஐயமில்லை. மனு நீதி நூலை முழுதுமாகப் படிப்போருக்கு முரண்பட்ட சில விஷயங்கள் வருவதை காணலாம். ஆகவே மனு நீதி எனப்படும் மானவ தர்ம சாஸ்திரத்தை ஒவ்வொருவரும் படித்து சரியான முடிவுக்கு வரலாம். நானும் எனது கருத்துக்களை ஆங்காங்கே உதிர்க்கிறேன்.

 

அம்பேத்கர் போன்றோர் கோபத்தில் எரித்த நூல் இது. ஆனால் காந்தி போன்றோர் இதிலுள்ள முரண்பட்ட விஷயங்களை ஒதுக்கினால் இது மிகப்பெரிய படைப்பு என்று சொல்லி ஏற்றுக்கொண்டனர். மனு சொல்லும் விஷயங்களும் அவருடைய அணுகு முறையும் உலகம் வியக்கும் ஒரு புதுமையாகும். முழுக்கப் படித்த பின்னரே இதை எடை போட வேண்டும் என்பது என் கருத்து.

மனு நீதி நூலில் உள்ள மொத்த சம்ஸ்கிருத ஸ்லோகங்களின் எண்ணிக்கை–2647

 

மொத்தமுள்ள அத்தியாயயங்கள்- 12

 

வெளிநாட்டினர் கருத்துப் படி இதன் காலம் – கி.மு இரண்டாம் நூற்றாண்டு

என் னுடைய கணிப்பு; கி.மு 2000க்கு முந்தியது.

 

முதல் அத்தியாயத்தில் வரும் விஷயங்கள்

 

மனுவின் சிறப்பு

வேதத்தின் சிறப்பு

பிரளயம்

பிரபஞ்சத்தின் தோற்றம்- படைப்பு

நாராயண சப்,தத்தின் பொருள்

பிரம்மனின் தோற்றம்

மஹத் தத்துவம் முதலான சிருஷ்டி

தேவர் முதலானோரின் தோற்றம்

பிராணிகளின் தொழில்

விராட புருஷனின் தோற்றம்

மநுப் பிரஜாபதியின் தோற்றம்

மரீசி முதலானோரின் தோற்றம்

சராசரங்க ளின் உற்பத்திக் கிரமம்

தினப் பிரளயம்

மஹாப் பிரளயம்

இந்த நூல் தோன்றிய வரலாறு

காலக்      கணக்கு

யுகக் கணக்கு

மன்வந்தரக் கணக்கு

யுக தருமம்

வர்ண தர்மம்

பிராமணன் சிறப்பு

இதில் சொல்லப்படும் விஷயங்கள்

 

முதல் அத்தியாயம்

1.சுவாயம்பு மனு மனதை ஒருமுகப் படுத்தி பிரம்ம நிஷ்டையில் இருக்கி றார். அப்போது ரிஷி முனிவர்கள் அவரிடம் வந்து, அவரைப் பூஜித்து, அவர் சொல்லப்போகும் விஷயம் என்ன வென்று கேட்கின்றனர்.

 

2.தெய்வீக புருஷரே! நான்கு வர்ணத்தாருடைய, மற்றும் இடைப்பட்ட ஜாதிகளுடைய தருமங்களை முறையாக வரிசையாக எங்களுக்குச் சொல்ல வேண்டும்.

விளக்கம்: 4 வர்ணம்- பிராமண, க்ஷத்ரிய, வைஸ்ய, சூத்ரர்

இடைப்பட்ட சங்கர ஜாதிகள்-அநுலோமன், பிரதிலோமன், அந்தராளன், விராத்தியன்

தெய்வீக புருஷர்- பரிபூரணமான ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீர்யம், சக்தி, தேஜஸ் ஆகியவற்றை இயல்பாக உடையவர்.

3.உங்களுக்கு மட்டுமே சகல வேதத்தின் உண்மையும் தெரியும். அளவிடமுடியாத, சாஸ்திரம், அறியாதவர்களால் அறியப்படாத உண்மையை அறிந்தவர் நீர் ஒருவரே. யாகாதி கர்மங்களையும், ஆத்ம ஞானத்தையும், அக்னிஷ்டோமம் முதலிய கர்மங்களின் பலனையும் அறிந்தவர் நீர் ஒருவரே.

 

4.பெரிய, உயர்ந்த மஹரிஷிகளின் சந்தேகங்களையும் தெளிவிக்கத்தக்க ஞான தேஜஸ் உடைய அந்த மநுப் பிரஜாபதியானவர், இப்படிக்கேட்ட ரிஷிகளைப் பூஜித்து இதோ கேளுங்கள் என்று சொல்லத் தொடங்கினார்.

 

5.பிரளய காலம் பற்றி முதலில் சொல்லத் தொடங்கினார்.  இந்த உலகமானது முதலில் மூலப் பிரக்ருதியில் ஐக்கியமாய், இருளில் மறைந்த பொருள் போல கண்ணுக்குத் தோன்றாததாகவும், அடையாளமில்லாததாகவும், சப்தத்தால் அறிய முடியாததாகவும், தர்க்க நூல் அறிவு கொண்டு ஊகிக்க முடியாததாகவும் , உறங்கினது போல இருந்தது.

 

6.பிரளய காலம் முடிந்த பின்னர், நம்மைப் போல கர்ம வினையினால் பிறக்காமல், தன்னிச்சையால் தோன்றும் ஸ்வயம்புவான (தான் தோன்றி) கடவுளானவர் ஆகாயம் முதலிய பஞ்ச பூதங்களையும் பிரகாசிக்கச் செய்பவராய்  தோன்றினார். அவரை புற இந்திரியங்களால் அறிய முடியாது; ஒருவராலும் தடுக்க முடியாத சக்தி உடையவர் அவர்.

 

 

7.ஐம்புலன்களால் அறிய முடியாதவர்; மனத்தினால் மட்டும் அறியத்தக்கவர், உருவமில்லாதவர்; சிந்திக்கமுடியாத மஹிமை உடையவர் பிறப்பு-இறப்பில் லாதவர், சகல வேத புராணங்களினால் பிரசித்தமானவர், தாமாகவே பிரகாசித்தார்.

8.அந்த பரமாத்மாவானவர் எல்லா உயிர் இனங்களுக்கும் உறைவிடமான தன் உடலில் இருந்து பல்வேறு உயிர்களைத் தோற்றுவிக்க எண்ணினார். முதலில் தண்ணீரைப் படைத்தார். அதில் சக்தி ரூபமான விதையை விதைத்தார்.

 

9.அந்த விதையானது இறைவனின் இச்சையினால் தங்க நிறமான முட்டையாக மாறியது. அதில் பிரம்மனைப் படைத்து அவருக்குள் நுழைந்தார்; அந்தப் பிரம்மனுக்கு பிதாமகன் என்று பெயர்.

  1. அந்த நீரானது நரன் என்ற பெயருடைய இறைவனால் படைக்கப்பட்டதால் நார என்கிற பெயரைப் பெற்றது. அந்த நாரம் என்கிற பெயரை உடைய நீரில் வசிப்பதால் நாராயண என்று பெயர் பெற்றது (நார+ அயன) நார=நீர், அயன= வீடு

என் கருத்து

முதல் பத்து ஸ்லோகங்களில் BIG BANG பிக் பேங் எனப்படும் மாபெரும் பிரபஞ்சத் தோற்றம் பேசப்படுகிறது.

மேலும் நீரின்றி அமையாது உயிரினம் என்ற விஞ்ஞானக் கருத்தும் பேசப்படுகிறது

கிரேக்கர்கள் முதலியோர் நம்மிடமிருந்து கடன் வாங்கிய ‘பஞ்ச பூதம்’, முதல் பத்து ஸ்லோககங்களில் உள்ளது

பிரபஞ்சம், உலகம் எல்லாம் கோள வடிவில் (Globular, round), முட்டை வடிவில், உருண்டை வடிவில் இருப்பதை கண்டு பிடித்ததும் இந்துக்களே. அந்தக் கருத்தும் இங்கே இருக்கிறது. இதற்கு முன்னர் பிராமண நூல்களிலும் வேதத்திலும் உள்ளது.

 

முதல் பத்து ஸ்லோகங்களிலேயே அறிவியல் உண்மைகளைக் காண்கிறோம். அது மட்டுமல்ல. மொழி இயல் உண்மை ஒன்றுமுளது. நீர் என்னும் தமிழ்ச் சொல், ரிக் வேதத்தில் இருப்பதாக சுநீத் குமார் சாட்டர்ஜி போன்ற அறிஞர்களும் ஏமாந்துபோயினர். ஆனால் நீரெய்ட்ஸ் (Nereids = Water Nymphs)  கிரேக்க மொழியில் இருப்பது அவர்களுக்குத் தெரியவில்லை. ஒரு சொல் கிரேக்க மொழியில் இருந்தால் அது சம்ஸ்கிருத குடும்பத்தைச் சேர்ந்தது என்பதை மொழி இயல் அறிஞர்கள் ஒப்புக்கொள்வர். ஆனால் அதுவும் தவறு என்பதைது என் ஆராய்ச்சிக் கட்டுரையில் முன்னரே விளக்கி இருக்கிறேன். கிரேக்க மொழியில் 30, 40 பழைய தமிழ்ச் சொற்கள் இருப்பதைப் பட்டியலிட்டுள்ளேன். உண்மை என்னவென்றால், உலகம் முழுதும் நம்மவர் நாகரிகத்தைப் பரப்பியபோது இவைகளும் அங்கே சென்றன. ஆக மூல மொழி சம்ஸ்கிருதம்-தமிழுக்கும் முந்திய மூல மொழி ஆகும்.

 

TAGS:– மனு நீதி, மனு ஸ்மிருதி, அர்த்தம், ஸ்லோகம், பிரபஞ்ச உற்பத்தி

 

॥ मनुस्मृति अथवा मानवधर्मशास्त्रम् ॥

 

अध्याय १

मनुमेकाग्रमासीनमभिगम्य महर्षयः ।

प्रतिपूज्य यथान्यायमिदं वचनमब्रुवन् ॥ Bछ्.Sछ्॥

 

भगवन् सर्ववर्णानां यथावदनुपूर्वशः ।

अन्तरप्रभवानां च धर्मान्नो वक्तुमर्हसि ॥ Bछ्.Sछ्॥

 

त्वमेको ह्यस्य सर्वस्य विधानस्य स्वयंभुवः ।

अचिन्त्यस्याप्रमेयस्य कार्यतत्त्वार्थवित् प्रभो ॥ Bछ्.Sछ्॥

 

स तैः पृष्टस्तथा सम्यगमितोजा महात्मभिः ।

प्रत्युवाचार्च्य तान् सर्वान् महर्षींश्रूयतामिति ॥ Bछ्.Sछ्॥

 

आसीदिदं तमोभूतमप्रज्ञातमलक्षणम् ।

अप्रतर्क्यमविज्ञेयं प्रसुप्तमिव सर्वतः ॥ Bछ्.Sछ्॥

 

ततः स्वयंभूर्भगवानव्यक्तो व्यञ्जयन्निदम् ।

महाभूतादि वृत्तोजाः प्रादुरासीत् तमोनुदः ॥ Bछ्.Sछ्॥

 

योऽसावतीन्द्रियग्राह्यः सूक्ष्मोऽव्यक्तः सनातनः ।

सर्वभूतमयोऽचिन्त्यः स एव स्वयमुद्बभौ ॥

सोऽभिध्याय शरीरात् स्वात् सिसृक्षुर्विविधाः प्रजाः ।

अप एव ससर्जादौ तासु वीर्यमवासृजत् ॥ Bछ्.Sछ्॥

 

तदण्डमभवद्धैमं सहस्रांशुसमप्रभम् ।

तस्मिञ्जज्ञे स्वयं ब्रह्मा सर्वलोकपितामहः ॥ Bछ्.Sछ्॥

 

आपो नारा इति प्रोक्ता आपो वै नरसूनवः ।

ता यदस्यायनं पूर्वं तेन नारायणः स्मृतः ॥ Bछ्.Sछ्

 

 

 

CHAPTER I.

  1. The great sages approached Manu, who was seated with a collected mind, and, having duly worshipped him, spoke as follows:
  2. ‘Deign, divine one, to declare to us precisely and in due order the sacred laws of each of the (four chief) castes (varna) and of the intermediate ones.
  3. ‘For thou, O Lord, alone knowest the purport, (i.e.) the rites, and the knowledge of the soul, (taught) in this whole ordinance of the Self-existent (Svayambhu), which is unknowable and unfathomable.’
  4. He, whose power is measureless, being thus asked by the high-minded great sages, duly honoured them, and answered, ‘Listen!’
  5. This (universe) existed in the shape of Darkness, unperceived, destitute of distinctive marks, unattainable by reasoning, unknowable, wholly immersed, as it were, in deep sleep.
  6. Then the divine Self-existent (Svayambhu, himself) indiscernible, (but) making (all) this, the great elements and the rest, discernible, appeared with irresistible (creative) power, dispelling the darkness.
  7. He who can be perceived by the internal organ (alone), who is subtile, indiscernible, and eternal, who contains all created beings and is inconceivable, shone forth of his own (will).
  8. He, desiring to produce beings of many kinds from his own body, first with a thought created the waters, and placed his seed in them.
  9. That (seed) became a golden egg, in brilliancy equal to the sun; in that (egg) he himself was born as Brahman, the progenitor of the whole world.
  10. The waters are called narah, (for) the waters are, indeed, the offspring of Nara; as they were his first residence (ayana), he thence is named Narayana.

 

-தொடரும்

இந்துக்களுக்கு ஏன் இவ்வளவு சட்ட புத்தகங்கள்? நாகரீக வளர்ச்சியா? பின்னடைவா? (Post No.3103)

manusmriti-the-hindu-law-book-economic-ideas

Written by London Swaminathan

 

Date: 30 August 2016

 

Time uploaded in London: 8-48 AM

 

Post No.3103

 

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

manu 2

பழங்கால இந்தியாவில், இந்துக்களுக்கு உலகில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு, நிறைய சட்ட புத்தகங்கள் இருந்தன. அதில் ஒன்றான மனு ஸ்மிருதி பற்றி இன்றும் பலரும் ‘கதைத்து’க் கொண்டிருப்பதால் இதை கொஞ்சம் அலசுவோம்.

 

‘சுருதி’ என்றால் காதால் மட்டும் கேட்டவை; கேட்கப்பட வேண்டியவை; அதாவது வேதங்கள்; இதை சங்க கால தமிழ்ப் புலவர்கள் “எழுதாக் கிளவி” என்றும் “நான் மறை” என்றும் “எழுதாக் கற்பு” என்றும் அற்புதமாக வருணித்துப் போற்றியுள்ளனர். இதற்கு அடுத்த படியாக இந்துக்கள் போற்றுவது ‘ஸ்மிருதி’; அதாவது நினைவில் வைத்துக்கொள்ளப் படவேண்டியவை. இதில் ஒன்றுதான் மனு ஸ்மிருதி. உலகில் மிகப் பழைய சட்டப்புத்தகம். கிருத யுகத்தில் ஒரு லட்சம் பாடல்களாக இருந்தது. இப்பொழுது 12 அத்தியாயங்களில் 2685 பாடல்களாகச் சுருங்கிவிட்டது.

 

மனு ஸ்மிருதியை கம்பனும், தமிழ்க் கல்வெட்டுகளும் போற்றுகின்றன. ஆனால் இதில் உள்ள “சூத்திரர்கள்” பற்றிய குறிப்[பு காரணமாக அவ்வப்பொழுது அரசியல்வாதிகளும், வெளிநாட்டுக்காரர்களும் சர்ச்சையை எழுப்புவர். இதில் சூத்திரர்களுக்கு எதிரான கருத்துகள், சுங்க வம்ச பிராமண ஆட்சிக்காலத்தில் இடைச் செருகலாக வந்தவை என்பது பலருக்கும் தெரியாது. மேலும் கி.மு.2600-ல் ஹமுராபி எழுதிய சட்டக்குறிப்புகளுக்கும் முந்தியது இது என்பதும் பலருக்கும் தெரியாது. மேலும் மனு எழுதிய புத்தகத்தில் இது வட  இந்தியாவுக்கு மட்டும்தான் என்று எழுதியிருப்பதும் பலருக்கும் தெரியாது. மேலும் மனு எழுதியது கிருதயுகத்துக்கு மட்டும் தான் என்று வடமொழி ஸ்லோகம் கூறுவதும் பலருக்கும் தெரியாது. மேலும் பலவேறு மனுக்கள், உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதும் பலருக்கும் தெரியாது. மேலும் இப்போதைய மனுஸ்மிருதி அவரது மகன் பிருகுவின் பெயரில் இருப்பதும் பலருக்கும் தெரியாது.

 

இந்துக்களுக்குப் பல்லாயிரம் நூல்கள் இருப்பதால் அதில் ஒன்றைக்கூட இந்துக்கள் படிக்காமலேயே திண்ணையில் உட்கார்ந்து கதைப்பது வெளிநாட்டுக்காரனுக்குத் தெரியும் . ஆகையால அவ்வப்பொழுது எங்காவது ஒன்றை எடுத்து சர்ச்சையை  உண்டாக்குவான். அவர்களிடம் காசு வாங்கும் டெலிவிஷன் நிலலையங்கள் அதைப் பூதாகாரமாகப் பெரிதுபடுத்துவர். உடனே ஜவஹர்லால் நேரு பலகலைக் கழக மார்கசீய ஆசிரியர்கள் மாணவர்களை உசுப்பிவிடுவர்.

 

நிற்க.

cover manusmriti

மனு நீதி என்று பிற்கால நூல்கள் குறிப்பிடுவது நேர்மையான, நீதியான நடைமுறை என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஒரு குறிப்பிட்ட நூலை அன்று. இதனால்தான் தேர்க்காலில் மகனை முறை செய்த மனு நீதிச்சோழனை இன்றும் புகழ்கிறோம்.

 

மனு பற்றிய ஸ்லோகம் இதோ:-

க்ருதே து மானவா: ப்ரோக்தாஸ் த்ரேதாயாம் யாக்ஞவல்க்யஜா:

த்வாபரே சங்கலிகிதா: கலௌ பராசரா: ஸ்ம்ருதா:

 

“மனுவினுடைய சட்ட நூல் கிருத யுகத்துக்கும் யாக்ஞவல்கியரின் நூல் த்ரேதா யுகத்துக்கும், சங்க, லிகிதர் எழுதிய நூல்கள் த்வாபர யுகத்துக்கும், பராசர நூல் கலி யுகத்துக்கும்  உரியவை.”

 

இதிலிருந்து இப்போதுள்ள மனு நூல், முழுக்க நம்பக்கூடியது அல்ல என்பது தெள்ளிதின் விளங்கும்.

 

நாரத ஸ்மிருதி என்னும் நூல் யுகந்தோறும் மனு ஸ்மிருதி எப்படிச் சுருங்கியது என்று சொன்ன விஷயத்தை முன்னொரு கட்டுரையில் தந்தேன். அதாவது “கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆயிற்று” அல்லது, “வர வர மாமியார் கழுதை போல ஆனாளாம்” என்ற கதை ஆயிற்று.

 

மனு ஸ்மிருதி தவிர வேறு என்ன சட்ட நூல்கள் உள்ளன:

 

நாரத ஸ்மிருதி

யாக்ஞவல்கியர் ஸ்மிருதி

 

பராசரர் ஸ்மிருதி

சங்க ஸ்மிருதி

லிகித ஸ்மிருதி

 

விஷ்ணு ஸ்மிருதி

இது தவிர

 

ஆபஸ்தம்ப சூத்ரம்

போதாயன தர்ம சூத்ரம்

கௌதம தர்ம சூத்ரம்

வசிஷ்ட தர்ம சூத்ரம்

 

இது தவிர பொருளாதார குற்றங்கள் பற்றியும் தண்டனைகள் பற்றியும் கூறும் அர்த்தசாத்திரம், ப்ருஹஸ்பதி நீதி, சுக்ர நீதி இப்படி எத்தனையோ நூல்கள்!!

yajna smrti

மனு சொல்கிறார்:

ச்ருதிஸ்து வேதோ விக்ஞேயோ தர்மசாஸ்த்ரம் து வை ஸ்ம்ருதி:

தே சர்வார்தேஷ்வமீமாஸ்யே தாப்யாம் தர்மோ ஹி நிர்பபௌ

–மனு 2-10

 

“வேதமே ச்ருதி எனப்படுகிறது தர்ம சாத்திரங்களே ஸ்மிருதி எனப்படும்; இவைகளை சந்தேகித்தல் ஆகாது. கவனமாக ஆராயப்பட வேண்டியவை; ஏனெனில் இவற்றிலிருந்துதான் தர்மம் என்பதே தோன்றியது.

 

என் கருத்து:

 

மேற்கூறிய விஷயங்களில் இருந்து நாம் அறிவது என்ன?

1.தர்மம் என்பது காலத்துக்கு காலம் வேறுபடும். பூகோள எல்லைக்கு எல்லை வேறுபடும்; சமூகத்துக்கு சமூகம் வேறுபடும் ஆகையால் புதிய நூல்கள் தேவைப்படும். அதனால்தான் இவ்வளவு நூல்கள்.

 

2.தர்மம் என்பது காலத்துக்கும், தேசத்துக்கும், சூழ்நிலலைக்கும் ஏற்பட மாறுபடும். மாற்றம் என்பது இயற்கை நியதி. எதுவும் மாறாமல் நிலையாக நிற்காது. இப்படி நூல்களை அவ்வப்பொழுது மாற்றி எழுதியதில் சில “சூத்திரர் எதிர்ப்புகள்” பிற்காலத்தில் நுழைக்கப்பட்டன. இப்படிச் சில குறிப்புகளை வைத்து அவை பிற்காலத்தவை என்று தவறாக தேதி குறிக்கவும் வாய்ப்புளது. ஆகையால் நம் நூல்களுக்கு வெளிநாட்டார் தரும் தேதியும் தவறு; விளக்கங்களும் தவறு. தனக்கு வேண்டாத விஷயங்களை இடைச் செருகல் என்று வெளிநாட்டார் ஒதுக்குவர். தனக்கு வேண்டிய ஸ்லோகங்களை மட்டும் பெரிதுபடுத்துவர்; அதுதான் நூலின் ஒட்டு மொத்தக் கருத்து என்று பொய்மை உரைப்பர்.அவர்களின் நரித் தந்திரத்தை நாம் உணர்தல் வேண்டும்

 

3.இந்தியாவின் 5000 ஆண்டு வரலாற்றில் தோன்றியது போல உலகில் வேறு எங்கும் சட்ட நூல்கள் தோன்றியது இல்லை. இது உலகில் இந்தியாதான் மிகவும் முன்னேறிய நாடு என்பதைக் காட்டும்.

 

4.சட்ட நூல்கள் அதிகம் இருப்பது குற்றங்கள் அதிகம் இருப்பதைக் காட்டாதா? என்று ஒரு கேள்வி எழும். “காட்டாது” என்பதற்கு யுவாங் சுவாங், பாஹியான் போன்ற யாத்ரீகர்களின் குறிப்பும், காளிதாசன் போன்ற காவியங்களும் சான்று பகரும்.

 

5.பிராமணர்கள், பெரியோரை வணங்கும்போது சொல்லும் “அபிவாதயே” என்று துவங்கும் வணக்க மந்திரத்தில், என்ன சட்டப் புத்தகதைப் பின்பற்றுபவன் என்றும் சொல்லி அவர்கள் காலில் விழுந்து வணங்குவர். இன்று வரை சட்டப் புத்தகத்தின் பெயரைச் சொல்லி வணங்கும் முறை வேறு எங்கும் இல்லை. இது நாகரீகத்தின் உச்ச கட்டத்தை நாம் எய்தியதைக் காட்டுகிறது. (எடுத்துக்காட்டாக நான் என் வீட்டிற்கு வரும் பெரியோரின் காலில் விழும்போது என் கோத்திரம் கௌசிக கோத்திரம், நான் யஜுர் வேதத்தை அத்யயனம் செய்பவன், நான் ஆபஸ்தம்ப தர்ம சூத்திரத்தைப் பின்பற்றுபவன், எனது ரிஷிகள் யார் யார், என் பெயர் என்ன என்று சொல்லி வணங்குவேன். உலகில் சட்ட நூலின் பெயரைச் சொல்லி வணங்கும் சமூகம் வேறு எங்குளது?

31oeb-hindu_jpg_645950e

வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே — பாரதியார்

 

வாழ்க ச்ருதிகள்! வளர்க ஸ்மிருதிகள்!!

 

மனு ஸ்மிருதியில் அதிசயச் செய்திகள்!-Part 1 (Post No.3042)

manusmriti

Written by london swaminathan

Date: 7th    August 2016

Post No. 3042

Time uploaded in London :– 9-14 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

உலகின் முதல் சட்டப் புத்தகம் மனு ஸ்மிருதி! இதில் 2685 ஸ்லோகங்கள் உள்ளன. இவர் பல அதிசய விஷயங்களை ச் சொல்லுகிறார். இது சம்ஸ்கிருத மொழியில் இருந்தாலும் தமிழ் உள்பட எல்லா மொழிகளிலும் கிடைக்கின்றது. 1794 ஆம் ஆண்டிலேயே இதை வில்லியம் ஜோன்ஸ் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துவிட்டார். தமிழ் இலக்கியமு ம், கல்வெட்டுகளும் மனு ஸ்மிருதியைப் புகழ்ந்து தள்ளுகின்றன. தேரில் மகனை முறை செய்த சோழனுக்கு மனு நீதிச் சோழன் என்று பெயர்! அவ்வளவு புகழ் வாய்ந்த மனு நீதியைப் படிக்காமல், இடைச் செருகலாகச் சொல்லப்பட்ட சில பாக்களைக் கொண்டு, சிலர் அவதூறு கற்பிக்கின்றனர். தமிழில் இதை முழுதும் வாசித்தால் இதன் அருமை பெருமைகள் புரியும்!

9 பேர் இதற்கு விளக்க உரைகள் எழுதியுள்ளனர் என்றால் இதன் பெருமையையும், ஆழ்ந்த பொருளையும் கூறலும் வேண்டுமோ!

 

 

அதிசயம் 1 Woman’s mouth is unpolluted!

பெண்களின் வாய் எப்போது சுத்தமாக இருக்கும் என்கிறார் மனு! ஒரு பறவை,  பழத்தைக் கொத்திக் கீழே போட்டால் அது எச்சில் இல்லை; பாலைக் கன்றுக்குட்டி வாய் வைத்துக் குடித்தாலும் அங்கே சுரக்கும் பால் அசுத்தம் இல்லை; ஒரு நாய், தனது வாயை வைத்துக் கடிக்கும் வேட்டை மிருகங்களும் அசுத்தம் இல்லை; அது போல ஒரு பெண்ணின் வாய் எப்போதும் அசுத்தம் அடைவது இல்லை (மனு 5-130)

 

அதிசயம் 2 Men lived for 400 years!

கிருத யுகத்தில் மனிதன் 400 வயது வரை வாழ்ந்தான். பின்னர் ஒவ்வொரு யுகத்திலும் ஆயுள் ஒவ்வொரு கால் பகுதியை இழந்தது (அதாவது நூறு, நூறு ஆண்டுகளாகக் குறைந்து வந்தது (1-83)

வேறு பல இடங்களில் கலி யுகத்தில் மனிதனின் ஆயுள் 100 என்று மனு பகர்வார்.

 

திருக்கோவிலூர் ஞானானந்தா, காசி பூதலிங்க சுவாமிகள் முதலானோர் நமது காலத்திலேயே 150 முதல் 300 ஆண்டுகள் வரை வாழ்ந்த அற்புதங்களையும் நினைவு கூறுதல் சாலப் பொருந்தும்.

 

 

அதிசயம் 3 Manu lived when Saraswati River flowing for 1000 mile!

ஒரு மனிதனுக்கு பிரம்மஹத்தி விலக (பிராமணனைக் கொன்ற பாவம் விலக), அவன் சரஸ்வதி நதிக் கரையில் நடந்து கொண்டே வேதம் சொல்ல வேண்டும் என்பார் மனு. இதற்கு முன் அவன் 1000 மைல் நடக்க வேண்டும் என்று ஒரு பாட்டில் பகர்வார். ஆக மனு என்பவர் வேத காலத்தில், சரஸ்வதி நதி ஓடிய காலத்தில் இருந்தவர். வேதத்தின் ஒரு சாகை முழுவதையும் மூன்று முறை சொல்லிக் கொண்டு விரத உணவுகளை மட்டும் சாப்பிட வேண்டும் என்றும் இயம்புகிறார்.!(11-78)

 

ஆங்கிலம் மட்டும் படித்த அரைவேக்காடுகள் மனுவின் காலம் கி.மு இரண்டாம் நூற்றாண்டு என்று செப்புவர். ஆனால் மனு இக்ஷ்வாகுவுக்கும் முந்தியவர் என்று கண்ணன் பகவத் கீதையில் செப்பியதையும் நினைவு கூறுதல் பொருத்தம்!

 

அதுமட்டுமல்ல பூமிக்கு சர்க்கரையைக் கொண்டு வந்தவர் இக்ஷ்வாகு என்பதையும் சர்க்கரை சிந்து சமவெளியில் கண்டு பிடிக்கப்பட்டதையும்  நான்கு ஆண்டுகளுக்கு முன் இங்கு எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரையில் நிறுவியுள்ளேன்.

 

உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தில் பல மனுக்களின் பெயர்கள் இருப்பதை வேறு ஒரு ஆய்வுக் கட்டுரையில் கூறினேன்.

 

ஆக மனு என்பவர் மிக, மிகப் பழங்காலத்தில் வாழ்ந்தவர் என்று புலனாகும்.

மங்கட் என்பவர் இவரை கி.மு.5700க்கு முன்னதாக வைக்கிறார்.

 

சரஸ்வதி நதி மஹாபாரத காலத்திலேயெ வறண்டு போயிருந்ததை மஹாபாரதம் மற்றும் பிராமணங்கள் வாயிலாக நாம் அறிவோம்.

 

இந்திய அரசியல் சானத்துக்கு பார்லிமெண்ட் நேற்று கொண்டு வந்த அரசியல் சட்டத் திருத்தத்தை வைத்து இந்திய அரசியல் சட்டம் நேற்று தோன்றியது என்று சொன்னால் நம்மை எல்லோரும் இகழ்வாரன்றோ; இதுபோல மனு பற்றி வெளிநாட்டினர் தத்துப் பித்து என்று உளறி இருக்கின்றனர். உண்மையில் மனுவும் சரஸ்வதி நதியும் சிந்து  சமவெளி நாகரீக காலத்தவை அல்லது அதற்கும் முந்தியவை.

 

அதிசயம் 4 (Sumukan Mystery)

சுமுகன் என்றொரு மன்னனி பெயரை மனு (7-41) குறிப்பிடுகிறார். இந்திய இலக்கியங்களில் இவர் பெயர் இல்லை. ஆனால் சுமேரியாவில் இவர் பெயர் இருக்கிறது. இது குறித்து முன்னரே விரிவாவக ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளேன். வேறு எந்த இலக்கியமும் செப்பாத ஒரு விஷயத்தை மனு இயம்புவதிலிரந்தே அவரின் பழமை வெளிப்படும்.

manu2

அதிசயம் 5 (Soma Herb)

சோம யாகம் பற்றி மனு பல இடங்களில் பேசுகிறார். சோமலதை எனப்படும் மூலிகையின் விற்பனை, அதற்குள்ள தடைக ளையும் அவர் சொல்லுகிறார். சோம யாகத்துக்கான சோமக் கொடி வேத காலத்திலேயே அருகிவிட்டது. வேத கால இறுதியிலேயே இதற்கான மாற்றுத் தாவரங்களைக் கதைகத் துவங்கிவிட்டனர். ஆகவே வேத காலத்தின் ஆரம்பத்திலேயே மனு தர்ம சாத்திரம் தோன்றியிருத்தல் வேண்டும்.

3-87, 211, 257

4-26, 52

9-129, 11-7 to 12, 255

Sale of Soma – 3-158, 180, 10-80

 

 

அதிசயம் 6 No Interpolation!!!

வெளி நாட்டுக்காரர்கள் இந்திய இலக்கியங்களை மட்டம் தட்டுவதில் மன்னர்கள். இந்திய இலக்கியங்கள் எல்லாவற்றிலும் இடைச் செருகல் உண்டு என்று சொல்லி இந்துக்கள் மனதில்,  ஐயப்பாட்டைக் கிளப்பி இந்து  மத தையே ஆட்டம் காணச் செய்ய ஆசைப்பட்டவர்கள். ஆங்கிலம் படித்த நம்மூர் அசட்டுப் பிச்சுகளும் அதை அப்படியே நம்பி மேலும் உளறுவதைக் காணலாம்; வாழ்நாளில் 700 கீதை ஸ்லோககளை ஒரு முறை கூடப் படிக்காமல், கீதை பற்றி கேள்வி மட்டும் கேட்பர்! விநோதப் பிறவிகள்!!

 

இப்படிப்பட்ட வெளிநாட்டினர், மனு தர்ம சாத்திரத்தில் மட்டும் இடைச் செருகல் பற்றிக் கதைப்பதே இல்லை. ரிக்வேதத்தில் கிலம் (பிற்சேர்க்கை), தொல்காப்பியத்தில் பொருளதிகாரம் பிற்சேர்க்கை, சங்க இலக்கியத்தில் கலித்தொகை, பரிபாடல் எல்லாம் பிற்சேர்க்கை என்று கதைக்கும் மாக்கள், மனு தர்ம சாத்திரம் பற்றி வாயே திறக்கா!. இதை அப்படியே எடுத்துக் கொண்டால்தான் சூத்திரர்கள் பற்றிய பகுதிகளை எடுத்துக்காட்டி இந்து மதத்தை அழிக்கலாம் என்று நம்பினர் அந்தப் பேதைகள்.

 

உண்மையில்; சூத்திரருக்கு எதிரான பகுதிகள் சுங்க வம்ச பிராமணர் ஆட்சிக்காலத்தில் இடை யில் செருகப்பட்டவை.

 

இதற்கு என்ன ஆதாரம்?

 

கீழ்ஜாதிப் பெண்ணான, வசிட்டரின் மனிவியான அருந்ததியைப் புகழும் மனு, எல்லா ஜாதிகளிலும் உள்ள ரத்தினம் போன்ற பெண்களைக் கல்யாணம் செய்யலாம் என்பார். அது மட்டுமல்ல கீழ் ஜாதியில் படித்தவன் இருந்தால் அவனிடம் போய்க் கற்று அவனுக்கு குருவுக்குரிய மரியாதை செய்க என்கிறார்.

 

உலகில் பெண்களை மனு புகழ்ந்த மாதிரி எந்த நாட்டு இலக்கியத்திலும் பெண்கள் புகழப்பட்டதை இன்று வரை காண முடியாது! ஆனால் பெண்களுக்கு எதிரான சில ஸ்லோகங்கள் இடைச் செருகலாக சொருகப்பட்டுள்ளன. இத்தகைய முரண்பாடுகளே மனு தர்ம சாத்திரத்தில் இடைச் செருகல் உண்டு எனக்காட்டி நிற்கின்றன. ஆனால் வெளிநாட்டு ‘அறிஞர்கள்’ மனுதர்மத்தில் மட்டும் இடைச் செருகல் பற்றிப் பேசவே இல்லை. இது உலக மஹா அதிசயம்! ராமாயணத்திலும் மஹா பாரதத்திலும் கூட இடைச் செருகல் உண்டு என்று சொல்லும் இந்த “யோக்கியர்கள்” மனுவில் மட்டும் எல்லாவற்றையும் அப்படியே எடுத்துக் கொண்டு தாக்குவர்.

திராவிடக் கோமளிகள் திருக்குறளையே முழுதும் படிப்பதில்லை. மனுவையா படிக்கும்?

 

அதிசயம் 7 (Water Origin of Life on earth)

 

கடவுள் முதலில் தண்ணீரைப் படைத்தார் என்றும், உயிரினங்களைப் படைக்க எண்ணிய அவர்,  தண்ணீரில் தனது விந்துவை விட்டார் என்றும் அது பெரிய தங்க முட்டையாகி அதில் பிரம்மா தொன்றினார் என்றும் மனு கூறுவார். ( 1- 8 முதல் 10 வரை).

 

உலகில் தண்ணீர் தோன்றிய பின்னரே உயிரினம் தோன்றின என்ற விஞ்ஞான உண்மையும், தண்ணீரில் முதல் உயிர் தோன்றியது என்ற விஞ்ஞான உண்மையும், உலகம் முழுதும் கோள வடிவமானது (முட்டை) என்ற விஞ்ஞான உண்மையும் மனுவின் ஸ்லோகங்களில் பொதிந்து கிடப்பதை சொல்லத் தேவை இல்லை.

 

தொடரும்……………

 

Please read my earlier posts:–

Mystery of Manu: Rig Veda Mystery No.8, posted on 19 January 2015

 

The Sugarcane Mystery: Indus Valley and Ikshvaku Dynasty, posted on 19 November 2011

 

Sanskrit words in Sumerian Culture: Sumukan Mystery, posted on 12 May 2014)

 

–சுபம்–