































Posted by Tamil and Vedas on January 4, 2020
https://tamilandvedas.com/2020/01/04/%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-2-%e0%ae%85%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4-%e0%ae%b5/

RESEARCH ARTICLE WRITTEN BY LONDON SWAMINATHAN
Date: 4 September 2018
Time uploaded in London – 6-34 am (British Summer Time)
Post No. 5392
TAMIL WORDS IN THE RIG VEDA
உலகின் மிகப்பழைய நூல் ரிக்வேதம். கி.மு 1700 முதல் கி.மு.6000 வரை பலராலும் தேதி குறிப்பிடப்பட்ட நூல். இந்துக்களைப் பொறுத்தமட்டில் இதன் பழமைக்காக மதிக்கவில்லை. வேதம் இன்றி இந்து மதம் இல்லை. இந்தப் பெருமைமிக்க நூலில் நிறைய தமிழ் சொற்கள் இருக்கின்றன. மொழியியல் விதிகளைப் பயன்படுத்திப் பார்த்தால் மறைந்திருக்கும் மேலும் பல தமிழ்ச் சொற்கள் மேலுக்கு வரும்.
எதற்காக இந்த ஆராய்ச்சி?
நிறைய பேர் ரிக் வேத ஸம்ஸ்க்ருதம் பழமையானது என்றும் அதற்குப் பின்னர் வந்த பாணினி-காளிதாசன் கால ஸம்ஸ்க்ருதம் வேறு என்றும் சொல்லுவர். ஓரளவுக்கு அது உண்மைதான். இது எல்லாப் பழைய மொழிகளுக்கும் பொருந்தும். பழங்கால தமிழ், ஆங்கிலம் ஆகிய எந்த மொழியின் பழைய இலக்கணமும் வேறு; சொற்களின் பொருளும் வேறு.

இவ்வளவு பழமை வாந்த நூலில் உள்ள சொற்களை நாம் இன்றும் பயன்படுத்துவது வியப்புக்குரிய விஷயம்!
இதோ சில தமிழ்ச் சொற்கள்:-
எண்கள் பற்றி:-
ரிக் வேதத்தில் பத்து மண்டலங்கள் உள்ளன. அடைப்புக்குறிக்குள் உள்ள எண்களில்முதலில் மண்டலம், பின்னர் மந்திரத் துதியின் எண், அதிலுள்ள மந்திர வரியின் எண் என்ற வரிசையில் கொடுத்துள்ளேன். இந்த எண்களை எடுக்க உதவிய நூல் பகவான் சிங்கின் ‘வேதிக் ஹரப்பன்ஸ்’ Vedic Harappans என்ற நூலாகும்.
உஷ் ட் ர – ஒட்டகம் (ரிக். 1-138-2; 8-5-37;8-6-48)
கர்தப- கழுத (ர=ல)/ கழுதை (1-29-5; 3-53-23)
காகம்பிர- காகம் (6-48-17)
மயூர- மயில் (1-191-4; 3-45-1; 8-1-25)
சிம்ஹ- சிங்கம் (5-44-1)
உட்ச- ஊற்று (2-16-7)
கூப – கூவம்/ கிணறு 1-105-17
குல்யா – குளம் , கால்வாய்
நீர் – நீர்
பூமி-புவி 2-14-7
யூப – 5-2-7 சங்கத் தமிழ்
புஷ்ப/ பூ – அதர்வ 8-712
பலி- 1-70-9
மது- தேன் 1-90-6
மத்ஸ்ய/ மச்ச – 10-68-8
ரத்ன- 1-20-7
ரஜ்ஜுப் பொருத்தம் – ரஜ்ஜு 1-162-8
ராஜசூயம்- அதர்வ – 4-8-1
புறநானூற்றின் அடிக்குறிப்பில் ராஜசூயன் வேட்ட பெருநற்கிள்ளி என்ற பெயர் உள்ளது
சங்கு- அதர்வ 4-10-1
களம்- நெல் அடிக்கும் களம் (10-48-7)
XXXX

சில சொற்களை அப்படியே தமிழ்க் கவிதைகளில் பயன்படுத்தியுள்ளனர். அது ரிக்வேத காலம் முதல் இன்று வரை புழக்கத்தில் இருப்பதும் வியப்புக்குரிய செய்தி. இதோ சில சொற்கள்:
ரிஷபம் (6-16-47) (இடபம்/விடை – தேவாரத்தில்
வாரணம் (யானை) – ஆண்டாள் வாரணம் ஆயிரம்
கபி/கவி – குற்றாலக் குறவஞ்சி (10-86-5)
கோ (3-1-23)- கோவலன்/ கோபாலன் சிலப்பதிகாரம்
xxx
இன்னும் சில சொற்கள் சர்வ சாதாரணமாக பேச்சு வழக்கிலும் பத்திரிக்கைகளிலும் புழக்கத்தில் இருக்கின்றன.
ஸர்ப- சர்ப்பம்/பாம்பு (10-16-6),serpent
ம்ருக (மான்) – மிருகம்
மேஷ- மேட ராசி/ மேஷராசி
வராக – வராஹ அவதாரம்
ஹம்ச- அன்னம் (2-34-5)
ஆரண்யப் பசு – காட்டு மிருகம்/ எருமை (10-90-8) ;ஆரண்யம் (காடு) என்ற சொல் வேதாரண்யம் முதலிய ஊர்ப்பெயர்களில் காணப்படும்
பாச (கயிறு)- 2-27-16)
பஹு அன்ன – நிறைய உணவு
(பஹு என்பது தமிழில் வெகு என்று மாறும் (ப=வ)
அன்னம் – உணவு இப்பொழுதும் புழக்கத்தில் உள்ள சொல் – அன்ன தானம்
அங்குச- அங்குசம் (8-17-10)
கச (கசையடி)- (5-83-3)
தண்ட – தடி (8-33-6)
தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் – தமிழ்ப் பழம்ழொழி
பந்தன – கட்டுதல் (5-12-4); ரக்ஷா பந்தன்
தான்ய – தானியம் (5-53-13)
பீஜ – விதை (ப=வ) (5-53-13)
சகன் – சாணம் (அதர்வண வேதம் 3-14-4)
வது/ பெண்5-37-3
ஸ்வப்ன – சொப்பனம் – 2-28-10
வசனம், வாக்கியம், வார்த்தை

இவற்றிலிருந்து என்ன தெரிகிறது?
ரிக் வேதம் என்பது உலகிலேயே பழைய நூலாக இருந்தாலும் அவற்றிலுள்ள சொற்களை இன்றும் நாம் பயன்படுத்துகிறோம். நான் கொடுத்த எடுத்துக் காட்டுகள் தவிர நூற்றுக் கணக்கான சொற்கள் உள்ளன. இன்னும் ஆங்கிலத்தில் நமக்குத் தெரிந்த சாதாரன சொற்களையும் ஒப்பிட்டால் அடுத்த நிமீடமே நமக்கு ஏறத்தாழ ஆயிரம் ரிக்வேதச் சொற்கள் தெரிந்து விடும். முப்பதுக்கும் மேற்பட்ட ஆங்கில, ஜெர்மானிய, பிரெஞ்சு அறிஞர்கள் வேதங்களைப் பற்றி எழுதியுள்ளனர். இப்படி வெளிநாட்டுக்காரர்களே வேதத்தைப் படிக்க இயலுமானால் நம்மால் முடியாதா? இதை உணர்ந்து அனைவரும் முறையாக வேதத்தைப் பயிலல் வேண்டும்.
நிற்க
நான் ஒரு புதிய கருத்தை வெளியிட்டு வருகிறேன். பரஞ்சோதி முனிவர்கள் முதலானோர் மறைமுகமாக வெளியிட்ட கருத்து அது. அதாவது தமிழும் ஸம்ஸ்ருதமும் சிவ பெருமானின் உடுக்கையின் இரண்டு பக்கங்களில் இருந்து பிறந்தன. தமிழும் ஸம்ஸ்க்ருதமும் ஒரு தாயின் இரண்டு பிள்ளைகள்.
வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத்
தொடர்புடைய தென்மொழியை, உலகமெலாம் தொழுதேத்தும்
குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப்பாகர்
கடல் வரைப்பின் இதன் பெருமை யாவரே கணித்தறிவார்
–பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம்

கடவுள் தந்த தமிழ்
வழக்கினும் மதிக்கவியினும் மரபின் நாடி
நிழற்பொலி கணிச்சி மணி நெற்றியுமிழ் சங்கண்
தழற்புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் (கம்ப இராமா.ஆரணி. அகத்தி.41)
அவ்வாறில்லாவிடில் சிவ பெருமான், அகத்தியனை வடக்கிலிருந்து அனுப்பித் தமிழுக்கு இலக்கணம் செய்யக் கேட்டிருக்க மாட்டார். இந்த இரண்டு மொழிகளுக்குள்ள தொடர்பு போன்ற நெருக்கம் வேறு எந்த மொழிக்கும் இடையில் காண முடியாதது. சந்தி இலக்கணம், வேற்றுமை உருபுகள் முதலிய பல அம்சங்களில் இரண்டும் ஒன்றே!

வாழ்க தமிழ்! வளர்க ஸம்ஸ்க்ருதம்!!
–subham–
Posted by Tamil and Vedas on September 4, 2018
https://tamilandvedas.com/2018/09/04/%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b1/

Written by London Swaminathan
Date: 2 DECEMBER 2017
Time uploaded in London- 13-38
Post No. 4452
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
ரிக்வேதம் எவ்வளவு புதிர்கள் நிறைந்த து; யாருக்கும் எட்டாத கனி; எல்லோரையும் திணறடிக்கும் விடுகதை; சங்கேத மொழியில் விளையாடும் புலவர்களின் சொர்கம் — என்பதை முதல் மண்டலத்திலுள்ள 164-ஆம் எண் துதியைப் (RV 1-164) படித்தால் போதும். இதை நமக்குக் கண்டுபிடித்துக் கொடுத்தவர் தீர்கதமஸ் என்னும் முனிவர். அவர் அந்தகர்; அதனால் அவர் பெயர் ‘நீண்ட இருள்’! அவர் மமதா என்ற பெண்மணிக்குப் பிறந்தவர் என்பதால் தீர்கதமஸ் மாமதேயா என்பர். அவருடைய மகன் கக்ஷிவான் அவரும் கவிஞர். தீர்கதமஸ் பற்றிப் பல சுவையான கதைகள் உண்டு; இவரை ஆற்றில் தூக்கிப் போட்டதாகவும் பின்னர் வேறு ஒருவர் காப்பாற்றியதாகவும் சொல்லுவர். நூறு ஆண்டுகள் வாழ்ந்த வர் என்று வேதம் விளம்புகிறது.
இவர் பற்றிய சுவையான கதைகளைக் காண்பதற்கு முன்னர், இவர் போட்ட புதிர் என்ன என்பதைக் காண்போம்.
2.இவர் பெயரே புதிரானது– நீண்ட இருள்; உலகப் புகழ் பெற்ற கிரேக்க அந்தகக் கவி ஹோமருக்கும் முன்னால் புகழ்பெற்ற அந்தகக் கவிஞர் இவர். பெரும்பாலான புலவர்கள் தந்தையின் பெயரை இணைத்துக் கொள்வர். ஆனால் இவரோ தாயின் பெயரை இணைத்துப் பெண்ணினத்துக்குப் புகழ் சேர்த்தவர். இவர் தனக்கு முன்னால் வாழ்ந்த புரா ண புருஷர்களைப் பற்றிக் கதைப்பதால் இவரை பிற்காலத்தவர் என்றும் அறிவோம்

4.திருமூலர், சிவவாக்கியர், திருமழிசை ஆழ்வார் போன்றோர் எண்களை சகட்டு மேனிக்குப் பயன்படுத்தி பாடல்களுக்குப் பொருள் விளங்காமற் அல்லது எளிதில் பொருள் சொல்ல முடியாமற் செய்தது எல்லாம் ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்குள் நடந்தது. ஆனால் தீர்கதமஸோ இவர்களுக்கு எல்லாம் 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து எண்க ளை பாடலில் பயன்படுத்தினார் என்றால் பொருள் விளங்குவது கடினமே!
இதன் பொருள் “உண்மை ஒன்றே; அறிஞர்கள் அதைப் பலவாறாகப் பகர்வர்”.

உமாபத சென் என்பவர் இந்தத் துதியில் சப்தரிஷி மண்டலம், துருவ நட்சத்திரம், சூரியனின் பயணம், பூமியின் சுழற்சி, விஷ்ணுவின் மூன்றடி முதலியன சொல்லப்படுகிறது என்பார்.
12.சரஸ்வதி என்ற சொல்லைக்கூட சூரியன் என்று மொழிபெயர்க்கின்றனர் ஒரு மந்திரத்தில்.
13.மூன்று, ஐந்து, ஏழு, ஆறு போன்ற எண்கள் எல்லாவற்றையும் வெவ்வேறு பிரிவு பருவங்களாக மொழிபெயர்த்துள்ளனர் “அறிஞர்கள்”.
14.சுபர்ண என்ற சொல்லுக்கு சரியாக அர்த்தம் காண முடியாத லுட்விக் இதை இடை செருகல் என்று சொல்லி தப்பித்துக்கொள்கிறார்.
15.ஏழு என்பதற்கு சூரியனின் ஏழு கிரணங்கள், ஏழு பருவங்கள், ஏழு சஹோதரிகள் என்பதை ஏழு நதிகள் அல்லது ஏழு பசுக்கள், ஏழு இசை, ஏழு பறவைகள் என்றும் அறிஞர்கள் மொழிபெயர்த்துள்ளனர்
16.காயத்ரி முதலான 7 யாப்பிலக்கண அணிகளும் பேசப்பட்டுள்ளன.
கிரிப்பித், வில்சன், லுட்விக், சாயணர், ஹில்ப்ராண்ட், மாக்ஸ் முல்லர் ஆகியோர் ஆளுக்கு ஒரு கருத்து சொல்லுவதால் கடைசியாக வந்த வேத மந்திரம் கூட “அறிஞர்களைத்’ திணறவைக்கும் என்பதை அறியலாம். இதற்கு 500 ஆண்டுகளுக்கு முந்தைய மந்திரங்களும் ரிக் வேதத்தில் உள.
17).1 முதல் 10 வரையுள்ள எண்களை வைத்து விளையாடுகிறார் தீர்கதமஸ்! அனைவரும் படித்து விடுகதைக்கு வி டைட காண்பது சுவையாக இருக்கும்.
18.இதில் வானியல், வானிலையியல், பறவையியல், கணிதம், சமயம், சங்கேத மொழி (coded language) , காலக் கணக்கீடு, தத்துவம் என்று பல விஷயங்கள் பிரஸ்தாபிக்கப்படுகின்றன.

ரிக் வேதம் 1-164
ஒரு சில மந்திரங்களைக் கொடுத்துவிட்டு இரண்டாம் பகுதியில் தீர்க தமஸ் பற்றிய சுவையான கதை சொல்லுகிறேன்:-
“தெரியாமல்தான் கேட்கிறேன் ஓ முனிவர்களே! தெரிந்தவர்கள்தான் சொல்லுங்களேன்!
அறியாமையால் வினவுகிறேன்; அறிந்துகொள்வதற்காகத்தான்!
பிறவாத அந்த ஒன்று எது? (பிறவா யாக்கைப் பெரியோன் எவன்)
இந்த உலகத்தின் ஆறு பிரிவுகளைத் தாங்கி நிறுத்துகிறதே, அந்த ஒன்று!
1-164-6
(இங்கு ஆறு பிரிவு என்பதற்குப் பல வியாக்கியானங்கள் உண்டு)
“பொருள் விளங்காமல் வேதத்தின் துதியைப் பாடுவோரே! அதை வைத்து என்ன செய்வீர்– தேவர்கள் உறையும் பரலோக சாம்ராஜ்யத்தில் உள்ளவனை (அறியவில்லையே)
அவனை உணர்ந்தோரே அறிஞர்கள்/பூரணம் நிறைந்தோர்”
“இரண்டு பறவைகள் நண்பர்களாக ஒரே மரத்தில் அடைக்கலம் புகுந்தன. ஒரு பறவை பழங்களைத் தின்றன. மற்றொ ன்று சாப்பிடவில்லை. 164-20
(பரமாத்மா- ஜீவாத்/ட்மா= ஆடம் – ஈவ் )
“அவர்கள் இந்திரன் மித்திரன், வருணன், அக்னி என்று அழைக்கின்றனர்; இறக்கைகள் உடைய ‘கர்த்மன்’ என்பர்.
ஒரே உண்மைப்பொருளை முனிவர்கள் அக்னி என்றும் யமன் என்றும் மாதரிஸ்வான் என்றும் அழைக்கின்றனர்.
(கடவுள் ஒருவரே)” 164-46
(இன்னும் ஒரு புதிர்! இந்திரன் மித்ரன், வருணன் எல்லாம் தெரியும் ; இவர் சொல்லும் கருத்மான் யார் என்பதாகும்.
“கடவுளர், யாகம் மூலம் எல்லாவற்றையும் அடைந்தனர். பழமைச் சிறப்புடைய சாத்யர்கள் வசிக்கும் வானமண்டலத்துக்கு — சுவர்கத்துக்கு — இந்த தேவர்கள் சென்றனர்.” 164-50

(சாத்யர்கள் என்பதை சிறு கடவுள்கள் என்று 2000 ஆண்டுக்கு முந்தைய அமரகோசம் சொல்லும். சாயனர் காலத்தில் இச் சொல்லுக்குப் பொருள் விளங்காமல் போய்விட்டதென்று வில்சன் விமர்சனம் செய்கிறார்.
“செல்வம் தரும், புதையல் அளிக்கும், நற்பலன் தரும் சரஸ்வதியைக் கொண்டாடுவோம்”. 164-49
“வாக் (பேச்சு) என்பதை, விஷயம் அறிந்த பிராமணர்கள் நான்கு வகையாகப் பிரிப்பர். மூன்று ரஹசியமானவை; மனிதர்கள் கதைப்பதோ நாலாம் வகை”. 164-45
(இதில் மூன்று என்பதை மூன்று வேதம் என்று சிலரும் நாலு வகைப் பேச்சுகளில் மூன்று என்றும் உரை அளிப்பர். நாலு வகைப் பேச்சு: பரா, பஸ்யந்தி, மத்யமா, வைகரி.
சரஸ்வதி என்ற சொல்லைக்கூட சூரியன் என்று மொழி பெயர்க்கின்றனர் ஒரு மந்திரத்தில்.
மூன்று, ஐந்து, ஏழு, ஆறு போன்ற எண்கள் எல்லாவற்றையும் வெவ்வேறு பிரிவு பருவங்களாக மொழிபெயர்த்துள்ளனர் “அறிஞர்கள்”.
சுபர்ண என்ற சொல்லுக்கு சரியாக அர்த்தம் காண முடியாத லுட்விக் இதை இடைச்செருகல் என்று சொல்லி தப்பித்துக்கொள்கிறார்.
ஏழு என்பதற்கு சூரியனின் ஏழு கிரணங்கள், ஏழு பருவங்கள் என்றும், ஏழு சஹோதரிகள் என்பதை ஏழு நதிகள் அல்லது ஏழு பசுக்கள், ஏழு இசை, ஏழு பறவைகள் என்றும் அறிஞர்கள் மொழி பெயர்த்துள்ளனர்
காயத்ரி முதலான 7 யாப்பிலக்கண அணிகளும் பேசப்பட்டுள்ளன.
கிரிப்பித், வில்சன், லுட்விக், சாயணர், ஹில்ப்ராண்ட், மாக்ஸ் முல்லர் ஆகியோர் ஆளுக்கு ஒரு கருத்து சொல்லுவதால் கடைசியாக வந்த வேத மந்திரம் கூட “அறிஞர்களைத்’ திணறவைக்கும் என்பதை அறியலாம். இதற்கு 500 ஆண்டுகளுக்கு முந்தைய மந்திரங்களும் ரிக் வேதத்தில் உள.
1 முதல் 10 வரையுள்ள எண்களை வைத்து விளையாடுகிறார் தீர்கதமஸ்! அனைவரும் படித்து விடுகதைக்கு வி டை காண்பது சுவையாக இருக்கும்.
தொடரும்……………..

—-சுபம், சுபம்—-
Posted by Tamil and Vedas on December 2, 2017
https://tamilandvedas.com/2017/12/02/%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b8%e0%af%8d/

Written by London Swaminathan
Date:17 October 2017
Time uploaded in London- 21-28
Post No. 4310
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
5000 ஆண்டுகளுக்கு முன்னர், வியாச மஹரிஷி, வேதங்களைக் காப்பாற்ற, அவைகளை நான்காகப் பிரித்து நாலு சீடர்களை அழைத்து இதைப் பரப்புங்கள் என்றார். எழுதாக் கிளவியாக (கிளவி= சொல்) 5000 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்றும் அது ஒலிப்பது உலக அதிசயமாகக் கருதப்படுகிறது. வியாசர் உலக மஹா ஜீனியஸ் GENIUS; பேரறிவாளன்! தனது காலத்தில் இருந்த அத்தனை கதைகளையும் நீதி வாக்கியங்களையும் உலகிலேயே மிகப் பெரிய இதிஹாசமான மஹாபரதத்தில் இணைத்தார். 20,000 மந்திரங்களை உடைய 4 வேதங்களையும் தொகுத்தார். இனி உலகில் இப்படிப்பட்ட பணியைச் செய்ய எவரால் முடியும்?
ரிக் வேத மந்திரங்களைத் தொகுத்த வியாசர், அதை மனம் போன போக்கில் அவியல் போலச் செய்யாமல், அழகாகச் செய்து கொடுத்தார். இதோ சில சுவையான தகவல்கள்:-
ரிக்வேதம் என்பது ஒரு புத்தகம் இல்லை; ஒரு கவிதைத் தொகுப்பு.
இது பல்வேறு காலங்களில் வாழ்ந்த புலவர்கள் ‘கண்டுபிடித்த’ மந்திரங்கள்; அதாவது அவை எப்போதும் இருக்கும்; ஞான த்ருஷ்டி உடைய முனிவர்கள் அதைக் கண்டு பாடுவர். அதனால் அவர்களுக்கு மந்திரங்களைப் பார்த்தவர்கள் — மந்த்ர த்ருஷ்டா — என்று பெயர்.
இது கவிதைத் தொகுப்பு; பல வகை யாப்பு அணிகளில் அமைந்துள்ளது. இலக்கணமும், மொழியும் கூட மாறுபடும்.

ரிக் வேதத்தில் மொத்தம் பத்து மண்டலங்கள்; பின்னர் இதை எட்டு அஷ்டகங்களாகவும் பிரித்தனர்.
இரண்டாவது மண்டலம் முதல் ஏழாவது மண்டலம் வரையுள்ள மண்டலங்கள் குடும்ப மண்டலங்கள் என்று அழைக்கப்படும் அதாவது 2, 3, 4, 5, 6,7 ஆகிய ஆறு மண்டலங்களும் ஆறு மஹரிஷிகளின் குடும்பத்தினர் பாடியவை/ கண்டுபிடித்தவை.
வியாசர் பிரித்த மண்டலங்களின் உட்பிரிவுகள் அனுவாகம், சூக்தம்.
அஷ்டக முறையில் உட்பிரிவுகள்:- அத்யாயம், வர்கம்
ஒவ்வொரு வர்கமும், ஒரு (Lesson) பாடத்துக்கு வசதியாக இருப்பதால் இந்த அஷ்டக முறை வைதீகர்களிடையே பிரசித்தம்.

பத்து மண்டல அமைப்பு
முதல் மண்டலம்- 24 அனுவாகங்கள்
இரண்டாவது மண்டலம் – 4 அனுவாகங்கள்
மூன்றாவது, நாலாவது மண்டலம் – 5 அனுவாகங்கள்
5,6, 7 ஆவது மண்டலம் – 6 அனுவாகங்கள்
எட்டாவது மண்டலம் – 10 அனுவாகங்கள்
ஒன்பதாவது மண்டலம் -7 அனுவாகங்கள்
பத்தாவது மண்டலம் – 12 அனுவாகங்கள்
அனுவாகங்களின் உட்பிரிவு சூக்தம்; ஒவ்வொரு சூக்தத்துக்கும் ஒரு ரிஷி, தேவதை, சந்தஸ் உண்டு. இது தெரிந்தால்தான் முழுப் பொருளும் விளங்கும்.

6 குடும்ப மண்டல ரிஷிகள்
இரண்டாவது- க்ருத்சமட
மூன்றாவது- விஸ்வாமித்ர
நாலாவது- வாமதேவ
ஐந்தாவது- அத்ரி
ஆறாவது- பரத்வாஜ
ஏழ்ழாவது- வசிஷ்ட
இந்தக் குடும்ப மண்டலங்களில் இன்னொரு அற்புதமும் உண்டு. முதல் மந்திரம் அக்னி தேவனைப் பற்றியது.
உலக எழுத்துக்களுக்கு எல்லாம் முதல் எழுத்து ‘அ’
ரிக் வேதத்தின் முதல் துதியும் அ- வில்தான் துவங்கும் இதனால்தான் வள்ளுவர் ‘அகர முதல எழுத்து எல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்றார். பகவத் கீதையில் எழுத்துக்களில் நான் ‘அ’ என்று கிருஷ்ணன் சொன்னார்.
அக்னிக்கு அடுத்தபடியாக இந்திரன் துதிகள் வரும்.
பின்னர், மற்ற தெய்வங்களின் துதிகள் வரும்
இது மட்டுமல்ல; முந்தைய துதிகளை உடைய அடுத்த துதியில் மந்திரங்கள் குறைந்து கொண்டே வரும் (ஆனால் சில விதி விலக்குகள் உண்டு)
எட்டாவது மண்டலத்தில் இப்படி ஒரு வரிசை
முறையைக் காண முடியாவிட்டாலும் கண்வர் குடும்பத்தினரின் மந்திரங்களை அதிகம் காணலாம்.
ஒன்பதாவது மண்டலம் முழுதும் சோம பானத்தைப் பற்றியவை.
இரண்டு முதல் ஏழு மண்டலம் வரை உள்ள ரிஷிகளே இவைகளைப் பாடியுள்ளனர். ஆனால் வியாசர் இதிலும் ஒரு அழகைப் புகுத்தியுள்ளார்.
1-67 வரையுள்ள மந்திரங்கள்/சூக்தங்கள் காயத்ரி அணியிலும்
68-86 வரையுள்ளவை ஜகதி அணியிலும்
87-97 வரையுள்ளவை த்ருஷ்டுப் அணியிலும்
98-144 வரையுள்ளவை மற்ற அணிகளிலும் உள்ளன.
முதல் மண்டலமும் பத்தாவது மண்டலமும் இளைய ரிஷிகளின் தொகுப்பாகும். பத்தாவது மண்டலத்திலும் வியாசர் ஒரு ஒழுங்கு முறையை வைத்துள்ளார். இறங்கு வரிசையில்— மந்திரங்கள் குறைந்து–கொண்டே வரும்.

2-7 வரையுள்ள 6 மண்டலங்களும் பழமையானவை என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர். ஆனால் அதற்குள் முதல் எது? கடைசி எது? என்பதில் கருத்து வேறுபாடு உளது.
எட்டாவது மண்டலத்தின் கடைசியில் ஒட்டுப்போட்டுள்ள 11 சூக்தங்கள் ‘வாலகில்ய’ சூக்தம் எனப்படும். இவை பிற் சேர்க்கை என்பதையும் அனைவரும் ஒப்புக் கொள்வர். சாயனர், இதற்கு உரை எழுதாவிடினும் காத்யாயனரின் அனுக்ரமணியில் (இண்டெக்ஸ் INDEX) இவை கணக்கிடப்பட்டுள்ளன.
–தொடரும்
Posted by Tamil and Vedas on October 17, 2017
https://tamilandvedas.com/2017/10/17/%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4-%e0%ae%85%e0%ae%ae/

Written by London Swaminathan
Date: 17 September 2017
Time uploaded in London- 6-56 am
Post No. 4220
Pictures are taken from various sources; thanks.
பெண்களை தாயார் ஸ்தானத்தில் வைக்கும்போது அவர்களை இந்து மதம் புகழ்வது போல வேறு எந்த மதமும் புகழ்வதில்லை; தமிழ் சம்ஸ்கிருத நூல்களில் கண்டது போல வேறு எங்கும் கண்டதில்லை. மனு தர்ம சாஸ்திரமோ பெண்களை உச்சானிக் கொம்பில் வைத்து போற்றுகிறது. அவர்கள் அழுதால் அந்தக் குடும்பம் அல்லது அதற்குக் காரணமானவர் வேருடன் சாய்வர் என்று எச்சரிக்கிறார் மனு. பெண்களுக்கு நகை நட்டுகளை வாங்கிக் கொடுத்து அவர்களை எப்போதும் மகிழ்ச்சிக் கடலில் மிதக்க வைக்க வேண்டும் என்றும் உலகிற்கு புத்திமதி சொல்கிறார். சுத்த மான இடங்கள் எவை என்பதை பட்டியலிடுகையில் பெண்களின் வாய் எப்போதும் சுத்தமானது என்றும் சொல்லுகிறார் மனு (எனது பழைய கட்டுரைகளில் ஸ்லோக எண்களுடன் மேல் விவரம் காண்க)
மேல் நாட்டு இலக்கியங்களில் பெண்களின் அழகை வருணிப்பர்; அவர்களைத் தூற்றுவர். ஆங்கில மஹா கவி ஷேக்ஸ்பியர் நாடக வசனங்களிலும் இதைக் காணலாம்; கம்பனிலும் இதைக் காணலாம். நீதி வெண்பாவிலும் இதைக் காணலாம்; திருக்குறளிலும் இதைப் படிக்கலாம்.
ஆனால் தாய், சஹோதரி என்ற நிலையில் நாம் புகழ்வோம்; மேல்நாட்டு இலக்கியங்களில் அப்படி இல்லை!
அதிகம் கேட்டிராத நீதி வெண்பாப் பாடலைப் பார்ப்போம்:
அத்தி மலரும் அருங்காக்கை வெண்ணிறமுங்
கத்து புனல் மீன் பதமுங் கண்டாலும் — பித்தரே
கானார் தெரியற் கடவுளருங் காண்பரோ
மானார் விழியார் மனம்.
பொருள்:
பித்தரே= பெண் மயக்கம் கொண்ட பித்தர்களே; பைத்தியக்காரர்களே!
அரு = பார்ப்பதற்கு அருமையான
அத்தி மலரும் = அத்திப் பூவும்
காக்கை வெண்ணிறமும் = காக்கையின் வெள்ளை நிறமும்
கத்து புனல் மீன் பதமும் = ஒலிக்கின்ற கடலில் உள்ள பெரு மீன்களின் கால்களும்
கண்டாலும் = ஒருக்கால் பார்க்க இயன்றாலும்
(பெண்களின் மன நிலையை நம்மால் காண/ அறிய முடியாது)
(நாம் மட்டும் அல்ல)
கான் ஆர் தெரியல் கடவுளரும் = மணம் பொருந்திய மாலைகளை உடைய தேவரும்
மான் ஆர் விழியார் மனம் = மான் பார்வை போலும் மருண்ட கண்களை உடைய அப்பெ ண்களின் நெஞ்சத்தைக் காண்பரோ = காண்பார்களோ?
(அவர்களும் காண மாட்டார்)

ஷேக்ஸ்பியர் என்ன சொல்கிறார்?
புலியின் இதயம், பெண்ணின் அழகிய தோலுக்குள் மறைந்திருக்கிறது
ஹென்ரி 6- பகுதி 3
Oh tiger’s heart wrapped in a woman’s hide – York
Henry VI Part 3
ஒரு விலைமாது போல சொற்களால் என் இதயத்தைத் திறந்து காட்டுவேன்– ஹாம்லெட்
Must, like a whore, unpack my heart with words – Hamlet
ரிக் வேதத்தில் ஊர்வசிக்கும் (10-95) புரூருவசுக்கும் இடையே நடை பெறும் அற்புதமான உரையாடல் உளது; அதில் ஊர்வசி சொல்கிறாள்
“ வேண்டாம்; புரூருவஸ், இறந்து விடாதே, ம றைந்து விடாதே. கெட்ட ஓநாய்கள் உன்னை விழுங்கிவிடக் கூடாது.
பெண்களுடன் நிரந்தர நட்பு என்று எதுவுமே கிடையாது; பெண்களின் இதயம் புலியின் (கழுதைப் புலி) இதயம் போன்றது.
ஷேக்ஸ்பியர் சொன்ன அதே சொற்கள்!
Nay, do not die Puruvas, nor vanish;
let not the evil-omened wolves devour thee.
With women, there can be no lasting friendship; hearts of the hyenas are the hearts of women.
RV 10-95-15
கம்பன், வள்ளுவன், வேத கால ரிஷி, ஷேக்ஸ்பியர் ஆகியோர் எச்சரிக்கும் அழகே தனி! ஒப்பிட்டு மகிழ்க!
My Old Article:

tamilandvedas.com/tag/பெண்களின்…
Posts about பெண்களின் … பெண்களின் எதிரியா? … கம்பன், …
TAGS: பெண் மனம், புலியின் இதயம், ஷேக்ஸ்பியர், ரிக்வேதம், நீதி வெண்பா
–Subham–
Posted by Tamil and Vedas on September 17, 2017
https://tamilandvedas.com/2017/09/17/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/
Written by London swaminathan
Research Article No.1860; Dated 12 May 2015.
Uploaded in London at 16-42
உலகின் மிகப் பழைய நூல் ரிக் வேதம். இதை இந்து மதத்தைக் குறைகூறுவதையே வாடிக்கையாகக் கொண்ட அமெரிக்க “அறிஞர்களும்” கி.மு.1700 என்று தேதி குறித்துள்ளனர். இதில் சபா, சமிதி என்ற இரண்டு ஜனநாயக அமைப்புகள் பற்றி நிறைய துதிகளில் பாடப்படுகிறது. இதில் உறுப்பினர்களாக இருந்தவர்களில் பெண்களும் உண்டு!! உலகில் பெரும்பாலான நாடுகளில் நாகரீகம் என்பதே தெரியாமல் இருந்த காலத்தில்—அப்படியே நாகரீகம் இருந்த இடத்திலும் பெண்களுக்கு உரிமை தரப்படாத காலத்தில் – பெண்களும் உறுப்பினர் என்றும் அவர்கள் சிறந்த பேச்சாளர்கள் என்றும் ரிக் வேதம் கூறுவது எல்லா இந்தியர்களும் பெருமைப்பட்வேண்டிய விஷயம்.
இது உண்மை-வெறும் புகழ்ச்சி அல்ல- என்பதற்கு “உலகிலேயே மிகவும் புத்திசாலியான பெண்” என்ற கட்டுரையில் வேறு ஒரு உதாரணத்தையும் முன்னரே தந்தேன். 2850 ஆண்டுகளுக்கு முன்னர் மாபெரும் அகில இந்திய தத்துவ மாநாட்டை ஜனக மாமன்னன் கூட்டினான். அதில் யாக்ஞவல்கியர் என்பவர் ஆயிரம் பொற்காசுகள் பரிசை எடுத்துச் செல்ல முயல்கையில் செல்வி கார்க்கி வாசக்னவி என்ற பெண் தடுத்து நிறுத்தி தத்துவ விஷயங்களை அலசியதை முன்னரே நீங்கள் அறிவீர்கள். ஆக ரிக்வேதம் சொல்லுவது மிகைப்படுத்தப்பட்ட கூற்று அல்ல.
சபை, சமிதி என்ற சொற்கள் இன்று இமயம் முதல் குமரி வரை, தமிழ், ஆங்கிலம் உள்பட பல மொழிகளில் அப்படியே பயன்படுத்தப் படுகின்றன. தொல்காப்பியர் ச- என்னும் எழுத்தைத் தமிழர்கள் முதல் எழுத்தாகப் பயன்படுத்தக் கூடாது என்று தடை போட்டு விட்டதால் நாம் “சபை” என்ற சொல்லை “அவை” என்று மாற்றிக் கொண்டோம். மற்ற மாநிலங்களில் விதான் சபா என்பர் ; நாம் சட்டப் பேரவை (சபை=அவை) என்போம். சமிதி என்ற சொல் கமிட்டீ (சமிட்டி=சமிதி=கமிட்டி) என்ற ஆங்கிலச் சொல்லாக மருவி உலகம் முழுதும் நிலவுகிறது.
நூற்றுக் கணக்கான ரிக் வேதச் சொற்களை இந்தியர்கள் தினமும் அன்றாடப் பேச்சு வழக்கில் பயன்படுத்துகிறோம் அதில் இந்த சபையும் சமிதியும் அடக்கம்.
இவை இரண்டும் அர்த்தம் மாறாமல் இன்றும் லோக் சபை, ராஜ்ய சபை, விதான் சபை என்ற சொற்களில் பயன்படுகின்றன. அதர்வ வேதமானது இவ்விரு சபைகளையும் பிரஜாபதியின் இரண்டு மகள்கள் என்று வருணிக்கும்.
பீஹார் சட்ட சபை
சபை சமிதி சம்பந்தமாகப் புழங்கும் சொற்களைப் பட்டியலிட்டால் இன்றைய தினம் போலவே அன்றும் சபாநாயகர், சபைத் தலைவர், பெண் அங்கத்தினர், சட்டம் இயற்றல், மக்களைக் கலந்தாலோசித்தல் முதலியன இருந்தது புலனாகிறது.
சபையை விடச் சமிதிக்கு குறைவான அதிகாரங்கள் இருந்தன. ஆனால் சமிதி என்பது போர்க்கால கவுன்சில் என்று சாயனர் பாஷ்யம் சொல்லும்.சபைக்கும் சமிதிக்கும் ராஜாவும் வந்தை வேதம் குறிப்பிடும்.
இன்றும் கூட பிரிட்டன் முதலிய நாடுகளில் அரசின் கொள்கைகளை அறிவிக்கவும், பார்லிமெண்டைத் துவக்கிவைக்கவும் ராணி அல்லது ராஜா வருகிறார். இதெல்லாம் அக்கால வழக்கை ஒட்டியதே.
ராஜாவே தனது மகனை அடுத்த ராஜாவாக நியமிக்கும் அதிகாரம் இருந்தபோதிலும் மக்களில் முக்கியமான தரப்பினரை அழைத்து ஒப்புதல் பெறுவது வழக்கம். தசரதனும் தனது முடிவை நாட்டு மக்களுக்கு அறிவிப்பதற்கு முன்னர் முக்கியப் பிரமுகர்களை அழைத்து ஆலோசித்த பின்னரே ராமனுக்கு முடிசூட்ட முடிவு செய்வதாகப் படிக்கிறோம். விஜயன் என்பவன் செய்த கெட்ட செயல்களால் நாடு கடத்தப்பட்டு இலங்கையில் ஒரு புதிய அரசை நிறுவியதை மஹாவம்சம் மூலம் நாம் அறிவோம். மனு ஸ்மிருதியும் தீய செயல்களால் பதவி இழந்த மன்னர்களின் பட்டியலைத் தருகிறது.
ராஜஸ்தான் சட்ட சபை
இனி வேதத்தில் இருந்து சில குறிப்புகள்:
1.சபையின் பெண் உறுப்பினர்கள் சபாவதி என்று அழைக்கப்பட்டனர் (RV 1-167-3) அவர்கள் சபையில் உரிய சொற்களையே பேசுவர். சட்டத்தைப் பாதுகாக்கும் பெண் மூன்று முறை சபைக்கு வருவார் என்றும் ஒரு மந்திரம் (RV 3-56-5) சொல்லும். இன்று நாம் இதன் முழுப் பொருளையும் உணரமுடியாது.
2.சபையில் முக்கிய உறுப்பினர்கள் சந்தித்து, முக்கிய விஷயங்களை விவாதித்தனர். அதை ஏற்பாடு செய்பவர் சபாஸ்தாணு (அவையின் தூண்) என்று அழைக்கப்பட்டார் (RV.6-28-6; 8-4-9; 10-34-6; 7-12-1; 8-10-5; 12-1-56; 19-55-6 etc). சபையில் சண்டை, சச்சரவுகளும் தீர்த்துவைக்கப்பட்டதாக மஹீந்தரா என்பவர் வாஜசனேயி சம்ஹிதை உரையில் சொல்லுகிறார். கிராம சபை கூடும் இடம் என்றும், செல்வந்தர்கள் அங்கம் வகித்ததாகவும் குறிப்புகள் உள (பிரிட்டனில் இப்பொழுதும் செல்வந்தர்கள், பிரபுக்கள் இடம்பெறும் ஹவுஸ் ஆப் லார்ட்ஸ் உள்ளது!)
3.முக்கியப் பங்காற்றியவர்கள் ‘சபேயர்கள்’ என்று அழைக்கப்பட்டனர்.சபையில் தரமான உயர்ந்த சொற்கள் பேசுவதை ஒரு மந்திரம் குறிப்பிடுகிறது (RV 2-24-13; AV 20-12-8; VS 22-22)
4.சமிதி, சபைக்கு ராஜா வருவது பற்றியும் மந்திரங்கள் உள்ளன. அவர்களுடைய கருத்துக்களை ராஜா கேட்டறிந்தார். பிற்கால தமிழ், சம்ஸ்கிருத இலக்கியங்களில் இது பற்றிய குறிப்புகள் மற்றும் எண்பேராயம் (எட்டு பேர் அமைச்சரவை), ஐம்பெருங்குழு ( ஐந்து பேர் ஆலோசனைக் குழு), அஷ்ட திக் கஜங்கள், நவரத்னங்கள் முதலிய பல அமைச்சர்/அறிஞர் குழுக்கள் பற்றியும் தகவல்கள் கிடைக்கின்றன.
5.வேதத்தில் சபை, சமிதி பற்றி வரும் குறிப்புகளையும், அது தொடர்பாக உண்டாக்கப்பட்ட சொற்றொடர்களையும் பார்க்கையில் கி.மு.1700-க்கும் நீண்ட நெடுங்காலத்துக்கு முன்னரே சபையும் சமிதியும் உண்டாகி இருக்கும் என்பதை ஊகிப்பது கடினமில்லை. சுமேரிய, எகிப்திய, மினோவன், மைசீனிய, கிரேக்க சாம்ராஜ்யங்களில் கி.மு 1700ஐ ஒட்டி இத்தகைய அமைப்புகள் எதுவுமில்லை. ஆகவே உலகின் முதல் ஜனநாயக நாடு இந்தியாதான். பெண்களையும் உறுப்பினர் ஆக்கும் மனப்பக்குவம் உலகில் வேறு எங்கும் காணக்கிடைக்காதது! அரசன் மனைவியோ, மகளோ அதிகாரம் பெறுவதில் வியப்பில்லை. அது குல முறைப்படி அல்லது ராஜா வகித்த பதவி வழியாகக் கிடைக்கக்கூடியது. செல்வி வாசக்னவி, மைத்ரேயி போன்ற தனிநபர் ஒரு சபைக்குச் செல்வது அறிவு முதிர்ச்சியின் உச்சம் ஆகும்!
கீழே மக்களவையின் படம் (லோக் சபா)

Posted by Tamil and Vedas on May 12, 2015
https://tamilandvedas.com/2015/05/12/%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%81-1700-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%87/
கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1382; தேதி நவம்பர் 1, 2014.
உலகின் மிகப்பழைய நூல் ரிக்வேதம். வியாசர் என்பவர் இதைத் தொகுத்தார். 5200 ஆண்டுகளுக்கு முன் வேதங்கள் அளவுகடந்து பெருகிவிட்டன. யார் எதைப் படிப்பது? எப்படி மனனம் செய்வது? கடல் போலப் பரந்துவிட்டதே? என்று கவலைப்பட்ட வியாசர் வேதத் துதிப்பாடல்களை நான்காகப் பிரித்து நாலு சிஷ்யர்களைக் கூப்பீட்டு நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பகுதிகளை மட்டும் பரப்புங்கள் என்றார். ரிக், யஜூர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களில் மிகப் பழையது ரிக் வேதம் என்று உலகமே ஒப்புக் கொண்டுவிட்டது. அதில் பத்து மண்டலங்கள் உள்ளன. ஒன்று, பத்து ஆகிய மண்டலம் தவிர ஏனையவை ஒவ்வொரு ரிஷியின் குடும்பத்தினர் பாடிய பாடல்களாகும்.
ஆறாவது மண்டலம் பாரத்வாஜ ரிஷியின் மண்டலம் ஆகும். இதில் 27-ஆவது துதியில் ஹரியூபிய என்னும் ஒரு சொல் வருகிறது. வழக்கம் போல வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் இங்கேயும் உளறிக்கொட்டி கிளறி மூடியிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் எழுதியதாலும், அப்போது பிரிட்டிஷ்காரகள் நம் நாட்டை ஆண்டதாலும் நம் ஊர் மக்குகள், அசடுகள் அவர்கள் சொன்னதை எல்லாம் வேதத்துக்கு மேலான வேதம் என்று நம்பிவிட்டன!!
நல்ல வேளை! இந்துக்கள் செய்த பாக்கியம்! அத்தனை வெள்ளைத் தோல் “அறிஞர்”களும் ஆளுக்கு ஒன்றைத் தத்துப் பித்து என்று எழுதிவிட்டனர். எல்லோரும் ஒரே கருத்தை எழுதி இருந்தால் இவ்வளவு நேரம் இந்துமதத்தையே “த்வம்சம்” செது அழித்திருப்பர். ஆளாளுக்கு ஒவ்வொரு வகையில் உளறியதால் நம் மதம் பிழைத்தது. அவர்கள் சொன்ன ஒரு கருத்து ஹரியூபிய என்பது ஹரப்பா என்பதாகும்.
கிழக்கு பஞ்சாபில் ராவி நதிக்கரையில் ஹரப்பா நகரம் இருக்கிறது. இப்போது இது பாகிஸ்தான் எல்லைக்குள் இருக்கிறது. இதுவும் மொஹஞ்சதாரோ என்னும் நகரமும் சிந்து சமவெளி நாகரீகத்தின் மிகப்பெரிய இரண்டு நகரங்கள் ஆகும். உலகம் வியக்கும் செங்கற் கட்டிடங்களையும் அருமையான திட்டமிடப்பட்ட நகர அமைப்பையும் உடையன இவ்விரு ஊர்களும்.
நகரமா? நதியா?
ரிக்வேத சூக்தத்தில் வரும் ஹரியூபிய என்ற சொல்லை நதி என்றும் ஊர்ப்பெயர் என்றும் சொல்லுவர் சிலர். இன்னொருவர் “ஐரோப்பா” என்பதே ஹரியூப்பியவில் இருந்து என்றும் சொல்லி இருக்கிறார். உளறுவதற்கு வெள்ளைக்காரகள் மட்டும்தான் உரிமை வாங்கி இருக்கிறார்களா? நாங்கள் உளறக்கூடாதா? என்று இப்போது “பிளாக்:குகள் எழுதுவோரிடயே ஒரு போட்டி!! தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரன்; பிளாக் எழுதுபவன் எல்லாம் அறிஞன் என்று ஆகிவிட்டது. நிற்க.
லுட்விக் என்பவர் இதை யாவ்யாவதி நதியின் மேல் உள்ள நகரம் என்று சொல்வதாக வேதங்களுக்கு இண்டெக்ஸ் தயாரித்த கீத், மக் டொனல் எழுதி வைத்துள்ளனர்.
ஹில்பிராண்ட் என்பவர் குரும் நதியின் உபநதி இது என்று கூறுகிறார்.
வேதத்துக்கு பாஷ்யம் எழுதிய சாயனர் இதை நதி என்பார்.
இந்தத் துதியை மொழி பெயர்த்த கிரிப்பித் என்பவர், அபயவர்த்தின் சாயமான என்ற மன்னன் விரிச்சிவன் என்பவர்களைத் தோற்கடித்த இடம் என்கிறார். ‘’ஹரியூப’’ என்றால் பொன் மயமான யூப தூண்கள் என்று பொருள். ஆகவே ஹரி யூப என்பது வேத கால நகரம் என்ற பொருள் தொனிக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சங்க காலத்திலேயே யூப நெடுந்தூண் என்று சம்ஸ்கிருதச் சொல் பயன் படுத்தப்படுகிறது. அந்த அளவுக்கு தமிழ் மன்னர்கள் யாக யக்ஞங்களை செய்து புகழடைந்தனர்.

போர்னியோ தீவில் (இந்தோநேசியா) மனிதர்கள் காலடி படாத காடு என்று நினைத்த அடர்ந்த காட்டுக்குள் மூலவர்மன் என்பவனின் யூப நெடுந்தூன் கல்வெட்டுடன் கிடைத்ததை காஞ்சிப் பெரியவர் 1932 சென்னைச் சொற்பொழிவுகளில் குறிப்பீட்டுள்ளார். ஆகவே யூபம் என்பது சிந்து சமவெளி நாகரீக ஹரியூப்பியவில் மட்டும் இன்றி 2000 ஆண்டுகளாக ஆசியா முழுதும் பரவிவிட்டது தெரிகிறது.
யூப ஸ்தம்பம் என்பது வேதத்தில் ஆகுதியாக்கப்படும் யாகப் பசு கட்டப்படும் இடம் அல்லது வேதச் சடங்கின் வெற்றியின் நினைவாக எழுப்பபடும் தூண் ஆகும். சங்க இலக்கியத்தில் குறைந்தது நான்கு இடங்களில் ரிக்வேதத்தில் பயன்படுத்தப்பட்ட அதே யூப என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியும், கரிகால் பெருவளத்தானும், பெருநற்கிள்ளியும் யாகங்கள் செய்து புகழ் அடைந்ததை சங்க இலக்கியப் பாடல்கள் விதந்து ஓதும். யூப என்ற சம்ஸ்கிருத சொல் வழங்கும் நான்கு பாடல்கள்:—
புறநானூறு- 15, 224
மதுரைக்காஞ்சி – வரி 27
பதிற்றுப்பத்து – 67–10

Samudra Gupta’s gold coin with Yupa post near the Horse.
ஆக, ஹரியூப்பிய என்பது ஹரப்பாதான் என்று நம்புவோர் பொன் மயமான ஹரி+யூப நெடுந்தூண் நடப்பட்ட நகரம்தான் அது என்பதை ஒப்புக் கொண்டதாக அர்த்தம். அங்கே நடந்த யுத்தமும் ஒரு மன்னன் மற்றொரு மன்னனைத் தாக்கும் சாதாரணப் போராக இருந்திருக்கலாம். இனப் போர், ஆரிய -திராவிடப் போர் என்று பொருள் கொள்ளத் தேவை இல்லை. உலகிலேயே நீண்ட காலம் போரிட்ட — தங்களுக்குள்ளேயே போரிட்ட —- சேர, சோழ பாண்டியர்களுக்கு உள்ளேயே போரிட்ட — 1500 ஆண்டுகளுக்கு இடைவிடாமல் போரிட்ட – இனம் தமிழ் இனம் ஒன்றுதான். அவர்கள் பேசிய மொழி தமிழ்— அவர்கள் வழிபட்ட தெய்வங்கள் இந்துக் கடவுளர்- அவர்கள் பின்பற்றிய பண்பாடு பாரதப் பண்பாடு – அப்படி இருந்தும் முஸ்லீம்களும், வெள்ளைக்காரர்களும் வரும் வரை போரிட்டது தமிழ் இனம் — ஆகவே ரிக் வேத கால போர்களை இனப் பூசல்கள் என்று வருணிப்பது மடமை!!
என்னுடைய முந்தைய சிந்துவெளிக் கட்டுரைகள்:
சிந்து சமவெளியில் பேய் முத்திரை
சிந்து சமவெளியில் ஒரு புலிப் பெண் Aug.23, 2012
‘எள்’ மர்மம்: ரிக் வேதம் முதல் சிந்து சமவெளி வரை! Post No 755 dated 23/12/13
பதி – வதி – மதி: சிந்து சமவெளியில் உண்டா? 20-10-2014
தேள்— ஒரு மர்ம தெய்வம்!
சிந்து சமவெளி & எகிப்தில் நரபலி1 November 2012
சிந்து சமவெளியில் செக்ஸ் வழிபாடு (26/7/13)
கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி – எகிப்து அதிசய ஒற்றுமை
(15/10/12)‘திராவிடர் கொலை வழக்கு: இந்திரன் விடுதலை’ Post-763 dated 28th Dec. 2013.
சிந்து சமவெளியில் அரசமரம்
சிந்து சமவெளி நாகரீகம் பெயரை மாற்றுக! march 29, 2014
1500 ஆண்டு பிராமண ஆட்சியின் வீழ்ச்சி 24-3-14
சிந்து சமவெளி – பிராமணர் தொடர்பு (Post No 1033, Date 10-5-14)
Posted by Tamil and Vedas on November 1, 2014
https://tamilandvedas.com/2014/11/01/%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b9%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%a8%e0%ae%95/
ச.நாகராஜன்
Written by S Nagarajan
Post No. 1117;Dated 19th June 2014.
சூரிய வர்ணனை
ஜய, அஜவ, விஜய, ஜிதபர்ணா, ஜிதக்ரமா, மனோஜபா, ஜிதக்ரோதா என்ற ஏழு குதிரைகள் மீது பவனி வருவான் சூரியன் என்று நமது புராண இதிஹாஸங்கள் கூறியதை நவீன அறிவியல் கூற்றான சூரிய ஒளி கொண்டிருக்கும் 7 வண்ணங்களான VIBGYOR-டன் ஒப்பிட்டும், சனியை மந்தன் என்று கூறியதை சூரியனைச் சுற்ற கிரகங்களிலேயே அதிக காலமான 30 வருடங்களை சனி எடுத்துக் கொள்வதை ஒப்பிட்டும் அனைவரும் மகிழ்ந்து வந்துள்ளோம்.
ரிக் வேதம் கூறும் ஒளியின் வேகம்
சூரிய ஒளியின் வேகம் வினாடிக்கு ஒரு லட்சத்தி எண்பத்தாறாயிரம் மைல்கள் என்பதை நவீன அறிவியல் சென்ற நூற்றாண்டில் தான் உறுதிப்படுத்தியது.
ஆனால் இந்த வேகத்தை உலகின் ஆதி நூலான ரிக் வேத துதிப்பாடலில் (1:50) அப்படியே காண்கிறோம்.
“தரணிர் விஷ்வதர்ஷோ ஜ்யோதிஷ்க்ரதசி சூர்ய விஷ்வமா பாசிரோசணம்” (तरणिर्विश्वदर्शतो जयोतिष्क्र्दसि सूर्य |
विश्वमा भासिरोचनम) என்ற இந்த மந்திரத்தின் பொருள்: “வேகமாகவும் அழகாகவும் இருக்கும் ஓ சூரியனே, ஒளியை உருவாக்குபவனே, அனைத்துலகையும் பிரகாசிக்க வைப்பவனே” என்பதாகும்.
இதற்கு புக்கர் ஸ்தாபித்த விஜயநகர சாம்ராஜ்யத்தில் அமைச்சராக இருந்த வேத விற்பன்னரான சாயனர் உரை எழுதுகையில்,” ததா ச ஸ்மர்யதே யஞ்னானாம் ஸஹஸ்ரே த்வே த்வே சதே த்வே ச யோஜனே ஏகேன நிமிஷார்தேன க்ரமமான்” என்று எழுதியுள்ளார். இதன் பொருள் : சூரியன் அரை நிமிஷ நேரத்தில் 2202 யோஜனை தூரம் செல்கிறான் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதாகும்.
நிமிஷம் என்பது இமைக்கும் பொழுது ஆகும். அதில் பாதி நேரத்தில் 2202 யோஜனை தூரத்தை ஒளி கடக்கிறது! சாந்தி பர்வத்தில் நிமிஷம் முதற் கொண்டு பல்வேறு கால அளவுகளைப் பற்றிய விளக்கம் வருகிறது. இதன் படி கணக்கிட்டுப் பார்த்தால் ஒரு நிமிஷம் என்பது இன்றைய கால அளவீட்டின் படி 0.2112 வினாடிகள் ஆகும். அரை நிமிஷம் என்பது 0.1056 வினாடிகள் ஆகும்.
இனி யோஜனை என்ற தூரத்தைக் குறிக்கும் அளவு பற்றி விஷ்ணு புராணம் ஆறாவது அத்தியாயத்தில் தெளிவாக விளக்கம் தரப்படுகிறது.
பரமாணுவிலிருந்து அளவுகள் ஆரம்பித்து யோஜனையில் முடிகிறது இந்த விளக்கம். இதன் படி ஒரு யோஜனை என்பது இன்றைய தூரத்தை அளக்கும் அளவீட்டின் படி 9.09 மைல்கள் ஆகும்.
இதை வைத்து இப்போது ஒளியின் வேகத்தைக் கணக்கிடலாம்
0.1056 வினாடியில் சூரிய ஒளி 9.09 மைல்கள் பயணப்படுகிறது.அப்படியானால் ஒரு வினாடியில் 1,89,547 மைல்கள் பயணப்படுகிறது என்று ஆகிறது!
இது 1,86,000 மைல்கள் என்பதுடன் ஒப்பிட்டால் வரும் சிறிது வேறுபாடானது நாம் வேத கால அளவுகளைச் சற்று மாற்றிக் கணக்கிடுவதானாலேயே. (இந்த அளவின் படி ஒரு அங்குலம் என்பது முக்கால் அங்குலமாகக் கணக்கிடப்படுகிறது).
வேத விற்பன்னர்களின் ஆய்வுகள்
இந்த சாயனரின் உரை 1890ஆம் ஆண்டிலேயே மாக்ஸ்முல்லரால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது என்பதையும் சாயனரின் கி.பி.1395 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட எழுத்துப் பிரதி இன்றும் இருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டும் வேத அறிஞர் சுபாஷ் கக், இந்தக் காரணங்களால், இதை ‘’ஃப்ராடு ‘’ என்று சொல்ல வழியே இல்லை என்று நிரூபிக்கிறார்.
வேதங்களின் முழு அர்த்தமும் தெரிய வரும் போது பொன்னான உலகம் பிறக்கும் என்று மஹரிஷி அரவிந்தர் அருளியுள்ளதை இங்கு நாம் நினைவு கூரலாம்.
வேத விஞ்ஞானத்தைத் துல்லியமாக அறியும் பணியில் ஏராளமான அறிஞர்கள் இன்று ஈடுபட்டு ஆய்வு முடிவுகளைப் புத்தகங்களாக வெளியிட்டு வருகின்றனர், இதைப் படித்து விஞ்ஞானிகள் உள்ளிட்ட அனைவரும் பிரமிக்கின்றனர்.
நவகிரக நாயகனான சூரியனைப் பற்றிய வேத முழக்கத்தின் ஜய கோஷம் நம்மை பரவசப்படுத்துகிறது, இல்லையா!
Written by my elder brother S.Nagarajan to a Tamil Magazine: swami; ஞான ஆலயம் மே 2014 இதழில் வெளியாகி உள்ள கட்டுரை
******************
Posted by Tamil and Vedas on June 19, 2014
https://tamilandvedas.com/2014/06/19/%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf/
You must be logged in to post a comment.