HYMN OF THE GOLDEN AGE

bharati new

This post is in both English and Tamil. Ten verses of Nammalvar are given below in English and Tamil.

பாரதி – நம்மாழ்வார் – கிருதயுகம்!

கட்டுரை எண் 952 தேதி 3 ஏப்ரல் 2014
தொகுத்து எழுதியர் லண்டன் சுவாமிநாதன்

Dawn of Golden Age

Of the Twelve Great Tamil Vaishnavite saints known as ‘Alvars’, Bharati liked Nammalvar and Andal very much. He has translated some of their hymns way back in 1910s. He was greatly influenced by Nammalvar. Alvar’s revolutionary theme of bringing Golden Age (Krta Yuga) in our own time attracted him very much. He wanted to destroy the Iron Age (Kaliyuga) and its associated evils. He wanted to destroy slavery in all forms and attain freedom. Though Nammalvar meant only spiritual freedom in his hymns, Bharati used it for political freedom as well. When Tsar of Russia was dislodged he hailed it as the dawn of Krta Yuga. In three other songs he praised Krta Yuga and swore that he would establish Krta Yuga on earth. No doubt he brought a Golden Age into Tamil literature through his inimitable poetic style. As long as his poems exist there is every possibility of establishing a real Golden Age in India.

பாரதியாருக்கு மிகவும் பிடித்த ஆழ்வார் நம்மாழ்வார். கலியுகத்தைக் கொன்று கிருத யுகத்தை மீண்டும் இப்பூவுலகில் கொண்டுவருவேன் என்று ஆழ்வார் பாடியது, பாரதியை மிகவும் கவர்ந்தது. பாரதி புரட்சிக் கவியன்றோ. ஆகவே தனது கண் முன்பே ஒரு யுகப் புரட்சியை உண்டாக்க வேண்டும் என்று அவர் விரும்பியதில் வியப்பொன்றும் இல்லை. கிருத யுகத்தைக் கொண்டுவந்தே தீருவேன் என்ற இக்கருத்து பாரதியாரின் பாடல்களில் பல இடங்களில் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது. ஆயினும் அவரால் கிருதயுகத்தைக் கொண்டு வர முடிந்ததா? என்ற கேள்வி நமக்குள்ளே எழத்தான் செய்யும். ஆம், அவர் கிருத யுகத்தைக் கொண்டு வந்தார் என்றே நான் உறுதிபடச் சொல்லுவேன். தமிழ் மொழி என்னும் உலகத்தில் அவர் ஒரு கிருத யுகம் படைத்துவிட்டார்! அவருக்கு முன் இருந்த காலத்துக்கு ஒவ்வாத கவிதை நடைகளை விலக்கி விட்டு, கவிதை உலகில் ஒரு கிருத யுகத்தைப் படைத்து விட்டார்! அவருடைய பாடல்கள் எதிர் காலத்தில் உண்மையான கிருத யுகத்தைப் படைக்கும் ஆற்றல் பெற்றவை என்பதிலும் இருவேறு கருதுக்கு இடமே இல்லை.

nammalvar

அவர் பாடல்களில் பரிணமிக்கும் கிருதயுகம்: இதோ சில வரிகள்:

பாடல் 1
“மொய்க்கும் கலியை நான் கொன்று
பூலோகத்தார் கண்முன்னே,
மெய்க்கும் கிருத யுகத்தினையே
கொணர்வேன், தெய்வ விஃதியிதே”
பாடல் 2
கிருத யுகத்தினைக் கொணரும் சக்தி இந்து மதத்துக்கு உண்டு என்று ‘ஹிந்து மதாபிமானத்தார் சங்கத்தார்’– என்ற பாடலில் சொல்கிறார்:–

மக்கள் எல்லாம் கவலை என்னும்
ஒரு நரகக் குழியதனில் வீழ்ந்து தவித்து
அழிகின்றார் ஓய்விலாமே
இத்தகைய துயர் நீக்கிக் கிருதயுகத்
தனை உலகில் இசைக்கவல்ல
புத்தமுதாம் ஹிந்துமதப் பெருமைதனைப்
பார் அறியப் புகட்டும் வண்ணம்…………
பாடல் 3

புதிய ருஷியா என்ற கவிதையில் ஜார் சக்கரவர்த்தியின் வீழ்ச்சியில் மகிழ்ச்சி பொங்கப் பாடுகிறார் பாரதி:–
“இடி பட்ட சுவர் போலக் கலி விழுந்தான்
கிருத யுகம் எழுக மாதோ!”
பாடல் 4

சொல் என்ற கவிதையில்
“வலிமை வலிமை என்று பாடுவோம் – என்றும்
வாழும் சுடர்க்குலத்தை நாடுவோம்;
கலியைப் பிளந்திடக்கை யோங்கினோம் – நெஞ்சில்
கவலை இருள் அனைத்தும் நீங்கினோம்” – என்று பாடுகிறார்.

நம்மாழ்வார் பாடல்களை பாரதியார் மொழிபெயர்த்தது, நமக்கு மேலும் சில உண்மைகளையும் காட்டுகிறது. பாரதியாருக்கு ஆங்கில மொழியில் இருந்த நல்ல புலமையும் அதில் எழுதும் துடிப்பு அவருக்கு இருந்ததும் இதில் தெரிகிறது. 1917ஆம் ஆண்டில் எழுதியது இது. நிறைய விஷயங்களை அவர் ஆங்கில மொழியில் எழுதியுள்ளார். ஆனால் அவரது தமிழ் கவிதைகள் என்னும் சூரிய ஒளிக்கு முன்பாக அவரது ஆங்கிலப் படைப்புகள் மங்கிவிட்டன.

இன்னோரு உண்மை ;’பிற நாட்டு நால்லறிஞர் சாத்திரங்களை மொழி பெயர்க்கவேண்டும்’ என்றும் நம்முடைய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டும் என்றும் பாடியும் எழுதியும் வந்தார். அவரே அதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்ததை நம்மாழ்வார் பாடல் மொழி பெயர்ப்புகள், ரவீந்திரநாத் தாகூரின் பாடல் மொழி பெயர்ப்புகள் காட்டுகின்றன. பன்னிரு ஆழ்வார்களில், அவர் ஆண்டாள், நம்மாழ்வார் ஆகியோரின் பல பாடல்களை மொழி பெயர்த்தார். அதில் பத்துப் பாடல்களை மட்டும் காண்போம்.

ramanujan_nammalvar-hymns
HYMN OF THE GOLDEN AGE
From Nammalvar’s Tiruvaymoli, (August, 1917, Arya)

நம்மாழ்வாரின் திருவாய்மொழி
பொலிக; பொலிக; பொலிக !
போயிற்று வல்லுயிர்ச் சாபம்;
நலியும் நரகமும் நைந்த;
நமனுக்கு இங்கு யாதும் ஒன்றும் இல்லை;
கலியும் கெடும்; கண்டு கொண்மின்;
கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்
மலியப் புகுந்து, இசைபாடி,
ஆடி, உழிதரக் கண்டோம்.
1)’Tis glory, glory, glory! For Life’s hard curse has expired; swept out are Pain and Hell, and Death has nought to do here. Mark ye, the Iron Age shall end for we have seen hosts of Vishnu; richly do they enter in and chant His praise and dance and thrive.

கண்டோம், கண்டோம், கண்டோம்;
கண்ணுக்கு இனியன கண்டோம்;
தொண்டீர்; எல்லீரும் வாரீர்;
தொழுது தொழுது நின்று ஆர்த்தும்;
வண்டு ஆர்த் தண்ணந் துழாயான்
மாதவன் பூதங்கள் மண்மேல்
பண்தான் பாடி நின்று, ஆடி,
பரந்து திரிகின்றனவே.
2)We have seen, we have seen, we have seen, …… seen things full sweet in our eyes, come, ye all lovers of God, let us shout and dance for joy with oft-made surrendering. Wide do they roam on earth singing songs and dancing, the hosts of Krishna who wears the cool and beautiful Tulsi, the desire of the bees.

திரியும் கலியுகம் நீங்கி,
தேவர்கள் தாமும் புகுந்து
பெரிய கிருதயுகம் பற்றி,
பேரின்ப வெள்ளம் பெருக,
கரிய முகில் வண்ணன், எம்மான்,
கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்
இரியப் புகுந்து, இசை பாடி
எங்கும் இடம் கொண்டனவே.
3)The Iron Age shall change. It shall fade, it shall pass away. The gods shall be in our midst. The mighty Golden Age shall hold the earth and the flood of the highest Bliss shall swell. For the hosts of dark hued Lord , dark hued like the cloud, dark hued like the sea, widely they enter in, singing songs and every where they have seized on their stations.

இடம்கொள் சமயத்தை எல்லாம்
எடுத்துக் களைவன போலே,
தடம் கடல்-பள்ளிப் பெருமான்
தன்னுடைய பூதங்களேயாய்,
கிடந்தும், இருந்தும், எழுந்தும்,
கீதம் பலபலப் பாடி,
நடந்தும், பறந்தும், குனித்தும்,
நாடகம் செய்கின்றனவே.
4)The hosts of our Lord who reclines on the sea of Vastness, behold them thronging hither. Me seems they will tear up all these weeds of grasping cults. And varied songs do they sing, our Lord’s own hosts, as they dance, falling, sitting, standing, marching, leaping, bending.

செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே
ஒக்கின்றது – இவ்வுலகத்து
வைகுந்தன் பூதங்களேயாய்,
மாயத்தினால் எங்கும் மன்னி;
ஐயம் ஒன்று இல்லை; அரக்கர்
அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்
உய்யும் வகை இல்லை, தொண்டீர்!
ஊழி பெயர்த்திடும் கொன்றே.
5)And many are the wondrous sights that strike mine eyes. And if by magic Vishnu’s hosts have come in firmly placed themselves everywhere. Nor doubt it, ye fiends and demons, if such be born in our midst, take heed! Ye shall never escape. For the spirit of Time will slay and fling you away.
nammalvar__makers_

கொன்று உயிர் உண்ணும் விசாதி,
பகை, பசி, தீயன எல்லாம்
நின்று இவ்வுலகில் கடிவான்,
நேமிப்பிரான் போந்தார்;
நன்று இசை பாடியும், துள்ளி
ஆடியும் ஞாலம் பரந்தார்;
சென்று, தொழுது, உய்மின்; தொண்டீர்!
சிந்தையைச் செந்நிறுத்தியே.
6)These hosts of the Lord of the Discus, they are here to free this earth of the devourers of Life, Disease and Hunger, vengeful Hate and all other things of evil. And sweet are their Songs, as they leap and dance, extending wide over earth, go forth, ye lovers of God, and meet these hosts divine; with right minds serve them and be saved.

நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும்
தெய்வங்கள் உம்மை உய்யக் கொள்
மறுத்தும் அவனோடே கண்டீர்;
மார்க்கண்டேயனும் கரியே;
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா;
கண்ணன் அல்லால், தெய்வம் இல்லை;
இறுப்பது எல்லாம் அவன் மூர்த்தி –
யாயவர்க்கே இறுமினே.
7)The Gods that ye fix in your minds, in His name do they grant you deliverance. Even thus to immortality did the sage Markanda attain. Let none be offended, but there is no other god but Krishna. And let all your sacrifices be to them who are but his forms.

இறுக்கும் இறை இறுத்து, உண்ண,
எல் உலகுக்கும் தன் மூர்த்தி
நிறுத்தினான் தெய்வங்கள் ஆக;
அத் தெய்வ நாயகன் — தானே;
மறுத் திரு மார்வன் அவன் – தன்
பூதங்கள் கீதங்கள் பாடி
வெறுப்பு இன்றி, ஞாலத்து மிக்கார்;
மேவித் தொழுது, உய்ம்மின் நீரே.
8)His forms he has placed in the various worlds as Gods to receive and taste the offerings due. He, our divine sovereign, on whose mole-marked bosom the Goddess Lakshmi rests – his hosts are singing sweetly and deign to increase on earth. O men, approach them, serve and live.

மேவித் தொழுது உய்ம்மின் நீர்கள்;
வேதப் புனித இருக்கை
நாவில் கொண்டு, அச்சுதன்—தன்னை
ஞானவிதி பிழையாமே
பூவில் புகையும் விளக்கும்
சாந்தமும் நீரும் மலிந்து,
மேவித் தொழும் அடியாரும்
பகவரும் மிக்கது உலகே.
9)Go forth and live by serving our Lord, the deathless one. With your tongues chant ye the hymns, the sacred Riks of the Veda, nor err in the laws of wisdom. Oh, rich has become this earth in the blessed ones and the faithful who serve them with flowers and incense and sandal and water.

மிக்க உலகுகள் தோறும்
மேவி, கண்ணன் திருமூர்த்தி
நக்க பிரானோடு அயனும்
இந்திரனும் முதலாகத்
தொக்க அமரர் குழாங்கள்
எங்கும் பரந்தன; தொண்டீர்;
ஒக்கத் தொழ கிற்றிராகில்,
கலியுகம் ஒன்றும் இல்லையே.
10) In all these rising worlds they have thronged and wide they spread, those beauteous forms of Krishna – the unclad Rudra is there, Indra, Brahma, all. The Iron Age shall cease to be – do ye but unite and serve these.
நம்மாழ்வார் திருவாய்மொழி

Please read the related articles posted already in this blog:

Post No.915 ‘Nammalvar by Bharatiyar’ (posted on 18-3-14)

Contact swami_48@yahoo.com