புத்தர் எப்போது இறந்தார்?

bbudhdha3

WRITTEN BY LONDON SWAMINATHAN

RESEARCH PAPER NO.1562; DATED 10TH JANUARY 2015

 

கட்டைப் பஞ்சாயத்து என்றால் என்ன என்று உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அடாவடியாக ஒரு தண்டனையையோ பழியையோ ஒருவர் மீது சுமத்துவது இது. அங்கே விவாதத்துக்கோ ஜனநாயகத்துக்கோ இடமே இல்லை. இப்படி இந்திய வரலற்றிலும் பல கட்டைப் பஞ்சாயத்துக்கள் உண்டு. அதில் ஒன்றுதான் புத்தர் இறந்த— நிர்வாணம் எய்திய ஆண்டு.

ஒவ்வொரு நாடும் ஒரு கணக்கு வைத்திருக்கிறது. புத்தருக்கு சம்பந்தமில்லாத வெளிநாட்டுக்காரர்கள் எழுதிய புத்தகத்தில் அவருக்கு ஒரு தேதி நிர்ணயித்து அந்த தேதியில் அவரைக் கொன்று விட்டார்கள்!!! அதாவது வெளிநாட்டினர் முத்திரை குத்திய நாளில் அவர் செத்தார்  என்று நம்மை நம்ப வைத்து விட்டார்கள்!!

 

இலங்கையர்கள் புத்தர் நிர்வாணம் எய்திய ஆண்டு கி.மு 483 என்பர்.

 

பர்மாவில் கி.மு. 544 என்பர்.

 

திபெத்தியர்கள் கி.மு. 835 என்பர்.

 

இந்து மத புராணங்கள் கி.மு 1793 முதல் கி.மு1807 வரை பல தேதிகளை முன்வைக்கும்.

 

இந்தியா 1956 ஆம் ஆண்டில் புத்தரின் 2500 ஆவது பிறந்த தின தபால்தலைகளை வெளியிட்டது. அதன்படி அவர் பிறந்த ஆண்டு கி.மு 544, இறந்த ஆண்டு கி.மு.464.

Buddha_thumb[2]

தேரவாத  கணக்குப்படி அவர் இறந்தது—  கி.மு.486

 

மஹாயான கணக்குப்படி அவர் இறந்தது — கி.மு. 383

 

ஆயினும் தேரவாத நாடுகளிலும் கூட கி.மு 544 ஐ நிர்வாணம் அடைந்த தேதியாக அனுஷ்டிக்கிறார்கள். தாய்லாந்து கி.மு 545 என்கிறது.

 

விக்கிபீடியா முதலிய என்சைக்ளோபீடீயவுக்குப் போனீர்களானால் அவர்கள் ஒரு நூறு ஆண்டு “ரேஞ்சு” கொடுத்திருப்பார்கள் இறந்த ஆண்டுக்கு!! நீங்கள் எந்த ஆண்டை வேண்டுமானாலும் ஊகித்துக் கொள்ளலாம்!!!!!

சுருக்கமாகச் சொன்னால் ஒரே குழப்பம்! இந்தக் குழப்பம் எப்படி வந்தது? உண்மை என்ன?

 

அசோகருக்கு வெள்ளைக்காரர்களாக ஒரு தேதியை முத்திரை குத்தினர். அதாவது வடமேற்கு இந்தியாவில் கண்டு பிடிக்கப்பட்ட ஒரு அசோகர் கல்வெட்டில் இருந்த சில பெயர்களை அரசர்கள் என்று எண்ணி அதற்கு தோராயமாக நெருங்கிவரும் சில பெயர்களைக் கொண்டு அதிலிருந்து கணக்குப் போட்டனர்.ஏனெனில் அசோகர் வரலாற்றில் எத்தனையாவது புத்தமத மகாநாடு , புத்தர் இறந்த பின்னர் எத்தனையாவது ஆண்டில் , கூட்டப்பட்டது என்று உள்ளது. ஆனால் அசோகர் ஆண்டே தகராறில் இருந்தால் இது எல்லாம் தப்பிப் போகும். அதாவது முதல் கோணல் முற்றும் கோணல்!


buddha1

யாராவது ஒருவர் புத்தர் பிறந்த ஆண்டையும் இறந்த ஆண்டையும் சரியாக நிரூபித்துவிட்டால் இந்திய வரலாற்றின் தேதி எல்லாம் மாறிப்போகும். ஏனெநில் ஊசலாடும் ஒரு ஒரு பெரிய பாறையின் மீது இது இருக்கிறது அந்தப் பாறையை உருட்டிவிட்டால் இந்திய வரலாற்றின் அஸ்திவாரம் சரிந்து போகும். வேதங்களுக்கு   மாக் ஸ் முல்லர் தேதி நிர்ணயித்ததும் இந்த ஆட்டம் காணும் அஸ்திவாரம் மீதுதான்!!

பாஹியான் சொல்வது என்ன?

 

கி.பி 405 முதல் 411 வரை இந்தியாவுக்கு வந்த சீன யாத்ரீகர் பாஹியான், புத்தர் இறந்து 1497 வருடங்கள் கழிந்துவிட்டன என்கிறார்!

 

அவருக்குப் பின்னர் வந்த யுவாங் சுவாங் என்ற சீன யாத்ரீகரும் புத்தர் இறந்த தேதி பற்றிப்  பலவேறு கருத்துக்கள் நிலவுவதாக 1500 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதி இருக்கிறார்.

சீனர்கள் கி.மு 638 அல்லது 639ல் புத்தர் இறந்ததாக நம்புகின்றனர்.

buddha2

பொதுவாக அவரது மரண தேதி (நிர்வாண நாள்) கி.மு. 860 முதல் கி.மு 260 வரை ஊசலாடுகிறது. உலகில் எந்த ஒரு மதத் தலைவரின் தேதியும் இவ்வளவு ஊசல் ஆடியது இல்லை.

மாக் ஸ் முல்லர் கொடுக்கும் 14 தேதிகள்!!!!!!!

 

திபெத்திய வரலாற்றில் கி.மு 2422 முதல் கி.மு 546 வரை உள்ள 14 ஆண்டுகளை

மாக் ஸ் முல்லர் கொடுத்துள்ளார் (புராதன சம்ஸ்கிருத இலக்கிய வரலாறு என்ற ஆங்கிலப் புத்தகத்தில் இதை எழுதியிருக்கிறார். ஆக எல்லாவற்றையும் கூட்டினால் புத்தர் இறந்த தேதி 20க்கும் மேலாக இருக்கின்றன.

 

சமண மத நூல்கள் புத்தர் இறந்த 15 ஆண்டுகளுக்குப் பின்ன மஹாவீரர் இறந்ததாக சொல்கின்றன.அதாவது கி.மு 2051.

 

புத்தர் இறந்த தேதி பற்றி ஒரு ஆய்வு  நடத்த வேண்டும். இது இந்திய வரலாற்றின் அடித்தளம் என்பதால் மிகவும் அவசியமான– அவசரமான பணி.

இந்திய வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் — அதாவது உண்மை  வரலாற்றை  எழுத வேண்டும்.

 

வாழ்க இந்தியா! வளர்க பாரதம்!!

contact swami_48@yahoo.com