ஷெரிடன் கொடுத்த சூடான பதில் (Post No. 3057)

sheridan novel

Compiled by london swaminathan

Date: 13th    August 2016

Post No. 3057

Time uploaded in London :– 11-55 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

ஐரிஷ் கவிஞர்,  நாடக ஆசிரியர்,  அங்கத எழுத்தாளரான ஷெரிடன் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி:–

 

ஒரு முறை ஷெரிடன் ஒரு வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் மாட்டிக்கொண்டார். ஒரு பெண்மணி அவருடன் உலாப் போக வேண்டும் (வாக்கிங்) என்று நச்சரித்தார். என்ன சாக்கு சொல்லலாம் என்று யோசித்தார் ஷெரிடன்.

 

“அம்மையாரே! வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்கிறது. எந்த நேரமும் மழை கொட்டலாம்”  என்றார் ஷெரிடன்.

 

அந்தப் பெண்மணி வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருந்த போது ஷெரிடன் பின்புறக் கதவு வழியாக நழுவினார்.

 

ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்த அந்ததப் பெண்மணி ஓடோடி வந்தார்.

 

“மிஸ்டர் (ஷெரிடன்), வானம் வெளிறிவிட்டது போல இருக்கிறதே” என்றார் அந்த மாது.

 

நீங்கள் என்னுடன் வரக்கூடாது என்று சொல்ல விரும்பாத ஷெரிடன், மறைமுகமாக அதைச் சொன்னார்:

“ஆமாம், ஆமாம், வானம் தெளிந்துவிட்டது. ஆனால் ஒருவர் செல்லும் அளவுக்குதான்!”

 

–என்று சொல்லிவிட்டு விறு விறு என்று நடந்தார்.

xxxx

தாமஸ் கில்லிக்ரூ கொடுத்த சூடான பதில்

jeses thieves

கில்லிக்ரூ இங்கிலாந்தின் இரண்டாவது சார்லஸ் மன்னரின் அரசவையில் இருந்த நாடக ஆசிரியர்,  நகைச்சுவை மன்னன்.

 

ஒரு முறை பாரிஸில் பிரெஞ்சு மன்னன் 14ஆவது லூயியை பார்க்கச் சென்றார். அவர் அரண்மனையைச்  சுற்றிக் காண்பித்தார். ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட   ஒரு படத்தைக் காட்டினார். இதோ பாருங்கள் அதற்கு வலது புறம் இருக்கும் படம் போப்பாண்டவருடையது. இட து புறம் இருக்கும் படம் என்னுடையது என்று பெருமையாக சொன்னார்.

 

உடனே தமாஷ் பேர்வழியான கில்லிக்ரூ சொன்னார்:

அட! ஏசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்தபோது அவர் கூடவே இரு புறமும் இரண்டு திருடர்களையும்  சிலுவையில் அடித்ததாகப் படித்திருக்கி றேன். இப்போதுதான் தெரிகிறது யார் அந்தத் திருடர்கள் என்று!

220px-Disraeli

டிஸ்ரேலியின் சூடான பதில்

 

டிஸ்ரேலி என்பவர் பிரிட்டனில் இரண்டு முறை பிரதமராகப்  பதவி வகித்தவர்.

 

அவருடைய அரசியல் எதிரி கிளாட்ஸ்டோன்.

 

ஒருமுறை “துரதிருஷ்டம்” என்ற சொல்லுக்கும் “பேராபத்து” என்ற சொல்லுக்கும் என்ன வித்தியாசம் என்று யாரோ ஒருவர் கேட்டார்.

 

நான் உடனே சொல்கிறேன்; நன்றாகக் கேளுங்கள்:

 

கிளாட்ஸ்டோன், தேம்ஸ் நதியில் விழுந்துவிட்டார் என்று வைத்துக் கொள்ளுங்களேன். அது துரதிருஷ்டம்.

அவரை யாராவது காப்பாற்றி விட்டார் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.  அது “பேராபத்து!” — என்றார் டிஸ்ரேலி

 

–Subham–