காதல் கடிதம் எழுத ரகசிய சங்கேத மொழி

காதல் கடிதம் எழுத ரகசிய சங்கேத மொழி

போர்க் காலங்களிலும், படை மற்றும் ராணுவ தளவாட நகர்த்தல் பற்றித் தளபதிகளுக்கு தகவல் அனுப்பும் போதும் படைத் தலைவர்கள் ரகசிய சங்கேத மொழிகளைப் பயன்படுத்துவர். இது எகிப்தில் துவங்கியதாகக் கலைக்களஞ்சியங்கள் கூறியபோதும் இந்தியாவில் துவங்கியது என்றே எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில் பெண்கள் கற்றுக் கொள்ளவேண்டிய கலைகள் 64 (ஆய கலைகள் 64) என்று பட்டியலிட்டு அதில் இதையும் ஒன்றாகச் சேர்த்திருக்கின்றனர். இது 2400 ஆண்டுகளுக்கு முன்பு ! பெண்கள் படிப்பதையே பழங்கால உலகு ஆதரிக்கவில்லை. ஆனால் இந்தியாவில் வேதகாலப் புலவர்களில் குறைந்தது 20 பேரும் சங்க காலப் புலவர்களில் குறைந்தது 20 பேரும் பெண் புலவர்கள்.

 

இது மட்டுமல்ல.

வேத கால ரிஷிகள் தங்களுக்கு ரகசிய மொழிகளில் பாடுவதுதான் பிடிக்கும் என்று ஆடிப் பாடி கூத்தாடி இருக்கிறார்கள். ஆக அவர்கள் 3500 முதல் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே ரகசிய மொழி பற்றிப் பேசி இருக்கிறார்கள். ஆனால் இன்றைய வேதங்களில் என்ன ரகசிய மொழியில் அவர்கள் என்ன ரகசியம் கூறி இருக்கிறார்கள் என்று தெளிவாகக் காட்டமுடியவீல்லை.

மஹாபாரதம் எழுதிய கதையும் எல்லோரும் அறிந்ததே. விநாயகப் பெருமான் தான் இக்காரியத்தைச்  செய்யவல்லவர் என்று அறிந்த வியாச மா முனிவர் அவரை வேண்டிக் கொள்ளவே பிள்ளையார் ஒரு நிபந்தனை போட்டார். நீவீர் நிறுத்தாமல் பாடல்களைச் சொன்னால் நான் எழுதத்தயார் என்று. மஹா பரதமோ உலகிலேயே மிகப் பெரிய நூல். ஒரு லட்சம் ஸ்லோகங்களை உடையது. புத்திசாலி வியாசர் உடனே எதிர் நிபந்த்னை போட்டார். அது சரிதான், நான் நிறுத்தாமல் கவி புனைகிறேன். நீவீர் அர்த்தம் புரியாமல் எதையும் எழுதக் கூடாது என்று. பிள்ளையார் நன்கு மாட்டிக் கொண்டார். வியாசர் பல விடுகதைகள், ரகசிய மொழிகள் அடங்கிய கவிதைகளை வீசவே கணேசர் மெள்ள நடை போட நேரிட்டது என்பது கதை. ஆக அப்போதே விடுகதை, புதிர், ரகசிய மொழிகள் தோன்றியது என்று சொல்லலாம்.

 

ஈதன்றி இந்துக்கள் ஆதிகாலம் முதலே ‘’கடபயாதி முறை’’ என்ற ஒரு சங்கேத மொழியைப் பயன்படுத்தினர். இதன் மூலம் சொற்களையும் எண்களையும் எளிதில் நினைவு வைத்துக் கொண்டனர். ஒவ்வொரு எண்ணுக்கும் பல எழுத்துக்களை ஒதுக்குவது இம்முறையாகும். மேலும் அதை வலம் இடமாகப் படிப்பர். உதாரணமாக மஹாபாரதத்தின் பழைய பெயர் ‘’ஜய’’. இது 18 என்ற எண். மஹா பாரதத்துக்கும் 18க்கும் உள்ள தொடர்பை முன்னரே ஒரு கட்டுரையில் விளக்கி இருக்கிறேன்

இது ஒரு புறம் இருக்க, உண்மையிலேயே வியத்தகு ஒரு உதாரணம் கிடைத்துள்ளது. கி.மு நாலாம் நூற்றாண்டில் தோன்றிய காம சூத்திரம் என்னும் பாலியல் நூலை வாத்ஸ்யாயனர் என்ற பிராமண அறிஞர் கி.பி. நாலாம் நூற்றாண்டில் எழுத்து வடிவில் கொடுத்தார். இதில் உள்ள ஒரு பகுதியை லண்டனில் இருக்கும் அறிஞர் சைமன்சிங் சங்கேத மொழி என்னும் புத்தகத்தில் கொடுத்திருக்கிறார். பெண்கள் கற்றுக் கொள்ளவேண்டிய ஆய கலைகள் 64ல் நாற்பத்தைந்தாவது கலை ரகசிய மொழியில் எழுதுவதாகும். காதல் விஷயங்களைப் பெண்கள் பகிரங்கமாக எழுத முடியாதே?

வாத்ஸ்யாயனர் கூறிய முறை மாற்று எழுத்து முறையாகும். எடுத்துக் காட்டாக 26 ஆங்கில எழுத்துக்களை கீழ்கண்டவாறு அமைத்தால்

A D H I K M O R S U W Y Z

V X B G J C  Q L  N E  F P  T

MEET AT MIDNIGHT =நள்ளிரவில் என்னைச் சந்தியுங்கள் என்பதற்கு,  CU UZ VZ CGXSGIBZ என்று எழுதுவார்கள். எம் என்பது சி, ஈ என்பது யு என்று வரும்.

2400 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்கள் இவ்வளவு அறிவு உடையவர்கள் என்றால் எந்த அளவுக்கு கல்வித் திறன் இருந்திருக்கவேண்டும்? கிருஷ்ணனுக்கு சத்யபாமா எழுதிய காதல் கடிதம், கோவலனுக்கு மாதவி எழுதிய காதல் கடிதங்களை ஏற்கனவே இதே பிளாக்கில் படித்திருப்பீர்கள். கஜுராஹோவில் பெண்கள் காதல் கடிதம் எழுதும் அழகான சிற்பமும் உள்ளது.

 

ராணுவ பயன்களுக்கு ரகசிய சங்கேதக் கடிதம் அனுப்பிய பெருமை ஜூலியஸ் சீசரைச் சேரும். அவர் சிசரோ என்பவருக்கு இப்படி ஒரு கடிதம் அனுப்பினார்.

Please read my earlier posts

  1. Hindu’s Magic Numbers 18, 108, 1008
  2. Love Letters from Ancient India

3.பார்ப்பனிக்கு வடமொழிச் சீட்டு

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: