“சிந்து சமவெளி” நாகரீகம் பெயரை மாற்றுக!!!

Indus_girl

“சிந்து சமவெளி” நாகரீகம் பெயரை மாற்றுக! இனி அது கங்கைச் சமவெளி நாகரீகம்!!

எழுதியவர் லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண் 941 தேதி மார்ச் 29, ஆண்டு 2014.

சிந்து சமவெளி நாகரீகம் பற்றி நேற்று காலையில் பத்திரிக்கையில் ஒரு சுவையான செய்தி வெளியாகி இருக்கிறது. மிகவும் வியப்பான செய்தியும் கூட! நாற்பது ஆண்டுக் காலமாக இதை ஆராய்ந்து வரும் எனக்கு இது ‘நீ சொல்வது சரியே’ என்று ஒரு தொல் பொருட்த் துறை நிபுணர் ‘சர்ட்டிபிகேட்’ கொடுத்தது போல இருந்தது. முதலில் செய்தியைக் காண்போம்:–

ஹரியானா மாநிலத்தில் ஹிஸ்ஸார் மாவட்டம் உள்ளது. அங்கே ராகிகாரி என்னும் இடத்தில் இரண்டு பெரிய மணல் மேடுகள் உள்ளன. இவைகளை முறையாகத் தோண்டத் துவங்கிவிட்டனர். இது வரை சிந்து சமவெளி எழுத்துகளுடன் சில சின்னங்கள் கிடைத்திருக்கின்றன. இது 350 ஹெக்டேர் பரப்புக்கு வியாபித்து இருக்கிறது. அதாவது முந்தைய பெரு நகரங்களான ஹரப்பா, மொஹஞ்சதாரோ நகரங்களைவிடப் பெரியது. இதில் வியப்பான விஷயம் என்ன?

இந்தத் துறையில் நிபுணரும் இப்போதைய அகழ்வாராய்ச்சியின் டைரக்டருமான டாக்டர் ஷிண்டே வாய்மொழியாகவே கேட்போம்:– “தற்போது பாகிஸ்தானில் இருக்கும் சிந்து மாகாணத்தில்தான் இந்த நாகரீகத்தின் முதல் கட்டம் இருந்ததாக இதுவரை கருதி வந்தோம். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக ஹரியானாவில் Kunal, Bhirrana, Farmana, Girawad and Mitathal முதலிய பல இடங்களில் சிந்துவெளிச் சின்னங்கள் கிடைத்துவருகின்றன. இவை எல்லாம் கி.மு 5000 ஆண்டு வரை நம்மை பின்னுக்கு இழுத்துச் செல்கின்றன. இப்பொழுது ராகிகாரியில் தோண்டி வருகிறோம். இது கக்கர் நதி வடிநிலம். இங்கே அந்த சின்னங்கள் கிடைப்பது உறுதியானால் சிந்துவெளி நாகரீகம் இங்கே தோன்றி பின்னர் சிந்து நதிக்குப் பரவியது உறுதி செய்யப்படும்” என்றார் ஷிண்டே!

Indus priest

இதுதான் வியப்பான செய்தி. இனி சிந்து வெளி நாகரீகம் சிந்து வெளியும் அல்ல. முன்னர் கருதியது போல சரஸ்வதியும் அல்ல. கங்கைச் சமவெளி நாகரீகம் என்றே அழைக்க வேண்டும். இதுவரை இரண்டாயிரம் இடங்களில் இந்த மாதிரி சின்னங்கள் கிடைத்துவிட்டன. முதலில் மொஹஞ்சதாரோ, ஹரப்பாவைத் தோண்டியதால் சிந்துவெளிப் பள்ளத்தாக்கு நாகரீகம் என்று பெயர் சூட்டினர். பிறகு விண்வெளியிலிருந்து விண்கலங்கள் எடுத்த படங்களும், பூமிக்கடியிலிருந்து எடுக்கப்பட்ட அணுக் கதிரியக்க தண்ணீரும் அங்கே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சரஸ்வதி நதி ஓடியதைக் காட்டியன. உடனே சரஸ்வதி நதி நாகரீகம் என்று எழுதத் துவங்கினோம். இப்பொழுது யமுனை நதி வடிநிலத்தில் அதைவிடப் பெரிய நகரம் கண்டுபிடிக்கப் பட்டிருப்பதால் இனி கங்கைச் சமவெளி நாகரீகம் என்றே அழைக்க வேண்டும். இதில் எனக்கு என்ன மகிழ்ச்சி? இதோ சொல்கிறேன்.

இந்த பிளாக்—குகளில் இதுபற்றி இருபதுக்கும் மேலான கட்டுரைகளை எழுதிவிட்டேன் (கீழே பட்டியலைக் காண்க).எல்லாவற்றிலும் நாகரீகம் இந்தியாவில் தோன்றி, மெதுவாக உலகம் முழுதும் போனது என்று எழுதிவருகிறேன். ஆரிய திராவிட வாதம் என்பது கிறிஸ்தவ மதத்தைப் பரப்பவும், பிரிட்டிஷ் ஆட்சியை நிலை நாட்டவும், இந்தியாவைத் துண்டு போடவும் வெளிநாட்டினர் செய்த சதி என்றும் ஆதரங்களுடன் காட்டி வருகிறேன். இப்பொழுதைய பத்திரிக்கைச் செய்தி, நாகரீகம் என்பது மஹாபாரத கால இந்திரப் பிரஸ்தம், குருக்ஷேத்திரமமருகே தோன்றி வெளியே சென்றது என்பதை நிரூபிக்கப்போகிறது!

indus 2 (2)

இந்திரனும் கிழக்கும்
பிராமணர்கள் செய்யும் தினசரி பூஜைகளிலும் ஹோம குண்டங்களிலும் இந்திரனை கிழக்கில் உள்ள திக் தேவதையாகவே வணங்குவர்.–வருணனுக்கு மேற்கு திசை– வெள்ளைக்கார அறிஞர்கள் கதை கட்டிவிட்டதைப் போல இந்திரன் மத்திய ஆசியாவில் இருந்து குதிரை மீது ஏறி ஈரான் (பாரசீகம்) வழியாக இந்தியாவுக்குள் பிரவேசித்து இருந்தால், அவருக்கு கிழக்கு திசையைக் கொடுத்திருக்க மாட்டார்கள். மேலும் வடமொழியில் கிழக்கு திசைக்கு பூர்வ திசை என்று பெயர். இதன் பொருள் ‘’முதல் திசை, பழைய புராதன திசை’’. சூரியன் உதிப்பதை வைத்து இப்படிப் பெயர் வைக்கவில்லை. இதன் காரணமாக வைத்தால் சூரியன் தொடர்பான பெயரையே வைத்திருப்பர்.

இதற்கு முன் நான் எழுதிய வேறு ஒரு கட்டுரையில் உலகின் மிகப் பழைய சமய நூலான ரிக் வேதத்தில் கங்கைச் சமவெளி நதிகளின் பெயர்கள் கிழக்கில் இருந்து துவங்கி வரிசையாக சொல்லப் பட்டிருப் பதையும் குறிப்பிட்டு இருந்தேன். மேற்கிலிருந்து அவர்கள் போயிருந்தால் முதலில் மேற்கில் உள்ள ஆறுகளின் பெயர்களையே சொல்லியிருப்பர்.

ஆக டாக்டர் ஷிண்டே சொல்லுவதையும் இந்திரன் பற்றிய குறிப்பு,, கங்கைச் சமவெளி நதிகளின் பட்டியல் ஆகியவற்றையும் பார்க்கையில் நாகரீகம் என்பது இந்தியாவில்தான் தோன்றியது என்பது உறுதியாகி வருகிறது.

இதுவரை உலக அறிஞர்கள் ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயங்கள் இரண்டு:– 1.மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றி 60,000 ஆண்டுகளுக்கு முன் உலகில் பரவத் துவங்கியது.2. நாகரீகம் என்பது மேற்கில் துவங்கி மெதுவாக கிழக்கில் பரவியது. இதே போல வடக்கில் இருந்து தெற்கே போனது.
இதற்குக் காரணம் அவர்களுக்குக் கிடைத்த தொல்பொருட் துறை தடயங்களாகும் பாபிலோனியா, எகிப்து போன்ற இடங்களில் மறுக்க முடியாத சான்றுகள் உள்ளன. நமது புராண இதிஹாசங்கள் இதைவிடப் பழமையான (கலியுக தோற்றம் கி.மு 3102) விஷயங்களைச் சொன்னாலும் நம்மிடம் தொல்பொருட் சின்னங்கள் இன்றி இலக்கியக் குறிப்புகள் மட்டுமே உள்ளன. ஆகையால் உலகம் நம்ப மறுக்கிறது. இந்தியப் பருவ நிலை, சிந்து கங்கை ஆகியவற்றின் அடிக்கடி மாறும் போக்கு ஆகியவற்றால் நம்மிடையே சின்னங்கள் எதுவும் இல்லை. அப்படிக் கிடைத்தால் நமது அதிர்ஷ்டமே. இப்பொழுதைய ராகிகாரி அகழ்வாராய்ச்சி சொல்லப்போகும் விஷயங்களைப் பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.

ஆயினும் சிந்து சம்வெளி நாகரீகம் பற்றி வெளிநாட்டு அறிஞர்கள் திட்டமிட்டு பரப்பிய வதந்திகள் ஒவ்வொன்றாகத் தகர்ந்து வருகின்றன— தவிடு பொடி ஆகி வருகின்றன. அவை என்ன?

yogi-seal-2

1.சுமார் இரு நூறு ஆண்டுகளுக்கு முன் மதத்தைப் பரப்பவும் ஆட்சியைப் பிடிக்கவும் ஒரு புதிய கொள்கையை கண்டு பிடித்தனர். இந்தியாவில் ஆரியர்கள், திராவிடர்கள் என்று இரண்டு இனங்கள் உண்டென்றும் ஒரு இனம் மத்திய ஆசியாவில் இருந்தும், மற்றொரு இனம் மத்தியதரைக் கடல் பகுதியில் இருந்தும் இந்தியாவுக்குள் வந்ததாகவும் கதைகள் எழுதினர். அவர்கள் சொல்ல விரும்பியது ஆரியர்களும் திராவிடர்களும் வந்தேறு குடியினர் என்பதுதான்!!

2.பின்னர் சிந்து சமவெளி நாகரீகம் தோண்டி எடுக்கப்பட்டவுடன் திராவிடக் கோழைகளை, ஆரிய வீரர்கள் 3000 மைல்களுக்கு ஓட,ஓட விரட்டி காடு மலைகளுக்கும் தமிழ் நாட்டுக்கும் அனுப்பிவைத்தனர் என்று கதைகள் எழுதினர். திராவிடர்களுக்கு போண்டா மூக்கு, சுருட்டை முடி, குட்டையன், காட்டுமிராண்டி, கருப்பன் என்றும் ஆரியர்கள் உயரமானவர்கள், கூரிய மூக்கு, வெள்ளைத் தோல், நீண்ட முடி, குதிரை வீரர்கள் என்று படம் போட்டும் புத்தகம் வெளியிட்டனர்!! (காண்க எF.டி உட் புத்தகம்)

3.சிந்துவெளியில் மிருகங்கள் புடை சூழ இருக்கும் ஒரு முத்திரையைப் பார்த்து இவர்தான் ‘ஒரிஜினல் சிவா’, யஜூர் வேதத்தில் வரும் ருத்திரன் ‘போலி சிவா’, ஆரியப் பார்ப்பனர்கள் இரண்டையும் திறமையாக இணைத்து விட்டனர் என்று புதுக் கதைகளை விட்டனர். முருகனையும் கந்தனையும் ஆரிய, திராவிட இனவாதத்துக்குள் இழுத்து எது அசல், எது போலி என்று ‘அக்மார்க்’ முத்திரை குத்தினர்.

4.சிந்துவெளியில் கிடைத்த சில சின்னங்களை மனிதர்களின் ஆண்குறி, பெண்குறிச் சின்னங்கள் என்று சொல்லி அவைகளை வணங்கிவரும் சைவத் தமிழர்களை அவமானப்படுத்தினர். இப்பொழுது அமெரிக்க பெண்மணி வெண்டி டோனிகர் இதை மீண்டும் எழுதிய புத்தகத்தை ஆர்.எஸ்.எஸ். காரர்கள் தடைசெய்ய வைத்துவிட்டனர்.

5.இந்தியர்களுக்கு வரலாறே கிடையாது. முதல் மன்னரே மௌர்ய சந்திரகுப்தன்தான் என்றும் புத்தகம் எழுதிக் கொடுத்தனர்.

OLYMPUS DIGITAL CAMERA

மேற்கூறிய எல்லாவற்றையும் ஹரிஜன தலைவர் பாபாசாஹேப் அம்பத்கர், மஹாத்மாகாந்தி, சுவாமி விவேகாநந்தர், ஸ்ரீ அரவிந்தர், காஞ்சி மஹாபெரியவர் போன்றோர் அவர் தம் எழுத்துக்களில் மறுத்துரைத்தனர். சங்கத் தமிழ் இலக்கியத்திலும் பல்லாயிரக்கணக்கான சம்ஸ்கிருத நூல்களிலும், அவைகளுக்குப் பின்வந்த தேவார திருவாசக திவ்யப் பிரபந்தத்திலும் 80,000 தமிழ் கல்வெட்டுகளிலும் இந்த இன வாதக் கொள்கைகளுக்கு சான்றே இல்லை என்பது மட்டுமில்லை. இதற்கு மாறான தகவல்களும் இருக்கின்றன.

நானும் கிடைத்த ஆதாரங்களை கீழ்கண்ட கட்டுரைகளில் சொல்லிவிட்டேன். மீண்டும் அதை எழுதாமல் உங்களுக்கு நேரம் கிடைக்கையில் படிக்க வேண்டுகிறேன்:

எனது முந்தைய கட்டுரைகள்:

‘எள்’ மர்மம்: ரிக் வேதம் முதல் சிந்து சமவெளி வரை! Post No 755 dated 23/12/13
‘Dravidians are Invaders’
Who are Dravidians ? Part- 2 Post No. 761 dated 26/12/13
‘திராவிடர் கொலை வழக்கு: இந்திரன் விடுதலை’ Post-763 dated 28th Dec. 2013.
Indus Valley Case: Lord Indra Acquitted Post No 764 dated 28th Dec. 2013
ஆரிய ஜீன் —- திராவிட ஜீன் ஆராய்ச்சி முடிவுகள் கட்டுரை எண் 765; தேதி 29/12/2013
Open Sesame’: Password to Heaven Post No 756 dated 23rd December 2013
809 கால்டுவெல் பாதிரியார் தவறுகள் 30-1-14

Aryan Chapatti and Dravidian Dosa!
Aryan Hitler and Hindu Swastika
Are these customs Aryan or Dravidian?
Megasthenes didn’t know Buddha!
‘Sex Worship’ in Indus Valley
Flags: Indus Valley – Egypt Similarity (15/1012)

harappatablet89

Bull Fighting: Indus Valley to Spain via Tamil Nadu (posted 21/1/12)
Human Sacrifice in Indus Valley and Egypt (posted on 31/10/12)
The Sugarcane Mystery: Indus Valley and the Ikshvaku Dynasty
Vishnu in Indus Valley Civilization (posted on 19-10-11)
Serpent Queen: Indus Valley to Sabarimalai 18 June 2012

Vedic God Varuna in Oldest Tamil Book
Valmiki in Tamil Sangam Literature
Were Moses and Jesus ‘Aryans’? (Part 2)
Were Moses and Jesus ‘Aryans’?
Very Important Date: 23rd October 4004 BC! (posted on 30-1-14)
Ad6

‘ஜொராஸ்த்ரர் யார்? காஞ்சி சுவாமிகள் உரை pdf எண் 758, தேதி 25/12/13
Who was Zoroaster? Why Did Parsees ‘Return’ to Gujarat? (pdf) Post No 759 dated 25th December 2013.
பார்ஸீ மத- இந்து மத ஒற்றுமைகள் கட்டுரை எண்: 760; தேதி 26th December 13.
826 How Western Educated ‘Bandicoot’ killed ‘Indian Rats’? Date: 7-2-2014

ஆரிய சப்பாத்தியும் திராவிட தோசையும்
ஆரிய ஹிட்லரும் ஹிந்து ஸ்வஸ்திகாவும்
ஆரியமா? திராவிடமா? நீங்களே சொல்லுங்கள்!
சிந்து சமவெளியில் அரசமரம்
சிந்துசமவெளியில் பேய் முத்திரை (20/8/12)
நாகராணி: சபரிமலை முதல் சிந்துவெளிவரை

திராவிடக் காகமும் ஆரியக் கொக்கும் !
திராவிடர்கள் யார்?
தொல்காப்பியத்தில் வருணன்
தொல்காப்பியத்தில் இந்திரன்

Bull Fight,Indus Seal, Delhi Museum

சோம பானமும் சுரா பானமும்
சிந்து சமவெளியில் ஒரு புலிப் பெண்
தேள்— ஒரு மர்ம தெய்வம்!
சிந்து சமவெளி & எகிப்தில் நரபலி
சிந்து சமவெளியில் செக்ஸ் வழிபாடு (26/7/13)
கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி – எகிப்து அதிசய ஒற்றுமை (15/10/12)

Contact Swaminathan_48@yahoo.com

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: