விஜய தசமி நாளில் வன்னி மரத்தை வழிபடுவது ஏன்?(Post No.3245)

vanni

Written by London Swaminathan

 

Date: 12 October 2016

 

Time uploaded in London: 8-49 AM

 

Post No.3245

 

Pictures are taken from various sources; thanks.

 

Contact swami_48@yahoo.com

 

1381580945_shami_tree

உலகிலேயே அற்புதமான மதம் இந்துமதம். உலகில் ஐந்து வல்லரசுகளுக்குப் பின்னர் முதலில் அணுகுண்டு வெடித்த வளரும் நாடு இந்தியாதான்! உலகில் ஐந்து வல்லரசுகளுக்குப் பின்னர் ராக்கெட்டை விண்ணில் செலுத்தியதும் இந்தியாதான். உலகிலேயே அதிகமான கம்ப்யூட்டர் அலுவலர்களை அனுப்புவது இந்தியாதான். இப்படி அணுயுகத்திலும், விண்வெளி யுகத்திலும் முன்னனியில் நிற்கும் இந்தியா 3000 ஆண்டுகளுக்கு முன்னர் மரங்களுக்கும் மிருகங்களுக்கும் கொடுத்த மதிப்பையும் மரியாதையையும் இன்றும் கொடுக்கிறது!

 

ஒரு மூலையில் நாக பஞ்சமி என்ற பெயரில் பாம்பு வழிபாடு. மற்றொரு புறத்தில் தேள்கள் வழிபாடு. ராஜஸ்தானில் ஒரு கோவிலில் எலிகள் வழிபாடு. ஊர் தோறும் மர வழிபாடு. அருகம் புல்லுக்கும், தர்ப்பைப் புல்லுக்கும்—சந்யாசிகளுக்குத் தரும் மரியாதை!! துளசியும் வில்வமும் தினசரி பூஜையில்!!!

 

இப்படி இருப்பதைப் பார்த்து முன்னர் மூட நம்பிக்கை என்று எழுதியவர்கள் எல்லாம், இப்பொழுது இந்துக்கள்தான் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்துகின்றனர்; இந்துக்கள்தான், புறச் சூழ்நிலையைப் பாதிக்காமல் பண்டிகை கொண்டாடுகின்றனர் என்று புகழத் துவங்கியுள்ளனர்.

 

வன்னி மர வழிபாடு மஹாபாரத காலத்திலிருந்து இருக்கிறது. அரச மர வழிபாடு புத்தருக்கும் முன்னாலேயே இருக்கிறது. அரச மரத்தின் பெயரில் பிப்பலாடன் முதலி ய ரிஷிகள் இருந்திருக்கின்றனர்.

 

12 ஆண்டு வனவாசமும் ஒரு ஆண்டு அஞ்ஞாத வாசமும் (மறைந்திருந்து வாழுதல்) விதிக்கப்பட்டதால் பாண்டவர்கள் ஐவரும் 13-ஆவது ஆண்டில் விராட தேசத்துக்குச் சென்றனர்.

 

ஒவ்வொருவரும் ஒரு மாறுவேடத்தில் விராடன் அரண்மனையில் வேலை யில் புகுந்தனர். அவர்கள் விராட தேசத்தில் மாறுவேடத்தில் இருப்பதை துர்யோதனன், உளவாளிகள் மூலம் கண்டுபித்தான் போலும். விராட தேசத்தில் பசுக்களை கவரும் ‘ஆநிறை கவர்த’லில் ஈடுபட்டான். இந்த வேத கால வழக்கம் புற நானூற்றிலும் உள்ளது அப்போது  அர்ஜுனன் சண்டைக்குப் புற[ப்பட்டான். ஆனால் அவன் விராடன் சபையில் அலி வேடம் போட்டுக்கொண்டு ஆடல் பாடல் சொல்லிக் கொடுத்ததால், முன்கூட்டியே,  தனக்கு சிவபெருமான் கொடுத்த ஆயுதங்களை வன்னி மரத்துக்கு அடியில் ஒளித்து வைத்திருந்தான். சண்டைக்குப் போவதற்கு முன்னர்  அவைகளைத் தோண்டி யெடுத்தான்.

 

துரியோதனனின் படைகளச் சிதறடித்து, ஆநிரைகளை (பசு மாடுகளை) மீட்டு பின்னர் வன்னி மர பூஜை செய்தான்  .

 

இந்த ஆண்டு மைசூர் தசரா விழாவில்கூட வன்னி மர பூஜை நடைபெற்றது. நாடு முழுதும் மன்னர்களும் க்ஷத்ரியர்களும் செய்யும் பூஜை இது. ஒரு வேளை அர்ஜுனனுக்கும் முன்னரே இந்த வழக்கம் இருந்ததால்தான் அர்ஜுனனும் இதைச் செய்தான் போலும். ஆராய்ச்சிக்குரிய விஷயம்.

vanni-2

விஜய தசமி நாளில் வன்னி மரத்தை வழிபடுவது ஏன்?(Post No.3245)

சமீ விருட்சம் எனப்படும் வன்னி மரத்தைப் பூஜை செய்கையில் சொல்லப்படும் ஸ்லோகங்கள்:-

 

(1).சமீ சமயமேபாபம், சமீ சத்ரு விநாசினீ, அர்ஜுனஸ்ய தனுர் தாரி, ராமஸ்ய ப்ரியதர்சினி

 

 

(2).சமீம் கமல பத்ராக்ஷீம், சமீம் கடக தரரிணீம், ஆரோஹது சமீம் லக்ஷ்மீம், ந்ருணாம் ஆயுஷ்யவர்தனீம்

 

(3).நமோ விஸ்வாச வ்ருக்ஷாய பார்த்த சஸ்த்ர தாரிணே, துவத்தஹ விரத பிரதீச்யாமி, ஸதா விஜயதாபவ.

 

(4).தர்மாத்மா சத்ய சந்தஸ்ச, ராமோதாசா திர்யதி, பௌருஷேசா பிரதி துவந்துவம், சரைநம் ஜஹிராவணீம்

 

(5).அமங்களாய சமனீம், துஷ்கிருதஸ்ய நாசினீம், துஸ் ஸ்வப்ன ஹாரிணீம் தன்னியாம், பிரபத்தியேஹம் சமீம் சுபாம்.

 

இந்த ஐந்து ஸ்லோகங்களையும் சொல்லி சமீம் மரத்தை/ வன்னி மரத்தை வழிபடுவது காலாகாலமாகப் பின்பற்றப்படுகிறது.

 

வாழ்க வன்னி மரம்! வளர்க சமீ மரம்!!

 

–Subham–

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: