Compiled by London swaminathan
Date: 30 JANUARY 2017
Time uploaded in London:- 19-59
Post No. 3590
Pictures are taken from different sources; thanks.
contact; swami_48@yahoo.com
பிப்ரவரி 2017 காலண்டர்
துர்முகி வருடம் (தை–மாசி மாதம்)
முக்கிய நாட்கள்:- பிப்ரவரி 3– ரத சப்தமி, 9- தைப்பூசம், 24-மஹா சிவரத்திரி.
ஏகாதசி- 7, 22; அமாவாசை- 26; பௌர்ணமி– 10
முகூர்த்த நாட்கள்–1, 2, 6, 9, 16, 17, 23.
பிப்ரவரி 1 புதன்கிழமை
திரு உடம்பு வான்சுடர்; செந்தாமரை கண்; கை கமலம்
திரு இடமே மார்வம்; அயன் இடமே கொப்பூழ்;
ஒருவு இடமும் எந்தை பெருமாற்கு அரனே; ஓ
ஒருவு இடமும் ஒன்று இன்றி என்னுள் கலந்தானுக்கே (3054)
பிப்ரவரி 2 வியாழக்கிழமை
ஆண் அல்லன்; பெண் அல்லன்; அல்லா அலியும் அல்லன்;
காணலும் ஆகான்; உளன் அல்லன்; இல்லை அல்லன்;
பேணுங்கால், பேணும் உரு ஆகும்….. (3062)
பிப்ரவரி 3 வெள்ளிக் கிழமை
உன்னைச் சிந்தை செய்து செய்து, உன் நெடு மா மொழி இசைபாடி, ஆடி, என்
முன்னைத் தீவினைகள் முழுவேர் அரிந்தனன் யான் (3069)
பிப்ரவரி 4 சனிக்கிழமை
அனைவது அரவு- அணைமேல்; பூம்பாவை ஆகம்
புணர்வது; இருவர் அவர் முதலும் தானே;
இணவன் ஆம் எப்பொருட்கும்; வீடு முதல் ஆம்-
புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே (3088)
பிப்ரவரி 5 ஞாயிற்றுக்கிழமை
கைம்மா துன்பம் கடிந்த பிரானே!
அம்மா! அடியேன் வேண்டுவது ஈதே-3099
(கைம்மா=யானை).
பிப்ரவரி 6 திங்கட்கிழமை
மகிழ் கொள் தெய்வம் உலோகம், அலோகம்
மகிழ் கொள் சோதி மலர்ந்த அம்மானே!
மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும்
மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே -3104
பிப்ரவரி 7 செவ்வாய்க்கிழமை
கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்,
வளர் இளம் பொழில் சூழ்மாலிருஞ்சோலை
தளர்வு இலர் ஆகிச் சார்வது சதிரே–3110
பிப்ரவரி 8 புதன்கிழமை
வரும்காலம், நிகழ்காலம், கழிகாலம் ஆய், உலகை
ஒழுங்காக அளிப்பாய்! சீர் எங்கு உலக்க ஓதுவனே?-3125
பிப்ரவரி 9 வியாழக்கிழமை
கிற்பேன், கில்லேன் என்று இவன் முனம் நாளால்;
அற்ப சாரங்கள் அவை அகன்றொழிந்தேன்;
பற்பல் ஆயிரம் உயிர் செய்த பரமா நின்
நற்பொன் – சோதித்தாள் நணுகுவது எஞ்ஞான்றே?—3137
பிப்ரவரி 10 வெள்ளிக் கிழமை
எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை – வானவர் வானவர் – கோனொடும்
சிந்து பூ மகிழும் திருவேங்கடத்து
அந்தம் இல் புகழ்க் கார் எழில் அண்ணலே -3144
பிப்ரவரி 11 சனிக்கிழமை
சாதி மாணிக்கம் என்கோ?
சவி கொள் பொன்முத்தம் என்கோ?
சாதி நல் வயிரம் என்கோ?
தவிவு இல் சீர் விளக்கம் என்கோ?-3157
பிப்ரவரி 12 ஞாயிற்றுக்கிழமை
கும்பிடு நட்டம் இட்டு ஆடி
கோகு உகட்டுண்டு உழலாதார்
தம்பிறப்பால் பயன் என்னே
சாது சனங்களிடையே?–3168
பிப்ரவரி 13 திங்கட்கிழமை
கனியை, கரும்பின் இன்சாற்றை,
கட்டியை, தேனை, அமுதை
முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார்
முழுது உணர் நீர்மையினாரே—3170
பிப்ரவரி 14 செவ்வாய்க்கிழமை
ஒருமை மனத்தினுள் வைத்து,
உள்ளம் குழைந்து, எழுந்து, ஆடி,
பெருமையும் நாணும் தவிர்ந்து
பிதற்றுமின், பேதைமை தீர்ந்தே!-3174
பிப்ரவரி 15 புதன்கிழமை
தேவதேவனை, தென் இலங்கை
எரி எழச் செற்ற வில்லியை
பாவநாசனை, பங்கயத் தடங்
கண்ணனைப் பரவுமினோ -3177
பிப்ரவரி 16 வியாழக்கிழமை
குலம் தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து, எத்தனை
நலம் தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்,
வலம்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு ஆள் என்று உள்
கலந்தார் அடியார்- தம் அடியார் எம் அடிகளே -3195
பிப்ரவரி 17 வெள்ளிக் கிழமை
அடிஆர்ந்த வையம் உண்டு, ஆல் இலை அன்னவசம் செய்யும்
படியாதும் இல் குழவிப்படி எந்தைபிராந் தனக்கு
அடியார் அடியார் தம் அடியார் அடியார்- தமக்கு
அடியார் அடியார் – தம் அடியார் அடியோங்களே -3196
பிப்ரவரி 18 சனிக்கிழமை
சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன்; கேண்மினோ
எந்நாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன் –3209
பிப்ரவரி 19 ஞாயிற்றுக்கிழமை
மாரி அனைய கை, மால்வரை ஒக்கும் திண் தோள் என்று
பாரில் ஓர் பற்றையைப் பச்சைப் பசும்பொய்கள் பேசவே – 3215
பிப்ரவரி 20 திங்கட்கிழமை
இடர் இன்றியே, ஒருநாள் ஒரு போழ்தில் எல்லா உலகும் கழிய
படர்புகர்ப் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏற திந்தேர் கடவி
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை
உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயர் இலனே –3224
பிப்ரவரி 21 செவ்வாய்க்கிழமை
அடிசேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம் தொழ
இடிசேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர்
பொடிசேர் துகளாய்ப் போவார்கள்; ஆதலில் நொக்கெனக்
கடிசேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ -3233
பிப்ரவரி 22 புதன்கிழமை
ஏக மூர்த்தி இரு ஊர்த்தி
மூன்று மூர்த்தி பல மூர்த்தி
ஆகி, ஐந்து பூதம் ஆய்,
இரண்டு சுடர் ஆய், அருவு ஆகி – 3255
பிப்ரவரி 23 வியாழக்கிழமை
கண்ணன், எம்பிரான், எம்மான்
காலச்சக்கரத்தானுக்கே -3257
பிப்ரவரி 24 வெள்ளிக் கிழமை
அறியும் செந்தீயைத் தழுவி
அச்சுதன் என்னும்; மெய் வேவாள்;
எறியும் தண் காற்றைத் தழுவி
என்னுடைக் கோவிந்தன் என்னும்; -3266
பிப்ரவரி 25 சனிக்கிழமை
திரு உடை மன்னரைக் காணில்
திருமாலைக் கண்டேனே என்னும்;
உரு உடை வண்ணங்கள் காணில்
உலகு அளந்தான் என்று துள்ளும்;
கரு உடைத் தேவு இல்கள் எல்லாம்
கடல்வண்ணன் கோயிலே என்னும்;
வெருவிலும் வீழ்விலும் ஓவாள்;
கண்ணன் கழல்கள் விரும்புமே -3271
பிப்ரவரி 26 ஞாயிற்றுக்கிழமை
விரும்பிப் பகவரைக் காணில்
வியல் இடம் உண்டானே என்னும் -3272
(பகவர்= துறவி)
பிப்ரவரி 27 திங்கட்கிழமை
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் தன்னை
வண்-தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே -3284
பிப்ரவரி 28 செவ்வாய்க்கிழமை
கொள்ளமாளா இன்ப வெள்ளம் கோது இல தந்திடும் என்
வள்ளலேயோ! வையம் கொண்ட வாமனாவோ என்று என்று-3298
–subham–