மேல் ஜாதி, கீழ் ஜாதி பற்றி நாலு பேர் சொன்னது! (Post No.3824)

Written by London swaminathan

 

Date: 16 APRIL 2017

 

Time uploaded in London:- 20-12

 

Post No. 3824

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com 

 

 

இனையது ஆதலின் எக்குலத்து யாவர்க்கும்

வினையினால் வரும் மேன்மையும் கீழ்மையும்

அனைய தன்மை அறிந்தும் அழித்தனை

மனையின் மாட்சி என்றான் மனுநீதியான்

–வாலி வதைப்படலம், கம்ப ராமாயணம்

கம்பன் சொல்கிறான்:-

எந்தக் குலத்தில் தோன்றியவர்க்கும் உயர்வும் இழிவும் அவரவர் செய்த செயல்களாலேயே வரும். இதனை உணர்ந்து இருந்தும் பிறன் மனைவியின் கற்பினை அழித்தாய் – என்று மனு நீதி சாஸ்திரத்தில் சொன்னபடி நடக்கும் ராமன் (வாலியிடம்) கூறினான்

xxx

 

வள்ளுவர் சொன்னதும் அதுவே

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமையான் – (திருக்குறள் –972)

 

என்று வள்ளுவன் இதை இன்னும் அழகாகச் சொல்லுவான்.

பொருள்:– எல்லா உயிர்க்கும் பிறப்பு என்பது ஒரே தன்மையுடையது; அங்கே வேறுபாடில்லை. செய்யும் தொழில்களால் – செயல்களினால் தான் வேறுபாடுகள்.

xxx

கிருஷ்ணன் சொன்னதும் அதுவே

 

சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண-கர்ம விபாகசஹ

தஸ்ய கர்தாரமபி மாம் வித்த்யகர்தாரம வ்யயம்

பகவத் கீதை 4-13

 

பொருள்:-

என்னால் குணங்களுக்குத் தக்கபடி நான்கு ஜாதிகள் உண்டாக்கப்பட்டன. செய்யும் தொழில்கள் குணங்களுக்கு ஏற்ப நடக்கின்றன. இதை உருவாக்கியபோதும் என்னை மாறுபாடில்லாதவனாக அறிவாயாக.

xxx

 

அவ்வையார் சொன்னதும் அதுவே

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ள படி

எவர் ஒருவர் பிறருக்கு கொடுத்து உதவுகிறாரோ அவர் பெரியோர்; கொடாதோர் கீழோர் என்று ‘நல்வழி’யில் அவ்வையாரும் சொல்கிறார்.

xxx

வேத கால ரிஷி சொன்னதும் அதுவே

நாம் எல்லோரும் தாயின் கருவிலேயே சமத்துவம் கண்டோம்; இப்பொழுது சகோதரத்துவத்தை நிச்சயமாக உருவாக்குவோம்.– ரிக் வேதம் 8-83-8

ந இஹ நானாவஸ்தி கிஞ்சன- ப்ருஹத் ஆரண்யக உபநிஷத்

பொருள்:-இந்த உலகில் உயிர்களிடத்தில் மட்டும் எந்த பேதமும் இல்லை.

 

ஜன்மனா ஜாயதே சூத்ரஹ

சம்ஸ்கராத் த்விஜ உச்யதே

வேத படனாத் பவேத் விப்ரஹ

பிரம்ம ஜானதி இதி பிராஹ்மணஹ

-சம்ஸ்கிருத ஸ்லோகம்

பிறக்கும்போது எல்லோரும் சூத்திரர்கள்;

உபதேசம் பெற்று பூணூல் போடுவதால் இருபிறப்பாளன்;

வேத அத்யயனத்தால் அறிஞன்;

பிரம்மனை அறிவதால் பிராம்மணன் ஆகிறான்

 

–subham–

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: