BEETHOVEN DECOMPOSING! BONERS ANECDOTES -2 (Post No.4357)

HELL GATE OF NEW YORK

COMPILED by London Swaminathan

 

Date: 1 NOVEMBER 2017

 

Time uploaded in London- 9-40AM

 

 

Post No. 4357

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

HELL GATE

Marse Henry Watterson used to tell with pleasure of his favourite typographic al boner (Stupid Mistake= Boner) in newspapers. It happened that a New York newspaper transposed, one day, the headings of its obituary column and the marine and shipping news which has chanced to fall on the same page. As a result a number of respected and diseased citizens were listed under the disconcerting heading, “Passed through the Hell Gate today”.

Xxxx

Uncle Tom’s Cabin

When Julia Ward Howe died, memorial services were held at San Francisco. The local literary colony attended practically en masse to pay their tribute. The mayor was asked to preside. Advancing to the edge of the platform, he said, Your attendance here, ladies and gentlemen, in such great numbers, shows San Francisco s appreciation of good literature. This meeting is a great testimonial to the immortal author of Uncle Tom’s Cabin– the late Julia Ward Howard.

 

Xxxx

Mozart’s Massachusetts!

This was one of Cardinal Gibbbon’s jokes

Patrick Gilmore,  the bandmaster, famous for his rendition of Mozarts Twelfth Mass, once presented his favourite number in a small North Carolina town. The reporter of the one newspaper in the town, who was assigned to “cover ” the performance evidently thought that the occasion was that one called upon him to avoid any undignified abbreviation s in his write up of the concert. He began with this statement

Gilmore’s band rendered with great effect Mozart’s Twelfth Massachusetts .

 

Xxxx

BEETHOVEN DE’COMPOSING’

A young lady, who had recently acquired a large fortune, invited Paderewski to give a private concert at her home. Her knowledge of music was by no means as large as her newly found wealth.

Commenting on one of his selection s, she exclaimed, What a beautiful piece. Who composed it?

Beethoven, madam, was the reply.

Ah, yes, she said knowingly, ‘and is he composing now?

No, replied Paderewski gravely, he is decomposing.

 

Xxxx Subham, Subham xxxx

 

 

இரண்டு முறை மட்டும் உண்க! வேதம் கட்டளை!! (Post No.4356)

Written by London Swaminathan

 

Date: 1 NOVEMBER 2017

 

Time uploaded in London- 7-17 AM

 

 

Post No. 4356

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

வேத சம்ஹிதைகளை அடுத்து எழுந்த பிராமணங்கள் என்னும் உரைநடை நூல்களில் நிறைய தத்துவக் கதைகள் உள்ளன. சில நேரடியாகவும், சில மறைமுகமாகவும் நமக்குப் பல நீதிகளை உணர்த்துவன. தமிழ், கிரேக்கம், லத்தீன் முதலிய பல மொழிகளில் நூல்கள் தோன்றுவதற்கு மிக, மிக, மிக முன்னதாக சம்ஸ்கிருதத்தில் தோன்றிய உரைநடை நூல்கள் இவை.

ஒரு குட்டிக் கதையைப் பார்ப்போம்.

 

தேவர்கள், மனிதர்கள், பித்ருக்கள் (இறந்துபோன முன்னோர்கள்), அசுரர்கள் ஆகிய அனைவரும் பிரஜாபதியிடம் (பிரம்மா) சென்றனர். “ஐயன்மீர்! நாங்கள் எப்படி வாழ்வேண்டும் என்று அறிவுறுத்தவும்” என்றனர். ஒருவர் பின்னர் ஒருவராக வரிசையாகச் சென்று வினவினர். அவரும் செப்பினார்  :

 

ஆடை அணிந்து வளைந்து நெளிந்து கூனிக் குறுகிய மனிதனே! நீ காலையிலும், மாலையிலும் உண்க.

 

தேவர்களே! யாகத்தில் கிடைக்கும் உணவை மட்டும் உண்க

 

பித்ருக்களே! மாதம் தோறும் ஒரு முறை நிலவு ஒளியில் உண்க

 

மிருகங்களோவெனில் நினனைத்தபோது, கண்டவை எல்லாவற்றையும் உண்ணலாம்.

 

அசுரர்களுக்கு இருட்டையும் மாயையையும் பிரம்மா கொடுத்தார்.

( கண்ட கண்ட நேரங்களில் கண்ட கண்ட வற்றை உண்பவன் மிருகம் என்பது சொல்லாமலே விளங்கும்; மாயையிலும் இருட்டிலும் மூழ்கிக் கிடப்பவர், இனம் புரியாத வஸ்துக்களை உண்பர்; தற்கால குடிகாரர்கள்; போதை மருந்துக்கு அடிமையானோரை ஒப்பிடலாம்;அல்லது பல்லி,தேள், பாம்பு போன்றவற்றை உண்ணும் வர்கத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளலாம் என்பது என் கருத்து).

மனிதராயினும், தேவராயினும், மிருகமாயினும் — எவரும் இக்கட்டளைகளை மீறக்கூடாது. சில மனிதர்கள் இதை மீறி உண்கிறார்கள்; அவர்கள் அதர்ம வழிகளில் கொழுத்துப் போகிறார்கள். கொழுப்பு என்பது தவற்றினால் வருகிறது. ஆகையால் மனிதர்கள் காலையிலும் மாலையிலும் சாப்பிட வேண்டும்; எவர் ஒருவர் இந்த உண்மையை அறிகிறாரோ, அறிந்தபடி பின்பற்றுகிறாரோ, அவர் முழு வாழ் நாளும் வாழ்வார். அவர் பேசுவதெல்லாம் உண்மையாகிவிடும்;  ஏனெனில் இது தெய்வீக உண்மை– சதபத பிராமணம் 2-4-2-6

 

நீதி வெண்பாவில் வரும் தமிழ் பாட்டு ஒன்று கூறுகிறது:

ஒருபோது யோகியே ஒண்டளிர்க்கை மாதே!

இருபோது போகியே யென்ப—திரிபோது

ரோகியே நான்குபோ துண்பா னுடல் விட்டுப்

போகியே யென்று புகல் உண்பான் ”

 

 

(ஒருவேளை உண்பான் யோகி, இருவேளை உண்பான் போகி
மூவேளை உண்பான் ரோகி  நான்குவேளை உண்பான் போகியே போகி (ஆள் அவுட்!) என்பது இதன் பொருள்).

இன்னும் ஒரு குட்டிக்கதை

 

மாதங்கள் ஏன் தெரியுமா ஒன்றை அடுத்து ஒன்றாக , வரிசையாக வருகின்றன? ஏனெனில் பிராமண/ புரோகிதர்கள் ஒருவர் பின் ஒருவராக வரிசையாக வருகின்றனர். அவர்கள் ஒழுங்காக வருகின்றனர்; ஒழுங்காக உள்ளே நுழைகின்றன்ர்; இதனால் மாதங்களும் இப்படி வரும்; ஆகவே ஒருவர் பின்னால் ஒருவர் செல்க; காலடிச் சுவட்டைப் பின்பற்றுக- 3-1-7-11

 

இந்த மந்திரம் ஒழுங்கையும், வரிசைக் கிரமத்தையும் கற்பிக்கும் மந்திரம் என்று எனக்குத் தோன்றுகிறது. இவை எல்லாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் அற்புதமான பொன்மொழிகள்!.

 

My Old Articles:-

ஒரு வேளை உண்பான் யோகி | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/ஒரு-வேளை-உண்பா…

15 Nov 2012 – ஒருபோது யோகியே ஒண்டளிர்க்கை மாதே! இருபோது … (ஒருவேளை உண்பான் யோகி, இருவேளைஉண்பான் போகி மூவேளை …

உண்டி சுருக்குதல் … – Tamil and Vedas

https://tamilandvedas.com/…/உண்டி-சுருக்குதல்…

17 Jun 2014 – ((காண்க:– எனது பழைய கட்டுரை; ”ஒருவேளைஉண்பான் யோகி”……கட்டுரை … ஒருபோது யோகியே ஒண்டளிர்க்கை மாதே இருபோது …

 

xxxxx SUBHAM, SUBHAM xxxxxx

 

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 6 (Post No.4355)

Written by S.NAGARAJAN

 

 

Date: 1 NOVEMBER 2017

 

Time uploaded in London- 6-08 am

 

 

Post No. 4355

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

நண்பரா, கைக்கூலியா!

மாக்ஸ்முல்லர் மர்மம் – 4 : கட்டுரை எண் 4269 – வெளியான தேதி 4-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 5 : கட்டுரை எண் 4367 – வெளியான தேதி 23-10-2017 ;

இதனுடைய தொடர்ச்சியாக இக் கட்டுரை வெளியாகிறது.

 

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 6

 

ச.நாகராஜன்

9

The Life and Letters of Friedrich Max Muller – First Published in 1903 (London and New York; Reprint in USA

1903ஆம் ஆண்டு ‘தி லைஃப் அண்ட் லெட்டர்ஸ் ஆஃப் ஃப்ரெடிரிக் மாக்ஸ் முல்லர் என்ற நூலிலிருந்து எடுத்துத் தரப்படும் கடிதங்களையே இங்கு நீங்கள் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

அடுத்து அவர் செவாலியர் புன்சென்னுக்கு 1856ஆம் ஆண்டு ஆகஸ்ட மாதம் 25ஆம் தேதி எழுதிய கடிதத்தில் புனிதர் பால்  வாழ்ந்த காலத்தில் இருந்த கிரேக்கம் மற்றும் ரோமை விட இந்தியா கிறிஸ்தவ மயமாக நன்கு காலம் கனிந்திருக்கிறது என்று எழுதுகிறார்.

இந்தப் புனித காரியத்திற்காக நான் எனது வாழ்வையே அர்ப்பணிப்பேன் என்று சூளுரை புகல்கிறார். 1856இல் இந்தக் கடிதத்தை அவர் எழுதும் போது அவர் வயது 33.

கடிதத்தின் ஒரு பகுதியை கீழே காணலாம்:

TO CHEVALIER BUNSEN 55, ST. JOHN STREET, OXFORD, AUGUST25, 1856.

 “India is much riper for Christianity than Rome or Greece were at the time of St. Paul. The rotten tree has for some time had artificial supports… For the good of this struggle I should like to lay down my life, or at least to lend my hand to bring about this struggle. Dhulip Singh is much at Court, and is evidently destined to play a political part in India.”

இதற்கு ஒரு ஆண்டிற்கு முன்னர் புன்சென் மாக்ஸ் முல்லரை அவரது மத சம்பந்தமான கட்டுரை பற்றி வெகுவாகப் புகழ்கிறார். அவர் ராஜதந்திரியாக சேவை ஆற்ற வேண்டியவர் என்று அவர் கூறுவதன் உள்ளர்த்தத்தை நன்கு புரிந்து கொள்ள முடியும்.

கடிதத்தின் ஒரு பகுதியைக் கீழே காணலாம்:

 On April 17, 1855, Bunsen wrote to thank Max Müller for an article on his
Outlines.

“You have so thoroughly adopted the English disguise that it will not be easy for any one to suspect you of having written this ‘curious article.’ It especially delights me to see how ingeniously you contrive to say what you announce you do not wish to discuss, i.e. the purport of the theology. In short, we are all of opinion that your cousin was right when she said of you in Paris to Neukomm, that you ought to be in the diplomatic service!”

1868, டிசம்பர் 16ஆம் தேதி அவர் ட்யூக் ஆஃப் ஆர்ஜில்-க்கு எழுதிய கடிதத்தில் அவர் கூறுவது:

இந்தியா ஒரு  முறை ஏற்கனவே ஜெயிக்கப்பட்டது. அது இரண்டாம் முறையாக ஜெயிக்கப்பட வேண்டும். இந்த இரண்டாவது வெற்றி கல்வி மூலமாக ஏற்பட வேண்டும். கல்வி பற்றி ஏராளமாகச் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் நிதி உதவியானது மூன்று மடங்காகவோ அல்லது நான்கு மடங்காகவோ அது போதுமானதாக இருக்கும். … மேலை நாட்டுக் கருத்துக்கல் தோய்ந்த ஆனால் உள்ளூர் மண்வாசமும் குணாதிசயமும் அப்படியே இருக்கும்படியாக உள்ள ஒரு புது தேசீய இலக்கியம் எழும். ஒரு புது தேசீய இலக்கியம் ஒரு புது தேசீய வாழ்க்கையைத் தன்னுடன் கொண்டு வரும். ஒரு புதிய நல்லொழுக்க சக்தியும் வரும். மதம் என்று எடுத்துக் கொண்டால், அது தன்னைத் தானே பார்த்துக் கொள்ளும். மிஷனரிகள் தாங்கள் என்ன செய்தோம் என்பதை உணர்ந்ததற்கும் அதிகமாக செய்திருக்கின்றனர்.”

இந்தியாவின் புராதன மதம் அழிந்து விட்டது. இப்போது கிறிஸ்தவம் உள்ளே நுழையா விட்டால் அது யாருடைய தவறு?”

இந்தக் கடிதத்தை அவர் எழுதும் போது அவருக்கு வயது 45.

TO THE DUKE OF ARGYLL. OXFORD, December 16, 1868.

“India has been conquered once, but India must be conquered again, and that second conquest should be a conquest by education. Much has been done for education of late, but if the funds were tripled and quadrupled, that would hardly be enough… A new national literature may spring up, impregnated with western ideas, yet retaining its native spirit and character… A new national literature will bring with it a new national life, and new moral vigour. As to religion, that will take care of itself. The missionaries have done far more than they themselves seem to be aware of.

“The ancient religion of India is doomed, and if Christianity does not step in, whose fault will it be?”

இந்தக் கடிதங்களிலிருந்து இளைஞரான மாக்ஸ் முல்லரின் தெளிவான ஒரே நோக்கம் “உயிரைக் கொடுத்தாவது” இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தை ஸ்தாபிக்க வேண்டும்; ஹிந்து மதம் அழிந்து படும்” என்பது தெளிவாகத் தெரிகிறது. 22 வயதிலிருந்து 45 வயது வரையிலான அவரது நோக்கம், ஆசை, பணி ஆகியவற்றை மேற்கூறிய கடிதங்களிலிருந்து தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

***   (தொடரும்)