பாரதி போற்றி ஆயிரம் – 33

 

Date:- 22 January 2018

Time uploaded in London- 7-55 am

Compiled by S Nagarajan

Post No.4646

Share it, but with author’s name and blog name; Dont use it without author’s name or blog name; pictures are noot ours; they are mostly from Facebook friends and newspapers. Beware of copy right laws.

பாடல்கள் 188 முதல் 193

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : .நாகராஜன்

கண்ணதாசன் பாடல்கள்

பாரதியும் பாரதிதாசனும் (தொடர்ச்சி)

பாரதி பாரதி தாசன்இரு

     பைந்தமிழ்ப் பாவலர் தம்மிடை யேயும்

பாரதி பல்லவி சொன்னான்தாசன்

     பாக்கியைப் பாடித்தன் பாட்டை முடித்தான்!

 

பாரதி பாட மறந்தஒரு

     பக்கம் திராவிட நாட்டின் எழுச்சி

யாரதைப் பாடிய வீரன்? – வேறு

    யாரவன், பாரதி தாசனல் லாமல்!

 

இன்றைய மாந்தரின் எண்ணம்நன்(கு)

     ஏற்றமு றத்தந்த பாரதி தாசன்

பின்றைய நாளில் தனக்கே ஒரு

     பேரிடம் தந்தனன் மூடுதற் கில்லை!

 

பெண்கள் விடுதலை காதல்திறம்

     பேசுந் தமிழின் கனிரசம், இன்பம்

மண்ணில் அனைவரும் ஒன்றேஎன

    வாழ்த்தும் புதுக்குரல் வாழ்க்கையின் நீதி!

 

சாத்திரம் பொய்யெனும் சூதுதண்டச்

     சாகசப் பார்ப்பனர் செய்கையின்மீது

ஆத்திரங் கொள்ளும் குணங்கள்இவை

     யாவிலும் பாரதி மூத்தவன் என்பேன்!

 

இந்த வகைகளில் ஒன்றைதாசன்

      எப்படிப் பாடி எழில்தந்த போதும்

தந்தையர் பாரதிஎன்றால்அவன்

      தாச னுரைத்தது தானிந்த வார்த்தை!

                                    ****                           (இக்கவிதை முடிந்தது)

தொகுப்பாளர் குறிப்பு: இந்தக் கவிதையில் உள்ளதிராவிட எழுச்சிமற்றும்பார்ப்பனர் எதிர்ப்புபோன்ற கருத்துக்களை பின்னாளில் கவிஞர் கண்ணதாசன் மாற்றிக் கொண்டுள்ளார்.

கவிஞர் கண்ணதாசன்: கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.

 

‘***

HERBAL MYSTERY IN CHANAKYA NITI! (Post No.4645)

Written by London Swaminathan 

 

Date: 21 JANUARY 2018

 

Time uploaded in London 15-22

 

 

 

Post No. 4645

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

We know that Chanakya alias Kautilya was a great economist, author of the world’s first economic book Arthasastra, a poor and ugly Brahmin, a king maker, a statesman and author of several didactic works. But no one considered him a medicine man; yet he made some passing remarks about herbs and health tips. The puzzling one is a sloka/ couplet about a herb called Amruta. Here comes the trouble! What is Amruta?

 

Like no two clocks agree no two herb books on the term Amruta; but we are not wasting tie in identifying what exactly is Amruta. Whatever they say about different Amrutas is good according to Ayurveda, the ancient Hindu medical system.

 

Let us explore it further:

His sloka in Chanakya Niti runs like this:

sarvushadhinaamamrutaa pradhaanaa

sarveshu saukyeshvasanam pradhaanam.

 

sarvendriyaanaam nayanam pradhaanam

sarveshy gathreshu sirah pradhaanam

–chanakya niti, chapter 9, sloka 4

 

The translation for this sloka according to Satya Vat Shastri, a great scholar in Sanskrit, is as follows

“Of all the herbs it is the Cocculus Cordifolius that is the best, of all the forms of happiness it is eating that is so, of all the sense organs it is eye that steals the palm, of all the limbs it is the head that stands out”.

 

The next step is to identify this herb Cocculus cordifolius. In Sanskrit they call it Amrutavalli or Amrutaballi. But Chanakya just gave the name Amrutaa.

 

This Cocculus Cordifolius itself has another name Tinospora cordifolia. Both these names agree the leaf is Cordi= heart shaped, Folia= leaf. The leaf is heart shaped (like Pipal or peepul tree leaf)

 

The Ayurvedic sources give two  candidates for this name Amrutavalli; one is Guduchi and another is Amrutavalli. In Tamil we get Seenthil kodi or Sirukattukkodi. Most probably Seenthil corresponds with Amrutavalli. Bothe these have lot of curative properties. Diabetes, Cancer, Arthritis etc cured by these herbs.

 

It is interesting to see that Chankya mentioned this herb 2300 years ago.

xxxx

 

Water is a Medicine

Chanakya says,

“In indigestion water is the medicine, with the digestion of the food it imparts strength, it is nectar during meals and is poison at the end of them”

Ajiirne beshajam vaari jeerne vaari balapradam

bhojame caamrutam vaari bhojanaante vishapradam

chapter 8, sloka 7

 

xxx

 

Butter Power!

Chanakya says,

“Flour has ten times more of potency in it than rice, milk has ten times more of it than flour, meat has eight times more of it than milk and ghee has ten times more of it than meat”

Ghee= clarified butter or melted butter

 

annaad dasagunam pishtam pishtaad dasagunam payah

payasoshtagunam maamsam maamsaad dasagunam ghrutam

chapter 9, sloka 19

 

“Diseases catch up with vegetables, body gains in strength with milk, semen increases with ghee, flesh gains from flesh”

saakena roogaa vardhante payasaa vardhate tanuh

ghrutena vardhate viiryam maamsaanmaamsam pravardhate

chapter 9, sloka 20.

 

My comments:

Here the power of clarified butter is explained. Brahmins consume it a lot in all the ceremonies. So it may be a warning about cholesterol.

The effect of meat is explained very well. Tamil poet Tiruvalluvar also said the same. What is the use of eating flesh to increase one’s own meat/flesh? asks Valluvar in Tirukkural.

 

Chanakya’s statement about vegetables should be understood properly. If you don’t cook or wash and cook the vegetables it serves as a  source of diseases. Apart from it certain vegetables are avoided when one is on regular Siddha or Ayurvedic medication. This is not in allopathic medicines.

In modern terms we can translate ‘potency’ (in the sloka) as cholesterol.

 

–SUBHAM–

கஞ்சி வரதப்பா கதை! காஞ்சிக்குப் போனால் காலாட்டிப் பிழைக்கலாம் கதை!! (Post No 4644)

கஞ்சி வரதப்பா கதை! காஞ்சிக்குப் போனால் காலாட்டிப் பிழைக்கலாம் கதை!! (Post No.4644)

 

Written by London Swaminathan 

 

Date: 21 JANUARY 2018

 

Time uploaded in London 9-37 AM

 

 

 

Post No. 4644

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

2 பழமொழிக்  கதைகள்

 
(தமிழ் வாழ்க! தமிழை வளர்க்க நீங்கள் என்ன செய்யலாம்? மற்றவர்கள் எழுதியதை, அதை எழுதியவர் பெயரையும் அது வெளியான பிளாக் அல்லது பத்திரிக்கையின் பெயரையும் நீக்காமல் வெளியிடலாம்; இதனால் தமிழ் ஆர்வலர் பெருகுவர்; அதிகம் எழுதுவர்; ஸரஸ்வதி தேவியின் பரிபூரண கடாக்ஷம் உங்கள் மீதும் குடும்பத்தின் மீதும் பொழியும்; தமிழ் வாழும்!)

 

காஞ்சீபுரம் பற்றி இரண்டு பழமொழிகள் உண்டு; அவைகளின் பின்னால் சிறு கதைகளும் உண்டு.

 

ஒரு ஏழை, வேலை தேடி அலைந்து திரிந்தான் ; வேலை ஒன்றும் கிடைக்கவில்லை. பசி வயிற்றைக் கிள்ளியது. செங்கல்பட்டில் ஒரு வீட்டின் திண்ணையில் உடகார்ந்து புலம்பிக் கொண்டிருந்தான். அந்த வீட்டுக் கிழவி, எதேச்சையாக வெளியே வந்தாள். இவன் நிலையைக் கண்டு சோறு போட்டாள். இவன் தன் கதைகளை எல்லாம் சொன்னவுடன் அந்தப் பாட்டி சொன்னாள்,

அட அசடே! காஞ்சிக்குப் போனால் காலாட்டிப் பிழைக்கலாமே; இதைக் கேட்டதே இல்லையா?” என்றாள்.

அப்படியா பாட்டி? இதோ உடனே புறப்படுகிறேன் என்று அவள், அன்னம் இட்டதற்கு நன்றி தெரிவித்துவிட்டு, வழி நடந்தான்.

வழியில் ஆங்காங்கே தங்கி அன்ன சத்திரங்களில் கிடைத்ததை உண்டு சின்னாட்களில் காஞ்சீபுரத்தை அடைந்தான். ஒரு வீட்டின் திண்ணையில் உட்கார்ந்தான். கால்களை ஆட்டத் துவங்கினான். யாரும் வேலை தருவதாகத் தெரியவில்லை. எல்லோரும் அவனை வேடிக்கைப் பார்த்துவிட்டு, இந்தப் பைத்தியம் எதற்காக இப்படிக் காலாட்டுகிறது என்று முனுமுனுத்துவிட்டுப் போயினர்.

 

இவன் நீண்ட நேரம் ஆகியும் ஒரு பலனும் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் மிகவும் வேகமாகக் காலாட்டினான். எதேச்சையாக அந்த வீட்டுக் கிழவி வெளியே வந்தாள். இவன் காலாட்டுவதைப் பார்த்துவிட்டு,

அப்பனே! ஏன் இப்படி நீண்ட நேரமாக காலாட்டி வருகிறாய்? என்ன காரணம்? காலில் நோவா?வலியா?” என்றனள்.

 

பாட்டி! உன்னைப் போலவே ஒரு பாட்டியைக் கண்டேன். எனக்கு வேலை கிடைக்கவிலை என்றேன். அவள் தான் சொன்னாள், ‘காஞ்சிக்குப் போனால், காலாட்டிப் பிழைக்கலாம் என்று.

அவளுக்கு அதைக் கேட்டு சிரிப்பே வந்துவிட்டது.

அட மக்கு! காஞ்சீ புரம் பட்டு சேலைகளுக்கும் மற்ற நெசவு சேலைகளுக்கும் பிரசித்தியான இடம். செசவுத் தொழில் செய்வோர் ஒவ்வொரு வீட்டிலும் தறி இருக்கும். அதில் ஆடவர், பெண்டீர் ஆகிய அனைவரும் தறியில் உட்கார்ந்து வேலை செய்வர். தறி நெசவில் காலாட்டி இயந்திரங்களை இயக்குவர். இப்படி புடவை நெய்வதையே காலாட்டிப் பிழைக்கலாம் என்று சொல்லுவர் என்றாள்.

உடனே அவனும் அவளுக்கு நன்றி சொல்லிவிட்டு  நெசவு வேலையில் அமர்ந்தனன்.

 

கஞ்சி வரதப்பா கதை!

ஒரு கிராமத்தில் ஒரு பரம ஏழை! சாப்பாட்டிற்கு லாட்டரி அடிப்பவன்; உணவுக்கு வழி தெரியாமல் திகைத்தான்.வேலையோ இல்லை. ஊர்ப் பெரியவர்கள் சொன்னார்கள்; “அப்பனே, இந்தச் சிற்றூரில் உனக்கோ  வேலை கிடைக்கவில்லை. ஏன் காஞ்சீபுரம் போன்ற ஒரு பெரிய நகருக்குப் போய் வேலை தேடக்கூடாது? என்றனர். அவனுக்கும் அது நல்ல யோஜனையாகத் தோன்றியது. காலால் நடந்தே காஞ்சி சென்றான்.

 

 

அவனுக்குக் காஞ்சி பற்றிய அறிவு கொஞ்சமும் இல்லை. அங்குள்ள காமாட்சி கோவிலும் தெரியாது; வரதராஜப் பெருமாள் கோவிலும் தெரியாது. காஞ்சி என்ற ஊர்ப் பெயர் கச்சி என்றும், சுருக்கமாக கஞ்சி என்றும் வழங்குவதும் தெரியாது.

 

ஒரு வீட்டின் திண்ணையில் போய் அமர்ந்து அடுத்தது என்ன செய்யலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தான். பசியோ வயிற்றைக் கிள்ளியது. அடக் கடவுளே, என்னை காப்பாற்று என்று உரத்த குரலில் புலம்பினான்.

 

அப்போது ஒரு பெரியவருக்கும் ஊர்க் கடவுள் நினைவு வரவே கஞ்சி வரதப்பா! கஞ்சி வரதப்பா!’ என்று கூவி கன்னத்தில் போட்டுக் கொண்டார். வரதராஜப் பெருமாள் கோவில் கோபுரத்தைப் பார்த்து வணங்கினார். அவரைப் பார்க்காமல் குரலை மட்டும் கேட்ட நமது பரம ஏழைக்கு ஒரே சந்தோஷம்!.

 

அடக் கடவுளே என்னைக் காப்பத்து- என்று நான் முழங்கியதுதான் தாமதம்! யாரோ ஒருவர் கஞ்சி வரதப்பா என்கிறாரே என்று.

அவர் அவ்வாறு சொன்னது காஞ்சீபுர வரத ராஜப் பெருமாளை நினைத்துச் சொன்ன பிரார்த்தனை. ஆனால் நமது கதா நாயகன் பரம ஏழைக்கோ நிஜமாகவே கடவுள் சொன்ன பதில் என்று நினைத்து கஞ்சிக்காகக் காத்திருந்தான். எவரும் கஞ்சி கொண்டு வரவில்லை. அப்படியே திண்ணையிலேயே தூங்கி விட்டான். யாரோ ஒருவர் என்னப்பா பசி மயக்கமா? உன்னைப் பார்த்தால்  சாப்பிட்டு பல நாள்  ஆனவன் போலத்தெரிகிறதே என்றார்.

 

அவன் தன் கதையைக் கூறி முடித்தவுடன் கஞ்சி வரதப்பா என்ற வாசகத்துக்கு அவர் அழகாகப் பொருள் உரைத்துவிட்டு, நீ இவ்வளவு நேரம் வரதப்பனை நம்பியது வீண் போகாது; நானே கஞ்சி வார்க்கிறேன் என்று சொல்லி, தனது வீட்டில் சமைத்த உணவை இலையில் பரிமாறினார்.

 

ஆரல்வாய் மொழி என்ற அழகான ஊர் ஆராம்பொலி என்றும், ஐராவத நல்லூர் என்ற ஊர் அயிலானூர் என்றும் திருப்பறாய்த் துறை என்ற ஊர் திருப்ளாத்துறை என்றும் மாறுவது  போல  காஞ்சி என்பதும் கச்சி என்று மாறும் என்று விளக்கினார். அவனுக்கு ஒரு கடையில் நல்ல வேலையையும் வாங்கித் தந்தார்.

 

தமிழில் இந்த இரண்டு பழமொழிகளும் நிலைத்துவிட்டன.
(தமிழ் வாழ்க! தமிழை வளர்க்க நீங்கள் என்ன செய்யலாம்? மற்றவர்கள் எழுதியதை, அதை எழுதியவர் பெயரையும் அது வெளியான பிளாக் அல்லது பத்திரிக்கையின் பெயரையும் நீக்காமல் வெளியிடலாம்; இதனால் தமிழ் ஆர்வலர் பெருகுவர்; அதிகம் எழுதுவர்; ஸரஸ்வதி தேவியின் பரிபூரண கடாக்ஷம் உங்கள் மீதும் குடும்பத்தின் மீதும் பொழியும்; தமிழ் வாழும்!)

 

-சுபம்–

கண்ணதாசனின் சம்ஸ்கிருதக் கவிதை (Post No.4643)

Date: 21 JANUARY 2018

 

Time uploaded in London- 6–37 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4643

 

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

தமிழ் இன்பம்

கண்ணதாசனின் சம்ஸ்கிருதக் கவிதை

.நாகராஜன்

 

(தமிழ் வாழ்க! தமிழை வளர்க்க நீங்கள் என்ன செய்யலாம்? மற்றவர்கள் எழுதியதை, அதை எழுதியவர் பெயரையும் அது வெளியான பிளாக் அல்லது பத்திரிக்கையின் பெயரையும் நீக்காமல் வெளியிடலாம்; இதனால் தமிழ் ஆர்வலர் பெருகுவர்; அதிகம் எழுதுவர்; ஸரஸ்வதி தேவியின் பரிபூரண கடாக்ஷம் உங்கள் மீதும் குடும்பத்தின் மீதும் பொழியும்; தமிழ் வாழும்!)

 

1

கவியரசு கண்ணதாசன் சம்ஸ்கிருதத்தில் கவிதை எழுதி இருக்கிறாரா? முதலில் அவருக்கு சம்ஸ்கிருதம் தெரியுமா?

கேள்விகள் நியாயமானவை தான்.

ஆரம்ப காலத்தில் சேரக் கூடாதாரோடு சேர்ந்திருந்த காலத்தில் அவர் எழுதிய் கவிதை இது:

 

“செத்த மொழி பெற்ற மகன், தமிழைப் பார்த்துத்

திணறுகிறான்! மயங்குகிறான்! வேற்று நாட்டுப்

பொத்தல்களைத் தமிழாக்கி விற்ப தற்குப்

புறப்பட்டோன், ஆதலினால் புலம்பு கின்றான்!

அத்தியிலே பூத்தம்லர் அனைய நாட்டில்

அழகுமொழி படைத்த மறைமலையைக் கண்டால்

சித்திரமும் தமிழ் பேசும்; திறமில் லாத

சிறுநரிதான் ஊளையிடும்; இட்டான் ஊளை!

வேரெடுத்த செம்மைமொழி தமிழல் லாமல்

வேறெது தான் தமிழாகும்! அத்திம் பேரும்

பூரிகளும் ஸ்வாமிகளும் ஆச்சார் யாளும்

பூரணமும் ஸ்வாகதமும் தமிழா?”

  • தமிழ் போலும் – மொழி இல்லை என்ற கவிதையில்

ஆனால் பக்குவப்பட்ட நிலையில், அவர் கூறியது:

“முட்டாள்தனமாக ‘வடமொழி செத்த மொழி’ என்று எவனெவனோ சொன்னதைக் கேட்டு நான் தான் காலத்தை வீணாக்கி விட்டேன். இன்றைய இளைஞன் உடனடியாக வடமொழி கற்க வேண்டும். ஆங்கிலம் காப்பாற்றாத அளவுக்கு வ்டமொழி காப்பாற்றும். வடமொழியின் மூலம் சிறந்த எழுத்தாளனாகலாம்; பேச்சாளனாகலாம்; மொழிபெயர்ப்பாளனாகலாம்.”

 

 

2

“தமிழின் பெயரால் கூப்பாடு போடுவது அரசியல்; தமிழ் நம் உயிர்; அது போல் வடமொழி நமது ஆத்மா”

இதை விடச் சிறப்பாக இந்த இரு மொழிகளையும் பற்றி வேறு யார் தான் கூற முடியும்? என்னதான் கூற முடியும்!

இதைச் சொல்லி விட்டுச் சும்மா இருக்கவில்லை.

அவர் கூறுகிறார்:

“வடமொழி ஆழ்ந்த கருத்துக்கள் நிறைந்த ஒரு பொக்கிஷம். இரண்டு ஆண்டுகளாக நான் வடமொழியில் பயிற்சி பெற்று வருகிறேன்.”

இந்தப் பயிற்சிக்கு அவரது உற்ற நண்பர் ஒருவர் – ஆல் இந்தியா ரேடியோ அதிகாரி ஒருவர் – துணை புரிந்தார்.

இந்த வட மொழிப் பயிற்சி தமிழுக்குப் பெரிய நலனை அளித்தது.

 

3

ஆம், என்ன நலன்? சில பல நல்ல நூல்கள் வடமொழியிலிருந்து அவர்  மூலமாக தமிழாக்கம் செய்யப்பட்டு தமிழுக்குக் கிடைத்தது.

அவரது வார்த்தைகளில் அதைப் பார்ப்போம்;

“வடமொழியைப் படிக்கும் ஆர்வம் ஏற்பட்டதன் காரணமாக இப்போது பகவத்கீதை விளக்கவுரையைக் கவிதையிலும் உரைநடையிலும் எழுதியுள்ளேன்.

 

 

பஜகோவிந்தத்தில் வரும் முப்பத்தோரு பாடல்களையும் விவேக சிந்தாமனியைப் போல சந்தக் கவிகளாக்கியுள்ளேன்.”

மிக அருமையான மொழி பெயர்ப்புக் கவிதைகளாக இவை அமைந்துள்ளதைப் படித்துப் பார்த்து உணரலாம்.

இது மட்டுமல்ல, கீத கோவிந்தத்தில் மனதைப் பறி கொடுத்த அவர் அதை, “கோபியர் கொஞ்சும் ரமணன்” என்று தமிழில் தந்தார்.

 

 

ஜெயதேவரின் அஷ்டபதி பற்றி அவர் தனது கவிதையில் கூறும் போது சொல்வது இது:

கண்ணனின் லீலையை அஷ்டபதி – என்னும்

காவிய மாக்கிய ஜெயதேவன்

எண்ணி உரைத்ததை நானுரைத்தேன் – அதில்

இன்னும் பலப்பல போதையுண்டு!

 

கோலமிகும் இந்தப் பாடலினை – கீத

கோவிந்தம் என்றும் உரைப்பார்கள்

ஞால மொழிகளில் வந்ததிது – கண்ணன்

ரஸ லீலாவினைச் சொல்வதிது!

 

மொத்தம் இருபத்துநான்கு வண்ணம் – அது

மோகச்சுவை ரஸம் ஊறும் கிண்ணம்

அத்தனையில் இங்கு ஒன்பதையே – நான்

அள்ளிக் கொடுத்தனன் என் மொழியில்

 

போஜன் மகன் ஜெய தேவனவன் – இங்கு

போதனை செய்தது ஞான ரஸம்!

ராஜன் பராசரர் வம்சமவன் – அந்த

ஞானியின் பாடலைப் பாடுகவே”

24 அஷ்டபதியில் ஒன்பதைத் தமிழாக்கினார் கவிஞர்.

 

 

4

வடமொழியின் சுவையையும் அருமையையும் உணர்ந்த கவிஞர் அதில் தோய்ந்தே போனார்.

அதன் விளைவு தான் அவர் எழுதிய சம்ஸ்கிருதக் கவிதை.

“இதோ எனக்குத் தெரிந்த வடமொழியில் நான் எழுதிய ஒரு பாடல்:” என்று கூறி விட்டு அவர் தரும் அற்புத சம்ஸ்கிருதக் கவிதை இது தான்:-

 

அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம்

பதித பாவனம் சுவாமி பக்த சாதகம்

முரளி மோகனம் சுவாமி அசுர மர்த்தனம்

கீத போதகம்  ஸ்ரீகிருஷ்ண மந்திரம்

 

நளின தெய்வதம் சுவாமி மதன ரூபகம்

நாக நர்த்தனம் சுவாமி மான வஸ்திரம்

பஞ்ச சேவகம் சுவாமி பாஞ்ச சன்னியம்

கீத போதகம்  ஸ்ரீகிருஷ்ண மந்திரம்

 

ஸத்திய பங்கஜம் சுவாமி அந்திய புஷ்பகம்

சர்வ ரக்ஷகம் சுவாமி தர்ம தத்துவம்

ராத பந்தனம் சுவாமி ராஸ லீலகம்

கீத போதகம்  ஸ்ரீகிருஷ்ண மந்திரம்

எப்படி இருக்கிறது சம்ஸ்கிருதக் கவிஞர் கண்ணதாசனின் சம்ஸ்கிருத கவிதை!

 

 

5

என்ன ஒரு வருத்தம் நமக்கெல்லாம்..? நமது கவியரசு இன்னும் ஒரு நாற்பது ஆண்டுகளாவது கூட வாழ்ந்திருக்கலாம்.

“ஆண்டவன் எனக்கு இன்னும் பத்தாண்டுகள் ஆயுளையும் ஆரோக்கியத்தையும் கொடுப்பானேயானால், ஆங்கிலத்தில் ஒரு சிறு காவியமும், வடமொழியில் ஒரு சிறு காவியமும் எழுதுவேன்.” என்றார் அவர்.

ஆனால் கொடுத்து வைக்கவில்லை – தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும்.

என்றாலும் கூட இறைவன் அருளால் அவர் தமிழில் எழுதியுள்ள ஆன்மீக இந்துக் களஞ்சியம் நிச்சயம் ஒரு அற்புத ஞான  ஓவியமே.

அதைப் படித்து அவரது மேன்மையைத் தெரிந்து கொள்ளலாம்; அப்போது இந்து மதச் சிறப்பும் தானாகவே தெரிய வரும்.

 

 

 

ஆதாரம் :

  1. முதல் பக்கம் – கல்கியில் வந்த கட்டுரை – தலைப்பு “மொழி வெறுப்பு – விழி இழப்பு”

2.கோபியர் கொஞ்சும் ரமணன் – கண்ணதாசன் மாத இதழ் ஜனவரி 1978

3.கண்ணதாசன் கவிதைகள் – முதல் இரண்டு தொகுதிகள்

 

(தமிழ் வாழ்க! தமிழை வளர்க்க நீங்கள் என்ன செய்யலாம்? மற்றவர்கள் எழுதியதை, அதை எழுதியவர் பெயரையும் அது வெளியான பிளாக் அல்லது பத்திரிக்கையின் பெயரையும் நீக்காமல் வெளியிடலாம்; இதனால் தமிழ் ஆர்வலர் பெருகுவர்; அதிகம் எழுதுவர்; ஸரஸ்வதி தேவியின் பரிபூரண கடாக்ஷம் உங்கள் மீதும் குடும்பத்தின் மீதும் பொழியும்; தமிழ் வாழும்!)

 

பாரதி போற்றி ஆயிரம் – 32 (Post No.4642)

Date: 21 JANUARY 2018

 

Time uploaded in London- 6-12 am

 

Compiled  by S NAGARAJAN

 

Post No. 4642

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

பாரதி போற்றி ஆயிரம் – 32

  பாடல்கள் 180 முதல் 187

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : .நாகராஜன்

கண்ணதாசன் பாடல்கள்

 பாரதியும் பாரதிதாசனும் (தொடர்ச்சி)

 

“காதலி னாலுயிர் தோன்றும் – இங்கு

     காதலி னாலுயிர் வீ ரத்தி லேறும்

காதலி னாலறி வெய்தும் – இங்கு

    காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்!

 

பாரதி சொன்னத னாலே – காதல்

    பாட்டர்கள்  நெஞ்சிலும் ஏறுந் தன் னாலே!

பாரதி தாசனும் சொன்னார் – எனின்

    பாரதி சொன்னதன் பின்பவர் சொன்னார்!

 

பிள்ளைக் கனியினைக் காட்டி – இன்பம்

   பெற்றவன் மற்றவர் பெற்றிடத் தந்தான்!

வெள்ளை மனத்தொரு பெண்ணின் – நெஞ்சில்

    வீ ழ்ந்தவன் நமையும் வீ ழ்ந்திடச் செய்தான்!

 

கற்பனை வாழ்விது மாயம் – எனக்

    காட்டிய சாமிகள் சாத்திரச் சாயம்

விற்பனன் பாரதி சொல்லில் – கெட

   வீ ழ்வது தான் அவன் காவிய மாயம்!

 

நிற்பது ஊர்வது யாவும் – இந்த

   நீணிலத் துள்ளநல் லின்பங்கள் யாவும்

அற்புதச் சிந்தனை யாவும் – நிலை

    ஆவதில்லை என்ற சூதரைக் கொண்டா!

 

சோலை மரங்க ளனைத்தும் –தினம்

    தோன்றுவ தேயொரு விதையினி றென்றால்

சோலைகள் பொய்யென லாமோ – இதைச்

    சொல்லொடு சேர்ப்பவர் மூடர்க ளன்றோ?

 

“பெண்ணுக்கு ஞானத்தை வைத்தன் – புவி

    பேணி வளர்த்திடு மீசன்!

மண்ணுக் குள்ளேசில மூடர் – நல்ல –

    மாத ரறிவைக் கெடுத்தார்!

 

எண்ணித் துடித்தவன் சொன்னான் – “கண்கள்

    இரண்டினி லொன்றைக் கெடுத்திட லாமோ?

பெண்க ளறிவை வளர்த்தால் – வையம்

    பேதமை யற்றிடும்! ஆம்; – இது உண்மை!

(அடுத்த பகுதியுடன் இக்கவிதை முடியும்)

 

கவிஞர் கண்ணதாசன்: கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.

 

குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்

***

 

 

அவர் சொன்னாரா? இவர் சொன்னாரா? எவர் சொன்னார்? QUIZ (Post No.4641)

 

Written by London Swaminathan 

 

Date: 20 JANUARY 2018

 

Time uploaded in London 18-13

 

 

 

Post No. 4641

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

அவர் சொன்னாரா? இவர் சொன்னாரா? எவர் சொன்னார்? QUIZ (Post No.4641)

  1. வெள்ளை அரியாசனத்தில் அரசரோடு என்னைச் சரியாசனம் வைத்த தாய்

 

 

  1. அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி

அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆர் உயிர் காக்க ஏகி

 

  1. பால்புரை பிறை நுதற் பொலிந்த சென்னி

நீலமணிமிடற்று ஒருவன் போல

மன்னுக — பெரும!

 

 

 

  1. பொதியில் ஆயினும், இமயம் ஆயினும்

பதி எழு அறியாப் பழங்குடி கெழீஇய

பொது அறு சிறப்பின் புகாரே ஆயினும்

 

  1. எந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி

வந்து வழி வழியாட் செய்கின்றோம் திருவோணத் திருவிழவில்

 

  1. தன்னை அடைந்தார்வினை தீர்ப்பதன்றோ

தலையாயவர் தங்கடன் ஆவதுதான்

 

  1. அருள்கண் இலாதார்க்கு அரும்பொருள் தோன்றா

அருள்கண் உளோர்க்கு எதிர் தோன்றும் அரனே

 

  1. வாதக்கால் ஆம்தமக்கு; மைத்துனர்க்கு நீரிழிவு ஆம்;

பேதப் பெருவயிறு ஆம் பிள்ளைதனக்கு!– ஓதக்கேள்!

வந்தவினை தீர்க்க வகை அறியார் வேளூரர்

எந்தவினை தீர்ப்பார் இவர்?

 

  1. ஆரிய பூமியில் நாரியரும் நர

சூரியரும் சொலும் வீரிய வாசகம்

வந்தே மாதரம்- ஜய வந்தே மாதரம்

 

  1. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

 

  1. எங்கெங்கும் காணும் சக்தியடா – தம்பி

ஏழுகடல் அவள் வண்ணமடா

 

 

  (தமிழ் வாழ்க! தமிழை வளர்க்க நீங்கள் என்ன செய்யலாம்மற்றவர்கள் எழுதியதைஅதை எழுதியவர் பெயரையும் அது வெளியான பிளாக் அல்லது பத்திரிக்கையின் பெயரையும் நீக்காமல் வெளியிடலாம்இதனால் தமிழ் ஆர்வலர் பெருகுவர்அதிகம் எழுதுவர்ஸரஸ்வதி தேவியின்  பரிபூரண கடாக்ஷம் உங்கள் மீதும் குடும்பத்தின் மீதும் பொழியும்தமிழ் வாழும்!)

ANSWERS

 

1.காளமேகம்,  தனிப்பாடல்கள், 2. கம்பன், கம்ப ராமாயணம்     3. சங்க கால அவ்வையார் ,புறநானூறு, 4. இளங்கோ, சிலப்பதிகாரம்,      5.பெரியாழ்வார் திருமொழி, திவ்யப் பிரபந்தம், 6.அப்பர் தேவாரம், நாலாம் திருமுறை, 7. திருமூலர் எழுதிய திருமந்திரம், 8.காளமேகம்,  தனிப்பாடல்கள், 9.பாரதி, பாரதியார் பாடல்கள், 10.திருவள்ளுவர் எழுதிய திருக்குறள், 11.பாரதிதாசன் எழுதிய முதல் பாடல், பாரதியார் எழுதச் சொன்னவுடன் எழுதிய கவிதை

 

 

 

UGLY GIRL IS OK- CHANAKYA (Post No.4640)

Written by London Swaminathan 

 

Date: 20 JANUARY 2018

 

Time uploaded in London 16-26

 

 

 

Post No. 4640

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

We all know why Chankaya conspired to throw the mighty Nanda dynasty. I already gave the story how he was insulted for being ugly. so no wonder Chanakya gives the following advice:

 

“A wise man should marry a girl of a good family, though she be ugly, and not the beautiful one (the daughter) of a lowly family. Marriage has to be in a matching family”-

chapter 1, sloka 14 of Chanakya Niti.

 

varayet kulajaam praaknjo virupaamapi kanyakaam

ruupavatiir wa niichasya vivaahah sadruse kule

 

xxx

in chapter 3, he says sukule yojayet kanyaam i.e one should marry a daughter in a good family

 

ONLY ONCE

Chanakya continues,”The kings speak but once, so do the learned men

Girls are given in marriage but once.

All these take place but once.”

sakrujjalpanti raajaanah sakrujjalpanti panditaah

sakrytkanyaah pradiiyante triinyetaani sakrut sakrut

chapter 4, sloka 11

 

xxx

 

A young woman for an old man is poison

vruddhasya tarunii visham- says in chapter 4.

xxx

 

WHO IS A GOOD WIFE?

Chanakya defines a good wife,

“That one is a good wife who is pure, efficient, devoted to husband, liked by him and is truthful”.

saa bhaaryaa yaa suchirdakshaa saa bhaaryaa yaa pativrata

saa bharyaa yaa patipriitaa saa bharyaa satyavaadinii

chapter 4, sloka 13

 

xxx

If couple don’t quarrel, fortune comes!

 

“Where the fools are not adored,

where there is a good store of food grains,

where the couples do not quarrel,

fortune comes there herself”

muurkhaa yatra na puujyante dhaanyam yatra susanchitam

dampatyooh kalaho naasti tatra sriih svayamaagataa

chapter 3, sloka 21.

 

xxx

WIFE OF A FRIEND= MOTHER!

The wife of the king, the wife of the teacher, the wife of a friend, the mother of the wife (the mother in law), and one’s own mother are said to be mothers

Chanakya Niti, chapter 4, sloka 2o

 

xxx SUBHAM xxx

 

 

கலியுக முடிவு பற்றி சாணக்கியன் (Post No.4639)

 

Written by London Swaminathan 

 

Date: 20 JANUARY 2018

 

Time uploaded in London 7-27 am

 

 

 

Post No. 4639

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

(தமிழ் வாழ்க! தமிழை வளர்க்க நீங்கள் என்ன செய்யலாம்? மற்றவர்கள் எழுதியதை, அதை எழுதியவர் பெயரையும் அது வெளியான பிளாக் அல்லது பத்திரிக்கையின் பெயரையும் நீக்காமல் வெளியிடலாம்; இதனால் தமிழ் ஆர்வலர் பெருகுவர்; அதிகம் எழுதுவர்; ஸரஸ்வதி தேவியின்  பரிபூரண கடாக்ஷம் உங்கள் மீதும் குடும்பத்தின் மீதும் பொழியும்; தமிழ் வாழும்!)

சாணக்கியன் அதி மேதாவி; பொருளாதார நிபுணன்; ராஜ தந்திரி; ஏழைப் பிராஹ்மணன்; கொஞ்சம் அவலட்சணமான, அழகில்லாத பிராஹ்மணன். நீதி நூலில் வல்லவன்; ஆயினும் அவன் தனக்கு சம்பந்தமில்லாத சில விஷயங்களையும் பிரஸ்தாபிப்பது வேடிக்கையாக உளது.

 

அவன் சொல்லுவதைப் படியுங்கள்:

கலௌ தச ஸஹஸ்ரேஷு ஹரிஸ்த்யஜதி மேதினீம்

ததர்த்தே ஜாஹ்னவீதோயம் ததர்த்தே க்ராமதேவதா.

சாணக்கிய நீதி, அத்தியாயம்11, ஸ்லோகம் 4

 

பொருள்

“கலியுகத்தில் பத்தாயிரம் ஆண்டுகள் கழிந்த பின்னர் ஹரி, பூமியில் இருந்து புறப்பட்டு விடுவார். அதில் பாதி காலத்துக்குள் கங்கை நீர் போய்விடும். அதில் பாதியில் கிராம தேவதை போய் விடுவாள்”.

 

இது, வியாக்கியானம் செய்ய கொஞ்சம் கடினமான ஸ்லோகம்.

நம்முடைய பஞ்சாங்கக் கணக்குப்படி கலியுகத்தின் ஆண்டு 5000-ஐ எப்போதோ தாண்டிவிட்டது. கிருஷ்ணரும் அதற்கு முன்னரே வேடனின் வில்லடி பட்டு இறந்து விட்டார்.

 

மேலும் கங்கை நதி இன்னும் பிரவாஹம் எடுத்து ஓடுகிறது. கிராம தேவதை வழிபாடும் உளது.

 

ஒரு வேளை சாணக்கியன், மனிதனின் ஆண்டு என்பதல்லாமல் தேவர்களின் ஆண்டு பற்றிச் சொல்லி இருந்தால், அதற்குப் பல காலம் இருக்கிறது. ‘ஹரி’ என்பதை இறைவனின் வழிபாடு மறையும் காலமென்று எடுத்தாலும் இன்னும் ஹரி வழிபாடும்/இறை வழிபாடும் இருக்கிறது. ஆகவே பொருள் சொல்லக் கடினமான ஸ்லோகம் இது. கங்கையின் புனிதமும், தூய்மையும் வேண்டுமானால் கெட்டுவிட்டது என்று சொல்லலாம்.

 

 

பிராமணர்கள் பற்றி சாணக்கியன்

இன்னும் ஒரு சுவையான செய்தி பிராஹ்மணர் பற்றியதாகும். பிராஹ்மணர் பற்றி லக்ஷ்மியின் வாய்மொழி மூலம் சில கருத்துக்களை முன்வைக்கிறார்.

 

இதோ ஸ்லோகத்தின் பொருள்

 

விஷ்ணுவிடம் லக்ஷ்மி செப்பியது யாது எனின்,

“என் பிராண நாதா; நான் பிராஹ்மணர்கள் மீது வெறுப்பு கொண்டு, அவர்கள் வீட்டுக்குப் போகாமல் எப்போதும் தவிர்த்து வருகிறேன்.ஏன் தெரியுமா? ஒரு கோபக்கார பிராஹ்மணன் என் தந்தையையே குடித்துவிட்டான் (அகஸ்த்ய மஹரிஷி கடல் குடித்த கதை) இன்னொரு மஹரிஷி என் புருஷனை காலால் உதைத்தார்.(பிருகு முனிவர் விஷ்ணுவைக் காலால்

உதைத்த கதை). மேலும் பிராமணர்கள் சிறு வயதிலிருந்தே

வாய்க்குள் ஸரஸ்வதியை வைத்துப் போற்றுகின்றனர். இதற்கெல்லாம் மேலாக என் வீட்டைக் கலைத்து சிவ பூஜை செய்கின்றனர் (லக்ஷ்மியின் வீடு தாமரை)

சாணக்கிய நீதி, அத்தியாயம் 15 ஸ்லோகம் 16

 

இது நிந்தா ஸ்துதி வகையினது. அதாவது இகழ்வது போல இறக்கி பின்னர் புகழ்வது ஆகும்.

 

இதில் பல விஷயங்களை அவர் தெரிவிக்க விரும்புகிறார்:

1.பணம் இருக்கும் இடத்தில் குணம் இருக்காது. அதாவது லக்ஷ்மி இருக்கும் இடத்தில் ஸரஸ்வதி இருக்க மாட்டாள். பிராஹ்மணர்களும் கல்வியில் வல்ல புலவர்களும் வறுமையில் வாடியதை நாம் அறிவோம். நமது தந்தையர் காலத்தில் வாழ்ந்த உலக மஹா கவி பாரதியார் வறுமையில் உழன்றதை நாம் அறிவோம் ஆகையால் சாணக்கியன் சொன்னது புகழுரையே. மேலும் பிராஹ்மணர்கள் தாமரை மலரைக் கொண்டு சிவ பூஜை செய்வதையும் இது விதந்தோதுகிறது.

டேய், கிருஷ்ணா! நீ அதிர்ஷ்டக்காரண்டா?

 

இன்னொரு ஸ்லோகத்திலும் நிந்தா ஸ்துதியைக் காண்கிறோம்.

 

“ஒரு சிறு குன்றை கையில் உயர்த்திப் பிடித்தாய். இதனால் உன் பெயர் கோ வர்த்தனன் என்றாயிற்று. இதனால் மேல் உலகிலும் பூமியிலும் உன் புகழுரையை பாடுகின்றனர். நான் என் மார்பின் மீது சாய்த்து வைத்து உன்னைக் கொஞ்சுகிறேன். என்னை யாராவது புகழ்ந்தார்களா? எல்லா உலகங்களையும் தாங்கி நிற்கும் கேசவா! நீயே சொல். இனி நான் என்ன சொல்ல இருக்கிறது சிலருக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது!

 

சாணக்கிய நீதி, அத்தியாயம் 15, ஸ்லோகம் 16.

xxxx SUBHAM xxx

 

 

 

இராமானுஜரைச் சந்தித்து அருள் பெற்ற அபூர்வ பெண்மணி! (Post No.4638)

Date: 20 JANUARY 2018

 

Time uploaded in London- 6–47 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4638

 

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

(தமிழ் வாழ்க! தமிழை வளர்க்க நீங்கள் என்ன செய்யலாம்? மற்றவர்கள் எழுதியதை, அதை எழுதியவர் பெயரையும் அது வெளியான பிளாக் அல்லது பத்திரிக்கையின் பெயரையும் நீக்காமல் வெளியிடலாம்; இதனால் தமிழ் ஆர்வலர் பெருகுவர்; அதிகம் எழுதுவர்; ஸரஸ்வதி தேவியின்  பரிபூரண கடாக்ஷம் உங்கள் மீதும் குடும்பத்தின் மீதும் பொழியும்; தமிழ் வாழும்!)

 

 

வைணவச் சிறப்பு

 

இராமானுஜரைச் சந்தித்து அருள் பெற்ற அபூர்வ, ஞானப் பெண்மணி!

 

ச.நாகராஜன்

 

1

இராமானுஜாசார்யார் கருணையே உருவாகக் கொண்ட பெரும் வைஷ்ணவ ஆசார்யர்.

 

எல்லோருக்கும் அருள் பாலிப்பவர்.

ஒரு சமயம் அவர் திருக்கோளூர் என்னும் புனிதப் பதியில் எழுந்தருளியிருந்தார்.

பக்தர்கள் திரளாக வந்து அவரை வணங்கி அவர் அருளைப் பெற்ற வண்ணம் இருந்தனர்.

 

அவர் அங்கிருப்பதைக் கேட்ட பலரும் திருக்கோளூர் நோக்கி வந்த வண்ணம் இருந்தனர்.

அப்போது ஒரு மாதரசி அந்த ஊரிலிருந்து கிளம்பப் போவதாகக் கூறினாள்.

 

அதைக் கேட்ட பலரும் வியந்தனர். அனைவரும் இங்கு வரும் போது நீங்கள் அயலூர் செல்லலாமா என்று அவர்கள் கேட்டனர்.

மாதரசியோ பிடிவாதமாக அங்கிருந்து செல்லப் போவதாக கூறினாள்.

உடனே அவளை ஆசார்யரிடம் அழைத்துச் சென்று விஷயத்தைக் கூறினர்.

 

2

கருணையே உருவான ஆசார்யர் அவளைப் புன்முறுவலோடு நோக்கினார். அவளது உயர்ந்த ஆன்ம நாட்டம் அவருக்குப் புரிந்தது. அவளது உயரிய ஆன்மிக பக்குவமும் அவருக்குத்த் தெரிந்து விட்டது.

அவரது முகக்குறிப்பு ‘சொல்’ என்றது.

மாதரசி, “ நான் திருக்கோளூரை விட்டுச் செல்லப் போகிறேன்” என்றாள்.

ஆசார்யர் கனிவோடு அவளை நோக்கி, “ திண்ணமென்னிளமான் புகுமூர் திருக்கோளூரே! அனைவரும் வந்து சேரும் இந்த புனிதத் தலத்தை விட்டு ஏன் வெளியே போக உத்தேசம்?” என்று வினவினார்.

 

 

அதற்கு அந்த மாதரசி பதில் அளித்தார் இப்படி:-

அழைத்து வருகிறேன் என்றேனோ அக்ரூரரைப் போலே,

அகமொழிந்து விட்டேனோ விதுரரைப் போலே,

தாய்க் கோலம் செய்தேனோ அநசூயையைப் போலே,

தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே,

மூன்று எழுத்து உரைத்தேனோ க்ஷத்ரபந்துவைப் போலே,

முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே,

அடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே,

அந்தரங்கம் சொன்னேனோ திரிசடையைப் போலே,

‘அவன் தெய்வம்’ என்றேனோ மண்டோதரியைப் போலே,

‘அகம் வேத்மி’ என்றேனோ விசுவாமித்திரரைப் போலே

‘அநு யாத்ரம்’ செய்தேனோ அணிலங்களைப் போலே,

அவல் பொரியை ஈந்தேனோ குசேலரைப் போலே,

ஆயுதங்கள் ஈந்தேனோ அகத்தியரைப் போலே,

கொண்டு திரிந்தேனோ திருவடியைப் போலே,

‘அனுப்பி வையும்’ என்றேனோ வசிஷ்டரைப் போலே,

மண் மலரை இட்டேனோ குருவநம்பியைப் போலே,

‘மூலம்’ என்றழைத்தேனோ கஜராஜனைப் போலே,

வைத்த இடத்து இருந்தேனோ பரதனைப் போலே,

வழியடிமை செய்தேனோ இலக்குவனைப் போலே,

அக்கரைக்கே விட்டேனோ குகப்பெருமாள் போலே,

இக்கரைக்கே சென்றேனோ விபீடணனைப் போலே,

இனியதொன்று வைத்தேனோ சபரியைப் போலே,

இங்குமுண்டு என்றேனோ பிரகலாதனைப் போலே,

இங்கில்லை என்றேனோ ததிபாண்டனைப் போலே,

காட்டுக்குப் போனேனோ பெருமாளைப் போலே,

கண்டு வந்தேனென்றேனோ திருவடியைப் போலே,

இரு கையும் விட்டேனோ திரௌபதையைப் போலே,

அனுகூலஞ் சொன்னேனோ மாலியவானைப் போலே,

தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே,

தெய்வத்தைப் பெற்றேனோ தேவகியைப் போலே,

 

 

இப்படி நீண்டு சென்றது அவளது பட்டியல்! 81 பேரைச் சொல்லி அவள் முடித்தாள்.

 

பின்னர் இராமானுஜாசார்யரை நோக்கி அவள் பணிவுடன் கேட்டாள்: “ இப்படிப்பட்ட உயர்ந்தோர் வாழும் ஊர் அல்லவா திருக்கோளூர். இங்கிருக்க இப்படிப்பட்ட தகுதியல்லவோ வேண்டும். எனக்கு ஒன்று கூட இல்லையே! ஆகவே தான் நான் வெளியூர் செல்லப் போகிறேன்” என்றாள் அவள்.

இப்படி ஒரு பெரும் ஆன்ம ஞானப் பட்டியலை அறிந்து அதைத் தான் அடைய வேண்டும் என்ற அவாவுவது ஒன்றே பெரும் தகுதி அன்றோ – திருக்கோளூரில் வசிக்க!

அது போதாதா என்ன?

 

ஆசார்யரின் கருணை வெள்ளம் அவள் மீது  பொங்கி வழிந்தது.

புன்முறுவல் பூத்தார்.

“இவ்விடத்திலேயே இரு” என்று மட்டும் சொன்னார்.

அவர் சொன்ன வார்த்தையின் பொருளை உணர்ந்து கொண்ட அந்த மாதரசி அவரது அனுக்ரஹத்தைப் பெற்றதைப் பெரும் பேறாக எண்ணினாள்.

திருக்கோளூரிலேயே தங்கி விட்டாள்.

 

 

குறிப்பு : விசுவாமித்திரரின் நான் அறிவேன் என்பதற்குப் பொருள் – அஹம் வேத்மி.

அணில் கூடப் போனது அல்லவா, அது தான் அநு யாத்ரம் – ஒரு பயணத்தில் கூடவே செல்லுதல்!

மூலம் என்பது கஜேந்திரன் ஆதி மூலமே என்று அழைத்தது.

 

3

பெண்களுக்கு ஆன்ம ஞானம் லபிக்காது என்று சொல்வதெல்லாம் பொய்.

பேரருள் பெற்ற பெண்மணிகளைப் பற்றிய அருமையான சரித்திரங்கள் நமது இதிஹாஸ, புராணங்களில் உள்ளன.

இராமானுஜாசார்யரைச் சந்தித்த புனிதவதியின் சரித்திரமும் நவீன கால வரலாற்றில் ஒன்று.

இங்கு 81 வரிகளில் 30 மட்டுமே தரப்பட்டுள்ளன.

இதை ‘ வைணவம்’ என்ற கட்டுரையில் படித்தேன்.(கட்டுரையாளர் பெயர் ‘ஓரன்பன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது)

வெளியான இதழ் : பழைய தமிழ்ப் பத்திரிகை: “ஆனந்த போதினி”.

1914ஆம் ஆண்டில் இது ஆரம்பிக்கப்பட்டது.

இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள பாடல் வெளியான இதழ் பிரபவ வருடம் ஐப்பசி மாதம் தொகுதி – 13 பகுதி – 4 பக்கம் 161  1927ஆம் வருடம் அக்டோபர் மாதம் 17ஆம் தேதியிட்ட இதழ்

 

(தமிழ் வாழ்க! தமிழை வளர்க்க நீங்கள் என்ன செய்யலாம்? மற்றவர்கள் எழுதியதை, அதை எழுதியவர் பெயரையும் அது வெளியான பிளாக் அல்லது பத்திரிக்கையின் பெயரையும் நீக்காமல்வெளியிடலாம்; இதனால் தமிழ் ஆர்வலர் பெருகுவர்; அதிகம் எழுதுவர்; ஸரஸ்வதி தேவியின்  பரிபூரண கடாக்ஷம் உங்கள் மீதும் குடும்பத்தின் மீதும் பொழியும்; தமிழ் வாழும்!)

***

 

 

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 31 (Post No.4637)

Date: 20 JANUARY 2018

 

Time uploaded in London- 6-31 am

 

Compiled  by S NAGARAJAN

 

Post No. 4637

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 31

  பாடல்கள் 174 முதல் 179

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : .நாகராஜன்

கண்ணதாசன் பாடல்கள்

 பாரதியும் பாரதிதாசனும்

 

களைமண்டிக் கிடந்த கனித்தமிழ் மொழியைக்

களைநீக்கி வடித்த கவிஞன் பாரதி!

களைநீக்கித் தந்த கழனியிற் பலவாய்

கனிக்காடு கண்டவர் பாரதிதாசன்!

இருள்சூழ்ந் திருந்த இவ்வைய முழுதும்

எழக்கதி ரான இளைஞன் பாரதி!

எழுந்த கதிர்முன் மானிடச் சாதிக்கு

இரத்தம் ஊட்டினர் பாரதி தாசன்!

ஆதி பத்திய வேரறுக் குந்திறன்

ஆக்கித் தந்த வல்லவன் பாரதி!

அந்த வேரை அறுத்தபின் மறுவேர்

அண்டாது காத்தவர் பாரதி தாசன்!

நிலைகுலைந் திருந்த நெஞ்சினைத் தூக்கி

நில்லெனச் சொன்ன வல்லோன் பாரதி!

நிற்க வைத்த நெஞ்சினைத் தட்டி

நிலைக்க வைத்தவர் பாரதி தாசன்!

எங்கள் நாடுஎங்கள் மொழியென

இயம்புந் திறனைத் தந்தவன் பாரதி!

இயம்ப மறுத்து ஏளனம் செய்தோர்

எலும்பை முறித்தவர் பாரதி தாசன்!

முன்னவர் சொன்ன பண்பா டனைத்தும்

முறையாய்த் தந்த மூத்தவன் பாரதி!

முறையாய்த் தந்ததை வகைவகை யாக்கி

முளைக்க விட்டவர் பாரதி தாசன்!

செந்தமிழ் மலரின் தேனுண்ண வாசலைத்

திறந்து விட்ட தலைவன் பாரதி!

திறந்த வாசலின் வழிப்புறம் மாடுகள்

செல்லாது காத்தவர் பாரதி தாசன்!

வகுத்தவன் முன்னோன்; காத்தவன் பின்னோன்!

வாழும் தமிழன் காவலர் இவர்கள்!

 

(வேறு)

 

பாருக்குள் ளேசம தர்மமும்ஒன்றிப்

      பற்றுஞ்ச கோதரத் தன்மையும்சொல்லி

யாருக்கும் தீமைசெய் யாமலேஎன்றும்

      அன்பு கொளுந்திறந் தந்தவன் முன்னோன்!

 

 

உண்மையின் பேர்தெய்ம் என்போம்அன்றி 

       ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்

உண்மைகள் வேதங்கள் என்போம்பிறி(து)

      உள்ளமறைகள் கதையெனக் கண்டோம்!

 

 

கடலினைத் தாவும் குரங்கும்வெங்

       கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்

வடமலை தாழ்ந்தத னாலேதெற்கில்

      வந்து சமன்செயும் குட்டை முனியும்

 

நதியினுள் ளேமுழு கிப்போய்அங்கு

       நாகர் உலகிலோர் பாம்பின் மகளை

விதியுறவே மணம் செய்ததிறல்

       வீமனும் கற்பனைஎன்றவன் முன்னோன்!

 

அன்னவன் கைகளிற் பட்டால்பிள்ளை

       அழுதகண் ணீரிலும் உதிரங் கொதிக்கும்

கன்னியர் நன்னெறி வீழமறம்

       காட்டு பவர்க்கவன் காட்டு விலங்காம்!

                         (நீண்ட கவிதை தொடரும்)

 

கவிஞர் கண்ணதாசன்: கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.

 

குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்

***