‘மெடிகல் மிராக்கிள்’ புகழ் ஸ்டீபன் ஹாகிங்கிற்கு வயது 76! (Post No.4695)

Date: 3 FEBRUARY 2018

 

Time uploaded in London- 6-43 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4695

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

2-2-2018 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 50வது) கட்டுரை!

 

மெடிகல் மிராக்கிள் புகழ் ஸ்டீபன் ஹாகிங்கிற்கு வயது 76!

 

.நாகராஜன்

 

 

“எப்போதுமே எதைப்பற்றியாவது புகார் செய்து கொண்டே இருந்தாலோ அல்லது  கோபப்பட்டுக் கொண்டே இருந்தாலோ மற்றவர்களுக்கு உங்களை அணுக நேரமே இருக்காது.

“எவ்வளவு கஷ்டப்பட்டாலும் எதையாவது செய்து வெற்றி பெற உங்களுக்கு என்று ஏதோ ஒன்று இருக்கவே செய்யும்.

                             -ஸ்டீபன் ஹாகிங்

 

 

இன்று நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபங் ஹாகிங்கிற்கு வயது 76 ஆகிறது. இது ஒரு பெரிய மெடிகல் மிராக்கிள் – மருத்துவ அதிசயம் தான்!

 

 

ஏனெனில் 1963ஆம் ஆண்டில் அவர் 21 வயது இளைஞனாக இருக்கும்போது தான் அவருக்கு மூளை சம்பந்தப்பட்ட ஒரு கடுமையான் நோய் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். அந்த நோய்க்குப் பெயர் ஏ.எல்.எஸ். AMYOTROPHIC LATERAL SCLEROSIS – ALS). 

மருத்துவர்கள் இன்னும் இரண்டு ஆண்டுகள் அவர் உயிர் வாழ்வதே பெரிது என்று கூறி விட்டனர்.

 

இன்று 55 ஆண்டுகள் கழிந்து விட்டன. அவர் உயிர் வாழ்வது மட்டுமல்ல, வாய் பேச முடியாத நிலையிலும் கூட தன் எண்ணங்களையும், கண்டுபிடிப்புகளையும் நவீன குரல் கருவி ஒன்றின் மூலம் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.

அதனால் தான் அவரது பிறந்த நாள் அதிசயிக்கத்தக்க, ஆனந்தமூட்டும் ஒரு பிறந்த நாளாக அமைகிறது.

 ஆனால் இப்படிப்பட்ட கற்பனைக்கும் அப்பாற்பட்ட ஒரு கொடிய வியாதியோடு போராடிக் கொண்டு அவரால் எப்படி இவ்வளவு நாள் உயிருடன் இருக்க முடிந்தது? பெரிய மருத்துவ நிபுணர்களுக்கும் கூட இதன் காரணத்தைச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை!

 

 

இந்த வியாதி வந்தவர்களுக்கு சராசரி ஆயுள் மூன்றே ஆண்டுகள் தாம்! சில பேர் மட்டும் அதாவது 20 சதவிகிதம் பேr ஐந்து ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றனர்! பத்து சதவிகிதம் பேர் 10 ஆண்டுகளும் ஐந்து சதவிகிதம் பேர் 20 ஆண்டுகளும் உயிர் வாழ்கின்றனர்.

 

ஆனால் 55 ஆண்டுகள் என்பது மருத்துவர்களையும் அயர வைக்கும் ஒரு அதிசய ஜீவிதம்!

 

இதற்கு இரு காரணங்களை நிபுணர்கள் முன் வைக்கின்றனர். ஒன்று, குடும்ப மரபணு – ஜெனிடிக்ஸ் – இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். வழிவழியாக நீடு வாழ்ந்தவர்கள் பரம்பரையில் வந்ததால் நீடித்த ஆயுள் இருக்கலாம். இரண்டாவது இந்த கொடிய வியாதியை மிக இள வயதில் கண்டு பிடித்து விட்டால் ஒருவேளை அவர்கள் நீடித்து வாழலாம்.

 

நியூராலஜி பேராசிரியரும் மெடிகல் டைரக்டருமான டாக்டர் லியோ மக் க்ளஸ்கி (Dr. Leo McCluskey) பிரபல அறிவியல் இதழான ஸயிண்டிபிக் அமெரிக்கன் இதழுக்கு 2012 இல் கொடுத்த ஒரு பேட்டியில் ஸ்டீபன் ஹாகிங் உயிர் வாழ்வது ஒரு பெரிய அதிசயமே என்று கூறியுள்ளார். 1942ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதி இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டில் இவர் பிறந்தார். அது கலிலியோ இறந்த 300ஆவது நினைவு தினமாக அமைந்தது ஒரு அதிசயம்.

விண்வெளி இயலில் இவர் பெரும் நிபுணர். கருந் துளை (ப்ளாக் ஹோல்) பற்றிய இவரது ஆய்வால் பெரும் புகழ் பெற்றார்.

 

 

‘எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம் என்ற இவரது புத்தகம் பல லட்சம் பிரதிகள் விற்பனை ஆன ஒரு புத்தகம்; அனைவரும் படிக்க வேண்டிய ஒரு நூல். பிரபஞ்சத்திற்கு ஆரம்பம் என்று ஒன்று இல்லை என்ற இவரது கொள்கை உலகில் பெரும் பரபரப்பூட்டிய ஒரு கொள்கை. பிரபஞ்சமானது காலம், இடம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டது என்றும் அதற்கு ஒரு எல்லை இல்லை என்றும் இவர் கூறியுள்ளார்.

 

ஏராளமான விருதுகளை வென்றுள்ள இவர்,  பிரிட்டனின் சரித்திரத்தில் முதல் நூறு பேர் யார் என்று பி.பி.சியால் 2002ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில் 25ஆம் இடத்தைப் பெற்றுள்ளார்.

 

 

2007ஆம் ஆண்டு தனது பெண் ல்யூசி ஹாகிங்குடன் இணைந்து இவர் சிறுவர்களுக்கான நூலை எழுதியுள்ளது இந்த விஞ்ஞானியை சற்று வித்தியாசப்படுத்திக் காட்டியது. ஆனால் அதிலும் பல அறிவியல் உண்மைகளையே எளிமை விளக்கங்களுடன் தந்தார்.

 

2008ஆம் ஆண்டு நாஸாவின் ஐம்பதாவது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தின் போது இவர் விசேஷ விருந்தினராக அழைக்கப்பட்டார். அப்போது பரபரப்பூட்டும் விதமாக, பிரபஞ்சத்தின் எல்லையற்ற தன்மையை நினைத்துப் பார்த்தால் அயல் கிரகங்களில் அறிவு சார்ந்த உயிரினம் இருக்கக் கூடும் என்று இவர் கூறினார்.

ஆனால் மனித இனம் அந்த உயிரினங்களுடன் ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும் என்று எச்சரித்தார். ஏனெனில் அயல்கிரக வாசிகள் மரபணு சார்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள் என்பதால் நமக்கு அவர்களால் வரும் வியாதிகளைத் தடுக்கும் திறன் இருக்காது என்றார்.

 

சீக்கிரமே அயல்கிரகங்களில் மனிதன் குடியேற வேண்டும் என்பதும் இவரது கொள்கை!

 

டிஸ்கவரி சேனலில் அயல்கிரகவாசிகளைப் பற்றி “இன் டு தி யுனிவர்ஸ் வித் ஸ்டீபன் ஹாகிங்” என்று ஒரு நிகழ்ச்சியையும் இவர் நடத்தினார். அதில், ‘அயல்கிரகவாசிகள் தங்கள் கிரகங்களின் ஆதார வளத்தை முற்றிலும் பயன்படுத்தி விட்டு அடுத்த கிரகங்களை வென்று அடிமைப்படுத்த முனையலாம்’ என்று விளக்கி இருந்தார். ‘அல்லது ஒருவேளை அவர்கள் சூரியனின் எல்லையற்ற ஆற்றல் முழுவதையும் ஓரிடத்தில் குவித்து ஒரு வோர்ம் ஹோலை உருவாக்கி விண்வெளிகாலத்தின் வழியே பயணப்பட முனைவர்’ என்றும் பரபரப்பூட்டும் விதத்தில் தெரிவித்தார்.

 

 

இந்த வயதிலும், கடுமையான நோய்வாய்ப்பட்ட நிலையிலும் கூட அவர் தெளிவான சிந்தனையுடன் தன் எண்ணங்களையும், கண்டுபிடிப்புகளையும் அவ்வப்பொழுது உலக மக்களுடன் பகிர்ந்து கொள்வதே இவரது தனிச் சிறப்பு.

என்றாலும் கூட உலகினரின் ஒரே ஆச்சரியம், இப்படிப்பட்ட பெரிய விஞ்ஞானிக்கு இன்னும் ஏன் நோபல் பரிசு வழங்கப்படவில்லை என்பது தான்!

ஸ்டீபன் ஹாகிங் இன்னும் பல ஆண்டுகள் வாழ வாழ்த்தும் அறிவியல் ஆர்வலர்களுடன் நாமும் இணைந்து அவரை பல்லாண்டு வாழ வாழ்த்துவோம்!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

சோவியத் விஞ்ஞானியான செர்ஜி ப்ருகொனென்கோ (Sergei Brukhonenko) ரஷியாவில் இதய அறுவை சிகிச்சையில் ஏராளமான முன்னேற்றங்களைக் கொண்டு வந்தவர். ஆனால் அவர் மிருகங்களை வைத்துச் செய்த பரிசோதனைகள் அனைவரையும் திடுக்கிட வைப்பவை. மிருகங்கள் இறந்த பின்னர் அவற்றை அறுத்துச் சோதனை செய்வது என்பது தான் நடைமுறைப் பழக்கம். ஆனால் அவர் அதுவரை காத்திருக்க மாட்டார். அவர் அவை இறப்பதை விரும்புவதில்லை. சாகப் போகும் முன்னர் மயக்க மருந்து கொடுத்த நிலையிலேயே அவர் தனது சோதனைகளைச் செய்வது வழக்கமானது. ஒரு முறை ஒரு நாயின் தலையை வெட்டி உடலின் அருகே தனியே வைத்தார். அதை உடலுடன் காற்று மற்றும் இரத்தம் போக வழி இருக்குமாறு செய்தார். தன் சோதனையைத் தொடர்ந்தார். இன்னொரு முறை இன்னொரு நாயின் உடலில் இருந்த ரத்தம் முழுவதையும் வெளியில் எடுத்தார். பின்னர் உடலில் மீண்டும் ஏற்றி அதை உயிர் பிழைக்க வைத்தார். இதே முறையை இறந்த ஒரு மனிதனின் மீது செய்து பார்த்த போது அதைப் பார்த்த டாக்டர்கள் திக்பிரமை அடைந்தனர். அவன் உயிர் மீண்டு இரு நிமிடம் வரை இருந்தான். பின்னர் டாக்டர்களே தங்கள் சோதனையை நிறுத்தி விட்டனர்!

 

 

இவரது சோதனைகள் சிலவற்றை அப்படியே காமராவில் பிடித்தனர். 1940இல் வெளியான திரைப்படமான ‘எக்ஸ்பெரிமெண்ட்ஸ் இன் தி ரிவைவ்ட் ஆர்கானிஸம்ஸ்’ என்ற  படம் இந்தத் திகைக்க வைக்கும் காட்சிகளைக் காட்டியது!

***

 

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 42 (Post No.4694)

Date: 3 FEBRUARY 2018

 

Time uploaded in London- 6-21 am

 

Compiled  by S NAGARAJAN

 

Post No. 4694

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 42

  பாடல்கள் 250 முதல் 254

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

திருமதி சௌந்தரா கைலாசம் பாடல்கள்

தொழுகின்றோம் அருள்க நீயே!

அமரர் கல்கி நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவுகள்

முதல் நாள் : (5-4-1982) சொற்பொழிவு

தொழுகின்றோம் அருள்க நீயே!

 

எழுதுகின்ற எழுத்தாலே என்னென்ன

     என்னென்ன செய்து விட்டாய்!

தொழுதுநின்ற ஏழைதனை, துள்ளுகின்ற

     காளைகளாய் மாற்றி, துன்பம்

உழுதுநின்ற நெஞ்சுகளில் உவகையெனும்

     தேனூற்றி, அச்ச மென்னும்

பழுதுநின்ற இடத்தினிலே, பாரதியே!

      வீரத்தைப் பயிர் செய்தாயே!

 

விட்டவழி கடவுள்நமக் கென்றுநிதம்

     விழிதிறந்து தூங்கும் போக்கை,

கெட்டவழி என்றிடித்துக் கேண்மையினால்

     மனத்தினிலே நல்லதென்று

பட்டவழி, நீசொல்லிப் பாரதத்தைத்

     துயிலெழுப்பி, பரங்கி, மூட்டை

கட்டவழி செய்தாயே, கவலையினைக்

    கொன்றழிக்கப் புறப்பட் டாயே!

 

மண்ணுக்குள் எங்கேயோ மறைந்துதவம்

     செய்கின்ற வேர்தான் – அந்த

விண்ணுக்கும் மணமுதவும்; விதவிதமாய்ப்

     பூப்பூக்க வழிவ குக்கும்!

புண்ணுக்கு மருந்து தர, புதுவாழ்வொன்

     றரும்பிவர புரட்சி என்னும்

பண்ணுக்குச் சுதிசேர்க்கப் பலகாலம்

    புதுவையில்நீ தவஞ்செய் தாயே!

 

உடல்கொண்டு நெடுங்காலம் உலகத்தில்

      வாழ்ந்தாலும் பலரை, காலக்

கடல்கொண்டு மறைத்துவிடும்; கவனத்தின்

      நீக்கிவிடும்; கவிஞன் நீயோ

இடங்கொண்டு மண்மீதில் இருந்ததெலாம்

      சிலகாலம் எனினும், நெஞ்சில்

நடங்கொண்டு காலத்தின் பிடிகளுக்குச்

      சிக்காமல் நழுவி னாயே!

 

பித்தனென நினைத்துன்னை, பிதற்றினர் உண்

     டென்றாலும் பெருமை மிக்க

புத்தனென ஏசுவெனப் புதுவாழ்வு

      மலர்விக்கப் போந்தாய், ஞான

சித்தனென யாமுன்னைச் சிறிதுசிறி

      தாய்த்தெளிந்து, சிரமே தாழ்த்தி,

அத்தனென, அன்னையென அகமுருகித்

      தொழுகின்றோம் அருள்க நீயே!

 

கவிஞர்  திருமதி சௌந்தரா கைலாசம் பிரபலமான தமிழ்க் கவிஞர். ஏராளமான கவிதைகளைப் புனைந்தவர். குமுதம், கல்கி உள்ளிட்ட இதழ்களிலும் கவியரங்கங்களிலும் இவரது கவிதைகள் இடம் பெற்றன. சிறந்த சொற்பொழிவாளர்.

தொகுப்பாளர் குறிப்பு:
பாரதியார் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி அமரர் கல்கி நினைவு அறக்கட்டளை சார்பில் சொற்பொழிவை சென்னைப் பல்கலைக் கழகம் ஏற்பாடு செய்திருந்தது.  சென்னைப் பல்கலைக் கழகநூற்றாண்டு வெள்ளி விழா வெளியீடாக மலர்ந்த ‘பாரதி
என்ற நூலில் உள்ள கவிதை இது. வெளியிட்ட ஆண்டு – 1985.

நன்றி: சென்னை பல்கலைக் கழகம் நன்றி: திருமதி சௌந்தரா கைலாசம்

 

***

Christian Conversion Anecdotes (Post No.4693)

Date: 2 FEBRUARY 2018

 

Time uploaded in London- 11-59 am

 

Compiled by London swaminathan

 

Post No. 4693

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 

I gave everything to my sister!

 

A woman was testifying of her conversion in a revival meeting She said,

I was very foolish and vain. Worldly pleasures, especially the fashions were my only thought,

I was fond of silk, satins, ribbons and laces. But my friends, when I saw they were dragging me down to perdition I gave them all to my sister.

 

Xxxx

 

Navy of the Lord!

A young man who had formerly attended Dr Bethune’s meetings , after an absence of a few years called upon him and said,

Dr Bethune, I have become a Christian since I saw you, and have joined the army of the   Lord.

I am very glad to hear it,

said the doctor, and added, with what denomination have you become connected?

The Baptists.

“Oh, the Baptists”, said Dr Bethune,

Why they are not the army, but the Navy of the Lord.

((Baptists are Christians distinguished by baptizing professing believers only (believer’s baptism, as opposed to infant baptism), and doing so by complete immersion (as opposed to affusion or sprinkling))

Xxxx

 

Brandy is better than Water!

A Methodist in America, bragging how well he had instructed some Indians in religion, asked one of them,

If he had not found great comfort last Sunday after receiving the sacrament.

 

“Aye, master, replied the savage, but I wished it had been brandy”.

(wine or water or bread is given during sacrament)

Xxxx

Water is Good, but…

George Cruikshank having become a teetotaller, showed all the vehement zeal of a convert. Douglas Jarrold, meeting him, shortly after his conversion, exclaimed,

Now George, remember that the water is very good anywhere except upon the brain

 

Xxxx

During the Civil war, the late Colonel Gabe Boucher organised a regiment which he controlled as a dictator.

I am a humble servant of the Lord, said an itinerant evangelist who had wandered into camp one day, endeavouring to save the souls of the unfortunate.  I have just left the camp of the Massachusetts, where I was instrumental in leading eight men into paths of righteousness

Adjutant, thundered Colonel Bouch, after a moment’s pause, detail ten men for baptism. Nod — D Massachusetts regiment shall beat mine for piety.”

Xxxx SUBHAM xxx

 

காயத்ரீ மந்திரம் ஒன்றே போதும்- மநு அடித்துச் சொல்கிறார்! (Post No.4693)

Date: 2 FEBRUARY 2018

 

Time uploaded in London- 8-44 am

 

Written by London swaminathan

 

Post No. 4693

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 

((நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

 

 

மானவ தர்ம சாஸ்திரம்- இரண்டாம் அத்தியாயம் தொடர்ச்சி

 

மநு நீதி நூல்- Part 12

 

SLOKA 175, SECOND CHAPTER CONTINUED………………….

2-58. வலது கையில் ஜலம் எடுத்து ஆசமனம் செய்வதில் 4 வகைகள் உண்டு. உள்ளங்கையில் பிரம்ம தீர்த்தம், காய தீர்த்தம், தேவ தீர்த்தம், பித்ரு தீர்த்தம் விடுவதற்காக 4 பகுதிகள் இருக்கின்றன. பிராமணர் ஆசமனத்துக்கு, முதல் மூன்றையே பயன்படுத்த வேண்டும் (175)

 

2-59. பெரு விரலின் நடுக்கணுவால் விடுவது பிரம்ம தீர்த்தம்; சுண்டு விரலின் அடிக்கணுவால் விடுவது காய தீர்த்தம்; விரல்களின் நுனிப்பகுதியால் விடுதல் தேவ தீர்த்தம்; பெருவிரலுக்கும் சுட்டு விரலுக்கும் இடையிலுள்ள பகுதியால் விடுதல் பித்ரு தீர்த்தம்.

 

2-60. ஆசமனம் எனப்படுவது நீரினால் செய்யும் தூய்மை. மூன்று முறை மந்திரம் சொல்லி நீர் உண்ட பின், இரு முறை வாயைத் துடைக்க வேண்டும். கண், காது, மூக்கு, தோள், மா ர்பு, தலை இவற்றையும் தொட்டுத் துடைப்பதாகும்.

 

2-61. தர்ம விதிகளை அறிந்தவன், சூடு இல்லாத நுரை இல்லாத தெளிந்த நீரால் கிழக்கு அல்லது வடக்கு முகமாகப் பார்த்து, நின்றவாறு ஆசமனம் செய்வது சிறந்தது.

 

2-62. ஆசமன ஜலத்தை உட்கொள்கையில், பிராமணன் மார்பு வரையிலும் க்ஷத்ரியன் கழுத்து வரையிலும், வைஸ்யன் உள்நாக்கு வரையிலும், ஏனையோர் (சூத்திரர்) நாவிலும் உதட்டிலும் ஜலம் படும்படியாக்ச் செய்யவேண்டும்

 

2-63. பூணூல் அல்லது மேலாடை இடது தோளில் இருந்து புறப்பட்டு கால் வரை செல்ல வேண்டும். இது உபவீதம் எனப்படும். இடது தோளில் மாற்றிப் போட்டால் அது பிராசீனா விதி எனப்படும். மாலையாகப் போடுதல் நிவிதம் என்றும் சொல்லப்படும். (180)

2-64. இவ்வாறு மூன்று வர்ணத்தார் அணியும் பூணூல், தோல், தண்டம், மேலாடை ஆகியன சேதம் அடைந்தாலோ, அழுக்கடைந்தாலோ பழையனவற்றை நீரில் போட்டுவிட்டு, புதியது தரிக்க வெண்டும்.

Brahmin boys; picture by P Swaminathan

 

2-65. இந்த மூன்று வருணத்தாரும் முறையே 16, 22, 24 வயதில் முடியிறக்க வேண்டும்

2-66. இத்தகைய சடங்குகள் ஏல்லாம் பெண் குழந்தைகளுக்கும் உண்டு. ஆனால் மந்திரம் இல்லாமல் வெறும் சடங்காக செய்தால் போதும்.

 

2-67. பெண்களுக்கு கல்யாணம்தான் உபநயனம் ; அதாவது பூணூல் போடுவது போல; கணவனுக்குப் பணிவிடை செய்தலே குருகுல வாசம்; இல்லறம் நடத்துவதே சமிதாதானம் ஆகும்.

 

கற்றுணர்ந்து செயல்படல்

 

2-68. இவ்வாறு உபநயனம் முதலியன மூலம் இரண்டாவது பிறப்பு எடுத்து புனித மார்கத்தில் செல்லுதலைக் கூறினேன். இனி அவரவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லுவேன். (185)

 

2-69. குரு தனது சீடனுக்கும், தந்தை தனது மகனுக்கும் தூய்மையாக இருத்தல், ஒழுக்கத்துடன் வாழ்தல், தீ வளர்த்து ஹோமம் செய்தல் ஆகியவற்றைக் கற்பிக்க வேண்டும். காலை, நண்பகல், மாலை ஆகிய சந்தி நேரங்களில் செய்யவேண்டிய வழிபாடுகளையும் சொல்லித் தர வேண்டும்.

 

2-70. வேதம் ஓதும் மாணவன் முதலில் ஆசமனம் செய்துவிட்டுக் கைகளைக் கட்டிக்கொண்டு கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து கொண்டு புலன் அடக்கத்துடன் வேதம் ஓத வேண்டும்

 

2-71. வேதம் கற்பதற்கு முன்னரும் பின்னரும் குரு வணக்கம் செய்தலும் கைகட்டிக் கொண்டு வேதம் படித்தலும் பிரம்மாஞ்சலி எனப்படும்

 

2-72.குருவின் முன்னால் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வலது கையால் அவரது வலது பாதத்தையும் இடது கையால் இடப் பாதத்தையும் தொட்டு வணங்க வேண்டும் (190)

 

2-73. உபதேசிக்கும் குருவும் சோம்பலில்லாமல் மாணவர்களுக்கு ‘’துவங்குக’’ என்றும் ‘’நிறுத்துக’’ என்றும் கட்டளை இட வேண்டும்

 

பிரணவ மந்திரத்தின் பெருமை

2-74. வேதம் கற்கும்போது துவக்கத்தில் ஓம் என்னும் பிரணவ மந்திரம் சொல்லித் துவங்க வேண்டும்; இதே போல முடிக்கையிலும் ஓம் சொல்ல வேண்டும்; துவங்கும் போது ஓம் சொல்லாவிடில் வேதம் மனதில் பதியாது; இறுதியில் ஓம் சொல்லி முடிக்காவிடில் கற்ற வேதம் நினைவிற் நிற்காது.

 

2-75..பிரணவ (ஓம்) மந்திரத்தை உச்சரிக்கும் முன் தர்ப்பையைப் பரப்பி, கிழக்கு நோக்கி அமர்ந்து மூன்று முறை பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) செய்தல் வேண்டும்; பின்னரே பாடம் கற்கலாம்.

 

2-76. பிரம்மா, மூன்று வேத சாரங்களான அகார, உகார, மகார, சப்தங்களினால் பிரணவத்தை உண்டாக்கினார். அவரே பூர், புவர், சுவர் ஆகிய புனித மந்திரங்களையும் உண்டாக்கினார்.

 

2-77. மேலும் ‘’தத்’’ என்ற துவக்கத்தை உடைய மூன்று அடி காயத்ரியையும் மூன்று வேதங்களில் இருந்தே உண்டாக்கினார். (195)

2-78. இந்த பிரணவத்தையும் ‘’பூர் புவர் சுவர்’’ மற்றும் காயத்ரியையும் சந்தியா காலங்களில் ஓதும் பிராமணன் மூன்று வேதங்களையும் ஓதிய புண்ணியத்தை அடைகிறான்.

 

2-79. இந்த காயத்ரீ மந்திரத்தை ஊருக்கு வெளியே காடு, மலை, நதி தீரத்தில் தினமும் ஆயிரம் முறை ஜபிப்பவன் ஒரு மாதம் ஜபித்தால் மஹா பாதகத்தில் இருந்து விடுபடுவான். பாம்பு அதன் தோலில் இருந்து எப்படி விடுபடுகிறதோ அது போல பாவங்கள் நீங்கும்.

 

2-80. இந்த ஜபம்- உபநயனம் ஆகிய இல்லாத மூன்று வருணத்தாரும் பெரியோர்களினால் நிந்திக்கப்படுவார்கள்

 

 

2-81. காயத்ரீயை மோட்சத்துக்கான வழியாகச் சொல்லுகிறார்கள்.

 

2-82. எவன் மூன்று வருடத்துக்குச் சோம்பல் இல்லாமல், தினமும் இடைவிடாது காயத்ரீயை ஜபிக்கிறானோ, அவன் வாயுவைப் போல ஆகாயத்தில் , தன் இஷ்டப்படி உருவம் எடுத்து  சஞ்சரிக்கிறான். இறைவனுடன் ஒன்றிவிடுகிறான் (200)

2-83. பிரணவம் பரப்பிரம்மம் ஆகவும், பிராணாயாமம், சாந்திராயனம் முதலியவற்றைக் காட்டிலும் மேலானதாகவும் சொல்லப்படுகிறது; காயத்ரீயைச் ஜபிப் பவனுக்குப் பாபம் இல்லை. காயத்ரிக்கு மேலான மந்திரம் இல்லை. அவன் சத்தியத்தையே சொல்லுவதால் இதைச் செய்பவனுக்கு மௌன விரதம் தேவை இல்லை.

 

2-84. வேதத்தில் உள்ள யாக யக்ஞாதி கருமங்கள் அழியக்கூடிய பலத்தையே தரும்; ஆனால் பிரணவம், பரமாத்ம ஸ்வரூபத்தைக் காட்டி மோட்சத்தைக் கொடுக்கிறபடியால், அதற்கு அழிவற்றது (அக்ஷரம் = அழியாதது)  என்றும் பிரம்மனால் (by Bahma) சொல்லப்பட்டிருக்கிறது

 

2-85. ஒரு பிராமணன் ‘’ஓம்’’ உடன் காயத்ரீயைச் சொன்னால் இந்த ஜப யக்ஞமாவது அமாவாசை, பௌர்ணமியில் செய்யும் யாகங்களைவிட பத்து படங்கு பலன் தரக்கூடியது. அதை யார் காதிலும் விழாமல் ரஹசியமாகச்  செய்தால் நூறு மடங்கு பலன் கிடைக்கும். மனதில் அதன் பொருளை அறிந்து சொன்னால் ஆயிரம் மடங்கு பலன் பெறுவர்.(203)

 

2-86. பஞ்ச மஹா யக்ஞங்களில் பிரம்ம யக்ஞம் ஒன்றைத்தவிர மற்ற நான்கும் காயத்ரீயை விட மதிப்புக் குறைந்தவையே. காயத்ரீயின் மஹிமையில் பதினாறில் ஒரு பங்கு கூட அவைகளுக்கு இல்லை.

 

2-87. காயத்ரீ ஜபத்தால் பிராஹ்மணன் நிச்சயமாக மோட்சத்தை அடைகிறான். அவன் வேறு எதையும் செய்தாலும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. அந்தணர் என்போர் அறவோர்; மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான் (குறள் வரிகள்); அவன் எல்லோருடைய நண்பன் ஆகிறான்.

 

2-88. தேரை ஓட்டும் சாரதி குதிரைகளை கடிவாளம் போட்டு அடக்குவது போல, அறிவுடையார்,  மனம் என்னும் குதிரைகளை அடக்க வேண்டும். புலன் இன்பங்களை நாடி ஓடும் மனது, கட்டுக்கடங்காத குதிரைகளுக்கு உவமை.(206)

 

எனது கருத்து:-

 

பூணூல், தண்டம், மேலாடை, குருகுல வாசம், பிக்ஷை  எடுத்தல் முதலியவற்றை மூன்று வருணத்தாருக்கும் வலியுறுத்தி வருவது குறிப்பிடத் தக்கது. இப்போது பிராமணர் தவிர மற்ற எல்லோரும் சூத்திரர்கள் என்ற அரசியல் பிரசாரத்தால் மக்கள் குழம்பிக் கிடக்கின்றனர். ஆளும் அரசியல்வாதிகள், வணிகப் பெருமக்கள், விவசாயிகள் முதலியோரும் பூணூல் அணிந்து வேதம் கற்ற காலம் ஒன்று இருந்தது. ஆனால் இதை நடத்திக் கொடுக்கும் பணிக்கு பிராஹ்மணர் தலைமை வகித்தனர்.

 

மேலும் பெண்களுக்கும் மந்திரம் இல்லாமல் எல்லாச் சடங்குகளையும் செய்க என்று மநு கூறுவதிலிருந்து அவர் மிக மிகப் பழங்காலத்தில் வாழ்ந்தவர் என்பது தெரிகிறது. ஏனெனில் கதைகளில் கூட மூன்று வருணத்தார் இவற்றைச் செய்ததாகப் படிப்பதில்லை. ஆகவே அவர் ஸரஸ்வதி நதி பாய்ந்த காலத்தில் இதை எழுதினார் என்பது தெளிவாகிறது. பிற்காலத்தில் இடைச் செருகல்கள், குறிப்பாக சூத்திரர்களுக்கு எதிரான விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

 

தற்காலத்தில் வேதம் படிப்பதையும், காயத்ரீ சொல்லுவதையும் எல்லோருக்கும் பொதுவாக்கினார் சத்ய சாய் பாபா போன்ற மஹான்கள். இது ஜனகர் காலத்திலும் அவருக்கு முந்தியும் இருந்ததை நாம் உபநிஷத்து மூலம் அறிகிறோம். அப்பொழுது கார்க்கி போன்ற பெண்கள் பெரிய சபைகளில் வாதம் செய்ததைப் பிருஹத் ஆரண்யக உபநிஷத்தில் பார்க்கிறோம். ஆகவே பெண்களும் , மற்ற ஜாதியினரும் வேதம் அறிந்தவர்களாக இருந்த காலம் ஒன்று இருந்தது.

 

 

‘’ஓம்’’ என்னும் பிரணவ மந்திரத்தையும், காயத்ரீ மந்திரத்தையும் மிக உச்சாணிக் கொம்பில் வைக்கிறார் மநு. பிராஹ்மணர்கள், காயத்ரீ மந்திரத்தைப் பிடித்துக் கொண்டால் போதும்,  வேறு யாக யக்ஞங்கள் இல்லாவிட்டாலும் ஒன்றும் தவறில்லை என்று அடித்துக் கூறுகிறார் மநு.

 

மேலும், மாநசீகமாகச் செய்யும் (மனதுக்குள்) காயத்ரீக்கு ஆயிரம் மடங்கு பலன் என்று மநு செப்புவதும் குறிப்பிடத்தக்கது.

 

 

குருவுக்கு எப்படி வணக்கம் செலுத்த வேண்டும் என்று மநு கூறுவதும், குருவானவர் இப்போது ‘சொல்’, இப்போது ‘நிறுத்து’ என்று சொல்ல வேண்டும் என்று மநு கட்டளையிடுவது நோக்கற்பாலது. ஆசிரியர் என்பவர், மாணவர்களை வகுப்பறையில் உட்கார வைத்துவிட்டு மற்ற அலுவல்களைச் செய்ய முடியாது; முழுக் கவனமும் மாணவர் மீது இருக்க வேண்டும் என்பதும் பெறப்படுகிறது.

மநு  தனது நூல் முழுதும்— துவக்கம் முதல், இறுதி வரை — புலன் அடக்கத்தையும் ஸத்தியத்தையும் வலியுறுத்துவதை நன்கு கவனிக்கவும். இவை இரண்டும் இருக்கும் எல்லோரும் பிராஹ்மணர்களே;  வேதம், காயத்ரீ எல்லாம் இதற்குப் பின்னரே. அதனால்தான் வள்ளுவனும் மநு சொன்னதை அப்படியே சொன்னான்—

மறப்பினும் ஒத்துக்கொளல் ஆகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் (134)

 

மநு சொன்ன முதல் 200 ஸ்லோகங்களிலேயே பல அதிசய விஷயங்களைக் கண்டு வருகிறோம்; இன்னும் 2400 ஸ்லோகங்களில் பல அதிசயங்களைக் காண்போம்.

 

-தொடரும்……………………….

 

ஒளி மாசைத் தடுக்க முதலில் சட்டம் இயற்றிய நாடு! (Post No.4692)

Date: 2 FEBRUARY 2018

 

Time uploaded in London- 6-28 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4692

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

 

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் 11-12-2017லிருந்து 20-12-2017 முடிய காலையில் சுற்றுப்புறச் சூழ்நிலை சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பிய உரைகளில் நான்காவது உரை

 

  1. ஒளி மாசைத் தடுக்க முதலில் சட்டம் இயற்றிய நாடு!

 

ச.நாகராஜன்

 

ஓளி மாசு கூட உண்மையில் மாசு தானா? ஆம்! இயற்கை படைத்திருக்கும் அற்புதமான பிரபஞ்சத்தில் விண்ணில் மின்னும் கோடிக்கணக்கான தாரகைகளை நகரிலிருந்து பார்க்க முடியாமல் லட்சக்கணக்கானோரைத் தடுப்பது நகரில் மின்னும் ஆயிரக்கணக்கான விளக்குகளால் ஏற்படும் ஒளி மாசு தான்!

இயற்கையான சூரியனின் ஒளியும் அது மறைந்த பின்னர் ஏற்படும் இருளும் பல்வேறு பிராணிகள் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத ஒன்றாகும்.

கடல் ஆமைகளுக்கு அதிக ஓளியினால் எங்கு முட்டைகளை இடுவது என்று தெரியவில்லை; விழிக்கின்றன! ஆண் வண்டுகளுக்கோ இன விருத்திக்காக பெண் வண்டுகளுடன் கூட முடியவில்லை. இடம் விட்டு இடம் செல்லும் பறவைக் கூட்டங்களோ வழி தெரியாமல் தவிக்கின்றன.

அதிக ஒளியினால் மனிதர்களும் அவஸ்தைப்படுகின்றனர்.

செக்ஸ் உறவில் ஆர்வமே போய்விடுகிறது. அதிகச் சோர்வு ஏற்படுகிறது. ஏன், தூக்கமின்மையுடன் சில சமயம் கான்ஸர் வியாதி கூட ஒளி மாசினால் உருவாகிறது.

இருள் என்பது மனிதனுக்கு இன்றியமையாத ஒன்று என்கிறார் கின்கென்பார்க் என்னும் விஞ்ஞானி. “யாரும் இல்லாத தேசம் போல இருளைப் போக்கி ஒளி மயமாக்குவது நல்லதல்ல’ என்கிறார் அவர்.

நாளுக்கு நாள் இந்த ஒளி மாசு அதிகரித்துக் கொண்டே போவதைக் கண்டு விழித்துக் கொண்ட முதல் நாடு செக்கோஸ்லேவேகியா தான். 2002ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தேதியிலிருந்து அனைத்து விளக்குகளும் அது எந்த நோக்கத்திற்காக போடப்பட்டதோ அந்த இடத்திற்கு மட்டும் வெளிச்சம் தந்து இதர இடத்திற்குப் போகாதபடி பாதுகாப்பு ஷீல்டு  எனப்படும் ஃபிக்ஸர்களைப் போட வேண்டும் என்று அது சட்டத்தைப் பிறப்பித்தது.

உலகில் இப்படி ஓளி மாசைத் தடுக்க முதன் முதலில் சட்டம் இயற்றிய செக்கோஸ்லேவிகியாவைத் தொடர்ந்து பல நாடுகளும் இதே போல சட்டங்களை இயற்றின.

ஆகவே வீட்டினுள்ளே உபயோகிக்கும் மின் விளக்குகளையும், சாலைகள் மற்றும் இதர இடங்களில் நாம் உபயோகிக்கும் மின் விளக்குகளையும் மிக மிகக் குறைந்த அளவில் தேவைக்கு மட்டுமே பயன்படுத்தினால் ஒளி மாசும் அகலும்; செலவும் குறையும்; வெப்ப மயமாதலும் குறையும்.

உணர்ந்து செயல்படுவோம்!

***

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 41 (Post No.4691)

Date: 2 FEBRUARY 2018

 

Time uploaded in London- 6-17 am

 

Compiled  by S NAGARAJAN

 

Post No. 4691

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 41

  பாடல்கள் 241 முதல் 249

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

கவிஞர் k. ராமமூர்த்தி பாடல்கள்

மகாகவி பாரதி வாழ்க மாதோ!

சீர்மிகுந்த செந்தமிழின் சீராளர்;

     செகம்புகழும் கவிதந்த பேராளர்;

கார்த்திகைத் தீபத்திங்கள் திருநாளில்,

     கதிரெனவே அவதரித்தார் பாரதியார்.

 

நேர்த்தியுடன் பாநெய்த தறியாளர்;

      நிலையறிந்து நூலிழைத்த குறியாளர்;

பாரதிசெவ் வாய்மலர, உருவான

     பைந்தமிழ்ச் சொல்தங்கக் கருவூலம்.

 

கல்வியினால் காழ்ப்புதன் னிடமில்லாமல்

      கவிக்குலத்து முன்னவரைப் படம்பிடித்தார்;

புல்முளைத்தே இருளடைந்த இந்நாட்டை,

       பொலிவாக்கும் திருப்பணிக்கே வந்துதித்தார்.

 

முந்தையரின் புகழலையில் பொருந்தியதால்

       முகிழ்ந்தகடற் செல்விஆழம் இருந்தவாறே,

சந்தமினிமை, முத்துப்பவளம் பாலித்தாள்;

       தங்கக்கவி, தொடுத்ததனை மாலையிட்டார்.

 

பாவானம் பார்த்தறியா விடிவெள்ளி;

       பாரதநாட்டு விடுதலையின் தீக்கொள்ளி;

மாகாளியம் மகாசக்தி, அருட்சக்தி,

       மாகவியாய் வந்ததமிழ்ப் பெரும்சக்தி.

 

வளர்கின்ற பொற்காலம் தமிழினுக்கே

       வாராதோஎன விசனிக்கின்ற பொழுதினிலே

களமிறங்கித் துறைதோறும் பாடிவைத்தார்;

       காசினியில் மனிதநேயம் நாடிநின்றார்.

 

புலர்காலைப் பொழுதுவரும் ஞாயிறுபோல்,

       புரட்சிக்கே பாட்டாயுதப் பாயிரத்தால்

தளர்வின்றிச் சமூகவானில் சிறகடித்தே,

       சமத்துவத்தைத் தாரணிகேட்க முரசடித்தார்.

 

பவித்திரம் பாரதிபாட்டு நெறிபாடும்

       பார்மீது ரவியாலே ஒளிகூடும்;

கவியரசர் பாரதிக்கு ஜதிபல்லக்கு

       காசினியில் பாரதியே கதிநமக்கு

 

செந்தமிழ்ப் பாலதினில் மொய்ம்புறவே,

       தேசபக்தி, தெய்வபக்தி நெய்யெடுத்தார்;

வந்தனைகள் புரிந்துநலம் சூழ்ந்திடவே,

        வையமெலாம் பாரதிபுகழ் வாழ்கமாதோ!

     

    

கவிஞர்  K. ராமமூர்த்தி : பாரதி காவலர் டாக்டர் K. ராமமூர்த்தி ‘மகாகவி பாரதிக்கு ஜதி பல்லக்கு’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். பாரதி பற்றிய பல கவிதைகளையும் புனைந்துள்ள பாரதி ஆர்வலர். தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் நடந்த 10வது உலகக் கவிஞர் மாநாட்டில் பங்கேற்று பாரதி பற்றி உரையாற்றியவர். பாரதத்தில் பல்வேறு இடங்களில் உரையாற்றியவர். தொடர்ந்து பாரதியைப் பரப்பும் பணியை மேற்கொண்டுள்ளார்.

தொகுப்பாளர் குறிப்பு: ‘மகாகவி பாரதிக்கு ஜதி பல்லக்கு’ என்ற நூலில் வெளியாகியுள்ள கவிதை. நூலை வெளியிட்டோர் : கங்கை புத்தக நிலையம் 23, தீனதயாளு தெரு, தி.நகர். சென்னை – 600017 முதல் பதிப்பு டிசம்பர் 2010

நன்றி: பாரதி காவலர் டாக்டர் K. ராமமூர்த்தி; நன்றி: திரு ராமநாதன், கங்கை புத்தக நிலையம்

 

***

ஆணா பெண்ணா ? யார் நல்லவர்? பழமொழிக் கதை (Post No.4690)

Date: 1 FEBRUARY 2018

 

Time uploaded in London- 8–11 am

 

Compiled by London swaminathan

 

Post No. 4690

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 

((நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

‘ஆண் நல்லது, பெண் பொல்லாதது’ என்று ஒரு பழழொழி உண்டு. இதன் பின்னாலுள்ள கதையை, திராவிடப் பூர்வ கால கதைகள் என்ற புத்தகத்தில் நூறு ஆண்டுகளுக்கு முன் நடேச சாஸ்திரி என்னும் பெரியார் தொகுத்து வைத்துள்ளார்; பழைய கால, பிராஹ்மண மொழியில் உள்ளதை நான் புதுக்கி வரைகிறேன்.

 

ஒரு ஊரில் ஒரு பிராஹ்மணர் இருந்தார். மிகவும் நல்லவர். ஊருக்கு வருவோருக்கெல்லாம் அக்கால வழக்கப்படி போஜனம் (சாப்பாடு) செய்துவிட்டுத்தான் உண்பார். அவருடைய மனைவியோ பொல்லாதவள். புருஷனுக்கே சோறு போட மறுப்பவள்.

 

அவள் ஒரு தந்திரம் வைத்திருந்தாள்; முதலில் புருஷன் சாப்பிட வந்த விருந்தாளியை திண்ணையில் உட்கார வைத்து விட்டுப் பக்கத்தில் உள்ள நதியில் குளித்துவிட்டு வருவது வழக்கம். அப்படிப் புருஷன் போன பின்னர் இந்தப் பெண்மணி (பெண் சனி) ரேழியில் (வராண்டாவில்) வந்து நின்று கொண்டு, “ஊர்ப் பயல்களுக்கு எல்லாம் நான் ஏன் சமைத்துக் கொட்ட வேண்டும். அதுதான் இந்த ஊரில் இது போன்ற சோற்றால் அடித்த பிண்டங்களுக்கு என்று சத்திரம் ஒன்றைக் கட்டி வைத்து இருக்கிறார்களே அங்கே போய்ச் சப்பிடக்கூடதா? இங்கு வந்து என் கழுத்தை ஏன் அறுக்கிறார்கள்; எனக்கோ உடம்பு சரியில்லை” என்பாள்.

 

இதைத் திண்ணையில் உடகார்ந்து கேட்டுக் கொண்டிருப்பவர்களில் பாதிப் பேர் ரோஷம், மானம், வெட்கம், சூடு, சொரணை இருந்தால் சாப்பிடாமல் போய் விடுவார்கள் கணவன் வந்து கேட்டால், ‘’அவருக்கு மிகவும் பசியாம்; ஆகையால் சத்திரத்தில் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று போய்விட்டார்’’ என்பாள்; சிலர் என்னதான் திட்டு வாங்கினாலும் சாப்பிட்டுத்தான் போக வேண்டும் என்று உட்கார்ந்து சாப்பிடுவர்.

 

இப்படிக் காலம் போய்க் கொண்டிருந்தது. ஒரு நாள் ஒரு தேஜஸ் உள்ள ( முகப் பொலிவு) பிராஹ்மணர் வந்தார். அவரைத் திட்ட இப்பெண்மணிக்கு (பெண் சனி) மனம் வரவில்லை. வேறு ஒரு தந்திரம் செய்தாள். தனது வீட்டிலுள்ள இரும்புப் பூண் போடப்பட்ட உலக்கையை ரேழிக்குக் கொண்டு வந்தாள். பின்னர் திண்ணையில் உட்கார்ந்து இருந்த தேஜஸ்   மிக்க பிராஹ்மணனை அழைத்தாள்.

 

“சுவாமின்னு! இங்கே வாரும்! உமக்கு ஏதாவது கடைசி நிமிட பிரார்த்தனை இருந்தால் இப்போதே அதை ஜபித்து விடும்; இன்னும் சற்று நாழியில் உம் பிராணன் (உயிர்) போய் விடும்” என்றாள். அவரோ நடுநடுங்கி , “அம்மணி! என்ன விஷயம்? இப்படி யெல்லாம் பேசுகிறீர்கள்? என்றார்.

 

“அதுவல்ல, உம்மைப் போன்ற பிராஹ்மணர் யாராவது கிடைத்தால், நீங்கள்  சாப்பிடும்போது இந்த உலக்கையால்  என் கணவர் அடித்துக் கொன்றுவிடுவார். என் கணவர் ஒரு மாதிரியானவர்” என்றாள்.

அவர் பயந்துகொண்டு வெளியே நடந்தார்.

 

இதற்குள் ஆற்றில் குளிக்கப்போன அந்தப் பிராஹ்மணர் வந்தார். சாப்பிட வந்த பிராஹ்மணர், அவரைக் கண்டதும் வேகமாக நடக்கத் தொடங்கினார்.

 

உடனே, எதனால் சாப்பிட வந்த பிராஹ்மணர் இப்படி வேகமாகப் போகிறார்? என்று மனைவியிடம் கேட்டார்.

 

“ஓ, அதுவா? நான் பொறந்தாத்துலேயிருந்து கொண்டுவந்த இந்த உலக்கை தனக்கு வேண்டும் என்றார். நான் கொடுக்க முடியாது; இது பரம்பரைச் சொத்து என்றேன். கோபித்துக் கொண்டு சாப்பிடமாட்டேன் போ என்று வேகமாகப் போய்விட்டார்” – என்றாள்.

 

“அடக் கடவுளே! இந்த உலக்கை என்ன? உனக்கு தங்கத்தால் உலக்கை வாங்கித் தருகிறேன். அவரிடம் உலக்கையைக் கொடுத்து சாப்பிட அழைத்து வருவேன்; இல்லாவிடில் மஹா பாபம் வந்து சேரும் என்று உலக்கையுடன் ஓடினார். வேகமாக நடந்த பிராஹ்மணன் பின்னால் திரும்பிப் பார்த்துக்கொண்டே நடந்தார். இந்தப் பிராஹ்மணன்

இப்படி உலக்கையுடன் ஓடி வருவதைப் பார்த்தவுடன் ‘’அடப் பாவி கொலைகாரா, உன் மனைவி சொன்னது உண்மைதான்; என்னைக் கொல்லவா வருகிறாய்’’ என்று கூவிக்கொண்டே குதிங்கால் பிடரியில் அடிக்க ஓடிப் போனார்.

 

ஆண் நல்லது, பெண் பொல்லாது என்பதற்கு அவ்வையார் வாழ்க்கையிலும் ஒரு சம்பவம் உண்டு. அவரும் இப்படிப்பட்ட மனைவியுடன் வாழ்வதை விட சந்யாசம் மேற்கொள்வதே நல்லது என்றார். சாக்ரடீஸோ மனைவி நல்லவராக இருந்தால் கல்யாணம் செய்து கொண்டவன் அதிர்ஷ்டசாலி; கெட்டவளாக இருந்தால் கணவன், பிலாஸபராகலாம் PHILOSOPHER — தத்துவ ஞானியாகலாம் என்றார். சாணக்கியனோ பெண் கெட்டவள் என்று தெரிந்தால், கல்யாணம் செய்துகொள்ளாமலே வாழ்வது சாலச் சிறந்தது என்றார்.

கல்யாணம் கட்டாதே!

கெட்ட அரசன் ஆளும் நாட்டைவிட காடே மேல்;

கெட்ட நண்பனைவிட, நண்பனில்லாததே மேல்;

கெட்ட மாணவனை விட மாணவன் இல்லாதததே மேல்;

கெட்ட மனைவியைவிட மனைவி இல்லாததே மேல்.

 

வரம் ந ராஜ்யம் ந குராஜராஜ்யம் வரம் ந மித்ரம் ந குமித்ரமித்ரம்

வரம் ந சிஷ்யோ ந குசிஷ்யசிஷ்யோ வரம் ந தாரா குதார தாராஹா.

 

6-12

 

–சுபம்–

CHRISTIAN MIRACLE ANECDOTES (Post No.4689)

Date: 1 FEBRUARY 2018

 

Time uploaded in London- 6-30 am

 

Compiled by London swaminathan

 

Post No. 4689

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 

Miracles Anecdotes

Caedmon was unlettered that he had to retire for shame from the Refectory at Whitley Abbey when the harp passing from hand to hand during dinner approached him with its implication that he must recite. On one of these occasions, as narrated by Bede, it happened to be Caedmon’s to keep guard at the stable during the night and overcome with vexation, he quitted the table and retired to his post of duty, where ,laying himself down, he fell into a sound slumber.

 

In the midst of his sleep, a stranger appeared to him, and, saluting him by his name, said,

“Caedmon , sing me something”.

Caedmon answered, “I know nothing to sing; for my incapacity in this respect was the cause of my leaving the hall to come hither”.

“Nay, said the stranger, but thou hast something to sing “

“What must I sing?” Said Caedmon

“Sing the Creation, was the reply and there upon Caedmon began to sing verses which he had never heard before”.

Caedmon then awoke, and he was not only able to repeat the lines which he had made in his sleep, but he continued them in a strain of admirable versification. In the morning he hastened to the town reeve, or bailiff of Whitley, who carried him before the Abbes Hilda ; and there in the presence of some of the learned men of the place he told his story and they were all of the opinion that he had received the gift of song from Heaven.

 

Xxxx

Impossible!

On February 10,1872 Mr Wallace Wright publicly challenged Mrs Mary Baker Eddy :-

 

1st. To restore the dead to life again as she claims she can

2nd. To walk upon the water without the aid of artificial means as she claims she can

3rd. To live 24 hours without air, or 24days without nourishment of any kind without its having any effect on her.

4th. To restore sight when the optic nerve has been destroyed

5th. To set and heal a broken bone without artificial means

 

Mr Wright ended the controversy by the exulted announcement on February 17 that his opponent and her science were preictally dead and buried .

Xxx

Miracle of Eating!

A negro preacher addressed his flock with great earnest ness on the subject of miracles, as follows,

“My beloved, friends, de greatest ob all miracles was ‘bout the loaves and fishes. Dey was 5000 loaves and 2000 fishes, and de twelve apostles had to eat ‘em all. De miracle is dey didn’t burst .

Xxx

Saved from Burning House!

John Wesley, the hymnist, was nominated a special person by divine fiat. When a baby, he was miraculously saved from his father’s burning office. Just after his escape, the roof fell in. This incident contributed so strongly to his later evangelism, giving him conviction that he had been saved by god for a special mission, that he adopted a device found on some of the contemporary prints, of him, namely, a house in flames, with this motto from the prophet,

“Is he not a brand plucked from the burning?”

Xxxxxxx SUBHAM xxxxxxxxxxxx

சத்ய சாயி லீலை- சோகத்தால் அழுத நான்கு புடவைகள்! (POST. 4688)

Date: 1 FEBRUARY 2018

 

Time uploaded in London- 5-39 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4688

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

((நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

 

சோகத்தால் அழுத நான்கு புடவைகள்!

 

ச.நாகராஜன்

 

ஸ்ரீ சத்யசாயி பாபாவின் அவதாரத்தில் ஆயிரக்கணக்கான லீலைகள் உண்டு.

 

ஒவ்வொரு லீலையும் ஆனந்தத்தைத் தருவதோடு அல்லாமல் ஒரு அற்புதமான பாடத்தையும் கூடவே தரும்.

பம்பாயில் தர்மக்ஷேத்ராவில் நடந்த நிகழ்ச்சி இது. ஆண்டு 1968.

அங்கு சேவையில் ஈடுபட்டிருந்த பெண்மணிகள் நூறு பேருக்கு அருளாசியுடன் புடவைகள் தர ஸ்வாமி எண்ணி, நூறு புடவைகளைக் கொண்டு வருமாறு பணித்திருந்தார்.

ஒரு கார்ட் போர்ட் பெட்டியில் நூறு சேலைகள் வந்தன.

அவற்றில் 96ஐ ஸ்வாமி தேர்ந்தெடுத்தார். நான்கு புடவைகளை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டார்.

 

பின்னர் நடந்தது தான் அதிசயம்.

அணுக்க பக்தரான ஹிஸ்லாப், அவர் மனைவி, இன்னும் பல பக்த்ர்கள் குழுமி இருந்த அறையில் ஹிஸ்லாப் புடவைகளை நோட்டம் விட்டார்.

 

அவற்றில் நான்கு ஈரமாக இருந்தன.

 

உடனே அவர் இதை பாபாவிடம் சுட்டிக் காட்டினார்.

இந்த அறையில் ஈரம் வருவதற்கான வாய்ப்பே இல்லை. நூறில் நான்கில் மட்டும் எப்படி ஈரம் வர முடியும்? பெட்டியோ டேபிளின் மீது இருந்தது! ஸ்வாமியோ ஒவ்வொன்றையும் செக் செய்து ‘அப்ரூவ்’ செய்து கொண்டிருந்தார்.

 

ஆக புடவைகள் ஈரமானது எப்படி?

ஸ்வாமி கூறினார்: ஸ்வாமி அவற்றை வேண்டாம் எனச் சொல்லி விட்டதால் அவை அழுகின்றன!

இதைக் கேட்ட ஹிஸ்லாப் திடுக்கிட்டார்.

 

ஹிஸ்லாப்: அது எப்படி? உயிரற்ற ஜடங்களுக்கு உணர்ச்சிகள் உண்டு, அவை கூட அழும் என்றா ஸ்வாமி சொல்கிறார்?

பாபா: உயிரற்ற ஜடங்களுக்கு கூட உணர்ச்சிகள் உண்டு. அவை கூட துக்கத்துடன் அழும்.

 

இலங்கைக்கு சேது பாலம் கட்டப்பட்ட போது குரங்குகள் பாறைகளைக் கொண்டு வந்து பாலம் கட்ட உதவின. பாலம் கட்டி முடியப் போகும் தருணத்தில் ஒரு பெரிய மலை அந்தப் பாலத்திற்கு அருகில் கொண்டு வரப்பட்டது.

ஆனால் பாலமோ முடிந்து விட்டது; இனி அந்த மலை தேவை இல்லை. கொஞ்சம் தாமதமாக அங்கு அந்த மலை வந்து விட்டது.

 

அந்தத் தருணத்தில் தன்னை வேண்டாம் என்று சொல்லப்பட்ட வார்த்தைகளைக் கேட்டவுடன் துக்கம் தாளாமல் அந்த மலை அழ ஆரம்பித்தது.

 

உடனடியாக் இந்தச் செய்தியை ராமனுக்கு அறிவித்தனர்.

கருணையின் திரு உருவான ராமன் மனம் நெகிழ்ந்தார்.

உடனடியாக அந்த மலைக்கு ஒரு செய்தியை அனுப்பினார்- அந்த மலை கவலைப்பட வேண்டாம் என்று!

அந்த மலை இனி வரும் அவதாரம் ஒன்றில் சிறப்பாகப் பயன்படுத்தப்படும் என்று உறுதி மொழியையும் சொல்லச் சொன்னார்.

மலை துக்கம் தீர்ந்து மகிழ்ந்தது!

கிருஷ்ணாவதாரத்தில் அது தான் கோவர்த்தன கிரியாக இருந்தது! தன் ஒரு விரலால் அந்த  மலையைத் தான் கிருஷ்ணர் தூக்கி தன் லீலையைச் செய்தார். மலையும் பரவசம் அடைந்தது!

கோகுலத்தில் இந்திரன் மழை பெய்து வருத்திய காலத்தில் இடையர்களை மழையிலிருந்து காப்பாற்றியது அந்த மலையே!

 

 

பாபாவின் இந்த அருளுரையைக் கேட்ட ஹிஸ்லாப் உள்ளிட்ட அனைத்து பக்தர்களும் ஆச்சரியத்துடன் பரவசமாயினர்.

 

ஹிஸ்லாப்: ஸ்வாமி! அந்த பெரிய நாடகம் இன்று எங்கள் கண் முன்னாலேயே திருப்பியும் இப்போது அரங்கேறி விட்டதே!

‘இங்கு வந்த புடவைகளில் நா பயன்படுத்தப்படப் போவதில்லை என்று அழுதனன்குவே. அவை ஸ்வாமியின் கருணையால் கொண்டுவரப்பட்ட காரணத்திற்காக இல்லாவிட்டாலும், ஸ்வாமியால் இன்னொரு விதத்தில் பயன்படுத்தப்பட்டு விட்டனவே’ என்று கூறி மகிழ்ந்தார்.

 

ஆம், அந்த நான்கு புடவைகளையும் ஹிஸ்லாப்பின் மனைவி, இன்னும் அங்கிருந்த இதர மூன்று பெண்மணிகளுக்கு அருளாசியுடன் பாபா வழங்கினார்.

 

அதைத் தான் அதிசயமாக ஹிஸ்லாப் குறிப்பிட்டார்!

ஸ்வாமி: ஆம்! நீங்கள் கூறியது சரியே! எவர் ராமனாகவும் கிருஷ்ணனாகவும் வந்தாரோ அவரே தான் இப்போது இங்கு உங்கள் முன் இருக்கிறார்!

 

அவதார மஹிமையைச் சொல்லவும் வேண்டுமோ!

இதைப் படிக்கும் போதே ஆனந்தம் அடையும் போது அதை நேரில் அனுபவித்தவர்களின் ஆனந்தத்திற்கு ஒரு எல்லை உண்டோ!

லீலையின் வாயிலாக உயிரற்ற ஜடங்களுக்கும் கூட உணர்ச்சிகள் உண்டு என்ற பாடத்தையும் கூட அல்லவா அறிய முடிகிறது!!

***

ஆதாரம் : Conversations with Bhagavan Sri Sathya Sai Baba by John S. Hislop

p 31; Sri Sathya Sai Books And Publications Trust வெளியீடு

1968 ஜனவரியில் நடந்த டேப் செய்யப்பட்ட உரையாடல்கள்

நன்றி : ஹிஸ்லாப்; நன்றி : Sri Sathya Sai Books And Publications Trust

***

செரிங்கட்டி தரும் 6 விதிகள் (Post No.4687)

Date: 1 FEBRUARY 2018

 

Time uploaded in London- 5-03 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4687

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் 11-12-2017லிருந்து 20-12-2017 முடிய காலையில் சுற்றுப்புறச் சூழ்நிலை சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பிய உரைகளில் மூன்றாவது உரை

 

  1. செரிங்கட்டி தரும் ஆறு   விதிகள்

ச.நாகராஜன்

 

ஆப்பிரிக்காவில் செரிங்கட்டி என்ற அற்புதமான வளம் வாய்ந்த பகுதியை ஆராயப் புகுந்த விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வின் முடிவில் இயற்கை பற்றிய ஆறு விதிகளைக் கண்டுபிடித்துள்ளனர். சுற்றுப்புறச் சூழலைப் பற்றிச் சரியாக அறிந்து கொள்ள இந்த ஆறு விதிகள் உதவும்.

முதல் விதி : எல்லா உயிரினங்களும் சம அளவில் படைக்கப்படவில்லை.

எவ்வளவு தேவையோ அந்த அளவில் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் உயிரினங்களை இயற்கை படைத்துள்ளது.

இரண்டாம் விதி: சில முக்கியமான உயிரினங்கள் தொடர்கூட்ட அளவில் மற்றவற்றின் மீது மறைமுகமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

அதாவது குறிப்பிட்ட சில முக்கிய உயிரினங்களை மட்டும் கண்காணித்தால் போதும். அது ஏற்படுத்தும் மறைமுக விளைவுகளை அறிந்து கொள்ள முடியும்.

மூன்றாவது விதி: சில உயிரினங்கள் பொதுவான ஆதார வளங்களுக்காகப் போட்டி போடுகின்றன.

 

செரிங்கட்டியின் நான்காவது விதி,  ஒரு மிருகத்தின் உடல் அளவு அந்த மிருக வகையின் எண்ணிக்கையை நிர்ணயிக்கும் ஒரு முக்கியமான அம்சம் என்று கூறுகிறது.

ஒரு மிருக இனத்தின் எண்ணிக்கை குறையும் போது தானாகவே அதன் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க ஆரம்பிக்கிறது. மிக அதிகமாகும் போது அவற்றிற்கான உணவுக்கு வழி இல்லை என்பதால் தானாகவே எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கிறது.

 

செரிங்கட்டியின் ஐந்தாவது விதி, மிருகங்களின் எண்ணிக்கையானது அதன் அடர்த்தியைப் பொறுத்து உள்ளது என்கிறது.

 

உணவுக்கு ஓரிடத்தில் வழி இல்லை என்னும் போது குறிப்பிட்ட மிருகங்களின் கூட்டம் இடம் விட்டு இடம் மாறுகிறது.

சிங்க்ளேர் என்ற விஞ்ஞானி இரண்டு லட்சம் வரிக்குதிரைகளும் நான்கு லட்சம் ‘தாம்ஸன் மான்’களும் இப்படி ‘மைக்ரேஷன்’ எனப்படும் இடம் விட்டு இடம் பெயர்தலைக் கண்டு வியந்தார்.

 

இடம் விட்டு இடம் பெயர்தலானது ஒரு மிருக வகையின் எண்ணிக்கையை அதிகரிக்க வைக்கிறது என்று கூறுகிறது செரிங்கட்டியின் ஆறாவது விதி.

 

டாக்டர் ஆஸ்கார் பாமன் என்ற ஜெர்மானிய விஞ்ஞானி 1892இல் செரிங்கட்டி காடுகளை ஆராய அதனுள் புகுந்தார்.

செரிங்கட்டியில் உள்ள இயற்கைக் காட்டு வளம் தரும் சுவையான பல செய்திகளில், இயற்கையின் இயல்பான கட்டுப்பாடு முக்கிய அம்சமாக இலங்குகிறது.

இந்த இயற்கை கட்டுப்பாட்டைப் பேணிக் காக்காமல் நமது செயற்கையான வழிமுறைகள் மூலம் சுற்றுப்புறச் சூழலைக் கெடுத்து விடக் கூடாது என்பது தான் விஞ்ஞானிகளின் ஒரே வேண்டுகொள்.

 

புவியை வெப்பமயமாக்கல், இயற்கை உயிரினங்களை பணத்திற்காக அழித்தல், கடத்துதல் போன்றவற்றை மனித இனம் விட்டு விட்டால் இன்னும் நூறாயிரம் ஆண்டுகள் இநதக் காடுகள் அழியாமல் வாழும்; மனித இனத்தையும் வாழ வைக்கும்!

XXXXXXXXXXXXXXX