‘பாரதியும் உலகமும்’ (Post No.4715)

DATE – 8 FEBRUARY 2018
Time uploaded in London- 9-03 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4715

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 47

ம.ப.பெரியசாமித் தூரன் அவர்கள் தொகுத்துள்ள ‘பாரதியும் உலகமும்

 

ச.நாகராஜன்

1

பாரதி ஆர்வலர் ..பெரியசாமித் தூரன் அவர்களைத் தமிழ் உலகம் நன்கு அறியும். மகாகவி பாரதியாரின் 42 அரிய கவிதைகள் ம்ற்றும் கட்டுரைகளை அவர் தொகுத்து பாரதியும் உலகமும் என்ற நூலாக வெளியிட்டுள்ளார்.

பாரதியாரின் அரிய கட்டுரைகளையும் கவிதைகளையும் அவர் சுதேசமித்திரன் இதழ்களிலிருந்து எப்படித் தொகுத்தெடுத்தார் என்பதை நா.மகாலிங்கம் அவர்கள் தன் அணிந்துரையில் எடுத்துக் கூறுகிறார்.

அதையும் பெரியசாமித் தூரன் வழக்கமாக பாரதி பற்றிய நூலில் அழகாக எழுதுகின்ற முன்னுரையையும் சுட்டிக் காட்டுவதே இந்த நூல் பற்றி இங்கு குறிப்பிடுவதன் நோக்கமாகும்.

 

2

அறிஞர் நா.மகாலிங்கம் அவர்களின் முன்னுரையிலிருந்து ஒரு பகுதி:-

 

தமிழ் நாட்டைத் தட்டி எழுப்பிய வீரர் பாரதி. அவர் குரலைக் கேட்டு எழுந்த எண்ணற்ற வாலிபர்களில் திரு. பெரிய சாமித்தூரனும் ஒருவர்.

1928ஆம் ஆண்டில் சென்னை மாநிலக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே தூரன் அவர்களுக்குப் பாரதியாரிடம் பக்தி ஏற்பட்டுவிட்டது. “பாரதி பைத்தியம்’’ என்று சிறப்புப் பெயரும் அப்போதே அவருக்குக் கிடைத்தது.

கல்லூரியில் படிக்கும் அந்த நாட்களிலேயே திரு. பெரியசாமித் தூரன் பாரதியாரின் எழுத்துக்களை எல்லாம் சேர்த்து வெளியிட வேண்டுமென்று ஆர்வமுடன் தொண்டாற்றினார்.

மகாகவி பாரதியார் 1905ஆம் ஆண்டு முதல் 1921ஆம் ஆண்டுவரை பதினாறு ஆண்டுகள் சுதேசமித்திரன் பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளை, கவிதைகளை எல்லாம் சேகரிக்கும் பணியில் உற்சாகமாக ஈடுபட்டார்.

பாரதியிடம் கொண்ட பக்தி ஒன்றையே மூலதனமாகக் கொண்டு சுதேசமித்திரன் ஆசிரியர் திரு. சி. ஆர். சீனிவாசன் அவர்கள் நன்மதிப்பைப் பெற்றார். இதனால் பதினாறு ஆண்டுகளாகச் சுதேசமித்திரன் பத்திரிகைகளில் தொடர்ந்து வெளி வந்த பாரதியின் எழுத்துக்களைத் தொகுப்பதற்கு அவர் அனுமதி கிடைத்தது.

பதினாறு ஆண்டுகளில் வெளியான சுதேசமித்திரன் தினசரிப் பத்திரிகை, வாரம் ஒருமுறை வெளியான சுதேசமித்திரன் வாரப் பத்திரிகை, இவற்றின் தாள்களை ஒவ்வொன்றாகப் பரிசோதித்து பாரதியாரின் கட்டுரைகளை எல்லாம் தொகுப்பது சுலபமான காரியமா? திரு. பெரியசாமித் தூரன் மிகுந்த உற்சாகத்துடன் ஈடுபட்டு பாரதியின் கட்டுரைகளைத் தொகுத்தார். பாரதியாரோடு நெருங்கிப் பழகிய  திரு. பரலி சு. நெல்லையப்பர், திரு. பி. ஸ்ரீ. ஆகிய அறிஞர்களை அணுகி, அவர்களிடமிருந்து பல அரிய செய்திகளைச் சேர்த்தார். இவைகளை எல்லாம் சேர்த்துபாரதி தமிழ்என்ற பெரிய நூலை 1953ஆம் ஆண்டிலேயே வெளியிட்டார்.

கல்லூரி வாழ்க்கையில் ‘’வனமலர் சங்கம்’’ என்ற சங்கத்தை திரு. பெரியசாமித் தூரன் ஆரம்பித்தார். அதில் நாட்டு விடுதலை, சுதேசி இயக்கம், தமிழ் இலக்கியம் ஆகியவற்றில் ஈடுபாடுள்ள அன்பர்கள் அங்கத்தினர்களாக இருந்தார்கள். இந்தச் சங்கத்தின் சார்பில்பித்தன்என்ற பத்திரிகையை வெளியிட்டார். அதில் பாரதியின் கட்டுரைகளை வெளியிட்டார்.

 

3

 

பாரதியார் பைத்தியமாகத் திகழ்ந்த தூரன் அவர்கள் இந்த நூலுக்கு நல்லதொரு முன்னுரையையும் நல்கியுள்ளார்.

அதுவே ஒரு ஆய்வுக் கட்டுரை போல அமைந்துள்ளது.

அதைப் படிக்கும் போது தூரன் அவர்கள் எந்த அளவுக்கு பார்தியில் தோய்ந்தவர் என்பதை நன்கு உணர முடியும்.

பாரதி ஆர்வலர்கள் இதை அறிய வேண்டும் என்பதற்காக அவரது முன்னுரையின் சில பகுதிகள் இங்கு தரப்படுகிறது.

இதோ பாரதியார் பற்றிய அவரது முன்னுரை:-

 

யதார்த்த நிலையை நன்கு புரிந்து கொண்டு எங்கெங்கு கொடுமை ஓங்குகிறதோ அங்கெல்லாம் அக்கொடுமையைச் சாடித் தமது வலிமையான கவிதைக் குரலாலும் உரை நடைக் குரலாலும், பேச்சுக் குரலாலும் கண்டனம் தெரிவித்து அக்கொடுமையை ஒழிக்கப் பாடுபடுகின்றார். இதில் அவர் சோர்வடைந்ததே இல்லை.

இந்த உணர்வின் அடிப்படையிலேதான் பாரத தேசத்தை அடிமைப் படுத்தி வறுமைக்கும், பிணிக்கும் பஞ்சத்திற்கும் உள்ளாக்கிய ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து முழங்கினார்; பெல்ஜிய நாட்டிற்கு வாழ்த்துப் பாடினார்; புதிய ருஷியாவில் கலியுகம் விழுந்து கிருதயுகம் எழுக என்று ஆசி கூறினர்.

 

ஐர்லாந்து, கிரீஸ், பாரசீகம், துருக்கி முதலான நாடுகளுக்கு, பிரிட்டனும், நேசக் கட்சியாரும் இழைத்த அநீதியை வன்மையாகக் கண்டிக்கிறார். இங்ஙனம் கண்டிப்பது மறைமுகமாக பாரத மக்களுக்கு ஆங்கிலேயர் செய்து வந்த அக்கிரமங்கள எடுத்துக்காட்டி அவர்களை எதிர்த்துப் போராடி விடுதலை பெறத்தூண்டுவதற்குப் பயன்பட்டாலும் அது ஒன்றே பாரதியாரின் நோக்கமாக இருக்கவில்லை.

 

பாரதியார் உலக அரசியல் நடைமுறைகளை எவ்வளவு நுட்பமாக அந்தக் காலத்திலே ஆராய்ந்து மக்களுக்குத் தமது இந்தியா வார இதழின் மூலமாக எடுத்து விளக்கினார் என்பதை நாம் காண்கிறோம். உலகத்து நாடுகளின் போக்கை ஒட்டியே இந்தியாவின் போக்கும் அமைய வேண்டி வரும் என்ற உண்மையை
அக்காலத்திலேயே பாரதியார் தமது தொலை நோக்கால் உணர்கின்றார்.

1921ஆம் ஆண்டு செப்டம்பரோடு பாரதியாரின் பேனா ஒய்வு பெற்று விடுகிறது, அதற்குப் பின்னால் 1921 டிசம்பரிலும் 1922 ஆம் ஆண்டு ஜனவரியிலும்தான் சத்யாக்ரஹ இயக்கம்;நேருக்கு நேர் அந்நிய ஆட்சியோடு மோதி சுமார் முப்பதினாயிரம் பேர் சிறை சென்றார்கள்.

                                                              *

 பாரதியார் நடத்திய இந்தியா வார இதழ் 1906 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் தொடங்கப் பெற்றது. அது 1910 மார்ச்சுத் திங்களோடு நின்று விடுகிறது.


அந்தக் காலத்திலேயும் சரி, சுதேசமித்திரனில் மீண்டும் எழுதும் வாய்ப்புக் கிடைத்த போதும் சரி, பின்னால் அந்த நாளிதழிலேயே உதவி ஆசிரியராக இரண்டாம் முறையாக அமர்ந்த போதும் சரி உலக நடைமுறைகளைக் கூர்ந்து கவனித்து அவற்றைப் பற்றியெல்லாம் தமிழ் மக்களுக்கு எளிதில் விளங்குமாறு பாரதியார் எழுதுகின்றார்.
பாரசீக தேசத்திலே பிரதிநிதி ஆட்சி முறைமையைப் பற்றி இந்தியா வார இதழில் எழுதுவார் (16 மார்ச் 1907); சீனாவிலே பிரதிநிதி ஆட்சி முறைமையைப் பற்றி எழுதுவார் (8 செப்டம்பர் 1906); ரூஸ்வெல்ட் அதிபரும் ஜப்பானும் என்று கட்டுரை தீட்டுவார் (8 டிசம்பர் 1906): ஜப்பானுக்கு ஹிந்து உபதேசிகள் அனுப்புதல் கவனிக்கப் படவேண்டிய விஷயம் என்று தெளிவு படுத்துவார் (10 நவம்பர் 1906); ஐர்லாந்தைப்பற்றிப் பரிவோடு எழுதுவார்; துருக்கியின் நிலையை அதே கட்டுரையில் எடுத்துக் கூறுவார் (15 நவம்பர்1920); கிரேக்க தேசத்தின் ஸ்திதியை விவரிப்பார். (19 நவம்பர் 1920).

இவ்வாறு பாரதியார் எழுதுவதைக் காணும்போது நமக்கே வியப்பாக இருக்கிறதல்லவா? இன்று நம்மிடையே உலவிவரும் தமிழ் நாளிதழ்களைப் பாருங்கள். அநேகமாக உலக நடைமுறைகளைப் பற்றி ஒன்றுமே இராது. ஏதாவது நில நடுக்கம் அல்லது விமான விபத்து என்று மட்டும் வரும். அயல் நாடுகள் எவ்வாறு இயங்குகின்றன என்ற தகவல்களைக் காண இயலாது.

பாரதியார் அன்று உலக நடைமுறைகளைக் கூர்ந்து நோக்கி எழுதியது அவருடைய மனிதாபிமானம் என்ற பரந்த நோக்கிலே முக்கியமாக எழுந்ததாகும்.

லார்டுகர்ஸன் இந்திய வைஸ்ராயாக 1899 முதல் 1905 வரை இருந்தவர்; வங்காளப் பிரிவினைக்குக் காரணமாயிருந்து அதை அமல் செய்தவர்; பல அநீதிகளைச் செய்தவர். இவரைப் பற்றி காரசாரமாகக் கண்டித்து பாரதியார் தமது இந்தியா வார இதழிலே எழுதியிருக்கிறார். இருந்தாலும் இவருடைய மனைவியார் இறந்த காலத்தில் பாரதியார் தமது அனுதாபத்தைத் தெரிவிக்கத் தவற வில்லை.

லார்டுகர்ஸனும் அவரது மூன்று குழந்தைகளும் அடையக் கூடிய துக்கத்தை நினைக்கும்போது எவரும் பரிதாபம் அடையக் கூடும்என்று தமது இந்தியா வார இதழில் எழுதியுள்ளார்.


‘’
இந்தியா ஐரோப்பியரைக்கூடக் கொல்ல விரும்புவதில்லை. திருத்த விரும்புகிறது‘’ என்று அவர் தெளிவாக எழுதியுள்ளார் (பார்க்கயூகோள மஹாயுத்தம்).

‘’அடக்கம், பொறுமை, ஜீவகாருண்யம் என்ற குணங்களே உண்மையான நாகரிகத்தையும் நித்யஜீவனையும் விளைக்கும். இப்படி நூற்றுக்கணக்கான ஹிந்து தர்மக் கொள்கைகளை நாம் உலகத்தார் கேட்க முழங்குவதற்கு இதுவே நல்ல தருணம். இந்தச் சமயத்தில் மனித ஸமூகம் அழிந்து போகாமல் அதைக் காப்பாற்றி நல்ல வழியிலே சேர்க்கக் கூடிய ஜாதியார் நம்மைத் தவிர, வேறு யாருமில்லை. கண்ணைத் திறந்து பூ மண்டல முழுவதையும் ஒரே பார்வையாகப் பார்த்தால் நான் சொல்வது உண்மை என்பது தானே விளங்கும்.’

இவ்வாறு ஹிந்து தர்மம் என்ற கட்டுரையிலே 29 நவம்பர் 1917ல் பாரதியார் எழுதுகின்றார்.
*
அணுகுண்டுப் பூதம்தோன்றி மானிடஇனமே அழிந்து போகுமோ என்று அஞ்சுகின்ற இந் நாளில் பாரதியாருடைய எச்சரிக்கை மிகப் பயனுடையதாகும்; ஆழ்ந்து சிந்திக்கத் தக்கதாகும்.

‘’இப்பொழுது மனிதர் ஒருவருக்கொருவர் பயப்படுவது தான் அதிகம்‘’ என்று பாரதியார் 22 செப்டம்பர் 1916-ல் எழுதினார்.

இன்று இந்த பயம் பல நூறு மடங்கு அதிகரித்துள்ளது.

‘’உலக முழுவதும் ஒரே குடும்பத்தைப் போல் வாழக் கூடாதா?’’ என்று அதே கட்டுரையில் (லோகோபகாரம்) பாரதியார் கேட்கிறார்.

                                                       4

மேலே அணிந்துரையின் சில பகுதிகளைப் பார்த்தோம். அதன் மூலம் பெரியசாமித் தூரன் எப்படிப்பட்ட பாரதி ஆர்வலர் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

தூரன் அவர்களின் முன்னுரையின் சில பகுதிகளைப் பார்த்தோம். அதில் அவரது ஆய்வின் சிறப்பை நம்மால் உணர முடிகிறது.

முழு நூலையும் பாரதி ஆ இலவசமாகத் தரவிறக்கம் செய்ய இயலும்.

அதற்கான இணையதளம் : www.projectmadurai.org.

இந்த இணையதளத்தை எவ்வளவு பாராட்டினாலும் அது தகும்.

நூலில் பாரதியாரின் கவிதைகள் மற்றும் கட்டுரைகளையும் படித்து இன்புறலாம்.

****

 

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 47 (Post No.4714)

DATE – 8 FEBRUARY 2018

Time uploaded in London- 8-49 am

 

Compiled  by S NAGARAJAN

 

Post No. 4714

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

  பாடல்கள் 291 முதல் 305

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

அருட்கவிஞர் அ.காசி பாடல்கள்

மகாகவி பாரதி அந்தாதி

இயற்றிய நூல்கள் என்ற அத்தியாயத்தில் உள்ள பதினைந்து பாடல்கள்

இயற்றிய நூல்கள்

திகழ்ந்த சுதேச கீதங்கள் – பாரதி

   தொகுத்தார் “ஜன்ம கீத மென்று!

பகர்ந்த இந்தப் பெரும்பாகம் – பாரதி

   பகுத்துத் தந்தார் இரு மூன்றில்!

நிகரிலா தலைப்பு ஐம்பத்து – மூன்று

   அதிலும் பிரிவுகள் பலவுண்டு!

உகப்புடன் ஆயிரத் துத்தொளாயி – ரத்தொன்

   பதிலே பாரதி இயற்றினாரே!

 

இயற்றிய நூலே “ஜன்ம பூமி – விடுத்தார்

   சமர்ப்பணம் நிவேதா தேவிக்கு!

“இயல்பாய் கதிரவ  னைநோக்கிப் – பூக்கும்

   சூரிய காந்தி மலரைப் போல்

வயவறு மக்கள் நெஞ்சமெலாம் – தர்ம

   வழியில் புகுந்திட விரும்புகிறேன்!

நயந்து பூமி மாதாவும் – தொண்டரும்

    நேயன் பணியை ஏற்பீரே!

 

“ஏற்பீர் தொண்டினை எனவுரைத்து – பாரதி

   முகவுரை, சமர்ப்பணம் தந்தாரே!

ஆற்ற லோடு “ஜன்ம பூமி – சாதி

   இன, மத வேறு பாடின்றி

போற்றி முப்பது கோடிமக்கள் – நெஞ்சில்

   பாய்ந்து புரட்சியை எழுப்பியதே!

ஊற்றாய்ச் சுரந்த “ஜன்ம பூமி – பாரதி

   படைப்பாய் யாமும் நன்றேற்றோம்!

 

நன்றே பாரதி தந்த பாக்கள் – படைப்பில்

   “நாட்டுப் பாட்டாய் உயர்வேற்று

அன்பர் பரலி நெல்லையப்பர் – நூலாய்

   அடுத்து வெளியிட யாம்கண்டோம்!

வந்தே மாதரம் என்பதற்கு – தாயை

   வணங்குவோம் என்பதே பொருளாகும்!

இந்தியத் தாயை வணங்கிடுவோம் – நாட்டுப்

    பாட்டால் போற்றிக் காத்திடுவோம்!

 

காத்து வளர்க்கும் திருமாலாம் -மாயக்

   கண்ணனைப் போற்றி பாரதியார்

ஏத்திப் பாடிய பாக்களையே – பரலி

   நெல்லை யப்பர் இங்கிதமாய்க்

கோத்துக் கண்ணன் பாட்டாகத் – தொகுத்துக்

   கொடுத்தார் பாரதம் விழிப்புறவே!

பாத்திறம் வண்ணப் படைப்பாகக் – கண்ணன்

   பாட்டில் திகழ்ந்தான் எண்ணியாங்கு.

 

எண்ணி யாங்கு வடிவத்தில் – கண்ணன்

   உதித்து அருளும் தந்திடுவான்!

கண்ணனே தோழன், தாய்தந்தை – சேவகன்

   கொற்றவன் சற்குரு சீடனுமாய்

திண்டிறல் காந்தன் காதலனாய் – ஒளிர்ந்து

   தந்தருள் புரியும் தெய்வமவன்!

கண்ணன் பாட்டை வெளியிட்ட – நெல்லை

   யப்பரைப் பாரதி வாழ்த்தினார்காண்!

 

வாழ்த்துரை தந்து வ.வே.சு. – ஐயர்

   கண்ணன் பாட்டைப் போற்றினார்காண்!

ஆழ்ந்த ஞானக் கீதையினை – கண்ணன்

   உலகுக் களித்த பரம்பிரமம்!

வாழ்ந்து காட்டிய பக்தர்க்கு – மகிமை

   வளமெலாந் தந்து காத்தவர்காண்!

தாழ்த்தி இருகை கூப்பியாமும் – கண்ணனை

   துதித்துத் தினமும் போற்றிடுவோம்

 

போற்றிப் பாடினார் மாரியையே – அவளே

   பல்வளம் நல்கும் முத்துமாரி

நாற்றிசை போற்றும் அன்னைமாரி – உப்பளம்

   நல்லூர் வாழும் முத்துமாரி!

ஏற்ற தாழ்வு நீக்குமாரி – அவளே

   ஒற்றுமை தந்து காக்குமாரி!

தேற்ற மனமும் நல்குமாரி – அருளை

  வேண்டிப் பாரதி பாடினார்காண்!

 

பாடினார் பாரதி குயில்பாட்டு – அதுவே

   பெட்புறு கற்பனைக் காவியமாம்!

ஈடிலா இன்பக் காதலையும் – காதலால்

   ஏங்கித் தவிக்கும் நிலையினையும்

வாடியே பல்லுயிர் இவ்வுலகில் – ஒவ்வா

   விருப்பினால் துடிக்கும் தன்னுணர்வும்

கோடியாய் விரித்துப் பாடினாரே – பாரதி

   குயிலின் பாட்டும் உயர்ந்ததுகாண்!

 

உயர்ந்த ஞானம் தருபவராம் – மணக்குளம்

   விநாயகர் அருளை வேண்டியுமே

நியம வெண்பா, கலித்துறையும் – அகவல்

   நாடி விருத்தம் மாறிவர

நயமுற நாற்பது பாடல்களால் – விநாயகர்

   நான்மணி மாலையும் பாடினார்காண்

இயன்றஅந் தாதித்  தொடையுடனே – பாரதி

   ஆக்கினார் பரம்பொருள் ஒன்றென்று!

 

ஒன்றென நொண்டிச் சிந்துகொண்டு – பாரதி

   ஒப்பிலா காவியம் படைத்தார்காண்

கம்பனுக் கடுத்தோர் காப்பியமாய் – பாரதி

   பாஞ்சா லிசபதம் இயற்றினார்காண்

ஒன்றிய எளிய தமிழ்நடைக்கு – உகந்த

   சான்று பாஞ்சா லிசபதமாம்!

நன்றே பொருட்சுவை வளத்துடனே – புதிதாய்

   நவின்றார் பாரதி பெண்மையையே!

 

பெண்மையை உயர்த்தி காட்டிடவும் – தேசப்

   பற்றினை மக்களுக் கூட்டிடவும்

எண்ணி வடித்த காப்பியமே – பாரதி

   பாஞ்சா லிசபதம் என்றறிவோம்!

திண்டிறல் வியாசர், வில்லியுமே – கூறா

   கவியின் கூற்றைக் கண்டோம்யாம்!

பெண்மை புரட்சி புதுநடைக்கு – தமிழில்

   புதுமை பாரதி கூட்டினார்காண்!

 

கூட்டிய வசன காவியமாய் – பாரதி

   கொடுத்த நூலே ஞானரதம்

தீட்டினார் அதனை சென்னையில் – அதனை

   மாண்புற முடித்தார் புதுவையிலே!

பூட்டிய ஞான ரதமேறி – சத்திய

   உலகங் கண்டு வியந்தார்காண்!

காட்சிகள் அனைத்தும் கற்பனையே – பாரதி

   கவினுறு படைப்பே ஞானரதம்.

 

ஞான ரதத்துடன் சுயசரிதை – உவந்தே

   புதுவை தன்னில் இயற்றினார்காண்

ஞானப் பாடல் பாடினாரே – பாரதம்

   ஞானமே என்று விளக்கினாரே!

மானம் உயர்ந்த பாரதத்தில் – புத்தர்

   மகானுந் தோன்றி ஞானமீந்தார்!

ஆனவை பலப்பல பாரதியார் – இயற்றி

   ஏற்றார் சீர்த்தி எங்கெங்கும்

 

எங்கும் பாரதி கீர்த்தியோங்க – அறிந்தார்

   சோம சுந்தர பாரதியார்!

இங்கித மாக ஆங்கிலத்தில் – “வாழும்

   மிகப்பெரி யகவிஞர் பாரதியார்

என்றே போற்றிக் கட்டுரையும் – எழுதி

   பாரதி புகழை ஓங்கவைத்தார்!

மன்பதை ஆங்கில நாடெங்கும் – பாரதி

   மாண்புகழ் பெருகக் கண்டோம்யாம்!

 

(மகாகவி பாரதி அந்தாதி தொடரும்)

 

கவிஞர் அ.காசி : பாரதி பணிச்செல்வர் கவிமாமணி அருட்கவிஞர் அருப்புக்கோட்டை அ.காசி எம்.ஏ., எம்.எட் பாரதி ஆர்வலர்.மரபுக் கவிதை இயற்றுவதில் வல்லவர். 50க்கும் மேற்பட்ட நூல்களுக்கு ஆசிரியர். கவியரங்கங்களில் பங்கேற்றவர். இவருக்கு ‘கவிச் சுடரொளி என்ற பட்டத்தை இதயரோஜா பதிப்பகம் அளித்தது. ‘கவிமாமணி பட்டத்தை கவிதை சக்தி இயக்கம் நல்கி இவரை கௌரவித்தது. ஏராளமான அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர்.பாரதியாரின் வரலாறைச் சுவைபட மரபு மீறாமல் அந்தாதியாக அளித்துள்ள நூல் என்பதால் இதுத் தனிச் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது.

தொகுப்பாளர் குறிப்பு:
மகாகவி பாரதி அந்தாதி என்ற மரபு வழிக் கவிதை நூலை இதயரோஜா பதிப்பகம், 14, கங்காராம் தோட்டம், கோடம்பாக்கம் சென்னை – 600 024 வெளியிட்டுள்ளது. 27 ஆண்டுகளாகப் பல நல்ல நூல்களை இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த நூல் வெளியான ஆண்டு: மே, 2004. மொத்த பக்கங்கள் :80. நூலில் அந்தாதி குறிக்கும் நூறு சுவையான செய்திகளை ஆசிரியர் விளக்கவுரையாகவும் தந்துள்ளார். விலை ரூ 30/ அன்பர்கள் பதிப்பகத்திற்கு எழுதி நூலின் பிரதிகள் இருப்பதை உறுதி செய்த பின்னர் இதை வாங்கலாம்.

அந்தாதி என்பது ஒரு செய்யுளின் இறுதிச் சீரில் வரும் வார்த்தை அடுத்த செய்யுளின் முதல் சீராக அமைந்து வருவதாகும்.

நன்றி: அருட்கவிஞர் அ.காசி நன்றி: இதயரோஜா பதிப்பகம், சென்னை.

****

‘SHOCKING’ BLESSING OF LIVING BUDDHA! (Post No.4713)

Date: 7 FEBRUARY 2018

 

Time uploaded in London- 16-18

 

WRITTEN by London swaminathan

 

Post No. 4713

 

PICTURES ARE TAKEN from various sources; may be subject to copy right laws.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 

Pagan Gods

According to a story told by Roy Chapman Andrews, the famous explorer, the Living Buddha of Mongolia, a personage only a stage less exalted than the Great Lama of Tibet, was a man of original ideas. One of the regular ceremonies of his office was the laying on of hands to many worshippers and lesser priests who came daily for his blessings. The Buddha conceived a mass blessing. He had a small American Delco generator in his palace. This he rigged up with a wire stretching down a long area way. The many pilgrims would line up clutching the wire and each received a memorable blessing as the Living Buddha threw the switch by his throne.

Dr Andrews was invited to partake of the blessing, which courtesy he could not refuse. He reports that the shock nearly knocked him over.

 

Xxx

Atheists and Agnostics Anecdotes

The noted agnostic Colonel Robert Ingersoll, during a visit with Henry Ward Beecher, noted a beautiful globe portraying the constellations and stars of the heavens.

This is just what I have been looking for, he said after examining it. Who made it?

Repeated Beecher in simulated astonishment,

Why Colonel, nobody made it; it just happened.

 

Xxx

Doubtful Agnostic!!

Someone once charged David Hume , the agnostic, being inconsistent because he went to hear the orthodox, Scotch minister, John Brown.

Hume replied, “I don’t believe all that he says, but he does. And once a week I like to hear a man who believes what he says”.

 

Xxx

Sculptor Recognised his God!

A Portuguese SCULPTOR, upon his death bed, had a crucifix placed before his eyes by a confessor, who said,

“Behold the god whom you have so much offended.”

“Do you recollect him now?”

“Alas! Yes, Father”, replied the dying man.

“It was I who made him”.

 

Xxx

 

Permission only to Ingersoll!

When Philips brooks was recovering from an illness, and was denying himself for all visitors, Robert G Ingersoll , the agnostic called. The bishop called him at once.

I appreciate this very much, said Mr Ingersoll, but why do you see me when you deny yourself to your friends?

 

It is this way, said the bishop, I feel confident of seeing my friends in the next world, but this may be my last chance of seeing you

 

Xxx

Did a whale swallow Jonah?

Once while addressing an open air meeting, an atheist asked Bishop Carpenter f he believed that Jonah was swallowed by the whale.

When I get to heaven, I will ask Jonah , said his lordship.

But supposing, the other persisted, he is not there?

Then you will have to ask him,was the quick retort.

 

Xxx Subham xxxx

 

 

ஆயூர்வேத அதிசயங்கள் (Post No.4712)

Betel-nut cutter with Vishnu and Lakshmi; areca nut tooth paste

Date: 7 FEBRUARY 2018

 

Time uploaded in London- 8-39 AM

 

WRITTEN by London swaminathan

 

Post No. 4712

 

PICTURES ARE TAKEN by London swaminathan

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 

 

(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

 

லண்டன் ஆயுர்வேதக் கண்காட்சியில் நிறைய அதிசயச் செய்திகள், அபூர்வ படங்கள் இருக்கின்றன. எவ்வளவுதான் சொல்ல முடியும்? இது நாலாவது கட்டுரை. முடிந்தவரை சொல்கிறேன்.

 

ஜோதிட உடம்பு

ஒரு உடலில் 12 ராசிகளை வரைந்த படம் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில் பாரசீக மொழிக் குறிப்புகள் உள்ளன. 1396 ஆம் ஆண்டில் பாரசீகத்தைச் சேர்ந்த (இப்போது இந்த நாட்டின் பெயர் ஈரான்) மன்சூர் இபின் முகமது என்பவர் ஒரு நூல் எழுதினார். அந்த மருத்துவ புஸ்தகத்துக்கு தஸ்ரிக் இ மன்சூரி என்று பெயர். அதில் உடலின் ஐந்து அம்சங்கள் விளக்கப்படுகின்றன: எலும்பு, நரம்பு, சதை, சுத்த ரத்தக் குழாய்கள், அசுத்த ரத்தக் குழாய்கள். அவர் கிரேக்க நாட்டில் வாழ்ந்த மருத்துவ மேதை காலன் (GALEN, 130-210 CE) என்பவரைப் பின்பற்றி இந்த புஸ்தகத்தை எழுதினார். . இஸ்லாமிய நாடுகளில் இதுதான் முதல் வைத்திய கிரந்தம் என்று சொல்வதற்கிலை. ஆயினும் இந்தக் க்ரந்தத்தின் சிறப்பு யாதெனில் அழகிய வரைபடங்களுடன் வெளியானதே; இதற்கு முந்திய நூல்களில் உடற்கூறுகளின் படங்கள் இல்லை. இதே முறையில்தான் ராஸி மனிதன் படமும் அமைந்துள்ளது

 

உடலின் பல அங்கங்கள், நவக் க்ரஹங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக இந்துக்கள் நம்புவர். கண்ணுக்கு சூரியன், மனதுக்கு சந்திரன், ஜனன உறுப்புகளுக்கு சுக்கிரன் என பல க்ரஹங்களுக்குப் பல பணிகள் உண்டு. இதன் அடிப்படையிலேயே பாரசீக 12 ராஸி மனிதன் வரையப்பட்டிருக்க வேண்டும் என்பது என் நம்பிக்கை.

மனிதனின் முதுகெலும்புக்கு அருகில் உள்ள தண்டுவடம் வழியாக ஆறு சக்கரங்கள் இருப்பதாக இந்துக்கள் நம்புவர். இத்தகைய ஆறு சக்கரங்களைக் காட்டும் பழைய ஓவியமும் இங்கே உள்ளது. இந்த தண்டு வடத்துக்குக் கீழே பாம்பு சுருண்டு கிடப்பதுபோல மஹத்தான ஒரு சக்தி உறக்க நிலையில் இருப்பதாகவும் அதை தியானம் மூலம் தட்டி எழுப்பி ஆறு சக்கரங்கள் வழியே வழிநடத்தும் வல்லமை உடையோர் ஆன்மீக விழிப்புணர்ச்சி அடைவார்கள் என்றும் அத்தோடு நில்லாமல் நெற்றிக் கண்  (மூன்றாவது கண் எனப்படும் ஞானக் கண்) திறக்கப்பட்டு அற்புதங்களை செய்ய முடியும் என்றும் இந்துமத நூலகள் செப்பும். இக்கால விஞ்ஞானிகளுக்கோ, மாற்றுமதத்தினருக்கோ இந்த பிரம்மாண்ட ரஹஸியம் இன்று வரை தெரியாது; விளங்காது.

 

விநாயகர் அகவலில் அவ்வையார் கூறுவதை அறிந்தோருக்கு இதன் சிறப்பு புரியும்.

குண்டலி யதனிற் கூடிய அசபை

விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்

காலால் எழுப்பும் கருத்தறி வித்தே

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)

குமுத சகாயன் குணத்தையும் கூறி

இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்

உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்

சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்

எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்

தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்

கருத்தினில் கபால வாயில் காட்டி

இருத்தி முத்தி யினிதெனக் கருளி

என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)

 

 

ஆயூர் வேதம் என்றால் ‘நீண்ட வாழ்க்கை வாழ்வதற்கான அறிவு’ என்று பொருள்படும். உடலில் உள்ள வாத, பித்த, கப தோஷங்களின் அடிப்படையில் அமைந்த மருத்துவ முறை இது. இப்பொழுது இந்தியாவுக்கு வெளியிலும் பிரபலமாகிவிட்டது.

 

இந்தக் கண்காட்சிக்கு ‘ஆயுர்வேத மனிதன்’ என்று பெயர் சூட்டியமைக்குக் காரணம் ஒரு நேபாள ஓவியம் ஆகும். இது 200 ஆண்டுப் பழமையானது. நேபாள நாட்டிலிருந்து இந்தியா வழியாக லண்டன் வரை வந்ததிலிருந்தே இதன் சிறப்பு விளங்கும்.

 

இந்த வண்ண ஓவியத்தில் ஆயுர்வேத நூல் அடிப்படையில் உடல் உறுப்புகளும் ரத்த நாளங்களும் காட்டப்பட்டுள்ளன. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ‘பாவ ப்ரகாஸ’ என்ற சம்ஸ்க்ருத மருத்துவ நூலில் இருந்து எடுக்கப்பட்ட குறிப்புகள் இந்த ஓவியத்தில் இருக்கின்றன. ஓவியத்தை வரைந்தவர் நல்லறிவு பெற்றிருந்தாலும் சம்ஸ்க்ருத எழுத்துக்களை எழுதியவர் பிழைபட எழுதியுள்ளார். எழுத்துப் பிழைகளோடு கருத்துப் பிழைகளும் உள.

 

விஷ்ணு-லெட்சுமி உருவத்துடன் கூடிய பித்தளை பாக்குவெட்டியும் கொட்டைப் பாக்கில் இருந்து செய்யப்பட்ட பற்பசையும் காட்சியில் இடம்பெற்று உள்ளன. அந்தக் காலத்தில் மூலிகைகளை பெரிய வரைபடமாக வரைந்த மூலிகைப் புஸ்த்தகத்தையும் காணலாம். இவை எல்லாம் 200-ஆண்டுப் பழமையானவை.

 

பார்க்க அருமையானவை.

–SUBHAM–

வள்ளலாரின் தமிழ்! (Post No.4711)

Date: 7 FEBRUARY 2018

 

Time uploaded in London- 7-51 am

 

WRITTEN  by S NAGARAJAN

 

Post No. 4711

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 
(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

அருட்பா இரகசியம்

வள்ளலாரின் தமிழ்!

ச.நாகராஜன்

 

 

1

 

சமீப கால சரித்திரம் கண்ட ஒரு மாபெரும் மகான் வடலூர் வள்ளலார்.

தமிழை எனிய இனிய சொற்களால் எளிமைப் படுத்தி பழகும் தமிழில் ஞான தத்துவங்களையும் சாகாக் கலையையும், அனைவரும் உளமுருகத் துதிக்க வைக்கும் தோத்திரப் பாடல்களையும் அளித்து ஆச்சரியப்படுத்திய தமிழ்ச் சித்தர் அவர்!

முருகன் அவரை ஆட்கொண்டதால் அவன் அளித்த தமிழைக் கொண்ட தமிழாகரன் அவர்!

 

(உண்மையில் தமிழாகரன் என்ற பெயரை உடைய ஞானசம்பந்தரைத் தன் ஞான குருவாகக் கொண்டவர் ஆயிற்றே. அதனால் இவரும் தமிழாகரனைக் குருவாகக் கொண்ட தமிழாகரன் ஆகிவிட்டாரோ!)

 

அதாவது தமிழை உடலாகக் கொண்டவர்; உயிராகக் கொண்டவர்.

வள்ளலார்.

 

 

2

வள்ளலாரின் பாடல்களைத் தத்துவத்திற்காகவும், இனிமைக்காகவும், ஓசை நயத்திற்காகவும், வெவ்வெறு அணிகளுக்காகவும், பல உவமைகளுக்காகவும், பல ரகசியார்த்தங்களுக்காகவும், மருத்துவத்திற்காகவும், வாழ்முறை நெறிகளுக்காகவும், தமிழுக்காகவும் ஏன் சாகாக் கலையை அறியவும் பலமுறை படிக்கலாம்; படிக்க வேண்டும்.

அவரது வார்த்தை விளையாட்டுக்கள் மிகவும் சுவாரசியமானவை.

அதற்காகவும் ஒரு முறை படிக்கலாம்.

உதாரணத்திற்குச் சில பாடல்கள் இங்கே பார்க்கலாம்.

 

வெம்பு முயிருக் கோருறவாய்

வேளை நமனும் வருவானேல்

தம்பி தமையன் துணையாமோ

தனையர் மனைவி வருவாரோ

உம்பர் பரவுந் திருத்தணிகை

உயர்மா மலைமேல் இருப்பவர்க்குத்

தும்பக் குடலை யெடுக்காமல்

துக்க வுடலை எடுத்தேனே!

 

தொல்லைக் குடும்பத் துய்ரதனில்

தொலைத்தே னந்தோ காலமெலாம்

அல்ல லகற்றிப் பெரியோரை

யடுத்து மறியேன் அரும்பாவி

செல்வத் தணிகைத் திருமலை வாழ்

தேவா வுன்றன் சந்நிதிக்கு

வில்வக் குடலை யெடுக்காமல்

வீணுக் குடலை யெடுத்தேனே

 

அவல வயிற்றை வளர்ப்பதற்கே

அல்லும் பகலும் அதில் நினைவாய்க்

கவலைப் படுவ தின்றிசிவ

கனியைச் சேரக் கருதுகிலேன்

திவலை யொழிக்குந் திருத்தணிகைத்

திருமால் மருகன் திருத்தாட்குக்

குவளைக் குடலை யெடுக்காமல்

கொழுத்த வுடலை யெடுத்தேனே.

 

 

பாடலின் பொருள் நயம், ஓசை நயம், உருக வைக்கும் பக்தி நயம் பற்றி விளக்க உரையே வேண்டாம்,

வில்வக் குடலை எடுக்காமல் வீணுக்கு உடலை – வீணுக் குடலை எடுத்தேனே என்பதில் உள்ள நயம் அவர் தம் தமிழைக் காட்டும் இடம். தும்பைக் குடலை எடுக்காமல் துக்க உடலை எடுத்தேனே; குவளைக் குடலை எடுக்காமல் கொழுத்த உடலை எடுத்தேனே என்பதில் நாம் காணுவது வள்ளலாரை அல்ல; நம்மை நாமே காணும் இடமாக அமைகிறது.

 

3

இனி அவரது வார்த்தை விளையாட்டுக்கு இரு பாடல்களைப் பார்ப்போம்!

பகுதி தகுதி விகுதியெனும் பாட்டில்

இகலி லிடையே யிரட்டித் – தகவின்

அருச்சித் தான் முன்னா மதுகடையாங் கண்டீர்

திருச்சிற் சபையானைத் தேர்ந்து.

 

பாடலில் என்ன புரிகிறது? – திருச்சிற்சபையான் மட்டும் புரிகிறது.

மற்ற சீர்கள் சொல்லும் சிறப்பான செய்தி என்ன?

உதவிக்கு நாட வேண்டியவர் கிருபானந்தவாரியார் தான்!

அவரது உரை விளக்கம் படித்தால் உளமும் விளக்கம் அடைகிறது.

 

பகுதி, தகுதி, விகுதி

இந்த மூன்று வார்த்தைகளில் இடையெழுத்து – அதாவது நடுவில் வரும் எழுத்து எது? ‘கு’ ஆகும்.

இதை இரட்டியுங்கள் என்கிறார் அருளாளர்.

இரட்டித்தால் – அதாவது இருமுறை எழுதினால் வருவது

குகு, குகு, குகு!

அதாவது ஆறுமுறை ‘கு’ வருகிறது. அதாவது அறுகு (ஆறுமுறை ‘கு’வை அறுகு என்று தானே கூற வேண்டும். அதாவது அறுகம்புல்!)

 

முதலெழுத்துக்களைக் கூட்டினால் வருவது ப, த, வி.

பத முத்தி ஆகும்.

கடை எழுத்துக்களைக் கூட்டினால் தி, தி, தி. அதாவது மூன்று முறை ‘தி’ வருகிறது. முத்தி.

திருச்சிற்சபையானை அறுகம்புல்லால் அர்ச்சித்தால் பத முத்தியும் ஐக்கிய முத்தியும் சித்திக்கும் என்ற அரிய இரகசியத்தை இந்த புதிர்ப் பாடலில் அருளுகிறார் வள்ளலார்.

 

 

4

இன்னொரு பாடல்:

தாதாதா தாதாதா தாக் குறைக்கென் செய்குதும்யாந்

தாதாதா வென்றுலகிற் றானலைந்தோம் – போதாதா

நந்தா மணியே நமச்சிவா யபொருளே

யெந்தா யெனப் புகழவே.

 

என்ன பொருள், புரியவில்லையே!

கிருபானந்தவாரியார் சுவாமிகளை நாடுகிறோம்; பொருள் விளங்குகிறது.

ஏழு முறை தா வருகிறது; எழு முறை தா! அதாவது எழுதா!

எழுதாக் குறைக்கு என் செய்குதும்? தலையில் எழுதாக் குறைக்கு என்ன செய்வது?

 

தாதா – தாதா என்றால் தெரியுமே; ஆம் வள்ளல்!

மூன்று தா வருகிறது இரண்டாம் அடியில்!

தாதா, தா! வள்ளலே தா என்று அலைந்தோம். இப்படி அலைந்தது போதாதா?

இனியேனும் நந்தா மணியே, நமச்சிவாயப் பொருளே எந்தாய் எனப் புகழுங்கள்; வழிபடுங்கள்; வாழ்க்கையைச் சிறக்க அமையுங்கள்!

 

5

நமக்காகக் குறுகிய காலத்தில் ஆயிரக் கணக்கான பாடல்களை அருளியுள்ளார் வள்ளலார் பிரான் – அரிய இரகசியங்களை அடக்கி, இனிய தமிழில்!

 

கொஞ்ச நேரம் ஒதுக்குவோம்; அருட்பாவை ஓதுவோம்!.

என்னென்ன பயன்களைப் பெற முடியும் அருட்பாவைப் படித்தால்.

வாரியார் சுவாமிகளின் திருவருட்பா தொகுதி (1) -யைப் படித்தால் முதல் பக்கத்தில் முதல் பாடலிலேயே பதில் வருகிறது!

 

 

பத்தி வரும் பழவினைகள் பற்ந்தோடும்

மூல மலப் பகுதி மாயும்

புத்தி வரும் புலைகொலைகள் புறம்போகும்

ஆனந்தம் பொங்குஞ் சாந்த

முத்தி வரும் அழியாநன் மோக்கமுறு

முதுகடல்சூ ழுலகி லெல்லாச்

சித்தி வரும் இராமலிங்க தேசிகன்றன்

அருட்பாவைச் சிந்திப்போர்க்கே.

 

அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை!

***

 

பாரதி போற்றி ஆயிரம் – 46 (Post No.4710)

DATE – 7 FEBRUARY 2018
Time uploaded in London- 7-31 am

 

Compiled  by S NAGARAJAN

 

Post No. 4710

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

  பாடல்கள் 285 முதல் 290

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

அருட்கவிஞர் அ.காசி பாடல்கள்

மகாகவி பாரதி அந்தாதி

மும்மூர்த்திகள் மற்றும் பாரதிதாசன் தொடர்பு ஆகிய அத்தியாயங்களில் உள்ள ஆறு பாடல்கள்

 

மும்மூர்த்திகள்

 

ஓங்குசீர் நண்பர் அரவிந்தர் – அவர்தம்

    உயர்ந்த தொண்டைப் போற்றிநல்ல

பாம்புடன் இணைத்து அரனார்க்கு – உற்ற

   பணியா பரணமாய்த் திகழ வைத்தார்!

பாங்குற சோலை நிழலாக – பாரதி

   பற்றிய துணைவரே அரவிந்தர்!

தீங்கிலா பாம்பு அரவிந்தர் – உறவைத்

   திருவுட னேற்றார் புதுவையிலே.

 

புதுவை வந்த மும்மணிகள் – அவர்களே

   பாரதி, வ.வே.சு. அரவிந்தர்!

குதுகல முடனே கடற்கரையில் – மூவரும்

   கூடிக் கருத்து பரிமாறி

சுதந்திரம் பற்றியும் கலந்துபேசி – நாட்டுத்

   தொண்டு புரிந்து வந்தனரே!

புதுவை நண்பராய் நெல்லையப்பர் – கிருட்டின

   மாச்சா ரியாரும் பழகினர்காண்!

 

பழகிய நண்பர் பலருடனும் – பாரதி

   பாரத சுதந்திரம் வேண்டிநின்றார்!

உழன்ற அரிஜன சீடனவன் – கனக்

   லிங்கம் களிப்புறப் பூணூலை

வழங்கி அவனுக் கணிவித்து – பாரதி

   பீடுறு புரட்சி செய்தார்காண்!

முழங்கி சுதந்திரம் வேண்டிநின்று – காளியைப்

   பணிந்து பாரதி பாடினார்காண்!

 

 

பாரதிதாசன்தொடர்பு

 

பாடிய பாரதி பாக்களிலே – “சுதந்திரப்

   பள்ளு தலைப்பு ஒன்றாகும்!

ஈடிலா திருமண நிகழ்ச்சியொன்றை – பாரதி

   உவந்து காணச் சென்றார்காண்!

நாடி வந்த ஓர்தாசன் – அவரே

   கனக சுப்புரத் தினமென்பார்!

பாடினார் பாரதி பாவொன்றை – அதனைப்

   பரிந்து கேட்டார் பாரதியார்!

 

பாரதி அந்தத் தாசனையே அங்கு

   பலர்முன் புகழ்ந்து போற்றினாரே!

வீர சுதந்திரம் வேண்டிநின்றார் – என்ற

   உணர்ச்சிப் பாடலை இசைத்தார்காண்!

தீரன் கனகசுப் புரத்தினமே – பாவேந்

   தரெனும் பாரதி தாசனாவார்!

ஆரமு துபாக்கள் தந்தவரம் – பாரதி

   தாசன் இனிய நண்பரானார்.

 

நண்பர் பாரதி தாசனுமே – அவரொடு

   நெருங்கிப் பழகி வாழ்ந்தாரே!

கண்ணின் மணிபோல் பாரதியின் – குடும்பம்

   தன்னைக் காத்து வந்தாரே!

தொண்டர் பாரதி புகழ்பரப்பும் – தொண்டினைத்

   தொடர்ந்து செய்தார் தாசனுமே!

அண்டி வந்த வறுமையை – நீக்கும்

   ஆருயிர நண்பராய்த் திகழ்ந்தார்காண்

          

                   (மகாகவி பாரதி அந்தாதி தொடரும்)

 

 

கவிஞர் அ.காசி : பாரதி பணிச்செல்வர் கவிமாமணி அருட்கவிஞர் அருப்புக்கோட்டை அ.காசி எம்.ஏ., எம்.எட் பாரதி ஆர்வலர்.மரபுக் கவிதை இயற்றுவதில் வல்லவர். 50க்கும் மேற்பட்ட நூல்களுக்கு ஆசிரியர். கவியரங்கங்களில் பங்கேற்றவர். இவருக்கு ‘கவிச் சுடரொளி என்ற பட்டத்தை இதயரோஜா பதிப்பகம் அளித்தது. ‘கவிமாமணி பட்டத்தை கவிதை சக்தி இயக்கம் நல்கி இவரை கௌரவித்தது. ஏராளமான அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர்.பாரதியாரின் வரலாறைச் சுவைபட மரபு மீறாமல் அந்தாதியாக அளித்துள்ள நூல் என்பதால் இதுத் தனிச் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது.

 

தொகுப்பாளர் குறிப்பு:
மகாகவி பாரதி அந்தாதி என்ற மரபு வழிக் கவிதை நூலை இதயரோஜா பதிப்பகம், 14, கங்காராம் தோட்டம், கோடம்பாக்கம் சென்னை – 600 024 வெளியிட்டுள்ளது. 27 ஆண்டுகளாகப் பல நல்ல நூல்களை இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த நூல் வெளியான ஆண்டு: மே, 2004. மொத்த பக்கங்கள் :80. நூலில் அந்தாதி குறிக்கும் நூறு சுவையான செய்திகளை ஆசிரியர் விளக்கவுரையாகவும் தந்துள்ளார். விலை ரூ 30/ அன்பர்கள் பதிப்பகத்திற்கு எழுதி நூலின் பிரதிகள் இருப்பதை உறுதி செய்த பின்னர் இதை வாங்கலாம்.

அந்தாதி என்பது ஒரு செய்யுளின் இறுதிச் சீரில் வரும் வார்த்தை அடுத்த செய்யுளின் முதல் சீராக அமைந்து வருவதாகும்.

நன்றி: அருட்கவிஞர் அ.காசி நன்றி: இதயரோஜா பதிப்பகம், சென்னை.

****

 

 

மெஜாரிட்டி தோற்கும், மைனாரிட்டி வெல்லும்- ராமாயண, மாபாரத அதிசயம்! (Post No.4709)

Date: 6 FEBRUARY 2018

 

Time uploaded in London- 9-55 AM

 

WRITTEN by London swaminathan

 

Post No. 4709

 

PICTURES ARE TAKEN FROM VARIOUS SOURCES; THEY MAY BE SUBJECT TO COPY RIGHT LAWS.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

மெஜாரிட்டி தோற்கும், மைனாரிட்டி வெல்லும்- ராமாயண, மாபாரத அதிசயம்! (Post No.4709)

 

பொதுவாக ஒரு தேர்தலில் யாருக்குப் பெரும்பான்மை (மெஜாரிட்டி) பலம் இருக்கிறதோ அவர்தான் அரசு அமைப்பார். மைனாரிட்டி– அதாவது சிறு  பான்மைக் கட்சி எதிர்க்கட்சி  வரிசையில் உட்காரும். ஒரு போரில் யாருக்கு அதிக படை பலம் இருக்கிறதோ அவர் வெல்லுவார்; குறைந்த படை பலம் உடைய தரப்பு தோற்கும்; இதை சதுரங்க (செஸ்)  விளையாட்டில்கூடக் காணலாம்.

 

மஹா பாரதத்தில் பாண்டவர் படையில் ஏழு அக்ஷௌகினி சேனையும் துரியோதனாதியரிடம் பதினோரு அக்ஷௌகினி சேனையும் இருந்தது. அது மட்டுமல்ல துரோணர், பீஷமர், அஸ்வத்தாமன், கர்ணன் போன்ற பெரிய வீரர்களைக் கொண்டது துரியோதனன் படை. ஆயினும் மைனாரிட்டி படை பலம் உடைய பாண்டவர் படைதான் இறுதியில் வென்றது. அதாவது, பெ    ரும்பான்மை, சிறுபான்மை என்பதே– அறப் போராட்டத்தில் முக்கியமல்ல– யார் யார் தர்மத்தின் தரப்பில் நிற்கிறார்களோ அவர்கள்  வெல்வார்கள்.

ராமாயணத்திலும் இதே கதைதான்!

 

ராமன் தலைமையிலான குரங்குப் படை எழுபது வெள்ளம்! ஆனால் ராவணன் தலைமையில் இருந்த அரக்கர் சேனை ஆயிரம் வெள்ளம். இது பற்றிய சுவையான சம்பஷணை இதோ

 

ராம பிரானுடைய படைகள், ஆழ்கடலின் மீது பாலம் கட்டி, அதன் மேல் நடந்து வந்து. இலங்கைக்குள் நுழைந்துவிட்டன. சுவேல மலையின் மீது நின்று ராவணன் படைகளை நோட்டம் விடுகிறான் ராமன்.

 

ராவணன் தனது கோபுர உச்சியில் நின்று ராமனின் வானர சேனையை கண்காணிக்கிறான். திடீரென்று சுரீவன் பறந்து வந்து ராவணனின் மணிமகுடத்தைப் பறித்து ராமன் காலில் சமர்ப்பிக்கிறான்.

 

அதற்குப்பின் ராவணன் அமைச்சரவையைக் கூட்டி விவாதிக்கிறான். அப்போது நடந்த உரையாடல்:

நிகும்பன் என்ற மந்திரி ராவணனிடம் சொல்கிறான்:-

 

எழுபது வெள்ளத்துற்ற குரக்கினமெயிலை முற்றும்

தழுவின என்று செய்யத் தக்கது சமைதி போலாம்

அழுவ நீர் வேலை அன்னது ஆயிர வெள்ளம் அன்றே

உழிஞையைத் துடைக்க நொச்சி உச்சியில் கொண்டது உன் ஊர்

–யுத்த காண்டம், அணிவகுப்புப் படலம், கம்ப ராமாயணம்

பொருள்

எழுபது வெள்ளம் என்ற கணக்கை உடைய குரங்குக் கூட்டம் இலங்கை நகர மதிலை முற்றும் வளைத்துக்கொண்டன என்று  எண்ணி மனம் வருந்துகிறாய் போலும்; நம்முடைய படை ஆயிரம் வெள்ளமன்றோ! நம் பகைவர் சூடிய உழிஞையைப் போக்குவதற்கு உன் ஊர்ப்படை நொச்சியை உச்சியில்  கொண்டுள்ளது என்று நிகும்பன் சொன்னான்.

 

தங்களிடம் வலிய ஆயுதங்கள் இருப்பதால் தேவர்களும் முற்காலத்தில் அஞ்சி ஓடினர் என்று நிகும்பன் கூறி முடித்த உடனே மாலியவான் என்பான் கூறுகிறான்:

 

புக்கெரி மடுத்து இவ் ஊரைப் பொடி செய்து போயினாற்குச்

சக்கரம் உண்டோ கையில் தசமுகன் தலைகள் ஆன

இக் கிரி பத்தின்  மௌளி இன மணி இடந்து கொண்ட

சுக்கிரீவற்கும் உண்டோ சூலமும் வாளும்

யுத்த காண்டம், அணிவகுப்புப் படலம்

பொருள்

இந்த இலங்கை நகரத்துக்குள் புகுந்து தீயை ஊட்டி இதைச் சாம்பலாக்கிவிட்டுப்போன அனுமனுக்குக் கையில் சக்கரம் இருந்ததா? பத்து முகங்களைக் கொண்ட ராவணனின் தலைகள் ஆன பத்து மலையில் உள்ள மகுடத்தின் தொகுதியான மணியைப் பறித்துக் கொண்டுபோன சுக்கிரீவனுக்கு சூலம், வேல், வாள், ஆகியவை உண்டோ?

 

இதற்குப்பின் சீதையை விடுதலை செய்வதே சாலச் சிறந்தது என்று அவன் கூறியவுடன் ராவணன் சினந்து அவனை எள்ளி நகை ஆடுகிறான்.

 

இதிருந்து பெறப்படுவது யாது?

தர்ம- அதர்மப் போராட்டத்தில் எண்ணிக்கை ஒரு பொருட்டே அல்ல. சிறிய தொகை ஆனாலும் தர்மமே வெல்லும்.

 

மஹாபாரத காலத்திலும், ராமாயண காலத்திலும் தர்மத்தின் தரப்பில் இருந்த படைகள், கூட்டணி குறைவானதே.

 

இனி வரப்போகும் கல்கி அவதார காலத்திலும் அதர்மம் செய்வோர் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும். ஆனால் அறமே வெல்லும்; பாவம் தோற்கும்.

வெள்ளம் என்பது 1 எண்ணைத் தொடர்ந்து 16 பூஜ்யங்கள் உள்ள மிகப்பெரிய எண்.

அக்ஷௌணி என்பது ஒரு லட்சம் படை வீரர்களுக்கு மேலானது, 65000 குதிரைகள் சுமார் 2800 தேர்கள் 2800 யானைகள் கொண்ட ஒரு படை.

 

TAGS–அறம் வெல்லும், பாவம் தோற்கும், வெள்ளம், அக்ஷௌகிணி, பெரும்பான்மை, சிறுபான்மை

 

 

–SUBHAM–

ZODIAC MAN & RARE PICTURES OF HUMAN BODY IN LONDON (Post No.4708)

Date: 6 FEBRUARY 2018

 

Time uploaded in London- 8-53 am

 

Compiled by London swaminathan

 

Post No. 4708

 

PICTURES ARE TAKEN BY LONDON SWAMINATHAN

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 

 

Fourth Part of Ayurveda Exhibition

 

There are some rare pictures of human body displayed in the Ayurveda Man exhibition at Wellcome Centre in London (next to Euston square Underground Station).

1.Zodiac Man

2.Human body with Six Chakras

3.Nepali painting of Ayurveda Man

4.Tibetan Painting of Human anatomy

5.Sex Manual of 15th Century

 

1.What is Zodiac Man?

 

in 1396, the Persian author Mansur Ibn Muhammad composed a treatise on anatomy entitled Tashrih I Mansuri—a text on the five systems of the body: bones, nerves, muscles, arteries and veins. The treatise summarised many of the observations of the Greek physician Galen, that was popular in Persia (Iran) and spread to South Asia. It was not the first treatise that was composed in the Islamic world, but it was the first one to come with illustrations and drawings of human body.

My comments: Hindus were far advanced in this filed several centuries before the Islamic world.

 

This is a diagram from 19th century in Tashriq in Mansuri style with Persian annotations. The body parts are marked with zodiac signs in the water colour painting.

 

My comments: Probably the painter means that different body parts controlled by different signs. Hindu astrologers believe that the body parts are controlled by planets e.g. Sun=eye, Venus=genital organs.

 

2.Human body with Six Chakras

 

Hindu Yogis believe that there are six points called chakras (literally wheels) along the spine. At the bottom of the spine is the sleeping/ dormant energy, usually shown in the shape of a coiled snake. Those who can raise this Kundalini energy and take it through the six chakras can attain salvation. It will result in spiritual awakening and opening of the Third Eye. This will give rise to many miraculous powers. The cross-legged meditating figure is from 19th century.

 

My comments: This Indian knowledge of coiled (dormant) energy is unknown to science or any other culture. A day will come when someone will prove it scientifically. Even then it will remain inaccessible for common people. Once such miraculous powers are in the hands of common people it may result in abusing such powers. We read in Hindu Puranas that the demons got boons to do impossible tasks and created utter chaos.

 

3.Nepali Painting of Ayurvedic Man

 

This is the painting that gave the title to the current exhibition running until 8th April. This is a pen and water colour painting from Nepal showing all the body organs and vessels of the male body. The painting is from 18th century; but is surrounded by texts in Sanskrit, which are taken from the 16th century work Bhavaprakasa. It focuses on anatomy and embryology. The mistakes in Sanskrit show that the calligrapher was not familiar with Sanskrit. It is drawn according to Ayurveda- the ancient Indian medical system. Ayur Veda means Knowledge of Long Life.

 

4.Tibetan Paintings

There are water colour paintings on linen. 80 paintings were commissioned by the regent of the Fifth Dalai Lama and they were completed in 1703. He go them for his book Blue Beryl which was a commentary on the four Tantras- the basis of Tibetan medicine. Blood vessesls are shown in the pictures.

 

  1. Ananga Ranaga – Sex Manual

This was a fifteenth century book written in Sanskrit and Newari of Nepal, because of the Nepalese interest in sex books. Ten pages contain 37 pictures each. This is compared with the Kama Sutra of Vatsyayana which is 2000 year old- the first sex book in the world.

 

 

 

 

–SUBHAM–

 

 

இந்து மத உரையாடல்கள்- சம்வாதங்களின் சுருக்கம் (POST.4707)

Krishna in Rangoli, picture posted by A K R Srinivasan

Date: 6 FEBRUARY 2018

 

Time uploaded in London- 7-53 am

 

WRITTEN  by S NAGARAJAN

 

Post No. 4707

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

ஆன்மீக மாத இதழான ஞான ஆலயம் பிப்ரவரி 2018 இதழில் வெளியான எந்தக் கேள்விக்கும் இதோ விடை என்ற கட்டுரையில் சம்வாதங்களைப் பற்றிப் படித்தோம். சில சம்வாதங்களைப் பற்றிய கட்டுரை இது.

 

 

சில சம்வாதங்களின் சுருக்கம்

ச.நாகராஜன்

Garuda Vahana

1

சம்வாதம் என்றால் என்ன என்பதை அறிய மாதிரிக்காக சில சம்வாதங்களின் சுருக்கம் கீழே தரப்படுகிறது. உரிய நூல்களில் மூல ஸ்லோகங்களைப் படித்தால் அபூர்வ உண்மைகள் தெரிய வரும். படிக்கும் போது நிதானத்துடனும் பொறுமையுடனும் சற்று ஆழ்ந்த விசாரத்தின் அடிப்படையில் படித்தால் நிறைய பலன் கிடைக்கும்.

 

 

பாகவதத்தில் வரும் ஒரு சம்வாதத்தின் சுருக்கம்:

நைமிசாரண்யத்தில் முனிவர்களுக்கிடையே நடந்த அற்புதமான உரையாடல் இது.

 

 

1) ஒவ்வொருவருக்கும் மிகச் சிறந்த, அதற்கு மேம்பட்ட ஒன்றில்லாத நன்மை எது?

 

மிகச் சிறந்த மேம்பட்ட நன்மை ஒவ்வொருவருக்கும் இது தான்:

எப்போதும் இறைவனின் மீது தூய அன்பைக் கொண்டிருப்பது தான்.

 

 

எப்போதும் தொடர்ந்து இறைவனின் புகழைக் கேட்பது (பிரவசனம், கதா உபந்யாசம் , அறவோர் உரை கேட்பது), இறைவனைத் தொடர்ந்து ஞாபகத்தில் இருத்தி வைத்துக் கொள்வது. அவனைத் தொழுவது ஆகியவையே இந்த தூய அன்பிற்கான வழிகள்!

 

 

2) சாஸ்திரங்களின் சாரம் என்ன?

தனது ஒவ்வொரு செயலாலும் கிருஷ்ண பகவானை மகிழச் செய்வது என்பது தான் அனைத்து சாஸ்திரங்களின் சாரம்.

 

 

3) ஏன் பகவான், தானே ஸ்ரீ கிருஷ்ணராக பூவுலகில் அவதரித்தார்?

 

உயிர் வாழ்கின்ற அனைவருக்கும் தன் உண்மையான ஸ்வரூபத்தைக் காட்டியும். லீலைகளை நிகழ்த்தியும் அவர்களைக் கவர்ந்து தன் பக்கம் இழுத்து அவர்கள் அனைவரையும் தனது சொந்த இருப்பிடமான கோலோகத்திற்கு அழைத்துச் செல்வதற்குத் தான் அவரே நேரில் வந்தார்.

 

 

4) கிருஷ்ண லீலைகள் யாவை?

தேவகியின் மகனாகப் பிறந்தார். நந்தனின் வீட்டில் வளர்ந்தார். பூதனா, கம்ஸன் உள்ளிட்ட பல தீயோரை அழித்தார். நல்லவர்களான பாண்டவருக்கு சகாயமாக அவர்கள் பக்கம் உறுதுணையாக இருந்தார்.மஹாபாரதப் போரில் அறத்தை நிலைநிறுத்தி துஷ்டர்களை அழித்து அவர்களுக்கு உதவினார். இவையும் இன்னும் பலவும் கிருஷ்ணனின் லீலைகள்!

Krishna Bhajan (post by Cuddalore Gopi Bhagavathar)

 

5) இறைவனின்ப் பத்து அவதாரங்களின் நோக்கம் என்ன?

  1. வேதங்களைக் காக்க மச்சாவதாரம்
  2. மந்தார மலையை நிலை நிறுத்த கூர்மாவதாரம்
  3. உலகைத் தூக்கி நிறுத்த வராஹ அவதாரம்
  4. ஹிரண்யகசிபுவை வதம் செய்ய நரசிங்க அவதாரம்
  5. பலி மஹராஜனுக்கு அருள் புரிய வாமன அவதாரம்
  6. தீய மன்னர்களை அழிக்க பரசுராம அவதாரம்
  7. இராவணனை வதம் செய்ய ராமாவதாரம்
  8. அசுரர்களை அழிக்க பலராம அவதாரம்
  9. மிருக பலியைத் தடுக்க புத்தாவதாரம்
  10. கொள்ளையடிப்போரை ஒழிக்க கல்கி அவதாரம்

இவையே அவதார நோக்கங்கள்.

 

 

 

6) ஸ்ரீ கிருஷ்ணர் இந்த உலகை விட்டுச் சென்ற பிறகு தர்மம் யாரைத் தஞ்சம் புகுந்தது?

தர்மம் அனைத்தும் ஸ்ரீமத் பாகவத புராணத்தில் புகுந்து தஞ்சம் அடைந்தது.

 

 

குறிப்பு: – ரிஷிகளின் பெரும்பாலான உரையாடல்கள் நைமிசாரண்யத்தில் ஏன் இடம் பெற்றன. நைமிசாரண்யத்தையே தவம் புரியத் தக்க இடமாக பல ரிஷிகள் தேர்ந்தெடுத்தது ஏன் என்பதை அறிய இந்தக் கட்டுரையாசிரியர் டிசம்பர் 2012 ஞான ஆலயம் இதழில் எழுதியுள்ள ‘கேள்விகளுக்கு விடை தரும் புராணங்கள்’ என்ற கட்டுரையைப் படிக்கவும். (ஞான ஆலயம் இதழ்களை பைண்ட் செய்து வைத்துக் கொண்டால் உங்களுக்கும் உங்கள் சந்ததியினருக்கும் பயனுள்ளதாக அமையும்.)

 

2

யோக வாசிஷ்டம் ராமருக்கும் வசிஷ்டருக்கும் இடையே நடந்த அற்புதமான உரையாடல். உலகின் வெகு சில நூல்கள் மட்டுமே இதற்கு இணையாக இருக்க முடியும்.

32000 ஸ்லோகங்கள்! உலகின் தற்கால அறிஞர்கள் 158 பேர்கள் கூறிய அனைத்து அபூர்வ விஷயங்களையும் வெகு காலத்திற்கு முன்பேயே இந்த நூலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நூலில் வரும் அற்புத விஷயங்களில் ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இதோ சில ஸ்லோகங்களின் கருத்துக்கள்.

 

நீண்ட காலம் வியாதியின்றி ஜீவிப்பதற்கான வழியைச் சுட்டிக் காட்டும் ஸ்லோகங்கள் இவை:-

 

உடலைப் பாதிக்கும் வியாதிகள், மற்றவர்கள் இடும் சாபங்கள், மற்றவர்களின் தீய திருஷ்டிகள் ஆகிய அனைத்தும் தாமரை மலர் எப்படி  ஒரு பாறாங்கல்லை மோதி உடைக்க முடியாதோ அது போல மனத்தைப் பக்குவப்படுத்திய ஒருவனுக்கு ஒரு தீங்கும் விளைவிக்க முடியாது.

 

 

நான் விரும்பும் அல்லது விரும்பாத வஸ்துக்களினால் ஏற்படும் கவலைகளைப் பற்றிய விசாரத்தில் ஈடுபட்டு அவற்றை விடுத்து என்னை ஆத்மாவிலேயே நிலை நிறுத்துகிறேன். அதனால் நான நீண்ட காலம் வியாதி இல்லாமல் ஜீவிக்கிறேன்.

 

“இது இன்று எனக்குக் கிடைத்திருக்கிறது. இந்த அழகிய வஸ்து வேண்டும்” என்பன போன்ற சிந்தனைகள் எனக்கு இல்லை. அதனால் தான் நான் நீண்ட காலம் வியாதி இல்லாமல் ஜீவிக்கிறேன்.

 

 

அலை பாயாமல் என் மனம் ஒருமுனைப்பட்டு இருக்கிறது. துன்பம் இல்லாமல் ஆன்மாவில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. ஆகவே நான் வியாதியின்றி இருக்கிறேன்.

Rama Pattabishekam, Kalakshetra, Chennai

 

இன்று எனக்கு என்ன நடந்தது? நாளை என்ன நடக்கப் போகிறது? இப்படிப்பட்ட கவலைகள் எனக்கு இல்லை. ஆகவே நான் வியாதியின்றி இருக்கிறேன்.

 

முதுமை பற்றியும் சாவு பற்றியும் எனக்கு பயமில்லை. ஒரு பெரிய சாம்ராஜ்யமே கிடைத்தாலும் எனக்கு சந்தோஷம் இல்லை. ஆகவே நான் வியாதியின்றி இருக்கிறேன்.

 

இவர் எனக்கு உறவினர். அவன் எனக்கு அந்நியன். இது என்னுடையது. அது அவனுடையது என்று இப்படி நான் உணர்வதில்லை.ஆகவே நான் வியாதியின்றி இருக்கிறேன்.

 

 

எடுப்பது, வைப்பது, எழுந்திருப்பது, மூச்சு விடுவது, தூங்குவது  ஆகியவற்றைச் செய்யும் இந்த உடல் என்று என்னை நான் உணர்வதில்லை. ஆகவே நான் வியாதியின்றி இருக்கிறேன்.

 

அலைபாயாத மனோ சக்தியுடன் அழகிய அன்பான களங்கமற்ற பார்வையுடன் எல்லாவற்றையும் நேர்பட நான் காண்கிறேன்.ஆகவே நான் வியாதியின்றி இருக்கிறேன்.

 

மிகவும் சக்தி வாய்ந்தவனாக நான் இருந்தாலும் கூட வலிமையை எங்கும் பிரயோகிப்பதில்லை. எந்த மனச்சோர்வும் எனக்கு இல்லை. ஏழையாக இருந்தாலும் எனக்கு ஆசை இல்லை.

 

 

அழிகின்ற, உடைந்த, தளர்ந்திருக்கின்ற, சக்தியற்ற, குழம்பியிருக்கின்ற, நசுக்கப்பட்டிருக்கின்ற எதையும் நான் புதியதாகவே பார்க்கிறேன். ஆகவே நான் வியாதியின்றி இருக்கிறேன்.

 

எனக்கு ஒத்துப்போகின்றவையுடன் எனக்கு சந்தோஷம்.  ஒரு மனிதன் கஷ்டப்படும்போது நான் வருத்தமுறுகிறேன். அனைவருக்கும் நான் நண்பன். ஆகவே நான் வியாதியின்றி இருக்கிறேன்.

 

 

துரதிர்ஷ்டம் பீடித்திருக்கும் காலத்தில் நான் தைரியத்துடனும் அயராமலும் இருக்கிறேன். அதிர்ஷ்டம் கூடியிருக்கும் வளமான காலத்திலோ எல்லோருக்கும் நான் நண்பன். நான் இருப்பதும் இல்லை; இல்லாமல் போவதும் இல்லை. ஆகவே நான் வியாதியின்றி இருக்கிறேன்.

 

மேலே கண்ட ஸ்லோகங்களுக்குப் பொருந்துகின்ற வகையில் யாராவது வாழ முடியுமா?

முடியும்.

 

நமது காலத்திலேயே இதற்கு இலக்கணமாகவும் இதற்கு மேலும் ஜீவன்முக்தராக வாழ்ந்ததற்கு இலக்கணமாகவும் திகழ்ந்தவர் ரமண மஹரிஷி!

 

Ramana Maharishi

 

3

ச்ரேயஸ் எனப்படும் உன்னதமான  மேலாம் நிலையை அடைவது எப்படி என்று நாரத மஹரிஷி காலவரைக் கேட்க அவர் ச்ரேயஸுக்கான காரணங்களை விவரிக்கிறார்.

மஹாபாரதத்தில் சாந்தி பர்வத்தில் வரும் இந்த சம்வாதத்தின்

சுருக்கம்:

 

 

பாவ கர்மங்களை விலக்குவது, எப்போதும் புண்ய கர்மங்களைச் செய்து கொண்டிருப்பது, நல்லோர்களுடைய சகவாசம் ஆகியவை ச்ரேயஸ் அடைவதற்கான காரணம்.

 

எல்லா பிராணிகளிடத்திலும் மிருதுவாக இருத்தல், உலக விவகாரங்களில் நேர்மையாக இருத்தல், இனிமையான சொல் ஆகியவை சந்தேகத்திற்கு இடமின்றி ச்ரேயஸை அடைய வைக்கும்.

 

தேவதைகளுக்கும், பித்ருக்களுக்கும், வந்திருக்கும் விருந்தினர்களுக்கும் கொடுக்க வேண்டியதைக் கொடுப்பதும், வேலைக்காரர்களைக் கை விடாமல் இருப்பதும் ச்ரேயஸுக்கான காரணங்கள்.

 

 

 

சத்தியத்தைச் சொல்வது ச்ரேயஸ்.

 

அகங்காரத்தைத்  தள்ளுவதும், அஜாக்கிரதையை விலக்குவதும்,  சந்தோஷமாக இருப்பதும், ஒரே விதமாக நடப்பதும் ச்ரேயஸுக்கான காரணங்கள்.

 

 

இரவில் சஞ்சரிப்பது கூடாது.பகலில் தூங்கக் கூடாது.

 

சோம்பலையும், புறங் கூறுவதையும்,மதத்தையும் விடுதல் வேண்டும். உணவு உட்கொள்வதில் மிதமாக இருத்தல் வேண்டும்.

 

பிறரை தூஷித்து நமக்கு மேன்மையைத் தேடிக் கொள்ளக் கூடாது. தனது சொந்த குணங்களினாலேயே விசேஷமான மேன்மையைத் தேட வேண்டும்.

 

புத்திமானானாவன் தெரிந்தவன் தான் என்றாலும் ஒருவனுக்கு அவன் கேளாமல் எதையும் சொல்லக் கூடாது. நியாய விரோதமாய்க் கேட்கிறவனுக்கும் சொல்லக் கூடாது.

 

 

கர்மத்தை தினமும் செய்பவர்கள்,நல்லவர்கள்,பிறருக்குக் கொடுப்பவர்கள், தங்களது தர்மங்களில் பற்றுள்ளவர்கள் ஆகியோரது சேர்க்கையை விரும்ப வேண்டும்.

 

எந்த ராஜ்யத்தில் துஷ்டர்களுக்கு தண்டனையும் நல்லவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் தரப்படுகிறதோ அங்கு வசிக்க வேண்டும்.

இவை அனைத்தும் ச்ரேயஸ் அடைவதற்கான காரணங்களாகும்.

 

 

தேவரிஷியான நாரதருக்கும் காலவருக்கும் இடையே நடந்த இந்த அர்த்தமுள்ள உரையாடல் எந்தக் காலத்திற்கும் எல்லோருக்கும் பொருத்தமானது!

***

Draupadi, Picture by Lalgudi Veda

 

4

சத்யபாமாவும் திரௌபதியும் நடத்திய சம்வாதம் பற்றி இந்தக் கட்டுரையாசிரியர் 2007 ஜூலை ஞான ஆலயம் இதழில் ‘பாஞ்சாலி சொன்ன தாம்பத்ய ரகசியம்’ என்ற கட்டுரையில் விளக்கியுள்ளார். ஆகவே அதைப் படித்தால் இந்த சம்வாதம் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

 

ஏராளமான சம்வாதங்களைத் தனியே எடுத்துப் படித்தால் யாருமே சுலபத்தில் அறிய முடியாத பல இரகசிய விஷயங்களை நாம் அறியலாம்!

*****

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 45 (Post No.4706)

DATE- 6 FEBRUARY 2018

Time uploaded in London- 6-51 am

 

Compiled  by S NAGARAJAN

 

Post No. 4706

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

  பாடல்கள் 273 முதல் 284

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

அருட்கவிஞர் அ.காசி பாடல்கள்

மகாகவி பாரதி அந்தாதி

புதுச்சேரி பயணம், புதுச்சேரி வாழ்வு மற்றும் புதுவையில் நண்பர்கள் தொடர்பு ஆகிய அத்தியாயங்களில் உள்ள பன்னிரெண்டு பாடல்கள்

 

புதுச்சேரி பயணம்

 

பணித்த பாரதி மொழிகேட்டு – தலைவர்

      பலரும் அவரைப் போற்றினார்காண்!

துணித லுடனே சூரத்தில் – நடந்த

      கூட்டந் தன்னில்  முழக்கமிட்டார்!

துணிந்து தீவிரக் கொள்கைகளை – திலகர்

      தந்த வழியில் எடுத்துரைத்தார்!

கணித்து லாலா லஜபதிராய் – நாடு

      கடத்தப் பட்டதைக் கண்டித்தார்!

 

கண்டித் துஆங்கில ஆட்சிதனைப் – பாக்களால்

      கடிந்து பாடி எதிர்த்திட்டார்!

தண்டனை பெற்று சிறைபுகுந்த – வ.உ.

       சிதம்பர னாரைப் பேட்டி கண்டார்!

அண்டியோர் கொடுமை எடுத்துரைத்து – “இந்தியா

       ஏட்டில் பிரசுரம் செய்தாரே!

நண்பர் திருமா லாச்சாரி – யாரை

       நலித்து சிறையில் அடைத்தனர் காண்.

 

அடைப்பட் டநண்பர் வருந்தாது – அதற்கு

       காரணங் கேட்டு சிறைசென்றார்!

தடையும் “இந்தியா ஏற்றதுகாண் – பாரதி

      தனக்கும் துன்பம் வருமென்று

இடையூ ரகற்ற புதுச்சேரி – மாறு

      வேட மிட்டுச் சென்றாரே!

உடைமை பெற்று தங்குதற்கு – நண்பர்

      குப்பு சாமி உதவினாரே!

 

புதுச்சேரி வாழ்வு

 

உதவி செய்த அன்பர்க்கு – பாரதி

      என்றும் உதவிட மறக்கவில்லை!

இதமாய் கவிதைத் தொகுப்பினுள்ளே – பின்னர்

      உவந்து போற்றிப் பாடினார்காண்!

முதலில் சிறையில் இருந்தவராம் – திருமா

      லாச்சா ரியாரை ஆங்கிலேயர்

விதந்து விடுதலை செய்தனர்காண் – அவரும்

      உடனே சென்றார் புதுச்சேரி

 

புதுச்சே ரியிலே நண்பர்கள் – கூடி

      பணியைத் தொடர எண்ணினரே!

கதுமென அச்சுப் பொறிகளையே – சென்னையி

      லிருந்து கொணரச் செய்தனர்காண்!

புதுமைப் பொலிவுடன் “இந்தியாவை – புதுவைப்

      பதியினில் வெளியீ டுசெய்தனரே!

மதுரமா யினிக்கும் “இந்தியாவின் – அமுதை

      மக்கள் மீண்டும் பருகினரே!

 

பருகினர் “இந்தியா அமுதத்தை – பாரதி

      பணியை இனிதே தொடர்ந்தார்காண்!

அருந்தவப் பயனாய் பாரதிக்கு – இரண்டாம்

      மகளாம் சகுந்தலா பிறந்தார்காண்!

திருவுடன் புதுவை அரவிந்தர் – “கர்ம

      யோகின் என்ற ஏட்டினையே

அருந்திறலோடு ஆங்கிலத்தில் – நடத்தி

      அரும்பணி புரிந்து பேர் பெற்றார்!

 

புதுவையில் நண்பர்கள்தொடர்பு

 

பேர்பெறு இதழாம் “கர்மயோகின் – அதனை

     பாரதி தமிழில் மொழிபெயர்த்து

சீர்மிகு நாமம் “கர்மயோகி – பெயரால்

     செந்தமிழ்த் தொண்டு தாம்புரிந்தார்!

தேர்ந்த நல்ல தேசபக்தர் – வ.வே.

     சுப்பிர மணியர் அங்குவந்தார்!

அபூர்வ மிக்க வ.வே.சு. – கடலில்

     குதித்து நீந்திப் புதுவைவந்தார்!

 

புதுவை சீனிவா சாச்சாரி – அவரும்

     பாரதிக் கினிய நண்பராவார்!

புதிய பாரத மாதாவின் – கொடியைக்

    கொணர்ந்து பாடுக பாடலென்றார்!

கதுமெனத் “தாயின் மணிக்கொடிப் – பாரீர்

    கவிதை பாடினார் பாரதியார்!

விதப்புடன் கொடியைப் பறக்கவிட்டு – யாமும்

     வாழ்த்துவம் பாரத அன்னையையே!

 

அன்னை சொல்லைக் கேளாது – சகுந்தலை

      அடமம் செய்த நிலைகண்டு

அன்புடன் மகளை அருகழைத்து – பாரதி

     பாப்பா பாட்டு இசைத்தார்காண்!

துன்பம் நெருங்கி வந்தபோதும் – நீயும்

     தளர வேண்டாம் என்று கூறி

அன்றே பாரதி இசைத்த பாடல் – இன்றும்

     என்றும் சிறப்பால் ஓங்குதுகாண்!

 

ஓங்கிய செட்டியார் மாடிவீட்டில் – பாரதி

     புதுவை தன்னில் குடியிருந்தார்!

தீங்கிழை புயலால் புதுச்சேரி – சேதம்

    திக்கெலாம் நிகழ்ந்தது கண்டாரே!

தாங்கொணாத் துயரால் “புயற் காற்று – கவிதை

     தங்கம் மாளிடம் இசைத்தார்காண்!

ஏங்கித் தவித்த மக்களுக்கு – பாரதி

     உதவி செய்தார் பரிவுடனே!

 

பரிவுடன் பாரதி யோகசித்தி – தோத்திரப்

    பாடலைப் பாடினார் புதுவையிலே!

பெரிதும் இன்னல் உற்றபோது – பாரதி

    யதுகிரி பெண்ணிடம் இசைத்தாரே!

“வரங்கேட் டலெனும் தலைப்பீந்து – சக்தியை

    வேண்டிப் பாரதி பாடினாரே!

அரட்டிப் பெய்த மழைபற்றி – பாரதி

    அடுத்துப் பாடினார் பரவலாக!

 

பரவிய காய்ச்சலால் துன்புற்று – சகுந்தலை

    புலம்பித் தவித்தாள் படுக்கையில்

விரவிய பிரார்த்தனை மேற்கொண்டு – பாரதி

    பாடினார் பாடல் “பக்தியினாலே

வருகை தந்த மருத்துவரும் – பாரதி

    பாடலைக் கேட்டு இலவசமாய்

மருந்து தந்து குணப்படுத்த – அதனால்

    மகளின் உடல்நலம் ஓங்கியதே!

 

                                     (மகாகவி பாரதி அந்தாதி தொடரும்)

 

கவிஞர் அ.காசி : பாரதி பணிச்செல்வர் கவிமாமணி அருட்கவிஞர் அருப்புக்கோட்டை அ.காசி எம்.ஏ., எம்.எட் பாரதி ஆர்வலர்.மரபுக் கவிதை இயற்றுவதில் வல்லவர். 50க்கும் மேற்பட்ட நூல்களுக்கு ஆசிரியர். கவியரங்கங்களில் பங்கேற்றவர். இவருக்கு ‘கவிச் சுடரொளி என்ற பட்டத்தை இதயரோஜா பதிப்பகம் அளித்தது. ‘கவிமாமணி பட்டத்தை கவிதை சக்தி இயக்கம் நல்கி இவரை கௌரவித்தது. ஏராளமான அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர்.பாரதியாரின் வரலாறைச் சுவைபட மரபு மீறாமல் அந்தாதியாக அளித்துள்ள நூல் என்பதால் இதுத் தனிச் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது.

தொகுப்பாளர் குறிப்பு:
மகாகவி பாரதி அந்தாதி என்ற மரபு வழிக் கவிதை நூலை இதயரோஜா பதிப்பகம், 14, கங்காராம் தோட்டம், கோடம்பாக்கம் சென்னை – 600 024 வெளியிட்டுள்ளது. 27 ஆண்டுகளாகப் பல நல்ல நூல்களை இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த நூல் வெளியான ஆண்டு: மே, 2004. மொத்த பக்கங்கள் :80. நூலில் அந்தாதி குறிக்கும் நூறு சுவையான செய்திகளை ஆசிரியர் விளக்கவுரையாகவும் தந்துள்ளார். விலை ரூ 30/ அன்பர்கள் பதிப்பகத்திற்கு எழுதி நூலின் பிரதிகள் இருப்பதை உறுதி செய்த பின்னர் இதை வாங்கலாம்.

அந்தாதி என்பது ஒரு செய்யுளின் இறுதிச் சீரில் வரும் வார்த்தை அடுத்த செய்யுளின் முதல் சீராக அமைந்து வருவதாகும்.

நன்றி: அருட்கவிஞர் அ.காசி நன்றி: இதயரோஜா பதிப்பகம், சென்னை.

****