தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி22-12-18 (Post No.5814)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 22 December 2018
GMT Time uploaded in London – 17-11
Post No. 5814


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

கட்டத்திலுள்ள குறைந்தது 18 சொற்களைக் கண்டுபிடியுங்கள்; விடை கீழே உளது

TAMIL CROSS WORD 22-12-18

குறுக்கே

1. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று: விளம்பி நாகனார் செய்தது

4a. கட்டுவதற்கு உதவும்

6.தப்படி- தவறான செய்கை; 5 அல்லது 3 அடி கொண்ட கால் வைப்பு

7.கதிர்காமத்துடன் இணைந்தது

8.- காயிலும் உண்டு; பூவிலுமுண்டு

9.-பருப்பு வகையறா

10.-செங்குத்துக்கோடு; அதைப் பார்க்க உதவும் கருவி

11.- பிராணிகளையும் குழந்தைகளையும் இப்படி வளர்ப்பர்

12.- சரி, சரி

கீழே

1.- சமண முனிவர்கள் செய்த நூல்; பதினெண்கீழ்க்கனக்கு நூல்களில் ஒன்று

2.- குழந்தைச் செல்வம்

3.- ரகளை

4- கரம்

4a. (8)- கரத்தில் கட்டும் மணி பார்க்கும் கருவி

5. – வெள்ளை அல்லது—-;இரண்டே நிறம்

5a.- வர்ணம்

9.- வலிமை

11.-செயல்படு

1

2

3
4
5







4a




6
7










8









9



5a





10








11






12

நா1
ன்ம2ணிக்க3டிகை4
க5




க4aயிறு
டிப்த6
க7ண்டி
ப்
யா
பே

ம்
கா8
ம்
பு
ர்
று
ப9


நி5a


ய்

ல10 ம்
ம்



செ11
ல்ம்


12ஆம்

குறுக்கே

1.நான்மணிக்கடிகை- பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று: விளம்பிநாகனார் செய்தது

4a.கயிறு- ட்டுவதற்கு உதவும்

6.தப்படி- தவறான செய்கை; 5 அல்லது 3 அடி கொண்ட கால் வைப்பு

7.கண்டி- கதிர்காமத்துடன் இணைந்தது

8.காம்பு- காயிலும் உண்டு; பூவிலுமுண்டு

9.பயறு-பருப்பு வகையறா

10.லம்பம்-செங்குத்துக்கோடு; அதைப் பார்க்க உதவும் கருவி

11.செல்லம்- பிராணிகளையும் குழந்தைகளையும் இப்படி வளர்ப்பர்

12.ஆம்- சரி, சரி

1.நான்மணிக்கடிகை,4a.கயிறு,6.தப்படி,7.கண்டி,8.காம்பு,9.பயறு

10.லம்பம்,11.செல்லம்,12.ஆம்

கீழே

1.நாலடியார்- சமண முனிவர்கள் செய்த நூல்பதினெண்கீழ்க்கனக்கு நூல்களில் ஒன்று

2.மகப்பே று- குழந்தைச் செல்வம்

3.கலகம்- ரகளை

4.கை- கரம்

4a.கடி (8)காரம்- கரத்தில் கட்டும் மணிபார்க்கும் கருவி

5.கறுப்பு – வெள்ளை அல்லது—-;இரண்டே நிறம்

5a.நிறம்- வர்ணம்

9.பலம்- வலிமை

11.செய்-செயல்படு

1.நாலடியார்,2.மகப்பே று,3.கலகம்,4.கை

4a.கடி (8)காரம்,5.கறுப்பு ,5a.நிறம்,9.பலம்,11.செய்

சிறையில் மலர்ந்த நாடகங்கள்(Post No.5813)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 22 December 2018
GMT Time uploaded in London – 9-44 am
Post No. 5813


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

வாரத்தில் மூன்று நாட்களாவது லண்டனிலுள்ள பிரிட்டிஷ் லைப்ரரிக்கோ, லண்டன் யுனிவர்ஸிட்டி லைப்ரரிக்கோ சென்று புத்தக வேட்டை ஆடும்போது பல புதிய செய்திகள் கிடைக்கின்றன. சிறைச் சாலையில் இருக்கும்போது தினகரன்  மொழிபெயர்த்த வங்காளி நாடகம் மூலம் தினகரன் பற்றியும், அதை எழுதிய வங்காளி மொழி ஆசிரியர் பாபு துவிஜேந்திர லால் ராய் பற்றியும், அதை வெளியிட்ட உத்தமபாளையம் பாரதி புத்தக நிலையம் பற்றியும் அறிந்தேன். இதோ சில சுவையான விஷயங்கள்.

பாபு துவிஜேந்திர லால் ராய் என்பவர் வங்காளி மொழியில் பல  நாடககங்களை எழுதிப் புகழ்பெற்றவர். அவர் ஆங்கிலத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றவர். மேல் படிப்புக்காக இங்கிலாந்து சென்றபோது ‘இந்திய கீதங்கள்’ Lyrics of Ind (லிரிக்ஸ் ஆஃப் இன்ட்) என்ற நூலை எழுதி வெளியிட்டார். அதைக் கண்டோர் அவரை மெச்சினர். Light of Asia (லைட் ஆஃப்  ஏசியா) நூலின் புகழ்மிகு ஆசிரியர் ஸர் எட்வின் ஆர்னால்ட்வரை அனைவரும் அவரைப் புகழ்ந்தனர்.

அவருடைய தாய் மொழியான வங்காளியிலும் எழுத வேண்டும் என்று மக்கள் வேண்டிய பின்னர் 15 நூல்களை எழுதி வங்கத் தாயின் பாத கமலங்களில் சமர்ப்பித்தார். 1913-ம் ஆண்டில் உயிர்நீத்த அவரது கவிதைகளும் நாடகங்களும் இன்று வரை புகழ்மணம் பரப்பிக்கொண்டு இருக்கிறது. 500 பாடல்களுக்கு மேல் எழுதி இசைத் துறையில் தமக்குள்ள புலமையையும் நிலை நாட்டியவர்.

அவர் விவசாயத்தில் பட்டம் பெற்ற பின்னர் அரசாங்கத்தில் பல துறைகளில் அதிகாரியாகப் பணியாற்றினார். பெண்கள் விடுதலை, தேச விடுதலையில், குடியானவர் உரிமையில் ஆர்வம் காட்டினார்.

அவருடைய

மனைவி பெயர் பெயர் ஸுரபாலா தேவி

தந்தை பெயர் – கார்த்திகேய சந்திரவர்மா

பிறந்த தேதி — 19 ஜூலை 1863

இறந்த தேதி – 17 மே 1913

பிறந்த ஊர் – கிருஷ்ணா நகர்- மேற்கு வங்கம்

அவருடைய நாடகங்கள் ஒவ்வொன்றும் உயர்ந்த லட்சியத்தைப் போதித்தன. மனதில் தூய எண்ணங்களை உருவாக்கின. இயற்கையை வர்ணிப்பதில் அவர் வல்லவர். அவருடைய ‘பாஷாணி(அகல்யா) என்ற நாடகம் பிராமண தர்மங்கள் பற்றியது. ‘துர்காதாஸ்’ ஆண்மகனின் லக்ஷணங்கள் பற்றியது. ‘ராணா பிரதாப்’ க்ஷத்ரிய தர்மங்களைச் சிறப்பிக்கிறது .’சீதா’ நாடகம் பதி பக்தியையும், ‘மேவார் வீழ்ச்சி’,குடும்ப  அன்பையும் விளக்கும். இவை அனைத்தும் மனதை ஒரு அபூர்வமான உலகிற்கு இட்டுச் செல்லும்.

குறைவான  பெண் கதாபாத்திரங்களையே படைத்தபோதும், கிடைக்கும் போதெல்லாம், கதா பாத்திரங்கள் வாயிலாக பாரதப் பெண்களின் உயரிய லட்சியங்களைப் போற்றத் தவறியது இல்லை. 35 வயதிலேயே மனைவியை இழந்தார். எந்த நேயராவது நீங்கள் இரண்டாம் முறை ஏன் கல்யாணம் செய்து கொள்ளவில்லை? என்று கேட்டால் அவரது கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தோடும்; மனைவி மீது அவ்வளவு அன்பு; தனது தாயாருடன் மனைவி வசித்தபோது அவரிடம் கண்ட அற்புத குணங்கள், தியாகங்களை  நாடகக் கதைகள் வாயிலாக  வெளியிட்டு இருக்கிறார் என்று விமர்சகர்கள் கருதுகிறார்கள். இறுதிவரை மறுமணம் செய்யாது பிரம்மசர்யம் காத்தார்.

“இந்த மானிட மிருகங்களுடன் தெய்வீகப் பெண்களின் சம்பந்தம் எப்படி உண்டாயிற்று? நாற்றமெடுக்கும் சேற்றில் சந்திரப் பிரதிமை எப்படி தோன்றுகிறது? இந்த அடிமைகளிடம் விலைமதிக்க வொண்ணாத ரத்தினங்கள் எப்படி வந்தது?”—   என்றெலாம் வசனம் எழுதி பெண்களை உச்சாணிக் கொம்பில் ஏற்றி வைப்பார்.

‘மேவார் வீழ்ச்சி’ என்னும் நாடகத்தில் தேச பக்தி, பதி பக்தி, தியாகம் முதலியன் கொழுந்துவிட்டு எரிவதைக் காணலாம்.

ஷாஜஹான் நாடகத்தில் பெண்களின் நிர்வாகத்திறமையைக் காட்டியுள்ளார்.

தமிழில், தினகரன்  அவர்கள் மொழி பெயர்ப்பில் 1933ம் ஆண்டில் சில நாடகங்கள் வெளியாகின.

அவற்றை உத்தமபாளையம் பாரதிப் புத்தகாலயம் வெளியிட்டது.

துவிஜேந்தர்லால் ராயின் புதல்வர் திலீப் குமார் ராய் புதுச்சேரி அரவிந்த ஆஸ்ரமத்தில் தங்கி புகழ்பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘ராட்டூர் வீரன் துர்காதாஸ்’ முதலிய

நாடகங்களை தமிழில் மொழி பெயர்த்த தினகரன் சொல்லும் சுவையான செய்தி:-

“மனிதனுக்கு பால்யத்திலே விளையாட்டு, வாலிபத்தில் காதல், முதுமையிலே பகவதா பக்தி என்று பருவ ரஸனைகள் உண்டு. இது எல்லோருக்கும் எல்லாக் காலத்திலும் பொது விதி. ஆனால் ருஸிகரமான நூல்கள் தரும் இன்பத்தை எதற்கு ஈடு சொல்லலாம்?

‘சுக வெறியைப் பூரணமாக அனுபவிப்பதற்கு ஒரு கவள அன்னமும், ஒரு கலச மதுவும் (தேனும்), தலை சாய்க்க நிறிது நிழலும், ரஸமான காவியம் ஒன்றும், காலஹிதமான காந்தை ஒருத்தியும் இருந்தால் போதும் ; அப்போது வெறுமையான பாலைவனமும் ரமணீயமான உத்தியானம் ஆகிவிடுகிறது- என்று பாரசீக மஹா கவி உமர் கையம் தனது ரூபாயிற் கூறுகிறான்.

பாலைவனத்தைப் போல் வெறுமையும் வறுமையும்  நிறைந்த சிறைக் கம்பிகளுக்கிடையே சிந்தை புழுங்க, உடல் ஒடுங்க, தனிமைத் துயரத்தாலும் உற்றாரைப் பிரிந்த ஹிருதய கிரந்தியாலும் சிறையில் , நிறம்பிய துக்கச் சுமையைச் சுமந்து கொண்டு இராஜ மகேந்திரம் மத்திய சிறையில் ஓர் அறையில் கிடந்தபோது ஒரு நாள் இரவு

என் பக்கத்து அறையில் இருந்த நண்பரின் நெடு மூச்சும், நெட்டுயிர்ப்பும் எனக்,, நன்றாய்க் கேட்டது. ஒரே கப்பலில் துக்கிகளான இரண்டு யாத்ரீகர்கள் சம்பாஷித்துக் கொள்ளுவது போல, நண்பரும் நானும் உரையாடிக்  கொண்டிருந்தோம் .நண்பர் ஹிந்தியில் நல்ல பண்டிதர்; நல்ல பிரசாரகர். கதையாட்டிலேனும் கேட்டுக் களித்தும் கண்ணயரலாம் என்று அவரிடம் ஒரு கதை கேட்டேன். நண்பரும் கூறினார். ஹா! எவ்வவு ருசியான கதை! எவ்வளவு புளஹிதமான ரஸனை! எத்தனை வெற்றி தரும் மயிர் சிலிர்க்கும் செயல்கள்! சிறைத் துயர் சென்ற இடம் காணேன்.

துர்காதாஸின் கதையைக் காதால் கேட்ட மாத்திரத்தில் அதை பாஷாந்தரத்திலேனும் (Translation) படிக்க வேண்டும் என்று ஹிந்தி பாஷையைப் படிக்க ஆரம்பித்தேன். ஏற்கனவே எனக்கு ஹிந்தி பாஷையில் பேசும் ஆற்றல் இருந்ததால் இரண்டொரு வாரத்தில் அட்சர சிட்சையும், அவற்றைக் கூட்டி வாசிக்கும் ஆற்றலும் எனக்கு ஏற்பட்டது. பின்னர் கோயமுத்தூர் சிறையில் அதை இன்னும் சிறிது வளர்க்க சந்தர்ப்பமும் ஸர்வ அவகாசமும் கிட்டியது. ஆனால் துர்காதசைப் படிக்கும் பாக்கியம் அல்லிப்புரம் சிறையிலேதான் பெற்றேன். படித்தேன் படித்தேன்; பன்முறை படித்தேன்; தெவிட்டவில்லை. எத்தனை முறை படித்தாலும் நூற்சுவை அதிகரித்ததேயன்றி குறைவு என்பது கிஞ்சிற்றும் கிடையாது. துவிஜேந்தர்லால் ராயின் நாடகப் பூங்காவிலே ‘மீவார் வீழ்ச்சீ’யைப் பார்த்தேன்; ராணா பிரதாபனை ரஸித்தேன்; நூர்ஜஹானை நுகர்ந்தேன்; ஷாஜஹானிற் சஞ்சரித்தேன்; ஸிம்ஹள விஜயத்தைச் சிந்திதேன்;எல்லாம் ஒன்றிற்கொன்று அதிகமான யாசனையையும் வானையயும் தந்தன.

தமிழ்  நாடக   பீடத்திலே இத்தகைய அபூர்வமான கதைகள் ஏன் அரங்கேற்றப்படலாகாது? வன்னியையும் அல்லியையும் நல்ல தங்காளையும் சதாரத்தையும் சாவித்திரியையும் அரிச்சந்திரனையும் கோவலனையும் சிறுத்தொண்டரையும் விட்டால் தமிழ் ஜாதிக்கு வேறு கெதி இல்லையா? காதல் பாகத்தை மற்றும்தானா  தமிழன் ரஸிக்கக் கற்ற்றிருக்கிறான்? வேறு ரஸனைகள் அவனுக்குத் தெரியாதா? துர்காதாஸின் தேசாவேசத்தையும், பிரபு பக்தியையும் , யுத்த கௌசல்யத்தையும் மனிதத்துவத்தையும் குறிக்கின்ற ஒரு நாடகத்தைக் காண்பி! மஹா மாயாவின் துணிச்சலையும் சாரணத் திறமையையும் பிரசாரத் திறமையயும் காட்டும் ஒரு கதையாவது சொல்லு! திலேர் கானுடைய ஸ்நேகத்துவத்தையும், வீரத்தையும்,சம தர்மத்தையும் உருவகப்படுத்துகிறதான சரித்திரம் ஒன்றைத்தானும் குறிப்பிடு! காதல் ரஸம் நமது நாடகங்களில் நிறைய  உண்டு; சோக ரசமும் இருக்கிறது; வீர ரஸம் இல்லை; மற்ற ரசங்களும் இல்லை; பூலோகம் போய்க்கொண்டிருக்கிற புரட்சி (மாறுதல்)ப் பிரக்ருதியில் இந்த தமிழ் நாடக அரங்கம் மாத்திரம் இன்னும் ஏனோ கர்நாடகத்திலேயே இருக்கிறது . ஜெகப்பிரியர் (ஷேக்ஸ்பியர்) செய்திருக்கிற நாடகங்களை ஒன்றுவிடாமற் பார்! கதேயயையும் ஷில்லரையும் நடி! பிளெச்சருடைய வீர விருந்தினனாய் இரு!மோலியரின் ஹாஸ்ட்ய ரசத்தைப் பாருங்கள். பெர்னாட்ஷாவின் பெருமையைப் படி! துவிஜேந்தர்லாலின் ஜீவ வேகத்தையும் சிந்தி! தமிழா! எனது பிரிய தமிழா! உனது தனிக் காதல் ருசியை நான் தடுக்கவில்லை. உனது பரமார்த்தீகமான நாடககக் கதைகளை நான் வெறுக்கவில்லை. ஆனால் அந்த ஒரே ரஸத்தாலே மாத்திரம் மனித மனது திருப்திகொண்டு விடாது. இதர ரசனைளையும் ரஸிப்பதற்காகத்தான் இவ்வளவையும் சொல்லுகிறேன் பார்!

நமது தமிழ் மன்னர்கள் காலத்திலே நிகழ்ந்ததான பல ரஸனைகளைப் புகுத்தி பல கதைகலை எழுதி நாடக மேடைக்குக் கொண்டுவரவேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு. பிறநாட்டு நாடக  ஆசிரியர்கள் செய்திருக்கிற நாடககங்களையும் தமிழில்

கொண்டு வரவேண்டும் என்கிற எண்ணமும் இருக்கிறது.எவரேனும் கற்பானாசிரியர்கள் தமிழ் ஜாதியில் இருக்கமாட்டார்களா? எழுத மாட்டார்களா?  என்று எண்ணிக் கொண்டிருக்கும்போது,  நீயேதான் ஏன் எழுதக் கூடாது? என்கிற கேள்வியை என் மனதுக்குள் ஏதோ ஒரு இயந்திரம் கேட்டது. முயன்று பார் என்று மனோதர்மமும் சொல்லிற்று. தமிழகம் ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையில் முயற்சித்திருக்கிறேன். அதன் முதல் தோற்றம் இது.

(இதற்குப் பின்னர் தினகரன் அக்காலத்திய நாடக அரங்குகளில் காணப்பட்ட விசித்திரங்களைக் கூறுகிறார்)

கடைசியாக அவர் சொல்லுவது

ஸ்வர்கீய த்விஜேந்தர்லால் செய்த ‘துர்காதாஸை’ நான் அப்படியே தமிழில் ஆக்கிவைக்கவில்லை. கதாசாரத்தில் ஒரு சிறு விஷயத்தையும் கூட மாற்றாமலுந் திருத்தாமலும் ஹிந்தி பாஷாந்தரத்தில் உள்ளவாறே கூறியிருக்கிறேன். ஆனால் கற்பனையிலும் வர்ணனையிலும் துவிஜேந்திரனை ஆங்காங்கு கடந்துவிட்டிருப்பதால் அநேகமாய் முதல் பார்வைக்கு இந் நூல் பாஷாந்திரமாகவே தோன்றாது; தழுவி எழுதப்பட்டிருப்பதாகத் தோன்றும்

சுத்தத் தமிழ் வளர்ப்பவர்கள் என் மீது ஒரு குறை கூறுவார்கள். எனது நடையிலே சம்ஸ்கிருத பதங்கள் விரவியிருப்பது அவர்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் பிற பாஷையே கூடாதென்கிற இப் பாஷாபிமானிகள் பாஷையை வளர்க்கிறவர்கள் ஆக மாட்டார்கள். சம்ஸ்கிருதப் பதங்களைப் பெரும்பாலாகக் கொண்டிருக்கிற ஹிந்தி இந்தியாவின் ராஷ்டிரப் (பொது) பாஷையாக ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பதே எனது வாசகத்தில் சம்ஸ்கிருத, ஹிந்தி, உர்து நான் சேர்த்திருப்பதற்கு மன்னிப்பாகும்.

அல்லிப்புறம் சிறை

15-12-1930                                     தினகரன்

TAGS– தினகரன்,  நாடகங்கள், துவிஜேந்திர லால் ராய்

ஒபிஸிடி கோட் – 2 (Post No.5812)

Written by S Nagarajan

Date: 22 DECEMBER 2018


GMT Time uploaded in London –8 -38 am


Post No. 5812

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

அறிவியல் துளிகள் அத்தியாயம் 404

(எட்டாம் ஆண்டு நாற்பதாம் கட்டுரை)

ஒபிஸிடி கோட் – 2

ச.நாகராஜன்

முதலில் ஒபிஸிடி கோட் முறையை யார் பின்பற்றலாம் என்பதில் தெளிவாக இருத்தல் வேண்டும். கர்ப்பிணிகளும், டயபடீஸ் 2 மற்றும் நீடித்த நோயுள்ளவர்கள் இதைப் பின்பற்றுதல் கூடாது. நல்ல ஆரோக்கியமாய் இருந்து ஆனால் உடல் பருமன் அதிகமாக இருப்பவர்கள் மட்டுமே இதைப் பின்பற்றலாம். குடும்ப டாக்டரைக் கலந்தாலோசித்த பின்னரே ஏனையோர் உபவாச முறையைப் பின்பற்றலாம்.

காலையில் எழுந்தவுடன் ஒரு கப் (240 மில்லி லிட்டர்) நீர் அருந்துதல் வேண்டும்.

உபவாசத்தின் போது சோர்ந்து படுத்து விடாமல் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.

காப்பி குடிக்கலாம்.க்ரீன் டீ விரும்புவோர் அதையும் பருகலாம்.

பசி எடுப்பது போல இருந்தால் நீர் அருந்தலாம் அல்லது காப்பி குடிக்கலாம்.

        யாரிடமும் சாப்பிடாமல் இருப்பதைச் சொல்ல வேண்டாம். உடனே அவர்கள் பட்டினி கிடக்கக் கூடாது என்ற உபதேசத்தை ஆரம்பித்து விடுவர்.

        ஒரு மாத கால அவகாசத்திற்குப் பின்னரே பலன் தெரிய ஆரம்பிக்கும்.ஆகவே பொறுமை தேவை.

       உபவாசம் இல்லாத தினங்களில் நல்ல சத்துள்ள உணவாகத் தேர்ந்தெடுத்துச் சாப்பிட வேண்டும்.

       முதலில் வாரம் ஒரு முறை ஆரம்பிக்கலாம். பிறகு உடல் தகுதிக்கும் மனப் பக்குவத்திற்கும் தேவைக்கும் தக இதை வாரம் இரு முறை ஆக்கலாம்.

12-12 என்ற முறையை ஆரம்பத்தில் பின் பற்றலாம். அதாவது இரவு 7 மணிக்குச் சாப்பிடுவதாக வைத்துக் கொண்டால் அடுத்த நாள் காலை 7 மணிக்கே காலை உணவைச் சாப்பிட வேண்டும். 12 மணி நேர உபவாசம், பின்னர் அடுத்த 12 மணி நேரத்திற்குள் உடலுக்குத் தேவையான உணவு என்பது இந்த முறை. இது எளிய முறை.

   இன்னும் அதிகமாக உடல் எடையைக் குறைக்க விரும்புவோர்

16 – 8 மணி நேர உபவாசம் என்ற முறையை மேற்கொள்ள வேண்டும்.

 அதாவது இரவு 8 மணிக்கு சாப்பாட்டை முடித்து விட்ட பின்னர் அடுத்த நாள் காலை உணவை விட்டு விட்டு 12 மணிக்குத் தான் உணவை ஏற்க வேண்டும்.  ஆக 16 -8 என்ற மணி நேரப்படி இந்த முறை அமையும்.

உடலின் இயக்கத்தினால் ஏற்படும் கலோரி இழப்பு போக உடல் பயிற்சியினால்  சுமார் 5 சதவிகிதம் மட்டுமே இழப்பு ஏற்படுகிறது. 95 சதவிகிதம் உணவுத் திட்டத்தினால் மட்டுமே உடல் எடை குறையும் என்கிறார் டாக்டர் பங். ஆகவே இந்த 95 சதவிகித உணவுத்திட்டத்தின் மீது உங்கள் அக்கறையைச் செலுத்துங்கள் என்பது அவரது அறிவுரை.

       ஆகவே உடலில் எடையைக் கூட்டும் இன்சுலின் பற்றியும் அதை ஊக்குவிக்கும் உணவுகளின் மீதும் நமது பார்வை பதிய வேண்டும். குறைந்த பட்ச இன்சுலினுடன் உடல் நெடு நேரம் இருந்தால் போதும். இன்சுலினால் ஏற்படும் பாதிப்பு குறையும்.

     இதற்கான நல்ல வழி 16 மணி நேர உபவாசம் தான். உடலுக்கு இன்சுலின் ப்ரேக் தர வேண்டும். அது உடல் எடை கூடுவதைத் தடுக்கும்.

        “எதை உண்ணுவது என்பதும் முக்கியம். பதப்படுத்தப்பட்டு கேன்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் அனைத்து உணவு வகைகளும் விலக்கப்பட வேண்டும். சர்க்கரைச் சத்து, மாவுச் சத்து பொருள்களைத் தவிர்க்க வேண்டும். அடிக்கடி உண்பதை விட்டு விட்டு குறைந்த தடவைகளே உண்ணுதல் வேண்டும். நொறுக்குத் தீனிகளை அறவே தவிர்த்தல் இன்றியமையாதது. பாட்டி கால வைத்தியம் என்று இதற்குப் பெயர். ஆனால் அது தான் சிறந்த உணவுப் பழக்கம்.

          உடல் மிகவும் பருமனாக இருந்தால் காலை உணவு நேரத்தை மாற்ற வேண்டும். குறைந்த அளவு உணவை காலை 8 மணிக்கு பதிலாக 12 மணிக்கு எடுத்துக் கொள்ளலாம். 12  மணி நேர உபவாசத்திற்கு பதில் 16 மணி நேரம் எதையும் சாப்பிடாமல் உபவாசத்தைத் தொடரலாம். இதைத் தான் இண்டர்மிட்டண்ட் ஃபாஸ்டிங் என்கிறேன்” என்கிறார் டாக்டர் பங்.

        இந்தப் பழைய காலப் பழக்கத்திற்கு யாரும் இன்று  மதிப்புக் கொடுப்பதில்லை. ஆனால் இன்றைய தேவை அது தான்.

தரைக்கு மேல் வளரும் செடிகளிலிருந்து கிடைக்கும் கறிகாய்கள், சோயா, பருப்பு வகைகள், ஆப்பிள், பெர்ரி போன்ற பழ வகைகள், புரோட்டீன் உள்ள அசைவ உணவு வகைகள் முதலியவற்றை நமது உணவுத் திட்டமாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

இப்படிப்பட்ட புதிய வாழ்க்கை முறையை மேற்கொண்டால் உடல் பருமன் குறைந்து ஆச்சரியப்படத்தக்க விதத்தில் உங்கள் உடல் பொலிவு கூடும். ஆயுள் நீளும். ஆரோக்கியம் நிலைப்படும்.

உலக நாடுகளில் இன்று இந்தியா தான் இளைஞர்கள் அதிகமாக இருக்கக் கூடிய நாடாகத் திகழ்கிறது. சீனாவில் ஜனத்தொகை கூடுதலாக இருந்தாலும் ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை என்ற குடும்பக் கட்டுப்பாட்டின் காரணமாக இன்று அதிக வயதானவர்கள் அங்கு இருக்கும் நிலை ஏற்பட்டு விட்டது.

இந்த நிலையில் இளைஞர்களின் நாடாகத் திகழும் நம் நாட்டில் இளைஞர்கள் தொப்பை இல்லாதவர்களாக ஆரோக்கியமான உடல் அழகுடன்  திகழ இன்றைய தேவை: ஒபிஸிடி கோட்.

அறிவியல் அறிஞர் வாழ்வில்  ..

அமெரிக்க டி.வி. சீரியலான ஸ்ட்ரேஞ்ஜ்  ஏஞ்சல் (Strange Angel) 2018 ஜுனில் ஆரம்பித்து மக்களைக் கவர்ந்த ஒரு சீரியல். இது ராக்கெட் விஞ்ஞானியான ஜாக் பார்ஸன்ஸின் (Jack Parsons) வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு தொடர்.

அமெரிக்கரான ஜாக் பார்ஸன்ஸ் (பிறப்பு 2-10-1904 மறைவு 17-6-1952) கலிபோர்னியாவில் உள்ள பாஸடோனாவில் வாழ்ந்து வந்தார். அவருக்கு எப்படியாவது சந்திரனுக்குச் செல்ல வேண்டுமென்று ஆசை. அது மட்டுமல்ல, இன்னும் தொலைதூரத்தில் உள்ள கிரகங்களுக்கும் செல்ல அவர் ஆசைப்பட்டார்.

தனது இல்லத்தின் பின்புறத்திலேயே அவர் ராக்கெட்டைக் கட்ட ஆரம்பித்தார். பாஸடோனாவில் ஜெட் புரபல்ஷன் லாபரட்டரி ஒன்றையும் அவர் ஆரம்பித்தார். ஆனால் விஞ்ஞானிகளோ இதெல்லாம் சாத்தியமான காரியம் இல்லை என்று சொல்லி வந்தனர். அது மட்டுமன்றி அல்தாஸ் க்ரோலி (Althaus Crowley) என்பவர் ஆரம்பித்த தெலேமா என்ற தத்துவம் கொண்ட அமானுஷ்யம் சம்பந்தமான (அக்கல்டிஸம்)  சங்கத்தில் சேர்ந்தார்.

பகலில் ராக்கெட்டைக் கட்டுவது, இரவில் அமானுஷ்ய சக்திகள் பற்றிய ஆராய்ச்சி என்று வாழ்க்கையைத் தொடரலானார். எஃப்.பி. ஐ இவரைக் கண்காணிக்க ஆரம்பித்தது. ஒரு நாள் வீட்டில் இருந்த லாபரட்டரியில் திடீரென்று ஒரு வெடி விபத்து ஏற்பட்டது.

ஒரு இரசாயனக் கரைசலை அவர் கலக்க முயன்ற போது அது கீழே சிந்தவே வெடி விபத்து ஏற்பட்டதாகப் பின்னர் தெரிய வந்தது. பெரிய காயங்களுக்குள்ளான அவரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர். ஆனால் விபத்தின் காரணமாக சில நிமிடங்களிலேயே உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவ மனை டாக்டர்கள் அறிவித்தனர்.

தொலைக்காட்சித் தொடரில் ஜாக் பார்ஸன்ஸாக ஜாக் ரெய்னர் நடித்துக் கலக்கியுள்ளார். 37 ஆண்டுகளே வாழ்ந்த இவரது வாழ்க்கை வரலாற்றை ஜார்ஜ் பெண்ட்லி எழுதியுள்ளார்.  விண்ணில் பறக்க விரும்பிய இந்த விஞ்ஞானி இளம் வயதிலேயே மண்ணில் விபத்திற்குள்ளானது மகத்தான சோகம்!

*

ENGLISH CROSS WORD 21-12-18 (Post No.5811)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 21 December 2018
GMT Time uploaded in London – 20-24
Post No. 5811


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

FIND AT LEAST 12 WORDS IN THE CROSSWORD. ALL THE WORDS ARE FROM HINDU SCRIPTURES

1
2
3


4









5




6

7

























8
9














10















1. MOTHER OF KRISHNA

5. -FEARLESS; A PREPOSITIONIN SANSKRIT

7. – WHO LOST INDRA STATUS CURSED BY AGASTYA RISHI

8.- ONE OF KRISHNA’S EIGHT WIVES

10. – KING WHOSAVED DEVAYANI FROM A WELL

1. –  ONE OF ARJUNA’S NAMES

2. BROTHER OFSHAKUNIWHO WAS KILLED BY BHIMA

3. YADAVA KULA TILAKA

4. WIFE OF INDRA

6. – GRAND FATHER OF SHAKUNI

9. – ARCHITECT AND SCULPTOR OF DANAVAS.

D1EV2AK3I

I4
H
I
R


N
A5
B
I
N6
D
N7AHUSHA
R
A
U
H
G
A
N


N
N
N
J8AM9BAVATI
A
A


J

Y10AYATII

A
A


T

1.DEVAKI- MOTHER OF KRISHNA

5.ABI-FEARLESS; A PREPOSITIONIN SANSKRIT

7.NAHUSHA- WHO LOST INDRA STATUS CURSED BY AGASTYA RISHI

8.JAMBAVATI- ONE OF KRISHNA’S EIGHT WIVES

10.YAYATI- KING WHOSAVED DEVAYANI FROM A WELL

1.DHANANJAYA-  ONE OF ARJUNA’S NAMES

2.VIBHU- BROTHER OFSHAKUNIWHO WAS KILLED BY BHIMA

3.KRISHNA- YADAVA KULA TILAKA

4.INDRANI-  WIFE OF INDRA

6.NAGNAJIT- GRAND FATHER OF SHAKUNI

9.MAYA- ARCHITECT AND SCULPTOR OF DANAVAS.

–SUBHAM–

Fate decides your Wealth, say Shakespeare, Bhartruhari and Valluvar (Post No.5810)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 21 December 2018
GMT Time uploaded in London – 18-07
Post No. 5810


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

Fate decides your Wealth, say Shakespeare, Bhartruhari and Valluvar (Post No.5810)

Bhartruhari and Tamil poet Valluvar agree on several points in this sloka of Niti Sataka.

1.A person’s wealth is decided by his fate

2.Fate is written by Brahma, Hindu God of Creation on one’s head or forehead.

3.Saint Vidyaranya’s story shows that Harihara and Bhukka got it even whenthey were in arid land. But Saint Vidyaranya couldn’tget in the present birth (Read the story given below)

4.Valluvar explains it more clearly. One needs effort to get wealth. Inspiration and perspiration give wealth. But that comes only when your Good Karma (Punya done in one’s previous birth) acts. If you have bad Karma (papa), then laziness will engulf you.

44. Whatever fate has written on the forehead of each,

that shall he obtain, whether it be poverty or riches.

His abode may be the desert, but he shall gain no more if

he live even on Mount Meru. Let your mind be constant.

Do not be miserable through envy of the rich. The

pitcher takes up the same quantity of water whether it be

from the well or the ocean.

यद्धात्रा निजभालपट्टलिखितं स्तोकं महद्वा धनं
तत्प्राप्नोति मरुस्थले‌உपि नितरां मेरौ ततो नाधिकम् ।
तद्धीरो भव वित्तवत्सु कृपणां वृत्तिं वृथा सा कृथाः
कूपे पश्य पयोनिधावपि घटो गृह्णाति तुल्यं जलम् ॥ Niti Sataka 1.44 ॥

Look at the following couplets: –

Tirukkural 371, 377, 380

Except as ordained by the Lord, who measures out each man’s meet

Even the millionaire cannot enjoy his hoards -377

Even a millionaire cannot enjoy his wealth except as ordained by Fate. This is exactly what Shakespeare meant when he said in Hamlet,

There is a Divinity that shapes our ends

Rough-hew them how we will– Hamlet

Another couplet

The constructive industry that produces wealth, and the destructive indolence

That brings about adversity in life ,are both the outcome of fate-371

The last couplet of the chapter on fate is as follows,

What is more potent than Fate? It forestalls every expedient one may resort to for averting it- 380

Another translation of the same couplet

Destiny is supreme, because its intended consummation will surely come about

Even if planned efforts are made to overcome it-380

STORY:- Vidyaranya found Golden Treasure!

Kanchi Shankaracharya (1894-1994 Paramacharya) in his Madras Discourses (1957-1959) gives the story of Vidyaranya’s discovery of gold and using it for establishing Vijayanagara Empire. Born as Madhava in a village in Karnataka he prayed to Goddess Mahalakshmi, Goddess of Wealth, for enormous amount of wealth. Lakshmi appeared before him and told him that he can’t enjoy wealth in this birth but it was possible for him to get it in the next birth. An idea flashed in his mind immediately. He told Goddess Lakshmi that he would take Sanyas ( Renunciation) which is considered a ‘second birth’ for a Hindu. Lakshmi agreed and gave him tons of gold. As soon as he saw rocks of gold and hills of gold he wept loudly. He knew that sanyas (renunciation ) means no attachment to anything worldly. “Oh My God, What Have I done? How can I touch gold when I have become a Sanyasi (an ascetic)”, he cried. Goddess Lakshmi disappeared while he was wondering what to do next.

At that time of history in 14th century AD, Muslim forces invaded South India and destroyed most of the temples along its routes. Madhava, who was later known as Vidyaranya, called two goatherds Harihara and Bhukka and asked them to build a city at the chosen place at the appointed auspicious time. Both of them did it and utilised the entire gold to establish a mighty and wealthy Hindu empire—later known as Vijaya Nagara Samrajya.

There is another story about Sri Vidyaranya, who later became Jagadguru of Sringeri Mutt, about making gold shower in the lands of Vijayanagara Empire. When there was a draught, Harihara and Bhukka approached Vidyaranya swami for help. He prayed to goddess Lakshmi again and there was a shower of gold in the capital city.

Water pot simile

Another interesting information in this sloka is Bhartruhari’s simile of water pot in in the ocean; This is followed by Tamil poetess Avvaiyar as well. Avvaiyar lived a few centuries after Bhartruhari. Another Avvaiyar lived before him in Sangam Age.

“Though you dip the measure/pitcher deep in the deep sea water, it will not contain four measures. O Maid ! Though riches and husband are choice, the happiness of the couple hangs on fate or destiny”—Muthurai by Poetess Avvaiyar

Tag- water pitcher, Wealth,Fate, Valluvar, Bhartruhari

–subham–

வித்யாரண்யர் செல்வம் கேட் டு ஏமாந்த கதை (Post N0.5809)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 21 December 2018
GMT Time uploaded in London – 13-32
Post No. 5809


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

                                     !

நீதி சதகம்- பர்த்ருஹரி

பாடல் 44

யத்தாத்ரா நிஜபாலபட்டலிகிதம் ஸ்தோகம் மஹத்தா தனம்

தத்ப்ராப்னோதி மருஸ்தலேபி நிதராம் மேரௌ ச நாதோதிகம்

தத்திரோ பவ வித்தவத்சு க்ருபணாம் வித்திம் வெருதா மா க்ருதாஹா

கூபே பஸ்ய பயோநிதாவபி கடோ க்ருஹ்ணாதி துல்யம் ஜலம்- 44

“ஒருவனுடைய நெற்றியில் பிரம்மா எழுதிவைத்த அளவே அவனுக்கு செல்வம் கிடைக்கும். அவன் பாலைவனத்தில் வசித்தாலும்  இது கிடைக்கும். மேரு மலையில் வசித்தாலும் இதைவிடக் கூடுதலாக எதுவும் கிடைக்காது. ஆகையால் பொறுமையுடன் இரு. பணக்காரர்களிடம் சென்று அடிபணிந்து முகத்துதி செய்யாதே. ஒரு குடத்தைக் கடலில் முக்கினாலும், கிணற்றில் முக்கினாலும் குடத்தின் அளவுக்கே தண்ணீர் கிடைக்கும்”.

தலைவிதிப்படியே செல்வம் கிட்டும் என்பதை விளக்க ஒரு கதை, இந்து சமய நூல்களில் உள்ளது:–

வித்யாரண்யர் என்பவர் தென்னாட்டில் துலுக்கர்களின் ஆட்சிக்கு சாவு மணி அடித்த பெரிய மஹான். அவர் இளம் வயதில் செல்வம் வேண்டி தவம் இருந்தார். இவரது தவத்தை மெச்சிய தேவி, அவர் முன் தோன்றி,

அன்பனே! உன் தவத்தை மெச்சுகிறோம் ஆனால் இந்த நற்பிறப்பில் உமக்கு செல்வம் கிடைக்க வழியில்லை. உமது தலைவிதி அப்படி.

ஆயினும் வேறு ஏதாவது ஒரு வரம் கேள்;  அதைத் தருகிறேன் என்றாள்.

வித்யாரண்யர் யோசித்தார். தேவியயையே   மடக்கி விடுவோம் என்று ஒரு கிடுக்கிப் பிடி போட்டார். நான் ஸந்யாஸம் வாங்கினால் அது டுத்த பிறவிதானே. இப்போதே ஸந்யாஸி ஆகிறேன். அடுத்த பிறவிக்கான செல்வத்தைக் கொடு என்று கேட்டார்.

தேவியும் சிரித்துக் கொண்டே ‘டன்’ கணக்கில் அவர் முன் தங்கப் பாளங்களை வைத்துவிட்டு மறைந்து விட்டாள்

வித்யாரண்யரோ ஸத்யம் தவறாத மஹா யோகி. ஸந்யாஸம் எடுத்த அடுத்த நிமிடமே அவருக்குப் புரிந்தது; எதிலும் பற்று  இருக்கக் கூடாது என்பது.

அடடா! தேவியிடம் ஏமாந்துவிட்டோமே. ஸந்யாசமும் செல்வமும் ‘சூடான ஐஸ்க்ரீம் என்பது போல ஆயிற்றே’ என்று உணர்ந்தார். அந்தக் காலத்தில் துலுக்கர்களின் அட்டஹாசம் பெருகிக்கொண்டே வந்தது; இந்து தர்மம் அழிபட்டு  வந்தது. அவர் கண் முன்னால் இரண்டு ஆட்டு இடையர்கள் தென்பட்டனர். அவர்களிடம் பிரம்மாண்டமான செல்வத்தைக் கொடுத்து படை திரட்டச் சொன்னார். அவர்களும் உரிய பயிற்சி பெற்று மாபெரும் படை திரட்டி விஜய நகரப் பேரரசை நிறுவி தென்னாட்டில் புகுந்த துலுக்கப் படைகளை விரட்டி அடித்தார் கள்.

விதிப்படி செல்வம் கிட்டும் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு. பர்த்ருஹரி சொல்லுவது போல, பாலைவனத்தில் இருந்தாலும் செல்வம் கிட்டும் என்பதற்கிணங்க ஹரிஹரன், புக்கன் என்ற இருவருக்குச் செல்வம் போய் சேர்ந்து விஜய நகரப் பேரரசு உதயமானது.

விதியே வலியது என்னும் வள்ளுவன் கருத்து

திருவள்ளுவரும் தமிழ் வேதமான திருக்குறளில் மிகத் தீவிரமாக விதியின் வலிமையை விளக்குகிறார்.

கர்ம வினை என்பதுதான் இந்துமத்தின் சிறப்புக் கொள்கை. இந்து மதத்தைத் தொடர்ந்து பாரதத்தில் எழுந்த பிற மதங்களான சமணம், பவுத்தம்,

சீக்கியம் ஆகியனவும் கர்மவினைக் கொள்கையில் நம்பிக்கை கொண்டுள்ளன.

இதோ விதியை வலியுறுத்தும் முக்கியக் குறள்கள்

வள்ளுவனும் விதியின் காரணமாகவே ஒருவனுக்கு செல்வம் கிடைக்கிறது என்னும் பர்த்ருஹரி கருத்தை ஆதரிக்கிறான்:

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்

போகூழால் தோன்றும் மடி- 371

பொருள்

ஒருவனுக்கு பணம் வரக்கூடிய தலைவிதி இருக்குமானால் அவனுக்கு முயற்சி தோன்றும்;அவன் தலைவிதி பணம் வரக்கூடாது என்றால் அவனை சோம்பல் ஆட்கொள்ளும்

பிரம்மாதான் நெற்றியில் எழுதுகிறான் என்பதை வள்ளுவனும் ஒப்புக்கொள்கிறான்

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி

தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது- 377

கோடி கோடியாகப் பொருள் சேர்த்து இருந்தாலும் நம் விதியை வகுக்கும் இறைவன் எழுதியபடியே நடக்கும்

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினும் தான் முந்துறும்- 380

தலை விதியை விட, வேறு வலி மையானது ஏதேனும் இருக்கிறதா?

statue of Brahma

அவ்வையார்

ஒரு குடத்தை எவ்வளவு தண்ணீரில் முக்கினாலும், குடத்தின் கொள் அளவுக்கே தண்ணீர் மிஞ்சும் உள்ளே தங்கும் என்பதை பர்த்ருஹரியிடமிருந்து அவ்வையாரும் எடுத்தாண்டுள்ளார்.

இதோ அந்தப் பாடல்

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால்நாழி – தோழி
நிதியும் கணவனும் நேர்படினும் தத்தம்
விதியின் பயனே பயன்.18.Though you dip the measure deep in the deep sea water, it will not contain four measures. O Maid ! Though riches and husband are choice, the happiness of the couple hangs on fate or destiny.மூதுரைப் பாடல் இது. இதை எழுதிய அவ்வையார் சங்க கால அவ்வையார் அல்ல. பர்த்ருஹரிக்குப் பல நூறு நூற்றாண்டுகள் பிறப்பட்டவர். பர்த்ருஹரி சொன்ன பல கருத்துக்கள் அவருக்குப் பின்னர் தோன்றிய பதினென் கீழக்கணக்கு நூல்களிலும்  உள.

இன்னொரு சிறப்பு- பிரம்மாதான் ஒருவனுடைய தலையில் அல்லது நெற்றியில் எல்லாவற்றையும் எழுதிவைக்கிறான் என்பதாகும்.

எழுத்துமுறையைக் கண்டுபிடித்தது இந்தியாதான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. கல்வி, எழுத்து, படைப்பு, விதி ஆகியவற்றுக்குப் பிரம்மாவும், அவருடைய மனைவி ஸரஸ்வதியுமே அதிதேவதைகள் என்பது இமயம் முதல் குமரி வரையுள்ள நம்பிக்கை.

tags– வித்யாரண்யர் ,விதியே வலியது,நீதி சதகம், பர்த்ருஹரி

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

உயரத் தூக்கும் தியானம்! (Post No.5808)

Written by S Nagarajan

Date: 21 DECEMBER 2018


GMT Time uploaded in London –6 -45 am


Post No. 5808

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

இந்த உயரத் தூக்கும் தியானம் பற்றி ச. நாகராஜன் ஆங்கிலத்தில்ஆற்றும் உரையை  காணொளிக் காட்சியாகக் காணலாம். இது யூ டியூபில் A Sacred Secret என்று புதிதாக சந்தானம் நாகராஜனால் துவங்கப்பட்ட சேனலில் இடம் பெற்றுள்ளது. இதற்கான தொடுப்பு  https://www.youtube.com/watch?v=WqdoxY673qk

இந்த சேனலில் Subscribe செய்ய வேண்டுகிறேன். அதில் உள்ள சப்ஸ்க்ரைப் என்ற வார்த்தையை அமுக்கினால் போதும், (இலவசம் தான்) உங்களுக்கு சேனலில் இடம் பெற்ற, பெறப் போகும் அனைத்தும் உங்களுக்கு வந்து சேரும். உங்களது like and comments-ஐயும் அங்கு பதிவு செய்யலாம். நண்பர்களையும் சேரச் சொல்லலாம். 19-12-2018 முடிய இடம் பெற்றுள்ள காணொலிக் காட்சிகள் மொத்தம் 11.

அன்பன் ச.நாகராஜன்

A Sacred Secret Channel is launched now! Today.

go to

உயரத் தூக்கும் தியானம்!


ச.நாகராஜன்

தியானத்தின் உச்ச கட்ட ஆச்சரியங்களில் ஒன்று தான் உயிருடன் புதைக்கப்பட்டு மீண்டு வருதல்! பாரதத்தின் உயரிய யோகிகள், அற்புதமான கற்பனைக்கும் அப்பாற்பட்ட சூப்பர் செயல்களைச் செய்து காண்பித்தவர்கள்! இவர்களின் அதிமானுடச் செயல்கள் அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. விஞ்ஞான ரீதியாகவும் சரி பார்க்கப்பட்டு கண்காணிக்கப்பட்டுள்ளன!

அப்படிப்பட்ட ஒரு அதி மானுட செயல் தான் உயிருடன் ஒரு நாளோ அல்லது பல நாட்களோ புதைக்கப்படும் ஒரு செயல்.இப்படிப் புதைக்கப்பட்டவர்கள் மீண்டும் உயிருடன் வருவர்!  

19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மகான் ஹரிதாஸ் இப்படிப் புதைக்கப்பட்டு மீண்டும் எழுந்து வந்த அதிசய மஹாபுருஷர் ஆவார்.

‘திபெதியன் யோகா அண்ட் சீக்ரட் டாக்ட்ரின்ஸ் (Tibetan Yoga and Secret Doctrines)  என்ற புத்தகம் ஹரிதாஸ் பற்றிய ஒரு உண்மைச் சம்பவத்தைக் குறிப்பிடுகிறது. மகான் ஹரிதால் உயிருடன் நான்கு மாதங்கள் புதைக்கப்பட்டிருந்தார். பின்னர் அவரைக் குழியிலிருந்து வெளியில் எடுத்தனர். இது லாகூரை ஆண்டு வந்த பிரசித்தி பெற்ற மஹாராஜா ரஞ்சித் சிங் முன்னிலையிலும் பிரிட்டிஷ் ஜெனரல் சர் க்ளாட் வேட் (Sir Claude Wade) முன்னிலையிலும் நடை பெற்ற சம்பவமாகும்.



மஹாராஜாவின் ராஜ முத்திரை ஹரிதாஸ் உயிருடன் வைக்கப்பட்டு மூடப்பட்ட பெட்டியின் மீது இடப்பட, சுற்றி சுவர் எழுப்பப்பட்டு காவலர்களால் இடைவிடாது கண்காணிக்கப்பட்டது. அந்த இடத்தில் பார்லி விதையும் புதைக்கப்பட்டது. சரியாக குறிக்கப்பட்ட தேதியில் அவர் எழுப்பப்பட்டார். ஒரு பெரிய அதிசயம், புதை குழியில் வைக்கப்பட்ட போது எப்படி அவர் முக க்ஷவரத்தைச் செய்து கொண்டு அழகிய முகத்துடன் இருந்தாரோ அதே போல முக க்ஷவரம் செய்து கொண்ட அதே நிலையிலேயே அவர் எடுக்கப்பட்ட போதும் காணப்பட்டார்.

1986ஆம் ஆண்டு ஆர்மி ரிஸர்ச் இன்ஸ்டிடியூட் (Army Research Institute) , இங்கிலாந்தில் உள்ள ஹல் பல்கலைக் கழகத்தைச் (University of Hull) சேர்ந்த ப்ரெனர் மற்றும் கன்னாலி (Brener and Connally) ஆகிய இரு ஆய்வாளர்களை ஆய்வுக்கென ஒரு குழுவாக அமைத்து ஆய்வு செய்யப் பணித்தது. அவர்கள் தங்களது ஆய்வு அறிக்கையில் குழியில் புதைத்தல் போன்ற நிகழ்வுகள் தியானத்தின் விளைவு என்றும் அல்லது metabolism எனப்படும் வளர்சிதை மாற்றத்தின் மீது ஆழ்ந்த ஓய்வை ஏற்படுத்தும் விளைவு என்றும் கூறினர். இப்படி வளர்சிதை மாற்றத்தைக் குறைத்தால் குறைந்த அளவு ஆக்ஸிஜன் இருக்கும் நிலையிலும் கூட உயிருடன் இருக்க முடியும் என்று அவர்கள் கூறினர். வளர்சிதை மாற்றத்தின் மீதான விளைவுகள் யோகிகள் கடைப்பிடிக்கும் சுவாசத்தைக் கட்டுப்படுத்தும் வழியால் ஏற்படுகிறது என்று அவர்கள் கூறினர்.

லெவிடேஷன் எனக் கூறப்படும் பூமியிலிருந்து உயர எழுதலும் கூட யோகிகளின்  மூச்சைக் கட்டுப்படுத்தும் பிராணாயாமத்தின் ஒரு சக்தி தான்! இந்த சித்தி அதனால் அடையப்படுவது தான்!



பாரிஸில் 1927ஆம் ஆண்டு பன்னாட்டு அதீத உளவியல் மாநாடு (International Psychical Congress) ஒன்று நடந்தது. அங்கு மூனிச் பல்கலைக் கழக உளவியல் பேராசிரியரான புரபஸர் வான் ஷ்ரெங்க் நாட்ஸிங் (Professor Von Schrenck Notzing, Professor of Psychology, University of Munich) ஒரு ஆய்வுப் பேப்பரை சமர்ப்பித்தார். அதில் சுவாசத்தைக் கட்டுப்படுத்தும் யோக சித்தியால் ஒரு இளைஞன் அந்தரத்தில் மிதப்பதை 27 முறை செய்து காண்பித்ததைக் குறிப்பிட்டார்.



கடந்த சில ஆண்டுகளாக யோகா மூலம் அடையப்படும் நன்மைகளைப் பற்றி   உலகெங்கும் ஏராளமான அறிவியல் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.



தியானத்தை இடைவிடாமல் செய்து வந்தால் உயரிய மனோசக்தியை அடைய முடியும். இந்த சக்தி மூலம் உடலையும் மனதையும் உயரிய நிலைக்குக் கொண்டு செல்ல முடியும் என்பதை யோகிகள் நிரூபித்த வண்ணம் இருக்கின்றனர்.

உயரத் தூக்கும் தியானம் உன்னதமான வழி!


TAGS– தியானம்,ச. நாகராஜன் ,A Sacred Secret

««««««« 

ENGLISH CROSS WORD 20-12-18 (Post No.5807)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 20 December 2018
GMT Time uploaded in London – 19-34
Post No. 5807


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

FIND OUT AT LEAST 11 WORDS IN THE FOLLOWING SQUARE. ALLTHE WORDS ARE FROM HINDU SCRIPTURES.

1













2
3
4












5








6
7










8



9

ACROSS

1. – THIS GIRL FELL IN LOVE WITH ANIRUDH, SON OF KRISHNA

2. – HE FOUGHT WITH ALEXANDER; THOUGH HE LOST, IMPRESSED ALEXANDER VERY MUCH

3. – CONSORT OF SHIVA

5.- VEDIC GODDESS

6 – GRAND SON OF CHYAVANA RISHI. WHEN HE TRIED TO KILL SNAKES HE WAS ADVISED NOT TO DO SO.

8. – DEMON WHO KIDNAPPED KRISHNA’S SON PRADYUMNA AND WAS KILLED LATER.

DOWN

1. I- DAUGHTER OF NAGARAJA/ SNAKE KING WHO MARRIED ARJUNA

7. (GO UPWARDS, NOT DOWN)—Brother of Rukmini

2. –  A SEER WHO HID HIS ANGER IN SEA

4. – ANCIENT KING WHO ABANDONED HIS KINGDOM FOR TE SAKE OF TRUTH AND RIGHTEOUSNESS.

9. -SON OF YAYATI; ANOTHER MEANING THE SMALLEST PARTICLE IN SANSKRIT.

U1SHA
A

L


IBMA2
U3MA4
M

U
P
L
K

R
I5LA
U

V


R6UR7U
A


K

N

S8HAMB9ARA

ACROSS

1.USHA – THIS GIRL FELL IN LOVE WITH ANIRUDH.

2.AMBI- HE FOUGHT WITH ALEXANDER; THOUGH HE LOST, IMPRESSED ALEXANDER VERY MUCH

3.UMA- CONSORT OF SHIVA

5.ILA- VEDIC GODDESS

6.RURU- GRAND SON OF CHYAVANA RISHI. WHEN HE TRIED TO KILL SNAKES HE WAS ADVISED NOT TO DO SO.

8.SHAMBARA – DEMON WHO KIDNAPPED KRISHNA’S SON PRADYUMNA AND WAS KILLED LATER.

DOWN

1.ULUPI- DAUGHTER OF NAGARAJA/ SNAKE KING WHO MARRIED ARJUNA

7.RUKMI (GO UPWARDS, NOT DOWN)—Brother of Rukmini

2.AURVA-  A SEER WHO HID HIS ANGER IN SEA

4.ALARKA – ANCIENT KING WHO ABANDONED HIS KINGDOM FOR TE SAKE OF TRUTH AND RIGHTEOUSNESS.

9.ANU-SON OF YAYATI; ANOTHER MEANING THE SMALLEST PARTICLE IN SANSKRIT.

–Subham–

அழகிகளைக் கொன்ற ரேடியம் (Post No.5806)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 20 December 2018
GMT Time uploaded in London – 11-15 am
Post No. 5806


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

வீடு கட்ட செங்கற்கள் தேவை. இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்க மூலகங்கள் தேவை. நாம் இது வரை கண்டறிந்த மூலகங்கள் 118. அவற்றில் ப்ளுட்டோனியம், தோரியம் முதலிய கதிரியக்க மூலகங்களின் கதைகளை சொன்னேன். இன்று நோபல் பரிசு பெற்ற பெண்மணி மேரி க்யூரியையும், நமக்கு ரேடியம் (Radium) டயல் (Dial) கொண்ட ஒளிவீசும் கடிகரங்களை செய்து கொடுத்த  அழகிகளையும் கொன்ற ரேடியத்தின் கதையைச் சொல்வேன்.

1898-ம் ஆண்டில், மேரி க்யூரியும் மற்றொரு விஞ்ஞானியும் கணவருமான பியர் க்யூரியும் (Marie Curie, Pierre Curie) ரேடியத்தைக் கண்டுபிடித்தனர்.

உலகில் முதலில்  நோபல்  பரிசு பெற்ற  பெண்மணி–மேரி க்யூரி

உலகில் இரு முறை நோபல்  பரிசு பெற்ற  பெண்மணி– மேரி க்யூரி

உலகில கணவருடன் நோபல்  பரிசு பெற்ற  பெண்மணி—   மேரி க்யூரி

ரேடியம், கதிரியக்கம் உள்ள வெள்ளி நிற உலோகம். யுரேனியமும், தோரியமும் இயற்கையில்  தேய்ந்து  போகும் போது ரேடியம் உருவாகிறது. பூமியே ஒரு கதிரியக்கம் உள்ள கிரஹம்தான். அதற்குக் காரணம் இந்த ரேடியமும்தான்.

அந்தக் காலத்தில் ரேடியத்தின் ஒளிவீசும் தன்மையக்   கண்டோர் இதை கடிகாரத்தின் நேரம் காட்டும் டயலில் பூசினர். அது இரவில் ஒளி வீசி மணியைக் காட்டியது. இதன் ஆபத்தை அறியாதோர் புற்று நோயில் இறந்தனர். இளம் பெண்களே பெரும்பாலும் இந்தக் கடிகாரத் தொழிலில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு. கடிகார டயலில் ரேடிய உப்புக் கலவையைப் பூசுகையில் நல்ல கூர்மையாக வர்ணம் பூசுவதற்காக அவ்வப்பொழுது தூரிகையை– பிரஷை–நாக்கில் தடவிகொண்டு வர்ணம் பூசினர். அவர்கள் அனைவரும் பிற்காலத்தில் புற்று நோய் முதலிய நோய்களால் இறந்தனர்.

1900-முதல் 1930 வரை மருத்துவ உலகில் ஒரே பரபரப்பு. ரேடியம் தான் சகல நோக நிவாரணி என்று பிரச்சாரம். பல வகைப் புதிய கருவிகள் மார்க்கெட்டுக்கு வந்தன. உண்மையில் புற்று நோயைக் குணப்படுத்தவும் ரேடியம் ஊசிகள் பயன்படுதப்பட்டன. ஆனால  அதைச் செய்தோருக்குப்  புற்று நோய் வந்து இறந்தனர்!

ரேடியம் வாங்கக் காசு பணம் இல்லையா? இதோ எங்கள் பிளாஸ்கை (Flask) வாங்குங்கள்; அதில் இரவு முழுதும் தண்ணீரை ஊற்றி வைத்து அதைக் காலையில் பருகுங்கள்! அடடா என்ன சுகம், என்ன சுகம்! என்றெல்லாம் விளம்பரம்! அப்படிக் குடித்து வந்த சில ஆண்டுகளில் அவர்கள் அனைவரும் மேல் உலகம் சென்றனர். மூட்டு வலியா, மணக்  கோளாறா? இதோ ரேடியம் சிகிச்சை என்றெல்லாம்   போலி மருத்துவர்களின்  விளம்பரங்கள் வேறு!

இவ்வாறு தண்ணீர் குடித்து வந்த ஒரு தொழிலதிபர், அமெரிக்காவில் நாலே  ஆண்டுகளில் இறந்தவுடன், அது பெரிய செய்தியாகி ரேடிய சிகிச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தனர்.

ஒளி வீசிய பெண்கள்!

ரேடியம் தொழிற்சாலைகளில் வேலை செய்ததால், புற்று நோய் கண்ட பெண்மணிகள் ‘யு.எஸ். ரேடியம்’ என்ற கம்பெனி மீது வழக்குப் போட்டனர். அவர்களை உலகம் ரேடியம் பெண்கள் Radium Girls என்று அழைத்தன. ஆனால், அந்தக் கம்பெனியும், ( இந்தியாவின் போபால் விஷ வாயு வழக்கு போல), அந்த வழக்கையே தடுக்க பல விஷமத்தனங்களை செய்தது. இறுதியில் கோர்ட்டுக்கு வெளியே ஆளுக்கு 10,000 டாலர் கொடுத்து வழக்கையே இல்லாமற் செய்தனர். ஏமாந்து பணம் வாங்கிய அழகிகள் அனைவரும் சில ஆண்டுகளுக்குள் புற்று நோயால் செத்து மடிந்தனர்.

பெரிய    கம்பெனிகளுக்குத் தெரியும்; வழக்கைத் தாக்காட்டினால்,வழக்குப் போட்டவர்கள் அனைவரும் சில ஆண்டுகளில் செத்துப் போய் வழக்கே பிசுபிசுத்துவிடும் என்று.

ரேடியம் பெண்மணிகளின் முகம், கை, தலை முடியெல்லாம் இரவு நேரத்தில் ஒளியை உமிழ்ந்தன. அந்த அளவுக்கு அவர்களுடைய உடம்பில் கதிரியக்கம் ஏறி விட்டது!

இப்படிப் பல நூறு மனிதர்களின் உயிரைப் பலி வாங்கிய ரேடியம் 1930-க்குப் பின்னர் பாதுகாப்போடு பயன்படுத்தப் பட்டு வருகிறது. இன்றும் ஒளி வீசும் ரேடியம் பெயிண்டுகள், கடிகார டயல்கள் உண்டு. ஆனாலவை எல்லாம் ஆபத்தானவை அல்ல. அதைச் செய்வோரும் பாதுகாப்பு அறையில் செய்வர்   .அதை அணிவோருக்கும் கதிரியக்கம் வராதபடி கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்கும். மருத்துவத் துறை, பெயிண்ட் துறை ஒளிரும் பொருள்களைச் (Luminous)  செய்யும் துறைகளில் ரேடியம் பயன்படுத்தப் படுகிறது.

இரசாயன குணங்கள்

ரேடியத்தின் குறியீடு – Ra ஆர் ஏ

அணு எண் -88

கொதி நிலை—1400 C

உருகு நிலை—700 C

ரேடிய ஆராய்ச்சியில் இறங்கிய மேரி க்யூரியும் ரேடிய அதிசயம், பற்றி விளம்பியுள்ளார்

“இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட நாங்கள்  அனைவரும் சோதனைச் சாலைக்குள் நுழைந்து இரவில் இருட்டில் எங்கள் குடுவைகளை நோக்குவோம். அப்பொழுது அவை நீல நிற ஒளியைக் கசிந்து இருப்பது எங்களுக்கு அதிசயமாக இருக்கும். அதை நாங்கள் இரவு நேர தேவதைகள் போலக் காண்போம். அது எங்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தது”.

இந்த இரவு நேர தேவதைதான் பின்னர் அனைவரையும் சொர்க்க லோகத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டது!

TAGS– மேரி க்யூரி, ரேடியம்,நோபல்  பரிசு, ஒளி வீசிய பெண்கள்!

–subham–

RADIUM THAT KILLED BEAUTIFUL GIRLS!(Post No.5804)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 20 December 2018
GMT Time uploaded in London – 7-13 am
Post No. 5804


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

There are 118 known elements and Radium is one of them. Since it emits light it was named Radii (ray). It killed many beautiful girls who worked in the Radium Industry and the famous French scientist Marie Curie (born in Poland). Marie Curies was the first woman to receive a Nobel Prize. She was the only woman who won the prize twice. She was the only person to get noble Prize with her husband (Pierre Curie).

Radium is a radio active element. It is a silvery metal.

Radium craze gripped America at one time and it killed hundreds of people by cancer. Radio activity from Radium caused cancer and other health problems.

Here is the story of Radium:-

Radium is highly dangerous because of its intense radio activity. It was discovered by Marie and her husband Pierre Curie in 1898.

Soon after its discovery, radium was regarded as a wonder drug. USA saw a radium craze in 1900s. For 30 year,s  all kinds of quack cures were sold.  Cosmos bags, Raithor, Ravigorator  were few names that attracted people in those days. They advertised that it cured cancer, mental illness, arthritis etc.

Those who could not buy expensive radium bought a flask lined with radium. People were asked to drink water stored in it overnight to cure several illnesses. Those who drank that water died of cancer in the following years. Eben Beyers, an American steel magnate , was one of the victims. After his death in 1931, the radium wonder drugs were stopped.

Beautiful girls emitted light!

The dangers came to public notice in a well publicized case of Radium Girls. They sued their former employer US Radium. The company used devious methods to prevent the case coming to trial. In the end the company settled the case out of court, awarding each girl $10,000 , but they all died within a few years. (It may remind us of Bhopal Gas Disaster in India).

Some of the girls from the factory were so contaminated with radium that their hair, faces, hands and arms glowed luminously in the dark!

Radium Dial Wrist Watches

In the first half of the20th century radium was an essential part of medical treatment for cancer. They implanted radium needles in the cancerous parts. Several workers who made such needles died later because of cancer. This element was used in luminous alarm clocks and wrist watches. The girls who worked there painted the dials with their hands. The young girls who worked there had the habit of licking the brush to make the painting sharp. They died of cancer later.

During II World War, precautionary measures were taken and the workers did such jobs by staying behind protective glass screens.

In the words of Marie Curie,

“One of our joys was to go into our work room at night when we perceived the feebly luminous silhouettes of the bottles and capsules containing our products. It was really a lovely sight and always new to us.  The glowing tubes looked like faint fairy light.”

Chemical Qualities

Symbol of Radium – Ra

Atomic Number 88

Melting Point 700 C

Boiling point – 1400 C

Even today it is used in industries, but radiation levels are measured and  human beings are protected. Luminous paints contain radium salts. Luminous dialled watches or clocks are no danger because the rays cannot penetrate the glass cases.

Earth is a naturally radio active planet.  Radium also contributes to the background level of radiation.

Radium is produced naturally during the decay of Uranium and Thorium. 25 radium isotopes are known.

Source book:- Nature’s Building Blocks by John Emsley.

tags-Radium, Marie Curie, Radium watch, beautiful girls

–subham–