தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 212019 (Post No.5874)

Written by London swaminathan

swami_48@yahoo.com
Date: 2 JANUARY 2019
GMT Time uploaded in London –21-30
Post No. 5874
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

Manu Smrti in South East Asia (Post No.5873)

swami_48@yahoo.com
Date: 2 JANUARY 2019
GMT Time uploaded in London –16-26
Post No. 5873
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.


I have already given the influence of Manu Smrti in Cambodia. See my article posted yesterday. Now let us look at his impact in Thailand and Indonesia

In ancient Indonesia 8th and 9th chapters of Manu Smrti are the main source of law books relating to civil and criminal law. Two law books called Devaagama and Svarajambu followed Manu. A Brahmin named Kaundinya II reformed the laws in the light of the Indian system according to Liang Shu.

Indian influence is seen in ViIetnam (Champa) as well. An inscription states that king Hari varma deva (1074-1080) was versed in four ,Upays and 18 titles or subjects of dispute . Jaya Indra varman IV of `12th century was conversant with all the Dharmasastras.

In Thailand also we see 18 titles of dispute, division of slaves into seven classes. Interest can’t exceed the principal and persons who can’t be witnesses  (in Thailand’ s Dhammasatha ( Dharma sastra))

In the legal treaties Sivasasana or Purvadigama , rules prescribed by Manu are used. It is stated in the Rsisasana that Manu was the first monarch who introduced the Sivasasana.

The Javanese treaties


Kutaramanava,
Svarajambu,
Adigama
are composed on the basis of Manu Smrti


Eight kind of thieves,six kind of great sinners (Atadayins) , homicide etc are discussed on the basis of Manu Smrti

There are other works in old Javanese which used Manu Smrti.


Malaya


Manu’s influence is quite considerable on the laws of Malay according to Winstedt; most of the patriarchal law of this country was of Indian inspiration

Most of the ten crimes for which death penalty are prescribed are like those in Hindu law. And heavier punishment for a person offending against a person of superior caste, modes of punishment like the cutting of the tongue, shaving the head etc, marrying a forcibly abducted girl, fine for sexual offences also reflects of Manu Smrti.

Manu Statue in Philippine

The installation of Manu’s Statue, in early times in the Philippines, is an index to the reverence to this great law giver. It is preserved in Art Gallery of the Senate Chamber of the Philippine republic

Burma


The Pali Dhammasaththa written by Dhammavilasa in 1174 has many of Manu’s rules


Next I will give Dr S Radhakrishnan’s (Philosopher  and President of India) views on Manu Smrti

Source book- Cultural Reciprocation between India and the World,  Sures Chandra Banerji, 1999, Delhi

–subham-


புகழ் பெற்ற லண்டன் சர்ச்சில் மநு நீதி நூல்! (Post No.5872)




Written by London Swaminathan

swami_48@yahoo.com
Date: 2 JANUARY 2019
GMT Time uploaded in London –8-31 AM
Post No. 5872
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.





TAGS- லண்டன் சர்ச்,  மநு நீதி நூல்,வில்லியம் ஜோன்ஸ், செயின்ட் பால் கதீட்ரல் 

-SUBHAM-

நேபாளத்தின் அதிசயமான – ‘-கண்ணாடிச் சிறுமி! (Post No.5871)

Written by S Nagarajan


Date: 2 JANUARY 2019


GMT Time uploaded in London – 7-43 am


Post No. 5871

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

சரிதா பிஸ்தா : நேபாளத்தின் அதிசயமான – ‘GLASS GIRL’ -கண்ணாடிச் சிறுமி!

ச.நாகராஜன்

விஞ்ஞானம் விளக்க முடியாத விந்தைகள் ஏராளம் உண்டு. விஞ்ஞானம் நாளுக்கு நாள் வளர வளர இந்த விந்தைகளும் கூடிக் கொண்டே தான் போகின்றன!

இப்படிப்பட்ட விந்தைகளுள் ஒன்று தான் நேபாளத்தைச் சேர்ந்த சரிதா பிஸ்தா (Sarita Bista).

2006ஆம் ஆண்டு அவளுக்கு வயது 12.

2006, ஜனவரி,18 ஆம் தேதியன்று அவளது நெற்றியில் ஒரு சின்ன வீக்கம் வந்தது. அவளது பெற்றோர்கள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அது திடீரென்று பிளந்து அதிலிருந்து ஒரு சிறிய கண்ணாடி வெளிப்பட்டது. அது முக்கோண வடிவில் இருந்த ஒரு சில்லு – துண்டு!

பெற்றோர்கள் கவலைப்பட்டனர். எப்படியோ ஒரு கிளாஸ் அவள் நெற்றியில் வந்து இருந்திருக்கிறது போலும் என்று அவர்கள் எண்ணி அத்தோடு விஷயத்தை விட்டு விட்டனர்.

ஆனால் இன்னும் பல கண்ணாடித் துண்டுகள் அவள் நெற்றியிலிருந்து வெளிப்பட ஆரம்பித்தன. முக்கோணக் கண்ணாடித் துண்டுகள் 4 செண்டிமீட்டர் நீளமும் ஒரு மிலிமீட்டர் கனமுமாக இருந்தது.

அவ்வளவு தான், பயந்து போன பெற்றோர் அவளை டாக்டரிடம் கொண்டு சென்றனர்.

டாக்டர் பரிசோதித்தார். சிடி ஸ்கேனும் எடுக்கப்பட்டது. ஆனால் அவளது தோலும், நெற்றிக்கு அடிப்பாகமும் சாதாரணமாகத் தான் இருந்தது.

செய்தி பரவியவுடன் பல டாக்டர்களும் அவளை ஆராய்ந்தனர். ஆனால் காரணம் யாருக்கும் புலப்படவில்லை.

கண்ணாடி வெளிப்படும் போது ஒரு சிறிது ரத்தம் வரும்; ஆனால் அந்த இடம் உடனே ஆறி விடும்.

இது தொடர்ந்து நிகழ்ந்து வந்தது. பள்ளியில் இந்த விஷயம் ரகசியமாகவே காக்கப்பட்டது. ஆனால் அங்கும் அடிக்கடி கண்ணாடி வரவே அனைவருக்கும் தெரிய வந்தது.

2006 ஆகஸ்ட் மாத வாக்கில் தினமும் ஒரு கண்ணாடித் துண்டு அவள் நெற்றியிலிருவிளந்து வர ஆரம்பிக்கவே செய்தித்தாள்களில் எல்லாம் அவளைப் பற்றிய தலைப்புச் செய்தி வர ஆரம்பித்தது. ஒரு முறை ஒரே நாளில் 12  துண்டுகள் வெளிப்பட்டன.

செப்டம்பரில் அவள் பிரபலமாகி விட்டாள். அப்போது அது வரை வெளிப்பட்ட கண்ணாடித் துண்டுகளின் எண்ணிக்கை 130ஐத் தொட்டது.

டாக்டர்கள் முழு ஆய்வில் இறங்கினர். ஆனால் இந்த நிகழ்வால் அவள்  மன நலமோ உடல் நலமோ பாதிக்கப்படவில்லை.

டாக்டர்கள் காரணம் புரியாமல் திகைக்க அவள் நாளுக்கு நாள் நல்ல முறையில் வளர்ந்தாள்.

இளம் மங்கையாக இன்று வலம் வருகிறாள்.

விஞ்ஞானம் வளர்ந்தாலும் அது விளக்க முடியாத அதிசயங்கள் நிகழவே செய்கின்றன!

***

தமிழ் குறுக்கெழுத்துப்போட்டி 1-1-2019(Post No.5870)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 1 JANUARY 2019
GMT Time uploaded in London –19-29
Post No. 5870
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

கட்டத்திலுள்ள 22 சொற்களைக் கண்டு மகிழுங்கள்

Tamil Cross Word 112019 (Post No.5870)


ENGLISH CROSS WORD 1-1-2019 (Post No.5869)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 1 JANUARY 2019
GMT Time uploaded in London –16-36
Post No. 5869
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.






INDIAN WONDER- MANU SMRTI IN LONDON CATHEDRAL! (Post No.5868)



Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 1 JANUARY 2019
GMT Time uploaded in London –15-29
Post No. 5868
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.


Tags- Statue of William Jones with Manu Smrti, St Paul’s Cathedral, Original Manu Smrti

கணக்காய்ப் பேச வேண்டும்- 3 குறள் கதைகள் (Post No. 5867)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 1 JANUARY 2019
GMT Time uploaded in London –7-20 AM
Post No. 5867
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

TAGS-  குறள் கதைகள்,கணக்காய்ப் பேச

SUBHAM

புதிய சேனலில் 25 முதல் 36 முடிய உள்ள காணொளிக் காட்சி

Written by S Nagarajan


Date: 1 JANUARY 2019


GMT Time uploaded in London – 6-54 am


Post No. 5866

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

புதிய சேனலில் 25 முதல் 36 முடிய உள்ள காணொளிக் காட்சிகளைப் பார்க்க அழைப்பு இது!

(அடுத்த 12 வீடியோக்கள் பற்றிய அறிமுகம்)

ச.நாகராஜன்

டிசம்பர் 14, 2019 அன்று www.youtube.com இல்    ‘ASacredSecret’ (ஒரே வார்த்தை, மூன்று காபிடல் லெட்டர்ஸ்- இதை மறக்காமல் பதிவு செய்ய வேண்டும்; சப்ஸ்க்ரிப்ஷன் இலவசம்) என்ற சேனல் துவங்கப்பட்டுள்ளது.

இதில் அறிவியல் அறிவோம், ஆன்மீக அறிவியல் அறிவோம், ஆங்கிலம் அறிவோம், படப் பாடல்களோடு ஒரு பயணம் செய்வோம் உள்ளிட்ட ஏராளமான பகுதிகள் இடம் பெறத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

 புதிதாக இன்னும் 12 காணொளிக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.இவற்றில் இரண்டு ஆங்கிலத்திலும் மற்ற பத்து தமிழிலும் உள்ளன.

அவற்றைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் இதோ:

www.youtube.com  —- ASacredSecret   –  Episodes

In Tamil

ariviyal aringar vazhvil ep 21

https://www.youtube.com/watch?v=rWz7eMYgMSo

கணித மேதைக்கு புரட்சிக்காரன் கொடுத்த ஒரு கணக்கு!

இகார் டாம் என்ற பெரிய கணித மேதையிடம் புரட்சிக்காரன் துப்பாக்கியுடன் வந்தான். நீ யார் என்றான். நான் கணித புரபஸர் என்றார் அவர். உடனே ஒரு கணிதத்தைக் கொடுத்து அதற்கு தீர்வு காணச் சொன்னான். பிறகு என்ன நடந்தது?

இந்தக் காணொளி காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் : 2 நிமிடம் 29 வினாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 22

https://www.youtube.com/watch?v=0I0P5orNO0o

மன்னனின் இதயத்தையே சாப்பிட்டு விட்ட ஒரு விஞ்ஞானி!

வில்லியம் பக்லேண்ட் என்ற விஞ்ஞானி எதைக் கண்டாலும் சாப்பிட்டு விடுவார். ஒரு நாள் பதினான்காம் லூயி மன்னரின் பதப்படுத்தப்பட்ட இதயம் அவரிடம் காண்பிக்கப்பட்டது. அவர் என்ன செய்தார்? இந்தக் காணொளி காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் : 1 நிமிடம் 21 வினாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 23

https://www.youtube.com/watch?v=BaghxNdgSxE

வெப்பச் சமன்பாட்டை எங்கும் எதிலும் எதிர்பார்த்த விஞ்ஞானி!

வால்தெர் நெஸ்ட் என்ற விஞ்ஞானி வெப்பச் சமன்பாட்டை எங்கும் எதிர்பார்த்தார். அவரது பசுமாட்டுத் தொழுவத்திற்கு ஒரு முறை சென்றார். அது வெப்பமாக இருந்தது. பின்னர் என்ன நடந்தது? இந்தக் காணொளி காட்சியில் காணலாம். 

நிகழ்ச்சி நேரம் : 1 நிமிடம் 33 வினாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 24

https://www.youtube.com/watch?v=QxfdHdSVy7Y

ப்ளாக்போர்டைத் துரத்தி ஓடிய விஞ்ஞானி!

ஆம்பியருக்குத் திடீரென ஒரு யோசனை உதித்தது. எதிரில் இருந்த வண்டியின் பின்புறத்தில் எழுத ஆரம்பித்தார் – அதை ப்ளாக்போர்ட் போல நினைத்து. திடீரென்று ப்ளாக்போர்ட் நகர ஆரம்பித்தது. சுவையான இந்த நிகழ்வை இந்தக் காணொளி காட்சியில் காணலாம். 

நிகழ்ச்சி நேரம் : 1 நிமிடம் 41 வினாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 25

https://www.youtube.com/watch?v=rmyYqKSGY-4

இறுதி மூச்சு வரை ஆராய்ச்சியே மூச்சு!

 பிரபல விஞ்ஞானி இஸிடார் ரபி மரணப்படுக்கையில் இருந்தார். நண்பரும் அவசரம் அவசரமாக வந்தார். அவரிடம் ரபி என்ன பேசினார்?

இந்தக் காணொளி காட்சியில் காணலாம். 

நிகழ்ச்சி நேரம் : 1 நிமிடம் 33 வினாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 26

https://www.youtube.com/watch?v=Yv2FQSErawI

துரத்திய காண்டாமிருகத்தைப் படம் பிடித்தவர்!

கோடக் காமராவைக் கண்டுபிடித்த ஈஸ்ட்மேன் ஆப்பிரிக்காவிற்குச் சென்ற போது ஒரு காட்டில் ஒரு காண்டாமிருகத்தைப் படம் பிடிக்க ஆரம்பித்தார். அது அவரைத் துரத்தியது. பிறகு என்ன நடந்தது?

 இந்தக் காணொளி காட்சியில் காணலாம். 

நிகழ்ச்சி நேரம் : 1 நிமிடம் 17 வினாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 27

https://www.youtube.com/watch?v=iSllFZTrPGA

ரெஸொனென்ஸ் பற்றி நீல்ஸ் போர் நிகழ்த்திய ஒரு விஞ்ஞான விளையாட்டு!

பிரபல விஞ்ஞானி நீல்ஸ் போர் ஒரு முறை நண்பர் காஸிமிர் என்பவருடன் ஒரு நீர்நிலையில் கட்டப்பட்ட பாலம் அருகே சென்றார். சங்கிலியை ஆட்டினார். பின்னர் ரெஸொனென்ஸ் பற்றிச் சொன்னார். நண்பர் அதைப் பிரமாதம் என்று சொல்ல நீல்ஸ் போரோ சிரித்தார். ஏன்?

இந்தக் காணொளி காட்சியில் காணலாம். 

நிகழ்ச்சி நேரம் : 2 நிமிடம் 25 வினாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 28

https://www.youtube.com/watch?v=xwtd9ZQoOn0

போர்களைப் பற்றிய ஐன்ஸ்டீனின் கவலை!

பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீன் தான் காப்பாற்றிய ஒரு போட்டோகிராபருக்கு முன் அமர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். அப்போது அவரிடம் உலகில் மூளும் போர்களைப் பற்றிப் பேசினார். என்ன பேசினார்?

இந்தக் காணொளி காட்சியில் காணலாம். 

நிகழ்ச்சி நேரம் : 1 நிமிடம் 49 வினாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 29

 https://www.youtube.com/watch?v=j9-Dl5y_JJM

புற்று நோய் தீர்க்க முடியாத ஒரு வியாதி அல்ல; ஐயான் காலர்  உதவி நிறுவனம் தொடங்கியது ஏன்?

   டாக்டர் ஐயான் காலர் புற்று நோயால் பீடிக்கப்பட்டார். டாக்டர்கள் அவர் பிழைப்பது அரிது என்றனர். அவர் என்ன செய்தார்? எப்படி உயிர் பிழைத்தார்? இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் : 2 நிமிடம் 4 வினாடிகள்

****

ariviyal aringar vazhvil ep 30

https://www.youtube.com/watch?v=Ys4EnYaXeBA

பழுக்கக் காய்ச்சிய இரும்பும் அதீத குளிர் நிலையில் உள்ள உறை பனிக்கட்டியும்!

வேதியல் விஞ்ஞானி லுட்விக் மாண்ட் சமையலறைக்குள் நுழைந்து ஐஸ் கட்டியை சமையல்காரியின் கழுத்தில் வைத்தார். சமையல்காரி அலறினாள். ஏன்? இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம். 

நிகழ்ச்சி நேரம் : 1 நிமிடம் 16 வினாடிகள்

***

www.youtube.com  —- ASacredSecret   –  Episodes  In English

 

POWER OF RUDRAKSHA BEADS ( PART ONE )

ENG EPISODE 5

ENGLISH

 

Rudrakshas (Elaco Carpus seeds) are power beads. Wearing rudraksha controls heart beat and ensures a positive effect on blood pressure, stress, anxiety, depression, palpitations and lack of concentration. A research scholar D. Subhas Roy, a professor of Banares, India, gives supporting scientific evidence for the good effects of rudraksha on human body. The power of Rudraksha is explained in this episode.

Time 2 Min 45 Sec

***

POWER OF RUDRAKSHA BEADS ( PART TWO )

ENG EPISODE 6

ENGLISH

 The various types of rudraksha, different classifications which bestow wealth, health and other worldly pleasures are explained in this episode. Single face to ten faces : What are the  benefits? This video gives you the answer.

Time 2 Min 24 Sec

***

 

­அன்புடையீர்,

மேலே கண்டுள்ள காட்சிகளைக் கண்டு உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

ஒவ்வொரு எபிசோடிலும் உள்ள comment -பகுதியிலும் உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யலாம்.

அல்லது ariviyalaanmeegam@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் நண்பர்களுக்கும் இது பற்றிச் சொல்லி அவர்களையும் subscribe செய்யச் சொல்லுங்கள். நன்றி!

**

மரணமடைந்த பின் மீண்டவர்கள்-Part 1 (Post No.5865)

Written by S Nagarajan


Date: 1 JANUARY 2019


GMT Time uploaded in London – 6-43 am


Post No. 5865

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

அறிவியல் துளிகள் அத்தியாயம் 406

(எட்டாம் ஆண்டு நாற்பத்தி இரண்டாம் கட்டுரை)

மரணமடைந்த பின் மீண்டவர்கள் பற்றிய அறிவியல் ஆய்வுகள்! – 1 (Post No.5865)

ச.நாகராஜன்

அறிவியல் துலக்கத் துடிக்கும் வாழ்வியல் மர்மங்கள் பல.

கருவில் உயிர் எப்போது எப்படி சேர்கிறது, கரு ஆணாவது எப்படி அல்லது பெண்ணாவது எப்படி, பிரக்ஞையும் மனமும் உயிரில் எப்போது எப்படி சேர்கிறது, உயிர் உடலிலிருந்து எப்படி பிரிகிறது போன்றவை பற்றி அறிவியல் விளக்கத் துடித்தாலும் போதுமான விவரங்கள் தான் இல்லை. ஆகவே ஏராளமான விஞ்ஞானிகள் பல கோணங்களில் ஆய்வுகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இவற்றில் முக்கியமான ஆய்வான மரணத்தின் பின் என்ன ஆகிறது என்பதைக் கடந்த பல வருடங்களாகவே பல பிரபல விஞ்ஞானிகள் ஆய்ந்து வந்தனர். மரணம் அடைந்து அதிர்ஷ்டவசமாக மீண்டும் உயிருடன் எழுவது ஒரு அதிசயம்.

ஆனால் இந்த அதிசயம் உலகெங்கும் ஆங்காங்கே பல நாடுகளிலும் நடைபெற்று வரும் ஒன்று.

மர்மமான இந்த விஷயத்தைப் பற்றி விஞ்ஞானிகள் ரேமாண்ட் மூடி, ரிங்,கிப்ஸ்,காலப்,ப்ரொக்டர்,லுந்தால், நொப்ளாச், சபாம், ஷ்னேபர், பனிட்ஸ்,க்ரேஸன்,அல்வாராடோ, ஜிங்க்ரோன், க்ரோஸோ, ஐயான் ஸ்டீவன்ஸன் (Raymond Moody, Ring,Gibbs,Gallup,Proctor,

Lundahl,Knoblauch,Sabom,Schnaper,Panitz,Greyson,Grosso,Alvarado, Zingrone, Ian Stevenson) உள்ளிட்ட ஏராளமான விஞ்ஞானிகள் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

முதலில் மரணத்திற்குப் பிறகு இன்னொரு வாழ்க்கை உண்டா என்பதைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி அறிய பல்வேறு நாடுகளில் உள்ள ஏராளமானோரிடம் அறிவியல் கணிப்பு முறைப்படி ஆய்வு செய்த போது நாடு பேதமின்றி 90 சதவிகித மக்கள் அப்படி ஒரு வாழ்க்கை உண்டு என்பதைப் பற்றிய தங்களின் உறுதியான நம்பிக்கையைப் பதிவு செய்தனர்.

அடுத்து மரணம் அடைந்த பின்  உயிருடன் மீண்டவருள் குழந்தைகள் முதல் வயதானவர் வரை உலகெங்கும் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பொதுவான அம்சங்கள் பல இருப்பதை ரேமாண்ட் மூடி சுட்டிக் காட்டினார்.

அவையாவன:

1. அந்த அனுபவம் வார்த்தைகளால் விளக்க முடியாத ஒன்று.

2. இறந்த பின்னர் அருகிலிருக்கும் டாக்டர் அல்லது உறவினர்கள் இவர் இறந்து விட்டார் என்று சொல்வதை இறந்தவர் கேட்கிறார்.

3. ஒரு அமைதியும் மகிழ்ச்சியும் உடனே கிடைக்கிறது.

4. சகிக்க முடியாத படி ஓசை கேட்கிறது. டர் என்றோ மணி அடிப்பது போலவோ ஒரு ஓசை!

5. ஒரு இருண்ட குகையில் நுழைவது போல இருக்கிறது.

6. மனமானது வெளியே சென்று உடலுக்கு மேலே மிதந்தவாறே உடலைப் பார்க்கிறது.

7. இறந்தவரைப் பலரும் எதிர்கொண்டு எப்படி ‘இந்த மாற்றத்தை எதிர்கொள்வது’ என்று சொல்கின்றனர், அல்லது உடனடியாக உடலுக்குத் திரும்புமாறும் சொல்கின்றனர்.

8. உயிருள்ள ஒரு ஒளியை – பிரகாசத்தைப் பார்க்கின்றனர்.

9. வாழ்க்கை அனுபவங்கள் அனைத்தும் ஒரு மதிப்பீடாக ஓடி வருகின்றன.

10. உயிர் வாழ்வது மற்றும் இறப்பது ஆகிய இந்தப் பிரிவின் எல்லையாக ஒரு நீர்ப்பரப்பையோ,ஒரு பனிப்படலத்தையோ,ஒரு கதவையோ அல்லது ஒரு வேலியையோ பார்க்கின்றனர்.

11. உடலுக்குத் திரும்பி வருவதை உணர்கின்றனர்.

12. உடலுக்குத் திரும்பி வந்தவுடன் அருகிலிருந்தவர்களிடம் தாங்கள் உயிர் பிழைத்தது பற்றிச் சொல்ல ஒரே தயக்கமாக இருக்கிறது.

13. இறந்த பின் மீண்டும் பிழைத்த அனுபவம் வாழ்க்கை முழுவதும் ஒரு பாஸிடிவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

14. இறப்பைப் பற்றிய பயமே போய், மரணம் பற்றி ஒரு புதிய அணுகு முறை உண்டாகிறது.

இந்த பதினான்கு அம்சங்களில் உடலை விட்டு வெளியே சென்றவுடன் ஏற்படும் ஆனந்தமான ஒரு உணர்வை அனைவரும் சொல்கின்றனர். மேலிருந்து தன் உடலையும் சுற்றி இருப்போரையும் பார்ப்பதில் தெளிவான பார்வை உள்ளது, வண்ணங்களும் தெரிகின்றன என்று மரணத்திலிருந்து மீண்டு வந்தவர்கள் கூறினர்.

விஞ்ஞானிகள் ஹோல்டனும் ஜோஸ்டனும் (Holden and Joesten – 1990) ஒரு சிறிய சோதனையை மேற்கொண்டனர். ஆஸ்பத்திரி படுக்கையின் மேலே ஆவிகள் மட்டுமே பார்க்கும்படியான அடையாளக் குறியீடுகளை தக்க இடத்தில் வைத்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அங்கு யாரும் ஆறு மாதங்கள் மரணமடையவில்லை ஆனால்  ரிங் மற்றும் லாரன்ஸ் ஆகிய விஞ்ஞானிகள் இது போன்றதொரு சோதனையை (1993இல்) மேற்கொண்ட போது இரண்டு நோயாளிகள் மரணம் அடைந்தபின்னர் அதன் பிடியிலிருந்து மீண்டு வந்தவர்கள் தாங்கள் மேலே மிதந்த போது ஆஸ்பத்திரிக்கு வெளியில் உள்ள பொருள்களைப் பார்த்ததாகச் சொன்னார்கள். படுக்கையில் இருந்து பார்க்க முடியாத பொருள்கள் அவை. இதனால் உத்வேகம் பெற்ற விஞ்ஞானிகள் இதை இன்னும் நன்கு ஆராய வேண்டும் என்று சகாக்களை வேண்டிக் கொண்டனர்.

விஞ்ஞானிகள் மோரிஸ் மற்றும் க்னாஃப் (Morris and Knafl)இது போலவே சோதனையைச் செய்தனர் (2003இல்).இறந்து மீண்ட ஒரு நோயாளி ஆஸ்பத்திரியின் மேல் புறத்தில் இருந்த காபினெட்டின் மேலே ஒரு பென்னி நாணயம் இருப்பதைப் பார்த்ததாகச் சொன்னார். அவசரம் அவசரமாக அந்த கேபினெட்டின் மேற்புறத்தை ஆராய்ந்த போது அங்கு ஒரு பென்னி நாணயம் இருப்பதைக் கண்டனர். யாராலும் எளிதில் பார்க்க முடியாத அந்தச் சின்ன நாணயத்தை இறந்து மீண்டவர் கண்டதாகச் சொன்னது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அடுத்து  தொடர்வோம்.

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

அமெரிக்காவை நிறுவிய நிறுவனர்களுள் மிக முக்கியமானவர் டாக்டர் பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் (Dr. Benjamin Franklin : பிறப்பு 17-1-1706 மறைவு 17-4-1790). இவர் ஒரு விஞ்ஞானி. புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தவர்.எழுத்தாளர். அச்சக நிபுணர். அரசியல் கொள்கை வகுப்பாளர். அரசியல்வாதி.ராஜ தந்திரி. போஸ்ட்மாஸ்டர்.நகைச்சுவையாளர். பொதுநலத்தில் ஊக்கமுடையவர்.

இத்துணை பெருமையும் படைத்த இவர் தான் அமெரிக்காவின் முதல் பொது நூலகம் திறப்பதற்கும் காரணமானவர்.

அமெரிக்காவில் உள்ள ஒரு நகரான எக்ஸிடர் (Exeter) என்பதன் பெயரை ஃப்ராங்க்ளினைக் கௌரவிக்கும் விதமாக ‘Franklin’ என மாற்ற அனைவரும் முடிவு செய்தனர்.

இந்த கௌரவத்திற்கு பதிலாக அவரிடம் ஊரார் அந்த ஊர் சர்ச்சுக்கு ஒரு கண்டாமணியைத் தருமாறு கேட்டனர். ஆனால் ஃப்ராங்க்ளினோ ஒலிக்கு பதிலாக அறிவை முன்னிலைப் படுத்த எண்ணினார். (Sense preferable to Sound). ஆகவே ஊர் மக்கள் படிப்பதற்காக 116 புத்தகங்களை நன்கொடையாக அளித்தார்.

புத்தகங்கள் வந்து சேர்ந்தவுடன் ஒரு பெரிய விவாதம் தொடங்கியது. அந்தப் புத்தகங்களை யார் யாருக்குக் கொடுக்க வேண்டும் என்ற விவாதம் தான் அது. ஊர் மக்கள் ஒரு கூட்டம் கூட்டினர். 1790, நவம்பர், 20ஆம் தேதிய அந்தக் கூட்டத்தில் ஒருமித்த முடிவாக ஊரார் இலவசமாக அந்த நூல்களை அனைவருக்கும் படிக்கக் கொடுக்க வேண்டும் என்று ஓட்டுப் போட்டனர். அது ஒரு பொது நூலகமாக ஆனது. இது தான் அமெரிக்காவின் முதல் பொது நூலகம் பிறந்த கதை. 1904இல் நூலகத்திற்குச் சொந்தமாக ஒரு கட்டிடம் உருவானது. ஃப்ராங்க்ளின் அன்று கொடுத்த நூல்கள் அனைத்தும் இன்றும் கூட ஒரு அலமாரியில் அந்த நூலகத்தில் வைத்துப் பாதுகாக்கப்படுகின்றன.

tags- மரணமடைந்த பின் மீண்டவர்கள்

***