கனவு ஆராய்ச்சி -விஞ்ஞானிகளின் கனவியல் பட்டறை! (Post 6238)

Written by S Nagarajan


swami_48@yahoo.com


Date: 8 April 2019


British Summer Time uploaded in London – 6-43 am

Post No. 6238

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

பாக்யா 22-3-19 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள ஒன்பதாம் ஆண்டு மூன்றாம் கட்டுரை (அத்தியாயம் 419)

கனவு ஆராய்ச்சி பற்றிய விஞ்ஞானிகளின் கனவியல் பட்டறை!

ச.நாகராஜன்

2010ஆம் ஆண்டு வெளியான இன்செப்ஷன் (Inception ) என்ற ஹாலிவுட் திரைப்படம் திருட்டில் நிபுணனான ஒரு திருடன் எப்படி அடுத்தவரின் ஆழ்மனதில் நுழைந்து பல தகவல்களைத் திருடி பயன்படுத்திக் கொள்கிறான் என்பதைப் பற்றியது. பெரும் வெற்றியை அடைந்த இந்தப் படம் பிபிசி ரேடியோவால் 2010ஆம் ஆண்டின் தலை சிறந்த படம் என்று வர்ணிக்கப்பட்டது. 273 விமரிசகர்கள் இதை 2010ஆம் ஆண்டின் ‘டாப் டென்’ படங்களுள் ஒன்று என்று விமரிசித்துத் தேர்ந்தெடுத்தனர். லியனார்டோ டிகாப்ரியோ இதில் கதாநாயகனாக நடித்தார். இதில் வரும் கனவு பற்றிய தகவல்கள் உலகில் அனைவர் மனதிலும் ஒரு ஆர்வத்தைத் தூண்டியது. குறிப்பாக ல்யூசிட் ட்ரீமிங் பற்றி அறிய அனைவரும் ஆர்வம் கொண்டனர்.

 ல்யூசிட் ட்ரீமிங் என்றால் தெளிவாக விழிப்பு நிலையில் இருந்து கொண்டே கனவு காணுதல் என்று பொருள். அதாவது கனவு காணும் போது அதில் நுழைந்து தாங்கள் கனவு தான் காண்கிறோம் என்பதைத் தெரிந்து கொண்டே கனவு காண்பது தான் ல்யூசிட் ட்ரீமிங் – இதை விழிப்பு நிலைக் கனவு என சொல்லலாம்

உலகின் தலை சிறந்த விஞ்ஞானிகள் ஐம்பது பேர் சமீபத்தில் 2019 ஜனவரி மாதத்தில் அமெரிக்காவில் உள்ள மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் குழுமினர்.

இந்த ஐம்பது விஞ்ஞானிகளும் கனவு பற்றிய ஆய்வாளர்கள்.  இரண்டு நாட்கள் நீடித்த ட்ரீம் எஞ்ஜினியரிங் ஒர்க்‌ஷாப் ஒன்றை இவர்கள்அங்கு நடத்தினர். உலகின் முதலாவது கனவியல் பட்டறை இது தான்! இவர்கள் நடத்திய இடம் எம் ஐ டியில் ஒன்றரை ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்டு தொடர்ந்து சோதனைகள் நடைபெற்று வரும் இடமான ட்ரீம் லேப்-(Dream Lab)இல் தான்!

‘ல்யூசிட் ட்ரீம் எனப்படும் தெளிவான விழிப்பு நிலைக் கனவு மிகவும் சக்தி வாய்ந்தது, ஒரு போதையைப் போல உள்ளது அது’ என்று கூறும் மாண்ட்ரீல் பல்கலைக் கழக சைக்கியாட்ரி துறை பேராசிரியர் டோர் நியல்ஸன் (Tore Nielsen), “அதில் நீங்கள் பறக்கலாம், பாடலாம்,ஏன் செக்ஸ் உறவே கொள்ளலாம்” என்கிறார்.

ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் ஸ்டான்போர்ட் விஞ்ஞானியான ஸ்டீபன் லா பெர்ஜ் (Stephen LaBerge) ல்யூசிட் ட்ரீம் என்று ஒன்று நிஜமாகவே இருக்கிறது என்பதை கண்களின் அசைவை வைத்து அறிவியல் பூர்வமாக நிரூபித்தார்.

இப்போது விஞ்ஞானிகள் அனைவரும் ஒருமித்த கருத்தாக, “ உங்களால் மட்டும் ல்யூசிட்  ட்ரீம் செய்ய முடியுமெனில் நீங்கள் ஒரு தங்கச் சுரங்கத்தை உங்களிடம் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்” என்கின்றனர்.

அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஸ்லீப் மெடிசின் இந்த வகை விழிப்புநிலைக் கனவை அங்கீகரிக்கப்பட்ட ஒரு மருத்துவ சிகிச்சையாகவே அறிவித்து விட்டது.

உலகில் ஒரு சதவிகிதம் பேர்களே இப்படிக் கனவு காணும் அதிர்ஷ்டசாலிகள் என்பதை விஞ்ஞானிகள் தெரிவிப்பதோடு பல்வேறு தியான முறைகளும் கூட இந்த அரிய நிலையை அடைய உதவுவதில்லை என்கின்றனர்!

“தூக்கம் என்பதை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் சுவையான பகுதி கனவு காணுதல் தான்” என்கிறார் ட்ரீம் லேபை நிறுவியவர்களுள் ஒருவரான ஆடம் ஹோரோவிட்ச் என்பவர்.

எல்லோரிடமும் ல்யூசிட் ட்ரீம் நிலையை உருவாக்க முடியுமா என்றால் அதற்கான மாஜிக் மாத்திரை இன்னும் ரெடியாகவில்லை என்பது தான் விஞ்ஞானிகளின் பதில்!

2014ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த தூக்கம் பற்றிய ஆராய்ச்சி நிபுணரான ஊர்சுலா வாஸ் மற்றும் ஆலன் ஹாப்ஸன் ஆகியோர் தூங்குவோரிடம் இந்த அரிய நிலையை தாங்கள் வெற்றிகரமாக 77 சதவிகிதம் பேரிடம் கொண்டு வந்தோம் என்கின்றனர். இதை மண்டை ஓட்டின் முன் பகுதியை இலேசான மின்சக்தியைச் செலுத்தித் தூண்டி விடுவதன் மூலம் அடைந்ததாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். மண்டை ஓடு கெட்டியாக இருக்கும் ஒன்று என்பதால் இந்த மின்சக்தி மூளையைக் கூட அடைந்திருக்காது என்பது அவர்களது கருத்து.

இதைக் காசாக்க நினைத்த பலர் இண்டர்நெட்டில் தங்களிடம் இதற்கான சாதனம் இருப்பதாகக் கூறி போலி சாதனங்களை இப்போது விற்றுக் கொண்டிருக்கின்றனர்.

இந்த ஆராய்ச்சி ஒர்க்‌ஷாப்பில் இப்படி செயற்கை முறையில் கனவுகளைத் தூண்ட முடியாது என்பதை ஆய்வுகள் நிரூபிப்பதாக டோர் நியல்ஸன் கூறிய போது அனைவருக்கும் சற்று ஏமாற்றம் ஏற்பட்டது; என்றாலும் அது உண்மை தான்!

இந்த இரு நாள் பட்டறையில் பங்கு கொண்டவர்களுள் ஒருவரான விஞ்ஞானி கரென் கொன்கோலி என்பவர் யார் வேண்டுமானாலும் பயிற்சியின் மூலமாக இந்த ல்யூசிட் கனவு நிலையை அடையலாம் என்கிறார்.

இதனால் ஏற்படும் பயன்கள் மகத்தானவை.

முதலாவதாக ஒரு கம்ப்யூட்டரில் கோடிக்கணக்கில் டாடா எனப்படும் தரவுகள் இருந்தாலும் அதை அணுக ஒரு பாஸ்வோர்ட் தேவை . அதே போல ஆழ்மனதில் கோடிக்கணக்கான விஷயங்களும் அபரிமித ஆற்றலும் உள்ளன. அதை அணுகும் பாஸ்வோர்டாக அமைகிறது இந்த ல்யூசிட் ட்ரீம்!

இரண்டாவதாக விழிப்பு நிலை வாழ்க்கையில் ஏராளமான விஷயங்களைக் குறித்து பயப்படுகிறோம். உதாரணமாக விமானத்தில் பறக்க பயம், கூட்டத்தில் பேசுவதற்கு பயம், உயரமான கட்டிடத்தில் ஏற பயம் என்று பல பயங்கள். இந்த பயங்களை சுலபமாக அகற்ற முடியும் விழிப்புநிலைக் கனவினால்!

மூன்றாவதாக பலருக்கும் அன்றாடம் கெட்ட கனவுகள் தோன்றுவது இயல்பு. அவற்றைத் தடுக்க இந்த விழிப்புநிலைக் கனவு உதவும். மனச் சோர்வு, ஏமாற்றம் போன்றவற்றையும் இது அகற்றும்.

நான்காவதாக பறப்பதிலிருந்து செக்ஸ் உறவு வரை மாயாஜால உலகில் அனைத்தையும் நீங்கள் அனுபவிக்க இந்தக் கனவு நிலை உதவும்.

ஐந்தாவதாக கனவு நிலையில் ஒரு கட்டுப்பாட்டை உங்களால் கொண்டு வர முடியும் போது நிஜ வாழ்க்கையிலும் அதே போல ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டு வர முடியும்; வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.வெற்றியும் பெற முடியும்.

ஆறாவதாக உங்கள் பிரச்சினைகளுக்கு அபாரமான தீர்வுகளைக் காண முடியும். மேரி ஷெல்லி பிரபலமான நாவலான ஃப்ரான்கெஸ்டீனை தனது கனவில் கண்டு தான் எழுதினார். பிரபல கோல்ஃப் விளையாட்டு வீரரான ஜாக் நிக்கலஸ் (Jack Nicklaus) கனவில் தனது கோல்ஃப் விளையாட்டு சாதனத்தைத் தவறாகப் பிடிப்பதைக் கண்டு உணர்ந்து நிஜ விளையாட்டில் சரியாக ஆட ஆரம்பித்தார்; பெரும் வெற்றியைப் பெற்றார்.

இதே போல இப்படிக் கனவின் மூலம் ஏராளமான கண்டுபிடிப்புகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஆகவே ல்யூசிட் ட்ரீம் எனப்படும் விழிப்புநிலைக் கனவைக் காண பயிற்சி செய்து வெற்றி பெற்றால் ஒரு தங்கச் சுரங்கத்தைப் பெறலாம்; அதனால் வெற்றியின் உச்சிக்கு ஏறலாம்!

இந்த இரு நாள் கனவுப் பட்டறை உலக மக்களுக்குத் தரும் செய்தி இது தான்!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

நான்ஸி க்ரேஸ் ரோமன் (Nancy Grace Roman) என்னும் பெண்மணி தான் இன்று வானில் பறக்கும் ஹப்பிள் டெலஸ்கோப் பறக்கக் காரணமானவர். ஆகவே அவரை ஹ்ப்பிள் டெலஸ்கோப்பின் தாய் என்று செல்லமாக அழைக்கின்றனர்.  சமீபத்தில் 2018, டிசம்பர் 26ஆம் தேதியன்று தனது 93ஆம் வயதில் அவர் மரணமடைந்தார். 1925இல் பிறந்த நான்ஸிக்கு வானியல் என்றால் உயிர். அந்தக் காலத்திலேயே மற்றவர்கள் லத்தீன் மொழியைப் படிக்கத் தேர்ந்தெடுத்த போது அவர் கணிதத்தை விருப்பப் பாடமாகத் தெரிவு செய்தார். பள்ளி டீச்சர் உட்பட அனைவரும் சிரித்தனர். எந்தப் பெண்ணாவது கணிதத்தைப் படிக்க விரும்பலாமா? ஆனால் அதில் அவர் தேர்ந்தார்.

    11ஆம் வயதிலேயே ஒரு வானியல் க்ளப்பை ஆரம்பித்தார். நாஸா அவரது ஆர்வத்தை உணர்ந்து அவரைப் பணியில் அமர்த்தியது. ராக்கெட், சாடலைட்டுகள் ஆகியவற்றை விண்ணில் பறக்க விட அவர் பெரிதும் காரணமாக அமைந்தார். கலிலியோ காலத்திலிருந்தே டெலஸ்கோப்புகள் பூமியில் அமைக்கப்பட்ட போதிலும் கூட விண்ணில் தொலைதூரத்தில் உள்ளவை மிகவும் மங்கலாகவே தெரிந்தன. ஆகவே விண்ணில் ஒரு டெலஸ்கோப்பை அனுப்பி அங்கே அதை நிறுவினால் என்ன என்று அவர் யோசித்தார்.

ஆனால் அதற்காக ஆகும் செலவோ மிகவும் அதிகம். அவர் பட்ஜெட் கமிட்டிக்கு தனது எண்ணத்தை வலியுறுத்தும் வகையில் ஆதரவு தேடலானார். 1979இல் பணி ஓய்வு பெற்ற போதும் கூட, உடனேயே ஆலோசகராக மீண்டும் நாஸாவிற்கு வந்த அவர், 1990ஆம் ஆண்டில் விண்ணில் ஹப்பிள் டெலஸ்கோப்பை ஏவித் தன் கனவை நனவாக்கினார்.  உத்வேகம் ஊட்டும் பெண்மணியான நான்ஸி பெண் குழந்தைகளை அறிவியலில் தேர்ச்சி பெறத் தொடர்ந்து ஊக்கி வந்தார்.

பிரபல விளையாட்டுப் பொம்மை நிறுவனமான லெகோ அவரது நினைவைப் போற்றும் வகையில் நாஸா பெண்மணிகள் என்ற வரிசையில் அவரது உருவத்தை வெளியிட்டது – ஹப்பிள் டெலஸ்கோப்புடன்! சரியான பெண்மணிக்கு சரியான நினைவுச் சின்னம், இல்லையா?!

***

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி7419(Post No.6237)

Written by London swaminathan


swami_48@yahoo.com


Date: 7 April 2019


British Summer Time uploaded in London – 18-34

Post No. 6237

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

SWAMI’S TAMIL CROSSWORD 7419

குறுக்கே

1.நீர் நிலை, குளம், ஆற்றிடைப் பள்ளம் (வலமிருந்து இடம் செல்க)

2. அவை

3.- பல்லவர் தலைநகர்

6. — பாடசாலை

7. வளைந்த முதுகு

8.- பால் தருவது நின்றுபோன மிருகம்

10. – மரத்துக்கு மரம் தாவும் பிராணிகள்

கீழே

1. – பெண்கள் குளிக்கையில் அரைத்துப் பூசிக்கொள்ளுவது

2. – வட்ட வடிவ பாத்திரம், பெட்டி

3.- வனம்

4. – செய்திகளைக் கொண்டு செல்லும் பறவைகளை அடைக்கும் இடம்

5.- பர்மாவின் தலைநகர்

6.- பாகிஸ்தானி என்று ஆங்கிலேயர்கள் சொல்லும் வசை மொழி; பறவை என்ற பொருளும் உண்டு=பட்சி என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லின் மரு; கருமி; அதிகமாக ஆசைப்படுவோன்

9- குடித்தால் போதை தரும்


1




2


3

45









6









7


8













9

10





tamilandvedas.com

answer

AURANG ZEB, ROBERT CLIVE AND VARADARAJA SWAMI TEMPLE (Post No.6236)

Written by London swaminathan


swami_48@yahoo.com


Date: 7 April 2019


British Summer Time uploaded in London – 16-36

Post No. 6236

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

correction to bullet point 8:- Doddacharyar is the correct name. Thathachariar is wrong.

வரதராஜப் பெருமாள் கோவில் அதிசயங்கள்! (Post No.6235)

Written by London swaminathan


swami_48@yahoo.com


Date: 7 April 2019


British Summer Time uploaded in London – 7-15 am

Post No. 6235

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

Correction தொட்டாச்சார்யார் not தாத்தாசார்யார்

-subham-

காற்றில் உள்ள துகள்மப் பொருள்களினால் ஏற்படும் அபாயங்கள்! (Post No.6234)

Written by S Nagarajan


swami_48@yahoo.com


Date: 7 April 2019


British Summer Time uploaded in London – 6-46 am

Post No. 6234

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் ஏ அலைவரிசையில் 4-3-2019 அன்று காலை சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பட்ட உரை

காற்றில் உள்ள துகள்மப் பொருள்களினால் ஏற்படும் அபாயங்கள்!

ச.நாகராஜன்

காற்றில் உள்ள பர்டிகுலேட் மேட்டர் (Particulate Matter) எனப்படும் துகள்மப் பொருள்கள் மிக அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்துபவை என்பதால் அதைப் பற்றிய விழிப்புணர்வு ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது.

பி எம் 2.5 – PM 2.5 – என்பது துகள்மப் பொருள்கள் குறுக்களவில் 2.5 மைக்ரானுக்கும் குறைவாக இருப்பதைக் குறிக்கும்.

இவை மிகவும் நுண்ணிய சிறிய பொருள்களாக இருப்பதால் வேகமாகவும் எளிதாகவும் பரவும். அத்துடன் சுலபமாக மனிதர்களின் நுரையீரல்களைச் சென்றடையும். இவை சுலபமாகக் கண்ணுக்குப் புலனாகாமல் இருப்பதால் இவற்றைத் தவிர்ப்பதும் சற்று கஷ்டமான ஒன்றாக இருக்கிறது.

ஒவ்வொரு தேசமும் தனக்கென ஒரு ஏ க்யு ஐ AQI – எனப்படும் ஏர் க்வாலிடி இண்டெக்ஸை – அதாவது காற்றின் தர அளவீட்டைக் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக அமெரிக்காவில் காற்றின் தர அளவீடு ஒன்றிலிருந்து ஐநூறு வரை குறிக்கப்படுகிறது. ஒன்று முதல் ஐம்பது வரை உள்ள அளவீடு நல்ல தரமான காற்றைக் குறிக்கும்.

இது போன்ற அளவீடுகள் ஒவ்வொரு நாட்டிலும் காற்றின் தரத்தை நிர்ணயிக்க உதவுகிறது.

இருந்த போதும் சுலபமாக காற்றின் தரத்தை நிர்ணயிக்க பர்டிகுலேட் எனப்படும் துகள்மப் பொருள்கள் அதிகம் உதவுகிறது.

கரியை எரியவிடுவதால் ஏற்படும் புகை, தூசி, பனி, இயற்கையாக ஏற்படும் காட்டுத் தீ போன்றவற்றால் ஏற்படும் நுண்ணிய துகள்கள் காற்றில் கலப்பதால் காற்று அசுத்தமடைகிறது.

என்றாலும் கூட மனிதனால் ஏற்படும் காற்று அசுத்தமே பொதுவாக அதிகமாக இருக்கிறது.

ஃபாஸில் ப்யூயல் எனப்படும் படிம எரி பொருள்கள் அளவிற்கு அதிகமாக கார்பன் டை ஆக்ஸைடை வளி மண்டலத்தில் கலக்க வைக்கிறது.  இவை அன்றாடம் ஆயிரக்கணக்கில் செல்லும் வாகனங்கள் வெளிப்படுத்தும் புகையிலிருந்து வெளிப்படுகிறது.

ஆகவே ஒவ்வொருவரும் முடிந்த மட்டும் பெட்ரோல், டீஸல் போன்ற எரிபொருள்களைக் கொண்டுள்ள வாகனப் பயன்பாட்டைக் குறைப்பதால் காற்று அசுத்தமடைவதைத் தடுக்க முடியும். காற்றின் தரத்தை உயர்த்த முடியும். நுண்ணிய துகள்மப் பொருள்களையும் தவிர்க்க முடியும்.

இதனால் தேசீய ஆரோக்கியம் பெரிதளவும் மேம்படும் என்பதில் ஐயமில்லை. முனைந்து செயலாற்றினால் வெற்றியைப் பெற முடியும்!

***

SWAMI’S CROSSWORD 6419(Post No.6233)

Written by london swaminathan


swami_48@yahoo.com


Date: 6 April 2019


British Summer Time uploaded in London – 20-33

Post No. 6233

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ACROSS

1. This kingdom stopped the Muslim invaders from the North and driven away the occupiers from the South

5. – Body

7. – Holy river whose name is found in Congo of Africa and Mekong of South East Asia

9. – body part or any part

10. – first swara of the Saptaswara

11. – Fort

12. – bounded, defined, measured

14. I- 10th zodiac sign

15. – nail

16. – founder of Visishtadvaita; also the name of a great mathematician

DOWN

1. – Name of an era; also the name of a king

2.J- name of Mahabharata in its original form

3. – name of planet Mars

4. – disease

6. Tamil woman saint whose 30 verses are sung in December- January every year

8. – one who believes in God

12. – His law is the most popular Law book

13. name of God; also the name of Upanishad

–Subham–

LIZARD WORSHIP IN TAMIL NADU AND ROME (Post No.6232)

Lizard worship at Varadaraja Temple in Kanchipuram

Written by london swaminathan


swami_48@yahoo.com


Date: 6 April 2019


British Summer Time uploaded in London – 16-58

Post No. 6232

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

lizard mythology explained n Kanchi

Roman coin with lzard.

Slavic coins with Apollo counter

பள்ளிகொண்டானும் பல்லிகொண்டானும் (Post No.6231)

Image of Lord Sriranga natha from wikipedia

Written by london swaminathan
swami_48@yahoo.com

Date: 6 April 2019


British Summer Time uploaded in London – 13-48

Post No. 6231

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

Two lizards at Sri rangam temple- picture by london swaminathan

Board at Varadaraja Temple n Kanchipuram- my picture

–subham–

சுத்தமற்ற காற்றைச் சுவாசிப்பதால் ஆயுளில் 10 ஆண்டு இழக்கிறோம்!

Written by S Nagarajan

swami_48@yahoo.com


Date: 6 April 2019


British Summer Time uploaded in London – 8-13 am

Post No. 6230

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் ஏ அலைவரிசையில் 3-3-2019 அன்று காலை சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பட்ட உரை

சுத்தமற்ற காற்றைச் சுவாசிப்பதால் ஆயுளில் பத்து ஆண்டுகளை இழக்கிறோம்!

ச.நாகராஜன்

சமீபத்தில் சிகாகோ பல்கலைக் கழகத்தில் எனர்ஜி பாலிஸி இன்ஸ்டிடியூட்டில் (Energy Policy Institute) மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று சுத்தமற்ற காற்றைச் சுவாசிப்பதால் ஒரு மனிதன் தனது ஆயுளில் பத்து ஆண்டுகளை இழக்கிறான் என்பதைத் தெரிவிக்கிறது.

சுற்றுப்புறச் சூழல் மாசினால் ஏற்படும் இந்த அபாயம் சீனா மற்றும் இந்தியா போன்ற அதிக ஜனத்தொகை உள்ள நாடுகளில் அதிகமாக இருக்கிறது.

இந்தக் காற்று மாசுபாட்டினால் உலகில் ஏற்படும் ஆயுள் இழப்பில் 73 விழுக்காடு சீனாவிலும் இந்தியாவிலும் ஏற்படுவதாக சிகாகோ அறிக்கை தெரிவிக்கிறது.

உலகில் உள்ள அனைத்து நிபுணர்களும்  புகைபிடிப்பதனால் ஏற்படும் தீங்கை விட   சுற்றுப்புறச் சூழல் மாசானது இன்னும் பெரிய ஆட்கொல்லி என ஏகமனதாகக் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சூழலில் ஏற்படும் மாசானது ஒரு சிறிய மணல் துகளை விட இன்னும் சிறியதாக இருப்பதால் இயற்கையாக உடலில் உள்ள தற்காப்பு அமைப்பையும் தாண்டி நுரையீரலுக்குள் நுழைவதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. நுரையீரலிலிருந்து சிறு துகள்கள் இரத்த ஓட்டத்தில் கலப்பது எளிதாகிறது.

இதன் விளைவாக நுரையீரல் சம்பந்தப்பட்ட வியாதிகள், கான்ஸர், மாரடைப்பு, ஸ்ட்ரோக் ஆகியவை ஏற்பட்டு அல்லலுக்கு ஆளாக நேரிடுகிறது.

இத்துடன் மட்டுமன்றி மூளைச் செயல்பாட்டுத் திறனும் குறைவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

தேவையற்ற குப்பைகளை சாலையின் நடுவில் போட்டு எரிப்பதை ஆங்காங்கே கண்கூடாகப் பார்க்கிறோம். மனதை வேதனைப்படுத்தும் ஒரு செயல் இது. இதனால் வளிமண்டலம் அசுத்தமாகி காற்றும் அசுத்தமாகி ஏராளமானோரின் நுரையீரல்களைப் பாதிக்கும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.

இங்கிலாந்தின் மன்னரான முதலாம் எட்வர்ட் தனது ராஜ்யத்தில் பொது இடங்களில் கரியை எரியவிடுவோருக்கு மரணதண்டனை விதிக்கப்படும் என அறிவித்தார். சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்துவோருக்கு சமீப காலத்தில் கடுமையான தண்டனையை அறிவித்த முதல் அரசர் இவர் தான்! அரசு இயற்றும் தண்டனைகளைச் சுயக்கட்டுப்பாட்டின் மூலமாகத் தவிர்ப்போம்.

    சுத்தமான காற்றைச் சுவாசிப்போம்; அதற்காக காற்றைச் சுத்தமாக வைத்துக் கொள்ள அனைத்து வழிமுறைகளையும் கையாளுவோம்.

தனிமனிதனின் ஒழுக்கமே நாட்டின் ஒழுக்கமாக மிளிரும்.

ஆகவே சுற்றுப்புறச் சூழலை தனி நபர் என்றை முறையில் காப்போம்; நாட்டையும் உலகத்தையும் காப்போம்!

***

DRAMA WAS A SUCCESS, BUT AUDIENCE WAS A FAILURE! -OSCAR WILDE(Post No.6229)

Compiled by london swaminathan


swami_48@yahoo.com


Date: 5 April 2019


British Summer Time uploaded in London – 17-44

Post No. 6229

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))


Playwright Anecdotes: –

SUCCESS AND FAILURE


Oscar Wilde arrived at his club one evening, after witnessing a first production of a play that was a complete failure.
“Oscar, how did your play go tonight?” said a friend.
“Oh, was the lofty response, “the play was a great success , but the audience was a failure”.
Xxx

Sir Herbert Beerbohm Tree to a would be dramatist,
My dear sir, I have read your play. Oh my dear sir!
Yours faithfully,

Xxx

PETER PAN


“Not all your plays are successes, I suppose, Sir James”, someone remarked to J M Barrie at a dinner party.
In the manner of one imparting confidence, Barrie leaned toward him and said,
“No, some Peter out, some Pan out”.
Xxx

DRAMA CRITICISM


Claire Boothe’s first produced play, ‘Abide with Me’ was a failure. The playwright was ,however, evidently possessed of some ebullience on the occasion of its opening. Richard Watts, drama critic, reported,
“One almost forgave, Abide with Me, its faults when its lovely playwright, who must have been crouched in the wings for a sprinter’s start as the final curtain mercifully descended, heard a cry of ‘Author ‘, which was not audible in my vicinity, and arrived to accept the audience’s applause just as the actors, who had a head start on her, were properly lined up and smoothed out to receive their customary adulation.”
Xxx

WHERE WILL YOU BORROW?

Richard Brinsley Sheridan , threatening to cut his son Thomas off with a shilling, he immediately replied,
Ah father, but where will you borrow the shilling?
Xxx

SHERIDAN AND CUMBERLAND


Cumberland, a third rate dramatist, was jealous of Sheridan s reputation and lost no occasion to talk him down.
An acquaintance of Sheridan’s , meeting him on the street one day, informed him that Cumberland was telling everyone how he had gone to see
‘The School for Scandal’, and had thought it a very bad thing— couldn’t see how people saw anything funny in it at all.
“Why, did he not laugh at my comedy?” asked Sheridan, pretending the deepest concern,
“No
Well then, I must say that is very ungrateful in Mr Cumberland, for I laughed at his last tragedy until I almost split my sides”.


Xxxx

Dancer Anecdote

Finley Peter Dunne, the Mr Dooley of humorous fame, once went to see Isadora Duncan perform. The famous dancer wore very few clothes, and as a result of their lack, looked even plumper than usual. A flood light threw calcium beams on her. As Dunne was leaving, one of the patronesses hailed him.
“Oh, Mr Dunne”, she twittered,
“How did you enjoy the Madame’s dancing?”
“Immensely”, said Dunne.
“Made me think of Grant’s Tomb in love”.



XXX SUBHAM XXX