

Post No. 9904
Date uploaded in London –28 JULY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அயர்லாந்து நாட்டின் நாடக ஆசிரியரும் கவிஞருமான ஆஸ்கர் வைல்ட் OSCAR WILDE ஹோமோசெக்ஸ் HOMOSEX – ஒரு பால் புணர்ச்சி– குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டார். ஆயினும் அவரது படைப்புகள் இந்தக் குற்றத்துக்கு அப்பாற்பட்டவை . இன்றளவும் படிக்கப்படுபவை. நகைச் சுவை ததும்ப எழுதக் கூடியவர் ஆஸ்கர் வைல்ட்.
அயர்லாந்து நாட்டின் தலைநகரான டப்ளின் நகரில் பிறந்தார். அவருடைய தந்தை ஒரு டாக்டர்; தாயார் ஒரு கவிஞர். ஆஸ்கர் வைல்ட் பிறவியிலேயே ஒரு மேதை. டப்ளின் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகங்களில் சிறப்பாகத் தேறினார். கவர்ச்சிகரமான தோற்றம் உடையவர். படாடோப உடைகளை அணிபவர். இதனால் லண்டன் பிரமுகர் வட்டாரத்தில் எல்லோ ருக்கும் அவரைத் தெரியும்
1884ல் அவர் கான்ஸ்டன்ஸ் லாயிட் என்பவரை மணந்தார். இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையும் ஆனார்.
முதலில் பத்திரிகையில் சேர்ந்தார். 34 வயதில் சிறுவர்க்காக எழுதிய கதைப் புஸ்தகம் வெற்றி நடை போட்டது .ஒரே ஒரு நாவல் மட்டுமே எழுதினார்.அ து ஒரு அழகான இளைஞரின் கதை. கெட்ட வழக்கங்களால் அவருடைய அழகிய தோற்றம் எப்படி அவலம் அடைகிறது என்பதை வருணிக்கும் கதை.
1879 முதல் 1895க்குள் ஒன்பது நாடகங்களை எழுதினார். அவற்றில் THE IMPORTANCE OF BEING EARNEST ‘இம்பார்ட்டன்ஸ் ஆப் பீயிங் ஏர்னஸ்ட்’ என்ற நாடகம் நல்ல நகைச்சுவை உடையது இரண்டு வருங்கால மாப்பிள்ளைகளின் இருவிதமான வாழ்க்கையை இது விளக்குகிறது .
இவ்வாறு நாடகங்களின் மூலம் புகழ் சேரும் தருவாயில் அவருடைய சுய வாழ்வு பற்றிய ரகசியங்கள் அம்பலமாயிற்று .ஆல்ப்ரட் டக்ளஸ் என்ற பிரபுவுடன் அவர் கொண்ட தகாத உறவு வெளிச்சத்துக்கு வந்தது. அக்காலத்தில் ஆணுடன் ஆண் கொள்ளும் ஒரு பால் புணர்ச்சி பிரிட்டனில் சட்ட விரோதமானதாக இருந்தது. இதன் காரணமாக அவர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறைச்சாலை
அனுபவங்களையும் கவிதையாக எழுதி வெளியிட்டார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் விடுதலை கிடைத்தது. பின்னர் அவர் பிரான்ஸ் நாட்டுக்குச்சென்று வசித்தார்.
அவருடைய உடல்நலமும் குன்றியது. விடு தலை அடைந்த மூன்றே ஆண்டுகளில் ஆஸ்கர் வைல்ட் இறந்தார்.
பிறந்த தேதி – அக்டோபர் 16, 1854
இறந்த தேதி -நவம்பர் 30, 1900
வாந்தி ஆண்டுகள் – 46 ஆண்டுகள்


அவருடைய நாடகங்களும் கவிதை நூல்களும்
1890- THE PICTURE OF DORIAN GRAY
1891- LORD ARTHUR SAVILE’S CRIME
1892- LADY WINDERMERE’S FAN
1893- A WOMAN OF NO IMPORTANCE
1895 – THE IMPORTANCE OF BEING EARNEST
1895- AN IDEAL HUSBAND
1896- SALOME
1898- THE BALLAD OF READING GAOL
DRAMA WAS A SUCCESS, BUT AUDIENCE WAS A FAILURE …
https://tamilandvedas.com › drama-w…
5 Apr 2019 — ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com)). Playwright Anecdotes: –. SUCCESS AND FAILURE. Oscar Wilde arrived at his …
Rudeness anecdotes | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › rudeness-anecdotes
21 Dec 2016 — Oscar Wilde indulged his penchant for baiting Yankees when he met Richard Harding Davis. “So you are from Philadelphia where Washington is …
–SUBHAM-


TAGS- சிறை , ஐரிஷ், நாடக ஆசிரியர், ஆஸ்கர் வைல்ட், OSCAR WILDE
You must be logged in to post a comment.