

Translated by London swaminathan
English article by Vasudev Godbole, United Kingdom
swami_48@yahoo.com
Date: 23 April 2019
British Summer Time uploaded in London – 10-56 am
Post No. 6298
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
1980ல் பிரிட்டனில் தாஜ்மஹால் பொய் அம்பலம்
லண்டனில் ராயல் கட்டிடக் கலைஞர் சங்கம் புகழ்பெற்றது. 1980ஆம் ஆண்டில் அவர்கள் வெளியிடும் மாத இதழில் தாஜ்மஹால் பற்றிய வழக்கமான கதைகளை எதிர்த்து இரண்டு கடிதங்கள் வெளியிடப்பட்டன. ஒன்று திரு ஓக் எழுதியது; மற்றொன்று நான் எழுதிய கடிதம். எங்களுடைய வாதங்களை எவரும் எதிர்த்து எழுதவில்லை. ஓக், பாதுஷாநாமா தொகுதி 1, பக்கம் 403 விஷயத்தை மேற்கோள் காட்டியிருந்தார். நான் என் கடிதத்தில் கூறியது என்ன?
ஷாஜஹான் ஆட்சிக் காலத்துக்கு முன்னர் ஆக்ரா நகரம் எப்படி இருந்தது? அதுதான் 17ஆம் நூற்றாண்டு வரலாற்று ஆசிரியர்கள் அனைவரும் மழுப்பிய விஷயம். ஆங்கிலேயர்களைப் போலவே டச்சுக்காரர்களும் வியாபாரம் செய்ய நம் நாட்டுக்கு வந்தனர். அவர்களுக்கு ஆக்ராவில் ஒரு வணிக நிலையம் இருந்தது. 1620 முதல் 1627 வரை அவர்களுடைய வர்த்தகப் பிரதிநிதியாக இருந்தவர் பிரான்சிஸ்கோ பெல்சார்ட் என்பவர் ஆவார். ஹாலந்து நாட்டிலுள்ள தனது மேலதிகாரிகளுக்கு அவர் 1626ல் ஒரு அறிக்கை தயாரித்து அனுப்பினார். அவரும் ஆக்ரா நகரம் அப்போது இருந்த நிலைமையை விளக்குகிறார். இது தன்னிச்சையாக ஒரே நேரத்தில் நடந்த ஒரு அதிசயம். அவர் சொல்கிறார்:-
இது குறுகலான, ஆனால் நீளமான ஒரு நகரம். ஏனெனில் எல்லா செல்வந்தர்களும்,
செல்வாக்குமிக்கவர்களும் நதிக் கரை ஓரமாக பத்தரை மைல் தொலைவுக்கு அரண்மனைகளைக் கட்ட்டியுள்ளனர். நான் முக்கியமான சிலவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன்.
வடக்கிலிருந்து துவங்கினால் பஹதூர் கானின் அரணமனை இருக்கிறது. பின்னர் போஜ……….பிறகு செங்கோட்டை இருக்கிறது. (இதை பெலசார்ட் வருணிக்கிறார்). அதையும் தாண்டி பெரிய மார்க்கெட் (நகாஸ்) உளது. அதையும் தண்டி பிரபுக்கள் அரண்மனைகள்- மீர்ஜா அப்துல்லா, ஆகாஅநவுர், மஹபத் கான், காலஞ் சென்ற ராஜா மான்சிங்கின் அரண்மனை, மதோ சிங் அரண்மனை”
இந்த அறிக்கையின் ஆங்கில மொழிபெயர்ப்பு 1925ம் ஆண்டு முதல் கிடைக்கிறது. ஆயினும் ஒரு வரலாற்று ஆசிரியரும் குறிப்பிடவில்லை. ஏன்? காரணம் மிகவும் தெரிந்ததே.
நதிக்கரையில் பத்தரை மைல் நீளப் பிரதேசம் முழுதும் அரண்மனைகள் இருப்பதாக 1626ல் பெலசார்ட் கூறியுள்ளார். ராஜாமன்சிங்கின் அரண்மனை, கடைசி அரண்மனைக்கு ஒரு இடம் முன்னதாக இருந்தது. மனைவியை அடக்கம் செய்வதற்காக ஷாஜஹான் இதை எடுத்துக் கொண்டதாக பாதுஷா நாமா சொல்கிறது. ஆகையால் நாம் தாஜ்மஹால் என்று எதைச் சொல்கிறோமோ அது ராஜா மான்சிங்கின் அரண்மனையே. இந்த உண்மையை வரலாற்று ஆசிரியர்கள் நம்மிடமிருந்து மறைத்து வைத்திருந்தனர்.
என்னுடைய முயற்சிகளுக்கு ஒரு பலன் கிடைத்தது; 1982ம் ஆண்டில் தொல்பொருட் துறை ‘தாஜ் மியூஸியம்’ என்று ஒரு சிறு புத்தகம் வெளியிட்டது. அதன் ஆசிரியர்கள் வழக்கமாகச் சொல்லப்படும் கதைகளை எல்லாம் சொல்லிவிட்டு மும்தாஜ், பர்ஹான்பூரில் இறந்தார் அவருடைய சடலம் அங்கே அடக்கம் செய்யப்பட்டது. அதற்கு ஆறு மாதங்களுக்குப் பின்னர் அந்த சடலத்தைத் தோண்டி எடுத்து சவப்பெட்டியை ஆக்ராவுக்கு அனுப்பினார். அதுவரைக்கும் அந்த இடத்தில் ராஜா மான்சிங்கின் அரண்மனை இருந்தது” … இதை எழுதிய ஆசிரியர்கள் ஜியாவுதீன் அஹமது தேசாய், கவுல். இப்பொழுது அந்த அரண்மனை தாஜ்மஹால் என்று அழைக்கப்படுகிறது இதைவிட எப்படி எளிதாகச் சொல்ல முடியும்? ஒரு சடலத்தை அரண்மனையில் புதைக்க கட்டிடப் பணிகள் எதுவும் தேவையா?
டாக்டர் வி எஸ் காட்போலே
இங்கிலாந்து ஏப்ரல் 2007, அக்ஷய த்ருத்யை
(Translated into Tamil by S Swaminathan)
******












































