ஆதிமூலமே என்று அழைத்த கஜேந்திரன் ஒரு பாண்டிய மன்னனே! (Post.6330)

WRITTEN  by S Nagarajan

swami_48@yahoo.com


Date: 1 May 2019


British Summer Time uploaded in London – 8-28 AM

Post No. 6330

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ஆதிமூலமே என்று அழைத்த கஜேந்திரன் ஒரு பாண்டிய மன்னனே!

ச.நாகராஜன்

ஆதிமூலமே என்று கஜேந்திரன் அழைக்க அந்த கஜராஜனை முதலையின் வாயிலிருந்து பகவான் விஷ்ணு விடுவித்த கதை நாடறிந்த ஒன்று.

ஆனால் பலரும் அறியாத ஒரு விஷயம் அப்படி அலறிய கஜராஜன் ஒரு பாண்டிய மன்னனே என்பதைத் தான்.

பாகவதத்தில் வரும் ஒரு சுவையான வரலாறு இது:

இந்திரத்யும்னன் என்பவன் பாண்டிய தேசத்து அரசனாக இருந்து செங்கோலோச்சிக் கொண்டிருந்தான்.

அவன் சிறந்த விஷ்ணு பக்தன். மிகுந்த புகழ் பெற்றவன்.

பக்தி மார்க்கத்தைக் கடைப்பிடித்து வந்த அவன் ஒரு சமயம் மலைய பர்வதத்தில் தவம் செய்து கொண்டிருந்தான். ஆத்ம ஞானியான அவன் யாருடனும் பேசாமல் மௌன விரதத்தை மேற்கொண்டிருந்து பகவானைத் தியானித்துக் கொண்டிருந்தான்.

 ஒரு சமயம் அகஸ்தியர் தன் சீடர் குழாமோடு அவன் இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்.

பெரிய முனிவரான அவரை வரவேற்காமல் இந்திரத்யும்னன் தன் தவத்தில் இருந்தான். அர்க்யபாத்திராதிகளால் அவரை பூஜிக்கவில்லை.

இதனால் கோபம் கொண்டார் அகஸ்தியர்.

“பெரியோர்களை வணங்காத இந்த அரசன் பிராம்மணனை அவமதித்து கஜம் போல இருந்தமையால் இவன் ஒரு கஜம் ஆகக் கடவது” என்று சபித்து விட்டார்.

அந்த அரசனே மறு ஜென்மத்தில் கஜேந்திரனாய்ப் பிறந்து முதலையால் பிடிக்கப்பட்டு விஷ்ணு பக்தி மேலிட ஹரியை தோத்திரம் செய்து அவரு அழைத்து, அவரால் காப்பாற்றப்பட்டான்.

விஷ்ணுவின் அருளால் அவன்  மோட்சத்தையும் அடைந்தான்.

ஆக கஜேந்திர மோட்சம் என்று நாம் கேட்டு வரும் கதையில் வரும் கஜேந்திரன் இந்திரத்யும்னன் என்ற பாண்டிய ராஜனே!

 பாண்டிய நாட்டிற்கும் இந்த வரலாறுக்கும் இப்படி ஒரு தொடர்பு இருப்பது ஒரு சுவையான செய்தி தானே!

இந்த வரலாறு இன்னும் ஒரு அதிசய செய்தியைக் காலம் காலமாக வழங்கி வருகிறது.

அது பற்றிய ஒரு சுவையான வரலாறும் உண்டு.

ஒரு அரசன், விஷ்ணு நம்மிடமிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறார் என அறிஞர்களைக் கேட்க அவர்கள் சரியான விடை தெரியாமல் விழித்தனர்.

ஒவ்வொருவரும் ஒரு தூரத்தை உத்தேசமாகக் கணக்கிட்டுக் கூறினர். வானியல் அறிந்தோர் அந்த வானவியல் கணக்கையும் சொல்லிப் பார்த்தனர்.

மன்னன் திருப்தியுறவில்லை.

கடைசியில் பக்திமானான ஒரு சிறுவன் அரசனிடம் வந்தான். தனக்கு அந்தக் கேள்விக்கு விடை தெரியும் என்றான்.

அரசன் அவனைச் சொல்லச் சொல்லவே அவன் கூறினான்-

“பகவான் இருக்குமிடம் கூப்பிடு தூரமே!”

“ஆதிமூலமே என்று கஜேந்திரன் கூப்பிட்டவுடன் அவன் ஓடி வரவில்லையா? ஆகவே உள்ளன்புடன் பக்தியுடன் அவனை கூப்பிட்டால் அவன் அதைக் கேட்டு ஓடோடி வருவான். அவன் இருப்பது கூப்பிடு தூரத்தில் தான்”, என்றான் சிறுவன்.

இந்த பதிலால் மன்னனும் அவையினரும் திருப்தி அடைந்தனர்.

காலம் காலமாக ஒரு பெரிய உண்மையைச் சொல்லும் புண்ய கதை கஜேந்திர மோக்ஷம் ஆகும்!

****

Gajendra Moksha in Africa !! | Tamil and Vedas

Gajendra Moksha in Africa !!

2 Aug 2012 – Believe it or not it happened in Africa very recently. … The meaning of the word Gajendra Moksha is Gaja=elephant, Indra= the leader or the …

நெரூர் மஹான் சதாசிவ பிரம்மேந்திராள் செய்த அற்புதங்கள்! (Post No.6329)

WRITTEN  by London swaminathan

swami_48@yahoo.com


Date: 1 May 2019


British Summer Time uploaded in London –  6-59 am

Post No. 6329

Pictures shown here are taken by london swaminathan

 This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

நெரூருக்குச் சென்று சதாசிவ பிரம்மேந்திர சுவாமிகளின் ஜீவ சமாதியைத் தரிசிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை. அது மார்ச் 27ம் தேதி (2019) நிறைவேறியது.

1957ல் வெளியான ஜகத்குரு திவ்ய சரித்திரம் புத்தகத்தில் சதாசிவ பிரம்மேந்திராள் நடத்திய அற்புதங்களைப் படித்ததும், மாதம் தோறும் லண்டனில் நடக்கும் பஜனையில் சதாசிவரின் அற்புதமான பாடல்களைக் கேட்பதும் இதற்குக் காரணமாகும்.

நெருர் என்னும் கிராமம் கரூர் நகரிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. அமைதியான சூழ்நிலையில் ஒரு சிவன் கோவில், அதனருகில் பிரம்மேந்திராளின் ஜீவ சமாதி. அதாவது சமாதியின் கீழ் அவர் இன்னும் அப்படியே இருந்து அருள் புரிகிறார் என்பது பொருள்; ஏனெனில் உயிருடன் இருக்கும்போதே உடல் சமாதியில் இறக்கப்பட்டு மேலே அதிஷ்டானம் எழுப்பப்படும்.

அங்கே நாங்கள் காலை 11 மணி வாக்கில் சென்றதால் பூஜையையும் காண முடிந்தது. எனது சகோதரர் பேராசிரியர் சூரிய நாராயணன் உள்பட சுமார் 25 பேர் இருந்தோம். சமாதியை அடுத்த சிவன் கோவிலும் சிறியதுதான். இறுதியில் சர்க்கரைப் பொங்கல் விநியோகம்.

அங்குள்ள சிறிய கடையில் புஸ்தகங்கள், பாடல் தகடுகள் (CDs), படங்கள் விலைக்குக் கிடைக்கின்றன. இது வரை சதாசிவரின் அற்புதங்களை அறியாதோர் அறிய அவை உதவும்.

சதாசிவ பிரம்மேந்திரரின் ஸம்ஸ்க்ருதப் பாடல்கள் மிகவும் சிறியவை. பல கர்நாடக இசைக் கச்சேரிகளிலும் இடம்பெறுகின்றன. அவரது பாடல்கள் (பரம)ஹம்ஸ என்ற முத்திரையுடன் முடியும்.

சதாசிவ பிரம்மேந்திராள்

சதாசிவ பிரம்மேந்திராள் பற்றி நான் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய கட்டுரை இணைப்பையும் காஞ்சி பரமாசார்யாளின் விஜய இணைப்பையும் கீழே காண்க.

நீங்களும் அவருடைய பாடல்களைக் கச்சேரியிலோ பஜனைகளிலோ கேட்டிருப்பீர்கள்: இதோ சில முதல் வரிகள்:

பஜரே கோபாலம், மானஸ…………..

ஸ்மர வாரம் வாரம் சேதஹ…………….

ப்ரூஹி முகுந்தேதி ரஸனே……………..

மானஸ ஸஞ்சரரே ப்ரஹ்மணி………….

க்ரீடதி வனமாலி கோஷ்டே………….

பஜரே யதுநாதம் மானஸ…………..

ப்ரதிவாரம் மானஸ…………..

பிபரே ராம ரஸம்…………………

சிந்தா நாஸ்திகில தேஷாம்…………………..

ஸர்வம் ப்ரஹ்ம மயம் ரே ரே

காயதி வனமாலி மதுரம்………………..

இன்னும் பல. இவைகள் அடங்கிய புஸ்தகங்கள் அதிஷ்டானத்தில் கிடைக்கும்

முஸ்லீம் பக்தருக்கு உபதேசம் செய்த …



https://tamilandvedas.com/…/முஸ்லீம்-பக்தருக்…

3 Mar 2014 – சதாசிவ பிரம்ம யோகீந்திரர் என்பவர் மிகப் பெரிய யோகி. அவர் … பிற்காலத்தில் சதாசிவ பிரம்மேந்திராள் என்ற சந்நியாசப் பெயருடன் …

6 நாட்களில் 30 கோவில்கள்! | Tamil and Vedas



https://tamilandvedas.com/…/6-நாட்களில்-30-கோவ…

  1.  

 ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com)) … சித்தர், சாங்கு சிவலிங்க சித்தர், சானு முனிவர், நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவ சமாதிகள். 8.

–subham–

முஸ்லீம் பக்தருக்கு உபதேசம் செய்த …



https://tamilandvedas.com/…/முஸ்லீம்-பக்தருக்…

3 Mar 2014 – சதாசிவ பிரம்ம யோகீந்திரர் என்பவர் மிகப் பெரிய யோகி. அவர் … பிற்காலத்தில் சதாசிவ பிரம்மேந்திராள் என்ற சந்நியாசப் பெயருடன் …

6 நாட்களில் 30 கோவில்கள்! | Tamil and Vedas



https://tamilandvedas.com/…/6-நாட்களில்-30-கோவ…

1.      

 ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com)) … சித்தர், சாங்கு சிவலிங்க சித்தர், சானு முனிவர், நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவ சமாதிகள். 8.

subham