என்ன ஆச்சரியப்படுகிறீர்களா, இந்த மூவரில் ஒருத்தி மட்டும் என்னை
விட்டு எப்போதும் அகலாதவள். விவரத்தைச் சொல்கிறேன்.
பசி, தாகம், ஆசை ஆகிய மூவர் தாம் எனது மூன்று மனைவியர்.
நான் வாழும் வரைக்கும் இவர்கள் மூவரும் என்னை விட்டு யாரிடமும்
செல்ல மாட்டார்கள்!
இந்த மூவரில் எனக்கு மிகவும் விசுவாசமாக இருப்பவள் ஆசை தான்;
என்னை விட்டு எங்குமே செல்ல மாட்டாள்!
Hunger,
thirst and desire are my three wives who never go to anybody else, as long as I
live; among them desire is the most
faithful one that never quits me. (Translation by S.B. Nair)
சம்ஸ்கிருத கவிதையின் மூலத்தைப் பார்ப்போமா?
ஷுத்துடாஷா: குடும்பின்யோ மயி ஜீவதி நான்யதா |
தாசாமாஷா மஹாசாத்வி கதாசித் மாம் ந முஞ்சதி ||
***
ஒத்த மனமுடைய பெண்டாட்டி!
பாட்டுடன் இயைந்த வாத்திய இசை, வெற்றிலைச் சுருள், மஹாபாரதக்
கதைகள், நம் மனதை அறிந்து ஒத்திருக்கும் பெண்டாட்டி, இனிய நண்பன் இவர்கள் அனைவரும்
ஒவ்வொரு நாளும் புதிது புதிதாகவே தோன்றுவர்.
(Instrumental) music
mingled with songs, betel roll, stories from Mahabharata, an agreeable wife,
and a bosom friend appear new and new, day by day. (Translation by S.B. Nair)
கணவன் இல்லாத சமயம் தன்னை அலங்கரிக்கும் மனைவி யாருக்குச் சமம்?
கணவன் இல்லாத சமயம் (அவன் இறந்திருந்தாலும் சரி, வெளியிடங்கள்
சென்றிருந்தாலும் சரி) தன்னை அழகாகக் காட்டிக் கொள்ளத் தன்னை சிங்காரித்துக் கொள்ளும்
ஒரு மனைவி, அழகு, நிறம் ஆகியவற்றைச் சவத்திற்குச் செய்தது போல ஆகிறாள்.
When
the husband is away (dead or on a
journey) that wife who decorates herself to look attractive, has turned all the
good things such as beauty and colour into the traits of a dead body.
(Translation by S.B. Nair)
சம்ஸ்கிருதத்தில் உள்ள கவிதை இது :
கதே பர்தரி யா நாரி
ச்ருங்காரம் குருதே யதி |
ரூபம் வர்ணம் ச தத் சர்வம் சவ ரூபேண ஜாயதே ||
***
வெடுக்கென்று பேசும் மனைவியுடன் வாழும் வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா!
கத்திக் கொண்டே இருக்கும் குழந்தைகள்,
ஒழுகும் கூரையினால் ஈரமாகவே இருக்கும் வீடு,
சகதியுடன் உள்ள முற்றம்,
மூட்டைப்பூச்சியுடன் இருக்கும் படுக்கை,
நாற்றமடிக்கும் ஊசிப் போன உணவு,
எப்போதும் புகை நிரம்பியிருக்கும் வீடு,
வெடுக்கென்று பேசும் மனைவி,
எப்போதும் கோபத்துடன் இருக்கும் எஜமானன்,
எப்போதுமே ஜில்லென்ற குளிர்ந்த நீரில் குளிக்கும் குளியல்,
சீச்சீ, தூத்தெறி,
இப்படி வாழும் இல்லறத்தானின் வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா?!
Howling
Children,
House
wet (by a leaky roof),
The
courtyard muddy,
The
bed infested with bugs,
Pungent
food,
The
house filled with smoke,
The
wife with a biting tongue,
The
master too filled always with anger,
And
bath,
At
all times, in (very) cold water -fie,
fie,
Upon
the life of a householder! (Translation by S.B. Nair)
A mother who was in the habit of asking her children, before
they retired at night, what they had done to make others happy, found her two
daughters silent.
She spoke tenderly of habits and dispositions founded on the
golden rule, “Do unto others as you would have them do unto you”. It is
in the Vidura Niti , Tamil Veda Tirukkural and the Bible.
Still these bright little faces were bowed in silence, and
the question was repeated.
“I cannot remember anything good all this day,
dear mother, said one of the little girls.; only one of my classmates was
happy, because she had gained the head of the class, and I smiled on her, and
ran to kiss her. She said I was good. That is all dear mother”.
The other spoke still more tenderly,
“A little girl who sat with me on the bench at school, lost a
little brother; and I saw that, while she studied her lessons, she hid her face
in the book and wept . I felt sorry, and laid my face on the same book, and
wept with her. Then she looked up, and was comforted, and put her arms around
my neck; but I don’t know why she said I had done her good.”
It is a remarkable circumstance, but a true one, that the joy
is increased by the same thing that lessens sorrow, by sharing it with another.
Every man rejoices twice, says Jeremy Taylor, when he has a
partner of his joy. A friend shares my sorrow, takes half of it away; but he
shares my joy, and makes it double.
Xxx
How to stop Swearing!
Rowland Hill was once returning from Ireland, and found
himself much annoyed by the conduct of the captain and mate , who were both
given to the habit of swearing. First the captain swore at the mate, then the
mate at the captain; then they both swore at the wind, when Mr Hill called out
with a strong voice, for fair play;
“Stop, stop”, I
cried.
“If you please, gentlemen, let us have fair play. It is my
turn now.”
“At what is your turn?” asked the captain.
“At swearing”.
“Well, they
waited and waited, till their patience was exhausted, and then told me to haste
and take my turn. I told them that I had a right to take my own time”.
To this the
captain replied, with a laugh,
“Perhaps you don’t mean to take your turn at all”.
“Pardon me, captain, I answered, that I do, as soon as I can
find the good of doing so”.
Mr Hill didn’t hear another oath for the rest of the voyage.
மதம்
மாறிய காந்திஜி மகனுக்கு மௌல்வி பட்டம்! அன்னை கஸ்தூரிபாய் கதறல் (Post
No.6392)
காந்திஜியின் மகன் ஹீராலால் மதம் மாறி
செய்த அட்டூழியங்கள் கஸ்தூரி பாயின் உடல் நலத்தை வெகுவாக பாதித்தது. சிறிது
காலத்துக்குள் சிறையிலேயே அன்னை கஸ்தூரிபா மரணம் அடைந்தார். அதற்கு முன் மகனுக்கு
கண்ணீர் சிந்த கடிதம் எழுதினார். முஸ்லீமாக மதம் மாறி காந்திஜியைப் பரிகாசம்
செய்தார். இதையும் கஸ்தூரிபா கடித்தத்தில் சொல்லத் தவறவில்லை. அவருக்கு மௌல்வி
பட்டம் கொடுக்கவந்த முஸ்லீம்களிடம் அடே பாவிகளா, இது
உங்களுக்கே அடுக்குமா? என்று கேட்கிறார். அப்பன் பெயரை
கெடுத்துவிட்டாயே என்று மகன் மீது கோபம் கொண்டு அங்கலாய்க்கிறார்.
ஒரு தாயின் உருக்கமான கடிதத்தை ஒவ்வொருவரும்
படிக்க வேண்டும். பிற்காலத்தில் காந்திஜியிடம் அவரது மகன்களின் தீய வாழ்க்கை
பற்றிக் கேட்ட போது நான் பூர்வ ஜன்மத்தில் செய்த பாவத்தை மூட்டை கட்டிக்கொண்டு
வந்துவிட்டேன் என்றார்.
மஹாகவி
பாரதியாரின் கவிதைகளில் 803 உவமைகள் இடம் பெற்றுள்ளதாக நூலாசிரியர் சிவ.மாதவன் தெரிவிக்கிறார்.
இதில் 533 உவமைகள் உவம உருபு பெற்றுள்ளன. 270 உவமைகளில் உவம
உருபு தொக்கி வந்துள்ளது.
உருபு தொக்கி நிற்கும் உவமை :-
இதற்கு எடுத்துக்காட்டாக,
‘மதுரத் தேமொழி மங்கையர்’
‘நண்ணுமுக வடிவு காணில் – அந்த
நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம்’
‘கோலக் குயிலோசை – உனது
குரலினிமையடீ’
என்பனவற்றைச் சுட்டிக் காட்டலாம்.
எடுத்துக்காட்டு உவமையுடன் வினாவை இணைத்து பாரதி பாடிய பாடலின்
ஒரு பகுதி இது:
விண்ணி லிரவிதனை விற்றுவிட் டெவரும்
மின்மினி கொள்வாரோ?
கண்ணிலு மினிய சுதந்திரம் போனபின்
கைகட்டிப் பிழைப்பாரோ?
இல்பொருளுவமைக்கு ஒரு எடுத்துக் காட்டு இதோ:
குன்று குதிப்பதுபோல் – துரியோதனன்
கொட்டிக் குதித்தாடுவான்.
இல்லாத ஒன்றை உவமையாக்கை உரைப்பது இல் பொருள் உவமை. மலை குதிப்பது
போல துரியோதனன் குதித்து ஆடுவான் என்பது அருமையான
இல்பொருளுவமை.
பாரதியாரின்
பாடல்களில் உருவக அணியும் ஏராளமாக உள்ளது.
21 வகை
உருவகங்களில் பாரதியாரின் பாடல்களில் ஐந்து வகை உருவகங்களைக் காண முடிகிறது.
ஆகிய
என்ற சொல் இல்லாமல் வரும் தொகை உருவகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு இதோ:
‘தொல்லைதரும்
அகப்பேய்’
‘காமப்பிசாசைக்
– குதிக்
கால்கொண்டடித்து
விழுத்திடலாகும்’
‘நல்ல
னெந்தை துயர்க்கடல் வீழ்ந்தனன்’
இம்மூன்றிலும்
அகப்பேய், காமப்பிசாசு, துயர்க்கடல் என்பன தொகை உருவகங்களாகும்.
இன்னும்
வஞ்சப்புகழ்ச்சி அணி, பெருமை அணி, ஐயவணி, உடனிகழ்ச்சியணி, முரணனி, பொருள்முரண், தன்மேம்பாட்டுரையணி,
சுவையணி ஆகிய அணிகளுக்கெல்லாம் எடுத்துக்காட்டப்படும் பாரதியாரின் கவிதைகளைப் பார்த்தால்
பாரதியாரை ஒரு புதிய பரிமாணத்தில் பார்த்து ஆஹா என்று வியக்க முடிகிறது.
பாரதியாரின்
சொல்லாட்சி தனித்துவம் வாய்ந்த ஒன்று. உள்ளம், விழி, நிலவு, அமுதூற்று, வீசி, அடா,
அடீ போன்ற சொற்களைப் பாரதியார் நயம்படக் கையாண்டிருப்பது வியப்பூட்டும் ஒன்று.
ஒரு பாடல்
முழுதும் குறியீடாக அமையின் அது முழுநிலைக் குறியீடு எனப்படும். இந்த வகையில் பாரதியாரின்
அக்கினிக்குஞ்சு மற்றும் விடுதலை ஆகிய இருபாடல்கள் முழுநிலைக் குறியீடு அமைந்த பாடல்களாக
உள்ளன.
பாரதியாரின்
அற்புதமான கவிதைகளில் உவமைகள் உணர்த்தும் செய்திகள் பல.
ஒவ்வொரு
சொல்லையும் அவர் கையாண்ட விதத்தின் அழகே அழகு.
தீ –
படரும் செந்தீப் பாய்ந்திடுமோர் விழியுடையாள் (பராசக்தியின் கண்களைப் பற்றிப் பாடுகையில்
இப்படிக் கூறுகிறார்)
மின்னல்
: திரௌபதியின் கண் வீசும் ஒளி – மின்செய்கதிர்
நிலவு
: பொங்கிவரும் புது நிலவு, நிலவூறித் ததும்பும் விழி
சிங்கம்
– நரி தந்திடு ஊனுணாச் சிங்கமே என வாழ்தல் சிறப்பு
உலோகம்
(பொன்) – பொன் போல் குரலும்
பொன்னை நிகர்த்த குரலும்
பொன்னங்குழலின்
புதிய ஒலி தனிலே
மேலே
தரும் செய்திகளோடு, இப்படியே மரம், பயிர், புல், கரும்பு, விழல்,மலர்,குன்றம், உணவுப்
பொருள்கள் ஆகியவற்றிற்கான கவிதைகளை சிவ.மாதவன் அழகுற எடுத்துக் காட்டுகிறார்.
இன்னும்
தேச விடுதலை, பெண் விடுதலை, ஆன்ம விடுதலை பற்றிய பாடல்களில் பாரதியாரின் பலவிதமான உவமைகளைக்
கண்டு களிப்படையலாம்.
தன் நூலில்
எடுத்தாண்ட பிற நூல்களின் குறிப்பாக சுமார் 610 குறிப்புகளை இந்த நூலாசிரியர் தருவதன்
மூலமே அவரது ஆராய்ச்சியின் ஆழம் தெரிய வருகிறது.
துணை
நூற்பட்டியலில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் நூல்களின் பெயர்களையும், முப்பதுக்கும்
மேற்பட ஆங்கில நூல்கள் மற்றும் கட்டுரைகளின் பட்டியலையும் காண்கிறோம்.
இத்துடன்
அருமையான ஆறு இணைப்புகள் நூலின் இறுதியில் உள்ளன:
வடமொழி
அணியிலக்கண நூல்கள்
தமிழ்
அணியிலக்கண நூல்கள்
பாரதியார்
கவிதைகளில் உவமை அகராதி
பாரதியார்
கவிதைகளில் இடம் பெற்றுள்ள உவம உருபுகள்
பாரதியார்
கவிதைகளில் உருவக அகராதி
பாரதியின்
சில புதுமைச் சொற் சேர்க்கைகள்
மேலே கண்டவற்றுள் 3,4,5,6 ஆகிய பகுதிகளை நன்கு
ஆய்ந்து ஓர்ந்து உணர்ந்தால் நம் கண் முன்னே புதிய பாரதியார் தோன்றுவார்.
இந்த புதிய பாரதியாரை நம் கண் முன்னே காண வைக்கும்
சிறப்பான ஆராய்ச்சி நூலாக இந்த நூல் திகழ்கிறது.
மீண்டும் நமது பாராட்டுதல்களை சிவ.மாதவனுக்கு
அளிக்கிறோம்.
இந்த நூல் பாரதி ஆர்வலர்களுக்கு ஒரு இன்றியமையாத
நூல் என்பதை மீண்டும் கூறி இதை வாங்குமாறு பரிந்துரை செய்கிறோம்.