ஜீரண மண்டல அமைப்பு பருமனாக ஆக்குகிறதா? – 2 (Post No.6529)

Written by S Nagarajan


swami_48@yahoo.com


Date: 11 June 2019


British Summer Time uploaded in London –  7-14 am

Post No. 6529

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.co

சென்ற இதழின் தொடர்ச்சி…

tamilandvedas.com, swamiindology.blogspot.com

உங்களின் ஜீரண மண்டல அமைப்பு உங்களை நோயுறச் செய்கிறதா, பருமனாக ஆக்குகிறதா? – 2

கட்டுரை ஆக்கம் : Mark Hyman MD

மொழியாக்கம் ச.நாகராஜன்

tamilandvedas.com, swamiindology.blogspot.com

உங்கள் குடல் நாளம் சீராக இல்லை என்பதை எப்படி உணர்வது?

உங்கள் ஜீரண அமைப்பைச் சரியாக இருக்குமாறு செய்ய முதலில் உங்கள் உடலின் குடல்நாளத்தை சீரற்றதாகச் செய்யும் எந்தப் பொருள்கள் குடலுக்கு அனுப்பப் படுகின்றன என்பதை அறிய வேண்டும். பட்டியல் இதோ:

  • பைபர் சத்து குறைவாக உள்ளவை, அதிக இனிப்புள்ளவை , பதப்படுத்தப்பட்டவை, சத்துக் குறைவானவை, அதிக கலோரி உணவுத் திட்டம் ஆகியவை தப்பான பாக்டீரியாக்களையும், நுரைமங்களையும் (wrong Bacteria abd yeast) குடல் நாளத்திற்கு அனுப்புவதால் குடலானது பாதிப்புக்குள்ளாகிற்து.
  • அதிக மருந்துகளை உட்கொள்வதால், அமிலத் தடைகளைப் போல (acid blockers – Prilosec, Nexium etc.), அவை குடல்நாளத்தின் ஜீரண வேலையைத் தடுக்கிறது – வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் மருந்துகளான ஆஸ்பிரின், அட்வில். ஆலிவ் (Aspirin, Advil and Aleve) மற்றும் அதிக அளவில் ஆன்டி – பயாடிக்ஸ், ஸ்டிராய்ட்கள், ஹார்மோன்கள் ஆகிய மருந்துகளையும் குறிப்பாகச் சொல்லலாம்.

* கண்டுபிடிக்கப்படாத குளூட்டன் சகியாமை (Gluten intolerance), குளூட்டன் ஒவ்வாமை, (Celiac disease) அல்லது பால் பொருள்கள், முட்டைகள் அல்லது சோளம் போன்ற குறைந்த கிரேடு உணவு ஒவ்வாமைகள்

* தொடர்ந்து இருக்கும் குறைந்த கிரேடு தொற்று வியாதிகள் அல்லது சிறுகுடலில் பாக்டீரியாக்கள் அதிகமாக இருக்க அதனால் ஏற்படும் குடல் நாளத்தின் சீரற்ற தன்மை, ஈஸ்டின் அதிக வளர்ச்சி (Overgrowth of Yeast), பாராசைட்டுகள் (Parasites) அல்லது இன்னும் மோசமான குடல்நாளத் தொற்றுக்கள்

* குடல் நாளத்தைச் சேதப்படுத்தும் மெர்க்குரி (Mercury – பாதரஸம்) மற்றும் பாசி (mold toxins) போன்ற விஷங்கள்

* அமிலத்தைத்தடை செய்யும் மருந்துகளின் உபயோகத்தால் ஏற்படும் ஜீரணத்திற்கான போதுமான என்ஜைம் இயக்கம் இல்லாமை அல்லது துத்தநாகம் போதுமான அளவு இல்லாமல் இருப்பது (Zinc deficienty)

* குடல்நாள நரம்பு மண்டலத்தை மாற்றக் கூடிய மன அழுத்தம், ஒழுகக்கூடிய குடல் நாளத்தை உருவாக்குகிறது. சாதாரணமான பாக்டீரியாக்களை குடல்நாளத்தில் மாற்றுகிறது.

பிறகு என்ன நடக்கிறது என்று சொல்ல வேண்டியதே இல்லை; நீங்கள் நோய்வாய்ப்படுகிறீர்கள்.

குடல் நாளத்திற்குக் கொஞ்சம் கூடச் சம்பந்தமில்லாதது போலத் தோன்றும் எக்ஸிமா, சொரியாஸிஸ் அல்லது ஆர்த்ரிடிஸ் (eczema, psoriasis, or arthritis) ஆகியவை உண்மையில் குடல்நாளப் பிரச்சினைகளாலேயே ஏற்படுகின்றன என்பதை முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டும். குடல்நாளத்தை நன்கு கவனித்தால் நீங்கள் நலமுடையவராக ஆகி விடுவீர்கள். இதோ ஒரு சின்ன எடுத்துக்காட்டு:

எக்ஸிமா குடல்நாளத்தில் ஆரம்பிக்குமா?

அலிஸன் எனது நோயாளிகளில் ஒருவர். அவர் எக்ஸிமாவினால் பாதிக்கப்பட்டிருந்தார். செம்மையான, ஒழுகும், கறை படிந்த, அரிப்புக் கொண்ட தடிப்புகள் அவளது உடல் முழுதும் பரவி இருந்தது. உங்கள் குடல்நாளம் சீரற்றிருந்தால் என்ன நடக்கும் என்பதற்கான சரியான எடுத்துக்காட்டு இது தான். உங்கள் ஜீரணத்தை சரியாக ஆக்கி விட்டால் எப்படிப்பட்ட அசாதாரணமான பரிபூரண குணத்தை நீங்கள் அடைய முடியும் என்பதற்கான உதாரணமும் இவர் தான்.

ஒரு டாக்டர், இன்னொரு டாக்டர் என்று ஒவ்வொருவரையாக இந்தப் பெண்  பார்த்துக் கொண்டே இருந்தார். பூச்சுத் தைலங்கள், லோஷன்கள், திரவ மருந்துகள் (slves, lotions and potions) ஆகியவற்றைத் தன் தோலின் மீது தடவிக் கொண்டிருந்தார். அத்துடன் ஸ்டிராய்டுகள் , ஆன்டி பயாடிக் மருந்துகளையும் எடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர் பார்த்த டாக்டர்களில் ஒருவராவது அவரது நோயின் அடிப்படையான காரணத்தை அறிந்து கொண்டு சிகிச்சை செய்யவில்லை.

அலிஸனுக்கு வயது 57. தொடர்ந்து எட்டு வருட காலம் கடுமையான, கொஞ்சம் கூட குணமடையாத, எக்ஸிமாவினால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தார். அவர் அதிக இனிப்புக் கொண்ட உணவுத் திட்டத்தை மேற்கொண்டிருந்தார். அடிக்கடி ஜனன உறுப்பில் ஈஸ்ட் தொற்றுக்களைக் கொண்டவராகவும் இருந்தார் (frequent vaginal yeast infections).

நான் அவரைப் பார்த்த போது அவரது குடல்நாளத்தைச் சோதனை செய்தேன்; ஒழுகும் குடல்நாளத்தை அவர் கொண்டிருப்பதையும் கண்டேன். அவரது குடல்நாளத்தில், ஒரு செல் கனத்தைக் கொண்ட பூச்சு உடைபட்டு சரியாக இயங்காமல் இருந்தது. அவர் 24 lg G என்ற உணவு ஒவ்வாமையைக் கொண்டிருந்தார்; அவரது மலமோ ஆரோக்கியமான பாக்டீரியாக்களைக் கொண்டிருக்கவில்லை, பல வருடங்களாக ஆன்டி பயாடிக் மருந்துகளை எடுத்துக் கொண்டிருந்தமையால் ஈஸ்டின் அதிக வளர்ச்சியையும் கொண்டிருந்தார். ஈஸ்டிற்கு எதிராக அதிக அளவில் ‘ஆன்டி பாடிஸ் (Antibodies) அளவுகளையும் இரத்தத்தில் கொண்டிருந்தார்.

ஆகவே அவரது குடல்நாளம் சரியாக ஆவதற்கு நான் உதவி செய்தேன். அவருக்கு எதிர்வினை செய்த அனைத்து உணவுகளையும் அவரை நிறுத்தச் சொன்னேன். இனிப்பைத் தவிர்த்து அவரது கேஸ்ட்ரோ இண்டெஸ்டினல் பாதையில் ஈஸ்டையும்  பதப்படுத்தப்பட்ட கார்போஹடிரேட்டுகளையும் அளிப்பதை நிறுத்தச் சொன்னேன் (to stop feeding the yeast in her gastrointestinal tract by cutting sugar and refined carbohydrates).  அவரது குடல் நாளத்தில் இருந்த ஈஸ்டைக் கொல்ல, பூசண எதிர்ப்பு மருந்துகளையும் (antifungal medications) மூலிகைகளையும் அளித்தேன். பின்னர் ப்ரோபயாடிக்ஸ்களை அளித்து (probiotics) அவர் உடலில் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் இருக்கும் சூழ்நிலையை உருவாக்கினேன். அத்துடன் குடல்நாளத்தை குணப்படுத்தும் ஊட்டச்சத்துக்களை அளித்து அவரது குடல்நாள பூச்சைச் சரி செய்து இயல்பான உடல் இயக்கம் அவருக்கு வருமாறு செய்தேன்.

விளைவு?அவரது எக்ஸிமா எட்டு வருடங்களில் முதல் தடவையாக மறைந்தே போனது. அது மீண்டும் வரவே வராமல் ஒழிந்தது!

அலிஸனுக்கு ஏற்பட்ட அனுபவத்தை நீங்களும் அனுபவிக்கலாம். உங்களது ஜீரணத்தைச் சரியாக ஆக்குவதன் மூலம் உங்கள் தொடர் வியாதி அடையாளங்களை நீக்கிக் குணமாகலாம்.

நல்ல ஜீரண ஆரோக்கியத்திற்கான ஏழு படிகள் இதோ:

உங்களது உள் குழாயைச் சரி செய்ய நீங்கள் செய்ய வேண்டியது இது தான்:

  1. பதப்படுத்தப்படாத முழுமையான உணவுகளை உண்ணுங்கள். அதிகமான பைபர் இருக்கும்படியான கறிகாய்கள், பீன்ஸ், பருப்புகள், விதைகள் முழுமையான தானியங்கள் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  2. உணவு ஒவ்வாமையை நீக்குங்கள். சில உணவுகள் சேராவில்லை என்ற நிலை இருந்தால் அதைத் தவிர்த்து வேறு உணவுத் திட்டத்தை மேற்கொள்ளுங்கள். க்ளூடன், பால் பொருள்கள், ஈஸ்ட், சோளம், சோயா, முட்டைகள் ஆகியவற்றை ஒரு வாரம் நிறுத்துங்கள். (cut out gluten, dairy, yeast, corn, soy and eggs). உங்கள் குடல்நாளம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள். மற்ற நோய்க்குறிகளின் அடையாளங்கள் எப்படி இருக்கிறது என்பதையும் பாருங்கள்.
  3. பூச்சிகள் அதிகமாக இருக்கிறதா என்பதையோ அல்லது தொற்றுக்கள் இருக்கிறதா என்பதையோ பார்த்து அதற்குத் தக்க சிகிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள். பாராசைட்டுகள், சின்ன குடல்பகுதி பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் ஆகியவை சரியாக குடல்நாளம் இயங்குவதைத் தடைப்படுத்தும். நீங்கள் குணமடைய விரும்பினால், இந்தத் தொற்றுக்களுக்கு சிகிச்சை எடுக்க வேண்டும்.
  4. உங்கள் ஜீரண என்ஜைம்களை மீண்டும் நிறைவு செய்யுங்கள். போதுமான அளவு ஜீரண என்ஜைம்கள் உங்கள் குடல்நாளத்தில் இல்லையென்றால் உங்கள் உடல் மற்றும் மூளை சரியாக இயங்குவதற்கான மூலப்பொருள்களை உங்கள் உணவுகள் சரியாக மாற்றித்தரச் செய்ய முடியாது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க சரியான ஜீரண என்ஜைம்களை உங்கள் உணவுடன் சேர்த்துக் கொள்ளுங்கள் (take a broad – spectrum digestive enzymes with your food).
  5.  நட்பான பாக்டீரியாக்களைக் கொண்டு உங்கள் உடல் மண்டலத்தை அருமையாக ஆக்கி மீண்டும் நிர்மாணியுங்கள். ப்ரோபயாடிக் துணை உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள் (Take probiotic supplements). அவைகள் நல்ல குடல்நாளத்திற்கான ஆரோக்கியமான் பாக்டீரியாக்களை மீண்டும் அடைய உதவும்.
  6.  நல்ல கொழுப்பைக் கொள்ளுங்கள். ஒமேகா -3 துணை உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இது குடல்நாளத்தில் இருக்கும் வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்.
  7. உங்கள் பூச்சை (lining) குணப்படுத்துங்கள். குடல்நாளத்தைக் குணப்படுத்தும் க்ளூடாமைன் மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்களை உங்களின் குடல்நாள பூச்சைச் (gut lining) சரி செய்வதற்காக உண்ணுங்கள். அது தனது இயல்பான இயக்கத்தை அடையும்.

இப்படி ஜீரணத்தைச் சரி செய்ய சில காலம் பிடிக்கும், ஆனால் அதில் நிச்சயம் வெற்றி உறுதி. நீங்கள் துடிப்பான ஆரோக்கியத்தை விரும்பினால் அது மிக மிக அவசியமானது. ஆகவே உங்கள் உள் குழாயை சரி செய்ய மேற்கொண்ட சிகிச்சை வழிமுறைகளைக் கடைப்பிடித்து உங்கள் நோய் அறிகுறிகள் மறைவதைக் கண்டு  மகிழுங்கள்!

 இப்போது நான் உங்களிடம் கேட்க விரும்புவது : –

உங்களின் குடல்நாளம் உங்களின் முழு ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியமானது என்பதை நீங்கள் உணர்கிறீர்களா?

உங்கள் ஜீரணத்தைச் சரியாக்க என்னென்ன வழிமுறைகளை நீங்கள் எடுக்கிறீர்கள்? எப்படி அவை வேலை செய்கின்றன?

ஏன் மருத்துவக் கம்பெனிகள்  குடல்நாளத்தின் சரியான இயக்கத்தைத் தடை செய்யும் மருந்துகளைத் தயார் செய்து அவற்றை தீவிரமாக விளம்பரப்படுத்துகின்றன? உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கின்றன?

உங்கள் எண்ணங்களைத் தாராளமாகப் பகிர்ந்து கொள்ளலாமே!

உங்கள் ஆரோக்கியத்தை விரும்பும் நலம் விரும்பி

  • மார்க் ஹைமேன் MD

****

நன்றி : மார்க் ஹைமேன் MD – க்ளீவ்லாண்ட் க்ளினிக் சென்டர் ஃபார்      ஃபங்ஷனல் மெடிசின் – இன் டைரக்டர். அல்ட்ரா வெல்னெஸ் சென்டரின் நிறுவனர்.

வாழ்க வளமுடன்!

***

Swami’s cross word 10619 (Post No.6528)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 10 June 2019


British Summer Time uploaded in London –  20-59

Post No. 6528

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.co

ACROSS

1. – (8 LETTERS) HINDU CALENDAR

6. –  (5) COLOUR, DRAMA THEATRE

7. – (4) WEALTH

8. – (6) GOD OF LOVE

9. – (6) BEGINNING

10. –(6) DEATH, YAMA

DOWN

1. – (6)LOTUS

2. – (5)JOY, MIRTH, HAPPINESS

3. -(4) NAME

4. – (6)LORD OF OBSTACLES

5. (6)- HELPLESS, FORLORN

–Subham–

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 10619 (Post No.6527)

Written by London Swaminathan
swami_48@yahoo.com

Date: 10 June 2019

British Summer Time uploaded in London –  18-21

Post No. 6527

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.co

த- வில் துவங்கும் 6 எழுத்துச் சொற்களைக் கண்டுபிடியுங்கள். விடை கீழே உளது.

சொற்களுக்கு ஆதாரம் ஆனந்தவிகடன் தமிழ் அகராதி

1. – எல்லா பணக்காரக் கோவில்களிலும் இந்தத் தேர் உண்டு

2. – திருக்குறளுக்கு இப்படி ஒரு  பெயர்

3. – பெருமாள் பூஜைக்குப்பின் வைஷ்ணவர்களுக்கு கிடைக்கும் விருந்து

4. நீயே கடவுள் என்னும் உபநிஷத வாக்கியம் (நீ அதுவாக இருக்கிறாய்)

5. – துரோணர் சொல்லிக் கொடுத்த பாடம்

6. –புற நானூற்றில் சங்கவருணர் நாகரீகர் என்னும் புலவரால் பாடப்பட்ட பிரபு.

7. – ஞான சம்பந்தரின் மற்றொரு பெயர்

8. – யமன், இயக்கி தேவி, அறக் கடவுள்

9. – வேலை செய்யாமல் வேளாவேளைக்குத் தின்னும் சோறு

10. – புகழ் பெற்ற ஆதீனம்; மாயூரம் அருகில் உளது. நிறைய தமிழ் நூல்களை வெளியிட்டுள்ளனர்.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

answers –

1.தங்க ரதம் – எல்லா பணக்காரக் கோஇல்களிலும் இந்தத் தேர் உண்டு

2.தமிழ் வேதம்- திருக்குறளுக்கு இப்படி ஒரு  பெயர்

3.ததியாராதனை – வைஷ்ணவர்களுக்கு பெருமாள் பூஜைக்குப்பின் கிடைக்கும் விருந்து

4.தத்துவமஸி- நீயே கடவுள் என்னும் உபநிஷத வாக்கியம் (நீ அதுவாக இருக்கிறாய்)

5.தநுர்வேதம்- துரோணர் சொல்லிக்கொடுத்த பாடம்

6.தந்துமாரன் -புற நானூற்றில் சங்கவருணர் நாகரீகர் என்னும் புலவரால் பாடப்பட்ட பிரபு.

7.தமிழாகரன் – ஞான சம்பந்தரின் மற்றொரு பெயர்

8.தருமதேவதை- யமன், இயக்கி தேவி, அறக் கடவுள்

9.தண்டச்சோறு – வேலை செய்யாமல் வேளாவேளைக்குத் தின்னும் சோறு

10.தருமபுரம்- புகழ் பெற்ற ஆதீனம்; மாயூரம் அருகில் உளது. நிறைய தமிழ் நூல்களை வெளியிட்டுள்ளனர்.

–subham–

MEDICINAL FIVEs- No.5 in Medicine (Post No.6526)

Written by London Swaminathan
swami_48@yahoo.com


Date: 10 June 2019

British Summer Time uploaded in London –  13-47 am

Post No. 6526

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.co

பஞ்ச திராவிடர், பஞ்ச கௌடர், பஞ்ச தந்திரம் (Post No.6525)

Written by London Swaminathan

swami_48@yahoo.com


Date: 10 June 2019


British Summer Time uploaded in London –  7-29 am

Post No. 6525

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.co

–subham–

சித்தீ! கவலைப்படாதே! ராம சிம்மனின் சூளுரை! (Post No.6524)

Written by S Nagarajan

swami_48@yahoo.com


Date: 10 June 2019


British Summer Time uploaded in London –  6-59 am

Post No. 6524

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.co

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 9619 (Post No.6523)

TAMIL CROSS WORD  9619

Written by London Swaminathan

swami_48@yahoo.com


Date: 9 June 2019


British Summer Time uploaded in London –  20-
17

Post No. 6523

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.co

த- வில் துவங்கும் 7 எழுத்துச் சொற்களைக் கண்டுபிடியுங்கள். விடை கீழே உளது.

சொற்களுக்கு ஆதாரம் –ஆனந்தவிகடன் தமிழ் அகராதி

ACROSS

1.  — அத்ரிக்கும் அநுசுயாவுக்கும் பிறந்த ஞானி.

2.- பொற்கொல்லன் பெயர் கொண்ட பூச்சி

3.- திருஞான சமபந்தரை தமிழுடன் இணைக்கும் பெயர்

4.-சம்பா நெல்லின் ஒரு வகை .

5- சூரியனின் தென் திசைப் பயணம்.

6. – ஏமாற்றுப் பேர்வழி.

7.-மார்பு தரையில் படும்படி வணங்குதல்.

8.சுவீகார புத்ரன்

9. – எறும்பு

10. – மஞ்சள்

10 த            

Answers —–

1.தத்தாத்ரேயன்  — அத்ரிக்கும் அநுசுயாவுக்கும் பிறந்த ஞானி.

2.தட்டான் பூச்சி – பொற்கொல்லன் பெயர் கொண்ட பூச்சி

3.தமிழ் விரகன் – திருஞான சமபந்தரை தமிழுடன் இணைக்கும் பெயர்

4.தங்கச் சம்பா -சம்பா நெல்லின் ஒரு வகை.

5.தட்சிணாயனம் – சூரியனின் தென் திசைப் பயணம்.

6.தட்டுக்காரன் – ஏமாற்றூப் பேர்வழி.

7.தண்டனிடுதல் – மார்பு தரையில் படும்படி வணங்குதல்.

8.தத்துப் பிள்ளை – சுவீகார புத்ரான்

9.தயிலபிபீலிகை – எறும்பு

10.தபனற்கஞ்சி – மஞ்சள்

—subham—

SWAMI’S CROSS WORD 9619 (6522)

Written  by London Swaminathan

swami_48@yahoo.com


Date: 9 June 2019


British Summer Time uploaded in London –  18-
05

Post No. 6522

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.co

These seven lettered words begin with ‘K’. They are from Hindu epics. Answers are given at the end.

1. – state where the capital is named after the goddess of wealth SRI.

2. – Commander of Virata’s army who misbehaved with Draupadi and got killed by Bhima.

3. – 100 in number; caused a great war.

4. – God wo killed Kamsa and Kaliya.

5. – Grand father of Vishwamitra and father of Gadhi.

6. – Difficulty

7. – everyone asks this with the word WHY????

8. – a seer who cursed Pandu to die if  he has sex with anyone.

Answers –

1.KASHMIR- state where the capital is named after the goddess of wealth SRI.

2.KIC HAKA- Commander of Virata’s army who misbehaved with Draupadi and got killed by Bhima.

3.KAURAVA- 100 in number; caused a great war.

4.KRI SHNA- God wo killed Kamsa and Kaliya.

5.KUS HIKA- Grand father of Vishwamitra and father of Gadhi.

6.KAS HTAM- Difficulty

7.KAR ANAM- everyone asks this with the word WHY????

8.KINDAMA- a seer who cursed Pandu to die when he has sex with anyone.

–subham–

FIVE QUALITIES OF KALI YUGA (Post No.6521)

Compiled by London Swaminathan

swami_48@yahoo.com


Date: 9 June 2019
British Summer Time uploaded in London –  16-
51

Post No. 6521

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.co

Passion, Patriotism, Protection – Peter the Great, Napoleon, Magpie! (Post No.6520)

Compiled by London Swaminathan

swami_48@yahoo.com


Date: 9 June 2019


British Summer Time uploaded in London –  14- 56

Post No. 6520

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.co

Compiled from a book published in 1884

Protective Mother ! Follow the Magpie

Embodiment of Energy ! Napoleon!

Passion ! Peter the Great!

Patriotism and Flag (Like our Tiruppur Kumaran)